Lafzullah

Tamilce Meal — Şeyh Ömer Şerif b. Abdüsselâm (kısaltılmış sürüm) — Nasr 110:1 – Nas 114:6

Author / source: Şeyh Ömer Şerif b. Abdüsselâm (kısaltılmış sürüm) — QuranEnc.com (v1.0.2)

Contents
  1. Nasr 110:1
  2. Nasr 110:2
  3. Nasr 110:3
  4. Tebbet 111:1
  5. Tebbet 111:2
  6. Tebbet 111:3
  7. Tebbet 111:4
  8. Tebbet 111:5
  9. İhlas 112:1
  10. İhlas 112:2
  11. İhlas 112:3
  12. İhlas 112:4
  13. Felak 113:1
  14. Felak 113:2
  15. Felak 113:3
  16. Felak 113:4
  17. Felak 113:5
  18. Nas 114:1
  19. Nas 114:2
  20. Nas 114:3
  21. Nas 114:4
  22. Nas 114:5
  23. Nas 114:6

Nasr 110:1

(நபியே!) அல்லாஹ்வுடைய உதவி இன்னும் வெற்றி வந்தால்,

Nasr 110:2

அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைபவர்களாக மக்களை நீர் பார்த்தால்

Nasr 110:3

உம் இறைவனின் புகழைத் துதித்து தூய்மைப்படுத்துவீராக! அவனிடம் மன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்.

Tebbet 111:1

அபூ லஹபின் இரு கரங்கள் அழியட்டும்; (அவனும்) அழியட்டும்.

Tebbet 111:2

அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்க வில்லை.

Tebbet 111:3

அவன் ஜுவாலையுடைய நெருப்பில் விரைவில் எரிவான்.

Tebbet 111:4

இன்னும், (விறகு) சுள்ளிகளைச் சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நரக நெருப்பில் எரிவாள்).

Tebbet 111:5

அவளுடைய கழுத்தில் பேரீச்சை மர நாரின் கயிறுதான் இருக்கும்.

İhlas 112:1

(நபியே!) கூறுவீராக! அல்லாஹ் (வணங்கத் தகுதியான இறைவன்) அவன் ஒருவன்தான்.

İhlas 112:2

அல்லாஹ்தான் (எல்லா உயர் தகுதிகளையும் உடைய, எக்குறையுமற்ற, எல்லாப் படைப்புகளின் தேவை களையும் நிறைவேற்றுகின்ற எத்தேவையுமற்ற உண்மையான, நிறைவான) தலைவன்.

İhlas 112:3

(அவன்) பெற்றெடுக்கவில்லை; பெற்றெடுக்கப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்கு குழந்தையுமில்லை, தந்தையுமில்லை.)

İhlas 112:4

அவனுக்கு நிகராக ஒருவருமில்லை.

Felak 113:1

(நபியே!) கூறுவீராக! அதிகாலையின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்

Felak 113:2

அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்),

Felak 113:3

காரிருள் படரும்போது இரவின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).

Felak 113:4

இன்னும் முடிச்சுகளில் ஊதுகிற சூனியக்காரிகளின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்),

Felak 113:5

பொறாமைப்படும்போது, பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).

Nas 114:1

(நபியே!) கூறுவீராக! மக்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

Nas 114:2

மக்களின் அரசன் (இடம் பாதுகாப்புத் தேடுகிறேன்),

Nas 114:3

மக்களின் வணக்கத்திற்குரியவன் (இடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).

Nas 114:4

வீணான மனக்குழப்பங்களை, சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடியவன், (அல்லாஹ்வின் பெயரைக் கூறும்போது) மறைந்துவிடக் கூடியவனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).

Nas 114:5

அவன் மக்களுடைய நெஞ்சங்களில் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான்.

Nas 114:6

(குழப்பங்களை ஏற்படுத்துகிற அவன்) ஜின் இனத்திலும் இருக்கிறான். இன்னும், மனித இனத்திலும் இருக்கிறான்.