Tamilce Meal — Şeyh Ömer Şerif b. Abdüsselâm — Hud 11:1 – Nahl 16:128
Contents
- Hud 11:1
- Hud 11:2
- Hud 11:3
- Hud 11:4
- Hud 11:5
- Hud 11:6
- Hud 11:7
- Hud 11:8
- Hud 11:9
- Hud 11:10
- Hud 11:11
- Hud 11:12
- Hud 11:13
- Hud 11:14
- Hud 11:15
- Hud 11:16
- Hud 11:17
- Hud 11:18
- Hud 11:19
- Hud 11:20
- Hud 11:21
- Hud 11:22
- Hud 11:23
- Hud 11:24
- Hud 11:25
- Hud 11:26
- Hud 11:27
- Hud 11:28
- Hud 11:29
- Hud 11:30
- Hud 11:31
- Hud 11:32
- Hud 11:33
- Hud 11:34
- Hud 11:35
- Hud 11:36
- Hud 11:37
- Hud 11:38
- Hud 11:39
- Hud 11:40
- Hud 11:41
- Hud 11:42
- Hud 11:43
- Hud 11:44
- Hud 11:45
- Hud 11:46
- Hud 11:47
- Hud 11:48
- Hud 11:49
- Hud 11:50
- Hud 11:51
- Hud 11:52
- Hud 11:53
- Hud 11:54
- Hud 11:55
- Hud 11:56
- Hud 11:57
- Hud 11:58
- Hud 11:59
- Hud 11:60
- Hud 11:61
- Hud 11:62
- Hud 11:63
- Hud 11:64
- Hud 11:65
- Hud 11:66
- Hud 11:67
- Hud 11:68
- Hud 11:69
- Hud 11:70
- Hud 11:71
- Hud 11:72
- Hud 11:73
- Hud 11:74
- Hud 11:75
- Hud 11:76
- Hud 11:77
- Hud 11:78
- Hud 11:79
- Hud 11:80
- Hud 11:81
- Hud 11:82
- Hud 11:83
- Hud 11:84
- Hud 11:85
- Hud 11:86
- Hud 11:87
- Hud 11:88
- Hud 11:89
- Hud 11:90
- Hud 11:91
- Hud 11:92
- Hud 11:93
- Hud 11:94
- Hud 11:95
- Hud 11:96
- Hud 11:97
- Hud 11:98
- Hud 11:99
- Hud 11:100
- Hud 11:101
- Hud 11:102
- Hud 11:103
- Hud 11:104
- Hud 11:105
- Hud 11:106
- Hud 11:107
- Hud 11:108
- Hud 11:109
- Hud 11:110
- Hud 11:111
- Hud 11:112
- Hud 11:113
- Hud 11:114
- Hud 11:115
- Hud 11:116
- Hud 11:117
- Hud 11:118
- Hud 11:119
- Hud 11:120
- Hud 11:121
- Hud 11:122
- Hud 11:123
- Yusuf 12:1
- Yusuf 12:2
- Yusuf 12:3
- Yusuf 12:4
- Yusuf 12:5
- Yusuf 12:6
- Yusuf 12:7
- Yusuf 12:8
- Yusuf 12:9
- Yusuf 12:10
- Yusuf 12:11
- Yusuf 12:12
- Yusuf 12:13
- Yusuf 12:14
- Yusuf 12:15
- Yusuf 12:16
- Yusuf 12:17
- Yusuf 12:18
- Yusuf 12:19
- Yusuf 12:20
- Yusuf 12:21
- Yusuf 12:22
- Yusuf 12:23
- Yusuf 12:24
- Yusuf 12:25
- Yusuf 12:26
- Yusuf 12:27
- Yusuf 12:28
- Yusuf 12:29
- Yusuf 12:30
- Yusuf 12:31
- Yusuf 12:32
- Yusuf 12:33
- Yusuf 12:34
- Yusuf 12:35
- Yusuf 12:36
- Yusuf 12:37
- Yusuf 12:38
- Yusuf 12:39
- Yusuf 12:40
- Yusuf 12:41
- Yusuf 12:42
- Yusuf 12:43
- Yusuf 12:44
- Yusuf 12:45
- Yusuf 12:46
- Yusuf 12:47
- Yusuf 12:48
- Yusuf 12:49
- Yusuf 12:50
- Yusuf 12:51
- Yusuf 12:52
- Yusuf 12:53
- Yusuf 12:54
- Yusuf 12:55
- Yusuf 12:56
- Yusuf 12:57
- Yusuf 12:58
- Yusuf 12:59
- Yusuf 12:60
- Yusuf 12:61
- Yusuf 12:62
- Yusuf 12:63
- Yusuf 12:64
- Yusuf 12:65
- Yusuf 12:66
- Yusuf 12:67
- Yusuf 12:68
- Yusuf 12:69
- Yusuf 12:70
- Yusuf 12:71
- Yusuf 12:72
- Yusuf 12:73
- Yusuf 12:74
- Yusuf 12:75
- Yusuf 12:76
- Yusuf 12:77
- Yusuf 12:78
- Yusuf 12:79
- Yusuf 12:80
- Yusuf 12:81
- Yusuf 12:82
- Yusuf 12:83
- Yusuf 12:84
- Yusuf 12:85
- Yusuf 12:86
- Yusuf 12:87
- Yusuf 12:88
- Yusuf 12:89
- Yusuf 12:90
- Yusuf 12:91
- Yusuf 12:92
- Yusuf 12:93
- Yusuf 12:94
- Yusuf 12:95
- Yusuf 12:96
- Yusuf 12:97
- Yusuf 12:98
- Yusuf 12:99
- Yusuf 12:100
- Yusuf 12:101
- Yusuf 12:102
- Yusuf 12:103
- Yusuf 12:104
- Yusuf 12:105
- Yusuf 12:106
- Yusuf 12:107
- Yusuf 12:108
- Yusuf 12:109
- Yusuf 12:110
- Yusuf 12:111
- Ra'd 13:1
- Ra'd 13:2
- Ra'd 13:3
- Ra'd 13:4
- Ra'd 13:5
- Ra'd 13:6
- Ra'd 13:7
- Ra'd 13:8
- Ra'd 13:9
- Ra'd 13:10
- Ra'd 13:11
- Ra'd 13:12
- Ra'd 13:13
- Ra'd 13:14
- Ra'd 13:15
- Ra'd 13:16
- Ra'd 13:17
- Ra'd 13:18
- Ra'd 13:19
- Ra'd 13:20
- Ra'd 13:21
- Ra'd 13:22
- Ra'd 13:23
- Ra'd 13:24
- Ra'd 13:25
- Ra'd 13:26
- Ra'd 13:27
- Ra'd 13:28
- Ra'd 13:29
- Ra'd 13:30
- Ra'd 13:31
- Ra'd 13:32
- Ra'd 13:33
- Ra'd 13:34
- Ra'd 13:35
- Ra'd 13:36
- Ra'd 13:37
- Ra'd 13:38
- Ra'd 13:39
- Ra'd 13:40
- Ra'd 13:41
- Ra'd 13:42
- Ra'd 13:43
- İbrahim 14:1
- İbrahim 14:2
- İbrahim 14:3
- İbrahim 14:4
- İbrahim 14:5
- İbrahim 14:6
- İbrahim 14:7
- İbrahim 14:8
- İbrahim 14:9
- İbrahim 14:10
- İbrahim 14:11
- İbrahim 14:12
- İbrahim 14:13
- İbrahim 14:14
- İbrahim 14:15
- İbrahim 14:16
- İbrahim 14:17
- İbrahim 14:18
- İbrahim 14:19
- İbrahim 14:20
- İbrahim 14:21
- İbrahim 14:22
- İbrahim 14:23
- İbrahim 14:24
- İbrahim 14:25
- İbrahim 14:26
- İbrahim 14:27
- İbrahim 14:28
- İbrahim 14:29
- İbrahim 14:30
- İbrahim 14:31
- İbrahim 14:32
- İbrahim 14:33
- İbrahim 14:34
- İbrahim 14:35
- İbrahim 14:36
- İbrahim 14:37
- İbrahim 14:38
- İbrahim 14:39
- İbrahim 14:40
- İbrahim 14:41
- İbrahim 14:42
- İbrahim 14:43
- İbrahim 14:44
- İbrahim 14:45
- İbrahim 14:46
- İbrahim 14:47
- İbrahim 14:48
- İbrahim 14:49
- İbrahim 14:50
- İbrahim 14:51
- İbrahim 14:52
- Hicr 15:1
- Hicr 15:2
- Hicr 15:3
- Hicr 15:4
- Hicr 15:5
- Hicr 15:6
- Hicr 15:7
- Hicr 15:8
- Hicr 15:9
- Hicr 15:10
- Hicr 15:11
- Hicr 15:12
- Hicr 15:13
- Hicr 15:14
- Hicr 15:15
- Hicr 15:16
- Hicr 15:17
- Hicr 15:18
- Hicr 15:19
- Hicr 15:20
- Hicr 15:21
- Hicr 15:22
- Hicr 15:23
- Hicr 15:24
- Hicr 15:25
- Hicr 15:26
- Hicr 15:27
- Hicr 15:28
- Hicr 15:29
- Hicr 15:30
- Hicr 15:31
- Hicr 15:32
- Hicr 15:33
- Hicr 15:34
- Hicr 15:35
- Hicr 15:36
- Hicr 15:37
- Hicr 15:38
- Hicr 15:39
- Hicr 15:40
- Hicr 15:41
- Hicr 15:42
- Hicr 15:43
- Hicr 15:44
- Hicr 15:45
- Hicr 15:46
- Hicr 15:47
- Hicr 15:48
- Hicr 15:49
- Hicr 15:50
- Hicr 15:51
- Hicr 15:52
- Hicr 15:53
- Hicr 15:54
- Hicr 15:55
- Hicr 15:56
- Hicr 15:57
- Hicr 15:58
- Hicr 15:59
- Hicr 15:60
- Hicr 15:61
- Hicr 15:62
- Hicr 15:63
- Hicr 15:64
- Hicr 15:65
- Hicr 15:66
- Hicr 15:67
- Hicr 15:68
- Hicr 15:69
- Hicr 15:70
- Hicr 15:71
- Hicr 15:72
- Hicr 15:73
- Hicr 15:74
- Hicr 15:75
- Hicr 15:76
- Hicr 15:77
- Hicr 15:78
- Hicr 15:79
- Hicr 15:80
- Hicr 15:81
- Hicr 15:82
- Hicr 15:83
- Hicr 15:84
- Hicr 15:85
- Hicr 15:86
- Hicr 15:87
- Hicr 15:88
- Hicr 15:89
- Hicr 15:90
- Hicr 15:91
- Hicr 15:92
- Hicr 15:93
- Hicr 15:94
- Hicr 15:95
- Hicr 15:96
- Hicr 15:97
- Hicr 15:98
- Hicr 15:99
- Nahl 16:1
- Nahl 16:2
- Nahl 16:3
- Nahl 16:4
- Nahl 16:5
- Nahl 16:6
- Nahl 16:7
- Nahl 16:8
- Nahl 16:9
- Nahl 16:10
- Nahl 16:11
- Nahl 16:12
- Nahl 16:13
- Nahl 16:14
- Nahl 16:15
- Nahl 16:16
- Nahl 16:17
- Nahl 16:18
- Nahl 16:19
- Nahl 16:20
- Nahl 16:21
- Nahl 16:22
- Nahl 16:23
- Nahl 16:24
- Nahl 16:25
- Nahl 16:26
- Nahl 16:27
- Nahl 16:28
- Nahl 16:29
- Nahl 16:30
- Nahl 16:31
- Nahl 16:32
- Nahl 16:33
- Nahl 16:34
- Nahl 16:35
- Nahl 16:36
- Nahl 16:37
- Nahl 16:38
- Nahl 16:39
- Nahl 16:40
- Nahl 16:41
- Nahl 16:42
- Nahl 16:43
- Nahl 16:44
- Nahl 16:45
- Nahl 16:46
- Nahl 16:47
- Nahl 16:48
- Nahl 16:49
- Nahl 16:50
- Nahl 16:51
- Nahl 16:52
- Nahl 16:53
- Nahl 16:54
- Nahl 16:55
- Nahl 16:56
- Nahl 16:57
- Nahl 16:58
- Nahl 16:59
- Nahl 16:60
- Nahl 16:61
- Nahl 16:62
- Nahl 16:63
- Nahl 16:64
- Nahl 16:65
- Nahl 16:66
- Nahl 16:67
- Nahl 16:68
- Nahl 16:69
- Nahl 16:70
- Nahl 16:71
- Nahl 16:72
- Nahl 16:73
- Nahl 16:74
- Nahl 16:75
- Nahl 16:76
- Nahl 16:77
- Nahl 16:78
- Nahl 16:79
- Nahl 16:80
- Nahl 16:81
- Nahl 16:82
- Nahl 16:83
- Nahl 16:84
- Nahl 16:85
- Nahl 16:86
- Nahl 16:87
- Nahl 16:88
- Nahl 16:89
- Nahl 16:90
- Nahl 16:91
- Nahl 16:92
- Nahl 16:93
- Nahl 16:94
- Nahl 16:95
- Nahl 16:96
- Nahl 16:97
- Nahl 16:98
- Nahl 16:99
- Nahl 16:100
- Nahl 16:101
- Nahl 16:102
- Nahl 16:103
- Nahl 16:104
- Nahl 16:105
- Nahl 16:106
- Nahl 16:107
- Nahl 16:108
- Nahl 16:109
- Nahl 16:110
- Nahl 16:111
- Nahl 16:112
- Nahl 16:113
- Nahl 16:114
- Nahl 16:115
- Nahl 16:116
- Nahl 16:117
- Nahl 16:118
- Nahl 16:119
- Nahl 16:120
- Nahl 16:121
- Nahl 16:122
- Nahl 16:123
- Nahl 16:124
- Nahl 16:125
- Nahl 16:126
- Nahl 16:127
- Nahl 16:128
Hud 11:1
அலிஃப் லாம் றா. (இது) ஒரு வேத நூல். மகா ஞானவான், ஆழ்ந்தறிந்தவனிடமிருந்து இதன் வசனங்கள் ஞானத்துடன் உறுதி செய்யப்பட்டன. பிறகு, அவை (நபியவர்களுக்கு ஒவ்வொரு சட்டமாக) தெளிவுபடுத்தப்பட்(டு விவரிக்கப்பட்)டன.
Hud 11:2
“நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள்! நிச்சயமாக நான் உங்களுக்கு அவனிடமிருந்து (அனுப்பப்பட்ட) எச்சரிப்பாளரும் நற்செய்தியாளரும் ஆவேன்.”
Hud 11:3
“இன்னும், நிச்சயமாக உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். பிறகு, முற்றிலும் திருந்தி (நன்மைகளை செய்து) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால் நீங்கள் உலகத்தில் வாழ்கின்ற) குறிப்பிடப்பட்ட காலம் வரை உங்களுக்கு அழகிய சுகமான வாழ்க்கையை வழங்குவான். இன்னும், மேல் மிச்சமான செல்வமுடையவ(ர் தனது செல்வத்தை தர்மம் செய்யும்போது அவ)ருக்கு (மேலும்) அவருடைய செல்வத்தை (அதிகப்படுத்தி) கொடுப்பான். இன்னும், நீங்கள் புறக்கணித்தால் மாபெரும் (மறுமை) நாளின் தண்டனையை நிச்சயமாக நான் உங்கள் மீது பயப்படுகிறேன்.”
Hud 11:4
“அல்லாஹ்வின் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. இன்னும், அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன்.”
Hud 11:5
(நபியே!) அறிவீராக! “நிச்சயமாக இவர்கள் அவனிடமிருந்து மறைப்பதற்காக தங்கள் நெஞ்சங்களை திருப்புகிறார்கள். (நபியே!) அறிவீராக! அவர்கள் தங்கள் ஆடைகளால் (தங்களை) மறைத்துக்கொள்ளும் நேரத்தில் அவர்கள் மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் அவன் நன்கறிகிறான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிபவன் ஆவான்.”
Hud 11:6
எந்த ஓர் உயிரினமும் பூமியில் இல்லை அதற்கு உணவளிப்பது அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருந்தே தவிர. (உலகத்தில்) அவை தங்குமிடத்தையும், (அவை இறந்த பிறகு) அவை அடக்கம் செய்யப்படும் இடத்தையும் அவன் நன்கறிவான். எல்லாம் தெளிவான பதிவேட்டில் (முன்பே பதிவுசெய்யப்பட்டு) உள்ளன.
Hud 11:7
அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். இன்னும், அவனுடைய ‘அர்ஷ்’ நீரின் மீதிருந்தது. உங்களில் யார் செயலால் மிக அழகியவர் என்று அவன் உங்களை சோதிப்பதற்காக (உங்களைப் படைத்தான்). (நபியே) இன்னும், “இறப்பிற்கு பின்னர் நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், “இது தெளிவான சூனியமே தவிர (எதுவும் உண்மை) இல்லை” என்று நிராகரிப்பவர்கள் நிச்சயம் கூறுவார்கள்.
Hud 11:8
இன்னும், அவர்களை விட்டும் தண்டனையை எண்ணப்பட்ட ஒரு காலம் வரை நாம் பிற்படுத்தினால், “அதை எது தடுக்கிறது?” என நிச்சயம் அவர்கள் கூறுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவர்களிடம் அ(ந்த தண்டனையான)து வரும் நாளில், (அது) அவர்களை விட்டும் அறவே திருப்பப்படாது. இன்னும் அவர்கள் எதை கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களை சூழ்ந்துவிடும்.
Hud 11:9
இன்னும், நம்மிடமிருந்து ஓர் அருளை மனிதன் சுவைக்கும்படி செய்து, பிறகு, அதை அவனிடமிருந்து நீக்கினால், நிச்சயமாக அவன் நிராசையாளனாக நன்றி கெட்டவனாக ஆகிவிடுகிறான்.
Hud 11:10
இன்னும், அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு பின்னர் இன்பத்தை அவன் சுவைக்கும்படி நாம் செய்தால், “என்னை விட்டு தீமைகள் சென்று விட்டன” என்று நிச்சயமாக கூறுவான். நிச்சயமாக அவன் செருக்குடன் மகிழ்பவனாக தற்பெருமை பேசுபவனாக இருக்கிறான்.
Hud 11:11
எவர்கள் பொறுமை(யுடன் மார்க்கத்தில் உறுதி)யாக இருந்து, நன்மைகளைச் செய்தார்களோ அவர்களைத் தவிர. அவர்களுக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.
Hud 11:12
ஆக, “அவருக்கு ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு வானவர் வரவேண்டாமா?” என்று அவர்கள் (உம்மைப் பற்றி) கூறுவதால் உமக்கு வஹ்யி அறிவிக்கப்படுபவற்றில் சிலவற்றை நீர் விடக் கூடியவராக ஆகலாம்; இன்னும், அதன் மூலம் உம் நெஞ்சம் நெருக்கடியுற்றதாக ஆகலாம். (நபியே!) நீரெல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். அல்லாஹ்தான் எல்லாப் பொருள்கள் மீதும் பொறுப்பாளன் (கண்காணிப்பாளன்) ஆவான்! (ஆகவே, அவன் தான் நாடியபடி தனது படைப்புகளின் காரியங்களை நிர்வகிக்கிறான்.)
Hud 11:13
அல்லது, அவர் இதை இட்டுக்கட்டினார் என அவர்கள் கூறுகிறார்களா? (நபியே!) கூறுவீராக! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (உங்களால்) இட்டுக்கட்டப்பட்ட இது போன்ற பத்து அத்தியாயங்களை நீங்கள் கொண்டு வாருங்கள். இன்னும், அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு யாரை (எல்லாம் அழைக்க) இயலுமோ அவர்களை (எல்லாம் உதவிக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்.
Hud 11:14
ஆக, “(இணைவைப்பாளர்களே! நீங்கள் அழைத்த) அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கவில்லையெனில், (இன்னும், நீங்களும் அவர்களும் இந்த வேதத்தை போன்றதை உருவாக்க முடியவில்லை எனில்) இ(ந்த வேதமான)து இறக்கப்பட்டதெல்லாம் அல்லாஹ்வின் அறிவைக் கொண்டுதான் என்பதையும், அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். ஆக, நீங்கள் (அல்லாஹ்விற்கு மட்டும் பணிந்த) முஸ்லிம்களா(க ஆகிவிடுகிறீர்களா)? (என்று நபியே அவர்களிடம் கூறுவீராக!)
Hud 11:15
எவர்கள் (தங்களது நற்செயல்களுக்கு கூலியாக மறுமையை நாடாமல்) உலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் விரும்பக்கூடியவர்களாக இருந்தார்களோ அதில் அவர்களின் நற்செயல்களுக்கு முழுமையாக கூலி தந்து விடுவோம். இன்னும், அதில் அவர்கள் குறைக்கப்பட மாட்டார்கள்.
Hud 11:16
அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்களுக்கு (நரக) நெருப்பைத் தவிர மறுமையில் (வேறொன்றும்) இல்லை. இன்னும், அவர்கள் இ(வ்வுலகத்)தில் செய்தவை அழிந்து விடும். இன்னும், அவர்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்தவை (அனைத்தும்) வீணானவையே.
Hud 11:17
ஆக, எவர்கள் தங்கள் இறைவனிடமிருந்து வந்த தெளிவான அத்தாட்சியின் மீது இருக்கிறார்களோ; இன்னும், - அ(ந்த இறை)வன் புறத்திலிருந்து ஒரு சாட்சியாளரும் அதை ஓதிக் கொண்டிருக்கிறாரோ: இன்னும், அதற்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கிறதோ - அவர்கள்தான் இ(ந்த வேதத்)தை நம்பிக்கைக் கொள்வார்கள். இன்னும், (ஏனைய) கூட்டங்களிலிருந்து எவர் இதை நிராகரிப்பாரோ நரகம் அவருடைய வாக்களிக்கப்பட்ட இடமாக இருக்கும். ஆகவே, (நபியே! நீர்) இதில் சந்தேகத்தில் இருக்காதீர். நிச்சயமாக இது உம் இறைவனிடமிருந்து வந்த உண்மைதான்! எனினும், மக்களில் அதிகமானோர் (இதை) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Hud 11:18
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்களை விட மகா அநியாயக்காரர்கள் யார்? அவர்கள் தங்கள் இறைவன் முன் சமர்ப்பிக்கப்படுவார்கள். (அப்போது) “இவர்கள் தங்கள் இறைவன் மீது பொய்யுரைத்தவர்கள்” என்று சாட்சியாளர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் சாபம் அநியாயக்காரர்கள் மீது இறங்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Hud 11:19
அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுக்கிறார்கள். இன்னும், அதில் கோணலைத் தேடுகிறார்கள். இன்னும், அவர்கள் மறுமையை நிராகரிப்பவர்கள் ஆவார்கள்.
Hud 11:20
அவர்கள் பூமியில் (அல்லாஹ்வை) பலவீனப்படுத்துபவர்களாக இருக்கவில்லை. இன்னும், அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு தண்டனை பன்மடங்காக்கப்படும். (இவ்வுலகில்) அவர்கள் (உண்மையை) செவியேற்க சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. இன்னும், அவர்கள் (படிப்பினை பெறுகின்ற பார்வையால் இறை அத்தாட்சியைப்) பார்ப்பவர்களாகவும் இருக்கவில்லை.
Hud 11:21
அவர்கள் தங்களுக்குத் தாமே நஷ்டம் விளைவித்தவர்கள். இன்னும், அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை (-அவர்கள் வணங்கிய சிலைகள் இறுதியாக) அவர்களை விட்டு மறைந்துவிடும்.
Hud 11:22
சந்தேகமின்றி நிச்சயமாக அவர்கள்தான் மறுமையில் மகா நஷ்டவாளிகள்.
Hud 11:23
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைகொண்டு, நற்செயல்களைச் செய்து, தங்கள் இறைவனின் பக்கம் மிக்க பயத்துடனும் பணிவுடனும் திரும்பினார்களோ அவர்கள்தான் சொர்க்கவாசிகள், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
Hud 11:24
(இந்த) இரு பிரிவினரின் உதாரணம் குருடன், செவிடன்; இன்னும், பார்ப்பவன், செவியுறுபவனைப் போன்றாகும். இரு பிரிவினர்களும் சமமாவார்களா? நீங்கள் (இந்த வேதத்தை சிந்தித்து) நல்லுபதேசம் பெற மாட்டீர்களா?
Hud 11:25
திட்டவட்டமாக, நாம் நூஹை அவருடைய மக்களிடம் அனுப்பினோம். (அவர் கூறியதாவது:) “நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.”
Hud 11:26
“நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (எதையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் துன்புறுத்தக்கூடிய நாளின் தண்டனையை உங்கள் மீது பயப்படுகிறேன்.”
Hud 11:27
ஆக, அவருடைய சமுதாயத்தில் நிராகரித்த பிரமுகர்கள் கூறினார்கள்: “எங்களைப் போன்ற ஒரு மனிதனாகவே தவிர, உம்மை நாம் (தூதராக) கருதவில்லை. இன்னும், (எங்கள்) வெளிப்படையான அறிவின்படி எங்களில் மிக இழிவானவர்களாக இருப்பவர்களே தவிர (உயர்ந்தவர்கள் எவரும்) உம்மைப் பின்பற்றுவதை நாம் பார்க்கவில்லை. இன்னும், எங்களை விட உங்களுக்கு எவ்வித மேன்மையும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக, நாங்கள் உங்களை பொய்யர்களாக கருதுகிறோம்.”
Hud 11:28
(நூஹ்) கூறினார்: “என் மக்களே! நீங்கள் (எனக்கு) அறிவியுங்கள், என் இறைவனிடமிருந்து (கொடுக்கப்பட்ட) ஒரு தெளிவான அத்தாட்சியின் மீது நான் இருக்கிறேன். இன்னும், அவன் தன்னிடமிருந்து அருளை எனக்கு அளித்திருக்கிறான். ஆக, இவை (எல்லாம்) உங்களுக்கு மறைக்கப்பட்டுவிட்டால், நீங்களும் அவற்றை வெறுப்பவர்களாக இருக்கும் நிலையில் அவற்றை (நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி) உங்களை நாம் நிர்ப்பந்திப்போமா?”
Hud 11:29
இன்னும், “என் மக்களே! இதற்காக நான் உங்களிடம் எந்த செல்வத்தையும் (கூலியாகக்) கேட்கவில்லை. என் கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (உங்கள் மீது) இல்லை. இன்னும், நம்பிக்கை கொண்டவர்களை (என் சபையை விட்டும்) நான் விரட்டுபவனாக இல்லை. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை (கண்ணியத்துடன்) சந்திப்பார்கள். என்றாலும், நீங்கள் அறியாத மக்களாக இருக்கிறீர்கள் என்றே நிச்சயமாக நான் உங்களை காண்கிறேன்.”
Hud 11:30
“இன்னும், என் மக்களே! நான் அவர்களை விரட்டினால் (அல்லாஹ் என்னைத் தண்டிக்க மாட்டானா? அதுசமயம்) அல்லாஹ்விடத்தில் எனக்கு யார் உதவுவார்? ஆக, நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?”
Hud 11:31
இன்னும், “என்னிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் உள்ளன என்றும் நான் உங்களுக்கு கூறமாட்டேன். இன்னும், நான் மறைவானவற்றை அறியமாட்டேன். இன்னும், நிச்சயமாக நான் ஒரு வானவன் என்றும் கூறமாட்டேன். இன்னும், உங்கள் கண்கள் இழிவாக மதிக்கின்ற (முஃமினா)வர்களை நோக்கி, அல்லாஹ் அவர்களுக்கு ஒரு நன்மையையும் கொடுக்கவே மாட்டான் என்றும் நான் கூற மாட்டேன். அல்லாஹ், அவர்களின் உள்ளங்களில் உள்ளதை மிக அறிந்தவன். (இதற்கு மாறாக நான் கூறினால்) அப்போது நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவேன்.”
Hud 11:32
(நிராகரிப்பாளர்கள்) கூறினார்கள்: “நூஹே! திட்டமாக நீர் எங்களுடன் தர்க்கித்து விட்டீர்; எங்களுடன் தர்க்கத்தை அதிகப்படுத்தியும் விட்டீர். ஆகவே, நீர் உண்மையாளர்களில் இருந்தால், நீர் எங்களுக்கு வாக்களிப்பதை எங்களிடம் கொண்டு வருவீராக!”
Hud 11:33
(அதற்கு நூஹ்) கூறினார்: “அதைக் கொண்டு வருவதெல்லாம் அல்லாஹ்தான். அவன் நாடினால் (அதைக் கொண்டு வருவான்). நீங்கள் (அவனைப்) பலவீனப்படுத்துபவர்களாக (அவனை விட்டும் தப்பிப்பவர்களாக) இல்லை.”
Hud 11:34
“இன்னும், நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்ய நாடினாலும், உங்களை வழிகெடுக்க அல்லாஹ் நாடி இருந்தால் என் நல்லுபதேசம் உங்களுக்கு பலனளிக்காது. அவன்தான் உங்கள் இறைவன்; இன்னும், அவனிடமே நீங்கள் திரும்ப கொண்டு வரப்படுவீர்கள்.”
Hud 11:35
அல்லது, (நபியே! உம்மைப் பற்றி) “அவர் இ(ந்த வேதத்)தை தானாக இட்டுக்கட்டினார்” என்று கூறுகிறார்களா?” (அவ்வாறாயின்) கூறுவீராக! “நான் அதை இட்டுக்கட்டி இருந்தால் என் குற்றம் என்னையே சாரும். (உங்களை அல்ல.) இன்னும், நீங்கள் புரியும் குற்றங்களை விட்டும் நான் விலகியவன்.”
Hud 11:36
இன்னும், நூஹ்வுக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது: “நிச்சயமாக (முன்னர்) நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர, (இனி) உமது மக்களில் (ஒருவரும்) அறவே நம்பிக்கை கொள்ளமாட்டார். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக நீர் துயரப்படாதீர்.”
Hud 11:37
“இன்னும், நம் கண்கள் முன்பாகவும் நமது அறிவிப்பின்படியும் கப்பலை செய்வீராக! இன்னும், அநியாயம் செய்தவர்கள் விஷயத்தில் என்னிடம் (பரிந்து) பேசாதீர்! நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுபவர்கள்.”
Hud 11:38
அவர் கப்பலைச் செய்கிறார். அவருக்கு அருகில் அவருடைய மக்களிலிருந்து பிரமுகர்கள் கடந்து சென்றபோதெல்லாம் அவர்கள் அவரை கேலி செய்தனர். (அதற்கு) அவர் கூறினார்: “நீங்கள் (இப்போது) எங்களை கேலி செய்தால், நீங்கள் கேலி செய்வது போன்று (சீக்கிரத்தில்) நிச்சயமாக நாங்கள் உங்களை கேலி செய்வோம்.”
Hud 11:39
“ஆக, இழிவுபடுத்தும் தண்டனை எவருக்கு வருமோ அவரையும் இன்னும் எவர் மீது நிலையான தண்டனை இறங்குமோ அவரையும் (விரைவில்) நீங்கள் அறிவீர்கள்.”
Hud 11:40
இறுதியாக, நம் கட்டளை வந்தபோது, இன்னும், அடுப்பும் பொங்கியபோது, நாம் கூறினோம்: “எல்லாவற்றிலிருந்தும் (ஆண், பெண் என) இரண்டு ஜோடிகளையும் எவர் மீது (அவரை அழிப்போம் என்ற) வாக்கு முந்திவிட்டதோ அவரைத் தவிர (மற்ற) உமது குடும்பத்தையும் நம்பிக்கை கொண்டவரையும் அதில் ஏற்றுவீராக!” ஆனால், (வெகு) குறைவானவர்களைத் தவிர (அதிகமானவர்கள்) அவருடன் நம்பிக்கைகொள்ளவில்லை.
Hud 11:41
இன்னும், (நூஹ்) கூறினார்: “இதில் பயணியுங்கள். அது ஓடும்போதும், அது நிறுத்தப்படும்போதும் அல்லாஹ்வின் பெயரால் (அது ஓடுகிறது; இன்னும், நிற்கிறது). நிச்சயமாக என் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.”
Hud 11:42
அது, மலைகளைப் போன்று அலை(களுக்கு மத்தி)யில் அவர்களை (சுமந்து)க் கொண்டு சென்றது. இன்னும், (அவரை விட்டு) விலகி ஓர் இடத்திலிருந்த அவரது மகனை கூவி அழைத்தார்: “என் மகனே! எங்களுடன் (இதில்) பயணித்துவிடு! நிராகரிப்பாளர்களுடன் ஆகிவிடாதே!”
Hud 11:43
(அதற்கவன்) கூறினான்: “(வெள்ள) நீரிலிருந்து என்னைக் காக்கும் ஒரு மலையின் மேல் ஒதுங்குவேன்.” அவர் கூறினார்: “இன்று, அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து பாதுகாப்பவர் அறவே இல்லை, அவன் கருணை காட்டியவரைத் தவிர (யாரும் தப்ப முடியாது)!” ஆனால், (அது சமயம்) அவ்விருவருக்கும் இடையில் அலை குறுக்கிட்டது. ஆக, அவன் (அந்த வெள்ளத்தில்) மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஆகி விட்டான்.
Hud 11:44
இன்னும், கூறப்பட்டது: “பூமியே! உன் தண்ணீரை விழுங்கு; இன்னும், வானமே! (பொழிவதை) நிறுத்து.” தண்ணீர் வற்றியது. இன்னும், (அவர்களின்) காரிய(மு)ம் முடிக்கப்பட்டது. (அந்த கப்பல்) ‘ஜூதி’ மலையில் தங்கியது. இன்னும், “அநியாயக்கார மக்களுக்கு அழிவுதான்” என்று கூறப்பட்டது.
Hud 11:45
இன்னும், நூஹ் தன் இறைவனை அழைத்தார். ஆக, அவர் கூறினார்: என் இறைவா! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்திலுள்ளவன். இன்னும், நிச்சயமாக உன் வாக்கு உண்மையானதே, இன்னும், நீயே தீர்ப்பளிப்பவர்களில் மகா நீதமான தீர்ப்பாளன்.”
Hud 11:46
(அல்லாஹ்) கூறினான்: “நூஹே! அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் இல்லை. நிச்சயமாக இ(வ்வாறு கேட்ப)து நல்ல செயல் அல்ல. உமக்கு ஞானமில்லாததை என்னிடம் கேட்காதீர். அறியாதவர்களில் நீர் ஆகுவதிலிருந்து (விலகி இருக்க வேண்டுமென) நிச்சயமாக நான் உமக்கு உபதேசிக்கிறேன்.”
Hud 11:47
(உடனே நூஹ்) கூறினார்: “என் இறைவா! எனக்கு ஞானமில்லாததை உன்னிடம் நான் கேட்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் கோருகிறேன். நீ என்னை மன்னிக்கவில்லையெனில், இன்னும், எனக்கு நீ கருணை காட்டவில்லையெனில் நான் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவேன்.”
Hud 11:48
(அல்லாஹ்வின் புறத்திலிருந்து) கூறப்பட்டது: “நூஹே! உம்மீதும் உம்முடன் இருக்கின்ற உயிரினங்கள் மீதும் நம் புறத்திலிருந்து ஸலாம் – ஈடேற்றத்துடன், இன்னும், அபிவிருத்திகளுடன் நீர் இறங்குவீராக! இன்னும் (சில) சமுதாயங்கள் வருவார்கள். அவர்களுக்கு (சற்று) சுகமான வாழ்வளிப்போம். பிறகு, அவர்களை நம்மிடமிருந்து துன்புறுத்தக்கூடிய தண்டனை வந்தடையும்.”
Hud 11:49
(நபியே!) இவை (உமக்கு) மறைவான சரித்திரங்களில் உள்ளவையாகும். இவற்றை உமக்கு வஹ்யி அறிவிக்கிறோம். இதற்கு முன்னர் நீரோ அல்லது உமது மக்களோ இவற்றை அறிந்திருக்கவில்லை. ஆகவே, பொறுமையாக (உறுதியுடன்) இருப்பீராக! நிச்சயமாக (நல்ல) முடிவு அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கே.
Hud 11:50
‘ஆது’ சமுதாயத்திடம் அவர்களுடைய சகோதரர் -ஹூதை- (தூதராக அனுப்பினோம்). அவர் கூறினார்: “என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. நீங்கள் (உங்கள் கற்பனைக்கு ஏற்ப இறைவனைப் பற்றி பொய்யை) இட்டுக்கட்டுபவர்களாகவே தவிர இல்லை..
Hud 11:51
என் மக்களே! (எனது) இ(ந்)த (அழைப்பி)ற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி என்னை படைத்தவனின் மீதே தவிர (உங்கள் மீது) இல்லை. சிந்தித்துப் புரியமாட்டீர்களா?
Hud 11:52
‘‘என் மக்களே! உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள்! பிறகு, (எல்லா பாவங்களை விட்டும்) திருந்தி (நன்மைகளை செய்து) அவன் பக்கம் திரும்புங்கள்! மழையை உங்களுக்கு தாரை தாரையாக அனுப்புவான். இன்னும், உங்கள் பலத்துடன் (மேலும்) பலத்தை உங்களுக்கு அதிகப்படுத்துவான். இன்னும், (உபதேசங்களை புறக்கணித்த) குற்றவாளிகளாக விலகி சென்று விடாதீர்கள்.”
Hud 11:53
(மேலும் அந்த மக்கள்) கூறினார்கள்: “ஹூதே! எந்த ஓர் அத்தாட்சியையும் நம்மிடம் நீர் கொண்டு வரவில்லை. இன்னும், உம் சொல்லுக்காக நாங்கள் (வணங்குகின்ற) எங்கள் தெய்வங்களை விட்டுவிடுபவர்களாக இல்லை. இன்னும், நாங்கள் உம்மை நம்பிக்கை கொண்டவர்களாகவும் இல்லை”
Hud 11:54
‘‘எங்கள் தெய்வங்களில் சில உமக்கு ஒரு தீமையை செய்துவிட்டன என்றே தவிர நாம் கூறமாட்டோம்” (என்றும் அவர்கள் கூறினார்கள். அதற்கு ஹூது) கூறினார்: “நீங்கள் (அவனை அன்றி கற்பனையாக) இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து நிச்சயமாக நான் விலகியவன் என்பதற்கு நிச்சயமாக நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன்; இன்னும், நீங்களும் (அதற்கு) சாட்சியாக இருங்கள்!
Hud 11:55
அவனை அன்றி (நீங்கள் வணங்கும் அனைத்தையும் விட்டு நான் விலகியவன் ஆவேன்). ஆகவே, அனைவரும் எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். பிறகு, எனக்கு (அதில்) அவகாசம் அளிக்காதீர்கள்.’’
Hud 11:56
“நிச்சயமாக, நான் என் இறைவனும் உங்கள் இறைவனுமான அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து (அவனை சார்ந்து) விட்டேன். உயிரினம் எதுவும் இல்லை, அவன் அதன் நெற்றி முடியை பிடித்தே தவிர. நிச்சயமாக என் இறைவன் (நீதியும் நேர்மையும் மிக்க) நேரான வழியில் இருக்கிறான்.”
Hud 11:57
ஆக, நீங்கள் விலகினால் (எனக்கொன்றும் நஷ்டமில்லை.) நான் உங்களிடம் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை உங்களுக்கு திட்டமாக எடுத்துரைத்து விட்டேன். இன்னும், (உங்களை அழித்து) நீங்கள் அல்லாத வேறு மக்களை என் இறைவன் தோன்றச் செய்வான்; நீங்கள் அவனுக்கு எதையும் தீங்கிழைக்க முடியாது. நிச்சயமாக என் இறைவன் எல்லாவற்றையும் கண்கானிப்பவன் ஆவான்.”
Hud 11:58
(அவர்களை தண்டிப்பதற்கான) நம் உத்தரவு வந்தபோது ஹூதையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் புறத்திலிருந்து (அவர்களை அடைந்த) அருளினால் பாதுகாத்தோம். இன்னும், கடுமையான தண்டனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்தோம்.
Hud 11:59
இவர்கள்தான் ஆது சமுதாய மக்கள் ஆவர். இவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை மறுத்தார்கள். இன்னும், அவனுடைய தூதர்களுக்கு மாறு செய்தார்கள். இன்னும், பெருமை பிடித்த பிடிவாதக்காரர்கள், கீழ்ப்படியாத முரடர்கள் (ஆகிய தீயோர்) எல்லோருடைய (தீய) கட்டளையை பின்பற்றினார்கள்.
Hud 11:60
இவ்வுலகிலும் (அல்லாஹ்வின்) சாபம் அவர்களை பின்தொடர்ந்தது. இன்னும், மறுமையிலும் (அல்லாஹ்வின்) சாபம் அவர்களை பின்தொடரும். அறிந்து கொள்ளுங்கள்! “நிச்சயமாக ஆது சமுதாயம் தங்கள் இறைவனை நிராகரித்தனர். அறிந்து கொள்ளுங்கள்! “ஹூதுடைய சமுதாயமாகிய ஆதுக்கு அழிவுதான்.”
Hud 11:61
இன்னும், ‘ஸமூது’ (மக்கள்) இடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை (தூதராக அனுப்பினோம்). அவர் கூறினார்: “என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. அவன்தான் உங்களை பூமியிலிருந்து உருவாக்கினான். இன்னும், அதில் அவன் உங்களை வசிக்க வைத்தான். ஆகவே, நீங்கள் அவனிடம் மன்னிப்புக் கோருங்கள்; பிறகு, (பாவத்திலிருந்து) திருந்தி (நன்மைகளை செய்து) அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் மிகச் சமீபமானவன், பதிலளிப்பவன்.”
Hud 11:62
அவர்கள் கூறினார்கள்: “ஸாலிஹே! நீர் எங்களில் உயர்ந்த தலைவராக இருந்தீர். எங்கள் மூதாதைகள் வணங்கியதை நாங்கள் வணங்குவதை விட்டும் நீர் எங்களைத் தடுக்கிறீரா? இன்னும், நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அது பற்றி நிச்சயமாக நாங்கள் மிக ஆழமான சந்தேகத்தில் இருக்கிறோம்.
Hud 11:63
(அதற்கு ஸாலிஹ்) கூறினார்: “என் மக்களே! அறிவியுங்கள்: நான் என் இறைவனிடமிருந்து (நபித்துவத்தின்) தெளிவான அத்தாட்சியில் இருந்தால், இன்னும், அவன் தன்னிடமிருந்து (நபித்துவம் என்ற) அருளை எனக்கு தந்திருந்தால், (இந்த நிலையில் அவனது தூதுத்துவத்தை உங்களுக்கு எடுத்துரைக்காமல்) நான் அவனுக்கு மாறு செய்தால் அல்லாஹ்விடத்தில் எனக்கு யார் உதவுவார்? ஆக, (நான் உங்களுக்கு மாறு செய்வதால் என்னை) நஷ்டவாளி என்று (நீங்கள்) சொல்வதை தவிர (எதையும்) எனக்கு நீங்கள் அதிப்படுத்த மாட்டீர்கள்.”
Hud 11:64
இன்னும், “என் மக்களே! இது உங்களுக்கு அல்லாஹ்வின் அத்தாட்சியான பெண் ஒட்டகமாகும். ஆகவே, அதை விட்டுவிடுங்கள், அது அல்லாஹ்வின் பூமியில் சாப்பிடட்டும்; இன்னும், அதற்கு எவ்வித கெடுதியும் செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) அதிசீக்கிரமான தண்டனை உங்களை பிடித்துக் கொள்ளும்.”
Hud 11:65
ஆக, அவர்கள் அ(ந்த ஒட்டகத்)தை வெட்டினார்கள். ஆகவே, (ஸாலிஹ்) கூறினார்: “மூன்று நாட்கள் உங்கள் ஊரில் சுகமாக இருங்கள். (பிறகு, தண்டனை வரும்.) இது ஒரு பொய்ப்பிக்கப்படமுடியாத வாக்காகும்.”
Hud 11:66
ஆக, நம் கட்டளை வந்தபோது ஸாலிஹையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நமது அருளினால் பாதுகாத்தோம். இன்னும், (தண்டனை இறங்கிய) அந்நாளின் இழிவில் இருந்தும் (அவர்களைப் பாதுகாத்தோம்). நிச்சயமாக உம் இறைவன்தான் மிக்க பலமானவன், மிகைத்தவன்.
Hud 11:67
இன்னும், அநீதியிழைத்தவர்களை கடுமையான இடி முழக்கம் பிடித்தது. ஆக, அவர்கள் காலையில் தங்கள் இல்லங்களில் இறந்தவர்களாக ஆகிவிட்டனர்.
Hud 11:68
அவற்றில் அவர்கள் வசிக்காததைப் போன்று ஆகிவிட்டனர். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸமூது (மக்கள்) தங்கள் இறைவனை நிராகரித்தனர். அறிந்து கொள்ளுங்கள்! ஸமூது (மக்களு)க்கு அழிவு உண்டாகட்டும்.
Hud 11:69
இன்னும், திட்டவட்டமாக நம் (வானவ) தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியை கொண்டு வந்தனர். “(உமக்கு) ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக” என்று அவர்கள் கூறினார்கள். (அதற்கு இப்ராஹீம்,) (“உங்களுக்கும்) ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக!” என்று கூறினார். உடனே தாமதிக்காது சுடப்பட்ட ஒரு கன்றுக்குட்டி(யின் கறி)யைக் கொண்டு வந்தார்.
Hud 11:70
ஆக, அவர்களுடைய கைகள் அதன் பக்கம் செல்லாததை அவர் பார்த்தபோது அவர்களைப் பற்றி சந்தேகித்தார்; இன்னும், அவர்களைப் பற்றிய பயத்தை அவர் (மனதில்) மறைத்தார். “(இப்ராஹீமே) பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய மக்களின் பக்கம் (அம்மக்களை அழிப்பதற்காக) அனுப்பப்பட்டோம்” என்று (அந்த வானவர்கள்) கூறினார்கள்.
Hud 11:71
இன்னும், அவருடைய மனைவி (ஸாரா) நின்றுகொண்டிருந்தாள். ஆக, (வானவர்கள் கூறியதைக் கேட்ட பின்னர் லூத் நபியின் சமுதாயம் அழிக்கப்பட போவதையும், அதை அவர்கள் அறியாமல் இருப்பதையும் நினைத்து) அவள் சிரித்தாள். ஆக, அவளுக்கு (குழைந்தாயாக) இஸ்ஹாக்கையும்; இன்னும், இஸ்ஹாக்கிற்குப் பின்னால் (பேரனாக) யஅகூபையும் (வழங்குவோம் என்று) நற்செய்தி கூறினோம்.
Hud 11:72
அவள் கூறினாள்: “என் துக்கமே! நானுமோ கிழவியாகவும், என் கணவராகிய இவரோ வயோதிகராகவும் இருக்கும் நிலையில் நான் பிள்ளை பெறுவேனா! நிச்சயமாக இது வியப்பான விஷயம்தான்!”
Hud 11:73
(வானவர்கள்) கூறினார்கள்: “(இப்ராஹீமின் மனைவியே!) அல்லாஹ்வுடைய கட்டளையில் வியப்படைகிறீரா? அல்லாஹ்வின் கருணையும், அவனுடைய அருள்களும் (அபிவிருத்திகளும் இப்ராஹீமுடைய) வீட்டாரே உங்கள் மீது நிலவுக! நிச்சயமாக அவன் மகா புகழாளன், மகா கீர்த்தியாளன்.”
Hud 11:74
ஆக, இப்ராஹீமை விட்டும் (பயமும்) திடுக்க(மு)ம் சென்றபோது, இன்னும், அவருக்கு நற்செய்தி வந்தபோது, லூத்துடைய மக்கள் விஷயத்தில் நம்மிடம் அவர் தர்க்கித்தார்.
Hud 11:75
நிச்சயமாக இப்ராஹீம் பெரும் சகிப்பாளர், அதிகம் பிரார்த்திப்பவர், (எப்போதும் நம் பக்கமே) திரும்பக் கூடியவர் ஆவார்.
Hud 11:76
இப்ராஹீமே! (தர்க்கம் செய்யாது) இதை விட்டும் புறக்கணிப்பீராக! நிச்சயமாக உம் இறைவனின் கட்டளை வந்து விட்டது. இன்னும், நிச்சயமாக அவர்கள் - தடுக்கமுடியாத தண்டனை அவர்களுக்கு வரும்.
Hud 11:77
இன்னும், நம் தூதர்கள் லூத்திடம் வந்தபோது, அவர்களால் அவர் சங்கடத்திற்குள்ளானார். இன்னும், அவர்களால் அவர் மனம் சுருங்கினார். இன்னும், “இது மிகக் கடுமையான (சோதனை) நாள்” என்று கூறினார்.
Hud 11:78
அவருடைய மக்கள் அவர் பக்கம் விரைந்தவர்களாக அவரிடம் வந்தார்கள். இதற்கு முன்னரும் அவர்கள் தீய செயல்களை செய்பவர்களாகவே இருந்தனர். (அப்போது லூத்) கூறினார்: “என் மக்களே! இவர்கள் என் பெண் பிள்ளைகள். அவர்கள் உங்களுக்கு (நீங்கள் மணம் முடிக்க) மிக்க சுத்தமானவர்கள் (-ஒழுக்கமானவர்கள்). ஆகவே, (அவர்களை மணம் முடித்து, சுகமனுபவியுங்கள்!) அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், என் விருந்தினர் விஷயத்தில் என்னை அவமானப்படுத்தாதீர்கள். நல்லறிவுள்ள ஓர் ஆடவர் உங்களில் இல்லையா?”
Hud 11:79
அவர்கள் கூறினார்கள்: “உம் பெண் பிள்ளைகளிடம் எங்களுக்கு ஒரு தேவையும் இல்லை என்பதை திட்டவட்டமாக நீர் அறிந்திருக்கிறீர்; இன்னும், நாங்கள் நாடுவதையும் நிச்சயமாக நீர் நன்கு அறிவீர்.”
Hud 11:80
அவர் கூறினார்: “எனக்கு உங்களிடம் (சண்டையிட) பலம் இருக்க வேண்டுமே! அல்லது, (உங்களை எதிர்க்க) வலிமையான ஓர் ஆதரவாளரின் பக்கம் நான் ஒதுங்கவேண்டுமே!”
Hud 11:81
(வானவர்கள்) கூறினார்கள்: “லூத்தே! நிச்சயமாக நாங்கள் உம் இறைவனின் (வானவ) தூதர்கள். (ஆகவே, இவர்கள்) அறவே உம் பக்கம் வந்து சேர மாட்டார்கள். ஆகவே, உம் மனைவியைத் தவிர, (மற்ற) உம் குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வீராக. இன்னும், உங்களில் ஒருவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களை அடைகின்ற தண்டனை நிச்சயமாக அவளையும் அடையக்கூடியதே. நிச்சயமாக அவர்களின் (தண்டனை இறங்குவதற்கு) வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற் காலையாகும். விடியற்காலை சமீபமாக இல்லையா?”
Hud 11:82
ஆக, (லூத்துடைய சமுதாயத்தை அழிக்க) நம் கட்டளை வந்தபோது, அதன் மேல்புறத்தை அதன் கீழ்ப்புறமாக (தலைகீழாக) ஆக்கினோம். இன்னும், அதன் மீது (நன்கு) இறுக்கமாக்கப்பட்ட சுடப்பட்ட களிமண்ணினால் ஆன கற்களை மழையாகப் பொழிந்தோம்.
Hud 11:83
(அந்த கற்கள்) உம் இறைவனிடம் அடையாளமிடப்பட்டவையாகும். (நாம் இறக்கிய) அ(ந்த தண்டனையான)து அக்கிரமக்காரர்களிலிருந்து தூரமாக இல்லை.
Hud 11:84
இன்னும், ‘மத்யன்’ (வாசிகளு)க்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (தூதராக அனுப்பினோம்). அவர் கூறினார்: “என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. இன்னும், அளவையிலும் நிறுவையிலும் (பொருள்களை) குறைக்காதீர்கள். நிச்சயமாக நான், நல்லதொரு வசதியில் உங்களை காண்கிறேன். நிச்சயமாக நான், சூழ்ந்து விடக்கூடிய ஒரு நாளின் தண்டனையை உங்கள் மீது பயப்படுகிறேன்.”
Hud 11:85
என் மக்களே! அளவையையும் நிறுவையையும் நீதமாக (அவற்றில் பொருள்களை குறைக்காமல்) முழுமைப்படுத்துங்கள். இன்னும், மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைக்காதீர்கள். இன்னும், நீங்கள் பூமியில் விஷமிகளாக (-மக்களுக்கு கெடுதி விளைவிப்பவர்களாக) இருக்கும் நிலையில் எல்லை மீறி விஷமம் (கலகம், அடாவடித்தனம்) செய்யாதீர்கள்.
Hud 11:86
“நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (உங்கள் வர்த்தகத்தில்) அல்லாஹ் மீதப்படுத்திய (ஆகுமான லாபமான)து உங்களுக்கு (நீங்கள் மோசடியில் சேமிக்கின்ற செல்வத்தை விட) மிக மேலானதாகும். இன்னும், நான் உங்கள் மீது கண்காணிப்பாளன் அல்ல.”
Hud 11:87
அவர்கள் கூறினார்கள்: “ஷுஐபே! எங்கள் மூதாதைகள் வணங்கியவற்றை நாங்கள் விடுவதற்கும்; அல்லது, எங்கள் செல்வங்களில் நாங்கள் நாடுகின்றபடி நாங்கள் (செலவு) செய்வதை நாங்கள் விடுவதற்கும் (பிறகு, நீ கூறுகின்ற மார்க்கத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்றும்) உம் தொழுகையா உம்மைத் தூண்டுகிறது? நிச்சயமாக நீர்தான் மகா சகிப்பாளரோ, நல்லறிவாளரோ” (அப்படி எண்ணுகிறீரோ) என்று கூறினார்கள்.
Hud 11:88
அவர் கூறினார்: “என் மக்களே! என் இறைவனின் ஒரு தெளிவான அத்தாட்சியில் நான் இருந்தால், இன்னும், அவன் தன்னிடமிருந்து எனக்கு நல்ல (விசாலமான) வாழ்வாதாரத்தை வழங்கி இருந்தால் (நான் அவனுடைய தூது செய்தியிலும் எனது வர்த்தகத்திலும் மோசடி செய்து) அவனுக்கு நன்றி கெட்டத்தனமாக நடப்பது எனக்கு தகுமா? என்று அறிவியுங்கள்! இன்னும், நான் உங்களைத் தடுப்பதில் உங்களுக்கு முரண்பட்டு நடப்பதை நாடவில்லை. (நான் உங்களுக்கு எதை உபதேசிக்கிறேனோ அதன் படி நானும் நடப்பேன்.) நான், என்னால் இயன்ற வரை (உங்களை) சீர்திருத்தம் செய்வதைத் தவிர (எதையும்) நாடமாட்டேன். இன்னும், அல்லாஹ்வைக் கொண்டே தவிர நான் நன்மை செய்வதற்குரிய வாய்ப்பு (எனக்கு) இல்லை. அவன் மீதே நம்பிக்கை வைத்து (அவனையே சார்ந்து) விட்டேன்; இன்னும், அவன் பக்கமே திரும்புகிறேன்.
Hud 11:89
“என் மக்களே! (உங்களுக்கு) என் மீதுள்ள பகைமை நூஹ் உடைய மக்களை; அல்லது, ஹூத் உடைய மக்களை; அல்லது, ஸாலிஹ் உடைய மக்களை அடைந்தது போன்று (ஒரு தண்டனை) உங்களையும் வந்தடைவதற்கு உங்களை நிச்சயம் தூண்ட வேண்டாம். இன்னும், (தலைக்கீழாக புரட்டப்பட்ட) லூத்துடைய மக்களும் உங்களுக்குத் தூரமாக இல்லை.
Hud 11:90
இன்னும், உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். பிறகு, (வருந்தி, பாவங்களை விட்டு) திருந்தி (நன்மைகளை செய்து) அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் பெரும் கருணையாளன், அதிகம் அன்பு வைப்பவன்.”
Hud 11:91
அவர்கள் கூறினார்கள்: “ஷுஐபே! நீர் கூறுவதில் பலவற்றை நாம் விளங்க (முடிய)வில்லை. இன்னும், நிச்சயமாக நாம் உம்மை எங்களில் பலவீனராகக் காண்கிறோம். இன்னும், உம் குடும்பத்தார்கள் இல்லாவிடில் உம்மைக் கல் எறிந்தே கொன்றிருப்போம். இன்னும், நீர் நம்மிடம் மதிப்புடையவராகவும் இல்லை.”
Hud 11:92
அவர் கூறினார்: “என் மக்களே! அல்லாஹ்வை விட என் குடும்பதார்களா உங்களிடம் மதிப்புடையவர்கள்? நீங்கள் அவனை உங்களுக்குப் பின்னால் எறியப்பட்டவனாக எடுத்துக் கொண்டீர்கள். நிச்சயமாக என் இறைவன் நீங்கள் செய்பவற்றைச் சூழ்ந்தறிபவன் ஆவான்.”
Hud 11:93
“இன்னும், என் மக்களே! நீங்கள் உங்கள் தகுதிக்கு ஏற்ப செயல்களை செய்யுங்கள், நிச்சயமாக நான் (என் தகுதிக்கு ஏற்ப) செயல்களை செய்கிறேன். யாருக்கு, - அவரை இழிவுபடுத்தும் - தண்டனை வரும்; இன்னும், யார் பொய்யர் என்பதை (விரைவில்) அறிவீர்கள். இன்னும், எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவன் ஆவேன்.”
Hud 11:94
நம் கட்டளை வந்தபோது ஷுஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நமது அருளினால் பாதுகாத்தோம். இன்னும், அநியாயம் செய்தவர்களை (பயங்கர) சப்தம் பிடித்தது. ஆக, (அவர்கள்) காலையில் தங்கள் இல்லங்களில் இறந்தவர்களாக ஆகிவிட்டனர்.
Hud 11:95
அவற்றில் அவர்கள் வசிக்காததைப் போல் ஆகிவிட்டனர். ‘ஸமூத்’ அழிந்தது போன்று ‘மத்யன்’ (வாசிகளு)க்கும் அழிவுதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Hud 11:96
திட்டவட்டமாக நாம் மூஸாவை நம் வசனங்களுடனும் தெளிவான அத்தாட்சியுடனும் அனுப்பினோம்,
Hud 11:97
ஃபிர்அவ்ன்; இன்னும், அவனுடைய பிரமுகர்களிடம். ஆக, அவர்கள் ஃபிர்அவ்னின் கட்டளையை பின்பற்றினார்கள். ஆனால், ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நல்லறிவுடையதாக இல்லை.
Hud 11:98
அவன் மறுமை நாளில் தன் மக்களுக்கு (வழிகாட்டியாக) முன் செல்வான். பிறகு, அவர்களை நரகத்தில் சேர்த்து விடுவான். இன்னும், சேரும் இடங்களில் அது கெட்ட சேருமிடமாகும்.
Hud 11:99
இன்னும், இ(ம்மை வாழ்வாகிய இ)திலும் மறுமை நாளிலும் (அல்லாஹ்வின்) சாபம் அவர்களை பின்தொடரும். அது (அவர்களுக்கு) கொடுக்கப்பட்ட மிகக் கெட்ட சன்மானமாகும்.
Hud 11:100
இவை, (நிராகரித்த) ஊர் (வாசி)களின் சரித்திரங்களிலிருந்து உள்ளவை ஆகும். இவற்றை உமக்கு விவரித்துக் கூறுகிறோம். இவற்றில் (மக்கள் எல்லாம் அழிந்து) முகடுகள் இடிந்து சுவர்கள் மட்டும் நிற்கின்ற ஊர்களும் உள்ளன; இன்னும், முற்றிலும் வேர் அறுக்கப்பட்(டு அடியோடு அழிக்கப்பட்)ட ஊர்களும் இருக்கின்றன.
Hud 11:101
இன்னும், நாம் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே அநீதி இழைத்தனர். ஆக, உம் இறைவனின் கட்டளை வந்தபோது அல்லாஹ்வை அன்றி அவர்கள் அழைத்து வணங்குகின்ற அவர்களுடைய தெய்வங்கள் அவர்களுக்கு சிறிதும் பலனளிக்கவில்லை; இன்னும், அவை அவர்களுக்கு அழிவைத் தவிர (எதையும்) அதிகப்படுத்தவில்லை!
Hud 11:102
இன்னும், ஊர்களை, - அவையோ அநியாயம் செய்பவையாக இருக்கும் நிலையில் - உம் இறைவன் (தண்டனையால்) பிடித்தால், அவனது பிடி இது போன்றுதான் இருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடி, துன்புறுத்தக் கூடியதாகும்; மிகக் கடுமையானதாகும் .
Hud 11:103
மறுமையின் தண்டனையைப் பயந்தவருக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அது, மக்கள் அதற்காக ஒன்று சேர்க்கப்படும் நாளாகும். இன்னும், அது (மக்கள் எல்லோரும்) ஆஜாராகும் நாளாகும்.
Hud 11:104
இன்னும், எண்ணப்பட்ட ஒரு தவணைக்காகவே தவிர அதை (-அந்த மறுமை நாளை) நாம் பிற்படுத்த வில்லை.
Hud 11:105
அது வரும் நாளில், அவனுடைய அனுமதி இருந்தாலே தவிர எந்த ஓர் ஆன்மாவும் பேசமுடியாது. ஆக, அவர்களில் துர்ப்பாக்கியவானும் இருப்பார். நற்பாக்கியவானும் இருப்பார்.
Hud 11:106
ஆகவே, துர்ப்பாக்கியமடைந்தவர்கள் நரகத்தில் (எறியப்படுவார்கள்). அதில் அவர்களுக்கு பெரும் கூச்சலும் இறைச்சலும் உண்டு.
Hud 11:107
(நம்பிக்கையாளர்களில் உள்ள பாவிகள் விஷயத்தில்) உம் இறைவன் நாடியதைத் தவிர. (அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக தங்க மாட்டார்கள்.) வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை அதில் அவர்கள் (நிராகரிப்பாளர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். நிச்சயமாக உம் இறைவன், தான் நாடுவதை செய்(து முடிப்)பவன் ஆவான்.
Hud 11:108
ஆகவே, (நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்து) நற்பாக்கியம் பெற்றவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள். எனினும், (நம்பிக்கை கொண்டு, ஆனால் பாவங்களை செய்த நம்பிக்கையாளர்கள் விஷயத்தில்) உம் இறைவன் நாடியதைத் தவிர. (அத்தகையவர்கள் தண்டனை அனுபவிப்பதற்காக நரகத்தில் தள்ளப்பட்டு; பிறகு, சொர்க்கம் செல்ல அனுமதிக்கபப்டுவார்கள். பிறகு சொர்க்கம் சென்ற எல்லோரும்) வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை முடிவுறாத அருட்கொடையாக அதில் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
Hud 11:109
ஆகவே, (நபியே! அந்த சிலைகளின் பிரமாண்டத்தையும் அவற்றுக்கு செய்ப்படுகின்ற ஆடம்பர சடங்குகளையும் பார்த்து) இவர்கள் வணங்குபவற்றில் (ஏதும் உண்மை இருக்குமோ என்று) சந்தேகத்தில் ஆகிவிடாதீர். (இதற்கு) முன்னர் இவர்களுடைய மூதாதைகள் (சிலைகளில்) எதை வணங்கினார்களோ அது போன்றவைகளை தவிர இவர்கள் (புதிதாக எதையும்) வணங்கவில்லை. இவர்களுடைய (தண்டனையின்) பாகம் குறைக்கப்படாமல் நிச்சயமாக நாம் இவர்களுக்கு முழுமையாகக் கொடுப்போம்.
Hud 11:110
திட்டவட்டமாக மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். ஆக, (அவர்களுக்குள்) அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது. இன்னும், உம் இறைவனிடமிருந்து ஒரு வாக்கு முந்தியிருக்கவில்லையெனில் (இம்மையிலேயே) இவர்களுக்கிடையில் (காரியம்) முடிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அவர்கள் இ(ந்த வேதத்)தில் மிக ஆழமான சந்தேகத்தில்தான் உள்ளனர்.
Hud 11:111
நிச்சயமாக உம் இறைவன் எல்லோருக்கும் அ(வர)வர்களுடைய செயல்க(ளுக்குரிய கூலிக)ளை கண்டிப்பாக முழுமையாகக் கொடுப்பான். நிச்சயமாக அவன், அவர்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன்.
Hud 11:112
ஆக, (நபியே!) நீர் ஏவப்பட்டது போன்றே (நேரான வழியில் நிரந்தரமாக) நிலையாக, ஒழுங்காக இருப்பீராக! இன்னும், (பாவங்களை விட்டும்) திருந்தி, (நன்மைகளை செய்து) உம்முடன் சேர்ந்து அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவர்களும் (மார்க்கத்தில் நிரந்தரமாக) நிலையாக, ஒழுங்காக இருக்கவும்! இன்னும், (மார்க்கத்திலும் மக்கள் விஷயங்களிலும்) எல்லை மீறாதீர்கள். நிச்சயமாக அவன் நீங்கள் (அனைவரும்) செய்பவற்றை உற்றுநோக்குபவன் ஆவான்.
Hud 11:113
இன்னும், அநீதி இழைத்தவர்கள் பக்கம் (சிறிதும்) நீங்கள் சாய்ந்து விடாதீர்கள். அவ்வாறாயின் (நரக) நெருப்பு உங்களை பிடித்துக் கொள்ளும். (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலர்கள் (எவரும்) உங்களுக்கு இருக்க மாட்டார்கள்; பிறகு, நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
Hud 11:114
இன்னும், (நபியே!) பகலின் இரு ஓரங்களிலும் (-காலை, மாலையில்), இரவின் ஒரு பகுதியிலும் (ஆக, ஐந்து நேர) தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கி விடுகின்றன. (அல்லாஹ்வை) நினைவு கூர்பவர்களுக்கு இது ஒரு நல்லுபதேசமாகும்.
Hud 11:115
இன்னும், பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் நல்லறம் புரிபவர்களின் கூலியை வீணாக்க மாட்டான்.
Hud 11:116
ஆக, உங்களுக்கு முன்னர் இருந்த தலைமுறையினர்களில் பூமியில் விஷமத்தை தடுக்கின்ற (அறிவில்) சிறந்தோர் (அதிகம்) இருந்திருக்க வேண்டாமா? எனினும், அவர்களில் நாம் பாதுகாத்த குறைவானவர்கள்தான் (அவ்வாறு செய்தனர்). இன்னும், அநியாயக்காரர்களோ தாங்கள் எதில் ஆடம்பரமான வாழ்க்கை அளிக்கப்பட்டார்களோ அதையே பின்பற்றினார்கள். (-மறுமையை விட உலக வாழ்க்கையையே அதிகம் விரும்பினார்கள்.) இன்னும், அவர்கள் குற்றவாளிகளாகவே இருந்தனர்.
Hud 11:117
ஊர்(வாசி)களை, - அவற்றில் வசிப்போர்(களில் பலர்) சீர்திருத்துபவர்களாக இருக்கும் நிலையில் - உம் இறைவன் அநியாயமாக அழிப்பவனாக இருக்கவில்லை.
Hud 11:118
உம் இறைவன் நாடியிருந்தால் மக்களை (ஒரே மார்க்கமுடைய) ஒரே ஒரு வகுப்பினராக ஆக்கியிருப்பான். அவர்கள் (தங்களுக்குள்) கருத்து வேறுபட்டவர்களாகவே தொடர்ந்து இருப்பார்கள்.
Hud 11:119
(எனினும், அவர்களில்) உம் இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர. (அவர்கள் அல்லாஹ்வின் நேரிய ஓரே மார்க்கத்தில் நிலைத்திருப்பார்கள். ஒரே மார்க்கத்தில் நிலைத்திருந்து அல்லாஹ்வின்) அ(ருளை பெறுவ)தற்காகத்தான் அவன் அவர்களைப் படைத்தான். “ஜின்கள்; இன்னும், மனிதர்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்” என்ற உம் இறைவனின் வாக்கு நிறைவேறி விட்டது.
Hud 11:120
இன்னும், தூதர்களின் சரித்திரங்களிலிருந்து உம் உள்ளத்தை எதைக் கொண்டு நாம் உறுதிப்படுத்துவோமோ அவை எல்லாவற்றையும் உமக்கு விவரிக்கிறோம். இன்னும், இவற்றில் உமக்கு உண்மையும், நம்பிக்கையாளர்களுக்கு நல்லுபதேசமும் அறிவுரையும் வந்தன.
Hud 11:121
(நபியே!) நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு கூறுவீராக! “நீங்கள் உங்கள் போக்கில் (உங்களுக்கு விருப்பமான செயல்களை) செய்யுங்கள்; நிச்சயமாக நாங்கள் (எங்கள் போக்கில் எங்கள் இறைவன் கட்டளையிட்டதை) செய்வோம்.
Hud 11:122
இன்னும், (உங்கள் முடிவை) நீங்கள் எதிர்பாருங்கள். நிச்சயமாக நாங்கள் (எங்கள் முடிவை) எதிர்பார்க்கிறோம்.
Hud 11:123
மேலும், வானங்கள் இன்னும் பூமியின் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன! அவனிடமே எல்லாக் காரியங்களும் திருப்பப்படும். ஆகவே, அவனை வணங்குவீராக! இன்னும், அவன் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)ப்பீராக! உம் இறைவன் நீங்கள் செய்பவற்றைப் பற்றி அறியாதவனாக இல்லை.
Yusuf 12:1
அலிஃப் லாம் றா. இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
Yusuf 12:2
நிச்சயமாக நாம் இ(ந்த வேதத்)தை அரபிமொழியை சேர்ந்த குர்ஆனாக இறக்கினோம்.
Yusuf 12:3
(நபியே!) இந்த குர்ஆனை உமக்கு நாம் வஹ்யி அறிவித்ததன் வாயிலாக சரித்திரங்களில் மிக அழகானதை உமக்கு விவரிக்கப் போகிறோம். இன்னும், நிச்சயமாக இதற்கு முன்னர் (இந்த சரித்திரத்தை) அறியாதவர்களில் நீர் இருந்தீர்.
Yusuf 12:4
“என் தந்தையே! நிச்சயமாக நான் பதினொரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் கனவில் கண்டேன். அவை எனக்குச் சிரம் பணியக்கூடியவையாக இருக்கும் நிலையில் அவற்றை நான் கனவில் கண்டேன்” என்று யூஸுஃப் தன் தந்தைக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக.
Yusuf 12:5
(யூஸுஃபின் தந்தை யஅகூப்) கூறினார்: “என்னருமை மகனே! உன் கனவை உன் சகோதரர்களிடம் விவரிக்காதே. அவர்கள் உனக்கொரு சூழ்ச்சியை சூழ்ச்சி செய்வார்கள். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு மிகத் தெளிவான எதிரியாவான்.”
Yusuf 12:6
“இன்னும், இவ்வாறே உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுப்பான். இன்னும், (கனவைப் பற்றிய) பேச்சுகளின் (முடிவான) விளக்கத்திலிருந்து (அவன் நாடியதை) உனக்குக் கற்பிப்பான். உன் மீதும், யஅகூபின் (மற்ற) கிளையார் மீதும் அவன் தன் அருளை முழுமையாக்குவான், முன்னர் உன் இரு பாட்டன்களான இப்ராஹீம், இஸ்ஹாக் மீது அதை முழுமைப்படுத்தியது போன்று. நிச்சயமாக உன் இறைவன் நன்கறிந்தவன், மகா ஞானவான்.”
Yusuf 12:7
யூஸுஃப்; இன்னும், அவரது சகோதரர்களில் (அவர்களைப் பற்றி) வினவுகின்றவர்களுக்கு இறை அத்தாட்சிகள் (பல) திட்டவட்டமாக இருக்கின்றன.
Yusuf 12:8
நாம் ஒரு (பெரும்) கூட்டமாக இருக்கும் நிலையில், திட்டமாக யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கிறார்கள். (இதில்) நிச்சயமாக நம் தந்தை தெளிவான தவறில்தான் இருக்கிறார்” என்று அவர்கள் (தங்களுக்குள்) கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக.
Yusuf 12:9
“யூஸுஃபைக் கொல்லுங்கள். அல்லது, பூமியில் (எங்கேனும்) அவரை எறியுங்கள். (அதன் பின்) உங்கள் தந்தையின் முகம் உங்களுக்கு (மட்டும் என்று) தனிப்பட்டதாக ஆகிவிடும். இதன் பின்னர், நீங்கள் (திருந்தி, பாவமன்னிப்பு கோரி) நல்ல மக்களாக மாறிவிடுவீர்கள்.”
Yusuf 12:10
அவர்களில் கூறுபவர் ஒருவர் கூறினார்: “யூஸுஃபை கொல்லாதீர்கள். இன்னும், நீங்கள் (அவருக்கு கெடுதல்) செய்பவர்களாக இருந்தால் கிணற்றின் ஆழத்தில் அவரைப் போ(ட்டு வி)டுங்கள். வழிப்போக்கர்களில் சிலர் அவரை எடுத்துக் கொள்வார்கள்.”
Yusuf 12:11
அவர்கள் கூறினார்கள்: “எங்கள் தந்தையே! உமக்கு என்ன நேர்ந்தது? யூஸுஃப் விஷயத்தில் நீர் எங்களை நம்புவதில்லை? இன்னும், நிச்சயமாக நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்கள்தான்.”
Yusuf 12:12
“நாளை அவரை எங்களுடன் அனுப்புவீராக. அவர் மகிழ்ச்சியாக இருப்பார்; இன்னும், விளையாடுவார்; இன்னும், நிச்சயமாக நாங்கள் அவரை பாதுகாப்போம்.”
Yusuf 12:13
அவர் கூறினார்: “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்கு கவலையளிக்கிறது. நீங்கள் (விளையாட்டில் இருக்கும்போது) அவரை கவனிக்காதவர்களாக இருக்கும் நிலையில் ஓநாய் அவரை தின்றுவிடுவதை நிச்சயமாக நான்,பயப்படுகிறேன்.”
Yusuf 12:14
அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் ஒரு கூட்டமாக இருக்கும் நிலையில் அவரை ஓநாய் தின்றால் நிச்சயமாக நாங்கள் அப்போது நஷ்டவாளிகளாயிற்றே.”
Yusuf 12:15
ஆக, அவர்கள் அவரை அழைத்து சென்றபோது, இன்னும், அவரை கிணற்றின் ஆழத்தில் தள்ளிவிட அவர்கள் ஒன்று சேர்ந்து முடிவு செய்தபோது, “அவர்களுடைய இந்த காரியத்தை (பின்னர்) அவர்களுக்கு நிச்சயமாக நீர் அறிவிப்பீர். (இதை இப்போது) அவர்கள் உணர மாட்டார்கள்” என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம்.
Yusuf 12:16
இன்னும், அவர்கள் தம் தந்தையிடம் இரவில் அழுதவர்களாக வந்தனர்.
Yusuf 12:17
அவர்கள் கூறினார்கள்: “எங்கள் தந்தையே! நிச்சயமாக நாங்கள் (அம்பெறிவதிலும் ஓட்டப்பந்தயத்திலும்) போட்டியிட்டவர்களாக சென்று கொண்டிருந்தோம். இன்னும், எங்கள் பொருளுக்கு அருகில் யூஸுஃபை விட்டு வைத்திருந்தோம். ஆக, (அப்போது) அவரை ஓநாய் (அடித்து) தின்று விட்டது. நாங்கள் (அல்லாஹ்விடம்) உண்மையாளர்களாக இருந்தாலும் நீரோ எங்களை நம்பக்கூடியவராக இல்லை(யே).”
Yusuf 12:18
இன்னும், அவருடைய சட்டையின் மீது ஒரு பொய்யான இரத்தத்தை (தடவி)க் கொண்டு வந்தனர். (யஅகூப்) கூறினார்: “(அப்படி ஏதும் நடக்கவில்லை.) மாறாக, உங்கள் மனங்கள் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அலங்கரித்தன. (ஆகவே, அதை நீங்கள் செய்து விட்டீர்கள்.) ஆக, அழகிய பொறுமை (தான் நல்லது). நீங்கள் (யூஸுஃபை பற்றி) என்ன விளக்கம் கூறுகிறீர்களோ அதற்கு அல்லாஹ்விடமே உதவி தேடப்படுகிறது.”
Yusuf 12:19
இன்னும், ஒரு பயணக் கூட்டம் (அந்த வழியாக) வந்தது. அவர்கள் தங்களில் தண்ணீர் தேடும் நபரை அனுப்பினார்கள். ஆக, அவர் தனது வாளியை(க் கிணற்றில்) இறக்கினார். (அதைப் பிடித்து யூஸுஃப் மேலே வரவே,) “(எங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியே! இதோ ஒரு (அழகிய) சிறுவர்! என்று கூறினார். (அவரை) ஒரு வர்த்தகப் பொருளாக (-விற்கப்படும் ஓர் அடிமையாக ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை அவர்கள் (தங்களது மற்ற தோழர்களிடம்) மறைத்தார்கள். அல்லாஹ்வோ அவர்கள் செய்வதை நன்கறிந்தவன்.
Yusuf 12:20
இன்னும், (யூஸுஃபுடைய சகோதரர்கள் மீண்டும் அந்த கிணற்றருகே வந்தனர்.) எண்ணப்பட்ட (சில சொற்ப) திர்ஹம்களுக்கு பகரமாக, குறைவான ஒரு தொகைக்கு அவரை (அடிமையாக அந்த பயணக் கூட்டத்திடம்) விற்றார்கள். இன்னும், அவர் விஷயத்தில் அவர்கள் ஆசையற்றவர்களாக இருந்தனர்.
Yusuf 12:21
இன்னும், (பயனக்கூட்டம், யூஸுபை எகிப்தியர்களிடம் விற்றுவிட்டார்கள்.) எகிப்தில் அவரை விலைக்கு வாங்கியவர் தனது மனைவியிடம் கூறினார்: “நீ இவரை கண்ணியமான இடத்தில் தங்கவை! அவர் நமக்கு பலனளிக்கலாம்; அல்லது, அவரை நாம் (நமக்கு) ஒரு பிள்ளையாக ஆக்கிக் கொள்ளலாம்.” இன்னும், இவ்வாறுதான் பூமியில் யூஸுஃபுக்கு நாம் ஆதிக்கமளித்தோம். (கனவு பற்றிய) செய்திகளின் விளக்கத்திலிருந்து (நாம் நாடியதை) அவருக்குக் கற்பிப்பதற்காகவும் (எகிப்தின் அரசாங்கத்தை நிர்வகிப்பதற்காகவும் அவருக்கு ஆதிக்கமளித்தோம்). அல்லாஹ், தன் காரியத்தில் மிகைத்தவன். எனினும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.
Yusuf 12:22
இன்னும், அவர் (தன் வாலிபத்தின்) முழு ஆற்றல்களை அடைந்தபோது, நாம் அவருக்கு ஞானத்தையும், (-ஆழமாக புரிகின்ற திறமையையும்) கல்வியையும் கொடுத்தோம். இன்னும், நல்லறம் புரிபவர்களுக்கு இவ்வாறுதான் நாம் கூலி தருவோம்.
Yusuf 12:23
இன்னும், அவர் எவள் வீட்டில் இருந்தாரோ அவள் (எல்லாக்) கதவுகளையும் மூடிவிட்டு அவரை (தன்) விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைத்து, “(என்னை நோக்கி) வருவீராக” என்று கூறினாள். (அதற்கு யூஸுஃப்) கூறினார்: “அல்லாஹ்வின் பாதுகாப்பை(க் கோருகிறேன்)! நிச்சயமாக அவர் என் எஜமானர். என்னை அழகிய தங்குமிடத்தில் தங்க வைத்தார். நிச்சயமாக (நன்றி கெட்ட) அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.”
Yusuf 12:24
திட்டவட்டமாக அவள் அவரை நாடினாள்; இன்னும், அவரும் அவளை நாடினார். தன் இறைவனுடைய ஆதாரத்தை அவர் பார்த்திருக்கவில்லையெனில் (அவர் தவறில் விழுந்திருப்பார்). இவ்வாறுதான், கெட்டதையும் மானக்கேடானதையும் அவரை விட்டு நாம் திருப்புவதற்காக (நாம் ஆதாரத்தை காட்டினோம்). நிச்சயமாக, அவர் (நபித்துவத்திற்காக) தூய்மையாக்கப்பட்ட (தேர்ந்தெடுக்கப்பட்ட) நம் அடியார்களில் இருக்கிறார்.
Yusuf 12:25
இருவரும், வாசலை நோக்கி ஓடினார்கள். அவளோ அவருடைய சட்டையை பின்புறத்திலிருந்து கிழித்தாள். இன்னும், வாசலில் அவளுடைய கணவரை அவர்கள் இருவரும் கண்டனர். (உடனே) அவள் கூறினாள்: “உம் மனைவிக்கு ஒரு கெட்டதை நாடியவனின் தண்டனை, அவன் சிறையில் அடைக்கப்படுவது; அல்லது, (அவனுக்கு) துன்புறுத்தக்கூடிய ஒரு தண்டனை (கொடுக்கப்படுவது) தவிர வேறில்லை.”
Yusuf 12:26
(யூஸுஃப் அதை மறுத்தார்.) “அவள்தான் என்னை (பலவந்தமாக) தன் விருப்பத்திற்கு அழைத்தாள்” என்று கூறினார். இன்னும், அவளுடைய குடும்பத்திலிருந்து ஒரு சாட்சியாளர் சாட்சி கூறினார்: அவருடைய சட்டை முன் புறத்திலிருந்து கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறினாள். அவரோ பொய்யர்களில் இருக்கிறார்.
Yusuf 12:27
இன்னும், அவருடைய சட்டை பின் புறத்திலிருந்து கிழிக்கப்பட்டதாக இருந்தால், அவள் பொய் கூறினாள். அவரோ உண்மையாளர்களில் இருக்கிறார்.”
Yusuf 12:28
ஆக, அவருடைய சட்டை பின்புறத்திலிருந்து கிழிக்கப்பட்டதாக இருப்பதை (அவளுடைய கணவர்) பார்த்தபோது, “நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதி திட்டத்திலிருந்து உள்ளதாகும். நிச்சயமாக உங்கள் சதி திட்டம் மகத்தானது” என்று கூறினார்.
Yusuf 12:29
“யூஸுஃபே! நீர் இதை புறக்கணிப்பீராக! (பிறகு தன் மனைவியை நோக்கி) “நீ உன் பாவத்திற்காக மன்னிப்புத் தேடு. நிச்சயமாக நீ தவறிழைத்தவர்களில் இருக்கிறாய்.”
Yusuf 12:30
இன்னும், நகரத்திலுள்ள பெண்கள் கூறினார்கள்: “அதிபரின் மனைவி தன் (அடிமையாக இருக்கின்ற) வாலிபனைத் தன் விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைக்கிறாள். திட்டமாக அவர் மீது அவள் வைத்த அன்பு அவளது உள்ளத்தின் ஆழத்தில் ஊடுருவி விட்டது! நிச்சயமாக நாம் அவளை தெளிவானதொரு வழிகேட்டில் காண்கிறோம்.”
Yusuf 12:31
ஆக, அவர்களின் சூழ்ச்சியை அவள் செவியுற்றபோது, (அப்பெண்களை அழைத்து வர) அவர்களிடம் (ஓர் அழைப்பாளரை) அனுப்பினாள். இன்னும், அவர்களுக்கு ஒரு விருந்தை ஏற்பாடு செய்தாள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் (பழம் இன்னும்) ஒரு கத்தியைக் கொடுத்து, (யூஸுஃபே! அறையிலிருந்து) அவர்கள் முன் வெளியே வருவீராக! எனக் கூறினாள். அவரை அப்பெண்கள் பார்த்தபோது அவரை மிக உயர்வாக எண்ணினர். இன்னும், (பழத்தை அறுப்பதற்கு பதிலாக) தங்கள் கை(விரல்)களை அறுத்தனர். இன்னும், “அல்லாஹ் பாதுகாப்பானாக! இவர் மனிதரே இல்லை! இவர் இல்லை, (அழகான) கண்ணியமான ஒரு வானவராகவே தவிர.”
Yusuf 12:32
“நீங்கள் என்னை எவர் விஷயத்தில் பழித்தீர்களோ அவர்தான் இவர். திட்டவட்டமாக நான்தான் அவரை என் விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைத்தேன். ஆனால், அவர் (தன்னை) பாதுகாத்துக் கொண்டார். இன்னும், அவருக்கு நான் ஏவுவதை அவர் செய்யவில்லையெனில் நிச்சயமாக அவர் சிறையிலிடப்படுவார், இன்னும், நிச்சயமாக அவர் இழிவானவர்களில் ஆகிவிடுவார்” என்று (அந்த பெண்களிடம் மந்திரியின் மனைவி) கூறினாள்.
Yusuf 12:33
(யூஸுஃப்) கூறினார்: “என் இறைவா! அவர்கள் என்னை எதற்கு அழைக்கிறார்களோ அதை (செய்வதை) விட (நான்) சிறை(யில் தள்ளப்படுவது) எனக்கு மிக விருப்பமானது. இன்னும், நீ என்னை விட்டும் அவர்களின் சதி திட்டத்தை திருப்பவில்லையெனில் நான் அவர்கள் பக்கம் ஆசைப்பட்டு விடுவேன். இன்னும், அறிவீனர்களில் ஆகிவிடுவேன்.”
Yusuf 12:34
ஆக, அவருடைய இறைவன் அவருடைய பிரார்த்த்னையை ஏற்றுக் கொண்டான். ஆகவே, அவர்களின் சதி திட்டத்தை அவரை விட்டும் திருப்பினான். நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
Yusuf 12:35
பிறகு, (யூஸுஃப் நிரபராதி என்பதின்) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும் (இந்த செய்தி நகரத்தில் பரவி விடக்கூடாது என்பதற்காக) அவர்கள் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நிச்சயமாக அவரை சிறையில் அடைக்கவேண்டும் என (எண்ணம்) அவர்களுக்குத் தோன்றியது.
Yusuf 12:36
(ஆகவே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நேரத்தில்) இரு வாலிபர்கள் அவருடன் சிறையில் (தங்கள் குற்றங்களுக்காக) நுழைந்தனர். அவ்விருவரில் ஒருவன், “நிச்சயமாக நான் மதுவை பிழிவதாக என்னை கனவில் பார்த்தேன்” என்று கூறினான். இன்னும், மற்றவனோ, “என் தலை மேல் நான் ரொட்டியைச் சுமக்கும் நிலையில், அதிலிருந்து பறவைகள் புசிப்பதாக நிச்சயமாக நான் என்னை கனவில் பார்த்தேன்” என்று கூறினான். “இதன் விளக்கத்தை எங்களுக்கு அறிவிப்பீராக! நிச்சயமாக நாங்கள் உம்மை நல்லறம் புரிபவர்களில் காண்கிறோம்” (என்று அவ்விருவரும் கூறினார்கள்).
Yusuf 12:37
(யூஸுஃப்) கூறினார்: “நீங்கள் (இருவரும்) உணவளிக்கப்படுகிற உணவு உங்கள் இருவரிடம் வராது, அது உங்கள் இருவரிடம் வருவதற்கு முன்னர் அதன் விளக்கத்தை நான் உங்கள் இருவருக்கும் அறிவித்தே தவிர. இது, என் இறைவன் எனக்கு கற்பித்ததிலிருந்து (நான் கூறுவதாகும்). அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாத மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன். இன்னும், அவர்களோ மறுமையை நிராகரிக்கிறார்கள்.
Yusuf 12:38
இன்னும், நான் என் மூதாதைகளாகிய இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் உடைய மார்க்கத்தை பின்பற்றினேன். நாங்கள் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைப்பது எங்களுக்குத் தகுமானதல்ல. இ(ந்த ஓர் இறை நம்பிக்கையை பின்பற்றுவ)து எங்களுக்கும் (உலக) மக்களுக்கும் கிடைத்த அல்லாஹ்வின் அருளாகும். எனினும், மக்களில் அதிகமானவர்கள், (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்த மாட்டார்கள்.
Yusuf 12:39
என் சிறைத் தோழர்களே! (பலவீனமான) பலதரப்பட்ட தெய்வங்கள் மேலானவர்களா? அல்லது, (நிகரற்ற) ஒரே ஒருவனான (அனைவரையும்) அடக்கி ஆளுபவனான அல்லாஹ் மேலானவனா?
Yusuf 12:40
நீங்கள் வணங்குவதெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதைகளும் பெயர் சூட்டிய சிலைகளைத்தான். அல்லாஹ் இவற்றுக்கு எவ்வித ஆதாரத்தையும் இறக்கவில்லை. அதிகாரம் அல்லாஹ்விற்கே தவிர (எவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (எதையும்) வணங்காதீர்கள் என்று அவன் கட்டளையிட்டிருக்கிறான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.”
Yusuf 12:41
“என் சிறைத் தோழர்களே! “ஆக, உங்களில் ஒருவன் தன் எஜமானனுக்கு மதுவை புகட்டுவான். ஆக, மற்றவனோ கழுமரத்தில் அறையப்படுவான். அவனுடைய தலையில் பறவைகள் (அமர்ந்து அவனை கொத்தித்) தின்னும். நீங்கள் விளக்கம் கேட்ட காரியம் விதிக்கப்பட்(டு விட்)டது.
Yusuf 12:42
இன்னும், (யூஸுஃப்) கூறினார்: “அவ்விருவரில் நிச்சயமாக எவர் தப்பிப்பவர் என்று அவர் எண்ணினாரோ அவரிடம், நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றி கூறு!” ஆக, (யூஸுஃப்) தன் இறைவனை நினைவு கூர்வதை ஷைத்தான் அவருக்கு மறக்கடித்தான். ஆகவே, அவர் சிறையில் (மேலும்) சில ஆண்டுகள் தங்கினார்.
Yusuf 12:43
(எகிப்தின்) அரசர் கூறினார்: “கொழுத்த ஏழு பசுக்களை, அவற்றை இளைத்த ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், பசுமையான ஏழு கதிர்களையும் (அவை அல்லாத) காய்ந்த வேறு கதிர்களையும் நிச்சயமாக நான் என் கனவில் கண்டேன். என் (சபை) பிரமுகர்களே! நீங்கள் கனவுக்கு வியாக்கியானம் கூறுபவர்களாக இருந்தீர்களேயானால் என் கனவிற்கு எனக்கு விளக்கம் தாருங்கள்.”
Yusuf 12:44
அவர்கள் கூறினார்கள்: “(இவை) பொய்யான (குழம்பிய) கனவுகளாகும். (வீணான) கனவுகளுக்குரிய விளக்கத்தை நாங்கள் அறிந்தவர்களாக இல்லை.”
Yusuf 12:45
ஆனால், அவ்விருவரில் தப்பித்தவன் கூறினான்: - அவனோ சில ஆண்டுகளுக்குப் பின்னர் (யூஸுஃபை) அவன் நினைவு படுத்திக் கொண்டான். - “நான் அவருடைய (கனவின்) விளக்கத்தை உங்களுக்கு அறிவிப்பேன். ஆகவே, என்னை (சிறையிலுள்ள யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்.”
Yusuf 12:46
யூஸுஃபே! உண்மையாளரே! (அரசர் கனவில் பார்த்த) கொழுத்த ஏழு பசுக்கள், - அவற்றை இளைத்த ஏழு பசுக்கள் புசிக்கின்றன - அது பற்றியும்; இன்னும், பசுமையான ஏழு கதிர்கள், மற்றும் காய்ந்த வேறு (ஏழு) கதிர்கள் பற்றியும் எங்களுக்கு விளக்கம் தருவீராக! நான் மக்களிடம் திரும்பி செல்லவேண்டும், அவர்கள் (இதன் விளக்கத்தை) அறியவேண்டும்.
Yusuf 12:47
(யூஸுஃப்) கூறினார்: “வழக்கமாக ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள். ஆக, நீங்கள் புசிப்பதற்குத் தேவையான கொஞ்சத்தைத் தவிர நீங்கள் அறுவடை செய்ததை அதன் கதிரிலேயே விட்டு விடுங்கள்.”
Yusuf 12:48
“பிறகு, அதற்குப் பின்னர், கடினமான (பஞ்சமுடைய) ஏழு (ஆண்டுகள்) வரும். நீங்கள் கதிர்களில் பத்திரப்படுத்தியதில் கொஞ்சத்தைத் தவிர நீங்கள் அவற்றுக்காக முற்படுத்தி (சேமித்து) வைத்திருந்தவற்றை அவை தின்னு (அழித்து விடு)ம்.
Yusuf 12:49
பிறகு, அதற்குப் பின்னர் ஓர் ஆண்டு வரும். அதில் மக்கள் மழை பொழியப்படுவார்கள். இன்னும், அவர்கள் (ஸைத்தூன், திராட்சை ஆகியவற்றை) பிழி(ந்து எண்ணெயையும் பழரசங்களையும் உற்பத்தி செய்து கொள்)வார்கள்.
Yusuf 12:50
(இவ்விளக்கத்தை அரசரிடம் அறிவிக்கவே) அரசர் கூறினார்: “(எனது கனவுக்கு விளக்கமளித்த) அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்.” ஆக, (அழைத்துச் செல்ல) தூதர் அவரிடம் வந்தபோது, அவர் (தூதருடன் செல்ல மறுத்து) “நீ உன் எஜமானனிடம் திரும்பிச் செல். தங்கள் கை(விரல்)களை வெட்டிய பெண்களின் (உண்மை) விஷயமென்ன?” என்று அவரைக் கேள். நிச்சயமாக என் இறைவன் அவர்களின் சூழ்ச்சியை நன்கறிந்தவன்” என்று கூறினார்.
Yusuf 12:51
(அரசர், அப்பெண்களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு அழைத்த போது உங்கள் நிலை என்ன?” என்று கேட்டார். “அல்லாஹ் பாதுகாப்பானாக. நாங்கள் அவரிடத்தில் ஒரு தீங்கையும் அறியவில்லை” என்று (அப்பெண்கள்) கூறினார்கள். அதிபரின் மனைவியோ “இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான்தான் அவரை (நிர்ப்பந்தமாக) என் விருப்பத்திற்கு அழைத்தேன். இன்னும், நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் இருக்கிறார்.”
Yusuf 12:52
“அது, நிச்சயமாக நான் (என் எஜமானர்) மறைவில் (இருந்த போது) அவருக்கு துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிவதற்காகவும், நிச்சயமாக அல்லாஹ் மோசடி செய்பவர்களின் சதி திட்டத்தை நல்வழி படுத்தமாட்டான் என்பதற்காகவும்தான் (அந்த பெண்களை விசாரிக்கும்படி நான் கூறினேன் என்று யூஸுஃப் விளக்கம் அளித்தார்).”
Yusuf 12:53
“நான், என் ஆன்மா தூய்மையானது என கூற மாட்டேன், என் இறைவன் அருள் புரிந்தாலே தவிர. ஆன்மாக்கள் பாவத்தை அதிகம் தூண்டக்கூடியவையாக இருக்கின்றன. நிச்சயமாக என் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்” (என்று யூஸுஃப் கூறினார்).
Yusuf 12:54
“அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்! நான் அவரை எனக்கென மட்டும் பிரத்தியேகமாக ஆக்கிக்கொள்வேன்”என்று அரசர் கூறினார். (அரசர்) அவருடன் பேசியபோது, “(யூசுஃபே!) நிச்சயமாக நீர் இன்று நம்மிடம் தகுதியுடையவர், நம்பிக்கையாளர்”என்று கூறினார்.
Yusuf 12:55
“நாட்டின் கஜானாக்கள் மீது (பொறுப்பாளராக, அவற்றை நிர்வகிப்பவராக) என்னை ஆக்குவீராக. நிச்சயமாக நான் (செல்வத்தை) நன்கு பாதுகாப்பவன், (நிர்வாகத்தை) நன்கறிந்தவன்” என்று (யூஸுஃப்) கூறினார்.
Yusuf 12:56
இவ்வாறே, யூஸுஃபுக்கு அந்நாட்டில் வசதியளித்தோம். அவர், தான் நாடிய இடத்தில் தங்கிக்கொள்வார். நாம் நாடுகின்றவர்களுக்கு நம் அருளைத் தருகிறோம். இன்னும், நல்லறம் புரிபவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
Yusuf 12:57
நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களாக இருப்பவர்களுக்கு திட்டமாக மறுமையின் கூலிதான் மிக மேலானதாகும்.
Yusuf 12:58
இன்னும், யூஸுஃபுடைய சகோதரர்கள் (எகிப்துக்கு) வந்தார்கள். மேலும், அவரிடம் நுழைந்தார்கள். ஆக, அவர் அவர்களை அறிந்து கொண்டார். ஆனால், அவர்களோ அவரை அறியாதவர்களாக இருந்தனர்.
Yusuf 12:59
மேலும், அவர்களுடைய சாமான்களை அவர்களுக்கு (யூஸுஃப்) தயார் செய்து கொடுத்தபோது, “(மறுமுறை நீங்கள் வரும்போது) உங்கள் தந்தை மூலமாக உங்களுக்குள்ள ஒரு சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். நிச்சயமாக நான் (உங்களுக்கு தேவையானதை) முழுமையாக அளந்து கொடுப்பதையும் விருந்தளிப்பவர்களில் நான் சிறந்தவன் என்பதையும் நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கூறினார்.
Yusuf 12:60
“ஆனால், நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வரவில்லையெனில் உங்களுக்கு என்னிடம் அறவே (உணவு ஏதும்) அளந்து கொடுக்கப்படாது. இன்னும், எனக்கு அருகிலும் வராதீர்கள்” என்று (யூஸுஃப்) கூறினார்.
Yusuf 12:61
“நாங்கள் அவருடைய தந்தையிடம் அவரை வலியுறுத்தி கேட்போம். இன்னும், நிச்சயமாக நாங்கள் (நீர் கூறியதை) செய்து முடிப்போம்” என்று (யூஸுஃபின் சகோதரர்கள்) கூறினார்கள்.
Yusuf 12:62
மேலும், (யூஸுஃப்) தன் வாலிபர்களிடம் கூறினார்: “அவர்களுடைய கிரயத்தை அவர்களுடைய மூட்டைகளில் வைத்து விடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பத்திடம் திரும்பி சென்றால் அதை அவர்கள் அறியவேண்டும், (அதை செலுத்த நம்மிடம்) அவர்கள் திரும்பி வரவேண்டும்” என்று கூறினார்.
Yusuf 12:63
ஆக, அவர்கள் தம் தந்தையிடம் திரும்பியபோது, “எங்கள் தந்தையே! (குறிப்பிட்ட அளவைவிட அதிகமான உணவு) அளவை எங்களுக்கு (கொடுக்கப்படாமல்) தடுக்கப்பட்டு விட்டது. ஆகவே, எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்புவீராக. நாங்கள் (அதிக தானியங்களை) அளந்து (வாங்கி) வருவோம். நிச்சயமாக நாங்கள் அவரை பாதுகாப்போம்” என்று கூறினார்கள்.
Yusuf 12:64
(யஅகூப்) கூறினார்: “முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பியது போன்றே தவிர இவர் விஷயத்தில் நான் உங்களை நம்ப முடியுமா? ஆக, அல்லாஹ்வே மிக மேலான பாதுகாவலன். இன்னும், அவனே அருள் புரிபவர்களில் மிக அதிகம் அருள் புரிபவன்.”
Yusuf 12:65
மேலும், அவர்கள் தங்கள் மூட்டையை திறந்தபோது தங்கள் கிரயம் தங்களிடம் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டு, “எங்கள் தந்தையே! நாம் (இதற்கு மேல்) என்ன தேடுகிறோம்? இதோ! நம் கிரய(மு)ம் நம்மிடமே திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது. (உணவும் கிடைத்துள்ளது. ஆகவே புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தருவீராக!) நம் குடும்பத்திற்கு (தேவையான) தானியங்களைக் கொண்டு வருவோம். இன்னும், எங்கள் சகோதரனையும் பாதுகாப்பாக அழைத்து (சென்று, பாதுகாப்பாக அழைத்து) வருவோம். (அவருக்காக) ஓர் ஒட்டகத்தின் அளவையும் அதிகமாக வாங்கிவருவோம். இது (அதிபருக்கு) ஓர் இலகுவான அளவைதான்” என்று கூறினார்கள்.
Yusuf 12:66
(யஅகூப்) கூறினார்: “உங்களுக்கு அழிவு ஏற்பட்டால் தவிர, நிச்சயமாக அவரை என்னிடம் நீங்கள் கொண்டு வருவீர்கள் என்று அல்லாஹ்வின் (மீது சத்தியம் செய்து) ஓர் உறுதிமொழியை நீங்கள் எனக்கு கொடுக்கும் வரை அவரை உங்களுடன் நான் அனுப்பவே மாட்டேன்” என்று (யஅகூப்) கூறினார். அவர்கள், (அவ்வாறு) அவருக்கு தங்கள் உறுதிமொழியை கொடுக்கவே, “நாம் கூறுவதற்கு அல்லாஹ்வே சாட்சியாளன் ஆவான்” என்று (யஅகூப்) கூறினார்.
Yusuf 12:67
இன்னும், அவர் கூறினார்: “என் பிள்ளைகளே! (எகிப்தில் நுழையும்போது) ஒரே ஒரு வாசல் வழியாக நுழையாதீர்கள். (தனித் தனியாக) பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள். மேலும், அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதையும் நான் உங்களை விட்டும் தடுக்க முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (யாருக்கும்) இல்லை. இன்னும், நான் அவன் மீதே நம்பிக்கை வைத்து (அவனை மட்டுமே சார்ந்து) விட்டேன். ஆக, நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்திரு)க்கவும்.”
Yusuf 12:68
அவர்கள் தங்கள் தந்தை கட்டளையிட்ட முறையில் (எகிப்து நகரத்தில்) நுழைந்தபோது, அது யஅகூபுடைய மனதிலிருந்த ஒரு தேவையை அவர் நிறைவேற்றியதைத் தவிர அவர்களை விட்டும் அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதையும் அது தடுப்பதாக இல்லை. மேலும், நிச்சயமாக அவர் நாம் அவருக்கு கல்வி கற்பித்திருந்த காரணத்தால் அறிவு ஞானம் உடையவராக இருந்தார். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.
Yusuf 12:69
மேலும், அவர்கள் யூஸுஃபிடம் நுழைந்தபோது, அவர் தன் சகோதரனை தன் பக்கம் ஒதுக்கி (-தன்னுடன் அணைத்து)க் கொண்டார். இன்னும், “நிச்சயமாக நான்தான் உனது சகோதரன். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி கவலை படாதே! (சங்கடப் படாதே!)” என்று கூறினார்.
Yusuf 12:70
ஆக, அவர்களுக்கு அவர்களுடைய பொருள்களை அவர் தயார்படுத்தி கொடுத்தபோது தன் சகோதரனின் சுமையில் (அளப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற) குவளையை வைத்து விட்டார். பிறகு, ஓர் அறிவிப்பாளர் “ஓ! (தானிய) சுமைகளை ஏற்றி செல்லும் பயணக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்கள்தான்” என்று அறிவித்தார்.
Yusuf 12:71
இவர்கள், அ(றிவிப்பை செய்த)வர்கள் பக்கம் முன்னோக்கி வந்து, “நீங்கள் எதை இழந்துவிட்டு தேடுகிறீர்கள்?” என்று கூறினார்கள்.
Yusuf 12:72
“அரசருடைய குவளையை இழக்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள். இன்னும், “அதைக் கொண்டு வருபவருக்கு ஓர் ஒட்டகைச் சுமை (அளவு தானியம் வெகுமதியாக) உண்டு. நான் அதற்கு பொறுப்பாளன்” (என்று அவர்களில் ஒருவர் கூறினார்.)
Yusuf 12:73
“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இவ்வூரில் விஷமம் செய்வதற்கு வரவில்லை. இன்னும், நாங்கள் திருடர்களாக இருக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்” என்று அவர்கள் கூறினார்கள்.
Yusuf 12:74
“நீங்கள் (இதில்) பொய்யர்களாக இருந்தால் அ(ந்த பொருளை திருடிய)வரின் தண்டனை என்ன?” என்று கூறினார்கள்.
Yusuf 12:75
“அவரின் தண்டனையாவது, எவருடைய சுமையில் (அந்த பொருள்) காணப்படுகிறதோ அவரே அதற்குரிய தண்டனையாவார். இவ்வாறுதான் அநியாயக்காரர்களை நாம் தண்டிப்போம்” என்று கூறினார்கள்.
Yusuf 12:76
ஆக, அவர் தன் சகோதரனின் மூட்டைக்கு முன்பாக அவர்களின் (மற்ற சகோதரர்களின்) மூட்டைகளில் (சோதனையை) ஆரம்பித்தார். பிறகு, தன் சகோதரனின் மூட்டையிலிருந்து அதை வெளியே எடுத்தார். யூஸுஃபுக்கு இப்படித்தான் நாம் காரணத்தை உருவாக்கினோம். அல்லாஹ் நாடினால் தவிர (எகிப்து) அரசரின் சட்டப்படி அவர் தன் சகோதரனை (தன்னுடன்) பிடித்து வைக்க முடிந்தவராக இல்லை. நாம் விரும்புகிறவர்களை பதவிகளால் உயர்த்துகிறோம். இன்னும், கல்வியுடைய ஒவ்வொருவருக்கும் மேல் நன்கறிந்த கல்வியாளர் ஒருவர் இருக்கிறார்.
Yusuf 12:77
அவர் (அதைத்) திருடினால் (யூஸுஃப் என்ற) அவருடைய ஒரு சகோதரர் முன்னர் (இப்படித்தான்) திருடி இருக்கிறார் என்று அவர்கள் கூறினார்கள். யூஸுஃப், அதை தன் உள்ளத்தில் மறைத்து கொண்டார். அதை அவர்களுக்கு வெளிப்படுத்தவில்லை. “நீங்கள் மிகவும் தரம் கெட்டவர்கள். நீங்கள் வருணிப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்” என்று (தன் மனதில்) கூறினார்.
Yusuf 12:78
அவர்கள் கூறினார்கள்: “அதிபரே! அவருக்கு “(கண்ணியத்தில்) பெரியவரான (வயதில்) முதியவரான ஒரு தந்தை இருக்கிறார். ஆகவே, இவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை பிடித்து வைப்பீராக. நிச்சயமாக நாம் உம்மை நற்குண சீலர்களில் காண்கிறோம்.”
Yusuf 12:79
(யூஸுஃப்) கூறினார்: “எவரிடம் நம் பொருளை பெற்றுக் கொண்டோமோ அவரைத் தவிர (யாரையும்) நாம் பிடித்து வைப்பதை விட்டும் அல்லாஹ் (எங்களைப்) பாதுகாப்பானாக! அப்படி செய்தால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக ஆகிவிடுவோம்.”
Yusuf 12:80
ஆக, (தங்கள் கோரிக்கையை அவர் ஏற்கமாட்டார் என்று) அவரிடம் அவர்கள் நம்பிக்கையிழந்தபோது, அவர்கள் (தங்களுக்குள்) ஆலோசித்தவர்களாக (அவரை விட்டு) விலகி சென்றனர். அவர்களில் (வயதில்) பெரியவர் கூறினார்: “திட்டமாக உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் (பெயரால்) ஓர் உறுதிமொழியை வாங்கியதையும், இதற்கு முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் தவறிழைத்ததையும் நீங்கள் அறிந்திருக்கவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கின்ற வரை; அல்லது, அல்லாஹ் எனக்கு தீர்ப்பளிக்கின்ற வரை இந்த பூமியை விட்டு நான் நகர மாட்டேன். தீர்ப்பளிப்பவர்களில் அவன் மிக மேலானவன்.”
Yusuf 12:81
நீங்கள் உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று, (அவரிடம்) கூறுங்கள்: “எங்கள் தந்தையே! நிச்சயமாக உம் மகன் திருடிவிட்டார். இன்னும், நாங்கள் அறிந்தபடியே தவிர நாங்கள் (பொய்யாக) சாட்சி பகரவில்லை. மறைவானவற்றை அறிந்தவர்களாக நாங்கள் இருக்கவில்லை.”
Yusuf 12:82
“நாங்கள் (தங்கி) இருந்த ஊரையும், நாங்கள் (சென்று) வந்த பயணக் கூட்டத்தையும் நீர் கேட்பீராக. இன்னும், நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களே!”
Yusuf 12:83
(யஅகூப்) கூறினார்: “மாறாக! உங்கள் ஆன்மாக்கள் ஒரு காரியத்தை அலங்கரித்தன. ஆகவே, அழகிய பொறுமை(யாக எனது பொறுமை இருக்கட்டும்). அல்லாஹ், அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வரக்கூடும். நிச்சயமாக அவன்தான் நன்கறிந்தவன், மகா ஞானவான்.”
Yusuf 12:84
இன்னும், அவர் அவர்களை விட்டு விலகிச் சென்று, “யூஸுஃபின் மீது எனக்குள்ள துயரமே!” என்று கூறினார். இன்னும், அவரது இரு கண்களும் கவலையால் (அழுதழுது) வெளுத்து விட்டன. அவர் (தன் கோபத்தையும் கவலையையும்) அடக்கிக் கொள்பவர்.
Yusuf 12:85
“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அழிவை நெருங்கியவராக நீர் ஆகும் வரை; அல்லது, இறந்தவர்களில் நீர் ஆகும் வரை யூஸுஃபை நினைவு கூர்ந்து கொண்டே இருப்பீர் (போலும்)” என்று அவர்கள் கூறினார்கள்.
Yusuf 12:86
(யஅகூப்) கூறினார்: “என் துக்கத்தையும் என் கவலையையும் நான் முறையிடுவதெல்லாம் அல்லாஹ்விடம்தான். இன்னும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடம் நான் அறிவேன்.”
Yusuf 12:87
“என் பிள்ளைகளே! (பூமியின் பல பாகங்களில்) செல்லுங்கள்; இன்னும், யூஸுஃபையும், அவரது சகோதரரையும் நன்கு தேடுங்கள். மேலும், அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள். நிச்சயமாக நிராகரிக்கின்ற மக்களைத் தவிர (எவரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்.”
Yusuf 12:88
ஆக, அவர்கள் அவரிடம் நுழைந்தபோது கூறினார்கள்: “அதிபரே! எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் வறுமை ஏற்பட்டுள்ளது. ஓர் அற்பப் பொருளை (கிரயமாக இங்கே) நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். ஆகவே, (அதை ஏற்றுக் கொண்டு) எங்களுக்கு (தானியத்தின்) அளவையை முழுமைப்படுத்தி தருவீராக! இன்னும், எங்களுக்கு தர்மம் வழங்குவீராக! நிச்சயமாக அல்லாஹ் தர்மம் செய்வோருக்கு (தகுந்த) கூலி கொடுப்பான்.”
Yusuf 12:89
(யூஸுஃப்) கூறினார்: “நீங்கள் அறியாதவர்களாக இருந்தபோது யூஸுஃபுக்கும் அவருடைய சகோதரருக்கும் என்ன (கெடுதிகளை) செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா (இல்லையா)?”
Yusuf 12:90
அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நீர் யூஸுஃபா?” அவர் கூறினார்: “நான் யூஸுஃப்! இன்னும், இவர் என் சகோதரர். திட்டமாக அல்லாஹ் எங்கள் மீது அருள்புரிந்தான். நிச்சயமாக எவர் அல்லாஹ்வை அஞ்சி நடப்பாரோ; இன்னும், (சோதனையில்) பொறுமையாக இருப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய) நற்குண சீலர்களின் கூலியை வீணாக்க மாட்டான்.”
Yusuf 12:91
அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் எங்களைவிட உம்மை மேன்மைப்படுத்தி இருக்கிறான். நிச்சயமாக நாங்கள் தவறிழைப்பவர்களாகவே இருந்தோம்.”
Yusuf 12:92
(யூஸுஃப்) கூறினார்: “இன்றைய தினம் உங்கள் மீது அறவே பழிப்பில்லை. அல்லாஹ் உங்களை மன்னிப்பான்! கருணையாளர்களில் அவன் மகா கருணையாளன்.”
Yusuf 12:93
“நீங்கள் எனது இந்த சட்டையைக் கொண்டு செல்லுங்கள்; மேலும், என் தந்தையின் முகத்தில் அதைப் போடுங்கள். அவர் பார்வையுடையவராக ஆகிவிடுவார். இன்னும், நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்.”
Yusuf 12:94
(அவர்களின்) பயணக் கூட்டம் (எகிப்திலிருந்து) புறப்படவே, அவர்களின் தந்தை கூறினார்: (“இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் பெறுகிறேன்; என்னை நீங்கள் அறிவீனனாக ஆக்காமல் (என்னை பழிக்காமல்) இருக்க வேண்டுமே!”
Yusuf 12:95
(யஅகூபை சுற்றி இருந்தவர்கள்) கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நீர் உம் பழைய தவறில்தான் இருக்கிறீர்.”
Yusuf 12:96
ஆக, நற்செய்தியாளர் வந்தபோது, அதை அவருடைய முகத்தில் போட்டார். உடனே, அவர் பார்வையுடையவராக ஆகிவிட்டார். (பிறகு, யஅகூப்) கூறினார்: “நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடம் நிச்சயமாக நான் அறிவேன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா?”
Yusuf 12:97
(யஅகூபிடம் அவரின் பிள்ளைகள்) கூறினார்கள்: “எங்கள் தந்தையே! எங்களுக்கு எங்கள் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதற்கு பிரார்த்தனை செய்வீராக! நிச்சயமாக நாங்கள் தவறிழைப்பவர்களாக இருந்தோம்.”
Yusuf 12:98
(யஅகூப்) கூறினார்: “நான் என் இறைவனிடம் உங்களுக்காக மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக அவன்தான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.”
Yusuf 12:99
ஆக, அவர்கள் யூஸுஃபிடம் (அவரின் சபையில்) நுழைந்தபோது, அவர் தன் பக்கம் தன் பெற்றோரை அரவணைத்தார். இன்னும், “அல்லாஹ்வின் நாட்டப்படி நீங்கள் அச்சமற்றவர்களாக எகிப்தில் நுழையுங்கள்!” என்று கூறினார்.
Yusuf 12:100
இன்னும், அவர் தன் பெற்றோரை அரச கட்டில் மேல் உயர்த்தி அமரவைத்தார். இன்னும், அவருக்கு (முன்) அவர்கள் சிரம் பணிந்தவர்களாக விழுந்தனர். மேலும், (யூஸுஃப்) கூறினார்: “என் தந்தையே! இது, முன்னர் (நான் கண்ட) என் கனவின் விளக்கமாகும். இன்னும், என் இறைவன் அதை உண்மையாக ஆக்கிவிட்டான். மேலும், சிறையிலிருந்து என்னை அவன் வெளியேற்றியபோதும், எனக்கும் என் சகோதரர்களுக்கு இடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணிய பின்னர், உங்களை கிராமத்திலிருந்து (என்னிடம்) கொண்டு வந்தபோதும் அவன் எனக்கு நன்மை புரிந்திருக்கிறான். நிச்சயமாக என் இறைவன், தான் நாடியதை செய்வதற்கு மகா நுட்பமானவன். நிச்சயமாக அவன் நன்கறிந்தவன், மகா ஞானவான்.”
Yusuf 12:101
“என் இறைவா! திட்டமாக நீ எனக்கு ஆட்சியை தந்தாய். (கனவு சம்பந்தமான) செய்திகளின் விளக்கத்தை எனக்கு கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தவனே. நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் முஸ்லிமாக இருக்கும் நிலையில் என்னை உயிர் கைப்பற்றிக்கொள்! இன்னும், நல்லவர்களுடன் என்னை சேர்த்து விடு!”
Yusuf 12:102
(நபியே) இவை, மறைவான செய்திகளில் உள்ளவையாகும். இவற்றை உமக்கு வஹ்யி அறிவிக்கிறோம். மேலும், அவர்கள் (யூஸுஃபை கிணற்றில் எறிவதற்காக) தங்கள் காரியத்தில் ஒருமித்து முடிவெடுத்தபோது நீர் அவர்களிடம் இருக்கவில்லை.
Yusuf 12:103
மேலும், (நபியே!) நீர் பேராசைப்பட்டாலும் மக்களில் அதிகமானவர்கள் (இந்த வேதத்தை) நம்பிக்கை கொண்டவர்களாக இல்லை.
Yusuf 12:104
இதற்காக நீர் அவர்களிடம் ஒரு கூலியையும் கேட்பதில்லை. இது, அகிலத்தார்களுக்கு அறிவுரையாகவே தவிர இல்லை.
Yusuf 12:105
வானங்கள், பூமியில் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, அவர்களோ அவற்றை (பார்த்து படிப்பினை பெறாமல்) புறக்கணித்தவர்களாகவே அவற்றை கடந்து செல்கிறார்கள்.
Yusuf 12:106
இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ள மாட்டார்கள், அவர்களோ (சிலைகளை அல்லாஹ்விற்கு) இணையாக்கியவர்களாக இருந்தே தவிர.
Yusuf 12:107
ஆக, அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து (அவர்களை) சூழ்ந்து கொள்ளக்கூடிய ஒரு தண்டனை அவர்களிடம் வருவதை; அல்லது அவர்கள் அறியாமல் இருக்கும் நிலையில் திடீரென மறுமை அவர்களிடம் வருவதை அவர்கள் அச்சமற்று விட்டனரா?
Yusuf 12:108
(நபியே!) கூறுவீராக: “(அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவது,) இதுதான் என் பாதையாகும். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான அறிவின் மீது இருந்தவர்களாக அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறோம். அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான் இணைவைப்பவர்களில் உள்ளவன் இல்லை.”
Yusuf 12:109
இன்னும், (நபியே!) உமக்கு முன்னர், ஊர்வாசிகளில் ஆண்களைத் தவிர (பெண்களையோ வானவர்களையோ தூதர்களாக) நாம் அனுப்பவில்லை. நாம் அ(ந்த ஆட)வர்களுக்கு வஹ்யி அறிவிப்போம். ஆக, (வேதத்தை மறுக்கும்) அவர்கள் பூமியில் (பயணம்) செல்லவில்லையா? (அப்படி சென்றால்) அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பார்ப்பார்கள். மேலும், மறுமையின் வீடுதான் அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு மிக மேலானதாகும். நீங்கள் சிந்தித்துப் புரிய வேண்டாமா?
Yusuf 12:110
இறுதியாக, (மக்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்பதிலிருந்து) நம் தூதர்கள் நிராசையடைந்து, இன்னும், நிச்சயமாக அவர்கள் (-தூதர்கள்) பொய்ப்பிக்கப்பட்டனர் (-அல்லாஹ் உடைய உதவி தங்களுக்கு வரும் என்று அவர்கள் கூறியது பொய்யாக ஆகிவிட்டது) என்று மக்கள் எண்ணியபோது, நம் உதவி அவர்களை (-அந்த தூதர்களை) வந்தடைந்தது. ஆக, நாம் நாடுகின்றவர்கள் பாதுகாக்கப்பட்டனர். மேலும், நம் தண்டனை, குற்றவாளிகளான சமுதாயத்தை விட்டு (ஒரு போதும்) திருப்பப்படாது.
Yusuf 12:111
நிறைவான அறிவுடையவர்களுக்கு இவர்களுடைய சரித்திரங்களில் ஒரு படிப்பினை திட்டவட்டமாக இருக்கிறது. (இது) இட்டுக்கட்டப்படுகின்ற ஒரு செய்தியாக இருக்கவில்லை. எனினும், தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்துவதாகவும் எல்லாவற்றையும் விவரிப்பதாகவும் நேர்வழியாகவும் நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு (விசேஷமான) ஓர் அருளாகவும் இருக்கிறது.
Ra'd 13:1
அலிஃப்; லாம்; மீம்; றா. இவை, (மகத்தான, ஞானமிக்க) வேதத்தின் வசனங்களாகும். (நபியே!) உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதுதான் (உறுதியான) உண்மையாகும். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) நம்பிக்கை கொள்ளாமல் இருக்கிறார்கள்.
Ra'd 13:2
அல்லாஹ், வானங்களை தூண்கள் இன்றி உயர்த்தினான். அதை நீங்கள் காண்கிறீர்கள். பிறகு, அர்ஷின் மேல் உயர்ந்து விட்டான். சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான். எல்லாம் குறிப்பிடப்பட்ட ஒரு தவணையை நோக்கி ஓடுகின்றன. எல்லா காரியங்களையும் திட்டமிட்டு நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்பவேண்டும் என்பதற்காக வசனங்களை (உங்களுக்கு) விவரிக்கிறான்.
Ra'd 13:3
அவன்தான் பூமியை விரித்தான்; இன்னும், அதில் மலைகளையும் ஆறுகளையும் ஏற்படுத்தினான். இன்னும், அவற்றில் எல்லாக் கனிகளிலும் இரண்டு ஜோடிகளை ஏற்படுத்தினான். இரவினால் பகலை மூடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக (இறைவன் ஒருவனே என்பதை உணர்த்தும் பல) அத்தாட்சிகள் இதில் இருக்கின்றன.
Ra'd 13:4
மேலும், பூமியில் ஒன்றுக்கொன்று சமீபமான பகுதிகள் உள்ளன. (ஆனால், அவை தன்மைகளால் மாறுபட்டவை ஆகும்.) இன்னும், திராட்சைகளின் தோட்டங்களும், விவசாய (நில)மும், ஒரே வேரிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட மரங்கள் முளைக்கின்ற பேரீச்சமும்; இன்னும், ஒரு வேரிலிருந்து ஒரே ஒரு மரம் முளைக்கின்ற பேரீச்சமும் உள்ளன. இவை (அனைத்தும்) ஒரே நீரைக் கொண்டு (நீர்) புகட்டப்படுகின்றன. ஆனால், அவற்றில் சிலவற்றை, சிலவற்றைவிட சுவையில் சிறப்பிக்கிறோம். சிந்தித்து புரிகின்ற மக்களுக்கு இதில் நிச்சயமாக (இறைவன் ஒருவனே என்பதை உணர்த்தும்) அத்தாட்சிகள் இருக்கின்றன.
Ra'd 13:5
(நபியே! மக்களில் பலர் அல்லாஹ்வை வணங்காமல், கற் சிலைகளை வணங்குவதைப் பற்றி) நீர் ஆச்சரியப்பட்டால், “நாம் (இறந்து மண்ணோடு) மண்ணாக ஆகிவிட்டால், (அதற்கு பின்னர்) புதியதோர் படைப்பாக நிச்சயமாக நாம் உருவாக்கப்படுவோமா?” என்ற அவர்களுடைய கூற்றோ மிக ஆச்சரியமானதே! இவர்கள்தான் தங்கள் இறைவனை நிராகரித்தவர்கள். மேலும், இவர்களுடைய கழுத்துகளில் அரிகண்டங்கள் இருக்கும். இன்னும், இவர்கள் நரகவாசிகளே! அதில் இவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
Ra'd 13:6
இன்னும், (நபியே!) உம்மிடம் நல்லதற்கு முன்னர் கெட்டதை கேட்டு அவசரப்படுத்துகிறார்கள். மேலும், தண்டனைகள் இவர்களுக்கு முன்னர் (பலருக்கு) வந்து சென்றுள்ளன. நிச்சயமாக உம் இறைவன், மக்களை - அவர்கள் குற்றம் செய்திருந்தபோதும் மன்னிப்பவனாக இருக்கிறான் (அவர்கள் திருந்தி நேர்வழியில் வந்தால்). மேலும், நிச்சயமாக உம் இறைவன், (திருந்தாத பாவிகளை) தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் ஆவான்.
Ra'd 13:7
(நபியே!) நிராகரிப்பவர்கள் (உம்மைப் பற்றி), “இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிறபடி) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். (நபியே!) நீர் எல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். மேலும், எல்லா மக்களுக்கும் (அவர்களை நன்மையின் பக்கம்; அல்லது தீமையின் பக்கம் வழி நடத்துகின்ற) ஒரு தலைவர் இருந்திருக்கிறார்.
Ra'd 13:8
ஒவ்வொரு பெண்ணும் (வயிற்றில்) சுமப்பதையும் கர்ப்பப்பைகள் (குழந்தைகளை ஈன்றெடுக்கும் காலங்கள்) குறைவதையும், அவை அதிகமாவதையும் அல்லாஹ் நன்கறிவான். இன்னும், (இவை அல்லாத) எல்லா காரியங்களும் அவனிடம் (நிர்ணயிக்கப்பட்ட) ஓர் அளவின்படி நடக்கின்றன.
Ra'd 13:9
(அவன்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்கறிந்தவன்; மிகப் பெரியவன்; மிக உயர்ந்தவன்.
Ra'd 13:10
உங்களில் (தன்) பேச்சை ரகசியப்படுத்தியவனும்; அதை பகிரங்கப்படுத்தியவனும்; இரவில் (தனது தீமைகளை) மறைத்து செய்பவனாக இருந்துவிட்டு, மேலும், பகலில் (நல்லவனாக) வெளியே வருபவனும் அ(ந்த இறை)வனுக்குச் சமமானவர்களே! (அவன் அவர்கள் அனவைரையும் அவர்களின் எல்லா செயல்களையும் நன்கறிவான்.)
Ra'd 13:11
(மனிதனாகிய) அவனுக்கு முன்புறத்திலிருந்தும், அவனுக்குப் பின்புறத்திலிருந்தும் (அவனை பாதுகாப்பதற்காக) பின்தொடரக்கூடியவர்கள் (-ஒரு கூட்டத்திற்கு பின்னர், ஒரு கூட்டம் என்று மாறி மாறி வரக்கூடிய வானவர்கள் அவனுடன்) இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய (தண்டனை எனும்) கட்டளையிலிருந்து (அல்லாஹ் நாடிய காலம் வரை) அவனை பாதுகாக்கிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒரு சமுதாயத்திடமுள்ளதை மாற்றமாட்டான், அவர்கள் தங்களிடமுள்ளதை மாற்றுகின்ற வரை. மேலும், அல்லாஹ் ஒரு சமுதாயத்திற்கு அழிவை நாடினால், (எவராலும்) அதை தடுப்பது அறவே முடியாது; இன்னும், அவர்களுக்கு அவனையன்றி உதவியாளர் எவரும் இல்லை.
Ra'd 13:12
அவன் உங்க(ளில் பயணத்தில் இருப்பவர்க)ளுக்கு மின்னலை பயமாகவும் (ஊரில் இருப்பவர்களுக்கு மழை வருவதற்குரிய) ஆசையாகவும் காட்டுகிறான். இன்னும், (மழையைச் சுமந்து வரக்கூடிய) கனமான மேகங்களை உருவாக்குகிறான்.
Ra'd 13:13
மேலும், இடியும் வானவர்களும் அவனுடைய பயத்தால் அவனைப் புகழ்ந்து துதிக்கிறார்கள். அவர்களோ (-அம்மக்களோ) அல்லாஹ்வைப் பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவனே அபாயங்களை (-எரித்து சாம்பலாக்கிவிடும் இடி மின்னல்களை) அனுப்பி, அவற்றைக் கொண்டு அவன் நாடியவர்களை வேரறுக்கிறான். அவனோ (பாவிகளை) பிடிப்பதில் (-தண்டிப்பதால்) மிகக் கடுமையானவன்.
Ra'd 13:14
(பலன் தரும்) உண்மைப் பிரார்த்தனை அவனுக்கே உரியது. இவர்கள் அவனையன்றி எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் இவர்களுக்கு எதையும் பதில் தரமாட்டார்கள். தண்ணீர் பக்கம் தன் இரு கைகளையும் அது (தானாகவே) தன் வாயை அடைவதற்காக விரிப்பவனைப் போன்றே தவிர (இவர்களின் செயல் இல்லை). அதுவோ (ஒரு போதும்) அதை அடையாது. (சிலைகளை வணங்குகின்ற) நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் தவிர இல்லை.
Ra'd 13:15
வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் ஆசையாகவும், நிர்ப்பந்தமாகவும் அல்லாஹ்விற்கே சிரம் பணிகிறார்கள்; இன்னும், காலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் அவர்களின் நிழல்களும் அவனுக்கே சிரம் பணிகின்றன.
Ra'd 13:16
(நபியே!) கூறுவீராக: “வானங்கள் இன்னும் பூமியின் இறைவன் யார்?” (நபியே!) கூறுவீராக: (அவன்) “அல்லாஹ்” என்று. (நபியே!) கூறுவீராக: “நீங்கள் அவனை அன்றி, (உங்களுக்கு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டீர்களா? அவர்கள் தங்களுக்கு தாமே நன்மை செய்வதற்கும் தீங்கு செய்வதற்கும் உரிமைபெற மாட்டார்கள். (நபியே!) கூறுவீராக: “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது, இருள்களும் ஒளியும் சமமாகுமா? அல்லது, அல்லாஹ்விற்கு இணைக(ளாக கற்பனை செய்யப்பட்ட தெய்வங்)ளை அவர்கள் ஏற்படுத்தினார்களே அவை அவனுடைய படைப்பைப் போன்று (எதையும்) படைத்திருக்கின்றனவா? அதனால், படைத்தல் (யார் மூலம் நிகழ்கிறது என்பது) இவர்களுக்கு குழப்பமடைந்து விட்டதா?” (நபியே! இதற்கு பதிலாக நீர்) கூறுவீராக: “அல்லாஹ்தான் எல்லாவற்றின் படைப்பாளன் ஆவான். இன்னும், அவன் (நிகரற்ற) ஒருவன், (அனைவரையும்) அடக்கி ஆளுபவன் ஆவான்.”
Ra'd 13:17
அவன் மேகத்திலிருந்து மழையை இறக்கினான். ஓடைகள் அவற்றின் அளவிற்கு (தண்ணீரால் நிரம்பி) ஓடின. ஆக, வெள்ளம், மிதக்கும் நுரைகளை சுமந்(து வந்)தது. மேலும், ஆபரணத்தை அல்லது (உலோகப்) பொருளை (செய்ய) நாடி நெருப்பில் (தங்கம், வெள்ளி, பித்தளை போன்றவற்றை) அவர்கள் பழுக்க வைப்பதிலும் அது போன்ற (அழுக்கு) நுரைகள் உண்டு. இப்படித்தான் சத்தியத்தையும் அசத்தியத்தையும் அல்லாஹ் விவரிக்கிறான். ஆக, நுரையோ வீணானதாக சென்று அழிந்துவிடுகிறது. ஆனால், மனிதனுக்கு எது பலனளிக்கிறதோ அதுவே பூமியில் (நிரந்தரமாக) தங்குகிறது. இவ்வாறே, அல்லாஹ் உவமைகளை விவரிக்கிறான்.
Ra'd 13:18
தங்கள் இறைவனு(டைய அழைப்பு)க்கு பதிலளித்தவர்களுக்கு மிக அழகிய நற்கூலி உண்டு. மேலும், எவர்கள் அவனு(டைய அழைப்பு)க்குப் பதிலளிக்கவில்லையோ அவர்களிடம் பூமியிலுள்ளவை அனைத்தும்; இன்னும், அதுபோன்றவையும் இருந்திருந்தால், (நரகத்திலிருந்து தப்பிக்க) அதை மீட்புத்தொகையாக கொடுத்து தப்பித்திருப்பார்கள். அவர்களுக்கு கடினமான விசாரணை உண்டு. இன்னும், அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது மிகக் கெட்ட தங்குமிடமாகும்.
Ra'd 13:19
ஆக, உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதெல்லாம் உண்மைதான் என்று அறிபவர் (அதை அறியாமல்) குருடராக இருப்பவரைப் போன்று ஆவாரா? (ஆகவே மாட்டார்.) நல்லுபதேசம் பெறுவதெல்லாம் நிறைவான அறிவுடையவர்கள்தான்.
Ra'd 13:20
அவர்கள் அல்லாஹ்வின் (பெயரால் தங்களுக்குள் செய்த) ஒப்பந்தத்தை நிறைவேற்றுவார்கள். இன்னும், உடன் படிக்கையை முறிக்க மாட்டார்கள்.
Ra'd 13:21
இன்னும், அவர்கள், எது சேர்க்கப்பட வேண்டும் என அல்லாஹ் ஏவினானோ அ(ந்த சொந்த பந்தத்)தை சேர்ப்பார்கள். இன்னும், அவர்கள், தங்கள் இறைவனை அஞ்சுவார்கள். மேலும், கடினமான விசாரணையைப் பயப்படுவார்கள்.
Ra'd 13:22
இன்னும், அவர்கள் தங்கள் இறைவனின் முகத்தை நாடி பொறுமையாக இருப்பார்கள்; மேலும், தொழுகையை நிலைநிறுத்துவார்கள்; இன்னும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் செய்வார்கள்; இன்னும், நல்லதைக் கொண்டு கெட்டதைத் தடுப்பார்கள். இ(த்தகைய)வர்கள், இவர்களுக்குத்தான் மறுமையின் அழகிய முடிவுண்டு.
Ra'd 13:23
(நல்ல முடிவு என்பது,) “அத்ன்” சொர்க்கங்கள் ஆகும். அதில் இவர்களும், இவர்களுடைய மூதாதைகளில், இவர்களுடைய மனைவிகளில், இவர்களுடைய சந்ததிகளில் நல்லவர்களாக இருந்தவர்களும் பிரவேசிப்பார்கள். ஒவ்வொரு வாசலில் இருந்தும் வானவர்கள் இவர்களிடம் பிரவேசிப்பார்கள்.
Ra'd 13:24
நீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக! ஆக, மறுமையின் அழகிய முடிவு மிகச் சிறந்ததாகும்.
Ra'd 13:25
மேலும், எவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை அது உறுதியான பின்னர் முறிக்கிறார்களோ; இன்னும், எது சேர்க்கப்பட வேண்டும் என அல்லாஹ் ஏவினானோ அ(ந்த சொந்த பந்தத்)தை துண்டிக்கிறார்களோ; இன்னும், பூமியில் விஷமம் (-கொலை, கொள்ளை, கலகம், பொது சொத்தில் கையாடல், ஊழல்) செய்கிறார்களோ ஆகிய இவர்கள் இவர்களுக்கு சாபம்தான். இன்னும், இவர்களுக்கு (கடுமையான தண்டனைகள் உடைய) மிகக் கெட்ட வீடு உண்டு.
Ra'd 13:26
அல்லாஹ், தான் நாடுகிறவர்களுக்கு வாழ்க்கை வசதியை விசாலப்படுத்துகிறான். (தான் நாடுகிறவர்களுக்கு அதை) சுருக்கிவிடுகிறான். மேலும், (மறுமையை நிராகரிக்கின்ற) அவர்கள் உலக வாழ்க்கையைக் கொண்டு மகிழ்கிறார்கள். உலக வாழ்க்கையோ மறுமையில் (கிடைக்கும் சுகத்தோடு ஒப்பிடப்படும்போது) ஒரு (சொற்ப) சுகமாகவே தவிர இல்லை.
Ra'd 13:27
நிராகரித்தவர்கள், “இவர் (-இத்தூதர்) மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிற) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். (நபியே) கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுபவர்களை வழிகெடுக்கிறான். இன்னும், (நிராகரிப்பிலிருந்து விலகி அவன் பக்கம்) திரும்பியவர்களுக்கு அவனை நோக்கி (வருவதற்கான நேரான பாதையை) வழிகாட்டுகிறான்.
Ra'd 13:28
(அவர்கள்தான்) நம்பிக்கை கொண்டவர்கள்; மேலும், அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதியடைகின்றன. “அல்லாஹ்வின் நினைவினால் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன” என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Ra'd 13:29
எவர்கள் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தார்களோ அவர்களுக்கு மகிழ்ச்சியும் கண்குளிர்ச்சியும் அழகிய மீளுமிடமும் உண்டு.
Ra'd 13:30
(நபியே! முன்பு தூதர்களை அனுப்பிய) இவ்வாறே, உம்மை (நம் தூதராக) ஒரு சமுதாயத்திடம் அனுப்பினோம். இவர்களுக்கு முன்னரும் பல சமுதாயங்கள் சென்றிருக்கின்றன. நாம் உமக்கு வஹ்யி அறிவித்ததை இவர்கள் முன் நீர் ஓதி காண்பிப்பதற்காக (உம்மை தூதராக அனுப்பினோம்). ஆனால், இவர்களோ ரஹ்மானை (-பேரருளாளனாகிய அல்லாஹ்வை) நிராகரிக்கிறார்கள். (நபியே) கூறுவீராக: “அவன்தான் என் இறைவன்; அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் மீது நம்பிக்கை வைத்து (அவனை மட்டுமே சார்ந்து) விட்டேன். இன்னும், அவன் பக்கமே என் திரும்புதல் இருக்கிறது.”
Ra'd 13:31
(நபியே! முன்னர் இறக்கப்பட்ட) ஒரு வேதம், அதன் மூலம் மலைகள் நகர்த்தப்பட்டிருந்தால்; அல்லது, அதன் மூலம் பூமி துண்டு துண்டாக்கப்பட்டிருந்தால்; அல்லது, அதன் மூலம் மரணித்தவர்கள் பேசவைக்கப்பட்டிருந்தால் (உங்களுக்கு இறக்கப்பட்ட இவ்வேதத்தின் மூலமும் அப்படி செய்யப்பட்டிருக்கும்). மாறாக, அதிகாரம் எல்லாம் அல்லாஹ்விற்குரியதே! ஆகவே, அல்லாஹ் நாடினால் மக்கள் அனைவரையும் நேர்வழிபடுத்தியிருப்பான் என்பதை நம்பிக்கை கொண்டவர்கள் அறியவில்லையா? (மக்காவைச் சேர்ந்த இந்த) நிராகரிப்பாளர்கள் செய்ததின் காரணமாக அவர்களை ஒரு திடுக்கம் அடைந்து கொண்டே இருக்கும். அல்லது, அவர்களின் ஊருக்கு அருகாமையில் நீர் (உம் படையுடன் சென்று) தங்குவீர். இறுதியாக, அல்லாஹ்வின் வாக்குறுதி வரும். (விரைவில் அவர்களை நீர் வெற்றி கொள்வீர்.) நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதியை மாற்றமாட்டான்.
Ra'd 13:32
மேலும், (நபியே!) உமக்கு முன்னர் (பல) தூதர்கள் திட்டவட்டமாக கேலி செய்யப்பட்டனர். ஆக, நிராகரித்தவர்களுக்கு (அவர்களது அவகாசத்தை) நீட்டிக்கொடுத்தேன். பிறகு, (என் தண்டனையால்) அவர்களைப் பிடித்தேன். ஆக, என் தண்டனை எப்படி இருந்தது?
Ra'd 13:33
ஆக, ஒவ்வோர் ஆன்மாவையும் - அது செய்ததற்கு ஏற்ப - அதை நிர்வகிப்பவன் எவ்வித சக்தியுமற்ற கற்பனை தெய்வங்களுக்கு சமமாவானா? இன்னும், அவர்கள் அல்லாஹ்விற்கு இணை(யாக கற்பனை செய்யப்பட்ட தெய்வங்)களை ஏற்படுத்தினர்! (நபியே!) கூறுவீராக! “(நீங்கள் வணங்கும்) அவற்றுக்கு நீங்கள் பெயரிடுங்கள். (அவற்றுக்கு இறைவன் என்று உங்களால் பெயரிட முடியுமா?) அல்லது, பூமியில் அவன் அறியாததை; அல்லது, பொய்யான (வீணான) சொல்லை அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அதுவும் முடியாது.)” மாறாக! நிராகரித்தவர்களுக்கு - அவர்களுடைய சூழ்ச்சி - அலங்கரிக்கப்பட்டது. இன்னும், (அவர்கள் நேரான) பாதையிலிருந்து தடுக்கப்பட்டனர். மேலும், எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு, நேர்வழிகாட்டுபவர் எவரும் இல்லை.
Ra'd 13:34
அவர்களுக்கு உலக வாழ்க்கையில் தண்டனை உண்டு. இன்னும், (அவர்களுக்கு) மறுமையின் தண்டனைதான் மிகச் சிரமமாக இருக்கும். மேலும், அல்லாஹ்விடமிருந்து அவர்களை பாதுகாப்பவர் எவரும் இல்லை.
Ra'd 13:35
(அல்லாஹ்வை) அஞ்சியவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மையாவது, அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அதன் உணவுகளும் அதன் நிழலும் (என்றுமே) நிலையானவை. இது (அல்லாஹ்வை) அஞ்சியவர்களின் அழகிய முடிவாகும். மேலும், நிராகரிப்பாளர்களின் முடிவோ நரகம்தான்!
Ra'd 13:36
(நபியே!) நாம் எவர்களுக்கு வேதத்தை கொடுத்தோமோ அவர்க(ளில் உம்மை நம்பிக்கை கொண்டவர்க)ள் உமக்கு இறக்கப்பட்டதைக் கொண்டு மகிழ்வார்கள். மேலும், இ(வ்வேதத்)தில் சிலவற்றை மறுப்பவர்களும் (உமக்கு எதிரான) பிரிவுகளில் உண்டு. (நபியே!) கூறுவீராக: “எனக்கு கட்டளையிடப்பட்டதெல்லாம் அல்லாஹ்வை நான் வணங்குவதற்கும் அவனுக்கு நான் இணைவைக்காமல் இருப்பதற்கும்தான்; அவன் பக்கமே நான் (உங்களை) அழைக்கிறேன்; இன்னும், அவன் பக்கமே என் திரும்புமிடம் இருக்கிறது.”
Ra'd 13:37
(நபியே!) இவ்வாறுதான் நாம் இ(ந்த மார்க்கத்)தை (தெளிவான) சட்டமாக அரபி மொழியில் இறக்கினோம். இன்னும், உமக்கு கல்வி வந்ததற்குப் பின்னர் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து உமக்கு உதவியாளரும் இருக்க மாட்டார், இன்னும் பாதுகாவலரும் இருக்க மாட்டார்.
Ra'd 13:38
மேலும், (நபியே!) உமக்கு முன்னர் (பல) தூதர்களை திட்டவட்டமாக அனுப்பி இருக்கிறோம். இன்னும், அவர்களுக்கு மனைவிகளையும் சந்ததியையும் ஏற்படுத்தினோம். மேலும், அல்லாஹ்வின் அனுமதியினால் தவிர ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவது எந்த தூதராலும் முடியாது. ஒவ்வொரு தவணைக்கும் (அது எழுதப்பட்ட) ஒரு நூல் இருக்கிறது.
Ra'd 13:39
(அதில்) அவன் நாடியதை (தவணை வந்தவுடன் அதை நிகழ்த்தி முடித்து) அழித்து விடுகிறான்; இன்னும், (அவன் நாடியதை தவணை வரும் வரை அதில்) தரிபடுத்தி வைக்கிறான். மேலும், அவனிடம்தான் விதியுனுடைய மூல நூல் இருக்கிறது.
Ra'd 13:40
(நபியே!) அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை உமக்கு நிச்சயமாக நாம் காண்பித்தால் (அது நமது நாட்டப்படியே நடந்தது); அல்லது, (அதற்கு முன்பே) நாம் உம்மை உயிர் கைப்பற்றிக் கொண்டால் (அதுவும் நமது நாட்டப்படியே நடந்ததாகும்). உம்மீது (சுமத்தப்பட்ட) கடமை எல்லாம் (இந்த மார்க்கத்தை எல்லோருக்கும்) எடுத்துரைப்பதுதான்! மேலும், விசாரணை செய்வதோ நம்மீது கடமையாக இருக்கிறது. (பாவிகளை நாம் நமது நாட்டப்படிதான் தண்டிப்போம். உமது விருப்பப்படியோ, அவர்களின் விருப்பப்படியோ இல்லை.)
Ra'd 13:41
நிச்சயமாக நாம் (அவர்கள் வசிக்கின்ற) பூமியை அதன் ஓரங்களிலிருந்து குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ் (தனது அடியார்களுக்கு மத்தியில்) தீர்ப்பளிக்கிறான். அவனுடைய தீர்ப்பைத் தடுப்பவர் யாரும் அறவே இல்லை. மேலும், அவன் (முன்னோர், பின்னோரை) விசாரிப்பதில் மிக தீவிரமானவன்.
Ra'd 13:42
(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (தூதர்களுக்கு எதிராக) திட்டமாக சூழ்ச்சி செய்தனர். ஆக, (நிறைவேறுகின்ற) சூழ்ச்சி அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியதாகும். (அவனது சூழ்ச்சிதான் நிறைவேறும்.) ஒவ்வோர் ஆன்மாவும் செய்வதை அவன் நன்கறிவான். மேலும், எவருக்கு மறுமையின் அழகிய முடிவு உண்டு என்பதை நிராகரிப்பவர்கள் விரைவில் அறிவார்கள்.
Ra'd 13:43
மேலும், (நபியே!) “நீர் தூதராக இருக்கவில்லை” என்று நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: “எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் அல்லாஹ் போதுமான சாட்சியாக இருக்கிறான். இன்னும், வேதத்தின் ஞானம் உள்ளவர்களும் போதுமான சாட்சிகளாக இருக்கின்றனர்.”
İbrahim 14:1
:, அலிஃப் லாம் றா. (நபியே!) இது ஒரு வேதம். மக்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியின்படி இருள்களிலிருந்து ஒளியின் பக்கம்; மிகைத்தவன், மகா புகழாளன் உடைய பாதையின் பக்கம் நீர் வெளியேற்றுவதற்காக இதை உமக்கு இறக்கி தந்தோம்.
İbrahim 14:2
அல்லாஹ், வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தமானவையாகும். நிராகரிப்பாளர்களுக்கு கடினமான தண்டனையின் கேடு உண்டாகுக!
İbrahim 14:3
அவர்கள் மறுமையை விட உலக வாழ்க்கையை விரும்புகிறார்கள்; இன்னும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களை) தடுக்கிறார்கள்; மேலும், அதில் கோணலை(யும் குறையையும் உண்டாக்க) தேடுகிறார்கள். அவர்கள் தூரமான வழிகேட்டில் உள்ளனர்.
İbrahim 14:4
(நபியே!) எந்த ஒரு தூதரையும் அவருடைய மக்களின் மொழியிலேயே தவிர நாம் அனுப்பவில்லை. நோக்கம், அவர் அவர்களுக்கு (மார்க்கத்தை) தெளிவுபடுத்த வேண்டும் என்பதாகும். ஆக, அல்லாஹ், தான் நாடுபவர்களை வழிகெடுக்கிறான். இன்னும், தான் நாடுபவர்களை நேர்வழி செலுத்துகிறான். மேலும், அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.
İbrahim 14:5
திட்டவட்டமாக மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் (அவரது மக்களிடம்) நாம் அனுப்பினோம், (மூஸாவே!) “உம் சமுதாயத்தை இருள்களில் இருந்து ஒளியின் பக்கம் வெளியேற்றுவீராக! இன்னும், அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக! மிக பொறுமையாளர், மிக்க நன்றியறிபவர் எல்லோருக்கும் நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
İbrahim 14:6
மூஸா தன் சமுதாயத்திற்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “(என் மக்களே!) உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூருங்கள், அவன் உங்களை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றியபோது (உஙகள் மீது அருள்புரிந்தான்). அவர்களோ கடினமான தண்டனையால் உங்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்தார்கள். இன்னும், உங்கள் ஆண் பிள்ளைகளை அறுத்(து கொலை செய்)தார்கள். மேலும், உங்கள் பெண் (பிள்ளை)களை வாழவிட்டார்கள். இதில் உங்கள் இறைவனிடமிருந்து மகத்தான சோதனை (உங்களுக்கு) இருந்தது.”
İbrahim 14:7
மேலும், “நீங்கள் நன்றி செலுத்தினால் நிச்சயமாக (என் அருளை) உங்களுக்கு அதிகப்படுத்துவேன்; இன்னும், நீங்கள் நிராகரித்தால் நிச்சயமாக என் தண்டனை (உங்களுக்கு) கடுமையானதாக இருக்கும்” என்று உங்கள் இறைவன் அறிவித்த சமயத்தை நினைவு கூருங்கள்!
İbrahim 14:8
இன்னும், மூஸா கூறினார்: “நீங்களும் பூமியிலுள்ள அனைவரும் நிராகரித்தாலும் (அவனுக்கு ஒரு குறையும் இல்லை. ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் நிறைவானவன் (தேவையற்றவன்), மகா புகழாளன்” (என்று கூறினார்).
İbrahim 14:9
உங்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்கள்; ஆது மக்கள்; ஸமூது மக்கள்; இன்னும், அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய சரித்திரம் உங்களுக்கு வரவில்லையா? அல்லாஹ்வைத் தவிர (யாரும்) அவர்களை அறியமாட்டார். அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். ஆக, அவர்கள் (கோபத்தால்) தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கமே திருப்பினர். இன்னும், (தூதர்களை நோக்கி) “நிச்சயமாக நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் நிராகரித்தோம். மேலும், நீங்கள் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அதில் நிச்சயமாக நாங்கள் ஆழமான சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
İbrahim 14:10
“வானங்கள் இன்னும் பூமியின் படைப்பாளனாகிய அல்லாஹ்வின் விஷயத்திலா (உங்களுக்கு) சந்தேகம்? அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பதற்கும்; மேலும், ஒரு குறிக்கப்பட்ட காலம் வரை உங்களை (இவ்வுலகத்தில் கண்ணியமாக வாழ) விட்டுவைப்பதற்கும் அவன் உங்களை அழைக்கிறான்” என்று அவர்களுடைய தூதர்கள் (அவர்களிடம்) கூறினார்கள். “எங்களைப் போன்ற (சாதாரண) மனிதர்களாகவே தவிர நீங்கள் இல்லை. எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டு எங்களை நீங்கள் தடுக்க(வா) நாடுகிறீர்கள்(?). ஆகவே, தெளிவான ஆதாரத்தை நம்மிடம் கொண்டு வாருங்கள்” என்று (அம்மக்கள்) கூறினார்கள்.
İbrahim 14:11
அவர்களுடைய தூதர்கள் அவர்களுக்கு கூறினார்கள்: “உங்களைப் போன்ற மனிதர்களாகவே தவிர நாங்கள் இல்லை. எனினும், அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடுபவர் மீது (தனது வஹ்யை இறக்கி) அருள் புரிகிறான். மேலும், அல்லாஹ்வுடைய அனுமதியினாலே தவிர உங்களிடம் ஓர் ஆதாரத்தை நாம் கொண்டு வருவது எங்களுக்கு முடியாது. இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)க்கவும்.”
İbrahim 14:12
“இன்னும், நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்காதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன்தான் எங்களுக்கு எங்கள் (சரியான) பாதைகளில் நேர்வழி நடத்தினான். மேலும், நீங்கள் எங்களை துன்புறுத்துவதை நிச்சயமாக நாங்கள் பொறுத்துக் கொள்வோம். ஆகவே, நம்பிக்கை வைப்பவர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கட்டும்.”
İbrahim 14:13
மேலும், நிராகரித்தவர்கள் தங்கள் தூதர்களிடம், “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றுவோம்; அல்லது, எங்கள் மார்க்கத்தில் நீங்கள் நிச்சயம் திரும்பி விடவேண்டும்” என்று கூறினார்கள். ஆக, அவர்களுடைய இறைவன், “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களை அழிப்போம்” என்று அவர்களுக்கு (தூதர்களுக்கு) வஹ்யி அறிவித்தான்.
İbrahim 14:14
“இன்னும், அவர்களுக்குப் பின்னர் உங்களை (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் வசிக்க செய்வோம். இ(ந்த வாக்கான)து, எவர் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை பயந்தாரோ; இன்னும், என் எச்சரிக்கையை பயந்தாரோ அவருக்காகும்.”
İbrahim 14:15
இன்னும், அவர்கள் வெற்றி பெற முயற்சித்தார்கள். (ஆனால்) பிடிவாதக்காரர்கள் வம்பர்கள் எல்லோரும் (இறுதியில்) அழிந்து விட்டனர்.
İbrahim 14:16
அவனுக்கு முன்னால் (அவன் மரணித்துவிட்டால்) ஜஹன்னம் (-நரகம்) இருக்கும். இன்னும், சீழ் நீரிலிருந்து அவன் நீர் புகட்டப்படுவான்.
İbrahim 14:17
அதை அவன் மிடறு மிடறாக குடிப்பான். அதை இலகுவாக அவன் குடித்து விடமாட்டான். மேலும், ஒவ்வொரு இடத்திலிருந்தும் மரணம் அவனுக்கு வரும். ஆனால், அவன் இறந்து விடமாட்டான். இன்னும், அவனுக்கு முன்னால் (கடினமான) தண்டனை (அவனை காத்து கொண்டு) இருக்கிறது.
İbrahim 14:18
தங்கள் இறைவனை நிராகரித்தவர்களுடைய (செயல்களின்) உதாரணம், புயல் காலத்தில் காற்று கடுமையாக அடித்துச் சென்ற சாம்பலைப்போல் அவர்களுடைய அமல்கள் இருக்கின்றன! தாங்கள் செய்ததில் (இருந்து நன்மை) எதையும் (அடைய) அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். இதுதான் (வெகு) தூரமான வழிகேடாகும்.
İbrahim 14:19
நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும் பூமியையும் உண்மையான நோக்கத்திற்கே படைத்துள்ளான் என்பதை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? (மக்களே!) அவன் நாடினால் உங்களைப் போக்கி விடுவான். இன்னும், (உங்களுக்கு பதிலாக) புதியதோர் படைப்பைக் கொண்டு வருவான்.
İbrahim 14:20
மேலும், இது அல்லாஹ்விற்கு சிரமமானதாக இல்லை.
İbrahim 14:21
மேலும், (மறுமையில்) அல்லாஹ்விற்கு முன் அனைவரும் வெளிப்படுவார்கள். (தலைவர்கள் என) பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி, “நிச்சயமாக நாங்கள் உங்களை பின்பற்றுபவர்களாக இருந்தோம். ஆகவே, அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து எதையும் நீங்கள் (இப்போது) எங்களை விட்டு தடுப்பீர்களா?” என்று (அவர்களை பின்பற்றிய) பலவீனர்கள் கூறுவார்கள். “(தண்டனையிலிருந்து தப்பிக்க) அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்டினால் நாங்களும் உங்களுக்கு வழிகாட்டுவோம். (தண்டனையைப் பற்றி) நாம் பதட்டப்பட்டால் என்ன? அல்லது, நாம் (அதை சகித்துக் கொண்டு) பொறுமையாக இருந்தால் என்ன? எல்லாம் நமக்கு சமமே. (இதிலிருந்து) தப்புமிடம் நமக்கு அறவே இல்லை!” என்று (தலைவர்கள்) கூறுவார்கள்.
İbrahim 14:22
மேலும், காரியங்கள் (தீர்ப்புக் கூறி) முடிக்கப்பட்டபோது ஷைத்தான் கூறுவான்: “நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்கை வாக்களித்தான். இன்னும், நான் உங்களுக்கு வாக்களித்தேன். ஆனால், நான் உங்களை வஞ்சித்தேன். இன்னும், உங்கள் மீது எனக்கு அறவே அதிகாரம் ஏதும் இருக்கவில்லை. எனினும், உங்களை (பாவத்தின் பக்கம்) அழைத்தேன்; எனக்கு நீங்கள் பதில் தந்தீர்கள்; ஆகவே, என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நிந்தித்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு உதவுபவனாக இல்லை, நீங்களும் எனக்கு உதவுபவர்களாக இல்லை. முன்னரே நீங்கள் என்னை (அல்லாஹ்விற்கு) இணை ஆக்கியதையும் நிச்சயமாக நான் நிராகரித்தேன். நிச்சயமாக அநியாயக்காரர்கள், - துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு.”
İbrahim 14:23
(அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்கள் சொர்க்கங்களில் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் தங்கள் இறைவனின் அனுமதிப்படி அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். அதில் அவர்களின் முகமன் ஸலாம் ஆகும்.
İbrahim 14:24
(நபியே! ‘கலிமதுத் தவ்ஹீத்’ என்னும்) நல்லதொரு வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு ஓர் உதாரணத்தை விவரிக்கிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தை போன்றாகும். அ(ந்)த (மரத்தி)ன் வேர் உறுதியானதும்; அதன் கிளை (உயரமாக) வானத்திலும் இருக்கிறது.
İbrahim 14:25
அது தன் இறைவனின் அனுமதியினால் எல்லாக் காலத்திலும் தன் கனிகளைக் கொடுக்கிறது. மனிதர்களுக்கு, - அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக - அல்லாஹ் உதாரணங்களை விவரிக்கிறான்.
İbrahim 14:26
(நிராகரிப்பவர்களின்) கெட்ட வாசகத்திற்கு உதாரணம் ஒரு கெட்ட மரத்தை போன்றாகும். அ(ந்த மரமான)து பூமியின் மேலிருந்து அறுபட்டு விட்டது. அதற்கு அறவே நிலைத்தன்மை இல்லை.
İbrahim 14:27
நம்பிக்கை கொண்டவர்களை உலக வாழ்க்கையிலும் மறுமையிலும், (லாயிலாஹ இல்லல்லாஹ் எனும்) உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான். இன்னும், அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகெடுக்கிறான்; இன்னும், அல்லாஹ், தான் நாடுவதைச் செய்கிறான்.
İbrahim 14:28
(நபியே!) அல்லாஹ்வின் அருளை நிராகரிப்பாக மாற்றி, தங்கள் சமுதாயத்தை அழிவு இல்லத்தில் தங்கவைத்தவர்களை நீர் பார்க்கவில்லையா?
İbrahim 14:29
அதுதான் நரகமாகும். அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள்; இன்னும், அது தங்குமிடத்தால் மிகக் கெட்டதாகும்.
İbrahim 14:30
இன்னும், அவர்கள் அல்லாஹ்விற்கு (பல) இணை (தெய்வங்)களை ஏற்படுத்தினர். (அதன்) நோக்கம், அவனுடைய பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதாகும். (நபியே!) கூறுவீராக! “(இவ்வுலகில்) நீங்கள் சுகமனுபவியுங்கள். நிச்சயமாக உங்கள் மீளுமிடம் நரகத்தின் பக்கம்தான்.”
İbrahim 14:31
(நபியே! என் மீது) நம்பிக்கைகொண்ட என் அடியார்களுக்கு கூறுவீராக: “அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தட்டும்; இன்னும், நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தர்மம் செய்யட்டும் ஒரு நாள் வருவதற்கு முன்னதாக. அந்நாளில் கொடுக்கல் வாங்கலும் நட்பும் இருக்காது.”
İbrahim 14:32
அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான்; இன்னும், வானத்தில் இருந்து மழையை இறக்கி, அதன் மூலம் உங்களுக்கு உணவாக கனிகளில் (பலவற்றை) வெளிப்படுத்தினான்; இன்னும், உங்களுக்கு கப்பலை அவனுடைய கட்டளையினால் கடலில் செல்வதற்காக வசப்படுத்தினான்; இன்னும், உங்களுக்கு ஆறுகளை (நீங்கள் அவற்றிலிருந்து பயனடைவதற்காக) வசப்படுத்தி கொடுத்தான்.
İbrahim 14:33
இன்னும், (அவன்) உங்களுக்கு சூரியனையும் சந்திரனையும் தொடர்ந்து இயங்கக்கூடியதாக வசப்படுத்தி கொடுத்தான். இன்னும், இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தி கொடுத்தான்.
İbrahim 14:34
இன்னும், நீங்கள் அவனிடம் கேட்ட எல்லாவற்றிலிருந்தும் உங்களுக்கு அவன் கொடுத்தான். மேலும், அல்லாஹ்வின் அருளை நீங்கள் எண்ணினால் அதை நீங்கள் எண்ணி முடிக்க முடியாது! நிச்சயமாக (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாத) மனிதன் மகா அநியாயக்காரன், மிக நன்றி கெட்டவன் ஆவான்.
İbrahim 14:35
“என் இறைவா! இவ்வூரை பாதுகாப்புமிக்கதாக ஆக்கு! மேலும், என்னையும் என் பிள்ளைகளையும் சிலைகளை நாங்கள் வணங்குவதை விட்டும் தூரமாக்கி வை!” என்று இப்ராஹீம் பிரார்த்தனை செய்ததை நினைவு கூர்வீராக!
İbrahim 14:36
“என் இறைவா! நிச்சயமாக இவை மக்களில் பலரை வழி கெடுத்தன. ஆகவே, எவர் என்னைப் பின்பற்றினாரோ நிச்சயமாக அவர் என்னை சேர்ந்தவர்; மேலும், எவர் எனக்கு மாறு செய்தாரோ, நிச்சயமாக நீ மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.”
İbrahim 14:37
“எங்கள் இறைவா! நிச்சயமாக நான் என் சந்ததிகளில் சிலரை விளைச்சல் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில், புனிதமான உன் வீட்டின் அருகில் தங்க வைத்தேன். எங்கள் இறைவா! அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவதற்கு அவர்களுக்கு அருள் புரி! எங்கள் இறைவா! ஆகவே, மக்களின் உள்ளங்களை அவர்கள் பக்கம் ஆசைப்படக்கூடியதாக ஆக்கு! இன்னும், அவர்கள் (உனக்கு) நன்றி செலுத்துவதற்காக கனிகளிலிருந்து அவர்களுக்கு உணவளி!”
İbrahim 14:38
“எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பதையும், நாங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நீ நன்கறிவாய். பூமியிலும் வானத்திலும் எதுவும் அல்லாஹ்விற்கு மறைந்ததாக இல்லை.”
İbrahim 14:39
“வயோதிகத்தில் எனக்கு இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் வழங்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரியதாகும். நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன் ஆவான்.”
İbrahim 14:40
“என் இறைவா! என்னை தொழுகையை நிலைநிறுத்துபவனாக ஆக்கு! இன்னும் என் சந்ததிகளிலும் தொழுகையை நிலைநிறுத்துபவர்களை ஏற்படுத்து!. எங்கள் இறைவா! இன்னும், என் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்!”
İbrahim 14:41
“எங்கள் இறைவா! விசாரணை நடக்கின்ற நாளில் எனக்கும், என் தாய் தந்தைக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் மன்னிப்பளி!”
İbrahim 14:42
(நபியே!) அக்கிரமக்காரர்கள் செய்வதை கவனிக்காதவனாக அல்லாஹ் இருக்கிறான் என்று எண்ணி விடாதீர்! அவன் அவர்களை (தண்டிக்காமல்) தாமதிப்பதெல்லாம் ஒரு நாளுக்காகத்தான். பார்வைகள் அதில் கூர்ந்து விழித்திடும்.
İbrahim 14:43
(அந்நாளில் அந்த அநியாயக்காரர்கள்) விரைந்தவர்களாக, தங்கள் தலைகளை உயர்த்தியவர்களாக வருவர். அவர்களின் பார்வை அவர்களிடம் திரும்பாது; மேலும், அவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) வெற்றிடமாக ஆகிவிடும்.
İbrahim 14:44
(நபியே!) மேலும், மக்களை அவர்களுக்கு தண்டனை வரும் ஒரு நாளைப் பற்றி அச்சமூட்டி எச்சரிப்பீராக! ஆக, (அந்நாளில்) அநியாயக்காரர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! சமீபமான ஒரு தவணை (வரும்) வரை எங்களை (இன்னும்) பிற்படுத்து! நாங்கள் உன் அழைப்புக்கு பதிலளிப்போம்; இன்னும், தூதர்களைப் பின்பற்றுவோம்.” (இறைவன் கூறுவான்:) “உங்களுக்கு (உலகத்தில்) அழிவே இல்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்(து மறுமையை நம்பா)திருக்கவில்லையா?”
İbrahim 14:45
“இன்னும், நீங்கள் தங்களுக்கு தாமே தீங்கிழைத்தவர்களுடைய வசிப்பிடங்களில் வசித்துக் கொண்டிருந்தீர்கள் அல்லவா? மேலும், நாம் அவர்களுக்கு எப்படி செய்தோம் என்பது உங்களுக்கு தெளிவாக தெரிந்து இருந்தது. இன்னும், உங்களுக்கு உதாரணங்களை விவரித்தோம்.”
İbrahim 14:46
மேலும், திட்டமாக அவர்கள் தங்கள் சூழ்ச்சியை செய்(து முடித்)தனர். அல்லாஹ்விடம் அவர்களுடைய சூழ்ச்சி அறியப்பட்டதாக இருக்கிறது. அவர்களுடைய சூழ்ச்சி, அதனால் மலைகள் பெயர்த்துவிடும்படி இருந்தாலும் சரியே! (அல்லாஹ்வின் வல்லமைக்கு முன் அது ஒன்றுமே இல்லை.)
İbrahim 14:47
ஆக, (நபியே!) அல்லாஹ் தனது தூதர்களு(க்கு அளித்த அவனு)டைய வாக்கை மீறக்கூடியவன் என்று ஒருபோதும் நீர் நினைத்து விடாதீர். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பழிவாங்குபவன் ஆவான்.
İbrahim 14:48
பூமி வேறு பூமியாகவும் வானங்களும் (வேறு வானங்களாக) மாற்றப்பட்டு, ஒரே ஒருவனான, அடக்கி ஆளுபவனான அல்லாஹ்விற்கு (முன்) அவர்கள் வெளிப்படும் நாளில் (அவன் அநியாயக்காரர்களிடம் பழிவாங்குவான்).
İbrahim 14:49
மேலும், அந்நாளில் குற்றவாளிகளை சங்கிலிகளில் கட்டப்பட்டவர்களாக காண்பீர்.
İbrahim 14:50
அவர்களுடைய சட்டைகள் தாரினால் ஆனவையாக இருக்கும். இன்னும், அவர்களுடைய முகங்களை நரக நெருப்பு சூழ்ந்து விடும்.
İbrahim 14:51
ஒவ்வொரு ஆன்மாவுக்கும், - அது செய்தவற்றின் கூலியை அல்லாஹ் கொடுப்பதற்காகவே (மறுமை நாளை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான்). நிச்சயமாக அல்லாஹ் (தனது அடியார்களை) விசாரி(த்து கூலி கொடு)ப்பதில் மிகத் தீவிரமானவன்.
İbrahim 14:52
இ(வ்வேதமான)து, மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் செய்தியாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும்; இன்னும், அவன்தான் வணக்கத்திற்குரிய ஒரே இறைவனாக இருக்கிறான் என்பதை அவர்கள் அறிவதற்காகவும்; இன்னும், நிறைவான அறிவுடையவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் (இவ்வேதத்தை தன் தூதருக்கு அவன் இறக்கினான்).
Hicr 15:1
அலிஃப் லாம் றா. (நபியே!) இவை, (முந்திய) வேதங்களுடைய; இன்னும், தெளிவான குர்ஆனுடைய வசனங்களாகும்.
Hicr 15:2
நிராகரித்தவர்கள், தாங்கள் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே! என்று (மறுமையில்) பெரிதும் ஆசைப்படுவார்கள்.
Hicr 15:3
(நபியே!) அவர்களை விடுவீராக! அவர்கள் உண்ணட்டும்; இன்னும், அவர்கள் சுகம் அனுபவிக்கட்டும்; மேலும். அவர்களுடைய ஆசைகள் (மறுமையை விட்டும்) அவர்களை திசை திருப்பட்டும். ஆக, (அவர்கள் தங்களது கெட்ட முடிவை) விரைவில் அறிவார்கள்.
Hicr 15:4
எந்த ஓர் ஊரையும் அதற்கென குறிப்பிட்ட ஒரு தவணை இருந்தே தவிர நாம் (உடனே அதை) அழிக்கவில்லை.
Hicr 15:5
எந்த ஒரு சமுதாயமும் தங்களது தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
Hicr 15:6
மேலும், (உம்மை நோக்கி) “ஓ அறிவுரை (நிறைந்த குர்ஆன்) இறக்கப்பட்டவரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான்” என்று கூறுகிறார்கள்.
Hicr 15:7
“நீர் உண்மையாளர்களில் ஒருவராக இருந்தால், நம்மிடம் (உமக்கு சாட்சிகளாக) வானவர்களை நீர் கொண்டு வரலாமே?”
Hicr 15:8
உண்மை(யான தண்டனை)யைக் கொண்டே தவிர வானவர்களை நாம் (பூமிக்கு) இறக்க மாட்டோம். மேலும், (அப்படி இறக்கி, அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால்) அப்போது அவர்கள் அவகாசம் கொடுக்கப்பட்டவர்களாக இருக்கமாட்டார்கள்.
Hicr 15:9
நிச்சயமாக நாம்தான் இந்த அறிவுரையை (உம்மீது) இறக்கினோம். இன்னும், நிச்சயமாக நாம் அதை பாதுகாப்பவர்கள் ஆவோம்.
Hicr 15:10
(நபியே!) உமக்கு முன்பு முன்னோர்களின் (பல) பிரிவுகளில் திட்ட வட்டமாக (பல தூதர்களை) அனுப்பினோம்.
Hicr 15:11
அவர்களிடம் எந்த ஒரு (இறைத்) தூதரும் வருவதில்லை, அவரை அவர்கள் கேலி செய்பவர்களாக இருந்தே தவிர.
Hicr 15:12
(முன்னர் நாம் எப்படி செய்தோமோ) அதுபோன்றே, அ(ந்த நிராகரிப்பு தனத்)தை (இந்த) குற்றவாளிகளின் உள்ளங்களிலும் புகுத்துகிறோம்.
Hicr 15:13
(ஆகவே,) அவர்கள் இவரை நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். மேலும், முன்னோரின் வழிமுறை திட்டமாக சென்றுவிட்டது. (அவர்களைப் போலவே இவர்களும் அழிந்து போவார்கள்.)
Hicr 15:14
அவர்கள் மீது வானத்திலிருந்து ஒரு வாசலை நாம் திறந்து, அதில் பகல் நேரத்தில் அவர்கள் ஏறினாலும்,
Hicr 15:15
அவர்கள் (நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். மாறாக), “எங்கள் கண்கள் நிச்சயம் மயக்கப்பட்டு விட்டன; மாறாக, நாங்கள் மந்திரம் செய்யப்பட்ட மக்களாக ஆகிவிட்டோம்” என்றே கூறுவார்கள்.
Hicr 15:16
திட்டவட்டமாக வானத்தில் பெரிய நட்சத்திரங்களை அமைத்து, பார்ப்பவர்களுக்கு அதை அலங்கரித்தோம்.
Hicr 15:17
இன்னும், விரட்டப்பட்ட எல்லா ஷைத்தான்களை விட்டும் அ(ந்த வானத்)தைப் பாதுகாத்தோம்.
Hicr 15:18
எனினும், எவன் ஒட்டுக் கேட்பானோ, அவனை பிரகாசமான எரி நட்சத்திரம் பின் தொடரும்.
Hicr 15:19
இன்னும், பூமி - அதை நாம் விரித்தோம்; மேலும், அதில் அசையாத மலைகளை நிறுவினோம்; மேலும், அதில் (நிறுவையில்) நிறுக்கப்படும் (அளவையில் அளக்கப்படும்) எல்லா வகையான உணவுகளையும் முளைக்க வைத்தோம்.
Hicr 15:20
இன்னும், அதில் உங்களுக்கும், மேலும், எவர்களுக்கு நீங்கள் உணவளிப்பவர்களாக இல்லையோ அவர்களுக்கும் (நாம்தான்) வாழ்வாதாரங்களை அமைத்(து கொடுத்)தோம்.
Hicr 15:21
எப்பொருளும் இல்லை, அதன் பொக்கிஷங்கள் நம்மிடம் இருந்தே தவிர. மேலும், குறிப்பிடப்பட்ட ஓர் அளவிலே தவிர அதை நாம் (பூமிக்கு) இறக்க மாட்டோம்.
Hicr 15:22
(மேகத்தை) கருக்கொள்ள வைக்கக்கூடிய காற்றுகளை அனுப்புகிறோம். ஆக, அம்மேகத்திலிருந்து மழை நீரை இறக்கி, அதை உங்களுக்கு நீர் புகட்டுகிறோம். மேலும், அதை நீங்கள் சேகரிப்பவர்களாக இல்லை. (நாமே அதை உங்களுக்காக பூமியில் சேகரித்து வைக்கிறோம்.)
Hicr 15:23
நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கிறோம்; இன்னும், மரணிக்க வைக்கிறோம். மேலும், நாமே (அனைத்திற்கும்) வாரிசுகள் (-இறுதி உரிமையாளர்கள்) ஆவோம்!
Hicr 15:24
திட்டவட்டமாக உங்களில் முன் சென்றவர்களையும் நாம் அறிந்திருக்கிறோம்; இன்னும், (உங்களில்) பின் வருபவர்களையும் நாம் அறிந்திருக்கிறோம்.
Hicr 15:25
இன்னும், (நபியே!) நிச்சயமாக உம் இறைவன்தான் இவர்களை (எல்லாம் மறுமையில் உயிர்ப்பித்து) ஒன்று திரட்டுவான். நிச்சயமாக அவன் மகா ஞானவான், நன்கறிந்தவன்.
Hicr 15:26
மேலும், திட்டவட்டமாக பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து மனிதனைப் படைத்தோம்.
Hicr 15:27
இன்னும், (மனிதனைப் படைப்பதற்கு) முன்பே ஜின்களைக் கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம்.
Hicr 15:28
மேலும், (நபியே!) நிச்சயமாக நான், பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்கப்போகிறேன்” என்று உம் இறைவன் வானவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருவீராக!
Hicr 15:29
ஆக, “நான் அவரை செம்மைபடுத்தி, அவரி(ன் உடலி)ல் நான் படைத்த உயிரிலிருந்து ஊதினால் அவருக்கு (முன்) சிரம் பணிந்தவர்களாக விழுங்கள்!” (என்று வானத்தில் உள்ளோருக்கு நாம் கட்டளையிட்டோம்.)
Hicr 15:30
ஆக, (அவ்வாறே) வானவர்கள் எல்லோரும், அனைவரும் சிரம் பணிந்தார்கள்,
Hicr 15:31
இப்லீஸைத் தவிர. சிரம் பணிந்தவர்களுடன் ஆகுவதற்கு அவன் மறுத்(து பிடிவாதம் பிடித்)தான்.
Hicr 15:32
(அல்லாஹ்) கூறினான்: “இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடன் நீ(யும் சிரம் பணிந்தவனாக) ஆகாமல் இருக்க உனக்கென்ன நேர்ந்தது?”
Hicr 15:33
(இப்லீஸ்) கூறினான்: “பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து நீ படைத்த ஒரு மனிதனுக்கு (நெருப்பிலிருந்து படைக்கப்பட்டவனாகிய) நான் சிரம் பணிவது எனக்கு சரி இல்லை. (அது என்னால் முடியாது!)”
Hicr 15:34
(அல்லாஹ்) கூறினான்: “ஆக, இதிலிருந்து நீ வெளியேறு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டவன்.”
Hicr 15:35
“இன்னும், நிச்சயமாக உன் மீது (எனது) சாபம், கூலி (கொடுக்கப்படும்) நாள் வரை உண்டாகட்டும்!”
Hicr 15:36
(இப்லீஸ்) கூறினான்: “ஆக, என் இறைவா! (இறந்தவர்கள்) எழுப்பப்படும் நாள் (வரும்) வரை எனக்கு நீ அவகாசமளி!”
Hicr 15:37
(அல்லாஹ்) கூறினான்: “ஆக, நிச்சயமாக நீ அவகாசமளிக்கப்பட்டவர்களில் ஆகிவிட்டாய்,”
Hicr 15:38
“(தீர்ப்புக்காக) குறிப்பிடப்பட்ட நேரத்தின் (அந்த மறுமை) நாள் (வருகின்ற) வரை.”
Hicr 15:39
(இப்லீஸ்) கூறினான்: “என் இறைவா! என்னை நீ வழிகெடுத்ததன் காரணமாக பூமியில் (அசிங்கமான செயல்களை) அவர்களுக்கு நிச்சயமாக நான் அலங்கரிப்பேன்; இன்னும், நிச்சயமாக அவர்கள் அனைவரையும் நான் வழிகெடு(க்க முயற்சி)ப்பேன்,”
Hicr 15:40
“அவர்களில் (மனத்தூய்மையுடன் உன்னை மட்டும் வணங்குகின்ற) பரிசுத்தமான உன் அடியார்களைத் தவிர.”
Hicr 15:41
(அல்லாஹ்) கூறினான்: “இது என் பக்கம் சேர்ப்பிக்கின்ற நேரான வழியாகும்.”
Hicr 15:42
“நிச்சயமாக என் அடியார்கள் - அவர்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. எனினும், உன்னைப் பின்பற்றுகின்ற வழிகெட்டவர்களைத் தவிர. (அவர்களைத்தான் நீ வழிகெடுப்பாய்.)”
Hicr 15:43
“மேலும், நிச்சயமாக நரகம் (வழிகெடுத்தவனாகிய உனக்கும், வழிகெட்டவர்களாகிய) அவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.”
Hicr 15:44
அதற்கு ஏழு வாசல்கள் உண்டு. ஒவ்வொரு வாசலுக்கும் அவர்களில் (தனியாக) பிரி(த்து ஒது)க்கப்பட்ட ஒரு பிரிவினர் உண்டு.
Hicr 15:45
நிச்சயமாக, அல்லாஹ்வை அஞ்சியவர்கள் சொர்க்கங்களிலும் (அவற்றில் உள்ள) நீரருவிகளிலும் இருப்பார்கள்.
Hicr 15:46
“நீங்கள், ஸலாம் (என்ற முகமன்) உடன் அச்சமற்றவர்களாக அதில் நுழையுங்கள்!” (என்று அவர்களுக்கு கூறப்படும்).
Hicr 15:47
மேலும், அவர்களுடைய நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம். (அவர்கள் அங்கு) சகோதரர்களாக, ஒருவர் ஒருவரை முகம் நோக்கியவர்களாக கட்டில்கள் மீது (சாய்ந்து பேசிக்கொண்டு) இருப்பார்கள்.
Hicr 15:48
அவர்களுக்கு அதில் சிரமம் ஏதும் ஏற்படாது. இன்னும், அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களாக இல்லை.
Hicr 15:49
(நபியே!) என் அடியார்களுக்கு அறிவிப்பீராக! “நிச்சயமாக நான்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.”
Hicr 15:50
“இன்னும் நிச்சயமாக என் தண்டனைதான் துன்புறுத்தக்கூடிய தண்டனை!”
Hicr 15:51
மேலும், (நபியே!) இப்ராஹீமுடைய விருந்தாளிகள் பற்றி அவர்களுக்கு அறிவிப்பீராக.
Hicr 15:52
அவர்கள் அவரிடம் நுழைந்த சமயத்தில் (நடந்த நிகழ்வை கூறுவீராக). ஆக, அவர்கள், “ஸலாம்” (ஈடேற்றம் உண்டாகுக!) என்று (முகமன்) கூறினார்கள். (இப்ராஹீம்) கூறினார்: ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களைப் பற்றி அச்சப்படுகிறோம்.”
Hicr 15:53
அவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர். நிச்சயமாக நாம் உமக்கு (மார்க்கத்தை) அதிகம் அறிந்த ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறோம்.”
Hicr 15:54
அவர் கூறினார்: “எனக்கு முதுமை ஏற்பட்டிருக்க, எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? ஆக, எந்த அடிப்படையில் (இப்படி) நற்செய்தி கூறுகிறீர்கள்?”
Hicr 15:55
அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் உமக்கு உண்மை(யான செய்தி)யைக் கொண்டு(தான்) நற்செய்தி கூறினோம். ஆகவே, அவநம்பிக்கையாளர்களில் ஆகிவிடாதீர்” என்று கூறினார்கள்.
Hicr 15:56
அவர் கூறினார்: “வழிகெட்டவர்களைத் தவிர தன் இறைவனின் அருளில் யார் அவநம்பிக்கை கொள்வார்?”
Hicr 15:57
அவர் கூறினார்: “ஆக, (வானவத்) தூதர்களே! (நீங்கள் அனுப்பப்பட்ட) உங்கள் காரியமென்ன?”
Hicr 15:58
அவர்கள் கூறினார்கள்: “குற்றவாளிகளான மக்களிடம் (அவர்களை அழிக்க) நிச்சயமாக நாங்கள் அனுப்பப்பட்டோம்.”
Hicr 15:59
“(எனினும்,) லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர. நிச்சயமாக நாங்கள் அவர்கள் அனைவரையும் பாதுகாப்போம்.”
Hicr 15:60
“(எனினும்,) அவருடைய மனைவியைத் தவிர. நிச்சயமாக அவள் (அந்தப் பாவிகளுடன் தண்டனையில்) தங்கிவிடுபவர்களில் இருப்பார் என்று (அல்லாஹ்வின் கட்டளையின்படி) நாங்கள் முடிவு செய்தோம்.”
Hicr 15:61
ஆக, (வானவத்) தூதர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபோது,
Hicr 15:62
அவர் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் அறிமுகமற்ற கூட்டமாகும்!”
Hicr 15:63
அவர்கள் கூறினார்கள்: “மாறாக! (உம் மக்களாகிய) இவர்கள் சந்தேகித்துக் கொண்டிருந்ததை (-அல்லாஹ்வின் தண்டனையை) உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்.”
Hicr 15:64
“இன்னும், உம்மிடம் உண்மையைக் கொண்டு வந்துள்ளோம். நிச்சயமாக நாம் உண்மையாளர்கள்தான்.”
Hicr 15:65
“ஆகவே, (இன்றைய) இரவின் ஒரு பகுதியில் உம் குடும்பத்தினருடன் செல்வீராக; மேலும் நீர் அவர்களுக்குப் பின்னால் (அவர்களை) பின்பற்றி செல்வீராக; மேலும், உங்களில் ஒருவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்; இன்னும், நீங்கள் ஏவப்பட்ட இடத்தை நோக்கி (இதே நிலையில்) சென்று கொண்டே இருங்கள்.”
Hicr 15:66
“நிச்சயமாக இவர்களின் வேர், (இவர்கள்) பொழுது விடிந்தவர்களாக காலையில் இருக்கும்போது துண்டிக்கப்படும்” என்று (அவர்களின்) காரியத்தை முடிவு செய்து அவருக்கு அறிவித்தோம்.
Hicr 15:67
மேலும், அந்நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்தவர்களாக (லூத் நபியிடம்) வந்தார்கள்.
Hicr 15:68
(லூத்) கூறினார்: “நிச்சயமாக இவர்கள் என் விருந்தினர். ஆகவே, (அவர்கள் விஷயத்தில்) என்னை அவமானப்படுத்தாதீர்கள்.”
Hicr 15:69
“மேலும், அல்லாஹ்வை அஞ்சுங்கள்; இன்னும், என்னை இழிவு படுத்தாதீர்கள்”
Hicr 15:70
அவர்கள் கூறினார்கள்: “(வேறு ஊர்) மக்களை (விருந்துக்கு அழைப்பதை) விட்டும் நாம் உம்மைத் தடுக்கவில்லையா.”
Hicr 15:71
லூத் கூறினார்: “(இதோ!) இவர்கள் என் (ஊரில் உள்ள) பெண் பிள்ளைகள் ஆவார்கள். நீங்கள் (நான் ஏவுவதை) செய்பவர்களாக இருந்தால் (இவர்களை முறைப்படி திருமணம் செய்து உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்).”
Hicr 15:72
(நபியே!) உம் வாழ்க்கையின் மீது சத்தியம்! நிச்சயமாக இவர்கள் (-சிலை வணங்கிகள்) தங்கள் மயக்கத்தில் (வழிகேட்டில் கடுமையாக) தடுமாறுகிறார்கள்.
Hicr 15:73
ஆகவே, (லூத் நபியின் ஊர் மக்கள் காலையில் சூரிய) வெளிச்சமடைந்தவர்களாக இருக்கும்போது அவர்களை பயங்கரமான சப்தம் பிடித்தது.
Hicr 15:74
ஆக, அதன் மேல் புறத்தை அதன் கீழ்புறமாக (தலைகீழாக) ஆக்கினோம். இன்னும், அவர்கள் மீது கெட்டியான களிமண்ணினால் ஆன கல்லை (மழையாக)ப் பொழிந்தோம்;
Hicr 15:75
படிப்பினை பெறுகின்ற நுண்ணறிவாளர்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் (பல) இருக்கின்றன.
Hicr 15:76
இன்னும், நிச்சயமாக அது (அவர்கள் சென்று வருகின்ற) நிலையான, (தெளிவான பார்க்கும்படியான) பாதையில்தான் (அழியாமல் இன்றும்) இருக்கிறது.
Hicr 15:77
நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக அதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
Hicr 15:78
மேலும், நிச்சயமாக (ஷுஐபுடைய மக்களாகிய) அடர்த்தியான தோப்புடையவர்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தார்கள்.
Hicr 15:79
ஆகவே, அவர்களை பழி வாங்கினோம். இன்னும், அவ்விரண்டு (ஊர்களு)ம் தெளிவான பாதையில்தான் உள்ளன.
Hicr 15:80
மேலும், (ஹூத் நபியின் சமுதாயமாகிய) ‘ஹிஜ்ர்’வாசிகள் தூதர்களைத் திட்டவட்டமாக பொய்ப்பித்தார்கள்.
Hicr 15:81
இன்னும், அவர்களுக்கு நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம். ஆனால், அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாக இருந்தனர்.
Hicr 15:82
மேலும், அச்சமற்றவர்களாக, மலைகளில் வீடுகளைக் குடைந்து (வாழ்ந்து) கொண்டிருந்தனர்.
Hicr 15:83
ஆக, (அவர்கள்) பொழுது விடிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களை பயங்கரமான சப்தம் பிடித்தது.
Hicr 15:84
ஆக, அவர்கள் (தங்களை பாதுகாக்க) செய்து கொண்டிருந்தவை (எதுவும்) அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்கவில்லை.
Hicr 15:85
மேலும், வானங்களையும் பூமியையும், அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றையும் உண்மையான நோக்கத்திற்காகவே தவிர நாம் படைக்கவில்லை. இன்னும், நிச்சயமாக மறுமை வரக்கூடியதே! ஆகவே, அழகிய புறக்கணிப்பாக (அவர்களை) புறக்கணிப்பீராக.
Hicr 15:86
நிச்சயமாக உம் இறைவன்தான் மகா படைப்பாளன், நன்கறிந்தவன்.
Hicr 15:87
இன்னும், (நபியே!) மீண்டும் மீண்டும் ஓதப்படும் ஏழு வசனங்களையும், மகத்துவமிக்க குர்ஆனையும் திட்டவட்டமாக உமக்கு நாம் கொடுத்தோம்.
Hicr 15:88
இவர்களில் சில வகையினர்களுக்கு (இவ்வுலகில்) நாம் கொடுத்த சுகபோகங்கள் பக்கம் உம் இரு கண்களையும் கண்டிப்பாக நீட்டாதீர்! (அவற்றின் மீது ஆசைப்படாதீர்!) இன்னும், அவர்கள் மீது கவலைப்படாதீர். இன்னும், நம்பிக்கையாளர்களுக்கு உம் புஜத்தை தாழ்த்துவீராக! (அவர்களுடன் மென்மையாக, பணிவுடன் நடப்பீராக!).
Hicr 15:89
இன்னும், “நிச்சயமாக நான்தான் தெளிவான எச்சரிப்பாளன்” என்று கூறுவீராக.
Hicr 15:90
(வேதத்தை) பிரித்தவர்கள் மீது நாம் (தண்டனையை) இறக்கியது போன்றே (இந்நிராகரிப்பாளர்கள் மீது தண்டனையை இறக்குவோம்).
Hicr 15:91
அவர்கள் குர்ஆனைப் (பற்றி அது சூனியம், அது கவிதை, அது குறி கூறும் வாசகம் என்று வர்ணித்து அதைப்) பல வகைகளாக ஆக்கினார்கள்.
Hicr 15:92
ஆகவே, உம் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்கள் அனைவரிடமும் நாம் விசாரிப்போம்,
Hicr 15:93
அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி.
Hicr 15:94
ஆகவே, (நபியே!) உமக்கு ஏவப்படுவதை மிகத் தெளிவாக பகிரங்கப்படுத்துவீராக. மேலும், இணைவைப்பவர்களைப் புறக்கணிப்பீராக.
Hicr 15:95
(நபியே! உம்மை) கேலிசெய்பவர்களிடமிருந்து நிச்சயமாக நாம் உம்மைப் பாதுகாப்போம்.
Hicr 15:96
அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு ஒரு தெய்வத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆக, அவர்கள் (தங்கள் முடிவை) விரைவில் அறிவார்கள்.
Hicr 15:97
(நபியே!) நிச்சயமாக நீர் (உம்மைப் பற்றி) அவர்கள் (தரக் குறைவாக) கூறுவதால் உம் நெஞ்சம் நெருக்கடிக்குள்ளாகிறது என்பதை திட்டவட்டமாக அறிவோம்.
Hicr 15:98
ஆகவே, உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! இன்னும், (அவனுக்குச்) சிரம் பணிபவர்களில் ஆகிவிடுவீராக!
Hicr 15:99
மேலும், உங்களுக்கு ‘யகீன்’ - நம்பிக்கை (எனும் மரணம்) வருகின்ற வரை உம் இறைவனை வணங்குவீராக!
Nahl 16:1
அல்லாஹ்வுடைய கட்டளை வந்தே தீரும்! அதை (உடனே கொண்டுவரும்படி கூறி) நீங்கள் அவசரப்படுத்தாதீர்கள். அவன் மிகப் பரிசுத்தமானவன். இன்னும், அவர்கள் (-சிலை வணங்கிகள்) இணைவைப்பதை விட்டும் அவன் முற்றிலும் உயர்ந்தவன்.
Nahl 16:2
அவன், தன் கட்டளைப்படி (வஹ்யி எனும்) உயிருடன், தன் அடியார்களில் தான் நாடுகின்றவர் மீது வானவர்களை இறக்குகிறான், “நிச்சயமாக என்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை; ஆகவே, (என்னை வணங்கி, என்னை மட்டுமே) அஞ்சுங்கள்” என்று (தூதர்களே!) நீங்கள் எச்சரியுங்கள்.
Nahl 16:3
அவன் வானங்களையும் பூமியையும் உண்மையான நோக்கத்திற்கே படைத்தான். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் முற்றிலும் உயர்ந்தவன்.
Nahl 16:4
இந்திரியத்திலிருந்து மனிதனைப் படைத்தான். ஆக, அவனோ (இறைவனுக்கு) வெளிப்படையான எதிரியாக இருக்கிறான்.
Nahl 16:5
மேலும், கால்நடைகள் - அவற்றை உங்களுக்காகப் படைத்தான். அவற்றில் உங்களுக்கு (குளிருக்கும் வெப்பத்திற்கும் இதமான) ஆடையும் இன்னும், பல பலன்களும் உள்ளன. இன்னும், அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.
Nahl 16:6
இன்னும், நீங்கள் அவற்றை மாலையில் (இருப்பிடங்களுக்கு) ஓட்டி வரும் நேரத்திலும் (காலையில்) மேய்க்க ஓட்டிச் செல்லும் நேரத்திலும் அவற்றில் உங்களுக்கு அழகு(ம் மகிழ்ச்சியும்) இருக்கிறது.
Nahl 16:7
மிகுந்த சிரமத்துடனே தவிர நீங்கள் சென்று அடைய முடியாத ஊருக்கு அவை (உங்களையும்) உங்கள் சுமைகளையும் சுமக்கின்றன. நிச்சயமாக உங்கள் இறைவன் பெரும் இரக்கமுள்ளவன், மகா கருணையாளன்.
Nahl 16:8
குதிரைகளை, கோவேறு கழுதைகளை, கழுதைகளை, அவற்றில் நீங்கள் வாகணிப்பதற்காகவும் (அவை உங்களுக்கு) அலங்காரமாக இருப்பதற்காகவும் (அல்லாஹ் படைத்தான்). இன்னும், நீங்கள் அறியாத (பல)வற்றை (அவன் உங்களுக்காக) படைப்பான்.
Nahl 16:9
நேர்வழி(யை தெளிவுபடுத்துவது) அல்லாஹ்வின் பொறுப்பாகும். மேலும், வழிகளில் (சில) கோணலானதும் இருக்கிறது. இன்னும், அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நேர்வழி நடத்தி இருப்பான்.
Nahl 16:10
அவன் மேகத்திலிருந்து மழை நீரை இறக்குகிறான். அதில் உங்களுக்கு குடிநீர் இருக்கிறது. இன்னும், அதிலிருந்து மரங்கள் (செடி கொடிகள், புற்பூண்டுகள்) முளைக்கின்றன. அவற்றில் (உங்கள் கால்நடைகளை) நீங்கள் மேய்க்கிறீர்கள்.
Nahl 16:11
அதன் மூலம் பயிர்களையும், ஆலிவ் மரத்தையும், பேரீச்சை மரங்களையும், திராட்சைகளையும் இன்னும், எல்லா கனிவர்க்கங்களையும் அவன் உங்களுக்காக முளைக்க வைக்கிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
Nahl 16:12
இன்னும், அவன் இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்தினான். மேலும், நட்சத்திரங்களும் அவனுடைய கட்டளையினால் (உங்களுக்கு) வசப்படுத்தப்பட்டவையாகும். சிந்தித்து புரிகின்ற மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Nahl 16:13
இன்னும், பூமியில் உங்களுக்காக மாறுபட்ட நிறங்களுடன் எவற்றை படைத்தானோ அவற்றையும் உங்களுக்காக வசப்படுத்தினான். நல்லுபதேசம் பெறுகின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
Nahl 16:14
இன்னும், கடலிலிருந்து பசுமையான (மென்மையான) மாமிசத்தை நீங்கள் புசிப்பதற்காகவும்; இன்னும், நீங்கள் அணிகிற ஆபரணங்களை அதிலிருந்து நீங்கள் வெளியெடுப்பதற்காகவும்; இன்னும், அவனுடைய அருளை நீங்கள் தேடி பயணிப்பதற்காகவும்; இன்னும், (இவற்றை எல்லாம் பெற்றதற்காக அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (உங்களுக்கு) கடலை வசப்படுத்தி கொடுத்தான். இன்னும், அதில் கப்பல்களை – (அலைகளை) பிளந்து செல்பவையாக நீர் பார்க்கிறீர்.
Nahl 16:15
இன்னும், பூமியில் - அது உங்களை அசைத்துவிடாமல் இருப்பதற்காக மலைகளை ஊன்றினான். இன்னும், (உங்கள் நீர் தேவைகளுக்காக) நதிகளையும்; இன்னும், நீங்கள் (உங்கள் இலக்குகளை அடைய) சரியான வழியில் செல்வதற்காக பாதைகளையும் அவன் அமைத்(து கொடுத்)தான்.
Nahl 16:16
இன்னும், (பகலில் நீங்கள் செல்லும் திசைகளை அறிய மலைகள் போன்ற) பல அடையாளங்களை அமைத்தான். இன்னும், (இரவில் பயணம் செய்யும்போது) அவர்கள் நட்சத்திரங்கள் மூலம் பாதைகளை அறிகிறார்கள்.
Nahl 16:17
ஆக, (இவற்றை எல்லாம்) படைப்பவன், (எதையுமே) படைக்காதவன் போல் ஆவானா? (இருவரும் சமமானவர்களா?) ஆக, நீங்கள் நல்லுபதேசம் பெற வேண்டாமா?
Nahl 16:18
மேலும், அல்லாஹ்வின் அருளை நீங்கள் எண்ணினால் அதை நீங்கள் எண்ணி முடிக்க மாட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
Nahl 16:19
நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அல்லாஹ் நன்கறிவான்.
Nahl 16:20
மேலும், அல்லாஹ்வையன்றி எவர்களை இவர்கள் அழைக்கிறார்களோ (-வணங்குகிறார்களோ) அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களோ (மனிதர்களால்) உருவாக்கப்படுகிறார்கள்.
Nahl 16:21
(அல்லாஹ்வை அன்றி வணங்கப்படுகின்ற இந்த சிலைகள்) இறந்தவர்கள்; உயிருள்ளவர்கள் அல்லர். இன்னும், (தாம்) எப்போது (மறுமையில்) எழுப்பப்படுவோம் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்.
Nahl 16:22
(நீங்கள் வணங்கத்தகுதியான) உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆக, எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களுடைய உள்ளங்கள் (அந்த உண்மையான இறைவனை) நிராகரிக்கின்றன. இன்னும், அவர்கள் (உண்மையான இறைவனை ஏற்காமல்) பெருமையடிக்கிறார்கள்.
Nahl 16:23
நிச்சயமாக உண்மையில் அல்லாஹ் அவர்கள் மறைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான். நிச்சயமாக அவன் பெருமையடிப்பவர்களை நேசிக்கமாட்டான்.
Nahl 16:24
“மேலும், உங்கள் இறைவன் என்ன இறக்கினான்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “முன்னோரின் கட்டுக்கதைகள்” என்று கூறுகிறார்கள்.
Nahl 16:25
இதன் காரணமாக, மறுமை நாளில் அவர்கள் தங்கள் (பாவச்)சுமைகளை முழுமையாக சுமப்பார்கள். இன்னும், எவர்களை கல்வியின்றி இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் (பாவச்) சுமைகளிலிருந்தும் சுமப்பார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் சுமப்பது மிகக் கெட்டதாகும்.
Nahl 16:26
திட்டமாக இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே) சூழ்ச்சி செய்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களின் கட்டடத்திற்கு அடித்தளங்களில் இருந்து (தண்டனையை கொண்டு) வந்தான். ஆக, அவர்களுக்கு மேலிருந்து (அவர்கள் எழுப்பிய மாளிகையின்) முகடு அவர்கள் மீது விழுந்தது. இன்னும், அவர்கள் அறியாத விதத்தில் (அல்லாஹ்வின்) தண்டனை அவர்களுக்கு வந்தது.
Nahl 16:27
பிறகு, மறுமை நாளில் (அல்லாஹ்) அவர்களை இழிவு படுத்துவான். இன்னும், “நீங்கள் எனக்கு இணைவைத்து வணங்கிய தெய்வங்கள் எங்கே? அவர்கள் விஷயத்தில் நீங்கள் (என்னிடம்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களே!” என்று கூறுவான். கல்வி கொடுக்கப்பட்டவர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக இன்று இழிவும், தண்டனையும் நிராகரிப்பவர்கள் மீதுதான் (நிகழும்).”
Nahl 16:28
அவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களை வானவர்கள் உயிர் கைப்பற்றுகிறார்கள். ஆக, (அப்போது அவர்கள்) “தீமை எதையும் நாங்கள் செய்து கொண்டிருக்கவில்லை” (என்று கூறி) முற்றிலும் பணிந்து விடுவார்கள். “அவ்வாறல்ல! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்” (என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்).
Nahl 16:29
ஆக, “நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள், அதில் நிரந்தரமாக தங்கி விடுங்கள்.” ஆக, பெருமையடிப்பவர்களின் தங்குமிடம் மிகக் கெட்டதாகும்.
Nahl 16:30
இறையச்சம் உள்ளவர்களிடம், “உங்கள் இறைவன் என்ன இறக்கினான்” என்று கூறப்பட்டது. “சிறந்ததை இறக்கினான்” என்று அவர்கள் கூறினார்கள். நல்லறம் புரிந்தவர்களுக்கு இந்த உலகில் அழகியது உண்டு. (அவர்களுக்குரிய) மறுமையின் இல்லமோ (இம்மையை விட அவர்களுக்கு) மிக மேலானதாகும். இன்னும், இறையச்சமுள்ளவர்களின் (மறுமை) இல்லமோ மிகச் சிறந்ததாகும்.
Nahl 16:31
அத்ன் (என்னும்) சொர்க்கங்கள் (அவர்களுக்கு உண்டு). அவற்றில் அவர்கள் நுழைவார்கள். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்களுக்கு அதில் அவர்கள் நாடுவதெல்லாம் உண்டு. இவ்வாறுதான் அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களுக்கு கூலி கொடுக்கிறான்.
Nahl 16:32
இறையச்சம் உள்ளவர்களோ நல்லவர்களாக இருக்கும் நிலையில் வானவர்கள் அவர்களை உயிர் கைப்பற்றுகிறார்கள். “ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக!) நீங்கள் (நற்செயல்) செய்து கொண்டிருந்ததின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்” என்று (வானவர்கள் அவர்களிடம்) கூறுவார்கள்.
Nahl 16:33
வானவர்கள் தங்களிடம் வருவதை; அல்லது, உம் இறைவனின் கட்டளை வருவதைத் தவிர அவர்கள் (வேறு எதையும்) எதிர்பார்க்கிறார்களா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அநியாயம்) செய்தனர். ஆனால், அல்லாஹ் அவர்களுக்கு தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைப்பவர்களாக இருந்தனர்.
Nahl 16:34
ஆகவே, அவர்கள் செய்தவற்றின் தண்டனைகள் அவர்களை வந்தடைந்தன. இன்னும், அவர்கள் எதை கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
Nahl 16:35
இணைவைத்தவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் அவனையன்றி வேறு எதையும் வணங்கியிருக்க மாட்டோம்; இன்னும், அவனுடைய அனுமதி இன்றி எதையும் தடுக்கப்பட்டதாக ஆக்கியிருக்க மாட்டோம்.” இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (விதண்டாவாதம்) செய்தார்கள். ஆக, தூதர்கள் மீது தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர ஏதும் (பொறுப்பு) உண்டா?
Nahl 16:36
“அல்லாஹ்வை வணங்குங்கள்; இன்னும், ஷைத்தானை விட்டும் விலகுங்கள்” என்று (போதிப்பதற்காக) ஒவ்வொரு சமுதாயத்திலும் திட்டவட்டமாக ஒரு தூதரை அனுப்பினோம். ஆக, அல்லாஹ் நேர்வழி காட்டியவர்களும் அவர்களில் உண்டு. இன்னும், வழிகேடு உறுதியாகி விட்டவர்களும் அவர்களில் உண்டு. ஆக, பூமியில் பயணியுங்கள்; இன்னும், (நபிகளைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்று பாருங்கள்.
Nahl 16:37
(நபியே!) அவர்கள் நேர்வழி காட்டப்படுவதின் மீது நீர் பேராசைப்பட்டாலும், (பிறரை) வழிகெடுப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான். இன்னும், உதவியாளர்கள் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள்.
Nahl 16:38
மேலும், “இறந்து போகிறவர்களை அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்ப மாட்டான்” என்று அல்லாஹ்வின் மீது இவர்கள் மிக உறுதியாக சத்தியம் செய்தனர். அவ்வாறன்று, (“இறந்தவர்களை எழுப்புதல்” என்பது) அவன் மீது கடமையான (சத்திய) வாக்காகும்! எனினும், மக்களில் அதிகமானவர்கள் அறிய மாட்டார்கள்.
Nahl 16:39
அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொள்கிறார்களோ அதை (அல்லாஹ்) அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும், நிராகரித்தவர்கள் நிச்சயமாக தாம் பொய்யர்களாக இருந்தோம் என்பதை அறிவதற்காகவும் (மறுமையில் அவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான்).
Nahl 16:40
நாம் ஒரு பொருளை (உருவாக்க) நாடினால், அதற்கு நாம் (கூறுகிற) கூற்றெல்லாம் “ஆகு!” என்று கூறுவதுதான். (உடனே அது) ஆகிவிடும்.
Nahl 16:41
இன்னும், எவர்கள் தங்களுக்கு அநீதியிழைக்கப்பட்ட பின்பு அல்லாஹ்விற்காக(த் தங்கள் ஊரை அல்லது தங்கள் நாட்டை) துறந்து சென்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம் இவ்வுலகில் அழகிய (இருப்பிடத்)தை அமை(த்து கொடுத்து அதில் வசிக்க வை)ப்போம். (அவர்களுக்குரிய) மறுமையின் கூலியோ (இதைவிட) மிகப் பெரியது. (இதை எல்லோரும்) அறிந்திருக்க வேண்டுமே!
Nahl 16:42
அவர்கள் (சோதனைகளில்) பொறுமையாக இருந்தார்கள். இன்னும், தங்கள் இறைவன் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)ப்பார்கள்.
Nahl 16:43
(நபியே!) உமக்கு முன்பு நாம் (தூதர்களாக மனித இனத்தை சேர்ந்த) ஆடவர்களைத் தவிர (வானவர்களை) அனுப்பவில்லை. அ(ந்த ஆட)வர்களுக்கு நாம் வஹ்யி அறிவிப்போம். ஆகவே, (இவர்களை நோக்கி,) “நீங்கள் (இதை) அறியாதவர்களாக இருந்தால் (உண்மையான இறை வேதத்தின்) ஞானமுடையவர்களைக் கேளுங்கள்” (என்று கூறுவீராக!).
Nahl 16:44
அத்தாட்சிகளையும் வேதங்களையும் கொண்டு (அத்தூதர்களை அனுப்பினோம்). (இந்த) ஞானத்தை (நபியே!) உமக்கு இறக்கினோம், அம்மக்களுக்காக இறக்கப்பட்ட (இந்த ஞானத்)தை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும்; (அந்த ஞானத்தையும் நபியின் விளக்கத்தையும்) அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும்!
Nahl 16:45
ஆக, தீமைகளுக்கு சூழ்ச்சி செய்தவர்கள் தங்களை அல்லாஹ் பூமியில் சொருகிவிடுவான் என்பதை; அல்லது, அவர்கள் உணராத விதத்தில் அவர்களுக்கு தண்டனை வரும் என்பதை அச்சமற்று விட்டனரா?
Nahl 16:46
அல்லது, அவர்களது பயணத்தில் அவர்களை அவன் (சோதனையால்) பிடித்து விடுவதை அச்சமற்றுவிட்டனரா? ஆக, அவர்களோ (அவனை) பலவீனப்படுத்துபவர்கள் இல்லை.
Nahl 16:47
அல்லது (அவர்களது பூமியையும் செல்வத்தையும்) கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அவர்களை அவன் பிடித்து விடுவதை அச்சமற்றனரா? ஆக, நிச்சயமாக உங்கள் இறைவன் மகா இரக்கமானவன், பெரும் கருணையாளன். (அதனால்தான் நீங்கள் உடனுக்குடன் தண்டிக்கப்படாமல் விட்டு வைக்கப்பட்டுள்ளீர்கள்.)
Nahl 16:48
மேலும், அல்லாஹ் படைத்த ஒரு பொருளையேனும் இவர்கள் கவனித்து பார்க்கவில்லையா? அவற்றின் நிழல்கள் அல்லாஹ்விற்கு சிரம் பணிந்தவையாக வலப்புறமாக இன்னும் இடப்புறமாக சாய்கின்றன. மேலும், அவை (அனைத்தும் அவனுக்கு) மிகப் பணிந்தவையாக இருக்கின்றன.
Nahl 16:49
வானங்களில் உள்ள, பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் வானவர்களும் அல்லாஹ்விற்கு சிரம் பணிகிறார்கள். அவர்களோ (அல்லாஹ்வை வணங்காமல்) பெருமையடிப்பதில்லை.
Nahl 16:50
அவர்கள் தங்களுக்கு மேலுள்ள தங்கள் இறைவனைப் பயப்படுகிறார்கள். இன்னும், அவர்கள் தங்களுக்கு கட்டளையிடப்படுவதை (மட்டுமே) செய்கிறார்கள்.
Nahl 16:51
இன்னும், அல்லாஹ் கூறுகிறான்: (மனிதர்களே! நீங்கள் வணங்குவதற்கு) இரண்டு கடவுள்களை எடுத்துக் கொள்ளாதீர்கள். (நீங்கள் எவனை வணங்கவேண்டுமோ) அவனெல்லாம் ஒரே ஒரு கடவுள்தான். ஆக, என்னையே பயப்படுங்கள்.
Nahl 16:52
இன்னும், வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன! மேலும், வணக்க வழிபாடுகள் (நிலையானதாக,) என்றென்றும் அவனுக்கே உரியன. ஆகவே, அல்லாஹ் அல்லாதவற்றையா (தெய்வங்களாக ஆக்கிக்கொண்டு அவற்றை) அஞ்சுகிறீர்கள்?
Nahl 16:53
மேலும், உங்களிடம் உள்ள அருட்கொடைகள் எல்லாம் அல்லாஹ்விடம் இருந்துதான் (உங்களுக்கு) கிடைத்தன. பிறகு, உங்களுக்கு துன்பம் ஏற்பட்டால் அவனிடமே (பிரார்த்தித்து அதை நீக்கக் கோரி) மன்றாடுகிறீர்கள்.
Nahl 16:54
பிறகு, அவன் உங்களை விட்டு அந்த துன்பத்தை நீக்கினால், அப்போது உங்களில் ஒரு பிரிவினர் தங்கள் இறைவனுக்கு இணைவைக்கிறார்கள்.
Nahl 16:55
நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றுக்கு நன்றி மறுப்பதற்க்காகவே (இவ்வாறு இணைவைக்கிறார்கள்). ஆகவே, (இவ்வுலகில் கொஞ்சம்) சுகமனுபவியுங்கள். நீங்கள் (உங்கள் தீய முடிவை மறுமையில்) அறிவீர்கள்.
Nahl 16:56
இன்னும், நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து ஒரு பாகத்தை (எதையும்) அறியாதவர்களுக்காக (-சிலைகளுக்காக) படைக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததைப் பற்றி (மறுமையில்) நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்.
Nahl 16:57
இன்னும், அல்லாஹ்விற்குப் பெண் பிள்ளைகளையும் அவர்களுக்கோ அவர்கள் விரும்புவதையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அவனோ (சந்ததிகளின் தேவையை விட்டு) மிகப் பரிசுத்தமானவன்.
Nahl 16:58
மேலும், பெண் குழந்தையைக் கொண்டு அவர்களில் ஒருவனுக்கு நற்செய்தி கூறப்பட்டால் அவனோ துக்கப்பட்டவனாக அவனுடைய முகம் கறுத்ததாக ஆகிவிடுகிறது.
Nahl 16:59
தனக்குக் கூறப்பட்ட நற்செய்தியின் தீமையினால், “கேவலத்துடன் அதை வைத்திருப்பதா? அல்லது (உயிருடன்) அதை மண்ணில் புதைப்பதா?” என்று (பிற) மக்களை விட்டு (தனக்கு பிறந்த பெண் பிள்ளையை) மறைந்து கொள்கிறான். அறிந்து கொள்ளுங்கள்: அவர்களின் (இந்த) தீர்ப்பு மிகக் கெட்டதாகும்.
Nahl 16:60
மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கே கெட்ட தன்மை உள்ளது. அல்லாஹ்விற்கோ மிக உயர்ந்த தன்மை உண்டு. இன்னும், அவன் மிகைத்தவன், மகா ஞானவான்.
Nahl 16:61
மேலும், மக்களை அவர்களுடைய குற்றத்தின் காரணமாக அல்லாஹ் (உடனுக்குடன்) தண்டித்தால் (பூமியில்) ஓர் உயிரினத்தையுமே அவன் விட்டு வைத்திருக்க மாட்டான். எனினும், ஒரு குறிப்பிடப்பட்ட தவணை வரை அவர்களைப் பிற்படுத்துகிறான். ஆக, அவர்களுடைய (இறுதி) தவணை வந்தால் ஒரு விநாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
Nahl 16:62
அவர்கள் வெறுப்பவற்றை அல்லாஹ்விற்கு ஆக்குகிறார்கள். இன்னும், நிச்சயமாக தங்களுக்கு சொர்க்கம் உண்டு என்று அவர்களின் நாவுகள் பொய்யை வர்ணிக்கின்றன. கண்டிப்பாக நிச்சயம் இவர்களுக்கு நரகம்தான்; மேலும், நிச்சயம் இவர்கள் (நரகத்தில் உதவி செய்வோர் யாருமின்றி விட்டு) விடப்படுவார்கள்.
Nahl 16:63
(நபியே!) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உமக்கு முன்னர் (பல) சமுதாயங்களுக்கு (நம்) தூதர்களை திட்டவட்டமாக அனுப்பினோம். ஆக, ஷைத்தான் அவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்களை அலங்கரித்தான். ஆகவே, இன்று(ம்) அவர்களுக்கு அவனே நண்பன் ஆவான். இன்னும், (நரகத்தில்) துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு.
Nahl 16:64
(நபியே!) இவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அதை நீர் தெளிவுபடுத்துவதற்காக; (மக்கள் எல்லோருக்கும்) நேர்வழியாகவும் நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு அருளாகவும் இருப்பதற்காகவே தவிர உம்மீது இவ்வேதத்தை நாம் இறக்கவில்லை.
Nahl 16:65
அல்லாஹ் மேகத்திலிருந்து மழையை இறக்குகிறான்; ஆக, அதன் மூலம் பூமியை - அது இறந்த பின்னர் - உயிர்ப்பிக்கின்றான். (நல்லுபதேசத்திற்கு) செவிசாய்க்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
Nahl 16:66
இன்னும், நிச்சயமாக (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளில் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. இரத்தத்திற்கும் சாணத்திற்கும் இடையில் அவற்றின் வயிறுகளிலிருந்து கலப்பற்ற, அருந்துபவர்களுக்கு மதுரமான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம்.
Nahl 16:67
இன்னும், பேரீச்சை மரத்தின் கனிகள் இன்னும் திராட்சைகளில் இருந்து போதை தரக்கூடிய பானத்தையும்,[1] நல்ல உணவுகளையும் செய்கிறீர்கள். சிந்தித்துப் புரிகின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
———
[1] இது மது தடுக்கப்படுவதற்கு முன்பு இறக்கப்பட்ட வசனமாகும். பிறகு, : வது வசனத்தின் மூலம் மது ஹராமாக - தடுக்கப்பட்டதாக ஆக்கப்பட்டது.
Nahl 16:68
இன்னும், “மலைகளிலும், மரங்களிலும், அவர்கள் கட்டுகிற (பெட்டிகள் போன்ற)வற்றிலும் கூடுகளை அமைத்துக்கொள்” என்று உம் இறைவன் தேனீக்கு உள்ளுணர்வை ஏற்படுத்தினான்.
Nahl 16:69
பிறகு, “ஒவ்வொரு பூக்களிலிருந்தும் புசி! ஆக, உனது இறைவன் (உனக்கு காண்பித்த) சுலபமான வழிகளில் (உன் கூட்டை நோக்கிச்) செல்!” (எனக் கட்டளையிட்டான்). இதனால், அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட பல நிறங்களையுடைய பானம் (தேன்) வெளியேறுகிறது. அதில் மக்களுக்கு நோய் நிவாரணம் உண்டு. சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கிறது.
Nahl 16:70
அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான். பிறகு உங்களை உயிர் கைப்பற்றுகிறான். இன்னும், (பலவற்றை) அறிந்திருந்த பின்பு ஒன்றையும் அறியாமல் ஆகுவதற்காக அற்பமான (முதுமை) வயது வரை திருப்பப்படுபவரும் உங்களில் உண்டு. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், பேராற்றலுடையவன்.
Nahl 16:71
இன்னும், உங்களில் சிலரைவிட சிலரை வாழ்வாதாரத்தில் அல்லாஹ்தான் மேன்மையாக்கினான். ஆக, இவ்வாறிருந்தும், மேன்மையாக்கப்பட்டவர்கள், தங்கள் வாழ்வாதாரத்(தில் தங்கள் தேவைக்குப் போக இருப்ப)தை தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் மீது திருப்பக் கூடியவர்களாக இல்லை. (அப்படி கொடுத்தால்) அவர்களும் அதில் (இவர்களுக்கு) சமமானவர்களாக ஆகிவிடுவார்கள். (ஆனால், அதை அவர்கள் விரும்புவது இல்லை. அப்படி இருக்க அல்லாஹ்விற்கு மட்டும் இணை தெய்வங்களை எப்படி கற்பனை செய்கிறார்கள்?) அல்லாஹ்வின் அருளையா (அவர்கள்) நிராகரிக்கிறார்கள் (அதில் அல்லாஹ் அல்லாதவர்களை கூட்டாக்குவதன் மூலம்)?
Nahl 16:72
இன்னும், உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளை உங்களுக்காக அல்லாஹ் படைத்தான். உங்கள் மனைவிகளிலிருந்து ஆண் பிள்ளைகளையும், பேரன்களையும் உங்களுக்கு படைத்தான். இன்னும், நல்லவற்றிலிருந்து உங்களுக்கு உணவளித்தான். ஆக, (இவ்வாறிருக்க) அவர்கள் (சிலைகள் அல்லது இறை நேசர்கள் குழந்தை பாக்கியம் தருவார்கள் என்று) பொய்யை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கின்றனரா?
Nahl 16:73
இன்னும், இவர்கள் அல்லாஹ்வை அன்றி எவற்றை வணங்குகிறார்கள் என்றால் அவை இவர்களுக்கு வானங்கள் இன்னும் பூமியிலிருந்து எந்த ஒன்றையும் உணவளிக்க உரிமை பெற மாட்டார்கள். இன்னும், அவை (அதற்கு அறவே) ஆற்றல் பெற மாட்டார்கள்.
Nahl 16:74
ஆகவே, அல்லாஹ்விற்கு நீங்கள் உதாரணங்களை(யும் தன்மைகளையும்) விவரிக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் (தன் தன்மையை) அறிவான்; நீங்களோ (அவனது தன்மைகளை அவன் உங்களுக்கு அறிவித்தால் தவிர) அறிய மாட்டீர்கள்.
Nahl 16:75
அல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கிறான். பிறருக்குச் சொந்தமான, ஒன்றையும் (செய்ய) ஆற்றல் பெறாத அடிமை ஒருவர் இருக்கிறார். இன்னும் (வேறு) ஒருவர் இருக்கிறார். அவருக்கு நாம் நம் புறத்திலிருந்து அழகிய வாழ்வாதாரத்தை வழங்கினோம். ஆகவே அவர் அதிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் புரிகிறார். இ(ந்த இரு)வர்கள் சமமாவார்களா? (சமமாக மாட்டார்கள்.) புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. எனினும், அவர்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.
Nahl 16:76
இன்னும், அல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கிறான்: இரு ஆடவர்கள் இருக்கிறார்கள். அவ்விருவரில் ஒருவர் ஊமை. அவர் எதையும் செய்ய சக்தி பெறமாட்டார். இன்னும், அவர் தன் எஜமானர் மீது சுமையாக இருக்கிறார். அவரை அவர் எங்கு (வேலைக்கு) அனுப்பினாலும் ஒரு நன்மையும் அவர் செய்யமாட்டார். இவரும், எவர் தானும் நேரான வழியில் இருந்துகொண்டு (மற்றவர்களுக்கும்) நீதத்தை ஏவுகிறாரோ அவரும் சமமாவார்களா?
Nahl 16:77
வானங்களிலும் பூமியிலும் உள்ள மறைவானவை அல்லாஹ்வுக்கே சொந்தம். மறுமையின் காரியம், கண் பார்வை சிமிட்டுவதைப் போல்; அல்லது, (அதைவிட) மிக சமீபமானதாகவே தவிர இருக்காது. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.
Nahl 16:78
ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருக்கின்ற நிலையில் உங்கள் தாய்மார்களின் வயிறுகளிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். இன்னும், உங்களுக்குச் செவிகளையும், பார்வைகளையும், உள்ளங்களையும் படைத்தான், நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காக!
Nahl 16:79
வானத்தின் ஆகாயத்தில் (பறப்பதற்காகவும் மிதப்பதற்காகவும்) வசப்படுத்தப்பட்டவையாக (மிதக்கின்ற) பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (வானத்தில்) அல்லாஹ்வைத் தவிர (எவரும்) தடுத்து வைக்கவில்லை. நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Nahl 16:80
அல்லாஹ் உங்கள் வீடுகளில் உங்களுக்கு (வசதியான) தங்குதலை அமைத்தான். இன்னும், கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்கு கூடாரங்களை அமைத்தான். அவற்றை நீங்கள் பயண நாளிலும், நீங்கள் தங்குகின்ற நாளிலும் எளிதாக பயன்படுத்திக்கொள்கிறீர்கள். அவற்றில் (செம்மறியாட்டின்) கம்பளிகள், (ஒட்டகத்தின்) உரோமங்கள் (வெள்ளாட்டின்) முடிகள் ஆகியவற்றிலிருந்து (தேவையான ஆடைகளையும் பல வகையான) பொருள்களையும் (அவற்றின் வியாபாரத்தினால் அதிகமான செல்வத்தையும், உங்கள் மரணம் சமீபிக்கும்) ஒரு காலம் வரை சுகமான பயன்பாட்டையும் உங்களுக்கு அவன் ஏற்படுத்திக் கொடுத்தான்.
Nahl 16:81
இன்னும், அல்லாஹ், தான் படைத்திருப்பவற்றில் உங்களுக்கு நிழல்களை அமைத்தான். இன்னும், மலைகளில் உங்களுக்கு குகைகளை அமைத்தான். இன்னும், வெப்பத்திலிருந்து(ம் குளிரிலிருந்தும்) உங்களை பாதுகாக்கக்கூடிய சட்டைகளையும், உங்கள் (எதிரிகளின்) பலமான தாக்குதலை விட்டும் உங்களை பாதுகாக்கக்கூடிய (இரும்பினால் ஆன உருக்கு) சட்டைகளையும் ஏற்படுத்தினான். இவ்வாறுதான், அவன் தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்குகிறான், நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் பணிந்து நடப்பதற்காக!
Nahl 16:82
ஆக, (நபியே!) அவர்கள் (உம்மை விட்டு புறக்கணித்து) விலகினால் (கவலைப்படாதீர்.) உம் மீது கடமை எல்லாம் தெளிவாக எடுத்துரைப்பதுதான்.
Nahl 16:83
அல்லாஹ்வின் அருட்கொடையை அறிகிறார்கள். பிறகு, அதை நிராகரிக்கிறார்கள். இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் நன்றி கெட்டவர்கள்.
Nahl 16:84
அந்நாளில் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (நாம்) ஒரு சாட்சியாளரை எழுப்புவோம். பிறகு, (தூதர்களை) நிராகரித்தவர்களுக்கு (எதுவும் பேச) அனுமதிக்கப்படாது. இன்னும், அவர்கள் (தங்கள் பாவங்களுக்கு) சாக்குபோக்கு சொல்ல (-மன்னிப்பு கேட்க) வைக்கப்பட மாட்டார்கள்.
Nahl 16:85
தீங்கிழைத்தவர்கள் (மறுமையில்) தண்டனையைக் கண்டால் (அதைக் குறைக்க காரணம் கூறுவார்கள். ஆனால்), அவர்களை விட்டு (தண்டனை) இலகுவாக்கப்படாது. இன்னும், அவர்கள் (சிறிது நேரம் தண்டனை இன்றி இருக்க) அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள்.
Nahl 16:86
இணைவைத்தவர்கள் (அல்லாஹ்விற்கு இணை வைத்து வணங்கிய) தங்களுடைய (கற்பனை) தெய்வங்களை (மறுமையில்) பார்த்தால் (அல்லாஹ்வை நோக்கி), “எங்கள் இறைவா! உன்னையன்றி நாங்கள் அழைத்துக் கொண்டிருந்த எங்கள் தெய்வங்கள் இவைதான்” என்று கூறுவார்கள். ஆனால், அவைகளோ இவர்களை நோக்கி “நிச்சயமாக நீங்கள் பொய்யர்கள்தான், (நாங்கள் தெய்வங்களல்ல)” என்று கூறிவிடும்.
Nahl 16:87
இன்னும், அந்நாளில் அவர்கள் அல்லாஹ்விற்கு முன் முற்றிலும் பணிந்து விடுவார்கள். மேலும், (தெய்வங்கள் என்று) இவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை இவர்களை விட்டும் மறைந்து விடும்.
Nahl 16:88
எவர்கள் நிராகரித்தார்களோ, இன்னும், அல்லாஹ்வுடைய பாதையை விட்டு (பிற மக்களை) தடுத்தார்களோ - அவர்களுக்கு, அவர்கள் விஷமம் செய்து கொண்டிருந்த காரணத்தால் தண்டனைக்கு மேல் தண்டனையை அதிகப்படுத்துவோம்.
Nahl 16:89
இன்னும், (நபியே!) அந்த நாளை நினைவு கூர்வீராக! அதில் ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிராக ஒரு சாட்சியாளரை நாம் எழுப்புவோம்; இன்னும், (நிராகரித்த) இவர்களுக்கு எதிராக உம்மை சாட்சியாளராக அழைத்து வருவோம். (நபியே!) எல்லாவற்றையும் தெளிவுபடுத்தக்கூடியதாகவும் நேர்வழி காட்டியாகவும் (அதை ஏற்று செயல்படுகின்ற) முஸ்லிம்களுக்கு அருளாகவும் நற்செய்தியாகவும் இவ்வேதத்தை உம்மீது இறக்கினோம்.
Nahl 16:90
நிச்சயமாக அல்லாஹ், (நீங்கள்) நீதம் செலுத்துவதற்கும், நல்லறம் புரிவதற்கும், உறவினர்களுக்கு கொடுப்பதற்கும் (உங்களை) ஏவுகிறான். மேலும், மானக்கேடானவை, பாவம், அநியாயம் ஆகியவற்றை விட்டும் அவன் (உங்களைத்) தடுக்கிறான். நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக உங்களுக்கு (இவற்றை) உபதேசிக்கிறான்.
Nahl 16:91
இன்னும், நீங்கள் உடன்படிக்கை செய்தால் அல்லாஹ்வின் (பெயரால் செய்யப்பட்ட அந்த) உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுங்கள். மேலும், சத்தியங்களை - அவற்றை உறுதிபடுத்திய பின்பு - முறிக்காதீர்கள். நீங்களோ அல்லாஹ்வை உங்கள் மீது பொறுப்பாளனாக ஆக்கிவிட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான்.
Nahl 16:92
இன்னும், எவள் தான் நெய்த கயிறை (அது நெய்யப்பட்டு) உறுதி பெற்ற பின்பு (பல) உதிரிகளாக பிரித்தாளோ அவளைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். ஒரு சமுதாயத்தை விட (வேறு) ஒரு சமுதாயம் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதற்காக (பலவீனர்களுடன் நீங்கள் செய்த) உங்கள் சத்தியங்களை ஏமாற்றுவதாக, வஞ்சகமாக ஆக்கிவிடுகிறீர்களா?. நிச்சயமாக அல்லாஹ் உங்களை இதன் மூலம் சோதிக்கிறான். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தவற்றை மறுமை நாளில் (அவன்) உங்களுக்கு நிச்சயம் தெளிவுபடுத்துவான்.
Nahl 16:93
அல்லாஹ் நாடியிருந்தால் (இஸ்லாமைப் பின்பற்றுகிற) ஒரே ஒரு சமுதாயமாக உங்களை ஆக்கியிருப்பான். எனினும், தான் நாடுகின்றவர்களை வழிகெடுக்கிறான். இன்னும், தான் நாடுகின்றவர்களை நேர்வழி செலுத்துகிறான். மேலும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி நிச்சயமாக (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்.
Nahl 16:94
உங்கள் சத்தியங்களை உங்களுக்கு மத்தியில் (பிறரை) ஏமாற்றுவதற்காக, (வஞ்சிப்பதற்காக) ஆக்கிக் கொள்ளாதீர்கள். (அவ்வாறு செய்தால், இஸ்லாமிய மார்க்கத்தில் உங்கள் கால்) பாதம் அது நிலைபெற்ற பின் (அதிலிருந்து) சருகி (வழிகேட்டில் சென்று) விடும். இன்னும், (சத்தியத்தை முறித்து) அல்லாஹ்வின் பாதையை விட்டும் நீங்கள் தடுத்த காரணத்தால் துன்பத்தை அனுபவிப்பீர்கள். இன்னும், உங்களுக்கு மகத்தானதொரு தண்டனை உண்டு.
Nahl 16:95
அல்லாஹ்வின் (பெயரால் செய்யப்பட்ட) உடன்படிக்கைக்குப் பகரமாக (உலகத்தின்) சொற்ப விலையை வாங்காதீர்கள். நீங்கள் (ஒப்பந்தத்தை மீறாமல் இருப்பதன் மூலம் அல்லாஹ்விடம் உங்களுக்கு கிடைக்கும் இம்மை மறுமையின் நன்மையை நீங்கள்) அறிந்தவர்களாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் இருப்பதுதான் உங்களுக்கு மிக மேலானதாகும். (ஆகவே உடன்படிக்கைகளை பேணி நடங்கள்!)
Nahl 16:96
உங்களிடம் உள்ளவை தீர்ந்துவிடும். அல்லாஹ்விடத்தில் உள்ளவையோ நிரந்தரமானவையாகும். மேலும், (உடன்படிக்கையை நிறைவேற்றுவதில்) பொறுமையாக(வும் உறுதியாகவும்) இருந்தவர்களுக்கு அவர்களின் கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிக அழகியதைக் கொண்டு கொடுப்போம்.
Nahl 16:97
ஆண்; அல்லது, பெண்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கும் நிலையில் நல்லதை செய்வார்களோ நிச்சயம் நாம் அவர்களை நல்ல வாழ்க்கை வாழச் செய்வோம். இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிக அழகியதைக் கொண்டு அவர்களின் கூலியை நிச்சயம் அவர்களுக்குக் கொடுப்போம்.
Nahl 16:98
ஆக, (நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருவீராக.
Nahl 16:99
நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, தங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்(து அவனை மட்டுமே சார்ந்த்)திருக்கிறார்களோ அவர்கள் மீது அவனுக்கு (-ஷைத்தானுக்கு) அதிகாரம் எதுவும் இல்லை.
Nahl 16:100
நிச்சயமாக அவனுடைய அதிகாரமெல்லாம் அவனுடன் நட்பு வைப்பவர்கள் மீதும் அல்லாஹ்விற்கு இணைவைப்பவர்கள் மீதும்தான்.
Nahl 16:101
(நபியே!) நாம் ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை மாற்றினால், - அல்லாஹ்வோ தான் இறக்குவதை மிக அறிந்தவனாக இருக்கிறான், - இவர்கள் (உம்மை நோக்கி) “நிச்சயமாக நீர் (தானாக இதை) இட்டுக்கட்டுகிறீர்” என்று கூறுகிறார்கள். மாறாக, இவர்களில் அதிகமானவர்கள் (இதன் உண்மையை) அறிய மாட்டார்கள்.
Nahl 16:102
(நபியே!) கூறுவீராக: “நம்பிக்கை கொண்டவர்களை உறுதிப்படுத்துவதற்காகவும், (எல்லா மக்களுக்கும்) நேர்வழியாகவும் (குறிப்பாக அதன்படி நடக்கின்ற) முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் இதை உம் இறைவனிடமிருந்து ‘ரூஹுல் குதுஸ்’ (என்ற ஜிப்ரயீல்) உண்மையுடன் இறக்கினார்.”
Nahl 16:103
“அவருக்குக் கற்றுக் கொடுப்பதெல்லாம் (ரோம் நாட்டை சேர்ந்த) மனிதர்தான் (அல்லாஹ் அல்ல)” என்று அவர்கள் கூறுவதை திட்டவட்டமாக அறிவோம். எவர் பக்கம் (இதை) அவர்கள் சேர்க்கிறார்களோ அவருடைய மொழி அரபி அல்லாததாகும். இதுவோ (நாகரிகமான) தெளிவான அரபி மொழியாகும்.
Nahl 16:104
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பிக்கை கொள்ளமாட்டார்களோ அவர்களை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான். இன்னும், துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு.
Nahl 16:105
பொய்யை இட்டுக்கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பிக்கை கொள்ளாதவர்கள்தான். இன்னும், அவர்கள்தான் பொய்யர்கள். (நமது நபி அல்ல.)
Nahl 16:106
எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின்னர், அவனை நிராகரிப்பாரோ, ஆனால் அவர் நிர்ப்பந்திக்கப்பட்டு, அவரது உள்ளமோ நம்பிக்கையில் திருப்தியடைந்த நிலையில் இருப்பவரைத் தவிர - (அவர் மன்னிக்கப்பட்டவர் ஆவார்.) எனினும், எவராவது மனதால் நிராகரிப்பை விரும்பினால் அவர்கள் மீது அல்லாஹ்வுடைய கோபம் நிகழும். இன்னும், அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு.
Nahl 16:107
அது, “நிச்சயமாக அவர்கள் மறுமையைவிட உலக வாழ்க்கையை விரும்பினார்கள்; இன்னும், நிராகரிக்கின்ற மக்களை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்” என்ற காரணத்தினால் ஆகும்.
Nahl 16:108
அவர்கள், எத்தகையோர் என்றால் அவர்களின் உள்ளங்கள் மீதும், செவிகள் மீதும், பார்வைகள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டான். இன்னும், அவர்கள்தான் (தங்கள் தீயமுடிவை உணராமல்) கவனமற்று இருப்பவர்கள் ஆவார்கள்.
Nahl 16:109
உண்மையில் நிச்சயமாக அவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள்தான்.
Nahl 16:110
பிறகு, எவர்கள் தாங்கள் துன்புறுத்தப்பட்ட பின்பு ஹிஜ்ரத் செய்து (தமது தாய் நாட்டை துறந்து), பிறகு போர் புரிந்து, (சோதனைகளில்) பொறுமையாக இருந்தார்களோ அவர்களுக்கு நிச்சயமாக உம் இறைவன், இவற்றுக்குப் பின்னர் (அவர்களை மன்னித்து கருணை காட்டும்) மகா மன்னிப்பாளனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்.
Nahl 16:111
ஒவ்வோர் ஆன்மாவும் தன்னைப் பற்றி தானே தர்க்கித்ததாக வருகிற நாளில் (அல்லாஹ் அந்த தியாகிகளை மன்னிப்பான்). மேலும், (அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவுக்கும் அது செய்த செயல்களுக்கு முழுமையாக கூலி கொடுக்கப்படும். மேலும், அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
Nahl 16:112
ஓர் ஊரை அல்லாஹ் உதாரணமாக விவரிக்கிறான். அது, நிம்மதி பெற்றதாக, அச்சமற்றதாக இருந்தது. எல்லா இடங்களிலிருந்தும் தாராளமாக அதன் உணவு (-வாழ்வாதார தேவை) அதற்கு வந்தது. ஆக, (இப்படி இருக்கும் நிலையில்) அது அல்லாஹ்வு(க்கு மாறுசெய்து அவனு)டைய அருட்கொடைகளை நிராகரித்தது. ஆகவே, அ(வ்வூரில் உள்ள)வர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வற்றின் காரணமாக அல்லாஹ் பசி; இன்னும், பயத்தின் ஆடையை அதற்கு (-அந்த ஊர் மக்களுக்கு) சுவைக்கச் செய்தான். (அவர்கள் உடல் மெலிந்தவர்களாக, பயந்து நடுங்கியவர்களாக ஆகிவிட்டனர்.)
Nahl 16:113
இன்னும், அவர்களிலிருந்தே ஒரு தூதர் திட்டவட்டமாக அவர்களிடம் வந்தார். ஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கின்ற நிலையில் அவர்களை (அல்லாஹ்வின்) தண்டனைப் பிடித்தது.
Nahl 16:114
ஆக, (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் ஆகுமானதை, நல்லதை புசியுங்கள்! மேலும், அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள்! நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருந்தால்.
Nahl 16:115
அவன் உங்கள் மீது தடுத்ததெல்லாம் செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவை ஆகியவையாகும். ஆக, எவர் (அதை) விரும்பியவராக அல்லாமல், (சட்டத்தை) மீறியவராக அல்லாமல் (பசியின் கொடுமையால் மேற் கூறப்பட்ட தடுக்கப்பட்டவற்றில் எதையும் உண்ணவேண்டிய) நிர்ப்பந்தத்திற்குள்ளானாரோ நிச்சயமாக அல்லாஹ் (அவரை மன்னித்து கருணை புரியும்) மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
Nahl 16:116
மேலும், நீங்கள் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதற்காக உங்கள் நாவுகள் வருணிக்கும் பொய்களின் பிரகாரம் “இது ஹலால் - ஆகுமானதாகும்; இது ஹராம் ஆகாததாகும்” என்று கூறாதீர்கள். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.
Nahl 16:117
(உலகில் அவர்கள் அனுபவிப்பதோ) ஒரு சொற்ப இன்பமாகும். இன்னும், (மறுமையில்) துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு.
Nahl 16:118
(நபியே!) இதற்கு முன்னர் (ம் அத்தியாயம் ம் வசனத்தில்) நாம் உம்மீது விவரித்தவற்றை யூதர்கள் மீது (ஹராம் என்று) தடுத்தோம். நாம் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்கள்தான் தங்களுக்குத் தாமே தீங்கிழைப்பவர்களாக இருந்தனர்.
Nahl 16:119
பிறகு, (தூதரே!) நிச்சயமாக உம் இறைவன், - எவர்கள் அறியாமையின் காரணமாக கெட்டதைச் செய்து, அதற்கு பின்னர் அதிலிருந்து திருந்தி, மன்னிப்புக்கேட்டு, (தங்களை) சீர்படுத்தி கொண்டார்களோ அவர்களுக்கு நிச்சயமாக உம் இறைவன் அ(வர்கள் திருந்திய)தற்குப் பின்னர் (அவர்களை) மன்னிப்பவனாகவும் (அவர்கள் மீது) கருணைபுரிபவனாகவும் இருக்கிறான்.
Nahl 16:120
நிச்சயமாக இப்ராஹீம் நன்மையை போதிப்பவராக, அல்லாஹ்விற்கு மிக பணிந்தவராக, இஸ்லாமிய கொள்கையில் உறுதியுடையவராக இருந்தார். இன்னும் அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை.
Nahl 16:121
அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக இருந்தார். அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்தான். இன்னும், நேரான பாதையில் அவரை அவன் நேர்வழி செலுத்தினான்.
Nahl 16:122
மேலும், இவ்வுலகில் அவருக்கு அழகிய கூலியை கொடுத்தோம். இன்னும், நிச்சயமாக அவர் மறுமையில் நல்லவர்களில் உள்ளவர் ஆவார்.
Nahl 16:123
பிறகு, (நபியே!) நீர் இஸ்லாமியக் கொள்கையில் உறுதியுடையவராக இருக்கின்ற நிலையில் இப்ராஹீமின் மார்க்கத்தை பின்பற்றுவீராக என்று உமக்கு வஹ்யி அறிவித்தோம். இன்னும், அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை.
Nahl 16:124
சனிக்கிழமையை(க் கண்ணியப்படுத்துவது கடமையாக) ஆக்கப்பட்டதெல்லாம், அதில் (தங்கள் நபியிடம்) கருத்து வேறுபாடு கொண்டவர்கள் மீதுதான். மேலும், நிச்சயமாக உம் இறைவன் மறுமை நாளில் அவர்களுக்கிடையில், அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவற்றில் தீர்ப்பளிப்பான்.
Nahl 16:125
(நபியே!) ஞானம்; இன்னும், அழகிய உபதேசத்தின் மூலம் உம் இறைவனுடைய பாதையின் பக்கம் (மக்களை) அழைப்பீராக! மேலும், மிக அழகிய முறையில் அவர்களிடம் தர்க்கிப்பீராக! நிச்சயமாக உம் இறைவன், - அவனுடைய பாதையிலிருந்து யார் வழி தவறினாரோ அவரை - மிக அறிந்தவன் ஆவான். இன்னும், நேர்வழிபெற்றவர்களையும் அவன் மிக அறிந்தவன் ஆவான்.
Nahl 16:126
(நம்பிக்கையாளர்களே! உங்களை தாக்கியவர்களை) நீங்கள் தண்டித்தால் (வரம்பு மீறாமல்) நீங்கள் தண்டிக்கப்பட்டது போன்றே தண்டியுங்கள். நீங்கள் பொறு(மையாக இருந்து அவர்களை மன்னி)த்தால் அதுதான் பொறுமையாளர்களுக்கு மிக நல்லது!
Nahl 16:127
(நபியே!) பொறுமையாக இருப்பீராக. மேலும், அல்லாஹ்விற்காகவே தவிர உம் பொறுமை இல்லை. மேலும், அவர்கள் மீது கவலைப்படாதீர்! இன்னும், அவர்கள் சூழ்ச்சி செய்வதைப் பற்றி (மன) நெருக்கடியில் நீர் ஆகிவிடாதீர்.
Nahl 16:128
நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களுடனும், நல்லறம் புரிபவர்களுடனும் இருக்கிறான்.