Tamilce Meal — Şeyh Ömer Şerif b. Abdüsselâm — Sâd 38:1 – Ahkaf 46:35
Contents
- Sâd 38:1
- Sâd 38:2
- Sâd 38:3
- Sâd 38:4
- Sâd 38:5
- Sâd 38:6
- Sâd 38:7
- Sâd 38:8
- Sâd 38:9
- Sâd 38:10
- Sâd 38:11
- Sâd 38:12
- Sâd 38:13
- Sâd 38:14
- Sâd 38:15
- Sâd 38:16
- Sâd 38:17
- Sâd 38:18
- Sâd 38:19
- Sâd 38:20
- Sâd 38:21
- Sâd 38:22
- Sâd 38:23
- Sâd 38:24
- Sâd 38:25
- Sâd 38:26
- Sâd 38:27
- Sâd 38:28
- Sâd 38:29
- Sâd 38:30
- Sâd 38:31
- Sâd 38:32
- Sâd 38:33
- Sâd 38:34
- Sâd 38:35
- Sâd 38:36
- Sâd 38:37
- Sâd 38:38
- Sâd 38:39
- Sâd 38:40
- Sâd 38:41
- Sâd 38:42
- Sâd 38:43
- Sâd 38:44
- Sâd 38:45
- Sâd 38:46
- Sâd 38:47
- Sâd 38:48
- Sâd 38:49
- Sâd 38:50
- Sâd 38:51
- Sâd 38:52
- Sâd 38:53
- Sâd 38:54
- Sâd 38:55
- Sâd 38:56
- Sâd 38:57
- Sâd 38:58
- Sâd 38:59
- Sâd 38:60
- Sâd 38:61
- Sâd 38:62
- Sâd 38:63
- Sâd 38:64
- Sâd 38:65
- Sâd 38:66
- Sâd 38:67
- Sâd 38:68
- Sâd 38:69
- Sâd 38:70
- Sâd 38:71
- Sâd 38:72
- Sâd 38:73
- Sâd 38:74
- Sâd 38:75
- Sâd 38:76
- Sâd 38:77
- Sâd 38:78
- Sâd 38:79
- Sâd 38:80
- Sâd 38:81
- Sâd 38:82
- Sâd 38:83
- Sâd 38:84
- Sâd 38:85
- Sâd 38:86
- Sâd 38:87
- Sâd 38:88
- Zümer 39:1
- Zümer 39:2
- Zümer 39:3
- Zümer 39:4
- Zümer 39:5
- Zümer 39:6
- Zümer 39:7
- Zümer 39:8
- Zümer 39:9
- Zümer 39:10
- Zümer 39:11
- Zümer 39:12
- Zümer 39:13
- Zümer 39:14
- Zümer 39:15
- Zümer 39:16
- Zümer 39:17
- Zümer 39:18
- Zümer 39:19
- Zümer 39:20
- Zümer 39:21
- Zümer 39:22
- Zümer 39:23
- Zümer 39:24
- Zümer 39:25
- Zümer 39:26
- Zümer 39:27
- Zümer 39:28
- Zümer 39:29
- Zümer 39:30
- Zümer 39:31
- Zümer 39:32
- Zümer 39:33
- Zümer 39:34
- Zümer 39:35
- Zümer 39:36
- Zümer 39:37
- Zümer 39:38
- Zümer 39:39
- Zümer 39:40
- Zümer 39:41
- Zümer 39:42
- Zümer 39:43
- Zümer 39:44
- Zümer 39:45
- Zümer 39:46
- Zümer 39:47
- Zümer 39:48
- Zümer 39:49
- Zümer 39:50
- Zümer 39:51
- Zümer 39:52
- Zümer 39:53
- Zümer 39:54
- Zümer 39:55
- Zümer 39:56
- Zümer 39:57
- Zümer 39:58
- Zümer 39:59
- Zümer 39:60
- Zümer 39:61
- Zümer 39:62
- Zümer 39:63
- Zümer 39:64
- Zümer 39:65
- Zümer 39:66
- Zümer 39:67
- Zümer 39:68
- Zümer 39:69
- Zümer 39:70
- Zümer 39:71
- Zümer 39:72
- Zümer 39:73
- Zümer 39:74
- Zümer 39:75
- Mü'min 40:1
- Mü'min 40:2
- Mü'min 40:3
- Mü'min 40:4
- Mü'min 40:5
- Mü'min 40:6
- Mü'min 40:7
- Mü'min 40:8
- Mü'min 40:9
- Mü'min 40:10
- Mü'min 40:11
- Mü'min 40:12
- Mü'min 40:13
- Mü'min 40:14
- Mü'min 40:15
- Mü'min 40:16
- Mü'min 40:17
- Mü'min 40:18
- Mü'min 40:19
- Mü'min 40:20
- Mü'min 40:21
- Mü'min 40:22
- Mü'min 40:23
- Mü'min 40:24
- Mü'min 40:25
- Mü'min 40:26
- Mü'min 40:27
- Mü'min 40:28
- Mü'min 40:29
- Mü'min 40:30
- Mü'min 40:31
- Mü'min 40:32
- Mü'min 40:33
- Mü'min 40:34
- Mü'min 40:35
- Mü'min 40:36
- Mü'min 40:37
- Mü'min 40:38
- Mü'min 40:39
- Mü'min 40:40
- Mü'min 40:41
- Mü'min 40:42
- Mü'min 40:43
- Mü'min 40:44
- Mü'min 40:45
- Mü'min 40:46
- Mü'min 40:47
- Mü'min 40:48
- Mü'min 40:49
- Mü'min 40:50
- Mü'min 40:51
- Mü'min 40:52
- Mü'min 40:53
- Mü'min 40:54
- Mü'min 40:55
- Mü'min 40:56
- Mü'min 40:57
- Mü'min 40:58
- Mü'min 40:59
- Mü'min 40:60
- Mü'min 40:61
- Mü'min 40:62
- Mü'min 40:63
- Mü'min 40:64
- Mü'min 40:65
- Mü'min 40:66
- Mü'min 40:67
- Mü'min 40:68
- Mü'min 40:69
- Mü'min 40:70
- Mü'min 40:71
- Mü'min 40:72
- Mü'min 40:73
- Mü'min 40:74
- Mü'min 40:75
- Mü'min 40:76
- Mü'min 40:77
- Mü'min 40:78
- Mü'min 40:79
- Mü'min 40:80
- Mü'min 40:81
- Mü'min 40:82
- Mü'min 40:83
- Mü'min 40:84
- Mü'min 40:85
- Fussılet 41:1
- Fussılet 41:2
- Fussılet 41:3
- Fussılet 41:4
- Fussılet 41:5
- Fussılet 41:6
- Fussılet 41:7
- Fussılet 41:8
- Fussılet 41:9
- Fussılet 41:10
- Fussılet 41:11
- Fussılet 41:12
- Fussılet 41:13
- Fussılet 41:14
- Fussılet 41:15
- Fussılet 41:16
- Fussılet 41:17
- Fussılet 41:18
- Fussılet 41:19
- Fussılet 41:20
- Fussılet 41:21
- Fussılet 41:22
- Fussılet 41:23
- Fussılet 41:24
- Fussılet 41:25
- Fussılet 41:26
- Fussılet 41:27
- Fussılet 41:28
- Fussılet 41:29
- Fussılet 41:30
- Fussılet 41:31
- Fussılet 41:32
- Fussılet 41:33
- Fussılet 41:34
- Fussılet 41:35
- Fussılet 41:36
- Fussılet 41:37
- Fussılet 41:38
- Fussılet 41:39
- Fussılet 41:40
- Fussılet 41:41
- Fussılet 41:42
- Fussılet 41:43
- Fussılet 41:44
- Fussılet 41:45
- Fussılet 41:46
- Fussılet 41:47
- Fussılet 41:48
- Fussılet 41:49
- Fussılet 41:50
- Fussılet 41:51
- Fussılet 41:52
- Fussılet 41:53
- Fussılet 41:54
- Şûrâ 42:1
- Şûrâ 42:2
- Şûrâ 42:3
- Şûrâ 42:4
- Şûrâ 42:5
- Şûrâ 42:6
- Şûrâ 42:7
- Şûrâ 42:8
- Şûrâ 42:9
- Şûrâ 42:10
- Şûrâ 42:11
- Şûrâ 42:12
- Şûrâ 42:13
- Şûrâ 42:14
- Şûrâ 42:15
- Şûrâ 42:16
- Şûrâ 42:17
- Şûrâ 42:18
- Şûrâ 42:19
- Şûrâ 42:20
- Şûrâ 42:21
- Şûrâ 42:22
- Şûrâ 42:23
- Şûrâ 42:24
- Şûrâ 42:25
- Şûrâ 42:26
- Şûrâ 42:27
- Şûrâ 42:28
- Şûrâ 42:29
- Şûrâ 42:30
- Şûrâ 42:31
- Şûrâ 42:32
- Şûrâ 42:33
- Şûrâ 42:34
- Şûrâ 42:35
- Şûrâ 42:36
- Şûrâ 42:37
- Şûrâ 42:38
- Şûrâ 42:39
- Şûrâ 42:40
- Şûrâ 42:41
- Şûrâ 42:42
- Şûrâ 42:43
- Şûrâ 42:44
- Şûrâ 42:45
- Şûrâ 42:46
- Şûrâ 42:47
- Şûrâ 42:48
- Şûrâ 42:49
- Şûrâ 42:50
- Şûrâ 42:51
- Şûrâ 42:52
- Şûrâ 42:53
- Zuhruf 43:1
- Zuhruf 43:2
- Zuhruf 43:3
- Zuhruf 43:4
- Zuhruf 43:5
- Zuhruf 43:6
- Zuhruf 43:7
- Zuhruf 43:8
- Zuhruf 43:9
- Zuhruf 43:10
- Zuhruf 43:11
- Zuhruf 43:12
- Zuhruf 43:13
- Zuhruf 43:14
- Zuhruf 43:15
- Zuhruf 43:16
- Zuhruf 43:17
- Zuhruf 43:18
- Zuhruf 43:19
- Zuhruf 43:20
- Zuhruf 43:21
- Zuhruf 43:22
- Zuhruf 43:23
- Zuhruf 43:24
- Zuhruf 43:25
- Zuhruf 43:26
- Zuhruf 43:27
- Zuhruf 43:28
- Zuhruf 43:29
- Zuhruf 43:30
- Zuhruf 43:31
- Zuhruf 43:32
- Zuhruf 43:33
- Zuhruf 43:34
- Zuhruf 43:35
- Zuhruf 43:36
- Zuhruf 43:37
- Zuhruf 43:38
- Zuhruf 43:39
- Zuhruf 43:40
- Zuhruf 43:41
- Zuhruf 43:42
- Zuhruf 43:43
- Zuhruf 43:44
- Zuhruf 43:45
- Zuhruf 43:46
- Zuhruf 43:47
- Zuhruf 43:48
- Zuhruf 43:49
- Zuhruf 43:50
- Zuhruf 43:51
- Zuhruf 43:52
- Zuhruf 43:53
- Zuhruf 43:54
- Zuhruf 43:55
- Zuhruf 43:56
- Zuhruf 43:57
- Zuhruf 43:58
- Zuhruf 43:59
- Zuhruf 43:60
- Zuhruf 43:61
- Zuhruf 43:62
- Zuhruf 43:63
- Zuhruf 43:64
- Zuhruf 43:65
- Zuhruf 43:66
- Zuhruf 43:67
- Zuhruf 43:68
- Zuhruf 43:69
- Zuhruf 43:70
- Zuhruf 43:71
- Zuhruf 43:72
- Zuhruf 43:73
- Zuhruf 43:74
- Zuhruf 43:75
- Zuhruf 43:76
- Zuhruf 43:77
- Zuhruf 43:78
- Zuhruf 43:79
- Zuhruf 43:80
- Zuhruf 43:81
- Zuhruf 43:82
- Zuhruf 43:83
- Zuhruf 43:84
- Zuhruf 43:85
- Zuhruf 43:86
- Zuhruf 43:87
- Zuhruf 43:88
- Zuhruf 43:89
- Duhan 44:1
- Duhan 44:2
- Duhan 44:3
- Duhan 44:4
- Duhan 44:5
- Duhan 44:6
- Duhan 44:7
- Duhan 44:8
- Duhan 44:9
- Duhan 44:10
- Duhan 44:11
- Duhan 44:12
- Duhan 44:13
- Duhan 44:14
- Duhan 44:15
- Duhan 44:16
- Duhan 44:17
- Duhan 44:18
- Duhan 44:19
- Duhan 44:20
- Duhan 44:21
- Duhan 44:22
- Duhan 44:23
- Duhan 44:24
- Duhan 44:25
- Duhan 44:26
- Duhan 44:27
- Duhan 44:28
- Duhan 44:29
- Duhan 44:30
- Duhan 44:31
- Duhan 44:32
- Duhan 44:33
- Duhan 44:34
- Duhan 44:35
- Duhan 44:36
- Duhan 44:37
- Duhan 44:38
- Duhan 44:39
- Duhan 44:40
- Duhan 44:41
- Duhan 44:42
- Duhan 44:43
- Duhan 44:44
- Duhan 44:45
- Duhan 44:46
- Duhan 44:47
- Duhan 44:48
- Duhan 44:49
- Duhan 44:50
- Duhan 44:51
- Duhan 44:52
- Duhan 44:53
- Duhan 44:54
- Duhan 44:55
- Duhan 44:56
- Duhan 44:57
- Duhan 44:58
- Duhan 44:59
- Câsiye 45:1
- Câsiye 45:2
- Câsiye 45:3
- Câsiye 45:4
- Câsiye 45:5
- Câsiye 45:6
- Câsiye 45:7
- Câsiye 45:8
- Câsiye 45:9
- Câsiye 45:10
- Câsiye 45:11
- Câsiye 45:12
- Câsiye 45:13
- Câsiye 45:14
- Câsiye 45:15
- Câsiye 45:16
- Câsiye 45:17
- Câsiye 45:18
- Câsiye 45:19
- Câsiye 45:20
- Câsiye 45:21
- Câsiye 45:22
- Câsiye 45:23
- Câsiye 45:24
- Câsiye 45:25
- Câsiye 45:26
- Câsiye 45:27
- Câsiye 45:28
- Câsiye 45:29
- Câsiye 45:30
- Câsiye 45:31
- Câsiye 45:32
- Câsiye 45:33
- Câsiye 45:34
- Câsiye 45:35
- Câsiye 45:36
- Câsiye 45:37
- Ahkaf 46:1
- Ahkaf 46:2
- Ahkaf 46:3
- Ahkaf 46:4
- Ahkaf 46:5
- Ahkaf 46:6
- Ahkaf 46:7
- Ahkaf 46:8
- Ahkaf 46:9
- Ahkaf 46:10
- Ahkaf 46:11
- Ahkaf 46:12
- Ahkaf 46:13
- Ahkaf 46:14
- Ahkaf 46:15
- Ahkaf 46:16
- Ahkaf 46:17
- Ahkaf 46:18
- Ahkaf 46:19
- Ahkaf 46:20
- Ahkaf 46:21
- Ahkaf 46:22
- Ahkaf 46:23
- Ahkaf 46:24
- Ahkaf 46:25
- Ahkaf 46:26
- Ahkaf 46:27
- Ahkaf 46:28
- Ahkaf 46:29
- Ahkaf 46:30
- Ahkaf 46:31
- Ahkaf 46:32
- Ahkaf 46:33
- Ahkaf 46:34
- Ahkaf 46:35
Sâd 38:1
அணி அணியாக அணிவகுப்பவர்கள் (-வானவர்கள்) மீது சத்தியமாக!
Sâd 38:2
மாறாக, நிராகரிப்பவர்கள் பிடிவாதத்திலும் முரண்பாட்டிலும் இருக்கிறார்கள்.
Sâd 38:3
இவர்களுக்கு முன்னர் எத்தனையோ பல தலைமுறைகளை நாம் அழித்தோம். ஆக, (நம் தண்டனை வந்தபோது அவர்கள் நம்மிடம் மன்றாடி பிரார்த்தித்து நம்மை) அழைத்தனர். (ஆனால், தண்டனை வந்த) அந்த நேரம் தப்பித்து ஓடுவதற்குரிய நேரம் அல்ல.
Sâd 38:4
அவர்களில் இருந்தே ஓர் எச்சரிப்பாளர் அவர்களிடம் வந்ததால் அவர்கள் ஆச்சரியப்பட்டனர். இன்னும், நிராகரிப்பாளர்கள் (அவரைப் பற்றி,) “இவர் ஒரு சூனியக்காரர், ஒரு பெரும் பொய்யர்” என்று கூறினார்கள்.
Sâd 38:5
(இன்னும் அவர்கள் கூறினார்கள்:) “இவர் தெய்வங்களை (எல்லாம்) ஒரே ஒரு தெய்வமாக மாற்றிவிட்டாரா? நிச்சயமாக இது ஒரு ஆச்சரியமான விஷயம்தான்.”
Sâd 38:6
“நீங்கள் சென்று, உங்கள் தெய்வங்களை வழிபடுவதில் உறுதியாக இருங்கள்! நிச்சயமாக (முஹம்மத் கூறுகின்ற) இது (நமக்கு தீமையும் அவருக்கு தலைமைத்துவமும்) நாடப்பட்ட ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது” என்று கூறியவர்களாக அவர்களில் உள்ள பிரமுகர்கள் (ஆலோசனை சபையிலிருந்து கலைந்து) சென்றனர்.
Sâd 38:7
(இன்னும், அவர்கள் கூறினார்கள்:) “இதை வேறு மார்க்கத்தில் நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இது கற்பனையாக இட்டுக்கட்டப்பட்டதாகவே தவிர இல்லை.”
Sâd 38:8
“நமக்கு மத்தியில் (-மனிதராக வாழ்கிற) அவர் மீது வேதம் இறக்கப்பட்டதா?” (என்று கேலி செய்தனர்.) மாறாக, அவர்கள் எனது வேதத்தில் சந்தேகத்தில் இருக்கிறார்கள். மாறாக, அவர்கள் (இதுவரை) எனது தண்டனையை சுவைக்கவில்லை. (அப்படி சுவைத்திருந்தால் இந்த வேதத்தை உடனே நம்பியிருப்பார்கள்.)
Sâd 38:9
கண்ணியமிக்கவனான, மகா கொடை வள்ளலான உமது இறைவனின் அருளுடைய பொக்கிஷங்கள் அவர்களிடமா இருக்கின்றன?
Sâd 38:10
வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் ஆட்சி அவர்களுக்கா இருக்கிறது? அப்படி இருந்தால் அவர்கள் (வானங்களின்) வாசல்களில் மேலே ஏறிவரட்டும்.
Sâd 38:11
(இவர்கள் உம்மை பொய்ப்பிக்கின்ற) அந்த விஷயத்தில் பல படைகளில் தோற்கடிக்கப்படும்படியான (பலவீனமான) ஒரு ராணுவம்தான். (இன்னும், இவர்கள் இப்லீஸின் கட்சியைச் சேர்ந்தவர்கள்.)
Sâd 38:12
இவர்களுக்கு முன்னர் நூஹ் உடைய மக்களும் ஆது சமுதாயமும் ஆணிகளை உடைய ஃபிர்அவ்னும் (நபிமார்களை) பொய்ப்பித்தனர்.
Sâd 38:13
ஸமூது சமுதாயமும் லூத்துடைய மக்களும் தோட்டமுடையவர்களும் பொய்ப்பித்தனர். அவர்கள்தான் (பாவத்திற்காக ஒன்றுகூடிய) குழுக்கள் ஆவார்கள்.
Sâd 38:14
இவர்கள் எல்லோரும் தூதர்களை பொய்ப்பித்தனர். ஆகவே, எனது தண்டனை (அவர்களுக்கு) உறுதியானது.
Sâd 38:15
இவர்கள் ஒரே ஒரு சத்தத்தைத் தவிர எதையும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு (அந்த சத்தத்திற்கு) துண்டிப்பு, இடைவெளி இருக்காது. (அந்த தண்டனை இடைவெளி இல்லாத ஒரே சத்தமாக இருக்கும்.)
Sâd 38:16
அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவா! விசாரணை நாளுக்கு முன்பாக எங்களுக்கு எங்கள் பத்திரத்தை (பங்கை, ஆவணத்தை) தீவிரப்படுத்திக் கொடு.” (மறுமையில் எங்களுக்கு நீ என்ன கொடுக்கப்போகிறாயோ அது நல்லதோ, கெட்டதோ அதை ஒரு பத்திரத்தில் எழுதி உலகத்திலேயே எங்களுக்கு கொடுத்துவிடு.)
Sâd 38:17
(நபியே!) அவர்கள் கூறுவதை சகிப்பீராக! (அல்லாஹ்வின் விஷயத்தில், அல்லாஹ்வை வணங்குவதில்) மிக வலிமை, உறுதி உடைய நமது அடியார் தாவூதை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் (அல்லாஹ்வை அதிகம் வணங்குவதன் மூலம் அவன் பக்கம்) முற்றிலும் திரும்பக் கூடியவர் ஆவார்.
Sâd 38:18
நிச்சயமாக நாம் (அவருக்கு) மலைகளை வசப்படுத்தினோம். அவருடன் மாலையிலும் காலையிலும் அவை (அல்லாஹ்வை) துதிக்கும்.
Sâd 38:19
இன்னும் (அவருக்கு முன்பாக) ஒன்று சேர்க்கப்பட்ட பறவைகளையும் (அவருக்கு நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவை எல்லாம் அவருக்கு கீழ்ப்படிந்தவையாக இருந்தன. (எல்லாம் அவருடன் சேர்ந்து அல்லாஹ்வை துதிப்பவையாக இருந்தன.)
Sâd 38:20
இன்னும், அவருடைய ஆட்சியை பலப்படுத்தினோம். அவருக்கு ஞானத்தையும் (-நபித்துவத்தையும் சட்ட நுணுக்கத்தையும்) மிகத்தெளிவான, மிக உறுதியான பேச்சையும் கொடுத்தோம்.
Sâd 38:21
(நபியே) வழக்காளிகளுடைய செய்தி உம்மிடம் வந்ததா? (தாவூத், அல்லாஹ்வை வணங்கி வந்த) வீட்டின் முன்பக்கமாக அவர்கள் சுவர் ஏறி வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
Sâd 38:22
அவர்கள் தாவூத் (நபி) இடம் (திடீரென) நுழைந்த போது அவர் அவர்களைப் பார்த்து திடுக்கிட்டார். அவர்கள் கூறினார்கள்: பயப்படாதீர். நாங்கள் இரு வழக்காளிகள். எங்களில் ஒருவர், (மற்ற) ஒருவர் மீது அநியாயம் செய்தார். ஆகவே! எங்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பீராக! அநீதி இழைத்து விடாதீர். நேரான பாதையின் பக்கம் எங்களுக்கு வழிகாட்டுவீராக!
Sâd 38:23
“நிச்சயமாக இவர் எனது சகோதரர். அவருக்கு தொண்ணூற்றி ஒன்பது ஆடுகள் உள்ளன. எனக்கு ஒரே ஓர் ஆடுதான் உள்ளது. அதை(யும்) எனக்கு தந்துவிடு! என்று அவர் கூறுகிறார். அவர் வாதத்தில் என்னை மிகைத்துவிட்டார்.”
Sâd 38:24
(தாவூத்) கூறினார்: உனது ஆட்டை தனது ஆடுகளுடன் சேர்க்க அவர் (உன்னிடம்) கேட்டதினால் அவர் உனக்கு அநீதி இழைத்துவிட்டார். நிச்சயமாக பங்காளிகளில் அதிகமானவர்கள் - அவர்களில் சிலர், சிலர் மீது அநீதி இழைக்கிறார்கள். (ஆனால்,) நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்களைத் தவிர. அவர்கள் மிகக் குறைவானவர்களே! தாவூத், நாம் அவரை சோதித்தோம் என்பதை அறிந்து கொண்டார். ஆகவே, அவர் தன் இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார். சிரம் பணிந்தவராக (பூமியில்) விழுந்தார். அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்.
Sâd 38:25
ஆக, நாம் அவருக்கு அ(ந்த குற்றத்)தை மன்னித்தருளினோம். நிச்சயமாக அவருக்கு நம்மிடம் மிக நெருக்கமும் அழகிய மீளுமிடமும் உண்டு.
Sâd 38:26
தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை இந்த பூமியில் அதிபராக ஆக்கினோம். ஆகவே, மக்களுக்கு மத்தியில் சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! சுய விருப்பத்தை பின்பற்றிவிடாதீர். அது உம்மை அல்லாஹ்வின் மார்க்கத்தில் இருந்து வழிகெடுத்துவிடும். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் இருந்து (மக்களை) வழிகெடுப்பார்களோ - அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு, அவர்கள் விசாரணை நாளை மறந்த காரணத்தால்.
Sâd 38:27
வானத்தையும் பூமியையும் அவ்விரண்டுக்கு மத்தியில் உள்ளவற்றையும் நாம் வீணாக படைக்கவில்லை. அ(வை நோக்கமின்றி படைக்கப்பட்டன என்ப)து நிராகரிப்பவர்களின் எண்ணமாகும். ஆகவே, நிராகரிப்பவர்களுக்கு நரகத்தில் நாசம் உண்டாகட்டும்.
Sâd 38:28
நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களை பூமியில் கெட்டதை செய்பவர்களைப் போன்று ஆக்குவோமா? அல்லது, இறையச்சம் உள்ளவர்களை பாவிகளைப் போன்று ஆக்குவோமா?
Sâd 38:29
இது, அபிவிருத்தி செய்யப்பட்ட (அதிக நன்மைகளுடைய அருள் நிறைந்த) ஒரு வேதமாகும். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுள்ளவர்கள் (இதன் மூலம்) நல்லுபதேசம் பெறுவதற்காகவும் இதை நாம் உமக்கு இறக்கினோம்.
Sâd 38:30
தாவூதுக்கு நாம் சுலைமானை (நல்ல சந்ததியாக) வழங்கினோம். அவர் சிறந்த அடியார். நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் பக்கம் அதிகம் திரும்பக் கூடியவர் ஆவார். (அல்லாஹ்வை அதிகம் நினைப்பவரும் தொழுபவரும் அவனுக்கு அதிகம் கீழ்ப்படிந்து நடப்பவரும் ஆவார்.)
Sâd 38:31
(ஓடும்போது) விரைந்து ஓடக்கூடிய, (நிற்கும்போது மூன்று கால்களின் மீது நின்று, ஒரு காலின் குழம்பை பூமியில் தொட்டு) அமைதியாக நிற்கக்கூடிய குதிரைகள் மாலை நேரத்தில் அவருக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டபோது,
Sâd 38:32
ஆக, அவர் கூறினார்: “என் இறைவனை தொழுவதை விட்டும் (மறக்கும் அளவுக்கு குதிரை) செல்வத்தின் ஆசையை நிச்சயமாக நான் ஆசை வைத்து விட்டேன்.” இறுதியாக, (சூரியன் அது மறையக்கூடிய) திரையில் மறைந்து (-பார்க்க முடியாமல்) விட்டது.
Sâd 38:33
அவற்றை என்னிடம் திரும்பக் கொண்டு வாருங்கள். ஆக, (அவற்றின்) கெண்டை கால்களிலும் கழுத்துகளிலும் (அன்புடன்) தடவ ஆரம்பித்தார்.
Sâd 38:34
சுலைமானை நாம் திட்டவட்டமாக சோதித்தோம். இன்னும், அவருடைய நாற்காலியில் ஓர் உடலை போட்டோம். பிறகு, அவர் (நம் பக்கம்) திரும்பிவிட்டார்.
Sâd 38:35
அவர் கூறினார்: “என் இறைவா! என்னை மன்னிப்பாயாக! இன்னும், எனக்குப் பிறகு வேறு ஒருவருக்கும் தகுதியாகாத ஓர் ஆட்சியை நீ எனக்குத் தா! நிச்சயமாக நீதான் மகா பெரிய கொடைவள்ளல் ஆவாய்.”
Sâd 38:36
ஆகவே, அவருக்கு நாம் காற்றை பணிய வைத்தோம். அவர் விரும்புகின்ற இடத்திற்கு அவருடைய கட்டளைக்கிணங்க அது மென்மையாக வீசும்.
Sâd 38:37
இன்னும், எல்லா ஷைத்தான்களையும் (அவருக்கு பணிய வைத்தோம்). அவர்களில் கட்டிட வல்லுனர்கள், முத்துக் குளிப்பவர்கள் இருந்தனர்.
Sâd 38:38
(இவர்கள் அனைவரையும்,) இன்னும், சங்கிலிகளில் பிணைக்கப்பட்ட மற்றவர்களையும் (நாம் அவருக்கு பணிய வைத்தோம்).
Sâd 38:39
இது நமது அருட்கொடையாகும். ஆகவே, (இந்த அருளை பிறருக்கு) நீர் கொடுப்பீராக! அல்லது, நீரே வைத்துக்கொள்வீராக! (அது விஷயமாக உம்மிடம்) விசாரணை இருக்காது.
Sâd 38:40
நிச்சயமாக அவருக்கு நம்மிடம் நெருக்கமும் அழகிய மீளுமிடமும் இருக்கிறது.
Sâd 38:41
இன்னும். நமது அடியார் அய்யூபை நினைவு கூர்வீராக! நிச்சயமாக எனக்கு களைப்பையும் வலியையும் ஷைத்தான் ஏற்படுத்தி விட்டான் என்று அவர் தன் இறைவனை அழைத்(து பிரார்த்தித்)த சமயத்தில்,
Sâd 38:42
(நாம் அவருக்கு கூறினோம்:) “உமது காலால் (பூமியை) உதைப்பீராக! இது குளிர்ந்த நீருடைய குளிக்கின்ற நீரூற்றும் குடிக்கின்ற நீருமாகும்.”
Sâd 38:43
இன்னும், நம் புறத்தில் இருந்து கருணையாகவும் நிறைவான அறிவுடையவர்களுக்கு ஓர் உபதேசமாக இருப்பதற்காகவும் அவருடைய குடும்பத்தாரையும் அவர்களுடன் (குணத்திலும் அழகிலும்) அவர்கள் போன்றவர்களையும் அவருக்கு நாம் (அதிகமாகக்) கொடுத்தோம்.
Sâd 38:44
இன்னும், (அவருக்கு கூறினோம்:) “உமது கரத்தால் ஒரு பிடி புல்லை எடுப்பீராக! ஆக, அதன்மூலம் (பூமியில்) அடிப்பீராக! நீர் (செய்த) சத்தியத்தை முறிக்காதீர்!” நிச்சயமாக நாம் அவரை பொறுமையாளராக கண்டோம். அவர் சிறந்த அடியார். நிச்சயமாக அவர் (இன்பத்திலும் துன்பத்திலும் எல்லா நிலையிலும்) அல்லாஹ்வின் பக்கமே திரும்பியவர் ஆவார்.
Sâd 38:45
நமது அடியார்களான, (வணக்க வழிபாட்டில்) வலிமைகளும் (அல்லாஹ்வை அறிவதில்) அகப்பார்வையும் உடையவர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோரை நினைவு கூர்வீராக!
Sâd 38:46
நிச்சயமாக நாம் “மறுமையை அதிகம் நினைத்தல் (அதற்காக அமல் செய்தல்)” என்ற சிறப்பைக் கொண்டு அவர்களை விசேஷமாக தேர்ந்தெடுத்தோம். (அவர்களும் அல்லாஹ்வை, மறுமையை நினைவு கூர்ந்தவர்களாக இருந்ததுடன் மக்களுக்கும் அதை நினைவூட்டுபவர்களாக இருந்தார்கள்.)
Sâd 38:47
இன்னும், நிச்சயமாக அவர்கள், நம்மிடம் மிகச் சிறந்தவர்களான தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருந்தார்கள்.
Sâd 38:48
இன்னும், இஸ்மாயீலையும் அல்யசவுவையும் துல்கிஃப்லையும் நினைவு கூர்வீராக! (இவர்கள்) எல்லோரும் மிகச் சிறந்தவர்களில் உள்ளவர்கள்.
Sâd 38:49
இது ஒரு நினைவூட்டல் (நல்லுபதேசம்) ஆகும். நிச்சயமாக அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு அழகிய மீளுமிடம் (தங்குமிடம்) இருக்கிறது.
Sâd 38:50
அத்ன் சொர்க்கங்கள் (அவர்களுக்கு) உண்டு. (அவற்றின்) வாசல்கள் அவர்களுக்காக திறக்கப்பட்டவையாக இருக்கும்.
Sâd 38:51
அவற்றில் அவர்கள் (-கட்டில்கள் மீது) சாய்ந்தவர்களாக இருப்பார்கள். அதிகமான பழங்களையும் பானங்களையும் கொண்டுவரும்படி (கூறி தங்கள் பணியாளர்களை) அழைப்பார்கள்.
Sâd 38:52
இன்னும், சம வயதுடைய, பார்வைகளை தாழ்த்திய பெண்கள் அவர்களிடம் இருப்பார்கள்.
Sâd 38:53
விசாரணை நாளில் (நீங்கள் பெறுவீர்கள் என்று) உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவை இவைதான்.
Sâd 38:54
நிச்சயமாக இவை (சொர்க்கவாசிகளுக்கு கொடுக்கப்பட்ட) நமது கொடையாகும். இவற்றுக்கு அழிவு, முடிவு அறவே இல்லை. (அல்லாஹ்வின் சொர்க்க அருள்கள் தீர்ந்து போகாதவை.)
Sâd 38:55
(மேற்கூறப்பட்ட) இவை (நல்லவர்களுக்கு உரியதாகும்). ஆனால், நிச்சயமாக எல்லை மீறியவர்களுக்கு (-பாவிகளுக்கு) மிகக் கெட்ட மீளுமிடம்தான் உண்டு.
Sâd 38:56
(அதுதான்) நரகம், அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள். (அங்கே அவர்களுக்கு விரிப்பு இருக்கும்.) அந்த விரிப்பு (நெருப்பினால் ஆன) மிகக் கெட்ட விரிப்பாகும்.
Sâd 38:57
இவை, கொதி நீரும் சீல் சலமும் ஆகும். ஆக, இவற்றை அவர்கள் சுவைக்கட்டும்.
Sâd 38:58
இன்னும், தோற்றத்தில் பல வகையான வேறு தண்டனைகளும் (அவர்களுக்கு) உண்டு.
Sâd 38:59
இது உங்களுடன் (நரகத்தில்) நுழையக்கூடிய (இன்னொரு) கூட்டமாகும் (என்று பாவிகளின் தலைவர்களுக்கு கூறப்படும். அப்போது அவர்கள் பதில் கூறுவார்கள்:) “அவர்களுக்கு (இங்கு) வசதி உண்டாகாமல் இருக்கட்டும். நிச்சயமாக அவர்கள் நரகத்தில் எரிந்து பொசுங்குவார்கள்.”
Sâd 38:60
(பாவிகள்) கூறுவார்கள்: “மாறாக, நீங்கள்தான் (நாங்கள் இங்கு வருவதற்கு காரணமாக இருந்தீர்கள்). உங்களுக்கு இங்கு வசதி கிடைக்காமல் போகட்டும். நீங்கள்தான் இவற்றை எங்களுக்கு முற்படுத்தினீர்கள். (எங்கள் பாவங்களுக்கு நீங்கள்தான் காரணம்.)” ஆக, (அவர்களது தங்குமிடம்) மிகக் கெட்ட தங்குமிடமாகும்.
Sâd 38:61
(பாவிகள்) கூறுவார்கள்: “எங்கள் இறைவா! யார் இவற்றை எங்களுக்கு முற்படுத்தினாரோ (-எங்களை யார் பாவத்தில் தள்ளினாரோ) அவருக்கு நரகத்தில் இரண்டு மடங்கு தண்டனையை நீ அதிகப்படுத்து.”
Sâd 38:62
இன்னும், அவர்கள் கூறுவார்கள்: “கெட்டவர்களில் உள்ளவர்கள் என்று நாங்கள் கருதி வந்த பல மனிதர்களை எங்களால் (இங்கு நரகத்தில்) பார்க்க முடிவதில்லையே!”
Sâd 38:63
(நரகத்தில் நுழையாத) அ(ந்த நல்ல)வர்களை நாங்கள் கேலியாக எடுத்துக் கொண்டோமா? அல்லது, (அவர்கள் இங்கு இருந்தும் அவர்களை நாங்கள் தேடியும் எங்கள்) பார்வைகள் அவர்களைப் பார்க்க முடியாமல் சோர்ந்து விட்டனவா?
Sâd 38:64
நரகவாசிகள் (இவ்வாறு) தங்களுக்குள் தர்க்கிப்பது - நிச்சயமாக இது உண்மையாகும்.
Sâd 38:65
(நபியே!) கூறுவீராக! “நிச்சயமாக நான் எல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். ஒரே ஒருவனுமாகிய (அனைவரையும்) அடக்கி ஆளுகிறவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் யாரும் இல்லை.”
Sâd 38:66
(அவன்,) வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் உரிமையாளன், மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் (ஆவான்).
Sâd 38:67
(நபியே!) கூறுவீராக! “இ(ந்த வேதமான)து ஒரு மகத்தான செய்தியாகும்.
Sâd 38:68
நீங்கள் இதை புறக்கணிக்கிறீர்கள்.”
Sâd 38:69
மிக உயர்ந்த வானவர்களைப் பற்றி, (ஆதமை அல்லாஹ் படைப்பதற்கு முன்னர் அவர் விஷயமாக) அவர்கள் தர்க்கித்த போது (என்ன கூறினார்கள் என்று) எனக்கு அறவே ஞானம் இல்லை. (அல்லாஹ் எனக்கு அதை கூறிய பின்னர்தான் நான் அதை அறிவேன். ஆகவே, இது தெளிவான ஓர் ஆதாரமாக இல்லையா?)
Sâd 38:70
“நிச்சயமாக நான் எல்லாம் தெளிவான ஓர் எச்சரிப்பாளர்தான்” என்றே தவிர எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதில்லை.
Sâd 38:71
(நபியே!) அந்த சமயத்தை நினைவு கூர்வீராக, உமது இறைவன் வானவர்களை நோக்கி கூறினான்: “நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து ஒரு மனிதரை படைக்கப்போகிறேன்”
Sâd 38:72
“ஆக, நான் அவரை செம்மைபடுத்தி, அவரில் நான் படைத்த உயிரை ஊதினால் (வானவர்களே!) நீங்கள் அவருக்கு முன் சிரம் பணிந்தவர்களாக விழுந்து விடுங்கள்!”
Sâd 38:73
ஆக, வானவர்கள், அவர்கள் ஒவ்வொருவரும், அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தனர்.
Sâd 38:74
இப்லீஸைத் தவிர. அவன் பெருமை அடித்தான். இன்னும், நிராகரிப்பவர்களில் ஆகிவிட்டான்.
Sâd 38:75
(அல்லாஹ்) கூறினான்: “இப்லீஸே! நான் எனது இரு கரத்தால் படைத்தவருக்கு நீ ஸஜ்தா செய்வதிலிருந்து உன்னை தடுத்தது எது? நீ பெருமையடிக்கிறாயா? (இதற்கு முன் நீ பெருமையடித்ததில்லையே!) அல்லது, (இதற்கு முன்னரும்) நீ பெருமையடிப்பவர்களில்தான் இருந்தாயா?”
Sâd 38:76
(ஷைத்தான்) கூறினான்: “நான் அவரை விட சிறந்தவன். நீ என்னை நெருப்பில் இருந்து படைத்தாய். இன்னும், அவரை மண்ணிலிருந்து படைத்தாய்.”
Sâd 38:77
(அல்லாஹ்) கூறினான்: “நீ இ(ந்த சொர்க்கத்)திலிருந்து வெளியேறி விடு! ஆக, நிச்சயமாக நீ சபிக்கப்பட்டவன் ஆவாய்.”
Sâd 38:78
“இன்னும், நிச்சயமாக கூலி (கொடுக்கப்படும் மறுமை) நாள் வரை உன் மீது என் சாபம் உண்டாகட்டும்.”
Sâd 38:79
(இப்லீஸ்) கூறினான்: “என் இறைவா! ஆக, அவர்கள் எழுப்பப்படுகின்ற நாள் வரை எனக்கு அவகாசம் அளி!”
Sâd 38:80
(அல்லாஹ்) கூறினான்: “நிச்சயமாக நீ, அவகாசமளிக்கப்பட்டவர்களில் இருப்பாய்.”
Sâd 38:81
“(மறுமைக்கான) அறியப்பட்ட நேரத்தின் நாள் வரும் வரை (உனக்கு அவகாசம் அளிக்கப்படும்).”
Sâd 38:82
(இப்லீஸ்) கூறினான்: “ஆக, உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக அவர்கள் அனைவரையும் நிச்சயமாக நான் வழிகெடுப்பேன்.”
Sâd 38:83
“அவர்களில் உனது பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்களை வழிகெடுக்க என்னால் முடியாது.)”
Sâd 38:84
(அல்லாஹ்) கூறினான்: “ஆக, (இதுதான் என்னிடமிருந்து வந்த) உண்மையாகும். நான் உண்மையைத்தான் கூறுவேன்.”
Sâd 38:85
“உன்னாலும் அவர்களில் உன்னை பின்பற்றியவர்களாலும் (உங்கள்) அனைவர்களாலும் நரகத்தை நிரப்புவேன்.”
Sâd 38:86
(நபியே!) கூறுவீராக! “இதற்காக நான் உங்களிடம் கூலி எதையும் கேட்கவில்லை. இன்னும், நான் (பொய்யாக) வரட்டு கௌரவம் தேடுபவர்களில் இல்லை.”
Sâd 38:87
(குர்ஆனாகிய) இது இல்லை, அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையாகவே தவிர.
Sâd 38:88
இதன் செய்தியை (அது உண்மையானது என்று வெளிப்படையாக) சில காலத்திற்குப் பின்னர் நிச்சயம் நீங்கள் அறிவீர்கள்.
Zümer 39:1
ஸாத்! அறிவுரைகள் நிறைந்த அல்குர்ஆன் மீது சத்தியமாக!
Zümer 39:2
நிச்சயமாக நாம் இந்த வேதத்தை உண்மையுடன் உமக்கு இறக்கினோம். ஆகவே, அல்லாஹ்வை வணங்குவீராக, வணக்க வழிபாடுகளை - தீனை அவனுக்கு முற்றிலும் தூய்மைப்படுத்தியவராக.
Zümer 39:3
அறிந்து கொள்ளுங்கள்! பரிசுத்தமான வணக்க வழிபாடுகள் எல்லாம் அல்லாஹ்விற்கே உரியன. அவனை அன்றி (பல) தெய்வங்களை (தங்களுக்கு) எடுத்துக் கொண்டவர்கள், “நாங்கள் அவர்களை வணங்குவதில்லை, அல்லாஹ்வின் பக்கம் அந்தஸ்தால் எங்களை அவர்கள் நெருக்கமாக்குவதற்காகவே தவிர.” என்று கூறுகிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு மத்தியில் அவர்கள் கருத்து வேறுபாடு செய்கின்றவற்றில் தீர்ப்பளிப்பான். பொய்யர்களை நிராகரிப்பாளர்களை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழி செலுத்தமாட்டான்.
Zümer 39:4
அல்லாஹ் ஒரு குழந்தையை (தனக்கு) எடுத்துக்கொள்ள நாடினால் அவன் தான் படைத்தவற்றில் இருந்து தான் நாடுவதை தேர்ந்தெடுத்திருப்பான். அவன் மகா பரிசுத்தமானவன். அவன்தான் ஒருவனும் அடக்கி ஆளுகிறவனுமாகிய அல்லாஹ் ஆவான்.
Zümer 39:5
அவன் வானங்களை, பூமியை உண்மையான காரணத்திற்காக படைத்தான். பகல் மீது இரவை சுருட்டுகிறான். இரவின் மீது பகலை சுருட்டுகிறான். சூரியனையும் சந்திரனையும் அவன் கட்டுப்படுத்தி வைத்துள்ளான். எல்லாம் குறிப்பிட்ட ஒரு தவணையை நோக்கி ஓடுகின்றன. அறிந்துகொள்ளுங்கள்! அவன்தான் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன்.
Zümer 39:6
அவன் உங்களை ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து படைத்தான். பிறகு, அதில் இருந்து அதன் ஜோடியை படைத்தான். இன்னும், அவன் உங்களுக்காக கால்நடைகளில் எட்டு ஜோடிகளை உருவாக்கினான். அவன் உங்களை உங்கள் தாய்மார்களின் வயிற்றில் (-தாயின் வயிறு, கருவறை, நஞ்சுக்கொடி ஆகிய) மூன்று இருள்களில் ஒரு படைப்புக்குப் பின்னர் இன்னொரு படைப்பாக படைக்கிறான். அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ் ஆவான். அவனுக்கே ஆட்சி அனைத்தும் உரியது. அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆக, நீங்கள் எவ்வாறு (அவனை விட்டு வேறு ஒன்றை வணங்குவதற்காக திசைத்) திருப்பப்படுகிறீர்கள்.
Zümer 39:7
நீங்கள் நிராகரித்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்களை விட்டும் முற்றிலும் தேவையற்றவன் - (எல்லா வகையிலும் அவன்) நிறைவானவன். அவன் தனது அடியார்களுக்கு நிராகரிப்பை விரும்ப மாட்டான். நீங்கள் நன்றி செலுத்தினால் அவன் உங்களுக்கு அதை விரும்புவான். பாவியான ஓர் ஆன்மா இன்னொரு (பாவியான) ஆன்மாவின் பாவத்தை சுமக்காது. பிறகு, உங்கள் இறைவன் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. ஆக, அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளதை நன்கறிந்தவன் ஆவான்.
Zümer 39:8
மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவன் தன் இறைவனை அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவனாக அழைத்து பிரார்த்திக்கிறான். பிறகு, (இறைவன்) தன் புறத்திலிருந்து அவனுக்கு ஓர் அருளை வழங்கினால் இதற்கு முன்னர் அவனிடம் பிரார்த்திப்பவனாக இருந்ததை அவன் மறந்து விடுகிறான். இன்னும், அல்லாஹ்விற்கு இணை(யாக கற்பனை தெய்வங்)களை ஏற்படுத்துகிறான், அவனுடைய பாதையை விட்டு (மக்களை) வழிகெடுப்பதற்காக (இவ்வாறு செய்கிறான்). (நபியே!) கூறுவீராக! “நீ உனது நிராகரிப்பைக் கொண்டு சிறிது (காலம்) சுகமடைந்துகொள்! நிச்சயமாக நீ நரகவாசிகளில் ஒருவன்தான்.”
Zümer 39:9
யார் மறுமையை பயந்து, தன் இறைவனின் அருளை ஆசை வைத்து, இரவு நேரங்களில் சிரம் பணிந்தவராகவும் நின்றவராகவும் அல்லாஹ்வை வணங்குவாரோ அவர் அல்லாஹ்வை நிராகரிப்பவருக்கு சமமாவாரா? (நபியே!) கூறுவீராக! “(அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு கீழ்ப்படிவதில் உள்ள நன்மையை) அறிந்தவர்களும் (அதை) அறியாதவர்களும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவதெல்லாம் நிறைவான அறிவுடையவர்கள்தான்.”
Zümer 39:10
(நபியே நான் என் அடியார்களுக்கு கட்டளையிடுவதாக) கூறுவீராக! “நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மை (-சொர்க்கம்) உண்டு. இன்னும் அல்லாஹ்வின் பூமி விசாலமானதாகும். பொறுமையாளர்களுக்கு அவர்களது கூலி (மறுமையில்) வழங்கப்படுவதெல்லாம் கணக்கின்றிதான். (முடிவுறாத நற்பாக்கியங்களை அவர்கள் அனுபவிப்பார்கள்.)”
Zümer 39:11
(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும், மார்க்கத்தை - வணக்க வழிபாடுகளை அவனுக்கு (மட்டும்) நான் தூய்மையாக செய்ய வேண்டும்” என்று நிச்சயமாக நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.
Zümer 39:12
இன்னும், “முஸ்லிம்களில் முதலாமவனாக நான் இருக்க வேண்டும்” என்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.
Zümer 39:13
(நபியே!) கூறுவீராக! “நான் என் இறைவனுக்கு மாறுசெய்தால் மகத்தான (மறுமை) நாளின் தண்டனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.”
Zümer 39:14
(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வைத்தான் நான் வணங்குவேன், அவனுக்கு (மட்டும்) என் மார்க்கத்தை - வணக்க வழிபாட்டை தூய்மைப்படுத்தியவனாக இருக்கும் நிலையில்.”
Zümer 39:15
ஆக, அவனை அன்றி நீங்கள் விரும்பியவர்களை நீங்கள் வணங்குங்கள். (நபியே!) கூறுவீராக! “நிச்சயமாக நஷ்டவாளிகள் (யாரென்றால்) தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மறுமையில் நஷ்டமிழைத்தவர்கள்தான்.” அறிந்து கொள்ளுங்கள்! “இதுதான் மிகத்தெளிவான நஷ்டமாகும்.”
Zümer 39:16
அவர்களுக்கு அவர்களின் மேலிருந்து நரகத்தின் நிழல்கள் (அடுக்கடுக்காக நரகத்தின் புகைகளும் ஜுவாலைகளும் இருக்கும்.) இன்னும் அவர்களுக்கு கீழிருந்து (நரகத்தின்) நிழல்கள் உண்டு. இ(ந்த தண்டனையான)து - இதன் மூலம் அல்லாஹ் தனது அடியார்களை பயமுறுத்துகிறான். என் அடியார்களே! என்னை அஞ்சுங்கள்! (நரக நெருப்பு அவர்களை அடர்த்தியாக சூழ்ந்துவிடும்.)
Zümer 39:17
இன்னும், எவர்கள் தாகூத்துகளை (-ஷைத்தான்கள், சிலைகள், தாம் வணங்கப்படுவதை விரும்புகின்ற தலைவர்கள், குருக்கள் ஆகிய) இவர்களை வணங்குவதை விட்டு விலகி, அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்களோ அவர்களுக்குத்தான் (சொர்க்கத்தின்) நற்செய்தி உண்டு. ஆகவே, என் அடியார்களுக்கு நற்செய்தி சொல்வீராக!.
Zümer 39:18
அவர்கள் உண்மையான பேச்சுகளை செவியுறுவார்கள். பின்னர், அவற்றில் மிக அழகானதை பின்பற்றுவார்கள். அவர்கள், எத்தகையோர் என்றால் அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டினான். இன்னும் அவர்கள்தான் அறிவாளிகள்.
Zümer 39:19
ஆக, எவர் மீது தண்டனையின் வாக்கு உறுதியாகிவிட்டதோ அவரை; இன்னும், நரகத்தில் எவர் இருப்பாரோ அவரை (நபியே) நீர் பாதுகாப்பீரா? (உம்மால் அவர்களை பாதுகாக்க முடியாது)?
Zümer 39:20
எனினும், எவர்கள் தங்கள் இறைவனை அஞ்சினார்களோ அவர்களுக்கு (சொர்க்கத்தில் கோபுரங்களில்) அறைகள் உண்டு. அவற்றுக்குமேல் (-அந்த அறைகளுக்கு மேல் இன்னும் பல) அறைகள் கட்டப்பட்டிருக்கும். அவற்றைச் சுற்றி நதிகள் ஓடும். இது அல்லாஹ் வாக்களித்த வாக்காகும். அல்லாஹ் (தனது) வாக்கை (ஒருபோதும்) மாற்றமாட்டான்.
Zümer 39:21
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் வானத்தில் இருந்து மழையை இறக்கினான். அதை பூமியில் பல ஊற்றுகளாக ஓடவைத்தான். பிறகு, அதன் நிறங்கள் மாறுபட்ட விளைச்சல்களை அதன் மூலம் அவன் உற்பத்தி செய்கிறான். பிறகு, அது காய்ந்து விடுகிறது. அதை மஞ்சளாக பார்க்கிறீர். பிறகு அதை அவன் காய்ந்த சருகுகளாக ஆக்கிவிடுகிறான். நிறைவான அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் உபதேசம் இருக்கிறது.
Zümer 39:22
அல்லாஹ் எவருடைய நெஞ்சை இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுவதற்கு விரிவாக்கிவிடுவானோ, அவர் தன் இறைவனின் (நேர்வழி என்ற) வெளிச்சத்தில் இருப்பார். அத்தகையவர் உள்ளம் இறுகியவருக்கு சமமாவாரோ? அல்லாஹ்வின் நினைவை விட்டு உள்ளங்கள் இறுகியவர்களுக்கு நாசம் உண்டாகட்டும். அவர்கள் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள்.
Zümer 39:23
அல்லாஹ் மிக அழகிய பேச்சை - பலமுறை ஓதப்படுகின்ற, ஒன்றுக்கொன்று ஒப்பான - ஒரு வேதமாக இறக்கினான். தங்கள் இறைவனை பயப்படுபவர்களின் தோல்கள் அ(தை அவர்கள் ஓதுவ)தன் மூலம் சிலிர்க்கின்றன. பிறகு, அவர்களின் தோல்களும் அவர்களின் உள்ளங்களும் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் திரும்பி மென்மையாகி (அமைதி பெறுகி)ன்றன. இதுதான் அல்லாஹ்வின் நேர்வழியாகும். தான் நாடியவர்களை அவன் இதன்மூலம் நேர்வழி செலுத்துகிறான். அல்லாஹ் எவரை வழிகெடுக்கிறானோ அவரை நேர்வழிபடுத்துபவர் யாரும் இல்லை.
Zümer 39:24
தனது முகத்தால் மறுமை நாளில் நிகழப்போகும் கெட்ட தண்டனையை தவிர்த்துக் கொள்பவன் கைகள் விலங்கிடப்பட்டு நரகத்தில் தலைகீழாக எறியப்படுபவனைப் போன்று ஆவாரா? இன்னும், (அந்த நாளில்) அநியாயக்காரர்களுக்கு கூறப்படும்: “நீங்கள் செய்துகொண்டிருந்ததை (-அதற்குரிய தண்டனையை இப்போது) சுவையுங்கள்!”
Zümer 39:25
இவர்களுக்கு முன்னர் உள்ளவர்களும் (தூதர்களையும் வேதங்களையும்) பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் உணராத விதத்தில் (அல்லாஹ்விடமிருந்து) அவர்களுக்கு தண்டனை வந்தது.
Zümer 39:26
ஆக, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் கேவலத்தை சுவைக்க வைப்பான். (மறுமையிலும் தண்டனையை சுவைக்க வைப்பான்.) நிச்சயமாக மறுமையின் தண்டனை மிகப் பெரியது, அவர்கள் (இதை) அறிந்திருக்க வேண்டுமே!
Zümer 39:27
இந்த குர்ஆனில் மக்களுக்கு எல்லா உதாரணங்களையும் நாம் திட்டவட்டமாக விவரித்தோம், அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக.
Zümer 39:28
குழப்பமும், கோணலும் இல்லாத, அரபி மொழி குர்ஆனாக (நாம் இதை ஆக்கினோம்), அவர்கள் (இதை படித்து, உணர்ந்து அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக.
Zümer 39:29
அல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கிறான். ஒரு மனிதன் இருக்கிறான். அவன் விஷயத்தில் (தங்களுக்குள்) பிணங்கிக் கொள்கின்ற பல பங்குதாரர்கள் இருக்கிறார்கள். (இது இணைவைப்பவனுக்கான உதாரணமாகும்.) (வேறு) ஒரு சரியான மனிதர் இருக்கிறார். அவர் ஒரு மனிதருக்கு மட்டும் உரிமையானவர். (இது நம்பிக்கையாளருக்கான உதாரணமாகும்.) இந்த இரண்டு நபர்களும் தன்மையால் சமமாவார்களா? எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே. மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் (தங்கள் வழிகேட்டை) அறியமாட்டார்கள்.
Zümer 39:30
நிச்சயமாக நீரும் மரணிப்பவரே! இன்னும், நிச்சயமாக அவர்களும் மரணிப்பவர்கள்தான்.
Zümer 39:31
பிறகு, நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் உங்கள் இறைவனிடம் (உங்களுக்குள்) தர்க்கித்துக் கொள்வீர்கள்.
Zümer 39:32
ஆக, அல்லாஹ்வின் மீது பொய் சொல்பவனை விடவும் உண்மையை - அது அவனிடம் வந்தபோது - பொய்ப்பித்தவனை விடவும் மகா அநியாயக்காரன் யார்? நிராகரிப்பவர்களுக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா? (கண்டிப்பாக அங்குதான் அவர்களின் தங்குமிடம் இருக்கிறது.)
Zümer 39:33
எவர் உண்மையைக் கொண்டு வந்தாரோ இன்னும் எவர் அதை உண்மை என்று ஏற்றாரோ அவர்கள்தான் இறையச்சம் உள்ளவர்கள்.
Zümer 39:34
அவர்களுக்கு அவர்களின் இறைவனிடம் அவர்கள் நாடக்கூடியதெல்லாம் கிடைக்கும். இதுதான் நல்லவர்களின் வெகுமதியாகும்.
Zümer 39:35
அவர்கள் செய்த கெட்ட செயல்களை அவர்களை விட்டும் அல்லாஹ் போக்கிவிடுவதற்காகவும் அவர்கள் செய்துகொண்டிருந்த நன்மைகளுக்கு பகரமாக அவர்களுக்கு அவர்களின் கூலிகளை அல்லாஹ் கொடுப்பதற்காகவும் (இத்தகைய அழகிய முறையில் அல்லாஹ் அவர்களுடன் நடந்து கொள்வான்).
Zümer 39:36
அல்லாஹ் தனது அடியானுக்கு போதுமானவனாக இல்லையா? அவர்கள் உம்மை அவன் அல்லாதவர்களைக் கொண்டு (-அந்த சிலைகள் உமக்கு தீங்கு செய்துவிடும் என்று) பயமுறுத்துகிறார்கள். யாரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை.
Zümer 39:37
இன்னும், யாரை அல்லாஹ் நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அல்லாஹ் மிகைத்தவனாக பழி தீர்ப்பவனாக இல்லையா?
Zümer 39:38
(நபியே!) நீர் அவர்களிடம் கேட்டால், வானங்களையும் பூமியையும் யார் படைத்தான் என்று? அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்: “அல்லாஹ்” என்று. (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைப்பவை (-வணங்குபவை)ப் பற்றி நீங்கள் அறிவியுங்கள்! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடினால் அவை அவனது தீங்கை (என்னை விட்டு) நீக்கிவிடக்கூடியவையா? அல்லது, அவன் எனக்கு ஓர் அருளை நாடினால் அவை அவனது அருளை (என்னை விட்டும்) தடுத்துவிடக்கூடியவையா?” (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீது மட்டுமே நம்பிக்கை வைக்கவும்.”
Zümer 39:39
(நபியே!) கூறுவீராக! “என் மக்களே! நீங்கள் உங்கள் தகுதிக்குத் தக்கவாறு அமல் செய்யுங்கள்! நிச்சயமாக நானும் (என் தகுதிக்குத் தக்கவாறு) அமல் செய்கிறேன். ஆக, நீங்கள் (உங்கள் கெட்ட முடிவை) விரைவில் அறிவீர்கள்.”
Zümer 39:40
எவருக்கு, அவரை இழிவுபடுத்துகின்ற தண்டனை வரும், இன்னும், எவர் மீது நிரந்தரமான தண்டனை இறங்கும் (என்பதை நீங்கள் அறிவீர்கள்).
Zümer 39:41
நிச்சயமாக நாம் மக்களுக்காக உம்மீது இந்த வேதத்தை சத்தியத்துடன் இறக்கினோம். ஆக, யார் நேர்வழி செல்கிறாரோ அவர் தனது (ஆன்மாவின்) நன்மைக்காகத்தான் நேர்வழி செல்கிறார். யார் வழிகெடுகிறாரோ அவர் வழி கெடுவதெல்லாம் அதற்கு (-தனது ஆன்மாவிற்கு) பாதகமாகத்தான். (நபியே!) நீர் அவர்கள் மீது கண்காணிப்பவராக (-அவர்களை நிர்ப்பந்திப்பவராக) இல்லை.
Zümer 39:42
அல்லாஹ்தான் உயிர்களை அவை மரணிக்கும் நேரத்தில் உயிர் கைப்பற்றுகிறான். இன்னும், (அவ்வாறே இது வரை) இறந்து போகாத உயிர்களையும் அவற்றின் தூக்கத்தில் அவன்தான் உயிர் கைப்பற்றுகிறான். (தூங்கும்போது) மரணத்தை எதன் மீது விதித்து விட்டானோ அதை (-அதனுடைய உயிரை தூக்கத்திலேயே) அவன் தடுத்துக் கொள்கிறான். (மரணம் விதிக்கப்படாத) மற்றொன்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (-அதனுடைய மரண நேரம் வரை இவ்வுலகில் உயிர்வாழ) அவன் விட்டு வைக்கிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
Zümer 39:43
(இணைவைப்பவர்கள்) அல்லாஹ்வை அன்றி (அல்லாஹ்விடம் தங்களுக்கு) பரிந்துரை செய்பவர்களை எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! “அவர்கள் (-அந்த தெய்வங்கள்) எதற்கும் சக்தியற்றவர்களாகவும் சிந்தித்து புரியாதவர்களாகவும் இருந்தாலுமா (நீங்கள் அவர்களை பரிந்துரையாளர்களாக எடுத்துக்கொள்வீர்கள்)?”
Zümer 39:44
(நபியே) கூறுவீராக! சிபாரிசுகள் அனைத்தும் அல்லாஹ்விற்கே சொந்தமாகும். வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியன. பிறகு, அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Zümer 39:45
அல்லாஹ் ஒருவன் மட்டும் நினைவு கூரப்பட்டால் மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன (அதை வெறுக்கின்றன). அவனை அன்றி மற்றவர்கள் நினைவு கூரப்பட்டால் அப்போது அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
Zümer 39:46
(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்தவனே! நீதான் உனது அடியார்களுக்கு மத்தியில் அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த விஷயங்களில் தீர்ப்பளிப்பாய்.”
Zümer 39:47
நிச்சயமாக பூமியில் உள்ள அனைத்தும் அதனுடன் அது போன்றதும் அநியாயம் செய்தவர்களுக்கு சொந்தமாக இருந்தால் மறுமை நாளில், கெட்ட தண்டனையில் இருந்து (தப்பித்துக்கொள்ள) அதை அவர்கள் பிணைத் தொகையாக கொடுத்து (தங்களை விடுவித்து) கொண்டிருப்பார்கள். இன்னும், அவர்கள் எண்ணிப் பார்த்திருக்காத (அவர்களுடைய) விஷயங்கள் எல்லாம் அல்லாஹ்விடம் (மறுமை நாளில்) அவர்களுக்கு முன் வெளிப்படும்.
Zümer 39:48
இன்னும், அவர்கள் செய்தவற்றின் தீமைகள் அவர்களுக்கு முன் (மறுமையில்) வெளிப்படும். இன்னும், அவர்கள் எதைப் பற்றி கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களை சூழ்ந்து கொள்ளும்.
Zümer 39:49
ஆக, மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவன் நம்மிடம் பிரார்த்திக்கிறான். பிறகு, நாம் அவனுக்கு நம்மிடமிருந்து ஒரு அருட்கொடையை வழங்கினால், அவன் கூறுகிறான்: “இது எனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் (நான் அதற்கு தகுதியானவன் என்ற அல்லாஹ் உடைய) அறிவின்படிதான். (அவன் கூறுவது போன்றல்ல.) மாறாக, (அவனுக்கு) அது ஒரு சோதனையாகும். என்றாலும், அவர்களில் அதிகமானவர்கள் (செல்வம் கொடுக்கப்பட்டதன் நோக்கத்தை) அறியமாட்டார்கள்.
Zümer 39:50
திட்டமாக இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் இதைச் சொல்லி இருக்கிறார்கள். ஆக, அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்கவில்லை.
Zümer 39:51
ஆக, அவர்கள் செய்ததின் தீங்குகள் (-தண்டனைகள்) அவர்களை அடைந்தன. (அவ்வாறே) இவர்களில் எவர்கள் அநியாயம் செய்தார்களோ அவர்களையும் அவர்கள் செய்தவற்றின் தீங்குகள் (-தண்டனைகள்) விரைவில் அடையும். இன்னும், அவர்கள் (நம்மை விட்டும்) தப்பிக்க மாட்டார்கள்.
Zümer 39:52
“நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுபவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாகக் கொடுக்கிறான். (தான் நாடுபவர்களுக்கு) சுருக்கமாகக் கொடுக்கிறான்” என்பதை அவர்கள் அறியவில்லையா? நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
Zümer 39:53
(நபியே!) கூறுவீராக! (பாவங்கள் செய்து) தங்கள் ஆன்மாக்கள் மீது எல்லை மீறிய என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் இருந்து நிராசை ஆகாதீர்கள். (நீங்கள் வருந்தி, திருந்தி, அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால் உங்களது) எல்லாப் பாவங்களையும் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
Zümer 39:54
இன்னும், உங்கள் இறைவன் பக்கம் திரும்புங்கள்! உங்களுக்கு தண்டனை வருவதற்கு முன்னர் அவனுக்கு முற்றிலும் பணிந்து விடுங்கள். (அல்லாஹ்வின் தண்டனை வந்துவிட்டால்) பிறகு, நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
Zümer 39:55
இன்னும், நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில் திடீரென உங்களுக்கு தண்டனை வருவதற்கு முன்னர், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட மிக அழகிய (வேதத்தை; இன்னும், நபியின் மூலம் வழங்கப்பட்ட சுன்னா என்ற அழகிய ஞானத்)தை நீங்கள் (உறுதியாக) பின்பற்றுங்கள்,
Zümer 39:56
“அல்லாஹ்வின் விஷயங்களில் நான் குறைசெய்து விட்டதால் எனக்கு நேர்ந்த துக்கமே! நிச்சயமாக நான் கேலி செய்பவர்களில்தான் இருந்தேன்” என்று எந்த ஓர் ஆன்மாவும் சொல்லாமல் இருப்பதற்காக (இந்த உலகத்தில் நீங்கள் வாழும்போதே அவனுக்கு கீழ்ப்படிந்து விடுங்கள்!)
Zümer 39:57
அல்லது, “நிச்சயமாக அல்லாஹ் எனக்கு நேர்வழிகாட்டி இருந்தால் நானும் இறையச்சமுள்ளவர்களில் ஆகி இருப்பேனே” என்று (எந்த ஓர் ஆன்மாவும்) சொல்வதற்கு முன்பாகவே (நீங்கள் அவனுக்கு கீழ்ப்படிந்து விடுங்கள்!)
Zümer 39:58
அல்லது, “அந்த ஆன்மா தண்டனையை கண்ணால் பார்க்கும் நேரத்தில் நிச்சயமாக எனக்கு (உலகத்திற்கு) திரும்பி வரமுடிந்தால் நானும் நல்லவர்களில் ஆகி விடுவேன்” என்று (எந்த ஓர் ஆன்மாவும்) சொல்வதற்கு முன்பாகவே (நீங்கள் அவனுக்கு கீழ்ப்படிந்து விடுங்கள்!)
Zümer 39:59
இல்லை, திட்டமாக உன்னிடம் எனது வசனங்கள் வந்தன. ஆக, நீ அவற்றை பொய்ப்பித்தாய், (அவற்றை ஏற்காமல்) பெருமை அடித்தாய், நிராகரிப்பவர்களில் நீ ஆகி இருந்தாய்.
Zümer 39:60
இன்னும் மறுமை நாளில் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தவர்களை - அவர்களின் முகங்கள் கருப்பாக இருப்பதை - (நபியே!) நீர் பார்ப்பீர். (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாமல்) பெருமை அடிப்பவர்களுக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா? (கண்டிப்பாக அவர்களின் நிலையான தங்குமிடம் நரகம்தான்.)
Zümer 39:61
இன்னும், அல்லாஹ்வை அஞ்சியவர்களை அவர்களின் நல்லமல்களின் காரணத்தால் அல்லாஹ் (நரகத்திலிருந்து) பாதுகாப்பான். அவர்களை தீங்குகள் அணுகாது. இன்னும், அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
Zümer 39:62
அல்லாஹ்தான் எல்லாவற்றுக்கும் படைப்பாளன் ஆவான். அவன்தான் எல்லாவற்றையும் (கண்காணித்து) பாதுகாப்பவன் ஆவான்.
Zümer 39:63
அவனுக்கே வானங்கள், இன்னும் பூமியி(லுள்ள பொக்கிஷங்களி)ன் சாவிகள் உரியன. எவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தார்களோ அவர்கள்தான் உண்மையான நஷ்டவாளிகள் ஆவார்கள்.
Zümer 39:64
(நபியே) கூறுவீராக! ஆக, அறிவீனர்களே! அல்லாஹ் அல்லாதவர்களையா நான் வணங்க வேண்டும் என்று எனக்கு நீங்கள் ஏவுகிறீர்கள்?
Zümer 39:65
திட்டவட்டமாக உமக்கும் உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் வஹ்யி அறிவிக்கப்பட்ட(தாவ)து: “நீர் இணைவைத்தால் உமது அமல்கள் நாசமாகிவிடும். இன்னும், நீர் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவீர்.”
Zümer 39:66
(படைப்புகளை வணங்காமல்) மாறாக, (யாவரையும் படைத்தவனாகிய) அல்லாஹ்வை (மட்டுமே) நீர் வணங்குவீராக! இன்னும், (அவனுக்கு) நன்றி செலுத்துவோரில் நீர் ஆகிவிடுவீராக!
Zümer 39:67
(இணைவைப்பவர்கள்) அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறையில் கண்ணியப்படுத்தவில்லை. பூமி அனைத்தும் மறுமை நாளில் அவனது கைப்பிடியில் இருக்கும். வானங்கள் (அனைத்தும்) அவனது வலக்கையில் சுருட்டப்பட்டதாக இருக்கும். அவன் மிகப் பரிசுத்தமானவன். இன்னும், அவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் மிக உயர்ந்தவன்.
Zümer 39:68
எக்காளத்தில் ஊதப்படும். ஆக, வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் இறந்து விடுவார்கள், அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. பிறகு, அதில் மற்றொரு முறை ஊதப்படும். அப்போது அவர்கள் (உயிர்பெற்று எழுந்து தங்களுக்கு நிகழப்போவதை) பார்த்தவர்களாக நின்றுகொண்டிருப்பார்கள்.
Zümer 39:69
(மறுமை நாளில் இறைவன் வரும்போது) பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். (செயல்கள் பதியப்பட்ட) புத்தகம் (முன்னால்) வைக்கப்படும். நபிமார்கள், ஷஹீதுகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
Zümer 39:70
ஒவ்வோர் ஆன்மாவுக்கும் அது செய்தவற்றுக்கு முழுமையாக கூலி கொடுக்கப்படும். அவன் அவர்கள் செய்கின்ற அனைத்தையும் மிக அறிந்தவன் ஆவான்.
Zümer 39:71
நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்தின் பக்கம் ஓட்டிக் கொண்டு வரப்படுவார்கள். இறுதியாக, அதற்கருகில் வந்தவுடன் அதன் வாசல்கள் (திடீரென) திறக்கப்படும். இன்னும், அதன் காவலாளிகள் அவர்களிடம் கூறுவார்கள்: “உங்களில் இருந்தே உங்களுக்கு தூதர்கள் வரவில்லையா? அவர்கள் உங்களுக்கு உங்கள் இறைவனின் வசனங்களை ஓதிக் காட்டினார்களே. இன்னும், நீங்கள் சந்திக்கவேண்டிய இந்த நாளைப் பற்றி உங்களை எச்சரித்தார்களே.” (நிராகரிப்பாளர்களாகிய) அவர்கள் கூறுவார்கள்: “ஏன் இல்லை. (தூதர்களும் அழைப்பாளர்களும் வந்தார்கள். நாங்கள்தான் அவர்களை நிராகரித்தோம். அல்லாஹ் கருணையாளன்தான்.) எனினும், நிராகரிப்பவர்கள் மீது (அல்லாஹ் உடைய) தண்டனையின் வாக்கு உறுதியாகி விட்டது.”
Zümer 39:72
(அவர்களுக்கு) கூறப்படும்: “நீங்கள் நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள்! அதில் நிரந்தரமாகத் தங்கிவிடுவீர்கள். ஆக, (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாமல்) பெருமையடிப்பவர்களின் தங்குமிடம் மிகக் கெட்டதாக இருக்கும்.”
Zümer 39:73
இன்னும், தங்கள் இறைவனை அஞ்சியவர்கள் கூட்டம் கூட்டமாக சொர்க்கத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். இறுதியாக, அவர்கள் அதற்கருகில் வரும்போது அவர்களுக்கு (உள்ளே நுழைவதற்கு அனுமதி வழங்கப்படும். இன்னும்) அதன் வாசல்கள் திறக்கப்படும். மேலும், அதன் காவலாளிகள் கூறுவார்கள்: “உங்களுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகட்டும். நீங்கள் (செயலாலும் குணத்தாலும்) நல்லவர்களாக இருந்தீர்கள். ஆகவே, இ(ந்த சொர்க்கத்)தில் - நீங்கள் நிரந்தரமானவர்களாக இருக்கும் நிலையில் - நுழையுங்கள்!”
Zümer 39:74
அவர்கள் கூறுவார்கள்: “எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவன்தான் தனது வாக்கை எங்களுக்கு உண்மையாக்கினான். இன்னும், இந்த (சொர்க்க) பூமியை எங்களுக்கு சொந்தமாக்கித் தந்தான். இந்த சொர்க்கத்தில் நாங்கள் நாடிய இடத்தில் நாங்கள் தங்குவோம். ஆக, (அல்லாஹ்வின் கட்டளைப்படி) நல்லமல் செய்வோரின் கூலி மிகச் சிறந்ததாகும்.”
Zümer 39:75
(நபியே!) வானவர்கள் அர்ஷை சுற்றிலும் சூழ்ந்திருப்பவர்களாக இருப்பதை நீர் பார்ப்பீர். அவர்கள் தங்கள் இறைவனின் புகழை துதிப்பார்கள். இன்னும், அவர்களுக்கு மத்தியில் சத்தியமான முறையில் (மிக நீதமாக) தீர்ப்பளிக்கப்படும். இன்னும், அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறப்படும்.
Mü'min 40:1
மிகைத்தவனும் மகா ஞானவானுமான அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கப்பட்ட வேதமாகும் (இது).
Mü'min 40:2
மிகைத்தவனும் நன்கறிந்தவனுமாகிய அல்லாஹ்வின் புறத்தில் இருந்து இறக்கப்பட்ட வேதமாகும் (இது).
Mü'min 40:3
(அவன்) பாவங்களை மன்னிப்பவன், (அடியார்கள் பாவங்களைவிட்டு விலகி) திருந்தி மன்னிப்புக் கோருதலை அங்கீகரிப்பவன், (திருந்தாத பாவிகளை) தண்டிப்பதில் கடுமையானவன், (நல்லவர்கள் மீது) அருளுடையவன். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் பக்கமே மீளுதல் இருக்கிறது.
Mü'min 40:4
நிராகரித்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் விவாதம் செய்ய மாட்டார்கள். ஆகவே, (நபியே) நகரங்களில் அவர்கள் (சுகமாக) சுற்றித்திரிவது உம்மை மயக்கிவிட வேண்டாம்.
Mü'min 40:5
இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்களும் அவர்களுக்குப் பின்னர் வந்த (ஆது, ஸமூது, ஃபிர்அவ்ன் இன்னும் பல) குழுக்களும் (தூதர்களை) பொய்ப்பித்தனர். எல்லா சமுதாயத்தினரும் தங்களது தூதரை தண்டிப்பதற்கு(ம் கொல்வதற்கும்) உறுதிபூண்டார்கள். இன்னும், அசத்தியத்தைக் கொண்டு (சத்தியத்தில்) தர்க்கம் செய்தனர், அதன் மூலம் சத்தியத்தை அழிப்பதற்காக. ஆகவே, நான் அவர்களை (எனது தண்டனையைக் கொண்டு) பிடித்தேன். ஆக, எனது தண்டனை எப்படி இருந்தது?
Mü'min 40:6
இவ்வாறுதான் நிராகரித்தவர்கள் மீது – “நிச்சயமாக அவர்கள் நரகவாசிகள்” என்று - உமது இறைவனின் வாக்கு உறுதியாகிவிட்டது.
Mü'min 40:7
அர்ஷை சுமப்பவர்களும் அதைச் சுற்றி இருப்பவர்களும் தங்கள் இறைவனின் புகழை துதிக்கிறார்கள். இன்னும், அவனை நம்பிக்கை கொள்கிறார்கள். மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருகிறார்கள், “எங்கள் இறைவா! எல்லாவற்றையும் நீ கருணையாலும் கல்வியாலும் விசாலமடைந்து இருக்கின்றாய். ஆகவே, (இணைவைப்பு, நிராகரிப்பு, இன்னும் பாவங்களை விட்டு) திருந்தி, உன் பக்கம் திரும்பி, உனது மார்க்கத்தை பின்பற்றியவர்களை நீ மன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் தண்டனையை விட்டு பாதுகாப்பாயாக!”
Mü'min 40:8
எங்கள் இறைவா! இன்னும் அவர்களை அத்ன் சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வாயாக! அதை நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கிறாய். இன்னும், அவர்களின் பெற்றோர்கள், அவர்களின் மனைவிகள், அவர்களின் சந்ததிகளில் நல்லவர்களாக இருந்தவர்கள் அனைவரையும் (சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வாயாக)! நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான்.
Mü'min 40:9
இன்னும், அவர்களை தீமைகளிலிருந்து (தண்டனைகளிலிருந்து) பாதுகாப்பாயாக! அன்றைய தினம் எவரை நீ தண்டனைகளிலிருந்து பாதுகாப்பாயோ திட்டமாக அவர் மீது நீ கருணை புரிந்துவிட்டாய். அதுதான் மகத்தான நற்பாக்கியமாகும்.
Mü'min 40:10
நிச்சயமாக நிராகரிப்பவர்கள் (நரகத்தில்) சப்தமிட்டு அழைக்கப்படுவார்கள்: “நீங்கள் உங்களை கோபிப்பதை விட அல்லாஹ் (உங்களை) கோபிப்பது மிகப் பெரியதாகும். நீங்கள் நம்பிக்கை கொள்வதற்கு அழைக்கப்பட்டபோது (அதை) நிராகரித்தீர்கள்.”
Mü'min 40:11
அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களுக்கு இருமுறை மரணத்தைக் கொடுத்தாய். இன்னும், இருமுறை எங்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்தாய். ஆக, நாங்கள் எங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டோம். ஆகவே, (நரகத்தில் இருந்து) வெளியேறுவதற்கு ஏதேனும் வழி உண்டா?”
Mü'min 40:12
இது ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், அவன் ஒருவன் மட்டும் அழைக்கப்பட்டால் நீங்கள் (அவனை ஏற்காமல்) நிராகரித்தீர்கள். அவனுக்கு இணைவைத்து வணங்கப்பட்டால் (அவனை) நம்பிக்கை கொள்கிறீர்கள். ஆக, எல்லா அதிகாரமும் (ஆட்சியும்) மிக உயர்ந்தவனும் மிகப் பெரியவனுமாகிய அல்லாஹ்வுக்கே உரியது. (அப்படியிருக்க அவனல்லாதவர்களை எப்படி வணங்க முடியும்.)
Mü'min 40:13
அவன்தான் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிக்கிறான். இன்னும், வானத்திலிருந்து உங்களுக்கு உணவை (-வாழ்வாதாரத்தின் மூலதனமாகிய மழையை) இறக்குகிறான். அல்லாஹ்வின் பக்கம் திரும்புகிறவர்களைத் தவிர (இதன் மூலம்) நல்லுபதேசம் பெற மாட்டார்கள்.
Mü'min 40:14
ஆகவே, அல்லாஹ்வை - அவனுக்கு மார்க்கத்தை (-வழிபாடுகளை) பரிசுத்தமாக்கியவர்களாக - அழையுங்கள்! (இணைவைக்கின்ற) நிராகரிப்பாளர்கள் (அதை) வெறுத்தாலும் சரியே!
Mü'min 40:15
அவன் (அடியார்களின்) அந்தஸ்துகளை உயர்த்தக் கூடியவன், அர்ஷுடையவன். தனது அடியார்களில் தான் நாடியவர் மீது தனது கட்டளைகளை உள்ளடக்கிய வஹ்யை இறக்குவான் (உலகத்தார் எல்லோரும்) சந்திக்கின்ற (மறுமை) நாளைப் பற்றி (மக்களை) அவர் எச்சரிப்பதற்காக.
Mü'min 40:16
அந்நாளில் அவர்கள் (கப்ருகளில் இருந்து) வெளிப்பட்டு நிற்பார்கள். அவர்களில் எதுவும் அல்லாஹ்வின் முன்னால் மறைந்துவிடாது. “இன்று ஆட்சி யாருக்கு உரியது?” (என்று அவன் கேட்பான். பதில் அளிப்பவர் யாரும் இருக்க மாட்டார். அவனே பதில் அளிப்பான்:) “(நிகரற்ற) ஒருவனாகிய, (அனைவரையும்) அடக்கி ஆளுகிறவனாகிய அல்லாஹ்விற்கே உரியது ஆட்சி அனைத்தும்.”
Mü'min 40:17
இன்று எல்லா ஆன்மாவுக்கும் அவை செய்ததற்கு பதிலாக கூலி கொடுக்கப்படும். இன்று (யார் மீதும்) அறவே அநியாயம் இருக்காது. நிச்சயமாக அல்லாஹ் விசாரிப்பதில் மிக விரைவானவன் ஆவான்.
Mü'min 40:18
இன்னும், நெருங்கி வரக்கூடிய (மறுமை) நாளைப் பற்றி அவர்களை நீர் எச்சரிப்பீராக! உள்ளங்கள் (பயத்தால்) தொண்டைகளுக்கு அருகில் வந்துவிடும்போது அவர்கள் துக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அந்த அநியாயக்காரர்களுக்கு நண்பர் எவரும் இருக்கமாட்டார். (பரிந்துரை) ஏற்றுக்கொள்ளப்படும்படியான பரிந்துரையாளரும் இருக்க மாட்டார்.
Mü'min 40:19
கண்களின் மோசடிகளையும் நெஞ்சங்கள் மறைப்பதையும் அவன் நன்கறிவான்.
Mü'min 40:20
இன்னும், அல்லாஹ் உண்மையை (நீதமான தீர்ப்பை)த்தான் தீர்ப்பளிக்கிறான். அவனை அன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ (-வணங்குகிறார்களோ) அவர்கள் எதையும் தீர்ப்பளிக்க மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
Mü'min 40:21
இவர்கள் பூமியில் சுற்றுப் பயணம் செய்யவில்லையா? (அப்படி செய்திருந்தால்) தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்த்திருப்பார்களே! அவர்கள் இவர்களை விட (உடல்) வலிமையால் மிக பலசாலிகளாகவும் பூமியில் (-மாடமாளிகைகள், தொழிற்சாலைகள் போன்ற) அடையாளங்களால் மிக அதிகமானவர்களாகவும் இருந்தார்கள். ஆக, அவர்களின் பாவங்களினால் அல்லாஹ் அவர்களை தண்டித்தான். அல்லாஹ்விடமிருந்து அவர்களை பாதுகாப்பவர் எவரும் இருக்கவில்லை.
Mü'min 40:22
அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் - அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்து கொண்டிருந்தார்கள். ஆக, அவர்கள் நிராகரித்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களை தண்டித்தான். நிச்சயமாக அவன் வலிமை மிக்கவன், தண்டிப்பதில் கடுமையானவன்.
Mü'min 40:23
திட்டவட்டமாக மூஸாவை நமது அத்தாட்சிகளுடன் இன்னும் தெளிவான ஆதாரத்துடன் அனுப்பினோம்,
Mü'min 40:24
ஃபிர்அவ்ன், ஹாமான் இன்னும் காரூனிடம் (மூஸாவை அனுப்பினோம்). ஆக, அவர்கள் (அவரை) சூனியக்காரர், பெரும் பொய்யர் என்று கூறினார்கள்.
Mü'min 40:25
ஆக, அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டுவந்தபோது அவர்கள் கூறினார்கள்: “இவருடன் நம்பிக்கை கொண்டவர்களின் ஆண் பிள்ளைகளைக் கொன்று விடுங்கள்! அவர்களின் பெண்(பிள்ளை)களை வாழவிடுங்கள்!” (இத்தகைய அநியாயம் செய்கிற) நிராகரிப்பவர்களின் சூழ்ச்சிகள் (எல்லாம்) வழிகேட்டில் தவிர இல்லை.
Mü'min 40:26
இன்னும், ஃபிர்அவ்ன் கூறினான்: “என்னை விடுங்கள், நான் மூஸாவை கொன்று விடுகிறேன். அவர் தன் இறைவனை (உதவிக்கு) அழைக்கட்டும். அவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது, இந்த பூமியில் குழப்பத்தை உருவாக்கி விடுவார் என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.”
Mü'min 40:27
மூஸா கூறினார்: “நிச்சயமாக நான் எனது இறைவனிடம், இன்னும் உங்கள் இறைவனிடம் விசாரணை நாளை நம்பிக்கை கொள்ளாமல் பெருமை அடிக்கிற எல்லோரை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.”
Mü'min 40:28
ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரில் உள்ள நம்பிக்கை கொண்ட ஓர் ஆடவர் தனது நம்பிக்கையை மறைத்தவராகக் கூறினார்: “ஒரு மனிதரை - அல்லாஹ்தான் என் இறைவன் என்று அவர் கூறியதற்காக - நீங்கள் கொல்கிறீர்களா? அவர் திட்டமாக தெளிவான அத்தாட்சிகளை உங்கள் இறைவனிடமிருந்து உங்களிடம் கொண்டு வந்திருக்கிறார். அவர் பொய்யராக இருந்தால் அவருடைய பொய் அவருக்குத்தான் கேடாக அமையும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர் எச்சரிக்கின்ற சில (தண்டனை) உங்களை வந்தடையும். நிச்சயமாக எவர் எல்லை மீறி பாவம் செய்பவராகவும் பெரும் பொய்யராகவும் இருக்கிறாரோ அவரை அல்லாஹ் நேர்வழி செலுத்தமாட்டான்.”
Mü'min 40:29
“எனது மக்களே! உங்களுக்கு ஆட்சி இன்று இருக்கிறது. நீங்கள் பூமியில் மிகைத்திருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து - அது நம்மிடம் வந்தால் - யார் நமக்கு உதவுவார்?” (இவ்வாறு அவர் கூறினார்.) (அதற்கு) ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் (நல்லதாகக்) கருதுவதைத் தவிர உங்களுக்கு நான் காண்பிக்க மாட்டேன். இன்னும், நேரான பாதையைத் தவிர உங்களுக்கு நான் வழிகாட்ட மாட்டேன்.”
Mü'min 40:30
இன்னும், நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் மக்களே! நிச்சயமாக நான் உங்கள் மீது (நபிமார்களுக்கு எதிராக ஒன்றுகூடிய) குழுக்களுடைய (தண்டனை) நாளை போன்றதை (-அது போன்ற ஒரு தண்டனை உடைய நாள் வருவதை)ப் பயப்படுகிறேன்.”
Mü'min 40:31
நூஹுடைய மக்கள், ஆது, ஸமூது, இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய வழமையைப் போன்றுதான் (உங்கள் வழமையும் இருக்கிறது. ஆகவே, அவர்களுக்கு வந்த தண்டனை உங்களுக்கும் வரும்). அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுகிறவனாக இல்லை.
Mü'min 40:32
“இன்னும், என் மக்களே! நிச்சயமாக நான் உங்கள் மீது (மக்கள் ஒருவரை ஒருவர்) கூவி அழைக்கின்ற (மறுமை) நாளைப் பயப்படுகிறேன்.”
Mü'min 40:33
அந்நாளில் நீங்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்பி ஓடுவீர்கள். அல்லாஹ்விடமிருந்து (உங்களை) பாதுகாப்பவர் எவரும் இருக்க மாட்டார். யாரை அல்லாஹ் வழிகெடுத்தானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை.
Mü'min 40:34
திட்டவட்டமாக இதற்கு முன்னர் உங்களிடம் (பல) தெளிவான அத்தாட்சிகளுடன் யூஸுஃப் வந்தார். ஆக, அவர் உங்களிடம் எதைக் கொண்டுவந்தாரோ அதில் நீங்கள் சந்தேகத்தில்தான் தொடர்ந்து இருந்தீர்கள். இறுதியாக, அவர் இறந்துவிட்டபோது அவருக்கு பின்னர் ஒரு தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான் என்று கூறினீர்கள். இவ்வாறுதான், எவர் எல்லை மீறி பாவம் செய்பவராகவும் சந்தேகம் கொள்பவராகவும் இருப்பாரோ அவரை அல்லாஹ் வழிகெடுப்பான்.
Mü'min 40:35
இவர்கள் தங்களுக்கு வந்த ஆதாரமின்றி அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் தர்க்கம் செய்கிறார்கள். அல்லாஹ்விடமும் நம்பிக்கையாளர்களிடமும் (இவர்களது செயல்) மிகப் பெரிய கோபத்திற்குரியது. இவ்வாறுதான் பெருமை அடிப்பவர்கள், அநியாயக்காரர்கள் எல்லோருடைய உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரை இடுகிறான்.
Mü'min 40:36
ஃபிர்அவ்ன் கூறினான்: “ஹாமானே! எனக்காக ஒரு (பெரிய, உயரமான) கோபுரத்தைக் கட்டு. நான் அந்த வாசல்களுக்கு சென்றடைய வேண்டும்.”
Mü'min 40:37
“(அதாவது,) வானங்களின் வாசல்களுக்கு (நான் சென்றடைய வேண்டும்). அப்படி ஏறிவிட்டால் நான் மூஸாவின் கடவுளை எட்டிப்பார்த்துவிடுவேன். இன்னும், நிச்சயமாக நான் அவரை பொய்யராகவே கருதுகிறேன்.” இவ்வாறுதான், ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அலங்காரமாக்கப்பட்டது. இன்னும், அவன் நேரான பாதையை விட்டு தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தவிர இல்லை.
Mü'min 40:38
இன்னும், நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் மக்களே! என்னை பின்பற்றுங்கள்! நான் உங்களுக்கு நேரான பாதையை வழிகாட்டுகிறேன்.”
Mü'min 40:39
“என் மக்களே! இந்த உலக வாழ்க்கை எல்லாம் அற்ப இன்பம்தான். நிச்சயமாக மறுமைதான் நிரந்தரமான இல்லமாகும்.”
Mü'min 40:40
“யார் ஒரு தீமையை செய்வாரோ அவர் அது போன்றதே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்கள் அல்லது பெண்களில் யார் ஒருவர் அவர் நம்பிக்கையாளராக இருக்கின்ற நிலையில் நன்மையை செய்வாரோ அவர்கள் சொர்க்கத்தில் பிரவேசிப்பார்கள். அதில் அவர்கள் கணக்கின்றி (உணவு, குடிபானம், இன்னும் பலவிதமான) அருட்கொடைகள் வழங்கப்படுவார்கள்.”
Mü'min 40:41
“என் மக்களே! எனக்கு என்ன நேர்ந்தது (நீங்கள் நரகத்தை விட்டு) பாதுகாப்பு பெறுவதற்கு நான் உங்களை அழைக்கிறேன். நீங்களோ என்னை நரகத்தின் பக்கம் அழைக்கிறீர்கள்.”
Mü'min 40:42
“நான் அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும் எனக்கு அறிவில்லாத ஒன்றை அவனுக்கு நான் இணைவைப்பதற்கும் நீங்கள் என்னை அழைக்கிறீர்கள். நானோ உங்களை மிகைத்தவனின் பக்கம், மகா மன்னிப்பாளனின் பக்கம் அழைக்கிறேன்.”
Mü'min 40:43
“கண்டிப்பாக, நீங்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகத்திலும் மறுமையிலும் (அங்கீகரிக்கப்பட்ட) பிரார்த்தனை ஏதும் இல்லை. (-நீங்கள் கேட்கிற எந்த பிரார்த்தனையும் அது செவியுறாது, செவியுறவும் முடியாது.) நிச்சயமாக நாம் திருப்பப்படுவது அல்லாஹ்வின் பக்கம்தான், நிச்சயமாக எல்லை மீறி பாவம் செய்பவர்கள்தான் நரகவாசிகள்.”
Mü'min 40:44
“ஆக, நான் உங்களுக்கு கூறுவதை நீங்கள் விரைவில் நினைவு கூர்வீர்கள். என் காரியத்தை நான் அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன். நிச்சயமாக அல்லாஹ் அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான்.”
Mü'min 40:45
ஆக, அவர்கள் செய்த சூழ்ச்சிகளின் தீங்குகளை விட்டு அல்லாஹ் அவரை பாதுகாத்தான். இன்னும், ஃபிர்அவ்னின் குடும்பத்தார்களை கடுமையான தண்டனை சூழ்ந்துகொண்டது.
Mü'min 40:46
நரகம், அதில் காலையிலும் மாலையிலும் அவர்கள் கொண்டுவரப்படுவார்கள். (இது அவர்களுக்கு மண்ணறையில் நடக்கும் தண்டனையாகும்.) இன்னும், மறுமை நிகழ்கின்ற நாளிலோ, “ஃபிர்அவ்னின் குடும்பத்தார்களை கடுமையான தண்டனையில் புகுத்துங்கள்!” (என்று சொல்லப்படும்).
Mü'min 40:47
இன்னும், அவர்கள் நரகத்தில் ஒருவருக்கொருவர் வாய்ச் சண்டை செய்யும்போது, (வழிகெட்ட) பலவீனர்கள் பெருமை அடித்த (தங்கள் தலை)வர்களை நோக்கி கூறுவார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம். ஆகவே, நரகத்திலிருந்து ஒரு பகுதி (சிறிது தண்டனை)யை நீங்கள் எங்களை விட்டு தடுப்பீர்களா?”
Mü'min 40:48
பெருமை அடித்த (தலை)வர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக நாம் எல்லோரும் அதில்தான் தங்கி இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு மத்தியில் (இறுதி) தீர்ப்பளித்துவிட்டான்.”
Mü'min 40:49
நரகத்தில் உள்ளவர்கள் நரகத்தின் காவலாளிகளுக்குக் கூறுவார்கள்: “உங்கள் இறைவனை அழையுங்கள்! அவன் எங்களை விட்டும் ஒரு நாளாவது தண்டனையை இலகுவாக்குவான்.”
Mü'min 40:50
(அந்த காவலாளிகள்) கூறுவார்கள்: “தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் உங்கள் தூதர்கள் வந்திருக்கவில்லையா?” அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “ஏன் இல்லை! (கண்டிப்பாக வந்தார்கள்.)” அவர்கள் கூறுவார்கள்: “(உங்கள் அனைவருக்காகவும்) நீங்கள் பிரார்த்தனை கேளுங்கள்!” காஃபிர்கள் – நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனை (எந்த பலனுமளிக்காது. ஏனெனில், அவர்களின் பிரார்த்தனை) வீணான வழிகேட்டில்தான் இருக்கிறது.
Mü'min 40:51
நிச்சயமாக நாம் நமது தூதர்களுக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் சாட்சிகள் (சாட்சி சொல்ல) நிற்கின்ற (மறுமை) நாளிலும் உதவுவோம்.
Mü'min 40:52
அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்கள் வருத்தங்கள் தெரிவிப்பது பலனளிக்காது. அவர்களுக்கு சாபம்தான் உண்டாகும். இன்னும், அவர்களுக்கு (தங்குமிடம் தண்டனைகள் நிறைந்த நரகமாகிய) கெட்ட இல்லமாகும்.
Mü'min 40:53
திட்டவட்டமாக நாம் மூஸாவிற்கு நேர்வழியைக் கொடுத்தோம். இன்னும், இஸ்ராயீலின் சந்ததிகளை அந்த வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கினோம்.
Mü'min 40:54
(அந்த வேதம்) நேர்வழிகாட்டியும் நிறைவான அறிவுடையவர்களுக்கு நல்லுபதேசமும் ஆகும்.
Mü'min 40:55
ஆக, (சகிப்புடன் மன உறுதியுடன்) பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே! இன்னும், உமது பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்பீராக! இன்னும், மாலையிலும் காலையிலும் உமது இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக!
Mü'min 40:56
நிச்சயமாக எவர்கள் தங்களிடம் எவ்வித ஆதாரமும் வராமல் இருக்க அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் தர்க்கம் செய்கிறார்களோ, அவர்களின் உள்ளங்களில் பெருமையைத் தவிர இல்லை. அவர்கள் அந்த பெருமையை அடையவும் முடியாது. ஆகவே, அல்லாஹ்விடம் நீர் பாதுகாப்புத் தேடுவீராக! நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன்.
Mü'min 40:57
மனிதர்களை படைப்பதைவிட வானங்களையும் பூமியையும் படைப்பதுதான் மிகப் பெரியது. என்றாலும், மனிதர்களில் அதிகமானவர்கள் (எல்லா படைப்புகளையும் படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்பதை) அறியமாட்டார்கள்.
Mü'min 40:58
குருடரும் பார்வையுள்ளவரும் சமமாக மாட்டார்கள். நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களும் கெட்டவர்களும் சமமாக மாட்டார்கள். நீங்கள் மிகக் குறைவாகத்தான் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.
Mü'min 40:59
நிச்சயமாக மறுமை வந்தே தீரும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. என்றாலும் மனிதர்களில் அதிகமானவர்கள் (அதை) நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
Mü'min 40:60
இன்னும், உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னிடம் பிரார்த்தியுங்கள்! நான் உங்களுக்கு (உங்கள் பிரார்த்தனையை) அங்கீகரிப்பேன். நிச்சயமாக எனது வணக்க வழிபாடுகளை விட்டு பெருமை அடிப்பவர்கள் சிறுமைப்பட்டவர்களாக விரைவில் நரகத்தில் நுழைவார்கள்.”
Mü'min 40:61
அல்லாஹ்தான் உங்களுக்கு இரவை - அதில் நீங்கள் ஓய்வு எடுப்பதற்காகவும்; - இன்னும், பகலை வெளிச்சமுள்ளதாகவும் ஆக்கினான். நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது அருளுடையவன் ஆவான். என்றாலும், மனிதர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்த மாட்டார்கள்.
Mü'min 40:62
(இவற்றை எல்லாம் செய்த) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன், எல்லாவற்றையும் படைத்தவன். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆக, நீங்கள் எவ்வாறு (அவனை வணங்குவதிலிருந்து) திருப்பப்படுகிறீர்கள்.
Mü'min 40:63
இவ்வாறுதான் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுத்துக் கொண்டிருந்தவர்கள் (அல்லாஹ்வை வணங்குவதை விட்டு) திருப்பப்படுகிறார்கள்.
Mü'min 40:64
அல்லாஹ்தான் உங்களுக்கு பூமியை (நீங்கள்) வசிப்பதற்கு வசதியாகவும் வானத்தை ஒரு கட்டிடமாகவும் அமைத்தான். இன்னும், அவன்தான் உங்களை உருவமைத்தான். ஆக, (மனிதர்களாகிய) உங்கள் உருவங்களை (ஏனைய படைப்புகளை பார்க்கிலும்) அழகாக்கினான். இன்னும், நல்ல உணவுகளில் இருந்து உங்களுக்கு உணவளித்தான். (இவற்றை எல்லாம் செய்த) அந்த அல்லாஹ்தான் (நீங்கள் வணங்கவேண்டிய) உங்கள் இறைவன் ஆவான். ஆக, அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான்.
Mü'min 40:65
அவன்தான் என்றும் உயிரோடு இருப்பவன். (வணங்கத்தகுதியான) இறைவன் அவனைத் தவிர அறவே இல்லை. ஆகவே, மார்க்கத்தை (-வழிபாடுகளை) அவனுக்கு தூய்மைப்படுத்தியவர்களாக அவனிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்! அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரியது.
Mü'min 40:66
(நபியே) நீர் கூறுவீராக! “என் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் வந்துவிட்டபோது, அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைப்பவர்களை நான் வணங்குவதற்கு நிச்சயமாக நான் தடுக்கப்பட்டு விட்டேன். இன்னும், அகிலங்களின் இறைவனுக்கு நான் முற்றிலும் பணிந்து நடக்கவேண்டும் என்று நான் கட்டளை இடப்பட்டுள்ளேன்.”
Mü'min 40:67
அவன்தான் உங்களை (முதன் முதலில்) மண்ணிலிருந்தும்; பிறகு, இந்திரியத்திலிருந்தும்; பிறகு, இரத்தக் கட்டியிலிருந்தும் படைத்தான். பிறகு, அவன் உங்களை குழந்தைகளாக வெளிக்கொண்டு வருகிறான். பிறகு, நீங்கள் உங்கள் (வாலிபத்தின்) வலிமையை அடைவதற்காகவும்; பிறகு, நீங்கள் வயோதிகர்களாக ஆகுவதற்காகவும் (அவன் உங்களுக்கு ஆயுள் காலத்தை நீட்டுகிறான்). இதற்கு முன்னர் உங்களில் உயிர் கைப்பற்றப்படுபவரும் உண்டு. இன்னும், ஒரு குறிப்பிட்ட தவணையை நீங்கள் அடைவதற்காகவும் நீங்கள் சிந்தித்து புரிவதற்காகவும் (அவன் உங்களை இவ்வாறு படைத்தது மட்டுமல்லாமல், தான் படைத்த விதத்தையும் உங்களுக்கு விவரிக்கிறான்).
Mü'min 40:68
அவன்தான் உயிர்ப்பிக்கிறான், மரணிக்கச் செய்கிறான். ஆக, அவன் ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால் அவன் அதற்கு கூறுவதெல்லாம், “ஆகு” என்றுதான். உடனே அது ஆகிவிடும்.
Mü'min 40:69
(நபியே!) அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்பவர்களை - அவர்கள் எவ்வாறு (சத்தியத்தில் இருந்து) திருப்பப்படுகிறார்கள் என்று - நீர் பார்க்கவில்லையா?
Mü'min 40:70
எவர்கள் வேதத்தையும் நமது தூதர்களை நாம் எதைக் கொண்டு அனுப்பினோமோ அதையும் பொய்ப்பித்தார்களோ அவர்கள் விரைவில் (அல்லாஹ்வின் தண்டனையை) அறிந்து கொள்வார்கள்.
Mü'min 40:71
அப்போது, இரும்பு வளையங்களும் சங்கிலிகளும் அவர்களின் (கைகள், கால்கள் இன்னும்) கழுத்துகளில் போடப்பட்டு (நரகத்தை நோக்கி) இழுக்கப்படுவார்கள்.
Mü'min 40:72
கொதிக்கின்ற நீரில் (அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்). பிறகு நரக நெருப்பில் அவர்கள் எரிக்கப்படுவார்கள்.
Mü'min 40:73
பிறகு, நீங்கள் இணைவைத்து வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே? என்று அவர்களிடம் கூறப்படும்.
Mü'min 40:74
அல்லாஹ்வை அன்றி (நீங்கள் அவர்களை வணங்கினீர்களே!) அவர்கள் கூறுவார்கள்: “அவை எங்களை விட்டும் தவறிவிட்டன. மாறாக, இதற்கு முன்னர் நாங்கள் எதையும் வணங்குபவர்களாக இருக்கவில்லையே!” (என்றும் பொய் கூறுவார்கள்). இவ்வாறுதான், அல்லாஹ் நிராகரிப்பாளர்களை வழிகெடுக்கிறான்.
Mü'min 40:75
இது (-அல்லாஹ் உங்களை தண்டிப்பது ஏனெனில்), பூமியில் அநியாயத்தை (பாவங்களை)க் கொண்டு நீங்கள் (அளவு கடந்து) மகிழ்ச்சி அடைபவர்களாக இருந்த காரணத்தாலும்; மமதையும் ஆணவமும் கொள்பவர்களாக நீங்கள் இருந்த காரணத்தாலும் ஆகும்.
Mü'min 40:76
நரகத்தின் வாசல்களில் நீங்கள் நுழையுங்கள்! அதில் நிரந்தரமானவர்களாக தங்கிவிடுங்கள். ஆக, பெருமை அடிப்பவர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது.
Mü'min 40:77
ஆகவே, (நபியே! சகிப்புடன் மன உறுதியுடன்) பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே! ஆக, ஒன்று, அவர்களை நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை உமக்கு காண்பிப்போம். அல்லது, (அதற்கு முன்னர்) உம்மை உயிர் கைப்பற்றுவோம். ஆக, (பின்னர்) நம் பக்கம்தான் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். (அப்போது அவர்களை தண்டிப்போம்.)
Mü'min 40:78
திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்களை நாம் அனுப்பினோம். அவர்களில் சிலரை(ப் பற்றிய வரலாறுகளை) நாம் உமக்கு விவரித்தோம். இன்னும், அவர்களில் சிலரை(ப் பற்றிய வரலாறுகளை) நாம் உமக்கு விவரிக்கவில்லை. அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர ஓர் அத்தாட்சியைக் கொண்டுவருவது எந்த ஒரு தூதருக்கும் சாத்தியமானது அல்ல. ஆக, அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டால் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். அப்போது பொய்யர்கள் நஷ்டமடைவார்கள்.
Mü'min 40:79
அல்லாஹ்தான் உங்களுக்காக கால்நடைகளை, - அவற்றில் (சிலவற்றின் மீது) நீங்கள் வாகனிப்பதற்காக - படைத்தான். இன்னும், அவற்றில் (சிலவற்றின் மாமிசங்களை) நீங்கள் புசிக்கிறீர்கள்.
Mü'min 40:80
இன்னும், உங்களுக்கு அவற்றில் பல பலன்கள் உள்ளன. இன்னும், உங்கள் நெஞ்சங்களில் உள்ள ஓர் ஆசையை அதன் மூலம் நீங்கள் அடைவதற்காகவும் (அவன் உங்களுக்கு இந்த கால்நடைகளைப் படைத்தான்). இன்னும், அவற்றின் மீதும் கப்பலின் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள். (-நீங்கள் அவற்றில் பயணம் செய்கிறீர்கள்.)
Mü'min 40:81
இன்னும், அவன் உங்களுக்கு தனது அத்தாட்சிகளைக் காண்பிக்கிறான். ஆக, அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் எதை நீங்கள் மறுப்பீர்கள்?.
Mü'min 40:82
ஆக, இவர்கள் பூமியில் சுற்றுப் பயணம் செய்யவில்லையா? (அப்படி செய்திருந்தால்) தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்த்திருப்பார்களே! அவர்கள் இவர்களை விட அதிகமாகவும், வலிமையால் மிக பலசாலிகளாகவும், பூமியில் அடையாளங்களால் (தொழிற்சாலைகள் இன்னும் மாட மாளிகைகளால்) அதிகமாகவும் இருந்தனர். ஆனால், அவர்கள் செய்து கொண்டிருந்தது (-அவர்களின் பலமான கோட்டைகள்) அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்கவில்லை.
Mü'min 40:83
ஆக, அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்கள் தங்களிடம் இருந்த கல்வித் திறமைகளைக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் எதை கேலி செய்பவர்களாக இருந்தார்களோ அ(ல்லாஹ்வின் தண்டனையான)து அவர்களை சூழ்ந்துவிட்டது.
Mü'min 40:84
ஆக, அவர்கள் நமது தண்டனை (இறங்கிய சமயத்தில் நமது வலிமை)யைப் பார்த்தபோது “நாங்கள் அல்லாஹ்வை - அவன் ஒருவனை மட்டும் - நம்பிக்கை கொண்டோம்; இன்னும், நாங்கள் எதை (அல்லாஹ்விற்கு) இணைவைப்பவர்களாக இருந்தோமோ அதை நிராகரித்து விட்டோம்” என்று கூறினார்கள்.
Mü'min 40:85
ஆக, அவர்கள் நமது தண்டனையைப் பார்த்தபோது அவர்கள் நம்பிக்கை கொண்டது அவர்களுக்கு பலன் தரக்கூடியதாக இருக்கவில்லை. அவனது அடியார்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் நடைமுறை எது (முன்னர்) சென்றதோ அதே நடைமுறைதான் (இவர்களுடனும் பின்பற்றப்படும்). அப்போது நிராகரிப்பாளர்கள் நிச்சயம் நஷ்டமடைவார்கள்.
Fussılet 41:1
ஹா மீம்.
Fussılet 41:2
பேரருளாளன் பேரன்பாளனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும் (இது).
Fussılet 41:3
(இது) அரபி மொழியில் உள்ள (போற்றத் தகுந்த) குர்ஆன் என்னும் வேதமாகும். (அரபி மொழியை) அறிகின்ற மக்களுக்காக (அரபி மொழியில்) இதன் வசனங்கள் விவரிக்கப்பட்டன.
Fussılet 41:4
(இந்த வேதம்) நற்செய்தி கூறக்கூடியதும், அச்சமூட்டி எச்சரிக்கக் கூடியதும் ஆகும். ஆக, அவர்களில் அதிகமானோர் (இதை) புறக்கணித்தனர். ஆக, அவர்கள் (இதன் நல்லுபதேசங்களை) செவியுறுவதில்லை.
Fussılet 41:5
அவர்கள் கூறினார்கள்: “நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கிறீரோ அதில் இருந்து (எங்களைத் தடுக்கக்கூடிய) திரைகளில்தான் எங்கள் உள்ளங்கள் இருக்கின்றன. இன்னும், எங்கள் செவிகளில் செவிட்டுத்தனம் இருக்கிறது. எங்களுக்கு மத்தியிலும் உமக்கு மத்தியிலும் (உமது உபதேசத்தை நாங்கள் செவியுறாமல் எங்களை தடுக்கக்கூடிய) ஒரு திரையும் இருக்கிறது. ஆகவே, நீர் (விரும்பியதை) செய்வீராக! நிச்சயமாக நாங்கள் (விரும்புவதை நாங்கள்) செய்வோம்.”
Fussılet 41:6
(நபியே) கூறுவீராக! “நான் எல்லாம் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான். எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவது என்னவென்றால்: “(நீங்கள் வணங்கத் தகுதியான) உங்கள் கடவுள் எல்லாம் ஒரே ஒரு கடவுள்தான்.” ஆகவே, அவன் பக்கம் (உங்களை சேர்த்துவைக்கின்ற நேரான பாதையில்) நீங்கள் நேர்வழி செல்லுங்கள்! இன்னும், அவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! இணைவைப்பவர்களுக்கு நாசம்தான்.”
Fussılet 41:7
அவர்கள் (செல்வங்களில் அவற்றுக்குரிய) ஸகாத்தை கொடுப்பதில்லை. இன்னும், அவர்கள் மறுமையை நிராகரிக்கிறார்கள்.
Fussılet 41:8
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ - அவர்களுக்கு முடிவுறாத வெகுமதிகள் உண்டு.
Fussılet 41:9
(நபியே!) கூறுவீராக! “பூமியை இரண்டு நாள்களில் படைத்தவனை நீங்கள் நிராகரிக்கிறீர்களா? இன்னும், அவனுக்கு இணைகளை ஏற்படுத்துகிறீர்களா? அவன் அகிலங்களின் இறைவன் ஆவான்.”
Fussılet 41:10
இன்னும், அவன் அதில் அதற்கு மேலாக மலைகளை ஏற்படுத்தினான். அதில், அருள்வளம் (-அபிவிருத்தி) செய்தான். அதன் உணவுகளை அதில் திட்டமிட்டு நிர்ணயித்தான். (இவை எல்லாம் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய பூரணமான) நான்கு நாட்களில் முடிந்தன. (பூமியையும் அதில் உள்ள படைப்புகளைப் பற்றியும்) விசாரிப்பவர்களுக்கு சரியான பதிலாக (இதைச் சொல்லுங்கள்).
Fussılet 41:11
பிறகு, அவன் வானத்திற்கு மேல் உயர்ந்தான். அது (தண்ணீரில் இருந்து வெளியேறும்) ஓர் ஆவியாக இருந்தது. ஆக, (அந்த ஆவியை ஒரு வானமாக அவன் ஆக்கினான். அந்த ஒரு வானத்தில் இருந்து ஏழு வானங்களைப் படைத்தான்.) அவன் அதற்கும் (-வானத்திற்கும்) பூமிக்கும் கூறினான்: “நீங்கள் இருவரும் விருப்பத்துடன் அல்லது வெறுப்புடன் வாருங்கள் (-என் கட்டளைக்கு பணிந்து நடங்கள்! உங்களுக்குள் படைக்கப்பட்டதை வெளிப்படுத்துங்கள்.)!” அவை இரண்டும் கூறின: “நாங்கள் விருப்பமுள்ளவர்களாகவே வந்தோம் (உனக்கு கீழ்ப்படிந்து உனது கட்டளையை ஏற்று நடப்போம்.” ஆகவே, சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் இன்னும் அதனுள் அல்லாஹ் படைத்த மற்ற படைப்புகளையும் வானம் வெளிப்படுத்தியது. மலை, செடிகொடி, நதி, கடல், ஊர், கிராமம், பாலைவனம், காடுகள் என தன்னில் உள்ளவற்றை பூமி வெளிப்படுத்தியது.)
Fussılet 41:12
ஆக, அவன் அவற்றை ஏழு வானங்களாக (வியாழன், வெள்ளி ஆகிய) இரண்டு நாட்களில் (படைத்து) முடித்தான். இன்னும், ஒவ்வொரு வானத்திலும் அதன் காரியத்தையும் அவன் அறிவித்தான். கீழ் வானத்தை (நட்சத்திரங்கள் என்னும்) விளக்குகளால் நாம் அலங்கரித்தோம். இன்னும் (ஷைத்தான்கள் வானத்தின் பக்கம் ஏறுவதிலிருந்து வானப் பாதைகளை) பாதுகாப்பதற்காகவும் (நாம் நட்சத்திரங்களை அமைத்தோம்). இது, நன்கறிந்தவனுடைய, மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.
Fussılet 41:13
ஆக, அவர்கள் புறக்கணித்தால் (நபியே!) நீர் கூறுவீராக! “ஆது, ஸமூது உடைய பேரழிவைப் போன்ற ஒரு பேரழிவை நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன்.”
Fussılet 41:14
அவர்களிடம் தூதர்கள் அவர்களுக்கு முன்னிருந்தும் அவர்களுக்கு பின்னிருந்தும் (ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து) வந்தார்கள். (இன்னும் அவர்கள் கூறினார்கள்:) “அல்லாஹ்வைத் தவிர (யாரையும் எதையும்) வணங்காதீர்கள்!” (இணைவைப்பாளர்கள்) கூறினார்கள்: “எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் (எங்களை நேர்வழிபடுத்த) வானவர்களை இறக்கி இருப்பான். ஆகவே, நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிப்பவர்கள் ஆவோம்.”
Fussılet 41:15
ஆக, ஆது சமுதாயம் பூமியில் அநியாயமாக பெருமை அடித்தனர். இன்னும், “எங்களை விட ஆற்றல் மிகுந்த பலசாலிகள் யார்” என்று கூறினார்கள். நிச்சயமாக அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விட ஆற்றல் மிகுந்த பலசாலியாவான் என்பதை இவர்கள் கவனிக்கவில்லையா? அவர்கள் நமது வசனங்களை மறுப்பவர்களாக இருந்தனர்.
Fussılet 41:16
ஆகவே, கேவலமான தண்டனையை இவ்வுலகில் அவர்களுக்கு நாம் சுவைக்க வைப்பதற்காக, அவர்கள் மீது கடும் குளிர் காற்றை துரதிர்ஷ்டமான (தீமைகள் நிறைந்த) நாட்களில் நாம் அனுப்பினோம். மறுமையின் தண்டனையோ (அவர்களுக்கு) மிக கேவலமானது. (அங்கு) அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
Fussılet 41:17
ஆக, ஸமூது சமுதாயம், நாம் அவர்களுக்கு நேர்வழிகாட்டினோம். ஆனால், அவர்கள் நேர்வழியை விட (வழிகேடான) குருட்டுத் தனத்தைத்தான் அதிகம் விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக அவர்களை இழிவான தண்டனையின் பேரழிவு பிடித்தது.
Fussılet 41:18
(அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, (அவனை) அஞ்சுபவர்களாக இருந்தவர்களை நாம் பாதுகாத்(து தண்டனையில் இருந்து தப்பிக்க வைத்)தோம்.
Fussılet 41:19
அல்லாஹ்வின் எதிரிகள் நரகத்தின் பக்கம் ஒன்று திரட்டப்படுகின்ற நாளில், ஆக அவர்கள் (அனைவரும் முன்னோர் பின்னோர் எல்லாம் ஒரே இடத்தில் ஒன்று சேர்வதற்காக) நிறுத்தி வைக்கப்படுவார்கள்.
Fussılet 41:20
இறுதியாக, அவர்கள் அதற்கருகில் வரும்போது அவர்களுடைய செவியும் அவர்களுடைய பார்வைகளும் அவர்களுடைய தோல்களும் அவர்கள் செய்துகொண்டிருந்ததைப் பற்றி அவர்களுக்கு எதிராகவே சாட்சி கூறும்.
Fussılet 41:21
இன்னும், அவர்கள் தங்களுடைய தோல்களிடம், “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்” என்று கூறுவார்கள். அதற்கு அவை கூறும்: “எல்லாவற்றையும் பேசவைத்த அல்லாஹ்தான் எங்களையும் (இன்று) பேச வைத்தான்.” (மனிதர்களே!) அவன்தான் உங்களை முதல் முறையாகப் படைத்தான். இன்னும் அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Fussılet 41:22
உங்களுக்கு எதிராக உங்கள் செவியும் உங்கள் பார்வைகளும் உங்கள் தோல்களும் சாட்சி கூறிவிடும் என்பதற்காக நீங்கள் (உங்கள் செயல்களை) மறைப்பவர்களாக இருக்கவில்லை. (ஏனெனில் உங்களுக்கு மறுமை நம்பிக்கை இல்லை. இன்னும், உங்கள் செயல்களை மறைக்கவும் உங்களால் முடியாது.) என்றாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதில் அதிகமானதை அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணினீர்கள்.
Fussılet 41:23
உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய அந்த உங்கள் எண்ணம்தான் உங்களை நாசமாக்கியது. ஆகவே, நீங்கள் நஷ்டவாளிகளில் ஆகிவிட்டீர்கள்.
Fussılet 41:24
ஆக, அவர்கள் பொறுமையாக இருந்தாலும், (பொறுமையாக இல்லை என்றாலும்,) நரகம்தான் அவர்களுக்கு தங்குமிடமாகும். அவர்கள் (அல்லாஹ்வின்) பொருத்தத்தை தேடினாலும் அவர்கள் (அல்லாஹ்வின்) பொருத்தம் பெற்றவர்களில் ஆக மாட்டார்கள்.
Fussılet 41:25
இன்னும், (நிராகரிப்பாளர்களாகிய) அவர்களுக்கு சில நண்பர்களை நாம் இலகுவாக அமைத்துக் கொடுத்தோம். ஆக, அவர்களுக்கு முன்னுள்ளதையும் அவர்களுக்கு பின்னுள்ளதையும் அந்த நண்பர்கள் அலங்கரித்துக் காட்டினார்கள். இவர்களுக்கு முன்னர் சென்றுவிட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களில் உள்ள (பாவிகளான) சமுதாயங்களுக்கு விதிக்கப்பட்ட அதே விதி (-அதே தண்டனை) இவர்கள் மீதும் உறுதியாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாக இருக்கிறார்கள்.
Fussılet 41:26
நிராகரிப்பாளர்கள் கூறினார்கள்: “இந்த குர்ஆனை நீங்கள் செவியுறாதீர்கள் (அதை ஏற்காதீர்கள்), இன்னும், அதில் (-அது ஓதப்படும்போது பிறர் கேட்க முடியாதவாறு) கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துங்கள்! (அவரை ஓதவிடாமல் செய்ய வேண்டும், பிறரை கேட்கவிடாமல் செய்ய வேண்டும் என்ற உங்கள் நோக்கத்தில்) நீங்கள் வெற்றி பெறுவதற்காக.”
Fussılet 41:27
ஆகவே, நிராகரித்தவர்களுக்கு கடுமையான தண்டனையை நிச்சயமாக சுவைக்க வைப்போம். இன்னும், நிச்சயமாக, அவர்கள் செய்து கொண்டிருந்த மிகக் கெட்ட செயலுக்கு (தகுந்த) கூலியை அவர்களுக்கு கொடுப்போம்.
Fussılet 41:28
இதுதான் அல்லாஹ்வின் எதிரிகளுக்குரிய நரகம் என்ற கூலியாகும். அதில் அவர்களுக்கு நிரந்தரமாக தங்கும் இல்லம் உண்டு, நமது வசனங்களை அவர்கள் மறுப்பவர்களாக இருந்ததற்குக் கூலியாக.
Fussılet 41:29
நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! ஜின் மற்றும் மனிதர்களில் எங்களை வழிகெடுத்தவர்களை எங்களுக்குக் காண்பித்துக் கொடு! அவர்கள் (- வழிகெடுத்த அந்த இரு கூட்டங்களும்) மிகக் கீழ்த்தரமானவர்களில் ஆகிவிடுவதற்காக அவர்களை நாங்கள் எங்கள் பாதங்களுக்குக் கீழ் ஆக்கி (மிதித்து) விடுகிறோம்.”
Fussılet 41:30
நிச்சயமாக எவர்கள், “(நாங்கள் வணங்கத்தகுதியான) எங்கள் இறைவன், அல்லாஹ்தான்” என்று கூறி; பிறகு, (அதில்) உறுதியாக இருந்தார்களோ அவர்கள் மீது வானவர்கள் இறங்குவார்கள். (அந்த வானவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கிக் கூறுவார்கள்:) “நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெறுங்கள்!”
Fussılet 41:31
“நாங்கள் இந்த உலக வாழ்க்கையிலும் மறுமையிலும் உங்கள் நேசர்கள் ஆவோம். அ(ந்த சொர்க்கத்)தில் உங்கள் மனங்கள் விரும்புவதும் உங்களுக்கு உண்டு. இன்னும், அதில் நீங்கள் (வாய்விட்டு) கேட்பதும் உங்களுக்கு உண்டு.”
Fussılet 41:32
“(இவை எல்லாம்) மகா மன்னிப்பாளன், மகா கருணையாளனிடமிருந்து விருந்தோம்பலாக (உங்களுக்கு வழங்கப்படும்).”
Fussılet 41:33
யார் அல்லாஹ்வின் பக்கம் அழைத்து, தானும் நல்லமலை செய்து, நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுவாரோ அவரைவிட பேச்சால் மிக அழகானவர் யார்?
Fussılet 41:34
நன்மையும் தீமையும் சமமாகாது. மிக அழகியதைக் கொண்டு (தீமையை) தடுப்பீராக! அப்போது உமக்கும் எவர் ஒருவருக்கும் இடையில் பகைமை இருக்கிறதோ அவர் ஓர் நெருக்கமான உறவுக்காரரைப்போல் ஆகிவிடுவார்.
Fussılet 41:35
இ(ந்த குணத்)தை பொறுமையாளர்கள் தவிர கொடுக்கப்பட மாட்டார்கள். இன்னும், பெரும் பாக்கியம் உடையவர்கள் தவிர இ(ந்த குணத்)தை கொடுக்கப்பட மாட்டார்கள்.
Fussılet 41:36
நிச்சயமாக ஷைத்தானிடமிருந்து ஏதாவது தீய எண்ணம் (உமது எதிரியை பழிவாங்கும்படி) உம்மைத் தூண்டினால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
Fussılet 41:37
இரவு, பகல், சூரியன், சந்திரன் அனைத்தும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நீங்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள்! இவற்றைப் படைத்த அல்லாஹ்விற்கு சிரம் பணியுங்கள் நீங்கள் அ(ந்த உண்மையான இறை)வனை வணங்குபவர்களாக இருந்தால்.
Fussılet 41:38
ஆக, அவர்கள் பெருமையடித்து விலகினால் (நீர் கவலைப்படாதீர்), உமது இறைவனிடம் இருக்கின்ற(வான)வர்கள் அவனை இரவிலும் பகலிலும் துதிக்கிறார்கள். இன்னும், அவர்கள் சோர்வடைய மாட்டார்கள்.
Fussılet 41:39
இன்னும், நிச்சயமாக நீர் பூமியை காய்ந்ததாக பார்க்கிறீர். பிறகு, அதன் மீது நாம் (மழை) நீரை இறக்கினால் அது செழிப்படைந்து நன்கு வளர்கிறது. இது, அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். நிச்சயமாக அதை உயிர்ப்பித்தவன்தான் மரணித்தவர்களையும் உயிர்ப்பிப்பவன் ஆவான். நிச்சயமாக அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Fussılet 41:40
நிச்சயமாக நமது வசனங்களில் (குழப்பம் செய்து சத்தியத்தை விட்டு) தடம் புரளுகிறவர்கள் நம்மிடம் மறைந்துவிட மாட்டார்கள். ஆக, யார் நரகத்தில் போடப்படுபவரோ அவர் சிறந்தவரா? அல்லது, மறுமை நாளில் பாதுகாப்பு பெற்றவராக வருகிறவரா? நீங்கள் நாடியதை செய்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை உற்று நோக்குகிறவன் ஆவான்.
Fussılet 41:41
நிச்சயமாக எவர்கள் இந்த வேதத்தை - அது அவர்களிடம் வந்தபோது - நிராகரித்தார்களோ (அவர்கள் தண்டனைக்கு உரியவர்களே.) நிச்சயமாக இது மிக கண்ணியமான வேதமாகும்.
Fussılet 41:42
அதற்கு முன்னிருந்தும் அதற்குப் பின்னிருந்தும் பொய்யர்கள் அதனிடம் வரமாட்டார்கள். (பொய்யர்கள் யாராலும் அதில் இல்லாததை அதில் சேர்க்கவும் முடியாது, அதில் உள்ளதை அதில் இருந்து எடுக்கவும் முடியாது.) மகா ஞானவான், மகா புகழுக்குரியவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும் (இது).
Fussılet 41:43
உமக்கு முன்னர் (அனுப்பப்பட்ட) தூதர்களுக்கு திட்டமாக எது சொல்லப்பட்டதோ அதைத் தவிர (வேறு ஏதும்) உமக்கு சொல்லப்படாது. நிச்சயமாக உமது இறைவன் மன்னிப்புடையவன், வலி தருகின்ற தண்டனை கொடுப்பவன் ஆவான்.
Fussılet 41:44
அரபி அல்லாத மொழியில் உள்ள குர்ஆனாக இதை நாம் ஆக்கி இருந்தால், “இதன் வசனங்கள் (அரபி மொழியில்) விவரிக்கப்பட்டிருக்க வேண்டாமா? (இந்த குர்ஆன்) அரபி அல்லாத ஒரு மொழியா! (இது இறக்கப்பட்டவரின் மொழியோ) அரபி ஆயிற்றே” என்று கூறியிருப்பார்கள். (நபியே!) கூறுவீராக! “இது (-இந்த குர்ஆன் அதை) நம்பிக்கை கொண்டவர்களுக்கு (அவர்கள் எந்த மொழி உடையவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு) நேர்வழியும் நிவாரணமும் ஆகும்.” இன்னும், எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களின் காதுகளில் செவிட்டுத்தனம் இருக்கிறது. (அவர்கள் படிப்பினை பெறும் நோக்கத்துடன் இதை செவியுற மாட்டார்கள்.) அது அவர்கள் (உடைய உள்ளங்கள்) மீது மறைந்திருக்கிறது. (ஆகவே, அவர்களுடைய உள்ளங்களால் அதை புரிய முடியாது. இந்த வேதத்தை நிராகரிக்கும்) அவர்கள் மிக தூரமான இடத்தில் இருந்து அழைக்கப்படுகிறார்கள் (போலும். ஆகவேதான் இந்த வேதத்தின் சத்தியத்தை அவர்களால் புரிய முடியவில்லை போலும்).
Fussılet 41:45
திட்டவட்டமாக மூஸாவிற்கு நாம் வேதத்தைக் கொடுத்தோம். ஆக, அதில் முரண்பாடு செய்யப்பட்டது. உமது இறைவனிடமிருந்து ஒரு வாக்கு முந்தியிருக்கவில்லை என்றால் அவர்களுக்கு மத்தியில் (இவ்வுலகிலேயே) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். இன்னும், நிச்சயமாக அவர்கள் இ(ந்த வேதத்)தில் மிக ஆழமான சந்தேகத்தில்தான் இருக்கிறார்கள்.
Fussılet 41:46
யார் நல்லதை செய்வாரோ அது அவருக்குத்தான் நன்மையாகும். இன்னும், யார் கெட்டதை செய்வாரோ அது அவருக்குத்தான் கேடாகும். உமது இறைவன் அடியார்களுக்கு சிறிதும் அநியாயம் செய்பவனாக இல்லை.
Fussılet 41:47
மறுமையைப் பற்றிய அறிவு அவன் பக்கமே திருப்பப்படுகிறது. (அவனை அன்றி மறுமை நிகழப்போவதை யாரும் அறியமாட்டார்.) அவனது ஞானமில்லாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாலைகளில் இருந்து வெளிவருவதில்லை, பெண்களில் எவரும் கர்ப்பமடைவதுமில்லை, அவர்கள் குழந்தை பெற்றெடுப்பதுமில்லை. இன்னும், “எனக்கு இணையாக்கப்பட்ட தெய்வங்கள் எங்கே?” என்று அவன் அவர்களை அழைக்கின்ற நாளில் அவர்கள் கூறுவார்கள்: “(இன்றைய தினம்) எங்களில் யாரும் (உனக்கு இணை உள்ளது என) சாட்சி சொல்பவர் இல்லை என்று நாங்கள் உனக்கு அறிவித்து விட்டோம்.”
Fussılet 41:48
இன்னும், இதற்கு முன்னர் அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்து விடும். இன்னும், தப்பிப்பதற்குரிய இடம் எதுவும் தங்களுக்கு இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
Fussılet 41:49
மனிதன் நன்மைக்காகப் பிரார்த்திப்பதில் சடைவடைய மாட்டான். (ஆனால்) அவனுக்கு தீமைகள் நிகழ்ந்தால் அவன் நிராசை அடைந்தவனாக, நம்பிக்கை இழந்தவனாக ஆகிவிடுகிறான்.
Fussılet 41:50
அவனுக்கு நிகழ்ந்த தீங்குக்குப் பின்னர் நம் புறத்தில் இருந்து ஓர் அருளை நாம் அவனுக்கு சுவைக்க வைத்தால் (அதற்கு நன்றி செலுத்தாமல்,) “இது எனக்குரியது (-என் தகுதியினால், என் திறமையினால் எனக்கு கிடைத்தது), மறுமை நிகழும் எனவும் நான் எண்ணவில்லை, நான் என் இறைவனிடம் திரும்பக் கொண்டுவரப்பட்டாலும் நிச்சயமாக எனக்கு அவனிடம் சொர்க்கம்தான் உண்டு” என்று நிச்சயமாக அவன் கூறுகிறான். ஆக, நிராகரித்தவர்களுக்கு அவர்கள் செய்ததை நாம் நிச்சயமாக அறிவிப்போம். இன்னும், அவர்களுக்கு கடுமையான தண்டனையை நாம் சுவைக்க வைப்போம்.
Fussılet 41:51
மனிதன் மீது நாம் அருள் புரிந்தால் (அதற்கு அவன் நன்றி செலுத்தாமல் நம்மை விட்டு) புறக்கணித்து செல்கிறான். இன்னும், (நமக்கு கீழ்ப்படிவதை விட்டு விலகி) முற்றிலும் தூரமாகி விடுகிறான். அவனுக்கு தீங்கு நிகழ்ந்தால் (நம்மிடம்) மிக அதிகமான பிரார்த்தனை செய்பவனாக ஆகிவிடுகிறான்.
Fussılet 41:52
(நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக! “நீங்கள் எனக்கு அறிவியுங்கள்! இந்த வேதம் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதாக இருந்து பிறகு, நீங்கள் அதை நிராகரித்து (உண்மைக்கு வெகு தூரம் முரண்பட்டு, வழிகேட்டில் சென்று)விட்டால், வெகு தூரமான முரண்பாட்டில் இருப்பவனை விட மிகப் பெரிய வழிகேடன் யார் இருக்க முடியும்?”
Fussılet 41:53
நாம் நமது அத்தாட்சிகளை (அவர்கள் வசிக்கின்ற பூமியின்) பல பகுதிகளிலும் (-மக்காவைச் சுற்றியுள்ள நாடுகளிலும்) அவர்க(ளுடைய உயிர்க)ளிலும் அவர்களுக்கு நாம் விரைவில் காண்பிப்போம். இறுதியாக, நிச்சயமாக இதுதான் உண்மை என்று அவர்களுக்கு தெளிவாகிவிடும். நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் நன்கு பார்ப்பவனாக இருக்கிறான் என்பது (இந்த வேதத்தை நிராகரிப்பவர்களை தண்டிப்பதற்கும்; இதை நம்பிக்கை கொண்டவர்களை இரட்சிப்பதற்கும்) உமது இறைவனுக்கு போதாதா?
Fussılet 41:54
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்பதில் சந்தேகத்தில் இருக்கிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் (தனது அறிவாலும் ஆற்றலாலும்) சூழ்ந்திருக்கிறான்.
Şûrâ 42:1
ஹா மீம்.
Şûrâ 42:2
அய்ன் சீன் காஃப்.
Şûrâ 42:3
இவ்வாறுதான் மிகைத்தவனும் மகா ஞானவானுமாகிய அல்லாஹ் உமக்கு வஹ்யி அறிவிக்கிறான். இன்னும், உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் இவ்வாறுதான் வஹ்யி அறிவிக்கப்பட்டது.
Şûrâ 42:4
வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்குத்தான் சொந்தமானவை ஆகும். அவன்தான் மிக உயர்ந்தவன், மிக மகத்தானவன்.
Şûrâ 42:5
அவற்றுக்கு (-ஏழு பூமிகளுக்கு) மேல் உள்ள வானங்கள் (அல்லாஹ்வின் அச்சத்தால்) பிளந்து தெரித்து விடுவதற்கு நெருங்கி விடுகின்றன. வானவர்கள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிக்கிறார்கள். இன்னும் பூமியில் உள்ளவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்கிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
Şûrâ 42:6
அவனை அன்றி எவர்கள் பாதுகாவலர்களை (பிற தெய்வங்களை) எடுத்துக் கொண்டார்களோ அவர்கள் மீது அல்லாஹ்தான் கண்காணிப்பவன் ஆவான். (நபியே!) நீர் அவர்கள் மீது பொறுப்பாளர் இல்லை. (ஆகவே, அல்லாஹ் அவர்களின் செயல்களைப் பதிவு செய்து அவற்றுக்கு ஏற்ப அவர்களுக்கு கூலி வழங்குவான்.)
Şûrâ 42:7
இவ்வாறுதான் உமக்கு அரபி மொழியில் உள்ள குர்ஆனை நாம் வஹ்யி அறிவித்தோம், நீர் மக்காவாசிகளையும் அதைச் சுற்றி உள்ளவர்களையும் எச்சரிப்பதற்காகவும் (மனிதர்கள் எல்லோரும் ஒன்று சேர்க்கப்படும்) மறுமை நாளைப் பற்றி எச்சரிப்பதற்காகவும். அ(ந்த மறுமை நாள் நிகழப்போவ)தில் அறவே சந்தேகம் இல்லை. ஒரு பிரிவு சொர்க்கத்தில் இருப்பார்கள். ஒரு பிரிவு நரகத்தில் இருப்பார்கள்.
Şûrâ 42:8
அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை (அவர்கள் அனைவரையும்) ஒரே ஒரு மார்க்கமுடையவர்களாக ஆக்கியிருப்பான். என்றாலும் அவன், தான் நாடியவர்களை தனது அருளில் நுழைக்கிறான். அநியாயக்காரர்களோ - அவர்களுக்கு பாதுகாவலர் எவரும் இல்லை; இன்னும், உதவியாளர் எவரும் இல்லை.
Şûrâ 42:9
அவனை அன்றி அவர்கள் பாதுகாவலர்களை எடுத்துக்கொண்டார்களா? ஆக, அல்லாஹ்தான் (உண்மையான) பாதுகாவலன். அவன்தான் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான். இன்னும், அவன் எல்லா பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Şûrâ 42:10
எந்த ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்படுகிறீர்களோ அதன் இறுதி தீர்ப்பு அல்லாஹ்வின் பக்கம்தான் உள்ளது. அந்த அல்லாஹ்தான் என் இறைவன் ஆவான். அவன் மீதே நான் நம்பிக்கை வைத்துள்ளேன். அவன் பக்கமே நான் முற்றிலும் திரும்புகிறேன்.
Şûrâ 42:11
அவன்தான், வானங்களையும் பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களில் இருந்தே ஜோடிகளையும் இன்னும், கால்நடைகளில் ஜோடிகளையும் அவன் ஏற்படுத்தினான். இ(ப்படி ஜோடியாக ஏற்படுத்திய)தில் அவன் உங்களை அதிகமாக படை(த்து வாழவை)க்கிறான். அவனைப் போன்று எதுவும் இல்லை. அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
Şûrâ 42:12
வானங்கள் இன்னும் பூமியி(லுள்ள பொக்கிஷங்களி)ன் சாவிகள் அவனுக்கே உரியன. அவன், தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விரிவாக்குகிறான்; இன்னும், (தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை) சுருக்குகிறான். நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.
Şûrâ 42:13
அவன் நூஹுக்கு எதை உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் இந்த மார்க்கத்தில் சட்டமாக்கினான். உமக்கு நாம் எதை வஹ்யி அறிவித்தோமோ, இன்னும் இப்ராஹீம், மூஸா, ஈஸாவிற்கு எதை நாம் உபதேசித்தோமோ அது, “இந்த மார்க்கத்தை நீங்கள் நிலை நிறுத்துங்கள்! அதில் நீங்கள் பிரிந்து விடாதீர்கள்!” என்பதாகும். இணைவைப்பவர்களுக்கு நீங்கள் எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அது மிக பாரமாக ஆகிவிட்டது. அல்லாஹ், தான் நாடுகிறவர்களை தன் பக்கம் தேர்ந்தெடுக்கிறான். (தன் பக்கம்) திரும்பக்கூடியவர்களுக்கு அவன் தன் பக்கம் (நெருங்குவதற்குரிய) நேர்வழி காட்டுகிறான்.
Şûrâ 42:14
தங்களிடம் கல்வி வந்ததன் பின்னரே தவிர அவர்கள் (தங்களுக்குள்) பல பிரிவுகளாக பிரியவில்லை. (அவர்கள் அவ்வாறு பிரிந்தது) தங்களுக்கு மத்தியில் இருந்த பொறாமையினால்தான். ஒரு குறிப்பிட்ட தவணை(யாகிய மறுமை நாள் வரும்) வரை (அவன் தனது தண்டனையை உங்களுக்கு பிற்படுத்துவான் என்ற) ஒரு வாக்கு உமது இறைவன் புறத்தில் இருந்து முன் சென்று இருக்கவில்லை என்றால் அவர்களுக்கு மத்தியில் (இவ்வுலகிலேயே) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். (அவர்களது கதை முடிக்கப்பட்டிருக்கும்.) நிச்சயமாக, இவர்களுக்குப் பின்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் அதில்பெரிய சந்தேகத்தில் இருக்கிறார்கள்.
Şûrâ 42:15
ஆக, இதன் பக்கமே (-உமக்கும் நூஹுக்கும் மற்ற நபிமார்களுக்கும் நாம் எதை மார்க்கமாக அமைத்தோமோ அந்த மார்க்கத்தின் பக்கமே) நீர் அழைப்பீராக! நீர் கட்டளையிடப்பட்டது போன்றே (உமக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளில்) நீர் நிலையாக நீடித்து உறுதியாக இருப்பீராக! அவர்களின் (-இந்த சத்திய மார்க்கத்தில் சந்தேகித்தவர்களின்) மனவிருப்பங்களை நீர் பின்பற்றாதீர்! இன்னும், நீர் கூறுவீராக! “அல்லாஹ் இறக்கிய வேதங்களை நான் நம்பிக்கை கொண்டேன். உங்களுக்கு மத்தியில் நீதமாக நடக்க வேண்டும் என்று நான் பணிக்கப்பட்டுள்ளேன். அல்லாஹ்தான் எங்கள் இறைவன், இன்னும் உங்கள் இறைவன் ஆவான். எங்களுக்கு எங்கள் அமல்கள் (உடைய கூலி கிடைக்கும்). உங்களுக்கு உங்கள் அமல்கள் (உடைய கூலி கிடைக்கும்). நமக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் தர்க்கம் வேண்டாம். அல்லாஹ்தான் (நம்மை) ஒன்று சேர்(த்து நமக்கு மத்தியில் தீர்ப்பளி)ப்பான். அவன் பக்கமே மீளுதல் இருக்கிறது.”
Şûrâ 42:16
இன்னும், எவர்கள் அல்லாஹ்வின் (மார்க்க) விஷயத்தில், - அவனை (மக்கள்) ஏற்றுக் கொண்டதன் பின்னர் - தர்க்கம் செய்கிறார்களோ அவர்களின் தர்க்கம் எல்லாம் அல்லாஹ்விடம் வீணானதே (அழிந்துபோகக்கூடியதே) ஆகும்! இன்னும், அவர்கள் மீது (அல்லாஹ்வின்) கோபம் இறங்கும். இன்னும், அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு.
Şûrâ 42:17
அல்லாஹ், உண்மையுடன் கூடிய இந்த வேதத்தையும் தராசையும் இறக்கி (நீதமாக நடக்க வேண்டும் என்பதை சட்டமாக்கி)னான். மறுமை மிக சமீபமானது என்று (நபியே!) உமக்கு யார் அறிவிப்பார்? (அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிவிக்க முடியாது.)
Şûrâ 42:18
அதை (-மறுமையை) நம்பிக்கை கொள்ளாதவர்கள் அதை அவசரமாகத் தேடுகிறார்கள். (அதை) நம்பிக்கை கொண்டவர்கள் அதை பயப்படுகிறார்கள். இன்னும், நிச்சயமாக அது உண்மை(யாக நிகழக்கூடியது)தான் என்று அவர்கள் அறிவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக மறுமை விஷயத்தில் தர்க்கிப்பவர்கள் வெகு தூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.
Şûrâ 42:19
அல்லாஹ், தன் அடியார்கள் மீது மிக கருணை(யும் தயவும்) உடையவன். அவன், தான் நாடுகிறவர்களுக்கு உணவளிக்கிறான். அவன்தான் மிக வலிமை உள்ளவன், (யாவரையும்) மிகைத்தவன்.
Şûrâ 42:20
யார் மறுமையின் விளைச்சலை நாடுகிறவராக இருக்கிறாரோ அவருக்கு அவருடைய விளைச்சலில் (-நன்மைக்குரிய கூலியில்) நாம் அதிகப்படுத்துவோம். இன்னும், யார் (தனது நல்லமல்களுக்கு) உலகத்தின் விளைச்சலை நாடுகிறவராக இருக்கிறாரோ அவருக்கு அ(வர் விரும்புகிற உலக செல்வத்)திலிருந்து நாம் கொடுப்போம். அவருக்கு மறுமையில் (அவர் செய்த நன்மையிலிருந்து) எவ்வித பங்கும் இல்லை.
Şûrâ 42:21
(அல்லாஹ்வின்) மார்க்கத்தில் அல்லாஹ் எதை கட்டளை இடவில்லையோ அதை இவர்களுக்கு சட்டமாக (-மார்க்கமாக) ஆக்கித்தருகின்ற தெய்வங்களும் இவர்களுக்கு உண்டா? (இவர்களுக்கு தண்டனை மறுமையில்தான் என்ற) தீர்ப்பின் வாக்கு மட்டும் இல்லை என்றால் அவர்களுக்கு மத்தியில் (இவ்வுலகிலேயே) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்கள், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு.
Şûrâ 42:22
(நபியே!) அநியாயக்காரர்களை - அவர்கள் செய்தவற்றின் (-பாவங்களின்) காரணமாக (மறுமை நாளில் அல்லாஹ்வின் தண்டனையை) - பயந்தவர்களாக நீர் பார்ப்பீர்! அ(ந்த தண்டனையான)து அவர்களுக்கு நிகழ்ந்தே தீரும். இன்னும், நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்கள் சொர்க்கங்களின் சோலைகளில் இருப்பார்கள். அவர்கள் நாடுகின்றவை (எல்லாம்) அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு கிடைக்கும். இதுதான் மிகப் பெரிய சிறப்பாகும்.
Şûrâ 42:23
(நல்லவர்களுக்குரிய சொர்க்க இன்பமாகிய) இது எத்தகையது என்றால், நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்த தன் அடியார்களுக்கு அல்லாஹ் இதன் மூலம் நற்செய்தி) கூறுகிறான். (நபியே!) கூறுவீராக! “இதற்காக நான் உங்களிடத்தில் எந்த கூலியையும் கேட்கவில்லை, இரத்த உறவினால் உள்ள அன்பைத் தவிர.” இன்னும், யார் அழகிய அமலை செய்வாரோ அவருக்கு அதில் (மேலும்) அழகை நாம் அதிகப்படுத்துவோம். (ஒரு நன்மைக்கு பத்து நன்மைகளை கூலியாகத் தருவோம்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், நன்றி பாராட்டக்கூடியவன் ஆவான்.
Şûrâ 42:24
(இந்த தூதர்) அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டினார் என்று இவர்கள் கூறுகிறார்களா? ஆக, (நபியே! நீர் அப்படி பொய் கூறி இருந்தால்) அல்லாஹ் நாடினால் உமது உள்ளத்தின் மீது அவன் முத்திரையிட்டு விடுவான். (இந்த வேதத்தை நீர் மறந்துவிடுவீர்.) இன்னும், அல்லாஹ் பொய்யை அழித்து விடுவான்; தனது கட்டளைகளைக் கொண்டு சத்தியத்தை உறுதிப்படுத்துவான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளதை நன்கறிந்தவன் ஆவான்.
Şûrâ 42:25
அவன் தனது அடியார்களிடமிருந்து (அவர்கள்) திருந்தி பாவமன்னிப்பு கோருவதை ஏற்றுக் கொள்கிறான்; இன்னும், (திருந்தியவர்களின்) பாவங்களை அவன் முற்றிலுமாக மன்னிக்கிறான்; இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.
Şûrâ 42:26
நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களுக்கு (அவர்களில் சிலர் சிலருக்காக கேட்கின்ற துஆக்களுக்கு) அவன் பதில் அளிக்கிறான் (-அந்த துஆக்களை அங்கீகரிக்கிறான்). இன்னும், தனது அருளிலிருந்து அவர்களுக்கு (வெகுமதிகளை) அதிகப்படுத்துவான். எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு.
Şûrâ 42:27
அல்லாஹ் தனது அடியார்களுக்கு வாழ்வாதாரத்தை முற்றிலும் விசாலமாக்கினால் அவர்கள் பூமியில் எல்லை மீறி விடுவார்கள். என்றாலும், தான் எதை நாடுகிறானோ அதை ஓர் அளவுடன் இறக்குகிறான். நிச்சயமாக அவன் தன் அடியார்களை ஆழ்ந்தறிபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
Şûrâ 42:28
(மழை வராது என்று) அவர்கள் நிராசை அடைந்த பின்னர் அவன்தான் மழையை இறக்குகிறான். இன்னும், தனது அருளை (பூமியில்) பரப்புகிறான். அவன்தான் (உண்மையான) பாதுகாவலன், மகா புகழாளன்.
Şûrâ 42:29
வானங்களும் பூமியும் படைக்கப்பட்டதும் அவ்விரண்டில் உயிரினங்களில் எவற்றை அவன் (படைத்து, பல பகுதிகளில்) பரத்தி இருக்கிறானோ அவையும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான். இன்னும், அவன் நாடும்போது அவர்களை (மறுமையில்) ஒன்று சேர்ப்பதற்கும் அவன் பேராற்றலுடையவன் ஆவான்.
Şûrâ 42:30
சோதனைகளில் எது உங்களுக்கு ஏற்பட்டதோ அது உங்கள் கரங்கள் செய்தவற்றினால்தான் (ஏற்பட்டது). இன்னும் (நீங்கள் செய்த) அதிகமான தவறுகளை அவன் முற்றிலும் மன்னித்து விடுகிறான். (ஆகவே, உங்களுக்கு தண்டனையை இறக்குவதில்லை.)
Şûrâ 42:31
நீங்கள் இந்த பூமியில் (அல்லாஹ்வை பலவீனப்படுத்த முடியாது. அவனது பிடியை விட்டும்) தப்பித்துவிட முடியாது. அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு பாதுகாவலர் எவரும் இல்லை, இன்னும், உதவியாளர் எவரும் இல்லை.
Şûrâ 42:32
இன்னும், மலைகளைப் போன்று கடலில் மிதந்து செல்லக்கூடிய கப்பல்கள் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான்.
Şûrâ 42:33
அவன் நாடினால் காற்றுகளை அமைதியாக்கி விடுவான். அவை (-அந்த கப்பல்கள் முன்னேறிச் செல்லாமல்) அதன் மீதே (-அந்த தண்ணீரின் மீதே) அசையாமல் நிற்கக்கூடியதாக ஆகிவிடும். பெரும் பொறுமையாளர்கள், நன்றி உள்ளவர்கள் எல்லோருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Şûrâ 42:34
அல்லது (பாவங்களில்) அவர்கள் செய்தவற்றின் காரணமாக அவற்றை (-அந்த கப்பல்களை) அவன் அழித்து விடுவான். இன்னும், (நீங்கள் செய்த) அதிகமான தவறுகளை அவன் முற்றிலும் மன்னித்துவிடுகிறான்.
Şûrâ 42:35
நமது வசனங்களில் தர்க்கிப்பவர்களை அவன் நன்கறிவான். தப்பிக்கும் இடம் ஏதும் அவர்களுக்கு இல்லை.
Şûrâ 42:36
ஆக, நீங்கள் (உலக பொருள்களில்) எது கொடுக்கப்பட்டுள்ளீர்களோ அவை எல்லாம் இவ்வுலக வாழ்க்கையின் இன்பமாகும். இன்னும், நம்பிக்கை கொண்டு, தங்கள் இறைவன் மீது நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்திரு)ப்பவர்களுக்கு அல்லாஹ்விடம் (மறுமையில்) எது உள்ளதோ அதுதான் மிகச் சிறந்ததும் மிக நிரந்தரமானதும் ஆகும்.
Şûrâ 42:37
இன்னும், அவர்கள் பெரும் பாவங்களை விட்டும், மானக்கேடான விஷயங்களை விட்டும் விலகி இருப்பார்கள். அவர்கள் கோபப்படும்போது (தங்களை கோபப்படுத்தியவர்களை) மன்னித்து விடுவார்கள்.
Şûrâ 42:38
இன்னும், அவர்கள் தங்கள் இறைவனுக்கு பதில் அளிப்பார்கள். (அவனது அழைப்பை, கட்டளைகளை ஏற்று நடப்பார்கள்.) இன்னும், தொழுகையை நிலை நிறுத்துவார்கள். இன்னும், அவர்களது காரியம் அவர்களுக்கு மத்தியில் ஆலோசிக்கப்படும். இன்னும், அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றில் இருந்து அவர்கள் தர்மம் கொடுப்பார்கள்.
Şûrâ 42:39
இன்னும், அவர்கள் மீது அநியாயம் நிகழ்ந்தால் அவர்கள் (நீதமாக, எல்லை மீறாமல்) பழி வாங்குவார்கள்.
Şûrâ 42:40
தீமையின் தண்டனை அது போன்ற தீமைதான். ஆக, யார் மன்னிப்பாரோ, சமாதானம் செய்வாரோ அவரது கூலி அல்லாஹ்வின் மீது கட்டாயமாக இருக்கிறது. நிச்சயமாக அவன் அநியாயக்காரர்களை நேசிக்கமாட்டான்.
Şûrâ 42:41
யார் தனக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர் பழிவாங்குவாரோ அவர்கள் மீது எவ்வித குற்றமும் இல்லை.
Şûrâ 42:42
குற்றமெல்லாம் மக்கள் மீது (முதலில்) அநியாயம் செய்பவர்கள் மீதும், பூமியில் அநியாயமாக எல்லை மீறுகிறவர்கள் (-கலகம் செய்வதிலும் மக்களுக்கு இன்னல் செய்வதிலும் ஈடுபடுகிறவர்கள்) மீதும்தான். அத்தகையோர், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு.
Şûrâ 42:43
இன்னும், யார் பொறுமையாக இருப்பாரோ, மன்னிப்பாரோ நிச்சயமாக அது மிக வீரமான காரியங்களில் உள்ளதாகும்.
Şûrâ 42:44
யாரை அல்லாஹ் வழிகெடுத்தானோ அவனுக்குப் பிறகு (-அல்லாஹ் அவனை கைவிட்டதற்குப் பிறகு) அவனுக்கு பாதுகாவலர் எவரும் இல்லை. இன்னும், (மறுமையில்) அநியாயக்காரர்கள் தண்டனையைப் பார்க்கும்போது, (உலகத்திற்கு) திரும்புவதற்கு ஏதேனும் வழி உண்டா என்று அவர்கள் கூறுவதை (நபியே) நீர் பார்ப்பீர்!.
Şûrâ 42:45
(நபியே!) அதற்கு முன்பாக அவர்கள் சமர்ப்பிக்கப்படுவதை நீர் காண்பீர், அவர்கள் இழிவினால் தலை குனிந்தவர்களாக மறைவான (திருட்டுப்) பார்வையால் அவர்கள் (நரகத்தை) பார்ப்பார்கள். இன்னும், நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக எவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் மறுமை நாளில் நஷ்டமிழைத்தார்களோ அவர்கள்தான் (உண்மையான) நஷ்டவாளிகள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான (நிரந்தரமான) தண்டனையில் இருப்பார்கள்.”
Şûrâ 42:46
இன்னும், அல்லாஹ்வை அன்றி அவர்களுக்கு உதவுகின்ற பாதுகாவலர்கள் யாரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள். இன்னும், யாரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவ(ர் நேர்வழி பெற அவ)ருக்கு வழிகள் ஏதும் இல்லை.
Şûrâ 42:47
அல்லாஹ்விடமிருந்து ஒரு நாள் வருவதற்கு முன்பாக உங்கள் இறைவனுக்கு (-அவன் அனுப்பிய தூதருக்கு) நீங்கள் பதில் அளியுங்கள்! (இஸ்லாமிற்குள் நுழைந்து விடுங்கள்!) அதை (-அந்த நாளை) அறவே தடுத்துவிட முடியாது. அந்நாளில் (தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கு) உங்களுக்கு ஒதுங்குமிடம் ஏதும் இருக்காது. இன்னும், (உங்களை விட்டும் அந்த தண்டனையை) தடுப்பவர் யாரும் உங்களுக்கு இருக்க மாட்டார். (நீங்கள் செய்த பாவங்களை உங்களால் மறுக்க முடியாது.)
Şûrâ 42:48
அவர்கள் (உம்மையும் உமது மார்க்கத்தையும்) புறக்கணித்தால் (அதைப் பற்றி நபியே! நீர் கவலைப்படாதீர். ஏனெனில்) நாம் உம்மை அவர்கள் மீது கண்காணிப்பவராக அனுப்பவில்லை. (மார்க்கத்தை) எடுத்துரைப்பதைத் தவிர (நிர்ப்பந்திப்பது) உம்மீது கடமை இல்லை. நிச்சயமாக நாம் மனிதர்களுக்கு நம்மிடமிருந்து ஓர் அருளை சுவைக்க வைத்தால் அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்களுக்கு அவர்களின் கரங்கள் முற்படுத்திய (பாவத்)தால் ஒரு தீங்கு ஏற்பட்டால் (அவர்கள் நிராகரித்து விடுகிறார்கள்.) ஆக, நிச்சயமாக மனிதன் மிகப்பெரிய நிராகரிப்பாளனாக இருக்கிறான்.
Şûrâ 42:49
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது. அவன், தான் நாடுவதை படைக்கிறான். அவன், தான் நாடுகிறவர்களுக்கு பெண் பிள்ளைகளை வழங்குகிறான். இன்னும், அவன்தான் நாடுகிறவர்களுக்கு ஆண் பிள்ளைகளை வழங்குகிறான்.
Şûrâ 42:50
அல்லது, அவர்களுக்கு ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் கலந்து கொடுக்கின்றான். இன்னும், தான் நாடுகிறவரை மலடாக ஆக்கிவிடுகிறான். நிச்சயமாக அவன் நன்கறிந்தவன், பேராற்றலுடையவன் ஆவான்.
Şûrâ 42:51
ஒரு மனிதருக்கு - அவரிடம் அல்லாஹ் நேரடியாகப் பேசுவது தகுதியாகாது. என்றாலும், வஹ்யி - அறிவிப்பதன் மூலம் (அவரிடம் பேசுவான்); அல்லது, திரைக்குப் பின்னால் இருந்து (அவரிடம் பேசுவான்); அல்லது, ஒரு வானவ தூதரை (அவரிடம்) அனுப்பி, தனது உத்தரவின் படி (அந்த தூதருக்கு) தான் நாடுவதை வஹ்யி - அறிவித்து பேசுவான். (அப்படி இல்லாமல் அல்லாஹ் யாரிடமும் நேரடியாகப் பேசமாட்டான்). நிச்சயமாக அவன் மிக உயர்ந்தவன், மகா ஞானவான் ஆவான்.
Şûrâ 42:52
இவ்வாறுதான், நாம் நமது கட்டளையினால் (நம்மிடமிருந்து இந்த குர்ஆனை எல்லோருக்கும்) அருளாக (இருக்கும்படி) உமக்கு வஹ்யி மூலம் அறிவித்தோம். வேதம் என்றால் என்ன, ஈமான் என்றால் என்ன என்று நீர் அறிந்திருக்கவில்லை. எனினும், நாம் இ(ந்த வேதத்)தை ஓர் ஒளியாக ஆக்கினோம். இதன் மூலம் நமது அடியார்களில் நாம் நாடுகிறவர்களுக்கு நாம் நேர்வழி காட்டுகிறோம். (நபியே!) நிச்சயமாக நீர் நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டுகிறீர்.
Şûrâ 42:53
அல்லாஹ்வின் பாதையின் பக்கம் (நீர் நேர்வழி காட்டுகிறீர்). வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவையாகும். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பக்கமே காரியங்கள் (எல்லாம்) திரும்புகின்றன.
Zuhruf 43:1
ஹா மீம்.
Zuhruf 43:2
(சொல்லாலும் கருத்தாலும்) தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!
Zuhruf 43:3
நிச்சயமாக நாம் இதை அரபிமொழியில் ஓதப்படுகிற குர்ஆனாக ஆக்கினோம், நீங்கள் சிந்தித்து புரிய வேண்டும் என்பதற்காக.
Zuhruf 43:4
நிச்சயமாக நம்மிடம் (இருக்கின்ற அல்லவ்ஹுல் மஹ்ஃபூள் என்ற) தாய் புத்தகத்தில் பதியப்பட்டுள்ள இ(ந்த வேதமான)து மிக உயர்ந்ததும், மகா ஞானமுடையதும் ஆகும்.
Zuhruf 43:5
ஆக, நீங்கள் எல்லை மீறி குற்றம் புரிகிற மக்களாக இருக்க, உங்களை விட்டும் தண்டனையை அகற்றி (உங்களை நாங்கள் தண்டிக்காமல்) விடுவோமா? (நீங்கள் இந்த குர்ஆனைக் கொண்டு நேர்வழி பெறாமல், எல்லை மீறி குற்றம் புரிகிற மக்களாக இருப்பதால் இந்த குர்ஆனை தொடர்ந்து இறக்குவதை நாம் விட்டுவிடுவோமா?)
Zuhruf 43:6
முன்னோரில் நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பினோம்.
Zuhruf 43:7
அவர்களிடம் நபி எவரும் வருவதில்லை, அவர்கள் அவரை கேலி செய்பவர்களாக இருந்தே தவிர.
Zuhruf 43:8
ஆக, (உம்மை ஏற்க மறுக்கின்ற) இவர்களைவிட வலிமையால் மிக பலமான (அ)வர்களை நாம் அழித்தோம். இன்னும், முன்னோரின் உதாரணம் (-தண்டனை இவர்களின் கண் முன்) சென்றிருக்கிறது.
Zuhruf 43:9
வானங்களையும் பூமியையும் யார் படைத்தான் என்று (நபியே!) நீர் அவர்களிடம் கேட்டால், “மிகைத்தவன், நன்கறிந்தவன் (-அல்லாஹ்) அவற்றைப் படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவார்கள்:
Zuhruf 43:10
அவன் உங்களுக்கு பூமியை விரிப்பாக ஆக்கினான். இன்னும், அதில் உங்களுக்கு பல பாதைகளை ஏற்படுத்தினான், (அவற்றின் மூலம்) நீங்கள் (உங்களுக்குத் தேவையான இடங்களுக்கு) சரியான பாதையில் (இலகுவாக) செல்வதற்காக.
Zuhruf 43:11
இன்னும், அவன் வானத்தில் இருந்து மழையை ஓர் அளவோடு இறக்கினான். ஆக, இறந்து (-காய்ந்து) போன பூமியை நாம் அதன் மூலம் உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறுதான் நீங்கள் (இறந்த பின்னர் பூமியில் இருந்து மீண்டும் நீங்கள் உயிர்ப்பிக்கப்பட்டு) வெளியாக்கப்படுவீர்கள்.
Zuhruf 43:12
இன்னும், அவன் (படைப்புகளில் உள்ள) ஜோடிகள் எல்லாவற்றையும் படைத்தான் (-படைப்புகள் எல்லாவற்றையும் ஆண், பெண் என்று ஜோடி ஜோடியாகப் படைத்தான்). இன்னும், கப்பல்களிலும், கால்நடைகளிலும் நீங்கள் எதில் பயணம் செய்வீர்களோ அதை உங்களுக்காக ஏற்படுத்திக் கொடுத்தான்.
Zuhruf 43:13
அவற்றின் முதுகுகளில் நீங்கள் ஸ்திரமாக அமர்வதற்காகவும்; பிறகு அவற்றின் மீது நீங்கள் ஸ்திரமாக அமரும்போது உங்கள் இறைவனின் அருட்கொடையை நீங்கள் நினைவு கூர்வதற்காகவும்; “இதை எங்களுக்கு வசப்படுத்தி தந்தவன் மகா தூயவன். நாங்கள் இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கவில்லை.”
Zuhruf 43:14
“இன்னும், நிச்சயமாக நாங்கள் (எங்கள் மரணத்திற்குப் பின்) எங்கள் இறைவனின் பக்கம் திரும்பக் கூடியவர்கள் ஆவோம்” என்று நீங்கள் கூறுவதற்காகவும் (அவன் உங்களுக்கு இந்த வாகனங்களை ஏற்படுத்திக் கொடுத்தான்).
Zuhruf 43:15
இன்னும், அவனது அடியார்களில் சிலரை (-வானவர்களை) அவர்கள் அவனுக்கு குழந்தைகளாக ஆக்கிவிட்டனர். நிச்சயமாக மனிதன் மிகத் தெளிவான மகா நன்றி கெட்டவன் ஆவான்.
Zuhruf 43:16
அவன், தான் படைத்தவற்றில் பெண் பிள்ளைகளை (தனக்கு) எடுத்துக் கொண்டானா, உங்களுக்கு ஆண் பிள்ளைகளை தேர்ந்தெடுத்(துக்கொடுத்)தானா?
Zuhruf 43:17
அவர்களில் ஒருவருக்கு - அவர் ரஹ்மானுக்கு எதை தன்மையாக விவரித்தாரோ அதைக் கொண்டு - நற்செய்தி கூறப்பட்டால் அவரது முகம் கருப்பாக மாறிவிடுகிறது. இன்னும், அவர் துக்கப்படுகிறார். (இணைவைக்கின்ற மனிதன் தனக்கு பெண் பிள்ளையை விரும்புவதில்லை. ஆனால், அல்லாஹ்விற்கு பெண் பிள்ளைகள் இருப்பதாக கற்பனை செய்கிறான்.)
Zuhruf 43:18
யார் ஆபரணங்களில் (அவை அணிவிக்கப்பட்டு) வளர்க்கப்படுகிறாரோ, இன்னும் அவர் வாதிப்பதில் தெளிவற்றவராக இருக்கிறாரோ அவரையா அல்லாஹ் தனக்கு பிள்ளைகளாக எடுத்துக்கொள்வான்? (பலவீனமான படைப்பாகிய பெண்களையா அல்லாஹ்விற்கு பிள்ளைகள் என்று கூறுகிறீர்கள்?)
Zuhruf 43:19
இன்னும், ரஹ்மானின் அடியார்களாகிய வானவர்களை (அல்லாஹ்வின்) பெண்(பிள்ளை)களாக இவர்கள் ஆக்கிவிட்டனர். அ(ந்த வான)வர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் (அங்கு பிரசன்னமாகி இருந்து) பார்த்தார்களா? (வானவர்களை பெண்கள் என்று கூறிய) இவர்களின் (இந்த) சாட்சி பதியப்படும். இன்னும், (அது பற்றி மறுமையில்) இவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
Zuhruf 43:20
இவர்கள் கூறுகிறார்கள்: “ரஹ்மான் நாடியிருந்தால் நாம் அவர்களை (-அந்த சிலைகளை) வணங்கியிருக்க மாட்டோம்.” இவர்களுக்கு இதைப் பற்றி எந்த அறிவும் இல்லை. இவர்கள் கற்பனையாக பேசுகிறார்களே தவிர (உண்மை பேசுபவர்கள்) இல்லை.
Zuhruf 43:21
(இவர்களின் கூற்றுகளுக்கு ஆதாரமாக) இதற்கு முன்னர் நாம் ஒரு வேதத்தை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோமா? ஆக, அவர்கள் அதை உறுதியாக பிடித்திருக்கிறார்களா? (அதன்படி செயல்படுகிறார்களா? அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லாமல் இருக்க எதன் அடிப்படையில் இவர்கள் பேசுகிறார்கள்?)
Zuhruf 43:22
மாறாக, அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாம் எங்கள் மூதாதைகளை ஒரு கொள்கையில் கண்டோம். நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகள் மீதே வழி நடப்போம். (உமது மார்க்கத்தை நாங்கள் பின்பற்ற மாட்டோம்.)”
Zuhruf 43:23
இவ்வாறு, உமக்கு முன்னர் நாம் எச்சரிப்பாளர் எவரையும் ஓர் ஊரில் அனுப்பியபோதெல்லாம், அந்த ஊரில் உள்ள (செல்வந்தர்களாகிய) சுகவாசிகள் - “நிச்சயமாக நாம் எங்கள் மூதாதைகளை ஒரு கொள்கையில் கண்டோம். நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றி நடப்போம். (உமது மார்க்கத்தை நாங்கள் பின்பற்ற மாட்டோம்.)” என்றுதான் கூறி இருக்கிறார்கள். (ஆக, நபியே! முன்சென்ற மக்கள் தங்களது தூதர்களுக்கு கூறியதைத்தான் உமது மக்களும் கூறுகிறார்கள்.)
Zuhruf 43:24
(நமது தூதர்) கூறினார்: “நீங்கள் உங்கள் மூதாதைகளை எதன்மீது கண்டீர்களோ அதைவிட மிகச் சிறந்த நேர்வழியை நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா (நீங்கள் என்னைப் பின்பற்ற மறுப்பீர்கள்)?” அதற்கு அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ (அது எதுவாக இருந்தாலும் சரி) அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிப்போம்.”
Zuhruf 43:25
ஆகவே, அவர்களிடம் நாம் பழிவாங்கினோம். ஆக, பொய்ப்பித்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று (நபியே!) நீர் கவனிப்பீராக!
Zuhruf 43:26
இன்னும், (நபியே!) தனது தந்தைக்கும் தனது மக்களுக்கும் இப்ராஹீம் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக: “நீங்கள் வணங்குகின்ற அனைத்தையும் விட்டும் நிச்சயமாக நான் முற்றிலும் நீங்கியவன்,”
Zuhruf 43:27
“என்னைப் படைத்த (இறை)வனைத் தவிர. (அவனை மட்டுமே நான் வணங்குவேன்.) ஆக, நிச்சயமாக அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.”
Zuhruf 43:28
இன்னும், இதை (-அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் இல்லை என்ற தூய கொள்கையை) தனது சந்ததிகளில் நீடித்து நிற்கின்ற ஒரு (கொள்கை) வாக்கியமாக அவர் ஆக்கினார், அவர்கள் (எல்லா தவறான கொள்கையிலிருந்து விலகி அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவதன் பக்கம்) திரும்ப வேண்டும் என்பதற்காக.
Zuhruf 43:29
(இவர்களை நாம் உடனே அழிக்கவில்லை.) மாறாக, இவர்களுக்கும் இவர்களின் மூதாதைகளுக்கும் நாம் சுகமான வாழ்க்கையைக் கொடுத்தோம். இறுதியாக, உண்மையான வேதம் அவர்களிடம் வந்தது. இன்னும், தெளிவான தூதரும் அவர்களிடம் வந்தார்.
Zuhruf 43:30
இன்னும், அவர்களிடம் உண்மையான வேதம் (அல்குர்ஆன்) வந்தபோது, “இது சூனியம்” என்றும் “நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிக்கக் கூடியவர்கள்” என்றும் கூறினார்கள்.
Zuhruf 43:31
இன்னும், “இந்த குர்ஆன் (மக்கா இன்னும் தாயிஃப் ஆகிய) இந்த இரண்டு ஊர்களில் உள்ள (வசதி படைத்த) ஒரு பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்க வேண்டாமா!” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
Zuhruf 43:32
அவர்கள் உமது இறைவனின் அருளை (தமது விருப்பப்படி) பங்கு வைக்கின்றனரா? நாம்தான் அவர்களுக்கு மத்தியில் அவர்களது வாழ்வாதாரத்தை இவ்வுலக வாழ்க்கையில் பங்குவைத்தோம். அவர்களில் சிலரை சிலருக்கு மேலாக (செல்வத்திலும் பதவியிலும்) தகுதிகளால் உயர்த்தினோம். காரணம், அவர்களில் சிலர் சிலரை (தங்களுக்கு) பணியாளராக எடுத்துக் கொள்வதற்காக. (இப்படி நாம் ஆக்கியதால் ஒருவர் மூலமாக ஒருவர் பயன் பெறுகிறார்.) உமது இறைவனின் (சொர்க்கம் என்ற மறுமை) அருள்தான் (இவ்வுலக செல்வங்களில்) அவர்கள் எதை சேகரிக்கிறார்களோ அதைவிட மிகச் சிறந்ததாகும்.
Zuhruf 43:33
மக்கள் எல்லாம் (குஃப்ர் - நிராகரிப்பில் மாறிவிடுவார்கள், நிராகரிக்கின்ற) ஒரே ஒரு சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்று இல்லையெனில் ரஹ்மானை நிராகரிப்பவர்களுக்கு - அவர்களின் வீடுகளுக்கு வெள்ளியினால் ஆன முகடுகளையும் ஏணிகளையும் நாம் ஆக்கியிருப்போம். அவற்றின் மீது (-அந்த ஏணிகளின் மீது) அவர்கள் (தங்கள் வீட்டு மாடிகளுக்கு) ஏ(றி மக்கள் முன் தோன்)றுவார்கள்.
Zuhruf 43:34
இன்னும். அவர்களின் வீடுகளுக்கு வெள்ளியினால் ஆன கதவுகளையும் அவற்றின் மீது அவர்கள் சாய்ந்து படுக்கும்படியான கட்டில்களையும் நாம் ஆக்கியிருப்போம்.
Zuhruf 43:35
இன்னும், (வெள்ளி மட்டுமல்ல,) தங்கத்தையும் (நாம் அவர்களுக்கு சொந்தமாக்கி இருப்போம்.) இவை எல்லாம் உலக வாழ்க்கையின் இன்பங்களே தவிர வேறு இல்லை. உமது இறைவனிடம் உள்ள மறுமை(யின் சொர்க்க வாழ்க்கை)யோ இறையச்சமுள்ளவர்களுக்கு இருக்கிறது.
Zuhruf 43:36
யார் ரஹ்மானை நினைவு கூர்வதை(யும் அவனுடைய வேதத்தையும்) புறக்கணிப்பாரோ (-அவனது அத்தாட்சிகளைப் பார்த்து நம்பிக்கை கொள்ள மறுப்பாரோ) அவருக்கு ஒரு ஷைத்தானை நாம் சாட்டிவிடுவோம். ஆக, அவன் அவருக்கு (இணைபிரியா) நண்பனாக ஆகிவிடுவான்.
Zuhruf 43:37
நிச்சயமாக இவர்கள் (-இந்த ஷைத்தான்கள்) அவர்களை (-இணைவைப்பவர்களை நேரான) பாதையில் இருந்து தடுக்கிறார்கள். இன்னும், அ(ந்த இணைவைப்ப)வர்கள் நிச்சயமாக தாங்கள் நேர்வழி நடப்பவர்கள்தான் என்று எண்ணுகிறார்கள்.
Zuhruf 43:38
இறுதியாக, (-ரஹ்மானின் நினைவை புறக்கணித்து வாழ்ந்த) அவன் நம்மிடம் வரும்போது, (தன்னை வழிகெடுத்த ஷைத்தானை நோக்கி) எனக்கு மத்தியிலும் உனக்கு மத்தியிலும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் இருக்க வேண்டுமே! என்று கூறுவான். அவன் (-ஷைத்தான்) மிகக் கெட்ட நண்பன் ஆவான்.
Zuhruf 43:39
நீங்கள் (இறைவனுக்கு இணைவைத்து) அநியாயம் செய்த காரணத்தால் நிச்சயமாக (வழிகெடுத்த) நீங்கள் (இன்னும், உங்களை பின்பற்றி வழிகெட்டவர்கள் எல்லோருமாக) தண்டனையில் இணைந்திருப்பது இன்றைய தினம் உங்களுக்கு அறவே பலனளிக்காது. (நரக தண்டனை உங்களுக்கு இடையில் பங்கிட்டுக் கொடுக்கப்படாமல், ஒவ்வொருவருக்கும் முழுமையான தண்டனை கொடுக்கப்படும்.)
Zuhruf 43:40
ஆக, (அல்லாஹ்வின் வேத ஆதாரங்களை செவி ஏற்க முடியாமல் யாரை அல்லாஹ் செவிடர்களாகவும் அவனது அத்தாட்சிகளை பார்க்கமுடியாமல் யாரை அல்லாஹ் குருடர்களாகவும் ஆக்கிவிட்டானோ) அந்த செவிடர்களை நீர் செவி ஏற்க வைக்க முடியுமா? அல்லது அந்த குருடர்களையும் தெளிவான வழிகேட்டில் இருப்பவர்களையும் நீர் நேர்வழி செலுத்திட முடியுமா?
Zuhruf 43:41
ஆகவே, (நபியே!) ஒன்று நிச்சயமாக உம்மை நாம் மரணிக்கச் செய்வோம். பிறகு, நிச்சயமாக நாம் அவர்களிடம் பழிவாங்குவோம்.
Zuhruf 43:42
அல்லது, நாம் அவர்களுக்கு எச்சரித்ததை (-தண்டனையை) நாம் உமக்கு (உமது வாழ்நாளிலேயே) காண்பிப்போம். ஆக, நிச்சயமாக நாம் அவர்கள் மீது முழு ஆற்றல் உள்ளவர்கள் ஆவோம்!
Zuhruf 43:43
ஆகவே, (நபியே!) உமக்கு வஹ்யி அறிவிக்கப்பட்ட(இந்த வேதத்)தை உறுதியாக பற்றிப்பிடிப்பீராக! நிச்சயமாக நீர் நேரான பாதையில் இருக்கிறீர்.
Zuhruf 43:44
நிச்சயமாக இ(ந்த வேதமான)து உமக்கும் உமது மக்களுக்கும் ஒரு (பெரிய) சிறப்பாகும். (இதன் படி நீங்கள் அமல் செய்தது பற்றி) உங்களிடம் விரைவில் விசாரிக்கப்படும்.
Zuhruf 43:45
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நமது தூதர்க(ளின் சமுதாயத்தை சேர்ந்த உண்மை நம்பிக்கையாளர்க)ளை நீர் விசாரிப்பீராக! “ரஹ்மானை அன்றி வணங்கப்படுகின்ற (வேறு) தெய்வங்களை நாம் (அவர்களுக்கு) ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோமா?” என்று.
Zuhruf 43:46
திட்டவட்டமாக நாம் மூஸாவை ஃபிர்அவ்ன் இன்னும் அவனது பிரமுகர்களிடம் நமது அத்தாட்சிகளுடன் அனுப்பினோம். ஆக, (அவர்களை நோக்கி) அவர் கூறினார்: “நிச்சயமாக நான் (உங்களுக்கு அனுப்பப்பட்ட) அகிலங்களின் இறைவனுடைய தூதர் ஆவேன்.”
Zuhruf 43:47
ஆக, அவர்களிடம் அவர் நமது அத்தாட்சிகளுடன் வந்தபோது, அப்போது அவர்கள் அவற்றைப் பார்த்து (கேலியாக) சிரித்தார்கள்.
Zuhruf 43:48
அவர்களுக்கு நாம் ஓர் அத்தாட்சியைக் காண்பிக்க மாட்டோம், அது அதற்கு முன்பு வந்த அத்தாட்சியை விட பெரியதாக இருந்தே தவிர. இன்னும், நாம் அவர்களை தண்டனையால் பிடித்தோம், அவர்கள் (நம் பக்கம்) திரும்புவதற்காக.
Zuhruf 43:49
அவர்கள் கூறினார்கள்: “ஓ மந்திரவாதியே! (-ஓ அறிஞரே! உமது இறைவன்) உம்மிடம் செய்த உடன்படிக்கையை (-கேட்டு; அல்லது, இந்த தண்டனையை நீக்குமாறு) உமது இறைவனிடம் எங்களுக்காக நீர் பிரார்த்திப்பீராக! நிச்சயமாக நாங்கள் நேர்வழி பெறுவோம்.”
Zuhruf 43:50
ஆக, அவர்களை விட்டும் நாம் தண்டனையை அகற்றும்போது அப்போது அவர்கள் (மூஸாவிற்குக் கொடுத்த வாக்கை) முறித்து விடுகிறார்கள்.
Zuhruf 43:51
இன்னும், ஃபிர்அவ்ன் தனது மக்களை அழைத்தான்: “என் மக்களே! எகிப்துடைய ஆட்சி எனக்கு சொந்தமானதாக இல்லையா? இந்த ஆறுகள் (என்னைச் சுற்றி) எனக்கு முன்னால் ஓடுகின்றன. ஆக, நீங்கள் (இவற்றை) உற்று நோக்கவில்லையா?” என்று கூறினான்.
Zuhruf 43:52
இந்த பலவீனமானவரை விட, தெளிவாக பேசமுடியாதவரை விட நான் சிறந்தவன்தானே?
Zuhruf 43:53
ஆக, அவர் மீது தங்கத்தினால் ஆன காப்புகள் அணிவிக்கப்பட வேண்டாமா? அல்லது, வானவர்கள் அவருடன் சேர்ந்தவர்களாக (நம்மிடம்) வர வேண்டாமா!
Zuhruf 43:54
ஆக, அவன் தனது மக்களை (மிகவும்) அற்பமாகக் கருதினான். ஆக, அவர்கள் அவனுக்கு கீழ்ப்படிந்தனர். நிச்சயமாக அவர்கள் பாவிகளான மக்களாக இருந்தனர்.
Zuhruf 43:55
ஆக, அவர்கள் நம்மை கோபமூட்டவே நாம் அவர்களிடம் பழிவாங்கினோம். ஆகவே, அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.
Zuhruf 43:56
ஆக, அவர்களை (நிராகரிப்பாளர்களுக்கு) முன்னோடிகளாகவும் மற்றவர்களுக்கு படிப்பினையாகவும் நாம் ஆக்கினோம்.
Zuhruf 43:57
மர்யமின் மகன் ஓர் உதாரணமாக விவரிக்கப்பட்டபோது, அப்போது உமது மக்கள் அதன் காரணமாக பதறிப்போய் கூச்சல் போடுகிறார்கள். (கிறித்தவர்கள் ஈஸாவை வணங்குவது போன்று முஹம்மதை நாம் வணங்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார் போலும் என்று பேச ஆரம்பித்தனர்.)
Zuhruf 43:58
அவர்கள் கூறினார்கள்: “எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவர் (முஹம்மத்) சிறந்தவரா? (எங்கள் கடவுள்களே சிறந்தவை. எனவே, நாங்கள் அவற்றையே வணங்குவோம்.)” தர்க்கம் செய்வதற்காகவே தவிர அவரை (-ஈஸாவை) அவர்கள் உமக்கு உதாரணமாக பேசவில்லை. மாறாக, அவர்கள் (எப்போதுமே) வாக்குவாதம் செய்யக்கூடிய மக்கள் ஆவர்.
Zuhruf 43:59
(ஈஸா) அவர்மீது நாம் அருள் புரிந்த ஓர் அடியாராகவே தவிர அவர் (கடவுளோ, கடவுளின் மகனோ இல்லை.) இன்னும், நாம் அவரை இஸ்ரவேலர்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம்.
Zuhruf 43:60
இன்னும், நாம் நாடினால் (உங்களை அழித்துவிட்டு) உங்களுக்குப் பதிலாக வானவர்களை இந்த பூமியில் (ஒரு தலைமுறைக்கு பின்னர் ஒரு தலைமுறையாக) வசிப்பவர்களாக ஆக்கியிருப்போம்.
Zuhruf 43:61
(நபியே! அவர்களை நோக்கி கூறுவீராக!) “நிச்சயமாக அவர் (-ஈஸா) மறுமையின் அடையாளம் ஆவார். ஆகவே, அ(ந்த மறுமை நிகழ்வ)தில் நீங்கள் அறவே சந்தேகிக்காதீர்கள். இன்னும், என்னை பின்பற்றுங்கள்! இது, நேரான பாதையாகும்.”
Zuhruf 43:62
“இன்னும், ஷைத்தான் (இந்த நேரான பாதையை விட்டு) உங்களை தடுத்துவிட வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரி ஆவான்.”
Zuhruf 43:63
தெளிவான அத்தாட்சிகளுடன் ஈஸா வந்தபோது அவர் கூறினார்: “திட்டமாக நான் உங்களிடம் ஞான(மிகுந்த வேத)த்தை கொண்டுவந்துள்ளேன். இன்னும், நீங்கள் எதில் கருத்து வேற்றுமை கொள்கிறீர்களோ அதில் (சரியான) சிலவற்றை உங்களுக்கு விவரிப்பதற்காகவும் வந்துள்ளேன். ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்!”
Zuhruf 43:64
“நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையே வணங்குங்கள்! இது, நேரான பாதையாகும்.”
Zuhruf 43:65
ஆக, (வழிகெட்ட) பிரிவினர்கள் தங்களுக்கு மத்தியில் (ஈஸாவின் விஷயத்தில்) தர்க்கித்தனர். ஆக, மிகவும் வலி தரக்கூடிய நாளுடைய தண்டனையினால் அநியாயக்காரர்களுக்கு நாசம் உண்டாகட்டும்.
Zuhruf 43:66
அவர்கள் உணராமல் இருக்கின்ற நிலையில் மறுமை அவர்களிடம் திடீரென்று வருவதைத் தவிர அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?
Zuhruf 43:67
இறையச்சமுள்ளவர்களைத் தவிர நண்பர்கள் எல்லாம் அந்நாளில் அவர்களில் சிலர், சிலருக்கு எதிரிகளாக இருப்பார்கள்.
Zuhruf 43:68
(இறையச்சமுள்ள) என் அடியார்களே! இன்று உங்களுக்கு பயமில்லை. இன்னும் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்.
Zuhruf 43:69
(என் அடியார்கள்) எத்தகையோர் என்றால் அவர்கள் நமது வசனங்களை நம்பிக்கை கொண்டனர். இன்னும், அவர்கள் (நமக்கு முற்றிலும் பணிந்து நடக்கின்ற) முஸ்லிம்களாக இருந்தார்கள்.
Zuhruf 43:70
நீங்களும் உங்கள் மனைவிகளும் (ஈமான் கொண்ட உங்களைப் போன்றவர்கள் எல்லோரும்) சொர்க்கத்தில் நுழையுங்கள். (அதில்) நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்!
Zuhruf 43:71
தங்கத்தினால் ஆன தட்டுகளுடனும், குவளைகளுடனும் அவர்களை சுற்றி வரப்படும். இன்னும், அதில் (அவர்களது) மனங்கள் விரும்புகின்றவையும் கண்கள் இன்புறுகின்றவையும் அவர்களுக்கு உண்டு. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பீர்கள்.
Zuhruf 43:72
இதுதான், நீங்கள் செய்துகொண்டிருந்த நன்மைகளின் காரணமாக உங்களுக்கு சொந்தமாக்கி வைக்கப்பட்ட சொர்க்கமாகும்.
Zuhruf 43:73
உங்களுக்கு அதில் அதிகமான (-வகை வகையான) பழங்கள் உண்டு. அவற்றில் இருந்து நீங்கள் (மனமாற) உண்பீர்கள்.
Zuhruf 43:74
நிச்சயமாக குற்றவாளிகள் நரகத்தின் தண்டனையில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
Zuhruf 43:75
அவர்களை விட்டும் தண்டனை குறைக்கப்படாது. இன்னும், அவர்கள் அ(ந்த தண்டனைகள் குறைக்கப்படும் என்ப)தில் நம்பிக்கை இழந்திருப்பார்கள்.
Zuhruf 43:76
நாம் அவர்களுக்கு அநியாயம் செய்யவில்லை. எனினும், அவர்கள்தான் முற்றிலும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.
Zuhruf 43:77
இன்னும், “மாலிக்கே! உமது இறைவன் எங்களை அழித்துவிடட்டும்!” என்று கூறி அவர்கள் (நரகத்தின் காவலாளியான மாலிக்கை) அழைப்பார்கள். அவர் (அப்போது உடனே பதில் தராமல், ஆயிரம் ஆண்டுகள் கழித்து பதில்) கூறுவார்: “நீங்கள் (இதில் நிரந்தரமாக) தங்குவீர்கள்! (உங்களுக்கு இங்கு மரணமில்லை)”
Zuhruf 43:78
திட்டவட்டமாக நாம் உங்களிடம் உண்மையைக் கொண்டு வந்தோம். என்றாலும், உங்களில் அதிகமானவர்கள் இந்த உண்மையை வெறுக்கிறீர்கள்.
Zuhruf 43:79
(இந்த உண்மைக்கு எதிராக) ஒரு காரியத்தை அவர்கள் முடிவு செய்து விட்டார்களா? நிச்சயமாக நாங்கள்தான் (அவர்களை இழிவுபடுத்தும் காரியத்தை) முடிவு செய்யப்போகிறோம்.
Zuhruf 43:80
நாம் அவர்களின் இரகசிய பேச்சையும் அவர்கள் கூடி (ஒன்றாக)ப் பேசுவதையும் செவியுற மாட்டோம் என்று அவர்கள் எண்ணுகிறார்களா? ஏன் இல்லை, நமது (வானவத்) தூதர்கள் அவர்களிடம் இருந்தவர்களாக (அவர்கள் தனிமையில்; அல்லது, சபையில் பேசுகின்ற அனைத்தையும்) பதிவு செய்கிறார்கள்.
Zuhruf 43:81
(நபியே!) கூறுவீராக! “ரஹ்மான் – பேரருளாளனாகிய அல்லாஹ்விற்கு குழந்தை இருக்குமேயானால் (அதை) வணங்குபவர்களில் முதலாமவனாக நான் இருந்திருப்பேன்.”
Zuhruf 43:82
வானங்கள் இன்னும் பூமியின் அதிபதி, அர்ஷுடைய அதிபதி(யாகிய அவன்) அவர்கள் வர்ணிக்கின்ற (இந்த பொய்யான) வர்ணிப்புகளை விட்டும் மிகப் பரிசுத்தமானவன்.
Zuhruf 43:83
ஆகவே, (நபியே!) அவர்களை விடுங்கள்! அவர்கள் (தங்கள் பொய்களில்) மூழ்கட்டும், (தங்கள் உலக வாழ்க்கையில்) விளையாடட்டும்! இறுதியாக, அவர்கள் எச்சரிக்கப்படுகின்ற அவர்களது (தண்டனையின்) நாளை அவர்கள் சந்திப்பார்கள்.
Zuhruf 43:84
அவன் வானத்திலும் வணங்கப்படும் இறைவனாக, பூமியிலும் வணங்கப்படும் இறைவனாக இருக்கிறான். அவன்தான் மகா ஞானவான், நன்கறிந்தவன் ஆவான்.
Zuhruf 43:85
வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் ஆட்சி எவனுக்கு உரியதோ அ(ந்த இறை)வன் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்தானவன் ஆவான். இன்னும், அவனிடமே மறுமையின் அறிவு இருக்கிறது. இன்னும், அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Zuhruf 43:86
அவனை அன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் (அல்லாஹ்விடம் யாருக்கும்) சிபாரிசு செய்வதற்கு உரிமை பெற மாட்டார்கள். ஆனால், எவர்கள் (அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன் என்ற) உண்மைக்கு - அவர்கள் (அதை) நன்கு அறிந்தவர்களாக - சாட்சி கூறினார்களோ (-அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு எதையும் இணைவைக்காமல், சிபாரிசை அல்லாஹ்விடம் மட்டும் எதிர்பார்த்து இருந்தார்களோ) அவர்களுக்குத்தான் (வானவர்களும் நல்லவர்களும் அல்லாஹ்வின் அனுமதிகொண்டு) சிபாரிசு செய்வார்கள். (அவர்களை வணங்கியவர்களுக்கு அல்ல.)
Zuhruf 43:87
அவர்களை யார் படைத்தான் என்று நீர் அவர்களிடம் கேட்டால், நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ்” என்று. (அப்படி இருக்க) அவர்கள் (அவனை வணங்குவதில் இருந்து) அவர்கள் எப்படி திருப்பப்படுகிறார்கள்!
Zuhruf 43:88
இன்னும், “என் இறைவா! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளாத மக்கள் ஆவார்கள்” என்ற அவருடைய (-தூதருடைய) கூற்றின் அறிவும் அவனிடம்தான் இருக்கிறது.
Zuhruf 43:89
ஆகவே, (நபியே!) அவர்களை புறக்கணிப்பீராக! இன்னும், (அவர்களுக்கு) ஸலாம் கூறிவிடுவீராக! ஆக, அவர்கள் விரைவில் (அவர்களின் தண்டனையை) அறிவார்கள்.
Duhan 44:1
ஹா மீம்.
Duhan 44:2
தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!
Duhan 44:3
நிச்சயமாக நாம் அபிவிருத்தி செய்யப்பட்ட (அதிக நன்மைகளுடைய) ஓர் இரவில் இதை இறக்கினோம். நிச்சயமாக நாம் அச்சமூட்டி எச்சரிப்பவர்களாக இருந்தோம்.
Duhan 44:4
இதில்தான் ஞானமிக்க எல்லாக் காரியங்களும் முடிவு செய்யப்படுகின்றன,
Duhan 44:5
நம்மிடமிருந்து வருகின்ற கட்டளையின்படி. நிச்சயமாக நாம் (அவரை) தூதராக அனுப்பக் கூடியவர்களாகவே இருந்தோம்,
Duhan 44:6
(அவர்) உமது இறைவனின் ஓர் அருளாக இருக்கவேண்டும் என்பதற்காக. நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
Duhan 44:7
வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் அதிபதி(யிடமிருந்து அவர் அருளாக அனுப்பப்பட்டு இருக்கிறார்). நீங்கள் (உண்மைகளை) உறுதியாக நம்பக் கூடியவர்களாக இருந்தால் (இதை உறுதியாக நம்பிக்கை கொள்ளுங்கள்)!
Duhan 44:8
அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்க வைக்கிறான்; அவன்தான் உங்கள் இறைவனும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவனும் ஆவான்.
Duhan 44:9
மாறாக, அவர்கள் (இந்த வேதத்தை நம்பிக்கை கொள்ளாமல்) சந்தேகத்தில் இருக்கிறார்கள்; (வீண் கேளிக்கைகளில்) விளையாடுகிறார்கள்.
Duhan 44:10
ஆக, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வருகின்ற நாளை எதிர்பார்ப்பீராக!
Duhan 44:11
அது மக்களை சூழ்ந்துகொள்ளும். இது துன்புறுத்தும் தண்டனையாகும்.
Duhan 44:12
“எங்கள் இறைவா! எங்களை விட்டு தண்டனையை நீக்கி விடுவாயாக! நிச்சயமாக நாங்கள் (உன்னை நம்பிக்கை கொண்ட) நம்பிக்கையாளர்கள் ஆவோம்” (என்று அழுது பிரலாபிப்பார்கள்).
Duhan 44:13
(தண்டனை வந்த பின்னர்) நல்லறிவு பெறுவது அவர்களுக்கு எப்படி பலன் தரும்? திட்டமாக அவர்களிடம் தெளிவான ஒரு தூதர் வந்தார்.
Duhan 44:14
பிறகு, அவர்கள் அவரை விட்டு விலகி சென்று விட்டனர். இன்னும், (பிற மனிதர்களால் இந்த வேதத்தை) கற்பிக்கப்பட்டவர், பைத்தியக்காரர் என்று (அவரைப் பற்றி) கூறினார்கள்.
Duhan 44:15
நிச்சயமாக நாம் இந்த தண்டனையை கொஞ்சம் நீக்குவோம். (ஆனால்,) நிச்சயமாக நீங்கள் (உங்கள் வழிகேட்டின் பக்கமே) திரும்புவீர்கள்.
Duhan 44:16
பெரிய தாக்குதலாக (அவர்களை) நாம் தாக்குகின்ற நாளில் (அவர்களிடம்) நிச்சயமாக நாம் பழி வாங்குவோம்.
Duhan 44:17
இவர்களுக்கு முன்னர் நாம் ஃபிர்அவ்னுடைய மக்களை திட்டவட்டமாக சோதித்தோம். இன்னும், அவர்களிடம் கண்ணியமான ஒரு தூதர் வந்தார்.
Duhan 44:18
(அவர் கூறினார்:) “நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்! நிச்சயமாக நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்.”
Duhan 44:19
“இன்னும், நிச்சயமாக அல்லாஹ்விற்கு முன் பெருமை அடிக்காதீர்கள்! (அவனது அடியார்கள் மீது அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்.) நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வருவேன்.”
Duhan 44:20
“இன்னும், நிச்சயமாக நான் எனது இறைவனிடம்; இன்னும், உங்கள் இறைவனிடம் நீங்கள் என்னைக் கொல்வதில் இருந்து பாதுகாவல் தேடினேன்.”
Duhan 44:21
“நீங்கள் என்னை நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் என்னை விட்டு விலகி சென்று விடுங்கள்.”
Duhan 44:22
ஆக, அவர் தனது இறைவனை அழைத்தார்: “நிச்சயமாக இவர்கள் (உனக்கு எதிராக) குற்றம் செய்கின்ற மக்கள் ஆவார்கள்.”
Duhan 44:23
(இறைவன் கூறினான்:) “ஆக, என் அடியார்களை இரவில் நீர் அழைத்துச் செல்வீராக. நிச்சயமாக நீங்கள் (உங்கள் எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள்.”
Duhan 44:24
இன்னும், கடலை (அது) அமைதியாக (இருக்கின்ற நிலையில் அப்படியே) விட்டுவிடுங்கள்! நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுகின்ற ராணுவம் ஆவார்கள்.
Duhan 44:25
அவர்கள் எத்தனையோ தோட்டங்களையும் ஊற்றுகளையும் விட்டுச்சென்றார்கள்.
Duhan 44:26
இன்னும், விவசாய நிலங்களையும் கண்ணியமான இடங்களையும் (-மாட மாளிகைகளையும் விட்டுச்சென்றார்கள்.)
Duhan 44:27
இன்னும், அவர்கள் சுகமாக அனுபவித்துக் கொண்டிருந்த வசதிகளையும் விட்டுச்சென்றார்கள்.
Duhan 44:28
இப்படித்தான் (உமது இறைவனின் தண்டனை வந்தால் பாவிகளின் நிலை இருக்கும்). இன்னும், இவற்றை (எல்லாம்) வேறு மக்களுக்கு நாம் சொந்தமாக்கினோம்.
Duhan 44:29
ஆக, அவர்கள் மீது வானமும் பூமியும் அழவில்லை. அவர்கள் (பாவமன்னிப்பு தேடுவதற்கு) அவகாசம் கொடுக்கப்படுபவர்களாகவும் இருக்கவில்லை.
Duhan 44:30
இழிவுபடுத்தும் தண்டனையிலிருந்து இஸ்ரவேலர்களை திட்டவட்டமாக நாம் காப்பாற்றினோம்.
Duhan 44:31
ஃபிர்அவ்னிடமிருந்து (அவர்களை பாதுகாத்தோம்). நிச்சயமாக அவன் பெருமை அடிப்பவனாக (-அழிச்சாட்டியம் செய்பவனாக), வரம்புமீறிகளில் ஒருவனாக இருந்தான்.
Duhan 44:32
இன்னும், (-இஸ்ரவேலர்களின் தகுதியை) அறிந்தே (அக்கால) மக்களை விட அவர்களை திட்டவட்டமாக நாம் தேர்ந்தெடுத்தோம்.
Duhan 44:33
இன்னும், தெளிவான (பல வகையான) சோதனைகள் உள்ள அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் கொடுத்தோம்.
Duhan 44:34
(நபியே!) நிச்சயமாக (உமது மக்களாகிய) இவர்கள் கூறுகிறார்கள்:
Duhan 44:35
“இது நமது முதல் மரணமாகவே தவிர இல்லை. இன்னும், நாங்கள் (மரணித்த பின்னர் மீண்டும் உயிர்கொடுத்து) எழுப்பப்படுபவர்களாக இல்லை.”
Duhan 44:36
“ஆகவே, (முஹம்மதே!) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் மூதாதைகளை (உயிர்ப்பித்து)க் கொண்டு வாருங்கள்!”
Duhan 44:37
இவர்கள் சிறந்தவர்களா? அல்லது, துப்பஃ உடைய மக்களா? இன்னும், இவர்களுக்கு முன்னுள்ளவர்களா? அவர்களை (எல்லாம்) நாம் அழித்துவிட்டோம். நிச்சயமாக அவர்கள் குற்றவாளிகளாக இருந்தனர்.
Duhan 44:38
இன்னும், வானங்களையும் பூமியையும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் விளையாடுபவர்களாக நாம் படைக்கவில்லை.
Duhan 44:39
நாம் அவ்விரண்டையும் உண்மையான காரணத்திற்கே தவிர படைக்கவில்லை. என்றாலும், அவர்களில் அதிகமானவர்கள் (இதை) அறியமாட்டார்கள்.
Duhan 44:40
நிச்சயமாக தீர்ப்பு நாள் இவர்கள் அனைவரின் (தண்டனைக்காக) நேரம் குறிக்கப்பட்ட நாளாகும்.
Duhan 44:41
அந்நாளில் நண்பன், நண்பனை விட்டு (உறவுக்காரன் உறவுக்காரனை விட்டு தண்டனையில்) எதையும் தடுக்க மாட்டான். இன்னும், அவர்கள் (ஆதரவு வைத்த யாராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.
Duhan 44:42
அல்லாஹ் எவர்கள் மீது கருணை புரிந்தானோ அவர்களைத் தவிர. (மற்றவர் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது). நிச்சயமாக அவன்தான் மிகைத்தவன், மகா கருணையாளன்.
Duhan 44:43
நிச்சயமாக ஸக்கூம் மரம்
Duhan 44:44
பாவிகளின் உணவாகும்.
Duhan 44:45
உருக்கப்பட்ட செம்பைப் போல், வயிறுகளில் அது கொதித்துக் கொண்டிருக்கும்,
Duhan 44:46
கடுமையாக கொதிக்கின்ற தண்ணீர் கொதிப்பதைப் போல்.
Duhan 44:47
அவனைப் பிடியுங்கள்! ஆக, நரகத்தின் நடுவில் அவனை இழுத்து வாருங்கள்!
Duhan 44:48
பிறகு, அவனது தலைக்கு மேல் கொதிக்கின்ற நீரை ஊற்றுங்கள். (அதன் தண்டனை அவனை விட்டு பிரியாமல் இருக்கும்.)
Duhan 44:49
நீ (இந்த தண்டனைகளை) சுவை! நிச்சயமாக நீதான் கண்ணியமானவன் மதிப்பிற்குரியவன்.
Duhan 44:50
நிச்சயமாக, நீங்கள் சந்தேகிப்பவர்களாக இருந்தது இதுதான்.
Duhan 44:51
நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள் பாதுகாப்பான இடத்தில்,
Duhan 44:52
சொர்க்கங்களில், ஊற்றுகளில் இருப்பார்கள்.
Duhan 44:53
அவர்கள் மென்மையான, தடிப்பமான பட்டு ஆடைகளை அணிவார்கள். ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.
Duhan 44:54
இவ்வாறுதான் (அவர்கள் சொர்க்கத்தில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்). இன்னும், நாம் அவர்களுக்கு கண்ணழகிகளான வெண்மையான கன்னிகளை மணமுடித்து வைப்போம்.
Duhan 44:55
அதில் எல்லா (வகையான)ப் பழங்களையும் (அவர்கள் உண்பதற்கு அவர்களின் பணியாளர்களிடம்) கேட்பார்கள். அவர்கள் (நிம்மதியாக) பாதுகாப்புப் பெற்றவர்களாக இருப்பார்கள்.
Duhan 44:56
அதில் மரணத்தை அவர்கள் சுவைக்க மாட்டார்கள், (உலகத்தில் அவர்கள் மரணித்த) முதல் மரணத்தைத் தவிர. (சொர்க்கத்தில் மரணம் இருக்காது.) இன்னும், நரகத்தின் தண்டனையை விட்டும் அவன் அவர்களைப் பாதுகாத்தான்.
Duhan 44:57
உமது இறைவனின் அருளினால் (இவை எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கப் பெறும்). இதுதான் மகத்தான வெற்றியாகும்.
Duhan 44:58
ஆக, உமது (அரபி) மொழியில் இ(ந்த வேதத்)தை (கற்பதையும் கற்பிப்பதையும்) நாம் இலகுவாக்கி வைத்ததெல்லாம் அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகத்தான்.
Duhan 44:59
ஆக, நீர் எதிர்பார்த்திருப்பீராக! நிச்சயமாக அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
Câsiye 45:1
ஹா மீம்.
Câsiye 45:2
மிகைத்தவன், மகா ஞானவான் அல்லாஹ்விடமிருந்து இந்த வேதம் இறக்கப்பட்டது.
Câsiye 45:3
நிச்சயமாக வானங்கள், இன்னும் பூமியில் பல அத்தாட்சிகள் நம்பிக்கையாளர்களுக்கு இருக்கின்றன.
Câsiye 45:4
இன்னும், (அல்லாஹ்வின் வல்லமையை) உறுதியாக நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு உங்களைப் படைத்திருப்பதிலும் உயிரினங்களை அவன் (படைத்து பூமியின் பல பாகங்களில் அவற்றை) பரப்புவதிலும் பல அத்தாட்சிகள் உள்ளன.
Câsiye 45:5
இன்னும், சிந்தித்துப் புரிகின்ற மக்களுக்கு இரவு, பகல் மாறி மாறி வருவதிலும்; வானத்தில் இருந்து மழையை இறக்கி அதன் மூலம் பூமியை - அது இறந்த பின்னர் – உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை (பல திசைகளில்) திருப்புவதிலும் பல அத்தாட்சிகள் உள்ளன.
Câsiye 45:6
இவை அல்லாஹ்வின் (வல்லமைகளை விவரிக்கும்) வசனங்களாகும். இவற்றை உம்மீது உண்மையாகவே நாம் ஓதுகிறோம். ஆக, அல்லாஹ்(வுடைய செய்திக்குப் பின்னர்) இன்னும், அவனது அத்தாட்சிகளுக்குப் பின்னர் எந்த செய்தியை இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்?
Câsiye 45:7
அதிகம் பொய் பேசுகின்ற பெரும் பாவிகள் ஒவ்வொருவருக்கும் நாசம்தான்.
Câsiye 45:8
அவன், தனக்கு முன் அல்லாஹ்வின் வசனங்கள் ஓதப்படுவதை செவியுறுகிறான். பிறகு, பெருமை பிடித்தவனாக அவனோ அவற்றை செவியுறாதவனைப் போல (நிராகரிப்பிலேயே) பிடிவாதம் பிடிக்கிறான். ஆக, துன்புறுத்தும் தண்டனையைக் கொண்டு அவனுக்கு நற்செய்தி கூறுவீராக!
Câsiye 45:9
இன்னும், நமது வசனங்களில் எதையும் அவன் அறிந்தால் அதை கேலியாக எடுத்துக்கொள்கிறான். அவர்கள், இழிவுதரும் தண்டனை அவர்களுக்கு உண்டு.
Câsiye 45:10
அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது. அவர்கள் சம்பாதித்ததும் அல்லாஹ்வை அன்றி அவர்கள் எவற்றை (தங்கள்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையில்) எதையும் தடுக்காது. இன்னும், பெரிய (கடுமையான) தண்டனை அவர்களுக்கு உண்டு.
Câsiye 45:11
இது நேர்வழியாகும். எவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்தார்களோ - அவர்களுக்கு, அதிகம் வலி தருகின்ற கடுமையான தண்டனை உண்டு.
Câsiye 45:12
அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் உங்களுக்கு கடலை, - அதில் அவனது கட்டளைப்படி கப்பல்கள் செல்வதற்காகவும், அவனுடைய அருளிலிருந்து நீங்கள் (பொருளாதாரத்தை) தேடுவதற்காகவும், நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் – வசப்படுத்தினான்.
Câsiye 45:13
இன்னும், வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் - இவை அனைத்தையும் - அவன் உங்களுக்கு தன் புறத்திலிருந்து வசப்படுத்தினான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
Câsiye 45:14
(நபியே!) நம்பிக்கையாளர்களுக்குக் கூறுவீராக! “(பாவிகளை அல்லாஹ் எப்படி தண்டிப்பான் என்று) அல்லாஹ்வின் நடவடிக்கைகளை பயப்படாதவர்களை அவர்கள் மன்னிப்பார்களாக.” இறுதியாக, (அழிச்சாட்டியமும் நம்பிக்கையாளர்களுக்கு தொந்தரவும் செய்து கொண்டிருந்த) ஒரு கூட்டத்தை அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்காக அவன் (தகுந்த தண்டனையால்) தண்டிப்பான்.
Câsiye 45:15
யார் ஒரு நன்மையை செய்வாரோ அது அவருக்குத்தான் நல்லது. இன்னும், எவர் தீமை செய்வாரோ அது அவருக்குத்தான் கேடாகும். பிறகு, நீங்கள் (யாராக இருந்தாலும்) உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Câsiye 45:16
இஸ்ரவேலர்களுக்கு வேதங்களையும் ஞானத்தையும் நபித்துவத்தையும் நாம் திட்டவட்டமாகக் கொடுத்தோம். இன்னும், நல்ல உணவுகளை அவர்களுக்கு நாம் வழங்கினோம். இன்னும், (அக்கால) மக்களை விட நாம் அவர்களை மேன்மைபடுத்தினோம்.
Câsiye 45:17
இன்னும், இந்த மார்க்கத்தின் தெளிவான சட்டங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். ஆக, அவர்களிடம் கல்வி வந்த பின்னர், தங்களுக்கு மத்தியில் உள்ள பொறாமையினால் அவர்கள் (தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) கருத்து வேறுபாடு கொண்டார்கள். நிச்சயமாக உமது இறைவன் மறுமை நாளில் அவர்களுக்கு மத்தியில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவற்றில் தீர்ப்பளிப்பான்.
Câsiye 45:18
பிறகு, நாம் உம்மை இந்த மார்க்கத்தின் (உறுதியான) தெளிவான சட்டங்கள் மீது அமைத்தோம். ஆகவே, அதை நீர் பின்பற்றுவீராக! அறியாதவர்களின் மன விருப்பங்களை நீர் பின்பற்றாதீர்!
Câsiye 45:19
நிச்சயமாக அவர்கள் உம்மை விட்டு அல்லாஹ்விடமிருந்து (-அவனது தண்டனையில் இருந்து) எதையும் அறவே தடுக்க மாட்டார்கள். நிச்சயமாக அநியாயக்காரர்கள் அவர்களில் சிலர் சிலருக்கு நண்பர்கள் ஆவார்கள். அல்லாஹ்வோ இறையச்சமுள்ளவர்களின் நண்பன் ஆவான்.
Câsiye 45:20
இ(ந்த வேதமான)து மக்களுக்கு தெளிவான ஆதாரங்களாகவும் நேர்வழியாகவும் (அல்லாஹ்வை) உறுதியாக நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு கருணையாகவும் இருக்கிறது.
Câsiye 45:21
பாவங்களை செய்தவர்கள் எண்ணுகிறார்களா, “நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களைப் போன்று அவர்களை நாம் ஆக்குவோம்” என்று? இ(ந்த இரு கூட்டத்த)வர்களின் வாழ்க்கையையும் இ(ந்த இரு கூட்டத்த)வர்களின் மரணத்தையும் நாம் சமமாக ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகிறார்களா? (அவ்வாறு ஆக்கவே மாட்டோம். இவ்வுலகில் முஃமினாக இருந்தவர் இறக்கும்போதும் முஃமினாக இருப்பார், மறுமையிலும் முஃமினாக இருப்பார். இவ்வுலகில் காஃபிராக இருந்தவர் மறுமையிலும் காஃபிராகத்தான் இருப்பார்.) இவர்கள் எதை தீர்ப்பளிக்கிறார்களோ அது மிகக் கெட்ட தீர்ப்பாகும்.
Câsiye 45:22
இன்னும், அல்லாஹ் வானங்களையும் பூமியையும் - உண்மையான காரணத்திற்காக (-அவனது வல்லமையை அடியார்கள் அறிவதற்காக)வும் ஒவ்வொரு ஆன்மாவும் அது எதை செய்ததோ அதற்குக் கூலி கொடுக்கப்படுவதற்காகவும் - படைத்தான். இன்னும், அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
Câsiye 45:23
(நபியே!) தனது மனவிருப்பத்தை தனது கடவுளாக எடுத்துக் கொண்டவனைப் பற்றி நீர் அறிவிப்பீராக! இன்னும், (அவனுக்கு நேர்வழியின்) அறிவு வந்ததன் பின்னர் (அவன் அதை பின்பற்றாமல் தனது மனவிருப்பத்தை பின்பற்றியதால்) அல்லாஹ் அவனை வழிகெடுத்தான். இன்னும், அவனது செவியிலும் அவனது உள்ளத்திலும் அவன் முத்திரையிட்டான். இன்னும், அவனது பார்வையில் திரையை அவன் ஆக்கினான். ஆகவே, அல்லாஹ்விற்குப் பின்னர் (-அல்லாஹ் அவனை கைவிட்ட பின்னர்) யார் அவனுக்கு நேர்வழி காட்டுவார்? ஆக, நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
Câsiye 45:24
அவர்கள் கூறினார்கள்: “இது நமது உலக வாழ்க்கையைத் தவிர (இதற்கு பின்னர் நமக்கு வாழ்க்கை) இல்லை. நாம் (சில காலம் கழித்து) மரணித்து விடுவோம். இன்னும், நாம் (இப்போது) உயிர் வாழ்கிறோம். (-நமக்குப் பின்னர் நமது பிள்ளைகள் இவ்வுலகில் உயிர்வாழ்வார்கள். இப்படியே உலகம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.) காலத்தைத் தவிர நம்மை (வேறொன்றும்) அழிக்காது.” (நபியே!) இதைப் பற்றி அறவே அறிவு அவர்களுக்கு இல்லை. அவர்கள் வீண் எண்ணம் எண்ணுபவர்களாகவே தவிர இல்லை.
Câsiye 45:25
அவர்களுக்கு முன்னர் நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள் என்று (உம்மை நோக்கி) அவர்கள் கூறியது தவிர அவர்களின் ஆதாரம் (வேறு ஏதும்) இருக்கவில்லை.
Câsiye 45:26
(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்தான் உங்களை உயிர்ப்பிக்கிறான். பிறகு, உங்களை மரணிக்க வைப்பான். பிறகு, மறுமை நாளில் உங்களை ஒன்று சேர்ப்பான். அதில் அறவே சந்தேகமில்லை. என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் (மறுமையை) அறியமாட்டார்கள்.”
Câsiye 45:27
வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது. மறுமை நாள் நிகழ்கின்ற நாளில் (அல்லாஹ் அல்லாதவற்றை வணங்கிய) பொய்யர்கள் எல்லோரும் அந்நாளில் நஷ்டமடைவார்கள்.
Câsiye 45:28
இன்னும், (நபியே! அந்நாளில்) ஒவ்வொரு சமுதாயமும் முழந்தாளிட்டவர்களாக நிற்பதை நீர் பார்ப்பீர். ஒவ்வொரு சமுதாயமும் தமது பதிவு புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும். “நீங்கள் (உலகத்தில்) செய்துகொண்டிருந்த செயல்களுக்கு இன்று கூலி கொடுக்கப்படுவீர்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்).
Câsiye 45:29
இதோ நமது (தாய்) பதிவேடு இருக்கிறது. அது உங்கள் முன்னால் உண்மையைப் பேசும். நிச்சயமாக நாம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை எழுதிக் கொண்டிருந்தோம்.
Câsiye 45:30
ஆக, நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்கள், அவர்களை அவர்களது இறைவன் தனது அருளில் பிரவேசிக்க செய்வான். இதுதான் மிகத் தெளிவான வெற்றியாகும்.
Câsiye 45:31
ஆக, நிராகரித்தவர்கள் (அவர்களை நோக்கி கூறப்படும்:) “எனது வசனங்கள் உங்களுக்கு முன்னால் ஓதப்படவில்லையா? ஆக, நீங்கள் (அவற்றை ஏற்காமல்) பெருமை அடித்தீர்கள். இன்னும், நீங்கள் குற்றம் புரிகின்ற மக்களாக இருந்தீர்கள்.”
Câsiye 45:32
“நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது, மறுமை அதில் அறவே சந்தேகமில்லை” என்று (உங்களிடம்) கூறப்பட்டால் நீங்கள் கூறினீர்கள்: “மறுமை என்றால் என்ன? என்று நாங்கள் அறியமாட்டோம். (மறுமை வரலாம் என்று) நாங்கள் ஒரு சாதாரணமான எண்ணமாகவே தவிர எண்ணவில்லை. (அது வரும் என்று) உறுதிகொண்டவர்களாக நாங்கள் இல்லை.”
Câsiye 45:33
இன்னும், அவர்கள் செய்தவற்றின் தீமைகள் (-தண்டனைகள்) அவர்களுக்கு வெளிப்படும். இன்னும், அவர்கள் எ(ந்த நரகத்)தை கேலி செய்பவர்களாக இருந்தார்களோ அ(ந்த நரகமான)து அவர்களை சூழ்ந்துகொள்ளும்.
Câsiye 45:34
இன்னும், (அவர்களை நோக்கி) கூறப்படும்: “இன்று நாங்கள் உங்களை (தண்டனையில்) விட்டுவிடுவோம், நீங்கள் உங்களது இன்றைய தினத்தின் சந்திப்பை (மறந்து அதற்கு அமல் செய்வதை) நீங்கள் விட்டுவிட்டது போன்று. உங்கள் ஒதுங்குமிடம் நரகம்தான். உதவியாளர்கள் யாரும் உங்களுக்கு இல்லை.”
Câsiye 45:35
இதற்குக் காரணம், நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை கேலியாக எடுத்துக் கொண்டீர்கள். இன்னும், உலக வாழ்க்கை உங்களை மயக்கிவிட்டது. ஆகவே, இன்று அ(ந்த நரகத்)திலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள். இன்னும், அவர்கள் மன்னிப்பு கோருவதற்காக உலகத்திற்கு திரும்ப அனுப்பப்பட மாட்டார்கள்.
Câsiye 45:36
ஆக, எல்லாப் புகழும் வானங்களின் அதிபதி, பூமியின் அதிபதி, அகிலத்தார்களின் அதிபதி அல்லாஹ்விற்கே உரியதாகும்.
Câsiye 45:37
இன்னும், வானங்களிலும் பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
Ahkaf 46:1
ஹா மீம்.
Ahkaf 46:2
மிகைத்தவன், மகா ஞானவான் அல்லாஹ்விடமிருந்து இந்த வேதம் இறக்கப்பட்டதாகும்.
Ahkaf 46:3
வானங்களையும் பூமியையும் அவை இரண்டிற்குமிடையில் உள்ளவற்றையும் உண்மையான காரணத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட தவணைக்காகவும் தவிர நாம் படைக்கவில்லை. நிராகரிப்பவர்கள், எதைப் பற்றி எச்சரிக்கப்பட்டார்களோ அவர்கள் அதை புறக்கணிக்கிறார்கள்.
Ahkaf 46:4
(நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி நீங்கள் (தெய்வங்கள் என்று) அழைப்பவற்றை குறித்து நீங்கள் அறிவியுங்கள்! “அவர்கள் பூமியில் எதைப் படைத்தார்கள் என்று எனக்குக் காண்பியுங்கள்? அல்லது, வானங்க(ளையும் வானங்க)ளில் (உள்ள படைப்புகளை படைத்ததிலும்) அவர்களுக்கு ஏதும் பங்கு இருக்கிறதா? (அப்படி இருக்கிறதென்றால் அதற்கு ஆதாரமாக) இதற்கு முன்னுள்ள ஒரு வேதத்தை; அல்லது, (முன்னோரின்) கல்வியில் (அறிவு சார்ந்த ஆதாரங்களில் ஏதும்) மீதமிருப்பதை என்னிடம் கொண்டு வாருங்கள், நீங்கள் (கூறுவதில்) உண்மையாளர்களாக இருந்தால் (ஆதாரத்தைக் காட்டுங்கள்!).”
Ahkaf 46:5
அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை அழைப்பவர்களை விட மிகப் பெரிய வழிகேடர்கள் யார்? அவர்களோ மறுமை நாள் வரை இவர்களுக்கு பதில் அளிக்க மாட்டார்கள். இன்னும், இவர்களின் அழைப்பை அவர்கள் அறியவும் மாட்டார்கள்.
Ahkaf 46:6
மக்கள் எழுப்பப்படும்போது அவர்கள் இவர்களுக்கு எதிரிகளாக ஆகிவிடுவார்கள். இன்னும், அவர்கள் தாங்கள் வணங்கப்பட்டதை(யும் இவர்கள் தங்களை வணங்கியதையும்) மறுப்பவர்களாக ஆகிவிடுவார்கள்.
Ahkaf 46:7
இன்னும், இவர்களுக்கு முன்னர் நமது தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டபோது, அவர்களிடம் உண்மை வந்தபோது அந்த உண்மைக்கு, “இது தெளிவான சூனியமாகும்” என்று நிராகரிப்பாளர்கள் கூறினார்கள்.
Ahkaf 46:8
“இவர் இதை இட்டுக்கட்டினார்” என்று கூறுகிறார்களா? (நபியே!) கூறுவீராக! “நான் இதை இட்டுக்கட்டி இருந்தால் (அதற்காக அல்லாஹ் என்னை தண்டிக்கும்போது) அல்லாஹ்விடமிருந்து எனக்காக எதையும் (-பரிந்துரை செய்யவோ அவனது தண்டனையை நீக்கவோ) நீங்கள் ஆற்றல் பெற மாட்டீர்கள். நீங்கள் எதில் ஈடுபடுகிறீர்களோ அதை அவன் மிக அறிந்தவன் ஆவான். எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் அவனே போதுமான சாட்சியாளனாக இருக்கிறான். அவன்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.”
Ahkaf 46:9
(நபியே!) கூறுவீராக! “நான் தூதர்களில் புதுமையானவனாக (முதலாமவனாக) இருக்கவில்லை. இன்னும், எனக்கு என்ன செய்யப்படும், உங்களுக்கு என்ன செய்யப்படும் என்று நான் அறியமாட்டேன். எனக்கு எது வஹ்யி அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர நான் பின்பற்ற மாட்டேன். தெளிவான எச்சரிப்பாளராகவே தவிர நான் இல்லை.”
Ahkaf 46:10
(நபியே!) கூறுவீராக! இ(ந்த வேதமான)து (உண்மையில்) அல்லாஹ்விடமிருந்து (வந்ததாக) இருக்கிறது, நீங்கள் அதை நிராகரித்துவிட்டீர்கள். ஆனால், இஸ்ரவேலர்களில் உள்ள ஒரு சாட்சியாளர் இது போன்றதற்கு (-இதில் முஹம்மத் நபியைப் பற்றி சொல்லப்பட்டிருப்பதைப் போன்று முந்திய வேதம் தவ்ராத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது என்ற உண்மைக்கு) சாட்சி கூறினார். ஆக, (அவர் இந்த நபியை) நம்பிக்கை கொண்டு விட்டார். ஆனால், நீங்களோ (அவரை ஏற்றுக் கொள்ளாமல்) பெருமை அடித்து (நிராகரித்து) விட்டீர்கள். (இதை விட பெரிய அநியாயம், பெரிய நிராகரிப்பு வேறு என்ன இருக்கும்?) நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
Ahkaf 46:11
நிராகரித்தவர்கள், நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி கூறினார்கள்: “இ(ந்த வேதமான)து சிறந்ததாக இருந்தால் (பாமர மக்களாகிய) இவர்கள் இதனளவில் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள். அவர்கள் இதன் மூலம் நேர்வழி பெறாமல் போனபோது, “இது பழைய பொய்யாகும்” என்று (கேலியாக) கூறுகிறார்கள்.
Ahkaf 46:12
இன்னும், இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டுகின்ற முன்னோடியாகவும் அருளாகவும் இருக்கிறது. (அதையும் நாம்தான் இறக்கினோம். அது இந்த வேதத்திற்கு சாட்சியாக இருக்கிறது.) இன்னும், இதுவோ (முந்திய வேதங்களை) உண்மைப்படுத்தக்கூடிய, (தெளிவான) அரபி மொழியில் உள்ள வேதமாகும். அநியாயக்காரர்களை எச்சரிப்பதற்காகவும் நல்லவர்களுக்கு நற்செய்தியாக இருப்பதற்காகவும் (இது இறக்கப்பட்டது).
Ahkaf 46:13
நிச்சயமாக, எவர்கள் “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, பிறகு (தங்களது நம்பிக்கையிலும் மார்க்கத்திலும்) உறுதியாக இருந்தார்களோ அவர்கள் மீது பயமில்லை, அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
Ahkaf 46:14
அவர்கள் சொர்க்கவாசிகள், அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள், அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக (இந்த சொர்க்கத்தை அவர்கள் பெற்றார்கள்).
Ahkaf 46:15
இன்னும், “தன் பெற்றோருக்கு மிகவும் நல்லமுறையில் நன்மை செய்யும்படி” மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனது தாய் அவனை சிரமத்துடன் (வயிற்றில்) சுமந்தாள். சிரமத்துடன் அவனை ஈன்றெடுத்தாள். அவனை (அவள்) சுமந்ததும் அவனுக்கு (அவள்) பால்குடி மறக்கச் செய்ததும் முப்பது மாதங்களாகும். இறுதியாக, அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது வயதை அடைந்தபோது, அவன் கூறுகிறான்: “என் இறைவா! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் அருள் புரிந்த உனது அருளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும் நீ திருப்திபடுகின்ற நல்ல அமலை நான் செய்வதற்கும் எனக்கு உத்வேகத்தை ஏற்படுத்துவாயாக! என் சந்ததியில் எனக்கு சீர்திருத்தம் செய்வாயாக! நிச்சயமாக நான் உன் பக்கம் திரும்பிவிட்டேன். நிச்சயமாக நான் முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்கிறேன்.”
Ahkaf 46:16
இவர்கள் எத்தகையோர் என்றால் இவர்கள் செய்த மிக அழகானதை நாம் இவர்களிடமிருந்து ஏற்றுக் கொள்வோம். இன்னும், இவர்களின் (முந்திய) தவறுகளை நாம் (தண்டிக்காமல்) புறக்கணித்து விடுவோம். இவர்கள் சொர்க்கவாசிகளில் இருப்பார்கள். இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த உண்மையான வாக்காகும் (இது.)
Ahkaf 46:17
இன்னும், எவர் தனது பெற்றோரை நோக்கி, “உங்கள் இருவருக்கும் கேவலம் உண்டாகட்டும், நான் (இறந்த பின்னர் மண்ணறையில் இருந்து உயிருடன்) வெளியேற்றப்படுவேன் என்று என்னை எச்சரிக்கிறீர்களா? எனக்கு முன்னர் பல தலைமுறைகள் திட்டமாக சென்றுள்ளனர்” என்று கூறுகிறார். அவ்விருவருமோ (தங்களது மகனை நோக்கி) “உனக்கு என்ன கேடு! நீ நம்பிக்கை கொள்! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே!” என்று கூறியவர்களாக அல்லாஹ்விடம் (அவனது நேர்வழிக்காக) உதவி தேடுகிறார்கள். ஆக, அவன் கூறுகிறான்: “இவை (-நீங்கள் கூறுவதைப் போன்று மறுமையில் எழுப்பப்படுவதும் சொர்க்கமும் நரகமும்) முன்னோரின் கதைகளே தவிர (உண்மையில் நிகழக் கூடியவை) இல்லை.”
Ahkaf 46:18
இவர்கள் எத்தகையோர் என்றால் இவர்களுக்கு முன்னர் சென்றுவிட்ட ஜின், மற்றும் மனித சமுதாயங்களுடன் இவர்கள் மீதும் (அல்லாஹ்வுடைய தண்டனையின்) வாக்கு உறுதியாகிவிட்டது. “நிச்சயமாக இவர்கள் (நிராகரிப்பாளர்களான முன்னோர், பின்னோர் எல்லோரும்) நஷ்டவாளிகளாகவே இருக்கிறார்கள்.”
Ahkaf 46:19
(நம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்கள் ஆகிய இவர்கள்) எல்லோருக்கும் (மறுமையில்) அவர்கள் செய்தவற்றின் (-அவர்களுடைய செயல்களின்) அடிப்படையில் தகுதிகள் உண்டு. இன்னும், இறுதியாக அவன் அவர்களுடைய செயல்களுக்காக அவர்களுக்கு முழுமையான கூலி கொடுப்பான். இன்னும், அவர்கள் (நன்மைகள் குறைக்கப்பட்டோ குற்றங்கள் அதிகப்படுத்தப்பட்டோ) அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
Ahkaf 46:20
இன்னும், நிராகரிப்பாளர்கள் நரகத்தின் முன் சமர்ப்பிக்கப்படுகின்ற நாளில், (அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் உங்கள் (வாழ்க்கை) இன்பங்களை உங்கள் உலக வாழ்க்கையிலேயே முடித்துக் கொண்டீர்கள் (அவற்றை அனுபவித்து முடித்து விட்டீர்கள்). இன்னும், அவற்றின் மூலம் (உலகத்தில்) இன்பம் அடைந்தீர்கள். ஆகவே, நீங்கள் அநியாயமாக பூமியில் பெருமையடிப்பவர்களாக இருந்த காரணத்தாலும் நீங்கள் பாவம் செய்பவர்களாக இருந்த காரணத்தாலும் இன்றைய தினம் இழிவான தண்டனையை கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள்.”
Ahkaf 46:21
(நபியே!) ஆது சமுதாயத்தின் சகோதரரை (-நபி ஹூதை) நினைவு கூர்வீராக! அவர் தனது மக்களை அஹ்காஃப் என்ற மணல் பாங்கான பிரதேசத்தில் (உள்ள அவர்களது இல்லங்களுக்கு அருகில் வைத்து) எச்சரித்த சமயத்தை நினைவு கூர்வீராக! இவருக்கு முன்னரும் எச்சரிப்பாளர்கள் திட்டமாக சென்றுள்ளனர். இவருக்குப் பின்னரும் (எச்சரிப்பாளர்கள் வந்துள்ளனர்). (அவர் எச்சரித்துக் கூறியதாவது:) “நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர நீங்கள் யாரையும் வணங்காதீர்கள். நிச்சயமாக நான் உங்கள் மீது பெரிய (ஆபத்துகள் நிறைந்த) நாளின் தண்டனையை பயப்படுகின்றேன்.”
Ahkaf 46:22
அவர்கள் கூறினார்கள்: “நீர் எங்களை எங்கள் தெய்வங்களை விட்டு திருப்புவதற்காக எங்களிடம் வந்தீரா? ஆக, நீர் உண்மையாளர்களில் இருந்தால் எங்களுக்கு எதை எச்சரிக்கிறீரோ அதை எங்களிடம் கொண்டு வருவீராக!”
Ahkaf 46:23
அவர் கூறினார்: “(உங்கள் முடிவைப் பற்றிய) அறிவெல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. நான் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். என்றாலும், (அல்லாஹ்வின் தண்டனை வந்தால் உங்கள் நிலை என்னவாகும் என்பதை) நீங்கள் அறியாத மக்களாக இருக்கிறீர்கள் என்றே நான் உங்களை கருதுகிறேன்.”
Ahkaf 46:24
ஆக, அவர்கள் (-அல்லாஹ்வின் தண்டனை) தங்களது பள்ளத்தாக்கை முன்னோக்கி வரக்கூடிய அடர்த்தியான கார் மேகமாக அதைப் பார்த்தபோது, கூறினார்கள்: “இது நமக்கு மழை பொழிவிக்கும் அடர்த்தியான கார் மேகமாகும்.” (நபி ஹூது கூறினார்: இது மழை பொழியும் மேகம் இல்லை.) மாறாக, இது நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையில்) எதை அவசரமாகத் தேடினீர்களோ அதுவாகும். இது ஒரு காற்றாகும். துன்புறுத்தும் தண்டனை இதில் இருக்கிறது.
Ahkaf 46:25
இது தனது இறைவனின் கட்டளைப்படி எல்லாவற்றையும் (அழித்து, நாசமாக்கி) சின்னாபின்னமாக்கிவிடும். (அப்படியே நடந்தது.) ஆக, அவர்களின் வசிப்பிடங்களைத் தவிர (வேறு எதையும்) பார்க்க முடியாதபடி அவர்கள் ஆகிவிட்டனர். (அவர்கள் எல்லோரும் அழிந்துவிட்டனர். அவர்கள் வசித்த வீடுகளின் இடிபாடுகள் மட்டும் மிஞ்சி இருக்கின்றன.) இவ்வாறுதான் குற்றவாளிகளான மக்களை நாம் தண்டிப்போம்.
Ahkaf 46:26
உங்களுக்கு எதில் நாம் வசதி கொடுக்கவில்லையோ அதில் அவர்களுக்கு வசதியளித்தோம். இன்னும், அவர்களுக்கு (உங்களை விட திறமையான) செவியையும் பார்வைகளையும் உள்ளங்களையும் ஏற்படுத்தினோம். ஆக, அவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுப்பவர்களாக இருந்தபோது அவர்களின் செவியும் அவர்களின் பார்வைகளும் அவர்களின் உள்ளங்களும் அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையில்) எதையும் தடுக்கவில்லை. இன்னும், அவர்கள் எதை கேலி செய்பவர்களாக இருந்தார்களோ அ(ந்த தண்டனையான)து அவர்களை சூழ்ந்து (அழித்து) விட்டது.
Ahkaf 46:27
இன்னும், உங்களை சுற்றி உள்ள ஊர்களை நாம் திட்டவட்டமாக அழித்தோம். இன்னும், (அவர்களை அழிப்பதற்கு முன்னர்) அவர்கள் (நம் பக்கம்) திரும்புவதற்காக அத்தாட்சிகளை நாம் (அவர்களுக்கு) விவரித்தோம். (ஆனால், அவர்கள் புறக்கணித்து சென்றபோது நமது தண்டனை அவர்களுக்கு வந்தது.)
Ahkaf 46:28
ஆக, இவர்கள் அல்லாஹ்வை அன்றி வழிபாட்டுக்காக எவர்களை தெய்வங்களாக எடுத்துக் கொண்டார்களோ அவர்கள் இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா? மாறாக, அவர்கள் (-அந்த தெய்வங்கள், அவற்றை வணங்கிய) இவர்களை விட்டு மறைந்து விட்டனர். இ(ந்த சிலை வணக்க வழிபாடு என்ப)து இவர்களின் இட்டுக் கட்டப்பட்டப் பொய்யாகும். இன்னும், இவர்கள் (எதை) கற்பனையாக இட்டுக்கட்டிக் கொண்டிருந்தார்களோ அந்த கற்பனையுமாகும். (பல தெய்வ வழிபாடும் சிலை வழிபாடுகளும் மனிதர்கள் பொய்யாக இட்டுக்கட்டியதும் அவர்களின் கற்பனையும் ஆகும். அதற்கு உண்மையான ஆதாரம் ஏதும் இல்லை.)
Ahkaf 46:29
இன்னும், ஜின்களின் சில நபர்களை உம் பக்கம் நாம் திருப்பிய சமயத்தை நினைவு கூர்வீராக! அவர்கள், (நீர் ஓதுகின்ற) குர்ஆனை செவியுறுகிறார்கள். அவர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது, “வாய்மூடி இருங்கள்!” என்று (தங்களுக்குள்) கூறினார்கள். ஆக, (குர்ஆன் ஓதி) முடிக்கப்பட்டபோது அவர்கள் தங்களது சமுதாயத்தினர் பக்கம் (அவர்களை) எச்சரிப்பவர்களாகத் திரும்பினார்கள்.
Ahkaf 46:30
(அந்த ஜின்கள்) கூறினார்கள்: “எங்கள் சமுதாயமே! மூஸாவிற்கு பின்னர் தனக்கு முந்தியவற்றை (-முந்திய வேதங்களை) உண்மைப்படுத்தக்கூடிய ஒரு வேதத்தை நாங்கள் செவியுற்றோம். அது, (அல்லாஹ்வின் பொருத்தம் எதில் இருக்குமோ அந்த) உண்மைக்கும் (இஸ்லாம் என்ற) மிக நேரான பாதைக்கும் வழிகாட்டுகிறது.”
Ahkaf 46:31
“எங்கள் சமுதாயமே! அல்லாஹ்வின் (இறுதி தூதராகிய இந்த) அழைப்பாளருக்கு பதில் தாருங்கள்! இன்னும், அவரை நம்பிக்கை கொள்ளுங்கள்! (அவரின் அழைப்பை ஏற்று, அவருடைய மார்க்கத்தை தழுவுங்கள்!) அல்லாஹ் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; வலிமிக்க தண்டனையில் இருந்து உங்களைப் பாதுகாப்பான்.”
Ahkaf 46:32
எவர் அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு பதில் தரவில்லையோ (அவரது மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லையோ) அவர் பூமியில் (அல்லாஹ்வின் பிடியை விட்டு எங்கும்) தப்பித்துவிட மாட்டார். இன்னும், அவனை அன்றி அவருக்கு பாதுகாவலர்கள் இல்லை. இப்படிப்பட்டவர்கள் மிகத் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள்.
Ahkaf 46:33
நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்தவனாகிய, இன்னும் அவற்றைப் படைத்ததால் கலைப்படையாதவனுமாகிய அல்லாஹ் இறந்தவர்களை உயிர்பிப்பதற்கு ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? ஏன் இல்லை. (அவன் கண்டிப்பாக உயிர்ப்பிப்பான்,) நிச்சயமாக அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Ahkaf 46:34
அந்நாளில், நிராகரித்தவர்கள் நரகத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள். (இன்னும் அவர்களுக்குக் கூறப்படும்:) “இது உண்மையாக இல்லையா?” அவர்கள் கூறுவார்கள்: “ஏன் இல்லை? எங்கள் இறைவன் மீது சத்தியமாக (இது உண்மைதான்.)” (அல்லாஹ்) கூறுவான்: “ஆக, நீங்கள் நிராகரிப்பவர்களாக இருந்த காரணத்தால் இந்த தண்டனையை சுவையுங்கள்!”
Ahkaf 46:35
ஆக, தூதர்களில் மிகவும் வீரமிக்கவர்கள் (-மிக உறுதியுடையவர்கள்) பொறுத்தது போன்று (நபியே!) நீரும் பொறுமை காப்பீராக! (நிராகரிப்பில் இருக்கும்) அவர்களுக்காக (தண்டனையை) அவசரமாக கேட்காதீர்! அவர்கள் எச்சரிக்கப்பட்டதை அவர்கள் பார்க்கின்ற நாளில் பகலில் சில மணிநேரம் தவிர அவர்கள் (இவ்வுலகில்) தங்கவில்லை என்று அவர்களுக்குத் தோன்றும். (குர்ஆனாகிய) இது எடுத்து சொல்லப்படும் செய்தியாகும். ஆக, (அது உங்களுக்கு எடுத்து சொல்லப்பட்டுவிட்டது. அல்லாஹ்வின் தண்டனை வரும்போது) அழிக்கப்படுமா பாவிகளான மக்களைத் தவிர?