Tamilce Meal — Abdülhamîd Bakavî — Kasas 28:1 – Yâsin 36:83
Contents
- Kasas 28:1
- Kasas 28:2
- Kasas 28:3
- Kasas 28:4
- Kasas 28:5
- Kasas 28:6
- Kasas 28:7
- Kasas 28:8
- Kasas 28:9
- Kasas 28:10
- Kasas 28:11
- Kasas 28:12
- Kasas 28:13
- Kasas 28:14
- Kasas 28:15
- Kasas 28:16
- Kasas 28:17
- Kasas 28:18
- Kasas 28:19
- Kasas 28:20
- Kasas 28:21
- Kasas 28:22
- Kasas 28:23
- Kasas 28:24
- Kasas 28:25
- Kasas 28:26
- Kasas 28:27
- Kasas 28:28
- Kasas 28:29
- Kasas 28:30
- Kasas 28:31
- Kasas 28:32
- Kasas 28:33
- Kasas 28:34
- Kasas 28:35
- Kasas 28:36
- Kasas 28:37
- Kasas 28:38
- Kasas 28:39
- Kasas 28:40
- Kasas 28:41
- Kasas 28:42
- Kasas 28:43
- Kasas 28:44
- Kasas 28:45
- Kasas 28:46
- Kasas 28:47
- Kasas 28:48
- Kasas 28:49
- Kasas 28:50
- Kasas 28:51
- Kasas 28:52
- Kasas 28:53
- Kasas 28:54
- Kasas 28:55
- Kasas 28:56
- Kasas 28:57
- Kasas 28:58
- Kasas 28:59
- Kasas 28:60
- Kasas 28:61
- Kasas 28:62
- Kasas 28:63
- Kasas 28:64
- Kasas 28:65
- Kasas 28:66
- Kasas 28:67
- Kasas 28:68
- Kasas 28:69
- Kasas 28:70
- Kasas 28:71
- Kasas 28:72
- Kasas 28:73
- Kasas 28:74
- Kasas 28:75
- Kasas 28:76
- Kasas 28:77
- Kasas 28:78
- Kasas 28:79
- Kasas 28:80
- Kasas 28:81
- Kasas 28:82
- Kasas 28:83
- Kasas 28:84
- Kasas 28:85
- Kasas 28:86
- Kasas 28:87
- Kasas 28:88
- Ankebut 29:1
- Ankebut 29:2
- Ankebut 29:3
- Ankebut 29:4
- Ankebut 29:5
- Ankebut 29:6
- Ankebut 29:7
- Ankebut 29:8
- Ankebut 29:9
- Ankebut 29:10
- Ankebut 29:11
- Ankebut 29:12
- Ankebut 29:13
- Ankebut 29:14
- Ankebut 29:15
- Ankebut 29:16
- Ankebut 29:17
- Ankebut 29:18
- Ankebut 29:19
- Ankebut 29:20
- Ankebut 29:21
- Ankebut 29:22
- Ankebut 29:23
- Ankebut 29:24
- Ankebut 29:25
- Ankebut 29:26
- Ankebut 29:27
- Ankebut 29:28
- Ankebut 29:29
- Ankebut 29:30
- Ankebut 29:31
- Ankebut 29:32
- Ankebut 29:33
- Ankebut 29:34
- Ankebut 29:35
- Ankebut 29:36
- Ankebut 29:37
- Ankebut 29:38
- Ankebut 29:39
- Ankebut 29:40
- Ankebut 29:41
- Ankebut 29:42
- Ankebut 29:43
- Ankebut 29:44
- Ankebut 29:45
- Ankebut 29:46
- Ankebut 29:47
- Ankebut 29:48
- Ankebut 29:49
- Ankebut 29:50
- Ankebut 29:51
- Ankebut 29:52
- Ankebut 29:53
- Ankebut 29:54
- Ankebut 29:55
- Ankebut 29:56
- Ankebut 29:57
- Ankebut 29:58
- Ankebut 29:59
- Ankebut 29:60
- Ankebut 29:61
- Ankebut 29:62
- Ankebut 29:63
- Ankebut 29:64
- Ankebut 29:65
- Ankebut 29:66
- Ankebut 29:67
- Ankebut 29:68
- Ankebut 29:69
- Rum 30:1
- Rum 30:2
- Rum 30:3
- Rum 30:4
- Rum 30:5
- Rum 30:6
- Rum 30:7
- Rum 30:8
- Rum 30:9
- Rum 30:10
- Rum 30:11
- Rum 30:12
- Rum 30:13
- Rum 30:14
- Rum 30:15
- Rum 30:16
- Rum 30:17
- Rum 30:18
- Rum 30:19
- Rum 30:20
- Rum 30:21
- Rum 30:22
- Rum 30:23
- Rum 30:24
- Rum 30:25
- Rum 30:26
- Rum 30:27
- Rum 30:28
- Rum 30:29
- Rum 30:30
- Rum 30:31
- Rum 30:32
- Rum 30:33
- Rum 30:34
- Rum 30:35
- Rum 30:36
- Rum 30:37
- Rum 30:38
- Rum 30:39
- Rum 30:40
- Rum 30:41
- Rum 30:42
- Rum 30:43
- Rum 30:44
- Rum 30:45
- Rum 30:46
- Rum 30:47
- Rum 30:48
- Rum 30:49
- Rum 30:50
- Rum 30:51
- Rum 30:52
- Rum 30:53
- Rum 30:54
- Rum 30:55
- Rum 30:56
- Rum 30:57
- Rum 30:58
- Rum 30:59
- Rum 30:60
- Lukman 31:1
- Lukman 31:2
- Lukman 31:3
- Lukman 31:4
- Lukman 31:5
- Lukman 31:6
- Lukman 31:7
- Lukman 31:8
- Lukman 31:9
- Lukman 31:10
- Lukman 31:11
- Lukman 31:12
- Lukman 31:13
- Lukman 31:14
- Lukman 31:15
- Lukman 31:16
- Lukman 31:17
- Lukman 31:18
- Lukman 31:19
- Lukman 31:20
- Lukman 31:21
- Lukman 31:22
- Lukman 31:23
- Lukman 31:24
- Lukman 31:25
- Lukman 31:26
- Lukman 31:27
- Lukman 31:28
- Lukman 31:29
- Lukman 31:30
- Lukman 31:31
- Lukman 31:32
- Lukman 31:33
- Lukman 31:34
- Secde 32:1
- Secde 32:2
- Secde 32:3
- Secde 32:4
- Secde 32:5
- Secde 32:6
- Secde 32:7
- Secde 32:8
- Secde 32:9
- Secde 32:10
- Secde 32:11
- Secde 32:12
- Secde 32:13
- Secde 32:14
- Secde 32:15
- Secde 32:16
- Secde 32:17
- Secde 32:18
- Secde 32:19
- Secde 32:20
- Secde 32:21
- Secde 32:22
- Secde 32:23
- Secde 32:24
- Secde 32:25
- Secde 32:26
- Secde 32:27
- Secde 32:28
- Secde 32:29
- Secde 32:30
- Ahzab 33:1
- Ahzab 33:2
- Ahzab 33:3
- Ahzab 33:4
- Ahzab 33:5
- Ahzab 33:6
- Ahzab 33:7
- Ahzab 33:8
- Ahzab 33:9
- Ahzab 33:10
- Ahzab 33:11
- Ahzab 33:12
- Ahzab 33:13
- Ahzab 33:14
- Ahzab 33:15
- Ahzab 33:16
- Ahzab 33:17
- Ahzab 33:18
- Ahzab 33:19
- Ahzab 33:20
- Ahzab 33:21
- Ahzab 33:22
- Ahzab 33:23
- Ahzab 33:24
- Ahzab 33:25
- Ahzab 33:26
- Ahzab 33:27
- Ahzab 33:28
- Ahzab 33:29
- Ahzab 33:30
- Ahzab 33:31
- Ahzab 33:32
- Ahzab 33:33
- Ahzab 33:34
- Ahzab 33:35
- Ahzab 33:36
- Ahzab 33:37
- Ahzab 33:38
- Ahzab 33:39
- Ahzab 33:40
- Ahzab 33:41
- Ahzab 33:42
- Ahzab 33:43
- Ahzab 33:44
- Ahzab 33:45
- Ahzab 33:46
- Ahzab 33:47
- Ahzab 33:48
- Ahzab 33:49
- Ahzab 33:50
- Ahzab 33:51
- Ahzab 33:52
- Ahzab 33:53
- Ahzab 33:54
- Ahzab 33:55
- Ahzab 33:56
- Ahzab 33:57
- Ahzab 33:58
- Ahzab 33:59
- Ahzab 33:60
- Ahzab 33:61
- Ahzab 33:62
- Ahzab 33:63
- Ahzab 33:64
- Ahzab 33:65
- Ahzab 33:66
- Ahzab 33:67
- Ahzab 33:68
- Ahzab 33:69
- Ahzab 33:70
- Ahzab 33:71
- Ahzab 33:72
- Ahzab 33:73
- Sebe' 34:1
- Sebe' 34:2
- Sebe' 34:3
- Sebe' 34:4
- Sebe' 34:5
- Sebe' 34:6
- Sebe' 34:7
- Sebe' 34:8
- Sebe' 34:9
- Sebe' 34:10
- Sebe' 34:11
- Sebe' 34:12
- Sebe' 34:13
- Sebe' 34:14
- Sebe' 34:15
- Sebe' 34:16
- Sebe' 34:17
- Sebe' 34:18
- Sebe' 34:19
- Sebe' 34:20
- Sebe' 34:21
- Sebe' 34:22
- Sebe' 34:23
- Sebe' 34:24
- Sebe' 34:25
- Sebe' 34:26
- Sebe' 34:27
- Sebe' 34:28
- Sebe' 34:29
- Sebe' 34:30
- Sebe' 34:31
- Sebe' 34:32
- Sebe' 34:33
- Sebe' 34:34
- Sebe' 34:35
- Sebe' 34:36
- Sebe' 34:37
- Sebe' 34:38
- Sebe' 34:39
- Sebe' 34:40
- Sebe' 34:41
- Sebe' 34:42
- Sebe' 34:43
- Sebe' 34:44
- Sebe' 34:45
- Sebe' 34:46
- Sebe' 34:47
- Sebe' 34:48
- Sebe' 34:49
- Sebe' 34:50
- Sebe' 34:51
- Sebe' 34:52
- Sebe' 34:53
- Sebe' 34:54
- Fatır 35:1
- Fatır 35:2
- Fatır 35:3
- Fatır 35:4
- Fatır 35:5
- Fatır 35:6
- Fatır 35:7
- Fatır 35:8
- Fatır 35:9
- Fatır 35:10
- Fatır 35:11
- Fatır 35:12
- Fatır 35:13
- Fatır 35:14
- Fatır 35:15
- Fatır 35:16
- Fatır 35:17
- Fatır 35:18
- Fatır 35:19
- Fatır 35:20
- Fatır 35:21
- Fatır 35:22
- Fatır 35:23
- Fatır 35:24
- Fatır 35:25
- Fatır 35:26
- Fatır 35:27
- Fatır 35:28
- Fatır 35:29
- Fatır 35:30
- Fatır 35:31
- Fatır 35:32
- Fatır 35:33
- Fatır 35:34
- Fatır 35:35
- Fatır 35:36
- Fatır 35:37
- Fatır 35:38
- Fatır 35:39
- Fatır 35:40
- Fatır 35:41
- Fatır 35:42
- Fatır 35:43
- Fatır 35:44
- Fatır 35:45
- Yâsin 36:1
- Yâsin 36:2
- Yâsin 36:3
- Yâsin 36:4
- Yâsin 36:5
- Yâsin 36:6
- Yâsin 36:7
- Yâsin 36:8
- Yâsin 36:9
- Yâsin 36:10
- Yâsin 36:11
- Yâsin 36:12
- Yâsin 36:13
- Yâsin 36:14
- Yâsin 36:15
- Yâsin 36:16
- Yâsin 36:17
- Yâsin 36:18
- Yâsin 36:19
- Yâsin 36:20
- Yâsin 36:21
- Yâsin 36:22
- Yâsin 36:23
- Yâsin 36:24
- Yâsin 36:25
- Yâsin 36:26
- Yâsin 36:27
- Yâsin 36:28
- Yâsin 36:29
- Yâsin 36:30
- Yâsin 36:31
- Yâsin 36:32
- Yâsin 36:33
- Yâsin 36:34
- Yâsin 36:35
- Yâsin 36:36
- Yâsin 36:37
- Yâsin 36:38
- Yâsin 36:39
- Yâsin 36:40
- Yâsin 36:41
- Yâsin 36:42
- Yâsin 36:43
- Yâsin 36:44
- Yâsin 36:45
- Yâsin 36:46
- Yâsin 36:47
- Yâsin 36:48
- Yâsin 36:49
- Yâsin 36:50
- Yâsin 36:51
- Yâsin 36:52
- Yâsin 36:53
- Yâsin 36:54
- Yâsin 36:55
- Yâsin 36:56
- Yâsin 36:57
- Yâsin 36:58
- Yâsin 36:59
- Yâsin 36:60
- Yâsin 36:61
- Yâsin 36:62
- Yâsin 36:63
- Yâsin 36:64
- Yâsin 36:65
- Yâsin 36:66
- Yâsin 36:67
- Yâsin 36:68
- Yâsin 36:69
- Yâsin 36:70
- Yâsin 36:71
- Yâsin 36:72
- Yâsin 36:73
- Yâsin 36:74
- Yâsin 36:75
- Yâsin 36:76
- Yâsin 36:77
- Yâsin 36:78
- Yâsin 36:79
- Yâsin 36:80
- Yâsin 36:81
- Yâsin 36:82
- Yâsin 36:83
Kasas 28:1
1. தா ஸீம் மீம்.
Kasas 28:2
2. (நபியே!) இவை(யும்) தெளிவான இவ்வேதத்திலுள்ள சில வசனங்களாகும்.
Kasas 28:3
3. (நபியே!) நம்பிக்கை கொண்ட மக்களுக்காக மூஸா இன்னும் ஃபிர்அவ்னைப் பற்றிய சில உண்மை விஷயங்களை உமக்கு ஓதிக் காண்பிக்கிறோம்.
Kasas 28:4
4. நிச்சயமாக ஃபிர்அவ்ன், பூமியில் மிகவும் பெருமை கொண்டு, அதில் உள்ளவர்களைப் பல வகுப்புக்களாகப் பிரித்து, அவர்களில் ஒரு பிரிவினரை பலவீனப்படுத்தும் பொருட்டு அவர்களுடைய ஆண் மக்களைக் கொலை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழவைத்து வந்தான். மெய்யாகவே (இவ்வாறு) அவன் விஷமிகளில் ஒருவனாகவே இருந்தான்.
Kasas 28:5
5. எனினும், பூமியில் (அவனால்) பலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீது நாம் அருள் புரிந்து, அவர்களைத் தலைவர்களாக்கி (அங்கு வசித்தவர்களுடைய பொருள்களுக்கும்,) அவர்களையே வாரிசுகளாக ஆக்க விரும்பினோம்.
Kasas 28:6
6. அப்பூமியில் நாம் (பலவீனமான) அவர்களை மேன்மையாக்கி வைத்து ஃபிர்அவ்னும், ஹாமானும், அவர்களுடைய ராணுவங்களும் எந்த வேதனைக்குப் பயந்து கொண்டிருந்தார்களோ, அதை அவர்களுக்குக் காண்பிக்கவும் நாம் கருதினோம்.
Kasas 28:7
7. (ஆகவே, பலவீனமானவர்களில் மூஸாவை நாம் படைத்தோம். மூஸா பிறந்த சமயத்தில், பலவீனமான இவர்களுடைய மக்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் கொலை செய்து கொண்டிருந்தான். ஆகவே மூஸாவின் தாய், தன் இக்குழந்தையையும் ஃபிர்அவ்ன் கொலை செய்து விடுவானோ என்று அஞ்சி நடுங்கினாள்.) ஆகவே, (அச்சமயம்) மூஸாவின் தாய்க்கு நாம் வஹ்யி மூலம் அறிவித்தோம்: (குழந்தையை உன்னிடமே வைத்துக் கொண்டு) ‘‘ அவருக்குப் பால் கொடுத்து வா. (உன்னிடம் இருப்பதில்) அவரைப் பற்றி நீ பயந்தால், அவரை (பேழையில் வைத்து) ஆற்றில் எறிந்துவிடு. நீ அவரைப் பற்றிக் கவலைப்படாதே! பயப்படாதே! நிச்சயமாக நாம் அவரை உன்னிடமே கொண்டு வந்து சேர்த்து, அவரை (நம்) தூதர்களில் ஒருவராகவும் ஆக்குவோம்'' (என்று அறிவித்தோம்.)
Kasas 28:8
8. (ஆகவே, மூஸாவுடைய தாய் அவரை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டு விட்டாள்.) அக்குழந்தையை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டனர். அவர் நிச்சயமாக (அவர்களுக்கு) எதிரியாகி துக்கத்தைத் தருவார். ஃபிர்அவ்னும், ஹாமானும், அவர்களுடைய ராணுவங்களும் தவறிழைத்தவர்களாகவே ஆயினர்.
Kasas 28:9
9. (அக்குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னுடைய மனைவி (தன் கணவனை நோக்கி) ‘‘ நீ இதை கொலை செய்துவிடாதே! எனக்கும், உனக்கும் இது ஒரு கண் குளிர்ச்சியாக இருக்கிறது. இதனால் நாம் நன்மை அடையலாம் அல்லது இதை நாம் நம் குழந்தையாக தத்தெடுத்துக் கொள்ளலாம்'' என்று கூறினாள். எனினும், (இவராலேயே தங்களுக்கு அழிவு ஏற்படும் என்பதை) அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.
Kasas 28:10
10. மூஸாவுடைய தாயின் உள்ளம் (அவரை ஆற்றில் எறிந்த பின் துக்கத்தால்) வெறுமையாகி விட்டது. அவள் நமது வார்த்தையை நம்பும்படி அவளுடைய உள்ளத்தை நாம் உறுதிப்படுத்தியிருக்காவிட்டால், (மூஸா பிறந்திருக்கும்) விஷயத்தை அனைவருக்கும் அவள் வெளிப்படுத்தியே இருப்பாள்.
Kasas 28:11
11. (அக்குழந்தையைப் பேழையில் வைத்து ஆற்றில் விட்டதன் பின்னர்) அவள், அக்குழந்தையின் சகோதரியை நோக்கி ‘‘ (ஆற்றில் மிதந்து செல்லும்) அதைப் பின்தொடர்ந்து நீயும் செல்'' என்று கூறினாள். அவளும் அ(தனைப் பின்தொடர்ந்து சென்று அதை எடுத்த)வர்களுக்குத் தெரியாத விதத்தில் அதை(ப் பற்றி என்ன நடக்கிறதென்று) தூரத்திலிருந்தே கவனித்து வந்தாள்.
Kasas 28:12
12. (ஆற்றில் மிதந்து சென்ற குழந்தையை எடுத்துக் கொண்டவர்கள் அதற்குப் பாலூட்ட பல செவிலித் தாய்களை அழைத்து வந்தனர். எனினும்,) இதற்கு முன்னதாகவே அக்குழந்தை (எவளுடைய) பாலையும் அருந்தாது தடுத்துவிட்டோம். (ஆகவே, இதைப் பற்றி அவர்கள் திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில் மூஸாவின் சகோதரி அவர்கள் முன் வந்து) ‘‘ உங்களுக்காக இக்குழந்தைக்கு செவிலித்தாயாக இருந்து அதன் நன்மையைக் கவனித்து அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வீட்டுடையாரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?'' என்று கூறினாள்.
Kasas 28:13
13. (அவர்கள் அனுமதிக்கவே, அவள் மூஸாவுடைய தாயை அழைத்தும் வந்து விட்டாள்.) இவ்வாறு நாம் அவரை அவருடைய தாயிடமே சேர்த்துத் தாயின் கண் குளிர்ந்திருக்கவும் அவள் கவலைப்படாதிருக்கவும் செய்து, அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதுதான் என்று நிச்சயமாக அவள் அறிந்து கொள்ளும்படியும் செய்தோம். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியமாட்டார்கள்.
Kasas 28:14
14. அவர் வாலிபத்தையடைந்து அவருடைய அறிவு பூரணப்பக்குவம் அடையவே, அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் நாம் அளித்தோம். இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி தருகிறோம்.
Kasas 28:15
15. (மூஸா ஒரு நாளன்று) மக்கள் அயர்ந்து (பராமுகமாக) இருக்கும் சமயத்தில் அவ்வூரில் சென்றபொழுது இரு வாலிபர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டார். ஒருவன் (இஸ்ரவேலரில் உள்ள) இவர் இனத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் (கிப்திகளாகிய) இவருடைய எதிரிகளில் உள்ளவன். அவனுக்கு எதிராக உதவி செய்யுமாறு இவர் இனத்தைச் சேர்ந்தவன் இவரிடத்தில் கோரிக் கொண்டான். (அதற்கிணங்கி) மூஸா அவனை ஒரு குத்துக் குத்தி அவன் காரியத்தை முடித்து விட்டார். (அதனால் அவன் இறந்து விட்டான். இதை அறிந்த மூஸா) ‘‘ இது ஷைத்தானுடைய வேலை. நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான எதிரி'' எனக் கூறினார்.
Kasas 28:16
16. மேலும், ‘‘ என் இறைவனே! நிச்சயமாக நான் எனக்கே தீங்கிழைத்துக் கொண்டேன். நீ என் குற்றத்தை மன்னிப்பாயாக!'' என்று அவர் பிரார்த்தித்தார். ஆகவே, (இறைவனும்) அவருடைய குற்றத்தை மன்னித்து விட்டான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவன், மகா கருணை செய்பவன்.
Kasas 28:17
17. (மேலும் அவர் தன் இறைவனை நோக்கி) ‘‘ என் இறைவனே! என் மீது நீ அருள் புரிந்ததன் காரணமாக (இனி) ஒரு காலத்திலும் நான் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இருக்க மாட்டேன்'' என்று கூறினார்.
Kasas 28:18
18. (அன்றிரவு அவருக்கு நிம்மதியாகவே கழிந்தது. எனினும்) காலையில் எழுந்து அந்நகரத்தில் (தன்னைப் பற்றி என்ன நடந்திருக்கிறதோ என்று) பயந்தவராகக் கவனித்துக் கொண்டிருந்த சமயத்தில், நேற்று இவரிடம் உதவி தேடியவன் (மறுமுறையும் தனக்கு உதவி செய்யுமாறு) கூச்சலிட்டு இவரை அழைத்தான். அதற்கு மூஸா அவனை நோக்கி ‘‘ நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கிறாய்'' என்று நிந்தித்து,
Kasas 28:19
19. (அவனுக்கு உதவி செய்ய விரும்பி) அவனுக்கும் தனக்கும் எதிரியாக இருப்பவனைப் பிடிக்க விரும்பினார். (எனினும், இவருடைய இனத்தான் இவர் தன்னையே பிடிக்க வருவதாய்த் தவறாக எண்ணிப் பயந்து) ‘‘ மூஸாவே! நேற்றைய தினம் ஒரு மனிதனைக் கொலை செய்தது போல் என்னையும் நீர் கொலை செய்யக் கருதுகிறீரா? இவ்வூரில் (நீர் கொலை குற்றம் செய்யும்) வம்பனாக இருக்கக் கருதுகிறீரோ தவிர, சீர்திருத்தும் நல்ல மனிதராக இருக்க நீர் நாடவில்லை'' என்று கூச்சலிட்டான்.
Kasas 28:20
20. (இக்கூச்சல் மக்களிடையே பரவி, நேற்று இறந்தவனைக் கொலை செய்தவர் மூஸாதான் என்று மக்களுக்குத் தெரிந்து இவரைப் பழிவாங்கக் கருதினார்கள்.) அச்சமயம் பட்டிணத்தின் கோடியிலிருந்து ஒரு மனிதர் (விரைவாக) ஓடிவந்து மூஸாவே! ‘‘ மெய்யாகவே உம்மைக் கொலை செய்துவிட வேண்டுமென்று தலைவர்கள் முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால், நீர் (இவ்வூரைவிட்டு) வெளியேறி விடுவீராக. மெய்யாகவே நான் உமது நன்மைக்கே (இதைக்) கூறுகிறேன்'' என்று கூறினார்.
Kasas 28:21
21. ஆகவே, அவர் (தன்னை மக்கள் என்ன செய்யப் போகின்றனரோ என்று) கவலைப்பட்டுப் பயந்தவராக அவ்வூரை விட்டு வெளியேறி, ‘‘ என் இறைவனே! இவ்வக்கிரமக்கார மக்களிடமிருந்து நீ என்னை பாதுகாத்துக் கொள்வாயாக!'' என்று பிரார்த்தித்தார்.
Kasas 28:22
22. அவர் ‘மத்யன்' பக்கம் செல்லக் கருதிய சமயத்தில் (அதன் வழியை அறியாததனால்) ‘‘ என் இறைவன் அதற்குரிய நேரான வழியை எனக்கு அறிவிக்கக்கூடும்'' (என்று தமக்குள்ளாகவே கூறிக்கொண்டு சென்றார்.)
Kasas 28:23
23. (அவ்வாறு சென்ற அவர்) மத்யன் நகரத்தி(ன் வெளியி)லிருந்த ஒரு கிணற்றின் சமீபமாக வந்தபொழுது ஒரு கூட்டத்தினர் (தங்கள் ஆடு, மாடு, ஆகிய கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதையும், அதற்கருகில் இரு பெண்கள் (தங்கள் ஆட்டு மந்தையை) வளைத்து(த் தடுத்து நிறுத்தி)க் கொண்டிருப்பதையும் கண்டு (அப்பெண்களை நோக்கி) ‘‘ உங்கள் விஷயமென்ன? (எதற்காக நீங்கள் தேங்கி நிற்கிறீர்கள்?)'' என்று கேட்டார். அதற்கு அவ்விரு பெண்களும் ‘‘ இம்மேய்ப்பர்கள் (தங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக்கொண்டு இங்கிருந்து) விலகும் வரை நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது. எங்கள் தந்தையோ வயது முதிர்ந்த கிழவர். (அவர் இங்கு வர முடியாததால் நாங்களே இவற்றை ஓட்டி வந்திருக்கிறோம்)'' என்றார்கள்.
Kasas 28:24
24. (இதைச் செவியுற்ற மூஸா) அவ்விரு பெண்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் (இறைத்துப்) புகட்டிவிட்டு(ச் சிறிது) விலகி ஒரு (மரத்தின்) நிழலில் அமர்ந்துகொண்டு ‘‘என் இறைவனே! எதை நீ எனக்குத் தந்தபோதிலும் நிச்சயமாக நான் அதை விரும்பக்கூடியவனாகவே இருக்கிறேன்'' என்று பிரார்த்தித்தார்.
Kasas 28:25
25. அச்சமயம் (அவ்விரு பெண்களில்) ஒருத்தி மிக்க நாணத்துடன் இவர் முன் வந்து ‘‘நீர் எங்க(ள் கால்நடைக)ளுக்குத் தண்ணீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்குக் கொடுக்கும் பொருட்டு மெய்யாகவே என் தந்தை உம்மை அழைக்கிறார்'' என்று கூறி அழைத்துச் சென்றாள். மூஸா அவரிடம் சென்று தன் சரித்திரத்தைக் கூறவே அவர் (இனி) ‘‘ நீர் பயப்பட வேண்டாம். அநியாயக்கார மக்களைவிட்டு நீர் தப்பித்துக் கொண்டீர்'' என்று கூறினார்.
Kasas 28:26
26. (அத்தருணத்தில், அவ்விரு பெண்களில் ஒருத்தி தன் தந்தையை நோக்கி) ‘‘ என் தந்தையே! நீர் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வீராக. நீர் கூலிக்கு அமர்த்தியவர்களிலேயே மிகச் சிறந்தவர் (இந்த) நம்பிக்கைக்குரிய பலசாலியே ஆவார்'' என்று கூறினாள்.
Kasas 28:27
27. அதற்கு அவர் (மூஸாவிடம்) கூறினார்: ‘‘ நீர் எனக்கு எட்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டுமென்ற நிபந்தனையின் மீது இவ்விரு பெண்களில் ஒருத்தியை நான் உமக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறேன். நீர் அதைப் பத்து வருடங்களாக முழுமை செய்தால், அது நீர் எனக்கு செய்யும் நன்றிதான். நான் உமக்கு (அதிகமான) சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால், நீர் என்னை உமக்கு உபகாரியாகவே காண்பீர்'' (என்றார்).
Kasas 28:28
28. அதற்கு மூஸா ‘‘ உமக்கும் நமக்குமிடையே இதுவே (உடன்படிக்கையாகும்). இவ்விரு நிபந்தனைகளில் எதையும் நான் நிறைவேற்றலாம். (இன்னதைத்தான் நிறைவேற்ற வேண்டுமென்று) என்மீது கட்டாயமில்லை. நாம் பேசிக்கொண்ட இவ்வுடன்படிக்கைக்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்'' என்று கூறினார்.
Kasas 28:29
29. மூஸா தன் தவணையை முழுமை செய்து (அவருடைய புதல்விகளில் ஒருத்தியை திருமணம் செய்தார். பிறகு,) தன் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு சென்ற பொழுது (ஓர் இரவு வழி தெரியாது திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில்) தூர் (‘ஸீனாய்' என்னும்) மலையின் பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டு, தன் குடும்பத்தினரை நோக்கி ‘‘ நீங்கள் (சிறிது) தாமதித்து இருங்கள். நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். நான் (அங்கு சென்று நாம் செல்லவேண்டிய) பாதையைப் பற்றி ஒரு தகவலை உங்களுக்குக் கொண்டு வரக்கூடும். அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கேனும் ஒரு எரி கொள்ளியைக் கொண்டு வருகிறேன்'' என்று கூறினார்.
Kasas 28:30
30. அவர் அதனிடம் வந்தபொழுது, மிக்க பாக்கியம் பெற்ற அந்த மைதானத்தின் ஓடையின் வலது பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் இருந்து ‘‘ மூஸாவே! நிச்சயமாக அகிலத்தார்களின் இறைவனான அல்லாஹ் நான்தான்'' என்ற சப்தத்தைக் கேட்டார்.
Kasas 28:31
31. (மேலும்) ‘‘ நீர் உமது தடியை எறிவீராக'' (என்றும் அவருக்குக் கூறப்பட்டது. அவ்வாறே அதை அவர் எறியவே) அது பெரியதொரு பாம்பாகி நெளிவதைக் கண்ட அவர் (பயந்து) அதைப் பின்தொடராது திரும்பி ஓடினார். (அச்சமயத்தில் அவரை நோக்கி) ‘‘ மூஸாவே! பயப்படாதீர். நீர் முன் நோக்கி வருவீராக! நிச்சயமாக நீர் அச்சமற்றவர்.
Kasas 28:32
32. உமது சட்டைப் பையில் உமது கையைப் புகுத்துவீராக. அது மாசற்ற பிரகாசமுள்ள வெண்மையாக வெளிப்படும். நீர் பயப்படாதிருக்கும் பொருட்டு உமது கைகளை உமது விலாவில் சேர்த்துக் கொள்வீராக. ஃபிர்அவ்னிடமும் அவனுடைய தலைவர்களிடமும் நீர் செல்லும் பொருட்டு இவ்விரண்டும் உமது இறைவனால் உமக்கு அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் மக்களாக இருக்கிறார்கள்'' (என்று அவருக்குக் கூறப்பட்டது).
Kasas 28:33
33. அதற்கவர் ‘‘ என் இறைவனே! மெய்யாகவே நான் அவர்களில் ஒருவரைக் கொலை செய்திருக்கிறேன். அதற்கு(ப் பழியாக) என்னை அவர்கள் வெட்டி விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன். (மேலும், என் நாவிலுள்ள கொன்னலின் காரணமாக என்னால் தெளிவாகப் பேசவும் முடிவதில்லை.)
Kasas 28:34
34. என் சகோதரர் ஹாரூனோ என்னைவிட தெளிவாகப் பேசக்கூடியவர். அவரை நீ எனக்கு உதவியாக என்னுடன் அனுப்பிவை. அவர் என்னை உண்மைப்படுத்தி வைப்பார். (நான் தனியே சென்றால்) அவர்கள் என்னைப் பொய்யாக்கி விடுவார்கள் என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்.
Kasas 28:35
35. அதற்கு இறைவன் ‘‘ உமது சகோதரரைக் கொண்டு உமது தோள்களை நாம் வலுப்படுத்துவோம். நாம் உங்களுக்கு வெற்றியையும் தருவோம். ஆகவே அவர்கள் உங்களை நெருங்கவும் முடியாது. நீங்கள் நமது (இந்த)அத்தாட்சிகளுடன் (தயக்கமின்றிச் செல்லுங்கள்.) நீங்களும் உங்கள் இருவரைப் பின்பற்றியவர்களும்தான் வெற்றி பெறுவீர்கள்'' என்று கூறினான்.
Kasas 28:36
36. நம் தெளிவான அத்தாட்சிகளுடன் மூஸா அவர்களிடம் வந்தபொழுது அவர்கள் ‘‘இது கற்பனை செய்யப்பட்ட சூனியத்தைத் தவிர வேறில்லை. முன்னிருந்த எங்கள் மூதாதைகளிடத்திலும் இத்தகைய விஷயத்தை நாம் கேள்விப்படவில்லை'' என்று கூறினார்கள்.
Kasas 28:37
37. அதற்கு மூஸா ‘‘ தன் இறைவனிடமிருந்து நேரான வழியைக் கொண்டு வந்தவன் யார் என்பதையும், நல்ல முடிவு யாருக்குக் கிடைக்கும் என்பதையும் என் இறைவனே நன்கறிவான். நிச்சயமாக (சூனியம் செய்யும்) அநியாயக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்'' என்று கூறினார்.
Kasas 28:38
38. அதற்கு ஃபிர்அவ்ன் (தன் மக்களில் உள்ள தலைவர்களை நோக்கி) ‘‘ தலைவர்களே! என்னைத் தவிர வேறொரு கடவுள் உங்களுக்கு இருப்பதாக நான் அறியவில்லை. ஹாமானே! களிமண்(ணால் செய்த செங்கல்) சூளைக்கு நெருப்பு வை. (அச்செங்கற்களைக் கொண்டு வானளாவ) மாளிகையை நீ கட்டு. (அதில் ஏறி) மூஸாவினுடைய கடவுளை நான் பார்க்க வேண்டும். (அவர் தனக்கு வேறு கடவுள் இருப்பதாகக் கூறுகிறாரே!) இவ்விஷயத்தில் நிச்சயமாக அவர் பொய் சொல்வதாகவே நான் எண்ணுகிறேன்'' என்று கூறினான்.
Kasas 28:39
39. அவனும் அவனுடைய இராணுவங்களும் நியாயமின்றிப் பூமியில் பெருமை அடித்தனர், நிச்சயமாக அவர்கள் நம்மிடம் (விசாரணைக்காக) கொண்டுவரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டனர்.
Kasas 28:40
40. ஆதலால், நாம் அவனையும் அவனுடைய இராணுவங்களையும் பிடித்து அவர்களை கடலில் எறிந்து (மூழ்கடித்து) விட்டோம். (நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை நீர் கவனிப்பீராக.
Kasas 28:41
41. (அவர்கள் இவ்வுலகத்தில் இருந்தவரை மனிதர்களை) நரகத்திற்கு அழைக்கக்கூடிய தலைவர்களாகவே அவர்களை ஆக்கிவைத்தோம். மறுமை நாளிலோ அவர்களுக்கு எத்தகைய உதவியும் கிடைக்காது.
Kasas 28:42
42. இவ்வுலகில் நம் சாபம் அவர்களைப் பின்பற்றும்படி செய்தோம். மறுமை நாளிலோ அவர்களுடைய நிலைமை மிக்க கேடானதாகவே இருக்கும்.
Kasas 28:43
43. (அவர்களுக்கு) முன்னிருந்த வகுப்பார்களையும் நாம் அழித்துவிட்ட பின்னர் (அவர்களுடைய வேதங்களும் அழிந்து விட்டதனால்) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். அது மனிதர்களுக்கு நல்ல படிப்பினை தரக்கூடியதாகவும், நேரான வழியாகவும், அருளாகவும் இருந்தது. அவர்கள் (இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவார்களாக!
Kasas 28:44
44. (நபியே! தூர் ஸீனாய் என்னும் மலையில்) நாம் மூஸாவுக்குக் (கற்பலகையில் எழுதப்பட்ட) கட்டளைகளை விதித்தபோது நீர் அதன் மேற்குத் திசையிலும் இருக்கவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிலும் நீர் இருக்கவில்லை.
Kasas 28:45
45. எனினும், (அவர்களுக்குப் பின்னர்) எத்தனையோ வகுப்பினரை நாம் உற்பத்தி செய்தோம். அவர்கள் சென்றும் நீண்ட காலம் ஆகிவிட்டது. (அவ்வாறிருந்தும் மூஸாவைப் பற்றிய இவ்வளவு உண்மையான சரித்திரத்தை நீர் கூறுவதெல்லாம் இறைவனால் உமக்கு அறிவிக்கப்பட்டதால்தான் என்று இவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?) மேலும், (நபியே!) மத்யன் வாசிகளிடமும் நீர் தங்கியிருக்கவில்லை. (அவ்வாறிருந்தும் அவர்களைப் பற்றிய) நம் வசனங்களை நீர் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறீர். ஆகவே, நிச்சயமாக நாம் உம்மை நம் தூதர்களில் ஒருவராகவே அனுப்பிவைத்திருக்கிறோம். (நம் வஹ்யி மூலம் கிடைத்த விஷயங்களையே நீர் அவர்களுக்கு அறிவிக்கிறீர்.)
Kasas 28:46
46. மேலும், (தூர் ஸீனாய் என்னும் மலைக்கு மூஸாவை) நாம் அழைத்த பொழுது (அந்தத்) தூர் (என்னும்) மலையின் அருகிலும் நீர் இருக்கவில்லை. எனினும், உமக்கு முன்னர் (நமது) தூதர் ஒருவருமே வராத (இந்த) மக்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் பொருட்டே உமது இறைவனின் அருளால் (இவ்விஷயம் உமக்கு அறிவிக்கப்பட்டது). அவர்கள் (இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவார்களாக!
Kasas 28:47
47. (நபியே! உமது மக்களாகிய) இவர்களின் கைகள் செய்த (தீய) செயலின் காரணமாக இவர்களை ஒரு வேதனை வந்தடையும் சமயத்தில் ‘‘ எங்கள் இறைவனே! எங்களிடம் ஒரு தூதரை அனுப்பி வைக்க வேண்டாமா? (அவ்வாறு நீ அனுப்பியிருந்தால்) உன் வசனங்களை நாங்கள் பின்பற்றி (உன்னை) நம்பிக்கை கொண்டிருப்போமே'' என்று கூறாதிருக்கும் பொருட்டே (உம்மை நம் தூதராக இவர்களிடம் அனுப்பிவைத்தோம்).
Kasas 28:48
48. எனினும், இத்தகைய உண்மை (விஷயங்களையுடைய சத்திய வேதம்) நம்மிடமிருந்து இவர்களிடம் வந்த சமயத்தில் (இதை நம்பிக்கை கொள்வதற்குப் பதிலாக) இவர்கள் ‘‘ மூஸாவுக்கு கொடுக்கப்பட்ட அற்புதங்களைப் போல் இவருக்கும் கொடுக்கப்பட வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். (என்னே!) இதற்கு முன்னர் மூஸாவுக்குக் கொடுக்கப்பட்ட அற்புதங்களையும் இவர்(களின் மூதாதை)கள் நிராகரித்து விடவில்லையா? ‘‘ (மூஸாவும், ஹாரூனும்) ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் சூனியக்காரர்கள் என்று இவர்கள் கூறியதுடன், நிச்சயமாக நாங்கள் இவ்விருவரையும் நிராகரித்து விட்டோம்'' என்றும் கூறினார்கள்.
Kasas 28:49
49. ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) ‘‘ மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், அல்லாஹ்விடமிருந்து வந்த வேதங்களில் (மூஸாவுடைய வேதம், இன்னும் திரு குர்ஆன் ஆகிய) இவ்விரண்டையும் விட நேரான வழியை அறிவிக்கக்கூடிய ஒரு வேதத்தை நீங்கள் கொண்டு வாருங்கள். நானும் அதைப் பின்பற்றுகிறேன்'' என்று கூறுவீராக.
Kasas 28:50
50. உமக்கு அவர்கள் பதில் சொல்லாவிடில், நிச்சயமாக அவர்கள் தங்கள் சரீர இச்சையையே பின்பற்றுகிறார்கள் என்று உறுதியாக நீர் அறிந்து கொள்வீராக. அல்லாஹ்வுடைய நேரான வழியை தவிர்த்து விட்டுத் தன் சரீர இச்சையைப் பின்பற்றுபவனை விட வழிகெட்டவன் எவனுமுண்டோ! நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.
Kasas 28:51
51. அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு நம் வசனத்தை மேன்மேலும் அவர்களுக்கு (இறக்கி)ச் சேர்ப்பித்தே வந்தோம்.
Kasas 28:52
52. ஆகவே, இதற்கு முன்னர் எவர்களுக்கு நாம் (நம்) வேதத்தைக் கொடுத்தோமோ, அவர்கள் இதை உண்மையாகவே நம்பிக்கை கொள்கிறார்கள்.
Kasas 28:53
53. அவர்கள் மீது (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதற்கவர்கள் ‘‘ இதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். நிச்சயமாக இது எங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மை(யான வேதம்)தான். இதற்கு முன்னதாகவே நிச்சயமாக நாங்கள் இதை (எங்கள் வேதத்தின் மூலம் அறிந்து) ஏற்றுக் கொண்டிருக்கிறோம்'' என்று கூறுவார்கள்.
Kasas 28:54
54. இவர்கள் உறுதியாக இருந்ததன் காரணத்தால், இரண்டு தடவைகள் அவர்களுக்கு (நற்)கூலி கொடுக்கப்படும். இவர்கள், தீய காரியங்களை நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவற்றில் இருந்து அவர்கள் தானமும் செய்வார்கள்.
Kasas 28:55
55. மேலும், அவர்கள் வீணான வார்த்தைகளைக் கேள்வியுற்றால் (அதில் சம்பந்தப்படாது) அதைப் புறக்கணித்து விட்டு ‘‘ எங்கள் காரியங்கள் எங்களுக்கும், உங்கள் காரியங்கள் உங்களுக்கும் (பெரியது). உங்களுக்கு ‘ஸலாம்.' அறியாதவர்களை (அவர்களிடம் தர்க்கிக்க) நாங்கள் விரும்புவதில்லை'' என்று கூறுவார்கள்.
Kasas 28:56
56. (நபியே!) நிச்சயமாக இவர்களில் நீர் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உம்மால் முடியாது. எனினும் அல்லாஹ், தான் விரும்பியவர்களை(த்தான்) நேரான வழியில் செலுத்துகிறான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.
Kasas 28:57
57. (நபியே! மக்காவாசிகளான) இவர்கள் (உம்மை நோக்கி) ‘‘ நாங்கள் உம்முடன் இந்த குர்ஆனைப் பின்பற்றினால், எங்கள் ஊரில் இருந்த நாங்கள் (இறாய்ஞ்சித்) தூக்கிச் செல்லப்பட்டு விடுவோம்'' என்று கூறுகின்றனர். (இவர்கள் சிந்திக்க வேண்டாமா?) அபயமளிக்கும் மிக்க கண்ணியமான இடத்தில் (இவர்கள் வசித்திருக்க) இவர்களுக்கு நாம் வசதி அளிக்கவில்லையா? ஒவ்வொரு கனிவர்க்கமும் உணவாக நம்மிடமிருந்து அங்கு வந்து குவிந்து கொண்டே இருக்கிறது. எனினும், இவர்களில் பெரும்பாலானவர்கள் (இதன் நன்றியை) அறிய மாட்டார்கள்.
Kasas 28:58
58. (இவர்களைப் போன்று) தன் வாழ்க்கைத் தரத்தால் கொழுத்துத் திமிர் பிடித்த எத்தனையோ ஊரார்களை நாம் அழித்திருக்கிறோம். இதோ! (பாருங்கள்.) இவை அனைத்தும் அவர்கள் வசித்திருந்த இடங்கள்தான். சொற்ப இடங்களைத் தவிர அவற்றில் பல அவர்களுக்குப் பின்னர் வசிக்கப்படவில்லை. நாம்தான் (அவற்றுக்கு) வாரிசுகளாக இருக்கிறோம்.
Kasas 28:59
59. (நபியே!) உமது இறைவன் (தன்) தூதரை (மக்களின்) தலை நகரங்களுக்கு அனுப்பி, அவர்களுக்கு நம் வசனங்களை அவர் ஓதிக் காண்பிக்காத வரை எவ்வூராரையும் அழிப்பதில்லை. எந்த ஊராரையும் அவர்கள் அநியாயம் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே தவிர நாம் அழிக்கவில்லை.
Kasas 28:60
60. (நபியே! கூறுவீராக:) உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பவை எல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள அற்ப சுகமும், அதனுடைய அலங்காரமும்தான். (எனினும்,) அல்லாஹ் விடத்தில் இருப்பவையோ மிக்க மேலானவையும் நிலையானவையும் ஆகும். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
Kasas 28:61
61. எவனுக்கு நாம் (மறுமையில்) நன்மை தருவதாக வாக்களித்து அதை அவன் அடையக்கூடியவனாகவும் இருக்கிறானோ அவன், எவனுக்கு நாம் இவ்வுலகத்தில் அற்ப சுகத்தை அனுபவிக்கும்படி விட்டுவைத்துப் பின்னர் மறுமையில் (அதற்குக் கணக்குக் கொடுக்கும்படி) நம்மிடம் பிடித்துக் கொண்டு வரப்படுவானோ அவனைப் போலாவானா? (இவ்விருவரும் சமமாக மாட்டார்கள்.)
Kasas 28:62
62. (இறைவன்) அவர்களை (விசாரணைக்காக) அழைக்கும் நாளில் (அவர்களை நோக்கி ‘‘ பொய்யான தெய்வங்களை) எனக்கு இணையானவை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களே! அவை எங்கே?'' என்று கேட்பான்.
Kasas 28:63
63. (இணைவைக்கும்படி செய்து வழிகெடுத்தவர்களில்) எவர்கள் மீது நம் தண்டனை விதிக்கப்பட்டு விட்டதோ அவர்கள் (இறைவனை நோக்கி) ‘‘ எங்கள் இறைவனே! நாங்கள் வழி கெடுத்தவர்கள் இவர்கள்தான். (எனினும், எவருடைய நிர்ப்பந்தமுமின்றி) எவ்வாறு நாங்கள் வழி கெட்டோமோ அவ்வாறே இவர்களையும் (எவ்வித நிர்ப்பந்தமுமின்றியே) வழி கெடுத்தோம். ஆதலால், உன்னிடம் (அவர்களுடைய பொறுப்பிலிருந்து) நாங்கள் விலகிக் கொள்கிறோம். அவர்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவும் இல்லை'' என்று கூறுவார்கள்.
Kasas 28:64
64. பின்னர், தங்கள் பொய்யான தெய்வங்களை (உதவிக்கு) அழைக்கும் படி அவர்களுக்குக் கூறப்பட்டு, அவ்வாறே அவர்கள் அவற்றையும் அழைப்பார்கள். எனினும், அவை இவர்களுக்கு (வாய் திறந்து) பதிலும் கொடுக்கா. (அதற்குள்ளாக) இவர்கள் தங்கள் வேதனையைக் கண்டு கொள்வார்கள். இவர்கள் நேரான வழியில் சென்றிருந்தால் (இக்கதிக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்...)
Kasas 28:65
65. அவர்கள் (விசாரணைக்காக) அழைக்கப்படும் நாளில், (அவர்களை நோக்கி, நேரான வழியில் அழைக்க உங்களிடம் வந்த நம்) தூதர்களுக்கு நீங்கள் என்ன பதில் கூறினீர்கள்?'' என்று கேட்கப்படும்.
Kasas 28:66
66. அந்நேரத்தில் எல்லா விஷயங்களையும் அவர்கள் மறந்து தடுமாறி (எதைப் பற்றியும்) ஒருவர் ஒருவரைக் கேட்க சக்தியற்றுப் போவார்கள்.
Kasas 28:67
67. எனினும், (இவர்களில்) எவர்கள் கைசேதப்பட்டு (பாவத்தில் இருந்து) விலகி, மன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் வெற்றி அடைந்தவர்களில் சேர்ந்து விடுவார்கள்.
Kasas 28:68
68. (நபியே!) உமது இறைவன், தான் விரும்பியவர்களை படைத்து(த் தன் தூதுக்காக அவர்களில்) தான் விரும்பியவர்களைத் தேர்ந்தெடுக்கிறான். (அவ்வாறு தூதரைத்) தேர்ந்தெடுப்பதில் இவர்களுக்கு எத்தகைய உரிமையும் இல்லை. இவர்கள் இணை வைப்பவற்றிலிருந்து அல்லாஹ் மிக்க உயர்ந்தவனும் பரிசுத்தமானவனும் ஆவான்.
Kasas 28:69
69. உமது இறைவன் அவர்களுடைய உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவான்.
Kasas 28:70
70. அவன்தான் அல்லாஹ்; அவனைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் இல்லவே இல்லை. இம்மையிலும், மறுமையிலும் புகழ் அனைத்தும் அவனுக்கே உரியன! (மறுமையில் தீர்ப்பு கூறும்) அதிகாரமும் அவனுக்கே உரியது! ஆதலால், (மறுமையில்) நீங்கள் (அனைவரும்) அவனிடமே கொண்டுவரப்படுவீர்கள்.
Kasas 28:71
71. (நபியே!) நீர் கேட்பீராக: ‘‘ இரவை மறுமை நாள் வரை உங்கள் மீது நீண்டிருக்கும்படி அல்லாஹ் செய்து விட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு ஒருவன் இருக்கிறானா?'' (இக்கேள்வியை) நீங்கள் செவியுற வேண்டாமா?
Kasas 28:72
72. (மேலும் நபியே!) நீர் கேட்பீராக: ‘‘ பகலை இறுதி நாள் வரை உங்களுக்கு நீண்டிருக்கும்படி அல்லாஹ் செய்து விட்டால், நீங்கள் இளைப்பாறக்கூடிய இரவை உங்களுக்குக் கொண்டு வரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறொருவன் இருக்கிறானா?'' (இதை) நீங்கள் (படிப்பினை பெறும் கண்கொண்டு) பார்க்க வேண்டாமா?
Kasas 28:73
73. (அவ்வாறின்றி) நீங்கள் இளைப்பாறுவதற்கு இரவையும் (பல இடங்களுக்குச் சென்று வாழ்க்கைக்குத் தேவையான) அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்ளும் பொருட்டு பகலையும் உங்களுக்கு அவன் ஏற்படுத்தி இருப்பதற்கு அவனுடைய அருள்தான் காரணம். இதற்கு நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக!
Kasas 28:74
74. (நபியே!) அல்லாஹ் அவர்களை (விசாரணைக்காக) அழைத்து, ‘‘ எனக்கு இணையானவை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களே அவை எங்கே?'' என்று கேட்கும் நாளை அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக.
Kasas 28:75
75. ஒவ்வொரு வகுப்பாரிலிருந்தும் (நம் தூதர்களை) அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக அழைத்துக் கொண்டு (அவர்களை நோக்கி ‘‘ என்னையன்றி பிற படைப்புகளை தெய்வங்களென நீங்கள் கூறிக் கொண்டிருந்தீர்களே) அதற்குரிய உங்கள் அத்தாட்சிகளைக் கொண்டு வாருங்கள்'' என்று நாம் கூறும் சமயத்தில், அவர்கள் பொய்யாகக் கூறிக் கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் மறைந்து, உண்மை(யான இறைத் தன்மை) அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானதென்பதை அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.
Kasas 28:76
76. காரூன் (என்பவன்) மூஸாவுடைய சமுதாயத்தில் உள்ளவனாக இருந்தான். எனினும், அவர்கள் மீது அவன் அநியாயங்கள் செய்யத் தலைப்பட்டான். ஏராளமான பொக்கிஷங்களை நாம் அவனுக்குக் கொடுத்திருந்தோம். அவற்றின் சாவிகளை மாத்திரம் பலசாலிகளான எத்தனையோ பேர்கள் மிக்க சிரமத்தோடு சுமக்க வேண்டியிருந்தது. (இத்தகைய நிலையில் அவனை நோக்கி) அவனுடைய மக்கள் ‘‘ நீ (கர்வத்துடன்) மகிழ்ச்சி அடையாதே! (கர்வம் கொண்டு) மகிழ்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை'' என்றும்,
Kasas 28:77
77. ‘‘ (உன்னிடம் இருக்கும் பொருள்களை எல்லாம் அல்லாஹ்வே உனக்குக் கொடுத்தான். ஆகவே) அல்லாஹ் உனக்கு கொடுத்திருப்பதில் (தானம் செய்து) மறுமை வீட்டைத் தேடிக்கொள். இம்மையில் (தானம் செய்து நீ தேடிக் கொண்டதுதான்) உன் பாகம் என்பதை நீ மறந்துவிடாதே! அல்லாஹ் உனக்கு(க் கொடுத்து) உதவி செய்தவாறு அதை(க் கொண்டு பிறருக்கு) நீயும் (தானம் செய்து) உதவி செய். பூமியில் நீ விஷமம் செய்ய விரும்பாதே! ஏனென்றால், விஷமிகளை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை'' என்றும் கூறினார்கள்.
Kasas 28:78
78. அதற்கவன் ‘‘ (என்னிடம் இருக்கும்) பொருள்களை எல்லாம் என் சொந்த அறிவி(ன் திறமையி)னால்தான் நான் அடைந்தேன். (இதில் அல்லாஹ்வின் அருள் ஒன்றுமில்லை)'' என்று (பதில்) கூறினான். இவனுக்கு முன்னிருந்த கூட்டத்தார்களில் இவனைவிட பலசாலிகளாகவும், இவனைவிட அதிகப் பொருள் உடையவர்களாகவும் இருந்த எத்தனையோ பேர்களை அல்லாஹ் நிச்சயமாக அழித்திருக்கிறான் என்பதை இவன் அறியவில்லையா? குற்றவாளிகளிடம் அவர்களின் பாவங்களைப் பற்றி கேட்கப்பட மாட்டாது. (அதற்குரிய தண்டனையை அவர்கள் அடைந்தே தீருவார்கள்.)
Kasas 28:79
79. அவன் (ஒரு நாள் மிக்க ஆடம்பரமான) தன் அலங்காரத்துடன் தன் மக்கள் முன் சென்றான். (அதைக் கண்ணுற்றவர்களில்) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையை (பெரிதென) விரும்பியவர்களாக இருந்தார்களோ அவர்கள் ‘‘ காரூனுக்கு கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட வேண்டுமே! நிச்சயமாக அவன் பெரும் பாக்கியவான்'' என்று கூறினார்கள்.
Kasas 28:80
80. எனினும், அவர்களில் எவர்களுக்கு மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டிருந்ததோ அவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘ உங்களுக்கு என்ன கேடு? (இவ்வாறு ஏன் கூறுகிறீர்கள்?) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கு (மறுமையில்) அல்லாஹ் கொடுக்கும் கூலியோ (இதை விட) எவ்வளவோ மேலானது. அதைப் பொறுமையாளர்களைத் தவிர (மற்ற எவரும்) அடைய மாட்டார்கள்'' என்று கூறினார்கள்.
Kasas 28:81
81. அவனையும், அவனுடைய மாளிகையையும் பூமியில் சொருகி விட்டோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யக்கூடிய கூட்டத்தார் ஒருவரும் அவனுக்கு இருக்கவில்லை. அல்லது அவன் தன்னைத்தானே (அல்லாஹ்வின் பிடியிலிருந்து) காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.
Kasas 28:82
82. நேற்றைய தினம் அவனுடைய பதவியை விரும்பியவர்களெல்லாம் (அவனும், அவனுடைய மாளிகையும் பூமியில் சொருகிப்போனதைக் கண்ணுற்றதும் திடுக்கிட்டு நாணமுற்று) என்ன நேர்ந்தது! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கிறான்; (அவன் விரும்பியவர்களுக்கு) குறைத்தும் விடுகிறான் என்றும், (மனிதனுடைய சாமர்த்தியத்தால் மட்டும் ஒன்றும் ஆவதில்லை என்றும்) தெரிகின்றதே! அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்காவிடில் அவ்வாறே நம்மையும் பூமியில் சொருகி இருப்பான். (என்று கூறினர். பிறகு திடுக்கிட்டு, நாணமுற்று) என்ன நேர்ந்தது! நிச்சயமாக (இறைவனின் அருட்கொடையை மறுக்கும்) நன்றி கெட்டவர்கள் வெற்றி அடையவே மாட்டார்கள் என்று தெரிகின்றதே! என்று கூற ஆரம்பித்தார்கள்.
Kasas 28:83
83. (மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ, பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். முடிவான நற்பாக்கியம் இறையச்சம் உடையவர்களுக்குத்தான் உண்டு.
Kasas 28:84
84. (உங்களில்) எவரேனும் ஒரு நன்மையை(ச் செய்தால், அவருக்கு அதைவிட மேலான கூலியே கிடைக்கும். உங்களில் எவர்கள் பாவத்தை செய்வார்களோ அவர்கள் தாங்கள் செய்த பாவங்களின் அளவே தவிர (அதற்கதிகமாகத்) தண்டிக்கப்பட மாட்டார்கள்.
Kasas 28:85
85. (நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனின் கட்டளைகளை உம் மீது விதித்து இருக்கிறானோ அவன் நிச்சயமாக உம்மை (மக்காவாகிய) உமது இல்லத்தில் திரும்பச் சேர்த்து வைப்பான். ஆகவே, (நபியே!) கூறுவீராக: நேரான வழியைக் கொண்டு வந்தவர் யார்? (அதை மறுத்துப்) பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர் யார்? என்பதை என் இறைவன் நன்கறிவான்.
Kasas 28:86
86. (நபியே!) இவ்வேதம் உமக்குக் கொடுக்கப்படும் என்று நீர் எதிர்பார்த்திருக்கவில்லை. எனினும் உமது இறைவனின் அருளினால்தான் (இது உமக்கு கொடுக்கப்பட்டது). ஆகவே, நிச்சயமாக நீர் நிராகரிப்பவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டாம்.
Kasas 28:87
87. இவ்வேதம் உமக்கு அருளப்பட்ட பின் (இதிலுள்ள) அல்லாஹ்வுடைய வசனங்களி(ன் பக்கம் நீர் மக்களை அழைப்பதி)லிருந்து அவர்கள் உம்மை தடுத்துவிட வேண்டாம். ஆகவே, உமது இறைவன் பக்கம் (நீர் அவர்களை) அழைத்துக் கொண்டேயிருப்பீராக. நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்களுடன் சேர்ந்து விட வேண்டாம்.
Kasas 28:88
88. (நபியே!) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுளை நீர் அழைக்க வேண்டாம். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு கடவுள் இல்லவே இல்லை. அவனது திருமுகத்தைத் தவிர எல்லா பொருள்களும் அழிந்துவிடக் கூடியனவே. எல்லா அதிகாரங்களும் அவனுக்குரியனவே. அவனிடமே நீங்கள் அனைவரும் கொண்டு வரப்படுவீர்கள்.
Ankebut 29:1
1. அலிஃப் லாம் மீம்.
Ankebut 29:2
2. மனிதர்கள் ‘‘ நாங்கள் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதைப் பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா?
Ankebut 29:3
3. இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கிறோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறுகின்ற) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்து கொள்வான்.
Ankebut 29:4
4. அல்லது பாவங்களைச் செய்பவர்கள் (தண்டனை அடையாது) நம்மை விட்டுத் தப்பித்துக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் இதைப் பற்றிய) அவர்களுடைய தீர்மானம் மகா கெட்டது.
Ankebut 29:5
5. எவர்கள் அல்லாஹ்வைச் சந்திப்போம் என நம்புகிறார்களோ அவர்கள் (அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால்) அதற்காக அல்லாஹ் ஏற்படுத்திய தவணை நிச்சயமாக வந்தே தீரும். அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவான்.
Ankebut 29:6
6. (அல்லாஹ்வுடைய வழியில்) எவரேனும் கடின முயற்சி மேற்கொண்டால், நிச்சயமாக அவர் தன் நலனுக்காகவே முயன்றவராகிறார். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் (உதவி) தேவையற்றவன்.
Ankebut 29:7
7. ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய பாவத்திற்கு (அவற்றைப்) பரிகாரமாக்கி வைத்து அவர்கள் செய்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.
Ankebut 29:8
8. தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கிறோம். (எனினும், கடவுள் என்பதற்கு) எவ்வித ஆதாரமும் இல்லாதவற்றை எனக்கு இணையாக்கும்படி (மனிதனே!) அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவர்களுக்கு கீழ்ப்படியாதே! என்னிடமே நீங்கள் திரும்ப வேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி (நன்மையா தீமையா என்பதை) அச்சமயம் நான் உங்களுக்கு அறிவித்துவிடுவேன்.
Ankebut 29:9
9. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நல்லவர்களுடன் சேர்த்துவிடுவோம்.
Ankebut 29:10
10. மனிதர்களில் சிலர் இருக்கின்றனர்: அவர்கள் ‘‘ நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறோம்'' என்று கூறுகின்றனர். எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வழியில் ஏதும் துன்பம் ஏற்பட்டால், மக்களால் ஏற்படும் அத்துன்பத்தை அல்லாஹ்வுடைய வேதனையைப் போல் (மிகப் பெரிதாக) ஆக்கி (உங்களிடமிருந்து விலகி)க் கொள்(ள விரும்பு)கின்றனர். உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஒரு உதவி கிடைத்தால் ‘‘ நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருந்தோம்'' என்று கூறுகின்றனர். உலகத்தாரின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இல்லையா?
Ankebut 29:11
11. ஆகவே, இவர்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்கள் எவர்கள் என்பதையும் அவன் நன்கறிவான்.
Ankebut 29:12
12. நிராகரிப்பவர்கள், நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘ நீங்கள் எங்கள் வழியைப் பின்பற்றுங்கள். (அதனால் ஏதும் குற்றங்குறைகள் ஏற்பட்டால்) உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்'' என்று கூறுகின்றனர். எனினும், அவர்களின் (நம்பிக்கையாளர்களின்) குற்றங்களிலிருந்து எதையுமே அவர்கள் (-நிராகரிப்பவர்கள்) சுமந்துகொள்ள மாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!
Ankebut 29:13
13. ஆயினும், அவர்கள் தங்கள் பாவச் சுமைகளையும் இன்னும் தங்கள் பாவச் சுமைகளுடன் (மனிதர்களை வழி கெடுத்த) பாவச்சுமைகளையும் நிச்சயமாக சுமப்பார்கள். மேலும், அவர்கள் இவ்வாறு பொய்யாகக் கற்பனை செய்து கூறிக்கொண்டிருந்ததைப் பற்றியும் நிச்சயமாக அவர்கள் மறுமை நாளில் கேட்கப்படுவார்கள்.
Ankebut 29:14
14. நூஹ் நபியை நம் தூதராக அவருடைய மக்களிடம் நாம் அனுப்பி வைத்தோம். அவர் ஐம்பது குறைய ஓராயிரம் வருடங்கள் அவர்களிடையே இருந்தார். (இவ்வளவு காலமிருந்தும் அவரை அவருடைய மக்களில் சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இவ்வாறு) அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்ததனால் வெள்ளப் பிரளயம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
Ankebut 29:15
15. எனினும், அவரையும் (அவருடைய) கப்பலில் இருந்தவர்களையும் நாம் பாதுகாத்துக் கொண்டு இச்சம்பவத்தை உலகத்தாருக்கு நாம் ஒரு படிப்பினையாக ஆக்கினோம்.
Ankebut 29:16
16. இப்றாஹீமை (நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பிவைத்த சமயத்தில்) அவர் தன் மக்களை நோக்கி ‘‘ நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்கி அவனையே நீங்கள் அஞ்சி நடங்கள். நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் இதுவே உங்களுக்கு மிக்க நல்லதாகும்'' (என்பதை அறிந்து கொள்வீர்கள்).
Ankebut 29:17
17. தவிர, அல்லாஹ்வை அன்றி சிலைகளைத்தான் நீங்கள் வணங்குகிறீர்கள். நீங்கள் பொய்யை கற்பனை செய்கிறீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கும் இவை உங்களுக்கு உணவளிக்க சிறிதும் சக்தியற்றவை. ஆகவே, (உங்களுக்கு வேண்டிய) உணவை அல்லாஹ்விடமே கோரி, அவ(ன் ஒருவ)னையே வணங்கி, அவனுக்கு நன்றி செலுத்தியும் வாருங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்'' என்றும் கூறினார்.
Ankebut 29:18
18. (இப்றாஹீமே! மக்களை நோக்கி நீர் கூறுவீராக:) ‘‘ நீங்கள் (என்னைப்) பொய்யாக்கினால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) உங்களுக்கு முன்னுள்ள மக்களும் (தங்களிடம் வந்த தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கி இருக்கின்றனர். நம் தூதை (மக்களுக்கு)ப் பகிரங்கமாக எடுத்துரைப்பதைத் தவிர அவர்(களை நிர்ப்பந்திப்பது) அத்தூதர் மீது கடமையில்லை.
Ankebut 29:19
19. (ஒன்றுமில்லாதிருந்த) படைப்புகளை அல்லாஹ் எவ்வாறு ஆரம்பத்தில் வெளியாக்கினான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (அவ்வாறே மரணித்த) பின்னரும் அவற்றை மீளவைப்பான். நிச்சயமாக இ(வ்வாறு செய்வ)து அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே!'' (என்று கூறினார்).
Ankebut 29:20
20. (மேலும், மனிதர்களை நோக்கிக் கூறும்படி இப்றாஹீமுக்கு கட்டளையிட்டோம்.) கூறுவீராக! பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள். ஆரம்பத்தில் படைப்புகளை எவ்வாறு உற்பத்தி செய்கிறான். (அவ்வாறே மரணித்த) பின்னரும் அல்லாஹ் (மறுமையில்) மறுமுறையும் உற்பத்தி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுள்ளவன்.
Ankebut 29:21
21. அவன் நாடியவர்களை வேதனை செய்வான்; அவன் நாடியவர்களுக்கு அருள்புரிவான். அவனளவிலேயே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.''
Ankebut 29:22
22. (அவன் உங்களை வேதனை செய்ய விரும்பினால்) வானத்திலோ பூமியிலோ (ஒளிந்து கொண்டு) நீங்கள் அவனைத் தோற்கடித்துவிட முடியாது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு ஒரு பாதுகாவலனுமில்லை; உதவி செய்பவனுமில்லை.
Ankebut 29:23
23. ‘‘ எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்து அவனைச் சந்திப்பதையும் மறுக்கின்றனரோ, அவர்கள் எனது அருளைப் பற்றி நம்பிக்கை இழந்து விடுவார்கள். அவர்களுக்கு நிச்சயமாகத் துன்புறுத்தும் வேதனையுண்டு.''
Ankebut 29:24
24. (இவ்வாறெல்லாம் இப்றாஹீம் நபி தன் மக்களுக்குக் கூறியதற்கு) ‘‘இவரை வெட்டி விடுங்கள்; அல்லது நெருப்பில் எரித்து விடுங்கள்'' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறு விதத்தில்) பதில் கூற அவருடைய மக்களால் முடியாது போயிற்று. (பின்னர் இப்றாஹீமை நெருப்பில் எறிந்தார்கள்.) ஆகவே, (அந்)நெருப்பிலிருந்து அல்லாஹ் அவரை காப்பாற்றினான். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Ankebut 29:25
25. (மேலும், இப்றாஹீம் அவர்களை நோக்கி) ‘‘ நீங்கள் அல்லாஹ்வை அன்றி இந்த சிலைகளைத் தெய்வமாக எடுத்துக் கொண்டதற்கெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் உங்களுக்கிடையில் (ஒருவருக்கு மற்றவருடன்) உள்ள சிநேக மனப்பான்மைதான் காரணமாகும். பின்னர், மறுமையிலோ உங்களில் ஒருவர் மற்றவரை நிராகரித்து விட்டு உங்களில் ஒருவர் மற்றவரை (நிந்தித்துச்) சபிப்பார். (முடிவில்) நீங்கள் அனைவரும் செல்லும் இடம் (நரகத்தின்) நெருப்புத்தான். அங்கு உங்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமிரார்'' என்று கூறினார்.
Ankebut 29:26
26. (இப்றாஹீம் இவ்வளவு கூறியும்) லூத் (நபி) ஒருவர் மட்டுமே அவரை நம்பிக்கை கொண்டார். (ஆகவே, இப்றாஹீம் அவரை நோக்கி) ‘‘ நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (என் இந்த ஊரை விட்டுச்) செல்கிறேன். நிச்சயமாக அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்'' என்று கூறினார்.
Ankebut 29:27
27. ஆகவே, அவருக்கு இஸ்ஹாக்கையும், யஅகூபையும் (சந்ததிகளாகக்) கொடுத்து அவருடைய சந்ததிகளுக்கே நபிப்பட்டத்தையும் வேதத்தையும் சொந்தமாக்கி, அவருக்கு அவருடைய கூலியை இம்மையிலும் கொடுத்தோம். மறுமையிலோ நிச்சயமாக அவர் நல்லவர்களில்தான் இருப்பார்.
Ankebut 29:28
28. லூத்தையும் (நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம்.) அவர் தன் மக்களை நோக்கி ‘‘ உங்களுக்கு முன்னர் உலக மனிதர்களில் ஒருவருமே செய்திராத மானக்கேடான ஒரு காரியத்தை நிச்சயமாக நீங்கள் செய்கிறீர்கள்.
Ankebut 29:29
29. (பெண்களை விட்டு விட்டு) ஆண்களிடம் (மோகம் கொண்டு) செல்கிறீர்கள்; (பயணிகளை) வழிமறித்துக் கொள்ளை அடிக்கிறீர்கள். (மக்கள் நிறைந்த) உங்கள் சபைகளிலும் (பகிரங்கமாகவே) மிக்க வெறுக்கத்தக்க காரியத்தைச் செய்கிறீர்களே!'' என்று கூறினார். அதற்கவர்கள் ‘‘ மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் அல்லாஹ்வுடைய வேதனையை எங்களிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறியதைத் தவிர (வேறொன்றும்) அவருடைய மக்கள் பதில் கூறவில்லை.
Ankebut 29:30
30. அதற்கவர் ‘‘ என் இறைவனே! விஷமம் செய்யும் இந்த மக்களுக்கு விரோதமாக நீ எனக்கு உதவிபுரிவாயாக!'' என்று பிரார்த்தித்தார்.
Ankebut 29:31
31. (வானவர்களாகிய) நம் தூதர்கள், இப்றாஹீமுக்கு (இஸ்ஹாக் நபியின் பிறப்பைப் பற்றி) நற்செய்தி கூற அவரிடம் வந்த சமயத்தில் (அவரை நோக்கி ‘‘ லூத்துடைய) இந்த ஊராரை நிச்சயமாக நாங்கள் அழித்துவிடுவோம். ஏனென்றால், நிச்சயமாக அவ்வூரார் (பாவம் செய்வதில் எல்லை கடந்து) அநியாயக்காரர்களாக ஆகிவிட்டார்கள்'' என்று கூறினார்கள்.
Ankebut 29:32
32. அதற்கவர் (அவ்வானவர்களை நோக்கி) ‘‘ நிச்சயமாக அதில் லூத்தும் இருக்கிறாரே!'' என்று கூறினார். அதற்கவர்கள் ‘‘ அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம். அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நிச்சயமாக நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம். அவருடைய மனைவி (அவருடன் செல்லாது அழிந்து போகக்கூடிய அவ்வூராருடன்) தங்கி (அவர்களுடன் அவளும் அழிந்து) விடுவாள்'' என்று கூறினார்கள்.
Ankebut 29:33
33. பின்னர் நம் (வானவ) தூதர்கள் லூத் (நபி) இடம் வந்தபொழுது, (அவ்வூரார் தீய எண்ணத்துடன் அவர்களைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். அப்போது) அவர், (அந்த வானவர்களை பாதுகாத்துகொள்ள) தன் கையால் ஒன்றும் செய்ய முடியாமல், அவர்களுக்காகத் துக்கித்தார். அதற்கவர்கள், (அவரை நோக்கி) ‘‘ நீர் அஞ்ச வேண்டாம்; துக்கிக்கவும் வேண்டாம். (நாம் இவ்வூராரை அழித்துவிட உமது இறைவனால் அனுப்பப்பட்ட வானவர்களாவோம்.) நிச்சயமாக நாம் உம்மையும், உமது மனைவியைத் தவிர, (மற்ற) உமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வோம். அவள் (உம்முடன் வராது, இவ்வூராருடன்) தங்கி (அழிந்து) விடுவாள்'' என்று கூறினார்கள்.
Ankebut 29:34
34. இவ்வூரார் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் காரணமாக நிச்சயமாக நாம் இவர்கள்மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கிவைப்போம்'' (என்று கூறினார்கள்).
Ankebut 29:35
35. (பின்னர், வானவர்கள் கூறியவாறே அவர்கள் மீது வேதனை இறங்கி அவர்கள் அனைவரும் அழிந்து விட்டனர்.) நிச்சயமாக நாம் அறிவுடைய மக்களுக்குத் தெளிவான அத்தாட்சியை (இன்றளவும்) அவர்கள் இருந்த ஊரில் விட்டு வைத்திருக்கிறோம்.
Ankebut 29:36
36. மத்யன்வாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நாம் நம் தூதராக அனுப்பிவைத்தோம். அவர் அவர்களை நோக்கி) ‘‘ என் மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். இறுதி நாளை எதிர்பார்த்திருங்கள். பூமியில் விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்'' என்று கூறினார்.
Ankebut 29:37
37. எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், அவர்களைப் பூகம்பம் பிடித்துக் கொண்டது. எனவே, அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்துவிட்டனர்.
Ankebut 29:38
38. மேலும், இவ்வாறே ஆது, ஸமூது கூட்டத்தினரையும் (அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக) நாம் அழித்து விட்டோம். (நீங்கள் போகவர உள்ள வழியில்) அவர்கள் இருந்த இடங்கள் உங்களுக்கு நன்றாகவே தென்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய (பாவச்) செயல்களை ஷைத்தான் அழகாகக் காண்பித்து, நேரான வழியில் செல்லாது அவர்களைத் தடுத்துக் கொண்டான். அவர்கள் நல்லறிவுடையவர்களாகத்தான் இருந்தார்கள். (ஆனால் ஷைத்தானுடைய வலையில் சிக்கி இக்கதிக்கு ஆளானார்கள்.)
Ankebut 29:39
39. காரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (நாம் இவ்வாறே அழித்து விட்டோம்). நிச்சயமாக மூஸா இவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். எனினும், இவர்கள் (அவற்றை நிராகரித்து விட்டுப்) பூமியில் பெருமை கொண்டு நடந்ததினால் (நம் வேதனைக்கு உள்ளானார்கள். அதில் இருந்து) அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியவில்லை.
Ankebut 29:40
40. அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் (செய்து கொண்டிருந்த) பாவத்தின் காரணமாகவே நாம் பிடித்துக் கொண்டோம். அவர்களில் (ஆது மக்களைப் போன்ற) சிலர் மீது நாம் கல்மழை பொழிந்தோம். அவர்களில் (ஸமூது மக்களைப் போன்ற) சிலரை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்களில் (காரூன் போன்ற) சிலரை நாம் பூமியில் சொருகி விட்டோம். அவர்களில் (ஃபிர்அவ்ன், ஹாமான் போன்ற) சிலரை (கடலில்) மூழ்கடித்தோம். அல்லாஹ் இவர்களுக்கு அநீதி செய்யவில்லை. எனினும், இவர்கள் (அனைவரும்) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
Ankebut 29:41
41. அல்லாஹ்வையன்றி (மற்றவற்றைத் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்களின் உதாரணம்: நூலாம் பூச்சி கட்டிய வீட்டை(த் தாங்கள் வசிக்க எடுத்துக் கொண்டவர்களின் உதாரணத்தை) ஒத்திருக்கிறது. வீடுகளில் எல்லாம் மிக்க பலவீனமானது நிச்சயமாக நூலாம் பூச்சியின் வீடுதான். (நூலாம் பூச்சியின் வீடு இவர்களை எவ்வாறு பாதுகாக்க முடியாதோ அவ்வாறே இவர்கள் தங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்ட தெய்வங்களும் இவர்களை பாதுகாக்க முடியாது. இதை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!
Ankebut 29:42
42. அல்லாஹ்வையன்றி அவர்கள் எவற்றை (கடவுளென) அழைக்கிறார்களோ, அவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (அவற்றுக்கு ஒரு சக்தியுமில்லை; அறிவும் இல்லை.) அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
Ankebut 29:43
43. மனிதர்களுக்காகவே இவ்வுதாரணங்களை நாம் கூறுகிறோம். (சிந்தித்து அறியக்கூடிய) ஞானமுடையவர்களைத் தவிர (மற்றெவரும்) இதை உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
Ankebut 29:44
44. மெய்யாகவே அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான்.(வேறொருவர் இல்லை.) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயமாக இவற்றிலும் (பல) அத்தாட்சி(கள்) உண்டு.
Ankebut 29:45
45. (நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்ட இவ்வேதத்தை (மக்களுக்கு) நீர் ஓதிக் காண்பித்து தொழுகையைக் கடைப்பிடித்து வருவீராக. ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவற்றுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்).
Ankebut 29:46
46. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வேதத்தை உடையவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) அழகான முறையிலேயே தவிர அவர்களுடன் தர்க்கிக்க வேண்டாம். ஆயினும், அவர்களில் எவரேனும் வரம்பு மீறிவிட்டால் (அதற்குத் தக்கவாறு நீங்கள் பதில் கூறுவது உங்கள் மீது குற்றமாகாது. அவர்களுடன் தர்க்கித்தால்) ‘‘ எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தை நம்பிக்கை கொள்கின்றபடியே உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். எங்கள் கடவுளும் உங்கள் கடவுளும் ஒரே ஒருவனே. நாங்கள் அவனுக்குத்தான் முற்றிலும் பணிந்து வழிப்பட்டு நடக்கிறோம்'' என்றும் கூறுங்கள்!
Ankebut 29:47
47. (நபியே! அவர்களுக்கு வேதத்தை இறக்கிய) அவ்வாறே நாம் உமக்கு இவ்வேதத்தை அருளியிருக்கிறோம். ஆகவே, நாம் எவர்களுக்கு (முன்னர்) வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்க(ளில் உள்ள சத்தியவான்க)ள் இ(வ்வேதத்)தையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். மேலும், (அரபிகளாகிய) இவர்களில் உள்ள (நியாயவாதிகளில்) பலரும் இதை நம்பிக்கை கொள்கின்றனர். (மன முரண்டாக நிராகரிக்கும்) நிராகரிப்பாளர்களைத் தவிர (மற்ற எவரும்) நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
Ankebut 29:48
48. (நபியே!) நீர் இதற்கு முன்னர் ஒரு வேதத்தை ஓதி அறிந்தவருமல்ல; உமது கையால் நீர் அதை எழுதி(ப் பழகி)யவருமல்ல. அவ்வாறு இருந்திருக்குமாயின், நிராகரிப்பவர்கள் (இதை நீர் தாமாகவே கற்பனை செய்து கொண்டீரே தவிர இறைவனால் அருளப்பட்டதல்ல என்று) சந்தேகம் கொள்ளலாம்.
Ankebut 29:49
49. அவ்வாறன்று. இது (இறைவனால்தான் அருளப்பட்ட) தெளிவான வசனங்களாக இருக்கின்றன. ஆகவே மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டவர்களின் உள்ளங்களில் இவை பதிந்துவிடும். ஆகவே, அநியாயக்காரர்களைத் தவிர (மற்றெவரும்) நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
Ankebut 29:50
50. மேலும், (‘‘ தாங்கள் விரும்புகிறபடி) சில அத்தாட்சிகள் அவருடைய இறைவனால் அவருக்கு அளிக்கப்பட வேண்டாமா?'' என்று (இவ்வக்கிரமக்காரர்கள்) கூறுகின்றனர். அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘ அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கின்றன. (என்னிடமில்லை) நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன் மட்டும்தான்.''
Ankebut 29:51
51. அவர்கள் மீது ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கி இருப்பது அவர்களுக்கு (அத்தாட்சியால்) போதாதா? ஏனென்றால், இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக (இறைவனுடைய) அருளும் இருக்கிறது; (பல) நல்லுபதேசங்களும் இருக்கின்றன.
Ankebut 29:52
52. (நபியே!) கூறுவீராக: ‘‘ எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கிறான். ஏனென்றால், அவன்தான் வானங்கள் பூமியிலுள்ள அனைத்தையும் நன்கறிந்தவன். ஆகவே, எவர்கள் பொய்யான விஷயங்களை நம்பி அல்லாஹ்வை நிராகரித்து விடுகிறார்களோ அவர்கள்தான் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள்.''
Ankebut 29:53
53. (மறுமையின்) வேதனையைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என்று) அவர்கள் உம்மிடம் அவசரப்படுகின்றனர். அதற்குறிய ஒரு குறிப்பிட்ட தவணை இல்லாதிருந்தால் (இதுவரை) அவ்வேதனை அவர்களை வந்தடைந்தே இருக்கும். எனினும், அவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் திடீரென நிச்சயமாக அவர்களிடம் (அது) வந்தே தீரும்.
Ankebut 29:54
54. நிராகரிப்பவர்களை நிச்சயமாக நரகம் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையில் வேதனையைப் பற்றி அவர்கள் உம்மிடம் அவசரப் படுகிறார்கள். (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.)
Ankebut 29:55
55. அவர்களு(டைய தலைகளு)க்கு மேலிருந்தும், அவர்களு(டைய பாதங்களு)க்குக் கீழிருந்தும் வேதனை அவர்களை மூடிக்கொள்ளும் நாளில் அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் செய்து கொண்டிருந்த செயலின் பயனை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்'' என்று (இறைவன்) கூறுவான்.
Ankebut 29:56
56. நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி மிக்க விசாலமானது. அதில் நீங்கள் (எங்கு சென்ற போதிலும்) என்னையே வணங்குங்கள். (மற்றெவரையும் வணங்காதீர்கள்.)
Ankebut 29:57
57. (உங்களில் உள்ள) ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை அனுபவிக்க வேண்டியதுதான். பின்னர் நீங்கள் (விசாரணைக்காக) நம்மிடமே கொண்டு வரப்படுவீர்கள்.
Ankebut 29:58
58. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் சொர்க்கங்களிலுள்ள மேல் மாடிகளில் அமர்த்துவோம். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். நற்செயல்கள் செய்தவர்களின் கூலியும் நன்றே.
Ankebut 29:59
59. உண்மை நம்பிக்கையாளர்கள் (தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக்கொண்டு தங்கள் இறைவனையே நம்பியிருப்பார்கள்.
Ankebut 29:60
60. உயிர்வாழும் பிராணிகளில் எத்தனையோ இருக்கின்றன. அவை தங்கள் உணவைச் சுமந்து திரிவதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ்தான் உணவளிக்கிறான். (இவ்வாறிருக்க அதற்காக நீங்கள் ஏன் அதிகக் கவலைப்பட வேண்டும்.) அவனோ (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
Ankebut 29:61
61. (நபியே! நீர் அவர்களை நோக்கி) “வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? சூரியனையும் சந்திரனையும் தன் திட்டப்படியே நடக்கும்படி செய்தவன் யார்?'' என்று அவர்களைக் கேட்பீராயின் அதற்கவர்கள் ‘‘ அல்லாஹ்தான்'' என்று நிச்சயமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின், அவர்கள் (நம்மைவிட்டு) எங்கு வெருண்டோடுகின்றனர்.
Ankebut 29:62
62. அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு அதிகமாகவும் கொடுக்கிறான்; (தான் நாடியவர்களுக்குக்) குறைத்தும் விடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின் தகுதிகள்) அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.
Ankebut 29:63
63. (நபியே! நீர் அவர்களை நோக்கி) மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்பவன் யார்? அதைக் கொண்டு இறந்த பூமியை உயிர்ப்பிப்பவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீராயின் அதற்கவர்கள் ‘‘ நிச்சயமாக அல்லாஹ்தான்'' என்று கூறுவார்கள். அதற்கு, ‘‘ புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!'' என்று நீர் கூறுவீராக. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) உணர்ந்து கொள்வதில்லை.
Ankebut 29:64
64. இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும், வேடிக்கையுமே தவிர வேறொன்றும் இல்லை. மேலும் மறுமையின் வாழ்க்கைதான் நிச்சயமாக நிலையான வாழ்க்கை ஆகும். இதை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
Ankebut 29:65
65. (மனிதர்கள்) கப்பலில் ஏறி (ஆபத்தில் சிக்கி)க் கொண்டால், அவர்கள் முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபட்டுக் கலப்பற்ற (பரிசுத்த) மனதோடு அவனை அழைத்துப் பிரார்த்தனை செய்கின்றனர். அவன், அவர்களை கரையில் (இறக்கி) பாதுகாத்துக் கொண்ட பின்னர் அவனுக்கு அவர்கள் (பலரை) இணை ஆக்குகின்றனர்.
Ankebut 29:66
66. நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றியை (இவ்வாறு) அவர்கள் மறுத்துக்கொண்டே இருக்கட்டும். (தங்கள் விருப்பப்படியும்) அவர்கள் சுகமனுபவித்துக் கொண்டே இருக்கட்டும். தங்கள் (செயலின்) பலனை(ப் பின்னர்) நிச்சயமாக அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.
Ankebut 29:67
67. (இந்த மக்காவை) அபயமளிக்கும் புனித இடமாக நாம் ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களைச் சூழவுள்ள மனிதர்கள் (எதிரிகளால்) தாக்கப்படுகின்றனர். இவர்கள் அல்லாஹ்வின் (இந்த) அருட்கொடையை நிராகரித்துவிட்டு பொய்யான தெய்வங்களை நம்பிக்கை கொள்கின்றனரா?
Ankebut 29:68
68. அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனைவிட அல்லது தன்னிடம் வந்த உண்மையைப் பொய்யாக்குபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? இத்தகைய நிராகரிப்பவர்களுக்கு தங்குமிடம் நரகத்தில் இல்லையா?.
Ankebut 29:69
69. எவர்கள் நம் வழியில் (செல்ல) முயற்சிக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நம் (நல்) வழிகளில் செலுத்துகிறோம். நன்மை செய்பவர்களுடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான்.
Rum 30:1
1. அலிஃப் லாம் மீம்.
Rum 30:2
2. (நமக்குச்) சமீபமான பூமியிலுள்ள ‘ரூம்' வாசிகள் தோல்வி அடைந்தனர்.
Rum 30:3
3. அவர்கள் (இன்று) தோல்வியடைந்து விட்டபோதிலும் அதிசீக்கிரத்தில் வெற்றி அடைவார்கள்,
Rum 30:4
4. (அதுவும்) சில ஆண்டுகளுக்குள்ளாகவே (வெற்றி அடைவார்கள்). (வெற்றி தோல்வி என்ற) விஷயம் இதற்கு முன்னரும், இதற்குப் பின்னரும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. (அவர்கள் வெற்றியடையும்) அந்நாளில் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் உதவியைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள்.
Rum 30:5
5. அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு உதவிபுரிகிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன் ஆவான்.
Rum 30:6
6. (இது) அல்லாஹ்வுடைய வாக்குறுதியாகும். அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறுவதில்லை. எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியமாட்டார்கள்.
Rum 30:7
7. அவர்கள், இவ்வுலக வாழ்க்கையிலுள்ள வெளிப்படையான விஷயங்களை அறி(ந்து கவனிக்)கின்றனர். ஆனால், அவர்கள் மறுமையைப் பற்றி முற்றிலும் பராமுகமாயிருக்கின்றனர்.
Rum 30:8
8. (இதை) அவர்கள் தங்களுக்குள்ளாகவே கவனிக்க வேண்டாமா? வானங்களையும். பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் நியாயமான காரணமின்றியும், குறிப்பிட்ட தவணையின்றியும் அல்லாஹ் படைக்கவில்லை. எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையும் நிராகரிக்கின்றனர்.
Rum 30:9
9. இவர்கள் பூமியில் சுற்றித்திரிய வேண்டாமா? அவ்வாறாயின், இவர்களுக்கு முன்னிருந்த (நிராகரிப்ப)வர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (முன்னிருந்த) அவர்கள் இவர்களைவிட பலசாலிகளாகவும், இவர்கள் எவ்வளவு பூமியை அபிவிருத்தி செய்தார்களோ அதைவிட அதிகமாக பூமிகளைப் பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் இருந்தார்கள். (இந்நிலைமையில்) அவர்களிடம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்கள் (அந்நபிமார்களைப் பொய்யாக்கித்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
Rum 30:10
10. அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி அவற்றைப் பரிகசித்துக் கொண்டிருந்ததன் காரணமாக, தீமை செய்து கொண்டிருந்த அவர்களின் முடிவும் தீமையாகவே முடிந்தது.
Rum 30:11
11. (மனிதர்களே!) அல்லாஹ்வே படைப்புகளை முதலாவதாக உற்பத்தி செய்கிறான். அவனே (அவை இறந்த பின்னரும்) அவற்றை மீளவைப்பான். பின்னர், (மனிதர்களே!) நீங்கள் அனைவரும் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்.
Rum 30:12
12. விசாரணைக் காலம் வரும் நாளில் குற்றவாளிகள் (இறைவனின் கருணையில்) நம்பிக்கை இழந்து விடுவார்கள்.
Rum 30:13
13. (ஏனென்றால்) அவர்கள் இணைவைத்து வணங்கியவற்றில் அவர்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் எவரும் இருக்கமாட்டார். (இணைவைத்த) அவர்களும் தாங்கள் இணைவைத்தவற்றைப் புறக்கணித்து விடுவார்கள்.
Rum 30:14
14. விசாரணையின் அந்நாள் வரும் சமயத்தில் (நல்லவர்களும் தீயவர்களும்) வெவ்வேறாகப் பிரிந்து விடுவார்கள்.
Rum 30:15
15. ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (மறுமையில் சொர்க்கத்திலுள்ள) உன்னதமாகச் சிங்காரிக்கப்பட்ட பூங்காவனத்தில் மகிழ்விக்கப்படுவார்கள்.
Rum 30:16
16. எவர்கள் நிராகரித்து நம் வசனங்களையும், மறுமை(யில் நமது) சந்திப்பையும் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் வேதனையில் சிக்கிக் கிடப்பார்கள்.
Rum 30:17
17. ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்கள் காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருங்கள்.
Rum 30:18
18. வானங்களிலும் பூமியிலும் இரவிலும் பகலிலும் அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே, நீங்களும் அவனைப் போற்றி புகழ்ந்து கொண்டிருங்கள்.)
Rum 30:19
19. அவனே இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான். அவனே உயிருள்ளவற்றிலிருந்து மரணித்தவற்றை வெளிப்படுத்துகிறான். அவனே இறந்த பூமிகளையும் செழிப்பாக்குகிறான். இவ்வாறே (மரணித்த பின்னர்) மறுமையில் நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள்.
Rum 30:20
20. மண்ணிலிருந்து உங்களை படைத்து, பின்னர் நீங்கள் பல பாகங்களிலும் சென்று திரியக்கூடிய மனிதர்களாக ஆனதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும்.
Rum 30:21
21. நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டு பண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு இவற்றில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Rum 30:22
22. வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும் நிறங்களும் வெவ்வேறாக இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். இதிலும் கல்விமான்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Rum 30:23
23. இரவிலும் பகலிலும் நீங்கள் நித்திரை செய்து இளைப்பாறிக் கொள்வதும் (பூமியின் பல பாகங்களிலும் சென்று) நீங்கள் அவனுடைய அருளைத் தேடிக் கொள்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (நல்லுபதேசத்தைச்) செவியுறும் மக்களுக்கு இதில் நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Rum 30:24
24. நயமும் பயமும் தரக்கூடியவாறு மின்னலை அவன் உங்களுக்குக் காண்பிப்பதும், மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து இறந்த பூமியை செழிக்கச் செய்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளனவாகும். அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக இதில் (ஒன்றல்ல) பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Rum 30:25
25. வானமும் பூமியும் அவன் கட்டளைப்படி நிலை பெற்றிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். (உங்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் அதில் உயிர் வாழ்ந்து மரணித்துப் பூமியில் அடக்கப்பட்டதன் பின்னர்) அவன் உங்களை அழைக்கும்போது ஒரே அழைப்பில் நீங்கள் பூமியில் இருந்து வெளிப்பட்டு விடுவீர்கள்.
Rum 30:26
26. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குரியனவே. இவை அனைத்தும் அவனுக்கே அடிபணிந்து நடக்கின்றன.
Rum 30:27
27. அவன்தான் படைப்புகளை ஆரம்பத்தில் உற்பத்தி செய்பவன். அவனே (அவை மரணித்த பின்னரும் உயிர் கொடுத்து) அவற்றை மீளவைக்கிறவன். இது அவனுக்கு மிக்க எளிது. வானங்களிலும் பூமியிலும் அவனுடைய (உதாரணமும் பரிசுத்தத்) தன்மை(யும்)தான் மிக்க மேலானதாகும். அவன் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
Rum 30:28
28. (மனிதர்களே! நீங்கள் அவனுடைய மேன்மையை அறிந்து கொள்வதற்காக) உங்களுக்குள்ளாகவே அவன் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். நாம் உங்களுக்குக் கொடுத்த பொருள்களில், உங்கள் அடிமைகளில் எவரேனும் (உங்கள் பொருள்களுக்கு) உங்களுடன் சம உரிமை உடையவர்களாக ஆகிவிடுவார்களா? அல்லது நீங்கள் உங்களைப் பொருட்படுத்துவதைப்போல் அவர்களையும் பொருட்படுத்துவீர்களா? (பொருட்படுத்த மாட்டீர்களே! இவ்வாறிருக்க, படைக்கப்பட்ட இவற்றை நீங்கள் எனக்கு இணை ஆக்கலாமா?) அறிவுடைய மக்களுக்கு (நம்) வசனங்களை இவ்வாறு விவரித்துக் கூறுகிறோம்.
Rum 30:29
29. எனினும், அநியாயக்காரர்கள் எவ்வித அறிவுமின்றியே (இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டுத்) தங்கள் சரீர இச்சைகளைப் பின்பற்றி நடக்கின்றனர். அல்லாஹ் எவர்களைத் தவறான வழியில் விட்டு விட்டானோ அவர்களை நேரான வழியில் செலுத்தக்கூடியவர் யார்? இவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரும் இல்லை.
Rum 30:30
30. (நபியே! இப்ராஹீமுடைய) நேரான மார்க்கத்தை நோக்கி நீர் உமது முகத்தை உறுதியான ஓர்மைப்பாட்டுடன் திருப்புவீராக. (அதுவே) மனிதர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை மார்க்கமாகும். அவன் படைத்த (மார்க்கத்)தை (எவராலும்) மாற்றிவிட முடியாது. இதுதான் நிலையான (நேர்மையான) மார்க்கம். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்ளவே மாட்டார்கள்.
Rum 30:31
31. (நம்பிக்கையாளர்களே! நீங்களும்) அவன் ஒருவனிடமே திரும்பி (இஸ்லாம் மார்க்கத்தின் மீது உறுதியாக இருந்து) அவ(ன் ஒருவ)னுக்கே பயந்து தொழுகையையும் கடைப்பிடித்து நடந்து கொள்ளுங்கள். இணைவைத்து வணங்குபவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
Rum 30:32
32. (தவிர) எவர்கள் தங்கள் மார்க்கத்திற்குள் பிரிவினையை உண்டு பண்ணி, பல பிரிவுகளாகப் பிரித்து, அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள (தவறான)வற்றைக் கொண்டு சந்தோஷப்படுகின்றனரோ அவர்களுடன் சேர்ந்து விடாதீர்கள்.
Rum 30:33
33. மனிதர்களை ஒரு தீங்கு அணுகும் போது அவர்கள் தங்கள் இறைவன் பக்கம் முகம் நோக்கி அவனிடம் பிரார்த்திக்கிறார்கள். பின்னர் அவன் (அதை நீக்கி) அவர்களைத் தன் அருளைச் சுவைக்கும்படிச் செய்தால் அவர்களில் ஒரு பிரிவினர் தங்கள் இறைவனுக்கே இணை வைக்கின்றனர்.
Rum 30:34
34. நாம் அவர்களுக்களித்த அருளுக்கு நன்றி செலுத்தாது நிராகரித்தும் விடுகின்றனர். (இவ்வாறு நிராகரிப்பவர்களே!) நீங்கள் உங்கள் இஷ்டப்படி சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள். (உங்கள் செயலின் பலனைப்) பின்னர் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
Rum 30:35
35. அவர்கள் இணைவைத்து வணங்குவதற்கு ஆதாரமாகக் கூறக்கூடிய ஓர் அத்தாட்சியை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? (அவ்வாறு ஒன்றும் இல்லையே.)
Rum 30:36
36. மனிதர்கள் நம் அருளைச் சுவைக்கும்படி நாம் செய்தால் அதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எனினும், அவர்களுடைய கைகளே தேடிக் கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு ஒரு தீங்கேற்படும்போது உடனே அவர்கள் நம்பிக்கையிழந்து விடுகின்றனர்.
Rum 30:37
37. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான்; (தான் நாடியவர்களுக்குக்) குறைத்து விடுகிறான் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Rum 30:38
38. (நபியே! உமது பொருளில்) உறவினருக்கு அவரின் உரிமையை கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் (அவர்களுடைய உரிமையைக் கொடுத்து வருவீராக). எவர்கள் அல்லாஹ்வுடைய முகத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இதுவே மிக்க நன்றாகும். இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.
Rum 30:39
39. (மற்ற) மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்ந்து (உங்கள் பொருளும்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. எனினும், அல்லாஹ்வின் முகத்தை நாடி ஜகாத்தாக ஏதும் நீங்கள் கொடுத்தாலோ, கொடுத்தவர்கள் அதை இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர்.
Rum 30:40
40. அல்லாஹ்தான் உங்களை படைத்தவன். உங்களுக்கு உணவு கொடுப்பவனும் அவனே. பின்னர், அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். இவற்றில் எதையும் செய்யக்கூடிய சக்தி உங்கள் தெய்வங்களில் எதற்கும் உண்டோ? இவர்கள் செய்யும் (இத்தகைய) இணைகளிலிருந்து அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்; அவன் மிகப் பரிசுத்தமானவன்.
Rum 30:41
41. மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவிவிட்டன. அவற்றில் இருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக, அவர்களின் தீய செயல்கள் சிலவற்றின் தண்டனையை அவர்களுக்கு (இம்மையிலும்) சுவைக்க வைக்கிறான்.
Rum 30:42
42. (நபியே!) கூறுவீராக: பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள். உங்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு என்னாயிற்று? முன்னிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இணைவைத்து வணங்குபவர்களாகவே இருந்தனர்.
Rum 30:43
43. ஆகவே, (நபியே!) அல்லாஹ்விடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே நீர் உமது முகத்தை நிலையான (நீதமான) மார்க்கத்தளவில் திருப்பிவிடுவீராக. அந்நாளில் (நல்லவர்களும், தீயவர்களும்) வெவ்வேறாகப் பிரிந்து விடுவார்கள்.
Rum 30:44
44. எவன் நிராகரிப்பவனாக இருக்கிறானோ அவனுடைய நிராகரிப்பு அவனுக்கே கேடாக முடியும். எவர் நற்காரியங்களைச் செய்கிறாரோ அவர் (அதை மறுமையில்) தனக்கு நன்மையாகவே அமைத்துக் கொள்கிறார்.
Rum 30:45
45. நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளைக் கூலியாகக் கொடுக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை.
Rum 30:46
46. (மழைக்கு முன்னர் குளிர்ந்த) காற்றை நற்செய்தியாக அவன் அனுப்பி வைப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றே. (அதைக் கொண்டு) அவன் தன் அருளை (மழையை) நீங்கள் சுவைக்கும்படிச் செய்து, கப்பல்களையும் அவன் தன் கட்டளையைக் கொண்டே செல்லும்படிச் செய்கிறான். அதனால் (பல தீவுகளிலும் நாடுகளிலும் உள்ள) அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (இவற்றுக்காக) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
Rum 30:47
47. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னரும் பல தூதர்களை அவர்களுடைய சமுதாய மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர்களும் தெளிவான அத்தாட்சிகளையே அவர்களிடம் கொண்டு வந்தனர். (எனினும், அவற்றை அவர்கள் நிராகரித்து விட்டனர்.) ஆகவே, (அவற்றை நிராகரித்த)குற்றவாளிகளை நாம் பழிவாங்கினோம். (ஏனென்றால் இவ்வாறு பழிவாங்கி) நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நம்மீது கடமையாக இருக்கிறது.
Rum 30:48
48. அல்லாஹ்தான் காற்றை அனுப்பிவைக்கிறான். அது மேகத்தை ஓட்டுகிறது. அவன் விரும்பியவாறு அதை வானத்தில் திட்டுத் திட்டாகப் பரப்பிவிடுகிறான். அதிலிருந்து மழை பொழிவதை (நபியே!) நீர் காண்கிறீர். தன் அடியார்களில் அவன் விரும்பியவர்களை அம்மழை வந்தடையும் சமயத்தில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
Rum 30:49
49. அதற்கு முன்னர் அவர்கள் தங்கள் மீது மழை பொழியும் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்தவர்களாகவே இருந்தனர்.
Rum 30:50
50. (நபியே!) அல்லாஹ்வின் இவ்வருளால் ஏற்படும் பலன்களை நீர் கவனிப்பீராக! இறந்துபோன பூமியை எவ்வாறு செழிக்கச் செய்கிறான்! (இவ்வாறே) நிச்சயமாக அவன் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கச் செய்வான். அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன்.
Rum 30:51
51. (மழையில்லாத வெறும் வறண்ட) காற்றை நாம் அனுப்பி (அதனால் தங்கள் பயிர்கள்) மஞ்சளாயிருப்பதை அவர்கள் கண்டால், முன்னர் நாம் அவர்களுக்குச் செய்திருந்த அருளையுமே அவர்கள் நிராகரித்து விடுகின்றனர்.
Rum 30:52
52. (நபியே!) இறந்தவர்களை செவியுறும்படிச் செய்ய நிச்சயமாக உம்மால் முடியாது. உங்களைப் புறக்கணித்துச் செல்லும் செவிடர்களுக்குச் சப்தத்தைக் கேட்கும்படிச் செய்யவும் உம்மால் முடியாது.
Rum 30:53
53. குருடர்களை, அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேரான வழியில் திருப்பிவிடவும் உம்மால் முடியாது. முற்றிலும் வழிப்பட்டவர்களாக நம் வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களைத் தவிர மற்றவர்களை (உமது நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க வைக்க உம்மால் முடியாது.
Rum 30:54
54. அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனமான நிலைமையில் உற்பத்தி செய்கிறான். அந்தப் பலவீனத்திற்குப் பின்னர் அவனே (வாலிப) பலத்தையும் கொடுக்கிறான். அந்த பலத்திற்குப் பின்னர் வயோதிகத்தையும், பலவீனத்தையும் கொடுக்கிறான். (இவ்வாறெல்லாம்) அவன், தான் விரும்பியவாறு (உங்களை) ஆக்குகிறான். அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் மிக்க ஆற்றலுடையவனும் அவான்.
Rum 30:55
55. மறுமை நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையைத் தவிர (அதிகமாக) இருக்கவில்லை என்று சத்தியம் செய்வார்கள். இவ்வாறே (இவ்வுலகத்திலும்) அவர்கள் பொய்யையே பிதற்றிக் கொண்டிருந்தனர்.
Rum 30:56
56. எனினும், கல்வியறிவும் நம்பிக்கையும் கொடுக்கப்பட்டவர்கள் (அதை மறுத்து) ‘‘அல்லாஹ் எழுதியவாறு நீங்கள் உயிர் பெற்றெழும் இந்நாள் வரை (பூமியில்) இருந்தீர்கள். இது (மரணித்தவர்கள்) உயிர் பெற்றெழும் நாள். நிச்சயமாக நீங்கள் இதை உறுதி கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்'' என்றும்,
Rum 30:57
57. ‘‘ஆனால், அந்நாளில் அநியாயம் செய்தவர்கள் கூறும் சாக்குப்போக்கு அவர்களுக்குப் பலனளிக்காது. அவர்கள் இறைவனைத் திருப்திபடுத்தவும் வழி இருக்காது'' என்றும் கூறினார்கள்.
Rum 30:58
58. மனிதர்களுக்கு (திருப்தி அளிப்பதற்காக) வேண்டிய உதாரணங்கள் அனைத்தையும் இந்த குர்ஆனில் நிச்சயமாக நாம் கூறியே இருக்கிறோம். (இதை அங்கீகரிக்காத அவர்கள் விரும்பும்) ஓர் அத்தாட்சியை நீர் அவர்களிடம் கொண்டு வந்தபோதிலும் (நபியே! உம்மையும் உம்முடன் இருப்பவர்களையும் நோக்கி) நீங்கள் பொய்யர்களேதவிர வேறில்லை'' என்று இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்.
Rum 30:59
59. இவ்வாறே அறிவில்லாத இந்த மக்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்.
Rum 30:60
60. ஆகவே, (நபியே!) நீர் (சகித்துக்கொண்டு) பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி மெய்யானது. (ஆகவே, முடிவில் நபியே! நீர்தான் வெற்றி பெறுவீர்.) மறுமையை நம்பாத இவர்கள் நிச்சயமாக உம்மை இலேசாக எண்ணிவிட வேண்டாம்.
Lukman 31:1
1. அலிஃப் லாம் மீம்.
Lukman 31:2
2. இவை ஞானம் நிறைந்த இவ்வேதத்தின் (சில) வசனங்களாகும்.
Lukman 31:3
3. (இது) நன்மை செய்பவர்களுக்கு ஒரு நேர்வழி காட்டியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது.
Lukman 31:4
4. அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித்து தொழுவார்கள். ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். இறுதி நாளையும் அவர்கள் உறுதியாக நம்புவார்கள்.
Lukman 31:5
5. இவர்கள்தான் தங்கள் இறைவனின் நேரான வழியில் இருப்பவர்கள். இவர்கள்தான் வெற்றி அடைவார்கள்.
Lukman 31:6
6. (இவர்களைத் தவிர) மனிதரில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக்கதைகள் முதலிய) வீணான விஷயங்களை விலைக்கு வாங்கி (அவற்றை மக்களுக்கு ஓதிக் காண்பித்து) அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் இருந்து ஞானமின்றி மக்களை வழிகெடுத்து அதைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு.
Lukman 31:7
7. இவர்களில் எவருக்கும் நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதை அவன் கேட்காதவனைப் போலும், தன் இரு காதுகளிலும் செவிடு உள்ளவனைப் போலும் கர்வம்கொண்டு விலகிவிடுகிறான். ஆகவே, (நபியே!) அவனுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நீர் நற்செய்தி கூறுவீராக!
Lukman 31:8
8. ஆயினும், (இவர்களில்) எவர்கள் (நம் வசனங்களுக்குச் செவி சாய்த்து) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மிக்க இன்பம் தரும் சொர்க்கங்கள் உள்ளன.
Lukman 31:9
9. அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வுடைய (இவ்)வாக்குறுதி உண்மையானதே! அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
Lukman 31:10
10. அவனே வானங்களைத் தூண்கள் இன்றியே படைத்திருக்கிறான். அதை நீங்களும் பார்க்கிறீர்கள். பூமி உங்களைக் கவிழ்த்து விடாதிருப்பதற்காக (பளுவான) மலைகளை (அதில்) நிறுத்திவைத்து விதவிதமான உயிரினங்களையும் அதில் பரப்பினான். (மனிதர்களே! அல்லாஹ்வாகிய) நாமே மேகத்தில் இருந்து மழையை பொழியச்செய்து அதிலிருந்தே நேர்த்தியான ஒவ்வொரு வகைப் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாக முளைப்பிக்கச் செய்கிறோம்.
Lukman 31:11
11. (ஆகவே, நபியே! நீர் அவர்களை நோக்கிக் கூறுவீராக) ‘‘ இவை அனைத்தும் அல்லாஹ் படைத்தவையாகும். அவனையன்றி (நீங்கள் தெய்வங்கள் என்று கூறும்) அவை எதை படைத்திருக்கின்றன என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள். அவ்வாறு (ஒன்றும்) இல்லை. (அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை வணங்கும்) இந்த அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.
Lukman 31:12
12. லுக்மானுக்கு நாம் ஞானத்தைக் கொடுத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்படி கூறினோம். ஏனென்றால், எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர் தன் நன்மைக்காகவே நன்றி செலுத்துகிறார். எவன் நிராகரிக்கிறானோ (அவன் தனக்கே தீங்கு தேடிக்கொள்கிறான். அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனும் புகழுடையவனும் ஆவான்.
Lukman 31:13
13. லுக்மான் தனது மகனுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதிய சமயத்தில் அவரை நோக்கி ‘‘ என் அருமை மைந்தனே! நீ அல்லாஹ்வுக்கு (ஒன்றையுமே) இணையாக்காதே! ஏனென்றால், இணைவைப்பது நிச்சயமாக மிகப்பெரும் அநியாயமாகும்'' என்று கூறினார்.
Lukman 31:14
14. ‘‘ தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன் தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது.
Lukman 31:15
15. எனினும், (இறைவன் என்று) நீ அறிந்துகொள்ளாத ஒரு பொருளை எனக்கு இணைவைக்கும்படி அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டாம். ஆயினும், இவ்வுலக விஷயத்தில் நீ அவர்களுக்கு (நீதமாக) உதவி செய்து (அன்பாக) நேசித்துவா. எவ்விஷயத்திலும் என்னையே நோக்கி நிற்பவர்களின் வழியை நீ பின்பற்றி நட. பின்னர், நீங்கள் அனைவரும் நம்மிடமே வரவேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அச்சமயம் நான் உங்களுக்கு அறிவுறுத்துவேன்'' (என்று கூறினோம்).
Lukman 31:16
16. (மேலும், லுக்மான் தனது மகனை நோக்கி) ‘‘ என் அருமை மகனே! (நன்மையோ தீமையோ) அது ஒரு கடுகின் விதை அளவில் இருந்தாலும் சரி, அது (கரும்) பாறைகளுக்குள்ளோ அல்லது வானத்திலோ, பூமியின் ஆழத்திலோ (மறைந்து) இருந்தபோதிலும் (உங்களிடம் கணக்குக் கேட்கும் போது) நிச்சயமாக அல்லாஹ் அதையும் கொண்டு வந்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வெகு நுட்பமான அறிவுடையவனும் (அனைத்தையும்) நன்கு தெரிந்து வைத்திருப்பவனும் ஆவான்.
Lukman 31:17
17. என்னருமை மகனே! ‘‘ தொழுகையை நிலைநிறுத்து, நன்மையான காரியங்களைக் கொண்டு ஏவி, பாவமான காரியங்களில் இருந்து (மனிதர்களை) விலக்கி வா. உனக்கேற்படும் சிரமங்களைப் பொறுமையுடன் நீ சகித்துக்கொள். நிச்சயமாக இது எல்லா காரியங்களிலும் வீரமிக்கச் செயலாகும்.
Lukman 31:18
18. (பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
Lukman 31:19
19. உன் நடையில் (பெருமையும் கர்வமுமின்றி) மத்திய தரத்தை விரும்பு. உன் சப்தத்தையும் தாழ்த்திக்கொள். ஏனென்றால், சப்தங்களிலெல்லாம் மிக்க வெறுக்கத்தக்கது கழுதையின் (உரத்த) சப்தமே!'' (என்று கூறினார்).
Lukman 31:20
20. (மனிதர்களே!) வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான் என்பதையும், அவன் தன் அருட் கொடைகளை மறைவாகவும் வெளிப்படையாகவும் உங்கள் மீது சொரிந்திருக்கிறான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? (இவ்வாறெல்லாமிருந்தும்) மனிதர்களில் பலர் ஒரு கல்வியும், (தர்க்க ரீதியான) வழிகாட்டலும், தெளிவான வேத நூலின் ஆதாரமுமின்றி அல்லாஹ்வைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்கின்றனர்.
Lukman 31:21
21. அவர்களை நோக்கி, ‘‘அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்'' எனக் கூறினால், அதற்கு அவர்கள் ‘‘ இல்லை, எங்கள் மூதாதைகள் எதன் மீது இருக்க நாங்கள் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். (என்னே!) அவர்கள் மூதாதைகளை ஷைத்தான் நரக வேதனையின் பக்கம் அழைத்து (அவர்களும் சென்று) இருந்தாலுமா? (இவர்கள் அவர்களைப் பின்பற்றிச் செல்வார்கள்!)
Lukman 31:22
22. எவர் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கம் திருப்பி, பணிந்து நன்மையும் செய்து கொண்டிருக்கிறாரோ அவர் நிச்சயமாக (அறுபடாத) மிக்க பலமானதொரு வளயத்தைப் பிடித்துக் கொண்டார். எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.
Lukman 31:23
23. (நபியே!) எவரேனும் (உம்மை) நிராகரித்து விட்டால், அவர்களுடைய நிராகரிப்பு உம்மைத் துக்கத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அவர்கள் நம்மிடமே வரவேண்டும். அச்சமயம் அவர்களுடைய (இச்)செயலைப் பற்றி நாம் அவர்களுக்கு அறிவுறுத்துவோம். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.
Lukman 31:24
24. அவர்களை (இச்சமயம்) சிறிது சுகமனுபவிக்கும்படி நாம் விட்டு வைப்போம். பின்னர், கடுமையான வேதனையின் பக்கம் (செல்லும்படி) நாம் அவர்களை நிர்ப்பந்தித்து விடுவோம்.
Lukman 31:25
25. (நபியே!) ‘‘ வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?'' என்று நீர் அவர்களைக் கேட்பீராயின், அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்தான்'' என்று நிச்சயமாகக் கூறுவார்கள். (அதற்கு, ‘‘ இவ்வளவேனும் உங்களுக்கு அறிவு இருப்பது பற்றி) அல்லாஹ்வை நான் புகழ்கிறேன்'' என்று நீர் கூறுவீராக. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இறைவனை இவ்வாறு புகழ்ந்து துதி செய்ய) அறிய மாட்டார்கள்.
Lukman 31:26
26. வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே. எனினும், நிச்சயமாக அல்லாஹ் (இவற்றின்) தேவையற்றவனும் மிகப் புகழுடையவனும் ஆவான்.
Lukman 31:27
27. பூமியிலுள்ள மரங்கள் (செடிகள் என) அனைத்தையும் எழுது கோல்களாகவும், கடல் நீரை மையாகவும் வைத்து (அது தீர்ந்து) பின்னும் ஏழு கடல்களின் நீரையும் மையாக வைத்து எழுதிய போதிலும் அல்லாஹ்வுடைய வசனங்கள் (எழுதி) முடிவு பெறாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
Lukman 31:28
28. மனிதர்களே! (ஆரம்பத்தில்) உங்களை படைப்பதும், (மரணித்த பின்) உங்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புவதும் அவனுக்கு, உங்களில் ஒருவரை (ஆரம்பத்தில்) படை(த்து உயிர் கொடு)ப்பது போலவே தவிர வேறில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் உற்று நோக்குபவனும் ஆவான்.
Lukman 31:29
29. (நபியே!) அல்லாஹ்தான் இரவைப் பகலிலும் பகலை இரவிலும் நுழைய வைத்து சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்திற்குள்) அடக்கி வைத்திருக்கிறான் என்பதையும் நீர் பார்க்கவில்லையா? இவற்றில் ஒவ்வொன்றும் (அவற்றுக்கு அவன்) குறிப்பிட்ட திட்டப்படியே நடக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்.
Lukman 31:30
30. இவையனைத்தும் ‘‘ நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன் என்பதற்கும், அவனையன்றி அவர்கள் (தெய்வங்களென) அழைப்பவை பொய்யானவை என்பதற்கும், நிச்சயமாக அல்லாஹ்தான் மிகப் பெரியவனும் மேலானவனும் ஆவான்'' என்பதற்கும் அத்தாட்சிகளாக இருக்கின்றன.
Lukman 31:31
31. அல்லாஹ்வுடைய அருட்கொடைகளைச் சுமந்துகொண்டு கடலில் செல்லும் கப்பலும் அவனுடைய அத்தாட்சிகளை உங்களுக்கு அறிவிக்கக் கூடியதாக இருப்பதை நீர் கவனிக்கவில்லையா? பொறுமையுடன் (சிரமங்களைச்) சகித்திருந்து, அவனுக்கு நன்றி செலுத்தும் அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Lukman 31:32
32. (கப்பலில் செல்லும்) அவர்களை(ப் புயல் காற்றடித்து நாலா பக்கங்களிலிருந்தும்) அலைகள் மேல் முகடுகளைப் போல் சூழ்ந்து கொள்ளும் சமயத்தில், அல்லாஹ்வுக்கு வழிபட்டு, கலப்பற்ற மனதுடன் அவனை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர்! அவன் அவர்களைக் கரையில் இறக்கி பாதுகாத்துக் கொண்டாலோ அவர்களில் சிலர்தான் நிதானமாக நடக்கின்றனர். (பெரும்பாலானவர்களோ நிதானம் தவறியே நடக்கின்றனர்.) மிக நன்றிகெட்ட சதிகாரர்களைத் தவிர (மற்றெவரும்) நம் அத்தாட்சிகளை நிராகரிக்க மாட்டார்கள்.
Lukman 31:33
33. மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு அஞ்சி ஒரு நாளைப்பற்றியும் பயந்து கொள்ளுங்கள். (அந்நாளில்) தந்தை பிள்ளைக்கு உதவமாட்டார்; பிள்ளையும் தந்தைக்கு ஒரு உதவியும் செய்ய மாட்டான். (ஒவ்வொருவரும் தன்னையே பாதுகாத்துக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கின்ற நாளாகும் அது.) நிச்சயமாக (அந்நாள் வருமென்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி விட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம்.
Lukman 31:34
34. நிச்சயமாக (உலக முடிவு) காலத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் (மட்டும்)தான் இருக்கிறது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். அவனே கர்ப்பங்களில் (கரு) தரிப்பதையும் அறிவான். (அவனைத் தவிர) எவரும் நாளைக்கு அவர் என்ன செய்வார் என்பதை அறியமாட்டார். எந்தப் பூமியில் இறப்பார் என்பதையும் (அவனைத் தவிர) எவரும் அறியமாட்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் (இவற்றை) நன்கறிந்தவனும் தெரிந்தவனும் ஆவான்.
Secde 32:1
1. அலிஃப் லாம் மீம்.
Secde 32:2
2. (நபியே! உம் மீது) அருளப்பட்ட இவ்வேதம் உலகத்தாரின் இறைவனிடமிருந்தே வந்ததென்பதில் ஒரு சந்தேகமுமில்லை.
Secde 32:3
3. (நம் நபி) “இதை(த் தாமாகவே) கற்பனை செய்து கொண்டார்'' என்று (உங்களைப் பற்றி) அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறன்று. இது உமது இறைவனால் உமக்கு அருளப்பட்ட உண்மையான வேதமாகும். உமக்கு முன்னர் இதுவரை ஒரு தூதருமே வராதிருந்த (இந்த அரபி) மக்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே (இவ்வேதம் அருளப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றி) அவர்கள் நேரான வழியில் செல்வார்களாக!
Secde 32:4
4. அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் ஆறே நாள்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (உங்களைப்) பாதுகாப்பவனோ அல்லது (உங்களுக்குப்) பரிந்து பேசுபவனோ அவனைத் தவிர (வேறொருவரும்) உங்களுக்கு இல்லை. (இதை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெற வேண்டாமா?
Secde 32:5
5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள எல்லா காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகிறான். (ஒவ்வொன்றின் முடிவும்) ஒரு நாளன்று அவனிடமே சென்றுவிடும். அந்த (ஒரு) நாள் நீங்கள் எண்ணுகின்ற உங்கள் கணக்கின்படி ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும்.
Secde 32:6
6. அவனே (வானம் பூமியிலுள்ள) மறைவானதையும் வெளிப்படையானதையும் (உள்ளது உள்ளபடி) நன்கறிந்தவன்; (அனைத்தையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன் ஆவான்.
Secde 32:7
7. அவனே எல்லா பொருள்களையும் (படைத்து) அவற்றின் கோலத்தையும் மிக்க அழகாக அமைத்தான். ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணைக் கொண்டே படைத்தான்.
Secde 32:8
8. பின்னர், ஓர் அற்பத் துளியாகிய (இந்திரியச்) சத்திலிருந்து அவனுடைய சந்ததியைப் படைக்கிறான்.
Secde 32:9
9. பின்னர், அவன் (படைப்பாகிய) அதைச் செப்பனிட்டுத் தனது ‘ரூஹை' அதில் புகுத்தி (உங்களை உற்பத்தி செய்கிறான்.) உங்களுக்குக் காதுகள், கண்கள், உள்ளங்கள் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். இவ்வாறு இருந்தும் உங்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சிலரே!
Secde 32:10
10. ‘‘(நாங்கள் இறந்து) பூமியில் அழிந்து போனதன் பின்னர் மெய்யாகவே நாங்கள் புதிய படைப்பாக அமைக்கப்பட்டு விடுவோமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமல்ல, அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையும் நிராகரிக்கின்றனர்.
Secde 32:11
11. (நபியே!) கூறுவீராக: “உங்கள் மீது (உங்கள் இறைவனால்) சாட்டப்பட்டிருக்கும் ‘மலக்குல் மவ்த்து' (என்ற மரண வானவர்)தான் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார். பின்னர், உங்கள் இறைவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.''
Secde 32:12
12. (நபியே! விசாரணைக்காக) இக்குற்றவாளிகள் தங்கள் இறைவன் முன் (நிறுத்தப்படும் சமயத்தில்) தலை குனிந்தவர்களாக “எங்கள் இறைவனே! எங்கள் கண்களும் காதுகளும் திறந்து கொண்டன. (நாங்கள் அனைத்தையும் பார்த்தும் கேட்டும் தெரிந்தும் கொண்டோம். முந்திய உலகிற்கு ஒரு தடவை) எங்களை திரும்ப அனுப்பிவை. நாங்கள் நற்செயல்களையே செய்வோம். நிச்சயமாக நாங்கள் (இந்த விசாரணை நாளை) உறுதியாக நம்புகிறோம்'' என்று கூறுவதை நீர் காண்பீராயின் (அவர்களுடைய நிலைமை எவ்வளவு கேவலமாயிருக்கும் என்பதை அறிந்து கொள்வீர்.)
Secde 32:13
13. நாம் விரும்பியிருந்தால் (இவர்களில் உள்ள) ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் நேரான வழியில் செல்லக்கூடிய வசதியைக் கொடுத்திருப்போம். எனினும், ஜின் இன்னும் மனிதர்களில் (உள்ள பாவிகள்) பலரைக் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவோம் என்ற நம் தீர்ப்பு (முன்னரே) ஏற்பட்டு விட்டது.
Secde 32:14
14. ஆகவே, ‘‘ (நம்மைச்) சந்திக்கும் இந்நாளை நீங்கள் மறந்துவிட்டதன் பலனை நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (இந்நாளை நீங்கள் மறந்தவாறே) நிச்சயமாக நாமும் உங்களை மறந்துவிட்டோம். நீங்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலின் காரணமாக என்றென்றும் நிலையான இந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருங்கள்'' (என்றும் கூறப்படும்).
Secde 32:15
15. நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், எவர்கள் (பூமியில்) சிரம் பணிந்து தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதி செய்கிறார்களோ அவர்கள்தான் நம் வசனங்களை மெய்யாகவே நம்பிக்கை கொள்வார்கள். அவர்கள் கர்வம்கொண்டு பெருமையடிக்கவும் மாட்டார்கள்.
Secde 32:16
16. அவர்கள் (நித்திரையில் ஆழ்ந்திருக்கும்போது) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தி, தங்கள் இறைவனிடம் (அவனது அருளை) ஆசை வைத்தும், (அவனது தண்டனையை) பயந்தும் பிரார்த்தனை செய்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள்.
Secde 32:17
17. அவர்கள் செய்த (நற்)காரியங்களுக்குக் கூலியாக நாம் அவர்களுக்காக (தயார்படுத்தி) மறைத்து வைத்திருக்கும் கண் குளிரக்கூடிய (சன்மானத்)தை எவராலும் அறிந்துகொள்ள முடியாது. (அவ்வளவு மேலான சன்மானங்கள் அவர்களுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளன.)
Secde 32:18
18. நம்பிக்கை கொண்ட ஒரு மனிதன் (இறைவனுக்கு) மாறு செய்பவனைப் போலாவானா? இருவரும் சமமாக மாட்டார்கள்.
Secde 32:19
19. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்யும் (நற்)செயல்களின் காரணமாக சொர்க்கம் தங்கும் இடமாகி அதில் விருந்தாளியாக உபசரிக்கப்படுவார்கள்.
Secde 32:20
20. எவர்கள் பாவம் செய்கிறார்களோ அவர்களின் தங்குமிடம் நரகம்தான். அதிலிருந்து அவர்கள் வெளிப்பட முயற்சிக்கும் போதெல்லாம் அதனுள் இழுத்துத் தள்ளப்பட்டு ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரக வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள்'' என்று அவர்களுக்குக் கூறப்படும்.
Secde 32:21
21. அவர்கள் (பாவங்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக (மறுமையில் அவர்கள்) பெரிய வேதனையை அடைவதற்கு முன்பாகவே (இம்மையில்) சிறியதொரு வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம்.
Secde 32:22
22. (இவ்வாறு) இறைவனின் (எச்சரிக்கையான) அத்தாட்சிகளைக் கொண்டு (மறுமையை) ஞாபகமூட்டிய பின்னரும் இதைப் புறக்கணித்து விடுபவனை விட மகா அநியாயக்காரன் யார்? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை பழிவாங்கியே தீருவோம்.
Secde 32:23
23. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து இருந்தோம்.ஆகவே, (நபியே! மிஃராஜ் இரவில்) அவரை சந்தித்ததில் நீர் சந்தேகிக்காதீர்.நாம் (மூஸாவுக்குக் கொடுத்த) அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நேர்வழி காட்டியாக ஆக்கினோம்.
Secde 32:24
24. நம் கட்டளைகளைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்த இஸ்ராயீலின் சந்ததிகளில் இருந்த ஒரு கூட்டத்தினரை அவர்களுக்கு வழி காட்டிகளாக அமைத்தோம். அவர்கள் நம் வசனங்களை முற்றிலும் உறுதியுடன் நம்பியவர்களாக இருந்தனர்.
Secde 32:25
25. (நபியே! அவர்களுக்குப் பின்னர் வழிகாட்டியாக ஏற்பட்டவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.) அவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ அதைப் பற்றி மறுமை நாளில் உமது இறைவன் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பான்.
Secde 32:26
26. இவர்களுக்கு முன்னர் எத்தனையோ வகுப்பினரை நாம் அழித்திருக்கிறோம். அவர்கள் வசித்திருந்த இடங்களின் மீதே இவர்கள் போய் வந்து கொண்டிருப்பதும் இவர்களுக்கு நேரான வழியைக் காட்டவில்லையா? நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (இதற்கும்) அவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?
Secde 32:27
27. நிச்சயமாக நாமே வறண்ட பூமிகளின் பக்கம் மழையின் மேகத்தை ஓட்டி (பொழியச் செய்து) அதன் மூலம் இவர்களும், இவர்களுடைய (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளும் புசிக்கக்கூடிய பயிர்களையும் வெளிப்படுத்துகிறோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? (இதைக்கூட) அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?
Secde 32:28
28. “(வாக்களிக்கப்பட்ட) தீர்ப்பு நாள் எப்பொழுது வரும்? நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அது வரும் காலத்தைக்) கூறுங்கள்'' எனக் கேட்கின்றனர்.
Secde 32:29
29. (அதற்கு) நீர் கூறுவீராக! “அந்தத் தீர்ப்பு நாளின்போது (இந்)நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொள்வது அவர்களுக்கு (ஒரு) பயனும் அளிக்காது. (வேதனையைத் தாமதப்படுத்த) அவர்கள் தவணையும் கொடுக்கப்பட மாட்டார்கள்.”
Secde 32:30
30. ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து (அந்நாளை) எதிர்பார்த்து இருப்பீராக. நிச்சயமாக அவர்களும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
Ahzab 33:1
1. நபியே! நீர் அல்லாஹ்வுக்கே பயப்படுவீராக. நிராகரிப்பவர்களுக்கும், வஞ்சகர்களுக்கும் (பயந்து அவர்களுக்கு) கீழ்ப்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) அறிந்தவனாக,ஞானமுடையவனாக இருக்கிறான்.
Ahzab 33:2
2. உமது இறைவனால் உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றுவீராக. நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாகவே இருக்கிறான்.
Ahzab 33:3
3. (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைப்பீராக. அல்லாஹ்வே (உமக்குப்) பொறுப்பேற்றுக்கொள்ள போதுமானவன்.
Ahzab 33:4
4. எம்மனிதருடைய நெஞ்சிலும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் அமைக்கவில்லை. (ஆகவே, இயற்கை முறைப்படி மனிதர்களுக்குள் ஏற்படும் சம்பந்தங்களே உண்மையான சம்பந்தமாகும். வாயால் கூறும் சம்பந்த முறைகள் எல்லாம் உண்மையாகாது. ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்கள் விவாகரத்தைக் கருதி) உங்கள் மனைவிகளில் எவரையும் நீங்கள் உங்கள் தாய் என்று கூறுவதனால் அல்லாஹ் அவர்களை உங்கள் (உண்மைத்) தாயாக்கிவிட மாட்டான். (அவ்வாறே உங்களுக்குப் பிறக்காத எவரையும் உங்கள் பிள்ளை என்றும்) நீங்கள் தத்தெடுத்துக் கொள்வதனால் அவர்களை உங்கள் (உண்மைச்) சந்ததிகளாக்கிவிட மாட்டான். இவை அனைத்தும் உங்கள் வாய்களால் கூறும் வெறும் வார்த்தைகளே (தவிர. உண்மையல்ல). அல்லாஹ் உண்மையையே கூறி, அவன் உங்களுக்கு நேரான வழியை அறிவிக்கிறான்.
Ahzab 33:5
5. ஆகவே, நீங்கள் (வளர்த்த) எவர்களையும் அவர்களுடைய (உண்மையான) தந்தைகளின் பெயர்களைக் கூறி (அன்னாரின் மகன் என்றே) அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடத்தில் நீதமாக இருக்கிறது. அவர்களின் தந்தைகளை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் உங்கள் மார்க்க சகோதரர்களாகவும் உங்கள் மார்க்க நண்பர்களாகவும் இருக்கின்றனர். (ஆகவே, அவர்களுடைய வயதுக்குத்தக்க முறையில் அவர்களை சகோதரர் என்றோ அல்லது நண்பரென்றோ அழையுங்கள். இவ்விஷயத்தில் இதற்கு முன்னர்) நீங்கள் ஏதும் தவறிழைத்திருந்தால் அதைப் பற்றி உங்கள் மீது குற்றமில்லை. (எனினும், இதன் பின்னர்) வேண்டுமென்றே உங்கள் மனமார கூறினாலே தவிர (அதுதான் உங்கள் மீது குற்றமாகும்). அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, மகா கருணை உடையவனாக இருக்கிறான்.
Ahzab 33:6
6. நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நம் தூதரான) நபிதான் மிக்க பிரதானமானவர். அவருடைய மனைவிகளோ அந்நம்பிக்கையாளர்களுக்குத் தாய்மார்கள் ஆவார்கள். (நம்பிக்கை கொண்ட ஒருவருடைய சொத்தை அடைய) மற்ற நம்பிக்கையாளர்களை விடவும், ஹிஜ்ரத்துச் செய்தவர்களைவிடவும், (நம்பிக்கையாளர்களான) அவருடைய சொந்த உறவினர்கள்தான் அல்லாஹ்வுடைய இவ்வேதத்திலுள்ளபடி உரிமையுடையவர்களாக ஆவார்கள். (ஆகவே, அவர்களுக்கே அவர்களுடைய பங்கிற்கேற்ப பொருளைப்பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.) எனினும், உங்கள் நண்பர்களில் எவருக்கும் நீங்கள் (ஏதும் கொடுத்து) நன்றி செய்யக்கருதினால் (நீங்கள் ஏதும் கொடுக்கலாம்.) இவ்வாறே வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
Ahzab 33:7
7. (நபியே! நம் தூதை எடுத்துரைக்கும்படி பொதுவாக) நபிமார்களிடமும் (சிறப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸாவிடமும் வாக்குறுதி வாங்கியதை நினைவு கூர்வீராக, மிக்க உறுதியான வாக்குறுதியையே இவர்களிடமும் நாம் எடுத்திருக்கிறோம்.
Ahzab 33:8
8. ஆகவே, உண்மை சொல்லும் (தூதர்களாகிய) அவர்களிடம், அவர்கள் கூறிய (தூதின்) உண்மைகளைப் பற்றி (அல்லாஹ்) அவர்களையும் கேள்வி (கணக்குக்) கேட்பான். (அவர்களை) நிராகரித்தவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
Ahzab 33:9
9. நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள்மீது (எதிரிகளின்) படைகள் (அணியணியாக) வந்த சமயத்தில் (புயல்) காற்றையும் உங்கள் கண்ணுக்குப் புலப்படாத படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம். (அச்சமயம்) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவனாகவே இருந்தான்.
Ahzab 33:10
10. உங்களுக்கு மேற்புறமிருந்தும், கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்து கொண்டு) அவர்கள் வந்த சமயத்தில் உங்கள் திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து உங்கள் உள்ளங்கள் உங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து (நீங்கள் திக்குமுக்காடி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
Ahzab 33:11
11. அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்கு உள்ளாகி மிக்க பலமாக அசைக்கப்பட்டனர் (அச்சுறுத்தப்பட்டனர்).
Ahzab 33:12
12. ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே (வெற்றி நமக்கே கிடைக்குமென்று) வாக்களித்தார்கள்'' என்று எவர்களுடைய உள்ளங்களில் நோயிருந்ததோ அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதையும் நினைத்துப் பாருங்கள்.
Ahzab 33:13
13. அவர்களில் ஒரு கூட்டத்தினர் (மதீனாவாசிகளை நோக்கி) ‘‘யஸ்ரிப் வாசிகளே! (எதிரிகள் முன்) உங்களால் நிற்க முடியாது. ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்'' என்று கூறியதையும், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவர்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இல்லாமலிருந்தும் ‘‘ நிச்சயமாக எங்கள் வீடுகள் அபாயகரமான நிலைமையில் இருக்கின்றன'' என்று கூறி (யுத்த களத்திலிருந்து சென்றுவிட நம்) நபியிடம் அனுமதி கோரியதையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் (யுத்தத்திலிருந்து) தப்பி ஓடிவிடுவதைத் தவிர (வேறொன்றையும்) விரும்பவில்லை.
Ahzab 33:14
14. பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் முன்னேறி வந்து (அச்சமயம்) குழப்பம் செய்யும்படி இவர்களைக் கோரியிருந்தால் (இந்த நயவஞ்சகர்கள்) குழப்பம் செய்தே தீருவார்கள். மேலும், (யுத்த களத்திலும்) வெகு சொற்ப நேரமே தவிர அவர்கள் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அங்கிருந்து ஓடிவிடுவார்கள்.)
Ahzab 33:15
15. அவர்கள் (யுத்தத்தில்) புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள். அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை (அவர்கள் மீறியதை)ப் பற்றி மறுமையில் கேட்கப்படுவார்கள்.
Ahzab 33:16
16. (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மரணத்தைவிட்டு அல்லது வெட்டுப்படுவதை விட்டு நீங்கள் வெருண்டோடிய போதிலும், உங்கள் ஓட்டம் உங்களுக்கு ஒரு பயனும் அளிக்காது. இச்சமயம் (நீங்கள் தப்பித்துக் கொண்ட போதிலும்) வெகு சொற்ப நாள்களன்றி (அதிக நாள்கள்) நீங்கள் சுகமனுபவிக்க மாட்டீர்கள்.''
Ahzab 33:17
17. (நபியே! மேலும்) கூறுவீராக: ‘‘அல்லாஹ் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடினால் அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவன் யார் அல்லது உங்களுக்கு அருள்புரிய நாடினால் அதை தடுப்பவன் யார்? அல்லாஹ்வை அன்றி அவர்கள் தங்களுக்கு உதவி செய்பவர்களையும் பாதுகாப்பவர்களையும் காணமாட்டார்கள்.
Ahzab 33:18
18. உங்களில் (யுத்தத்திற்குச் செல்பவர்களைத்) தடை செய்பவர்களையும், தங்கள் சகோதரர்களை நோக்கி நீங்கள் ‘‘(யுத்தத்திற்குச் செல்லாது) நம்மிடம் வந்து விடுங்கள்'' என்று கூறுபவர்களையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். (அவர்களில்) சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள்) யுத்தத்திற்கு வருவதில்லை.
Ahzab 33:19
19. (அவர்கள்) உங்கள் விஷயத்தில் கஞ்சத்தனத்தைக் கைக்கொண்டிருக்கின்றனர். (நபியே!) ஒரு பயம் சம்பவிக்கும் சமயத்தில், மரண தருவாயில் மயங்கிக் கிடப்பவர்களைப்போல் அவர்கள் கண்கள் சுழன்று சுழன்று உங்களைப் பார்த்த வண்ணமாய் இருப்பதை நீர் காண்பீர். அந்த பயம் நீங்கி (நம்பிக்கையாளர்களுக்கு வெற்றி ஏற்பட்டு) விட்டாலோ, கொடிய வார்த்தைகளைக் கொண்டு உங்களைக் குற்றங்குறைகள் கூறி (யுத்தத்தில் கிடைத்த) பொருள்கள் மீது பேராசை கொண்டு விழுகின்றனர். இவர்கள் உண்மையான நம்பிக்கையாளர்கள் அல்ல. ஆதலால், அவர்கள் செய்திருந்த (நற்)காரியங்கள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதாகவே இருக்கிறது.
Ahzab 33:20
20. (முற்றுகையிட்டிருந்த எதிரிகளின் ராணுவங்கள் முற்றுகையை எடுத்துக் கொண்டுசென்று விட்டபோதிலும்) அந்த ராணுவம் (இன்னும்) போகவில்லை என்றே இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அந்த ராணுவங்கள் திரும்ப வந்துவிட்டாலோ ஒரு கிராமத்திற்குச் சென்று (ஓடி ஒளிந்து) மறைவாயிருந்து கொண்டு (நீங்கள் வெற்றி பெறுகிறீர்களோ தோல்வியுறுகிறீர்களோ என்ற) உங்களைப் பற்றிய செய்தியை விசாரித்துக் கொண்டிருப்பார்கள். (அவ்வாறு செல்லாது) அவர்கள் உங்களுடன் தங்கி இருந்தாலும், ஒரு சொற்ப நேரமே தவிர (அதிக நேரம்) போர் புரிய மாட்டார்கள்.
Ahzab 33:21
21. எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ, அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து கொண்டிருப்பார்கள்.
Ahzab 33:22
22. நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவங்களைக் கண்ட பொழுது ‘‘(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்'' என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் ஏற்று கீழ்ப்படிவதையும் தவிர வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்திவிடவில்லை.
Ahzab 33:23
23. நம்பிக்கையாளர்களில் ஆண்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை உண்மையாக்கி வைத்தார்கள். அவர்களில் பலர் (இறந்து ‘ஷஹாதத்' என்னும்) தங்கள் இலட்சியத்தை அடைந்து விட்டனர். வேறு சிலர் (மரணிக்கவில்லை என்றாலும் அதை அடைய ஆவலுடன்) எதிர்பார்த்தே இருக்கின்றனர். (என்ன நேரிட்டாலும் அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து) ஒரு சிறிதும் மாறுபட்டுவிடவே இல்லை.
Ahzab 33:24
24. உண்மையுடன் நடந்துகொண்ட (இ)வர்களுக்கு அவர்களின் உண்மைக்குத் தக்க கூலியை அல்லாஹ் கொடுத்தே தீருவான். எனினும், நயவஞ்சகர்களை அவன் நாடினால் வேதனை செய்வான். (அவன் நாடினால் அவர்களையும் மன்னிப்புக் கோரும்படிச் செய்து) அவர்களை மன்னித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையுடையவனாக இருக்கிறான்.
Ahzab 33:25
25. நிராகரிப்பவர்களை அவர்களின் கோபத்தில் மூழ்கியவாறே அல்லாஹ் அவர்களைத் தடுத்து விட்டான். (இப்போரில்) அவர்கள் ஒரு நன்மையும் அடையவில்லை. (எல்லா விதங்களிலும் நஷ்டமே அடைந்தார்கள். இந்தப் போரில் நம்பிக்கையாளர்களை அல்லாஹ்வே பாதுகாத்துக் கொண்டான்.) இந்தப் போரில் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவனாக இருந்தான். அல்லாஹ் (அனைவரையும் விட) மிக்க பலவானாகவும், மிகைத்தவனாகவும் இருக்கிறான்.
Ahzab 33:26
26. (நம்பிக்கையாளர்களே! உங்கள்) எதிரிகளுக்கு உதவி செய்த வேதக்காரர்(களாகிய யூதர்)களை அவர்களுடைய அரண்மனைகளிலிருந்து இறங்கவைத்து அவர்களுடைய உள்ளங்களில் (திடுக்கத்தையும்) நடுக்கத்தையும் போட்டுவிட்டான். ஆகவே, அவர்களில் ஒரு தொகையினரை நீங்கள் வெட்டி விட்டீர்கள்; மற்றொரு தொகையினரை நீங்கள் சிறை பிடித்தீர்கள்.
Ahzab 33:27
27. அவர்களுடைய பூமிகளையும், அவர்களுடைய வீடுகளையும், அவர்களுடைய பொருள்களையும் (இதுவரை) நீங்கள் கால் வைக்காத அவர்களுடைய மற்ற பூமிகளையும் (அல்லாஹ்) உங்களுக்கு சொந்த மாக்கித் தந்தான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
Ahzab 33:28
28. நபியே! உமது மனைவிகளை நோக்கி கூறுவீராக: ‘‘ நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் (தலாக் கொடுத்து) உங்களை நீக்கி விடுகிறேன்.
Ahzab 33:29
29. நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மறுமை வாழ்க்கையையும் விரும்புவீர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள நன்மை செய்பவர்களுக்கு மகத்தான (நற்)கூலியை தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
Ahzab 33:30
30. நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான ஒரு மானக் கேடான காரியத்தைச் செய்வாராயின் அதற்குரிய தண்டனை அவருக்கு இரு மடங்காக அதிகரிக்கப்படும். இது அல்லாஹ்விற்கு மிக்க சுலபமாக இருக்கிறது.
Ahzab 33:31
31. உங்களில் எவரேனும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நற்செயல்களைச் செய்தால், அதற்குரிய கூலியை அவருக்கு நாம் இரு மடங்காகத் தருவோம். மேலும், மிக்க கண்ணியமான வாழ்க்கையையும் அவருக்கு நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
Ahzab 33:32
32. நபியுடைய மனைவிகளே! நீங்கள் மற்ற (சாதாரண) பெண்களைப் போன்றவர்களல்ல. நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்பட்டவர்களாயின் (அந்நியருடன் பேசும் சமயத்தில்) நளினமாகப் பேசாதீர்கள். ஏனென்றால் (பாவ) நோய் இருக்கும் உள்ளத்தையுடையவர் (தவறான) விருப்பங்களைக் கொள்ளக்கூடும். ஆகவே, நீங்கள் (எதைக் கூறிய போதிலும்) யதார்த்தவாதிகளைப்போல் (கண்டிப்பாகப்) பேசிவிடுங்கள்.
Ahzab 33:33
33. (நபியுடைய மனைவிகளே!) நீங்கள் உங்கள் (வீடுகளில் இருந்து வெளிச் சென்று திரியாது) வீடுகளுக்குள்ளாகவே தங்கி இருங்கள். முன்னிருந்த அறியாத மக்கள் (தங்களை அலங்கரித்துக் கொண்டு வெளியில் சென்று) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்களும் திரியாதீர்கள். தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நபியுடைய) வீட்டுடையார்களே! உங்களை விட்டு எல்லா அசுத்தங்களையும் நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகிறான்.
Ahzab 33:34
34. உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வுடைய வசனங்களையும், ஞானவாக்கியங்க(ளான ஹதீஸ்க)ளையும் ஞாபகத்தில் வையுங்கள். (அவற்றைக் கொண்டு நல்லுணர்ச்சி பெறுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவனாக, நன்கறிந்தவனாக இருக்கிறான்.
Ahzab 33:35
35. நிச்சயமாக முஸ்லிம் ஆண்களும் பெண்களும், நம்பிக்கையுடைய ஆண்களும் பெண்களும், (இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும்) கீழ்ப்படியும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
Ahzab 33:36
36. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதை விட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கையாளரான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்.
Ahzab 33:37
37. (நபியே!) அல்லாஹ்வும், நீரும் எவருக்கு அருள் புரிந்திருந்தீர்களோ அவரை நோக்கி ‘‘ நீ அல்லாஹ்வுக்குப் பயந்து உன் மனைவியை (நீக்காது) உன்னிடமே நிறுத்திக் கொள்'' என்று கூறிய சமயத்தில், நீர் மனிதர்களுக்குப் பயந்து அல்லாஹ் வெளியாக்க இருப்பதை உமது உள்ளத்தில் மறைத்தீர். நீர் பயப்படத் தகுதி உடையவன் அல்லாஹ்தான் (மனிதர்கள் அல்ல.) ‘ஜைது' (என்பவர் மனம் மாறி, தன் மனைவியைத்) தலாக்கு கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உமக்கு திருமணம் செய்து வைத்தோம். ஏனென்றால், நம்பிக்கையாளர்களால் (தத்தெடுத்து) வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் மனைவிகளைத் தலாக்குக் கூறிவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களை திருமணம் செய்து கொள்வதில் ஒரு தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக இது நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளை ஆகும்.
Ahzab 33:38
38. அல்லாஹ் தனக்கு சட்டமாக்கிய ஒரு காரியத்தை நிறைவேற்றுவது நபி மீது குற்றமாகாது. இதற்கு முன் உள்ளவர்களுக்கு (நபிமார்களுக்கு) அல்லாஹ் ஏற்படுத்திய வழியும் இதுவே. அல்லாஹ்வுடைய கட்டளைகள் முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன.
Ahzab 33:39
39. அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளைகளை எடுத்துரைத்தே தீருவார்கள்; அவ(ன் ஒருவ)னுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்பட மாட்டார்கள். (ஆகவே, நபியே! நீர் மற்றெவருக்கும் பயப்பட வேண்டாம். (இதைப் பற்றி அவர்களிடம்) கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்.
Ahzab 33:40
40. (நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. (ஆகவே, அவர் ஜைதுக்கு எவ்வாறு தந்தையாவார்?) எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் ஒரு தூதரையும் அனுப்பமாட்டான்.) அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
Ahzab 33:41
41. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமாக நினைவு கூருங்கள்.
Ahzab 33:42
42. காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள்.
Ahzab 33:43
43. அவன்தான் உங்களை(ப் பலவகைப் பாவ) இருள்களில் இருந்து வெளிப்படுத்தி பிரகாசத்தின் பக்கம் கொண்டுவந்து உங்கள் மீது அருள் புரிந்திருக்கிறான். அவனுடைய வானவர்களும் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறார்கள். அல்லாஹ், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க மகா கருணையுடையவனாக இருக்கிறான்.
Ahzab 33:44
44. (நம்பிக்கையாளர்கள்) அவனைச் சந்திக்கும் நாளில் (உங்களுக்கு) ‘‘ஈடேற்றம் உண்டாவதாக'' என்று ஆசீர்வதிப்பான். அவர்களுக்காக மிக்க கண்ணியமான கூலியையும் அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
Ahzab 33:45
45. நபியே! நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்குச்) சாட்சியாளராகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம்.
Ahzab 33:46
46. மேலும், அல்லாஹ்வுடைய உத்தரவுப்படி (மக்களை நீர்) அவன் பக்கம் அழைப்பவராகவும் பிரகாசிக்கும் ஒரு விளக்காகவும் (இருக்கிறீர்).
Ahzab 33:47
47. ஆகவே, (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக பெரும் அருள் இருப்பதாக நீர் அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
Ahzab 33:48
48. நிராகரிப்பவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் நீர் கீழ்ப்படியாதீர். அவர்களால் (உமக்கு) ஏற்படும் துன்பங்களை புறக்கணித்து விடுவீராக. (உம்முடைய எல்லா காரியங்களின்) பொறுப்பை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விடுவீராக. அல்லாஹ்வே (உமக்குப்) பொறுப்பேற்கப் போதுமானவன்.
Ahzab 33:49
49. நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை திருமணம் செய்து அவர்களை நீங்கள் தொடுவதற்கு முன்னதாகவே ‘தலாக்' கூறி (அவர்களை நீக்கி) விட்டால் (தலாக்குக் கூறப்பட்ட பெண்கள் இத்தா இருக்கவேண்டிய) கணக்கின்படி இத்தா இருக்கும்படி அவர்களை வற்புறுத்த உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. (அதாவது: அவர்கள் இத்தா இருக்க வேண்டியதில்லை.) நீங்கள் அவர்களுக்கு ஏதும் (பொருள்) கொடுத்து அழகான முறையில் (மண வாழ்க்கையில் இருந்து) அவர்களை நீக்கிவிடுங்கள்.
Ahzab 33:50
50. நபியே! நிச்சயமாக நீர் மஹர் கொடுத்து திருமணம் செய்து கொண்ட பெண்களையும், அல்லாஹ் உமக்கு (யுத்தத்தில்) கொடுத்தவர்களில் உமது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையும் நாம் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். உமது தந்தையின் சகோதரர்களின் மகள்கள், உமது அத்தையின் மகள்கள், உமது தாய்மாமனின் மகள்கள், உமது தாயின் சகோதரியுடைய மகள்கள் ஆகிய இவர்களில் எவர்கள் (மக்காவை விட்டு) உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களையும் (நீர் திருமணம் செய்துகொள்ள நாம் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். மேலும்) நம்பிக்கை கொண்ட ஒரு பெண், தன்னை (மஹரின்றியே) நபிக்கு அர்ப்பணம் செய்து நபியும் அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பினால், அவளையும் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். (நபியே!) இது சொந்தமாக உமக்கு (நாம் அளிக்கும்) விசேஷ சுதந்திரமாகும்; மற்ற நம்பிக்கையாளர்களுக்கல்ல. (மற்ற நம்பிக்கையாளர்களே!) அவர்கள் மனைவிகள் விஷயத்திலும், அவர்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் விஷயத்திலும் (மஹர் கொடுத்தே திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும், நான்குக்கு அதிகமான பெண்களை திருமணம் செய்துகொள்ளக் கூடாதென்றும்) நாம் அவர்கள் மீது சட்டமாக்கி இருக்கும் கட்டளையை நன்கறிவோம். (அதை அவர்கள் நிறைவேற்றியே தீர வேண்டும்.) உமக்கு அத்தகைய நிர்ப்பந்தம் ஏற்படாமல் இருப்பதற்காக (அக்கடமையிலிருந்து) உமக்கு விதி விலக்குச் செய்தோம். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையுடையவனாக இருக்கிறான்.
Ahzab 33:51
51. (நபியே!) உமது மனைவிகளில் நீர் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரை) விலக்கி வைக்கலாம்; நீர் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் விலக்கியவர்களில் நீர் விரும்பியவர்களை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இவற்றைப் பற்றி) உம் மீது ஒரு குற்றமுமில்லை. அவர்களுடைய கண்கள் குளிர்ந்திருப்பதற்கும் நீர் அவர்களுக்குக் கொடுத்தவற்றைப் பற்றி அவர்கள் அனைவருமே திருப்தியடைந்து கவலைப்படாதிருப்பதற்கும் இது மிக்க சுலபமான வழியாக இருக்கிறது. உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனாக, பொறுமையுடையவனாக இருக்கிறான்.
Ahzab 33:52
52. (நபியே! இப்போதிருக்கும் உமது மனைவிகளுக்குப்) பின்னர், வேறு பெண்கள் (அவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்ள) உமக்கு ஆகுமாக மாட்டார்கள். மேலும், ஒரு பெண்ணின் அழகு உம்மை கவர்ந்தபோதிலும் உமது மனைவிகளில் எவரையும் நீக்கி, அதற்குப் பதிலாக அவளை எடுத்துக் கொள்வதும் உமக்கு ஆகுமாகாது. ஆயினும், உமது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண் அவ்வாறல்ல. (அவள் உமக்கு ஆகுமானவளே!) அல்லாஹ் அனைத்தையும் கவனித்தவனாகவே இருக்கிறான்.
Ahzab 33:53
53. நம்பிக்கையாளர்களே! (உங்களை உங்கள் நபி விருந்துக்காக அழைத்திருந்த போதிலும்) அனுமதியின்றி நபியின் வீட்டினுள் செல்லாதீர்கள்.அது தயாராவதை எதிர்பார்த்துத் தாமதித்து இருக்கக்கூடிய விதத்தில் முன்னதாகவும் சென்று விடாதீர்கள். (விருந்து தயாரானதன் பின்னர்) நீங்கள் அழைக்கப்பட்டால்தான் உள்ளே செல்லவும். மேலும், நீங்கள் உணவைப் புசித்து விட்டால் உடனே வெளியேறி விடுங்கள். (அங்கிருந்து கொண்டே வீண்) பேச்சுக்களை ஆரம்பித்துவிட வேண்டாம். (அவ்வாறு செய்தால்) நிச்சயமாக இது நபிக்கு பெரும் வருத்தத்தையளிக்கும். (இதை) உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படலாம். எனினும், உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நபியுடைய மனைவிகளிடம் ஒரு பொருளை நீங்கள் கேட்(கும்படி நேரிட்)டால், (நீங்கள்) திரை மறைவிலிருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள். இது உங்கள் உள்ளங்களையும், அவர்கள் உள்ளங்களையும் பரிசுத்தமாக்கி வைக்கும். அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் துன்புறுத்துவது உங்களுக்குத் தகுமான தல்ல. மேலும், அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் ஒரு காலத்திலும் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிக்க கடுமையான (பாவமான) காரியமாகும்.
Ahzab 33:54
54. நீங்கள் எவ்விஷயத்தை வெளியிட்டபோதிலும் அல்லது மறைத்துக் கொண்ட போதிலும் நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையுமே நன்கறிபவனாக இருக்கிறான்.
Ahzab 33:55
55. நபியுடைய மனைவிகள் தங்கள் தந்தைகள் முன்பாகவும், தங்கள் மகன்கள் முன்பாகவும், தங்கள் சகோதரர்கள் முன்பாகவும், தங்கள் சகோதரர்களின் மகன்கள் முன்பாகவும், தங்கள் சகோதரிகளின் மகன்கள் முன்பாகவும், தங்கள் (போன்ற நம்பிக்கையாளர்களான) பெண்கள் முன்பாகவும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் முன்பாகவும் (வருவதில்) அவர்கள் மீது ஒரு குற்றமுமில்லை. (இவர்களைத் தவிர மற்றவர்கள் முன்பாக வருவதைப் பற்றி நபியுடைய மனைவிகளே!) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் பார்த்தவனாகவே இருக்கிறான்.
Ahzab 33:56
56. நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்.
Ahzab 33:57
57. எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் துன்புறுத்துகிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கிறான். இழிவு தரும் வேதனையையும் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
Ahzab 33:58
58. எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தை(ச் செய்ததாக)க் கூறித் துன்புறுத்துகிறார்களோ அவர்கள், நிச்சயமாக (பெரும்) அவதூற்றையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கின்றனர்.
Ahzab 33:59
59. நபியே! நீர் உமது மனைவிகளுக்கும், உமது மகள்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில் போட்டு) இறக்கிக் கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால், அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இதுசுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்.
Ahzab 33:60
60. (நபியே!) நயவஞ்சகர்களும், உள்ளத்தில் (பாவ) நோயுள்ளவர்களும், மதீனாவில் பொய்ப் பிரச்சாரம் செய்கிறவர்களும் (இனியும் தங்கள் விஷமத்திலிருந்து) விலகிக்கொள்ளாவிடில் நிச்சயமாக நாம் உம்மையே அவர்கள் மீது ஏவிவிட்டு விடுவோம். பின்னர், அதில் உமக்கு அருகில் வெகு சொற்ப நாள்களே தவிர அவர்கள் வசித்திருக்க முடியாது.
Ahzab 33:61
61. அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். ஆகவே, அவர்கள் எங்கு காணப்பட்ட போதிலும் (சிறை) பிடிக்கப்பட்டும், வெட்டி அழிக்கப்பட்டும் விடுவார்கள்.
Ahzab 33:62
62. அல்லாஹ் ஏற்படுத்திய வழி இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுதான். ஆகவே, (நபியே!) அல்லாஹ்வுடைய வழியில் எவ்வித மாறுதலையும் நீர் காணமாட்டீர்.
Ahzab 33:63
63. (நபியே!) இறுதிநாளைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என) மனிதர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘ (அது எப்பொழுது வருமென்ற) அதன் ஞானம் அல்லாஹ்விடம் (மட்டும்)தான் இருக்கிறது. நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்துவிடக்கூடும்.''
Ahzab 33:64
64. மெய்யாகவே அல்லாஹ் நிராகரிப்பவர்களைச் சபித்து, கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
Ahzab 33:65
65. அவர்கள் என்றென்றும் அதில்தான் தங்கிவிடுவார்கள். (அவர்களை) பாதுகாப்பவர்களையும் (அவர்களுக்கு) உதவி செய்பவர்களையும் அங்கு அவர்கள் காணமாட்டார்கள்.
Ahzab 33:66
66. நரகத்தில் அவர்களுடைய முகங்களை புரட்டிப் புரட்டிப் பொசுக்கும் நாளில் ‘‘எங்கள் கேடே! நாங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே!'' என்று கதறுவார்கள்.
Ahzab 33:67
67. மேலும் ‘‘எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் கீழ்ப்படிந்தோம். நாங்கள் தப்பான வழியில் செல்லும்படி அவர்கள் செய்து விட்டார்கள்.
Ahzab 33:68
68. (ஆகவே) எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுத்து, அவர்களை பெரும் சாபத்தால் சபித்துவிடு'' என்று கூறுவார்கள்.
Ahzab 33:69
69. நம்பிக்கையாளர்களே! மூஸாவை(ப் பற்றி பொய்யாக அவதூறு கூறி அவரை)த்துன்புறுத்திய மக்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அவர்கள் கூறிய அவதூற்றிலிருந்து மூஸாவை அல்லாஹ் பரிசுத்தமாக்கி விட்டான். அவர் அல்லாஹ்விடத்தில் மிக்க கண்ணியமானவராகவே இருந்தார்.
Ahzab 33:70
70. (ஆகவே,) நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள்.
Ahzab 33:71
71. அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார்.
Ahzab 33:72
72. நிச்சயமாக ‘‘(நம்) பொறுப்பைச் சுமந்து கொள்வீர்களா?'' என்று நாம் வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றிடம் நாம் வினவினோம். அதற்கு அவை அதைப் பற்றிப் பயந்து, அதைச் சுமந்து கொள்ளாது விலகிவிட்டன. அத்தகைய பொறுப்பைத்தான் மனிதன் சுமந்துகொண்டான். (ஆகவே) நிச்சயமாக அவன் அறியாதவனாக தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டவனாக இருக்கிறான்.
Ahzab 33:73
73. (அத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதற்கு மாறாக நடக்கும்) நயவஞ்சக ஆண்களையும் பெண்களையும், இணைவைத்து வணங்கும் ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வான். (அந்த பொறுப்பை மதித்து நடக்கும்) நம்பிக்கையாளர்களாகிய ஆண்களையும் பெண்களையும் (அவர்களுடைய) தவறிலிருந்து (அருளின் பக்கம்) அல்லாஹ் திருப்பிவிடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக கருணை உடையவனாக இருக்கிறான்.
Sebe' 34:1
1. புகழனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவைகளே! மறுமையிலும் எல்லா புகழும் அவனுக்குரியதே! அவன்தான் ஞானமுடையவன், அனைத்தையும் நன்கறிந்தவன்.
Sebe' 34:2
2. பூமிக்குள் பதிகின்ற (வித்து போன்ற)வற்றையும், அதில் இருந்து (முளைத்து செடிகொடிகளாக) வெளிப்படுகின்றவற்றையும் வானத்தில் இருந்து இறங்குபவற்றையும், அதன் பக்கம் ஏறுகின்றவற்றையும் அவன் நன்கறிவான். அவன் மகா கருணையுடையவன் மிக்க மன்னிப்பவன்.
Sebe' 34:3
3. (எனினும்) “மறுமை நமக்கு வராது'' என்று (இந்)நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். (நபியே!) கூறுவீராக: ‘‘ ஏன் வராது, மறைவானவை அனைத்தையும் அறிந்தவனான என் இறைவன் மீது சத்தியம்! கண்டிப்பாக அது உங்களிடம் வந்தே தீரும். அவன் அறிவை விட்டும் வானங்களிலோ பூமியிலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் தப்பிவிடாது. அணுவைவிட சிறியதோ அல்லது பெரியதோ (ஒவ்வொன்றும் ‘லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்னும்) தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.''
Sebe' 34:4
4. நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்தவர்களுக்குக் கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு அதில் பதியப்பட்டுள்ளது). இத்தகையவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் (வாழ்க்கையும்) உண்டு.
Sebe' 34:5
5. எவர்கள் நம் வசனங்களுக்கு எதிராக (நம்மை)த் தோற்கடிக்க முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் தண்டனையின் வேதனை உண்டு.
Sebe' 34:6
6. (நபியே!) எவர்களுக்கு ஞானம் கொடுக்கப்பட்டதோ அவர்கள் உமக்கு இறக்கப்பட்ட இவ்வேதத்தை, உமது இறைவனால் அருளப்பட்ட உண்மையான வேதம் என்றும்; அது அனைவரையும் மிகைத்த மிக்க புகழுக்குரியவனின் நேரான வழியை அறிவிக்கக்கூடியது என்றும் எண்ணுவார்கள்.
Sebe' 34:7
7. எனினும், நிராகரித்தவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (இறந்து, மக்கி) அணுவணுவாகப் பிரிக்கப்பட்டதன் பின்னரும் நிச்சயமாக நீங்கள் புதிதாகப் படைக்கப்பட்டு விடுவீர்கள் என்று உங்களுக்கு (பயமுறுத்தி)க் கூறக்கூடிய ஒரு மனிதரை நாம் உங்களுக்கு அறிவிக்கவா'' என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.
Sebe' 34:8
8. என்ன, (இம்மனிதர்) ‘‘அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறுகிறாரோ அல்லது அவருக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறதோ'' (என்று அவர்களிடம் கூறுகின்றனர்.) மாறாக. எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்கள்தான் பெரும் வேதனையிலும், வெகு தூரமானதொரு வழிகேட்டிலும் இருக்கின்றனர்.
Sebe' 34:9
9. வானத்திலும் பூமியிலும் அவர்களுக்கு முன்னும் பின்னும் இருப்பவற்றை அவர்கள் கவனிக்கவில்லையா? நாம் விரும்பினால் அவர்களைப் பூமிக்குள் சொருகிவிடுவோம் அல்லது வானத்திலிருந்து சில துண்டுகளை அவர்கள் மேல் எறிந்து (அவர்களை அழித்து) விடுவோம். (அல்லாஹ்வையே) நோக்கி நிற்கும் ஒவ்வொரு அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
Sebe' 34:10
10. மெய்யாகவே நாம் நம் புறத்திலிருந்து தாவூதுக்கு பெரும் அருள் புரிந்தோம். மலைகளே! பறவைகளே! ‘‘ நீங்கள் அவருடன் (சேர்ந்து) துதி செய்யுங்கள்'' (என்றும் கட்டளையிட்டோம்). மேலும், அவருக்கு இரும்பை (மெழுகைப் போல்) மென்மையாக்கித் தந்தோம்.
Sebe' 34:11
11. மேலும், (சங்கிலி) வளையங்களை செய்து (அவற்றை முறைப்படி) ஒழுங்காக இணைத்து போர்ச்சட்டை செய்யவும் (என்று கட்டளையிட்டதுடன் அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நோக்கி) ‘‘நீங்கள் நற்செயல்களையே செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நான், நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன்'' (என்றோம்).
Sebe' 34:12
12. மேலும், ஸுலைமானுக்கு காற்றை வசப்படுத்தித் தந்தோம். அதன் காலைப் பயணம் ஒரு மாத தூரமும், அதன் மாலைப் பயணம் ஒரு மாத தூரமுமாக இருந்தது. இன்னும், செம்பை ஊற்று (நீரை)ப் போல் நாம் அவருக்கு (உருகி) ஓடச்செய்தோம். தன் இறைவனுடைய கட்டளைப்படி அவருக்கு வேலை செய்யக்கூடிய ஜின்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்து (அவருக்கு கட்டுப்பட்டு நடப்பதில்) அவர்களில் எவன் நம் கட்டளையைப் புறக்கணிக்கிறானோ அவனை நரக வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்றோம்).
Sebe' 34:13
13. ஸுலைமான் விரும்பிய மாளிகைகளையும், சிலைகளையும், (பெரிய பெரிய) தண்ணீர்த் தொட்டிகளைப் போன்ற பெரும் கொப்பரைகளையும், அசைக்க முடியாத பெரிய (பெரிய) ‘தேகு' (சமையல் பாத்திரங்)களையும் அவை செய்து கொண்டிருந்தன. (அவருடைய குடும்பத்தினரை நோக்கி) ‘‘தாவூதுடைய சந்ததிகளே ! இவற்றுக்காக நீங்கள் (நமக்கு) நன்றி செலுத்திக் கொண்டிருங்கள்'' (என்று கட்டளையிட்டோம்). எனினும், என் அடியார்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சொற்பமே ஆவார்கள்.
Sebe' 34:14
14. ஸுலைமானுக்கு நாம் மரணத்தை விதித்தபொழுது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் சாய்ந்திருந்த தடியை அரித்து விட்ட பூச்சியைத் தவிர (மற்ற எவரும்) அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. (அவர் சாய்ந்திருந்த தடியைக் கரையான் பூச்சிகள் அரித்து விட்டன. ஆகவே, அதன் மீது சாய்ந்திருந்த ஸுலைமான் கீழே விழுந்துவிட்டார்.) அவர் கீழே விழவே (வேலை செய்து கொண்டிருந்த) அந்த ஜின்களுக்கு தாங்கள் மறைவான விஷயங்களை அறியக் கூடுமாக இருந்தால் (இரவு பகலாக உழைக்க வேண்டிய) இழிவு தரும் இவ்வேதனையில் தங்கி இருக்க மாட்டோம் என்று தெளிவாகத் தெரிந்தது.
Sebe' 34:15
15. மெய்யாகவே ‘ஸபா'வாசிகள் வசித்திருந்த இடத்தில் அவர்களுக்கு நல்லதோர் அத்தாட்சியிருந்தது. (அதன் வழியாகச் செல்பவர்களுக்கு) வலப்புறமாகவும் இடப்புறமாகவும் இரு சோலைகள் இருந்தன. ‘‘ உங்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிந்தவற்றைப் புசியுங்கள்; அவனுக்கு நன்றி செலுத்துங்கள். (இம்மையில்) வளமான நகரமும், (மறுமையில்) மிக்க மன்னிப்புடைய இறைவனும் (உங்களுக்கு) உண்டு'' (எனவும் கூறப்பட்டது).
Sebe' 34:16
16. எனினும், அவர்கள் (அதைப்) புறக்கணித்து(ப் பாவத்தில் ஆழ்ந்து) விட்டனர். (ஆகவே, அவர்கள் கட்டியிருந்த மகத்தானதொரு அணையை உடைக்கக்கூடிய) பெரும் வெள்ளத்தை அவர்களுக்குக் கேடாக அனுப்பிவைத்தோம். அவர்களுடைய (உன்னதமான கனிகளையுடைய) இரு சோலைகளைக் கசப்பும், புளிப்புமுள்ள காய்களையுடைய மரங்களாலும், சில இலந்தை மரங்களாலும் நிரம்பிய தோப்புகளாக மாற்றிவிட்டோம்.
Sebe' 34:17
17. நம் நன்றியை அவர்கள் மறந்ததற்கு இதை நாம் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தோம். நன்றி கெட்டவர்களுக்கே தவிர (மற்றெவருக்கும் இத்தகைய) கூலியை நாம் கொடுப்போமா?
Sebe' 34:18
18. அவர்களு(டைய ஊரு)க்கும் நாம் அருள்புரிந்த (சிரியாவிலுள்ள செழிப்பான) ஊர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாகப் பல கிராமங்களையும் உண்டுபண்ணி அவற்றில் பாதைகளையும் அமைத்து, ‘‘ இரவு பகல் எந்த நேரத்திலும் அச்சமற்றவர்களாக அதில் பிரயாணம் செய்யுங்கள்'' (என்று கூறியிருந்தோம்).
Sebe' 34:19
19. ஆனால், அவர்கள் (இந்த நன்றியைப் புறக்கணித்து ‘‘தொடர்ச்சியாக ஊர்கள் இருப்பது எங்கள் பயணத்திற்கு இன்பம் அளிக்கவில்லை.) எங்கள் இறைவனே! எங்கள் பயணங்கள் நெடுந்தூரமாகும்படிச் செய்(வதற்காக மத்தியில் தொடர்ச்சியாக உள்ள இக்கிராமங்களை அழித்து விடு)வாயாக!'' என்று பிரார்த்தித்துத் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். ஆகவே, (அவர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அழித்து) அவர்களையும் பல இடங்களுக்குச் சிதறடித்துப் பலரும் (இழிவாகப்) பேசப்படக்கூடிய கதைகளாக்கிவிட்டோம். பொறுமையுடையவர்கள், நன்றி செலுத்துபவர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
Sebe' 34:20
20. நிச்சயமாக (அவர்கள் தன்னைப் பின்பற்றுவார்களென்று) இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை உண்மை என்றே அவன் கண்டு கொண்டான். ஆகவே, நம்பிக்கை கொண்ட சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அவனையே பின்பற்றினார்கள்.
Sebe' 34:21
21. எனினும், அவர்களை நிர்ப்பந்திக்க அவனுக்கு ஒரு அதிகாரமும் இல்லை. ஆயினும், மறுமையை நம்பாத அவர்களில் (மறுமையை) நம்புபவர் எவர் என்பதை நாம் தெளிவாக அறி(வித்து விடு)வதற்காகவே இவ்வாறு நடைபெற்றது. உம் இறைவனே எல்லா பொருள்களையும் பாதுகாப்பவன் ஆவான்.
Sebe' 34:22
22. (நபியே!) கூறுவீராக: அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டீர்களோ அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள். வானங்களிலோ பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் அதிகாரம் இல்லை. மேலும், அவற்றை படைப்பதில் அவர்களுக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை. (அவற்றை படைப்பதில்) அவை அவனுக்கு உதவி செய்யவுமில்லை.
Sebe' 34:23
23. அவனுடைய அனுமதி பெற்ற (வான)வர்களைத் தவிர மற்றவர்கள் அவனிடத்தில் பரிந்து பேசுவதும் பயனளிக்காது. (அல்லாஹ்வுடைய ஒரு கட்டளை பிறக்கும் சமயத்தில் அவர்கள் பயந்து நடுங்குகின்றனர்.) அவர்களுடைய உள்ளத்தில் இருந்து நடுக்கம் நீங்கியதும் (அவர்களில் ஒருவர் மற்றவர்களை நோக்கி) ‘‘ உங்கள் இறைவன் என்ன கட்டளையிட்டான்?'' என்று கேட்பார்கள். அதற்கு மற்றவர்கள் ‘‘ (இடவேண்டிய) நியாயமான கட்டளையையே இட்டான்; அவனோ மிக்க மேலானவன், மிகப் பெரியவன் ஆவான்'' என்று கூறுவார்கள்.
Sebe' 34:24
24. (நபியே! நிராகரிக்கும் இவர்களை நோக்கி) ‘‘வானத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்?'' என்று கேட்பீராக. (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன?) ‘‘அல்லாஹ்தான்'' என்று (நீரே) கூறி ‘‘மெய்யாகவே நேரான வழியில் இருப்பவர் அல்லது பகிரங்கமான தவறான வழியில் இருப்பவர் நீங்களா அல்லது நாமா?'' என்றும் கேட்பீராக.
Sebe' 34:25
25. (நபியே!) கூறுவீராக: ‘‘நாங்கள் செய்யும் குற்றங்களைப் பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்; (அவ்வாறே) நீங்கள் செய்பவற்றைப் பற்றி நாங்கள் கேட்கப்பட மாட்டோம்''
Sebe' 34:26
26. (நபியே!) கூறுவீராக: ‘‘முடிவில் (மறுமை நாளில்) நமது இறைவன் நம் அனைவரையும் ஒன்று சேர்த்து, பிறகு நமக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிப்பான். அவன் தீர்ப்பளிப்பதில் மிக்க மேலானவனும் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஆவான்.''
Sebe' 34:27
27. ‘‘ (சிலை வணங்கிகளே) அவனுக்கு இணைதெய்வங்களை நீங்கள் ஏற்படுத்தினீர்களே அவற்றைப்பற்றி எனக்கு கூறுங்கள்'' அவ்வாறு (எதுவும் அவனுக்கு இணை) இல்லை. மாறாக, அவனோ அனைவரையும் மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆகிய (ஒரே இறைவனான) அல்லாஹ் ஆவான். (ஆகவே அவனுக்கு அறவே இணை துணை இல்லை)'' என்று (நபியே!) கூறுவீராக.
Sebe' 34:28
28. (நபியே!) நாம் உம்மை (இவ்வுலகில் உள்ள) எல்லா மனிதர்களுக்குமே நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும்தான் அனுப்பிவைத்திருக்கிறோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்ளவில்லை.
Sebe' 34:29
29. ‘‘ நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (விசாரணைக் காலம் என்று) நீங்கள் கூறும் வாக்குறுதி எப்பொழுது வரும்?'' என்று அவர்கள் கேட்கின்றனர்.
Sebe' 34:30
30. அதற்கு நீர் கூறுவீராக: ‘‘உங்களுக்காக ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவுமாட்டீர்கள்; முந்தவுமாட்டீர்கள்.''
Sebe' 34:31
31. ‘‘ நிச்சயமாக நாங்கள் இந்த குர்ஆனையும் நம்பமாட்டோம்; இதற்கு முன்னுள்ள வேதங்களையும் நம்பவேமாட்டோம்'' என்று (இந்த) நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, இவ்வக்கிரமக்காரர்கள் தங்கள் இறைவன்முன் நிறுத்தப்பட்டு அவர்களில் சிலர் சிலரை நிந்திப்பதையும்; பலவீனமானவர்கள் கர்வம் கொண்டவர்களை நோக்கி ‘‘ நீங்கள் இல்லையெனில் நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டேயிருப்போம்'' என்று கூறுவதையும் நீர் பார்ப்பீராயின் (அவர்களின் இழி நிலைமையைக் கண்டு கொள்வீர்).
Sebe' 34:32
32. அதற்கு (அவர்களில்) கர்வம் கொண்டிருந்தவர்கள் பலவீனமாக இருந்தவர்களை நோக்கி ‘‘உங்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர் (நீங்கள் அதில் செல்லாது) நாங்களா உங்களைத் தடுத்தோம்? (அவ்வாறு) இல்லை; நீங்கள்தான் (அதில் செல்லாது) குற்றவாளிகளாக ஆனீர்கள்'' என்று கூறுவார்கள்.
Sebe' 34:33
33. அதற்கு, பலவீனமாயிருந்தவர்கள் கர்வம் கொண்டிருந்தவர்களை நோக்கி, ‘‘sஎன்னே! நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணை வைக்குமாறு நீங்கள் எங்களை ஏவி, இரவு பகலாக சூழ்ச்சி செய்யவில்லையா?'' என்று கூறுவார்கள். ஆகவே, இவர்கள் அனைவருமே வேதனையைக் (கண்ணால்) காணும் சமயத்தில் தங்கள் துக்கத்தை மறைத்துக்கொண்டு (இவ்வாறு) கூறுவார்கள். (ஆனால்,) நிராகரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டு விடுவோம். இவர்கள், தாங்கள் செய்துகொண்டிருந்த (தீய) செயலுக்குத் தக்க கூலியே தவிர மற்றெதுவும் கொடுக்கப்படுவார்களா?
Sebe' 34:34
34. அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நமது) தூதரை நாம் எங்கெங்கு அனுப்பினோமோ அங்கெல்லாம் இருந்த செல்வந்தர்கள் (அவரை நோக்கி) ‘‘நிச்சயமாக நாம் நீங்கள் கொண்டு வந்த தூதை நிராகரிக்கிறோம்'' என்று கூறாமல் இருக்கவில்லை.
Sebe' 34:35
35. மேலும், ‘‘நாங்கள் அதிகமான செல்வங்களையும் சந்ததிகளையும் உடையவர்கள். ஆகவே, (மறுமையில்) நாங்கள் வேதனை செய்யப்பட மாட்டோம்'' என்று கூறினர்.
Sebe' 34:36
36. (அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்களுக்கு வாழ்வாதாரத்தை அதிகமாகவும் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்குக்) குறைத்தும் விடுகிறான். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை.''
Sebe' 34:37
37. (நீங்கள் எண்ணுகிறவாறு) உங்கள் செல்வங்களும் உங்கள் சந்ததிகளும் உங்களை நம்மிடம் சேர்க்கக் கூடியவை அல்ல. ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ (அவையே அவர்களை நம்மிடம் சேர்க்கும்.) அவர்களுக்கு அவர்கள் செய்த (நற்)செயலின் காரணமாக இரட்டிப்பான கூலியுண்டு. மேலும், அவர்கள் (சொர்க்கத்திலுள்ள) மேல் மாடிகளில் கவலையற்றும் வசிப்பார்கள்.
Sebe' 34:38
38. நம் வசனங்களுக்கு எதிராக (நம்மை) தோற்கடிக்க முயற்சிப்பவர்கள் மறுமை நாளன்று வேதனையில் தள்ளப்படுவார்கள்.
Sebe' 34:39
39. (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்கு அதிகமான வாழ்வாதாரத்தைக் கொடுக்கிறான்; தான் விரும்பியவர்களுக்கு குறைத்து விடுகிறான். ஆகவே, நீங்கள் எதை தானம் செய்தபோதிலும் அவன் அதற்குப் பிரதி கொடுத்தே தீருவான். அவன் கொடையளிப்பவர்களில் மிக்க மேலானவன்.
Sebe' 34:40
40. (வானவர்களை வணங்கிக் கொண்டிருந்த) அவர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளில், வானவர்களை நோக்கி ‘‘இவர்கள் உங்களையா வணங்கி வந்தார்கள்?'' என்று கேட்கப்படும்.
Sebe' 34:41
41. அதற்கவர்கள், ‘‘(எங்கள் இறைவனே!) நீ மிகப் பரிசுத்தமானவன். நீதான் எங்கள் பாதுகாவலன்; அவர்களன்று. மாறாக, அவர்கள் ஜின்களையே வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த ஜின்களையே நம்பிக்கை கொண்டும் இருந்தார்கள்'' என்று (வானவர்கள்) கூறுவார்கள்.
Sebe' 34:42
42. அந்நாளில் உங்களில் ஒருவர் மற்றவருக்கு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்றவராக இருப்பார். மேலும், (அச்சமயம்) அவ்வக்கிரமக்காரர்களை நோக்கி ‘‘நீங்கள் (நம் வேதனையைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்த(தன் காரணமாக) இந்நரக வேதனையைச் சுவைத்துப் பாருங்கள்'' எனக் கூறுவோம்.
Sebe' 34:43
43. அவர்களுக்கு நம் தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதற்கவர்கள் (நம் தூதரைப் பற்றி) ‘‘இவர் ஒரு சாதாரண மனிதரே தவிர வேறில்லை. உங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றிலிருந்து உங்களைத் தடுத்துவிடவே இவர் விரும்புகிறார்'' என்றும் (நம் தூதர் கூறுகின்ற) ‘‘இது வெறும் கட்டுக் கதையே தவிர வேறில்லை'' என்றும் கூறுகின்றனர். மேலும்,”(திரு குர்ஆனாகிய) இந்த உண்மை அவர்களிடம் வந்த சமயத்தில், இது பகிரங்கமான சூனியமே தவிர வேறில்லை'' என்றும் இந்த நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்.
Sebe' 34:44
44. (நபியே! இதற்கு முன்னர்) நாம் (உம்மை நிராகரிக்கும் அரபிகளாகிய) இவர்களுக்கு, இவர்கள் ஓதக்கூடிய வேதம் எதையும் கொடுக்கவில்லை; அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய தூதர் எவரையும் உமக்கு முன்னர் நாம் அவர்களிடம் அனுப்பவில்லை. (இவ்வாறிருந்தும் அவர்கள் உம்மை நிராகரிக்கின்றனர்.)
Sebe' 34:45
45. இவர்களுக்கு முன்னிருந்த (அரபிகளல்லாத)வர்களும் மற்ற (தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கினார்கள். அவர்களுக்கு நாம் கொடுத்திருந்ததில் பத்தில் ஒரு பாகத்தையும் இவர்கள் அடைந்து விடவில்லை. (அதற்குள்ளாகவே) இவர்கள் எனது தூதர்களைப் பொய்யாக்க முற்பட்டு இருக்கின்றனர். (இவர்களுக்கு முன்னர் நம் தூதர்களை நிராகரித்து பொய்யாக்கியவர்களை) நான் தண்டித்தது எவ்வாறாயிற்று? (என்பதை இவர்கள் கவனிப்பார்களாக)
Sebe' 34:46
46. (நபியே!) கூறுவீராக: ‘‘நான் உங்களுக்கு உபதேசிப்பதெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான். நீங்கள் ஒவ்வொருவராகவோ, இரண்டிரண்டு பேர்களாகவோ அல்லாஹ்வுக்காகச் சிறிது பொறுத்திருந்து, பின்னர் (உங்களுக்குள்) ஆலோசித்துப் பாருங்கள். உங்கள் சிநேகிதராகிய எனக்கு எத்தகைய பைத்தியமும் இல்லை. (நான் உங்களுக்குக்) கடினமான வேதனை வருவதற்கு முன்னர் (அதைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை.''
Sebe' 34:47
47. (நபியே! மேலும்) கூறுவீராக: ‘‘நான் உங்களிடத்தில் ஏதும் கூலியைக் கேட்டிருந்தால் அது உங்களுக்கே சொந்தம் ஆகட்டும். என் கூலி அல்லாஹ்விடமே தவிர (உங்களிடம்) இல்லை. அவன் அனைத்திற்கும் (அவற்றை நன்கறிந்த) சாட்சி ஆவான்.
Sebe' 34:48
48. (மேலும்) கூறுவீராக: ‘‘நிச்சயமாக எனது இறைவன் (பொய்யை அழிப்பதற்காக) மெய்யைத் தெளிவாக்குகிறான். மறைவானவை அனைத்தையும் அவன் நன்கறிந்தவன்.''
Sebe' 34:49
49. (மேலும்) கூறுவீராக: ‘‘உண்மை வந்துவிட்டது. பொய் புதிதாக எதையும் (இதுவரை) செய்து விடவில்லை. இனியும் செய்யப் போவதில்லை.''
Sebe' 34:50
50. (மேலும்) கூறுவீராக: ‘‘நான் வழிதவறி இருந்தால் அது எனக்கே நஷ்டமாகும். நான் நேரான வழியை அடைந்து இருந்தால் அது என் இறைவன் எனக்கு வஹ்யி மூலமாக அறிவித்ததன் காரணமாகவே ஆகும். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் (அனைத்திற்கும்) சமீபமானவனும் ஆவான்.
Sebe' 34:51
51. ‘‘(மறுமையில்) இவர்கள் திடுக்கிட்டு(த் தப்பி) ஓட முயற்சித்த போதிலும் ஒருவருமே தப்பிவிட மாட்டார்கள். மிக்க சமீபத்திலேயே பிடிபட்டு விடுவார்கள்'' என்பதை நீர் காண்பீராயின் (அது எவ்வாறிருக்கும்)!
Sebe' 34:52
52. (அச்சமயம்) இவர்கள் (திடுக்கிட்டு) அதை (நம்பிக்கை கொண்டோம்) நம்பிக்கை கொண்டோம் என்று கதறுவார்கள். (சத்தியத்திலிருந்து) இவ்வளவு தூரம் சென்றுவிட்ட இவர்கள் (உண்மையான நம்பிக்கையை) எவ்வாறு அடைந்து விடுவார்கள்?
Sebe' 34:53
53. இதற்கு முன்னரோ, இவர்கள் அதை நிராகரித்துக் கொண்டும், இவ்வளவு தூரத்தில் அவர்களுக்கு மறைத்திருந்ததைப் (பொய் என்று) பிதற்றிக்கொண்டும் இருந்தனர்.
Sebe' 34:54
54. அவர்களுக்கும் அவர்கள் விரும்பியவற்றுக்கும் இடையில் தடை ஏற்படுத்தப்பட்டுவிடும். அவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்த இவர்களுடைய இனத்தாருக்குச் செய்யப்பட்டது. (ஏனென்றால்,) நிச்சயமாக அவர்களும் பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்தே கிடந்தனர்.
Fatır 35:1
1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வானங்களையும் பூமியையும் அவனே படைத்தான். வானவர்களைத் தன் தூதைக் கொண்டு போகிறவர்களாகவும் ஆக்கினான். அவர்கள் இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு இறக்கைகள் உடையவர்களாக இருக்கின்றனர். அவன் விரும்பியதைத் தன் படைப்பில் மேலும் அதிகப்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Fatır 35:2
2. அல்லாஹ் தன் அருளை மனிதர்களுக்குத் திறந்து விட்டால் அதைத் தடுத்து விடக்கூடியவன் ஒருவனுமில்லை. அவன் (தன் அருளைத்) தடுத்துக் கொண்டால் அதை அனுப்பக்கூடியவனும் ஒருவனுமில்லை. அவன் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
Fatır 35:3
3. மனிதர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வையன்றி வேறொரு படைப்பவன் இருக்கிறானா? வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் அவனே உங்களுக்கு உணவளிக்கிறான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு வெருண்டோடுகிறீர்கள்?
Fatır 35:4
4. (நபியே!) அவர்கள் உம்மைப் பொய்யாக்கினால் (அதற்காக நீர் கவலைப்படாதீர்.) இவ்வாறே உங்களுக்கு முன்னர் வந்த தூதர் பலரும் பொய்யாக்கப்பட்டனர். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் கொண்டு வரப்படும்.
Fatır 35:5
5. மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை மெய்யாகவே உங்களை மயக்கிவிட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம்.
Fatır 35:6
6. நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாக இருக்கிறான். ஆகவே, அவனை நீங்களும் எதிரியாகவே கருதுங்கள். அவன் (தன்னைப் பின் பற்றிய) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் நரகவாசிகளாகி விடுவதற்காகவே.
Fatır 35:7
7. எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரிய கூலியும் உண்டு.
Fatır 35:8
8. எவனுக்குத் தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதை அழகாகக் காண்கிறானோ அவனா (தீயதை தீயதாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கிறவனைப் போன்று ஆவான்)? (ஒரு போதும் ஆக மாட்டான்.) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைத் தவறான வழியில் விட்டு விடுகிறான். தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!) அவர்களுக்காக உமது உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நீர் கவலைப்படாதீர். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.
Fatır 35:9
9. அல்லாஹ்தான் காற்றை அனுப்புகிறான். அது மேகங்களை ஓட்டுகிறது. பின்னர், அவற்றை இறந்து (பட்டுப்)போன பூமியின் பக்கம் செலுத்தி, இறந்து போன பூமியை உயிர்ப்பிக்கிறான். (மரணித்தவர்கள் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே.
Fatır 35:10
10. எவன் கண்ணியத்தையும், சிறப்பையும் விரும்புகிறானோ, (அவன் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடக்கவும். ஏனென்றால்) கண்ணியங்கள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (கலிமா தையிப், ஸலவாத்து போன்ற) நல்ல வாக்கியங்கள் அவன் பக்கமே உயருகின்றன. நல்ல காரியங்களை அவனே உயர்த்துகிறான். (நபியே!) எவர்கள் (உமக்குத்) தீங்கிழைக்க சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. இவர்களுடைய சதி (ஒன்றுமில்லாது) அழிந்தே போகும்.
Fatır 35:11
11. அல்லாஹ்தான் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணால் உற்பத்தி செய்தான். பின்னர், ஒரு துளி இந்திரியத்திலிருந்து (படைத்தான்). பின்னர், (ஆண், பெண் ஜோடி) ஜோடியாக உங்களை ஆக்கினான். அவன் அறியாமல் ஒரு பெண் கர்ப்பமாவதும் இல்லை; பிரசவிப்பதும் இல்லை. அவனுடைய ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' இல்லாமல் எவனுடைய வயதும் அதிகரிப்பதுமில்லை; குறைந்து விடுவதும் இல்லை. நிச்சயமாக இ(வை அனைத்தையும் அறிந்திருப்ப)து அல்லாஹ்வுக்குச் சுலபமானதே!
Fatır 35:12
12. இரு கடல்களும் சமமாகி விடாது; ஒன்று குடிப்பதற்கு இன்பமான மதுரமான தண்ணீர்! மற்றொன்று கொடிய உப்பு(த் தண்ணீர். இவ்வாறு இவ்விரண்டிற்கும் வேற்றுமை இருந்தபோதிலும்), இவ்விரண்டில் இருந்துமே புத்தம் புதிய (மீன்) மாமிசத்தைப் புசிக்கிறீர்கள். நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய (முத்து, பவளம் போன்ற)வற்றையும் அவற்றிலிருந்து வெளியே எடுக்கிறீர்கள். கடல்களைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலில் (பயணம் செய்து பல தேசங்களிலுள்ள) இறைவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
Fatır 35:13
13. அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான். சந்திரனையும் சூரியனையும் அடக்கி வைத்து இருக்கிறான். இவை அனைத்தும் அவற்றுக்குக் குறிப்பிட்ட தவணைப்படி செல்கின்றன. இவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ். எல்லா ஆட்சிகளும் அவனுக்கு உரியனவே! அவனையன்றி எவற்றை நீங்கள் (இறைவனென உதவிக்கு) அழைக்கிறீர்களோ அவற்றுக்கு ஓர் அணு அளவும் அதிகாரமில்லை.
Fatır 35:14
14. அவற்றை நீங்கள் அழைத்தபோதிலும் உங்கள் அழைப்பை அவை செவியுறாது. அவை செவியுற்றபோதிலும் உங்களுக்குப் பதிலளிக்காது. மறுமை நாளிலோ அவற்றை நீங்கள் இணைவைத்து வணங்கியதையும் அவை நிராகரித்துவிடும். (அவற்றின் செயலற்ற தன்மைகள்) அனைத்தையும் அறிந்த (இறை)வனைப் போல் (வேறு) ஒருவரும் (நபியே!) உமக்கு (இவ்வளவு தெளிவாக) அறிவிக்கமாட்டார்.
Fatır 35:15
15. மனிதர்களே! நீங்கள் அனைவரும் (எந்நேரத்திலும்) அல்லாஹ்வுடைய உதவி தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். அல்லாஹ்வோ முற்றிலும் தேவையற்றவன், புகழுக்குரியவன் ஆவான்.
Fatır 35:16
16. அவன் விரும்பினால் உங்களை அழித்து மற்றொரு புதிய படைப்பைக் கொண்டு வந்துவிடுவான்.
Fatır 35:17
17. இது அல்லாஹ்வுக்கு ஒரு சிரமமானது அல்ல.
Fatır 35:18
18. (மறுமையில்) ஒருவனுடைய பாவச் சுமையை மற்றொருவன் சுமக்கவே மாட்டான். பளுவான சுமையில் ஒரு பாகத்தையேனும் சுமந்து கொள்ளும்படி அழைத்தபோதிலும், அவன் இவனுடைய சொந்தக்காரனாக இருந்த போதிலும், இவனுடைய சுமையில் ஓர் அற்ப அளவையும் அவன் சுமந்துகொள்ள மாட்டான். (நபியே!) நீர் அச்சமூட்டி எச்சரிப்பதெல்லாம், எவர்கள் (தங்கள் கண்ணால்) காணாமல் இருந்தும், தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து, தொழுகையையும் நிலைநாட்டுகிறார்களோ அவர்களைத்தான். எவர் பரிசுத்தமாக இருக்கிறாரோ அவர் தன் நன்மைக்காகவே பரிசுத்தமாய் இருக்கிறார். அல்லாஹ்விடமே அனைத்தும் செல்ல வேண்டியதிருக்கிறது.
Fatır 35:19
19. குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.
Fatır 35:20
20. (அவ்வாறே) இருளும் பிரகாசமும் (சமமாகாது).
Fatır 35:21
21. நிழலும், வெயிலும் (சமமாகாது).
Fatır 35:22
22. உயிருள்ளவர்களும் மரணித்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைச் செவியுறும்படிச் செய்கிறான். (நபியே!) சமாதிகளில் உள்ளவர்களை செவியுறும்படிச் செய்ய உம்மால் முடியாது.
Fatır 35:23
23. நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே தவிர, (நீர் கூறுகிறவாறே அவர்கள் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்கக் கூடியவர்) அல்ல.
Fatır 35:24
24. (நபியே!) நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் (மட்டுமே) அனுப்பி இருக்கிறோம். அச்சமூட்டி எச்சரிக்கின்ற (நம்) தூதர் வராத எந்த வகுப்பாரும் (பூமியில்) இருக்கவில்லை.
Fatır 35:25
25. (நபியே!) அவர்கள் உம்மைப் பொய்யாக்கினால் (அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம். இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (தூதர்களை) பொய்யாக்கினார்கள். அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் ‘ஸுஹுஃபு'களையும், பிரகாசமான வேதங்களையும் அவர்களிடம் கொண்டு வந்திருந்தனர்.
Fatır 35:26
26. ஆகவே, (அத்தூதர்களை) நிராகரித்த அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம். எனது தண்டனை எவ்வாறாயிற்று (என்பதை நீர் கவனித்தீரா)? (அவ்வாறே, உம்மை நிராகரிக்கும் இவர்களையும் வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொள்வோம்.)
Fatır 35:27
27. (நபியே!) நிச்சயமாக அல்லாஹ்தான் வானத்திலிருந்து மழையை இறக்கிவைக்கிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? நாம் அதைக் கொண்டு பலவிதமான (ருசிகளையும்) நிறங்களையு(மு)டைய காய்கனிகளை வெளியாக்குகிறோம். இன்னும் மலைகளில் வெள்ளை, சிகப்பு முதலிய பல நிறங்கள் உள்ளவையும், சுத்தக்கருப்பு நிறம் உள்ளவையும் இருக்கின்றன.
Fatır 35:28
28. மனிதர்களிலும், உயிருள்ளவற்றிலும் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளிலும் இவ்வாறே பல நிறங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள்தான். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் மிக்க மன்னிப்புடையவனும் ஆவான்.
Fatır 35:29
29. எவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி, தொழுகையையும் கடைப்பிடித்து, நாம் அவர்களுக்கு அளித்தவற்றை இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தானம் செய்து வருகிறார்களோ அவர்கள் நிச்சயமாக என்றுமே நஷ்டமடையாத (லாபம் தரும்) ஒரு வர்த்தகத்தை எதிர்பார்க்கிறார்கள்.
Fatır 35:30
30. (அல்லாஹ்) அவர்களுக்கு அவர்களுடைய கூலியைப் பூரணமாகவே கொடுத்து, தன் அருளை மேலும் அதிகமாகவும் அவர்களுக்கு கொடுப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், நன்றி அறிபவன்.
Fatır 35:31
31. (நபியே!) நாம் உமக்கு வஹ்யி மூலம் கொடுத்திருக்கும் வேதம் முற்றிலும் உண்மையானது. அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தி வைப்பதாகவும் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்கறிந்தவன், உற்று நோக்குபவன் ஆவான்.
Fatır 35:32
32. பின்னர், நம் அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களை அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கினோம். எனினும், அவர்களில் பலர் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்; வேறு சிலர் நிதானமாக நடந்து கொண்டனர். மற்றும் சிலரோ அல்லாஹ்வுடைய கட்டளைப்படி நன்மையான காரியங்களில் முந்திக் கொள்கின்றனர். இதுவே மிகப் பெரும் பாக்கியமாகும்.
Fatır 35:33
33. (அவர்கள்) நிலையான சொர்க்கத்திற்குச் சென்று விடுவார்கள். முத்துப் பதிந்த பொற்காப்புக்கள் அவர்களுக்கு (விருதாக) அணிவிக்கப்படும். அதில் அவர்களுடைய ஆடைகளெல்லாம் மிருதுவான பட்டுக்களாக இருக்கும்.
Fatır 35:34
34. மேலும், (அவர்கள்) ‘‘தங்களை விட்டு எல்லா கவலைகளையும் நீக்கிவிட்ட அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரியன. நிச்சயமாக எங்கள் இறைவன் மிக்க மன்னிப்பவன், நன்றி அறிபவன்'' என்று புகழ்ந்து (துதி செய்து) கொண்டிருப்பார்கள்.
Fatır 35:35
35. ‘‘அவனே தன் அருளைக் கொண்டு (மிக்க மேலான) ஒரு இல்லத்தில் எங்களை அமர்த்தினான். அதில் ஒரு கஷ்டமும் எங்களை அணுகுவதில்லை. ஒரு சடைவும் அதில் எங்களுக்கு ஏற்படுவதில்லை'' (என்றும் துதி செய்வார்கள்).
Fatır 35:36
36. எவர்கள் (நம் வசனங்களை) நிராகரித்து விடுகிறார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தான் (கூலியாகக்) கிடைக்கும். அவர்கள் இறந்துபோகும் விதத்தில் அதில் அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது. (வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பதற்காக உயிருடனேயே இருப்பார்கள்.) மேலும், அவர்களுடைய வேதனையில் ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. இவ்வாறே நிராகரிப்பவர்கள் எல்லோருக்கும் நாம் கூலி கொடுப்போம்.
Fatır 35:37
37. அதில் அவர்கள் பெரும் கூச்சலிட்டு ‘‘எங்கள் இறைவனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றி விடு. நாங்கள் செய்து கொண்டிருந்த (தீய) காரியங்களை விட்டுவிட்டு நற்செயல்களையே செய்வோம்'' என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ‘‘நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான காலம் வரை நாம் உங்களை(ப் பூமியில்) உயிரோடு விட்டு வைக்கவில்லையா? (இவ்வேதனையைப் பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். (அவரை நீங்கள் நிராகரித்து விட்டீர்கள்.) ஆதலால், (நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர் ஒருவருமில்லை'' (என்று கூறுவான்).
Fatır 35:38
38. வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். நிச்சயமாக அவன் உள்ளங்களில் இருப்பவற்றையும் நன்கறிந்தவன்.
Fatır 35:39
39. அவன்தான் உங்களை இப்புவியில் (உங்களுக்கு முன்னிருந்தவர்களின்) பிரதிநிதிகளாக அமைத்தான். ஆகவே, (உங்களில்) எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களின் நிராகரிப்பின் கேடு அவர்கள் மீதேசாரும். இந்த நிராகரிப்பவர்களின் நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு கோபத்தை தவிர (வேறெதனையும்) அதிகப்படுத்தவில்லை. இந்த நிராகரிப்பவர்களின் நிராகரிப்பு அவர்களுக்கு நஷ்டத்தையே தவிர (வேறெதனையும்) அதிகப்படுத்தவில்லை.
Fatır 35:40
40. (நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) அழைப்பவற்றைப் பற்றி நீங்கள் கவனித்தீர்களா? அவை பூமியில் எதையும் படைத்திருக்கின்றனவா? அதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களைப் படைப்பதில் அவற்றுக்குப் பங்குண்டா? அல்லது (அவற்றைத் தெய்வங்களெனக் கூறுவதற்குத்) தெளிவான ஆதாரமாக இருக்கின்ற ஒரு வேதத்தையாவது நாம் அவற்றுக்குக் கொடுத்திருக்கின்றோமா? (இவை ஒன்றுமே) இல்லை. (இந்தத் தெய்வங்கள் பாதுகாத்துக் கொள்ளுமென்று) இந்த அநியாயக்காரர்கள் சிலர் சிலருக்குச் செய்யும் வாக்குறுதியெல்லாம் வெறும் ஏமாற்றுதலே தவிர வேறில்லை.
Fatır 35:41
41. வானங்களும் பூமியும் (தத்தம் எல்லையிலிருந்து) விலகிவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பவன் நிச்சயமாக அல்லாஹ்தான். (தம் எல்லையில் இருந்து) அவ்விரண்டும் சாய முற்பட்டபோதிலும் அவை சாயாதபடி தடுக்கக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறொருவனுமில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாக, மன்னிப்புடையவனாக இருக்கிறான்.
Fatır 35:42
42. ‘‘எங்களிடம் ஒரு தூதர் வருவாராயின் நிச்சயமாக நாங்கள் மற்ற எல்லா வகுப்பாரையும் விட நேரான பாதையில் சென்று விடுவோம்'' என்று (இந்த அரபிகள்) அல்லாஹ்வின் மீது மிக உறுதியான சத்தியம் செய்து கூறினார்கள். எனினும், இவர்களிடம் (நம்) தூதர் வந்த சமயத்தில் அது வெறுப்பைத் தவிர (வேறெதனையும்) இவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை.
Fatır 35:43
43. (மேலும்,) இவர்கள் கர்வம்கொண்டு பூமியில் தீய காரியங்களைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். தீயவர்களின் சூழ்ச்சி அச்சூழ்ச்சிக்காரரைத் தவிர மற்றெவரையும் சூழ்ந்துகொள்ளாது. (அழிந்துபோன) முன் சென்றவர்களின் வழியைத் தவிர (வேறு எவ்வழியிலும் செல்ல) இவர்கள் எதிர் பார்க்கின்றனரா? அல்லாஹ் ஏற்படுத்திய வழிக்கு மாற்றத்தை நிச்சயமாக நீர் காண மாட்டீர். (அவ்வாறே) அல்லாஹ் ஏற்படுத்திய வழியில் கோணலையும் நிச்சயமாக நீர் காணமாட்டீர்.
Fatır 35:44
44. பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? (அவ்வாறாயின்) இவர்களைவிட பலசாலிகளான இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (அவர்கள் எவ்வளவோ பலசாலிகளாக இருந்தும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால்,) வானத்திலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனாக, பெரும் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
Fatır 35:45
45. மனிதர்கள் செய்யும் பாவத்திற்காக அவர்களை (உடனுக்குடன்) அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் ஓர் உயிரையும் விட்டு வைக்க மாட்டான். ஆயினும், அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணை வரை விட்டுவைக்கிறான். அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் (உடனே அவர்களைப் பிடித்துக் கொள்வான்.) நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கிறான்.
Yâsin 36:1
1. யா ஸீன்.
Yâsin 36:2
2. முற்றிலும் ஞானம் நிறைந்த இந்த குர்ஆன் மீது சத்தியமாக!
Yâsin 36:3
3. (நபியே!) நிச்சயமாக நீர் (நமது) தூதர்களில் ஒருவர்தான்.
Yâsin 36:4
4. (நீர்) நேரான வழியில் இருக்கிறீர்.
Yâsin 36:5
5. (இது) அனைவரையும் மிகைத்தவனும் மகா கருணையுடையவனுமான அல்லாஹ்வால் அருளப்பட்டது.
Yâsin 36:6
6. (உமது) இந்த மக்களின் மூதாதைகளுக்கு (ஒரு தூதராலும்) எச்சரிக்கை செய்யப்படாததால் (மறுமையைப் பற்றி முற்றிலும்) கவலையற்று இருக்கின்றனர். ஆகவே, இவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக.
Yâsin 36:7
7. இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது (அவர்கள் நரகவாசிகள்தான் என்று இறைவனின்) கட்டளை நிச்சயமாக உறுதியாகி விட்டது. ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
Yâsin 36:8
8. நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மேல்வாய் கட்டைகள் வரை விலங்குச் சங்கிலிகளைப் போட்டுவிட்டோம். ஆதலால், அவர்களுடைய தலைகள் (குனிய முடியாதவாறு) நிமிர்ந்து விட்டன.
Yâsin 36:9
9. அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும், பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடிவிட்டோம். ஆதலால், அவர்கள் (எதையும்) பார்க்க முடியாது.
Yâsin 36:10
10. அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் சமமே! அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
Yâsin 36:11
11. நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், எவர்கள் நல்லுபதேசத்தைப் பின்பற்றி, மறைவான காரியங்களிலும் (அல்லாஹ்வாகிய) ரஹ்மானுக்குப் பயந்து நடக்கின்றார்களோ அவர்களுக்குத்தான். ஆகவே, இவர்களுக்கு மன்னிப்பைக் கொண்டும், கண்ணியமான கூலியைக்கொண்டும் நீர் நற்செய்தி கூறுவீராக.
Yâsin 36:12
12. நிச்சயமாக நாம் மரணித்தவர்களை (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்புவோம். அவர்கள் செய்து அனுப்பிய செயல்களையும், அவர்கள் விட்டுச் சென்ற காரியங்களையும் நாம் எழுதி வருகிறோம். இவை ஒவ்வொன்றையும் ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' (பதிவுப் புத்தகத்தில்) பதிந்தே வைத்திருக்கிறோம்.
Yâsin 36:13
13. (நபியே!) நம் தூதர்கள் சென்ற, ஓர் ஊர்வாசிகளை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுவீராக.
Yâsin 36:14
14. நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபொழுது அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள். ஆகவே மூன்றாவது தூதரைக் கொண்டு (அவ்விருவருக்கும்) உதவி செய்தோம். ஆகவே, இவர்கள் (மூவரும் அவர்களை நோக்கி) ‘‘மெய்யாகவே நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்களாவோம்'' என்று கூறினார்கள்.
Yâsin 36:15
15. அதற்கவர்கள் “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே! (தவிர இறைவனின் தூதர்களல்ல.) ரஹ்மான் (உங்கள் மீது வேதத்தில்) எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்பவர்களே தவிர வேறில்லை'' என்று கூறினார்கள்.
Yâsin 36:16
16. அதற்கவர்கள் ‘‘ நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள்தான் என்பதை எங்கள் இறைவனே நன்கறிவான்'' என்றனர்,
Yâsin 36:17
17. “எங்கள் தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதைத் தவிர (உங்களை நிர்ப்பந்திப்பது) எங்கள் மீது கடமையல்ல'' (என்றும் கூறினார்கள்.)
Yâsin 36:18
18. அதற்கவர்கள் “நாங்கள் உங்கள் வருகையை நிச்சயமாக கெட்ட சகுனமாக நினைக்கிறோம். நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லெறிந்து கொன்று விடுவோம். மேலும், எங்களிடமிருந்து துன்புறுத்தும் வேதனையும் உங்களைப் பிடித்துக் கொள்ளும்'' என்று கூறினார்கள்.
Yâsin 36:19
19. அதற்கு (நம் தூதர்கள்) “உங்கள் கெட்ட சகுனம் உங்களிடம்தான் இருக்கிறது. உங்களுக்கு நல்லறிவைப் புகட்டியதற்காகவா? (எங்களைக் கெட்ட சகுனம் என்று கூறுகிறீர்கள்). அது சரியன்று; நீங்கள்தான் வரம்புமீறிய மக்கள்'' என்று கூறினார்கள்.
Yâsin 36:20
20. இதற்கிடையில் அப்பட்டிணத்தின் கடைக் கோடியிலிருந்து ‘(ஹபீபுந் நஜ்ஜார்' என்னும்) ஒரு மனிதர் விரைந்தோடி வந்து (அப்பட்டிணவாசிகளை நோக்கிக்) கூறியதாவது: “என் மக்களே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்.
Yâsin 36:21
21. உங்களிடம் ஒரு கூலியையும் கேட்காத இவர்களை நீங்கள் (அவசியம்) பின்பற்றுங்கள். அவர்கள்தான் நேர்வழி அடைந்தவர்கள்.
Yâsin 36:22
22. என்னைப் படைத்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன (நேர்ந்தது? விசாரணைக்காக) அவனிடமே நீங்கள் திரும்ப கொண்டு வரப்படுவீர்கள்.''
Yâsin 36:23
23. அவனையன்றி, (மற்ற எதையும்) நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? ரஹ்மான் எனக்கொரு தீங்கிழைக்கக் கருதினால் இவற்றின் சிபாரிசு எதையும் என்னை விட்டுத் தடுத்துவிடாது. (அதிலிருந்து) என்னை இவற்றால் விடுவிக்கவும் முடியாது.
Yâsin 36:24
24. (அவன் ஒருவனையே நான் வணங்காவிட்டால்) நிச்சயமாக நான் பகிரங்கமான வழிகேட்டில் சென்று விடுவேன்.
Yâsin 36:25
25. நிச்சயமாக நான் உங்கள் இறைவனையே நம்பிக்கை கொண்டிருக்கிறேன். (மற்றெவரையும் அல்ல.) ஆதலால், நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்'' (என்று கூறினார்).
Yâsin 36:26
26. (எனினும், மக்கள் அவருடைய நல்லுபதேசத்தைக் கேளாது அவரைக் கொலை செய்துவிட்டனர்! ஆகவே, அவரை நோக்கி) “நீர் சொர்க்கத்தில் நுழைவீராக!'' எனக் கூறப்பட்டது.
Yâsin 36:27
27. (சொர்க்கத்தில் நுழைந்த) அவர் “என் இறைவன் எனக்கு மன்னிப்பளித்து மிக்க கண்ணியமானவர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்கிவிட்டதை என் மக்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?'' என்று கூறினார்.
Yâsin 36:28
28. அ(வரைக் கொலை செய்த)தற்குப் பின்னர் அவருடைய மக்க(ளை அழிக்க அவர்)களுக்கு வானத்திலிருந்து ஒரு படையையும் நாம் இறக்கி வைக்கவில்லை; அவ்வாறு செய்ய அவசியம் ஏற்படவுமில்லை.
Yâsin 36:29
29. ஒரே ஒரு சப்தம்தான் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் (அழிந்து) சாம்பலாகி விட்டார்கள்.
Yâsin 36:30
30. அந்தோ! (என் அடியார்களே! என்) அடியார்களைப் பற்றிய துக்கமே! அவர்களிடம் நமது தூதர் எவர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை.
Yâsin 36:31
31. அவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்து விட்டோம் என்பதையும் அ(ழிந்து போன)வர்கள் நிச்சயமாக அவர்களிடம் திரும்பி வரவேமாட்டார்கள் என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?
Yâsin 36:32
32. அவர்கள் அனைவரும் நிச்சயமாக நம்மிடமே கொண்டுவரப்படுவார்கள்.
Yâsin 36:33
33. இறந்து (பொட்டலாகிக்) கிடக்கும் (அவர்கள் வசித்திருந்த) பூமியும் இவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும். அதை நாமே (மழையைக் கொண்டு) உயிர்ப்பித்து அதிலிருந்து தானியங்களை வெளிப்படுத்துகிறோம். அவற்றை இவர்கள் புசிக்கிறார்கள்.
Yâsin 36:34
34. மேலும், அதில் பேரீச்சை, திராட்சை சோலைகளை அமைத்து அதன் மத்தியில் நீரூற்றுக்களை பீறிட்டு ஓடச் செய்கிறோம்.
Yâsin 36:35
35. இவர்கள் புசிப்பதற்காக கனி வர்க்கங்களை (நாம் உற்பத்தி செய்கின்றோமே தவிர) இவர்களுடைய கைகள் அதை செய்வதில்லை. (இதற்குக் கூட) இவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?
Yâsin 36:36
36. இவர்களையும், பூமியில் முளைக்கும் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாகப் படைத்து இவர்கள் (இதுவரை) அறியாத மற்றவற்றையும் படைப்பவன் மிகப் பரிசுத்தமானவன்.
Yâsin 36:37
37. இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும். அதிலிருந்தே நாம் பகலை வெளிப்படுத்துகிறோம். இல்லையென்றால் இவர்கள் இருளில்தான் தங்கிவிடுவார்கள்.
Yâsin 36:38
38. தன் வரையறைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் (ஓர் அத்தாட்சியாகும்). இது (அனைவரையும்) மிகைத்தவன் நன்கறிந்தவனுடைய அமைப்பாகும்.
Yâsin 36:39
39. (உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்ச மடலைப் போல் (பிறையாக) ஆகும் வரை சந்திரனுக்கு நாம் பல நிலைகளை ஏற்படுத்தி இருக்கிறோம்.
Yâsin 36:40
40. சூரியன் சந்திரனை அணுக முடியாது. இரவு பகலை முந்த முடியாது. (இவ்வாறே நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் தன் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
Yâsin 36:41
41. கப்பல் நிறைய அவர்களுடைய மக்களை நாம் சுமந்து செல்வதும் நிச்சயமாக அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்.
Yâsin 36:42
42. அவர்கள் ஏறிச் செல்ல அதைப்போன்ற (படகு போன்ற)வற்றையும் நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கிறோம்.
Yâsin 36:43
43. நாம் விரும்பினால் அவர்களை (கடலில்) மூழ்கடித்து விடுவோம். அச்சமயம் (அபயக் குரலில்) அவர்களை பாதுகாப்பவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார். அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
Yâsin 36:44
44. எனினும் நமது கருணையினாலும் சிறிது காலம் (அவர்கள்) சுகம் அனுபவிப்பதற்காகவும் (அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்).
Yâsin 36:45
45. “உங்களுக்கு முன்னும், உங்களுக்குப் பின்னும் (இருக்கும் இம்மை மறுமையில்) உள்ள வேதனைகளுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். (அதனால்) இறைவனின் கருணையை நீங்கள் அடையலாம்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் (அதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை).
Yâsin 36:46
46. மேலும், அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எது வந்த போதிலும் அதை அவர்கள் புறக்கணிக்காது இருப்பதும் இல்லை.
Yâsin 36:47
47. அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் (ஏழைகளுக்குத்) தானம் செய்யுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் “அல்லாஹ் நாடினால் அவனே உணவு கொடுக்கக்கூடியவர்களுக்கு நாம் உணவு கொடுக்கலாமா? பகிரங்கமான வழிகேட்டிலேயே தவிர நீங்கள் இல்லை'' என்றும் இந்த நிராகரிப்பவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.
Yâsin 36:48
48. மேலும், மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (எங்களுக்கு வருமென நீங்கள் கூறும்) “தண்டனை எப்பொழுது வரும்?'' என்றும் (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.
Yâsin 36:49
49. ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை! (இதைப் பற்றி பரிகாசமாக) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் பொழுதே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
Yâsin 36:50
50. அந்நேரத்தில் அவர்கள் மரண சாஸனம் கூறவோ அல்லது தங்கள் குடும்பத்தாரிடம் செல்லவோ முடியாமலாகி விடுவார்கள். (அதற்குள் அழிந்து விடுவார்கள்.)
Yâsin 36:51
51. (மறுமுறை) ‘ஸூர்' ஊதப்பட்டால் உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவாக ஓடி வருவார்கள்.
Yâsin 36:52
52. ‘‘எங்கள் துக்கமே! எங்களை நித்திரையில் இருந்து எழுப்பியவர் யார்?'' என்று கேட்பார்கள். (அதற்கு வானவர்கள் அவர்களை நோக்கி) “ரஹ்மான் (உங்களுக்கு) வாக்களித்ததும், நபிமார்கள் (உங்களுக்குக்) கூறிவந்த உண்மையும் இதுதான்'' (என்று கூறுவார்கள்).
Yâsin 36:53
53. அது ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறொன்றும் இருக்காது! அதற்குள்ளாக அவர்கள் அனைவரும் நம்மிடம் கொண்டுவரப்பட்டு விடுவார்கள்.
Yâsin 36:54
54. அந்நாளில் ஓர்ஆத்மா (அதன் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகரித்தோ) அநியாயம் செய்யப்படமாட்டாது. நீங்கள் செய்தவற்றுக்கே தவிர உங்களுக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டாது.
Yâsin 36:55
55. அந்நாளில் நிச்சயமாக சொர்க்கவாசிகள் சந்தோஷமாக காலம் கழித்துக் கொண்டிருப்பார்கள்.
Yâsin 36:56
56. அவர்களும் அவர்களுடைய மனைவிகளும் நிழல்களின் கீழ் கட்டில்களின் மேல் வெகு உல்லாசமாகச் சாய்ந்து (உட்கார்ந்து) கொண்டிருப்பார்கள்.
Yâsin 36:57
57. அதில் அவர்களுக்குப் பலவகைக் கனிவர்க்கங்களுடன் அவர்கள் கேட்பதெல்லாம் அவர்களுக்கு கிடைக்கும்.
Yâsin 36:58
58. நிகரற்ற அன்புடைய இறைவனால் (இவர்களை நோக்கி) “ஸலாம் உண்டாவதாகுக!'' என்று கூறப்படும்.
Yâsin 36:59
59. (மற்ற பாவிகளை நோக்கி) “குற்றவாளிகளே! இன்றைய தினம் நீங்கள் (நல்லவர்களிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்'' (என்று கூறப்படும்).
Yâsin 36:60
60. ‘‘ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக்கூடாது என்றும் நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
Yâsin 36:61
61. இன்னும், நீங்கள் என்னையே வணங்கவேண்டும். இதுதான் நேரான வழி (என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?)
Yâsin 36:62
62. (அவ்வாறிருந்தும்) உங்களில் பெரும் தொகையினரை அவன் நிச்சயமாக வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
Yâsin 36:63
63. உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்த நரகம் இதுதான்.
Yâsin 36:64
64. இதை நீங்கள் நிராகரித்ததன் காரணமாக இன்றைய தினம் இதில் நீங்கள் நுழைந்து விடுங்கள்'' (என்றும் கூறுவோம்).
Yâsin 36:65
65. அன்றைய தினம் நாம் அவர்களுடைய வாய்களில் முத்திரையிடுவோம். அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும். அவர்கள் செய்துகொண்டிருந்த (பாவமான) காரியங்களைப் பற்றி அவர்களுடைய கால்களும் சாட்சி கூறும்.
Yâsin 36:66
66. நாம் விரும்பினால் அவர்களுடைய கண்களின் பார்வையைப் போக்கிவிடுவோம். (அச்சமயம் இவர்கள் தப்பித்துக்கொள்ள) வழியைத் தேடி ஓடினால் (எதைத்தான்) எப்படி அவர்களால் பார்க்க முடியும்?
Yâsin 36:67
67. நாம் விரும்பினால் அவர்கள் உருவத்தையே மாற்றி அவர்கள் இருந்த இடத்திலேயே இருக்கும்படி (கல்லாகவோ நொண்டியாகவோ) ஆக்கி விடுவோம். அச்சமயம் அவர்களால் முன் செல்லவும் முடியாது; பின் செல்லவும் முடியாது.
Yâsin 36:68
68. நாம் எவரையும் அதிக நாள்கள் உயிருடன் வாழ்ந்திருக்கும் படி செய்தால் அவருடைய நிலைமையைத் தலைகீழாக்கி (சிறிய குழந்தையைப் போல் ஆக்கி) விடுகிறோம். (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
Yâsin 36:69
69. (நம் தூதராகிய) அவருக்கு நாம் கவி கூறக் கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்குத் தகுமானதும் அல்ல; இது (நன்மை தீமைகளைத்) தெளிவாக்கக்கூடிய குர்ஆனும் நல்லுபதேசமும் தவிர வேறில்லை.
Yâsin 36:70
70. உயிரோடு இருப்பவர்களை அது எச்சரிப்பதற்காகவும் (மரணித்தவர்களை போன்றுள்ள) நிராகரிப்பவர்கள் மீது (தண்டனையின்) வாக்கு உறுதியாவதற்காகவும் (இதை நாம் இறக்கினோம்).
Yâsin 36:71
71. நம் கரங்கள் செய்தவற்றிலிருந்து நிச்சயமாக அவர்களுக்காக கால்நடைகளை நாம் படைத்திருக்கிறோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? இன்னும் அவர்கள் அவற்றுக்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள்.
Yâsin 36:72
72. அவற்றை அவர்களுக்குக் கீழ்ப்படியும்படிச் செய்து கொடுத்தோம். அவர்கள் (வாகனமாக) ஏறக்கூடியவையும் அவற்றில் இருக்கின்றன; (அறுத்து) புசிக்கக்கூடியவையும் அவற்றில் இருக்கின்றன.
Yâsin 36:73
73. அவர்கள் குடிக்கக்கூடிய (பால் போன்ற)வையும் இன்னும் பல பயன்களும் அவற்றில் இருக்கின்றன. (இவற்றுக்கெல்லாம்) அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
Yâsin 36:74
74. எனினும், அல்லாஹ் அல்லாதவற்றாலும் தங்களுக்கு உதவி கிடைக்குமென்று அவற்றை அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்!
Yâsin 36:75
75. அவற்றால் அவர்களுக்கு உதவி செய்ய முடியாது. ஆயினும், அவை இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.
Yâsin 36:76
76. (நபியே! ‘நீர் பொய்யர்' என) அவர்கள் உம்மைப் பற்றிக் கூறுவது உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக நாம் அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவோம்.
Yâsin 36:77
77. மனிதனை ஒரு துளி இந்திரியத்தால்தான் நாம் படைத்தோம் என்பதை அவன் கவனிக்க வில்லையா? அவ்வாறிருந்தும் அவன் பகிரங்கமான எதிரியாகி (நமக்கு மாறுசெய்ய முற்பட்டு) விடுகிறான்.
Yâsin 36:78
78. (மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நம்மால் முடியாதென எண்ணிக் கொண்டு அவர்களில் ஒருவன்) ஓர் உதாரணத்தை நம்மிடம் எடுத்துக் காட்டுகிறான். அவன், தான் படைக்கப்பட்ட (விதத்)தை மறந்துவிட்டு “உக்கி மண்ணாகிப் போன இந்த எலும்பை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று (ஓர் எலும்பை எடுத்து அதை தூளாக்கி ஊதிவிட்டு) அவன் கேட்கிறான்.
Yâsin 36:79
79. (நபியே!) அதற்கு நீர் கூறுவீராக: “முதல் முறையில் அதைப் படைத்தவன் எவனோ அவனே அதை உயிர்ப்பிப்பான். அவனோ எல்லா படைப்பினத்தையும் மிக அறிந்தவன்.
Yâsin 36:80
80. அவனே பசுமையான மரத்திலிருந்து உங்களுக்கு நெருப்பை உண்டு பண்ணுகிறான். பின்னர், அதைக் கொண்டு நீங்கள் (உங்களுக்கு வேண்டிய நெருப்பை) மூட்டிக் கொள்கிறீர்கள்.
Yâsin 36:81
81. வானங்களையும் பூமியையும் படைத்தவன் (கேவலம்) அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? நிச்சயமாக அவனே மிகப்பெரிய படைப்பாளனும் நன்கறிந்தவனும் ஆவான்.
Yâsin 36:82
82. அவன் ஒரு பொருளை(ப் படைக்க) கருதினால் அதை ‘ஆகுக!' எனக் கூறுவதுதான் (தாமதம்). உடன் அது ஆகிவிடுகிறது.
Yâsin 36:83
83. சகலவற்றின் பேராட்சியும் சர்வ அதிகாரமும் எவனுடைய கையில் இருக்கிறதோ அவன் மிகப் பரிசுத்தமானவன். அவனிடமே நீங்கள் திரும்பக்கொண்டு வரப்படுவீர்கள்.