Tamilce Meal — Abdülhamîd Bakavî — İsra' 17:1 – Enbiya 21:112
Contents
- İsra' 17:1
- İsra' 17:2
- İsra' 17:3
- İsra' 17:4
- İsra' 17:5
- İsra' 17:6
- İsra' 17:7
- İsra' 17:8
- İsra' 17:9
- İsra' 17:10
- İsra' 17:11
- İsra' 17:12
- İsra' 17:13
- İsra' 17:14
- İsra' 17:15
- İsra' 17:16
- İsra' 17:17
- İsra' 17:18
- İsra' 17:19
- İsra' 17:20
- İsra' 17:21
- İsra' 17:22
- İsra' 17:23
- İsra' 17:24
- İsra' 17:25
- İsra' 17:26
- İsra' 17:27
- İsra' 17:28
- İsra' 17:29
- İsra' 17:30
- İsra' 17:31
- İsra' 17:32
- İsra' 17:33
- İsra' 17:34
- İsra' 17:35
- İsra' 17:36
- İsra' 17:37
- İsra' 17:38
- İsra' 17:39
- İsra' 17:40
- İsra' 17:41
- İsra' 17:42
- İsra' 17:43
- İsra' 17:44
- İsra' 17:45
- İsra' 17:46
- İsra' 17:47
- İsra' 17:48
- İsra' 17:49
- İsra' 17:50
- İsra' 17:51
- İsra' 17:52
- İsra' 17:53
- İsra' 17:54
- İsra' 17:55
- İsra' 17:56
- İsra' 17:57
- İsra' 17:58
- İsra' 17:59
- İsra' 17:60
- İsra' 17:61
- İsra' 17:62
- İsra' 17:63
- İsra' 17:64
- İsra' 17:65
- İsra' 17:66
- İsra' 17:67
- İsra' 17:68
- İsra' 17:69
- İsra' 17:70
- İsra' 17:71
- İsra' 17:72
- İsra' 17:73
- İsra' 17:74
- İsra' 17:75
- İsra' 17:76
- İsra' 17:77
- İsra' 17:78
- İsra' 17:79
- İsra' 17:80
- İsra' 17:81
- İsra' 17:82
- İsra' 17:83
- İsra' 17:84
- İsra' 17:85
- İsra' 17:86
- İsra' 17:87
- İsra' 17:88
- İsra' 17:89
- İsra' 17:90
- İsra' 17:91
- İsra' 17:92
- İsra' 17:93
- İsra' 17:94
- İsra' 17:95
- İsra' 17:96
- İsra' 17:97
- İsra' 17:98
- İsra' 17:99
- İsra' 17:100
- İsra' 17:101
- İsra' 17:102
- İsra' 17:103
- İsra' 17:104
- İsra' 17:105
- İsra' 17:106
- İsra' 17:107
- İsra' 17:108
- İsra' 17:109
- İsra' 17:110
- İsra' 17:111
- Kehf 18:1
- Kehf 18:2
- Kehf 18:3
- Kehf 18:4
- Kehf 18:5
- Kehf 18:6
- Kehf 18:7
- Kehf 18:8
- Kehf 18:9
- Kehf 18:10
- Kehf 18:11
- Kehf 18:12
- Kehf 18:13
- Kehf 18:14
- Kehf 18:15
- Kehf 18:16
- Kehf 18:17
- Kehf 18:18
- Kehf 18:19
- Kehf 18:20
- Kehf 18:21
- Kehf 18:22
- Kehf 18:23
- Kehf 18:24
- Kehf 18:25
- Kehf 18:26
- Kehf 18:27
- Kehf 18:28
- Kehf 18:29
- Kehf 18:30
- Kehf 18:31
- Kehf 18:32
- Kehf 18:33
- Kehf 18:34
- Kehf 18:35
- Kehf 18:36
- Kehf 18:37
- Kehf 18:38
- Kehf 18:39
- Kehf 18:40
- Kehf 18:41
- Kehf 18:42
- Kehf 18:43
- Kehf 18:44
- Kehf 18:45
- Kehf 18:46
- Kehf 18:47
- Kehf 18:48
- Kehf 18:49
- Kehf 18:50
- Kehf 18:51
- Kehf 18:52
- Kehf 18:53
- Kehf 18:54
- Kehf 18:55
- Kehf 18:56
- Kehf 18:57
- Kehf 18:58
- Kehf 18:59
- Kehf 18:60
- Kehf 18:61
- Kehf 18:62
- Kehf 18:63
- Kehf 18:64
- Kehf 18:65
- Kehf 18:66
- Kehf 18:67
- Kehf 18:68
- Kehf 18:69
- Kehf 18:70
- Kehf 18:71
- Kehf 18:72
- Kehf 18:73
- Kehf 18:74
- Kehf 18:75
- Kehf 18:76
- Kehf 18:77
- Kehf 18:78
- Kehf 18:79
- Kehf 18:80
- Kehf 18:81
- Kehf 18:82
- Kehf 18:83
- Kehf 18:84
- Kehf 18:85
- Kehf 18:86
- Kehf 18:87
- Kehf 18:88
- Kehf 18:89
- Kehf 18:90
- Kehf 18:91
- Kehf 18:92
- Kehf 18:93
- Kehf 18:94
- Kehf 18:95
- Kehf 18:96
- Kehf 18:97
- Kehf 18:98
- Kehf 18:99
- Kehf 18:100
- Kehf 18:101
- Kehf 18:102
- Kehf 18:103
- Kehf 18:104
- Kehf 18:105
- Kehf 18:106
- Kehf 18:107
- Kehf 18:108
- Kehf 18:109
- Kehf 18:110
- Meryem 19:1
- Meryem 19:2
- Meryem 19:3
- Meryem 19:4
- Meryem 19:5
- Meryem 19:6
- Meryem 19:7
- Meryem 19:8
- Meryem 19:9
- Meryem 19:10
- Meryem 19:11
- Meryem 19:12
- Meryem 19:13
- Meryem 19:14
- Meryem 19:15
- Meryem 19:16
- Meryem 19:17
- Meryem 19:18
- Meryem 19:19
- Meryem 19:20
- Meryem 19:21
- Meryem 19:22
- Meryem 19:23
- Meryem 19:24
- Meryem 19:25
- Meryem 19:26
- Meryem 19:27
- Meryem 19:28
- Meryem 19:29
- Meryem 19:30
- Meryem 19:31
- Meryem 19:32
- Meryem 19:33
- Meryem 19:34
- Meryem 19:35
- Meryem 19:36
- Meryem 19:37
- Meryem 19:38
- Meryem 19:39
- Meryem 19:40
- Meryem 19:41
- Meryem 19:42
- Meryem 19:43
- Meryem 19:44
- Meryem 19:45
- Meryem 19:46
- Meryem 19:47
- Meryem 19:48
- Meryem 19:49
- Meryem 19:50
- Meryem 19:51
- Meryem 19:52
- Meryem 19:53
- Meryem 19:54
- Meryem 19:55
- Meryem 19:56
- Meryem 19:57
- Meryem 19:58
- Meryem 19:59
- Meryem 19:60
- Meryem 19:61
- Meryem 19:62
- Meryem 19:63
- Meryem 19:64
- Meryem 19:65
- Meryem 19:66
- Meryem 19:67
- Meryem 19:68
- Meryem 19:69
- Meryem 19:70
- Meryem 19:71
- Meryem 19:72
- Meryem 19:73
- Meryem 19:74
- Meryem 19:75
- Meryem 19:76
- Meryem 19:77
- Meryem 19:78
- Meryem 19:79
- Meryem 19:80
- Meryem 19:81
- Meryem 19:82
- Meryem 19:83
- Meryem 19:84
- Meryem 19:85
- Meryem 19:86
- Meryem 19:87
- Meryem 19:88
- Meryem 19:89
- Meryem 19:90
- Meryem 19:91
- Meryem 19:92
- Meryem 19:93
- Meryem 19:94
- Meryem 19:95
- Meryem 19:96
- Meryem 19:97
- Meryem 19:98
- Tâhâ 20:1
- Tâhâ 20:2
- Tâhâ 20:3
- Tâhâ 20:4
- Tâhâ 20:5
- Tâhâ 20:6
- Tâhâ 20:7
- Tâhâ 20:8
- Tâhâ 20:9
- Tâhâ 20:10
- Tâhâ 20:11
- Tâhâ 20:12
- Tâhâ 20:13
- Tâhâ 20:14
- Tâhâ 20:15
- Tâhâ 20:16
- Tâhâ 20:17
- Tâhâ 20:18
- Tâhâ 20:19
- Tâhâ 20:20
- Tâhâ 20:21
- Tâhâ 20:22
- Tâhâ 20:23
- Tâhâ 20:24
- Tâhâ 20:25
- Tâhâ 20:26
- Tâhâ 20:27
- Tâhâ 20:28
- Tâhâ 20:29
- Tâhâ 20:30
- Tâhâ 20:31
- Tâhâ 20:32
- Tâhâ 20:33
- Tâhâ 20:34
- Tâhâ 20:35
- Tâhâ 20:36
- Tâhâ 20:37
- Tâhâ 20:38
- Tâhâ 20:39
- Tâhâ 20:40
- Tâhâ 20:41
- Tâhâ 20:42
- Tâhâ 20:43
- Tâhâ 20:44
- Tâhâ 20:45
- Tâhâ 20:46
- Tâhâ 20:47
- Tâhâ 20:48
- Tâhâ 20:49
- Tâhâ 20:50
- Tâhâ 20:51
- Tâhâ 20:52
- Tâhâ 20:53
- Tâhâ 20:54
- Tâhâ 20:55
- Tâhâ 20:56
- Tâhâ 20:57
- Tâhâ 20:58
- Tâhâ 20:59
- Tâhâ 20:60
- Tâhâ 20:61
- Tâhâ 20:62
- Tâhâ 20:63
- Tâhâ 20:64
- Tâhâ 20:65
- Tâhâ 20:66
- Tâhâ 20:67
- Tâhâ 20:68
- Tâhâ 20:69
- Tâhâ 20:70
- Tâhâ 20:71
- Tâhâ 20:72
- Tâhâ 20:73
- Tâhâ 20:74
- Tâhâ 20:75
- Tâhâ 20:76
- Tâhâ 20:77
- Tâhâ 20:78
- Tâhâ 20:79
- Tâhâ 20:80
- Tâhâ 20:81
- Tâhâ 20:82
- Tâhâ 20:83
- Tâhâ 20:84
- Tâhâ 20:85
- Tâhâ 20:86
- Tâhâ 20:87
- Tâhâ 20:88
- Tâhâ 20:89
- Tâhâ 20:90
- Tâhâ 20:91
- Tâhâ 20:92
- Tâhâ 20:93
- Tâhâ 20:94
- Tâhâ 20:95
- Tâhâ 20:96
- Tâhâ 20:97
- Tâhâ 20:98
- Tâhâ 20:99
- Tâhâ 20:100
- Tâhâ 20:101
- Tâhâ 20:102
- Tâhâ 20:103
- Tâhâ 20:104
- Tâhâ 20:105
- Tâhâ 20:106
- Tâhâ 20:107
- Tâhâ 20:108
- Tâhâ 20:109
- Tâhâ 20:110
- Tâhâ 20:111
- Tâhâ 20:112
- Tâhâ 20:113
- Tâhâ 20:114
- Tâhâ 20:115
- Tâhâ 20:116
- Tâhâ 20:117
- Tâhâ 20:118
- Tâhâ 20:119
- Tâhâ 20:120
- Tâhâ 20:121
- Tâhâ 20:122
- Tâhâ 20:123
- Tâhâ 20:124
- Tâhâ 20:125
- Tâhâ 20:126
- Tâhâ 20:127
- Tâhâ 20:128
- Tâhâ 20:129
- Tâhâ 20:130
- Tâhâ 20:131
- Tâhâ 20:132
- Tâhâ 20:133
- Tâhâ 20:134
- Tâhâ 20:135
- Enbiya 21:1
- Enbiya 21:2
- Enbiya 21:3
- Enbiya 21:4
- Enbiya 21:5
- Enbiya 21:6
- Enbiya 21:7
- Enbiya 21:8
- Enbiya 21:9
- Enbiya 21:10
- Enbiya 21:11
- Enbiya 21:12
- Enbiya 21:13
- Enbiya 21:14
- Enbiya 21:15
- Enbiya 21:16
- Enbiya 21:17
- Enbiya 21:18
- Enbiya 21:19
- Enbiya 21:20
- Enbiya 21:21
- Enbiya 21:22
- Enbiya 21:23
- Enbiya 21:24
- Enbiya 21:25
- Enbiya 21:26
- Enbiya 21:27
- Enbiya 21:28
- Enbiya 21:29
- Enbiya 21:30
- Enbiya 21:31
- Enbiya 21:32
- Enbiya 21:33
- Enbiya 21:34
- Enbiya 21:35
- Enbiya 21:36
- Enbiya 21:37
- Enbiya 21:38
- Enbiya 21:39
- Enbiya 21:40
- Enbiya 21:41
- Enbiya 21:42
- Enbiya 21:43
- Enbiya 21:44
- Enbiya 21:45
- Enbiya 21:46
- Enbiya 21:47
- Enbiya 21:48
- Enbiya 21:49
- Enbiya 21:50
- Enbiya 21:51
- Enbiya 21:52
- Enbiya 21:53
- Enbiya 21:54
- Enbiya 21:55
- Enbiya 21:56
- Enbiya 21:57
- Enbiya 21:58
- Enbiya 21:59
- Enbiya 21:60
- Enbiya 21:61
- Enbiya 21:62
- Enbiya 21:63
- Enbiya 21:64
- Enbiya 21:65
- Enbiya 21:66
- Enbiya 21:67
- Enbiya 21:68
- Enbiya 21:69
- Enbiya 21:70
- Enbiya 21:71
- Enbiya 21:72
- Enbiya 21:73
- Enbiya 21:74
- Enbiya 21:75
- Enbiya 21:76
- Enbiya 21:77
- Enbiya 21:78
- Enbiya 21:79
- Enbiya 21:80
- Enbiya 21:81
- Enbiya 21:82
- Enbiya 21:83
- Enbiya 21:84
- Enbiya 21:85
- Enbiya 21:86
- Enbiya 21:87
- Enbiya 21:88
- Enbiya 21:89
- Enbiya 21:90
- Enbiya 21:91
- Enbiya 21:92
- Enbiya 21:93
- Enbiya 21:94
- Enbiya 21:95
- Enbiya 21:96
- Enbiya 21:97
- Enbiya 21:98
- Enbiya 21:99
- Enbiya 21:100
- Enbiya 21:101
- Enbiya 21:102
- Enbiya 21:103
- Enbiya 21:104
- Enbiya 21:105
- Enbiya 21:106
- Enbiya 21:107
- Enbiya 21:108
- Enbiya 21:109
- Enbiya 21:110
- Enbiya 21:111
- Enbiya 21:112
İsra' 17:1
1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற மஸ்ஜிதிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். அதைச்சுற்றி நாம் அருள் புரிந்திருக்கிறோம். நம் அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்). அவன்தான் நிச்சயமாக நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
İsra' 17:2
2. நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அதை ஒரு வழிகாட்டியாக அமைத்து ‘‘நீங்கள் என்னைத் தவிர (மற்ற எவரையும் உங்களுக்கு) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளக்கூடாது'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டோம்.
İsra' 17:3
3. நூஹ்வுடன் நாம் கப்பலில் ஏற்றி பாதுகாத்தவர்களுடைய சந்ததிகளே! அவர் நிச்சயமாக (அதற்கு) மிக்க நன்றி செலுத்தும் அடியாராகவே இருந்தார். (ஆகவே, அவர்களின் வழித்தோன்றல்களாகிய நீங்களும் எனக்கு நன்றி செலுத்துங்கள்.)
İsra' 17:4
4. இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நீங்கள் பூமியில் இரண்டு முறை விஷமம் செய்வீர்கள் என்றும், நிச்சயமாக நீங்கள் பெரும் மேன்மைகளை அடை(ந்து கர்வம் கொண்டு அநியாயம் செய்)வீர்கள்! என்றும் (உங்களுக்கு அளித்த) வேதத்தில் நாம் முடிவு செய்துள்ளோம்.
İsra' 17:5
5. அவ்விரண்டில் முதல் தவணை வந்த சமயத்தில் (நீங்கள் செய்து கொண்டிருந்த குற்றங்களுக்குத் தண்டனையாக) நாம் படைத்த இரக்கமற்ற பெரும் பலவான்களாகிய மனிதர்களை உங்கள் மீது ஏவிவிட்டோம். அவர்கள் (பைத்துல் முகத்தஸிலிருந்த உங்கள்) வீடுகளுக்குள் ஊடுருவிச் சென்று (தங்கள் கைக்குக் கிட்டியதையெல்லாம் அழித்து நாசமாக்கி) விட்டார்கள். (அதனால் பைத்துல் முகத்தஸிலிருந்த ஆலயமும், அவ்வூரும் அழிந்து நாசமாயின. இவ்வாறு நமது முந்திய) வாக்குறுதி நிறை வேறியது.
İsra' 17:6
6. பின்னர் அவர்களுக்கு எதிராக உங்களுக்கு சாதகமாக காலச் சக்கரத்தைத் திருப்பி (உங்களுக்கு வெற்றியைக் கொடுத்து) ஏராளமான பொருள்களையும் ஆண் மக்களையும் கொண்டு நாம் உங்களுக்கு உதவி புரிந்து, உங்களைப் பெரும் கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.
İsra' 17:7
7. (அச்சமயம் அவர்களை நோக்கி) நீங்கள் நன்மை செய்தால் (அது) உங்களுக்குத்தான் நன்று. நீங்கள் தீமை செய்தால் அது உங்களுக்கே (கேடாகும் என்றும் நாம் கூறினோம். எனினும், அவர்கள் அநியாயம் செய்யவே ஆரம்பித்தனர். ஆகவே,) இரண்டாவது தவணை வந்த சமயத்தில் (உங்களைத் துன்புறுத்தி) உங்கள் முகங்களை கெடுத்து, முந்திய தடவை மஸ்ஜிதுல் அக்ஸாவில் நுழைந்தவாறே (இந்தத் தடவையும் அதனுள்) நுழைந்து, தங்கள் கைக்குக் கிடைத்தவற்றையெல்லாம் அழித்து நாசமாக்கக்கூடிய (கடின சித்தமுடைய) அவர்களை (நாம் உங்கள் மீது) ஏவினோம்.
İsra' 17:8
8. (நீங்கள் விஷமம் செய்வதைவிட்டு விலகிக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியலாம். (அப்படி இல்லாமல் உங்கள் விஷமத்தின் பக்கமே) பின்னும் நீங்கள் திரும்பினால் நாமும் (உங்களை முன் போல தண்டிக்க) முன் வருவோம். நிராகரிப்பவர்களுக்கு நரகத்தை விரிப்பாக ஆக்கி விடுவோம்.
İsra' 17:9
9. நிச்சயமாக இந்த குர்ஆன் மிக நேரான, நீதமான பாதைக்கு வழி காட்டுகிறது; மேலும், (உங்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நற்செய்தி கூறுகிறது.
İsra' 17:10
10. (உங்களில்) எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக நாம் மிகத் துன்புறுத்தும் வேதனையை தயார்படுத்தி இருக்கிறோம் (என்றும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது).
İsra' 17:11
11. மனிதன் நன்மையைக் கோரி பிரார்த்திப்பதைப் போலவே (சில சமயங்களில் அறியாமையினால்) தீமையைக் கோரியும் பிரார்த்திக்கிறான். ஏனென்றால், மனிதன் (இயற்கையாகவே பொறுமையிழந்த) அவசரக்காரனாக இருக்கிறான்.
İsra' 17:12
12. இரவையும் பகலையும் நாம் அத்தாட்சிகளாக ஆக்கினோம். (அதில்) இரவின் அத்தாட்சியை மங்கச் செய்தோம். (பல இடங்களிலும் சுற்றித் திரிந்து) உங்கள் இறைவனின் அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம். ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் (இதன் மூலம்) நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகவே நாம் விவரித்துள்ளோம்.
İsra' 17:13
13. ஒவ்வொரு மனிதனின் (செயலைப் பற்றிய விரிவான தினசரிக்) குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அதை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். அவன் அதை விரிக்கப்பட்டதாகப் பார்ப்பான்.
İsra' 17:14
14. (அச்சமயம் அவனை நோக்கி) ‘‘இன்றைய தினம் உன் கணக்கைப் பார்க்க நீயே போதுமானவன். ஆகவே, உன் (குறிப்புப்) புத்தகத்தை நீ படித்துப் பார்'' (என்று கூறுவோம்.)
İsra' 17:15
15. எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன் நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவன் தவறான வழியில் செல்கிறானோ அவன் (தவறான வழியில் சென்று) தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான். ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான். (நமது) தூதர் ஒருவரை அனுப்பாத வரை நாம் (எவரையும்) வேதனை செய்வதில்லை.
İsra' 17:16
16. ஓர் ஊரை (அவ்வூராரின் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை நன்மையைக் கொண்டு நாம் ஏவுகிறோம். ஆனால், அவர்கள் அதில் விஷமம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர், அவர்கள் மீது நம் வாக்கு ஏற்பட்டு அவ்வூரை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்.
İsra' 17:17
17. நூஹ்வுக்குப் பின்னர் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழித்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை உற்று நோக்கி அறிந்து கொள்வதற்கு உமது இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் அவனுக்குத் தேவையில்லை.)
İsra' 17:18
18. எவர்கள், (மறுமையைப் புறக்கணித்துவிட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடியதை இம்மையிலேயே கொடுத்து விடுகிறோம். பின்னர், மறுமையில் நரகத்தைத்தான் அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறோம். அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் அதில் நுழைவார்கள்.
İsra' 17:19
19. எவர்கள் மறுமையை விரும்பி அதற்காகப் பெரும் முயற்சியையும் எடுத்துக் கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ, அவர்களின் செயல்கள் (அல்லாஹ் விடத்தில் மிக்க அன்பாக) அங்கீகரிக்கப்படுபவையாக இருக்கின்றன.
İsra' 17:20
20. (இம்மையை விரும்புகிற) அவர்களுக்கும் (மறுமையை விரும்புகிற) இவர்களுக்கும் ஆக அனைவருக்கும் உமது இறைவன் தன் கொடையைக் கொண்டே உதவி செய்கிறான். உமது இறைவனின் கொடை (இவ்விருவரில் எவருக்குமே) தடை செய்யப்பட்டதாக இல்லை.
İsra' 17:21
21. (நபியே!) அவர்களில் சிலரை சிலர் மீது எவ்வாறு மேன்மையாக்கி வைத்திருக்கிறோம் என்பதை கவனிப்பீராக! மறுமை (வாழ்க்கை)யோ பதவிகளாலும் மிகப் பெரிது; சிறப்பிப்பதாலும் மிகப்பெரிது.
İsra' 17:22
22. (நபியே!) அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற்குரியவனாக ஆக்காதீர். (அவ்வாறு செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் உதவியற்றவராகவும் அமர்ந்து விடுவீர்.
İsra' 17:23
23. (நபியே!) உமது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். உம்மிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ' என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுவீராக.
İsra' 17:24
24. அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! மேலும், ‘‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீது அன்பும் அருளும் புரிவாயாக!'' என்றும் பிரார்த்திப்பீராக!
İsra' 17:25
25. உங்கள் மனதிலுள்ளதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான். நீங்கள் நன்னடத் தையுடையவர்களாக இருந்து (உங்களில் எவர்) மன்னிப்புக் கோரிய(போதிலும் அ)வர்களின் குற்றங்களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவே இருக்கிறான்.
İsra' 17:26
26. உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்து வரவும். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு செய்யவேண்டாம்.
İsra' 17:27
27. ஏனென்றால், மிதமிஞ்சி செலவு செய்பவர்கள் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இறைவனுக்குக்கூட நன்றி செலுத்தா(து மாறு செய்)தவனாக இருக்கிறான்.
İsra' 17:28
28. (நபியே! உம்மிடம் பொருள்கள் இல்லாமல் அதற்காக) நீர் உமது இறைவனின் அருளை எதிர் பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் யாரேனும் வந்து ஏதும் கேட்டு) அவர்களை நீர் புறக்கணிக்கும் படி நேரிட்டால் (அவர்களுடன் கடுகடுப்பாகப் பேசாதீர்.) மிக்க அன்பான வார்த்தைகளையே அவர்களுக்குக் கூறுவீராக.
İsra' 17:29
29. (உமது பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உமது கைகளைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்! (உம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உமது கையை முற்றிலும் விரித்து விடாதீர்! அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும் முடைப்பட்டவராகவும் தங்கிவிடுவீர்.
İsra' 17:30
30. நிச்சயமாக உமது இறைவன், தான் விரும்பியவர்களுக்கு விரிவாகக் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்கு சுருக்கிக் குறைத்து) அளவாக கொடுக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன், தன் அடியார்(களின் தன்மை)களை நன்கறிந்தவனாகவும், உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான். (ஆதலால், ஒவ்வொருவரின் தகுதிக்குத் தக்கவாறு கொடுக்கிறான்.)
İsra' 17:31
31. (மனிதர்களே!) நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்து விடாதீர்கள். நாம்தான் அவர்களுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறோம். அவர்களைக் கொலை செய்வது நிச்சயமாக (அடாத) பெரும் பாவமாகும்.
İsra' 17:32
32. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் விபசாரத்திற்கு நெருங்கவும் வேண்டாம்.ஏனென்றால், நிச்சயமாக அது மானக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.
İsra' 17:33
33. (எவரையும் கொலை செய்வது ஆகாதென்று) அல்லாஹ் தடுத்திருக்க, நீங்கள் எம்மனிதனையும் நியாயமின்றி கொலை செய்து விடாதீர்கள். எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டுவிட்டால், அவனுடைய வாரிசுகளுக்கு(ப் பழிவாங்க) நாம் அதிகாரம் அளித்திருக்கிறோம். ஆனால், (கொலையாளியான) அவனைப் பழிவாங்குவதில் அளவு கடந்து (சித்திரவதை செய்து)விட வேண்டாம். நிச்சயமாக அவன் (பழிவாங்க) உதவி செய்யப்படுவான். (அதாவது: கொலைக்கு பழிவாங்க வாரிசுகளுக்கு உதவி செய்ய வேண்டும்.)
İsra' 17:34
34. (நம்பிக்கையாளர்களே!) அநாதைக் குழந்தைகள் வாலிபத்தை அடையும் வரை (அவர்களுடைய பொருளுக்குப் பாதுகாப்பாளராக இருந்தால்) நீங்கள் நியாயமான முறையிலேயே தவிர அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள். உங்கள் வாக்குறுதியை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், மறுமையில் வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும்.
İsra' 17:35
35. நீங்கள் அளந்தால் முழுமையாக அளங்கள்; (நிறுத்தால்) சரியான எடையைக் கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) மிக்க நன்று; மிக்க அழகான பலனையும் தரும்.
İsra' 17:36
36. (நபியே!) நீர் அறியாத ஒரு விஷயத்தை பின் தொடராதீர்! ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும்.
İsra' 17:37
37. பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ அல்லது மலையின் உச்சியை அடைந்து விடவோ உம்மால் முடியாது.
İsra' 17:38
38. இவை அனைத்தும் உம் இறைவனிடத்தில் வெறுக்கப்பட்ட தீய காரியங்களாகும்.
İsra' 17:39
39. (நபியே!) இவை உமது இறைவனால் உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்ட ஞான (உபதேச)ங்களாகும். ஆகவே, அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற்குரியவனாக ஆக்காதீர். (அவ்வாறு செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும், சபிக்கப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்.
İsra' 17:40
40. (மனிதர்களே!) உங்கள் இறைவன், ஆண் மக்களை உங்களுக்குச் சொந்தமாக்கி விட்டு, வானவர்களைத் தனக்குப் பெண் மக்களாக ஆக்கிக் கொண்டானா? (இவ்வாறு கூறுகின்ற) நீங்கள் நிச்சயமாக மகத்தான (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.
İsra' 17:41
41. இவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இந்த குர்ஆனில் நிச்சயமாக நாம் பற்பல வகைகளில் (நல்லுபதேசங்களைக்) கூறியிருக்கிறோம். எனினும், (இவை அனைத்தும்) அவர்களுக்கு வெறுப்பையே தவிர அதிகப்படுத்தவில்லை.
İsra' 17:42
42. (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: நீங்கள் சொல்வது போல் அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்கள் இருந்தால், அவை அர்ஷையுடைய (அல்லாஹ்வாகிய அ)வன் பக்கம் செல்லக்கூடிய வழியைக் கண்டுபிடித்து (அவனிடம் சென்றே) இருக்கும்.
İsra' 17:43
43. அவன் மிகப் பரிசுத்தமானவன். இவர்கள் கூறுகின்ற கூற்றில் இருந்து அவன் மிக்க உயர்ந்தவன்.
İsra' 17:44
44. ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. (இவற்றில்) ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்க வில்லை. எனினும், அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாக, மன்னிப்புடையவனாக இருக்கிறான்.
İsra' 17:45
45. (நபியே!) நீர் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் உமக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையில் தடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு திரையை ஆக்கி விடுகிறோம்.
İsra' 17:46
46. அவர்களுடைய உள்ளங்களிலும், (அவர்கள்) அதை விளங்கிக் கொள்ள முடியாதவாறு திரையை அமைத்து அவர்களுடைய காதுகளைச் செவிடாக்கி விடுகிறோம். திரு குர்ஆனில் உமது இறைவன் ஒருவனைப்பற்றியே நீர் கூறிக் கொண்டிருந்தால், அவர்கள் வெறுத்துத் தங்கள் முதுகுப்புறமே (திரும்பிச்) சென்று விடுகின்றனர்.
İsra' 17:47
47. அவர்கள் உமக்கு செவி சாய்த்தால் என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கிறார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்கள் (தங்களுக்குள் உம்மைப் பற்றி) இரகசியமாகப் பேசிக்கொண்டால், “சூனியத்திற்குள்ளான மனிதனைத் தவிர (வேறொருவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை'' என்று இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கிக்) கூறுகின்றனர் (என்பதையும் நாம் நன்கறிவோம்).
İsra' 17:48
48. (நபியே!) உமக்கு எத்தகைய பட்டம் சூட்டுகிறார்கள் என்பதை நீர் கவனிப்பீராக. இவர்கள் வழிகெட்டே விட்டார்கள். (நேரான) வழியை அடைய இவர்களால் முடியாது.
İsra' 17:49
49. ‘‘நாம் (இறந்து) எலும்பாகி, உக்கி, மக்கிப்போனதன் பின்னர் புதிய ஒரு படைப்பாக உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று அவர்கள் கேட்கிறார்கள்.
İsra' 17:50
50. (அதற்கு நபியே!) கூறுவீராக: நீங்கள் (உக்கி, மக்கி, மண்ணாவது என்ன?) கல்லாகவோ இரும்பாகவோ ஆகிவிடுங்கள்.
İsra' 17:51
51. அல்லது மிகப் பெரிதென உங்கள் மனதில் தோன்றும் வேறொரு பொருளாக ஆகிவிடுங்கள். இவ்வாறு மாறிய பின்னர் ‘‘எங்களை எவன் உயிர்ப்பிப்பான்?'' என்று அவர்கள் கேட்கட்டும். (அவ்வாறு கேட்டால் நபியே! அவர்களை நோக்கி) ‘‘உங்களை முதலாவதாக எவன் படைத்தானோ அவன்தான் (நீங்கள் மரணித்த பின்னும் உங்களை எழுப்புவான்)'' என்று கூறுவீராக. அதற்கவர்கள் தங்கள் தலையை உங்கள் அளவில் சாய்த்து ‘‘அந்நாள் எப்பொழுது (வரும்)?'' என்று கேட்பார்கள். அதற்கு (அவர்களை நோக்கி ‘‘அது தூரத்தில் இல்லை,) வெகு சீக்கிரத்தில் வந்துவிடலாம்'' என்று கூறுவீராக.
İsra' 17:52
52. (இன்றைய தினம் நீங்கள் இறைவனை வெறுத்தபோதிலும் அவன்) உங்களை (விசாரணைக்காக) அழைக்கின்ற நாளில் நீங்கள் அவனைப் புகழ்ந்து கொண்டே அவனிடம் வருவீர்கள். (இறந்த பின்) வெகு சொற்ப(நேர)மே தவிர தங்கியிருக்கவில்லை என்றும் (அன்றைய தினம்) நீங்கள் எண்ணுவீர்கள்!
İsra' 17:53
53. (நபியே! எனக்கு கட்டுப்பட்ட) என் அடியார்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் (எந்த மனிதருடன் பேசியபோதிலும்) எது மிக அழகியதோ அதையே கூறவும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (கெட்ட வார்த்தைகளைக் கூறும்படி செய்து) கெடுதலே செய்வான். (ஏனென்றால்,) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (ஆகவே, எச்சரிக்கையாக இருங்கள்.)
İsra' 17:54
54. (மனிதர்களே!) உங்களை உங்கள் இறைவன் நன்கறிந்தே இருக்கிறான். அவன் விரும்பினால் உங்களுக்கு அருள்புரிவான் அல்லது அவன் விரும்பினால் உங்களை வேதனை செய்வான். ஆகவே, (நபியே!) நாம் உம்மை அவர்களுக்குப் பொறுப்பாளியாக அனுப்பவில்லை.
İsra' 17:55
55. வானங்களிலும் பூமியிலும் என்னென்ன இருக்கிறது என்பதை உம் இறைவன் நன்கறிவான். (நபியே! உமது இறைவனாகிய) நாம் நபிமார்களில் சிலரை சிலர்மீது மெய்யாகவே மேன்மையாக்கி வைத்து, தாவூது (நபி)க்கு ‘ஜபூர்' என்னும் வேதத்தைக் கொடுத்தோம்.
İsra' 17:56
56. (நபியே! இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ்வைத் தவிர்த்து (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே அவற்றை நீங்கள் (உங்கள் சிரமங்களை நீக்க) அழையுங்கள். (அவ்வாறு அழைத்தால்) அவை உங்கள் சிரமத்தை நீக்கி வைக்கவோ அல்லது (அதைத்) தட்டிவிடவோ சக்திபெறாது (என்பதை அறிந்து கொள்வீர்கள்).
İsra' 17:57
57. இவர்கள் யாரை பிரார்த்தித்து அழைக்கிறார்களோ அவர்களுமோ தங்கள் இறைவனிடம் தங்களில் மிக நெருக்கமானவராக யார் ஆகமுடியும் என்பதற்காக நன்மை செய்வதையே ஆசை வைத்துக்கொண்டும், அவனுடைய அருளையே எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்குப் பயந்து கொண்டும் இருக்கிறார்கள். ஏனென்றால், நிச்சயமாக உமது இறைவனின் வேதனையோ, மிக மிக பயப்படக்கூடியதே!
İsra' 17:58
58. (அநியாயக்காரர்கள் வசிக்கின்ற) எந்த ஊரையும் மறுமை நாள் வருவதற்கு முன்னதாக நாம் அழித்து விடாமல் அல்லது கடினமான வேதனை செய்யாமல் விடுவதில்லை. இவ்வாறே (நம்மிடமுள்ள நிகழ்ச்சிக் குறிப்பாகிய) ‘லவ்ஹுல் மஹ்ஃபூளி'ல் வரையப்பட்டு இருக்கிறது.
İsra' 17:59
59. (இவர்களுக்கு) முன்னிருந்தவர்களும் (அவர்கள் விரும்பியவாறு நாம் கொடுத்த) அத்தாட்சிகளை பொய்யாக்கி விட்டனர் என்ற காரணத்தைத் தவிர, (இப்போதுள்ளவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்பிவைக்க வேறொன்றும் நமக்கு தடையாக இல்லை. (இதற்கு முன்னர்) ‘ஸமூது' என்னும் மக்களுக்கு (அவர்கள் விரும்பியவாறே) ஒரு பெண் ஒட்டகத்தை அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம். அவர்களோ வரம்பு மீறி அதற்குத் தீங்கிழைத்து விட்டனர். (அவர்கள் விரும்புகின்ற) அத்தாட்சிகளை (அவர்களைப்) பயமுறுத்துவதற்காகவே தவிர நாம் அனுப்புவதில்லை.
İsra' 17:60
60. (நபியே!) ‘‘உமது இறைவன் அம்மனிதர்களைச் சூழ்ந்துகொண்டான். (அவர்கள் உமக்குத் தீங்கிழைக்க முடியாது)'' என்று நாம் உமக்குக் கூறியதை கவனிப்பீராக. உமக்கு நாம் (மிஃராஜில்) காண்பித்த காட்சியும், சபிக்கப்பட்ட (கள்ளி) மரத்தை (அது மறுமையில் பாவிகளின் உணவென) குர்ஆனில் நாம் கூறியிருப்பதும் மனிதர்களை சோதிப்பதற்காகவே தவிர வேறில்லை. (நபியே! நம் வேதனையைப் பற்றி) நாம் அவர்களைப் பயமுறுத்துவது (அவர்களுடைய) பெரும் அட்டூழியத்தையே அவர்களுக்கு அதிகரிக்கச் செய்கிறது.
İsra' 17:61
61. வானவர்களை நோக்கி, ‘‘ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என நாம் கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (வானவர்கள் அனைவரும் அவருக்குச்) சிரம் பணிந்தார்கள். அவனோ ‘‘நீ மண்ணால் படைத்தவனுக்கு நான் சிரம் பணிவதா?'' என்று கேட்டான்.
İsra' 17:62
62. (மேலும், இறைவனை நோக்கி) ‘‘என்னைவிட நீ கௌரவப்படுத்தி இருப்பவர் இவரல்லவா என்பதை நீ கவனித்தாயா?'' (என்று ஏளனமாக ஆதமைச் சுட்டிக் காண்பித்து) ‘‘நீ என்னை மறுமை நாள் வரை பிற்படுத்தி வைத்தால் வெகு சிலரைத் தவிர இவருடைய சந்ததிகள் அனைவரையும் நான் வழிகெடுத்து (வேரறுத்து) விடுவேன்'' என்று கூறினான்.
İsra' 17:63
63. (அதற்கு இறைவன், இங்கிருந்து) ‘‘நீ அப்புறப்பட்டு விடு. அவருடைய சந்ததிகளில் உன்னைப் பின்பற்றியவர்களுக்கும் (உனக்கும்) முற்றிலும் தகுதியான கூலி நிச்சயமாக நரகம்தான்'' என்றும்,
İsra' 17:64
64. ‘‘நீ உனக்குச் சாத்தியமான அளவு கூச்சல் போட்டு அவர்களைத் தூண்டிவிடு. உன் குதிரைப் படைகளையும், காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவிவிடு. அவர்களுடைய பொருளிலும் சந்ததியிலும் நீ கூட்டாக இருந்து கொண்டு அவர்களுக்கு (நயத்தையும் பயத்தையும் காட்டி) வாக்களி'' என்றும் கூறினான். ஆகவே, ஷைத்தான் (ஆகிய நீ) அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றமே தவிர வேறில்லை.
İsra' 17:65
65. நிச்சயமாக எனது (மனத்தூய்மையுடைய) அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை'' (என்றும் கூறினான். ஆகவே, அவர்களை) பொறுப்பேற்றுக் கொள்ள உமது இறைவ(னாகிய நா)னே போதுமானவன்.
İsra' 17:66
66. (மனிதர்களே! கடலில் நீங்கள் பயணம் செய்யும் பொழுது) உங்கள் இறைவனே உங்கள் கப்பலைக் கடலில் செலுத்துகிறான். (அதன் மூலம் பல நாடுகளுக்கும் சென்று) அவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்கிறீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் மீது மிகக் கருணையுடையவனாக இருக்கிறான்.
İsra' 17:67
67. உங்களுக்கு கடலில் ஒரு தீங்கேற்படும் சமயத்தில், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்த அனைத்தும் மறைந்து விடுகின்றன. (இறைவன் ஒருவன்தான் உங்கள் கண் முன் இருப்பவன்.) அவன் உங்களைக் கரையில் சேர்த்து பாதுகாத்துக் கொண்டாலோ (அவனை) நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்கள். மனிதன் மகா நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
İsra' 17:68
68. (நன்றி கெட்ட) உங்களைப் பூமி விழுங்கிவிடாதென்றோ அல்லது உங்கள் மீது கல்மழை பொழியாதென்றோ நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? (அவ்வாறு நிகழ்ந்தால்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.
İsra' 17:69
69. அல்லது மற்றொரு தடவை உங்களை கடலில் கொண்டு போய் கடினமான புயல் காற்றை உங்கள் மீது ஏவி, உங்கள் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக உங்களை மூழ்கடித்துவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? அச்சமயம் (நான் உங்களை அழித்து விடாது தடுக்க) என்னைப் பின்தொடர்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.
İsra' 17:70
70. ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்) கடலில் (கப்பல்கள் மீதும்) நாம்தான் அவர்களைப் பயணிக்க வைக்கிறோம். நல்ல உணவுகளையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்த (மற்ற உயிரினங்களில்) பலவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கிறோம்.
İsra' 17:71
71. ஒவ்வொரு மனிதனையும் அவர்களின் தலைவர்களுடன் (விசாரணைக்காக) நாம் அழைக்கும் நாளில், அவர்களின் (தினசரி குறிப்புப்) புத்தகம் அவர்களுடைய வலது கையில் கொடுக்கப்பட்டால் அவர்கள் தங்கள் (அதே தினசரி குறிப்புப்) புத்தகத்தை (மிக்க மகிழ்ச்சியோடு) வாசிப்பார்கள். (அவர்களுடைய கூலியில்) ஓர் நூல் அளவு (குறைத்து)ம் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
İsra' 17:72
72. எவர்கள் இம்மையில் (நேரான வழியைக் காணாது) குருடர்களாகி விட்டார்களோ அவர்கள் மறுமையிலும் குருடர்களே! ஆகவே, அவர்கள் வழி தவறி விடுவார்கள்.
İsra' 17:73
73. நாம் உமக்கு வஹ்யி மூலம் அறிவித்ததை நீர் விட்டு(விட்டு) அதல்லாததை நம்மீது நீர் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உம்மை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை அவர்கள் தங்கள் நண்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
İsra' 17:74
74. உம்மை நாம் உறுதியாக்கி வைக்காவிடில் நீர் ஒரு சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்துவிட நெருங்கி இருப்பீர்.
İsra' 17:75
75. (அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) அந்நேரத்தில் நீர் உயிராக இருக்கும் போதும் நீர் மரணித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சுவைக்கும்படி நாம் செய்திருப்போம். அதன் பின்னர், நமக்கு எதிராக உமக்கு உதவி செய்பவர்கள் ஒருவரையும் நீர் காணமாட்டீர்.
İsra' 17:76
76. (நபியே! உமது) ஊரிலிருந்து உமது காலைப்பெயர்த்து அதிலிருந்து உம்மை வெளிப்படுத்திவிடவே அவர்கள் முடிவு கட்டியிருந்தார்கள். அப்படி அவர்கள் செய்திருந்தால் உமக்குப் பின்னர் வெகு சொற்ப நாள்களே தவிர அங்கு அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.
İsra' 17:77
77. உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களைப் பற்றி நடைபெற்ற வழக்கமும் (இதுவாகவே) இருந்தது. நமது அந்த வழக்கத்தில் ஒரு மாறுதலையும் நீர் காணமாட்டீர்.
İsra' 17:78
78. (நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய நேரத்) தொழுகைகளைத் தொழுது வருவீராக. ஃபஜ்ர் தொழுகையும் தொழுது வருவீராக. ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது வானவர்கள் கலந்துகொள்ளும் தொழுகையாகும்.
İsra' 17:79
79. (தஹஜ்ஜுது தொழுகை உம் மீது கடமையாக இல்லாவிடினும்) நீர், நஃபிலாக இரவில் எழுந்து ஒரு (சிறிது) பாகத்தில் தொழுது வருவீராக! (இதன் அருளால் ‘மகாமே மஹ்மூத்' என்னும்) மிக்க புகழ்பெற்ற இடத்தில் உமது இறைவன் உம்மை அமர்த்தலாம்.
İsra' 17:80
80. அன்றி, ‘‘என் இறைவனே! என்னை (மதீனாவில் நுழைய வைக்க வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே நுழையவை. (மக்காவிலிருந்து என்னை வெளிப்படுத்த வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே என்னை வெளிப்படுத்திவை. உன்னிடமிருந்து ஒரு வெற்றியை நீ எனக்கு உதவியாக்கித் தந்தருள்'' என்று (நபியே!) பிரார்த்திப்பீராக!
İsra' 17:81
81. மேலும், ‘‘சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்'' என்றும் கூறுவீராக!.
İsra' 17:82
82. நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளாகவும் நோய் நிவாரணியாகவும் உள்ளவற்றையே இந்தத் திரு குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம். எனினும், அநியாயக்காரர்களுக்கோ (இது) நஷ்டத்தையே தவிர (வேறு எதையும்) அதிகரிப்பதில்லை.
İsra' 17:83
83. நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் (அதற்கு அவன் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக நம்மை) புறக்கணித்து முகம் திரும்பிக் கொள்கிறான். அவனை ஒரு தீங்கு அணுகினாலோ நம்பிக்கை இழந்து விடுகிறான்.
İsra' 17:84
84. (ஆகவே, நபியே!) கூறுவீராக: ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தோன்றியவற்றையே செய்கிறான். ஆகவே, நேரான வழியில் செல்பவன் யார் என்பதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்.
İsra' 17:85
85. (நபியே!) ரூஹைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். அதற்கு நீர் “அது எனது இறைவனின் கட்டளையால் ஏற்பட்டது. (அதைப் பற்றி) வெகு சொற்ப ஞானமே தவிர உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. (ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியாது)'' என்று கூறுவீராக.
İsra' 17:86
86. (நபியே!) நாம் விரும்பினால் வஹ்யி மூலம் உமக்கு அறிவித்த இந்த குர்ஆனையே (உம்மிடமிருந்து) போக்கிவிடுவோம். பின்னர், (இதை உம்மிடம் கொண்டு வர) நமக்கு விரோதமாக உமக்கு உதவி செய்ய எவரையும் நீர் காணமாட்டீர்.
İsra' 17:87
87. ஆனால், உமது இறைவனுடைய அருளின் காரணமாகவே (அவ்வாறு அவன் செய்யவில்லை.) நிச்சயமாக உம் மீது அவனுடைய அருள் மிகப்பெரிதாகவே இருக்கிறது.
İsra' 17:88
88. (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து, சிலர் சிலருக்கு உதவியாக இருந்து இதைப்போன்ற ஒரு குர்ஆனைக் கொண்டுவர முயற்சித்தபோதிலும் இதைப்போல் கொண்டு வர அவர்களால் (முடியவே) முடியாது.
İsra' 17:89
89. இந்த குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் மனிதர்களுக்கு(த் திரும்பத் திரும்ப) விவரித்துக் கூறியிருக்கிறோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதை நிராகரிக்காமல் இருக்கவில்லை.
İsra' 17:90
90. (நபியே!) ‘‘இப்பூமி வெடித்து, ஒரு ஊற்றுக்கண்ணை நீர் ஏற்படுத்தும் வரை நாம் உம்மை நம்பிக்கை கொள்ள மாட்டோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.
İsra' 17:91
91. ‘‘அல்லது மத்தியில் தொடர்ந்து நீரருவிகளை நீர் ஓடவைத்துக் கொண்டிருக்கக்கூடிய திராட்சை, பேரீச்சை மரங்களையுடைய ஒரு சோலை உமக்கு ஆகும் வரை (உம்மை நம்பிக்கை கொள்ள மாட்டோம்'' என்றும் கூறுகின்றனர்).
İsra' 17:92
92. ‘‘அல்லது நீர் எண்ணுகிற பிரகாரம் வானத்தை பல துண்டுகளாக எங்கள் (தலை) மீது விழவைக்கின்ற வரை அல்லது அல்லாஹ்வையும் வானவர்களையும் நம் (கண்) முன் நீர் கொண்டு வருகின்றவரை (உம்மை நாம் நம்பிக்கை கொள்ள மாட்டோம்'' என்றும் கூறுகின்றனர்).
İsra' 17:93
93. ‘‘அல்லது (மிக்க அழகான) தங்கத்தினாலாகிய ஒரு மாளிகை உமக்கு ஆகும் வரை அல்லது வானத்தின் மீது நீர் ஏறுகின்ற வரை (நாம் உம்மை நம்பிக்கைகொள்ள மாட்டோம்). ஏறியபோதிலும் நாம் ஓதக்கூடிய ஒரு வேதத்தை (நேராக) நம்மீது நீர் இறக்கிவைக்காத வரை நீர் வானத்தில் ஏறியதையும் நாம் நம்பமாட்டோம்'' என்றும் கூறுகின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘என் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நான் (உங்களைப் போன்ற) ஒரு மனிதன்தான். எனினும், நான் (அவனால் அனுப்பப்பட்ட) ஒரு தூதர் என்பதைத் தவிர வேறெதுவும் உண்டா?''
İsra' 17:94
94. மனிதர்களிடம் ஒரு நேரான வழி வந்த சமயத்தில், ‘‘ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பி வைத்தான்?'' என்று கூறுவதைத் தவிர அவர்கள் நம்பிக்கை கொள்வதை விட்டும் அவர்களை எதுவும் தடுக்கவில்லை.
İsra' 17:95
95. (அதற்கு) நீர் கூறுவீராக: பூமியில் (மனிதர்களுக்குப் பதிலாக) வானவர்களே வசித்திருந்து, அதில் அவர்கள் நிம்மதியாக நடந்து திரிந்து கொண்டுமிருந்தால் நாமும் வானத்திலிருந்து (அவர்கள் இனத்தைச் சார்ந்த) ஒரு வானவரையே (நம்) தூதராக அவர்களிடம் அனுப்பியிருப்போம். (ஆகவே, மனிதர்களாகிய அவர்களிடம் மனிதராகிய உம்மை நம் தூதராக அனுப்பியதில் தவறொன்றுமில்லை.)
İsra' 17:96
96. (இன்னும்,) நீர் கூறுவீராக: ‘‘எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ் ஒருவனே போதுமான சாட்சியாக இருக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன்தான் தன் அடியார்களை நன்கறிந்தவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
İsra' 17:97
97. எவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவர்கள் தான் நேரான வழியை அடைவார்கள். எவர்களை (அல்லாஹ்) தவறான வழியில் விட்டுவிடுகிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர்களை அவனைத் தவிர்த்து வேறுயாரையும் நீர் காண மாட்டீர். மேலும், மறுமைநாளில் அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் (ஆக்கி) அவர்கள் தங்கள் முகத்தால் நடந்து வரும்படி (செய்து) அவர்களை ஒன்று சேர்ப்போம். அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். (அதன்) அனல் தணியும் போதெல்லாம் மென்மேலும் கொழுந்து விட்டெரியும்படி செய்து கொண்டே இருப்போம்.
İsra' 17:98
98. அவர்கள், நம் வசனங்களை நிராகரித்து விட்டதுடன், ‘‘நாம் (மரணித்து)எலும்புகளாகவும், உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா?'' என்று கூறிக் கொண்டிருந்ததும்தான் இத்தகைய (கொடிய) தண்டனையை அவர்கள் அடைவதற்குரிய காரணமாகும்.
İsra' 17:99
99. மெய்யாகவே வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் (மறுமுறையும்) அவர்களைப் போன்றே படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறிய வில்லையா? (இதற்காக) அவர்களுக்கு ஒரு தவணையை ஏற்படுத்தியிருக்கிறான். அதில் ஒரு சந்தேகமுமில்லை. (இவ்வாறிருந்தும்) இவ்வக்கிரமக்காரர்கள் இதை நிராகரிக்காமலில்லை!
İsra' 17:100
100. (நபியே!) கூறுவீராக: என் இறைவனின் அருள் பொக்கிஷங்கள் அனைத்திற்கும் நீங்களே சொந்தக்காரர்களாக இருந்தால் அது செலவாகி விடுமோ! எனப் பயந்து (எவருக்கும் எதுவுமே கொடுக்காது) நீங்கள் தடுத்துக் கொள்வீர்கள். மனிதன் பெரும் கஞ்சனாக இருக்கிறான்.
İsra' 17:101
101. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு தெளிவான ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம். (நபியே! இதைப்பற்றி) இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக. (மூஸா) அவர்களிடம் வந்தபொழுது, ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி, ‘‘மூஸாவே! நிச்சயமாக நீர் சூனியத்தால் புத்தி மாறியவர் என நான் உம்மை எண்ணுகிறேன்'' என்று கூறினான்.
İsra' 17:102
102. அதற்கு மூஸா (அவனை நோக்கி) ‘‘வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனே இவ்வத்தாட்சிகளை மனிதர்களுக்குப் படிப்பினையாக இறக்கிவைத்தான் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ஃபிர்அவ்னே! உன்னை நிச்சயமாக அழிவு (காலம்) பிடித்துக்கொண்டது என நான் எண்ணுகிறேன்'' என்று கூறினார்.
İsra' 17:103
103. (அதற்கு அவன் மூஸாவையும் அவருடைய மக்கள்) அனைவரையும் தன் நாட்டிலிருந்து விரட்டிவிடவே அவன் எண்ணினான். எனினும், (அதற்குள்ளாக) அவனையும் அவனுடன் இருந்த (அவனுடைய மக்கள்) அனைவரையும் நாம் மூழ்கடித்து விட்டோம்.
İsra' 17:104
104. இதன் பின்னர் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நாம் கூறினோம்: ‘‘நீங்கள் இப்பூமியில் வசித்திருங்கள். மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் அனைவரையும் (விசாரணைக்காக) நம்மிடம் கொண்டு வந்து ஒன்று சேர்ப்போம்.
İsra' 17:105
105. முற்றிலும் உண்மையைக் கொண்டே இவ்வேதத்தை நாம் இறக்கினோம். அதுவும் உண்மையைக் கொண்டே இறங்கியது. (நபியே!) உம்மை நாம் (நன்மை செய்தவர்களுக்கு) நற்செய்தி கூறுபவராகவும் (பாவம் செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே தவிர அனுப்பவில்லை.
İsra' 17:106
106. (நபியே!) மனிதர்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிக்கும் பொருட்டு இந்த குர்ஆனை பல பாகங்களாக நாம் பிரித்தோம். அதற்காகவே நாம் இதைச் சிறுகச் சிறுகவும் இறக்கிவைக்கிறோம்.
İsra' 17:107
107. (நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் (இந்த குர்ஆனை) நம்பிக்கைகொள்ளுங்கள் அல்லது நம்பிக்கை கொள்ளாதிருங்கள். (அதைப் பற்றி நமக்கு ஒன்றும் குறைவில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னுள்ள (வேதங்களின்) மெய்யான ஞானம் எவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்களிடம் (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் (இதை நம்பிக்கை கொண்டு) முகங்குப்புற விழுந்து (எனக்கு) சிரம்பணிவார்கள்.
İsra' 17:108
108. மேலும், (அவர்கள்) ‘‘எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். எங்கள் இறைவனின் வாக்குறுதி நிச்சயமாக நிறைவேறிவிட்டது'' என்றும் கூறுவார்கள்.
İsra' 17:109
109. மேலும், அவர்கள் முகங்குப்புற விழுந்து அழுவார்கள். அவர்களுடைய உள்ளச்சமும் அதிகரிக்கும்.
İsra' 17:110
110. (நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் அல்லாஹ் என்று அழையுங்கள் அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்; (இவ்விரண்டில்) எப்பெயர் கொண்டு நீங்கள் அவனை அழைத்தபோதிலும் (அழையுங்கள்.) அவனுக்கு அழகான (இன்னும்) பல திருப்பெயர்கள் இருக்கின்றன.'' (நபியே!) உமது தொழுகையில் நீர் மிக சப்தமிட்டு ஓதாதீர்! அதிக மெதுவாகவும் ஓதாதீர்! இதற்கு மத்திய வழியைக் கடைப்பிடிப்பீராக.
İsra' 17:111
111. (நபியே!) கூறுவீராக: ‘‘புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவனுக்கு ஒரு சந்ததியுமில்லை. அவனுடைய ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி ஒருவருமில்லை. அவனுக்கு பலவீனம் இல்லை என்பதால் அவனுக்கு உதவியாளன் ஒருவனுமில்லை.'' ஆகவே, அவனை மிக மிகப் பெருமைப்படுத்திக் கூறுவீராக!
Kehf 18:1
1. புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவன்தான் தன் அடியார் (நபி முஹம்மது) மீது இவ்வேதத்தை இறக்கிவைத்தான். அதில் அவன் எத்தகைய (குறைபாட்டையும்) கோணலையும் வைக்கவில்லை.
Kehf 18:2
2. இது உறுதியான அடிப்படையின் மீதுள்ளது. அல்லாஹ்வுடைய கடினமான வேதனையைப் பற்றி (நிராகரிப்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், எவர்கள் இதை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (அழகான) நற்கூலி(யாகிய சொர்க்கம்) நிச்சயமாக உண்டென்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இதை இறக்கிவைத்தான்).
Kehf 18:3
3. அ(ந்த சொர்க்கத்)தில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
Kehf 18:4
4. அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொண்டான் என்று கூறுபவர்களையும் இது கண்டித்து எச்சரிக்கை செய்கிறது.
Kehf 18:5
5. அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் இதற்குரிய ஆதாரம் ஒரு சிறிதும் இல்லை. இவர்கள் வாயிலிருந்து புறப்படும் இந்த வாக்கியம் மாபெரும் (பாவமான) வாக்கியமாகும்; பொய்யையே தவிர (இவ்வாறு) இவர்கள் (உண்மை) கூறவில்லை.
Kehf 18:6
6. (நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால் அதற்காக நீர் துக்கித்து அவர்களின் அடிச்சுவடுகள் மீது உமது உயிரை அழித்துக் கொள்வீரோ! (ஆகவே, அதற்காக நீர் கவலைப்படாதீர்.)
Kehf 18:7
7. பூமியிலுள்ளவற்றை நாம் அதற்கு அலங்காரமாக்கி வைத்தது அவர்களில் எவர்கள் நல்ல நடத்தையுள்ளவர்கள் என்பதை நிச்சயமாக நாம் சோதிப்பதற்காகத்தான்.
Kehf 18:8
8. (ஒரு நாளில்) நிச்சயமாக நாம் பூமியில் (அலங்காரமாக) உள்ள இவை அனைத்தையும் (அழித்து) வெட்டவெளியாக்கி விடுவோம்.
Kehf 18:9
9. (நபியே! ‘அஸ்ஹாபுல் கஹ்ஃப்' என்னும் குகையுடையவர்களைப் பற்றி யூதர்கள் உம்மிடம் கேட்கின்றனர்.) அந்தக் குகையுடையவர்களும் சாசனத்தை உடையவர்களும் நிச்சயமாக நம் அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்களாக இருந்தனர் என்று எண்ணுகிறீரா! (அவர்களின் சரித்திரத்தை உமக்கு நாம் கூறுகிறோம்.)
Kehf 18:10
10. (அவர்கள்) ஒரு சில வாலிபர்கள், அவர்கள் குகையினுள் சென்றபொழுது ‘‘எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக!'' என்று பிரார்த்தனை செய்தார்கள்.
Kehf 18:11
11. ஆதலால், அக்குகையில் பல வருடங்கள் (நித்திரை செய்யும்படி) அவர்களுடைய காதுகளைத் தட்டிக் கொடுத்தோம்.
Kehf 18:12
12. அவர்கள் அக்குகையில் இருந்த காலத்தை (அவர்களில் உள்ள) இரு வகுப்பாரில் எவர்கள் நன்கறிகிறார்கள் என்பதை நாம் (மனிதர்களுக்கு) அறிவிக்கும் பொருட்டு (நித்திரையிலிருந்து) அவர்களை எழுப்பினோம்.
Kehf 18:13
13. (நபியே!) அவர்களுடைய உண்மையான சரித்திரத்தையே நாம் உமக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை நம்பிக்கைகொண்ட வாலிபர்களாவர். (ஆகவே,) மேலும், நேரான வழியில் நாம் அவர்களை செலுத்தினோம்.
Kehf 18:14
14. அவர்களுடைய உள்ளங்களையும் (நேரான வழியில்) நாம் உறுதியாக்கி விட்டோம். (அவர்கள் காலத்திலிருந்த அரசன் அவர்களை சிலைவணக்கம் செய்யும்படி நிர்ப்பந்தித்த சமயத்தில்) அவர்கள் எழுந்து நின்று ‘‘வானங்களையும் பூமியையும் படைத்தவன்தான் எங்கள் வணக்கத்திற்குரிய இறைவன். அவனைத் தவிர (வேறொருவரையும் வணக்கத்திற்குரிய) இறைவனாக நாங்கள் நிச்சயமாக அழைக்க மாட்டோம். (அப்படி அழைத்தால்) நிச்சயமாக நாங்கள் அடாத வார்த்தையைக் கூறியவர்களாவோம்'' என்றார்கள்.
Kehf 18:15
15. ‘‘நமது இந்த மக்கள் அவனைத் தவிர்த்து வேறு இறைவனை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குத் தெளிவான அத்தாட்சியை இவர்கள் கொண்டு வரவேண்டாமா? அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனை விட மகா அநியாயக்காரன் யார்?'' (என்றார்கள்.)
Kehf 18:16
16. அவர்களிலிருந்தும் அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றிலிருந்தும் நீங்கள் விலகிக்கொண்ட பின்னர் நீங்கள் (அவர்களை விட்டுத் தப்ப) இக்குகைக்குள் சென்றுவிடுங்கள். உங்கள் இறைவன் உங்கள் மீது தன் அருளைச் சொரிந்து, (வாழ்வதற்குரிய) உங்கள் காரியங்களை எளிதாகவும் உங்களுக்கு அமைத்து விடுவான் (என்றும் தங்களுக்குள் கூறிக்கொண்டனர்).
Kehf 18:17
17. (நபியே! அங்கு சென்று பார்ப்பீரானால்) சூரியன் உதிக்கும்போது அவர்கள் (இருக்கும் அக்)குகையின் வலது பக்கத்தில் சாய்வதையும், அது மறையும்போது, அவர்களின் இடது பக்கத்தை கடந்து செல்வதையும் நீர் காண்பீர்! அவர்கள் அதன் விசாலமான இடத்தில் (நிழலில் நித்திரை செய்து கொண்டு) இருக்கின்றனர். இது அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். எவனை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவன்தான் நேரான வழியில் செல்வான். எவனை அவன் அவனுடைய (பாவத்தின் காரணமாக) தவறான வழியில் விட்டுவிடுகிறானோ அவனுக்கு உதவி செய்பவர்களையும், நேரான வழியை அறிவிப்பவர்களையும் நீர் காணமாட்டீர்.
Kehf 18:18
18. (நபியே! அக்குகையிலுள்ள) அவர்கள் நித்திரை செய்து கொண்டிருந்த போதிலும் அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவே நீர் எண்ணுவீர். அவர்களை வலப்பக்கமாகவும், இடப்பக்கமாகவும் (மாற்றி மாற்றி) நாம் திருப்பிக் கொண்டிருக்கிறோம். அவர்களுடைய நாயோ தன் இரு முன்னங்கால்களையும் விரித்துக்கொண்டு வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது (என்பதையும் நீர் காண்பீர்). அவர்களை நீர் எட்டிப் பார்த்தால் அவர்களைவிட்டு வெருண்டோடுவீர்; திடுக்கமும் (நடுக்கமும்) உம்மைச் சூழ்ந்துகொள்ளும்.
Kehf 18:19
19. அவர்கள் (அதில் எவ்வளவு காலம் இருந்தனர் என்பதைத்) தங்களுக்குள் கேட்டறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (நித்திரை செய்யும்) அவர்களை நாம் எழுப்பினோம். அவர்களில் ஒருவர் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எவ்வளவு நேரம் நித்திரையில் இருந்தீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்களில் சிலர் ‘‘ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் (இருந்திருப்போம்)'' என்று கூறினர். (மற்றவர்கள்) ‘‘நீங்கள் நித்திரையிலிருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்'' என்று கூறி ‘‘உங்களில் ஒருவரிடம் இந்த (வெள்ளி) நாணயத்தைக் கொடுத்து அவரைப் பட்டிணத்திற்கு அனுப்பிவையுங்கள். அவர் (அங்கு சென்று) நல்ல உணவுப் பொருள் எது (எங்கிருக்கிறது) என்பதைத் தேடிப்பார்த்து அதில் சிறிது வாங்கி வரவும். எனினும், உங்களை(ப் பட்டிணத்திலிருப்பவர்களில்) ஒருவரும் அறிந்து கொள்ளாதவாறு மிக்க எச்சரிக்கையாகவே அவர் நடந்து கொள்ளவும்.
Kehf 18:20
20. ஏனென்றால், (ஊர் மக்கள்) உங்களை (இன்னாரென) அறிந்து கொண்டால் நிச்சயமாக அவர்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவார்கள்; அல்லது உங்களை தங்கள் மார்க்கத்தில் சேர்த்து விடுவார்கள். (அப்படி நீங்கள் சேர்ந்தாலோ) ஒரு காலத்திலும் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள்'' (என்றார்கள்).
Kehf 18:21
21. (மரணித்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான் என்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்றும், மறுமை வருவதில் ஒரு சந்தேகமுமில்லை என்றும், (இதன் மூலம் அப்பட்டிணவாசிகளான) அவர்கள் உறுதியாக அறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (உணவு தேடி அங்கு செல்லும்படி செய்து) அவர்களுக்கு (இவர்களைக்) காட்டிக் கொடுத்தோம். (அந்நகரவாசிகள் இவர்கள் இருந்த குகைக்கு வந்து) ‘‘இவர்கள் யார் என்பதைப் பற்றித் (தங்களுக்குள்) தர்க்கித்துக் கொண்டு, இவர்களை இவர்களுடைய இறைவன்தான் நன்கறிவான் என்றும், இவர்கள் இருக்கும் இடத்தில் (உயர்ந்த) ஒரு கோபுரத்தை (ஞாபகார்த்தமாக) எழுப்புங்கள்'' என்றும் கூறினார்கள். (இந்தத் தர்க்கத்தில்) எவர்களுடைய அபிப்பிராயம் மேலோங்கியதோ அவர்கள் ‘‘இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு மஸ்ஜிதை நிச்சயமாக நாம் அமைத்து விடுவோம்'' என்றார்கள்.
Kehf 18:22
22. (குகையிலிருந்த அவர்கள்) மூன்று பேர்தான்; நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலரு)ம்; (அவர்கள்) ஐந்து பேர், அவர்களுடைய நாய் ஆறாவதாகும் என்று (வேறு சிலரு)ம்; மறைவான விஷயங்களைத் தாங்கள் கண்டுபிடித்து விட்டவர்களைப் போல் (மிக்க உறுதியாகக்) கூறுகின்றனர். மற்றும் சிலரோ அவர்கள் ஏழு பேர், எட்டாவது அவர்களுடைய நாய் என்றும் கூறுகின்றனர். எனினும் (நபியே!) ‘‘அவர்களுடைய எண்ணிக்கையை சிலரைத் தவிர மற்றவர்கள் அறிய மாட்டார்கள். அவர்களுடைய எண்ணிக்கையை என் இறைவன்தான் நன்கறிவான்'' என்று கூறுவீராக. இன்னும், அவர்களைப் பற்றி மேலெழுந்த வாரியாகவே தவிர தர்க்கிக்காதீர். அவர்களைப் பற்றி இவர்களில் ஒருவனிடமும் (ஒன்றுமே) கேட்காதீர்.''
Kehf 18:23
23. (நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் ‘‘நிச்சயமாக நான் அதை நாளைக்குச் செய்துவிடுவேன்'' என்று கூறாதீர்.
Kehf 18:24
24. ஆயினும், ‘‘இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால் நாளைக்குச் செய்வேன்) என்று கூறுவீராக. நீர் இதை மறந்து விட்டால் (ஞாபகம் வந்ததும் இவ்வாறு) உமது இறைவனின் பெயரைக் கூறுவீராக. தவிர, (நன்மைக்கு) இதைவிட இன்னும் நெருங்கிய பல விஷயங்களையும் என் இறைவன் எனக்கு அறிவிக்கக் கூடும்'' என்றும் கூறுவீராக.
Kehf 18:25
25. அவர்கள் குகையில் (சூரிய கணக்கின்படி) முன்னூறு ஆண்டுகள் தங்கி இருந்தனர், (சந்திர கணக்கின்படி 309 ஆண்டுகள் தங்கி இருந்தனர்.) மேலும் (சிலர்) ஒன்பது ஆண்டுகளை அதிகப்படுத்தினர்.
Kehf 18:26
26. (நபியே!) கூறுவீராக: அவர்கள் அதில் இருந்த காலத்தை அல்லாஹ் தான் நன்கறிவான். வானங்களிலும், பூமியிலும் மறைவாயிருப்பவை அனைத்தும் அவனுக்கு உரியவையே! இவற்றை அவன் எவ்வளவோ நன்றாகப் பார்ப்பவன்; எவ்வளவோ நன்றாகக் கேட்பவன். அவனைத் தவிர இவற்றை நிர்வகிப்பவன் யாருமில்லை. அவன் தன் அதிகாரத்தில் ஒருவரையும் துணையாக ஆக்கிக் கொள்ளவில்லை.
Kehf 18:27
27. (நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்ட உமது இறைவனின் வேதத்தை நீர் (தொடர்ந்து) ஓதிக் கொண்டே இருப்பீராக! அவனுடைய கட்டளைகளை எவராலும் மாற்றிவிட முடியாது. அவனைத் தவிர உமக்கு பாதுகாக்கும் எந்த ஓர் இடத்தையும் காணமாட்டீர்.
Kehf 18:28
28. (நபியே!) எவர்கள் சிரமங்களைச் சகித்துத் தங்கள் இறைவனின் திரு முகத்தையே நாடி அவனையே காலையிலும், மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் உம்மையும் நீர் ஆக்கிக் கொள்வீராக. இவ்வுலக அலங்காரத்தை நீர் விரும்பி அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உமது கண்களைத் திருப்பி விடாதீர். தன் சரீர இச்சையைப் பின்பற்றியதன் காரணமாக எவனுடைய உள்ளத்தை நம்மைத் தியானிப்பதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர். அவனுடைய காரியம் எல்லை கடந்து விட்டது.
Kehf 18:29
29. (நபியே!) உமது இறைவனால் அருளப்பட்ட (இவ்வேதமான)து முற்றிலும் உண்மையானது. விரும்பியவர் (இதை) நம்பிக்கை கொள்ளலாம்; விரும்பியவர் (இதை) நிராகரித்துவிடலாம். (அதனால் நமக்கொன்றும் நஷ்டமில்லை. ஆனால் இதை நிராகரிக்கும்) அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத்தான் தயார்படுத்தி உள்ளோம். அந்நரகத்தின் ஜூவாலைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) அபயமிட்டால் காய்ந்து உருகிய செம்பைப் போலுள்ள நீரே அவர்களுக்குக் கொடுக்கப்படும். (அவர் அதைக் குடிப்பதற்கு முன்னதாகவே) அது அவர்களுடைய முகத்தைச் சுட்டுக் கருக்கிவிடும். அன்றி அது மிக்க (அருவருப்பான) கெட்ட குடிபானமாகும். அவர்கள் இளைப்பாறும் இடமும் மிகக் கெட்டதாகும்.
Kehf 18:30
30. (எனினும்,) நிச்சயமாக எவர்கள் (இக்குர்ஆனை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ (அத்தகைய) நன்மை செய்பவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்கி விடுவதில்லை.
Kehf 18:31
31. இவர்களுக்கு நிலையான சொர்க்கங்கள் உண்டு. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவர்களுக்குப் (பரிசாகப்) பொற்கடகம் அணிவிக்கப்படும். மெல்லியதாகவோ அழுத்தமானதாகவோ (அவர்கள் விரும்பிய) பசுமையான பட்டாடைகளை அணிவார்கள். இருக்கைகளிலுள்ள தலையணைகள் மீது சாய்ந்து (மிக்க உல்லாசமாக) இருப்பார்கள். இவர்களுடைய கூலி மிக்க நன்றே! இவர்கள் இன்பம் அனுபவிக்கின்ற இடமும் மிக்க அழகானது.
Kehf 18:32
32. (நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுவீராக: அவர்களில் ஒருவனுக்கு இரு திராட்சைத் தோட்டங்களைக் கொடுத்தோம். அவ்விரண்டைச் சூழவும் பேரீச்ச மரங்களை ஆக்கினோம். இவ்விரண்டிற்கும் மத்தியில் தானிய வயல்களை அமைத்தோம்.
Kehf 18:33
33. அவ்விரு தோட்டங்களிலுமே அதன் பலனை ஒரு குறைவுமின்றி கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் மத்தியில் ஒரு நதியையும் ஓடச்செய்தோம்.
Kehf 18:34
34. அவனிடத்தில் இன்னும் (பல) கனி (தரும் மரங்)களும் இருந்தன. (இத்தகைய நிலைமையில் ஒரு நாள்) அவன் தன்னுடன் பேசிக் கொண்டிருந்த தன் நண்பனை நோக்கி ‘‘நான் உன்னைவிட அதிகப் பொருளுடையவன், மக்கள் தொகையிலும் நான் (உன்னை) மிகைத்தவன்'' என்று (கர்வத்துடன்) கூறினான்.
Kehf 18:35
35. பின்னர், அவன் தன் தோப்புக்குள் நுழைந்து (அளவு மீறிய மகிழ்ச்சியின் காரணமாக) தனக்குத் தானே தீங்கிழைத்தவனாக ‘‘இவை ஒரு காலத்திலும் அழிந்துவிடுமென நான் நினைக்கவில்லை'' (என்றும்)
Kehf 18:36
36. ‘‘மறுமை நிகழும் என்றும் நான் நம்பவேயில்லை. ஒருகால் (மறுமை நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் கொண்டு போகப்பட்டாலும் இங்கிருப்பதைவிட அங்கு நான் மேலானவனாக இருப்பதையே காண்பேன்'' என்றும் கூறினான்.
Kehf 18:37
37. அதற்கு அவனுடன் பேசிக் கொண்டிருந்த அவனுடைய நண்பன் அவனை நோக்கி ‘‘உன்னைப் படைத்தவனையே நீ நிராகரிக்கிறாயா? மண்ணிலிருந்து பின்னர் இந்திரியத்தின் ஒரு துளியிலிருந்து உன்னைப் படைத்த அவன், பின்னர் ஒரு முழு மனிதனாகவும் உன்னை அமைத்தான்.
Kehf 18:38
38. எனினும், அந்த அல்லாஹ்தான் என்(னைப் படைத்த) இறைவன் என்று நான் உறுதியாக நம்பியிருக்கிறேன். ஆகவே, நான் என் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்க மாட்டேன்.
Kehf 18:39
39. நீ உன் தோட்டத்தில் நுழைந்தபொழுது (இவை அனைத்தும்) அல்லாஹ் (தன் அருளால்) எனக்குத் தந்தவையே! அல்லாஹ்வின் உதவியின்றி (நாம்) ஒன்றும் செய்து விட அறவே (நமக்கு) சக்தி இல்லை? என்று நீ கூறியிருக்க வேண்டாமா? பொருளிலும் சந்ததியிலும் நான் உன்னைவிட குறைவாக இருப்பதை நீ கண்டபோதிலும்,
Kehf 18:40
40. உன் தோட்டத்தைவிட மிக்க மேலானதை என் இறைவன் எனக்குக் கொடுக்கவும் (உன் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக) உன் தோப்பின் மீது ஓர் ஆபத்தை வானத்தில் இருந்து இறக்கி (அதிலுள்ள மரம், செடிகளையெல்லாம் அழித்து) அதை வெட்டவெளியாக (என் இறைவன்) செய்து விடவும் கூடும்.
Kehf 18:41
41. அல்லது அதன் நீர் முழுதும் பூமிக்குள் வற்றி(யிருப்பதை) நீ தேடிக் காண முடியாமலும் ஆக்கிவிடக் கூடும்'' என்றும் கூறினார்.
Kehf 18:42
42. (அந்நண்பர் கூறியவாறே) அவனுடைய விளை பொருள் (செல்வம்)அனைத்தும் அழிந்தன. அத்தோட்டத்தின் மரங்கள், செடிகள் (ஆகிய அனைத்தும்) அடியுடன் சாய்ந்து விட்டன. ஆகவே, அவற்றில் அவன் செலவு செய்ததைப் பற்றி தன் இரு கைகளைப் பிசைந்து கொண்டான். (மறுமையில் இறைவன் முன் அவன் கொண்டுவரப்படும்போது) ‘‘என் இறைவனுக்கு நான் எவரையும் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே?'' என்று (கைசேதப்பட்டு) கூறுவான்.
Kehf 18:43
43. அச்சமயம் அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு உதவி செய்யக்கூடிய ஒரு கூட்டமும் (படையும்) அவனுக்கு இருக்கவில்லை. அவனும் (இதற்காக அல்லாஹ்விடம்) பழிவாங்க முடியாது போயிற்று.
Kehf 18:44
44. அங்கு எல்லா அதிகாரங்களும் உண்மையான அல்லாஹ்வுக்கு உரியன. அவனே கூலி கொடுப்பவர்களில் மிக்க மேலானவன்; முடிவு செய்வதிலும் மிக்க மேலானவன். (இதையும் அவன் அங்கு அறிந்து கொள்வான்).
Kehf 18:45
45. (நபியே!) இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை அவர்களுக்குக் கூறுவீராக: அது மேகத்திலிருந்து நாம் இறக்கி வைக்கின்ற (மழை) நீருக்கு ஒப்பாக இருக்கிறது. பூமியிலுள்ள புற்பூண்டுகள் (அதைக் குடித்து) அதனுடன் கலந்து (நல்ல பயிராயிற்று. எனினும், அது பலன் தருவதற்குப் பதிலாக) பின்னர் காற்றடித்துக் கொண்டு போகக்கூடிய காய்ந்த சருகாகி விட்டது. (இதுவே இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணமாகும்.) அனைத்தின் மீதும் அல்லாஹ் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
Kehf 18:46
46. (ஆகவே,) செல்வமும் ஆண் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரங்களே (தவிர நிலையானவையல்ல). என்றுமே நிலையான நற்செயல்கள்தான் உமது இறைவனிடத்தில் நற்கூலி கிடைப்பதற்கு மிக சிறந்ததும், நல்லாதரவு வைப்பதற்கு மிக சிறந்ததும் ஆகும்.
Kehf 18:47
47. (நபியே!) நாம் மலைகள் (மரங்கள், செடிகள், போன்ற பூமியிலுள்ள) அனைத்தையும் அகற்றிவிடுகின்ற நாளில், நீங்கள் பூமியைச் சமமான வெட்ட வெளியாகக் காண்பீர். (அந்நாளில்) மனிதர்களில் ஒருவரையுமே விட்டு விடாது அனைவரையும் ஒன்று சேர்ப்போம்.
Kehf 18:48
48. உமது இறைவன் முன் அவர்கள் கொண்டுவரப்பட்டு, அணி அணியாக நிறுத்தப்படுவார்கள். ‘‘நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே இப்பொழுதும் (உங்களுக்கு நாம் உயிர் கொடுத்து) நீங்கள் நம்மிடம் வந்திருக்கிறீர்கள். எனினும், (விசாரணைக்காக வாக்களிக்கப்பட்ட ஒரு நாளை) உங்களுக்கு நாம் ஏற்படுத்தவே மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்'' (என்று அவர்களிடம் கூறப்படும்).
Kehf 18:49
49. (நபியே அவர்களுடைய செயல்கள் எழுதப்பட்ட தினசரிக் குறிப்புப்) புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் இருப்பதைக் கண்டு) பயந்து ‘‘எங்கள் கேடே! இதென்ன புத்தகம்! (எங்கள் பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும்விடாது இதில் எழுதப்பட்டிருக்கின்றதே'' என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீர் காண்பீர். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உமது இறைவன் எவனுக்கும் (அவனுடைய தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்யமாட்டான்.
Kehf 18:50
50. வானவர்களை நோக்கி ‘‘ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என்று நாம் கூறிய சமயத்தில், இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். அவனோ ஜின்களின் இனத்தைச் சார்ந்தவன். அவன் தன் இறைவனுடைய கட்டளைக்கு மாறு செய்து பாவியானான். ஆகவே, (மனிதர்களே!) நீங்கள் என்னைத் தவிர்த்து அவனையும், அவனுடைய சந்ததிகளையும் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குக் கொடிய எதிரிகளாக இருக்கிறார்கள். அநியாயக்காரர்கள் (என்னை விட்டு விட்டு அவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக) மாற்றிக் கொண்டது மகா கெட்டது.
Kehf 18:51
51. நாம் வானங்களையும் பூமியையும் படைத்தபொழுதும், அந்த ஷைத்தான்களை (நாம்) படைத்தபொழுதும் நாம் அவர்களை (உதவிக்கு) அழைக்கவில்லை. வழி கெடுக்கின்ற ஷைத்தான்களை (எவ்விஷயத்திலும்) நாம் நம் சகாக்களாக (-உதவியாளர்களாக) ஆக்கிக் கொள்ளவில்லை.
Kehf 18:52
52. (இறைவன், இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எனக்குத் துணையானவை என எவற்றை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவற்றை நீங்கள் அழையுங்கள்'' என்று கூறுகின்ற ஒரு நாளை (நபியே! அவர்களுக்கு) ஞாபக மூட்டுவீராக. ஆகவே, அவர்கள் அவற்றை அழைப்பார்கள். எனினும், அவை அவர்களுக்குப் பதில் கொடுக்கா. மேலும், நாம் (அவற்றுக்கும்) அவர்களுக்கும் இடையில் (சந்திக்க முடியாத) ஒரு தடையை ஏற்படுத்தி விடுவோம்.
Kehf 18:53
53. குற்றவாளிகள் நரகத்தைக் காணும் சமயத்தில் ‘‘நிச்சயமாக அதில் விழுந்து விடுவோம்'' என்று உறுதியாக எண்ணுவார்கள். அவர்கள் அதில் இருந்து தப்ப எந்த ஒரு வழியையும் காணமாட்டார்கள்.
Kehf 18:54
54. மனிதர்களுக்கு இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் விவரித்திருக்கிறோம். எனினும், மனிதன்தான் அதிகமாக (வீண்) தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்.
Kehf 18:55
55. மனிதர்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர் அவர்கள் அதை நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருவதைத் தடை செய்வதெல்லாம் முன்சென்றவர்களுக்கு நிகழ்ந்த(தைப் போன்ற அபாயகரமான) சம்பவம் இவர்களுக்கு நிகழவேண்டும் என்பதற்காக அல்லது இவர்கள் (கண்) முன் நம் வேதனை வரவேண்டும் என்பதற்காகத்தான்.
Kehf 18:56
56. நற்செய்தி கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவுமே நாம் நம் தூதர்களை அனுப்பி வைத்திருக்கிறோம். எனினும், நிராகரிப்பவர்களோ (நம் தூதர்கள் கொண்டு வந்த) சத்தியத்தை அழித்துவிடக் கருதி வீணான தர்க்கங்கள் செய்ய ஆரம்பித்து நம் வசனங்களையும் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (தண்டனை வருவ)தையும் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறார்கள்.
Kehf 18:57
57. எவன் தன் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்ட சமயத்தில் அவற்றைப் புறக்கணித்து, தன் கைகளால் செய்த குற்றங்களை (முற்றிலும்) மறந்து விடுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இந்த அநியாயக்காரர்கள்) எதையும் அறிந்து கொள்ளாதவாறு நாம் அவர்களுடைய உள்ளங்களில் திரையையும், அவர்களுடைய காதுகளில் மந்தத்தையும் நிச்சயமாக ஆக்கிவிட்டோம். ஆதலால், (நபியே!) நீர் அவர்களை நேரான வழியில் (எவ்வளவுதான் வருந்தி) அழைத்தபோதிலும் ஒரு காலத்திலும் அவர்கள் நேரான வழிக்கு வரவே மாட்டார்கள்.
Kehf 18:58
58. ஆனால், (நபியே!) உமது இறைவன் மிக்க மன்னிப்பவனும், கருணையுடையவனும் ஆவான். அவர்கள் செய்யும் (தீய) செயலின் காரணமாக அவன் அவர்களை (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் இதுவரை அவர்களை வேதனை செய்தேயிருப்பான். எனினும், (அவர்களைத் தண்டிக்க) அவர்களுக்கு ஒரு தவணை உண்டு. அதற்குப் பின்னர் அவர்கள் தப்ப வழி காணமாட்டார்கள்.
Kehf 18:59
59. பாவம் செய்துகொண்டிருந்த இவ் ஊர்வாசிகள் அனைவரையும் நாம் அழித்து விட்டோம். எனினும், அவர்களை அழிப்பதற்கும் நாம் ஒரு தவணையை ஏற்படுத்தி இருந்தோம். (அத்தவணை வந்த பின்னரே நாம் அவர்களை அழித்தோம்.)
Kehf 18:60
60. மூஸா தன்னுடன் இருந்த வாலிபனை நோக்கி ‘‘இரு கடல்களும் சந்திக்கின்ற இடத்தை நான் அடையும் வரை செல்வேன் அல்லது வருடக்கணக்கில் (இப்படியே) நான் நடந்துகொண்டே இருப்பேன்'' என்று கூறியதை (நபியே! அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக.
Kehf 18:61
61. அவர்கள் இருவரும் இரு கடல்களும் சந்திக்கின்ற இடத்தை அடைந்த பொழுது தங்கள் மீனை அவர்கள் மறந்துவிட்டனர். அது கடலில் தன் வழியைச் சுரங்கம் போல் அமைத்துக் கொண்டு (சென்று) விட்டது.
Kehf 18:62
62. (தாங்கள் விரும்பிச் சென்ற அவ்விடத்தை அறியாது) அவ்விருவரும் அதைக் கடந்த பின், மூஸா தன் வாலிபனை நோக்கி ‘‘நம் காலை உணவை நீர் கொண்டு வா. நிச்சயமாக நாம் இந்த பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம்'' என்று கூறினார்.
Kehf 18:63
63. அதற்கு (அந்த வாலிபன் மூஸாவை நோக்கி) ‘‘அந்த கற்பாறை அருகில் நாம் தங்கிய சமயத்தில் (நிகழ்ந்த ஆச்சரியத்தை) பார்த்தீரா? நிச்சயமாக நான் (நம்முடன் கொண்டு வந்த) மீனை மறந்துவிட்டேன். அதை நான் (உமக்குக்) கூறுவதை ஷைத்தானைத் தவிர (வேறொருவரும்) எனக்கு மறக்கடிக்கவில்லை. (அவ்விடத்தில்) கடலில் (செல்ல) ஆச்சரியமான விதத்தில் அது தனக்கொரு வழியை ஏற்படுத்திக்கொண்டது'' என்று கூறினார்.
Kehf 18:64
64. அதற்கு மூஸா ‘‘நாம் தேடிவந்த இடம் அது தான்'' என்று கூறி அவ்விருவரும் (அவ்விடத்தைத் தேடி) தங்கள் காலடிகளைப் பின்பற்றி வந்த வழியே சென்றார்கள்.
Kehf 18:65
65. இவ்விருவரும் அங்கு வந்தபோது (அவ்விடத்தில்) நம் அடியாரில் ஒருவரைக் கண்டார்கள். அவர் மீது நாம் அருள்புரிந்து நம் புறத்திலிருந்து (சிறப்பான) ஞானத்தையும் நாம் அவருக்குக் கற்பித்திருந்தோம்.
Kehf 18:66
66. மூஸா அவரை நோக்கி ‘‘உமக்குக் கற்பிக்கப்பட்ட கல்வியில் பயனளிக்கக்கூடியதை நீர் எனக்குக் கற்பிக்கும் நிபந்தனை மீது நான் உம்மைப் பின்பற்றலாமா?'' என்று கேட்டார்.
Kehf 18:67
67. அதற்கவர் ‘‘என்னுடன் இருக்க நிச்சயமாக நீர் சக்தி பெறமாட்டீர்.
Kehf 18:68
68. அவ்வாறிருக்க உமது அறிவுக்கு அப்பாற்பட்டவற்றை (நான் செய்யும்போது பார்த்துக் கொண்டு) நீர் எவ்வாறு சகித்துக் கொண்டு இருப்பீர்'' என்று கூறினார்.
Kehf 18:69
69. அதற்கு மூஸா ‘‘இறைவன் அருளால் (எந்த விஷயத்தையும்) சகித்திருப்பவனாகவே நீர் என்னைக் காண்பீர். எந்த விஷயத்திலும் நான் உமக்கு மாறுசெய்ய மாட்டேன்'' என்று கூறினார்.
Kehf 18:70
70. அதற்கு அவர் ‘‘நீர் என்னைப் பின்பற்றுவதாயின் (நான் செய்யும்) எவ்விஷயத்தைப் பற்றியும் நானாகவே உமக்கு அறிவிக்கும் வரை நீர் என்னிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்'' என்று சொன்னார்.
Kehf 18:71
71. (இவ்வாறு முடிவு செய்துகொண்டு) அவ்விருவரும் சென்றவழியில் குறுக்கிட்ட ஒரு கடலைக் கடக்க கப்பலில் ஏறியபோது, அவர் அதன் (ஒரு) பலகையைப் பெயர்த்து அதை ஓட்டையாக்கி விட்டார். அதற்கு மூஸா ‘‘இதில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா நீர் துவாரமிட்டீர்? நிச்சயமாக நீர் மிக்க அபாயகரமான ஒரு காரியத்தைச் செய்துவிட்டீர்'' என்று கூறினார்.
Kehf 18:72
72. அதற்கு அவர் (மூஸாவை நோக்கி) ‘‘நீர் என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக உம்மால் முடியாது என்று நான் கூறவில்லையா?'' என்றார்.
Kehf 18:73
73. (அதற்கு) மூஸா, ‘‘நான் மறந்துவிட்டதைப் பற்றி என்னைக் குற்றம் பிடிக்காதீர். என் விஷயத்தில் இவ்வளவு கண்டிப்பும் செய்யாதீர்'' என்று கேட்டுக் கொண்டார்.
Kehf 18:74
74. பின்னர் இருவரும் நடந்தனர். (வழியில் விளையாடிக் கொண்டிருந்த) ஒரு சிறுவனைச் சந்தித்தபோது அவர் அவனைக் கொலை செய்து விட்டார். அதற்கு மூஸா, ‘‘கொலை குற்றமின்றி ஒரு பரிசுத்தமான ஆத்மாவை கொலை செய்து விட்டீர்! நிச்சயமாக ஒரு தகாத காரியத்தையே நீர் செய்து விட்டீர்'' என்று கூறினார்.
Kehf 18:75
75. அதற்கவர் (மூஸாவை நோக்கி) ‘‘நீர் என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக உம்மால் முடியாது'' என்று நான் உமக்கு (முன்னர்) கூறவில்லையா? என்று கேட்டார்.
Kehf 18:76
76. அதற்கு (மூஸா) ‘‘இதன் பின்னர் நான் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் உம்மிடம் கேட்பேனாயின் நீர் என்னை உம்முடன் வைத்திருக்க வேண்டாம். என்னை மன்னிக்கும் எல்லையை நிச்சயமாக நீர் கடந்து விட்டீர்'' என்று கூறினார்.
Kehf 18:77
77. பின்னர் இருவரும் நடந்தனர். அவர்கள் ஓர் ஊராரிடம் வரவே தங்கள் இருவருக்கும் உணவளிக்கும்படி அவ்வூராரை வேண்டினார்கள். ஆனால், அவர்கள் இவ்விருவருக்கும் விருந்தளிக்காது விலகிக்கொண்டனர். பிறகு, இருவரும் அங்கு விழுந்து விடக்கூடிய நிலையில் இருந்த ஒரு சுவற்றைக் கண்டனர். ஆகவே, அவர் (அதற்கு மண் அப்பி செப்பனிட்டு) அதை (விழாது) நிறுத்திவைத்தார். (அதற்கு மூஸா அவரை நோக்கி) ‘‘நீர் விரும்பி (கேட்டு) இருந்தால் (இவ்வூராரிடம்) இதற்குரிய கூலியை நீர் வாங்கியிருக்கலாமே'' என்று கூறினார்.
Kehf 18:78
78. அதற்கவர், ‘‘எனக்கும் உமக்கும் இடையில் இதுவே பிரிவினை(க்குரிய நேரம்) ஆகும். நீர் பொறுத்துக்கொள்ள முடியாமல்போன விஷயங்களின் விளக்கத்தை (இதோ) நான் உமக்கு அறிவிக்கிறேன் என்று கூறினார்.
Kehf 18:79
79. (அவர் கூறினார்) ‘‘அக்கப்பல் கடலில் (கூலி) வேலை செய்து கொண்டிருந்த (சில) ஏழைகளுக்குரியது. அதைக் குறைபடுத்தவே நான் கருதினேன். (ஏனென்றால், அது செல்லும் வழியில்) இவர்களுக்கு முன் ஓர் (அநியாயக்கார) அரசன் இருக்கிறான். அவன் (நல்ல) கப்பல்கள் அனைத்தையும் அநியாயமாக அபகரித்துக் கொள்கிறான். (அவனிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே அதைக் குறைப்படுத்தினேன்.)
Kehf 18:80
80. (கொல்லப்பட்ட) அந்தச் சிறுவனோ அவனுடைய தாயும் தந்தையும் நல்ல நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அவன் (வாலிபத்தை அடைந்து) அவ்விருவரையும் அநியாயம் செய்யும்படியும், (இறைவனை) நிராகரிக்கும்படியும் செய்து விடுவானோ என்று நாம் பயந்(து அவ்வாறு செய்)தோம்.
Kehf 18:81
81. அவனுடைய தாய் தந்தைக்கு இறைவன் இவனைவிட மேலான, பரிசுத்தமானவனையும் (தாய் தந்தை மீது) அதிகம் அன்பு கொள்ளக் கூடியவனையும் மாற்றிக் கொடுப்பதை நாம் விரும்பினோம்.
Kehf 18:82
82. அந்தச் சுவரோ அப்பட்டிணத்திலுள்ள இரு அனாதைக் குழந்தைகளுக்குரியது. அதற்குக் கீழ் அவர்களுக்குச் சொந்தமான புதையல் ஒன்று இருக்கிறது. அவ்விருவரின் தந்தை மிக்க நல்ல மனிதராக இருந்தார். ஆகவே, உமது இறைவன் அவ்விருவரும் தங்கள் வாலிபத்தை அடைந்த பின்னர் தங்கள் புதையலை எடுத்துக் கொள்ளும்படிச் செய்ய நாடினான். (எனவே, அதுவரை அச்சுவர் விழுந்து விடாதிருக்கும்படி அதைச் செப்பனிட்டேன். இது) உமது இறைவனின் அருள்தான். (இம்மூன்றில்) எதையும் நான் என் இஷ்டப்படி செய்துவிடவில்லை. நீர் பொறுத்துக் கொள்ள முடியாமல் போன (என்) செய்கைகளின் விளக்கம் இதுதான்'' (என்று கூறி முடித்தார்).
Kehf 18:83
83. (நபியே!) துல்கர்னைனைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘‘அவருடைய சரித்திரத்தில் (இருந்து) உங்களுக்கு (பயனளிக்கும்) அறிவுரையை ஓதிக் காண்பிக்கிறேன்'' என்று கூறுவீராக.
Kehf 18:84
84. நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் ஆதிக்கத்தைக் கொடுத்து வளமிக்க வசதி வாய்ப்பையும் அளித்திருந்தோம். ஒவ்வொரு பொருளையும் (தமது இஷ்டப்படி) செய்யக்கூடிய வழியையும் நாம் அவருக்கு அளித்திருந்தோம்.
Kehf 18:85
85. அவர் (பூமியில்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.
Kehf 18:86
86. சூரியன் மறையும் (மேற்குத்) திசையை அவர் அடைந்த பொழுது சேற்றுக் கடலில் சூரியன் மறைவதை(ப் போல்) கண்டார். அவ்விடத்தில் ஒருவகை மக்களையும் கண்டார். (நாம் அவரை நோக்கி) ‘‘துல்கர்னைனே! நீர் (இவர்களைத் தண்டித்து) வேதனை செய்யவும், அல்லது அவர்களுக்கு நன்மை செய்யவும் (இரண்டுக்கும் முழு சுதந்திரம் உமக்கு அளித்திருக்கிறோம்)'' என்று கூறினோம்.
Kehf 18:87
87. ஆகவே அவர் (அவர்களை நோக்கி ‘‘உங்களில்) எவன் (என் கட்டளையை மீறி) அநியாயம் செய்கிறானோ அவனை நாம் (தண்டித்து) வேதனை செய்வோம். பின்னர், அவன் தன் இறைவனிடம் கொண்டு போகப்பட்டு அவனும் அவனை மிக்க கடினமாக வேதனை செய்வான்'' என்றார்.
Kehf 18:88
88. ‘‘எவன் நம்பிக்கை கொண்டு (நாம் கூறுகிறபடி) நல்லதை செய்கிறானோ அவனுக்கு (இறைவனிடத்திலும்) அழகான நற்கூலி இருக்கிறது. நாமும் நம் வேலைகளில் சுலபமான வேலைகளையே (செய்யும்படி) அவனுக்குக் கூறுவோம்.
Kehf 18:89
89. பின்னர், அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்பற்றி நடந்தார்.
Kehf 18:90
90. அவர் சூரியன் உதிக்கும் (கிழக்குத்) திசையை அடைந்த பொழுது சில மக்களைக் கண்டார். அவர்கள் மீது சூரியன் உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதையும் கண்டார். அவர்களுக்கும் சூரியனுக்கும் இடையில் நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்த வில்லை. (ஆடையணிந்தோ, வீடு கட்டியோ, சூரிய வெப்பத்தைத் தடுத்துக் கொள்ளக் கூடிய ஞானம் அவர்களிடம் இல்லை.)
Kehf 18:91
91. (அவர்களுடைய நிலைமை உண்மையில்) இவ்வாறே இருந்தது. அவரிடமிருந்த எல்லா வசதிகளையும் நாம் நன்கறிவோம்.
Kehf 18:92
92. பின்னர் அவர் (வேறு) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.
Kehf 18:93
93. (அங்கிருந்த) இரு மலைகளின் இடைவெளியை அவர் அடைந்தபோது அவற்றிற்கு முன்னால் மக்கள் சிலரைக் கண்டார். அவர்கள் பேச்சை (எளிதில்) புரியக்கூடியவர்களாக இருக்கவில்லை.
Kehf 18:94
94. அவர்கள் (இவரை நோக்கி ஜாடையாக) ‘‘துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்னும் மக்கள்) எங்கள் ஊரில் (வந்து) பெரும் விஷமம் செய்கிறார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நீர் ஒரு தடையை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு தொகையை நாங்கள் உமக்கு சேகரம் செய்யலாமா?'' என்று கேட்டார்கள்.
Kehf 18:95
95. அதற்கவர், ‘‘என் இறைவன் எனக்குக் கொடுத்திருப்பதே (போதுமானது,) மிக்க மேலானது. (உங்கள் பொருள் தேவையில்லை. எனினும், உங்கள்) உழைப்பைக்கொண்டு எனக்கு உதவிசெய்யுங்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உறுதியான ஒரு தடுப்பை (சுவரை) எழுப்பிவிடுகிறேன்'' என்றும்,
Kehf 18:96
96. ‘‘நீங்கள் (அதற்குத் தேவையான) இரும்புப் பாலங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்றும் கூறி, ‘‘(அவற்றைக் கொண்டுவந்து இரு மலைகளுக்கிடையில் இருந்த பள்ளத்தை நிறைத்து) இரு மலைகளின் உச்சிக்கு அவை சமமாக உயர்ந்த பின்னர், நெருப்பாக பழுக்கும் வரை அதை ஊதுங்கள்'' என்றார். (அதன் பின்னர்) ‘‘செம்பையும் என்னிடம் கொண்டு வாருங்கள். நான் அதை உருக்கி அதன் மீது ஊற்றுவேன்'' என்றார்.
Kehf 18:97
97. ‘‘பின்னர், அதைக் கடந்து வர (யஃஜூஜ் மஃஜூஜ்களால்) முடியாது. அதைத் துளைத்துத் துவாரமிடவும் அவர்களால் முடியாது'' (என்று கூறினார்).
Kehf 18:98
98. (இவ்வாறு தயாரான தடுப்பைக் கண்ட அவர்) ‘‘இது என் இறைவனுடைய அருள்தான். என் இறைவனின் வாக்குறுதி(யாகிய யுக முடிவு) வரும்போது, இதை(யும்) தூள் தூளாக்கிவிடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையாக இருக்கிறது!'' என்று கூறினார்.
Kehf 18:99
99. அந்நாள் வருவதற்குள் சிலர் சிலருடன் (கடல்) அலைகளைப் போல் மோதும்படி நாம் விட்டுவிடுவோம். (பின்னர்) சூர் (எக்காளம்) ஊதப்பட்(டு அனைவரும் மடிந்து விட்)டால் பின்னர் (உயிர் கொடுத்து) அவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து விடுவோம்.
Kehf 18:100
100. கண்டிப்பாக, அந்நாளில் நரகத்தை நிராகரிப்பவர்களுக்கு முன்பாக்குவோம்.
Kehf 18:101
101. (அவர்கள்) எனது நல்லுபதேசங்களைப் பார்க்காது அவர்களுடைய கண்களுக்குத் திரையிடப்பட்டு விட்டன; ஆகவே, அவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற சக்தியற்று விட்டனர்.
Kehf 18:102
102. நிராகரிப்பவர்கள் நம்மை விட்டுவிட்டு நம் அடியார்களை(த் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு நரகத்தையே தங்குமிடமாக தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
Kehf 18:103
103. ‘‘(பாவமான) செயல்களில் இவர்களைவிட நஷ்டமடைந்தவர்களை நாம் உங்களுக்கு அறிவிக்கவா?'' என்று, (நபியே!) கேட்பீராக.
Kehf 18:104
104. அவர்கள் (யாரென்றால்) இவ்வுலக வாழ்வில் தவறான வழியிலேயே முயற்சி செய்து கொண்டு, தாங்கள் மெய்யாகவே நல்ல செயல்களையே செய்வதாக எண்ணிக் கொள்வார்கள்.
Kehf 18:105
105. இவர்கள்தான் தங்கள் இறைவனின் வசனங்களையும் அவனுடைய சந்திப்பையும் நிராகரித்து விட்டவர்கள். ஆகவே, அவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. (நன்மை, தீமையை நிறுக்க) அவர்களுக்காக மறுமை நாளில் எடைக் கோலையும் நாம் நிறுத்த மாட்டோம்.
Kehf 18:106
106. அவர்கள் நம் வசனங்களையும், நம் தூதர்களையும் நிராகரித்து பரிகாசமாக எடுத்துக் கொண்டதன் காரணமாக அவர்களுக்குக் கூலி நரகம்தான்.
Kehf 18:107
107. நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர் களுக்கு ‘ஃபிர்தவ்ஸ்' என்னும் (உயர்) சொர்க்கங்கள் தங்குமிடங்களாக இருக்கும்.
Kehf 18:108
108. அதில், அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். அதிலிருந்து வெளிப்பட அவர்கள் விரும்பவே மாட்டார்கள்.
Kehf 18:109
109. (நபியே!) கூறுவீராக: கடல் நீர் அனைத்தும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால், என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே இந்தக் கடல் (மை) அனைத்தும் செலவாகிவிடும். அதைப் போல் இன்னொரு பங்கு (கடலைச்) சேர்த்துக் கொண்ட போதிலும்கூட!
Kehf 18:110
110. (நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான் என்று எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக!''
Meryem 19:1
1. காஃப் ஹா யா ஐன் ஸாத்.
Meryem 19:2
2. (நபியே!) உமது இறைவன் தன் அடியார் ஜகரிய்யாவுக்குப் புரிந்த அருளை (இங்கு) நினைவு கூர்வீராக.
Meryem 19:3
3. அவர் தன் இறைவனைத் தாழ்ந்த குரலில் (பணிவாக) அழைத்தபோது,
Meryem 19:4
4. ‘‘என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலவீனமாகி விட்டன. என் தலையும் நரைத்து விட்டது. என் இறைவனே! (இதுவரை) நான் உன்னிடத்தில் கேட்டதில் எதுவுமே தடுக்கப்படவில்லை. (நான் கேட்ட அனைத்தையும் நீ கொடுத்தே இருக்கிறாய்.)
Meryem 19:5
5. நிச்சயமாக நான் எனக்குப் பின்னர் என் உரிமையாளர்களைப் பற்றிப் பயப்படுகிறேன். என் மனைவியோ மலடாகி விட்டாள். ஆகவே, உன் புறத்திலிருந்து எனக்கொரு பாதுகாவலனை (குழந்தையை) வழங்கு!
Meryem 19:6
6. அவன் எனக்கும், யஅகூபுடைய சந்ததிகளுக்கும் வாரிசாகக் கூடியவனாக இருக்க வேண்டும். என் இறைவனே! அவனை (உனக்குப்) பிரியமுள்ளவனாகவும் ஆக்கிவை'' என்று பிரார்த்தித்தார்.
Meryem 19:7
7. (அதற்கு இறைவன் அவரை நோக்கி) ‘‘ஜகரிய்யாவே! நிச்சயமாக நாம் ‘யஹ்யா' என்ற பெயர் கொண்ட ஒரு மகனை(த் தருவதாக) உமக்கு நற்செய்தி கூறுகிறோம். அப்பெயர் கொண்ட ஒருவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை'' (என்று கூறினான்.)
Meryem 19:8
8. அதற்கவர் ‘‘என் இறைவனே! எப்படி எனக்குச் சந்ததி ஏற்படும்? என் மனைவியோ மலடி. நானோ முதுமையின் கடைசிப் பாகத்தை அடைந்து விட்டேன்'' என்று கூறினார்.
Meryem 19:9
9. அதற்கவன் ‘‘(நான் கூறிய) அவ்வாறே நடைபெறும். அ(வ்வாறு செய்வ)து எனக்கு மிக்க எளிதானதே. இதற்கு முன்னர் நீர் ஒன்றுமில்லாமல் இருந்த சமயத்தில் நானே உம்மைப் படைத்தேன் என்று உமது இறைவனே கூறுகிறான்'' என்றும் கூறினான்.
Meryem 19:10
10. அதற்கவர் ‘‘என் இறைவனே! (இதற்கு) எனக்கோர் அத்தாட்சி அளி'' என்று கேட்டார். (அதற்கு இறைவன்) ‘‘உமக்கு (நான் அளிக்கும்) அத்தாட்சியாவது நீர் (சுகமாக இருந்துகொண்டே) சரியாக மூன்று இரவுகளும் (பகல்களும்) மனிதர்களுடன் பேச முடியாமல் ஆகிவிடுவதுதான்'' என்று கூறினான்.
Meryem 19:11
11. பின்னர், அவர் (வழக்கப்படி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய ஆலயத்தின் மிஹ்ராப்) மாடத்திலிருந்து வெளிப்பட்டுத் தன் மக்கள் முன் வந்தார். (எனினும், அவரால் வாய் திறந்து பேச முடியாமலாகி விட்டது.) ஆகவே, காலையிலும் மாலையிலும் (இறைவனைப்) புகழ்ந்து துதி செய்யுங்கள் என்று (தன் கையால்) அவர்களுக்கு ஜாடை காண்பித்தார்.
Meryem 19:12
12. (நாம் கூறியவாறே ஜகரிய்யாவுக்கு யஹ்யா பிறந்த பின்னர் நாம் அவரை நோக்கி) ‘‘யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக'' என்று கூறி, நாம் அவருக்கு (அவருடைய) சிறு வயதிலேயே ஞானத்தையும் அளித்தோம்.
Meryem 19:13
13. இன்னும், இரக்கமுள்ள மனதையும், பரிசுத்தத் தன்மையையும் நாம் அவருக்குக் கொடுத்தோம். ஆகவே, அவர் மிக இறையச்சமுடையவராகவே இருந்தார்.
Meryem 19:14
14. மேலும், தன் தாய் தந்தைக்கு நன்றி செய்பவராகவே இருந்தார். (அவர்களுக்கு) மாறு செய்பவராகவோ முரடராகவோ இருக்கவில்லை.
Meryem 19:15
15. அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும் (மறுமையில்) அவர் உயிருள்ளவராக எழுப்பப்படும் நாளிலும் அவர் மீது ஸலாம் நிலவுக!
Meryem 19:16
16. (நபியே!) இவ்வேதத்தில் (ஈஸாவின் தாயாகிய) மர்யமைப் பற்றியும் (சிறிது) கூறுவீராக: அவர் தன் குடும்பத்தினரை விட்டு விலகி கிழக்குத் திசையிலுள்ள (தன்) அறைக்குச் சென்று,
Meryem 19:17
17. (குளிப்பதற்காகத்) தன் மக்களின் முன் திரையிட்டுக் கொண்ட சமயத்தில் (ஜிப்ரயீல் என்னும்) நம் தூதரை அவரிடம் அனுப்பிவைத்தோம். அவர் முழுமையான ஒரு மனிதனுடைய கோலத்தில் அவர் முன் தோன்றினார்.
Meryem 19:18
18. (அவரைக் கண்டதும்) ‘‘நிச்சயமாக நான் உம்மிடமிருந்து என்னை பாதுகாக்க ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் (இங்கிருந்து அப்புறப்பட்டு விடுவீராக)'' என்றார்.
Meryem 19:19
19. அதற்கவர், பரிசுத்தமான ஒரு மகனை ‘‘உமக்களி(க்கப்படும் என்பதை உமக்கு அறிவி)ப்ப தற்காக உமது இறைவனால் அனுப்பப்பட்ட (வானவ) தூதர்தான் நான்'' என்றார்.
Meryem 19:20
20. அதற்கவர் ‘‘எனக்கு எப்படி சந்ததி ஏற்படும்? எம்மனிதனும் என்னைத் தீண்டியதில்லையே; நான் கெட்ட நடத்தையுள்ளவளும் அல்லவே'' என்று கூறினார்.
Meryem 19:21
21. அதற்கவர் ‘‘அவ்வாறே (நடைபெறும் என்று) உமது இறைவன் கூறுகிறான் (என்றும்), அது தனக்கு எளிது (என்றும்), அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம் அருளாகவும் நாம் ஆக்குவோம் (என்றும்) இது முடிவு செய்யப்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது'' என்றும் கூறுகிறான்.
Meryem 19:22
22. பின்னர், மர்யம் அந்த குழந்தையை கர்ப்பத்தில் சுமந்து அதனுடன் (அவர் இருந்த இடத்திலிருந்து வெளியேறி) தூரத்திலுள்ள ஓர் இடத்தைச் சென்றடைந்தார்.
Meryem 19:23
23. பின்பு, அவர் ஒரு பேரீச்ச மரத்தடியில் செல்லும்பொழுது அவருக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டு ‘‘இதற்கு முன்னதாகவே நான் இறந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இறந்திருந்தால் என் எண்ணமே (ஒருவருடைய ஞாபகத்திலும் இல்லாதவாறு) முற்றிலும் மறக்கடிக்கப்பட்டிருப்பேனே'' என்று (வேதனையுடன்) கூறினார்.
Meryem 19:24
24. (பேரீச்ச மரத்தின்) அடிப்புறமிருந்து (ஜிப்ரயீல்) சப்தமிட்டு ‘‘(மர்யமே!) கவலைப்படாதீர்! உமக்குச் சமீபமாக உமது இறைவன் ஓர் ஊற்றை (உதித்து) ஓடச் செய்திருக்கிறான்.
Meryem 19:25
25. இப்பேரீச்ச மரத்தின் கிளையை, உமது பக்கம் பிடித்து (இழுத்து)க் குலுக்குவீராக. அது பழுத்த பழங்களை உம் மீது சொரியும்.
Meryem 19:26
26. ஆகவே, (அப்பழங்களை) நீர் புசித்து (இந்த ஊற்றின் நீரைக்) குடித்து (இக்குழந்தையைக் கண்டு) கண் குளிர்ந்திருப்பீராக! மனிதரில் எவரைக் கண்ட போதிலும் ‘‘நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பு நோற்க முடிவு செய்துள்ளேன்; ஆகவே, இன்றைய தினம் எம்மனிதருடனும் பேசமாட்டேன் என்று கூறிவிடுவீராக'' என்றும் கூறினார்.
Meryem 19:27
27. பின்னர், (மர்யம் தான் பெற்ற) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தன் மக்களிடம் வரவே, அவர்கள் (இவரை நோக்கி) ‘‘மர்யமே! நிச்சயமாக நீ மகா கெட்ட காரியத்தைச் செய்து விட்டாய்.
Meryem 19:28
28. ஹாரூனுடைய சகோதரியே! உன் தந்தை கெட்டவராக இருக்கவில்லை(யே); உன் தாயும் நடத்தைக் கெட்டவளாக இருக்கவில்லையே!'' என்று கூறினார்கள்.
Meryem 19:29
29. (அதற்கவர், இதைப் பற்றித் தன் குழந்தையிடம் கேட்கும்படி) அதன் பக்கம் (கையை) ஜாடை காண்பித்தார். அதற்கவர்கள் ‘‘மடியிலிருக்கக்கூடிய சிறு குழந்தையிடம் நாங்கள் எப்படி பேசுவோம்'' என்று கூறினார்கள்.
Meryem 19:30
30. (இதைச் செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது: ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை நபியாகவும் ஆக்குவான்.
Meryem 19:31
31. நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான். நான் வாழும்வரை தொழுகையைக் கடைப்பிடித் தொழுகும்படியும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்திருக்கிறான்.
Meryem 19:32
32. என் தாய்க்கு நான் நன்றி செய்யும்படியாகவும் (எனக்கு உபதேசித்து) நான் முரடனாக வழி கெட்டவனாக ஆகாதபடியும் செய்வான்.
Meryem 19:33
33. நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிருள்ளவராக எழுப்பப்படும் நாளிலும், என்மீது ஸலாம் உண்டாகுக!'' (என்றும் அக்குழந்தை கூறியது).
Meryem 19:34
34. இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா. அவரைப் பற்றி (மக்கள் வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் உண்மையான விஷயம் இதுதான்.
Meryem 19:35
35. ஆகவே, ‘‘(அவர் இறைவனுமல்ல; இறைவனுடைய பிள்ளையுமல்ல. ஏனென்றால்) தனக்குச் சந்ததி எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்கு (ஒரு சிறிதும்) தகுதியல்ல. அவன் மிகப் பரிசுத்தமானவன். எதையும் படைக்கக் கருதினால் அதை ‘ஆகுக!' என அவன் கூறுவதுதான் (தாமதம்). உடனே அது ஆகிவிடும்.
Meryem 19:36
36. நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். (ஈஸாவல்ல; ஆகவே,) அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். இதுதான் நேரான வழி'' (என்று நபியே! கூறுவீராக.)
Meryem 19:37
37. ஆனால், அவர்களிலுள்ள ஒரு கூட்டத்தினர் (இதைப் பற்றி) தங்களுக்கு இடையே (வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே (நாம் கூறிய) இதை நிராகரிப்பவர்களுக்கு, அனைவரும் நம்மிடம் ஒன்று சேரக்கூடிய மகத்தான நாளில் கேடுதான்.
Meryem 19:38
38. (இன்றைய தினம் இதை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தபோதிலும்) நம்மிடம் அவர்கள் வரும் நாளில் (நம் கட்டளைகளுக்கு) எவ்வளவோ நன்றாகச் செவிசாய்ப்பார்கள். (நம் வேதனைகளை) நன்றாகவே (தங்கள் கண்ணாலும்) காண்பார்கள். எனினும், அந்த அநியாயக்காரர்கள் இன்றைய தினம் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.
Meryem 19:39
39. ஆனால், (நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் மிக்க துயரமான நாளைப்பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. எனினும், (இன்றைய தினம்) அவர்கள் கவலையற்றிருக்கின்றனர். ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
Meryem 19:40
40. நிச்சயமாக நாம்தான் பூமிக்கும், அதிலுள்ளவர்களுக்கும் சொந்தம் கொள்வோம். அவர்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்.
Meryem 19:41
41. (நபியே!) இவ்வேதத்தில் இப்றாஹீமை பற்றியும் கூறுவீராக: நிச்சயமாக அவர் மிக்க உண்மையானவராக, நபியாக இருந்தார்.
Meryem 19:42
42. அவர் தன் தந்தையை நோக்கி ‘‘என் தந்தையே! பார்க்காத, கேட்காத, எந்த ஒரு தீங்கையும் உம்மை விட்டு தடைசெய்யாதவற்றை ஏன் வணங்குகிறீர்?'' என்று கேட்டார்.
Meryem 19:43
43. ஆகவே, ‘‘என் தந்தையே! உமக்குக் கிடைக்காத கல்வி ஞானம் (என் இறைவன் அருளால்) எனக்கு கிடைத்துள்ளது. என்னைப் பின்பற்றுவீராக. நான் உம்மை நேரான வழியில் நடத்துவேன்.
Meryem 19:44
44. என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர். நிச்சயமாக ஷைத்தான் ரஹ்மானுக்கு மாறு செய்பவனாக இருக்கிறான்.
Meryem 19:45
45. என் தந்தையே! ரஹ்மானுடைய வேதனை உம்மை பிடித்துக் கொள்ளுமோ என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன். (ரஹ்மானுக்கு மாறு செய்தால்) ஷைத்தானுக்கு நண்பனாகிவிடுவீர்'' (என்று கூறினார்).
Meryem 19:46
46. அதற்கவர் ‘‘இப்றாஹீமே! நீ என் தெய்வங்களைப் புறக்கணித்து விட்டீரா? நீ இதிலிருந்து விலகிக் கொள்ளாவிடில், கல்லெறிந்து உன்னைக் கொன்று விடுவேன்; (இனி) நீ எப்பொழுதுமே என்னைவிட்டு விலகி நில்லும்'' என்று கூறினார்.
Meryem 19:47
47. அதற்கு (இப்றாஹீம், இதோ நான் செல்கிறேன்) ‘‘உம்மீது ஸலாம் உண்டாவதாக! பின்னர் நான் உமக்காக என் இறைவனிடத்தில் மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக என் இறைவன் என் மீது மிக்க இரக்கமுடையவனாக இருக்கிறான்'' என்று கூறினார்.
Meryem 19:48
48. ‘‘உங்களை விட்டும் அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் (தெய்வமென) அழைப்பவற்றை விட்டும் நான் விலகிக்கொள்கிறேன். என் இறைவனையே நான் (வணங்கி) பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன். என் இறைவனிடம் நான் செய்யும் பிரார்த்தனைகள் எனக்குத் தடுக்கப்படாதிருக்கும் என்று நான் நம்புகிறேன்'' (என்றும் கூறினார்.)
Meryem 19:49
49. பின்னர் அவர் அவர்களை விட்டும் அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டார். அதன் பின்னர் இஸ்ஹாக்கையும், யஅகூபையும் அவருக்கு(ச் சந்ததிகளாக) நாம் வழங்கினோம். அவர்கள் ஒவ்வொருவரையும் நபியாகவும் ஆக்கினோம்.
Meryem 19:50
50. அவர்களுக்கு நம் அருட்கொடையையும் அளித்தோம். உண்மையே பேசும்படியான மேலான நாவையும் அவர்களுக்குக் கொடுத்தோம். (பின் வருபவர்கள் ‘அலைஹிஸ் ஸலாம்' (அவர்மீது சாந்தி நிலவுக!) என்று எந்நாளும் அவர்களுக்காக துஆ பிரார்த்தனை செய்யக்கூடிய உயர் பதவியையும் அவர்களுக்கு அளித்தோம்.)
Meryem 19:51
51. (நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் கலப்பற்ற மனதுடையவராகவும் (நம்) தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
Meryem 19:52
52. தூர் (ஸீனாய் என்னும் பாக்கியம் பெற்ற) மலையின் வலது பக்கத்திலிருந்து அவரை நாம் அழைத்தோம். ரகசியம் பேசுகிறவராக அவரை (நமக்கு) நெருக்கமாக்கினோம்.
Meryem 19:53
53. நம் கருணையினால் அவருடைய சகோதரர் ஹாரூனை நபியாக அவருக்கு வழங்கினோம்.
Meryem 19:54
54. (நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் உண்மையான வாக்குறுதி உடையவராகவும், (நம்) தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
Meryem 19:55
55. தொழுகையைக் கடைப்பிடிக்கும்படியும், ஜகாத்தும் கொடுத்து வரும்படியும் அவர் தன் குடும்பத்தினரை ஏவிக்கொண்டிருந்தார். அவர் தன் இறைவனால் மிகவும் விரும்பப்பட்டவராகவும் இருந்தார்.
Meryem 19:56
56. (நபியே!) இத்ரீஸைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் மிக்க சத்தியவானாகவும் நபியாகவும் இருந்தார்.
Meryem 19:57
57. இன்னும் அவரை மிக்க மேலான இடத்திற்கு உயர்த்தி விட்டோம்.
Meryem 19:58
58. (ஆகவே, மேற்கூறப்பட்ட) இவர்கள் அனைவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்களாவர். இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் நாம் (கப்பலில்) ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்றாஹீமுடைய சந்ததியிலும், இஸ்ராயீல் (என்னும் யஅகூப்)உடைய சந்ததியிலும் உள்ளவர்களாவர். மேலும் நாம் தேர்ந்தெடுத்து நேரான வழியில் நடத்தியவர்களிலும் உள்ளவர்கள். அவர்கள் மீது ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் (அதற்குப் பயந்து) அழுதவர்களாக (இறைவனுக்குச்) சிரம் பணிந்து தொழுவார்கள்.
Meryem 19:59
59. (இவர்களுக்குப் பின்னர், இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய இடத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டார்கள். அவர்கள் (மறுமையில்) தீமையையே (அழிவையே) சந்திப்பார்கள்.
Meryem 19:60
60. ஆயினும், அவர்களில் எவர்கள் (கைசேதப்பட்டு) பாவத்தில் இருந்து விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். (அவர்கள் அடையவேண்டிய கூலியில்) ஒரு சிறிதும் (குறைக்கப்பட்டு) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
Meryem 19:61
61. அது ‘அத்ன்' என்னும் என்றென்றும் நிலையான சொர்க்கங்களாகும். (அவை தற்சமயம்) மறைவாக இருந்தபோதிலும், அவற்றை ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு வாக்களித்திருக்கிறான். நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நடைபெற்றே தீரும்.
Meryem 19:62
62. (அவற்றில்) ஸலாம் (என்ற முகமனைத்) தவிர வீணான வார்த்தைகளைச் செவியுற மாட்டார்கள். அங்கு அவர்களுக்குக் காலையிலும் மாலையிலும் (மிக்க மேலான) உணவு அளிக்கப்படும்.
Meryem 19:63
63. இத்தகைய சொர்க்கத்திற்கு நம் அடியார்களில் இறையச்சமுடையவர்களை நாம் வாரிசாக்கி விடுவோம்.
Meryem 19:64
64. (வானவர்கள் கூறுகின்றனர்: நபியே!) உமது இறைவனின் உத்தரவின்றி நாம் இறங்குவதில்லை. நமக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இவ்விரண்டிற்கு மத்தியில் இருப்பவையும் அவனுக்கே சொந்தமானவை. இதில் (எதையும்) உமது இறைவன் மறப்பவனல்ல.
Meryem 19:65
65. வானங்களையும், பூமியையும், இவற்றிற்கு மத்தியில் உள்ளவற்றையும் படைத்த இறைவன் அவனே! ஆதலால், அவன் ஒருவனையே வணங்குவீராக. அவனை வணங்குவதில் (உமக்கு ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக. அவனுடைய தன்மைக்கு ஒப்பான எவரையும் நீர் அறிவீரா? (இல்லையே).
Meryem 19:66
66. (இவ்வாறிருக்க) மனிதன் ‘‘நான் இறந்த பின்னர் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?'' என்று (பரிகாசமாகக்) கேட்கிறான்.
Meryem 19:67
67. இதற்கு முன்னர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த அவனை நாமே மனிதனாக படைத்தோம் என்பதை அவன் நினைத்துப்பார்க்க வேண்டாமா?
Meryem 19:68
68. ஆகவே, (நபியே!) உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், (அவர்கள் வணங்குகிற) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர் கொடுத்து) எழுப்பி நரகத்தைச் சுற்றி முழந்தாளிட்டவர்களாக அவர்களை ஒன்று சேர்ப்போம்.
Meryem 19:69
69. பின்னர், ரஹ்மானுக்கு மாறுசெய்வதில் கடினமாக இருந்த அனைவரையும் ஒவ்வொரு கூட்டத்திலிருந்து நிச்சயமாக நாம் பிரித்து விடுவோம்.
Meryem 19:70
70. பின்னர், நரகத்தில் எரிவதற்கு தகுதி உடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிந்து கொள்வோம்.
Meryem 19:71
71. அதைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உமது இறைவனிடம் முடிவு செய்யப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும்.
Meryem 19:72
72. ஆனால், இறையச்சத்துடன் வாழ்ந்தவர்களை நாம் பாதுகாத்துக் கொள்வோம். அநியாயக்காரர்களை (அவர்கள்) முழந்தாளிட்டவர்களாக (இருக்கும் நிலைமையில்) அதில் தள்ளிவிடுவோம்.
Meryem 19:73
73. நிராகரிப்பவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘நம் இரு வகுப்பாரில் எவர்களுடைய வீடு (தற்சமயம்) மேலானதாகவும் அழகான தோற்றத்துடனும் இருக்கிறது?'' என்று கேட்கின்றனர்.
Meryem 19:74
74. இவர்களை விட அழகான தோற்றத்தையும், தட்டு முட்டு சாமான்களையும் கொண்ட எத்தனையோ கூட்டத்தாரை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்.
Meryem 19:75
75. (நபியே!) கூறுவீராக: எவன் வழிகேட்டில் இருக்கிறானோ அவனுக்கு ஏற்பட்ட தண்டனையை அவன் கண்ணால் காணும் வரை ரஹ்மான் அவனுக்கு (இம்மையில்) தவணையளிக்கிறான். (அதை அவன் கண்டதன் பின்னரோ) அவனுக்கு வேதனை கிடைக்கும். அல்லது அவனுடைய காலம் முடிந்துவிடும். பின்னர், எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலவீனமானது என்பதைத் திட்டமாக அவர்கள் (மறுமையில்) அறிந்து கொள்வார்கள்.
Meryem 19:76
76. நேர்வழி பெற்றவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் நேர்வழியை அதிகரித்து வழங்குகிறான். நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள்தான் உமது இறைவனிடத்தில் நற்கூலியை அடைவதற்கு சிறந்ததாகவும், நல்ல முடிவை தருவதற்கு சிறந்ததாகவும் இருக்கின்றன.
Meryem 19:77
77. (நபியே!) நம் வசனங்களை நிராகரித்தவனை நீர் பார்த்தீரா? ‘‘(மறுமையிலும்) நிச்சயமாக நான் ஏராளமான பொருள்களும் சந்ததிகளும் கொடுக்கப்படுவேன்'' என்று கூறுகிறான்.
Meryem 19:78
78. அவன் (மறுமையில் நடக்கக்கூடிய) மறைவான விஷயங்களை அறிந்து கொண்டானா? அல்லது ரஹ்மானிடத்தில் (இத்தகையதொரு) வாக்குறுதியைப் பெற்றிருக்கிறானா?
Meryem 19:79
79. (இவன் கூறுகிறபடி) அல்ல! இவன் (பொய்யாகக்) கூறுகின்றவற்றை நாம் எழுதிக் கொண்டே வருகிறோம். (அதற்குத் தக்கவாறு) அவனுடைய வேதனையையும் நாம் அதிகப்படுத்திவிடுவோம்.
Meryem 19:80
80. அவன் (தனக்குரியதென்று) கூறும் அனைத்துக்கும் நாமே வாரிசாகி விடுவோம். அவன் (இவற்றை விட்டுவிட்டு) நம்மிடம் தனியாகவே வருவான்.
Meryem 19:81
81. (இணைவைத்து வணங்கும்) இவர்கள் தங்களுக்கு உதவியாக இருக்குமென்று அல்லாஹ் அல்லாதவற்றைத் தெய்வங்களாக எடுத்துக் கொள்கின்றனர்.
Meryem 19:82
82. அவ்வாறல்ல; அத்தெய்வங்கள் இவர்கள் தங்களை வணங்கியதையும் நிராகரித்து, இவர்களுக்கு விரோதமாகவும் மாறிவிடும்.
Meryem 19:83
83. (நபியே!) நிராகரிப்பவர்களை (பாவமான காரியங்களைச் செய்யும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே ஷைத்தான்களை நாம் (அவர்களிடம்) அனுப்பிவைக்கிறோம் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
Meryem 19:84
84. ஆதலால், அவர்களுக்காக (வேதனை வரவேண்டுமென்று) நீர் அவசரப்படாதீர். அவர்களுக்கு (வேதனை வரக்கூடிய நாள்களை) நாம் எண்ணிக்கொண்டே இருக்கிறோம்.
Meryem 19:85
85. இறையச்சமுடையவர்களை ரஹ்மானிடம் (விருந்தாளிகளைப் போல) குழுக்களாக நாம் ஒன்று சேர்க்கும் நாளில்,
Meryem 19:86
86. இன்னும் குற்றவாளிகளை தாகத்துடன் நரகத்தின் பக்கம் நாம் ஓட்டுகின்ற நாளில்,
Meryem 19:87
87. ரஹ்மானிடம் அனுமதி பெற்றவர்களைத் தவிர எவரும் (எவருக்கும்) சிபாரிசு பேச உரிமை பெறமாட்டார்.
Meryem 19:88
88. ரஹ்மான் சந்ததி எடுத்துக் கொண்டதாக அ(ந்த கிறிஸ்தவர்கள், இன்னும் இணைவைப்ப)வர்கள் கூறுகின்றனர்.
Meryem 19:89
89. (நபியே! அவர்களை நோக்கி கூறுவீராக:) நிச்சயமாக நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கூறுகிறீர்கள்.
Meryem 19:90
90. வானங்கள் கிழிந்து போகவும், பூமி பிளந்து விடவும், மலைகள் இடிந்து சரிந்து விடவும் நெருங்கி விட்டன.
Meryem 19:91
91. ரஹ்மானுக்குச் சந்ததி உண்டென்று அவர்கள் கூறுவதன் காரணத்தால்.
Meryem 19:92
92. சந்ததி எடுத்துக் கொள்வது ரஹ்மானுக்குத் தகுமானதல்ல.
Meryem 19:93
93. ஏனென்றால், நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் ரஹ்மானிடம் அடிமையாகவே வருகிறது.
Meryem 19:94
94. அவை அனைத்தையும் அவன் சூழ்ந்து அறிந்து கணக்கிட்டும் வைத்திருக்கிறான்.
Meryem 19:95
95. அவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் (எவருடைய உதவியுமில்லாமல்) அவனிடம் தனித்தனியாகவே வரும்.
Meryem 19:96
96. நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறவர்களை (அனைவரும்) நேசிக்கும்படி ரஹ்மான் செய்வான்.
Meryem 19:97
97. (நபியே!) உமது மொழியில் நாம் இதை (இறக்கி) எளிதாக்கி வைத்ததெல்லாம், இதன்மூலம் இறையச்சமுடையவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவதற்கும், (வீண்) விதண்டாவாதம் செய்யும் மக்களுக்கு இதன் மூலம் நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவுமே ஆகும்.
Meryem 19:98
98. இதற்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கிறோம். அவர்களில் ஒருவரையேனும் நீர் காண்கிறீரா? அல்லது அவர்களுடைய சிறிய சப்தத்தையேனும் நீர் கேட்கிறீரா?
Tâhâ 20:1
1. தா ஹா.
Tâhâ 20:2
2. (நபியே!) நீர் சிரமப்படுவதற்காக இந்த குர்ஆனை நாம் உம் மீது இறக்கவில்லை.
Tâhâ 20:3
3. ஆயினும், (இறைவனுக்கு அஞ்சக்கூடிய) இறையச்சம் உடையவர்களுக்கு ஒரு நல்லுபதேசமாகவே (இதை இறக்கி வைத்தோம்).
Tâhâ 20:4
4. உயர்ந்த வானங்களையும், பூமியையும் படைத்தவனிடமிருந்து இது அருளப்பட்டது.
Tâhâ 20:5
5. (அவற்றைப் படைத்த) ரஹ்மான் (-அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்.
Tâhâ 20:6
6. வானங்களிலும், பூமியிலும், இவற்றுக்கு மத்தியிலும், இன்னும் பூமிக்குக் கீழ் புதைந்து கிடப்பவையும் அவனுக்கே சொந்தமானவை.
Tâhâ 20:7
7. (நபியே!) நீர் (மெதுவாக அல்லது) சப்தமிட்டு கூறினால் (இரண்டும் அவனுக்குச் சமம்தான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன் இரகசியத்தையும் அதைவிட மிக மறைவாக (மனதில்) இருப்பதையும் நன்கறிவான்.
Tâhâ 20:8
8. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. அவனுக்கு அழகான (திருப்) பெயர்கள் இருக்கின்றன. (அவற்றில் எதைக் கொண்டேனும் அவனை அழையுங்கள்.)
Tâhâ 20:9
9. (நபியே!) மூஸாவின் சரித்திரம் உம்மிடம் வந்திருக்கிறதா?
Tâhâ 20:10
10. (அவர் தன் குடும்பத்தாருடன் சென்றபொழுது தான் செல்லவேண்டிய வழியை அறியாத நிலையில் தூர் என்னும் மலைமீது) அவர் நெருப்பைக் கண்ட சமயத்தில் தன் குடும்பத்தாரை நோக்கி ‘‘நீங்கள் (இங்கு சிறிது) தாமதித்திருங்கள். மெய்யாகவே நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஓர் எரி கொள்ளியை எடுத்துக்கொண்டு உங்களிடம் வருகிறேன். அல்லது நெருப்பி(ன் வெளிச்சத்தி)னால் (நாம் செல்லவேண்டிய) வழியை அறிந்து கொள்வேன்'' என்றார்.
Tâhâ 20:11
11. அவர் அதனிடம் வரவே (அவரை நோக்கி) ‘‘மூஸாவே!'' என்று சப்தமிட்டழைத்து (நாம் கூறியதாவது):
Tâhâ 20:12
12. ‘‘நிச்சயமாக நான்தான் உமது இறைவன். உமது காலணிகள் இரண்டையும் கழற்றி விடுவீராக. நிச்சயமாக நீர் ‘துவா' என்னும் பரிசுத்த இடத்தில் இருக்கிறீர்.
Tâhâ 20:13
13. நான் உம்மை (என் தூதராகத்) தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஆதலால், வஹ்யி மூலம் (உமக்கு) அறிவிக்கப்படுவதற்கு செவிசாய்ப்பீராக.
Tâhâ 20:14
14. நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் அறவே இல்லை. என்னையே வணங்குவீராக. என்னை தியானித்துக்கொண்டே இருக்கும்பொருட்டு தொழுகையைக் கடைப்பிடிப்பீராக.
Tâhâ 20:15
15. நிச்சயமாக மறுமை வந்தே தீரும். ஒவ்வோர் ஆத்மாவும் தன் செயலுக்குத் தக்க கூலியை அடையும் பொருட்டு அதை நான் (மனிதர்களுக்கு) மறைத்து வைக்க விரும்புகிறேன்.
Tâhâ 20:16
16. ஆகவே, அதை (-மறுமையை) நம்பிக்கை கொள்ளாமல் சரீர இச்சையைப் பின்பற்றுபவன் அந்நாளை நம்பிக்கை கொள்வதிலிருந்து உம்மைத் தடுத்துவிட வேண்டாம். அவ்வாறாயின் நீர் அழிந்து விடுவீர்.''
Tâhâ 20:17
17. ‘‘மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?'' (என்று கேட்டான்.)
Tâhâ 20:18
18. அதற்கவர் ‘‘இது என் கைத்தடி. இதன்மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என் ஆடுகளுக்குத் தழை (குழை)களைப் பறிப்பேன். இன்னும் இதில் எனக்கு வேறு (பல) பயன்களும் இருக்கின்றன'' என்று கூறினார்.
Tâhâ 20:19
19. அதற்கு (இறைவன்) ‘‘மூஸாவே! அதை(த் தரையில்) எறிவீராக'' எனக் கூறினான்.
Tâhâ 20:20
20. அவர் அதை எறியவே அது ஒரு பெரிய பாம்பாகி ஓடிற்று.
Tâhâ 20:21
21. அப்போது இறைவன் கூறினான்: (மூஸாவே!) ‘‘அதைப் பிடிப்பீராக; பயப்படாதீர். உடனே அதை (முன்பு போல் தடியாக) அதன் பழைய நிலைக்கு திருப்பி விடுவேன்.
Tâhâ 20:22
22. உமது கையை உமது கக்கத்தில் சேர்த்து வைப்பீராக. (அதை எடுக்கும் போது) அது மிக்க ஒளியுடன் மாசற்ற வெண்மையாக வெளிவரும். (இது) மற்றொரு அத்தாட்சியாகும்.
Tâhâ 20:23
23. (இவ்வாறு இன்னும்) நமது பெரிய அத்தாட்சிகளை உமக்கு நாம் காண்பிப்போம்.
Tâhâ 20:24
24. ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் மாறு செய்து கொண்டிருக்கிறான்''
Tâhâ 20:25
25. அவர் கூறினார் ‘‘என் இறைவனே! என் உள்ளத்தை(த் திடப்படுத்தி) விரிவாக்கு;
Tâhâ 20:26
26. (நான் செய்ய வேண்டிய) என் காரியங்களை எனக்குச் சுலபமாக்கி வை.
Tâhâ 20:27
27. என் நாவிலுள்ள (கொண்ணல்) முடிச்சை அவிழ்த்துவிடு;
Tâhâ 20:28
28. என் வார்த்தையை (மக்கள்) விளங்கிக் கொள்வார்கள்.
Tâhâ 20:29
29. என் குடும்பத்தில் ஒருவரை எனக்கு உற்ற துணையாக (மந்திரியாக) ஆக்கிவை;
Tâhâ 20:30
30. அவர் என் சகோதரர் ஹாரூனாகவே இருக்கட்டும்.
Tâhâ 20:31
31. அவரைக் கொண்டு என் ஆற்றலை உறுதிப்படுத்தி வை.
Tâhâ 20:32
32. என் காரியங்களில் அவரையும் கூட்டா(ளியா)க்கி வை.
Tâhâ 20:33
33. நாங்கள் (இருவரும்) உன்னை அதிகமதிகம் துதித்து புகழ்வதற்காக,
Tâhâ 20:34
34. மேலும் உன்னை அதிகமாகவே நினைவு கூர்வதற்காக.
Tâhâ 20:35
35. (எங்கள் இறைவனே!) நிச்சயமாக நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கிறாய்'' (என்று மூஸா பிரார்த்தனை செய்தார்).
Tâhâ 20:36
36. அதற்கு (இறைவன்) கூறினான், ‘‘மூஸாவே! நீர் கேட்ட அனைத்தும் நிச்சயமாக உமக்குக் கொடுக்கப்பட்டன.
Tâhâ 20:37
37. (இதற்கு) முன்னரும் ஒருமுறை நிச்சயமாக நாம் உமக்குப் பேரருள் புரிந்திருக்கிறோம்.'' (அதாவது:)
Tâhâ 20:38
38. வஹ்யில் அறிவிக்கப்படுபவற்றை நாம் உமது தாய்க்கு வஹ்யி அறிவித்தபோது, (அதாவது;)
Tâhâ 20:39
39. ‘‘(உங்கள் இனத்தாரின் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் வதை செய்து கொண்டிருந்தான். உம்மைப் பற்றி உமது தாய் கவலை கொண்டாள். ஆகவே, உமது தாயை நோக்கி) ‘‘உம்மைப் பேழையில் வைத்து கடலில் எறிந்து விடு. அக்கடல் அதைக் கரையில் சேர்த்துவிடும். எனக்கும் அந்த குழந்தைக்கும் எதிரியாக உள்ளவனே அதை எடுத்துக்கொள்வான்'' (என்று உமது தாய்க்கு அறிவித்தோம்). நீர் என் கண் பார்வையில் வளர்க்கப்படுவதற்காக (இவ்வாறு) உம் மீது என் அன்பை சொரிந்(து உம்மைப் பார்ப்பவர்கள் விரும்பும்படிச் செய்)தோம்.
Tâhâ 20:40
40. உமது சகோதரி சென்று (உம்மை எடுத்தவர்களிடம்) ‘‘இக்குழந்தைக்கு(ப் பால் கொடுக்கும்) பொறுப்பை ஏற்றுக் கொள்ளக்கூடியவரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?'' என்று கூறும்படிச் செய்து, உமது தாய் கவலைப்படாது அவளின் கண் குளிர்ந்திருக்கும் பொருட்டு, உமது தாயிடமே உம்மைக் கொண்டு வந்(து சேர்த்)தோம். பின்னர், நீர் ஒரு மனிதரைக் கொலை செய்துவிட்டு (அதற்காக) நீர் கொண்ட கவலையில் இருந்து உம்மைக் காப்பாற்றினோம். (இவ்வாறு) உம்மைப் பல வகைகளிலும் சோதித்தோம். பின்னர், மத்யன்வாசிகளிடமும் நீர் பல வருடங்கள் தங்கியிருந்தீர். மூஸாவே! இதற்குப் பின்னர்தான் நீர் (நமது தூதுக்குரிய) தக்க பக்குவமடைந்தீர்.
Tâhâ 20:41
41. இன்னும் எனக்காகவே நான் உம்மை(உருவாக்கி)த் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
Tâhâ 20:42
42. ஆகவே, ‘‘நீர் உமது சகோதரருடன் என் அத்தாட்சிகளை எடுத்துக் கொண்டு செல்வீராக. நீங்கள் இருவரும் என்னை நினைவு கூர்வதில் சோர்வடைந்து விடாதீர்கள்.
Tâhâ 20:43
43. நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மிக்க வரம்பு கடந்துவிட்டான்.
Tâhâ 20:44
44. நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் நல்லுணர்ச்சி பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம்'' (என்றும் கூறினோம்.)
Tâhâ 20:45
45. அதற்கு அவ்விருவரும் ‘‘எங்கள் இறைவனே! அவன் எங்கள் மீது (வரம்பு) மீறி கொடுமை செய்வானோ அல்லது விஷமம் செய்வானோ என்று நாங்கள் பயப்படுகிறோம்'' என்று கூறினார்கள்.
Tâhâ 20:46
46. (அதற்கு இறைவன்) கூறினான்: ‘‘நீங்கள் பயப்படவேண்டாம். நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக்கொண்டும் பார்த்துக் கொண்டும் இருப்பேன்.''
Tâhâ 20:47
47. நீங்கள் இருவரும் அவனிடத்தில் சென்று சொல்லுங்கள்: ‘‘நாங்கள் உன் இறைவனின் தூதர்கள். இஸ்ராயீலின் சந்ததிகளை எங்களுடன் அனுப்பிவிடு; அவர்களை வேதனை செய்யாதே! மெய்யாகவே நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருக்கிறோம். நேரான வழியைப் பின்பற்றியவர்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்.
Tâhâ 20:48
48. (எங்களை) பொய்யாக்கிப் புறக்கணிக்கின்றவன் மீது வேதனை இறங்குமென்று எங்களுக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டது'' (என்பதை தெரிவியுங்கள்).
Tâhâ 20:49
49. (அதற்கு) அவன் ‘‘மூஸாவே! உங்கள் (இருவரின்) இறைவன் யார்?'' என்றான்.
Tâhâ 20:50
50. அதற்கு மூஸா ‘‘எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய இயற்கைத் தன்மையைக் கொடுத்து (அவற்றை பயன்படுத்தும்) வழியையும் (அவற்றுக்கு) அறிவித்தானோ அவன்தான் எங்கள் இறைவன்'' என்றார்.
Tâhâ 20:51
51. அதற்கவன் ‘‘முன்னர் சென்றுபோன (சிலை வணக்கம் செய்து கொண்டிருந்த)வர்களின் கதி என்னவாகும்?'' என்று கேட்டான்.
Tâhâ 20:52
52. அதற்கவர் கூறினார்: ‘‘அதைப்பற்றிய ஞானம் என் இறைவனிடம் உள்ள பதிவுப் புத்தகத்தில் இருக்கிறது. என் இறைவன் (அவர்கள் செய்து வந்ததில் எதையும்) தவறவிடவும் மாட்டான்; மறந்து விடவும் மாட்டான்.
Tâhâ 20:53
53. அவன்தான் பூமியை உங்களுக்கு இருப்பிடமாக அமைத்து (பயணத்திற்கான) வழிகளையும் அதில் உங்களுக்கு ஏற்படுத்தி மேகத்தில் இருந்து மழையையும் பொழியச் செய்கிறான்.'' (மேலும் என் இறைவன் கூறுகிறான்:) ‘‘நாம் இறக்கிவைக்கும் (ஒரே வித) மழை நீரைக்கொண்டு (குணத்திலும், ரசனையிலும் மாறுபட்ட) பல விதமான புற்பூண்டுகளில் (ஆண், பெண்) ஜோடிகளை வெளிப்படுத்துகிறோம்.
Tâhâ 20:54
54. (ஆகவே, அவற்றை நீங்களும்) புசியுங்கள்; உங்கள் (ஆடு மாடு போன்ற) கால்நடைகளை(யும்) மேயவிடுங்கள். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
Tâhâ 20:55
55. பூமியிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம். பின்னர், அதிலேயே உங்களை மீண்டும் சேர்த்து விடுவோம். மற்றொரு தடவையும் (உங்களுக்கு உயிர் கொடுத்து) அதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.'' (இவ்வாறு ஃபிர்அவ்னிடம் மூஸா கூறினார்.)
Tâhâ 20:56
56. நம் அத்தாட்சிகள் அனைத்தையும் அவனுக்குக் காண்பித்தோம். எனினும், அவனோ (இவை அனைத்தும்) பொய்யெனக் கூறி (நம்பிக்கை கொள்ளாது) விலகிக்கொண்டான்.
Tâhâ 20:57
57. ‘‘மூஸாவே! உமது சூனியத்தின் மூலம் எங்களை, எங்களின் ஊரை விட்டு வெளியேற்றவா எங்களிடம் வந்தீர்?
Tâhâ 20:58
58. இதைப்போன்ற சூனியத்தை நாங்களும் உமக்குச் செய்து காண்பிப்போம். நாங்களோ அல்லது நீரோ தவறிவிடாதவாறு ஒரு சமமான பூமியில் (செய்து காண்பிக்க) எங்களுக்கும் உமக்குமிடையில் ஒரு தவணையைக் குறிப்பிடுவீராக!'' என்று கூறினான்.
Tâhâ 20:59
59. அதற்கு மூஸா ‘‘(உங்கள்) பண்டிகை நாளே உங்களுக்குத் தவணையாகும். (ஆனால்,) மக்கள் அனைவரும் முற்பகலிலேயே கூட்டப்பட வேண்டும்'' என்று கூறினார்.
Tâhâ 20:60
60. பின்னர், ஃபிர்அவ்ன் அவரைவிட்டு விலகி (தன் இருப்பிடம் சென்று சூனியத்திற்குரிய) தனது எல்லா சூழ்ச்சிகளையும் சேகரித்துக் கொண்டு பின்பு, (குறித்த நாளில், குறித்த இடத்திற்கு) வந்தான்.
Tâhâ 20:61
61. மூஸா (அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி) ‘‘உங்களுக்கென்ன கேடு? அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய்யைக் கற்பனை செய்து கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால்) அவன் (தன்) வேதனையைக்கொண்டு உங்களை அழித்துவிடுவான். பொய் சொன்னவர்களெல்லாம் அழிந்தே போனார்கள்'' என்று கூறினார்.
Tâhâ 20:62
62. (இதைக் கேட்ட) அவர்கள் தங்களுக்குள் இதைப் பற்றித் தர்க்கித்துக் கொண்டு இரகசியமாகவும் ஆலோசனை செய்து (ஒரு முடிவு கட்டிக்) கொண்டனர்.
Tâhâ 20:63
63. அவர்கள் (மக்களை நோக்கி) ‘‘நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தங்கள் சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றி விடவும், உங்கள் மேலான மார்க்கத்தை அழித்து விடவும் விரும்புகிறார்கள்.
Tâhâ 20:64
64. ஆதலால் உங்கள் சூனியங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துக் கொண்டு பின்பு (அவரை எதிர்க்க) அணியணியாக வாருங்கள். இன்றைய தினம் எவருடைய காரியம் மேலோங்கியதோ அவரே நிச்சயமாக வெற்றி பெறுவார்'' என்று கூறினார்கள்.
Tâhâ 20:65
65. பின்னர் (சூனியம் செய்ய வந்த) அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! (சூனியத்தை) நீர் எறிகிறீரா? அல்லது முதலாவதாக நாங்கள் எறியவா?'' என்று கேட்டார்கள்.
Tâhâ 20:66
66. அதற்கவர், ‘‘இல்லை! நீங்களே (முதலாவதாக) எறியுங்கள்'' என்று கூறினார். (அவர்கள் எறியவே, எறியப்பட்ட) அவர்களுடைய கயிறுகளும், அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக மெய்யாகவே அவை (பாம்புகளாகி) ஓடுவதுபோல் இவருக்குத் தோன்றின.
Tâhâ 20:67
67. ஆகவே, மூஸா தன் மனதில் பயத்தை உணர்ந்தார்.
Tâhâ 20:68
68. (அச்சமயம் நாம் அவரை நோக்கி) ‘‘பயப்படாதீர்! நிச்சயமாக நீர்தான் (இவர்களைவிட) மிக உயர்ந்தவர்'' என்று கூறினோம்.
Tâhâ 20:69
69. இன்னும் உமது வலது கையில் இருப்பதை நீர் எறிவீராக! அவர்கள் செய்த (சூனியங்கள்) அனைத்தையும் அது விழுங்கிவிடும். அவர்கள் செய்ததெல்லாம் சூனியக்காரர்களின் (வெறும்) சூழ்ச்சியே (தவிர உண்மையல்ல). சூனியக்காரன் எங்கிருந்து வந்தபோதிலும் வெற்றி பெறவே மாட்டான்'' (என்றும் கூறினோம்).
Tâhâ 20:70
70. (மூஸா தன் தடியை எறியவே அது பெரியதொரு பாம்பாகி, அவர்கள் செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்கி விட்டது. இதைக் கண்ணுற்ற) அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக வீழ்த்தப்பட்டு ‘‘மூஸா, ஹாரூன் (ஆகிய இவ்விருவருடைய) இறைவனை நாங்களும் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினார்கள்.
Tâhâ 20:71
71. (இதைக் கண்ட ஃபிர்அவ்ன்) ‘‘நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் அவரை நம்பிக்கைகொண்டு விட்டீர்கள். நிச்சயமாக அவர்தான் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்கள் தலைவராயிருக்கும் (போல் தோன்றுகிறது). உங்களை மாறுகை, மாறுகால் வெட்டிப் பேரீச்ச மரத்தின் கிளைகளில் நிச்சயமாக உங்களைக் கழுவேற்றி விடுவேன். வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையான வரும் நிலையானவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்'' என்று கூறினான்.
Tâhâ 20:72
72. அதற்கவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு உன்னை நாங்கள் ஒரு காலத்திலும் விரும்பவே மாட்டோம். உன்னால் இயன்றதை நீ முடிவு செய்துகொள். நீ முடிவு செய்யக்கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில்தான்.
Tâhâ 20:73
73. நிச்சயமாக நாங்கள் (மெய்யான) எங்கள் இறைவனையே நம்பிக்கை கொள்வோம். எங்கள் குற்றங்களையும் உன் நிர்ப்பந்தத்தினால் நாங்கள் செய்த சூனிய(த்தின் குற்ற)ங்களையும் அவன் எங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ்தான் (உன்னைவிட) மிக்க மேலானவனும், என்றும் நிலையானவனும் ஆவான்'' என்று கூறினார்கள்.
Tâhâ 20:74
74. உண்மையாகவே எவன் குற்றவாளியாகத் தன் இறைவனிடம் வருகிறானோ அவனுக்கு நிச்சயமாக நரகம்தான் (கூலியாகும்). அதில் அவன் சாகவும் மாட்டான்; (சுகத்துடன்) வாழவும் மாட்டான். (வேதனையை அனுபவித்துக்கொண்டு வாழவும் சாகவும் வழியில்லாமல் தவிப்பான்.)
Tâhâ 20:75
75. எவர் நம்பிக்கை கொண்டவராக நற்செயல்களைச் செய்து (தன் இறைவனிடம்) வருகிறாரோ அவர்களுக்கு மேலான பதவிகள் இருக்கின்றன.
Tâhâ 20:76
76. (மறுமையிலோ அவர்களுக்கு) ‘அத்ன்' என்ற நிலையான சொர்க்கங்கள் உள்ளன. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவற்றில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இதுதான் பரிசுத்தவான்களுடைய கூலியாகும்.
Tâhâ 20:77
77. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வஹ்யி மூலம் அறிவித்தோம். ‘நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு இரவோடு இரவாக நடந்து (சென்று) விடுவீராக. (வழியில் குறுக்கிடும்) கடலில் (உமது தடியால் அடித்து) உலர்ந்த வழியை அவர்களுக்கு ஏற்படுத்துவீராக. (உம்மை எதிரிகள்) அடைந்து விடுவார்கள் என்று நீர் பயப்பட வேண்டாம். (அக்கடலில் உமது மக்கள் மூழ்கி விடுவார்கள் என்றும்) நீர் அஞ்சாதீர்'' (என்றும் அறிவித்தோம்).
Tâhâ 20:78
78. (அவ்வாறே மூஸா நபி இஸ்ரவேலர்களை அழைத்துக் கொண்டு சென்றுவிடவே) ஃபிர்அவ்ன் தன் சேனைகளுடன் அவர்களைப் பின்பற்றிச் சென்றான். (அவன் கடலிலும் அவர்களைப் பின்பற்றிச் செல்லவே) கடலும் (இவர்களில் ஒருவரும் தப்பிவிடாதபடி) இவர்களை மூழ்கடிக்க வேண்டியவாறு மூழ்கடித்து விட்டது.
Tâhâ 20:79
79. ஃபிர்அவ்ன் தன் மக்களை நேரான வழியில் செலுத்தாமல் தவறான வழியிலேயே செலுத்தினான்.
Tâhâ 20:80
80. இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நாம் உங்களை உங்கள் எதிரிகளிடமிருந்து காப்பாற்றி ‘தூர்' என்னும் மலையின் வலது பாக(ம் வந்தால் உங்களுக்குத் தவ்றாத்)த்தை(த் தருவதாக) வாக்களித்து (உணவு கிடைக்காத பாலைவனத்தில்) உங்களுக்கு ‘மன்னு சல்வா'வையும் இறக்கிவைத்தோம்.
Tâhâ 20:81
81. நாம் உங்களுக்கு அளித்தவற்றில் நல்லதைப் புசித்து வாருங்கள். அதில் நீங்கள் வரம்பு மீறிவிடாதீர்கள். (மீறினால்) உங்கள் மீது என் கோபம் இறங்கிவிடும். எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ அவன் நிச்சயமாக அழிந்தே விடுவான்.
Tâhâ 20:82
82. எவர் கைசேதப்பட்டு (பாவத்திலிருந்து) விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து நேரான வழியில் நிலைத்திருக்கிறாரோ அவரை நிச்சயமாக நான் மிக மன்னிப்பவன் ஆவேன்.
Tâhâ 20:83
83. (மூஸா தூர் ஸீனாய் மலைக்கு விரைந்து வந்த சமயத்தில், அவரிடம்) ‘‘மூஸாவே! நீர் உமது மக்களை விட்டுப் பிரிந்து இவ்வளவு அவசரமாக ஏன் வந்தீர்?'' (என்று இறைவன் கேட்டான்).
Tâhâ 20:84
84. அதற்கவர் ‘‘அவர்கள் இதோ என்னைப் பின்தொடர்ந்தே வருகின்றனர். என் இறைவனே! நீ திருப்திபடுவதற்காக அவசர அவசரமாக (முன்னதாகவே) உன்னிடம் வந்தேன்'' என்று கூறினார்.
Tâhâ 20:85
85. அதற்கு (இறைவன்) ‘‘நீர் வந்த பின்னர் நாம் உமது மக்களை ஒரு சோதனைக்குள்ளாக்கி விட்டோம். ‘ஸாமிரீ' (என்பவன்) அவர்களை வழிகெடுத்து விட்டான்'' என்று கூறினான்.
Tâhâ 20:86
86. (உடனே) மூஸா பெரும் துக்கத்துடன் கோபம் கொண்டவராகத் தன் மக்களிடம் திரும்பி வந்து ‘‘என் மக்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு(த் தவ்றாத் என்னும் வேதத்தைத் தருவதாக) அழகான வாக்குறுதி அளிக்கவில்லையா? அவன் வாக்குறுதி அளித்து உங்களுக்கு அதிக நாட்களாகி விட்டனவா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனின் கோபம் இறங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பியே எனக்குச் செய்த வாக்குறுதிக்கு நீங்கள் மாறு செய்தீர்களா?'' என்று கேட்டார்.
Tâhâ 20:87
87. அதற்கவர்கள் ‘‘நாங்கள் உமக்குச் செய்த வாக்குறுதிக்கு எங்கள் இஷ்டப்படி மாறுசெய்யவில்லை. ஆனால், நாங்கள் சுமந்துகொண்டு வந்த (ஃபிர்அவ்னுடைய) மக்களின் நகைகளை (நெருப்பில் எறியும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு அதில் அவற்றை) நாங்கள் எறிந்தோம். அவ்வாறே ஸாமிரீயும் (தன்னிடமிருந்த நகைகளை) எறிந்தான்.
Tâhâ 20:88
88. பின்னர், அவன் ஒரு காளை கன்றின் சிலையை (மக்கள் முன்) வெளியாக்கினான். அதற்கு(க் காளை மாட்டின் சப்தத்தைப் போல் அர்த்தமற்ற) சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர், இதுதான் உங்களுக்கும் மூஸாவுக்கும் இறைவனாகும். ஆனால் அவர் (இதை) மறந்து (விட்டு மலைக்குச் சென்று)விட்டார்'' என்று கூறினார்கள்.
Tâhâ 20:89
89. (என்ன ஆச்சரியம்!) அவர்களு(டைய கேள்விகளு)க்கு அச்சிலை ஒரு பதில் கூறாமலிருப்பதையும், நன்மையோ தீமையோ (எதையும்) அவர்களுக்குச் செய்ய சக்தியற்று இருப்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா?
Tâhâ 20:90
90. இதற்கு முன்னதாகவே ஹாரூன் அவர்களை நோக்கி ‘‘என் மக்களே! (இச்சிலையை வணங்கி) இதன் மூலம் நீங்கள் வழி தவறிவிட்டீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவன் (அல்லாஹ்வாகிய) ரஹ்மான்தான். (இச்சிலை அல்ல!) என்னைப் பின்பற்றுங்கள்; என் கட்டளைக்கு கட்டுப்படுங்கள்'' என்று கூறினார்.
Tâhâ 20:91
91. அதற்கவர்கள் ‘‘மூஸா நம்மிடம் திரும்ப வரும்வரை இதன் ஆராதனையை நாங்கள் விடமாட்டோம்'' என்று கூறிவிட்டார்கள்.
Tâhâ 20:92
92. (மூஸா அவர்களிடம் வந்தபின், ஹாரூனை நோக்கி) ‘‘ஹாரூனே! இவர்கள் வழிகெட்டே போனார்கள் என்று நீர் அறிந்த சமயத்தில் (என்னை நீர் பின்பற்றி நடக்க) உம்மைத் தடை செய்தது எது?
Tâhâ 20:93
93. நீர் என்னைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டாமா? நீர் என் கட்டளைக்குமாறு செய்ய கருதினீரா?'' (என்று கூறி அவருடைய தாடியையும் தலை முடியையும் பிடித்து இழுத்தார்.)
Tâhâ 20:94
94. அதற்கவர் ‘‘என் தாய் மகனே! என் தலையையும் என் தாடியையும் பிடி(த்திழு)க்காதீர். (நான் அச்சமயமே அவர்களை விட்டு விலகி இருந்தால்) ‘‘இஸ்ராயீலின் சந்ததிகளுக் கிடையில் நீ பிரிவினையை ஏற்படுத்தி விட்டாய். என் வார்த்தைகளை நீ கவனிக்கவில்லை என்று என்னை நீர் கடுகடுப்பீர் என நிச்சயமாக நான் பயந்(துதான் அவர்களுடன் இருந்)தேன்'' எனக் கூறினார்.
Tâhâ 20:95
95. (பின்னர் மூஸா ஸாமிரீயை நோக்கி) ‘‘ஸாமிரீயே! உன் விஷயமென்ன? (ஏன் இவ்வாறு செய்தாய்?)'' என்று கேட்டார்.
Tâhâ 20:96
96. அதற்கவன் ‘‘அவர்கள் பார்க்காத ஒன்றை நான் பார்த்தேன். (வானவத்) தூதர் காலடி மண்ணில் ஒரு பிடியை எடுத்து (பசுவின்) சிலையில் எறிந்தேன். (அது சப்தமிட்டது.) இவ்வாறு (செய்யும் படியாக) என் மனமே என்னைத் தூண்டியது'' என்று கூறினான்.
Tâhâ 20:97
97. அதற்கு மூஸா (அவனை நோக்கி ‘‘இங்கிருந்து) அப்புறப்பட்டுவிடு. நிச்சயமாக நீ (எவரைக் கண்டபோதிலும்) ‘‘என்னைத் தீண்டாதீர்கள்'' என்று கூறித்திரிவதுதான் இவ்வுலகத்தில் உனக்குரிய தண்டனை. (மறுமையிலோ) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட கொடிய வேதனையுண்டு. நீ அதிலிருந்து தப்பவே மாட்டாய். இதோ! நீ ஆராதனை செய்து கொண்டிருந்த தெய்வத்தைப் பார். நிச்சயமாக நான் அதை உருக்கி(ப் பஸ்பமாக்கி) கடலில் தூற்றி விடுவேன்'' என்றும் கூறினார்.
Tâhâ 20:98
98. உங்கள் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறொருவன் இல்லை. அவன் அனைத்தையும் அறியக்கூடிய விசாலமான கல்வி ஞானமுடையவன்'' (என்றும் கூறினார்).
Tâhâ 20:99
99. (நபியே!) இவ்வாறே உமக்கு முன்னர் சென்றுபோனவர்களின் சரித்திரத்தை (மேலும்) நாம் உமக்குக் கூறுவோம். நம்மிடமிருந்து நல்லுபதேசத்தை(உடைய இவ்வேதத்தை) நிச்சயமாக நாம்தான் உமக்கு அளித்தோம்.
Tâhâ 20:100
100. எவன் இதை (நம்பிக்கை கொள்ளாமல்) புறக்கணிக்கிறானோ அவன் மறுமை நாளில் நிச்சயமாக(ப் பெரியதொரு) பாவத்தையே சுமப்பான்.
Tâhâ 20:101
101. அதில் அவன் எந்நாளும் (அதைச் சுமந்து கொண்டே) இருப்பான். மறுமை நாளில் அவர்கள் சுமக்கும் இச்சுமை மிகக் கெட்டது.
Tâhâ 20:102
102. எக்காளம் (சூர்) ஊதப்பட்டு குற்றவாளிகளை நாம் ஒன்று சேர்க்கும் நாளில் அவர்களுடைய கண்கள் (பயத்தினால்) நீலம் பூத்திருக்கும்.
Tâhâ 20:103
103. அவர்கள் தங்களுக்குள் மெதுவாக(ப் பேசி) ‘‘நீங்கள் ஒரு பத்து (நாள்களு)க்கு அதிகமாக (உலகத்தில்) தங்கவில்லை'' (என்று கூறுவார்கள்).
Tâhâ 20:104
104. அவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்களில் மிக்க ஞானமுள்ளவன் (என்று கருதப்படுபவன் அவர்களை நோக்கி) ‘‘ஒரு நாளே தவிர நீங்கள் (அதிகம்) தங்கவில்லை'' என்று கூறுவான்.
Tâhâ 20:105
105. (நபியே!) உம்மிடம் அவர்கள் மலைகளைப் பற்றி (அதன் கதி உலக முடிவின்போது என்னவாகும் என)க் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘என் இறைவன் அவற்றைத் தூள் தூளாக்கி(ப் பரப்பி) விடுவான்.
Tâhâ 20:106
106. பூமியை சமமான வெட்டவெளியாக்கி விடுவான்.
Tâhâ 20:107
107. அதில் ஒரு சிறிதும் மேடு பள்ளத்தை நீர் காணமாட்டீர்.
Tâhâ 20:108
108. அந்நாளில் (அனைவரும் எக்காளத்தின் மூலம்) அழைப்பவனின் சப்தத்தையே பின்பற்றிச் செல்வார்கள். அதில் தவறு ஏற்படாது. ரஹ்மானுக்குப் பயந்து எல்லாச் சப்தங்களும் தணிந்து விடும். (மெதுவான) காலடி சப்தத்தைத் தவிர (வேறு எதையும்) நீர் கேட்கமாட்டீர்.
Tâhâ 20:109
109. அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதி அளித்து அவரின் பேச்சைக் கேட்க அவன் விரும்பினானோ அவரைத்தவிர மற்ற எவருடைய சிபாரிசும் பயனளிக்காது.
Tâhâ 20:110
110. அவர்களுக்கு முன்னுள்ளதையும் பின்னுள்ளதையும் அவன் நன்கறிவான். எனினும், அவர்கள் அவனை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.
Tâhâ 20:111
111. (அந்நாளில்) நிரந்தரமானவன், நிலையானவன் (அல்லாஹ்வின்) முன், அனைவருடைய (தலைகளும்) முகங்களும் குனிந்துவிடும். எவன் அநியாயத்தைச் சுமந்து கொண்டானோ அவன் நஷ்டம் அடைந்தே தீருவான்.
Tâhâ 20:112
112. எவர் நம்பிக்கை கொண்டவராக இருந்து நற்செயல்களைச் செய்கிறாரோ அவர், (தன் நற்கூலி) அழிந்து விடுமென்றோ குறைந்து விடுமென்றோ பயப்படமாட்டார்.
Tâhâ 20:113
113. இவ்வாறே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம். இது அவர்களுக்கு நல்லுணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் அவர்கள் (பாவத்திலிருந்து) விலகிக் கொள்வதற்காகவும் இதில் (நாம் நம் வேதனையைப் பற்றி) எச்சரிக்கைகளை விவரித்தோம்.
Tâhâ 20:114
114. உண்மையான அரசனாகிய அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன். (நபியே!) குர்ஆனைப் பற்றி உமக்கு வஹ்யி அறிவித்து முடிவதற்கு முன்னதாகவே (அதை ஓத) நீர் அவசரப்படாதீர். ‘‘என் இறைவனே! என் கல்வி ஞானத்தை மேலும் அதிகப்படுத்து'' என்று நீர் பிரார்த்தனை செய்வீராக.
Tâhâ 20:115
115. இதற்கு முன்னர் ஆதமிடம் நிச்சயமாக நாம் வாக்குறுதி வாங்கியிருந்தோம். எனினும், (அதை) அவர் மறந்துவிட்டார். ஆனால், (மனமுரண்டாக அதற்கு மாறு செய்யும்) உறுதியான எண்ணத்தை நாம் அவரிடம் காணவில்லை.
Tâhâ 20:116
116. வானவர்களை நோக்கி ‘‘நீங்கள் ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என்று கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (அவர்கள் அனைவரும்) சிரம் பணிந்தார்கள். அவன் (சிரம் பணியாது) விலகிக் கொண்டான்.
Tâhâ 20:117
117. ஆதலால், (நாம் ஆதமை நோக்கி) ‘‘ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும் உமது மனைவிக்கும் எதிரியாவான். உங்கள் இருவரையும் இச்சோலையிலிருந்து அவன் வெளிப்படுத்தி விடவேண்டாம். (எச்சரிக்கையாக இருப்பீராக!) இன்றேல் நீர் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்'' என்று கூறினோம்.
Tâhâ 20:118
118. ‘‘நிச்சயமாக நீர் இதில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்.
Tâhâ 20:119
119. நிச்சயமாக நீர் இதில் தாகிக்காமலும் வெயிலால் தாக்கப்படாமலும் இருப்பீர்'' (என்று கூறினான்).
Tâhâ 20:120
120. எனினும், ஷைத்தான் அவர்களுக்கு ஊசலாட்டத்தை உண்டுபண்ணி ‘‘ஆதமே! நிரந்தர வாழ்க்கைக்குரிய மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் நான் உமக்கு அறிவிக்கவா?'' என்று கூறினான்.
Tâhâ 20:121
121. ஆகவே, அவ்விருவரும் (தடுக்கப்பட்ட) அதைப் புசித்து விட்டார்கள். உடனே (நிர்வாணமாகி) அவ்விருவரின் மானம் அவ்விருவருக்கும் வெளியாகவே, அச்சோலையின் இலைகளைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டார்கள். ஆகவே, ஆதம் (இப்லீஸின் சூழ்ச்சியில் சிக்கித் தவறிழைத்துத்) தன் இறைவனுக்கு மாறுசெய்து வழி தவறிவிட்டார்.
Tâhâ 20:122
122. பின்னர், (அவர் மன்னிப்புக் கோரவே) அவருடைய இறைவன் அவருடைய குற்றங்களையும் மன்னித்து அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் அவரை செலுத்தினான்.
Tâhâ 20:123
123. ‘‘நீங்கள் இருவரும் இதிலிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ளுடைய சந்ததிக)ளில் சிலர் சிலருக்கு எதிரிகளாக இருப்பார்கள். அச்சமயம் நிச்சயமாக என் நேர்வழி உங்களிடம் வரும். எவர் என் நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார்; நஷ்டமடையவும் மாட்டார்.'' என்றும் கூறினான்.
Tâhâ 20:124
124. எவன் என் நல்லுபதேசங்களைப் புறக்கணிக்கிறானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம்.
Tâhâ 20:125
125. (அச்சமயம்) அவன் ‘‘என் இறைவனே! நீ ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்? நான் பார்வையுடையவனாக இருந்தேன்ன!'' என்று கேட்பான்.
Tâhâ 20:126
126. அதற்கு (இறைவன்) ‘‘இவ்வாறே (குருடனைப்போன்றே உன் காரியங்கள் இருந்தன) நம்வசனங்கள் உன்னிடம் வந்தன. நீ அவற்றை(க் கவனத்தில் வைக்காது) மறந்துவிட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் (கவனிக்கப்படாது) மறக்கப்பட்டுவிட்டாய்'' என்று கூறுவான்.
Tâhâ 20:127
127. எவன் வரம்பு மீறி, தன் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்ள வில்லையோ அவனுக்கும் இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அவனுக்குக் கிடைக்கும்) மறுமையின் வேதனையோ மகா கடினமானதும் நிலையானதும் ஆகும்.
Tâhâ 20:128
128. இவர்களுக்கு முன்னிருந்த எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்து விட்டோம் என்ற விஷயம் இவர்களை நேரான வழியில் செலுத்தவில்லையா? (அழிந்து போன) அவர்கள் வசித்திருந்த இடங்களுக்குச் சமீபமாகவே இவர்கள் செல்கின்றனர். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக அதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Tâhâ 20:129
129. (நபியே! அவர்களின் தண்டனைக்குரிய காலம் மறுமைதான் என்று) ஒரு தவணையைக் குறிப்பிட்டிருக்கும் உமது இறைவனின் வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிட்டால் (இச்சமயமே) வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டிருக்கும்.
Tâhâ 20:130
130. ஆகவே, அவர்கள் (உம்மைக் குறைவுபடுத்திக்) கூறுவதைப் பற்றி நீர் பொறுமையுடன் சகித்திருப்பீராக. சூரியன் உதயமாவதற்கு முன்னரும், சூரியன் மறைவதற்கு முன்னரும், இரவு காலங்களிலும், (பகல் காலங்களிலும்) பகலின் இருமுனைகளிலும் உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்துகொண்டிருப்பீராக. (இதனால்) நீர் திருப்தி அடையலாம்.
Tâhâ 20:131
131. (நபியே!) அவர்களில் சிலருக்கு சுகமனுபவிக்க நாம் கொடுத்தவற்றின் பக்கம் நீர் உமது பார்வையைச் செலுத்தாதீர். இவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களே! அவர்களைச் சோதிப்பதற்காகவே (நாம் இவற்றை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.) ஆனால், உமது இறைவன் உமக்குக் கொடுத்திருப்பதோ மிக்க மேலானதும் நிலையானதுமாகும்.
Tâhâ 20:132
132. (நபியே!) தொழுது வருமாறு நீர் உமது குடும்பத்தினரை ஏவுவீராக. நீரும் அதன் மீது உறுதியாக இருப்பீராக. (இதற்காக) நாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லை. உமக்கு வேண்டியவற்றை எல்லாம் நாமே கொடுக்கிறோம். முடிவான நன்மை இறையச்சத்திற்குத்தான்.
Tâhâ 20:133
133. (‘‘இறைவனின் தூதராகிய) அவர் தன் இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிறவாறு) நம்மிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். முந்திய வேதங்களிலுள்ள தெளிவான ஆதாரங்கள் அவர்களிடம் வரவில்லையா? (வந்தே இருக்கிறது.)
Tâhâ 20:134
134. (நம் தூதராகிய) இவர் வருவதற்கு முன்னதாகவே நாம் அவர்களை வேதனை செய்தால் “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? (அவ்வாறு அனுப்பியிருந்தால்) நாங்கள் இந்த இழிவுக்கும் நிந்தனைக்கும் உள்ளாவதற்கு முன்னதாகவே உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போம்'' என்று கூறுவார்கள்.
Tâhâ 20:135
135. (நபியே! நீர்) கூறுவீராக: ‘‘ஒவ்வொருவரும் (தங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்த்திருப்பவர்களே! ஆகவே, நீங்களும் (உங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்ப்பீராக. நேரான வழியில் இருப்பவர் யார்? (தவறான வழியில் இருப்பவர் யார்?) நேரான வழியை அடைந்து விட்டவர்கள் யார்? என்பதைப் பின்னர் நீங்கள் நிச்சயமாக நன்கறிந்து கொள்வீர்கள்.
Enbiya 21:1
1. மனிதர்களுக்கு அவர்களுடைய கேள்வி கணக்கு (நாள்) நெருங்கிக் கொண்டே வருகிறது; எனினும், அவர்களோ அதைப் புறக்கணித்துக் கவலை அற்றவர்களாக இருக்கின்றனர்.
Enbiya 21:2
2. தங்கள் இறைவனிடமிருந்து புதிதாக ஒரு நல்லுபதேசம் வரும் போதெல்லாம் அதை அவர்கள் (நம்பாது பரிகாசம் செய்து) விளையாடிக் கொண்டே கேட்கிறார்கள்.
Enbiya 21:3
3. அவர்களுடைய உள்ளங்கள் (உண்மையைச்) சிந்திப்பதே இல்லை. இத்தகைய அநியாயக்காரர்கள் (நம் தூதரைப் பற்றி) ‘‘இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறென்ன? நீங்கள் பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தில் சிக்க வருகிறீர்களா?'' என்று தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொள்கின்றனர்.
Enbiya 21:4
4. ‘‘வானங்களிலோ பூமியிலோ (ரகசியமாகவும், வெளிப்படையாகவும் பேசப்படும்) எல்லா வாக்கியங்களையும் என் இறைவன் நன்கறிவான். ஏனென்றால், அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிபவன் ஆவான்'' என்று (நம் தூதர்) பதில் கூறினார்.
Enbiya 21:5
5. (தவிர, அவர்கள் நம் வசனங்களைப் பற்றி) மாறாக, ‘‘இவை சிதறிய சிந்தனை(யால் ஏற்பட்ட வாக்கியங்)கள் என்றும், நம் தூதர் இதைப் பொய்யாகத் தாமே கற்பனை செய்துகொண்டார் என்றும், இவர் ஒரு கவிஞர்தான்; (தன் கவிதை ஆற்றலால் அமைத்த வாக்கியங்களே இவை) என்றும் (கூறுவதுடன்) முற்காலத்தில் அனுப்பப்பட்ட தூதர்கள் (கொண்டு வந்ததைப்) போல இவரும் (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்'' என்றும் கூறுகின்றனர்!
Enbiya 21:6
6. இவர்களுக்கு முன்னர் நாம் அழித்துவிட்ட ஊராரில் ஒருவருமே (அவர்கள் விரும்பிய அத்தாட்சிகளைக் கண்ட பின்னர்) நம்பிக்கை கொள்ளவில்லை. (அவ்வாறிருக்க) இவர்களா நம்பிக்கை கொள்ளப் போகின்றனர்!
Enbiya 21:7
7. (நபியே!) உமக்கு முன்னரும் (மனிதர்களில்) ஆண்களையே தவிர வேறொருவரையும் நாம் நம் தூதராக அனுப்பவில்லை. (உமக்கு அறிவிப்பது போன்றே நம் கட்டளைகளை) அவர்களுக்கும் வஹ்யி (மூலம்) அறிவித்தோம். ஆகவே, (இவர்களை நோக்கி கூறுவீராக. இது) உங்களுக்குத் தெரியாதிருந்தால் (முன்னுள்ள வேத) ஞானமுடையவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
Enbiya 21:8
8. உணவே உட்கொள்ளாத உடலை அவர்களுக்கு (தூதர்களுக்கு) நாம் கொடுக்க வில்லை. தவிர, அவர்கள் (பூமியில் என்றுமே மரணிக்காத) நிரந்தரம் பெற்றவர்களாகவும் இருக்கவில்லை.
Enbiya 21:9
9. பின்னர், (அவர்களை பாதுகாத்துக் கொள்வதாக நாம்) அவர்களுக்களித்த வாக்குறுதியை உண்மையாக்கும் பொருட்டு அவர்களையும், நாம் விரும்பிய மற்றவர்களையும் பாதுகாத்துக் கொண்டு வரம்புமீறியவர்களை அழித்துவிட்டோம்.
Enbiya 21:10
10. உங்களுக்கு(ப் போதுமான) நல்லுபதேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக உங்களுக்கு அருளியிருக்கிறோம். இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
Enbiya 21:11
11. அநியாயக்காரர்கள் வசித்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்து நாசமாக்கி விட்டோம். அவர்களுக்குப் பின்னர் (அவ்விடத்தில்) வேறு மக்களை உற்பத்தி செய்தோம்.
Enbiya 21:12
12. அவர்களும் நம் வேதனையின் அறிகுறியை உணர்ந்து கொண்ட மாத்திரத்தில் தங்கள் ஊரைவிட்டு விரைந்து ஓட ஆரம்பித்தார்கள்.
Enbiya 21:13
13. (அச்சமயம் நாம் அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் வேகமாக ஓடாதீர்கள்! நீங்கள் மிக்க ஆடம்பரமாக அனுபவித்து வந்த செல்வத்தின் பக்கமும், உங்கள் வீடுகளுக்கும் நீங்கள் திரும்புங்கள். அங்கு நீங்கள் அது பற்றி கேட்கப்படுவீர்கள்'' (என்று கூறினோம்.)
Enbiya 21:14
14. அதற்கவர்கள் ‘‘எங்கள் கேடே! நிச்சயமாக நாங்கள் (வரம்பு மீறிய) தீயவர்களாக இருந்தோம்'' என்று கூக்குரலிட்டார்கள்.
Enbiya 21:15
15. அவர்களுடைய அக்கூக்குரல் அவர்களை நாம் அழித்துச் சாம்பலாக்கும் வரை நீடித்திருந்தது.
Enbiya 21:16
16. வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவற்றையும் வீண் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
Enbiya 21:17
17. நாம் வீண் விளையாட்டுக்காரனாக இருந்து விளையாட வேண்டும் என்று நாம் கருதியும் இருந்தால் நம்மிடமுள்ள (நமக்குத் தகுதியான)தை நாம் எடுத்து (விளையாடி)க் கொண்டிருப்போம்.
Enbiya 21:18
18. அவ்வாறன்று; மெய்யைப் பொய்யின் மீது எறிகிறோம். அது அதை (அதன் தலையை) உடைத்து விடுகிறது. பின்னர் அது அழிந்தும் விடுகிறது. (ஆகவே, இறைவனைப் பற்றி அவனுக்கு மனைவி உண்டென்றும், சந்ததி உண்டென்றும்) நீங்கள் கூறுபவற்றின் காரணமாக உங்களுக்குக் கேடுதான்.
Enbiya 21:19
19. வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுக்குரியனவே! அவனிடத்தில் இருக்கக்கூடிய (வானவர்களாயினும் சரி; அவர்களும் அவனுடைய அடியார்களே! அ)வர்கள் அவனை வணங்காது பெருமை அடிக்கவும் மாட்டார்கள், சோர்வுறவும் மாட்டார்கள்.
Enbiya 21:20
20. அவர்கள் இரவு பகல் எந்நேரமும் இடைவிடாது அவனைப் போற்றி புகழ்ந்து துதித்துக் கொண்டே இருக்கின்றனர்.
Enbiya 21:21
21. பூமியில் உள்ளவற்றை இவர்கள் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரே அவை (மரணித்தவர்களை) உயிர்ப்பிக்குமா?
Enbiya 21:22
22. வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன்.
Enbiya 21:23
23. அவன் செய்பவற்றைப் பற்றி (ஏன் செய்தாய், எதற்காகச் செய்தாய் என்று) எவருமே அவனைக் கேட்க முடியாது. (அவ்வளவு சர்வ சுதந்திரமும், வல்லமையும் உள்ளவன் அவன்.) எனினும், படைப்புகள்தான் (அவரவர்களுடைய செயலைப் பற்றிக்) கேட்கப்படுவார்கள்.
Enbiya 21:24
24. (நபியே!) இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றைக் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் அவர்களை நோக்கி) ''என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்னுள்ளவர்களின் வேதமும் இதோ இருக்கின்றன. (இவற்றிலிருந்து இதற்கு) உங்கள் ஆதாரத்தை நீங்கள் கொண்டு வாருங்கள்'' என்று கூறுவீராக. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையை அறிந்து கொள்ள சக்தி அற்றவர்கள். ஆதலால் அவர்கள் (இவ்வேதத்தையும்) புறக்கணிக்கின்றனர்.
Enbiya 21:25
25. உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம், ‘‘நிச்சயமாக என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லவே இல்லை; என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹ்யி அறிவிக்காமலில்லை.
Enbiya 21:26
26. (அவ்வாறிருந்தும்) ரஹ்மான் (வானவர்களை தனக்குப் பெண்) சந்ததியாக்கிக் கொண்டான் என்று இவர்கள் கூறுகின்றனர். அவனோ மிகப் பரிசுத்தமானவன். (வானவர்கள் அவனுடைய சந்ததிகளன்று,) எனினும், (அவனுடைய) கண்ணியமிக்க அடியார்கள் ஆவர்.
Enbiya 21:27
27. (அவனுக்கு முன்னால்) இ(வ்வான)வர்கள் ஒரு வார்த்தையும் மீறிப் பேச மாட்டார்கள். அவன் இட்ட கட்டளையை இவர்கள் செய்து கொண்டு இருப்பார்கள்.
Enbiya 21:28
28. அவர்களுக்கு முன்னிருப்பவற்றையும், பின்னிருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் விரும்பியவர்களுக்கே தவிர மற்றெவருக்கும் இவர்கள் சிபாரிசு செய்யமாட்டார்கள். இன்னும், அவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டே இருப்பார்கள்.
Enbiya 21:29
29. அவர்களில் எவரேனும் ‘‘அல்லாஹ்வையன்றி நிச்சயமாக நானும் வணக்கத்திற்குரிய ஓர் இறைவன்தான்'' என்று கூறினால், அவருக்கு நரகத்தையே நாம் கூலியாக்குவோம். அநியாயக்காரர்களுக்கு அவ்வாறே கூலி கொடுப்போம்.
Enbiya 21:30
30. (ஆரம்பத்தில்) வானம் (என்றும்) பூமி (என்றும் தனித்தனியாக) இல்லாமல் இருந்ததை நாமே பிரித்தமைத்து, (வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அந்த மழை) நீரைக் கொண்டு உயிருள்ள ஒவ்வொன்றையும் (வாழ்ந்திருக்கச்) செய்தோம் என்பதையும் இந்நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா? ஆகவே, இவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா?
Enbiya 21:31
31. பூமி மனிதர்களுடன் சாய்ந்துவிடாதிருக்கும் பொருட்டு அதில் மலைகளை நாம்தான் நாட்டினோம். அவர்கள் விரும்பிய இடத்திற்கு சரியாக செல்லும் பொருட்டு அதில் விசாலமான வழிகளையும் நாம்தான் ஏற்படுத்தினோம்.
Enbiya 21:32
32. மேலும், வானத்தைப் பத்திரமான ஒரு முகட்டைப்போல் நாம்தான் அமைத்தோம். (இவ்வாறெல்லாமிருந்தும்) அவற்றிலுள்ள அத்தாட்சிகளை அவர்கள் புறக்கணிக்கின்றனர்.
Enbiya 21:33
33. அவனே இரவையும் பகலையும் (படைத்தான்.) சூரியனையும் சந்திரனையும் படைத்தான். இவை எல்லாம் வானத்தில் நீந்திச் செல்(வதைப் போல் செல்)கின்றன.
Enbiya 21:34
34. (நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்குமே நாம் மரணமற்ற வாழ்க்கையை ஏற்படுத்தவில்லை. ஆகவே, நீர் இறந்துவிட்ட பின்னர் (என்ன) இவர்கள் என்றென்றும் வாழப்போகிறார்களா?
Enbiya 21:35
35. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மை, தீமை செய்யக்கூடிய நிலைமையில் உங்களை (வைத்து) நாம் சோதிப்போம். பின்னர் நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Enbiya 21:36
36. (நபியே!) நிராகரிப்பவர்கள் உம்மைக் கண்டால் (தங்களுக்குள் ஒருவர் மற்றவரை நோக்கி) ‘‘உங்கள் தெய்வங்களைக் குறை கூறுபவர் இவர்தானா?'' என்று உம்மை(ச் சுட்டிக் காண்பித்து)ப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை. எனினும், அவர்களோ ரஹ்மா(ன் அளவற்ற அருளாளன் என்று இறைவ)னின் பெயரைக் கூறுவதையும் மறுக்கின்றனர்.
Enbiya 21:37
37. மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கிறான். (ஆகவே, அவர்களை நோக்கி நபியே! கூறுவீராக: ‘‘வேதனைகளாகிய) என் அத்தாட்சிகளை நான் அதிசீக்கிரத்தில் உங்களுக்குக் காண்பிப்பேன். ஆகவே, நீங்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம்.''
Enbiya 21:38
38. (அந்நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘வேதனை வரும் என்று) நீங்கள் கூறுவதில் உண்மையானவர்களாக இருந்தால் இந்த (மிரட்டல்) வாக்கு எப்பொழுது வரும்'' என்று அவர்கள் கேட்கிறார்கள்.
Enbiya 21:39
39. அவர்கள் தங்கள் முகங்களில் இருந்தும், தங்கள் முதுகுகளில் இருந்தும் நரக நெருப்பைத் தட்டிக்கொள்ள முடியாமலும், அவர்களுக்கு உதவி செய்ய ஒருவரும் கிடைக்காமலும் போகக்கூடிய (ஒரு) காலம் வருமென்பதை இந்த நிராகரிப்பவர்கள் அறிந்திருந்தால் (அது இவர்களுக்கே நன்று).
Enbiya 21:40
40. எனினும், அது இவர்களிடம் திடுகூறாகவே வந்து அவர்களைத் தட்டுக் கெட்டுத் தடுமாறும்படிச் செய்து விடும்; அதைத் தட்டிக் கழித்துவிட இவர்களால் முடியாது. இவர்களுக்கு சிறிதும் அவகாசம் கொடுக்கப்படவும் மாட்டாது.
Enbiya 21:41
41. உமக்கு முன்னர் வந்த நம் தூதர்களும் (இவ்வாறே எதிரிகளால்) பரிகாசம் செய்யப்பட்டனர். ஆகவே, பரிகாசம் செய்து கொண்டிருந்தவர்களை அவர்கள் பரிகாசம் செய்த வேதனை வந்து சூழ்ந்து கொண்டது.
Enbiya 21:42
42. (நபியே! இவர்களை நோக்கி) ‘‘இரவிலோ பகலிலோ வரக்கூடிய ரஹ்மானுடைய வேதனையில் இருந்து உங்களை பாதுகாப்பவர் யார்?'' என்று கேட்பீராக. எனினும் இவர்களோ தங்கள் இறைவனை நினைப்பதையே முற்றிலும் புறக்கணித்து விட்டனர்.
Enbiya 21:43
43. இவர்களை (நம் வேதனையிலிருந்து) தடுக்கக்கூடிய தெய்வங்கள் நம்மைத் தவிர இவர்களுக்கு வேறு இருக்கின்றனவா? (இவர்கள் தெய்வங்கள் எனக் கூறும்) அவை (இவர்களுக்கு உதவி செய்வதென்ன!) தமக்குத்தாமே உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவை. ஆகவே, நமக்கெதிராக அவை இவர்களுக்குத் துணை புரியாது.
Enbiya 21:44
44. இவர்களையும் இவர்களுடைய மூதாதைகளையும் (நீண்ட காலம் வரை) சுகமனுபவிக்கச் செய்தோம். அதனால் அவர்களின் ஆயுளும் அதிகரித்தது. (ஆகவே, அவர்கள் கர்வங்கொண்டு விட்டார்களா?) நிச்சயமாக நாம் இவர்களைச் சூழ்ந்துள்ள பூமியை(ப் படிப்படியாக)க் குறைத்து (இவர்களை நெருக்கி)க் கொண்டே வருவதை இவர்கள் காணவில்லையா? இவர்களா (நம்மை) வென்று விடுவார்கள்?
Enbiya 21:45
45. (நபியே! அவர்களை நோக்கி ‘‘வேதனையைக் கொண்டு) நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹ்யின் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டவற்றையே! (நான் சுயமாக எதையும் கூறவில்லை)'' என்று கூறுவீராக. (எனினும், இவர்கள் செவிடர்களைப் போல் இருக்கின்றனர். ஆகவே) இந்த செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டால் அதை அவர்கள் செவியேற்க மாட்டார்கள்.
Enbiya 21:46
46. உமது இறைவனுடைய வேதனையின் வாடை இவர்கள் மீது பட்டாலே போதும் ‘‘நாங்கள் அழிந்தோம்; நிச்சயமாக நாங்களே எங்களுக்குத் தீங்கு இழைத்துக் கொண்டோம்!'' என்று கூச்சல் இடுவார்கள்.
Enbiya 21:47
47. மறுமை நாளில் சரியான தராசையே நாம் நிறுத்துவோம். எந்த ஓர் ஆத்மாவுக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (வேறெவரின் உதவியும் நமக்குத் தேவையில்லை.)
Enbiya 21:48
48. மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய வேதத்தையே நாம் கொடுத்திருந்தோம். அதை பிரகாசமாகவும், இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவும் ஆக்கினோம்.
Enbiya 21:49
49. (இறையச்சமுடையவர்கள்) தங்கள் இறைவனைத் தங்கள் கண்ணால் பார்க்காவிடினும் அவனுக்குப் பயப்படுவதுடன், மறுமையைப் பற்றியும் அவர்கள் (எந்நேரமும் பயந்து) நடுங்கிக் கொண்டிருப்பார்கள்.
Enbiya 21:50
50. இந்த குர்ஆன் மிக்க பாக்கியமுடைய நல்லுபதேசமாகும். இதை நாமே இறக்கி வைத்தோம். இதை நீங்கள் நிராகரித்து விடுவீர்களா?
Enbiya 21:51
51. நிச்சயமாக நாம் இப்றாஹீமுக்கு இதற்கு முன்னரே நல்லறிவைக் கொடுத்திருந்தோம். (அதற்குரிய) அவருடைய தன்மையை நன்கறிந்தோம்.
Enbiya 21:52
52. அவர் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கி ‘‘நீங்கள் (மிக்க உற்சாகத்தோடு) வணங்கிவரும் இச்சிலைகள் என்ன? (எதற்காக நீங்கள் இவற்றை வணங்குகிறீர்கள்)'' என்று கேட்டதற்கு,
Enbiya 21:53
53. அவர்கள் ‘‘எங்கள் மூதாதைகள் இவற்றை வணங்கிக் கொண்டிருக்க நாங்கள் கண்டோம். (ஆதலால் நாங்களும் அவற்றை வணங்குகிறோம்)'' என்று கூறினார்கள்.
Enbiya 21:54
54. அதற்கவர் ‘‘நீங்களும் உங்கள் மூதாதைகளும் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறீர்கள்'' என்று கூறினார்.
Enbiya 21:55
55. அதற்கவர்கள் ‘‘நீர் ஏதும் உண்மையான செய்தியை நம்மிடம் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது (இவ்வாறு கூறி நம்முடன்) நீர் விளையாடுகிறீரா?'' என்று கேட்டனர்.
Enbiya 21:56
56. அதற்கவர் ‘‘(நான் விளையாடுபவன்) இல்லை. உங்கள் (உண்மையான) இறைவன், வானங்களையும், பூமியையும் படைத்த இறைவன்தான். (இந்த சிலைகளல்ல) இதற்கு நானே உங்களுக்குச் சாட்சி கூறுகிறேன்'' என்று கூறினார்.
Enbiya 21:57
57. (இங்கிருந்து) ‘‘நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் சிலைகளைப் பங்கப்படுத்திவிடுவேன்'' (என்றும் கூறினார்.)
Enbiya 21:58
58. (அவ்வாறே அவர்கள் சென்ற பின்னர்) அவற்றில் பெரிய சிலையைத் தவிர (மற்ற) அனைத்தையும் துண்டு துண்டாக உடைத்துத் தள்ளிவிட்டார். அவர்கள் (திரும்ப வந்த பின்னர் இதைப் பற்றி விசாரிப்பதற்காகப்) பெரிய சிலையிடம் செல்லக் கூடும் (என்று அதை மட்டும் உடைக்கவில்லை).
Enbiya 21:59
59. அவர்கள் (திரும்ப வந்து இக்காட்சியைக் கண்டதும்) ‘‘எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவன் எவன்? நிச்சயமாக அவன் மகா அநியாயக்காரன்'' என்று கூறினார்கள்.
Enbiya 21:60
60. அதற்கு (அவர்களில் சிலர்) ‘‘ஒரு வாலிபர் இவற்றைப் பற்றி(க் குறை) கூறிக் கொண்டிருப்பதை நாங்கள் செவியுற்று இருக்கிறோம். அவருக்கு ‘இப்றாஹீம்' என்று பெயர் கூறப்படுகிறது'' என்று கூறினார்கள்.
Enbiya 21:61
61. அதற்கவர்கள் ‘‘(அவ்வாறாயின்) அவரை மக்கள் கண்களுக்கு முன் கொண்டு வாருங்கள். (அவர் கூறும் பதிலுக்கு) அனைவரும் சாட்சியாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள்.
Enbiya 21:62
62. (அவ்வாறு இப்றாஹீமைக் கொண்டு வந்து அவரை நோக்கி) ‘‘இப்றாஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர்தானோ?'' என்று கேட்டனர்.
Enbiya 21:63
63. அதற்கவர் ‘‘இல்லை. இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே! இதுதான் செய்திருக்கலாம்! (உடைப்பட்ட) இவை பேசக்கூடியவையாக இருந்தால் அவற்றையே கேளுங்கள்'' என்றார்.
Enbiya 21:64
64. அவர்கள் (இதற்குப் பதில் கூறமுடியாமல் நாணமுற்றுத்) தங்களுக்குள் (ஒருவர் மற்றவரை நோக்கி) “நிச்சயமாக நீங்கள்தான் (இவற்றைத் தெய்வமெனக் கூறி) அநியாயம் செய்து விட்டீர்கள்'' என்று கூறிக் கொண்டார்கள்.
Enbiya 21:65
65. பின்னர், அவர்கள் (வெட்கத்தால் சிறிது நேரம்) தலை குனிந்திருந்து (இப்றாஹீமை நோக்கி) ‘‘இவை பேசாது என்பதை நிச்சயமாக நீர் அறிவீரே! (அவ்வாறிருக்க இவற்றிடம் நாங்கள் கேட்கும்படி எங்களிடம் எவ்வாறு கூறுகிறீர்?)'' (என்று கூறினார்கள்).
Enbiya 21:66
66. அதற்கவர் ‘‘உங்களுக்கு ஒரு நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாத (இ)வற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?
Enbiya 21:67
67. சீச்சி! (கேவலம் நீங்களென்ன) உங்களுக்கும் கேடுதான்; நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாத இவைக(ளென்ன இவை)களுக்கும் கேடுதான். என்னே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?'' என்று கூறினார்.
Enbiya 21:68
68. அதற்கவர்கள் (தங்கள் மனிதர்களை நோக்கி,) ‘‘நீங்கள் ஏதும் செய்ய வேண்டுமென்றி ருந்தால் இவரை நெருப்பில் எரித்து உங்கள் தெய்வங்களுக்காக இவரிடம் பழி வாங்குங்கள்'' என்று கூறினார்கள்.
Enbiya 21:69
69. (அவ்வாறே அவர்கள் இப்றாஹீமை நெருப்புக் கிடங்கில் எறியவே நெருப்பை நோக்கி) ‘‘நெருப்பே! நீ இப்றாஹீமுக்கு சுகம் தரும் விதத்தில் குளிர்ந்து விடு!'' என்று நாம் கூறினோம்.
Enbiya 21:70
70. அவர்கள் இப்றாஹீமுக்கு தீங்கிழைக்கக் கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே நஷ்டமடையும்படிச் செய்து விட்டோம்.
Enbiya 21:71
71. அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் நாம் பாதுகாத்துக் கொண்டு, மனிதர்கள் பெரும் பாக்கியம் அடையக்கூடியதாக நாம் செய்திருக்கும் (பைத்துல் முகத்தஸ் என்னும்) ஊருக்கு கொண்டு வந்து சேர்த்தோம்.
Enbiya 21:72
72. மேலும், நாம் அவருக்கு (அவருடைய) கோரிக்கைக்கு அதிகமாக இஸ்ஹாக்கையும், யஅகூபையும் அருள் புரிந்தோம். இவர்கள் அனைவரையும் நல்லடியார்களாகவும் நாம் ஆக்கினோம்.
Enbiya 21:73
73. மேலும், நம் கட்டளைகளை (மக்களுக்கு) ஏவி நேரான வழியை அறிவிக்கக்கூடிய தலைவர்களாகவும் அவர்களை ஆக்கினோம். நன்மையான காரியங்களைச் செய்யுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ‘ஜகாத்' கொடுத்து வருமாறும் அவர்களுக்கு வஹ்யி மூலம் அறிவித்தோம். அவர்கள் அனைவரும் நம்மையே வணங்கிக் கொண்டிருந்தார்கள்.
Enbiya 21:74
74. லூத்தையும் (நபியாக்கி) அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் கொடுத்துத் தீய காரியங்களைச் செய்து கொண்டிருந்த ஊர் மக்களில் இருந்தும் நாம் அவரை பாதுகாத்துக் கொண்டோம். நிச்சயமாக அவ்வூரார் (மனிதர்களில்) மிகக்கெட்ட மனிதர்களாகவும் பெரும் பாவிகளாகவும் இருந்தனர்.
Enbiya 21:75
75. நாம் அவரை நம் அருளில் புகுத்தினோம். நிச்சயமாக அவர் நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார்.
Enbiya 21:76
76. நூஹையும் (நபியாக அனுப்பிவைத்தோம்.) அவர் இதற்கு முன்னர் செய்து கொண்டிருந்த பிரார்த்தனையை அவருக்காக நாம் அங்கீகரித்துக் கொண்டு, அவரையும் அவரது குடும்பத்தினரையும் பெரும் சிரமத்தில் இருந்து பாதுகாத்துக் கொண்டோம்.
Enbiya 21:77
77. நம் வசனங்களைப் பொய்யாக்கிய மக்களுக்கு விரோதமாக அவருக்கு நாம் உதவி செய்தோம். நிச்சயமாக அவர்களும் மிகக் கெட்ட மக்களாகவே இருந்தனர். ஆதலால், அவர்கள் அனைவரையும் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்து விட்டோம்.
Enbiya 21:78
78. தாவூதையும் ஸுலைமானையும் (நபியாக அனுப்பிவைத்தோம்). ஒருவருடைய ஆடுகள் மற்றொருவரின் பயிரை மேய்ந்து விட்டது பற்றி (தாவூத், சுலைமான் ஆகிய) இருவரும் தீர்ப்புக் கூற இருந்த சமயத்தில் அவர்களுடைய தீர்ப்பை நாம் (கவனித்துப்) பார்த்துக் கொண்டிருந்தோம்.
Enbiya 21:79
79. தீர்ப்புக் கூறுவதில் இவர்கள் இருவருக்குமே கல்வியையும் ஞானத்தையும் நாம் கொடுத்திருந்த போதிலும், ஸுலைமானுக்கு நியாயத்தை விளக்கிக் காண்பித்தோம். மலைகளையும் பறவைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை அவருடன் அல்லாஹ்வை தஸ்பீஹ் (துதி) செய்தன. நாமேதான் இவற்றை எல்லாம் செய்தோம்.
Enbiya 21:80
80. (போரில் ஈட்டி, கத்தி ஆகியவற்றின்) காயத்தில் இருந்து உங்களை பாதுகாக்கக் கூடிய கவசங்கள் செய்வதை நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களா?
Enbiya 21:81
81. ஸுலைமானுக்கு வேகமான காற்றையும் நாம் வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அது அவருடைய உத்தரவின்படி மிக்க பாக்கியம்பெற்ற ஊருக்கு (அவரை எடுத்து)ச்செல்லும் எல்லா விஷயங்களையும் நாம் அறிந்திருந்தோம்.
Enbiya 21:82
82. கடலில் மூழ்கி (முத்து, பவளம் போன்றவற்றைக் கொண்டு) வரக்கூடிய (மூர்க்க) ஷைத்தான்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். இதைத் தவிர (அவருக்கு அவசியமான) பல வேலைகளையும் அவை செய்துகொண்டு இருந்தன. நாம்தான் அவர்களைக் கண்காணித்து வந்தோம்.
Enbiya 21:83
83. ஐயூபையும் (நாம் நம் தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் இறைவனை நோக்கி ‘‘நிச்சயமாக நோய் என்னைப் பிடித்துக் கொண்டது. (அதை நீ நீக்கி விடு.) நீயோ கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்'' என்று பிரார்த்தனை செய்தார்.
Enbiya 21:84
84. ஆகவே, நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து, அவரைப் பீடித்திருந்த நோயையும் நீக்கி, அவருடைய குடும்பத்தையும் நாம் அவருக்கு அளித்து, நம் அருளால் மேலும் அதைப் போன்ற தொகையினரையும் அவருக்குக் (குடும்பமாகக்) கொடுத்தோம். இது (எனக்குப் பயந்து) என்னை வணங்குபவர்களுக்கு(ம் என்னிடம் பிரார்த்தனை செய்பவர்களுக்கும்) நல்லுணர்ச்சி ஊட்டக்கூடியதாக இருக்கிறது.
Enbiya 21:85
85. இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிப்லுவையும் (நாம் நம் தூதர்களாக அனுப்பிவைத்தோம்). இவர்கள் அனைவரும் (தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைச்) சகித்துக் கொண்டனர்.
Enbiya 21:86
86. ஆகவே, இவர்கள் அனைவரையும் நாம் நம் அருளில் புகுத்தினோம். ஏனென்றால், நிச்சயமாக இவர்கள் அனைவரும் நல்லவர்களே.
Enbiya 21:87
87. (யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம் தூதராக ஆக்கினோம்). அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக்கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருள்களிலிருந்த அவர் (நம்மை நோக்கி) ‘‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)'' என்று பிரார்த்தனை செய்தார்.
Enbiya 21:88
88. நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (அவருடைய மிக்க துயரமான) சிரமத்திலிருந்தும் அவரை நாம் பாதுகாத்துக் கொண்டோம். இவ்வாறே, (சிரமத்தில் சிக்கி நம்மிடம் பிரார்த்தனை செய்யும்) நம்பிக்கையாளர்களையும் நாம் பாதுகாத்துக் கொள்வோம்.
Enbiya 21:89
89. ஜகரிய்யாவையும் (தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் இறைவனை நோக்கி ‘‘என் இறைவனே! நீ என்னை(ச் சந்ததியற்ற) தனித்தவனாக விட்டுவிடாதே! நீயோ வாரிசாகக்கூடியவர்களில் மிக்க மேலானவன்'' என்று பிரார்த்தனை செய்த சமயத்தில்,
Enbiya 21:90
90. நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (மலடாக இருந்த) அவருடைய மனைவியை குணப்படுத்தி, யஹ்யாவை அவருக்கு(ச் சந்ததியாகக்) கொடுத்தோம். நிச்சயமாக இவர்கள் அனைவரும் நன்மையான காரியங்களைச் செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டிருந்தார்கள். (நம் அருளை) விரும்பியும் (நம் தண்டனையைப்) பயந்தும் நம்மிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் நம்மிடம் மிக்க உள்ளச்சமுடையவர்களாகவும் இருந்தார்கள்.
Enbiya 21:91
91. தன் கற்பைக் காத்துக்கொண்ட (மர்யம் என்ப)வளை(யும் நீர் ஞாபக மூட்டுவீராக. நம் தூதர்) ஜிப்ரயீல் மூலம் அவளுடைய கர்ப்பத்தில் நாம் ஊதினோம். அவளையும் அவளுடைய மகனையும் உலகத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
Enbiya 21:92
92. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அனைவரும் (ஒரே மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டிய) ஒரே வகுப்பார்தான். (இதில் ஜாதி வேற்றுமை கிடையாது.) உங்கள் அனைவருக்கும் இறைவன் நான் ஒருவனே! ஆகவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்.
Enbiya 21:93
93. எனினும் இவர்கள் தங்கள் காரியத்தில் (வேறுபட்டு) பல பிரிவுகளாக பிரிந்து விட்டனர். இவர்கள் அனைவரும் நம்மிடம் திரும்ப வரக்கூடியவர்கள்தான்.
Enbiya 21:94
94. ஆகவே, (இவர்களில்) எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய முயற்சி வீணாகிவிடாது. நிச்சயமாக நாம் அவற்றைப் பதிவு செய்து வருகிறோம்.
Enbiya 21:95
95. நாம் எவ்வூரார்களை அழித்துவிட்டோமோ அவர்கள் நிச்சயமாக (உலகிற்கு) திரும்பவே மாட்டார்கள் என விதிக்கப்பட்டுள்ளது.
Enbiya 21:96
96. யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்திற்கு வழி திறக்கப்பட்டால் அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் (தண்ணீர் பாய்ந்து ஓடுவதைப் போல்) வழிந்து (உலகின் பல பாகங்களிலும் அதிசீக்கிரத்தில் பரவி) விடுவார்கள்.
Enbiya 21:97
97. (உலக முடிவு பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது. (அது வரும் சமயத்தில் அதைக் காணும்) நிராகரிப்பவர்களின் கண்கள் திறந்தது திறந்தவாறே இருக்கும். ‘‘எங்களுக்குக் கேடுதான். நிச்சயமாக நாங்கள் இதைப்பற்றி கவலையற்றவர்களாக இருந்தோமே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோமே!'' (என்றும் அவர்கள் புலம்புவார்கள்).
Enbiya 21:98
98. (அச்சமயம் அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவையும் நரகத்தின் எரிகட்டையாகி விட்டீர்கள். நீங்கள் அனைவரும் அங்கு செல்ல வேண்டியவர்கள்தான்'' (என்று கூறப்படும்).
Enbiya 21:99
99. (அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த) இவை (உண்மையான) தெய்வங்களாக இருந்தால் நரகத்திற்கு வந்தே இருக்காது. எனினும், அவர்கள் அனைவரும் (நரகத்தில் தள்ளப்பட்டு) என்றென்றும் அதில் தங்கிவிடுவார்கள்.
Enbiya 21:100
100. அதில் அவர்கள் திணறித் திணறிக் (கழுதையைப் போல்) கதறுவார்கள். அதில் (மற்றெவரின் சப்தத்தை) அவர்கள் செவியுற மாட்டார்கள்.
Enbiya 21:101
101. ஏற்கனவே நம்மால் எவர்களுக்கு நன்மைகள் எழுதப்பட்டு விட்டதோ அவர்கள், நிச்சயமாக நரகத்திற்கு வெகு தூரமாக இருப்பார்கள்.
Enbiya 21:102
102. அதன் இரைச்சலையும் அவர்கள் (தங்கள் காதால்) கேட்கமாட்டார்கள். இன்னும் அவர்கள் தாங்கள் விரும்பிய சுகபோகங்களை(ச் சொர்க்கத்தில்) என்றென்றும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
Enbiya 21:103
103. (மறுமையில் ஏற்படும்) பெரும் திடுக்கமும் அவர்களை துக்கத்திற்குள்ளாக்காது. (அச்சமயம்) வானவர்கள் அவர்களை எதிர்கொண்டழைப்பார்கள் ‘‘உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (நல்ல) நாள் இதுதான்'' (என்று நற்செய்தியும் கூறுவார்கள்).
Enbiya 21:104
104. எழுதப்பட்ட கடிதத்தைச் சுருட்டுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் நாளை (நபியே!) நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக. முதல் தடவை நாம் அவர்களை படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீளவைப்போம். இது நம்மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதைச் செய்தே தீருவோம்.
Enbiya 21:105
105. நிச்சயமாக நாம் ‘ஜபூர்' என்னும் வேதத்தில், நல்லுபதேசங்களுக்குப் பின்னர் எழுதியிருக்கிறோம், ‘‘நிச்சயமாக பூமிக்கு என் அடியார்களில் நன்நடத்தை உடையவர்கள்தான் வாரிசாவார்கள்'' என்று.
Enbiya 21:106
106. என்னையே வணங்குபவர்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு நற்செய்தி இருக்கிறது.
Enbiya 21:107
107. (நபியே!) உம்மை உலகத்தாருக்கு ஓர் அருளாகவே தவிர நாம் அனுப்பவில்லை.
Enbiya 21:108
108. (ஆகவே) நீர் கூறுவீராக: ‘‘எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதெல்லாம் ‘‘உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஓர் இறைவனே'' என்றுதான். ஆகவே, நீங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடப்பீர்களாக!
Enbiya 21:109
109. (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டாலோ (அவர்களை நோக்கி) ‘‘நான் (என் தூதை) உங்கள் அனைவருக்கும் சமமாக எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை (வந்தே தீரும். எனினும், அது) சமீபத்தில் இருக்கிறதா தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்'' என்று கூறுவீராக.
Enbiya 21:110
110. நிச்சயமாக (என் இறைவன்) நீங்கள் (வாயால்) சப்தமிட்டுப் பேசுவதையும் (உங்கள் உள்ளங்களில் அதற்கு மாறாக) மறைத்து வைத்திருப்பதையும் அறிந்து கொள்கிறான்.
Enbiya 21:111
111. (இன்னும் இதுவரை வேதனை செய்யாது) உங்களை விட்டு வைத்திருப்பது உங்களைச் சோதிப்பதற்காகவோ அல்லது குறித்த காலம் வரை நீங்கள் வாழ்ந்திருப்பதற்காகவோ என்பதை நான் அறிய மாட்டேன்.
Enbiya 21:112
112. (மேலும் முஹம்மது) கூறினார்: ‘‘என் இறைவனே! (எனக்கும் இந்நிராகரிப்பவர்களுக்கும் இடையில்) நீ நீதமான தீர்ப்பளிப்பாயாக! எங்கள் இறைவன்தான் பேரருளாளன். உங்கள் (பொய்யான) கூற்றுகளுக்கு எதிராக அவனிடமே உதவி தேடுகிறோம்.''