Tamilce Meal — Abdülhamîd Bakavî — Tekvir 81:1 – Nas 114:6
Contents
- Tekvir 81:1
- Tekvir 81:2
- Tekvir 81:3
- Tekvir 81:4
- Tekvir 81:5
- Tekvir 81:6
- Tekvir 81:7
- Tekvir 81:8
- Tekvir 81:9
- Tekvir 81:10
- Tekvir 81:11
- Tekvir 81:12
- Tekvir 81:13
- Tekvir 81:14
- Tekvir 81:15
- Tekvir 81:16
- Tekvir 81:17
- Tekvir 81:18
- Tekvir 81:19
- Tekvir 81:20
- Tekvir 81:21
- Tekvir 81:22
- Tekvir 81:23
- Tekvir 81:24
- Tekvir 81:25
- Tekvir 81:26
- Tekvir 81:27
- Tekvir 81:28
- Tekvir 81:29
- İnfitar 82:1
- İnfitar 82:2
- İnfitar 82:3
- İnfitar 82:4
- İnfitar 82:5
- İnfitar 82:6
- İnfitar 82:7
- İnfitar 82:8
- İnfitar 82:9
- İnfitar 82:10
- İnfitar 82:11
- İnfitar 82:12
- İnfitar 82:13
- İnfitar 82:14
- İnfitar 82:15
- İnfitar 82:16
- İnfitar 82:17
- İnfitar 82:18
- İnfitar 82:19
- Mütaffifin 83:1
- Mütaffifin 83:2
- Mütaffifin 83:3
- Mütaffifin 83:4
- Mütaffifin 83:5
- Mütaffifin 83:6
- Mütaffifin 83:7
- Mütaffifin 83:8
- Mütaffifin 83:9
- Mütaffifin 83:10
- Mütaffifin 83:11
- Mütaffifin 83:12
- Mütaffifin 83:13
- Mütaffifin 83:14
- Mütaffifin 83:15
- Mütaffifin 83:16
- Mütaffifin 83:17
- Mütaffifin 83:18
- Mütaffifin 83:19
- Mütaffifin 83:20
- Mütaffifin 83:21
- Mütaffifin 83:22
- Mütaffifin 83:23
- Mütaffifin 83:24
- Mütaffifin 83:25
- Mütaffifin 83:26
- Mütaffifin 83:27
- Mütaffifin 83:28
- Mütaffifin 83:29
- Mütaffifin 83:30
- Mütaffifin 83:31
- Mütaffifin 83:32
- Mütaffifin 83:33
- Mütaffifin 83:34
- Mütaffifin 83:35
- Mütaffifin 83:36
- İnşikak 84:1
- İnşikak 84:2
- İnşikak 84:3
- İnşikak 84:4
- İnşikak 84:5
- İnşikak 84:6
- İnşikak 84:7
- İnşikak 84:8
- İnşikak 84:9
- İnşikak 84:10
- İnşikak 84:11
- İnşikak 84:12
- İnşikak 84:13
- İnşikak 84:14
- İnşikak 84:15
- İnşikak 84:16
- İnşikak 84:17
- İnşikak 84:18
- İnşikak 84:19
- İnşikak 84:20
- İnşikak 84:21
- İnşikak 84:22
- İnşikak 84:23
- İnşikak 84:24
- İnşikak 84:25
- Büruc 85:1
- Büruc 85:2
- Büruc 85:3
- Büruc 85:4
- Büruc 85:5
- Büruc 85:6
- Büruc 85:7
- Büruc 85:8
- Büruc 85:9
- Büruc 85:10
- Büruc 85:11
- Büruc 85:12
- Büruc 85:13
- Büruc 85:14
- Büruc 85:15
- Büruc 85:16
- Büruc 85:17
- Büruc 85:18
- Büruc 85:19
- Büruc 85:20
- Büruc 85:21
- Büruc 85:22
- Târık 86:1
- Târık 86:2
- Târık 86:3
- Târık 86:4
- Târık 86:5
- Târık 86:6
- Târık 86:7
- Târık 86:8
- Târık 86:9
- Târık 86:10
- Târık 86:11
- Târık 86:12
- Târık 86:13
- Târık 86:14
- Târık 86:15
- Târık 86:16
- Târık 86:17
- A'lâ 87:1
- A'lâ 87:2
- A'lâ 87:3
- A'lâ 87:4
- A'lâ 87:5
- A'lâ 87:6
- A'lâ 87:7
- A'lâ 87:8
- A'lâ 87:9
- A'lâ 87:10
- A'lâ 87:11
- A'lâ 87:12
- A'lâ 87:13
- A'lâ 87:14
- A'lâ 87:15
- A'lâ 87:16
- A'lâ 87:17
- A'lâ 87:18
- A'lâ 87:19
- Gâşiye 88:1
- Gâşiye 88:2
- Gâşiye 88:3
- Gâşiye 88:4
- Gâşiye 88:5
- Gâşiye 88:6
- Gâşiye 88:7
- Gâşiye 88:8
- Gâşiye 88:9
- Gâşiye 88:10
- Gâşiye 88:11
- Gâşiye 88:12
- Gâşiye 88:13
- Gâşiye 88:14
- Gâşiye 88:15
- Gâşiye 88:16
- Gâşiye 88:17
- Gâşiye 88:18
- Gâşiye 88:19
- Gâşiye 88:20
- Gâşiye 88:21
- Gâşiye 88:22
- Gâşiye 88:23
- Gâşiye 88:24
- Gâşiye 88:25
- Gâşiye 88:26
- Fecr 89:1
- Fecr 89:2
- Fecr 89:3
- Fecr 89:4
- Fecr 89:5
- Fecr 89:6
- Fecr 89:7
- Fecr 89:8
- Fecr 89:9
- Fecr 89:10
- Fecr 89:11
- Fecr 89:12
- Fecr 89:13
- Fecr 89:14
- Fecr 89:15
- Fecr 89:16
- Fecr 89:17
- Fecr 89:18
- Fecr 89:19
- Fecr 89:20
- Fecr 89:21
- Fecr 89:22
- Fecr 89:23
- Fecr 89:24
- Fecr 89:25
- Fecr 89:26
- Fecr 89:27
- Fecr 89:28
- Fecr 89:29
- Fecr 89:30
- Beled 90:1
- Beled 90:2
- Beled 90:3
- Beled 90:4
- Beled 90:5
- Beled 90:6
- Beled 90:7
- Beled 90:8
- Beled 90:9
- Beled 90:10
- Beled 90:11
- Beled 90:12
- Beled 90:13
- Beled 90:14
- Beled 90:15
- Beled 90:16
- Beled 90:17
- Beled 90:18
- Beled 90:19
- Beled 90:20
- Şems 91:1
- Şems 91:2
- Şems 91:3
- Şems 91:4
- Şems 91:5
- Şems 91:6
- Şems 91:7
- Şems 91:8
- Şems 91:9
- Şems 91:10
- Şems 91:11
- Şems 91:12
- Şems 91:13
- Şems 91:14
- Şems 91:15
- Leyl 92:1
- Leyl 92:2
- Leyl 92:3
- Leyl 92:4
- Leyl 92:5
- Leyl 92:6
- Leyl 92:7
- Leyl 92:8
- Leyl 92:9
- Leyl 92:10
- Leyl 92:11
- Leyl 92:12
- Leyl 92:13
- Leyl 92:14
- Leyl 92:15
- Leyl 92:16
- Leyl 92:17
- Leyl 92:18
- Leyl 92:19
- Leyl 92:20
- Leyl 92:21
- Duhâ 93:1
- Duhâ 93:2
- Duhâ 93:3
- Duhâ 93:4
- Duhâ 93:5
- Duhâ 93:6
- Duhâ 93:7
- Duhâ 93:8
- Duhâ 93:9
- Duhâ 93:10
- Duhâ 93:11
- İnşirah 94:1
- İnşirah 94:2
- İnşirah 94:3
- İnşirah 94:4
- İnşirah 94:5
- İnşirah 94:6
- İnşirah 94:7
- İnşirah 94:8
- Tin 95:1
- Tin 95:2
- Tin 95:3
- Tin 95:4
- Tin 95:5
- Tin 95:6
- Tin 95:7
- Tin 95:8
- Alak 96:1
- Alak 96:2
- Alak 96:3
- Alak 96:4
- Alak 96:5
- Alak 96:6
- Alak 96:7
- Alak 96:8
- Alak 96:9
- Alak 96:10
- Alak 96:11
- Alak 96:12
- Alak 96:13
- Alak 96:14
- Alak 96:15
- Alak 96:16
- Alak 96:17
- Alak 96:18
- Alak 96:19
- Kadr 97:1
- Kadr 97:2
- Kadr 97:3
- Kadr 97:4
- Kadr 97:5
- Beyyine 98:1
- Beyyine 98:2
- Beyyine 98:3
- Beyyine 98:4
- Beyyine 98:5
- Beyyine 98:6
- Beyyine 98:7
- Beyyine 98:8
- Zilzal 99:1
- Zilzal 99:2
- Zilzal 99:3
- Zilzal 99:4
- Zilzal 99:5
- Zilzal 99:6
- Zilzal 99:7
- Zilzal 99:8
- Adiyat 100:1
- Adiyat 100:2
- Adiyat 100:3
- Adiyat 100:4
- Adiyat 100:5
- Adiyat 100:6
- Adiyat 100:7
- Adiyat 100:8
- Adiyat 100:9
- Adiyat 100:10
- Adiyat 100:11
- Karia 101:1
- Karia 101:2
- Karia 101:3
- Karia 101:4
- Karia 101:5
- Karia 101:6
- Karia 101:7
- Karia 101:8
- Karia 101:9
- Karia 101:10
- Karia 101:11
- Tekâsür 102:1
- Tekâsür 102:2
- Tekâsür 102:3
- Tekâsür 102:4
- Tekâsür 102:5
- Tekâsür 102:6
- Tekâsür 102:7
- Tekâsür 102:8
- Asr 103:1
- Asr 103:2
- Asr 103:3
- Hümezeh 104:1
- Hümezeh 104:2
- Hümezeh 104:3
- Hümezeh 104:4
- Hümezeh 104:5
- Hümezeh 104:6
- Hümezeh 104:7
- Hümezeh 104:8
- Hümezeh 104:9
- Fil 105:1
- Fil 105:2
- Fil 105:3
- Fil 105:4
- Fil 105:5
- Kureyş 106:1
- Kureyş 106:2
- Kureyş 106:3
- Kureyş 106:4
- Mâûn 107:1
- Mâûn 107:2
- Mâûn 107:3
- Mâûn 107:4
- Mâûn 107:5
- Mâûn 107:6
- Mâûn 107:7
- Kevser 108:1
- Kevser 108:2
- Kevser 108:3
- Kâfirun 109:1
- Kâfirun 109:2
- Kâfirun 109:3
- Kâfirun 109:4
- Kâfirun 109:5
- Kâfirun 109:6
- Nasr 110:1
- Nasr 110:2
- Nasr 110:3
- Tebbet 111:1
- Tebbet 111:2
- Tebbet 111:3
- Tebbet 111:4
- Tebbet 111:5
- İhlas 112:1
- İhlas 112:2
- İhlas 112:3
- İhlas 112:4
- Felak 113:1
- Felak 113:2
- Felak 113:3
- Felak 113:4
- Felak 113:5
- Nas 114:1
- Nas 114:2
- Nas 114:3
- Nas 114:4
- Nas 114:5
- Nas 114:6
Tekvir 81:1
1. (உலக முடிவுக்காகச்) சூரியனின் பிரகாசம் மங்க வைக்கப்படும்போது,
Tekvir 81:2
2. நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது,
Tekvir 81:3
3. மலைகள் அதனிடங்களில் இருந்து அகற்றப்படும் போது,
Tekvir 81:4
4. (இந்த அமளிகளால் பத்துமாத) கர்ப்பமடைந்த ஒட்டகங்கள் (கவனிப்பின்றி) விடப்படும்போது.
Tekvir 81:5
5. காட்டு மிருகங்கள் (பயந்து ஊர்களில் வந்து) ஒன்றுகூடும்போது.
Tekvir 81:6
6. கடல் நீர் நெருப்பாக மாற்றப்படும்போது. (இவ்வாறு உலகம் முடிவுபெற்று, விசாரணைக் காலம் ஏற்படும்.)
Tekvir 81:7
7. அப்போது உயிர்கள் உடலுடன் (மீண்டும்) சேர்க்கப்படும்.
Tekvir 81:8
8. அப்போது (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி கேட்கப்படும்,
Tekvir 81:9
9. ‘‘எந்த குற்றத்திற்காக நீங்கள் (உயிருடன் புதைக்கப்பட்டுக்) கொலை செய்யப்பட்டீர்கள்?'' என்று.
Tekvir 81:10
10. அப்போது (விசாரணைக்காக மனிதர்களுடைய) ஏடுகள் விரிக்கப்படும்.
Tekvir 81:11
11. அப்போது வானம் (பிளந்து) அகற்றப்பட்டுவிடும்.
Tekvir 81:12
12. அப்போது நரகம் எரிக்கப்படும்.
Tekvir 81:13
13. அப்போது சொர்க்கம் சமீபமாகக் கொண்டு வரப்படும்.
Tekvir 81:14
14. (அந்நாளில்) ஒவ்வோர் ஆத்மாவும் (நன்மையோ தீமையோ) தான் செய்து கொண்டு வந்திருப்பதை நன்கறிந்து கொள்ளும்.
Tekvir 81:15
15. (மனிதர்களே!) சென்றவழியே மேலும் செல்லும் நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!
Tekvir 81:16
16. தோன்றி மறையும் (வால்) நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!
Tekvir 81:17
17. செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக!
Tekvir 81:18
18. உதயமாகும் காலையின் மீதும் சத்தியமாக!
Tekvir 81:19
19. நிச்சயமாக (திரு குர்ஆன் என்னும்) இது மிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரயீல் என்னும்) ஒரு (வானவத்) தூதர் மூலம் கூறப்பட்டதாகும்.
Tekvir 81:20
20. அவர் மிக்க பலவான். அவருக்கு அர்ஷுடையவனிடத்தில் பெரும் பதவியுண்டு.
Tekvir 81:21
21. (அவர் அவ்விடத்திலுள்ள வானவர்களின்) தலைவர்; மிக்க நம்பிக்கையுடையவர்.
Tekvir 81:22
22. (மக்காவாசிகளே! நம் தூதராகிய) உங்கள் தோழர் பைத்தியக்காரரல்ல.
Tekvir 81:23
23. நிச்சயமாக அவர் (ஜிப்ரயீலை) தெளிவான வானத்தின் கோடியில் மெய்யாகவே கண்டார்.
Tekvir 81:24
24. (அச்சமயம் அவர் கண்ட) மறைவானவற்றை (அறிவிப்பதில்) கஞ்சத்தனம் செய்பவரல்ல.
Tekvir 81:25
25. இன்னும், இது வெருட்டப்பட்ட ஷைத்தானின் சொல்லுமல்ல.
Tekvir 81:26
26. ஆகவே, (இதைவிட்டு) நீங்கள் எங்கு செல்லுகிறீர்கள்?
Tekvir 81:27
27. இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை.
Tekvir 81:28
28. உங்களில் எவர் நேரான பாதையில் செல்ல விரும்புகிறாரோ அவருக்கு (இது பயனளிக்கும்).
Tekvir 81:29
29. எனினும், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் நாடினால் தவிர, நீங்கள் (நல்லுணர்ச்சி பெற) விரும்பமாட்டீர்கள்.
İnfitar 82:1
1. (உலக முடிவில்) வானம் வெடித்துவிட்டால்,
İnfitar 82:2
2. நட்சத்திரங்கள் சிதறிவிட்டால்,
İnfitar 82:3
3. கடல்கள் பிளக்கப்பட்டுவிட்டால்,
İnfitar 82:4
4. சமாதிகளும் திறக்கப்பட்டால் (மரணித்தவர்கள் உயிர் பெற்றெழுந்து,)
İnfitar 82:5
5. ஒவ்வோர் ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவற்றையும், (உலகத்தில்) தான் விட்டு வந்தவற்றையும் நன்கறிந்துகொள்ளும்.
İnfitar 82:6
6. மனிதனே! மிக கண்ணியம் உள்ள உனது இறைவனைப் பற்றி உன்னை மயக்கிவிட்டது எது?
İnfitar 82:7
7. அவன்தான் (ஒன்றுமில்லாதிருந்த) உன்னைப் படைத்து மேலான விதத்தில் மிக ஒழுங்காக உன்னை அமைத்தான்.
İnfitar 82:8
8. அவன் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன் அவயங்களைப் பொறுத்தினான்.
İnfitar 82:9
9. எனினும், (மனிதர்களே!) நீங்கள் கூலி கொடுக்கும் (தீர்ப்பு) நாளைப் பொய்யாக்குகிறீர்கள்.
İnfitar 82:10
10. நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
İnfitar 82:11
11. அவர்கள் (வானவர்களில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள்.
İnfitar 82:12
12. நீங்கள் செய்பவற்றையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்.
İnfitar 82:13
13. ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சொர்க்கத்தில் இருப்பார்கள்.
İnfitar 82:14
14. நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள்.
İnfitar 82:15
15. கூலி கொடுக்கும் நாளில் அதையே அவர்கள் அடைவார்கள்.
İnfitar 82:16
16. அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பி ஓடி) விட முடியாது.
İnfitar 82:17
17. (நபியே!) கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று நீர் அறிவீரா?
İnfitar 82:18
18. பிறகு, கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று உமக்கு எவரேனும் அறிவித்தனரா?
İnfitar 82:19
19. அந்நாளில் ஓர் ஆத்மா, மற்றோர் ஆத்மாவுக்கு ஒரு பயனுமளிக்க சக்தி பெறாது. அதிகாரமும் அந்நாளில் அல்லாஹ்வுக்கே இருக்கும்.
Mütaffifin 83:1
1. அளவில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான்.
Mütaffifin 83:2
2. அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்து கொள்கின்றனர்.
Mütaffifin 83:3
3. மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர்.
Mütaffifin 83:4
4, 5. மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா?
Mütaffifin 83:5
4, 5. மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா?
Mütaffifin 83:6
6. அந்நாளில், மனிதர்கள் அனைவருமே உலகத்தாரின் இறைவன் முன் (விசாரணைக்காக) நின்று கொண்டிருப்பார்கள்.
Mütaffifin 83:7
7. நிச்சயமாக பாவிகளின் பதிவேடு (நரகத்தின்) சிறைக்கூடத்தில் இருக்கும்.
Mütaffifin 83:8
8. (நபியே!) அச்சிறைக்கூடத்தின் பதிவேட்டை நீர் அறிவீரா?
Mütaffifin 83:9
9. அது ஒரு பதிவுப்புத்தகம் (தண்டிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்கள் எல்லாம்) அதில் பதியப்பட்டிருக்கும்.
Mütaffifin 83:10
10. (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
Mütaffifin 83:11
11. அவர்கள் (இதை மட்டுமா பொய்யாக்குகின்றனர்?) கூலி கொடுக்கும் நாளையும் பொய்யாக்குகின்றனர்.
Mütaffifin 83:12
12. வரம்புமீறிய பாவியைத் தவிர (மற்றெவரும்) அதைப் பொய்யாக்க மாட்டான்.
Mütaffifin 83:13
13. அவனுக்கு நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைகள் தான் என்று கூறுகிறான்.
Mütaffifin 83:14
14. நிச்சயமாக அவ்வாறல்ல. அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்களே அவர்களின் உள்ளங்கள் மீது (துருவாகப்படிந்து) மூடிக் கொண்டன. (ஆதலால்தான், இவ்வாறு கூறுகின்றனர்.)
Mütaffifin 83:15
15. அவ்வாறல்ல. (விசாரணைக்காகக் கொண்டு வரப்படும்) அந்நாளில் நிச்சயமாக இவர்கள் தங்கள் இறைவனை விட்டும் தடுக்கப்பட்டு விடுவார்கள்.
Mütaffifin 83:16
16. பின்னர், நிச்சயமாக இவர்கள் நரகத்தில் நுழைவார்கள்.
Mütaffifin 83:17
17. பின்னர், (இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தது இதுதான்'' என்று கூறப்படும்.
Mütaffifin 83:18
18. அவ்வாறல்ல! நிச்சயமாக நன்மை செய்தவர்களின் பதிவேடு ‘‘இல்லிய்யூன்' என்ற (மேலான) இடத்தில் இருக்கும்.
Mütaffifin 83:19
19. (நபியே!) ‘இல்லிய்யூன்' என்னும் (மேலான) இடத்தில் இருக்கும் பதிவேடு என்னவென்று நீர் அறிவீரா?
Mütaffifin 83:20
20. அது ஒரு பதிவுப் புத்தகம். அதில் (நல்லவர்களின் பெயர்களெல்லாம்) பதியப்பட்டிருக்கும்.
Mütaffifin 83:21
21. ‘முகர்ரப்' (இறைநெருக்கத்திற்குரிய) வானவர்கள் அதை(க் காத்து)ப் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
Mütaffifin 83:22
22. ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள் (அந்நாளில்) இன்பம் நிறைந்த சொர்க்கத்தில்,
Mütaffifin 83:23
23. உயர்ந்த கட்டில்கள் மீது (சாய்ந்த வண்ணம் சொர்க்கத்தின் காட்சிகளைப்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
Mütaffifin 83:24
24. அவர்கள் முகங்களில் அவர்களின் சுகவாசத்தின் செழிப்பை (நபியே!) நீர் அறிந்து கொள்வீர்.
Mütaffifin 83:25
25. முத்திரையிடப்பட்டிருக்கும் கலப்பற்ற திராட்சை ரசம் அவர்களுக்குப் புகட்டப்படும்.
Mütaffifin 83:26
26. அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். (பானத்தை) ஆசை கொள்ள விரும்புவோர் அதையே ஆசை கொள்ளவும்.
Mütaffifin 83:27
27. அதில் ‘தஸ்னீம்' என்ற (வடிகட்டிய) பானமும் கலந்திருக்கும்.
Mütaffifin 83:28
28. (தஸ்னீம் என்பது அல்லாஹ்வுக்குச்) சமீபமானவர்கள் அருந்துவதற்கென ஏற்பட்ட ஒரு (சிறப்பான) சுனையின் நீராகும்.
Mütaffifin 83:29
29. நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கை கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர்.
Mütaffifin 83:30
30. அவர்களின் சமீபமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக்கொள்கின்றனர்.
Mütaffifin 83:31
31. (அவர்களை விட்டும் விலகித்) தங்கள் குடும்பத்தார்களிடம் சென்று விட்டபோதிலும், இவர்களுடைய விஷயங்களையே (பரிகாசமாகப் பேசி) மகிழ்ச்சியடைகின்றனர்.
Mütaffifin 83:32
32. (வழியில்) இவர்களைக் கண்டால் (இவர்களைச் சுட்டிக் காண்பித்து) ‘‘நிச்சயமாக இவர்கள் வழிகெட்டுப் போனார்கள்'' என்றும் கூறுகின்றனர்.
Mütaffifin 83:33
33. (நம்பிக்கையாளர்களைப் பற்றி எதற்காக இவர்கள் இவ்வளவு கவலைப்படுகின்றனர்?) இவர்கள் அவர்கள் மீது பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லையே!
Mütaffifin 83:34
34. எனினும், (மறுமை நாளாகிய) இன்றைய தினம் நம்பிக்கை கொண்டவர்கள் அந்நிராகரிப்பவர்களைக் கண்டு சிரிக்கின்றனர்.
Mütaffifin 83:35
35. (சொர்க்கத்திலுள்ள சிறந்த) இருக்கைகள் மீது (சாய்ந்த வண்ணம்) இருந்து கொண்டு, இந்தப் பாவிகள் படும் வேதனையைப்) பார்த்துக்கொண்டு,
Mütaffifin 83:36
36. (மறுமையை) நிராகரித்த இவர்களுக்கு, இவர்களுடைய செயலுக்குத்தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்பார்கள்.)
İnşikak 84:1
1. (உலகம் அழியும் சமயத்தில்) வானம் பிளந்து விடும்போது,
İnşikak 84:2
2. அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும் போது. (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
İnşikak 84:3
3. மேலும், பூமி விரிக்கப்படும்போது,
İnşikak 84:4
4. மேலும், அது தன்னிடம் உள்ளவற்றையெல்லாம் எறிந்து வெறுமனே ஆகிவிடும்போது,
İnşikak 84:5
5. மேலும், அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்து விடும் (போது மனிதன் தன் செயலுக்குரிய கூலியைப் பெறுவான்). (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
İnşikak 84:6
6. மனிதனே! நீ உன் இறைவனிடம் செல்லும் வரை (நன்மையோ தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டு) சிரமத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கிறாய். (பின்னர், மறுமையில்) அவனை நீ சந்திக்கிறாய்.
İnşikak 84:7
7. ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய செயலேடு கொடுக்கப்படுகிறதோ,
İnşikak 84:8
8. அவர் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்.
İnşikak 84:9
9. அவர் மகிழ்ச்சியடைந்தவராக(ச் சொர்க்கத்திலுள்ள) தன் குடும்பத்தார்களிடம் திரும்புவார்.
İnşikak 84:10
10. எவனுடைய செயலேடு அவனுடைய முதுகுப்புறம் கொடுக்கப்பட்டதோ,
İnşikak 84:11
11. அவன், (தனக்குக்) கேடுதான் என்று (அப்படியே) சப்தமிடுவான்,
İnşikak 84:12
12. நரகத்தில் நுழைவான்.
İnşikak 84:13
13. ஏனென்றால், நிச்சயமாக அவன் (இம்மையிலிருந்த காலமெல்லாம் மறுமையை மறந்து) தன் குடும்பத்தார்களுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தான்.
İnşikak 84:14
14. மெய்யாகவே அவன் (தன் இறைவனிடம்) மீளவே மாட்டோம் என்றும் எண்ணிக் கொண்டிருந்தான்.
İnşikak 84:15
15. அது சரியன்று! நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாகவே இருந்தான்.
İnşikak 84:16
16. (மாலை நேர) செம்மேகத்தின் மீது சத்தியமாக!
İnşikak 84:17
17. இரவின் மீதும், அது மறைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் (சத்தியமாக!)
İnşikak 84:18
18 பூரணச் சந்திரன் மீது சத்தியமாக!
İnşikak 84:19
19. (ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு) நிச்சயமாக நீங்கள் படிப்படியாகக் கடக்க வேண்டியதிருக்கிறது.
İnşikak 84:20
20. ஆகவே, (இதை மறுத்துக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இதை நம்பிக்கை கொள்வதில்லை.
İnşikak 84:21
21. அவர்களுக்கு இந்த குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்ட போதிலும், (இறைவனை) அவர்கள் சிரம் பணிந்து வணங்குவது இல்லை.
İnşikak 84:22
22. அது மட்டுமா? இந்நிராகரிப்பவர்கள் (இந்த குர்ஆனையே) பொய்யாக்குகின்றனர்.
İnşikak 84:23
23. எனினும், இவர்கள் (தங்கள் மனதில்) சேகரித்து (மறைத்து) வைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான்.
İnşikak 84:24
24. ஆகவே, (நபியே!) துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக.
İnşikak 84:25
25. எனினும், இவர்களில் எவர்கள் (தங்கள் பாவத்திலிருந்து திருந்தி) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (என்றென்றுமே) முடிவுறாத (நற்)கூலியுண்டு.
Büruc 85:1
1. கோள்கள் நிறைந்த வானத்தின் மீது சத்தியமாக,
Büruc 85:2
2. வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாள் மீது சத்தியமாக,
Büruc 85:3
3. சாட்சியின் மீதும், சாட்சி சொல்ல வேண்டிய நாளின் மீதும் சத்தியமாக!
Büruc 85:4
4. அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்.)
Büruc 85:5
5. அது, விறகுகள் போட்டெரித்த நெருப்பு (அகழ்).
Büruc 85:6
6. அதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில்,
Büruc 85:7
7. நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள்.
Büruc 85:8
8. (நம்பிக்கை கொண்ட) அவர்களில் ஒரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும், மிக்க புகழுடையவனும், (அனைவரையும்) மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பிக்கை கொண்டதையே அவர்கள் குற்றமாகக் கண்டனர்.
Büruc 85:9
9. வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! (அவனை நம்பிக்கை கொண்டதற்காகவே அந்த பாவிகள் அவர்களை நெருப்பில் எறிந்தனர்.) அல்லாஹ்வோ, (இவர்கள் செய்த) அனைத்திற்கும் சாட்சி ஆவான்.
Büruc 85:10
10. ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் இவ்வாறு துன்புறுத்தி பின்னர், அதைப்பற்றி அவர்கள் (கைசேதப்பட்டு) மன்னிப்புக் கோரவும் இல்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனை உண்டு. மேலும், (அவர்கள் நம்பிக்கையாளர்களை நெருப்பிட்டவாறு) அவர்களுக்கும் பொசுக்குகின்ற வேதனையுண்டு.
Büruc 85:11
11. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ நிச்சயமாக அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களுண்டு. இதுதான் மாபெரும் வெற்றி.
Büruc 85:12
12. (நபியே! இந்த விஷமிகளைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்) நிச்சயமாக உமது இறைவனின் பிடி மிக்க கடுமையானது. (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.)
Büruc 85:13
13. நிச்சயமாக அவன்தான் (அவர்களை) உற்பத்தி செய்கிறான். (அவர்கள் மரணித்த பின்னரும்) அவர்களை மீளவைப்பான்.
Büruc 85:14
14. அவன்தான் (நம்பிக்கை கொண்டவர்களை) மிக்க மன்னிப்பவனும், மிக நேசிப்பவனும் ஆவான்.
Büruc 85:15
15. (அவன்தான்) அர்ஷுடையவன், மகா கீர்த்தியுடையவன்.
Büruc 85:16
16. தான் விரும்பியதையெல்லாம் செய்யக் கூடியவன்.
Büruc 85:17
17. (நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு எட்டியதா? (யாருடைய படைகள்?)
Büruc 85:18
18. ஃபிர்அவ்ன், ஸமூதுடைய (படைகள்).
Büruc 85:19
19. எனினும், இந்நிராகரிப்பவர்கள் (குர்ஆனைப்) பொய்யாக்குவதிலேயே (முனைந்து) கிடக்கின்றனர்.
Büruc 85:20
20. அல்லாஹ்வோ, அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொண்டிருக்கிறான்.
Büruc 85:21
21. (இது கவியல்ல.) மாறாக, இது கீர்த்திமிக்க குர்ஆன்,
Büruc 85:22
22. (இது) லவ்ஹுல் மஹ்பூளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அதை இவர்கள் நிராகரிப்பதனால் ஆகக்கூடியதென்ன?)
Târık 86:1
1. வானத்தின் மீதும், (இரவில்) உதயமாகக்கூடியதின் மீதும் சத்தியமாக!
Târık 86:2
2. (நபியே!) உதயமாகக்கூடியது என்னவென்று நீர் அறிவீரா!
Târık 86:3
3. (இதுதான்) இரவெல்லாம் சுடரிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற நட்சத்திரம்.
Târık 86:4
4. ஒவ்வொரு மனிதனிடமும் (நம்மால் ஏற்படுத்தப்பட்ட) கண்காணிக்கக் கூடிய ஒரு (வான)வர் இல்லாமலில்லை.
Târık 86:5
5. ஆகவே, மனிதன், தான் எதனால் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை கவனிக்கவும்.
Târık 86:6
6. குதித்து வெளிப்படும் ஒரு துளித் தண்ணீரைக் கொண்டே படைக்கப்பட்டான்.
Târık 86:7
7. அது, முதுகந்தண்டுக்கும் நெஞ்சுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.
Târık 86:8
8. (இவ்வாறு படைக்கின்ற) அவன் (மனிதன் இறந்தபின் உயிர் கொடுத்து) அவனை மீளவைக்கவும் நிச்சயமாக ஆற்றலுடையவன்ன!
Târık 86:9
9. என்றைய தினம் எல்லா மர்மங்களும் வெளிப்பட்டுவிடுமோ,
Târık 86:10
10. (அன்றைய தினம்) மனிதனுக்கு ஒரு சக்தியும் இருக்காது. உதவி செய்பவனும் இருக்க மாட்டான்.
Târık 86:11
11. மழை பொழியும் வானத்தின் மீது சத்தியமாக!,
Târık 86:12
12. (புற்பூண்டுகள் முளைக்க) வெடிக்கும் பூமியின் மீதும் சத்தியமாக!
Târık 86:13
13. மெய்யாகவே இது (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கக்கூடிய சொல்லாகும்.
Târık 86:14
14. இது வீண் பரிகாசமா(ன வார்த்தைய)ல்ல.
Târık 86:15
15. (நபியே!) நிச்சயமாக அவர்கள் (உமக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்கிறார்கள்.
Târık 86:16
16. நானும் (அவர்களுக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்வேன்.
Târık 86:17
17. ஆகவே, இந்நிராகரிப்பவர்களுக்கு (அது வரை) நீர் அவகாசமளிப்பீராக. (அதிகமல்ல;) ஒரு சொற்ப அவகாசம் அவர்களுக்கு அளிப்பீராக.
A'lâ 87:1
1. (நபியே!) மிக மேலான உமது இறைவனின் திருப்பெயரை நீர் புகழ்ந்து துதி செய்வீராக;
A'lâ 87:2
2. அவனே (எல்லா படைப்புகளையும்) படைத்து, (அவற்றை) ஒழுங்குபடுத்தியவன்.
A'lâ 87:3
3. அவனே (அவற்றுக்கு வேண்டிய சகலவற்றையும்) நிர்ணயம் செய்து, (அவற்றை அடையக் கூடிய) வழிகளையும் (அவற்றுக்கு) அறிவித்தான்.
A'lâ 87:4
4. அவனே (கால்நடைகளுக்கு) மேய்ச்சல் பொருள்களையும் வெளிப்படுத்துகிறான்.
A'lâ 87:5
5. பின்னர் அவற்றை உலர்ந்த சருகுகளாக ஆக்குகிறான்.
A'lâ 87:6
6, 7. (நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலே தவிர, (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர். நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான்.
A'lâ 87:7
6, 7. (நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலே தவிர, (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர். நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான்.
A'lâ 87:8
8. சொர்க்கப் பாதையை நாம் உமக்கு எளிதாக்கித் தருவோம்.
A'lâ 87:9
9. ஆகவே, நல்லுபதேசம் (மக்களுக்குப்) பயனளிக்கின்ற வரை நீர் உபதேசித்துக் கொண்டே வருவீராக.
A'lâ 87:10
10. நிச்சயமாக எவர் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ அவர், (இதைக் கொண்டு) நல்லறிவை அடைவார்.
A'lâ 87:11
11. துர்ப்பாக்கியமுடையவனோ, இதிலிருந்து விலகிக்கொள்வான்.
A'lâ 87:12
12. (எனினும்,) அவன் (நரகத்தின்) பெரிய நெருப்பை அடைவான்.
A'lâ 87:13
13. பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான்; (சுகமாக) வாழவும் மாட்டான்.
A'lâ 87:14
14. எவர் (பாவங்களை விட்டு விலகிப்) பரிசுத்தவானாக ஆனாரோ அவர், நிச்சயமாக வெற்றி பெற்றார்.
A'lâ 87:15
15. அவன் தன் இறைவனின் திருப்பெயரை நினைவு செய்து கொண்டும், தொழுது கொண்டுமிருப்பார்.
A'lâ 87:16
16. எனினும், நீங்களோ (மறுமையை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
A'lâ 87:17
17. மறுமையின் வாழ்க்கைதான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும்.
A'lâ 87:18
18. நிச்சயமாக இது முன்னுள்ள வேதங்களிலும்,
A'lâ 87:19
19. இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் இருக்கிறது.
Gâşiye 88:1
1. (நபியே! அனைவரையும்) சூழ்ந்து கொள்ளக்கூடிய (மறுமையைப் பற்றிய) செய்தி உமக்குக் கிடைத்ததா?
Gâşiye 88:2
2. அந்நாளில், சில முகங்கள் இழிவடைந்து இருக்கும்.
Gâşiye 88:3
3. அவை (தவறான வழியில்) அமல் செய்து (அதிலேயே) நிலைத்திருந்தவை.
Gâşiye 88:4
4. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கே அவை செல்லும்.
Gâşiye 88:5
5. (அவை) கொதிக்கின்ற ஓர் ஊற்றிலிருந்து நீர் புகட்டப்படும்.
Gâşiye 88:6
6. அதில் அவர்களுக்கு(க் கருவேல) முட்களைத் தவிர, வேறொன்றும் உணவாகக் கிடைக்காது.
Gâşiye 88:7
7. (அது அவர்களுடைய உடலைக்) கொழுக்கவும் வைக்காது; (அவர்களுடைய) பசியையும் தீர்த்து வைக்காது.
Gâşiye 88:8
8. எனினும், அந்நாளில் வேறு சில முகங்களோ, மிக்க செழிப்பாக இருக்கும்.
Gâşiye 88:9
9. (இம்மையில்) தாங்கள் செய்த (நல்ல) காரியங்களைப் பற்றித் திருப்தியடையும்.
Gâşiye 88:10
10. (அவை) மேலான சொர்க்கத்தில் இருக்கும்.
Gâşiye 88:11
11. அதில் வீண் வார்த்தையை அவை செவியுறாது.
Gâşiye 88:12
12. அதில் (இவர்கள் அருந்துவதற்கு) தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்ற (தெளிவான) ஒரு சுனையுண்டு.
Gâşiye 88:13
13. அதில் (இவர்கள் அமருவதற்கு) உயர்ந்த இருக்கைகளுண்டு.
Gâşiye 88:14
14. (பல வகை இன்பமான பானங்கள் நிறைந்த) கெண்டிகள் (இவர்கள் முன்) வைக்கப்பட்டிருக்கும்.
Gâşiye 88:15
15. (இவர்கள் சாய்ந்து கொள்வதற்காகத்) திண்டு தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்.
Gâşiye 88:16
16. உயர்ந்த விரிப்புகள் இவர்களின் கீழ் விரிக்கப்பட்டிருக்கும். (இத்தகைய சுகபோகத்தில் நல்லடியார்கள் இருப்பார்கள்.)
Gâşiye 88:17
17. (நபியே! இந்நிராகரிப்பவர்கள் தங்களிடமுள்ள) ஒட்டகத்தையேனும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது?
Gâşiye 88:18
18. (அவர்களுக்கு மேல் உள்ள) வானத்தையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?
Gâşiye 88:19
19. (அவர்கள் கண்முன் தோன்றும்) மலைகளையும் அவர்கள் (கவனிக்க வேண்டாமா?) அவை எவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன?
Gâşiye 88:20
20. (அவர்கள் வசிக்கும்) பூமியையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது?
Gâşiye 88:21
21. (ஆகவே, நபியே!) இவற்றை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்து, இவற்றைப் படைத்தவனின் அருள்களை, அவர்களுக்கு நீர் கூறி) நல்லுபதேசம் செய்வீராக! (இவற்றைக்கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறாவிடில் அதற்காக நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்,) நீர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்பவர்தான்,
Gâşiye 88:22
22. (அவ்வாறே நடக்கும்படி) அவர்களை நீர் நிர்ப்பந்திக்கக்கூடியவர் அல்ல.
Gâşiye 88:23
23 எனினும், எவர்கள் புறக்கணித்து நிராகரிக்கிறார்களோ,
Gâşiye 88:24
24. அவர்களை அல்லாஹ் பெரும் வேதனை செய்வான்.
Gâşiye 88:25
25. நிச்சயமாக அவர்கள் அனைவரும் நம்மிடம்தான் வர வேண்டும்.
Gâşiye 88:26
26. நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்குக் கேட்பதும் நம் மீதுதான் கடமையாகும்.
Fecr 89:1
1, 2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!
Fecr 89:2
1, 2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!
Fecr 89:3
3. ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், சத்தியமாக!
Fecr 89:4
4. நிகழ்கின்ற இரவின் மீது சத்தியமாக! (கேள்வி கணக்கு கேட்கும் நாள் வந்தே தீரும்).
Fecr 89:5
5. இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கிறது.
Fecr 89:6
6, 7. (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
Fecr 89:7
6, 7. (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
Fecr 89:8
8. அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை.
Fecr 89:9
9. இன்னும், ஸமூத் என்னும் மக்களை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?) இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து, (அதில் வசித்துக்) கொண்டிருந்தார்கள்.
Fecr 89:10
10. இன்னும், (இராணுவங்களையுடைய) ஆணிக்கார ஃபிர்அவ்னை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்க வில்லையா?)
Fecr 89:11
11. இவர்களெல்லாம் பூமியில் வரம்பு மீறியே நடந்தார்கள்.
Fecr 89:12
12. (பூமியில்) அவர்கள் மிக்க அதிகமாகவே விஷமம் செய்து கொண்டிருந்தனர்.
Fecr 89:13
13. ஆதலால், உங்கள் இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைக்கொண்டு (அடி மேல் அடி) அடித்தான்.
Fecr 89:14
14. நிச்சயமாக உமது இறைவன் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்த வண்ணமாக இருக்கிறான்.
Fecr 89:15
15. ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகிறான்.
Fecr 89:16
16. ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகிறான்.
Fecr 89:17
17. (விஷயம்) அவ்வாறல்ல. நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை.
Fecr 89:18
18. ஏழைகளுக்கு உணவு(ம் வாழ்வாதாரமும் நீங்கள் அளிக்காததுடன் மற்ற எவரையும்) அளிக்கும்படி தூண்டுவதில்லை.
Fecr 89:19
19. பிறருடைய சொத்துக்களை உங்கள் சொத்துடன் சேர்த்து புசித்துவிடுகிறீர்கள்.
Fecr 89:20
20. மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கிறீர்கள்.
Fecr 89:21
21. அவ்வாறல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில்,
Fecr 89:22
22. உமது இறைவனும் வருவான். வானவர்களும் அணிஅணியாக வருவார்கள்.
Fecr 89:23
23. அந்நாளில் (பாவிகளுக்காக) நரகம் கொண்டுவரப்படும். அந்நாளில் மனிதனுக்கு நல்லறிவு உதயமாகும். எனினும், அப்போது (உதயமாகின்ற) அறிவால் அவனுக்கு என்ன பயன்?
Fecr 89:24
24. ‘‘என் வாழ்க்கையில் நான் (ஒரு) நன்மையைச் செய்து வைத்திருக்க வேண்டுமே!'' என்று புலம்புவான்.
Fecr 89:25
25. அந்நாளில் (பாவிகளை) அவன் செய்யும் வேதனையைப் போல் மற்றெவனும் (எவரையும்) செய்யமாட்டான். (அவ்வளவு கடினமாக அவன் வேதனை செய்வான்.)
Fecr 89:26
26. (பாவிகளை) அவன் கட்டுவதைப்போல் பலமாக மற்ற எவனுமே கட்டமாட்டான். (அவ்வளவு பலமாக அவன் கட்டுவான்.)
Fecr 89:27
27. (எனினும், அந்நாளில் நல்ல மனிதனை நோக்கி) “நிம்மதிபெற்ற ஆத்மாவே!
Fecr 89:28
28. நீ (இறைவனைக் கொண்டு) திருப்தியடைந்ததாக! (இறைவனால் நீ) திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பச் செல்!'' (என்றும்)
Fecr 89:29
29. ‘‘நீ என் நல்லடியார்களில் சேர்ந்து,
Fecr 89:30
30. என் சொர்க்கத்திலும் நீ நுழைந்துவிடு'' (என்றும் கூறுவான்).
Beled 90:1
1. (நபியே! அபயமளிக்கும்) இந்நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
Beled 90:2
2. அதிலும் நீர் இந்நகரத்தில் தங்கக்கூடிய சமயத்தில்.
Beled 90:3
3. (மனிதர்களின்) தந்தை மீதும், அவர் பெற்றெடுத்த சந்ததிகள் மீதும் சத்தியமாக!
Beled 90:4
4. மெய்யாகவே நாம் மனிதனை சிரமத்தில் மூழ்கியவனாகவே படைத்திருக்கிறோம்.
Beled 90:5
5. (அவ்வாறிருக்க,) அவன் தன்னை அடக்க எவராலும் முடியாது என்று எண்ணிக் கொண்டானா?
Beled 90:6
6. ‘‘ஏராளமான பொருளை நான் (சம்பாதித்துச் செலவு செய்து) அழித்துவிட்டேன்'' என்று, அவன் (கர்வம் கொண்டு பெருமையாகக்) கூறுகிறான்.
Beled 90:7
7. அவ்வளவு பொருளை ஒருவருமே பார்த்திருக்கவில்லை என்று அவன் எண்ணிக் கொண்டானோ?
Beled 90:8
8. (பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? (அவ்வாறிருந்தும் உண்மையை அவன் கண்டுகொள்ளவில்லை.)
Beled 90:9
9. (பேசக்கூடிய) ஒரு நாவையும், இரு உதடுகளையும் (நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதைத் தானாகவே அவன் அடைந்துவிட்டானா?)
Beled 90:10
10. (நன்மை தீமையின்) இரு வழிகளையும் நாம் அவனுக்குப் பிரித்தறிவித்தோம்;
Beled 90:11
11. எனினும், (இதுவரை) அவன் ‘அகபா'வை (கணவாயை)க் கடக்கவில்லை.
Beled 90:12
12. (நபியே!) ‘அகபா' என்னவென்று நீர் அறிவீரா?
Beled 90:13
13. அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது.
Beled 90:14
14-16. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
Beled 90:15
14-16. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
Beled 90:16
14-16. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
Beled 90:17
17. பிறகு, எவர்கள் நம்பிக்கை கொண்டும் ஒருவருக்கொருவர் பொறுமையைக் கடைபிடிக்குமாறு நல்லுபதேசம் செய்துகொண்டும், கருணை காட்டவேண்டும் என்று ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்துகொண்டும் இருக்கிறார்களோ அவர்களிலும் அவர் சேர்ந்துவிடுவார்.
Beled 90:18
18. இவர்கள்தான் வலது பக்கத்தில் இருப்பவர்கள்.
Beled 90:19
19. எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள்தான் இடப்பக்கத்தில் இருப்பவர்கள்.
Beled 90:20
20. அவர்களை நரகத்தில் போட்டு (எல்லா வழிகளும்) மூடப்பட்டுவிடும்.
Şems 91:1
1. சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக,
Şems 91:2
2. (அது அஸ்தமித்ததற்குப்) பின் உதயமாகும் சந்திரன் மீதும்,
Şems 91:3
3. (சூரியன்) பிரகாசிக்கும் பகலின் மீதும்,
Şems 91:4
4. (அதை) மறைத்துக்கொள்ளும் இரவின் மீதும்,
Şems 91:5
5. வானத்தின் மீதும், அதை அமைத்தவன் மீதும்,
Şems 91:6
6. பூமியின் மீதும், அதை விரித்தவன் மீதும்,
Şems 91:7
7. ஆத்மாவின் மீதும், அதை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும்,
Şems 91:8
8. அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக!
Şems 91:9
9. எவர் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டார்.
Şems 91:10
10. எவன் அதைப் (பாவத்தில்) புதைத்துவிட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான்.
Şems 91:11
11. ஸமூது கூட்டத்தினர் (ஸாலிஹ் நபியைத்) தங்கள் அநியாயத்தால் பொய்யாக்கினார்கள்.
Şems 91:12
12. அவர்களிலுள்ள ஒரு துர்பாக்கியன் முன் வந்தபொழுது,
Şems 91:13
13. அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி ‘‘இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம் (இதைத் துன்புறுத்தாமலும்) இது தண்ணீர் அருந்த (தடை செய்யாமலும்) விட்டு விடுங்கள்'' என்று கூறினார்.
Şems 91:14
14. எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர். ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக, அவர்களின் மீது வேதனையை இறக்கி, அவர்கள் அனைவரையும் (தரை) மட்டமாக்கி விட்டான்.
Şems 91:15
15. இவர்களின் முடிவைப் பற்றி(த் தன்னைப் பழிவாங்கி விடுவார்களென்று இறைவன்) பயப்படவில்லை.
Leyl 92:1
1. (அனைத்தையும்) மூடிக்கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!
Leyl 92:2
2. பிரகாசமுள்ள பகலின் மீது சத்தியமாக!
Leyl 92:3
3. ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
Leyl 92:4
4. (மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சிகள் பலவாறாக இருக்கின்றன.
Leyl 92:5
5. ஆகவே, (உங்களில்) எவர் தானம் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து,
Leyl 92:6
6. (இந்த மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் (நல்லதென்றே) உண்மையாக்கி வைக்கிறாரோ,
Leyl 92:7
7. அவருக்கு சொர்க்கப் பாதையை நாம் எளிதாக்கித் தருவோம்.
Leyl 92:8
8. எவன் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது,
Leyl 92:9
9. (இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் பொய்யாக்கி வைக்கிறானோ,
Leyl 92:10
10. அவனுக்குக் (கஷ்டத்திற்குரிய) நரகப் பாதையைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம்.
Leyl 92:11
11. அவன் (நரகத்தில்) விழுந்துவிட்டால், அவனுடைய பொருள் அவனுக்கு (ஒரு) பயனுமளிக்காது.
Leyl 92:12
12. நிச்சயமாக நேர்வழியை அறிவிப்பது நம்மீதுதான் கடமையாகும்.
Leyl 92:13
13. நிச்சயமாக இம்மையும், மறுமையும் நமக்கே சொந்தமானவை!
Leyl 92:14
14. (மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.
Leyl 92:15
15. மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்லமாட்டான்.
Leyl 92:16
16. அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான்.
Leyl 92:17
17. இறையச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார்.
Leyl 92:18
18. அவர் (பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன் பொருளை(த் தானமாக)க் கொடுப்பார்.
Leyl 92:19
19. தான் பதில் நன்மை செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் தன் மீது இருக்காது.
Leyl 92:20
20. இருப்பினும், மிக்க மேலான தன் இறைவனின் திருமுகத்தை விரும்பியே தவிர (வேறு எதற்காகவும் தானம் செய்ய மாட்டார்).
Leyl 92:21
21. (இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார்.
Duhâ 93:1
1. காலைப்பொழுதின் மீது சத்தியமாக!
Duhâ 93:2
2. மறைத்துக் கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!
Duhâ 93:3
3. (நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; (உம்மை) வெறுக்கவுமில்லை.
Duhâ 93:4
4. (ஒவ்வொரு நாளும் உமது) பிந்திய நிலைமை, முந்திய நிலைமையை விட நிச்சயமாக மிக்க மேலானதாக இருக்கிறது.
Duhâ 93:5
5. உமது இறைவன் மேலும் (பல உயர் பதவிகளை) உமக்கு அளிப்பான். (அவற்றைக் கொண்டு) நீர் திருப்தியடைவீர்.
Duhâ 93:6
6. உம்மை அநாதையாகக் கண்டு, அவன் உமக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்க வில்லையா?
Duhâ 93:7
7. திகைத்துத் தயங்கியவராக உம்மைக் கண்ட அவன் நேரான வழியில் (உம்மைச்) செலுத்தினான்.
Duhâ 93:8
8. முடைப்பட்டவராக உம்மைக் கண்ட அவன் (உம்மைத்) தனவந்தராக்கி வைத்தான். (அல்லவா?)
Duhâ 93:9
9. ஆகவே, (இவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் அநாதைகளைக் கடுகடுக்காதீர்.
Duhâ 93:10
10. யாசிப்பவரை வெருட்டாதீர்.
Duhâ 93:11
11. (உம்மீது புரிந்துள்ள) உமது இறைவனின் அருளைப் (பிறருக்கு) அறிவித்து (அவனுக்கு நன்றி செலுத்தி)க் கொண்டிருப்பீராக!
İnşirah 94:1
1. (நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா?
İnşirah 94:2
2. உமது சுமையையும் உம்மைவிட்டும் நாம் இறக்கிவிட்டோம்.
İnşirah 94:3
3. அது, உமது இடுப்பையே முறித்துக் கொண்டிருந்தது.
İnşirah 94:4
4. உமது கீர்த்தியையும் நாம் உயர்த்தினோம்.
İnşirah 94:5
5. நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.
İnşirah 94:6
6. மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.
İnşirah 94:7
7. ஆகவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக.
İnşirah 94:8
8. மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக!
Tin 95:1
1. அத்தியின் மீதும்,ஜெய்தூனின் மீதும் சத்தியமாக!
Tin 95:2
2. ஸினாய் மலையின் மீதும் சத்தியமாக!
Tin 95:3
3. அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக,
Tin 95:4
4. நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கிறோம்.
Tin 95:5
5. (அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனாக நாம் ஆக்கி விடுகிறோம்.
Tin 95:6
6. ஆயினும், எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்து வருகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மேலான தன்மையில் இருப்பதுடன்) அவர்களுக்கு (என்றென்றுமே) தடைபடாத (நற்)கூலியுண்டு.
Tin 95:7
7. கூலி கொடுக்கும் நாளைப் பற்றி (நபியே!) இதற்குப் பின்னர், உம்மை எவர்தான் பொய்யாக்க முடியும்?
Tin 95:8
8. தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா?
Alak 96:1
1. (நபியே! அனைத்தையும்) படைத்த உமது இறைவனின் பெயரால் (அவனது கட்டளைகள் அடங்கிய திரு குர்ஆனை) ஓதுவீராக!
Alak 96:2
2. அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைக்கிறான்.
Alak 96:3
3. (நபியே! மேலும்) நீர் ஓதுவீராக! உமது இறைவன் மாபெரும் கொடையாளி!
Alak 96:4
4. அவன்தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான்.
Alak 96:5
5. (அதன் மூலம்) மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான்.
Alak 96:6
6, 7. (இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.
Alak 96:7
6, 7. (இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.
Alak 96:8
8. நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் (அவன்) மீள வேண்டும்.
Alak 96:9
9-10. (நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
Alak 96:10
9-10. (நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
Alak 96:11
11-12. அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
Alak 96:12
11-12. அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
Alak 96:13
13. (அவன், அவரைப்) பொய்யாக்கிப் புறக்கணிப்பதையும் நீர் கவனித்தீரா?
Alak 96:14
14. (அவன் செய்யும் இந்த துஷ்ட காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
Alak 96:15
15, 16. (இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.
Alak 96:16
15, 16. (இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.
Alak 96:17
17. ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும்.
Alak 96:18
18. நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம்.
Alak 96:19
19. (நபியே!) நிச்சயமாக நீர் அவனுக்குக் கீழ்ப்படியாதீர். (உமது இறைவனுக்குச்) சிரம் பணிந்து வணங்கி (அவனை) நெருங்குவீராக!
Kadr 97:1
1. நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலதுல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கிவைத்தோம்.
Kadr 97:2
2. (நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீர் அறிவீரா?
Kadr 97:3
3. கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
Kadr 97:4
4. அதில் வானவர்களும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர்.
Kadr 97:5
5. ‘‘ஸலாம்'' (ஈடேற்றம்) உண்டாகுக! (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).
Beyyine 98:1
1. இதை நிராகரிக்கும் வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்குபவர்களிலும் பலர், தங்களிடம் தெளிவான அத்தாட்சி வரும் வரை (ஒரு தெளிவான அத்தாட்சி வந்தால், அதைப் பின்பற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இருந்து) விலகாது (உறுதியாகவே) இருந்தனர்.
Beyyine 98:2
2. (அவர்களிடம் வந்திருக்கும் தெளிவான அத்தாட்சி என்னவென்றால், அவர்களுக்குப்) பரிசுத்தமான வேதங்களை ஓதிக் காண்பிக்கக்கூடிய அல்லாஹ்வினுடைய (இந்தத்) தூதர்தான்.
Beyyine 98:3
3. (அவர் ஓதிக் காண்பிக்கும்) அதில் நிலையான சட்ட திட்டங்களே வரையப்பட்டிருக்கின்றன.
Beyyine 98:4
4. (அவர்களின் வரவை எதிர்பார்த்து, அவர்களைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டிருந்த) வேதத்தை உடையவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி(யாகிய நம் தூதர்) வந்ததன் பின்னர் (அவருக்கு) மாறுசெய்து பிளவுபட்டு விட்டனர்.
Beyyine 98:5
5. (எனினும், அவர்கள்) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, மற்ற மார்க்கங்களைப் புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறே தவிர, (வேறெதுவும் இத்தூதர் மூலம்) அவர்களுக்கு ஏவப்படவில்லை. (இது, அவர்களுடைய வேதத்திலும் ஏவப்பட்ட விஷயம்தான்.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம்.
Beyyine 98:6
6. ஆகவே, வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்குபவர்களிலும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள் (அவரை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக நரக நெருப்பில் தான் இருப்பார்கள். அதில், அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இவர்கள்தான் படைப்புகளில் மகா கெட்டவர்கள்.
Beyyine 98:7
7. ஆயினும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள்(அவரை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களே, நிச்சயமாக படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.
Beyyine 98:8
8. அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடத்தில் உள்ள ‘அத்ன்' என்னும் நிலையான சொர்க்கங்களாகும். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றுமே அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைவார்கள். எவர் தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரோ, அவருக்குத்தான் இந்த பாக்கியம் கிடைக்கும்.
Zilzal 99:1
1. (பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது,
Zilzal 99:2
2. அது, தான் சுமந்திருப்பவற்றை (எல்லாம் வெளியில்) எறிந்துவிடும் சமயத்தில்,
Zilzal 99:3
3. மனிதன் (திடுக்கிட்டு) ‘இதற்கென்ன நேர்ந்தது' (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான்.
Zilzal 99:4
4. அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும்.
Zilzal 99:5
5. (இவ்வாறே) உமது இறைவன் வஹ்யி மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கிறான் என்று கூறும்.
Zilzal 99:6
6. அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.
Zilzal 99:7
7. ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார்.
Zilzal 99:8
8. (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான்.
Adiyat 100:1
1. மூச்சுத் திணர அதிவேகமாகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியமாக!
Adiyat 100:2
2. (அவை செல்லும் வேகத்தில் குளம்புகளிலிருந்து) நெருப்பைக் கக்கும்.
Adiyat 100:3
3. இன்னும் அவை அதிகாலையில் (எதிரிகள் மீதும்) பாய்ந்து செல்லும்.
Adiyat 100:4
4. (அவ்வாறு வேகமாகச் செல்லும்போது, மேகத்தைப்போல்) புழுதியைக் கிளப்பும்.
Adiyat 100:5
5. பின்னர், (எதிரிகளின் படையின்) மத்தியில் நுழைந்துவிடும்.
Adiyat 100:6
6. (இத்தகைய குதிரைகள் மீது சத்தியமாக!) நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவன் ஆவான்.
Adiyat 100:7
7. நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாவான்.
Adiyat 100:8
8. நிச்சயமாக அவன் பொருள்களை மிக்க கடினமாகவே நேசிக்கிறான்.
Adiyat 100:9
9, 10. அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவையெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
Adiyat 100:10
9, 10. அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவையெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
Adiyat 100:11
11. நிச்சயமாக மனிதர்களுடைய இறைவன் (தீயவன் யார்? நல்லவன் யார்? என்று) அவர்களை அந்நாளில் நன்கு அறிந்து கொள்வான்.
Karia 101:1
1. (மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்!
Karia 101:2
2. (அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன?
Karia 101:3
3. (நபியே!) திடுக்கிடச் செய்யும் சம்பவம் இன்னதென்று நீர்அறிவீரா?
Karia 101:4
4. அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள்.
Karia 101:5
5. கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும்.
Karia 101:6
6. எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ,
Karia 101:7
7. அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார்.
Karia 101:8
8. எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ,
Karia 101:9
9. அவன் தங்குமிடம் ஹாவியாதான்.
Karia 101:10
10. அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா?
Karia 101:11
11. (அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்.
Tekâsür 102:1
1, 2. நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது).
Tekâsür 102:2
1, 2. நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது).
Tekâsür 102:3
3. நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவை என்ன என்பதை) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.
Tekâsür 102:4
4. பின்னர், நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவற்றின் பலன்களையும்) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.
Tekâsür 102:5
5. நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அதன் பலனைச்) சந்தேகமற உறுதியாக நீங்கள் அறிவீர்களாயின்,
Tekâsür 102:6
6. நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண்முன்) காண்பீர்கள்.
Tekâsür 102:7
7. பிறகு, சந்தேகமற மெய்யாகவே அதை நீங்கள் உங்கள் கண்களால் கண்டுகொள்வீர்கள்.
Tekâsür 102:8
8. (உங்களுக்கு இறைவன் புரிந்த) அருளை (நீங்கள் எவ்வழியில் செலவு செய்தீர்கள் என்பதை)ப் பற்றியும், பின்னர் அந்நாளில் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
Asr 103:1
1. காலத்தின் மீது சத்தியமாக!
Asr 103:2
2. (தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக மனிதன் நஷ்டமடைந்து விட்டான்.
Asr 103:3
3. ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் சிரமங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை).
Hümezeh 104:1
1. குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான்.
Hümezeh 104:2
2. பொருளைச் சேகரித்து (நல்ல வழியில் செலவு செய்யாது) அதை எண்ணிக்கொண்டே இருப்பவன்,
Hümezeh 104:3
3. தன் செல்வம் தன்னை என்றென்றுமே (உலகத்தில்) நிலைத்திருக்கச் செய்யுமென்றும் எண்ணிக் கொண்டான்.
Hümezeh 104:4
4. அவ்வாறல்ல! (நிச்சயமாக அவன் மரணிப்பான். பின்னர்) நிச்சயமாக அவன் ‘ஹுதமா' என்னும் நரகத்தில் எறியப்படுவான்.
Hümezeh 104:5
5. (நபியே!) ‘ஹுதமா' (என்றால்) என்னவென்று நீர் அறிவீரா?
Hümezeh 104:6
6. (அதுதான்) அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பு.
Hümezeh 104:7
7. (அது உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் பாய்ந்துவிடும்.
Hümezeh 104:8
8, 9. (நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்.
Hümezeh 104:9
8, 9. (நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்.
Fil 105:1
1. (நபியே!) யானைப் படையினரை உமது இறைவன் எவ்வாறு (அழியச்) செய்தான் என்பதை நீர் (கவனித்துப்) பார்க்கவில்லையா?
Fil 105:2
2. அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிட வில்லையா?
Fil 105:3
3. அவர்கள் மீது பறவைகளை கூட்டங்கூட்டமாக அனுப்பிவைத்தான்.
Fil 105:4
4. (கெட்டியான) சுடப்பட்ட சிறிய கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன.
Fil 105:5
5. அதனால், அவன் அவர்களை(ப் பறவைகளால்) கொத்தித் தின்னப்பட்ட கதிர்களைப்போல் ஆக்கி (அழித்து) விட்டான்.
Kureyş 106:1
1. குறைஷிகளுக்கு (பிரயாணத்தின் மீது) விருப்பமுண்டாக்கி,
Kureyş 106:2
2. குளிர்கால பயணத்தையும், கோடைகால பயணத்தையும் அவர்கள் விரும்பிக் கைகொள்ளும்படி செய்ததற்காக,
Kureyş 106:3
3. (அதற்கு நன்றி செலுத்துவதற்காக) இவ்வீட்டின் இறைவனையே அவர்கள் வணங்கவும்.
Kureyş 106:4
4. அவன்தான் (அவர்கள் உழவடித்துப் பயிரிடாமலே இந்த வர்த்தக பிரயாணத்தின் மூலம்) அவர்களுடைய பசிக்கு உணவளித்து வருகிறான். (கொலை, களவு முதலிய கொடிய) பயத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான்.
Mâûn 107:1
1. (நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
Mâûn 107:2
2. (ஆதரவற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான்.
Mâûn 107:3
3. அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும்படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை.
Mâûn 107:4
4. (கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான்.
Mâûn 107:5
5. அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
Mâûn 107:6
6. (மேலும்,) அவர்கள் (தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள்.
Mâûn 107:7
7. (மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள்.
Kevser 108:1
1. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘கவ்ஸர்' என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம்.
Kevser 108:2
2. ஆகவே, (அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் உமது இறைவனைத் தொழுது, குர்பானி (பலி) கொடுத்து வருவீராக.
Kevser 108:3
3. நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன்.
Kâfirun 109:1
1. (நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே!
Kâfirun 109:2
2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
Kâfirun 109:3
3. நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை.
Kâfirun 109:4
4. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன்.
Kâfirun 109:5
5. நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்.
Kâfirun 109:6
6. உங்கள் (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என் (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்).
Nasr 110:1
1. (நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து,
Nasr 110:2
2. அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீர் கண்டால்,
Nasr 110:3
3. (அதற்கு நன்றி செலுத்துவதற்காக) உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக! நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலை(யும்) அங்கீகரிப்பவனாக இருக்கிறான்.
Tebbet 111:1
1. அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்!
Tebbet 111:2
2. அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு ஒரு பயனுமளிக்காது.
Tebbet 111:3
3. வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான்.
Tebbet 111:4
4. விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ,
Tebbet 111:5
5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்து விடுவாள்.)
İhlas 112:1
1. (நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான்.
İhlas 112:2
2. (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)
İhlas 112:3
3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.)
İhlas 112:4
4. (தவிர) அவனுக்கு ஒப்பாகவும் (நிகராகவும்) ஒன்றுமில்லை.
Felak 113:1
1. (நபியே! நீர் பிரார்த்தனை செய்து) கூறுவீராக அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.
Felak 113:2
2. அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கை விட்டும்,
Felak 113:3
3. (அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும்,
Felak 113:4
4. முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்,
Felak 113:5
5. பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
Nas 114:1
1. (நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.
Nas 114:2
2. (அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன்.
Nas 114:3
3. (அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்.
Nas 114:4
4, 5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
Nas 114:5
4, 5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
Nas 114:6
6. (அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்.