Tamilce Meal — Şeyh Ömer Şerif b. Abdüsselâm — Nisa' 4:1 – Enam 6:165
Contents
- Nisa' 4:1
- Nisa' 4:2
- Nisa' 4:3
- Nisa' 4:4
- Nisa' 4:5
- Nisa' 4:6
- Nisa' 4:7
- Nisa' 4:8
- Nisa' 4:9
- Nisa' 4:10
- Nisa' 4:11
- Nisa' 4:12
- Nisa' 4:13
- Nisa' 4:14
- Nisa' 4:15
- Nisa' 4:16
- Nisa' 4:17
- Nisa' 4:18
- Nisa' 4:19
- Nisa' 4:20
- Nisa' 4:21
- Nisa' 4:22
- Nisa' 4:23
- Nisa' 4:24
- Nisa' 4:25
- Nisa' 4:26
- Nisa' 4:27
- Nisa' 4:28
- Nisa' 4:29
- Nisa' 4:30
- Nisa' 4:31
- Nisa' 4:32
- Nisa' 4:33
- Nisa' 4:34
- Nisa' 4:35
- Nisa' 4:36
- Nisa' 4:37
- Nisa' 4:38
- Nisa' 4:39
- Nisa' 4:40
- Nisa' 4:41
- Nisa' 4:42
- Nisa' 4:43
- Nisa' 4:44
- Nisa' 4:45
- Nisa' 4:46
- Nisa' 4:47
- Nisa' 4:48
- Nisa' 4:49
- Nisa' 4:50
- Nisa' 4:51
- Nisa' 4:52
- Nisa' 4:53
- Nisa' 4:54
- Nisa' 4:55
- Nisa' 4:56
- Nisa' 4:57
- Nisa' 4:58
- Nisa' 4:59
- Nisa' 4:60
- Nisa' 4:61
- Nisa' 4:62
- Nisa' 4:63
- Nisa' 4:64
- Nisa' 4:65
- Nisa' 4:66
- Nisa' 4:67
- Nisa' 4:68
- Nisa' 4:69
- Nisa' 4:70
- Nisa' 4:71
- Nisa' 4:72
- Nisa' 4:73
- Nisa' 4:74
- Nisa' 4:75
- Nisa' 4:76
- Nisa' 4:77
- Nisa' 4:78
- Nisa' 4:79
- Nisa' 4:80
- Nisa' 4:81
- Nisa' 4:82
- Nisa' 4:83
- Nisa' 4:84
- Nisa' 4:85
- Nisa' 4:86
- Nisa' 4:87
- Nisa' 4:88
- Nisa' 4:89
- Nisa' 4:90
- Nisa' 4:91
- Nisa' 4:92
- Nisa' 4:93
- Nisa' 4:94
- Nisa' 4:95
- Nisa' 4:96
- Nisa' 4:97
- Nisa' 4:98
- Nisa' 4:99
- Nisa' 4:100
- Nisa' 4:101
- Nisa' 4:102
- Nisa' 4:103
- Nisa' 4:104
- Nisa' 4:105
- Nisa' 4:106
- Nisa' 4:107
- Nisa' 4:108
- Nisa' 4:109
- Nisa' 4:110
- Nisa' 4:111
- Nisa' 4:112
- Nisa' 4:113
- Nisa' 4:114
- Nisa' 4:115
- Nisa' 4:116
- Nisa' 4:117
- Nisa' 4:118
- Nisa' 4:119
- Nisa' 4:120
- Nisa' 4:121
- Nisa' 4:122
- Nisa' 4:123
- Nisa' 4:124
- Nisa' 4:125
- Nisa' 4:126
- Nisa' 4:127
- Nisa' 4:128
- Nisa' 4:129
- Nisa' 4:130
- Nisa' 4:131
- Nisa' 4:132
- Nisa' 4:133
- Nisa' 4:134
- Nisa' 4:135
- Nisa' 4:136
- Nisa' 4:137
- Nisa' 4:138
- Nisa' 4:139
- Nisa' 4:140
- Nisa' 4:141
- Nisa' 4:142
- Nisa' 4:143
- Nisa' 4:144
- Nisa' 4:145
- Nisa' 4:146
- Nisa' 4:147
- Nisa' 4:148
- Nisa' 4:149
- Nisa' 4:150
- Nisa' 4:151
- Nisa' 4:152
- Nisa' 4:153
- Nisa' 4:154
- Nisa' 4:155
- Nisa' 4:156
- Nisa' 4:157
- Nisa' 4:158
- Nisa' 4:159
- Nisa' 4:160
- Nisa' 4:161
- Nisa' 4:162
- Nisa' 4:163
- Nisa' 4:164
- Nisa' 4:165
- Nisa' 4:166
- Nisa' 4:167
- Nisa' 4:168
- Nisa' 4:169
- Nisa' 4:170
- Nisa' 4:171
- Nisa' 4:172
- Nisa' 4:173
- Nisa' 4:174
- Nisa' 4:175
- Nisa' 4:176
- Maide 5:1
- Maide 5:2
- Maide 5:3
- Maide 5:4
- Maide 5:5
- Maide 5:6
- Maide 5:7
- Maide 5:8
- Maide 5:9
- Maide 5:10
- Maide 5:11
- Maide 5:12
- Maide 5:13
- Maide 5:14
- Maide 5:15
- Maide 5:16
- Maide 5:17
- Maide 5:18
- Maide 5:19
- Maide 5:20
- Maide 5:21
- Maide 5:22
- Maide 5:23
- Maide 5:24
- Maide 5:25
- Maide 5:26
- Maide 5:27
- Maide 5:28
- Maide 5:29
- Maide 5:30
- Maide 5:31
- Maide 5:32
- Maide 5:33
- Maide 5:34
- Maide 5:35
- Maide 5:36
- Maide 5:37
- Maide 5:38
- Maide 5:39
- Maide 5:40
- Maide 5:41
- Maide 5:42
- Maide 5:43
- Maide 5:44
- Maide 5:45
- Maide 5:46
- Maide 5:47
- Maide 5:48
- Maide 5:49
- Maide 5:50
- Maide 5:51
- Maide 5:52
- Maide 5:53
- Maide 5:54
- Maide 5:55
- Maide 5:56
- Maide 5:57
- Maide 5:58
- Maide 5:59
- Maide 5:60
- Maide 5:61
- Maide 5:62
- Maide 5:63
- Maide 5:64
- Maide 5:65
- Maide 5:66
- Maide 5:67
- Maide 5:68
- Maide 5:69
- Maide 5:70
- Maide 5:71
- Maide 5:72
- Maide 5:73
- Maide 5:74
- Maide 5:75
- Maide 5:76
- Maide 5:77
- Maide 5:78
- Maide 5:79
- Maide 5:80
- Maide 5:81
- Maide 5:82
- Maide 5:83
- Maide 5:84
- Maide 5:85
- Maide 5:86
- Maide 5:87
- Maide 5:88
- Maide 5:89
- Maide 5:90
- Maide 5:91
- Maide 5:92
- Maide 5:93
- Maide 5:94
- Maide 5:95
- Maide 5:96
- Maide 5:97
- Maide 5:98
- Maide 5:99
- Maide 5:100
- Maide 5:101
- Maide 5:102
- Maide 5:103
- Maide 5:104
- Maide 5:105
- Maide 5:106
- Maide 5:107
- Maide 5:108
- Maide 5:109
- Maide 5:110
- Maide 5:111
- Maide 5:112
- Maide 5:113
- Maide 5:114
- Maide 5:115
- Maide 5:116
- Maide 5:117
- Maide 5:118
- Maide 5:119
- Maide 5:120
- Enam 6:1
- Enam 6:2
- Enam 6:3
- Enam 6:4
- Enam 6:5
- Enam 6:6
- Enam 6:7
- Enam 6:8
- Enam 6:9
- Enam 6:10
- Enam 6:11
- Enam 6:12
- Enam 6:13
- Enam 6:14
- Enam 6:15
- Enam 6:16
- Enam 6:17
- Enam 6:18
- Enam 6:19
- Enam 6:20
- Enam 6:21
- Enam 6:22
- Enam 6:23
- Enam 6:24
- Enam 6:25
- Enam 6:26
- Enam 6:27
- Enam 6:28
- Enam 6:29
- Enam 6:30
- Enam 6:31
- Enam 6:32
- Enam 6:33
- Enam 6:34
- Enam 6:35
- Enam 6:36
- Enam 6:37
- Enam 6:38
- Enam 6:39
- Enam 6:40
- Enam 6:41
- Enam 6:42
- Enam 6:43
- Enam 6:44
- Enam 6:45
- Enam 6:46
- Enam 6:47
- Enam 6:48
- Enam 6:49
- Enam 6:50
- Enam 6:51
- Enam 6:52
- Enam 6:53
- Enam 6:54
- Enam 6:55
- Enam 6:56
- Enam 6:57
- Enam 6:58
- Enam 6:59
- Enam 6:60
- Enam 6:61
- Enam 6:62
- Enam 6:63
- Enam 6:64
- Enam 6:65
- Enam 6:66
- Enam 6:67
- Enam 6:68
- Enam 6:69
- Enam 6:70
- Enam 6:71
- Enam 6:72
- Enam 6:73
- Enam 6:74
- Enam 6:75
- Enam 6:76
- Enam 6:77
- Enam 6:78
- Enam 6:79
- Enam 6:80
- Enam 6:81
- Enam 6:82
- Enam 6:83
- Enam 6:84
- Enam 6:85
- Enam 6:86
- Enam 6:87
- Enam 6:88
- Enam 6:89
- Enam 6:90
- Enam 6:91
- Enam 6:92
- Enam 6:93
- Enam 6:94
- Enam 6:95
- Enam 6:96
- Enam 6:97
- Enam 6:98
- Enam 6:99
- Enam 6:100
- Enam 6:101
- Enam 6:102
- Enam 6:103
- Enam 6:104
- Enam 6:105
- Enam 6:106
- Enam 6:107
- Enam 6:108
- Enam 6:109
- Enam 6:110
- Enam 6:111
- Enam 6:112
- Enam 6:113
- Enam 6:114
- Enam 6:115
- Enam 6:116
- Enam 6:117
- Enam 6:118
- Enam 6:119
- Enam 6:120
- Enam 6:121
- Enam 6:122
- Enam 6:123
- Enam 6:124
- Enam 6:125
- Enam 6:126
- Enam 6:127
- Enam 6:128
- Enam 6:129
- Enam 6:130
- Enam 6:131
- Enam 6:132
- Enam 6:133
- Enam 6:134
- Enam 6:135
- Enam 6:136
- Enam 6:137
- Enam 6:138
- Enam 6:139
- Enam 6:140
- Enam 6:141
- Enam 6:142
- Enam 6:143
- Enam 6:144
- Enam 6:145
- Enam 6:146
- Enam 6:147
- Enam 6:148
- Enam 6:149
- Enam 6:150
- Enam 6:151
- Enam 6:152
- Enam 6:153
- Enam 6:154
- Enam 6:155
- Enam 6:156
- Enam 6:157
- Enam 6:158
- Enam 6:159
- Enam 6:160
- Enam 6:161
- Enam 6:162
- Enam 6:163
- Enam 6:164
- Enam 6:165
Nisa' 4:1
மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். (அவன்) உங்களை ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். இன்னும், அதிலிருந்து அதனுடைய மனைவியைப் படைத்தான். இன்னும், அவ்விருவரிலிருந்து அதிகமான ஆண்களையும் பெண்களையும் (இவ்வுலகத்தின் பல பாகங்களில்) பரப்பினான். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவன் மூலமாகவே உங்களுக்குள் (தேவைகளை ஒருவர் மற்றவரிடம்) கேட்டுக் கொள்கிறீர்கள். இன்னும், இரத்த உறவுகளை முறிப்பதை பயந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பாளனாக இருக்கிறான்.
Nisa' 4:2
இன்னும், அனாதைகளுக்கு அவர்களுடைய செல்வங்களை கொடுத்துவிடுங்கள். இன்னும், (அதிலுள்ள) உயர்ந்ததை (நீங்கள்) எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாக (உங்களிடமுள்ள) மட்டமானதை (அவர்களுக்கு) கொடுக்காதீர்கள். இன்னும், அவர்களுடைய செல்வங்களை உங்கள் செல்வங்களுடன் (சேர்த்து) விழுங்காதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாக இருக்கிறது.
Nisa' 4:3
இன்னும், அனாதை(ப் பெண்களை திருமணம் செய்து, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டீர்கள் என நீங்கள் பயந்தால், (மற்ற) பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாக; அல்லது, மும்மூன்றாக: அல்லது, நான்கு நான்காக மணம் புரியுங்கள். (பல மனைவிகளுக்கிடையில்) நீதமாக நடக்கமாட்டீர்கள் என பயந்தால் ஒருத்தியை மட்டும் மணம் புரியுங்கள். அல்லது, உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் அநீதியிழைக்காமல் இருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்.
Nisa' 4:4
இன்னும், பெண்களுக்கு அவர்களுடைய மணக்கொடைகளைக் கட்டாயக் கடமையாக (மனமுவந்து மகிழ்வுடன்) கொடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை உங்களுக்கு (விட்டுக் கொடுக்க) அவர்கள் மனம் விரும்பினால் மகிழ்ச்சியாக, இன்பமாக (அவர்கள் விட்டுக் கொடுத்த) அதை புசியுங்கள்.
Nisa' 4:5
இன்னும், (அனாதைகளின் பொறுப்பாளர்களே!) உங்களுக்கு வாழ்வாதாரமாக அல்லாஹ் ஆக்கிய உங்கள் (அனாதைகளின்) செல்வங்களை (அவர்களில் யார்) புத்தி குறைவானவர்களாக இருக்கிறார்களோ அவர்களிடம் கொடுக்காதீர்கள். இன்னும், அவற்றில் அவர்களுக்கு நீங்களே உணவளியுங்கள். இன்னும், அவர்களுக்கு ஆடை அணிவியுங்கள். இன்னும், (அவர்கள் தங்கள் செல்வத்தை கேட்டால் செல்வத்தை நிர்வகிக்கும் அறிவுத் திறமை உங்களுக்கு வந்தவுடன் உங்கள் செல்வத்தை உங்களிடம் ஒப்படைக்கிறோம் என்று) நல்ல சொல்லை அவர்களுக்குச் சொல்லுங்கள்!
Nisa' 4:6
இன்னும், அனாதைக(ளிடம் அவர்களின் செல்வங்களை கொடுப்பதற்கு முன்னர் அவர்க)ளைச் சோதியுங்கள், இறுதியாக, அவர்கள் திருமண (பருவ)த்தை அடைந்தால் (செல்வத்தை நிர்வகிக்கக்கூடிய) தெளிவான அறிவுத் திறமையையும் அவர்களிடம் நீங்கள் கண்டால், அவர்களுடைய செல்வங்களை அவர்களிடம் ஒப்படையுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் செல்வங்களை திரும்பப் பெற்று) விடுவார்கள் என்பதற்காக, அளவு கடந்தும் அவசர அவசரமாகவும் அவற்றை சாப்பிடாதீர்கள் (அனுபவித்து அழித்துவிடாதீர்கள்). (அனாதையின் காப்பாளர்களில்) எவர் செல்வந்தராக இருக்கிறாரோ (அனாதையின் செல்வத்திலிருந்து தான் பயனடைவதை) அவர் தவிர்க்கவும். எவர் ஏழையாக இருக்கிறாரோ அவர் (நீதமாக) முறையுடன் (அவசியத்திற்கேற்ப அதிலிருந்து) புசிக்கவும். ஆக, அவர்களுடைய செல்வங்களை நீங்கள் அவர்களிடம் ஒப்படைத்தால் (அப்போது) அவர்களுக்கு முன்னர் சாட்சிகளை வையுங்கள். சாட்சியால் அல்லாஹ்வே போதுமானவன்.
Nisa' 4:7
பெற்றோரும் நெருங்கிய உறவினர்களும் விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து ஆண்களுக்கு பங்குண்டு. (அவ்வாறே) பெற்றோரும் நெருங்கிய உறவினர்களும் விட்டுச்சென்ற (சொத்)திலிருந்து பெண்களுக்கு பங்குண்டு. அ(வர்கள் விட்டுச் சென்ற)து, குறைவாக இருந்தாலும் சரி; அல்லது, அதிகமாக இருந்தாலும் சரி. அந்த பங்குகள் எல்லாம் அளவு நிர்ணயம் செய்யப்பட்டவை ஆகும்.
Nisa' 4:8
இன்னும், பங்கு வைக்கப்படும்போது உறவினர்கள், அனாதைகள், ஏழைகள் (அங்கு) வந்தால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும் தானமாக) கொடுங்கள். இன்னும், (கொடுக்க முடியவில்லை என்றால்) அவர்களுக்கு (அன்பான) நல்ல சொல்லை சொல்லுங்கள்.
Nisa' 4:9
(மரண தருவாயில் மரண சாசனம் கூறுபவரிடம் பிரசன்னமாகி இருப்பவர்கள் அவர் தனது சந்ததிகள் அல்லாத மற்ற உறவுகளுக்கும் பிற தர்மங்களுக்கும் அவரது செல்வத்தைக் கொடுக்க தூண்டி, அவரது சந்ததிகளை அவர் செல்வமின்றி விட்டுச்செல்ல நிர்ப்பந்திப்பவர்கள்) தங்கள் மரணத்திற்குப் பின்னர் தாங்கள் பலவீனமான சந்ததியை விட்டுச்சென்றால் எப்படி அவர்கள் மீது (அவர்களுக்கு செல்வங்கள் இல்லாமல் போய்விட்டால் வாழ்க்கையில் சிரமப்படுவார்களே என்று) பயப்படுவார்களோ அப்படியே (மரணத் தருவாயில் உள்ள இவரின் சந்ததிகள் விஷயத்திலும்) பயப்பட வேண்டும். ஆகவே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும். இன்னும், நேர்மையான சொல்லைச் சொல்லட்டும். (இறப்பவர் தனது மூன்றில் ஒன்றை மட்டுமே வாரிசுகள் அல்லாத உறவுகளுக்கு; இன்னும், நல்ல காரியங்களுக்கு கொடுக்கும்படியும்; மீதமுண்டான சொத்துக்களை சந்ததிகளுக்கு பாதுகாத்து வைக்கும்படியும் மார்க்க முறைப்படி வழிகாட்ட வேண்டும்!)
Nisa' 4:10
நிச்சயமாக, எவர்கள் அனாதைகளின் செல்வங்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான். இன்னும், விரைவில் அவர்கள் நரக ஜுவாலையில் எரிவார்கள்.
Nisa' 4:11
உங்கள் பிள்ளைகளில் (சொத்து பங்கிடுதல் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான். ஆணுக்கு, இரு பெண்களின் பங்கு போன்று (பாகம்) உண்டு. (ஆண் பிள்ளைகள் இல்லாமல், இரண்டு அல்லது) இரண்டிற்கும் மேலான பெண் (பிள்ளை)களாக இருந்தால் (தாய் தந்தை) விட்டுச் சென்ற(சொத்)தில் மூன்றில் இரண்டு (பங்குகள்) அவர்களுக்கு உண்டு. (ஆண் பிள்ளைகளும் இல்லாமல், பெண் பிள்ளை) ஒருத்தியாக மட்டும் இருந்தால் அவளுக்கு (சொத்தில்) பாதி (பங்கு) உண்டு. (இறந்த) அவருக்கு பிள்ளை இருந்தால் அவருடைய தாய், தந்தைக்கு (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் ஆறில் ஒன்று உண்டு. (இறந்த) அவருக்கு பிள்ளை இல்லாமல் அவருக்கு அவருடைய தாய், தந்தை வாரிசுகளாக ஆகினால் அவருடைய தாய்க்கு மூன்றில் ஒன்று(ம் தந்தைக்கு மீதமுள்ள சொத்து முழுவதும்) உண்டு. (இறந்த) அவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவருடைய தாய்க்கு ஆறில் ஒன்று உண்டு. (ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு.) (இவை அனைத்தும் வஸிய்யத் எனும்) அவர் கூறும் மரண சாசனம், அல்லது (அவருடைய) கடனுக்குப் பின்னர் (கொடுக்கப்படும்). உங்கள் தந்தைகள் இன்னும் உங்கள் ஆண் பிள்ளைகளில் யார் உங்களுக்குப் பலனளிப்பதில் மிக நெருங்கியவர் என்பதை அறியமாட்டீர்கள். (இவை) அல்லாஹ்வின் சட்டமாக(வும் நிர்ணயிக்கப்பட்ட பங்காகவும்) இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
Nisa' 4:12
இன்னும், உங்கள் மனைவிகள் விட்டுச் சென்ற (சொத்)தில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லையென்றால் - உங்களுக்குப் பாதி உண்டு. ஆக, அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் உங்களுக்குக் கால் (பாகம்) உண்டு, அவர்கள் செய்கின்ற மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர். இன்னும், உங்களுக்குப் பிள்ளை இல்லையென்றால் நீங்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் கால் பாகம் (உங்கள் மனைவிகளாகிய) அவர்களுக்கு உண்டு. ஆக, உங்களுக்குப் பிள்ளை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் எட்டில் ஒன்று (உங்கள் மனைவிகளாகிய) அவர்களுக்கு உண்டு, நீங்கள் செய்யும் மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர். இன்னும், (தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய) வாரிசுகள் இல்லாத ஓர் ஆண் அல்லது ஒரு பெண் (மரணித்து) இருந்தால் இன்னும் அவருக்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி இருந்தால், அவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் (இறந்தவருடைய சொத்தில்) ஆறில் ஒன்று உண்டு. இதைவிட அதிகமாக அவர்கள் இருந்தால் அவர்கள் மூன்றில் ஒன்றில் (சமமான) பங்குதாரர்கள் ஆவர், செய்யப்படும் மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர். (இந்தக் கடன், மற்றும் மரண சாசனத்தால் வாரிசுகளில் எவருக்கும் இறந்தவர்) நஷ்டம் ஏற்படுத்தாதவராக இருக்க வேண்டும். (இந்த சட்டங்கள்) அல்லாஹ்விடமிருந்து நல்லுபதேசமாக (உங்களுக்கு கூறப்படுகின்றன). இன்னும், அல்லாஹ் நன்கறிந்தவன், மகா சகிப்பாளன் ஆவான்.
Nisa' 4:13
இவை, அல்லாஹ்வின் சட்டங்களாகும். எவர்கள் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்களோ அவர்களை அவன் சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.
Nisa' 4:14
இன்னும், எவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்வாரோ, அவனுடைய சட்டங்களை மீறுவாரோ அவரை (அல்லாஹ்) நரகத்தில் பிரவேசிக்கச் செய்வான். அதில் (அவர்) நிரந்தரமாக தங்கி இருப்பார். இன்னும், இழிவுபடுத்தும் தண்டனையும் அவருக்கு உண்டு.
Nisa' 4:15
இன்னும், உங்கள் பெண்களில் மானக்கேடானதை செய்பவர்கள் மீது உங்களிலிருந்து நான்கு நபர்களை சாட்சியாகக் கொண்டு வாருங்கள். அவர்கள் (அதை உண்மைப்படுத்தி) சாட்சியளித்தால் அவர்களுக்கு மரணம் வரும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு (வேறு) ஒரு சட்டத்தை ஏற்படுத்தும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.
Nisa' 4:16
இன்னும், உங்களிலிருந்து இரு ஆண்கள் அ(ந்த மானக்கேடான குற்றத்)தைச் செய்தால் அவ்விருவரையும் துன்புறுத்துங்கள். ஆக, அவ்விருவரும் திருந்தி, அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி (தங்களை) சீர்திருத்திக்கொண்டால் அவர்களைப் புறக்கணித்து (விட்டு)விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை அங்கீகரிப்பவனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
Nisa' 4:17
அல்லாஹ்விடம் தவ்பா அங்கீகரிக்கப்படுவதெல்லாம் அறியாமையினால் பாவத்தைச் செய்து பிறகு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்புகிறவர்களுக்குத்தான். ஆக, அல்லாஹ் அவர்களது தவ்பாவை அங்கீகரி(த்து அவர்களை மன்னி)ப்பான். இன்னும், அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
Nisa' 4:18
பாவங்களைச் செய்பவர்கள், அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்தால், “இப்போது நிச்சயமாக நான் (அவற்றை விட்டு) திருந்தி (மன்னிப்புக் கேட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பி) விடுகிறேன்’’ என்று கூறுபவர்களுக்கும், நிராகரிப்பாளர்களாக இறந்து விடுபவர்களுக்கும் தவ்பா - பிழைபொறுப்பு கிடைக்காது. துன்புறுத்தும் தண்டனையை இவர்களுக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம்.
Nisa' 4:19
நம்பிக்கையாளர்களே! (இறந்தவரின் சொத்துடன் அவரின்) பெண்களை(யும்) பலவந்தமாக நீங்கள் சொந்தம் கொள்வது உங்களுக்கு ஆகுமாகாது. இன்னும், அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை நீங்கள் எடுத்துக் கொள்வதற்காக அவர்க(ளுடன் வாழ விருப்பமில்லாமல் அவர்க)ளை தடுத்து வை(த்துகொண்டு அவர்களாக உங்களிடமிருந்து விடுதலையை வேண்டி, நீங்கள் கொடுத்த மஹ்ரை திரும்ப கொடுக்கும்படி செய்வதற்கு அவர்களை நிர்ப்பந்தி)க்காதீர்கள். எனினும், வெளிப்படையான ஒரு மானக்கேடானதை அவர்கள் செய்தால் தவிர. (அப்போது, நீங்கள் கொடுத்த மஹ்ரில் சிலவற்றை நீங்கள் திரும்ப பெற்று அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் அவர்களை தடுத்து வைப்பதும் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதும் கூடும்). இன்னும், (உங்கள் மனைவிகள் ஒழுக்கமானவர்களாக இருந்தால்) அவர்களுடன் நல்ல முறையில் (கண்ணியமாக பரஸ்பர அன்புடன் உரிமைகளையும் கடமைகளையும் பேணி) வாழுங்கள். ஆக, நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மையை ஆக்கலாம்.
Nisa' 4:20
நீங்கள் ஒரு மனைவியின் இடத்தில் (அவளை விவாகரத்து செய்துவிட்டு வேறு) ஒரு மனைவியை மாற்ற நாடினால் (-வேறு ஒரு பெண்ணை மணம் முடிக்க நாடினால்), அவர்களில் (விவாகரத்து செய்யப்படும்) ஒருத்திக்கு (தங்கக்) குவியலைக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் (திரும்ப) கைப்பற்றாதீர்கள். அதுவோ அபாண்டமாகவும் வெளிப்படையான பாவமாகவும் இருக்கும் நிலையில் அதை நீங்கள் கைப்பற்றுகிறீர்களா?
Nisa' 4:21
உங்களில் சிலர் சிலருடன் (அன்போடும் அந்தரங்க வாழ்க்கையில் அன்னியோனியமாகவும் வாழ்ந்து ஒருவர் மற்றவருடன்) கலந்து விட்டிருக்கும் நிலையில்; இன்னும், அப்பெண்கள் உங்களிடம் உறுதியான வாக்குறுதியையும் வாங்கி இருக்கும் நிலையில் அதை எவ்வாறு நீங்கள் (திரும்ப) கைப்பற்றுவீர்கள்?
Nisa' 4:22
முன்னர் நடந்த (திருமணத்)தைத் தவிர, (இஸ்லாம் வந்த பின்னர்) உங்கள் தந்தைகள் மணமுடித்தவர்களை நீங்கள் மணமுடிக்காதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கப்பட்டதாகவும் இருக்கிறது, இன்னும் இது கெட்ட பழக்கமாகும்.
Nisa' 4:23
உங்கள் தாய்மார்களும், உங்கள் மகள்களும், உங்கள் சகோதரிகளும், உங்கள் மாமிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், (உங்கள்) சகோதரனின் மகள்களும், (உங்கள்) சகோதரியின் மகள்களும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், பால் குடி சகோதரிகளும், உங்கள் மனைவிகளின் தாய்மார்களும் நீங்கள் உறவு கொண்டுவிட்ட உங்கள் மனைவிகளிலிருந்து உங்கள் மடிகளில் வளர்க்கப்படுகின்ற (அவர்களின்) பெண் பிள்ளைகளும் உங்களுக்கு (நீங்கள் மணம் முடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் அவர்களுடன் உறவு கொண்டிருக்கவில்லையென்றால் (அவர்களை விவாகரத்து செய்தபின் அவர்களின் மகள்களை மணப்பது) உங்கள் மீது குற்றமில்லை. இன்னும், உங்கள் முதுகந்தண்டிலிருந்து (பிறந்த) உங்கள் சொந்த மகன்களின் மனைவிகளும் உங்கள் மீது (நீங்கள் மணம் முடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். இன்னும், இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவிகளாக) ஒன்று சேர்ப்பதும் உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்னர் நடந்ததைத் தவிர (அதை அல்லாஹ் மன்னிப்பான்). நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
Nisa' 4:24
பெண்களில் மணமானவர்களும் (உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளனர்). (போரில்) உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களைத் தவிர. (அந்த அடிமைகளை நீங்கள் திருமணம் செய்யலாம்.) (இவை) உங்கள் மீது (விதிக்கப்பட்ட) அல்லாஹ்வின் சட்டமாகும். (மேல் விவரிக்கப்பட்ட) இவர்களைத் தவிர உள்ளவர்களை உங்கள் செல்வங்கள் மூலம் (‘மஹ்ர்’ கொடுத்து மணம்புரியத்) தேடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்களோ ஒழுக்கமுள்ளவர்களாக, சட்டவிரோத உடலுறவில் ஈடுபடாதவர்களாக இருக்கவேண்டும். அவர்களில் எவரிடம் நீங்கள் (மணமுடித்து) சுகம் அனுபவித்தீர்களோ அவர்களுக்கு அவர்களுடைய மஹ்ர்களை கடமையாக கொடுத்து விடுங்கள். கடமையான மஹ்ருக்குப் பின்னர் நீங்கள் உங்களுக்குள் விரும்பி (குறைத்து)க் கொள்வதில் உங்கள் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ், நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
Nisa' 4:25
இன்னும், உங்களில் எவர் நம்பிக்கையாளரான, சுதந்திரமான பெண்களை மணம் முடிக்க பொருளாதார சக்தி பெறவில்லையோ, அவர் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிய நம்பிக்கையாளரான உங்கள் அடிமைப் பெண்களிலிருந்து அவர் மணம் புரியலாம். அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை மிக அறிந்தவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவரே. (அடிமைகளும் சுதந்திரமான நீங்களும் மார்க்கம் இன்னும் மனிதத்தில் சமமானவர்களே. அடிமைப் பெண்களை மணம் முடிப்பதில் எந்த தகுதி குறைவும் இல்லை.) ஆகவே, (அடிமைப் பெண்களை) அவர்களுடைய உரிமையாளரின் அனுமதியுடன் மணமுடியுங்கள்; இன்னும், நல்ல முறையில் அவர்களுடைய மஹ்ர்களைக் கொடுங்கள், (அப்பெண்கள்) பத்தினிகளாக இருக்க வேண்டும்; விபச்சாரிகளாக இல்லாமலும் ரகசிய நண்பர்களை எடுத்துக் கொள்ளாதவர்களாகவும் இருக்கவேண்டும். அவர்கள் (-அடிமைப் பெண்கள்) மணம் முடிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் மானக்கேடான செயலை செய்தால் (குற்றம் செய்த) சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படுகின்ற தண்டனையில் பாதி அவர்கள் மீது நிறைவேற்றப்படும். இது, (-அடிமைகளை மணமுடிப்பது) உங்களில் பாவத்தை பயந்தவருக்கு கொடுக்கப்பட்ட சலுகையாகும். நீங்கள் (சுதந்திரமான பெண்களை மணமுடிக்கும் வரை) பொறுமையாக இருப்பது உங்களுக்கு நல்லதாகும். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.
Nisa' 4:26
அல்லாஹ் (தன் சட்டங்களை) உங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கும், உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்களுடைய (நல்ல) வழிகளில் உங்களை நேர்வழி நடத்துவதற்கும், உங்கள் மீது பிழைபொறுப்பதற்கும் நாடுகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
Nisa' 4:27
இன்னும், அல்லாஹ்வோ உங்களை மன்னிக்க நாடுகிறான். ஆனால், காம ஆசைகளை பின்பற்றுபவர்கள் நீங்கள் (நேர்வழியிலிருந்து விலகி வழிகேடு, இன்னும் மானக் கேடான காரியங்கள் பக்கம்) முழுமையாக சாய்வதையே விரும்புகிறார்கள்.
Nisa' 4:28
அல்லாஹ் (தன் சட்டங்களை) உங்களுக்கு இலகுவாக்க நாடுகிறான். மனிதன் பலவீனனாக படைக்கப்பட்டுள்ளான்.
Nisa' 4:29
நம்பிக்கையாளர்களே! உங்களின் பரஸ்பர விருப்பத்துடன் நடைபெறும் வர்த்தகமாக இருந்தால் தவிர, நீங்கள் உங்கள் செல்வங்களை உங்களுக்கு மத்தியில் தவறான முறையில் புசிக்காதீர்கள். இன்னும், உங்கள் உயிர்களை கொல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
Nisa' 4:30
இன்னும், எவர் அ(ல்லாஹ் தடுத்த)தை எல்லை மீறியும், அநியாயமாகவும் செய்வாரோ அவரை நரக நெருப்பில் எரிப்போம். அது அல்லாஹ்விற்கு இலகுவானதாக இருக்கிறது!
Nisa' 4:31
உங்களுக்கு தடுக்கப்பட்ட பாவங்களில் பெரும்பாவங்களை விட்டு நீங்கள் விலகினால், உங்களை விட்டும் உங்கள் சிறு பாவங்களை நாம் போக்கிவிடுவோம். இன்னும், உங்களை கண்ணியமான இடத்தில் பிரவேசிக்க வைப்போம்.
Nisa' 4:32
உங்களில் சிலரை சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியதை (கண்டு) ஏங்காதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததிலிருந்து பங்குண்டு. பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்ததிலிருந்து பங்குண்டு. இன்னும், அல்லாஹ்விடம் அவன் அருளிலிருந்து கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
Nisa' 4:33
தாய், தந்தை, நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் (அவர்களில்) ஒவ்வொருவருக்கும் வாரிசுகளை நாம் ஏற்படுத்தினோம். இன்னும், எவர்களுடன் பங்காளி உறவை உங்கள் சத்தியங்கள் மூலம் நீங்கள் ஒப்பந்தம் செய்து உறுதி செய்தீர்களோ அவர்களுக்கு (உங்கள் சொத்தில்) அவர்களின் பங்கை கொடுத்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான். (இந்த சட்டம் பிற்காலத்தில் இறக்கப்பட்ட சொத்துரிமை சட்டத்தைக் கொண்டு மாற்றப்பட்டு விட்டது.)
Nisa' 4:34
அவர்களில் சிலரை (-பெண்களை) விட சிலரை (-ஆண்களை) அல்லாஹ் மேன்மையாக்கியிருப்பதாலும் (ஆண்கள்) தங்கள் செல்வங்களிலிருந்து (பெண்களுக்கு) செலவு செய்வதாலும் பெண்களை ஆண்கள் நிர்வகிப்பார்கள். ஆகவே, நல்ல பெண்கள் (அல்லாஹ்விற்கும்; பிறகு, கணவனுக்கும்) பணிந்து நடப்பார்கள்; (கணவன்) மறைவில் இருக்கும்போது (பெண்) எதை பாதுகாக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறினானோ அதை (-கணவனின் செல்வத்தையும் தமது கற்பையும்) பாதுகாப்பார்கள். இன்னும், (பெண்களில்) எவர்கள் (உங்கள் கட்டளைக்கு) மாறுசெய்வதை நீங்கள் பயப்படுகிறீர்களோ அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இன்னும், (அவர்கள் திருந்தாவிட்டால்) படுக்கைகளில் அவர்களை அப்புறப்படுத்தி வையுங்கள். இன்னும், (அதிலும் அவர்கள் திருந்தாவிட்டால்) அவர்களை (காயமேற்படாதவாறு) அடியுங்கள். ஆக, அவர்கள் உங்களுக்கு கீழ்ப்படிந்து நடந்தால் அவர்கள் மீது (குற்றம் சுமத்த) ஏதேனும் ஒரு வழியைத் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாக, மிகப் பெரியவனாக இருக்கிறான்.
Nisa' 4:35
அந்த (கணவன் மனைவி) இருவருக்குள் பிளவை நீங்கள் பயந்தால் அவனின் உறவினரில் ஒரு நடுவரையும், அவளின் உறவினரில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள். (நடுவர்களாகிய) அவ்விருவரும் (கணவன் மனைவி இருவருக்குமிடையில் இணக்கம் ஏற்படுத்தி சேர்த்துவைத்து சீர்திருத்தம் செய்வதை) நாடினால் அந்த (கணவன் மனைவி) இருவருக்கிடையில் (நடுவர்களின் பேச்சின் மூலம்) அல்லாஹ் ஒற்றுமையை(யும் இணக்கத்தையும்) ஏற்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.
Nisa' 4:36
இன்னும், அல்லாஹ்வை வணங்குங்கள்; இன்னும், அவனுக்கு எதையும் இணைவைத்து வணங்காதீர்கள்; இன்னும், தாய், தந்தைக்கும், உறவினருக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டைவீட்டாருக்கும், அந்நியரான அண்டை வீட்டாருக்கும், அருகில் இருக்கும் நண்பருக்கும், பயணிக்கும், உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களுக்கும் கருணையுடன் உதவி செய்யுங்கள். கர்வமுடையவனாக, பெருமையுடையவனாக இருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான்.
Nisa' 4:37
அவர்கள் கருமித்தனம் செய்கிறார்கள்; இன்னும், மக்களுக்கு கருமித்தனத்தை ஏவுகிறார்கள்; இன்னும், அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்குக் கொடுத்த (செல்வத்)தை மறைக்கிறார்கள். (இத்தகைய நன்றிகெட்ட) நிராகரிப்பாளர்களுக்கு இழிவுபடுத்தும் தண்டனையை நாம் தயார்படுத்தி இருக்கிறோம்.
Nisa' 4:38
இன்னும், அவர்கள் மக்களுக்குக் காண்பிப்பதற்காகவே தங்கள் செல்வங்களை தர்மம் செய்கிறார்கள்; இன்னும், அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன் ஆவான்.) எவருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டானோ அவன் மிகக் கெட்ட நண்பனாக இருக்கிறான்.
Nisa' 4:39
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்தால் அவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது? அல்லாஹ் அவர்களை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
Nisa' 4:40
நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவும் அநியாயம் செய்ய மாட்டான். இன்னும், (அவர்கள் செய்தது) நன்மையாக இருந்தால் அதை பன்மடங்காக்குவான். இன்னும், தன்னிடமிருந்து மகத்தான கூலியையும் கொடுப்பான்.
Nisa' 4:41
ஆக, (நபியே!) ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் கொண்டு வந்தால், இன்னும் உம்மை இவர்கள் மீது சாட்சியாக நாம் கொண்டு வந்தால் (உம்மை நிராகரித்த இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?
Nisa' 4:42
(அல்லாஹ்வை) நிராகரித்து, தூதருக்கு மாறு செய்தவர்கள் அவர்களுடன் பூமி சமமாக்கப்பட வேண்டுமே? என்று அந்நாளில் விரும்புவார்கள். (இவர்கள்) அல்லாஹ்விடத்தில் ஒரு செய்தியையும் மறைக்கமாட்டார்கள்.
Nisa' 4:43
நம்பிக்கையாளர்களே! நீங்கள் போதையுற்றவர்களாக இருக்கும் போது நீங்கள் கூறுவதை தெளிவாக அறிகின்ற (சுதாரிப்பு நிலைக்கு நீங்கள் வருகின்ற) வரை தொழுகையை நெருங்காதீர்கள். இன்னும், (நீங்கள் பெருந்தொடக்குள்ள) முழுக்காளிகளாக இருக்கும் போதும் நீங்கள் குளிக்கும் வரை (தொழுகையை நெருங்காதீர்கள்). (ஆனால்) நீங்கள் பயணிகளாக இருந்தால் தவிர. இன்னும், நீங்கள் நோயாளிகளாக இருந்தால்; அல்லது, பயணத்தில் இருந்தால்; அல்லது, உங்களில் ஒருவர் மலஜலம் கழித்து வந்தால்; அல்லது, மனைவிகளோடு நீங்கள் உறவு கொண்டால், (அப்போது சுத்தம் செய்ய) நீங்கள் தண்ணீரை பெற வில்லையெனில் சுத்தமான மண்ணை நாடுங்கள். (அந்த மண்ணில் தட்டப்பட்ட கைகள் மூலம்) உங்கள் முகங்களையும் உங்கள் கைகளையும் தடவுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் குற்றங்கள் அனைத்தையும்) முற்றிலும் மன்னிப்பவனாக, மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்.
Nisa' 4:44
(நபியே!) வேதத்தில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்குகிறார்கள்; இன்னும், நீங்கள் (அல்லாஹ்வுடைய) பாதையிலிருந்து வழிதவறுவதை விரும்புகிறார்கள்.
Nisa' 4:45
உங்கள் எதிரிகளை அல்லாஹ் மிக அறிந்தவன். (உங்களுடைய) பாதுகாவலனாக (இருப்பதற்கு) அல்லாஹ்வே போதுமானவன். இன்னும், பேருதவியாளனாக (இருப்பதற்கு) அல்லாஹ்வே போதுமானவன்.
Nisa' 4:46
யூதர்களில் (சிலர் தவ்ராத்தின்) வசனங்களை அவற்றின் (சரியான) கருத்துகளிலிருந்து புரட்டுகிறார்கள். இன்னும், “(நபியே!) (உமது சொல்லை) செவியுற்றோம். ஆனால், (உமது கட்டளைக்கு) மாறு செய்தோம். நீர் (நாங்கள் சொல்வதை) செவியுறுவீராக! உம்மால் செவியுறமுடியாமல் போகட்டும்!” என்று கூறுகிறார்கள். இன்னும், தங்கள் நாவுகளை வளைத்தும் மார்க்கத்தில் குற்றம் சொல்வதற்காகவும் (உன்ளுர்னா என்று கூறாமல்) “ராயினா” என்று கூறுகிறார்கள். இன்னும், நிச்சயமாக அவர்கள் - “நாங்கள் செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம்” என்றும், “இஸ்மஃ (-நீர் கேட்பீராக), உன்ளுர்னா (எங்களைப் பார்ப்பீராக)” என்றும் - கூறி இருந்தால் (அது) அவர்களுக்கு மிக நன்றாகவும், மிக நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, (அவர்களில்) சிலரைத் தவிர (அதிகமானவர்கள்) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Nisa' 4:47
வேதம் கொடுக்கப்பட்டவர்களே! - முகங்களை மாற்றி அவற்றை அவற்றின் பின்புறங்களில் திருப்பிவிடுவதற்கு முன்னர்; அல்லது, சனிக்கிழமையுடையோரை நாம் சபித்ததுபோல் அவர்களை நாம் சபிப்பதற்கு முன்னர் உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடியதாக நாம் இறக்கிய(வேதத்)தை - நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய கட்டளை நிறைவேறியே தீரும்.
Nisa' 4:48
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இன்னும், அதைத் தவிர மற்றதை அவன், தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்விற்கு இணையை ஏற்படுத்துவாரோ அவர் திட்டமாக (அல்லாஹ்வின் மீது) பெரும் பாவத்தை இட்டுக் கட்டிவிட்டார்.
Nisa' 4:49
(நபியே!) “தங்களை (தாமே உயர்வாக பேசி) பரிசுத்தப்படுத்துபவர்களை (நீர்) கவனிக்கவில்லையா?” மாறாக அல்லாஹ், தான் நாடியவர்களை பரிசுத்தமாக்குகிறான். அவர்களுக்கு (பேரீச்சங் கொட்டையின் சிறிய) வெள்ளை நூலளவும் அநீதி செய்யப்படாது.
Nisa' 4:50
(நபியே!) பார்ப்பீராக! அல்லாஹ்வின் மீது எவ்வாறு பொய்யை அவர்கள் இட்டுக்கட்டி கூறுகிறார்கள். வெளிப்படையான பாவத்திற்கு இதுவே போதுமாகும்.
Nisa' 4:51
(நபியே!) வேதத்தில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டவர்களை (நீர்) கவனிக்கவில்லையா? (அவர்கள்) ஷைத்தானையும், சிலைகளையும் நம்பிக்கை கொள்கிறார்கள். இன்னும், நிராகரிப்பாளர்களை நோக்கி “இவர்கள் நம்பிக்கையாளர்களை விட மார்க்கத்தால் நேர்வழிபெற்றவர்கள்” என்று கூறுகிறார்கள்.
Nisa' 4:52
இவர்கள் எத்தகையோர் என்றால் இவர்களை அல்லாஹ் சபித்தான். அல்லாஹ் எவரை சபிப்பானோ அவருக்கு உதவியாளரை (நீர்) காணவே மாட்டீர்.
Nisa' 4:53
இவர்களுக்கு ஆட்சியில் பங்கு ஏதும் இருக்கிறதா? அவ்வாறிருந்தால் (பேரீச்சங்கொட்டையின் நடுவில் உள்ள ஒரு) கீறல் அளவு(ள்ள பொருளையு)ம் இவர்கள் மக்களுக்கு (தானமாக) கொடுக்க மாட்டார்கள்.
Nisa' 4:54
அல்லது, மக்கள் மீது (-நபியின் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும்) - அல்லாஹ் அவர்களுக்கு தன் அருளிலிருந்து கொடுத்ததிற்காக - பொறாமைப்படுகிறார்களா? ஆக, திட்டமாக (இதற்கு முன்னர்) இப்ராஹீமுடைய குடும்பத்தாருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம். பெரிய ஆட்சியையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
Nisa' 4:55
ஆக, இ(ந்த வேதத்)தை நம்பிக்கை கொண்டவரும் அவர்களில் இருக்கிறார். இன்னும், இதை புறக்கணித்து விலகி சென்றவரும் அவர்களில் இருக்கிறார். (அவர்களை தண்டிப்பதற்கு) கொழுந்து விட்டெரியும் நெருப்பால் நரகமே போதுமானதாகும்.
Nisa' 4:56
நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களை நிராகரித்தார்களோ அவர்களை நரக நெருப்பில் நாம் எரிப்போம். அவர்கள் தண்டனையைத் (தொடர்ந்து) சுவைப்பதற்காக அவர்களுடைய தோல்கள் கனிந்து (உருகி) விடும்போதெல்லாம் அவர்களுக்கு அவை அல்லாத (வேறு புதிய) தோல்களை மாற்றுவோம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
Nisa' 4:57
இன்னும் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தார்களோ அவர்களை சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வோம். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (அவர்கள்) அதில் என்றும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். அவற்றில் பரிசுத்தமான மனைவிகளும் அவர்களுக்கு இருப்பார்கள். இன்னும், (சூடும் குளிரும் இல்லாத) அடர்ந்த நிழலிலும் அவர்களை பிரவேசிக்கச் செய்வோம்.
Nisa' 4:58
“(ஆட்சியாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) பொறுப்புகளை அவற்றுக்கு தகுதியானவர்களிடம் நீங்கள் ஒப்படைக்க வேண்டும்; இன்னும், மக்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்பளித்தால் (பாரபட்சமின்றி) நீதமாக தீர்ப்பளிக்க வேண்டும்” என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ் உங்களுக்கு மிக சிறந்ததையே உபதேசிக்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
Nisa' 4:59
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள். இன்னும், (அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் ஆட்சியாளர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். ஆக, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்களுக்குள் ஒரு விஷயத்தில் தகராறுசெய்தால், (மெய்யாகவே) நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் திருப்பிவிடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை திருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான் உங்களுக்கு சிறந்ததும், மிக அழகான முடிவும் ஆகும்.
Nisa' 4:60
(நபியே!) உமக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டனர் என்று வெளி பாசாங்கு செய்பவர்களை நீர் பார்க்கவில்லையா? தீயவனிடமே அவர்கள் தீர்ப்பு கேட்டுச் செல்ல நாடுகிறார்கள். அ(ந்த தீய)வனை புறக்கணிக்க வேண்டுமென்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. ஷைத்தான் அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் வழிகெடுக்கவே நாடுகிறான்.
Nisa' 4:61
இன்னும், “(நீதமான தீர்ப்பை நாடி) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனது) தூதரின் பக்கமும் நீங்கள் வாருங்கள். (அந்த தீயவனிடம் செல்லாதீர்கள்.)’’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந்நயவஞ்சகர்களை - அவர்கள் உம்மை முற்றிலும் புறக்கணித்து விலகி செல்வதையே - நீர் காண்பீர்.
Nisa' 4:62
ஆக, (நபியே! தீமைகளில்) அவர்களின் கரங்கள் முன்னர் செய்தவற்றின் காரணமாக அவர்களுக்கு ஒரு சிரமம் ஏற்பட்டால் (அதற்குப் பரிகாரம் தேட முடியாமல்போன அவர்களின் இழி நிலைமை) எவ்வாறு இருந்தது (என்பதை நீர் கவனிப்பீராக)! பிறகு, “(அந்த தீயவனிடம் நாங்கள் சென்றதெல்லாம்) நன்மையையும் ஒற்றுமையையும் நாடியே அன்றி, (வேறொன்றையும்) நாங்கள் நாடவில்லை’’ என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவர்களாக உம்மிடம் வருகிறார்கள்.
Nisa' 4:63
இவர்கள் எத்தகையோர் என்றால் இவர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணிப்பீராக! இன்னும் அவர்களுக்கு உபதேசிப்பீராக! இன்னும், அவர்களுடைய உள்ளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் சொல்லை அவர்களுக்கு சொல்வீராக!
Nisa' 4:64
நாம் எந்த ஒரு தூதரையும் அனுப்பவில்லை, அல்லாஹ்வுடைய அனுமதியுடன் அவருக்கு (எல்லோரும்) கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே தவிர. நிச்சயமாக அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோது, உம்மிடம் வந்திருந்து, அவர்களும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி இருந்தால், இன்னும், அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் (அல்லாஹ்விடம் அவர்களுக்காக) பாவமன்னிப்புக் கோரியிருந்தால், தவ்பாவை அங்கீகரிப்பவனாக, பெரும் கருணையாளனாக அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பார்கள்.
Nisa' 4:65
ஆக, (உண்மை அவ்வாறு) இல்லை. உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்களுக்கிடையில் சச்சரவு ஏற்பட்டதில் அவர்கள் உம்மை தீர்ப்பாளராக்கி, பிறகு, நீர் தீர்ப்பளித்ததில் தங்கள் உள்ளங்களில் அறவே அதிருப்தி காணாமல் (-சங்கடத்தை உணராமல்) முழுமையாக (உமது தீர்ப்புக்கு) பணியும் வரை அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகமாட்டார்கள்.
Nisa' 4:66
இன்னும், “உங்களைக் கொல்லுங்கள், அல்லது, உங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறுங்கள்” என்று நாம் அவர்கள் மீது விதித்திருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள் இவ்வாறு) செய்திருக்க மாட்டார்கள். நிச்சயமாக அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதை அவர்கள் செய்திருந்தால் அது அவர்களுக்கு மிக நன்றாகவும் (நம்பிக்கையில் அவர்களை) உறுதிப்படுத்துவதில் மிக வலுவானதாகவும் ஆகி இருக்கும்.
Nisa' 4:67
இன்னும், அப்போது நாம் நம்மிடமிருந்து மகத்தான கூலியை அவர்களுக்கு கொடுத்திருப்போம்.
Nisa' 4:68
இன்னும், நேரான பாதையில் அவர்களை நேர்வழி நடத்தியிருப்போம்.
Nisa' 4:69
எவர்கள் அல்லாஹ்விற்கும், தூதருக்கும் கீழ்ப்படிகிறார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்புரிந்த நபிமார்கள், சத்தியவான்கள், (போரில்) உயிர் நீத்த தியாகிகள், நல்லவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில் சொர்க்க பூங்காக்களில்) இருப்பார்கள். இவர்கள் அழகிய தோழர்கள் ஆவார்கள்.
Nisa' 4:70
இந்த அருள் (உங்களுக்கு) அல்லாஹ்விடமிருந்து வழங்கப்பட்டதாகும். (அனைத்தையும்) நன்கறிந்தவனாக அல்லாஹ்வே போதுமானவன்.
Nisa' 4:71
நம்பிக்கையாளர்களே! (நீங்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்! இன்னும்,) உங்கள் ஆயுதங்களை (உங்களுடன்) எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆக, சிறு சிறு கூட்டங்களாக அல்லது அனைவருமாக (உங்கள் எதிரியை எதிர்த்து போரிட) போருக்குப் புறப்படுங்கள்.
Nisa' 4:72
இன்னும், (போருக்கு செல்லாமல்) பின்தங்கிவிடுபவரும் நிச்சயமாக உங்களில் இருக்கிறார். ஆக, உங்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டால், “திட்டமாக அல்லாஹ் என் மீது அருள் புரிந்தான். ஏனெனில், நான் அவர்களுடன் (போரில்) பிரசன்னமாகி இருக்கவில்லை” என்று கூறுகிறார்.
Nisa' 4:73
இன்னும், அல்லாஹ்விடமிருந்து ஓர் அருள் உங்களுக்கு கிடைத்தால் “நான் அவர்களுடன் இருந்திருக்க வேண்டுமே? (அவ்வாறு இருந்திருப்பின்) மகத்தான (செல்வ) நற்பேறு பெற்றிருப்பேனே!” என்று - உங்களுக்கிடையிலும் அவனுக்கிடையிலும் எந்த நட்பும் இல்லாததைப் போன்று - நிச்சயமாகக் கூறுகிறான்.
Nisa' 4:74
ஆக, மறுமைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும். எவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவாரோ (அவர்) கொல்லப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் அவருக்கு நாம் மகத்தான கூலியைக் கொடுப்போம்.
Nisa' 4:75
அல்லாஹ்வுடைய பாதையிலும் (எதிரிகளால் அநீதி இழைக்கப்பட்ட, துன்புறத்தப்படுகிற) ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகிய பலவீனர்களுடைய பாதையிலும் (அவர்களை பாதுகாப்பதற்காக) நீங்கள் போரிடாமல் இருக்க உங்களுக்கென்ன (நேர்ந்தது)? “எங்கள் இறைவா! எங்களை இவ்வூரிலிருந்து வெளியேற்று, இந்த ஊர்வாசிகள் அநியாயக்காரர்கள். எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலரை ஏற்படுத்து! எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஓர் உதவியாளரை ஏற்படுத்து!” என்று (பலவீனமான) அவர்கள் (பிரார்த்தனையில்) கூறுகிறார்கள்.
Nisa' 4:76
நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். நிராகரிப்பாளர்கள் ஷைத்தானின் பாதையில் போரிடுவார்கள். ஆக, ஷைத்தானுடைய நண்பர்களிடம் நீங்கள் போரிடுங்கள். நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி மிக பலவீனமானதாக இருக்கிறது!
Nisa' 4:77
“உங்கள் கைகளை (போரிடுவதிலிருந்து) தடுத்துக் கொள்ளுங்கள், தொழுகையை நிலை நிறுத்துங்கள், ஸகாத்தை கொடுங்கள்” என்று எவர்களுக்கு கூறப்பட்டதோ அவர்களை நீர் பார்க்கவில்லையா? ஆக, போர் அவர்கள் மீது விதிக்கப்பட்டபோது, அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வை பயப்படுவதைப்போல் அல்லது பயத்தால் (அதைவிட) மிகக் கடுமையாக மக்களைப் பயப்படுகிறார்கள். “எங்கள் இறைவா! ஏன் எங்கள் மீது போரை விதித்தாய்? இன்னும் சமீபமான ஒரு தவணை வரை எங்களை நீ பிற்படுத்தி இருக்க வேண்டாமா?” என்று கூறினார்கள். (நபியே!) கூறுவீராக: “உலகத்தின் இன்பம் அற்பமானதாகும்! அல்லாஹ்வை அஞ்சியவருக்கு மறுமை மிக மேலானதாகும். (மறுமையில் நீங்கள்) ஒரு நூல் அளவு கூட அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.
Nisa' 4:78
நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடையும், பலமான கோபுரங்களில் நீங்கள் இருந்தாலும் சரியே! இன்னும், அவர்களுக்கு ஒரு நன்மை ஏற்பட்டால், “இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது” எனக் கூறுகிறார்கள். இன்னும், அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால், “(நபியே!) இது உம்மிடமிருந்து (எங்களுக்கு) ஏற்பட்டது” எனக் கூறுகிறார்கள். (நபியே) நீர் கூறுவீராக: “எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே (ஏற்பட்டன).” ஆக, இந்தக் கூட்டத்தினருக்கு என்ன நேர்ந்தது? ஒரு பேச்சையும் அவர்கள் விரைவாக (இலகுவாக) விளங்குவதில்லையே!
Nisa' 4:79
“நன்மை எது உமக்கு ஏற்பட்டதோ, அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டது. இன்னும், தீமை எது உமக்கு ஏற்பட்டதோ அது உம் புறத்திலிருந்து (உமது பாவத்தினால்) ஏற்பட்டது.” (நபியே!) உம்மை மக்களுக்கு ஒரு தூதராக அனுப்பினோம். (உமது தூதுத்துவத்திற்கு) சாட்சியால் அல்லாஹ்வே போதுமானவன்.
Nisa' 4:80
எவர் தூதருக்கு கீழ்ப்படிகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்தார். எவர்கள் புறக்கணித்தார்களோ அவர்களின் செயல்களை கவனிப்பவராக(வும் அவர்களை விசாரிப்பவராகவும்) நாம் உம்மை அனுப்பவில்லை.
Nisa' 4:81
“(நபியே! எங்கள்) கீழ்ப்படிதல் (உமக்கு உண்டு - நாங்கள் உமக்கு கீழ்ப்படிந்து நடப்போம்)” என்று கூறுகிறார்கள். ஆக, உம்மிடமிருந்து வெளியேறினால் அவர்களில் ஒரு கூட்டம் நீர் கூறுவதற்கு மாற்றமாக இரவில் சதி ஆலோசனை செய்கிறார்கள். அவர்கள் இரவில் சதி ஆலோசனை செய்வதை அல்லாஹ் பதிவுசெய்கிறான். ஆகவே, (நீர்) அவர்களைப் புறக்கணிப்பீராக! இன்னும், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனை மட்டும் சார்ந்து இரு)ப்பீராக. (உம்மை பாதுகாக்க) அல்லாஹ்வே போதுமான பொறுப்பாளனாக இருக்கிறான்.
Nisa' 4:82
ஆக, குர்ஆனை அவர்கள் ஆழமாக ஆராய வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்ததாக இருந்திருந்தால் இதில் பல முரண்பாட்டை அவர்கள் கண்டிருப்பார்கள்.
Nisa' 4:83
இன்னும், பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய ஒரு செய்தி அவர்களிடம் வந்தால் அதை (உடனே) பரப்புகிறார்கள். அதை தூதரிடமும், அவர்களில் உள்ள ஆட்சியாளர்களிடமும் அவர்கள் எடுத்து சென்றிருந்தால் அவர்களில் அதை புலனாய்வு செய்பவர்கள் அதை சரியாக அறிந்திருப்பார்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்திருந்தால் (உங்களில்) சிலரைத் தவிர (அனைவரும்) ஷைத்தானை பின்பற்றி இருப்பீர்கள்.
Nisa' 4:84
ஆக, (நபியே!) அல்லாஹ்வின் பாதையில் போரிடுவீராக! நீர் உம்மைத் தவிர (பிறரை) கட்டாயப்படுத்த முடியாது. (இறை கட்டளையை நீர் ஏற்று நடப்பீராக. பிறரை ஏற்று நடக்க வைப்பது உமது கடமையல்ல.) இன்னும், நம்பிக்கையாளர்களை (போருக்கு) தூண்டுவீராக! நிராகரிப்பாளர்களின் வலிமையை (-அவர்களின் தாக்குதலை) அல்லாஹ் தடுத்து விடுவான். அல்லாஹ் வலிமையிலும் (எதிரிகளை தாக்குவதிலும்) மிகக் கடுமையானவன்; இன்னும், (அவர்களை) தண்டிப்பதிலும் மிகக் கடுமையானவன்.
Nisa' 4:85
எவர் நல்ல சிபாரிசு செய்வாரோ அவருக்கு அதிலிருந்து ஒரு பங்கு இருக்கும். இன்னும், எவர் தீய சிபாரிசு செய்வாரோ அவருக்கு அதிலிருந்து ஒரு குற்றம் இருக்கும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
Nisa' 4:86
உங்களுக்கு (ஸலாம்) முகமன் கூறப்பட்டால் அதைவிட மிக அழகியதை முகமனாக கூறுங்கள். அல்லது, அதையே திரும்பக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்களது) ஒவ்வொரு செயலையும் பாதுகாப்பவனாக இருக்கிறான்.
Nisa' 4:87
அல்லாஹ் அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் நிச்சயமாக உங்களை மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் அறவே சந்தேகம் இல்லை. பேச்சால் அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்?
Nisa' 4:88
ஆக, (நம்பிக்கையாளர்களே!) நயவஞ்சகர்கள் விஷயத்தில் (நீங்கள் முரண்பட்ட) இரு பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த (பாவத்)தின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தாழ்த்தினான். அல்லாஹ் வழிகெடுத்தவரை நீங்கள் நேர்வழிப்படுத்த நாடுகிறீர்களா? எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு ஒரு (நல்ல) வழியை அறவே நீர் காணமாட்டீர்!
Nisa' 4:89
அவர்கள் நிராகரித்ததைப் போன்று நீங்களும் நிராகரித்து (அவர்களுக்கு) சமமாக நீங்கள் ஆகிவிடுவதை (அவர்கள்) விரும்புகிறார்கள். ஆகவே, அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் ஹிஜ்ரத் செய்கின்ற வரை அவர்களில் (உங்களுக்கு) பொறுப்பாளர்களை எடுத்துக் கொள்ளாதீர்கள். (ஹிஜ்ரத் செய்யாமல்) அவர்கள் விலகினால் அவர்களை (சிறைப்) பிடியுங்கள்! (அவர்கள் உங்களை எதிர்த்து சண்டை செய்தால்) அவர்களை நீங்கள் கண்ட இடமெல்லாம் அவர்களைக் கொல்லுங்கள்; (உங்களுக்கு) அவர்களிலிருந்து பொறுப்பாளரையும் உதவியாளரையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
Nisa' 4:90
உங்களுடன் (சமாதான) உடன்படிக்கை செய்த சமுதாயத்திடம் சென்று சேர்ந்தவர்களைத் தவிர; அல்லது, அவர்கள் உங்களிடம் போர்புரிய அல்லது அவர்கள் தங்கள் சமுதாயத்திடம் போர்புரிய அவர்களது (மனம் நாடாமல்) நெஞ்சங்கள் நெருக்கடிக்குள்ளான நிலையில் உங்களிடம் வந்தவர்களைத் தவிர. (அவர்களைக் கொல்லாதீர்கள்; சிறைப் பிடிக்காதீர்கள். ஏனென்றால்,) அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் மீது அவர்களைச் சாட்டியிருப்பான். அவர்கள் உங்களிடம் போரிட்டிருப்பார்கள். ஆகவே, (இவர்கள்) உங்களை விட்டு விலகி உங்களிடம் போரிடாமல் உங்கள் முன் சமாதானத்தை சமர்ப்பித்தால் (அதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில்,) இவர்கள் மீது (போரிட) அல்லாஹ் உங்களுக்கு ஒரு வழியையும் (-தகுந்த காரணம் எதையும்) ஆக்கவில்லை.
Nisa' 4:91
(இவர்களல்லாத) மற்றவர்களை (நீங்கள்) காண்பீர்கள். அவர்கள் உங்களிடம் பாதுகாப்புப் பெறவும் (உங்கள் எதிரிகளாகிய) தங்கள் சமுதாயத்திடம் பாதுகாப்புப் பெறவும் நாடுகிறார்கள். குழப்பம் விளைவிப்பதற்கு அவர்கள் திருப்பப்படும் போதெல்லாம் அதில் குப்புற விழுந்து விடுகிறார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகாமலும், உங்கள் முன் சமாதானத்தை சமர்ப்பிக்காமலும், தங்கள் கைகளை (உங்களுக்கு தீங்கு செய்வதிலிருந்து) தடுக்காமலும் இருந்தால், அவர்களை (சிறைப்) பிடியுங்கள். (தப்பிச் செல்பவர்களை) நீங்கள் எங்கு அவர்களைப் பெற்றாலும் அவர்களைக் கொல்லுங்கள். அவர்களுக்கு எதிராக உங்களுக்குத் தெளிவான ஆதாரத்தை நாம் ஆக்கிவிட்டோம்.
Nisa' 4:92
தவறுதலாகவே தவிர, ஒரு நம்பிக்கையாளரை கொல்வது இன்னொரு நம்பிக்கையாளருக்கு ஆகுமானதல்ல. எவராவது ஒரு நம்பிக்கையாளரை தவறுதலாகக் கொன்றால் (அதற்குப் பரிகாரம்) நம்பிக்கையாளரான ஓர் அடிமையை உரிமையிட வேண்டும்; இன்னும் (இறந்த) அவருடைய குடும்பத்தாரிடம் (அதற்குரிய) நஷ்ட ஈட்டை ஒப்படைக்க வேண்டும். (ஆனால், குடும்பத்தினர் நஷ்ட ஈட்டுத் தொகையை கொலையாளிக்கு) தானமாக்கினால் தவிர. (கொல்லப்பட்ட) அவன் உங்கள் எதிரி சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்து, அவர் நம்பிக்கையாளராகவும் இருந்தால், நம்பிக்கையாளரான ஓர் அடிமையை (மட்டும்) உரிமையிடவேண்டும். (கொல்லப்பட்ட) அவர் உங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் (சமாதான, நட்பு) உடன்படிக்கை உள்ள சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தால் அவருடைய குடும்பத்தினரிடம் நஷ்டஈடு ஒப்படைக்கப்படும்: இன்னும், நம்பிக்கையாளரான ஓர் அடிமையை உரிமையிடவேண்டும். (நஷ்டஈடு வழங்க) எவர் வசதி பெறவில்லையோ அவர் அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரி தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பிருத்தல் வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
Nisa' 4:93
எவர் ஒரு நம்பிக்கையாளரை மனம் நாடியவராக (வேண்டுமென்றே) கொல்வாரோ அவருக்குரிய தண்டனை நரகம்தான். இன்னும், அதில் அவர் நிரந்தரமாக தங்கி இருப்பார். இன்னும், அவர் மீது அல்லாஹ் கோபித்துவிட்டான். இன்னும், அவரைச் சபித்தான். இன்னும், பெரிய தண்டனையையும் அவருக்காக தயார் செய்திருக்கிறான்.
Nisa' 4:94
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்கு) நீங்கள் பயணித்தால் (எதிரே இருப்பவர்களைத்) தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஸலாம் கூறிய நபரை நோக்கி, உலக வாழ்க்கையின் (அற்ப) செல்வத்தை நீங்கள் தேடியவர்களாக “நீ நம்பிக்கையாளர் இல்லை” என்று கூறாதீர்கள். ஏனெனில், அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. (இதற்கு) முன்னர் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். ஆக, அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்(து உங்களை முஸ்லிம்களாக்கி கண்ணியத்தைத் தந்)தான். ஆகவே (வழியில் உங்களை சந்திப்பவரை) தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.
Nisa' 4:95
நம்பிக்கையாளர்களில் (போருக்குச் செல்லாமல் வீடுகளில்) தங்கிய உடல் குறையுடையோர் அல்லாதவர்கள் இன்னும் தங்கள் செல்வங்களாலும், தங்கள் உயிர்களாலும் அல்லாஹ்வுடைய பாதையில் போரிடும் வீரர்கள் (ஆகிய இவர்கள்) சமமாக மாட்டார்கள். தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் போரிடும் வீரர்களை (போருக்குச் செல்லாமல்) தங்கியவர்களை விட பதவியால் அல்லாஹ் மேன்மையாக்கினான். அனைவருக்கும் சொர்க்கத்தையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். இன்னும், போரிடும் வீரர்களை மகத்தான கூலியால் (போருக்கு செல்லாமல் வீடுகளில்) தங்கியவர்களை விட அல்லாஹ் மேன்மையாக்கினான்.
Nisa' 4:96
(போரிடும் வீரர்களுக்கு) தன்னிடமிருந்து (பல) பதவிகளையும், மன்னிப்பையும், கருணையையும் (அல்லாஹ் வழங்குகிறான்). அல்லாஹ், மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
Nisa' 4:97
நிச்சயமாக எவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்தவர்களாக இருக்கின்ற நிலையில் அவர்களை வானவர்கள் உயிர்வாங்கினார்களோ, அவர்களிடம் - (“மார்க்கக் கட்டளையை நிறைவேற்றி ஹிஜ்ரத் செய்யாமல்) - நீங்கள் எவ்வாறு (தங்கி) இருந்தீர்கள்?” என்று வானவர்கள் கூற, (அதற்கவர்கள்) “இந்தப் பூமியில் நாங்கள் பலவீனர்களாக இருந்தோம்” என்று (பதில்) கூறினார்கள். (அதற்கு வானவர்கள்) “அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இருக்கவில்லையா? நீங்கள் (வசித்த நெருக்கடியான இடத்திலிருந்து) அதில் (பூமியில் வேறு பகுதிக்கு) ஹிஜ்ரத் செய்திருக்க வேண்டாமா?” என்று கூறினார்கள். இத்தகையவர்கள் அவர்களின் ஒதுங்குமிடம் நரகமாகும். அது (மிகக்) கெட்ட மீளுமிடமாகும்!
Nisa' 4:98
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரில் (ஹிஜ்ரத் செய்ய முடியாமல்) பலவீனர்களாக இருந்தவர்களைத் தவிர. (அவர்கள் மன்னிக்கப்பட்டவர்கள்.) இவர்கள் (ஹிஜ்ரத் செல்வதற்கு தேவையான) யுக்திகளை மேற்கொள்ள சக்தி பெறாமல் இருந்தார்கள். இன்னும், இவர்கள், (தப்பித்துச் செல்ல) ஒரு வழியையும் பெறாமல் இருந்தார்கள்.
Nisa' 4:99
அல்லாஹ் இத்தகையவர்களை மன்னிக்கக்கூடும். அல்லாஹ் (அடியார்களின் குற்றங்களை) முற்றிலும் மன்னிப்பவனாக, (அடியார்களின் பாவங்களை மன்னித்தருளும்) மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்.
Nisa' 4:100
இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் எவர் ஹிஜ்ரத் செய்வாரோ, அவர் பூமியில் பல (வசதியான) வசிக்குமிடங்களையும், (பொருளாதார) வசதியையும் பெறுவார். இன்னும், எவர் தன் இல்லத்திலிருந்து அல்லாஹ் மற்றும் அவன் தூதரின் பக்கம் ஹிஜ்ரத் செய்தவராக வெளியேறுகிறாரோ, பிறகு, அவரை மரணம் அடைகிறதோ அவருடைய கூலி திட்டமாக அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகிறது. அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
Nisa' 4:101
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பூமியில் பயணித்தால், நிராகரிப்பாளர்கள் உங்களைத் துன்புறுத்துவதை (-உங்களை தாக்குவதை) நீங்கள் பயந்தால், தொழுகையைச் சுருக்குவது உங்கள் மீது குற்றமில்லை. நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் உங்களுக்கு வெளிப்படையான எதிரிகளாக இருக்கிறார்கள்.
Nisa' 4:102
(நபியே! போரில்) நீர் அவர்களுடன் இருந்து, அவர்களுக்கு நீர் தொழுகையை நிலைநிறுத்தினால் அவர்களில் ஒரு பிரிவு உம்முடன் (தொழ) நிற்கவும். அவர்கள் தங்கள் ஆயுதங்களை (கைகளில்) எடுத்து வைத்துக் கொள்ளவும். ஆக, அவர்கள் (உம்முடன் தொழுது) ஸஜ்தா செய்துவிட்டால் (தொழுகையிலிருந்து விலகி) உங்களுக்குப் பின்னால் இரு(ந்து உங்களை பாதுகா)க்கவும். இன்னும், தொழாமலிருந்த மற்றொரு பிரிவு (தொழுகைக்கு) வரவும். ஆக, உம்முடன் அவர்கள் தொழவும். அவர்களும் தங்கள் தற்காப்புகளையும், தங்கள் (போர்) ஆயுதங்களையும் எடு(த்து தங்களுடன் வைத்திரு)க்கவும். நீங்கள் உங்கள் ஆயுதங்கள் மற்றும் உங்கள் பொருள்களிலிருந்து கவனமற்று இருப்பதையே நிராகரிப்பாளர்கள் விரும்பினர். (அப்படி நீங்கள் கவனமற்று இருந்தால்,) அவர்கள் உடனே உங்கள் மீது ஒரே பாய்ச்சலாக பாய்ந்து (தாக்கி) விடுவார்கள். இன்னும், மழையின் காரணமாக உங்களுக்கு சிரமம் இருந்தால்; அல்லது, நீங்கள் நோயாளிகளாக இருந்தால் (தொழும்போது) உங்கள் ஆயுதங்களை (கீழே) வைப்பது உங்கள் மீது குற்றமில்லை. உங்கள் (கேடயம், சிறு கத்தி போன்ற) தற்காப்புகளை (எப்போதும்) எடு(த்து வைத்துக் கொண்டு உஷாராக இரு)ங்கள். நிச்சயமாக அல்லாஹ் இழிவுபடுத்தும் தண்டனையை நிராகரிப்பாளர்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறான்.
Nisa' 4:103
ஆக, நீங்கள் தொழுகையை முடித்தால் நின்றவர்களாகவும், உட்கார்ந்தவர்களாகவும், உங்கள் விலாக்கள் மீது (படுத்தவர்களாகவு)ம் (நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும்) அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவர்களாக இருங்கள். ஆக, (எதிரிகளின் தாக்குதலில் இருந்து) நீங்கள் (பாதுகாப்பு பெற்று) நிம்மதி அடைந்தால் தொழுகையை (முறைப்படி முழுமையாக) நிலைநிறுத்துங்கள். நிச்சயமாகத் தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.
Nisa' 4:104
(எதிரி) கூட்டத்தைத் தேடி செல்வதில் (நீங்கள் சிறிதும்) சோர்வடையாதீர்கள். நீங்கள் (காயத்தினால்) வலியை உணர்பவர்களாக இருந்தால் நீங்கள் வலியை உணர்வது போன்று நிச்சயமாக அவர்களும் வலியை உணர்கிறார்கள். ஆனால், அவர்கள் ஆதரவு வைக்காத (வெற்றி, நற்கூலி, நன்மைகள் அனைத்)தை(யும்) அல்லாஹ்விடம் நீங்கள் ஆசை வைக்கிறீர்கள். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
Nisa' 4:105
(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்து கொடுத்ததின் மூலம் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பளிப்பதற்காக உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நிச்சயமாக நாமே உம்மீது இறக்கினோம். நீர் மோசடிக்காரர்களுக்கு வழக்காடுபவராக (-அவர்களுக்கு பரிந்துரைப்பவராக) இருக்காதீர். (அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, ஒப்பந்தம் செய்தவராக இருந்தாலும் சரி)
Nisa' 4:106
இன்னும், நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
Nisa' 4:107
இன்னும் (மக்களுக்குத் தீங்கிழைத்து) தங்களுக்குத்தாமே மோசடி செய்பவர்கள் சார்பாக நீர் வாதிடாதீர். (அவர்களுக்காக நீர் வழக்காடாதீர்!) பெரும் சதிகாரனாக (மோசடிக்காரனாக), பெரும் பாவியாக இருப்பவன் மீது நிச்சயமாக அல்லாஹ் அன்பு வைக்க மாட்டான்.
Nisa' 4:108
இவர்கள் (தம் குற்றத்தை) மக்களிடம் மறைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்விடம் மறைக்க முயற்சிப்பதில்லை. அல்லாஹ் விரும்பாத பேச்சை இவர்கள் இரவில் சதித்திட்டம் செய்யும்போது அவன் அவர்களுடன் இருந்தான். இன்னும், அல்லாஹ் அவர்கள் செய்வதை சூழ்ந்(தறிந்)தவனாக இருக்கிறான்.
Nisa' 4:109
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இவர்கள் சார்பாக இவ்வுலக வாழ்க்கையில் வாதிடுகிறீர்களா? ஆக, மறுமை நாளில் இவர்கள் சார்பாக அல்லாஹ்விடம் யார் வாதிடுவார்? அல்லது, (அல்லாஹ்விடம் தர்க்கம் செய்வதற்கு) இவர்கள் சார்பாக யார் பொறுப்பாளராக இருப்பார்?
Nisa' 4:110
இன்னும், எவர், ஒரு தீமையைச் செய்வாரோ; அல்லது, தனக்குத்தானே அநீதி இழைப்பாரோ; பிறகு, அவர் (அதிலிருந்து விலகி, கைசேதப்பட்டு) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரோ அவர் அல்லாஹ்வை மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாகக் காண்பார்.
Nisa' 4:111
இன்னும், எவர் ஒரு பாவத்தைச் சம்பாதிக்கிறாரோ அவர் அதைச் சம்பாதிப்பதெல்லாம் தனக்கெதிராகத்தான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
Nisa' 4:112
இன்னும், எவர் ஒரு குற்றத்தை அல்லது ஒரு பாவத்தை செய்வாரோ; பிறகு, அதை ஒரு நிரபராதி மீது சுமத்துவாரோ அவர் திட்டமாக அவதூறையும் வெளிப்படையான பாவத்தையும் (தன்மீது) சுமந்து கொண்டார்.
Nisa' 4:113
(நபியே!) அல்லாஹ்வின் அருளும், அவனின் கருணையும் உம்மீது இல்லாதிருந்தால் உம்மை வழி கெடுத்துவிட அவர்களில் ஒரு பிரிவு திட்டமாக (உள்ளத்தில்) உறுதியாக நாடியிருப்பார்கள். அவர்கள் தங்களையே தவிர (உம்மை) வழி கெடுக்கமாட்டார்கள். அவர்கள் உமக்கு எதையும் தீங்கிழைக்க மாட்டார்கள். அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உம்மீது இறக்கினான். இன்னும், நீர் அறிந்திருக்காதவற்றை உமக்குக் கற்பித்(து கொடுத்)தான். இன்னும், உம்மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாகவே இருக்கிறது.
Nisa' 4:114
(நபியே!) அவர்களின் இரகசியங்களில் அதிகமானவற்றில் அறவே நன்மை இல்லை, தர்மத்தை; அல்லது, நன்மையை; அல்லது, மக்களுக்கிடையில் சமாதானத்தை ஏவியவர்கள் இரகசியம் பேசுவதில் தவிர. எவர் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி (மேற்கூறப்பட்ட) அவற்றை செய்வாரோ நாம் அவருக்கு மகத்தான கூலியைத் தருவோம்.
Nisa' 4:115
இன்னும், எவர் தனக்கு நேரான வழி தெளிவானதன் பின்னர் இத்தூதருக்கு முரண்பட்டு நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததைப் பின்பற்றுவாரோ அவரை அவர் திரும்பிய வழியிலேயே நாம் திருப்பிவிடுவோம். இன்னும், அவரை நரகத்தில் எரிப்போம். அது கெட்ட மீளுமிடமாகும்.
Nisa' 4:116
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இன்னும், அது அல்லாததை தான் நாடுபவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்விற்கு இணைவைப்பாரோ திட்டமாக அவர் தூரமான வழிகேடாக வழிகெட்டுவிட்டார்.
Nisa' 4:117
அவர்கள் அவனையன்றி பெண் சிலைகளிடமே தவிர பிரார்த்திப்பதில்லை. இன்னும், (அல்லாஹ்விற்கு) கீழ்ப்படியாத ஷைத்தானிடமே தவிர அவர்கள் பிரார்த்திப்பதில்லை.
Nisa' 4:118
அல்லாஹ் அவனை சபித்தான். அவன் கூறினான்: “உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நிச்சயமாக நான் எடுத்துக்கொள்வேன்.”
Nisa' 4:119
“இன்னும், நிச்சயம் நான் அவர்களை வழி கெடுப்பேன்; இன்னும், நிச்சயம் அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை ஊட்டுவேன்; இன்னும், நிச்சயம் அவர்களுக்கு (தீமையை) ஏவுவேன். ஆகவே, (சிலைகளுக்கு நேர்ச்சை செய்யப்பட்ட) கால்நடைகளின் காதுகளை கட்டாயம் அவர்கள் அறுப்பார்கள். இன்னும், நிச்சயம் அவர்களுக்கு ஏவுவேன். ஆகவே, அல்லாஹ்வின் படைப்பு(களின் கோலங்)களை நிச்சயமாக அவர்கள் மாற்றுவார்கள்.” (இவ்வாறு ஷைத்தான் கூறினான்.) எவன் அல்லாஹ்வையன்றி ஷைத்தானை நண்பனாக எடுத்துக் கொள்வானோ அவன் திட்டமாக வெளிப்படையான நஷ்டமடைந்தான்.
Nisa' 4:120
ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்; இன்னும், அவர்களுக்கு வீண் நம்பிக்கை ஊட்டுகிறான். இன்னும், ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தவிர (உண்மையை) வாக்களிக்க மாட்டான்.
Nisa' 4:121
அவர்களுடைய ஒதுங்குமிடம் நரகம்தான். இன்னும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து செல்ல) ஒரு ஒதுங்குமிடத்தையும் காணமாட்டார்கள்.
Nisa' 4:122
எனினும், எவர்கள் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ, அவர்களை (மறுமையில்) சொர்க்கங்களில் நாம் பிரவேசிக்க செய்வோம். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (அவர்கள்) அதில் என்றென்றும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். அல்லாஹ் உண்மையான வாக்குறுதி அளிக்கிறான். சொல்லில் அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்?
Nisa' 4:123
(நம்பிக்கையாளர்களே! வெற்றி என்பது) உங்கள் விருப்பங்களுக்கு ஏற்பவும் இல்லை, வேதக்காரர்களின் விருப்பங்களுக்கு ஏற்பவும் இல்லை. எவன் ஒரு தீமையைச் செய்வானோ அவனுக்கு அதற்கு கூலி கொடுக்கப்படும். இன்னும், அல்லாஹ்வையன்றி தனக்கு ஒரு பாதுகாவலரையோ ஓர் உதவியாளரையோ அவன் காண மாட்டான்.
Nisa' 4:124
இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளில் இருந்து (முடிந்தளவு) செய்வார்களோ, அவர்கள் ஆண்களோ அல்லது பெண்களோ அவர்கள்தான் சொர்க்கத்தில் பிரவேசிப்பார்கள். இன்னும், ஒரு (பேரீத்தங் கொட்டையின்) கீறல் அளவும் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
Nisa' 4:125
யார் அல்லாஹ்விற்கு தன் முகத்தை முற்றிலும் பணியவைப்பாரோ (-அல்லாஹ்வின் மார்க்க சட்டங்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு, அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி வழிபடுவாரோ); - அவரோ நற்குணமுடையவராக இருக்கும் நிலையில், - இன்னும், இப்ராஹீமுடைய மார்க்கத்தை (அதில்) உறுதியானவராக (இணைவைத்தலை விட்டு முற்றிலும் விலகியவராக) பின்பற்றுவாரோ அவரை விட மார்க்கத்தால் (-கொள்கையால்) மிக அழகானவர் யார்? இன்னும், அல்லாஹ் இப்ராஹீமை (தனது) உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான்.
Nisa' 4:126
இன்னும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்விற்குரியனவே! அல்லாஹ் எல்லாவற்றையும் சூழ்ந்த(றிப)வனாக இருக்கிறான்.
Nisa' 4:127
(நபியே!) உம்மிடம் பெண்களைப் பற்றி, மார்க்கத் தீர்ப்பு கோருகிறார்கள். (நீர்) கூறுவீராக: “அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பளிக்கிறான். இன்னும், வேதத்தில் உங்களுக்கு எது ஓதப்படுகிறதோ அதுவும் தீர்ப்பளிக்கிறது. அனாதைப் பெண்கள், அவர்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் கொடுக்காமல் அவர்களை மணமுடிக்க விரும்புகிறீர்கள், (இது தவறு என்றும்) பலவீனமான சிறுவர்களுக்கு (அவர்களின் உரிமைகளையும் இறந்தவருடைய சொத்தில் அவர்களுக்குரிய பாகங்களையும் சரியாக கொடுக்க வேண்டுமென்றும்), அனாதைகளுக்கு (மஹ்ர் இன்னும் சொத்தில்) நீதத்தை நீங்கள் நிலை நிறுத்த வேண்டும் (என்றும் அல்லாஹ் தீர்ப்பளிக்கிறான்). நீங்கள் நன்மையில் எதைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.”
Nisa' 4:128
ஒரு பெண் தன் கணவனிடமிருந்து வெறுப்பை அல்லது புறக்கணிப்பை பயந்தால், அவ்விருவரு(ம் தங்களு)க்கு மத்தியில் ஒரு சமாதான ஒப்பந்தத்தை செய்வது அவ்விருவர் மீதும் அறவே குற்றமில்லை. சமாதான (ஒப்பந்த)ம் சிறந்ததாகும். (பெண்களின்) ஆன்மாக்கள் (தங்கள் கணவன் விஷயத்தில்) கஞ்சத்தனத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளன. இன்னும், நீங்கள் (உங்கள் மனைவிகளுக்கு) நன்மை செய்தால், (அவர்கள் விஷயத்தில்) அல்லாஹ்வை அஞ்சினால் (உங்கள் இம்மை மறுமை வாழ்க்கையின் நன்மைக்கு அதுதான் மிகச் சிறந்த வழியாகும்.) நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.
Nisa' 4:129
நீங்கள் ஆசைப்பட்டாலும் மனைவிகளுக்கிடையில் நீதமாக நடப்பதற்கு அறவே இயலமாட்டீர்கள். ஆகவே, (ஒருத்தியின் பக்கம் மட்டும்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து விடாதீர்கள். அ(ப்படி சாய்ந்து மற்ற)வளை (அந்தரத்தில்) தொங்கவிடப்பட்டவளைப் போன்று விட்டுவிடாதீர்கள்! இன்னும், நீங்கள் சமாதானம் செய்து (உங்கள் ஒழுக்கங்களையும் குணங்களையும் சீர்திருத்திக் கொண்டால்); இன்னும், (மனைவிகள் விஷயத்தில்) அல்லாஹ்வை அஞ்சினால் (உங்கள் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதுடன் உங்கள் மீது கருணை புரிந்து, மகிழ்ச்சியான வாழ்க்கையை ஏற்படுத்துவான். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
Nisa' 4:130
இன்னும், (சமாதானம் பலனளிக்காமல் கணவன், மனைவி) இருவரும் பிரிந்து விட்டாலோ அல்லாஹ் தன் (அருட்)கொடையினால் ஒவ்வொருவரையும் நிறைவடையச் செய்வான். அல்லாஹ் விசாலமானவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
Nisa' 4:131
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன! உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் “அல்லாஹ்வை அஞ்சுங்கள்” என்று திட்டவட்டமாக உபதேசித்தோம். இன்னும், நீங்கள் நிராகரித்தால் (அது அவனுக்கு நஷ்டமில்லை), வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் நிச்சயமாக அல்லாஹ்விற்கே உரியன. அல்லாஹ் முற்றிலும் நிறைவானவனாக (எத்தேவையுமற்றவனாக), பெரும் புகழுக்குரியவனாக இருக்கிறான்.
Nisa' 4:132
இன்னும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன! (படைப்புகளின் காரியங்களுக்கு) பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.
Nisa' 4:133
மனிதர்களே! அவன் நாடினால் உங்களை போக்கிவிடுவான் (-அழித்துவிடுவான்). இன்னும், மற்றவர்களைக் கொண்டுவருவான். அல்லாஹ் அதன் மீது பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
Nisa' 4:134
இவ்வுலகத்தின் பலனை மட்டும் எவர் நாடுபவராக இருந்தாரோ (அவர் அறிந்து கொள்ளவும்), அல்லாஹ்விடம் உலகம் இன்னும் மறுமையின் பலன் இருக்கிறது. (எனவே இரண்டையும் அவர் நாடட்டும்). அல்லாஹ் நன்கு செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
Nisa' 4:135
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதத்தை நிலைநிறுத்துபவர்களாக; அல்லாஹ்விற்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள்! நீதம் உங்களுக்கு அல்லது பெற்றோருக்கு அல்லது உறவினர்களுக்கு எதிராக இருந்தாலும் சரியே. (யாருக்கு எதிராக சாட்சி கூறப்படுகின்றதோ) அவர் செல்வந்தராக அல்லது ஏழையாக (இருந்தாலும் சரி. ஏனெனில் யாராக) இருந்தாலும் அல்லாஹ்தான் அவர்களுக்கு மிக ஏற்றமானவன். (நீங்கள் அல்ல.) ஆகவே, நீங்கள் நீதி செலுத்துவதில் (உங்கள்) ஆசைகளை பின்பற்றாதீர்கள்! (ஏழை, பணக்காரன், உறவுக்காரன், தூரமானவன், தன் சமூகத்தவன், வேறு சமூகத்தவன் என்று வேறுபாடு பார்க்காதீர்கள்!) நீங்கள் (சாட்சியத்தை) மாற்றினால் அல்லது (சாட்சியத்தை) புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான். (ஆகவே, அதற்குரிய விசாரணை மறுமையில் கண்டிப்பாக உண்டு.)
Nisa' 4:136
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும், அவனின் தூதரையும், அவன் தன் தூதர் மீது இறக்கிய வேதத்தையும், (இதற்கு) முன்னர் அவன் இறக்கிய வேதத்தையும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவர் அல்லாஹ்வையும், அவனின் வானவர்களையும், அவனின் வேதங்களையும், அவனின் தூதர்களையும், மறுமை நாளையும் நிராகரிப்பாரோ அவர், திட்டமாக தூரமான வழிகேடாக வழிகெட்டார்.
Nisa' 4:137
நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, பிறகு நிராகரித்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பிறகு நிராகரித்து பிறகு நிராகரிப்பை அதிகப்படுத்தினார்களோ (அவர்கள் மரணித்துவிட்டால்) அவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இன்னும் (தண்டனையிலிருந்து தப்பிக்க) அவர்களுக்கு ஒரு வழியையும் காட்ட மாட்டான்.
Nisa' 4:138
நயவஞ்சகர்களுக்கு நற்செய்தி கூறுவீராக: “நிச்சயமாக துன்புறுத்துகின்ற தண்டனை அவர்களுக்கு உண்டு” என்று.
Nisa' 4:139
இவர்கள் நம்பிக்கையாளர்கள் அன்றி நிராகரிப்பாளர்களை பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். இவர்கள் அவர்களிடம் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது.
Nisa' 4:140
(ஒரு சபையில்) அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும் கேலி செய்யப்படுவதையும் நீங்கள் செவியுற்றால் (அவ்வாறு செய்யும்) அவர்கள் அது அல்லாத வேறு பேச்சில் ஈடுபடும் வரை அவர்களுடன் உட்காராதீர்கள். (அவ்வாறு உட்கார்ந்தால்) அப்போது நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் ஆவீர்கள் என்று அல்லாஹ் உங்கள் மீது வேதத்தில் (சட்டத்தை) இறக்கி விட்டான். நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும் நிராகரிப்பவர்களையும் இவர்கள் அனைவரையும் நரகத்தில் ஒன்று சேர்ப்பான்.
Nisa' 4:141
(நயவஞ்சகமுடைய) இவர்கள் (நம்பிக்கையாளர்களாகிய) உங்களுக்கு (சோதனையை) எதிர்பார்க்கிறார்கள். ஆக, அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு வெற்றி (கிடைத்து) இருந்தால், “நாங்களும் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று கூறு(வதுடன் போரில் உங்களுக்கு கிடைத்த செல்வத்தில் அவர்களுக்கும் பங்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்)கிறார்கள். நிராகரிப்பாளர்களுக்கு ஓர் அளவு (வெற்றி கிடைத்து) இருந்தால் “நாங்கள் (உங்களை வெல்ல ஆற்றல் பெற்றிருந்தும்) உங்களை வெற்றி கொள்ளவில்லையே! இன்னும், உங்களை நம்பிக்கையாளர்களிடமிருந்து பாதுகாக்கவில்லையா?” என்று கூறு(வதுடன் அவர்களின் ஆதரவை எதிர்பார்க்)கிறார்கள். (இப்படியாக இரு முகத்தை காட்டுகிறார்கள். யாருக்கு வெற்றி கிடைக்கிறதோ அவர்கள் பக்கம் சாய்ந்து விடுகிறார்கள்.) ஆக, உங்களுக்கிடையில் அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். நம்பிக்கையாளர்கள் மீது (வெற்றி கொள்ள) நிராகரிப்பாளர்களுக்கு ஒரு வழியையும் அல்லாஹ் அறவே ஆக்கமாட்டான்.
Nisa' 4:142
நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகிறார்கள் (என்று நினைக்கிறார்கள்). அவனோ அவர்களை ஏமாற்றக் கூடியவன் ஆவான். இன்னும், அவர்கள் தொழுகைக்கு நின்றால் சோம்பேறிகளாக மனிதர்களுக்குக் காண்பித்தவர்களாக (முகஸ்துதியை விரும்பியவர்களாக) நிற்கிறார்கள்; இன்னும், குறைவாகவே தவிர அல்லாஹ்வை அவர்கள் நினைவு கூரமாட்டார்கள்.
Nisa' 4:143
அவர்கள் அதற்கிடையில் (-ஈமானுக்கும் ஷிர்க்கிற்கும் இடையில்) தடுமாறியவர்களாக இருக்கிறார்கள். (முஸ்லிம்களாகிய) இவர்களுடனும் இல்லை, (காபிர்களாகிய) இவர்களுடனுமில்லை. எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு ஒரு (நல்ல) வழியையும் (நீர்) அறவே காண மாட்டீர்.
Nisa' 4:144
நம்பிக்கையாளர்களே! நம்பிக்கையாளர்கள் அன்றி நிராகரிப்பாளர்களை (உங்கள் காரியங்களுக்கு) பொறுப்பாளர்களாக ஆக்காதீர்கள். உங்களுக்கு எதிராக அல்லாஹ்விற்கு ஒரு தெளிவான சான்றை நீங்கள் ஆக்கிவிட நாடுகிறீர்களா?
Nisa' 4:145
நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகக் கீழ் அடுக்கில் இருப்பார்கள். (நபியே!) அவர்களுக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர்.
Nisa' 4:146
எவர்கள் (தங்கள் நயவஞ்சகத்தை விட்டு) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அவனிடம்) பாவ மன்னிப்புக் கோரினார்களோ; இன்னும், (தங்கள் நம்பிக்கையையும் செயல்களையும்) சீர்திருத்தம் செய்தார்களோ; இன்னும், அல்லாஹ்வை (-அவனது உடன்படிக்கையை உறுதியாக)ப் பற்றிப்பிடித்தார்களோ; இன்னும், தங்கள் வழிபாட்டை(யும் மார்க்கத்தையும்) அல்லாஹ்விற்கு தூய்மைப்படுத்தினார்களோ அ(த்தகைய)வர்களைத் தவிர. அவர்கள் நம்பிக்கையாளர்களுடன் (சொர்க்கத்தில்) இருப்பார்கள். நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியைக் கொடுப்பான்.
Nisa' 4:147
நீங்கள் நன்றி செலுத்தினால், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டால், உங்களை தண்டனை செய்து அவன் என்ன பலன் அடையப்போகிறான்? அல்லாஹ் நன்றி அறிபவனாக, நன்கறிந்தவனாக இருக்கிறான்.
Nisa' 4:148
(யாரும்) கெட்டதைப் பகிரங்கப்படுத்தி பேசுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான், அநீதியிழைக்கப்பட்டவரைத் தவிர. (அவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எடுத்து சொல்லலாம்.) அல்லாஹ் நன்கு செவியுறுபவனாக, நன்கறிபவனாக இருக்கிறான்.
Nisa' 4:149
நன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அதை மறைத்தாலும் அல்லது ஒரு கெட்டதை நீங்கள் மன்னித்தாலும் (அது நன்றே). நிச்சயமாக அல்லாஹ் (தனது அடியார்களின் குற்றங்களை அவர்கள் திருந்தினால்) முற்றிலும் மன்னிப்பவனாக, (அவர்கள் திருந்தவில்லை என்றால் அவர்களை தண்டிக்க) பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
Nisa' 4:150
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரிக்கிறார்களோ; இன்னும், அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்ய விரும்புகிறார்களோ; இன்னும், (தூதர்களில்) “சிலரை நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” எனக் கூறுகிறார்களோ; இன்னும் அதற்கு மத்தியில் (வெறுக்கத்தக்க) ஒரு பாதையை ஏற்படுத்த நாடுகிறார்களோ,
Nisa' 4:151
அ(த்தகைய)வர்கள்தான் உண்மையில் நிராகரிப்பாளர்கள் ஆவார்கள். இன்னும், இழிவுபடுத்தும் தண்டனையை நிராகரிப்பாளர்களுக்கு நாம் ஏற்படுத்தி இருக்கிறோம்.
Nisa' 4:152
இன்னும், எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டார்களோ; இன்னும், அவர்களில் ஒருவருக்கிடையிலும் பிரிவினை செய்யவில்லையோ அவர்களுக்கு அவர்களுடைய (தகுந்த நற்) கூலிகளை அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
Nisa' 4:153
(நபியே!) வேதக்காரர்கள், வானத்திலிருந்து ஒரு வேதத்தை அவர்கள் மீது நீர் இறக்கி தரும்படி உம்மிடம் கேட்கிறார்கள். ஆக, திட்டமாக இதைவிட மிகப் பெரிய (விஷயத்)தை மூஸாவிடம் அவர்கள் கேட்டனர். அதாவது, “அல்லாஹ்வை கண்கூடாக எங்களுக்குக் காண்பி!” என்று கூறினர். ஆகவே, அவர்களின் அநியாயத்தினால் அவர்களை இடி முழக்கம் பிடித்தது. பிறகு, தெளிவான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்ததன் பின்னர் காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். ஆக, அதை(யும் நாம் அவர்களுக்கு) மன்னித்தோம். இன்னும், மூஸாவிற்கு தெளிவான சான்றையும் கொடுத்தோம்.
Nisa' 4:154
இன்னும், (அவர்கள் அல்லாஹ்விற்கு கொடுத்த) அவர்களுடைய உறுதிமொழியின் காரணமாக (-(அதை முறித்த காரணத்தால்) மலையை அவர்களுக்கு மேல் உயர்த்தினோம். இன்னும், “(பைத்துல் முகத்தஸ் உடைய) வாசலில் தலைகுனிந்தவர்களாக நுழையுங்கள்” என்று அவர்களுக்குக் கூறினோம். இன்னும், “சனிக்கிழமையில் (மீன் பிடிக்கக் கூடாது என்ற) கட்டுப்பாட்டை மீறாதீர்கள்” என்று அவர்களுக்குக் கூறினோம். இன்னும், அவர்களிடம் உறுதியான உடன்படிக்கையை எடுத்தோம்.
Nisa' 4:155
ஆக, அவர்கள் தங்கள் உடன்படிக்கையை முறித்ததாலும்; அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்ததாலும்; நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும்; “எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன” என்று அவர்கள் கூறியதாலும் (நாம் அவர்களைச் சபித்தோம்). மாறாக, அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவற்றின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். ஆகவே, (அவர்களில்) சிலரைத் தவிர, நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Nisa' 4:156
இன்னும், அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும்; (ஈஸாவின் தாயார்) மர்யமின் மீது அபாண்டமான இட்டுக்கட்டப்பட்ட பொய்யை அவர்கள் கூறியதாலும் (நாம் அவர்களை சபித்தோம்).
Nisa' 4:157
இன்னும், “அல்லாஹ்வின் தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் கொன்றோம்” என்று அவர்கள் கூறியதாலும் (அவர்களைச் சபித்தோம்). அவரை அவர்கள் கொலை செய்யவுமில்லை. இன்னும், அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. எனினும், அவர்களுக்கு (அவரைப் போன்று) ஒருவன் தோற்றமாக்கப்பட்டான். (அவனைதான் அவர்கள் கொன்றார்களே தவிர, ஈஸாவை அல்ல.) இன்னும் நிச்சயமாக அவர் விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் அதில் (பெரிய) சந்தேகத்தில்தான் இருக்கிறார்கள். யூகத்தைப் பின்பற்றுவது தவிர அதில் அவர்களுக்கு ஓர் அறிவும் இல்லை. இன்னும், உறுதியாக அவர்கள் அவரைக் கொலை செய்யவே இல்லை.
Nisa' 4:158
மாறாக, அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்தினான். அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
Nisa' 4:159
இன்னும், வேதக்காரர்களில் எவரும் இருக்க மாட்டார், அவர் (-ஈஸா) இறப்பதற்கு முன்னர் நிச்சயமாக அவரை (-ஈஸாவை) நம்பிக்கைக் கொண்டே தவிர. மறுமை நாளில் அவர் (-ஈஸா) அவர்கள் மீது சாட்சி கூறுபவராக இருப்பார் (-தன்னை நிராகரித்தவர்களுக்கு எதிராகவும் தன்னை நம்பிக்கை கொண்டவர்களை உண்மைப்படுத்தியும் சாட்சி கூறுவார்).
Nisa' 4:160
ஆக, யூதர்களின் அநியாயத்தின் காரணமாகவும் அல்லாஹ்வின் பாதையை விட்டு அதிகமானவர்களை அவர்கள் தடுத்ததின் காரணமாகவும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட (சில) நல்லவற்றை அவர்களுக்கு தடுக்கப்பட்டதாக ஆக்கினோம்.
Nisa' 4:161
இன்னும், அவர்கள் வட்டி வாங்கியதன் காரணமாகவும்; - அவர்களோ அதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறார்கள். - இன்னும், மக்களின் செல்வங்களை அவர்கள் தப்பான வழியில் (தீர்ப்புக்கு லஞ்சம் வாங்கி) சாப்பிட்டதன் காரணமாகவும் (அவர்களை சபித்தோம்). இன்னும், நிராகரிக்கின்ற அவர்களுக்குத் துன்புறுத்தக்கூடிய தண்டனையை தயார் செய்து இருக்கிறோம்.
Nisa' 4:162
எனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் தேர்ச்சிபெற்றவர்கள்; இன்னும் (உண்மையான) நம்பிக்கையாளர்கள் (உம்மிடம் மூடர்கள் கேள்வி கேட்டது போன்று கேட்க மாட்டார்கள். மாறாக,) உமக்கு இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் தொழுகையை நிலைநிறுத்துகின்ற வானவர்களையும் நம்பிக்கை கொள்வார்கள். இன்னும், ஸகாத்தைக் கொடுப்பவர்கள்; இன்னும், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள் (ஆகிய) இவர்கள் எல்லோருக்கும் மகத்தான கூலியைக் கொடுப்போம்.
Nisa' 4:163
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் (வந்த) நபிமார்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்தது போன்றே உமக்கும் நிச்சயமாக நாம் வஹ்யி அறிவித்தோம். இன்னும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப், (அவர்களுடைய) சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியவர்களுக்கும் வஹ்யி அறிவித்தோம். இன்னும் தாவூதுக்கு ‘ஸபூர்’ ஐ கொடுத்தோம்.
Nisa' 4:164
இன்னும் (பல) தூதர்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்திருக்கிறோம். அவர்களை முன்னர் உமக்கு விவரித்தோம். இன்னும், பல தூதர்களுக்கு வஹ்யி அறிவித்திருக்கிறோம். அவர்களை உமக்கு நாம் விவரிக்கவில்லை. இன்னும், மூஸாவுடன் அல்லாஹ் நேரடியாக பேசினான்.
Nisa' 4:165
தூதர்களுக்குப் பின்பு அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மக்களுக்கு ஓர் ஆதாரமும் இல்லாதிருக்க, நற்செய்தி கூறுபவர்களாக, (அச்சமூட்டி) எச்சரிப்பவர்களாக (பல) தூதர்களை (எமது அடியார்களுக்கு தொடர்ந்து நாம் அனுப்பினோம்). இன்னும், அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
Nisa' 4:166
என்றாலும், அல்லாஹ் உம்மீது இறக்கியதற்கு அல்லாஹ்வே சாட்சி கூறுகிறான், - “அதை அவனுடைய அறிவு ஞானத்தைக் கொண்டே இறக்கி இருக்கிறான்” என்று. (அவ்வாறே) வானவர்களும் (உமக்கு இறக்கப்பட்ட வேதத்தின் உண்மைக்கு) சாட்சி கூறுகிறார்கள். சாட்சியாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.
Nisa' 4:167
நிச்சயமாக, எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும், அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தார்களோ அவர்கள் வெகுதூரமான வழிகேடாக வழிகெட்டு விட்டனர்.
Nisa' 4:168
நிச்சயமாக, எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும் அநியாயம் செய்தார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. இன்னும், (நரகத்தின் வழியைத் தவிர வேறு) வழியை அவர்களுக்கு வழி காட்டுபவனாக இல்லை. (அவர்கள் சொர்க்கப் பாதையில் செல்ல மாட்டார்கள். அவர்கள் மன முரண்டாக நிராகரித்த காரணத்தால் அல்லாஹ் அவர்களை கைவிட்டுவிட்டான்.)
Nisa' 4:169
நரகத்தின் வழியைத் தவிர (வேறு வழியை அவர்களுக்கு அல்லாஹ் காட்ட மாட்டான். அ(ந்த நரகத்)தில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். இது (-அவர்களை நரகத்தில் தள்ளுவது) அல்லாஹ்விற்கு இலகுவானதாக இருக்கிறது.
Nisa' 4:170
மக்களே! இத்தூதர் உங்கள் இறைவனிடமிருந்து உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்துவிட்டார். ஆகவே, நம்பிக்கை கொள்ளுங்கள். (அது) உங்களுக்கு மிக்க நல்லதாக அமையும். நீங்கள் (அவரை) நிராகரித்தால், (அல்லாஹ்விற்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஏனெனில்,) வானங்களிலும் பூமியிலுமுள்ளவை நிச்சயமாக அல்லாஹ்விற்கே உரியன! அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
Nisa' 4:171
வேதக்காரர்களே! உங்கள் மார்க்கத்தில் எல்லை மீறாதீர்கள். இன்னும், அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர கூறாதீர்கள். மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ் எல்லாம், அல்லாஹ்வுடைய தூதரும், அவனுடைய (‘குன்’ என்ற) வார்த்தையும், - அ(ந்த வார்த்)தை(யை) மர்யமுக்கு சேர்ப்பித்தான்- அவனிலிருந்து (படைக்கப்பட்ட) ஓர் உயிரும் ஆவார். ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்) ‘மூவர்’ என்று கூறாதீர்கள். (இக்கூற்றை விட்டு) விலகுங்கள். (அது) உங்களுக்கு மிக நல்லதாகும். நிச்சயமாக அல்லாஹ் மட்டும்தான் (உண்மையில் வணங்கத்தகுதியான) ஒரே ஓர் இறைவன் ஆவான். அவனுக்கு குழந்தை இருப்பதை விட்டு அவன் மிகப் பரிசுத்தமானவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன! பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.
Nisa' 4:172
ஈஸாவும், (அல்லாஹ்விற்கு) நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்விற்கு அடிமைகளாக இருப்பதை விட்டு அறவே திமிரு (கர்வம்) கொள்ளமாட்டார்கள். எவர்கள் அவனை வணங்குவதை விட்டு திமிரு (கர்வம்) கொள்வார்களோ இன்னும் பெருமையடிப்பாரோ அவர்கள் அனைவரையும் (மறுமையில்) அவன் தன் பக்கம் ஒன்று திரட்டுவான்.
Nisa' 4:173
ஆக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களுடைய கூலிகளை அவன் அவர்களுக்கு (முழுமையாக) நிறைவேற்றுவான், இன்னும், தன் அருளிலிருந்து (வேண்டியளவு) அவர்களுக்கு அதிகப்படுத்துவான். ஆக, எவர்கள் திமிருபிடித்து பெருமையடித்தார்களோ அவர்களைத் துன்புறுத்தும் தண்டனையால் அவன் தண்டிப்பான். இன்னும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு (வேறு) பாதுகாவலரையும் உதவியாளரையும் (அங்கு) காண மாட்டார்கள்.
Nisa' 4:174
மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து (தெளிவான) ஓர் அத்தாட்சி உங்களிடம் திட்டமாக வந்துள்ளது. இன்னும், தெளிவான ஓர் ஒளியை உங்களுக்கு நாம் இறக்கினோம்.
Nisa' 4:175
ஆக, எவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவ(ன் இறக்கிய குர்ஆ)னைப் பலமாகப் பற்றிப் பிடித்தார்களோ அவர்களை தன் புறத்திலிருந்து கருணையிலும், அருளிலும் அவன் பிரவேசிக்க வைப்பான். இன்னும், தன் பக்கம் (வருவதற்கு) நேரான வழியையும் அவர்களுக்கு அவன் வழிகாட்டுவான்.
Nisa' 4:176
(நபியே!) அவர்கள் உம்மிடம் தீர்ப்பு கேட்கிறார்கள். கூறுவீராக! கலாலா (-தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாதவர்) பற்றி அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். பிள்ளை சந்ததி இல்லாத ஒரு மனிதன் இறந்து அவனுக்கு (ஒரே) ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச் சென்றதில் பாதி கிடைக்கும். (ஒரு பெண் இறந்து) அவளுக்கு சந்ததி இல்லையென்றால் (அவளுடைய சகோதரன் அவளுடைய அனைத்து சொத்திற்கும்) அவளுக்கு வாரிசாக ஆகிவிடுவான். ஆக, (பிள்ளை இல்லாமல் இறந்தவருக்கு உடன் பிறந்த சகோதரிகள்) இரு பெண்களாக (அல்லது அதை விட அதிகமாக) இருந்தால், (இறந்தவர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவ்விருவருக்கும் உண்டு. (இறந்தவருக்கு) உடன் பிறந்தவர்கள் ஆண்களாகவும் பெண்களாகவும் (பல சகோதர சகோதரிகள்) இருந்தால், இரு பெண்களின் பங்கு ஓர் ஆணுக்கு (என்ற அடிப்படையில் சொத்து அவர்களுக்கு மத்தியில் பங்கிடப்படும்). நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு (நீதமான சரியான சட்டங்களை) விவரிக்கிறான். இன்னும், அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான். (ஆகவே, அவனது சட்டத்தை ஏற்று திருப்தி பெறுங்கள்!)
Maide 5:1
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உங்களுக்குள் செய்த) உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு (மூன்றாவது வசனத்தில்) ஓதிக்காட்டப்படுபவற்றைத் தவிர (மற்ற) கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. நீங்களோ இஹ்ராமுடையவர்களாக இருக்கும் நிலையில் வேட்டையாடுவதை ஆகுமாக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்புவதை (உங்களுக்கு) சட்டமாக்குகிறான்.
Maide 5:2
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் புனித அடையாளங்களையும் புனித மாதத்தையும், (மாலையிடப்படாத) குர்பானியையும், மாலையிடப்பட்ட குர்பானிகளையும், தங்கள் இறைவனிடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடியவர்களாக புனிதமான (கஅபா) ஆலயத்தை நாடி வருகின்றவர்களையும் (அவமதிப்பதை) ஆகுமாக்காதீர்கள். இன்னும், நீங்கள் இஹ்ராமிலிருந்து நீங்கினால் நீங்கள் வேட்டையாடுங்கள்! (அது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டது.) புனிதமான மஸ்ஜிதைவிட்டு அவர்கள் உங்களைத் தடுத்த காரணத்தால் (அந்த) சமுதாயத்தின் (மீது உங்களுக்கு ஏற்பட்ட) துவேஷம் (வெறுப்பு, பகைமை) நீங்கள் (அவர்கள் மீது) எல்லை மீறி நடக்க உங்களைத் தூண்ட வேண்டாம். இன்னும், நன்மைக்கும் இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவுங்கள். இன்னும், பாவத்திற்கும் அநியாயத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவாதீர்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ், தண்டிப்பதில் கடுமையானவன்.
Maide 5:3
(தானாக) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவர்களுக்காக (சிலைகள், இறைநேசர்கள், போன்றவர்களுக்காக நேர்ச்சை செய்யப்பட்டு) அவர்களின் பெயர் கூறி அறுக்கப்பட்டவை, கழுத்து நெருக்கிச் செத்தது, அடிப்பட்டுச் செத்தது, விழுந்து செத்தது, கொம்பால் குத்தப்பட்டுச் செத்தது, மிருகங்கள் தின்று மீதமிருப்பது ஆகியவை உங்களுக்கு (நீங்கள் உண்பதற்கு) தடுக்கப்பட்டுவிட்டது. (எனினும், மிருகங்கள் வேட்டையாடியதில் உயிரோடிருப்பவற்றில் பிஸ்மில்லாஹ் கூறி) நீங்கள் அறுத்தவற்றைத் தவிர. (பூஜை செய்வதற்காக) நடப்பட்ட (கொடி, ஜண்டா, அடையாள சின்னம், சிலை போன்ற)வற்றுக்காக அறுக்கப்பட்டவை, அம்புகளால் (குறி கேட்டுப்) பாகம் பிரித்துக் கொள்வது (ஆகிய அனைத்தும் உங்களுக்கு) தடுக்கப்பட்டுவிட்டன. இவை பாவங்களாகும். நிராகரிப்பவர்கள் உங்கள் மார்க்கத்தை விட்டு இன்று நம்பிக்கை இழந்தனர். ஆக, அவர்களைப் பயப்படாதீர்கள். என்னைப் பயப்படுங்கள். இன்று உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை நான் முழுமையாக்கினேன். இன்னும், என் அருட்கொடையை உங்கள் மீது நிறைவு செய்தேன். இன்னும், இஸ்லாமை உங்களுக்கு மார்க்கமாக திருப்தியடைந்தேன். ஆக, எவர் பாவத்தின் பக்கம் சாயாதவராக, கடுமையான பசியில் (அனுமதிக்கப்பட்ட உணவின்றி) நிர்ப்பந்தத்திற்கு ஆளானால் (மேல் விலக்கப்பட்ட பிராணிகளின் மாமிசத்தை புசிப்பது குற்றமாகாது. ஏனெனில்), நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
Maide 5:4
அவர்கள் தங்களுக்கு ஆகுமாக்கப்பட்டது எது என்று உம்மிடம் கேட்கிறார்கள். (நபியே!) கூறுவீராக: “நல்ல உணவுப் பொருட்கள்; இன்னும், (வேட்டையாடுகின்ற) மிருகங்களில் நீங்கள் கற்றுக் கொடுத்தவை வேட்டையாடியதும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்தவற்றிலிருந்து அவற்றுக்கு நீங்கள் கற்றுக்கொடுங்கள். வேட்டையாட பயிற்சி அளியுங்கள். ஆக, அவை உங்களுக்காக (-உங்களுக்காக வேட்டையாடி) தடுத்துவைத்தவற்றிலிருந்து நீங்கள் புசியுங்கள். (அவற்றை வேட்டையின் மீது ஏவிவிடும் போது) அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள். இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (அடியார்களின் செயல்களை) கணக்கிடுவதில் மிகத் தீவிரமானவன் ஆவான்.
Maide 5:5
இன்று, நல்ல உணவுப் பொருட்கள் அனைத்தும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. வேதம் கொடுக்கப்பட்டவர்களின் புலால் உணவும் உங்களுக்கு ஆகுமானதாகும்! உங்கள் புலால் உணவும் அவர்களுக்கு ஆகுமானதாகும்! ஈமானுடைய பெண்களில் கற்புள்ள பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களில் கற்புள்ள பெண்களும் (நீங்கள் திருமணம் முடிக்க உங்களுக்கு) ஆகுமானவர்கள் ஆவார்கள், நீங்கள் அவர்களுடைய மஹ்ர்களை அவர்களுக்கு கொடுத்தால் (நீங்கள் அவர்களை மணமுடிக்கலாம்). நீங்களும் கற்புள்ளவர்களாக இருக்கவேண்டும், சட்டவிரோத (கள்ள) உறவில் ஈடுபடாதவர்களாக, இரகசிய தோழிகளை (உங்களுக்கு) வைக்காதவர்களாக இருக்கவேண்டும். இன்னும், எவர் (இந்த சட்டங்களை) நம்பிக்கைகொள்ள மறுக்கிறாரோ அவருடைய (நற்)செயல் திட்டமாக அழிந்துவிடும். இன்னும், அவர் மறுமையில் நஷ்டவாளிகளில் இருப்பார்.
Maide 5:6
நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்கு நின்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும் கழுவுங்கள், இன்னும், உங்கள் தலைகளில் (நனைந்த கைகளினால்) தடவுங்கள். இன்னும் இரு கணுக்கால்கள் வரை உங்கள் கால்களையும் கழுவுங்கள். இன்னும், நீங்கள் முழுக்காளிகளாக இருந்தால் குளித்து நன்கு சுத்தமாகுங்கள். இன்னும், நீங்கள் நோயாளிகளாக இருந்தால்; அல்லது, பயணத்தில் இருந்தால்; அல்லது, உங்களில் ஒருவர் மலஜலம் கழித்துவிட்டு வந்தால்; அல்லது, நீங்கள் பெண்களுடன் உறவுகொண்டால் (ஆக இந்த சூழ்நிலையில்) தண்ணீரை நீங்கள் பெறவில்லையெனில் சுத்தமான மண்ணை நாடுங்கள். ஆக, அதிலிருந்து உங்கள் முகங்களையும், கைகளையும் தடவுங்கள். உங்கள் மீது சிரமத்தை ஆக்குவதற்கு அல்லாஹ் நாடமாட்டான். எனினும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைப் பரிசுத்தமாக்கவும், தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் நாடுகிறான்.
Maide 5:7
இன்னும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையையும், “செவிமடுத்தோம், கீழ்ப்படிந்தோம்” என்று நீங்கள் கூறியபோது அவன் உங்களிடம் உறுதிமொழி வாங்கிய அவனுடைய உறுதிமொழியையும் நினைவு கூருங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
Maide 5:8
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக பொறுப்புகளை மிகச் சரியாக நிறைவேற்றக் கூடியவர்களாக (நீதம், நேர்மையில் மிக உறுதியானவர்களாக), நீதிக்கு சாதகமாக சாட்சி கூறுபவர்களாக இருங்கள். ஒரு சமுதாயத்தின் (மீதுள்ள) துவேஷம் நீங்கள் நீதமாக நடக்காதிருக்க உங்களைத் தூண்டவேண்டாம். நீதம் செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிக நெருக்கமானதாகும். இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவன் ஆவான்.
Maide 5:9
நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தவர்களுக்கு அல்லாஹ் (மகத்தான வெற்றியை) வாக்களித்தான். அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு.
Maide 5:10
இன்னும், எவர்கள் நிராகரித்து நம் வசனங்களை பொய்ப்பித்தார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்.
Maide 5:11
நம்பிக்கையாளர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூருங்கள், ஒரு சமுதாயம் தங்கள் கரங்களை உங்கள் பக்கம் நீட்ட நாடியபோது, அல்லாஹ் அவர்களுடைய கரங்களை உங்களை விட்டுத் தடுத்தான். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)க்கவும்.
Maide 5:12
திட்டமாக அல்லாஹ் இஸ்ரவேலர்களின் உறுதிமொழியை வாங்கினான். இன்னும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை நாம் அனுப்பினோம். “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தினால்; இன்னும் நீங்கள் ஸகாத்தை கொடுத்தால்; இன்னும், நீங்கள் என் தூதர்களை நம்பிக்கை கொண்டால்; இன்னும், அவர்களுக்கு நீங்கள் உதவிபுரிந்தால்; இன்னும், நீங்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுத்தால் நிச்சயமாக உங்கள் பாவங்களை உங்களை விட்டு அகற்றிவிடுவேன். இன்னும், நதிகள் ஓடும் சொர்க்கங்களில் நிச்சயமாக உங்களை பிரவேசிக்க வைப்பேன்’’ என்று அல்லாஹ் கூறினான். ஆகவே, உங்களில் எவர் இதற்குப் பின்னர், நிராகரிப்பாரோ திட்டமாக (அவர்) நேரான வழியில் இருந்து வழி தவறிவிட்டார்.
Maide 5:13
ஆக, அவர்கள் தங்கள் உறுதிமொழியை முறித்த காரணத்தால் அவர்களைச் சபித்தோம்; இன்னும், அவர்களுடைய உள்ளங்களை இறுகியதாக (கடினமானதாக) ஆக்கினோம். அவர்கள் (இறை) வசனங்களை அதன் (உண்மையான) இடங்களிலிருந்து(ம் கருத்துகளிலிருந்தும்) புரட்டுகிறார்கள். இன்னும், அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதில் ஒரு பகுதியை மறந்தார்கள். இன்னும், அவர்களில் சிலரைத் தவிர அவர்களிடம் மோசடியை (நீர்) தொடர்ந்து பார்ப்பவராக இருப்பீர். ஆக, அவர்களை மன்னிப்பீராக; இன்னும், புறக்கணிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நற்பண்பாளர்கள் மீது அன்பு வைக்கிறான்.
Maide 5:14
இன்னும், “நிச்சயமாக நாங்கள் கிறித்தவர்கள்’’ எனக் கூறியவர்களிடம் அவர்களுடைய உறுதிமொழியை வாங்கினோம். ஆக, அவர்கள் எதை உபதேசிக்கப்பட்டார்களோ அதிலிருந்து ஒரு பகுதியை அவர்கள் மறந்தார்கள். ஆகவே, மறுமை நாள் வரை அவர்களுக்கு மத்தியில் பகைமையையும் வெறுப்பையும் மூட்டினோம். இன்னும், அவர்கள் செய்து வந்ததற்கு அல்லாஹ் அவர்களுக்கு (மறுமையில் தகுந்த கூலி கொடுப்பதன் மூலம்) அறிவிப்பான்.
Maide 5:15
வேதக்காரர்களே! உங்களிடம் திட்டமாக நம் தூதர் வந்துவிட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்திருந்ததில் பலவற்றை (அவர்) உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். இன்னும், பலவற்றை விட்டுவிடுவார். அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவான வேதமும் உங்களிடம் வந்துவிட்டது.
Maide 5:16
அல்லாஹ், தன் பொருத்தத்தைப் பின்பற்றுகிறவர்களை அதன் மூலமாக ஈடேற்றத்திற்குரிய பாதைகளில் நேர்வழி செலுத்துகிறான்; இன்னும், இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் தன் கட்டளைப்படி அவர்களை வெளியேற்றுகிறான்; இன்னும், அவர்களை நேர்வழியின் பக்கம் நேர்வழிகாட்டுகிறான்.
Maide 5:17
நிச்சயமாக அல்லாஹ்வாகிறவன் மர்யமுடைய மகன் மஸீஹ்தான் என்று கூறியவர்கள் திட்டவட்டமாக நிராகரித்தனர். ஆக, (நபியே!) கூறுவீராக: மர்யமுடைய மகன் மஸீஹையும், அவருடைய தாயையும், பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் (அதை தடுக்க) யார் அல்லாஹ்விடம் ஒரு சிறிதும் சக்தி பெறுவார்? வானங்கள், பூமி இன்னும் அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது! அவன் நாடியதை படைக்கிறான். இன்னும், அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன்.
Maide 5:18
இன்னும், யூதர்களும், கிறித்தவர்களும் “நாங்கள் அல்லாஹ்வுடைய பிள்ளைகள், அவனுக்கு விருப்பமானவர்கள்’’ என்று கூறினர். (நபியே!) கூறுவீராக: “அவ்வாறாயின் உங்கள் குற்றங்களுக்காக அவன் உங்களை ஏன் தண்டிக்கிறான்? மாறாக, நீங்கள் அவன் படைத்த மனிதர்கள் ஆவீர். (அவனுடைய பிள்ளைகளல்ல.) அவன் நாடியவர்களை மன்னிக்கிறான்; இன்னும், அவன் நாடியவர்களை தண்டிக்கிறான். இன்னும், வானங்கள், பூமி இன்னும், அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது! இன்னும், அவன் பக்கம்தான் மீளுமிடம் இருக்கிறது.”
Maide 5:19
வேதக்காரர்களே! “நற்செய்தி கூறுபவர், எச்சரிப்பவர் எவரும் எங்களுக்கு வரவில்லை’’ என்று நீங்கள் கூறாதிருக்க தூதர்களின் இடைவெளியில் நம் தூதர் உங்களிடம் வந்துவிட்டார். (அவர் இஸ்லாமை) உங்களுக்கு தெளிவுபடுத்துகிறார். இன்னும், அல்லாஹ், ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Maide 5:20
இன்னும், மூஸா தன் சமுதாயத்திற்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்! “என் சமுதாயமே! அல்லாஹ் உங்களில் நபிமார்களை ஏற்படுத்தியபோதும்; இன்னும், உங்களை அரசர்களாக ஆக்கியபோதும்; இன்னும், உலகத்தாரில் ஒருவருக்கும் கொடுக்காதவற்றை உங்களுக்குக் கொடுத்தபோதும் உங்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடையை நினைவு கூருங்கள்!
Maide 5:21
என் சமுதாயமே! அல்லாஹ் உங்களுக்கு விதித்த பரிசுத்தமான பூமியில் நுழையுங்கள். இன்னும், நீங்கள் உங்கள் பின்புறங்களில் (புறமுதுகிட்டு) திரும்பிவிடாதீர்கள். (அப்படி திரும்பினால்) நஷ்டவாளிகளாகத்தான் திரும்புவீர்கள்.
Maide 5:22
(அவர்கள் மூஸாவை நோக்கி) “மூஸாவே! நிச்சயமாக அதில் மிக பலசாலிகளான சமுதாயம் இருக்கிறது. அவர்கள், அதிலிருந்து வெளியேறும் வரை நிச்சயமாக நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். ஆக, அவர்கள் அதிலிருந்து வெளியேறினால் நிச்சயமாக நாங்கள் (அதில்) நுழைவோம்” என்று கூறினர்.
Maide 5:23
(அல்லாஹ்வை) பயப்படுகின்ற (நல்ல)வர்களில் இருந்து அல்லாஹ் அருள்புரிந்த இருவர் (மற்றவர்களை நோக்கி), “நீங்கள் அவர்களை எதிர்த்து (அந்நகரத்தின்) வாசலில் நுழையுங்கள். ஆக, அதில் நீங்கள் நுழைந்தால் (மட்டுமே போதும்) நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)க்கவும்!’’ என்று கூறினர்.
Maide 5:24
“மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் காலமெல்லாம் நிச்சயமாக நாங்கள் அதில் அறவே நுழைய மாட்டோம். ஆகவே, நீயும், உம் இறைவனும் (அங்கு) சென்று (அவர்களிடம்) போரிடுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேதான் உட்கார்ந்திருப்போம்” என்று அவர்கள் கூறினார்கள்.
Maide 5:25
“என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கும், என் சகோதரருக்கும் தவிர, (மற்றவர்களை கட்டாயப்படுத்த) அதிகாரம் பெறமாட்டேன். ஆகவே, பாவிகளான சமுதாயத்திற்கு மத்தியிலும் எங்களுக்கு மத்தியிலும் நீ தீர்ப்பளித்து விடு!’’ என்று (மூஸா) கூறினார்.
Maide 5:26
“ஆக, நிச்சயமாக அ(ந்த நகரமான)து அவர்கள் மீது தடுக்கப்பட்டுவிட்டது. நாற்பது ஆண்டுகள் (அவர்கள்) பூமியில் திக்கற்று அலைவார்கள். ஆகவே, பாவிகளான மக்கள் மீது நீர் கவலைப்படாதீர்!’’ என்று (மூஸாவுக்கு அல்லாஹ்) கூறினான்.
Maide 5:27
(நபியே!) ஆதமுடைய இரு மகன்களின் உண்மையான செய்தியை அவர்களுக்கு முன் ஓதிக் காட்டுவீராக. இருவரும் ஒரு குர்பானி (பலி)யைக் கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருவரிடமிருந்து (குர்பானி) ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து ஏற்கப்படவில்லை. (ஏற்கப்படாதவர்) “நிச்சயம் நான் உன்னைக் கொல்வேன்’’ என்றார். (ஏற்கப்பட்டவர்) “அல்லாஹ் ஏற்பதெல்லாம் அல்லாஹ்வை அஞ்சுபவர்களிடமிருந்துதான்’’ என்று கூறினார்.
Maide 5:28
“நீ என்னைக் கொல்வதற்காக உன் கரத்தை என்னளவில் நீட்டினாலும் உன்னைக் கொல்வதற்காக என் கரத்தை உன்னளவில் நான் நீட்டுபவனாக இல்லை. நிச்சயமாக நான் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்.”
Maide 5:29
“என்(னை நீ கொலை செய்த) பாவத்தையும், உனது (மற்ற) பாவத்தையும் நீ சுமந்து, நீ நரகவாசிகளில் ஒருவனாக ஆகி விடுவதை நிச்சயமாக நான் நாடுகிறேன். இதுதான் அநியாயக்காரர்களின் கூலியாகும்” (என்று கூறி எச்சரித்தார்.)
Maide 5:30
ஆக, அவர் தன் சகோதரரை கொலை செய்ய அவருடைய மனம் அவரைத் தூண்டியது. ஆகவே, அவர் அவரைக் கொன்றார். ஆகவே, நஷ்டவாளிகளில் (அவர்) ஆகிவிட்டார்.
Maide 5:31
ஆக, தன் சகோதரரின் சடலத்தை எவ்வாறு அவன் மறைப்பான் என்பதை அவனுக்கு அல்லாஹ் காட்டுவதற்காக (இறந்த இன்னொரு காகத்தை புதைக்க) பூமியை தோண்டுகிற ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான். அவன், என் நாசமே! (அறிவில்) இந்தக் காகத்தைப் போன்று நான் ஆக முடியாமல் பலவீனமடைந்து விட்டேனா! அப்படி ஆகியிருந்தால் என் சகோதரனின் சடலத்தை மறைத்திருப்பேனே! என்று கூறினான். ஆக, (சதா) வருந்துபவர்களில் அவன் ஆகிவிட்டான்.
Maide 5:32
அதன் காரணமாக, “எவர் பழிக்குப் பழி அல்லாமல் அல்லது பூமியில் விஷமம் (கலகம், குழப்பம், சீர்கேடு) செய்ததற்காக அல்லாமல் (அநியாயமாக) ஓர் உயிரைக் கொன்றாரோ அவர் மக்கள் அனைவரையுமே கொன்றவர் போலாவார். இன்னும், எவர் ஓர் உயிரை வாழவைத்தாரோ அவர் மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்’’ என்று இஸ்ரவேலர்கள் மீது (சட்டமாக) விதித்தோம். திட்டமாக அவர்களிடம் நம் தூதர்கள் அத்தாட்சிகளுடன் வந்தார்கள். பிறகு, நிச்சயமாக அவர்களில் அதிகமானவர்கள் அதன் பின்னர் பூமியில் எல்லை மீறுகிறார்கள் (-அளவு கடந்து பெரும் பாவங்கள் செய்கிறார்கள்).
Maide 5:33
அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுபவர்கள்; இன்னும், பூமியில் குழப்பம்(கலகம், நாசவேலைகள், சீர்கேடுகள்) செய்ய முயல்பவர்களுடைய தண்டனையெல்லாம் அவர்கள் கொல்லப்படுவது; அல்லது, அவர்கள் கழுமரத்தில் அறையப்படுவது; அல்லது அவர்கள் மாறு கை, மாறு கால் வெட்டப்படுவது; அல்லது, அந்த நாட்டில் இருந்து (வேறு நாட்டுக்கு) அவர்கள் கடத்தப்படுவதுதான். இது, அவர்களுக்கு இவ்வுலகத்திலுள்ள இழிவாகும். இன்னும், அவர்களுக்கு மறுமையில் பெரிய தண்டனை உண்டு.
Maide 5:34
எனினும், எவர்கள் (கலகம் செய்த பின்னர் அவர்கள்) மீது நீங்கள் ஆற்றல் பெறுவதற்கு முன்னர் அவர்கள் (மன்னிப்புக் கோரி) திருந்தி (உங்களிடம்) திரும்பிவந்தார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்.) ஆக, நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Maide 5:35
நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும் அவனளவில் (உங்களை) நெருக்கமாக்கி வைக்கும் நன்மையைத் தேடுங்கள்! இன்னும், அவனுடைய பாதையில் போரிடுங்கள்!
Maide 5:36
நிச்சயமாக நிராகரித்தவர்கள் மறுமை நாளின் தண்டனையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்காக, இப்பூமியிலுள்ள அனைத்தும், அத்துடன் அவை போன்றதும் அவர்களுக்கு இருந்து, அவர்கள் அவற்றை மீட்புத் தொகையாக கொடுத்தாலும் அவர்களிடமிருந்து (அவை) அங்கீகரிக்கப்படாது. இன்னும், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு.
Maide 5:37
அவர்கள் நரகத்திலிருந்து வெளியேற விரும்புவார்கள். ஆனால், அதிலிருந்து அவர்கள் வெளியேறவே முடியாது. இன்னும் நிலையான தண்டனை அவர்களுக்கு உண்டு.
Maide 5:38
இன்னும், எந்த ஆண் திருடுகிறானோ, எந்த பெண் திருடுகிறாளோ அவ்விருவரும் செய்ததற்கு கூலியாக, அல்லாஹ்விடமிருந்து தண்டனையாக அவ்விருவரின் (வலது) கரங்களை (மணிக்கட்டு வரை) வெட்டுங்கள். அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
Maide 5:39
ஆக, எவர் தனது குற்றத்திற்குப் பின்னர் திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி (தன்னைத்) திருத்திக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவரை மன்னி(த்து அவருடைய தவ்பாவை அங்கீகரி)ப்பான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.
Maide 5:40
நிச்சயமாக அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? அவன், தான் நாடியவர்களை தண்டிப்பான். இன்னும், தான் நாடியவர்களை அவன் மன்னிப்பான். இன்னும், அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன்.
Maide 5:41
தூதரே! எவர்கள் “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று அவர்களுடைய வாய்களால் கூறி, அவர்களுடைய உள்ளங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களிலிருந்தும்; இன்னும், யூதர்களிலிருந்தும் நிராகரிப்பில் விரைந்து செல்பவர்கள் உமக்குக் கவலையூட்டவேண்டாம். அவர்கள் பொய்யிற்கே அதிகம் செவி சாய்க்கிறார்கள். (இதுவரை) உம்மிடம் வராத மற்றொரு கூட்டத்தினருக்கே அதிகம் செவி சாய்க்கிறார்கள். (பொய்யையும் பிற மக்களின் ஆதாரமற்ற பேச்சுகளையும் அவர்கள் நம்புகிறார்கள். இன்னும், இறை)வசனங்களை அவற்றின் இடங்களிலிருந்து(ம் கருத்துகளிலிருந்தும்) மாற்றுகிறார்கள். “உங்களுக்கு (இந்த நபியிடமிருந்து) இது கொடுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். இன்னும், உங்களுக்கு அது கொடுக்கப்படவில்லையெனில் (விலகி) எச்சரிக்கையாக இருங்கள்’’ என்றும் கூறுகிறார்கள். அல்லாஹ் எவரை சோதிக்க நாடினானோ அவருக்கு அல்லாஹ்விடம் அறவே (நன்மை) ஏதும் (செய்ய) நீர் உரிமை பெறமாட்டீர். அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்களுடைய உள்ளங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் நாடவில்லை. இன்னும், அவர்களுக்கு இம்மையில் இழிவுண்டு; இன்னும், அவர்களுக்கு மறுமையில் பெரிய தண்டனை உண்டு.
Maide 5:42
(அவர்கள்) பொய்(யான செய்தி)களுக்குத்தான் அதிகம் செவிசாய்க்கிறார்கள்; தவறான (-பாவமான) வருமானத்தை அதிகம் விழுங்குகிறார்கள். ஆக, (நபியே) அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பீராக; அல்லது, அவர்களைப் புறக்கணிப்பீராக. நீர் அவர்களைப் புறக்கணித்தால் அவர்கள் உமக்கு கொஞ்சமும் கெடுதி செய்யவே முடியாது. இன்னும், நீர் தீர்ப்பளித்தால், அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோர் மீது அன்பு வைக்கிறான்.
Maide 5:43
(நபியே! அவர்கள்) உம்மை எவ்வாறு நீதிபதியாக - தீர்ப்பளிப்பவராக ஆக்குகிறார்கள்? அவர்களிடம் தவ்ராத் இருக்கிறது. அதில், அல்லாஹ்வின் சட்டம் இருக்கிறது. (உம்மிடம் வந்த) பிறகு, அதற்கு பின்னர் (உமது சட்டம் அவர்களுக்கு சாதகமாக இல்லை என்றால்) அவர்கள் (உம்மை புறக்கணித்து) திரும்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கையாளர்களே இல்லை.
Maide 5:44
நிச்சயமாக நாம் தவ்ராத்தை இறக்கினோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கிறது. (அல்லாஹ்விற்கு) முற்றிலும் பணிந்த நபிமார்கள் அதன் மூலமாக யூதர்களுக்கு தீர்ப்பளிப்பார்கள். இன்னும், குருமார்களும், பண்டிதர்களும் அல்லாஹ்வின் வேதத்தைக் காக்கும்படி பணிக்கப்பட்டவர்களாகவும், அதற்கு சாட்சியாளர்களாகவும் இருந்த காரணத்தால் அவர்களும் அதன் மூலமே தீர்ப்பளிப்பார்கள். ஆக, (பண்டிதர்களே!) மக்களை அஞ்சாதீர்கள்; என்னை அஞ்சுங்கள். இன்னும், என் வசனங்களுக்குப் பகரமாக சொற்ப கிரயத்தை வாங்காதீர்கள். எவர் அல்லாஹ் இறக்கியதன் மூலம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் நிராகரிப்பாளர்கள் ஆவார்கள்.
Maide 5:45
இன்னும், அவர்கள் மீது அ(ந்த தவ்ராத்)தில் சட்டமாக விதித்தோம்: “நிச்சயமாக உயிருக்குப் பதிலாக உயிர், கண்ணுக்குப் பதிலாக கண், மூக்குக்குப் பதிலாக மூக்கு, காதுக்குப் பதிலாக காது, பல்லுக்குப் பதிலாக பல், இன்னும் (ஒருவர் மற்றவருக்கு ஏற்படுத்திய) காயங்கள் (எல்லாம் இவ்வாறுதான்) பழிவாங்கப்படும்” ஆக, எவர் அதை (பழிவாங்குவதை) மன்னிப்பாரோ அது அவருக்கு (அவரின் பாவங்களுக்கு) பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கியதின் மூலம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்!
Maide 5:46
இன்னும், அவர்களுடைய அடிச்சுவடுகளில் அவர்களை பின்தொடர்ந்து மர்யமுடைய மகன் ஈஸாவை (இஸ்ரவேலர்களுக்கு நபியாக) அனுப்பினோம். அவர் தனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக இருந்தார். இன்னும், அவருக்கு ‘இன்ஜீல்’ஐ கொடுத்தோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. இன்னும் தனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்தக்கூடியதாக, நேர்வழியாக, அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு ஓர் உபதேசமாக இன்ஜீலை ஆக்கினோம்.
Maide 5:47
இன்ஜீலுடையவர்கள் அதில் அல்லாஹ் இறக்கியதின் மூலம் தீர்ப்பளிக்கவும். எவர்கள் அல்லாஹ் இறக்கியதின் மூலம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் பாவிகள்.
Maide 5:48
இன்னும், (நபியே!) முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை உமக்கு இறக்கினோம். அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாக, அவற்றைப் பாதுகாக்கக்கூடியதாக இருக்கிறது. ஆகவே, அல்லாஹ் (உமக்கு) இறக்கிய (இவ்வேதத்)தின் மூலமே அவர்களுக்கு மத்தியில் நீ தீர்ப்பளிப்பீராக. உமக்கு வந்த உண்மையை விட்டுவிட்டு அவர்களுடைய மன விருப்பங்களை பின்பற்றாதீர். உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு மார்க்கத்தையும், ஒரு வழியையும் ஏற்படுத்தினோம். இன்னும், அல்லாஹ் நாடி இருந்தால் உங்களை ஒரே ஒரு (ஷரீஅத்தை உடைய) சமுதாயமாக ஆக்கியிருப்பான். எனினும், உங்களுக்கு அவன் கொடுத்த (வேதத்)தில் உங்களைச் சோதிப்பதற்காக (இவ்வாறு செய்திருக்கிறான்). ஆகவே, நன்மைகளில் போட்டிபோட்டு முந்துங்கள். அல்லாஹ்வின் பக்கமே உங்கள் அனைவரின் மீளுமிடம் இருக்கிறது. ஆக, நீங்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அ(ந்த சத்தியத்)தை (அதற்கு கூலி கொடுப்பதன் மூலம் மறுமையில்) உங்களுக்கு அவன் அறிவிப்பான். (உண்மையை பின்பற்றியவர்கள் அல்லாஹ்வின் அருளிலும் பொய்யை பின்பற்றியவர்கள் தண்டனையிலும் இருப்பார்கள்.)
Maide 5:49
இன்னும், (நபியே!) அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தின் மூலம் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பீராக. இன்னும், அவர்களின் மன விருப்பங்களைப் பின்பற்றாதீர். இன்னும், உமக்கு அல்லாஹ் இறக்கியதில் சிலவற்றிலிருந்து உம்மை அவர்கள் திருப்பிவிடுவதை குறித்தும் அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பீராக. ஆக, அவர்கள் (உம்மை புறக்கணித்து) திரும்பினால் அறிந்து கொள்வீராக “அல்லாஹ் நாடுவதெல்லாம் அவர்களுடைய பாவங்கள் சிலவற்றின் காரணமாக அவர்களை சோதிப்பதைத்தான்.” இன்னும், நிச்சயமாக மனிதர்களில் அதிகமானோர் பாவிகள்தான்.
Maide 5:50
ஆக, அறியாமைக் காலத்தின் சட்டத்தையா அவர்கள் தேடுகிறார்கள்? (அல்லாஹ் உடைய சட்டங்களின் நீதியை சிந்தித்து புரிந்து அவற்றை) உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட சட்டத்தால் மிக அழகானவன் யார்?
Maide 5:51
நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறித்தவர்களையும் நண்பர்களாக ஆக்காதீர்கள். அவர்களில் சிலர் சிலரின் நண்பர்கள் ஆவார்கள். இன்னும், உங்களில் எவர் அவர்களுடன் நட்பு கொள்வாரோ, நிச்சயமாக அவர் அவர்களைச் சார்ந்தவர் ஆவார். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
Maide 5:52
ஆக, (நபியே!) தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்கள் அவர்களுடன் (நட்புவைக்க) விரைபவர்களாக இருப்பதைக் காண்பீர்! “ஆபத்து எங்களை அடைவதை பயப்படுகிறோம்” என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆக, அல்லாஹ் தன்னிடமிருந்து (நம்பிக்கையாளர்களுக்கு) வெற்றியை அல்லது (யூதர்களின் தாக்குதலை உங்களை விட்டு தடுக்கும்படியான) வேறு ஒரு காரியத்தை கொண்டு வரலாம். (அது சமயம் அவர்கள்) தங்கள் உள்ளங்களில் மறைத்ததின் மீது துக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள்.
Maide 5:53
நிச்சயமாக அவர்கள் உங்களுடன்தான் இருக்கிறார்கள் என்று அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தவர்கள் இவர்கள்தானா? என்று நம்பிக்கையாளர்கள் (நயவஞ்சகர்களைப் பற்றி) கூறுவார்கள். (நயவஞ்சகம் உடைய) அவர்களின் (நல்ல) செயல்கள் அழிந்துவிட்டன. ஆகவே (அவர்கள்) நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்.
Maide 5:54
நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரும் தன் மார்க்கத்தை விட்டும் மாறினால் அல்லாஹ் ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்கள் மீது அன்பு வைப்பான்; அவர்களும் அவன் மீது அன்பு வைப்பார்கள். (அவர்கள்) நம்பிக்கையாளர்களிடம் பணிவானவர்கள்; நிராகரிப்பாளர்களிடம் கண்டிப்பானவர்கள்; அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். இன்னும், பழிப்பவனின் பழிப்பை பயப்படமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன், தான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்.
Maide 5:55
உங்கள் நண்பர்களெல்லாம் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இன்னும் தொழுகையை நிலை நிறுத்துகின்ற, ஸகாத்தை கொடுக்கின்ற நம்பிக்கையாளர்களும்தான். இன்னும், அ(ந்த நம்பிக்கை கொண்ட)வர்கள் (அல்லாஹ்விற்குமுன்) தலைகுனிவார்கள்.
Maide 5:56
இன்னும், எவர் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கையாளர்களையும் நேசி(த்து அவர்களுடன் நட்பு வை)க்கிறார்களோ (அவர்கள் அல்லாஹ்வின் படையினர்.) நிச்சயமாக அல்லாஹ்வின் படையினர்தான் வெற்றியாளர்கள்.
Maide 5:57
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களில் உங்கள் மார்க்கத்தை கேலியாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டவர்களையும், நிராகரிப்பவர்களையும் நண்பர்களாக (நேசர்களாக) எடுத்துக் கொள்ளாதீர்கள். இன்னும், நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
Maide 5:58
இன்னும், நீங்கள் தொழுகைக்கு அழைத்தால் அதை அவர்கள் கேலியாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் (சிந்தித்து) புரியாத மக்கள் என்பதாகும்.
Maide 5:59
(நபியே!) கூறுவீராக: “வேதக்காரர்களே! அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்டதையும், (இதற்கு) முன்னர் இறக்கப்பட்டதையும் நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) எங்களை நீங்கள் வெறுக்கிறீர்களா? நிச்சயமாக உங்களில் அதிகமானவர்கள் பாவிகள்.’’
Maide 5:60
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்விடம் தண்டனையால் இதைவிட மிகக் கெட்டவனை நான் உங்களுக்கு அறிவிக்கவா? எவர்களை அல்லாஹ் சபித்தானோ; இன்னும், எவர்கள் மீது கோபித்தானோ; இன்னும், எவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ; இன்னும், எவர்கள் ஷைத்தானை வணங்கினார்களோ அவர்கள்தான் தகுதியால் மிகக் கெட்டவர்கள்; இன்னும், நேரான பாதையிலிருந்து மிகவும் வழிதவறியவர்கள் ஆவார்கள்.’’
Maide 5:61
இன்னும் அவர்கள் உங்களிடம் வந்தால் “நம்பிக்கை கொண்டோம்” என்று கூறுகிறார்கள். (எனினும் அவர்கள் உங்களிடம்) நிராகரிப்புடன்தான் திட்டமாக நுழைந்தார்கள். திட்டமாக அதனுடன்தான் வெளியேறினார்கள். இன்னும், அவர்கள் மறைத்துக் கொண்டிருப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்.
Maide 5:62
(நபியே!) அவர்களில் அதிகமானவர்கள் பாவத்திலும், அநியாயத்திலும், தவறான செல்வத்தை விழுங்குவதிலும் விரைபவர்களாக இருப்பதை நீர் காண்பீர்! அவர்கள் செய்துகொண்டிருந்தது மிகக் கெட்டதாகும்!
Maide 5:63
அவர்களுடைய பாவமான பேச்சிலிருந்தும், விலக்கப்பட்டதை (-மக்களின் செல்வங்களை தவறான முறையில்) விழுங்குவதிலிருந்தும், குருமார்களும் பண்டிதர்களும் அவர்களை தடை செய்ய வேண்டாமா? அவர்கள் செய்துகொண்டிருந்தது மிகக் கெட்டதாகும்!
Maide 5:64
“அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது’’ என்று யூதர்கள் கூறினர். அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டுள்ளன. அவர்கள் (இவ்வாறு) கூறியதன் காரணமாக சபிக்கப்பட்டனர். மாறாக, அவனுடைய இரு கைகள் விரிந்தே இருக்கின்றன. அவன் நாடியவாறு தர்மம் செய்கிறான். உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது அவர்களில் அதிகமானோருக்கு எல்லை மீறுவதையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்தும். (நாம்) அவர்களுக்கு மத்தியில் பகைமையையும், வெறுப்பையும் மறுமை நாள் வரை (நிலைத்திருக்கும்படி) ஏற்படுத்தினோம். அவர்கள் போருக்கு நெருப்பை மூட்டும்போதெல்லாம் அல்லாஹ் அதை அணைத்து விட்டான். அவர்கள் பூமியில் கலகம் செய்வதற்காக விரைகிறார்கள். கலகம் செய்பவர்கள் மீது அல்லாஹ் அன்பு வைக்கமாட்டான்.
Maide 5:65
நிச்சயமாக, வேதக்காரர்கள் (இத்தூதரை) நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை அஞ்சி இருந்தால் அவர்களை விட்டும் அவர்களுடைய பாவங்களை நிச்சயமாக நாம் அகற்றிவிடுவோம். இன்னும், இன்பம் நிறைந்த சொர்க்கங்களில் அவர்களை நிச்சயமாக பிரவேசிக்கச் செய்வோம்.
Maide 5:66
இன்னும், தவ்ராத்தையும், இன்ஜீலையும், அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு இறக்கப்பட்ட (இந்த வேதத்)தையும் அவர்கள் நிலைநிறுத்தி இருந்தால் அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களுடைய கால்களுக்கு கீழிருந்தும் நிச்சயமாக புசித்திருப்பார்கள். அவர்களில் ஒரு நேர்மையான கூட்டம் இருக்கிறது. இன்னும், அவர்களில் அதிகமானோர், அவர்கள் செய்பவை எல்லாம் மிகக் கெட்டவை ஆகும்.
Maide 5:67
தூதரே! உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை நீர் எடுத்துரைப்பீராக. நீர் (அவ்வாறு) செய்யவில்லையென்றால் அவனுடைய தூதை நீர் எடுத்துரைக்கவில்லை. மக்களிடமிருந்து அல்லாஹ் உம்மைக் காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
Maide 5:68
(நபியே!) கூறுவீராக, “வேதக்காரர்களே! தவ்ராத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும் நீங்கள் நிலைநிறுத்தும் வரை நீங்கள் ஒரு விஷயத்திலும் இல்லை.’’ உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது அவர்களில் அதிகமானவர்களுக்கு எல்லை மீறுவதையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது. ஆகவே, நிராகரிப்பாளர்களான மக்களைப் பற்றி (நீர்) கவலைப்படாதீர்.
Maide 5:69
நிச்சயமாக நம்பிக்கையாளர்கள், யூதர்கள், சாபியீன்கள், கிறித்தவர்கள் (இவர்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு, நன்மை செய்தாரோ அவர்கள் மீது ஒரு பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
Maide 5:70
திட்டமாக இஸ்ரவேலர்களின் உறுதிமொழியை நாம் வாங்கினோம். இன்னும், அவர்களிடம் (பல) தூதர்களை அனுப்பினோம். அவர்களுடைய மனம் விரும்பாதவற்றை இறைத் தூதர் ஒருவர் அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் அவர்கள் (நமது தூதர்களில்) சிலரை பொய்ப்பித்தனர், இன்னும், சிலரை கொன்றார்கள்.
Maide 5:71
இன்னும், (அவர்களுக்கு) தண்டனை இருக்காது என்று அவர்கள் எண்ணினர். ஆகவே, அவர்கள் குருடாகினர், செவிடாகினர். பிறகு, அல்லாஹ் அவர்களை மன்னித்தான். பிறகும், அவர்களில் அதிகமானோர் குருடாகினர், செவிடாகினர். அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.
Maide 5:72
“நிச்சயமாக அல்லாஹ் மர்யமுடைய மகன் மஸீஹ்தான்’’ என்று கூறியவர்கள் திட்டவட்டமாக (அல்லாஹ்வை) நிராகரித்தனர். (ஆனால்) மஸீஹ் கூறினார்: “இஸ்ரவேலர்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமான அல்லாஹ்வை வணங்குங்கள், நிச்சயமாக எவர் அல்லாஹ்விற்கு இணைவைக்கிறாரோ அவர் மீது திட்டமாக, அல்லாஹ் சொர்க்கத்தை தடுத்து விடுகிறான். இன்னும் அவருடைய தங்குமிடம் நரகம்தான். இன்னும் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்களில் எவரும் இல்லை.
Maide 5:73
“நிச்சயமாக அல்லாஹ் - இறைவன் என்பவன் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய) மூவரில் ஒருவன்தான்’’ என்று கூறியவர்கள் திட்டவட்டமாக நிராகரித்தார்கள். (உண்மையில் வணங்கத் தகுதியான) ஒரே ஒரு இறைவனைத் தவிர இறைவன் (யாரும்) இல்லை. இன்னும், அவர்கள் கூறுவதிலிருந்து அவர்கள் விலகவில்லையெனில் துன்புறுத்தும் தண்டனை நிராகரித்தவர்களை நிச்சயமாக அடையும்.
Maide 5:74
(இவர்கள் இப்பாவத்திலிருந்து) திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்பமாட்டார்களா? இன்னும் அவனிடம் மன்னிப்புக் கோரமாட்டார்களா? அல்லாஹ், மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.
Maide 5:75
மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரே தவிர (அவர் இறைவனோ, இறைவனின் மகனோ) இல்லை. இவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்றுவிட்டனர். அவருடைய தாய் ஒரு மகா உண்மையாளர். அவர்கள் இருவரும் உணவு சாப்பிட்டு வந்தனர். நாம் அத்தாட்சிகளை அவர்களுக்கு எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்று (நபியே!) நீர் கவனிப்பீராக. பிறகு, அவர்கள் எவ்வாறு (சத்தியத்தை விட்டு) திருப்பப்படுகிறார்கள் என்று(ம்) கவனிப்பீராக.
Maide 5:76
“உங்களுக்கு தீங்களிப்பதற்கும் பலனளிப்பதற்கும் சக்தி பெறாதவற்றை அல்லாஹ்வை அன்றி வணங்குகிறீர்களா?’’ என்று (நபியே!) நீர் கூறுவீராக. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான்.
Maide 5:77
(நபியே!) கூறுவீராக: “வேதக்காரர்களே! உண்மைக்கு முரணாக, உங்கள் மார்க்கத்தில் எல்லை மீறாதீர்கள். இன்னும், முன்பு வழிதவறிவிட்ட சமுதாயத்தின் (கெட்ட) பழக்கங்களை பின்பற்றாதீர்கள். அவர்கள் பலரை வழி கெடுத்தனர். இன்னும், நேரான பாதையிலிருந்து (தாங்களும்) வழி தவறினர்.’’
Maide 5:78
இஸ்ரவேலர்களில் நிராகரித்தவர்கள் தாவூதுடைய நாவினாலும் மர்யமின் மகன் ஈஸாவின் நாவினாலும் சபிக்கப்பட்டனர். அது, அவர்கள் மாறு செய்ததாலும் (இறை சட்டங்களை) மீறுபவர்களாக இருந்ததாலும் ஆகும்.
Maide 5:79
அவர்கள் செய்த தீமையிலிருந்து ஒருவர் மற்றவரை தடுக்காதவர்களாக இருந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தவை திட்டமாக மிகக் கெட்டதாகும்!
Maide 5:80
(நபியே!) அவர்களில் அதிகமானோர் நிராகரிப்பவர்களிடம் நட்பு வைப்பதை நீர் காண்பீர்! அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும்படியாக அவர்களுக்கு அவர்களுடைய ஆன்மாக்கள் முற்படுத்தியவை மிகக் கெட்டவையாகும். இன்னும், தண்டனையில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
Maide 5:81
இன்னும், அவர்கள் அல்லாஹ்வையும், நபியையும் அவருக்கு இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்பவர்களாக அவர்கள் இருந்திருந்தால் அ(ந்நிராகரிப்ப)வர்களை நண்பர்களாக (தங்களது பொறுப்பாளர்களாக) எடுத்திருக்கமாட்டார்கள். என்றாலும், அவர்களில் அதிகமானோர் பாவிகள் ஆவர்.
Maide 5:82
(நபியே!) மக்களில் யூதர்களையும், இணைவைப்பவர்களையும் நம்பிக்கையாளர்களுக்கு கடுமையான பகைவர்களாக காண்பீர்! இன்னும் நாங்கள் கிறித்தவர்கள் என்று கூறுபவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு அவர்களில் பாசத்தால் மிக நெருங்கியவர்களாக இருப்பதை நிச்சயமாக நீர் காண்பீர்! அதற்குக் காரணமாவது, நிச்சயமாக அவர்களில் குருக்களும், துறவிகளும் இருப்பதும், நிச்சயமாக அவர்கள் அகம்பாவம் கொள்ள மாட்டார்கள் என்பதுமாகும்.
Maide 5:83
இன்னும், இந்த தூதருக்கு இறக்கப்பட்டதை அ(ந்த கிறித்த)வர்கள் செவியுற்றால், உண்மையை அவர்கள் அறிந்த காரணத்தினால் அவர்களின் கண்கள் அவை கண்ணீரால் நிரம்பி வழியக்கூடியதாக இருப்பதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! (இத்தூதரையும் இவ்வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, சாட்சியாளர்களுடன் (-முஸ்லிமான இந்த சமுதாயத்துடன்) எங்களை(யும்) பதிவு செய்!’’ என்று அவர்கள் கூறுகிறார்கள்.
Maide 5:84
இன்னும், “அல்லாஹ்வையும் (அவனிடமிருந்து) நமக்கு வந்த சத்தியத்தையும் நாங்கள் நம்பிக்கைகொள்ளாதிருக்கவும், எங்கள் இறைவன் நல்ல மக்களுடன் எங்களை சேர்த்து வைப்பதை நாங்கள் ஆசைப்படாமல் இருப்பதற்கும் எங்களுக்கு என்ன நேர்ந்தது?’’ (என்று கூறுகிறார்கள்).
Maide 5:85
ஆகவே, அவர்கள் (இவ்வாறு) கூறியதன் காரணமாக, சொர்க்கங்களை அல்லாஹ் அவர்களுக்கு கூலியாக வழங்கினான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். இன்னும், இதுதான் (சத்தியத்தை ஏற்று) முஹ்சின்[1] - நல்லறம் புரிபவர்களுடைய கூலியாகும்.
———
[1] முஹ்சின் என்றால் யார் ஒருவர் அல்லாஹ் ஒருவனை மட்டும் அறவே கலப்பில்லாமல் வணங்கி, அவனுக்கு இணைவைப்பதை விட்டு முற்றிலும் விலகி இருந்து, நபிமார்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதங்களையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு, அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளை நிறைவேற்றி, அவன் தடுத்த பாவங்களை விட்டு விலகி இருப்பாரோ அவர் ஆவார்.
Maide 5:86
இன்னும் எவர்கள் (நம் தூதரை) நிராகரித்து, நம் வசனங்களை பொய்ப்பித்தார்களோ அவர்கள்தான் நரகவாசிகள்.
Maide 5:87
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கிய நல்ல பொருட்களை ஆகாதவையாக (ஹராமாக) ஆக்காதீர்கள். இன்னும், எல்லை மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், எல்லை மீறுபவர்களை விரும்ப மாட்டான்.
Maide 5:88
இன்னும், அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றில் அனுமதிக்கப்பட்ட நல்லதை புசியுங்கள். இன்னும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிற அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
Maide 5:89
உங்கள் சத்தியங்களில் (எண்ணம் இல்லாமல் செய்யப்படும்) வீணான சத்தியத்திற்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். எனினும், நீங்கள் சத்தியங்களை உறுதிப்படுத்திய (பின்னர் அதை மீறிய)தற்காக உங்களைத் தண்டிப்பான். அதற்குப் பரிகாரமாவது: நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு உணவளிப்பதில் நடுத்தரமானதிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது; அல்லது, அவர்களுக்கு ஆடையளிப்பது; அல்லது, ஓர் அடிமையை விடுதலையிடுவதாகும். (இவற்றில் எதையும் நிறைவேற்ற) அவர் வசதி பெறவில்லையெனில் மூன்று நாட்கள் நோன்பிருக்க வேண்டும். இவைதான் நீங்கள் சத்தியம் செய்(து அதை முறித்)தால் (முறிக்கப்பட்ட) உங்கள் சத்தியங்களுக்குரிய பரிகாரமாகும். இன்னும், உங்கள் சத்தியங்களை (முறித்துவிடாமல்) பாதுகாத்துக் கொள்ளுங்கள். (அல்லாஹ் உங்களுக்கு மார்க்க சட்டங்களை கற்பித்தான். ஆகவே, அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ், தன் வசனங்களை இவ்வாறு உங்களுக்கு விவரிக்கிறான்.
Maide 5:90
நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மது, சூது, சிலைகள், அம்புகள் (மூலம் குறி பார்ப்பது) ஷைத்தானுடைய செயல்களை சேர்ந்த அருவருக்கத்தக்க காரியங்களாகும். ஆகவே, நீங்கள் வெற்றிபெறுவதற்காக இவற்றை விட்டு விலகுங்கள்.
Maide 5:91
நிச்சயமாக ஷைத்தான் நாடுவதெல்லாம் மதுவினாலும் சூதாட்டத்தினாலும் உங்களுக்கு மத்தியில் பகைமை; இன்னும், வெறுப்பை தூண்டிவிடுவதையும், அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுப்பதையும்தான். ஆகவே, நீங்கள் (அவற்றிலிருந்து) விலகிவிடுவீர்களா?
Maide 5:92
இன்னும், அல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள்; இன்னும், (அவனுடைய) தூதருக்கு கீழ்ப்படியுங்கள். இன்னும், (பாவங்களை விட்டு விலகி, ஷைத்தானிடமும் நஃப்ஸிடமும்) எச்சரிக்கையாக இருங்கள். ஆக, நீங்கள் (அறிவுரையை) புறக்கணித்தால் நம் தூதர் மீதுள்ள கடமை எல்லாம் (நம் கட்டளைகளை, உங்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பதுதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Maide 5:93
நம்பிக்கை கொண்டு நன்மைகளைச் செய்தவர்கள் மீது குற்றமில்லை, (தடுக்கப்பட்ட உணவை அதன் தடை வருவதற்கு முன்பு) அவர்கள் புசித்ததில், (தடைக்குப் பின்பு அதிலிருந்து) அவர்கள் விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்து, பிறகு அல்லாஹ்வை அஞ்சி, நம்பிக்கை கொண்டு, பிறகு, அல்லாஹ்வை அஞ்சி, நல்லறம் செய்தால், (தடுக்கப்பட்டவற்றை அவர்கள் முன்பு புசித்தது மன்னிக்கப்படும்). அல்லாஹ் நல்லறம் புரிபவர்கள் மீது அன்பு வைக்கிறான்.
Maide 5:94
நம்பிக்கையாளர்களே! மறைவில் தன்னை யார் பயப்படுகிறார் என்பதை அல்லாஹ் (வெளிப்படையாக) அறிவதற்காக (நீங்கள் இஹ்ராமில் இருக்கும் போது) வேட்டைகளில் உங்கள் கரங்களும், உங்கள் ஈட்டிகளும் அடைந்து விடுகின்ற (அளவிற்கு சமீபமாக இருக்கும்) சில வேட்டைகளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். இதற்குப் பின்பு எவர் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறினாரோ துன்புறுத்தும் தண்டனை அவருக்கு உண்டு.
Maide 5:95
நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராமு[1] டையவர்களாக இருக்கும்போது வேட்டை(ப் பிராணி)களைக் கொல்லாதீர்கள். உங்களில் எவர் அதை வேண்டுமென்றே கொன்றாரோ அவர் தான் கொன்ற வேட்டைப் பிராணிக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளிலிருந்து எது ஒப்பானதாக இருக்கிறதோ அ(தை பரிகாரமாக அறுத்து குர்பானி கொடுப்பது அவர)து தண்டனையாகும். உங்களில் நேர்மையான இருவர் அதற்கு (-வேட்டையாடப்பட்ட பிராணிக்கு எது சரியாக ஒப்பானதாக இருக்கிறது என்பதற்கு) தீர்ப்பளிப்பார்கள். கஅபாவை அடைகிற பலியாக (-புனித ஹரம் எல்லையை அடைந்து அங்கு அறுக்கப்பட வேண்டும்). அல்லது (அதன் மதிப்பின் அளவிற்கு) ஏழைகளுக்கு உணவளிப்பது பரிகாரமாகும். அல்லது (உணவளிக்க வசதியில்லாதவன்) அதற்குச் சமமான எண்ணிக்கை நோன்பு (நோற்க வேண்டும்). இது அவன் தன் செயலின் கெட்ட முடிவை அனுபவிப்பதற்காக (உள்ள பரிகாரம்) ஆகும். முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். எவர் (குற்றத்தின் பக்கம்) மீண்டாரோ அல்லாஹ் அவரை தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன், தண்டிப்பவன் ஆவான்.
———
[1] இஹ்ராம் என்பது ஹஜ் அல்லது உம்ராவை நாடி கஅபா செல்லும்போது குறிப்பிட்ட எல்லை வந்தவுடன் லப்பைக் ஓதி தான் ஹஜ் அல்லது உம்ரா வணக்கத்தை செய்யப்போகிறேன் என்று நிய்யத் செய்வதாகும். இதற்கு பின்னர் அந்த ஹஜ் அல்லது உம்ராவை முடிக்கும் வரை சில கட்டுப்பாடுகள் உள்ளன, அவற்றை அவர் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நிலையை இஹ்ராம் உடைய நிலை என்று கூறப்படும்.
Maide 5:96
(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதற்காக கடலில் வேட்டையாடுவதும், அதை புசிப்பதும் (இஹ்ராமிலுள்ள) உங்களுக்கும் (மற்ற) பயணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. (எனினும்,) நீங்கள் இஹ்ராமுடையவர்களாக இருக்கும் போதெல்லாம் தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவன் பக்கமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
Maide 5:97
புனித வீடாகிய கஅபாவை மக்களுக்கு பாதுகாப்பாக அல்லாஹ் ஆக்கினான். இன்னும் புனித மாதத்தையும், (மாலையிடப்படாத) பலியையும், மாலை (இடப்பட்ட பலி)களையும் அல்லாஹ் ஏற்படுத்தினான். அ(வ்வாறு அல்லாஹ் ஏற்படுத்திய)து ஏனெனில், வானங்களிலுள்ளதையும் பூமியிலுள்ளதையும் நிச்சயமாக அல்லாஹ் அறிகிறான் என்பதையும் நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக ஆகும்.
Maide 5:98
நிச்சயமாக அல்லாஹ் (குற்றவாளிகளை) தண்டிப்பதில் கடுமையானவன் என்பதையும்; நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
Maide 5:99
தூதர் மீது கடமையில்லை (தூதை) எடுத்துரைப்பதைத் தவிர. இன்னும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.
Maide 5:100
(நபியே!) கூறுவீராக: “தீமை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்தினாலும், தீயதும் நல்லதும் சமமாகாது. ஆக, நிறைவான அறிவுடையவர்களே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்.’’
Maide 5:101
நம்பிக்கையாளர்களே! (நபியிடம்) பல விஷயங்கள் பற்றி (வீணாக) கேள்வி கேட்காதீர்கள். அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்கு வருத்தமளிக்கும். இன்னும், நீங்கள் குர்ஆன் இறக்கப்படும் நேரத்தில் அவற்றைப் பற்றி கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்படும். அவற்றை (வெளிப்படுத்தி உங்களை தண்டிக்காமல்) அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் சகிப்பாளன் ஆவான்.
Maide 5:102
உங்களுக்கு முன்பு சில மக்கள் திட்டமாக அவற்றைப் பற்றி (கேள்வி) கேட்டார்கள். (அவை விவரிக்கப்பட்ட) பிறகு அவர்கள் அவற்றை நிராகரிப்பவர்களாக மாறிவிட்டனர்.
Maide 5:103
பஹீரா,[1] ஸாயிபா,[2] வஸீலா,[3] ஹாம் (சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட) இவற்றில் எதையும் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனினும், நிராகரிப்பவர்கள் அல்லாஹ் மீது பொய்யை கற்பனையாக இட்டுக்கட்டுகிறார்கள். இன்னும் அவர்களில் அதிகமானோர் (உண்மையை சிந்தித்து) புரியமாட்டார்கள்.[4]
———
[1] பஹீரா: ஓர் ஒட்டகம் குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு குட்டிகளை ஈன்ற பின்னர் அதன் காதை அறுத்து சிலைகளுக்காக நேர்ச்சை செய்து விட்டுவிடுவது.
[2] ஸாயிபா: ஓர் ஒட்டகம் குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னர் அதை சிலைகளுக்காக நேர்ச்சை செய்து விட்டுவிடுவது.
[3] வஸீலா: தொடர்ந்து பெண் குட்டிகளை ஈன்றெடுக்கும் ஒட்டகத்தை சிலைகளுக்காக நேர்ச்சை செய்வது.
[4] ஹாம்: ஒரு பெண் ஒட்டகை குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு குட்டிகளை ஈன்றெடுக்க சினை ஆகுவதற்கு காரணமாக இருந்த ஆண் ஒட்டகை. அதை சிலைகளுக்காக நேர்ச்சை செய்து விட்டுவிடுவார்கள்.
Maide 5:104
இன்னும் “அல்லாஹ் இறக்கியதின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் வாருங்கள்’’ என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்கள் மூதாதைகளை எதன் மீது கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்.’’ எனக் கூறுகிறார்கள். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறியாமலும், நேர் வழிபெறாமலும் இருந்தாலுமா (அம்மூதாதைகளை இவர்கள் பின்பற்றுவார்கள்)?
Maide 5:105
நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களை கவனித்து கொள்ளுங்கள் (-உங்கள் மீது கவனம் செலுத்துங்கள்). நீங்கள் நேர்வழி சென்றால் வழிகெட்டவர் உங்களுக்கு தீங்கிழைக்கமாட்டார். உங்கள் அனைவருடைய மீளுமிடமும் அல்லாஹ்வின் பக்கமே இருக்கிறது. ஆகவே, (அவன்) நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்.
Maide 5:106
நம்பிக்கையாளர்களே! உங்களில் ஒருவருக்கு மரணம் சமீபித்தால் (அவர்) மரண சாசனம் கூறும் நேரத்தில் உங்களில் நீதமான இருவர் உங்கள் மத்தியில் சாட்சியாக இருக்க வேண்டும். அல்லது நீங்கள் பூமியில் பயணம் செய்து, (அப்பயணத்தில்) உங்களை மரணம் என்ற சோதனை வந்தடைந்தால் (சாட்சிக்காக முஸ்லிமான இருவர் கிடைக்காவிட்டால் முஸ்லிம்களாகிய) நீங்கள் அல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்க வேண்டும். (சாட்சிகளில், உங்களுக்கு சந்தேகமேற்பட்டால்) அவ்விருவரையும் (அஸர்) தொழுகைக்குப் பின்னர் தடுத்து வையுங்கள். அவ்விருவரும், “அ(ந்த சாட்சி கூறிய)தற்குப் பகரமாக ஒரு தொகையையும் நாங்கள் வாங்கமாட்டோம், அவர் (எங்கள்) உறவினராக இருந்தாலும் சரியே! நாங்கள் அல்லாஹ்விற்காக சாட்சி கூறியதில் எதையும் மறைக்க மாட்டோம். (அவ்வாறு செய்திருந்தால்) அப்போது நிச்சயமாக நாங்கள் பாவிகளில் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்வின் மீது (அவ்விருவரும்) சத்தியம் செய்து கூறவேண்டும்.
Maide 5:107
ஆக, (இவ்வாறு அவர்கள் சத்தியம் செய்த பிறகு) நிச்சயமாக அவ்விருவரும் (பொய் கூறி) பாவத்திற்குரியவர்களாகி விட்டனர் என்று கண்டுபிடிக்கப்பட்டால் (இந்த பொய் சாட்சியால் எவருக்கு நஷ்டமேற்பட்டு, சத்தியம் செய்யும்) உரிமை பெற்றவர்களில் (இறந்தவருக்கு) நெருங்கிய வேறு இரு வாரிசுகள் (முன்னர் சத்தியம் செய்த) அவ்விருவருடைய இடத்தில் நின்று கொண்டு “அவ்விருவரின் சாட்சியத்தை விட நிச்சயமாக எங்கள் சாட்சியம்தான் மிக உண்மையானது. நாங்கள் எல்லை மீறவில்லை. அவ்வாறு மீறினால் அப்போது நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவோம்” என்று அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
Maide 5:108
அது (-இரு சாட்சிகளை தொழுகைக்குப் பிறகு சத்தியம் செய்ய வைப்பது) சாட்சியத்தை அதற்குரிய முறையில் அவர்கள் நிறைவேற்றுவதற்கும்; அல்லது, அவர்களுடைய சத்தியங்களுக்குப் பின்னர் சத்தியங்கள் மறுக்கப்படும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் மிக்க சுலபமானதாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், (மார்க்க சட்டங்களுக்கு) செவிசா(ய்த்து, கீழ்ப்படி)யுங்கள். பாவிகளான கூட்டத்தை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்.
Maide 5:109
அல்லாஹ் தூதர்களை ஒன்று சேர்க்கும் நாளில், “உங்களுக்கு என்ன பதில் கூறப்பட்டது?” என்று (அவர்களிடம்) கூறுவான். “எங்களுக்கு (அதைப் பற்றி) அறவே ஞானமில்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றை மிக மிக அறிந்தவன்” என்று (அவர்கள் பதில்) கூறுவார்கள்.
Maide 5:110
(நபியே!) அல்லாஹ் (ஈஸாவை நோக்கி மறுமையில் பின்வருமாறு) கூறும் சமயத்தை நினைவு கூர்வீராக! (அல்லாஹ் கூறுவான்:) மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் மீதும், உம் தாய் மீதும் நான் புரிந்த அருளை நினைவு கூர்வீராக! (ஈஸாவே!) பரிசுத்த ஆத்மாவினால் உம்மை நான் பலப்படுத்திய சமயத்தை நினைவு கூர்வீராக! தொட்டிலி(ல் குழந்தையாக இருந்த சமயத்தி)லும் வாலிபத்திலும் நீர் பேசினீர். இன்னும். எழுதுவதையும் கல்வி ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் நான் உமக்குக் கற்பித்த சமயத்தை நினைவு கூர்வீராக! இன்னும், நீர் என் அனுமதியினால் களிமண்ணில் பறவையின் உருவத்தைப் போல் படைத்து, அதில் நீர் ஊத, அது என் அனுமதியினால் பறவையாக ஆகும். இன்னும், பிறவிக் குருடனையும், வெண்குஷ்டரையும் என் அனுமதியினால் நீர் சுகமாக்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! இன்னும், என் அனுமதியினால் நீர் மரணித்தவர்களை (மண்ணறையிலிருந்து உயிருடன்) வெளியாக்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! இன்னும், இஸ்ரவேலர்களை உம்மை விட்டு நான் தடுத்த சமயத்தை நினைவு கூர்வீராக. நீர் தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டு வந்தபோது, அவர்களில் இருந்த நிராகரித்தவர்கள், “இது தெளிவான சூனியமே தவிர (உண்மையான அற்புதம்) இல்லை” என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
Maide 5:111
இன்னும், என்னையும், என் தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று (உமது) சிஷ்யர்களுக்கு மனதில் உதிப்பை நான் போட்ட சமயத்தை நினைவு கூர்வீராக! (அதற்கவர்கள்) “நம்பிக்கை கொண்டோம்; இன்னும், நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள்” என்பதற்கு (நீர்) சாட்சி அளிப்பீராக! என்று (உம்மிடம்) கூறினார்கள்.
Maide 5:112
சிஷ்யர்கள் “மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் இறைவன், வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவுத் தட்டை இறக்குவதற்கு இயலுவானா?” என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! (அதற்கு ஈஸா) “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்” என்று கூறினார்.
Maide 5:113
(அதற்கவர்கள்) கூறினார்கள்: “அதிலிருந்து நாங்கள் புசிப்பதற்கும், எங்கள் உள்ளங்கள் திருப்தியடைவதற்கும், நீர் எங்களிடம் திட்டமாக உண்மை கூறினீர் என்று நாங்கள் அறிவதற்கும், சாட்சியாளர்களில் நாங்கள் ஆகிவிடுவதற்கும் விரும்புகிறோம்.”
Maide 5:114
மர்யமுடைய மகன் ஈஸா கூறினார்: “அல்லாஹ்வே, எங்கள் இறைவா! வானத்திலிருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு இறக்கிக் கொடு! எங்களுக்கும், எங்கள் முன் (எங்களோடு சம காலத்தில்) இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன்னிடமிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். இன்னும், எங்களுக்கு உணவளி! நீ உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன்.”
Maide 5:115
அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிக் கொடுப்பேன். ஆக, (அதற்கு) பின்னர் உங்களில் எவர் நிராகரிப்பாரோ, உலக மக்களில் ஒருவரையும் நான் தண்டிக்காத தண்டனையால் நிச்சயம் நான் அவரை தண்டிப்பேன்.”
Maide 5:116
(நபியே!) அல்லாஹ் (ஈஸாவை நோக்கி) கூறும் அந்த சமயத்தை நினைவு கூர்வீராக: “மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வை அன்றி என்னையும், என் தாயையும் வணங்கப்படும் (இரு) தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மக்களுக்கு நீர் கூறினீரா?” (அவர்) கூறுவார்: “நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகுதி இல்லாததை நான் கூறுவது எனக்கு ஆகாது. நான் அதை கூறியிருந்தால் திட்டமாக அதை நீ அறிந்திருப்பாய்! என் உள்ளத்திலுள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவற்றை மிக மிக அறிந்தவன்.”
Maide 5:117
“நீ எனக்கு ஏவியதை, அதாவது, என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என்பதைத் தவிர (என்னை வணங்கும்படி) அவர்களுக்கு நான் கூறவில்லை. இன்னும், நான் அவர்களுடன் இருந்த வரை அவர்கள் மீது சாட்சியாளனாக இருந்தேன். ஆக, நீ என்னைக் கைப்பற்றியபோது (-என்னை நீ வானத்தில் உயர்த்திவிட்டபோது) நீதான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாவற்றின் மீதும் சாட்சியாளன்.”
Maide 5:118
“அவர்களை நீ தண்டித்தால் நிச்சயமாக அவர்கள் உன் அடியார்கள்! அவர்களை நீ மன்னித்தால் நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான்.”
Maide 5:119
அல்லாஹ் கூறுவான்: “உண்மையாளர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாள் இதுவாகும். அவர்களுக்கு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். அவர்களைப் பற்றி அல்லாஹ் மகிழ்ச்சியடைவான். அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சி அடைவார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.”
Maide 5:120
வானங்கள், பூமி, இன்னும் அவற்றில் உள்ளவற்றின் ஆட்சி அல்லாஹ்விற்குரியதே! அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Enam 6:1
புகழ் (எல்லாம்) வானங்களையும் பூமியையும் படைத்தவனாகிய; இன்னும், இருள்களையும் ஒளியையும் உண்டாக்கிய அல்லாஹ்விற்குரியதே! (இதற்குப்) பிறகு(ம்), நிராகரிப்பவர்கள் தங்கள் இறைவனுக்கு (பொய்யான தெய்வங்களை வணக்க வழிபாட்டில்) சமமாக்குகிறார்கள்.
Enam 6:2
அவன்தான் உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்தான். பிறகு, (உங்கள் மரணத்திற்கு) ஒரு தவணையை விதித்தான். இன்னும், அவனிடம் (மறுமை நிகழ்வதற்கு வேறு ஒரு) குறிப்பிட்ட தவணையும் உண்டு. (இதற்குப்) பிறகு(ம்), நீங்கள் (அல்லாஹ் உங்களை மறுமையில் எழுப்புவான் என்பதில்) சந்தேகிக்கிறீர்கள்.
Enam 6:3
இன்னும், அவன்தான் வானங்களிலும், பூமியிலும் வணங்கப்படுவதற்கு தகுதியான அல்லாஹ் ஆவான். (அவன்) உங்கள் இரகசியத்தையும் உங்கள் பகிரங்கத்தையும் நன்கறிவான். இன்னும், நீங்கள் செய்வதையும் நன்கறிவான்.
Enam 6:4
அவர்களுக்கு தங்கள் இறைவனின் வசனங்களிலிருந்து வசனம் ஏதும் வருவதில்லை, அதை அவர்கள் புறக்கணிப்பவர்களாக இருந்தே தவிர.
Enam 6:5
ஆக, அவர்கள் சத்தியத்தை, - அது அவர்களிடம் வந்தபோது - பொய்ப்பித்தனர். ஆக, அவர்கள் எதை கேலி செய்து கொண்டிருந்தார்களோ அதன் (உண்மை) செய்திகள் அவர்களிடம் விரைவில் வரும்.
Enam 6:6
அவர்களுக்கு முன்னர் எத்தனையோ சமுதாயத்தை நாம் அழித்தோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் உங்களுக்கு நாம் வசதியளிக்காத அளவு அவர்களுக்கு வசதி அளித்தோம்; இன்னும், அவர்கள் மீது தாரை தாரையாக மழையை அனுப்பினோம்; இன்னும், நதிகளை அவர்களுக்குக் கீழ் ஓடும்படி ஆக்கினோம். ஆக, அவர்களுடைய பாவங்களினால் அவர்களை அழித்தோம். இன்னும், அவர்களுக்குப் பின்னர் வேறு சமுதாயத்தை உருவாக்கினோம்.
Enam 6:7
ஏடுகளில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம்மீது இறக்கி, அதை அவர்கள் (உம்மிடமிருந்து) தங்கள் கரங்களால் தொட்டுப் பார்த்தாலும், “இது தெளிவான சூனியமே தவிர (உண்மையான வேதம்) இல்லை” என்று அந்த நிராகரிப்பாளர்கள் திட்டமாகக் கூறுவார்கள்.
Enam 6:8
இன்னும், “அவர் மீது ஒரு வானவர் இறக்கப்பட வேண்டாமா?” என்று அவர்கள் கூறினார்கள். நாம் ஒரு வானவரை இறக்கினால் (அவர்களது) காரியம் முடிக்கப்பட்டு விடும். பிறகு, அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படாது.
Enam 6:9
இன்னும், (தூதருக்கு துணையாக வானத்திலிருந்து அனுப்பப்படும்) அவரை ஒரு வானவராக நாம் ஆக்கினாலும், (அவரை பூமிக்கு அனுப்பும்போது) அவரை(யும்) (மனித இனத்தைச் சேர்ந்த) ஓர் ஆடவராகத்தான் ஆக்குவோம். (ஏனெனில் வானவரை அவருடைய அசல் உருவத்தில், இவர்களால் பார்க்க முடியாது.) இன்னும், அவர்கள் (தங்கள் மீது) எதை குழப்பிக் கொள்கிறார்களோ அதையே அவர்கள் மீது (நாமும்) குழப்பிவிடுவோம். (-மீண்டும் பழைய சந்தேகத்திற்கே அவர்கள் ஆளாகி விடுவர்.)
Enam 6:10
இன்னும், திட்டவட்டமாக உமக்கு முன்னர் (பல) தூதர்கள் ஏளனம் செய்யப்பட்டனர். ஆக, அவர்களை கேலி செய்தவர்களை அவர்கள் எதை வைத்து ஏளனம் செய்து வந்தார்களோ அது சூழ்ந்து விட்டது.
Enam 6:11
(நபியே!) கூறுவீராக: “நீங்கள் பூமியில் (பல பகுதிகளுக்கு) செல்லுங்கள். பிறகு, பொய்ப்பித்தவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது? என்று பாருங்கள்”
Enam 6:12
(நபியே!) கூறுவீராக: “வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாருக்குரியன?” (நபியே நீர்) கூறுவீராக: “(அவை) அல்லாஹ்விற்குரியனவே!” கருணை புரிவதை (அவன்) தன் மீது கடமையாக்கினான். நிச்சயமாக உங்களை மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமேயில்லை. எவர்கள் தங்களுக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டார்களோ அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Enam 6:13
இரவிலும், பகலிலும் தங்கி இருப்பவை (-இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும்) அவனுக்குரியனவே! அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
Enam 6:14
(நபியே!) கூறுவீராக: “வானங்கள்; இன்னும், பூமியின் படைப்பாளனாகிய அல்லாஹ் அல்லாதவனையா நான் (எனது) பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேன்? அவன்தான் உணவளிக்கிறான்; அவனுக்கு உணவளிக்கப்படுவதில்லை.” (மேலும்) கூறுவீராக: “(அல்லாஹ்விற்கு முற்றிலும்) பணிந்தவர்களில் முதலாமவனாக நான் ஆகவேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளேன். இன்னும், (நபியே) இணைவைப்பவர்களில் நிச்சயம் நீர் ஆகிவிடாதீர்.”
Enam 6:15
(நபியே!) கூறுவீராக: “என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான (மறுமை) நாளின் தண்டனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.”
Enam 6:16
அந்நாளில் எவரை விட்டும் தண்டனை தடுக்கப்படுகிறதோ அவருக்கு நிச்சயமாக (அல்லாஹ்) அருள் புரிந்து விட்டான். இதுதான் தெளிவான வெற்றியாகும்.
Enam 6:17
(நபியே!) அல்லாஹ் உமக்கு ஒரு சிரமத்தைக் கொடுத்தால் அவனைத் தவிர அதை நீக்குபவர் அறவே இல்லை. இன்னும், அவன் உமக்கு ஒரு நன்மையைக் கொடுத்தால் (அதைத் தடுப்பவருமில்லை), அவன் எல்லாவற்றின் மீது பேராற்றலுடையவன் ஆவான்.
Enam 6:18
அவன்தான், தன் அடியார்கள் மேல் ஆதிக்கமுடையவன். இன்னும், அவன்தான் மகா ஞானவான், ஆழ்ந்தறிந்தவன்.
Enam 6:19
(நபியே!) கூறுவீராக: “எந்த பொருள் சாட்சியால் மிகப் பெரியது?” (நபியே!) கூறுவீராக: “(சாட்சியால் மிகப் பெரியவன்) அல்லாஹ்தான்! (அவன்) எனக்கும் உங்களுக்குமிடையில் சாட்சியாளன் ஆவான். இன்னும், இந்த குர்ஆன் எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது, இதன் மூலம் உங்களையும், அது யாருக்கு சென்றடைகிறதோ அவரையும் நான் எச்சரிப்பதற்காக. நிச்சயமாக நீங்கள், அல்லாஹ்வுடன் வணங்கப்படும் வேறு கடவுள்கள் இருப்பதாக சாட்சி கூறுகிறீர்களா?” (நபியே!) கூறுவீராக: “(நான் அதற்கு) சாட்சி கூறமாட்டேன்!” (நபியே நீர்) கூறுவீராக: “அவன் எல்லாம் வணங்கப்படுவதற்கு தகுதியான ஒரே ஓர் இறைவன்தான். (பலர் அல்ல.) இன்னும், நிச்சயமாக நான் நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து விலகியவன் ஆவேன்.”
Enam 6:20
(முன்னர்) வேதத்தை நாம் எவர்களுக்கு கொடுத்தோமோ அவர்கள் தங்கள் குழந்தைகளை அறிவதைப் போல் அ(ல்லாஹ் ஒருவன்தான் வணங்கத்தகுதியானவன்; இன்னும் முஹம்மத் நபி உண்மையானவர் என்ப)தை அறிவார்கள். எவர்கள் தங்களுக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டார்களோ அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
Enam 6:21
அல்லாஹ்வின் மீது பொய்யை புனைபவனைவிட அல்லது அவனுடைய வசனங்களை பொய்ப்பித்தவனைவிட மகா அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் (இவ்வுலகிலும்) வெற்றிபெற மாட்டார்கள்.
Enam 6:22
இன்னும், நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டும் (மறுமை) நாளிலும் (வெற்றி பெற மாட்டார்கள்). பிறகு, இணைவைத்தவர்களை நோக்கி, “(கடவுள்கள் என) நீங்கள் பிதற்றிக்கொண்டிருந்த (நீங்கள் இணைவைத்து வணங்கிய) உங்கள் தெய்வங்கள் எங்கே?” என்று கூறுவோம்.
Enam 6:23
பிறகு, “எங்கள் இறைவனாகிய அல்லாஹ் மீது சத்தியமாக நாங்கள் இணைவைப்பவர்களாக இருக்கவில்லை!” என்று அவர்கள் கூறுவதைத் தவிர அவர்களுடைய சோதனை(யில் வேறு பதில் அவர்களிடம்) இருக்காது.
Enam 6:24
அவர்கள் தங்கள் மீதே எவ்வாறு பொய் கூறினர்; இன்னும், அவர்கள் கற்பனையாக புனைந்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு எவ்வாறு மறைந்துவிட்டன என்பதை (நபியே) கவனிப்பீராக!
Enam 6:25
(நபியே!) உம் பக்கம் செவி சாய்ப்பவரும் அவர்களில் உண்டு. அவர்களுடைய உள்ளங்களில் அதை புரிந்துகொள்வதற்கு தடையாக திரைகளையும், அவர்களுடைய காதுகளில் செவிடையும் ஆக்கினோம். இன்னும், ஒவ்வொரு அத்தாட்சியை அவர்கள் பார்த்தாலும் அதை அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். (நபியே!) முடிவாக, அவர்கள் உம்மிடம் தர்க்கித்தவர்களாக வந்தால் நிராகரித்த (அ)வர்கள், “இவை முன்னோர்களின் கட்டுக்கதைகளைத் தவிர (உண்மையான இறை வேதம்) இல்லை” என்றே கூறுவார்கள்.
Enam 6:26
அவர்கள் இதிலிருந்து (மக்களை) தடுக்கிறார்கள்; இன்னும், அவர்களும் இதை விட்டு தூரமாக செல்கிறார்கள். (அவர்கள்) தங்களையே தவிர அழித்துக் கொள்வதில்லை. ஆனால், (அவர்கள் அதை) உணர மாட்டார்கள்.
Enam 6:27
நரகத்தின் முன் அவர்கள் நிறுத்தப்படும் போது, (நபியே! நீர் அவர்களைப்) பார்த்தால், (அப்போது) அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் (உலகத்திற்கு) திருப்பி அனுப்பப்பட வேண்டுமே! இன்னும், எங்கள் இறைவனின் வசனங்களை நாங்கள் பொய்ப்பிக்க மாட்டோமே; இன்னும், நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோமே!”
Enam 6:28
(நிலைமை அவர்கள் எண்ணியது போன்று அல்ல!) மாறாக, முன்னர் (அவர்கள்) மறைத்திருந்தவை அவர்களுக்கு (முன்னர்) வெளிப்படும். அவர்கள் (உலகத்திற்கு) திருப்பி அனுப்பப்பட்டால், அவர்கள் எதை விட்டு தடுக்கப்பட்டார்களோ அதற்கே திரும்புவார்கள். இன்னும், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான்.
Enam 6:29
இன்னும், அவர்கள் கூறினார்கள்: “நமது உலக வாழ்க்கையைத் தவிர (வேறு) வாழ்க்கை இல்லை. இன்னும், (இந்த வாழ்க்கைதான் எல்லாம். மரணத்திற்கு பின்னர் வேறு வாழ்க்கைக்காக) நாம் எழுப்பப்பட மாட்டோம்.’’
Enam 6:30
இன்னும், (அவர்கள்) தங்கள் இறைவனுக்கு முன் நிறுத்தப்படும்போது நீர் (அவர்களைப்) பார்த்தால், (அப்போது இறைவன், விசாரணை நாளாகிய) இது உண்மை இல்லையா? என்று கூறுவான். அவர்கள், “எங்கள் இறைவன் மீது சத்தியமாக! ஏனில்லை (உண்மைதான்)’’ எனக் கூறுவர். “ஆகவே, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இந்த தண்டனையை சுவையுங்கள்’’ என்று (இறைவன்) கூறுவான்.
Enam 6:31
அல்லாஹ்வின் சந்திப்பை பொய்ப்பித்தவர்கள் நஷ்டமடைந்து விட்டனர். இறுதியாக, திடீரென அவர்களுக்கு மறுமை வந்தால், “நாங்கள் (நன்மைகளில்) எவற்றில் குறை செய்தோமோ அதனால் நேர்ந்த எங்கள் துக்கமே!’’ என்று கூறுவர். அவர்களுமோ தங்கள் பாவங்களைத் தங்கள் முதுகுகள் மீது சுமப்பார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் சுமப்பது மிகக் கெட்டதாகும்.
Enam 6:32
உலக வாழ்க்கை இல்லை, விளையாட்டும் கேளிக்கையும் தவிர. அல்லாஹ்வின் அச்சமுள்ளவர்களுக்கு மறுமை வீடுதான் மிக மேலானது. நீங்கள் (இதை சிந்தித்துப்) புரியவேண்டாமா?
Enam 6:33
(நபியே!) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உமக்கு கவலையளிக்கிறது என்பதை திட்டமாக நாம் அறிவோம். நிச்சயமாக அவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பதில்லை. எனினும், அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களைத்தான் (பொய்ப்பித்து) மறுக்கிறார்கள்.
Enam 6:34
இன்னும், திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்கள் பொய்ப்பிக்கப்பட்டனர். அவர்களுக்கு நம் உதவி வரும் வரை அவர்கள் பொய்ப்பிக்கப்பட்டதையும் துன்புறுத்தப்பட்டதையும் சகித்து பொறுமையாக இருந்தனர். அல்லாஹ்வின் வாக்குகளை மாற்றுபவர் அறவே இல்லை. இன்னும், தூதர்களின் செய்தியில் பல உமக்கு திட்டமாக வந்துள்ளன.
Enam 6:35
(நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெரி(ய சுமையான)தாக இருந்தால், நீ பூமியில் ஒரு சுரங்கத்தை அல்லது வானத்தில் ஓர் ஏணியைத் தேடிச் சென்று, (அதன் மூலம்) ஓர் அத்தாட்சியை அவர்களுக்குக் கொண்டு வருவதற்கு நீர் சக்தி பெற்றால் அப்படி கொண்டு வருவீராக. இன்னும், அல்லாஹ் நாடினால், அவர்களை நேர்வழியில் ஒன்று சேர்த்திருப்பான். ஆகவே, அறியாதவர்களில் நிச்சயம் ஆகிவிடாதீர்.
Enam 6:36
(உண்மையை) ஏற்றுக் கொள்வதெல்லாம் (அந்த உண்மைக்கு) செவிசாய்ப்பவர்கள்தான். இறந்தவர்களோ - அவர்களை அல்லாஹ் (மறுமையில்) எழுப்புவான். பிறகு, அவனிடமே (அவர்கள் எல்லோரும்) திரும்ப கொண்டு வரப்படுவார்கள்.
Enam 6:37
“(நம் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா?’’ என்று (இணைவைப்பாளர்கள்) கூறினர். (நபியே!) கூறுவீராக: ஓர் அத்தாட்சியை இறக்குவதற்கு நிச்சயமாக அல்லாஹ் ஆற்றலுடையவன்தான். எனினும் அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.
Enam 6:38
பூமியில் ஊர்ந்து செல்லக் கூடியதும்; தன் இரு இறக்கைகளால் (வானத்தில்) பறப்பதும் இல்லை, உங்களைப் போன்ற படைப்புகளாகவே தவிர. எதையும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) புத்தகத்தில் நாம் (குறிப்பிடாமல்) விடவில்லை. பிறகு, தங்கள் இறைவனிடம் (அவர்கள் அனைவரும்) ஒன்று திரட்டப்படுவார்கள்.
Enam 6:39
இன்னும், நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்கள், - இருள்களில் (சிக்கிய) செவிடர்கள், ஊமையர்கள் (போல்) ஆவர். அல்லாஹ், தான் நாடியவர்களை வழிகெடுக்கிறான். இன்னும், தான் நாடியவர்களை நேரான பாதையில் நடத்துகிறான்.
Enam 6:40
(நபியே!) கூறுவீராக: உங்களுக்கு (நீங்கள் மரணிப்பதற்கு முன்னர்) அல்லாஹ்வின் தண்டனை வந்தால் அல்லது உங்களுக்கு மறுமை வந்தால் அல்லாஹ் அல்லாதவர்களையா நீங்கள் அழைப்பீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இதன் பதிலை) அறிவியுங்கள்.
Enam 6:41
மாறாக! அவனையே அழைப்பீர்கள். அவன் நாடினால் நீங்கள் எதை நீக்குவதற்காக (அவனை) அழைக்கிறீர்களோ (உங்களை விட்டு) அதை அவன் அகற்றுவான். (அப்போது,) நீங்கள் எவற்றை (அல்லாஹ்விற்கு) இணைவைத்து வணங்குகிறீர்களோ அவற்றை மறந்து விடுவீர்கள்.
Enam 6:42
(நபியே!) உமக்கு முன்னர் பல சமுதாயங்களுக்கு (தூதர்களை) திட்டவட்டமாக அனுப்பினோம். (அவர்கள் நிராகரித்து விடவே) அவர்கள் (நமக்கு முன்) பணிவதற்காக வறுமை இன்னும் நோயின் மூலம் அவர்களைப் பிடித்தோம்.
Enam 6:43
ஆக, நம் தண்டனை அவர்களுக்கு வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? எனினும், அவர்களுடைய உள்ளங்கள் இறுகின. இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்ததை ஷைத்தான் அவர்களுக்கு அலங்கரித்தான்.
Enam 6:44
ஆக, அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதை அவர்கள் மறந்தபோது (செல்வங்கள்) எல்லாவற்றின் வாசல்களை அவர்களுக்குத் திறந்(து கொடுத்)தோம். முடிவாக, அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட (செல்வத்)தினால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தபோது அவர்களைத் திடீரென பிடித்தோம். அப்போது, அவர்கள் துக்கப்பட்டு துயரப்பட்டார்கள்.
Enam 6:45
ஆக, அநியாயமிழைத்த கூட்டத்தின் வேர் அறுக்கப்பட்டது. புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்வுக்கே உரியதாகும்!
Enam 6:46
“அல்லாஹ், உங்கள் செவித் திறனையும் உங்கள் பார்வைகளையும் எடுத்தால்; இன்னும், உங்கள் உள்ளங்கள் மீது முத்திரையிட்டால், அல்லாஹ் அல்லாத வேறு இறைவன் யார் இருக்கிறார், அவர் அவற்றை உங்களுக்கு (திரும்ப)க் கொண்டு வருவாரா என்பதை அறிவியுங்கள்?’’ என்று (நபியே!) கூறுவீராக. (இன்னும், நபியே!) நாம் அத்தாட்சிகளை எவ்வாறு விவரிக்கிறோம் என்பதை கவனிப்பீராக. (இவ்வளவு தெளிவாக விவரித்த) பிறகும், அவர்கள் புறக்கணிக்கிறார்கள்.
Enam 6:47
(நபியே!) கூறுவீராக: “திடீரென அல்லது வெளிப்படையாக அல்லாஹ்வின் தண்டனை உங்களுக்கு வந்தால் அநியாயக்கார மக்களைத் தவிர (யாரும்) அழிக்கப்படுவார்களா? என்று (எனக்கு) அறிவியுங்கள்!’’
Enam 6:48
நற்செய்தியாளர்களாக, எச்சரிப்பவர்களாகவே தவிர தூதர்களை நாம் அனுப்புவதில்லை. ஆகவே, எவர்கள் (உண்மையாகவே) நம்பிக்கை கொண்டு (நல்லமல்களை செய்து தங்களை) சீர்திருத்தினார்களோ அவர்கள் மீது பயமில்லை. இன்னும், அவர்கள் கவலைப் படமாட்டார்கள்.
Enam 6:49
இன்னும், எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்களோ, அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தால் தண்டனை அவர்களை வந்தடையும்.
Enam 6:50
(நபியே!) கூறுவீராக: ”அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளன” என்று நான் உங்களுக்குக் கூறமாட்டேன். இன்னும், நான் மறைவானவற்றை அறிய மாட்டேன். நிச்சயமாக நான் ஒரு வானவர் என்றும் உங்களுக்கு கூறமாட்டேன். எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத் தவிர நான் பின்பற்றமாட்டேன்.’’ (நபியே!) கூறுவீராக: “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?’’
Enam 6:51
இன்னும், (நபியே!) “(மறுமையில்) தங்கள் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவோம், அங்கு தங்களுக்கு அவனைத் தவிர பாதுகாவலரும் இல்லை பரிந்துரைப்பவரும் இல்லை’’ என்று பயப்படுபவர்களை இதன் மூலம் எச்சரிப்பீராக, அவர்கள் (அதிகமதிகம்) அல்லாஹ்வை அஞ்சுவதற்காக(வும் பாவங்களை விட்டு விலகுவதற்காகவும்).
Enam 6:52
இன்னும், (நபியே!) தங்கள் இறைவனை - அவனின் முகத்தை நாடியவர்களாக - காலையிலும் மாலையிலும் பிரார்த்திப்பவர்களை (உங்கள் சபையிலிருந்து) விரட்டாதீர்! (அப்படி நீர் விரட்டினால்) அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்! நீர் அவர்களை விரட்டுவதற்கு அவர்களின் கணக்கிலிருந்து எதுவும் உம் மீதில்லையே. உம் கணக்கிலிருந்து எதுவும் அவர்கள் மீதில்லையே. (உமது செயல்களைப் பற்றி அவர்கள் விசாரிக்கப்பட மாட்டார்கள். அவர்களின் செயல்களைப் பற்றி நீர் விசாரிக்கப்பட மாட்டீர்.)
Enam 6:53
இவ்வாறே, அவர்களில் சிலரை சிலர் மூலம் சோதித்தோம். இறுதியில், “எங்களுக்கு மத்தியிலிருந்து (நம்பிக்கை கொண்ட) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்தான்?’’ என்று அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) கூறுகிறார்கள். நன்றியுள்ளவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா?
Enam 6:54
இன்னும், (நபியே!) நம் வசனங்களை நம்பிக்கை கொள்பவர்கள் உம்மிடம் வந்தால் (அவர்களுக்கு நீர்) கூறுவீராக: “உங்களுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக! உங்கள் இறைவன் கருணையை தன்மீது கடமையாக்கினான். நிச்சயமாக உங்களில் எவர் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து, பிறகு, அதன் பின்னர் (அதிலிருந்து திருந்தி அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி, (தன்னை) சீர்திருத்துவாரோ, (அவரை அல்லாஹ் மன்னிப்பான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.’’
Enam 6:55
இவ்வாறுதான், (சத்தியம் தெளிவாகுவதற்காகவும்,) குற்றவாளிகளின் வழி தெளிவாகுவதற்காகவும் (நமது) வசனங்களை விவரிக்கிறோம்.
Enam 6:56
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் பிரார்த்திப்பவற்றை நான் வணங்குவதற்கு நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன்.” (நபியே!) கூறுவீராக: “நான் உங்கள் ஆசைகளை பின்பற்றமாட்டேன். அவ்வாறாயின், நான் வழிதவறிவிடுவேன். இன்னும், நேர்வழி பெற்றவர்களில் நான் இருக்க மாட்டேன்.’’
Enam 6:57
(நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக நான் என் இறைவனின் (தெளிவான) ஓர் அத்தாட்சியின் மீதிருக்கிறேன். அவனை (நீங்கள்) பொய்ப்பித்தீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. (எவருக்கும்) அதிகாரம் இல்லை அல்லாஹ்வுக்கே தவிர. (அவன்) உண்மையை விவரிக்கிறான். இன்னும், தீர்ப்பாளர்களில் அவன் மிக மேலானவன்.’’
Enam 6:58
கூறுவீராக: “நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால், எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் காரியம் முடிக்கப்பட்டிருக்கும். அல்லாஹ், அநியாயக்காரர்களை மிக அறிந்தவன்.’’
Enam 6:59
இன்னும், மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்றை அவனைத் தவிர (யாரும்) அறிய மாட்டார். நிலத்திலும், நீரிலும் உள்ளவற்றை (அவன்) நன்கறிவான். இன்னும், ஓர் இலையும் விழுவதில்லை அதை அவன் அறிந்தே தவிர. பூமியின் (ஆழ்) இருள்களில் உள்ள வித்து, பசுமையானது, உலர்ந்தது ஆகிய எதுவுமில்லை - தெளிவான புத்தகத்தில் (அவை எழுதப்பட்டு) இருந்தே தவிர.
Enam 6:60
இன்னும், இரவில் அவன்தான் உங்க(ள் உயிர்க)ளை கைப்பற்றுகிறான். இன்னும், நீங்கள் பகலில் செய்தவற்றை அவன் அறிகிறான். பிறகு, குறிப்பிட்ட தவணை (முழுமையாக) முடிக்கப்படுவதற்காக அதில் (-காலையில்) உங்களை அவன் எழுப்புகிறான். பிறகு, அவன் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. பிறகு, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
Enam 6:61
அவன்தான் தன் அடியார்கள் மேல் ஆதிக்கமுள்ளவன். இன்னும், உங்கள் மீது (வானவ) காவலர்களையும் அவன் அனுப்புகிறான். இறுதியாக, உங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால், நம் (வானவத்) தூதர்கள் அவ(ருடைய உயி)ரை கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (தங்கள் பணியில்) குறைவு செய்யமாட்டார்கள்.
Enam 6:62
பிறகு, அவர்களின் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்விடம் மீண்டும் கொண்டு வரப்படுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்: “அவனுக்கே (ஆட்சியும்) அதிகார(மு)ம் உரியது. அவன் கணக்கெடுப்பவர்களில் மிகத் தீவிரமானவன்.’’
Enam 6:63
“தரை இன்னும் கடலின் இருள்களில் உங்களை யார் பாதுகாப்பான்? எங்களை இதிலிருந்து பாதுகாத்தால் நிச்சயமாக நாங்கள் நன்றிசெலுத்துபவர்களில் ஆகிவிடுவோம்” என்று பணிவாகவும் மறைவாகவும் அவனிடமே நீங்கள் பிரார்த்திக்கிறீர்கள்.
Enam 6:64
(நபியே!) கூறுவீராக: “இதிலிருந்தும் இன்னும் எல்லா துன்பங்களிலிருந்தும் அல்லாஹ்தான் உங்களை பாதுகாக்கிறான். (அவன் உங்களை பாதுகாத்த) பிறகு, நீங்கள் (அவனுக்கு) இணைவைக்கிறீர்கள்!’’
Enam 6:65
(நபியே!) கூறுவீராக: “உங்களுக்கு மேலிருந்து; அல்லது, உங்கள் கால்களுக்குக் கீழிருந்து உங்கள் மீது தண்டனையை அனுப்புவதற்கும்; அல்லது, உங்களைப் பல பிரிவுகளாக (ஆக்கி, பிறகு, உங்களுக்குள் ஒரு பிரிவை இன்னொரு பிரிவுடன் சண்டையில்) கலந்து, உங்களில் சிலருக்கு சிலருடைய வலிமையை (-தாக்குதலை) சுவைக்க வைப்பதற்கும் அவன்தான் சக்தியுள்ளவன்.’’ அவர்கள் விளங்குவதற்காக வசனங்களை எவ்வாறு விவரிக்கிறோம் என்று (நபியே!) கவனிப்பீராக.
Enam 6:66
இதுதான் உண்மையாக இருந்தும், உம் சமுதாயம் இதை பொய்ப்பித்தனர். (நபியே!) கூறுவீராக: “உங்கள் மீது பொறுப்பாளனாக நானில்லை.’’
Enam 6:67
ஒவ்வொரு செய்திக்கும் (அது) நிகழும் நேரமுண்டு. இன்னும், (நீங்கள் அதை) அறியத்தான் போகிறீர்கள்.
Enam 6:68
(நபியே!) நம் வசனங்களில் (அவற்றை கேலி செய்வதில்) மூழ்குபவர்களைக் கண்டால், அவர்கள் அது அல்லாத (வேறு) பேச்சில் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக. ஷைத்தான் உம்மை மறக்கடித்தால், நினைவு வந்த பின்னர் அநியாயக்கார கூட்டத்துடன் அமராதீர்.
Enam 6:69
இன்னும் (வீண் விவாதத்தில் மூழ்கும்) அவர்களுடைய (செயல்களின்) கணக்கிலிருந்து எதுவும் அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் மீதில்லை. எனினும், அ(வ்வாறு கேலி செய்ப)வர்கள் தவிர்ந்து கொள்வதற்காக உபதேசித்தல் (கடமையாகும்).
Enam 6:70
இன்னும், (நபியே!) எவர்கள் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் கேளிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ; இன்னும், உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டதோ அவர்களை நீர் விட்டுவிடுவீராக. ஓர் ஆன்மா, தான் செய்ததன் காரணமாக (மறுமையில்) ஆபத்திற்குள்ளாகும் என்பதை இதன் மூலம் நினைவூட்டுவீராக. (அந்நாளில்) பாதுகாவலரோ பரிந்துரையாளரோ, அல்லாஹ்வைத் தவிர அதற்கு இருக்கமாட்டார். அது (தண்டனையிலிருந்து தப்பிக்க) எவ்வளவு ஈடு கொடுத்தாலும் அதனிடமிருந்து அது ஏற்கப்படாது. இவர்கள் எத்தகையோர் என்றால் தாங்கள் செய்ததன் காரணமாகவே ஆபத்திற்குள்ளானார்கள். இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் கடுமையான கொதி நீரிலிருந்து குடிபானமும் துன்புறுத்தும் தண்டனையும் இவர்களுக்கு உண்டு.
Enam 6:71
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர எங்களுக்கு பலனளிக்காதவற்றையும் தீங்கிழைக்காதவற்றையும் நாங்கள் அழைப்போமா? ஒருவர், அவரை நேர்வழி பக்கம் அழைக்கின்ற நண்பர்கள் அவருக்கு இருந்த நிலையில், ஷைத்தான்கள் அவரை வழிதவறச் செய்து, அவரோ திகைத்தவராக பூமியில் அலைகிறாரே அவரைப் போல், நாங்கள் - எங்களை அல்லாஹ் நேர்வழிப்படுத்திய பின்னர் - எங்கள் குதிங்கால்கள் மேல் (வழிகேட்டின் பக்கம்) திரும்பி (குழப்பத்தில் ஆகி) விடுவோமா?’’ (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ்வின் நேர்வழி, அதுதான் (உண்மையான) நேர்வழியாகும். அகிலத்தார்களின் இறைவனுக்கே நாங்கள் (முற்றிலும்) பணிந்துவிடவேண்டும் என்று கட்டளையிடப்பட்டோம்.’’
Enam 6:72
இன்னும், “தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும், அவனை அஞ்சுங்கள் என்று நாங்கள் கட்டளை இடப்பட்டுள்ளோம்.” இன்னும், அவன் பக்கம்தான் நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
Enam 6:73
அவன்தான் உண்மையில் வானங்களையும், பூமியையும் படைத்தான். இன்னும், (மறுமை நிகழும்போது வானமும் பூமியும் வேறு வானமாகவும் பூமியாகவும் மாற்றப்படும். அப்போது) ‘ஆகுக!’ என அவன் கூறும் அந்த நாளில் உடனே (அது அவன் நாடியபடி அவை இரண்டும்) ஆகிவிடும்.
Enam 6:74
இப்ராஹீம் தன் தந்தை ஆஸருக்கு கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! “நீர் சிலைகளை வணங்கத்தகுதியான தெய்வங்களாக எடுத்துக்கொள்கிறீரா?’’ “நிச்சயமாக நான் உம்மையும் உம் சமுதாயத்தையும் தெளிவான வழிகேட்டில் காண்கிறேன்.’’
Enam 6:75
இன்னும், (நேர்வழியையும் வழிகேட்டையும் அவருக்கு நாம் காண்பித்து கொடுத்த) இவ்வாறுதான், வானங்கள்; மற்றும், பூமியின் பேராட்சியை இப்ராஹீமுக்கு காண்பித்தோம். ஏனெனில், (அவர் அல்லாஹ்வின் வல்லமையை அறிந்து கொள்வதற்காக.) இன்னும், அவர் உறுதியான நம்பிக்கை உடையவர்களில் ஆகுவதற்காக.
Enam 6:76
ஆக, அவரை இரவு சூழ்ந்தபோது அவர் ஒரு நட்சத்திரத்தைக் கண்டு “இது என் இறைவன்’’ எனக் கூறினார். ஆக, அது மறைந்தபோது, “மறையக் கூடியவற்றை (இறைவனாக எடுத்துக்கொள்ள நான்) விரும்பமாட்டேன்’’ எனக் கூறினார்.
Enam 6:77
ஆக, உதயமாகிய சந்திரனை அவர் கண்டபோது, “இது என் இறைவன்’’ எனக் கூறினார். ஆக, அது மறைந்தபோது “என்(னைப் படைத்த எனது உண்மையான) இறைவன் என்னை நேர்வழி படுத்தாவிட்டால் வழிகெட்ட சமுதாயத்தில் நிச்சயமாக நான் ஆகிவிடுவேன்’’ எனக் கூறினார்.
Enam 6:78
ஆக, உதயமாகிய சூரியனைக் கண்டபோது, “இது என் இறைவன், இது மிகப் பெரியது’’ எனக் கூறினார். ஆக, அது மறைந்தபோது, “என் சமுதாயமே! நீங்கள் (உண்மையான இறைவனாகிய அல்லாஹ்விற்கு) இணைவைப்பவற்றிலிருந்து நிச்சயமாக நான் விலகியவன்’’ என்று கூறினார்.
Enam 6:79
“வானங்களையும் பூமியையும் படைத்தவனின் பக்கம் நிச்சயமாக நான் ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடையவனாக (அல்லாஹ்வின் பக்கம்) என் முகத்தை திருப்பிவிட்டேன். இன்னும், நான் இணைவைப்பவர்களில் இல்லை.’’ (என்று கூறினார்)
Enam 6:80
இன்னும், அவரிடம் அவருடைய சமுதாயத்தினர் தர்க்கித்தனர். அவர் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி என்னிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனோ எனக்கு நேர்வழி காட்டிவிட்டான். இன்னும், அவனுக்கு நீங்கள் இணைவைப்பதை நான் பயப்பட மாட்டேன், என் இறைவன் எதையும் நாடினால் தவிர. என் இறைவன் ஞானத்தால் எல்லாவற்றையும் விட விசாலமானவனாக இருக்கிறான். நீங்கள் நல்லுபதேசம் பெறவேண்டாமா?’’
Enam 6:81
“இன்னும், நீங்கள் இணைவைத்தவற்றை எவ்வாறு நான் பயப்படுவேன். உங்களுக்கு அவன் எதற்கு ஆதாரத்தை இறக்கவில்லையோ அதை நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விற்கு இணையாக்கியதைப் பற்றி நீங்கள் பயப்படுவதில்லை. ஆகவே, இரு பிரிவினரில் (இறைவனின் கோபத்திலிருந்து) பாதுகாப்புப்பெற மிகத் தகுதியுடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (பதில் கூறுங்கள்).”
Enam 6:82
எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையில் (இணைவைத்தல் எனும்) அநியாயத்தை கலக்கவில்லையோ அவர்களுக்கே (அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து) பாதுகாப்பு உண்டு. இன்னும், அவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள் ஆவர்.
Enam 6:83
இன்னும், இவை நம் சான்றாகும். அதை அவருடைய சமுதாயத்திற்கு எதிராக இப்ராஹீமுக்கு கொடுத்தோம். நாம் நாடியவர்களை பதவிகளால் உயர்த்துகிறோம். (நபியே!) நிச்சயமாக உம் இறைவன் மகா ஞானவான், நன்கறிபவன் ஆவான்.
Enam 6:84
இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் வழங்கினோம். எல்லோரையும் நேர்வழி நடத்தினோம். இதற்கு முன்னர் நூஹையும், அவருடைய சந்ததிகளில் தாவூதையும், ஸுலைமானையும், ஐயூபையும், யூஸுஃபையும், மூஸாவையும், ஹாரூனையும் நாம் நேர்வழி நடத்தினோம். நல்லறம் புரிவோருக்கு இவ்வாறே (நற்)கூலி கொடுக்கிறோம்.
Enam 6:85
இன்னும், ஸகரிய்யாவையும், யஹ்யாவையும், ஈஸாவையும், இல்யாஸையும் (நேர்வழி நடத்தினோம்). (இவர்கள்) எல்லோரும் நல்லோரில் உள்ளவர்களே.
Enam 6:86
இன்னும், இஸ்மாயீலையும், அல்யஸஉவையும், யூனுஸையும், லூத்தையும் (நேர்வழி நடத்தினோம்). (இவர்கள்) எல்லோரையும் அகிலத்தார்களை விட மேன்மைப்படுத்தினோம்.
Enam 6:87
இன்னும், இவர்களுடைய மூதாதைகளிலும், இவர்களுடைய சந்ததிகளிலும், இவர்களுடைய சகோதரர்களிலும் (நாம் விரும்பிய பலரை மேன்மைப்படுத்தினோம்). இன்னும் அவர்களை (நபித்துவத்திற்காக) தேர்ந்தெடுத்தோம். இன்னும் அவர்களுக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டினோம்.
Enam 6:88
இதுவே அல்லாஹ்வுடைய நேர்வழியாகும். தன் அடியார்களில் தான் நாடியவர்களை அதன் மூலம் நேர்வழி நடத்துகிறான். இன்னும், அவர்கள் (-மேற்கூறப்பட்ட நபிமார்கள்) இணைவைத்தால் அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு அழிந்துவிடும்.
Enam 6:89
இவர்கள் எத்தகையோர் என்றால் இவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம். ஆகவே, அவற்றை (மக்காவாசிகளாகிய) இவர்கள் நிராகரித்தால் அவற்றை நிராகரிப்பவர்களாக இருக்காத ஒரு சமுதாயத்தை (நாம் கொண்டுவருவோம். அவர்களை) அவற்றுக்கு பொறுப்பாளர்களாக ஆக்கி விடுவோம்.
Enam 6:90
(நபியே!) அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ் அவர்களை நேர்வழி நடத்தினான். ஆகவே, அவர்களுடைய நேர்வழியையே - அதையே நீர் பின்பற்றுவீராக. “இதற்காக உங்களிடம் ஒரு கூலியையும் நான் கேட்க மாட்டேன். இ(ந்த வேதமான)து இல்லை, அகிலத்தார்களுக்கு ஒரு நல்லுபதேசமாகவே தவிர’’ என்று கூறுவீராக.
Enam 6:91
“மனிதர்கள் மீது (வேதத்தில்) எதையும் அல்லாஹ் இறக்கவில்லை’’ என்று அவர்கள் கூறியபோது அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கு தகுந்தாற்போல் அவர்கள் அறியவில்லை. (நபியே!) கூறுவீராக: “மக்களுக்கு ஒளியாகவும் நேர்வழியாகவும் மூஸா கொண்டு வந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதை நீங்கள் பல ஏடுகளாக ஆக்கி, அவற்(றில் சிலவற்)றை வெளிப்படுத்தினீர்கள், இன்னும் அதிகமானதை மறைத்தும் விடுகிறீர்கள். நீங்களும் உங்கள் மூதாதைகளும் அறியாதவற்றை (நீங்கள்) கற்பிக்கப்பட்டீர்கள்.” (நபியே!) “அல்லாஹ் (அதை இறக்கினான்)’’ என்று நீர் கூறிவிட்டு, அவர்களை அவர்கள் மூழ்குவதிலேயே (-அவர்களின் பொய்யான கேலி பேச்சுகளில்) விளையாடியவர்களாக நீர் விட்டுவிடுவீராக.
Enam 6:92
(நபியே!) இது பாக்கியமிக்க (அதிமான நன்மைகளை உடைய) வேதமாகும். நாம் இதை இறக்கினோம். இது, தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்தக் கூடியதாகும். இன்னும், நீர் (இதன் மூலம்) மக்காவையும் (-மக்கா நகரத்தில் உள்ளவர்களையும்) அதைச் சுற்றி உள்ளவர்களையும் எச்சரிப்பதற்காக (இறக்கினோம்). இன்னும், எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்வார்களோ அவர்கள் இதையும் நம்பிக்கை கொள்வார்கள். இன்னும், அவர்கள் தங்கள் தொழுகையை மிகுந்த கவனத்துடன் தொடர்ந்து நிறைவேற்றுவார்கள்.
Enam 6:93
(நபியே!) அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவன்; அல்லது, அவனுக்கு எதுவும் வஹ்யி அறிவிக்கப்படாமலிருக்க "தனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது'' என்று கூறுபவன்; அல்லது, "அல்லாஹ் இறக்கியதைப் போல் (நானும்) இறக்குவேன்'' என்று கூறுபவன் ஆகிய (இ)வர்களை விட மிகப்பெரிய அநியாயக்காரன் யார்? (இந்த) அக்கிரமக்காரர்கள் மரண வேதனைகளில் இருக்கும் சமயத்தில் நீர் (அவர்களைப்) பார்த்தால், வானவர்கள் தங்கள் கைகளை நீட்டி, (அவர்களை நோக்கி) "உங்கள் உயிர்களை வெளியேற்றுங்கள்; நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக்கொண்டிருந்த காரணத்தாலும், நீங்கள் அவனுடைய வசனங்களை மறுத்து பெருமையடிப்பவர்களாக இருந்த காரணத்தாலும் இன்று இழிவான வேதனையை கூலி கொடுக்கப்படுவீர்கள்'' (என்று கூறுவார்கள்).
Enam 6:94
“முதல் முறை நாம் உங்களைப் படைத்தது போல் தனி நபர்களாக நம்மிடம் திட்டமாக வந்துவிட்டீர்கள். நாம் உங்களுக்குக் கொடுத்தவற்றையும் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டுவிட்டீர்கள். உங்களுடன் (நீங்கள் நம்பிக்கொண்டிருந்த) உங்கள் பரிந்துரையாளர்களை நாம் காணவில்லை. நிச்சயமாக, அவர்கள் உங்களுக்கு மத்தியில் (அல்லாஹ்விற்கு) இணையான தெய்வங்கள் என நீங்கள் (அவர்களை) எண்ணினீர்கள். உங்களுக்கு மத்தியில் (இருந்த தொடர்புகள்) அறுந்து, (பரிந்துரையாளர்கள் என) நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தவை உங்களை விட்டும் தவறிப்போய்விட்டன.’’
Enam 6:95
நிச்சயமாக அல்லாஹ் வித்துகளையும், (பழங்களின்) கொட்டைகளையும் பிளந்து (செடி கொடிகளை) துளிர்க்கச் செய்பவன்; இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளியாக்குகிறான்; இன்னும், உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குகிறான். அத்தகையவன்தான் அல்லாஹ். ஆகவே, நீங்கள் (அவனை விட்டு வேறு) எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
Enam 6:96
(அவனே இருளிலிருந்து) ஒளியை பிளப்பவன்; இன்னும், இரவை அமைதி பெறுவதற்காகவும் சூரியனையும் சந்திரனையும் (நேரம் மற்றும் மாதத்தின்) கணக்கிற்காகவும் ஆக்கினான். இவை மிகைத்தவன், நன்கறிந்தவனின் ஏற்பாடாகும்.
Enam 6:97
இன்னும், நட்சத்திரங்களை உங்களுக்கு அவன்தான் அமைத்தான், நீங்கள் தரையிலும் கடலின் இருள்களிலும் அவற்றின் மூலம் நேர்வழி பெறுவதற்காக. அறிவுள்ள சமுதாயத்திற்காக அத்தாட்சிகளை திட்டமாக நாம் விவரித்து விட்டோம்.
Enam 6:98
இன்னும், அவன்தான் உங்களை ஒரே ஓர் ஆத்மாவில் இருந்து உருவாக்கினான். ஆக, (ஒவ்வொரு ஆன்மாவிற்கும்) ஒரு தங்குமிடமும் ஒரு ஒப்படைக்கப்படும் இடமும் உண்டு. சிந்தித்து புரிகின்ற சமுதாயத்திற்காக அத்தாட்சிகளை திட்டமாக விவரித்தோம்.
Enam 6:99
இன்னும், அவன்தான் மேகத்திலிருந்து மழையை இறக்குபவன். அதன் மூலம் எல்லா தாவரங்களையும் நாம் உற்பத்தி செய்தோம். (அவ்வாறே) அதிலிருந்து பசுமையானதையும் உற்பத்தி செய்தோம். அதிலிருந்து அடர்ந்த வித்துக்களை (உடைய கதிர்களை)யும் உற்பத்தி செய்கிறோம். பேரீச்ச மரத்தில் அதன் பாளையிலிருந்து (பறிப்பதற்கு) நெருக்கமான பழக்குலைகளும் இருக்கின்றன. திராட்சைகளின் தோட்டங்களையும், (ஒலிவம்) ஆலிவ் பழங்களையும், (பார்வையில்) ஒப்பான, (ருசியில்) ஒப்பாகாத மாதுளைகளையும் (நாமே வெளியாக்குகிறோம்). அவை காய்க்கும்போது அதன் கனிகளையும் இன்னும், அவை பழமாகுவதையும் கவனித்துப் பாருங்கள். நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Enam 6:100
இன்னும், அவர்கள் ஜின்களை அல்லாஹ்விற்கு இணையான தெய்வங்களாக ஆக்கினர். அவனோ அவர்களைப் படைத்திருக்கிறான். இன்னும், அறிவின்றி அவனுக்கு மகன்களையும், மகள்களையும் கற்பனை செய்தனர். அவன் (இந்த கற்பனைகளை விட்டு) மகாத் தூயவன். இன்னும் அ(ந்த இணைவைப்ப)வர்கள் வருணிப்பதை விட்டு அவன் மிக உயர்ந்தவன்.
Enam 6:101
(அவன்) வானங்கள் இன்னும் பூமியின் நூதன படைப்பாளன் (-முன்மாதிரி இன்றி அவற்றை படைத்தவன்). அவனுக்கு மனைவி இல்லாமல் இருக்கும்போது அவனுக்கு எவ்வாறு சந்ததி இருக்க முடியும்? இன்னும், அவனோ எல்லாவற்றையும் படைத்தான். (அவனைத் தவிர எல்லாம் படைக்கப்பட்டவையே!) இன்னும், அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.
Enam 6:102
அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ்; அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (அவன்) எல்லாவற்றின் படைப்பாளன். ஆகவே, அவனை வணங்குங்கள்! இன்னும், அவன் எல்லாவற்றின் மீதும் கண்காணிப்பாளன் ஆவான்.
Enam 6:103
பார்வைகள் அவனை பார்க்க முடியாது. அவன் எல்லா(ருடைய) பார்வைகளை பார்க்கிறான். இன்னும், அவன்தான் மிக நுட்பமானவன்; ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Enam 6:104
உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் உங்களுக்கு வந்துவிட்டன. ஆக, எவர் (அவற்றை) கவனமாக பார்த்தாரோ அது அவருக்குத்தான் நன்மை. எவர் குருடாகி விட்டாரோ (அது) அவருக்குத்தான் கேடாகும். (நீர் அவர்களை நோக்கி) “நான் உங்கள்மீது (ஏற்படுத்தப்பட்ட) காவலனாக இல்லை’’ (என்று நபியே! கூறுவீராக).
Enam 6:105
(நேர்வழியை நாடுவோர் நேர்வழிபெற நமது) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம். இன்னும், நீர் படித்தீர் என்று அவர்கள் சொல்வதற்காகவும், அறிகின்ற மக்களுக்கு நாம் அதைத் தெளிவுபடுத்துவதற்காகவும் (நம் வசனங்களை தொடர்ந்து விவரிக்கிறோம்).
Enam 6:106
(நபியே!) உம் இறைவனிடமிருந்து உமக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதை பின்பற்றுவீராக. அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. இன்னும் இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணிப்பீராக!
Enam 6:107
அல்லாஹ் நாடியிருந்தால் (அவர்கள்) இணைவைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மீது காவலராக நாம் உம்மை ஆக்கவில்லை. நீர் அவர்கள் மீது பொறுப்பாளராகவும் இல்லை.
Enam 6:108
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வை அன்றி எவர்களை அவர்கள் வணங்குகிறார்களோ அவர்களைத் திட்டாதீர்கள். அதனால் அவர்கள் அறிவின்றி வரம்புமீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவ்வாறே, ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களுடைய செயல்களை நாம் அலங்கரித்தோம். பிறகு, அவர்களுடைய இறைவனிடமே அவர்களுடைய மீட்சி இருக்கிறது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை (அவன்) அவர்களுக்கு அறிவிப்பான்.
Enam 6:109
(அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி அவர்களிடம் வந்தால், “நிச்சயமாக அதை நம்பிக்கை கொள்வோம்” என அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தனர். (நபியே!) “அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றன.’’ என்று கூறுவீராக. (அவர்கள் விரும்பியவாறே) நிச்சயமாக அவை வந்தால், அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்பது (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு தெரியாதா?
Enam 6:110
இன்னும், முதல் முறையாக அவர்கள் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளாதது போன்றே நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் (இறுதி வரை) புரட்டிவிடுவோம். இன்னும், அவர்களுடைய அட்டூழியத்தில் அவர்கள் (மேலும்) கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக அவர்களை விட்டுவிடுவோம்.
Enam 6:111
(அவர்கள் கோரியபடி) நிச்சயமாக, நாம் அவர்களிடம் வானவர்களை இறக்கினாலும்; இன்னும், இறந்தவர்கள் அவர்களிடம் பேசினாலும்; இன்னும், எல்லாவற்றையும் அவர்களுக்கு முன்னால் கண்ணெதிரே ஒன்று திரட்டினாலும், (அவர்கள்) நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை, அல்லாஹ் நாடினால் தவிர. எனினும், நிச்சயமாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
Enam 6:112
இவ்வாறே, ஒவ்வொரு நபிக்கும் மனிதர்களிலும், ஜின்களிலுமுள்ள ஷைத்தான்களை நாம் எதிரிகளாக ஆக்கினோம். அவர்களில் சிலர் சிலருக்கு (அவர்களை) ஏமாற்றுவதற்காக அலங்காரமான சொல்லை சொல்லித் தருகிறார்கள். உம் இறைவன் நாடியிருந்தால் அதை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) அவர்களையும் அவர்கள் பொய்யாக புனைந்து பேசுவதையும் விட்டுவிடுவீராக.
Enam 6:113
இன்னும், மறுமையை நம்பாதவர்களுடைய உள்ளங்கள் அதன் பக்கம் செவிசாய்ப்பதற்காகவும்; இன்னும், அதை அவர்கள் திருப்தி கொள்வதற்காகவும்; இன்னும், அவர்கள் செய்(யும்) ப(ல பாவமான)வற்றை செய்வதற்காகவும் (ஷைத்தான்கள் அவர்களை ஏமாற்றினர்).
Enam 6:114
“தீர்ப்பாளனாக அல்லாஹ் அல்லாதவரையா நான் தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு மிகத் தெளிவான வேதத்தை இறக்கினான்.’’ (என்று நபியே! கூறுவீராக). இன்னும், (இதற்கு முன்னர்) நாம் எவர்களுக்கு வேதத்தை கொடுத்தோமோ அவர்கள், நிச்சயமாக, இது உண்மையில் (உண்மையான ஆதாரங்களுடன்) உம் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டது என்பதை அறிவார்கள். ஆகவே, சந்தேகிப்பவர்களில் ஒருபோதும் ஆகிவிடாதீர்.
Enam 6:115
(நபியே!) உம் இறைவனின் வாக்கு (-வேதம்) உண்மையாலும் நீதத்தாலும் முழுமையானதாக இருக்கிறது. அவனுடைய (வேத) வாக்குகளை மாற்றுபவன் அறவே இல்லை. அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
Enam 6:116
இன்னும், இப்பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு நீர் கீழ்ப்படிந்தால் (அவர்கள்) உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுத்து விடுவார்கள். (அதிகமானோர்) யூகத்தைத் தவிர (உண்மையை) பின்பற்றமாட்டார்கள். இன்னும், கற்பனை செய்பவர்களாகவே (-பொய்யை பின்பற்றுபவர்களாகவே) தவிர (உண்மையை பின்பற்றுபவர்களாக) அவர்கள் இல்லை.
Enam 6:117
(நபியே!) நிச்சயமாக உம் இறைவன், அவனுடைய பாதையிலிருந்து வழிகெடுபவரை மிக அறிந்தவன். இன்னும், அவன் நேர்வழி பெற்றவர்களையும் மிக அறிந்தவன்.
Enam 6:118
ஆகவே, (அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்டதிலிருந்து புசியுங்கள், நீங்கள் அவனுடைய வசனங்களை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால்.
Enam 6:119
இன்னும் (அறுக்கும்போது) எதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதோ அதிலிருந்து நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன ஏற்பட்டது? அவன் உங்கள் மீது தடுத்தவற்றை உங்களுக்கு (இந்த வேதத்தில் :, : ஆகிய வசனங்களில்) விவரித்துவிட்டான் (ஆனால் தடுக்கப்பட்ட) அதன் பக்கம் நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டால் தவிர (அப்போது, அதை உண்ணுவது உங்கள் நிர்ப்பந்தத்தின் அளவு உங்களுக்கு ஆகுமாகிவிடும்). நிச்சயமாக அதிகமானோர் கல்வி அறிவின்றி தங்கள் ஆசைகளினால் (மக்களை) வழி கெடுக்கிறார்கள். (நபியே!) நிச்சயமாக உம் இறைவன் எல்லை மீறுபவர்களை மிக அறிந்தவன் ஆவான்.
Enam 6:120
(நம்பிக்கையாளர்களே!) பாவத்தில் வெளிப்படையானதையும் அதில் மறைவானதையும் விட்டுவிடுங்கள். நிச்சயமாக பாவத்தை சம்பாதிப்பவர்கள் அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கு (தகுந்த) கூலி கொடுக்கப்படுவார்கள்.
Enam 6:121
இன்னும், (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றிலிருந்து புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பாவமாகும். உங்களிடம் அவர்கள் தர்க்கிப்பதற்காக நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களுக்கு சொல்லித் தருகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால் நிச்சயமாக நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்கள்.
Enam 6:122
எவர் மரணித்தவராக இருந்து, அவரை நாம் உயிர்ப்பித்து, அவர் மக்களுக்கு மத்தியில் நடமாடுவதற்கு ஓர் ஒளியையும் அவருக்கு நாம் ஏற்படுத்தினோமோ அவர், யார் இருள்களில் இருந்து கொண்டு அவற்றிலிருந்து வெளியேறாமல் இருக்கிறாரோ அவரைப் போன்று ஆவாரா? இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவை அலங்கரிக்கப்பட்டன.
Enam 6:123
இன்னும், இவ்வாறே எல்லா ஊரிலும் தலைவர்களாக அதிலுள்ள பெரிய பாவிகளை ஆக்கினோம், அவற்றில் அவர்கள் சதி செய்வதற்காக. அவர்கள் தங்களுக்குத் தாமே தவிர (மற்றவர்களுக்கு) சதி செய்யமாட்டார்கள். (இதை அவர்கள்) உணர மாட்டார்கள்.
Enam 6:124
இன்னும், அவர்களிடம் ஒரு வசனம் வந்தால் “அல்லாஹ்வுடைய தூதர்களுக்கு கொடுக்கப்பட்டது போன்று எங்களுக்கும் கொடுக்கப்படுகின்ற வரை (நாங்கள் அதை) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று கூறுகிறார்கள். தன் தூதுத்துவத்தை எங்கு ஏற்படுத்துவது (-யாரை நபியாக - தூதராக ஆக்குவது) என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன் ஆவான். குற்றம் புரிந்தவர்களை அவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருந்த காரணத்தால் அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்கு) சிறுமையும் கடுமையான தண்டனையும் வந்தடையும்.
Enam 6:125
ஆக, அல்லாஹ் எவரை நேர்வழி செலுத்த நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாமை ஏற்பதற்கு விரிவாக்குகிறான். எவரை, அவன் வழிகெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவனைப் போல் இறுக்கமானதாகவும் சிரமமானதாகவும் ஆக்குவான். இவ்வாறே, நம்பிக்கை கொள்ளாதவர்கள் மீது அல்லாஹ் தண்டனையை ஆக்குவான்.
Enam 6:126
(நபியே!) இது உம் இறைவனின் நேரான பாதையாகும். நல்லுபதேசம் பெறும் மக்களுக்கு (நமது) வசனங்களை திட்டமாக விவரித்து விட்டோம்.
Enam 6:127
அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் தாருஸ் ஸலாம் (-ஈடேற்றமுடைய இல்லம் என்ற சொர்க்கம்) உண்டு. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக அவன் அவர்களுடைய நேசனும் ஆவான்.
Enam 6:128
இன்னும், அவன் அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டும் நாளில், (ஜின்களை நோக்கி) “ஜின்களின் கூட்டமே! நீங்கள் மனிதர்களில் (வழிகேடர்களை) அதிகப்படுத்தி விட்டீர்கள்’’ (என்று கூறுவான்). மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள், “எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரினால் பயனடைந்தனர். எங்களுக்கு நீ தவணையளித்த தவணையை அடைந்தோம். (எங்களுக்கு தங்குமிடம் எது?)’’ என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன்) “நரகம்தான் உங்கள் தங்குமிடம். அதில் (நீங்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள், அல்லாஹ் நாடினால் தவிர.’’ என்று கூறுவான். (நபியே!) நிச்சயமாக உம் இறைவன், ஞானவான், நன்கறிந்தவன் ஆவான்.
Enam 6:129
இவ்வாறு, அக்கிரமக்காரர்களில் சிலரை சிலருக்கு நண்பர்களாக ஆக்குவோம், அவர்கள் செய்துகொண்டிருந்ததன் காரணமாக.
Enam 6:130
“ஜின்கள் மற்றும் மனிதர்களின் கூட்டமே! உங்களிலிருந்து தூதர்கள் என் வசனங்களை உங்களுக்கு விவரிப்பவர்களாக; இன்னும், உங்கள் இந்நாளை உங்களுக்கு எச்சரிப்பவர்களாக உங்களிடம் வரவில்லையா?’’ என்று கூறுவான். அதற்கவர்கள், “(எங்கள் இறைவனே!) எங்களுக்கு எதிராக சாட்சியளித்தோம்" என்று கூறுவார்கள். உலக வாழ்க்கை அவர்களை மயக்கி விட்டது. நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பாளர்களாக இருந்தார்கள் என்று அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்.
Enam 6:131
அதற்குக் காரணமாவது, நகரங்களை, - அங்கு வசிப்பவர்கள் கவனமற்றவர்களாக இருக்கும் நிலையில் (அவர்களுடைய ஷிர்க் எனும்) - அநியாயத்தினால் உமது இறைவன் அழிப்பவனாக இல்லை.
Enam 6:132
இன்னும், எல்லோருக்கும் அவர்கள் செய்ததற்கு ஏற்ப (தகுந்த) பதவிகள் உண்டு. அவர்கள் செய்வதை உம் இறைவன் கவனிக்காதவனாக இல்லை.
Enam 6:133
இன்னும், (நபியே!) உம் இறைவன் நிறைவானவன் (-எத்தேவையுமற்றவன்), கருணையுடையவன் ஆவான். (மனிதர்களே!) அவன் நாடினால் உங்களைப் போக்கி, (சென்றுபோன) மற்ற சமுதாயத்தின் சந்ததியிலிருந்து உங்களை உருவாக்கியதைப் போன்று உங்களுக்குப் பின்னர் அவன் தான் நாடியவர்களை உருவாக்குவான்.
Enam 6:134
நிச்சயமாக எதை நீங்கள் வாக்களிக்கப்படுகிறீர்களோ அது வரக்கூடியதே. இன்னும், நீங்கள் (உங்கள் இறைவனைப்) பலவீனப்படுத்துபவர்களாக இல்லை. (அவனை விட்டும் நீங்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது.)
Enam 6:135
(நபியே!) கூறுவீராக: “என் சமுதாயமே! உங்கள் போக்கில் (நீங்கள் விரும்புவதை) செய்யுங்கள். நிச்சயமாக நான் (என் இறைவனின் கட்டளைப்படி அவன் ஏவியதை) செய்கிறேன். ஆக, மறுமையின் (நல்ல) முடிவு எவருக்கு இருக்கும் என்பதை (நீங்கள் விரைவில்) அறிவீர்கள். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.’’
Enam 6:136
இன்னும், அல்லாஹ்விற்கு, - அவன் படைத்த விவசாயத்திலிருந்தும் கால்நடைகளிலிருந்தும் ஒரு பாகத்தை ஆக்கினார்கள். ஆக, தங்கள் கற்பனை எண்ணத்தின்படி, “இது அல்லாஹ்விற்கு என்றும், இன்னும், இது எங்கள் தெய்வங்களுக்கு’’ என்றும் கூறினர். ஆக, எது அவர்களுடைய தெய்வங்களுக்குரியதோ அது அல்லாஹ்வின் (-அல்லாஹ்வுடைய பங்கின்) பக்கம் சேராது. ஆனால், எது அல்லாஹ்விற்குரியதோ அது அவர்களுடைய தெய்வங்களின் (பங்கின்) பக்கம் சேரும்! அவர்கள் (இவ்வாறு) செய்யும் தீர்ப்பு மிகக் கெட்டதாகும்.
Enam 6:137
இவ்வாறே, இணைவைப்பவர்களில் அதிகமானோருக்கு அவர்களை அழிப்பதற்காகவும் அவர்கள் மீது அவர்களுடைய வணக்க வழிபாட்டை குழப்புவதற்காகவும் அவர்களின் குழந்தைகளைக் கொல்வதை அவர்களுடைய ஷைத்தான்கள் அலங்கரித்தன. அல்லாஹ் நாடியிருந்தால் அதை செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) அவர்களை அவர்கள் பொய்யாக புனைந்து பேசுவதுடன் விட்டுவிடுங்கள்.
Enam 6:138
இன்னும், “இவை (சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட, மனிதர்கள் புசிப்பதற்கு) தடுக்கப்பட்ட கால்நடைகளும் விவசாயமும் ஆகும். நாங்கள் நாடுபவரைத் தவிர (யாரும்) அவற்றைப் புசிக்கமாட்டார்” என்று தங்கள் கற்பனை எண்ணத்தின் படி அவர்கள் கூறினர். இன்னும், பல கால்நடைகள் இருக்கின்றன. அவற்றின் முதுகுகள் தடுக்கப்பட்டன. (-அவற்றின் மீது பயணிப்பதும், சுமையேற்றுவதும் கூடாது.) இன்னும், (பல) கால்நடைகள் இருக்கின்றன. (அவற்றை அறுக்கும்போது) அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டார்கள், (ஆனால், இவ்வாறுதான் அல்லாஹ் கூறினான் என்று) அவன் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறார்கள். அவர்கள் (அல்லாஹ்வின் மீது) பொய்யை இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததால் அவர்களுக்கு (தகுந்த) கூலி கொடுப்பான்.
Enam 6:139
இன்னும், “இந்த கால்நடைகளின் வயிறுகளில் இருப்பது எங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியது. (அதை அவர்கள் புசிக்கலாம். அது) எங்கள் பெண்களுக்கு தடுக்கப்பட்டது. அது செத்ததாக இருந்தால் அதில் அவர்களும் பங்காளிகள் (-எங்கள் பெண்களும் அதை சாப்பிடலாம்)’’ என்று கூறினர். அவர்களுடைய (இவ்)வர்ணிப்பிற்கு அவன் அவர்களுக்கு(த் தகுந்த) கூலி கொடுப்பான். நிச்சயமாக அவன் மகா ஞானவான், நன்கறிந்தவன் ஆவான்.
Enam 6:140
அறிவின்றி (அபத்தமாக) முட்டாள்தனமாக தங்கள் பிள்ளைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ் (அனுமதி) கொடுத்த (நல்ல)வற்றை (தங்கள் மீது) தடுத்தவர்களும் திட்டமாக நஷ்டமடைந்து விட்டனர். (இவ்வாறு) அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுகிறார்கள். (அவர்கள்) திட்டமாக வழிகெட்டு விட்டனர். இன்னும், அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை.
Enam 6:141
அவன்தான் கொடிகள் நிறைந்த தோட்டங்கள், கொடிகளற்ற தோட்டங்கள், பேரீச்ச மரங்கள் இன்னும், வித்தியாசமான கனிகளை உடைய விளைச்சலையும், ஆலிவ் பழங்களையும், ஒன்றுக்கொன்று ஒப்பான இன்னும் ஒப்பாகாத மாதுளையையும் உற்பத்தி செய்தான். அவை காய்த்தால் அவற்றின் கனிகளிலிருந்து புசியுங்கள். இன்னும், அவற்றின் அறுவடை நாளில் அவற்றுடைய கடமையை (ஸகாத்தை) கொடுங்கள். இன்னும், விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்பவர்களை நிச்சயமாக அவன் நேசிக்க மாட்டான்.
Enam 6:142
இன்னும், கால்நடைகளில், சுமக்கத் தகுதியானதையும் சுமக்கத் தகுதியற்றதையும் உற்பத்தி செய்தான். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய (அனுமதிக்கப்பட்ட)வற்றில் இருந்து புசியுங்கள். இன்னும், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான எதிரியாவான்.
Enam 6:143
(நபியே! கால்நடைகளில்) எட்டு ஜோடிகளை (உற்பத்தி செய்தான்). (அவை,) செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரண்டை; இன்னும் வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரண்டை (படைத்தான்). “இ(வ்வி)ரு (வகை) ஆண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களின் கர்ப்பங்கள் சுமந்தவற்றையா (அல்லாஹ்) தடை செய்தான்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் கல்வியுடன் (கூடிய ஆதாரத்தை) எனக்கு அறிவியுங்கள்” என்று (நபியே) நீர் கூர்வீராக.
Enam 6:144
இன்னும், ஒட்டகையிலும் (ஆண், பெண்) இரண்டை, மாட்டிலும் (ஆண், பெண்) இரண்டை(ப் படைத்தான்). இ(வ்வி)ரு (வகை) ஆண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களின் கர்ப்பங்கள் சுமந்தவற்றையா (அல்லாஹ்) தடை செய்தான்? இதை அல்லாஹ் உங்களுக்குக் (கட்டளையிட்டதாகக் கூறுகிறீர்களே, அவ்வாறு அவன்) கட்டளையிட்ட போது நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? (என்று நபியே! கேட்பீராக). ஆக, கல்வி இன்றி மக்களை வழி கெடுப்பதற்காக பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுபவனை விட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி நடத்த மாட்டான்.
Enam 6:145
(நபியே!) கூறுவீராக: “புசிப்பவர் மீது அதைப் புசிக்க தடுக்கப்பட்டதாக எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை, (ஆனால் கால் நடைகளில் தானாக) செத்ததாக; அல்லது, ஓடக்கூடிய இரத்தமாக; அல்லது, பன்றியின் மாமிசமாக; - ஏனெனில், நிச்சயமாக அது அசுத்தமானதாகும். - அல்லது, அல்லாஹ் அல்லாதவருக்காக பாவமான முறையில் (மற்றவர்களின்) பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதாக இருந்தால் தவிர. (இவை அனைத்தும் தடுக்கப்பட்டவையாகும்.) ஆக, யார் பாவத்தை நாடாதவராக, எல்லை மீறாதவராக (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டாரோ (அவர் குற்றவாளியல்ல.) நிச்சயமாக உம் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.
Enam 6:146
இன்னும், (நபியே!) பிளவுபடாத குளம்புகளை உடைய பிராணிகள் (ஒட்டகம், தீக்கோழி, வாத்து போன்றவை) எல்லாவற்றையும் யூதர்கள் மீது தடை செய்தோம். மாடு இன்னும் ஆட்டிலும் அந்த இரண்டின் கொழுப்புகளை அவர்கள் மீது தடை செய்தோம். அந்த இரண்டின் முதுகுகள் சுமந்துள்ள; அல்லது, சிறு குடல்கள் சுமந்துள்ள; அல்லது எலும்புடன் கலந்துள்ளதைத் தவிர (அந்த கொழுப்புகளை அவர்கள் சாப்பிடலாம்). அ(தன் காரணமாவ)து அவர்களுடைய அழிச்சாட்டியத்தினால் அவர்களுக்கு நாம் (தகுந்த) கூலி கொடுத்தோம். இன்னும், நிச்சயமாக நாம் உண்மையாளர்களே.
Enam 6:147
ஆக, (நபியே!) அவர்கள் உம்மைப் பொய்ப்பித்தால், (அவர்களை நோக்கி) கூறுவீராக: “உங்கள் இறைவன் விசாலமான கருணையுடையவன்; இன்னும், அவனது தண்டனை குற்றவாளிகளான மக்களை விட்டும் திருப்பப்படாது’’
Enam 6:148
“அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் இணைவைத்திருக்க மாட்டோம்; இன்னும், (அனுமதிக்கப்பட்ட) எதையும் (கூடாது என) நாங்கள் தடை செய்திருக்க மாட்டோம்” என்று இணைவைப்பவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறே இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் பொய்ப்பித்தார்கள். இறுதியாக, நம் தண்டனையைச் சுவைத்தனர் (-அனுபவித்தனர்). (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: (“நீங்கள் இவ்வாறு செய்வதற்கு) உங்களிடம் (உறுதியான) கல்வி (ஆதாரம்) ஏதும் உண்டா? (அப்படியிருந்தால்) அதை நமக்கு வெளிப்படுத்துங்கள். நீங்கள் வீண் சந்தேகத்தைத் தவிர பின்பற்றுவதில்லை. இன்னும், (பொய்யை) கற்பனை செய்பவர்களாகவே தவிர நீங்கள் இல்லை.’’
Enam 6:149
(நபியே!) கூறுவீராக: “(மறுக்க முடியாத) முழுமையான ஆதாரம் அல்லாஹ்விற்கே உரியது! ஆக, அவன் (உங்களை கட்டாயப்படுத்தி நேர்வழி நடத்த) நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் நேர்வழி நடத்தியிருப்பான்.’’
Enam 6:150
(நபியே!) “நிச்சயமாக அல்லாஹ் இதைத் தடை செய்தான் என்று சாட்சி கூறுகின்ற உங்கள் சாட்சிகளை அழைத்து வாருங்கள்’’ என்று கூறுவீராக. ஆக, அவர்கள் (பொய்) சாட்சி கூறினாலும் நீர் அவர்களுடன் சாட்சி கூறாதீர். இன்னும், நம் வசனங்களை பொய்ப்பிப்பவர்களுடைய ஆசைகளையும் இறுதிநாளை நம்பிக்கை கொள்ளாமல், தங்கள் இறைவனுக்கு இணைவைப்பவர்களின் ஆசைகளையும் (நபியே!) நீர் பின்பற்றாதீர்.
Enam 6:151
(நபியே!) கூறுவீராக: “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது தடை செய்தவற்றை(யும் ஏவியவற்றையும்) நான் (உங்களுக்கு) ஓதுகிறேன். (அவையாவன:) அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். இன்னும், தாய் தந்தைக்கு உதவி உபகாரம் செய்து அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். இன்னும், வறுமையினால் உங்கள் பிள்ளைகளைக் கொல்லாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். இன்னும், மானக்கேடானவற்றை அவற்றில் வெளிப்படையானது இன்னும் மறைவானதின் பக்கம் நெருங்காதீர்கள். (கொலை செய்யக்கூடாது என்று) அல்லாஹ் தடை செய்த உயிரை நியாயமின்றி (அதற்குரிய உரிமை இன்றி) கொல்லாதீர்கள். இவை, - நீங்கள் சிந்தித்துப் புரிவதற்காக இவற்றின் மூலம் (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசிக்கிறான்.
Enam 6:152
இன்னும், அனாதையின் செல்வ(ம் உங்கள் பராமரிப்பில் இருந்தால் அந்த செல்வ)த்தின் பக்கம் மிக அழகிய வழியில் தவிர நெருங்காதீர்கள். இறுதியாக, அவர் தனது பருவத்தை அடையும்போது (அவருடைய செல்வத்தை அவரிடம் ஒப்படைத்து விடுங்கள்!) இன்னும், அளந்து கொடுப்பதையும் நிறுத்து கொடுப்பதையும் நீதமாக முழுமைப்படுத்தி செய்யுங்கள். ஓர் ஆன்மாவை - அதன் சக்திக்கு உட்பட்டே தவிர - நாம் சிரமப்படுத்துவதில்லை. இன்னும், நீங்கள் (தீர்ப்பு) கூறினால் (அதனால் பாதிக்கப்படுபவர்) உறவினராக இருந்தாலும் நீதமாக (தீர்ப்பு) கூறுங்கள். அல்லாஹ்வின் (பெயர் கூறி நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றவருடன் செய்யும்) உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். இவை, - நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவே இவற்றின் மூலம் (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசித்தான்.
Enam 6:153
இன்னும், நிச்சயமாக (இஸ்லாமாகிய) இது என் நேரான பாதை (-மார்க்கம்) ஆகும். ஆக, அதைப் பின்பற்றுங்கள்; இன்னும், (அதைத் தவிர மற்ற) பாதைகளை (-கொள்கைகளைப்) பின்பற்றாதீர்கள். அவை அவனுடைய பாதையிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். இவை, - நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக (அவன்) இவற்றின் மூலம் உங்களுக்கு உபதேசிக்கிறான்.
Enam 6:154
பிறகு, நல்லறம் புரிந்தவர் மீது (அருள்) நிறைவாகுவதற்காகவும் எல்லாவற்றையும் விவரிப்பதற்காகவும் நேர்வழியாக, கருணையாக அமைவதற்காகவும் அவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நம்பிக்கை கொள்வதற்காகவும் மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்(து அதன் மூலம் அவருடைய சமுதாய மக்களை உபதேசித்)தோம்.
Enam 6:155
(மனிதர்களே!) இதுவோ பாக்கியமிக்க (அதிமான நன்மைகளை உடைய) வேதமாகும். இதை நாமே இறக்கினோம். ஆகவே, நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக இதைப் பின்பற்றுங்கள். இன்னும் (அல்லாஹ்வை) அஞ்சுங்கள்.
Enam 6:156
(இணைவைப்பவர்களே!) “வேதம் இறக்கப்பட்டதெல்லாம் நமக்கு முன்னர் (சென்ற யூதர்கள், கிறித்தவர்கள் ஆகிய) இரு கூட்டங்கள் மீதுதான். நாங்கள் அவர்க(ள் படித்த வேதங்க)ளின் படிப்பறிவை அறியாதவர்களாகவே நிச்சயமாக இருந்தோம் என்று நீங்கள் கூறாதிருப்பதற்காக (இந்த வேதத்தை உங்களுக்கு இறக்கினோம்).
Enam 6:157
அல்லது, “நம்மீதும் ஒரு வேதம் இறக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக நாம் அவர்களை விட அதிகம் நேர்வழி பெற்றவர்களாக இருந்திருப்போம்” என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும் (இந்த வேதத்தை உங்களுக்கு அருளினோம்). ஆக, உங்கள் இறைவனிடமிருந்து, மிகத் தெளிவான சான்றும் நேர்வழியும் கருணையும் உங்களிடம் வந்துவிட்டது. ஆக, அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை விட்டு விலகியவனை விட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்? நம் வசனங்களைவிட்டு (இவ்வாறு) விலகியவர்களுக்கு அவர்கள் (உண்மையைவிட்டு) விலகிக் கொண்டிருந்ததன் காரணமாக கெட்ட தண்டனையை கூலியாகக் கொடுப்போம்.
Enam 6:158
வானவர்கள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ; அல்லது, உம் இறைவன் வருவதையோ; அல்லது, உம் இறைவனின் சில அத்தாட்சிகள் வருவதையோ தவிர அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம் இறைவனின் சில அத்தாட்சிகள் வரும் நாளில் அதற்கு முன்னர் நம்பிக்கை கொண்டிருக்காத; அல்லது, தன் நம்பிக்கையில் ஒரு நன்மையையும் செய்திருக்காத ஓர் ஆன்மாவிற்கு அதன் நம்பிக்கை(யும் நன்மையும்) பலனளிக்காது. “(நீங்கள் உங்கள் முடிவை) எதிர்பாருங்கள்; நிச்சயமாக நாங்கள் (எங்கள் முடிவை) எதிர்பார்க்கிறோம்” என்று (நபியே!) கூறுவீராக.
Enam 6:159
நிச்சயமாக எவர்கள் தங்கள் மார்க்கத்தை (பலவாறாக)ப் பிரித்துக்கொண்டு, (அவர்களும்) பல பிரிவினர்களாக ஆகிவிட்டார்களோ அவர்களுடன் நீர் (எந்த) ஒரு விஷயத்திலும் (கலந்தவராக) இல்லை. (அவர்களது மார்க்கம், அவர்களது வழிபாடு வேறு, உமது மார்க்கம், உமது வழிபாடு வேறு.) அவர்களுடைய காரியமெல்லாம் அல்லாஹ்வின் பக்கம்தான் இருக்கிறது. பிறகு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
Enam 6:160
எவர் ஒரு நன்மையைச் செய்தாரோ அவருக்கு அது போன்ற பத்து நன்மைகள் உண்டு. எவர் ஒரு தீமையைச் செய்தாரோ அது போன்றே (அதன் அளவே) தவிர அவர் கூலி கொடுக்கப்படமாட்டார். இன்னும், (நன்மையைக் குறைத்தோ தீமையைக் கூட்டியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
Enam 6:161
“நிச்சயமாக நான், - என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டி இருக்கிறான். அது (இவ்வுலக, மறு உலக வாழ்க்கையின் தேவைகளை உள்ளடக்கிய) நிலையான உறுதியான மார்க்கமாகும், இப்ராஹீம் உடைய கொள்கையாகும். (அவர் இஸ்லாமிய மார்க்கத்தில், ஓர் இறையை வணங்குவதில்) மிக உறுதியுடையவர். அவர் இணைவைப்பவர்களில் (ஒரு போதும்) இருக்கவில்லை” என்று (நபியே!) கூறுவீராக.
Enam 6:162
(நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் தொழுகையும், என் பலியும் (எனது வணக்க வழிபாடுகளும்), என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியவை.”
Enam 6:163
“அவனுக்கு இணை அறவே இல்லை; இ(ந்த தூய்மையான ஏகத்துவத்)தையே நான் ஏவப்பட்டுள்ளேன். இன்னும், முஸ்லிம்களில் (-அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களில்) நான் முதலாமவன்.”
Enam 6:164
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் அல்லாதவனையா - அவனோ எல்லாவற்றின் இறைவனாக இருக்க - நான் இறைவனாக (எனக்கு)த் தேடுவேன்? (பாவம் செய்கிற) ஒவ்வோர் ஆன்மா(வும்) தனக்கெதிராகவே தவிர (பாவம்) செய்வதில்லை. பாவம் செய்யக்கூடிய ஓர் ஆன்மா மற்றொன்றின் பாவத்தை சுமக்காது. (நீங்கள் இறந்த) பிறகு, உங்கள் இறைவன் பக்கம்தான் உங்கள் மீளுமிடம் இருக்கிறது. ஆக, நீங்கள் கருத்துவேறுபாடு கொண்டிருந்தவற்றில் (உண்மையை) உங்களுக்கு அறிவிப்பான். (சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கு செல்லும்போதும் நரகவாசிகள் நரகத்தில் தள்ளப்படும்போதும் உண்மையான வழிபாடு எது பொய்யான வழிபாடு எது என்பதை நீங்கள் அறிவீர்கள்.)
Enam 6:165
அவன்தான் உங்களை பூமியில் (முன் சென்றவர்களின்) வழிதோன்றல்களாக (பிரதிநிதிகளாக) ஆக்கினான். இன்னும், உங்களுக்கு அவன் கொடுத்தவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக உங்களில் சிலரை சிலருக்கு மேல் பதவிகளில் உயர்த்தினான். நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் தீவிரமானவன். இன்னும், நிச்சயமாக அவன்தான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.