Lafzullah

Tamilce Meal — Şeyh Ömer Şerif b. Abdüsselâm (kısaltılmış sürüm) — Nisa' 4:1 – Enam 6:165

Author / source: Şeyh Ömer Şerif b. Abdüsselâm (kısaltılmış sürüm) — QuranEnc.com (v1.0.2)

Contents
  1. Nisa' 4:1
  2. Nisa' 4:2
  3. Nisa' 4:3
  4. Nisa' 4:4
  5. Nisa' 4:5
  6. Nisa' 4:6
  7. Nisa' 4:7
  8. Nisa' 4:8
  9. Nisa' 4:9
  10. Nisa' 4:10
  11. Nisa' 4:11
  12. Nisa' 4:12
  13. Nisa' 4:13
  14. Nisa' 4:14
  15. Nisa' 4:15
  16. Nisa' 4:16
  17. Nisa' 4:17
  18. Nisa' 4:18
  19. Nisa' 4:19
  20. Nisa' 4:20
  21. Nisa' 4:21
  22. Nisa' 4:22
  23. Nisa' 4:23
  24. Nisa' 4:24
  25. Nisa' 4:25
  26. Nisa' 4:26
  27. Nisa' 4:27
  28. Nisa' 4:28
  29. Nisa' 4:29
  30. Nisa' 4:30
  31. Nisa' 4:31
  32. Nisa' 4:32
  33. Nisa' 4:33
  34. Nisa' 4:34
  35. Nisa' 4:35
  36. Nisa' 4:36
  37. Nisa' 4:37
  38. Nisa' 4:38
  39. Nisa' 4:39
  40. Nisa' 4:40
  41. Nisa' 4:41
  42. Nisa' 4:42
  43. Nisa' 4:43
  44. Nisa' 4:44
  45. Nisa' 4:45
  46. Nisa' 4:46
  47. Nisa' 4:47
  48. Nisa' 4:48
  49. Nisa' 4:49
  50. Nisa' 4:50
  51. Nisa' 4:51
  52. Nisa' 4:52
  53. Nisa' 4:53
  54. Nisa' 4:54
  55. Nisa' 4:55
  56. Nisa' 4:56
  57. Nisa' 4:57
  58. Nisa' 4:58
  59. Nisa' 4:59
  60. Nisa' 4:60
  61. Nisa' 4:61
  62. Nisa' 4:62
  63. Nisa' 4:63
  64. Nisa' 4:64
  65. Nisa' 4:65
  66. Nisa' 4:66
  67. Nisa' 4:67
  68. Nisa' 4:68
  69. Nisa' 4:69
  70. Nisa' 4:70
  71. Nisa' 4:71
  72. Nisa' 4:72
  73. Nisa' 4:73
  74. Nisa' 4:74
  75. Nisa' 4:75
  76. Nisa' 4:76
  77. Nisa' 4:77
  78. Nisa' 4:78
  79. Nisa' 4:79
  80. Nisa' 4:80
  81. Nisa' 4:81
  82. Nisa' 4:82
  83. Nisa' 4:83
  84. Nisa' 4:84
  85. Nisa' 4:85
  86. Nisa' 4:86
  87. Nisa' 4:87
  88. Nisa' 4:88
  89. Nisa' 4:89
  90. Nisa' 4:90
  91. Nisa' 4:91
  92. Nisa' 4:92
  93. Nisa' 4:93
  94. Nisa' 4:94
  95. Nisa' 4:95
  96. Nisa' 4:96
  97. Nisa' 4:97
  98. Nisa' 4:98
  99. Nisa' 4:99
  100. Nisa' 4:100
  101. Nisa' 4:101
  102. Nisa' 4:102
  103. Nisa' 4:103
  104. Nisa' 4:104
  105. Nisa' 4:105
  106. Nisa' 4:106
  107. Nisa' 4:107
  108. Nisa' 4:108
  109. Nisa' 4:109
  110. Nisa' 4:110
  111. Nisa' 4:111
  112. Nisa' 4:112
  113. Nisa' 4:113
  114. Nisa' 4:114
  115. Nisa' 4:115
  116. Nisa' 4:116
  117. Nisa' 4:117
  118. Nisa' 4:118
  119. Nisa' 4:119
  120. Nisa' 4:120
  121. Nisa' 4:121
  122. Nisa' 4:122
  123. Nisa' 4:123
  124. Nisa' 4:124
  125. Nisa' 4:125
  126. Nisa' 4:126
  127. Nisa' 4:127
  128. Nisa' 4:128
  129. Nisa' 4:129
  130. Nisa' 4:130
  131. Nisa' 4:131
  132. Nisa' 4:132
  133. Nisa' 4:133
  134. Nisa' 4:134
  135. Nisa' 4:135
  136. Nisa' 4:136
  137. Nisa' 4:137
  138. Nisa' 4:138
  139. Nisa' 4:139
  140. Nisa' 4:140
  141. Nisa' 4:141
  142. Nisa' 4:142
  143. Nisa' 4:143
  144. Nisa' 4:144
  145. Nisa' 4:145
  146. Nisa' 4:146
  147. Nisa' 4:147
  148. Nisa' 4:148
  149. Nisa' 4:149
  150. Nisa' 4:150
  151. Nisa' 4:151
  152. Nisa' 4:152
  153. Nisa' 4:153
  154. Nisa' 4:154
  155. Nisa' 4:155
  156. Nisa' 4:156
  157. Nisa' 4:157
  158. Nisa' 4:158
  159. Nisa' 4:159
  160. Nisa' 4:160
  161. Nisa' 4:161
  162. Nisa' 4:162
  163. Nisa' 4:163
  164. Nisa' 4:164
  165. Nisa' 4:165
  166. Nisa' 4:166
  167. Nisa' 4:167
  168. Nisa' 4:168
  169. Nisa' 4:169
  170. Nisa' 4:170
  171. Nisa' 4:171
  172. Nisa' 4:172
  173. Nisa' 4:173
  174. Nisa' 4:174
  175. Nisa' 4:175
  176. Nisa' 4:176
  177. Maide 5:1
  178. Maide 5:2
  179. Maide 5:3
  180. Maide 5:4
  181. Maide 5:5
  182. Maide 5:6
  183. Maide 5:7
  184. Maide 5:8
  185. Maide 5:9
  186. Maide 5:10
  187. Maide 5:11
  188. Maide 5:12
  189. Maide 5:13
  190. Maide 5:14
  191. Maide 5:15
  192. Maide 5:16
  193. Maide 5:17
  194. Maide 5:18
  195. Maide 5:19
  196. Maide 5:20
  197. Maide 5:21
  198. Maide 5:22
  199. Maide 5:23
  200. Maide 5:24
  201. Maide 5:25
  202. Maide 5:26
  203. Maide 5:27
  204. Maide 5:28
  205. Maide 5:29
  206. Maide 5:30
  207. Maide 5:31
  208. Maide 5:32
  209. Maide 5:33
  210. Maide 5:34
  211. Maide 5:35
  212. Maide 5:36
  213. Maide 5:37
  214. Maide 5:38
  215. Maide 5:39
  216. Maide 5:40
  217. Maide 5:41
  218. Maide 5:42
  219. Maide 5:43
  220. Maide 5:44
  221. Maide 5:45
  222. Maide 5:46
  223. Maide 5:47
  224. Maide 5:48
  225. Maide 5:49
  226. Maide 5:50
  227. Maide 5:51
  228. Maide 5:52
  229. Maide 5:53
  230. Maide 5:54
  231. Maide 5:55
  232. Maide 5:56
  233. Maide 5:57
  234. Maide 5:58
  235. Maide 5:59
  236. Maide 5:60
  237. Maide 5:61
  238. Maide 5:62
  239. Maide 5:63
  240. Maide 5:64
  241. Maide 5:65
  242. Maide 5:66
  243. Maide 5:67
  244. Maide 5:68
  245. Maide 5:69
  246. Maide 5:70
  247. Maide 5:71
  248. Maide 5:72
  249. Maide 5:73
  250. Maide 5:74
  251. Maide 5:75
  252. Maide 5:76
  253. Maide 5:77
  254. Maide 5:78
  255. Maide 5:79
  256. Maide 5:80
  257. Maide 5:81
  258. Maide 5:82
  259. Maide 5:83
  260. Maide 5:84
  261. Maide 5:85
  262. Maide 5:86
  263. Maide 5:87
  264. Maide 5:88
  265. Maide 5:89
  266. Maide 5:90
  267. Maide 5:91
  268. Maide 5:92
  269. Maide 5:93
  270. Maide 5:94
  271. Maide 5:95
  272. Maide 5:96
  273. Maide 5:97
  274. Maide 5:98
  275. Maide 5:99
  276. Maide 5:100
  277. Maide 5:101
  278. Maide 5:102
  279. Maide 5:103
  280. Maide 5:104
  281. Maide 5:105
  282. Maide 5:106
  283. Maide 5:107
  284. Maide 5:108
  285. Maide 5:109
  286. Maide 5:110
  287. Maide 5:111
  288. Maide 5:112
  289. Maide 5:113
  290. Maide 5:114
  291. Maide 5:115
  292. Maide 5:116
  293. Maide 5:117
  294. Maide 5:118
  295. Maide 5:119
  296. Maide 5:120
  297. Enam 6:1
  298. Enam 6:2
  299. Enam 6:3
  300. Enam 6:4
  301. Enam 6:5
  302. Enam 6:6
  303. Enam 6:7
  304. Enam 6:8
  305. Enam 6:9
  306. Enam 6:10
  307. Enam 6:11
  308. Enam 6:12
  309. Enam 6:13
  310. Enam 6:14
  311. Enam 6:15
  312. Enam 6:16
  313. Enam 6:17
  314. Enam 6:18
  315. Enam 6:19
  316. Enam 6:20
  317. Enam 6:21
  318. Enam 6:22
  319. Enam 6:23
  320. Enam 6:24
  321. Enam 6:25
  322. Enam 6:26
  323. Enam 6:27
  324. Enam 6:28
  325. Enam 6:29
  326. Enam 6:30
  327. Enam 6:31
  328. Enam 6:32
  329. Enam 6:33
  330. Enam 6:34
  331. Enam 6:35
  332. Enam 6:36
  333. Enam 6:37
  334. Enam 6:38
  335. Enam 6:39
  336. Enam 6:40
  337. Enam 6:41
  338. Enam 6:42
  339. Enam 6:43
  340. Enam 6:44
  341. Enam 6:45
  342. Enam 6:46
  343. Enam 6:47
  344. Enam 6:48
  345. Enam 6:49
  346. Enam 6:50
  347. Enam 6:51
  348. Enam 6:52
  349. Enam 6:53
  350. Enam 6:54
  351. Enam 6:55
  352. Enam 6:56
  353. Enam 6:57
  354. Enam 6:58
  355. Enam 6:59
  356. Enam 6:60
  357. Enam 6:61
  358. Enam 6:62
  359. Enam 6:63
  360. Enam 6:64
  361. Enam 6:65
  362. Enam 6:66
  363. Enam 6:67
  364. Enam 6:68
  365. Enam 6:69
  366. Enam 6:70
  367. Enam 6:71
  368. Enam 6:72
  369. Enam 6:73
  370. Enam 6:74
  371. Enam 6:75
  372. Enam 6:76
  373. Enam 6:77
  374. Enam 6:78
  375. Enam 6:79
  376. Enam 6:80
  377. Enam 6:81
  378. Enam 6:82
  379. Enam 6:83
  380. Enam 6:84
  381. Enam 6:85
  382. Enam 6:86
  383. Enam 6:87
  384. Enam 6:88
  385. Enam 6:89
  386. Enam 6:90
  387. Enam 6:91
  388. Enam 6:92
  389. Enam 6:93
  390. Enam 6:94
  391. Enam 6:95
  392. Enam 6:96
  393. Enam 6:97
  394. Enam 6:98
  395. Enam 6:99
  396. Enam 6:100
  397. Enam 6:101
  398. Enam 6:102
  399. Enam 6:103
  400. Enam 6:104
  401. Enam 6:105
  402. Enam 6:106
  403. Enam 6:107
  404. Enam 6:108
  405. Enam 6:109
  406. Enam 6:110
  407. Enam 6:111
  408. Enam 6:112
  409. Enam 6:113
  410. Enam 6:114
  411. Enam 6:115
  412. Enam 6:116
  413. Enam 6:117
  414. Enam 6:118
  415. Enam 6:119
  416. Enam 6:120
  417. Enam 6:121
  418. Enam 6:122
  419. Enam 6:123
  420. Enam 6:124
  421. Enam 6:125
  422. Enam 6:126
  423. Enam 6:127
  424. Enam 6:128
  425. Enam 6:129
  426. Enam 6:130
  427. Enam 6:131
  428. Enam 6:132
  429. Enam 6:133
  430. Enam 6:134
  431. Enam 6:135
  432. Enam 6:136
  433. Enam 6:137
  434. Enam 6:138
  435. Enam 6:139
  436. Enam 6:140
  437. Enam 6:141
  438. Enam 6:142
  439. Enam 6:143
  440. Enam 6:144
  441. Enam 6:145
  442. Enam 6:146
  443. Enam 6:147
  444. Enam 6:148
  445. Enam 6:149
  446. Enam 6:150
  447. Enam 6:151
  448. Enam 6:152
  449. Enam 6:153
  450. Enam 6:154
  451. Enam 6:155
  452. Enam 6:156
  453. Enam 6:157
  454. Enam 6:158
  455. Enam 6:159
  456. Enam 6:160
  457. Enam 6:161
  458. Enam 6:162
  459. Enam 6:163
  460. Enam 6:164
  461. Enam 6:165

Nisa' 4:1

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். (அவன்) உங்களை ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். அதிலிருந்து அதனுடைய மனைவியைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரப்பினான். அல்லாஹ்வையும் இரத்த பந்தங்களையும் அஞ்சுங்கள். அவனைக் கொண்டே உங்களுக்குள் கேட்டுக் கொள்கிறீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பாளனாக இருக்கிறான்.

Nisa' 4:2

அநாதைகளுக்கு அவர்களுடைய செல்வங்களை கொடுங்கள். (அதிலுள்ள) நல்லதிற்குப் பதிலாகக் கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய செல்வங்களை உங்கள் செல்வங்களுடன் (சேர்த்து) விழுங்காதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாக இருக்கிறது.

Nisa' 4:3

அநாதை(ப் பெண்களை திருமணம் செய்து கொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டீர்கள் என நீங்கள் பயந்தால், (மற்ற) பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணம் புரியுங்கள். (பல மனைவிகளுக்கிடையில்) நீதமாக நடக்கமாட்டீர்கள் என பயந்தால் ஒருத்தியை (மணம் புரியுங்கள்). அல்லது உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களை (கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள்). நீங்கள் அநீதியிழைக்காமல் இருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்.

Nisa' 4:4

பெண்களுக்கு அவர்களுடைய மணக்கொடைகளைக் கடமையாக (மகிழ்வுடன்) கொடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் உங்களுக்கு (விட்டுக் கொடுக்க) மனதால் விரும்பினால் மகிழ்ச்சியாக, இன்பமாக அதை புசியுங்கள்.

Nisa' 4:5

(அநாதைகளின் பொறுப்பாளர்களே!) உங்களுக்கு வாழ்வாதாரமாக அல்லாஹ் ஆக்கிய உங்கள் செல்வங்களை புத்திக் குறைவானவர்களுக்கு கொடுக்காதீர்கள். அவற்றில் அவர்களுக்கு உணவளியுங்கள், அவர்களுக்கு ஆடை அணிவியுங்கள், அவர்களுக்கு (அன்பான) நல்ல சொல்லைக் கூறுங்கள்!

Nisa' 4:6

இறுதியாக அநாதைகளைச் சோதியுங்கள், அவர்கள் திருமண (பருவ)த்தை அடைந்தால் (செல்வத்தை நிர்வகிக்கக்கூடிய) தெளிவான அறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால், அவர்களுடைய செல்வங்களை அவர்களிடம் ஒப்படையுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் செல்வங்களை திரும்பப் பெற்று) விடுவார்கள் என்பதற்காக, அவற்றை அளவு கடந்தும் அவசர அவசரமாகவும் சாப்பிடாதீர்கள். (அநாதையின் காப்பாளர்களில்) எவர் செல்வந்தராக இருக்கிறாரோ (அநாதையின் செல்வத்திலிருந்து தான் பயன் பெறுவதை) அவர் தவிர்க்கவும். எவர் ஏழையாக இருக்கிறாரோ அவர் (நீதமாக) முறையுடன் (அதிலிருந்து) புசிக்கவும். அவர்களுடைய செல்வங்களை நீங்கள் அவர்களிடம் ஒப்படைத்தால் அவர்கள் மீது சாட்சியாக்குங்கள். துல்லியமாக கணக்கெடுப்பவனாக அல்லாஹ் போதுமானவன்.

Nisa' 4:7

பெற்றோர், நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து ஆண்களுக்கு ஒரு பாகமுண்டு. இன்னும் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள் விட்டுச்சென்ற (சொத்)திலிருந்து, அது குறைந்திருந்தாலும் அல்லது அதிகமாக இருந்தாலும் அதில் கடமையாக்கப்பட்ட பாகமாக பெண்களுக்கு ஒரு பாகமுண்டு.

Nisa' 4:8

பங்கு வைக்கும்போது உறவினர்கள், அனாதைகள், ஏழைகள் வந்தால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுங்கள். இன்னும் அவர்களுக்கு (அன்பான) நல்ல சொல்லைக் கூறுங்கள்.

Nisa' 4:9

எவர்கள் தங்களுக்குப் பின் பலவீனமான ஒரு சந்ததியை விட்டால் அவர்கள் மீது பயப்படுவார்களோ அ(த்தகைய)வர்கள் (மற்றவர்களின் அநாதை சந்ததிகளையும்) பயந்து கொள்ளட்டும்; அவர்கள் அல்லாஹ்வை அஞ்சட்டும்; நேர்மையான சொல்லைச் சொல்லட்டும்.

Nisa' 4:10

நிச்சயமாக, எவர்கள் அநாதைகளின் செல்வங்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பையே. (மறுமையில்) நரக ஜுவாலையில் எரிவார்கள்.

Nisa' 4:11

உங்கள் பிள்ளைகளில் (சொத்து பங்கிடுதல் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான். ஆணுக்கு இரு பெண்களின் பங்கு போன்று (பாகம்) உண்டு. (ஆண் பிள்ளைகள் இன்றி) இரண்டிற்கும் மேலான பெண்களாக இருந்தால் (தாய் தந்தை) விட்டுச் சென்ற(சொத்)தில் மூன்றில் இரண்டு (பங்குகள்) அவர்களுக்கு உண்டு. (பிள்ளை) ஒருத்தியாக இருந்தால் அவளுக்கு (சொத்தில்) பாதி (பங்கு)உண்டு. (இறந்த) அவருக்கு பிள்ளை இருந்தால் அவருடைய தாய், தந்தைக்கு (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் ஆறில் ஒன்று உண்டு. (இறந்த) அவருக்கு பிள்ளை இல்லாமல் அவருக்கு அவருடைய தாய், தந்தை வாரிசானால் அவருடைய தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு. (இறந்த) அவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவருடைய தாய்க்கு ஆறில் ஒன்று உண்டு. (ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு.) (இவை அனைத்தும் வஸிய்யத் எனும்) அவர் கூறும் மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர் (கொடுக்கப்படும்). உங்கள் தந்தைகள் இன்னும் உங்கள் ஆண் பிள்ளைகளில் யார் உங்களுக்குப் பலனளிப்பதில் மிக நெருங்கியவர் என்பதை அறியமாட்டீர்கள். (இவை) அல்லாஹ்வின் சட்டமாக(வும் நிர்ணயிக்கப்பட்ட பங்காகவும் ஆக்கப்பட்டுள்ளன). நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.

Nisa' 4:12

உங்கள் மனைவி விட்டுச் சென்ற (சொத்)தில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லையென்றால் - உங்களுக்குப் பாதி உண்டு. அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் உங்களுக்குக் கால் (பாகம்) உண்டு அவர்கள் செய்கின்ற மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர். உங்களுக்குப் பிள்ளை இல்லையென்றால் நீங்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் கால் (பாகம்) அவர்களுக்கு உண்டு. உங்களுக்குப் பிள்ளை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் எட்டில் ஒன்று அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்யும் மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர். (தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய) வாரிசுகள் இல்லாத ஓர் ஆண் அல்லது ஒரு பெண் (மரணித்து) இருந்தால் இன்னும் அவருக்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி இருந்தால், அவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் (இறந்தவர் சொத்தில்) ஆறில் ஒன்று உண்டு. இதைவிட அதிகமாக அவர்கள் இருந்தால் அவர்கள் மூன்றில் ஒன்றில் (சமமான) பங்குதாரர்கள் ஆவர். செய்யப்படும் மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர். (இந்தக் கடன், மற்றும் மரண சாசனத்தாலும் வாரிசுகளில் எவருக்கும் இறந்தவர்) நஷ்டம் ஏற்படுத்தாதவராக (இருக்க வேண்டும்). அல்லாஹ்விடமிருந்து நல்லுபதேசமாக (இந்த சட்டங்கள் உங்களுக்கு உபதேசிக்கப்படுகின்றன). அல்லாஹ் நன்கறிந்தவன், மகா சகிப்பாளன்.

Nisa' 4:13

இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்களோ அவர்களை அவன் சொர்க்கங்களில் நுழைப்பான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.

Nisa' 4:14

எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து, அவனுடைய சட்டங்களை மீறுகிறாரோ அவரை (அல்லாஹ்) நரகத்தில் நுழைப்பான். அதில் (அவர்) நிரந்தரமானவராக (தங்குவார்). இழிவுபடுத்தும் வேதனையும் அவருக்கு உண்டு.

Nisa' 4:15

உங்கள் பெண்களில் மானக்கேடானதை செய்பவர்கள் அவர்கள் மீது உங்களிலிருந்து நான்கு நபர்களை சாட்சியாக கொண்டு வாருங்கள். அவர்கள் (அதை உண்மைப்படுத்தி) சாட்சியளித்தால் மரணம் அவர்களை கைப்பற்றும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வழியை (சட்டத்தை) ஆக்கும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.

Nisa' 4:16

உங்களிலிருந்து இரு ஆண்கள் அதைச் செய்தால் அவ்விருவரையும் துன்புறுத்துங்கள். அவ்விருவரும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி (தங்களை) திருத்திக்கொண்டால் அவர்களைப் புறக்கணித்து (விட்டு)விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.

Nisa' 4:17

அல்லாஹ்விடம் மன்னிப்பெல்லாம் அறியாமையினால் தீமையைச் செய்து பிறகு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்புகிறவர்களுக்குத்தான். அல்லாஹ் அவர்கள் மீது பிழை பொறுப்பான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.

Nisa' 4:18

கெட்டவைகளைச் செய்பவர்கள், அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்தால் "இப்போது நிச்சயமாக நான் (அவற்றை விட்டு) திருந்தி (மன்னிப்புக் கேட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பி) விடுகிறேன்'' என்று கூறுபவருக்கும், நிராகரிப்பாளர்களாக இறந்து விடுபவர்களுக்கும் பிழைபொறுப்பு இல்லை. இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை ஏற்படுத்தினோம்.

Nisa' 4:19

நம்பிக்கையாளர்களே! (இறந்தவரின் சொத்துடன் அவரின்) பெண்களை(யும்) பலவந்தமாக நீங்கள் அனந்தரம் கொள்வது உங்களுக்கு ஹலால் ஆகாது. பகிரங்கமான ஒரு மானக்கேடானதை அவர்கள் செய்தால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலதை நீங்கள் கொண்டு செல்வதற்காக அவர்களை தடுத்து வைக்காதீர்கள். அவர்களுடன் நல்ல முறையில் வாழுங்கள். அவர்களை நீங்கள் வெறுத்தால், நீங்கள் ஒன்றை வெறுக்க, அதில் அல்லாஹ் அதிகமான நன்மையை ஆக்கலாம்.

Nisa' 4:20

ஒரு மனைவியின் இடத்தில் (வேறு) ஒரு மனைவியை மாற்ற நாடினால், அவர்களில் (விவாகரத்து செய்யப்படும்) ஒருத்திக்கு (தங்கக்) குவியலைக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் எடுக்காதீர்கள். (அதுவோ) அபாண்டமாகவும் பகிரங்கமான பாவமாகவும் (இருக்க) அதை நீங்கள் எடுக்கிறீர்களா?

Nisa' 4:21

உங்களில் சிலர் சிலருடன் கலந்து விட்(டு உறவு கொண்)டிருக்க, (அப்பெண்கள்) உங்களிடம் உறுதியான வாக்குறுதியையும் வாங்கி இருக்க அதை எவ்வாறு எடுப்பீர்கள்?

Nisa' 4:22

முன்னர் நடந்த (திருமணத்)தைத் தவிர உங்கள் தந்தைகள் மணம் புரிந்தவர்களை மணம் புரியாதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கப்பட்டதாகவும் இருக்கிறது, இன்னும் அது கெட்ட பழக்கமாகும்.

Nisa' 4:23

உங்கள் தாய்களும், உங்கள் மகள்களும், உங்கள் சகோதரிகளும், உங்கள் மாமிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், (உங்கள்) சகோதரனின் மகள்களும், (உங்கள்) சகோதரியின் மகள்களும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்களும், பால் குடியினால் ஆன சகோதரிகளும், உங்கள் மனைவிகளின் தாய்களும் நீங்கள் உறவு கொண்டுவிட்ட உங்கள் மனைவிகளிலிருந்து உங்கள் மடிகளில் வளர்க்கப்படும் பெண் பிள்ளைகளும் உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் அவர்களுடன் உறவு கொண்டிருக்கவில்லையென்றால் (அவர்களை விவாகரத்து செய்தபின் அவர்களின் மகள்களை மணப்பது) உங்கள் மீது குற்றமில்லை. உங்கள் முதுகந்தண்டிலிருந்து (பிறந்த) உங்கள் சொந்த மகன்களின் மனைவிகளும், இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவிகளாக) ஒன்று சேர்ப்பதும் (உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளது). இதற்கு முன்னர் நடந்ததைத் தவிர (அதை அல்லாஹ் மன்னிப்பான்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கின்றான்.

Nisa' 4:24

பெண்களில் மணமானவர்களும் (உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளனர்).உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களைத் தவிர. (இவர்களை திருமணம் செய்யலாம்.) (இவை) உங்கள் மீது (விதிக்கப்பட்ட) அல்லாஹ்வின் சட்டமாகும். (மேல் விவரிக்கப்பட்ட) இவர்களைத் தவிர உள்ளவர்களை உங்கள் செல்வங்கள் மூலம் (‘மஹர்Õ கொடுத்து மணம்புரியத்) தேடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது, (நீங்களோ) விபசாரர்களாக இல்லாமல் ஒழுக்கமுள்ளவர்களாக (இருக்கவேண்டும்). அவர்களில் எவரிடம் நீங்கள் (மணமுடித்து) சுகம் அனுபவித்தீர்களோ அவர்களுக்கு அவர்களுடைய மஹர்களை கடமையாக கொடுத்து விடுங்கள். கடமை(யான மஹரு)க்குப் பின்னர் நீங்கள் விரும்பி (குறைத்து)க் கொள்வதில் உங்கள் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ், நன்கறிந்தவனாக, ஞானவானாக இருக்கின்றான்.

Nisa' 4:25

உங்களில் எவர் நம்பிக்கையாளரான, சுதந்திரமான பெண்களை மணம் முடிக்க பொருளாதார சக்தி பெறவில்லையோ, உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிய நம்பிக்கையாளரான உங்கள் அடிமைப் பெண்களிலிருந்து (அவர் மணம் புரியலாம்). அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை மிக அறிந்தவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவரே. ஆகவே (அடிமைகளை) அவர்களுடைய உரிமையாளரின் அனுமதியுடன் மணமுடியுங்கள், நல்ல முறையில் அவர்களுடைய மஹர்களைக் கொடுங்கள், (அப்பெண்கள்) விபசாரிகளாக இல்லாமல், பத்தினிகளாக, ரகசிய நண்பர்களை ஆக்கிக் கொள்ளாதவர்களாக (இருக்கவேண்டும்). (அடிமைப் பெண்கள்) மணம் முடிக்கப்பட்டு, அவர்கள் மானக்கேடானதை செய்தால் (குற்றம் செய்த) சுதந்திரமான பெண்கள் மீது (விதிக்கப்பட்டு)ள்ள தண்டனையில் பாதி அவர்கள் மீது (நிறைவேற்றப்படும்). உங்களில் பாவத்தை பயந்தவருக்கு இது (சலுகையாகும்). நீங்கள் சகித்திருப்பது உங்களுக்கு நன்று. அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.

Nisa' 4:26

அல்லாஹ் (தன் சட்டங்களை) உங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கும், உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்களுடைய வழிகளில் உங்களை நேர்வழி நடத்துவதற்கும், உங்கள் மீது பிழைபொறுப்பதற்கும் நாடுகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானவான்.

Nisa' 4:27

அல்லாஹ்வோ, உங்களை மன்னிக்க நாடுகிறான். அற்ப ஆசைகளை பின்பற்றுபவர்கள், நீங்கள் (நேர்வழியிிலிருந்து) முற்றிலும் சாய்வதையே நாடுகிறார்கள்.

Nisa' 4:28

அல்லாஹ் (தன் சட்டங்களை) உங்களுக்கு இலகுவாக்க நாடுகிறான். மனிதன் பலவீனனாக படைக்கப்பட்டுள்ளான்.

Nisa' 4:29

நம்பிக்கையாளர்களே! உங்களின் பரஸ்பர விருப்பத்துடன் (நடைபெறும்) வர்த்தகமாக இருந்தால் தவிர, நீங்கள் உங்கள் செல்வங்களை உங்களுக்கு மத்தியில் தவறான முறையில் புசிக்காதீர்கள். உங்கள் உயிர்களை கொல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது பெரும் கருணையாளனாக இருக்கிறான்.

Nisa' 4:30

எவர் அ(ல்லாஹ் தடுத்த)தை வரம்பை மீறியும், அநியாயமாகவும் செய்தால், அவரை (மறுமையில்) நரகத்தில் எரிப்போம். அது அல்லாஹ்வின் மீது சுலபமாக இருக்கிறது!

Nisa' 4:31

நீங்கள் தடுக்கப்படுபவற்றில் பெரும்பாவங்களை விட்டு நீங்கள் விலகிக் கொண்டால், உங்களை விட்டும் உங்கள் சிறு பாவங்களை அகற்றிவிடுவோம். இன்னும் உங்களை கண்ணியமான இடத்தில் நுழைப்போம்.

Nisa' 4:32

உங்களில் சிலரை சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியதை (கண்டு) ஏங்காதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததிலிருந்து ஒரு பங்குண்டு. பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்ததிலிருந்து ஒரு பங்குண்டு. அல்லாஹ்விடம் அவன் அருளிலிருந்து கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

Nisa' 4:33

தாய், தந்தை, நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் (அவர்களில்) ஒவ்வொருவருக்கும் வாரிசுகளை ஆக்கினோம். உங்கள் சத்தியங்கள் (மூலம் நீங்கள்) ஒப்பந்தம் செய்தவர்கள், அவர்களுக்கு அவர்களின் பங்கை கொடுத்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.

Nisa' 4:34

அவர்களில் சிலரை விட சிலரை அல்லாஹ் மேன்மையாக்கியிருப்பதாலும் (ஆண்கள்) தங்கள் செல்வங்களிலிருந்து (பெண்களுக்கு)ச் செலவு செய்வதாலும் பெண்களை ஆண்கள் நிர்வகிப்பவர்கள் ஆவர். ஆகவே, நல்லபெண்கள் (அல்லாஹ்வுக்கும் கணவனுக்கும்) பணிந்தவர்கள், (கணவனின்) மறைவில் அல்லாஹ் பாதுகாத்ததைக் கொண்டு (தங்களையும் கணவனின் செல்வத்தையும்) பாதுகாப்பவர்கள் ஆவர். (பெண்களில்) எவர்கள் மாறுபாடு செய்வதை நீங்கள் பயப்படுகிறீர்களோ அவர்களுக்கு உபதேசியுங்கள். (அவர்கள் திருந்தாவிடில்) படுக்கைகளில் அவர்களை அப்புறப்படுத்துங்கள். (அதிலும் திருந்தாவிடில்) அவர்களை (காயமின்றி) அடியுங்கள். அதனால் அவர்கள் உங்களுக்கு கீழ்ப்படிந்தால் அவர்கள் மீது ஒரு வழியை (குற்றத்தை)த் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உயர்ந்தவனாக, பெரியவனாக இருக்கிறான்.

Nisa' 4:35

அந்த (கணவன் மனைவி) இருவருக்குள் பிளவை நீங்கள் பயந்தால் அவனின் உறவினரில் ஒரு தீர்ப்பாளரையும், அவளின் உறவினரில் ஒரு தீர்ப்பாளரையும் ஏற்படுத்துங்கள். (நடுவர்களாகிய) அவ்விருவரும் சீர்திருத்தத்தை நாடினால் அந்த (கணவன் மனைவி) இருவருக்கிடையில் அல்லாஹ் ஒற்றுமை ஏற்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.

Nisa' 4:36

அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கும், உறவினருக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டைவீட்டாருக்கும், அந்நியரான அண்டை வீட்டாருக்கும், அருகில் இருக்கும் நண்பருக்கும், பயணிக்கும், உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களுக்கும் நன்மை செய்யுங்கள். கர்வமுடையவனாக, பெருமையுடையவனாக இருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான்.

Nisa' 4:37

(அவர்கள்) கருமித்தனம் செய்பவர்கள், மக்களுக்கு கருமித்தனத்தை ஏவுபவர்கள், அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்குக் கொடுத்ததை மறைப்பவர்கள். (இத்தகைய நன்றிகெட்ட) நிராகரிப்பாளர்களுக்கு இழிவான வேதனையை தயார்படுத்தினோம்.

Nisa' 4:38

இன்னும் (அவர்கள்) மக்களுக்குக் காண்பிப்பதற்காகவே தங்கள் செல்வங்களை தர்மம் செய்பவர்கள், அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதவர்கள். (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன்.) எவருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டானோ அவன் நண்பனால் மிகக் கெட்டுவிட்டான்.

Nisa' 4:39

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்தால் அவர்கள் மீது என்னதான் (பாதிப்பு ஏற்படும்)? அல்லாஹ் அவர்களை நன்கறிந்தவனாக இருக்கிறான்.

Nisa' 4:40

நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவும் அநியாயம் செய்ய மாட்டான். நன்மையாக இருந்தால் அதை பன்மடங்காக்குவான். தன்னிடமிருந்து மகத்தான கூலியையும் கொடுப்பான்.

Nisa' 4:41

(நபியே!) ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் கொண்டு வந்தால் இன்னும் உம்மை இவர்கள் மீது சாட்சியாக நாம் கொண்டு வந்தால் (உம்மை நிராகரித்த இவர்களின் நிலைமை) எவ்வாறிருக்கும்?

Nisa' 4:42

(அல்லாஹ்வை) நிராகரித்து, தூதருக்கு மாறு செய்தவர்கள் அவர்களுடன் பூமி சமமாக்கப்பட வேண்டுமே? என்று அந்நாளில் விரும்புவார்கள். (இவர்கள்) அல்லாஹ்விடத்தில் ஒரு செய்தியையும் மறைக்கமாட்டார்கள்.

Nisa' 4:43

நம்பிக்கையாளர்களே! நீங்கள் கூறுவதை அறியும் வரை நீங்கள் போதை ஏறியவர்களாக இருக்கும் போது தொழுகைக்கு நெருங்காதீர்கள். இன்னும் (நீங்கள்) முழுக்காளிகளாக இருக்கும் போதும் நீங்கள் குளிக்கும் வரை (தொழுகைக்குச் செல்லாதீர்கள்). (ஆனால்) பயணிகளாக இருந்தால் தவிர. ஆகவே, நீங்கள் நோயாளிகளாக அல்லது பயணத்தில் இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் மலஜலம் (கழித்து) வந்தால் அல்லது பெண்களோடு நீங்கள் உறவு கொண்டால், (அப்போது சுத்தம் செய்ய) நீங்கள் தண்ணீரை பெற்றுக்கொள்ள வில்லையெனில் சுத்தமான மண்ணை நாடுங்கள். உங்கள் முகங்களையும் உங்கள் கைகளையும் தடவுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பிழைபொறுப்பவனாக, அதிகம் மன்னிப்பவனாக இருக்கிறான்.

Nisa' 4:44

(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை பார்க்கவில்லையா? வழிகேட்டை விலைக்கு வாங்குகிறார்கள்; நீங்கள் (நேர்)வழி தவறுவதை நாடுகின்றனர்.

Nisa' 4:45

உங்கள் எதிரிகளை அல்லாஹ் மிக அறிந்தவன். பாதுகாவலனாக (இருப்பதற்கு) அல்லாஹ்தான் போதுமானவன், பேருதவியாளனாக (இருப்பதற்கு) அல்லாஹ்தான் போதுமானவன்.

Nisa' 4:46

யூதர்களில் (சிலர்) வசனங்களை அதன் இடங்களிலிருந்து புரட்டுகின்றனர். "(நபியே!) செவியுற்றோம். (எனினும்) (அதற்கு) மாறு செய்தோம். (நீர்) கேட்கப்படாதவராக கேட்பீராக. இன்னும் தங்கள் நாவுகளை வளைத்தும் மார்க்கத்தில் குற்றம் சொல்வதற்காகவும் (உன்ளுர்னா என்று கூறாமல்) ராயினா என்று கூறுகின்றனர். செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம் என்றும் ‘இஸ்மஃÕ, (கேட்பீராக) ‘உன்ளுர்னாÕ (எங்களைப் பார்ப்பீராக) என்றும் நிச்சயமாக அவர்கள் கூறி இருந்தால் (அது) அவர்களுக்கு மிக நன்றாகவும், மிக நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்தான். ஆகவே, சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.

Nisa' 4:47

வேதம் கொடுக்கப்பட்டவர்களே! முகங்களை மாற்றி அவற்றை அவற்றின் பின்புறங்களில் திருப்பிவிடுவதற்கு முன்னர் அல்லது சனிக்கிழமையுடையோரை நாம் சபித்ததுபோல் அவர்களை நாம் சபிப்பதற்கு முன்னர் உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடியதாக நாம் இறக்கிய(வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் கட்டளையிட்டது நிறைவேற்றப்பட்டே ஆகும்.

Nisa' 4:48

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இதைத் தவிர உள்ளதை தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்விற்கு இணைவைப்பாரோ (அவர்) திட்டமாக பெரும் பாவத்தை புனைந்துவிட்டார்.

Nisa' 4:49

(நபியே!) தங்களை (தாமே) பரிசுத்தப்படுத்துபவர்களை (நீர்) கவனிக்கவில்லையா? மாறாக, அல்லாஹ் தான் நாடியவர்களை பரிசுத்தமாக்குகிறான். (அவர்கள்) (பேரீத்தங்கொட்டையின் சிறிய) வெள்ளை நூலளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள்.

Nisa' 4:50

(நபியே!) பார்ப்பீராக! அல்லாஹ்வின் மீது எவ்வாறு பொய்யைக் கற்பனை செய்கின்றனர். பகிரங்கமான பாவத்திற்கு இதுவே போதுமாகும்.

Nisa' 4:51

(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை (நீர்) கவனிக்கவில்லையா? (அவர்கள்) ஷைத்தானையும், சிலையையும் நம்பிக்கை கொள்கின்றனர். நிராகரிப்பாளர்களை நோக்கி "இவர்கள்தான் நம்பிக்கையாளர்களை விட பாதையால் (மார்க்கத்தால்) மிக நேர்வழியாளர்கள்” என்று கூறுகின்றனர்.

Nisa' 4:52

இவர்களை அல்லாஹ் சபித்தான். எவரை அல்லாஹ் சபிப்பானோ அவருக்கு உதவியாளரை (நீர்) காணவே மாட்டீர்.

Nisa' 4:53

இவர்களுக்கு ஆட்சியில் பங்கு ஏதும் இருக்கிறதா? அவ்வாறிருந்தால் (பேரீத்தங்கொட்டையின் நடுவில் உள்ள ஒரு) கீறல் அளவு(ள்ள பொருளையு)ம் மக்களுக்கு (தானமாக) கொடுக்க மாட்டார்கள்.

Nisa' 4:54

அல்லது மக்களைப் பற்றி அல்லாஹ் அவர்களுக்கு தன் அருளிலிருந்து கொடுத்ததின் மீது பொறாமை கொள்கிறார்களா? திட்டமாக இப்ராஹீமுடைய குடும்பத்தாருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம். பெரிய ஆட்சியையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.

Nisa' 4:55

அவர்களில் அ(வ்வேதத்)தை நம்பிக்கைகொண்டவரும் உண்டு. அவர்களில் அதைவிட்டு (பிறரைத்) தடுத்தவரும் உண்டு. கொழுந்து விட்டெரியும் நெருப்பால் நரகமே போதுமாகும்.

Nisa' 4:56

நிச்சயமாக, நம் வசனங்களை நிராகரித்தவர்களை நரக நெருப்பில் எரிப்போம். அவர்கள் வேதனையைத் (தொடர்ந்து) சுவைப்பதற்காக அவர்களுடைய தோல்கள் கனிந்து விடும்போதெல்லாம் அவர்களுக்கு அவை அல்லாத (வேறு) தோல்களை மாற்றுவோம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாக, ஞானவானாக இருக்கிறான்.

Nisa' 4:57

நம்பிக்கை கொண்டு, நன்மைகள் செய்தவர்களை சொர்க்கங்களில் நுழைப்போம். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (அவர்கள்) அதில் என்றும் நிரந்தரமானவர்கள். பரிசுத்தமான மனைவிகளும் அதில் அவர்களுக்கு உண்டு. அடர்ந்த நிழலிலும் அவர்களை நுழைப்போம்.

Nisa' 4:58

(நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களை அதன் சொந்தக்காரரிடம் நீங்கள் ஒப்படைத்து விடுவதற்கும், மக்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்பளித்தால் (பாரபட்சமின்றி) நீதமாக தீர்ப்பளிப்பதற்கும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் உபதேசிப்பது மிக சிறந்ததாகும்! நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.

Nisa' 4:59

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் அதிகாரிகளுக்கும் கீழ்ப்படியுங்கள். (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்குள் ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டால், (மெய்யாகவே) நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் திருப்பிவிடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை திருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான் உங்களுக்கு சிறந்ததாகவும், மிக அழகான முடிவும் ஆகும்.

Nisa' 4:60

(நபியே!) உமக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டனர் என்று எண்ணுபவர்களை நீர் பார்க்கவில்லையா? தீயவனிடமே அவர்கள் தீர்ப்புத் தேடிச் செல்ல நாடுகின்றனர். அவர்கள் அ(ந்த தீய)வனை புறக்கணிக்க வேண்டுமென்று கட்டளையிடப்பட்டுள்ளனர். ஷைத்தான் அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் வழிகெடுக்கவே நாடுகிறான்.

Nisa' 4:61

"(நியாயம் பெற) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனது) தூதரின் பக்கமும் நீங்கள் வாருங்கள். (அந்த தீயவனிடம் செல்லாதீர்கள்.)" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந்நயவஞ்சகர்களை அவர்கள் உம்மைவிட்டு முற்றிலும் புறக்கணிப்பதையே நீர் காண்பீர்.

Nisa' 4:62

(நபியே!) (தீமைகளில்) அவர்களின் கரங்கள் முற்படுத்தியவற்றின் காரணமாக அவர்களுக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்டால் (அதற்குப் பரிகாரம் தேடிக் கொள்ள முடியாமல்போன அவர்களின் இழி நிலைமை) எவ்வாறு இருந்தது (என்பதை நீர் கவனிப்பீராக.) பிறகு அவர்கள் உம்மிடம் வந்து "(அந்த தீயவனிடம் நாங்கள் சென்றதெல்லாம்) நன்மையையும் ஒற்றுமையையும் அன்றி, (வேறொன்றையும்) நாங்கள் நாடவில்லை" என்று அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்கின்றனர்.

Nisa' 4:63

இ(த்தகைய)வர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் அறிவான். ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து அவர்களுக்கு உபதேசிப்பீராக. அவர்களுடைய உள்ளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் கூற்றை அவர்களுக்குக் கூறுவீராக.

Nisa' 4:64

நாம் எந்தத் தூதரையும் அனுப்பவில்லை. அல்லாஹ்வுடைய அனுமதி கொண்டு அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே தவிர. நிச்சயமாக அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோது, உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி இருந்தால், (அத்துடன்) அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரியிருந்தால், பிழை பொறுப்பவனாக, பெரும் கருணையாளனாக அல்லாஹ்வைக் கண்டிருப்பார்கள்.

Nisa' 4:65

ஆகவே, (உண்மை அவ்வாறு) இல்லை. உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்களுக்கிடையில் சச்சரவு ஏற்பட்டதில் உம்மை தீர்ப்பாளராக்கி, பிறகு, நீர் தீர்ப்பளித்ததில் தங்கள் உள்ளங்களில் (எத்தகைய) அதிருப்தி காணாமல் முழுமையாக (உமக்கு) பணியும் வரை அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகமாட்டார்கள்.

Nisa' 4:66

நாம் அவர்கள் மீது உங்களைக் கொல்லுங்கள், அல்லது உங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறுங்கள் என்று விதித்திருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பான்மையினர் இவ்வாறு) செய்திருக்க மாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் உபதேசிக்கப்பட்டதை செய்திருந்தால் அது அவர்களுக்கே மிக நன்றாகவும் (நம்பிக்கையில் அவர்களை) உறுதிப்படுத்துவதில் மிக வலுவானதாகவும் ஆகி இருக்கும்.

Nisa' 4:67

இன்னும் நம்மிடமிருந்து மகத்தான கூலியை அப்போது நாம் அவர்களுக்கு கொடுத்திருப்போம்.

Nisa' 4:68

இன்னும், நேரான பாதையில் அவர்களை நேர்வழி செலுத்தியிருப்போம்.

Nisa' 4:69

எவர்கள் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கீழ்ப்படிகிறார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்புரிந்த நபிமார்கள், சத்தியவான்கள், (சன்மார்க்கப்போரில்) உயிர்நீத்த தியாகிகள், நல்லவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) இருப்பார்கள். இவர்கள் அழகிய தோழர்கள்.

Nisa' 4:70

இந்த அருள் அல்லாஹ்விடமிருந்து வந்ததாகும். நன்கறிபவனாக அல்லாஹ்வே போதுமானவன்.

Nisa' 4:71

நம்பிக்கையாளர்களே! உங்கள் எச்சரிக்கையைப் பற்றிப்பிடியுங்கள். (தற்காப்புகளை உங்களுடன் எடுத்துக் கொள்ளுங்கள்.) சிறு சிறு கூட்டங்களாக அல்லது அனைவருமாக (போருக்கு)ப் புறப்படுங்கள்.

Nisa' 4:72

(போருக்கு செல்லாமல்) பின்தங்கிவிடுபவனும் நிச்சயமாக உங்களில் இருக்கிறான். உங்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் “திட்டமாக அல்லாஹ் என்மீது அருள் புரிந்தான். ஏனெனில் நான் அவர்களுடன் பிரசன்னமாகி இருக்கவில்லை” என்று கூறுகிறான்.

Nisa' 4:73

அல்லாஹ்விடமிருந்து ஓர் அருள் உங்களை அடைந்தால் “நான் அவர்களுடன் இருந்திருக்க வேண்டுமே? (அவ்வாறு இருந்திருப்பின்) மகத்தான வெற்றி பெற்றிருப்பேனே!” என்று உங்களுக்கிடையிலும் அவனுக்கிடையிலும் எந்த நட்பும் இல்லாததைப் போன்று நிச்சயமாகக் கூறுகிறான்.

Nisa' 4:74

மறுமைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும். எவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவாரோ (அவர்) கொல்லப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் அவருக்கு மகத்தான கூலியைக் கொடுப்போம்.

Nisa' 4:75

அல்லாஹ்வுடைய பாதையிலும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகிய பலவீனர்களின் பாதையிலும் நீங்கள் போரிடாமல் இருக்க உங்களுக்கென்ன (நேர்ந்தது)? “எங்கள் இறைவா! எங்களை இவ்வூரிலிருந்து வெளியேற்று, இந்த ஊர்வாசிகள் அநியாயக்காரர்கள்; எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலரை ஏற்படுத்து! எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஓர் உதவியாளரை ஏற்படுத்து!” என்று (அவர்கள்) கூறுகின்றனர்.

Nisa' 4:76

நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். நிராகரிப்பாளர்கள் ஷைத்தானின் பாதையில் போரிடுவார்கள். ஆகவே, ஷைத்தானுடைய நண்பர்களிடம் போரிடுங்கள். நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி மிக பலவீனமாக இருக்கிறது!

Nisa' 4:77

உங்கள் கைகளைத் தடுத்துக் கொள்ளுங்கள், தொழுகையை நிலை நிறுத்துங்கள், ஜகாத்தை கொடுங்கள் என்று கூறப்பட்டவர்களை நீர் பார்க்க வில்லையா? போர் அவர்கள் மீது விதிக்கப்பட்டபோது, அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வை பயப்படுவதைப்போல் அல்லது பயத்தால் (அதைவிட) மிகக் கடுமையாக மக்களைப் பயப்படுகின்றனர். “எங்கள் இறைவா! ஏன் எங்கள் மீது போரை விதித்தாய்? இன்னும் சமீபமான ஒரு தவணை வரை எங்களை நீ பிற்படுத்த வேண்டாமா?” என்று கூறினார்கள். (நபியே!) கூறுவீராக: “உலகத்தின் இன்பம் அற்பமானது! அல்லாஹ்வை அஞ்சியவருக்கு மறுமை மேலானது. (அங்கு நீங்கள்) ஒரு நூலும் (அதன் அளவுகூட) அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.

Nisa' 4:78

நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடையும்; பலமான கோபுரங்களில் நீங்கள் இருந்தாலும் சரியே! அவர்களை ஒரு நன்மை அடைந்தால் “இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது” எனக் கூறுகின்றனர். அவர்களை ஒரு தீங்கு அடைந்தால் “(நபியே!) இது உம்மிடமிருந்து (எங்களுக்கு) ஏற்பட்டது” எனக் கூறுகின்றனர். (நபியே) நீர் கூறுவீராக: எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே (ஏற்பட்டன). இந்தக் கூட்டத்தினருக்கு என்ன நேர்ந்தது? ஒரு பேச்சையும் அவர்கள் விரைவாக விளங்குவதில்லையே!

Nisa' 4:79

“நன்மையில் எது உம்மை அடைந்ததோ (அது) அல்லாஹ்வின் புறத்திலிருந்து (அடைந்தது).” “தீமையில் எது உம்மை அடைந்ததோ (அது) உன் (தவறி)னால் அடைந்தது.” (நபியே!) உம்மை மக்களுக்கு ஒரு தூதராகவே அனுப்பினோம். சாட்சியால் அல்லாஹ்வே போதுமானவன்.

Nisa' 4:80

எவர் தூதருக்கு கீழ்ப்படிகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்தார். எவர்கள் (புறக்கணித்து) திரும்பினார்களோ அவர்கள் மீது பாதுகாவலராக உம்மை நாம் அனுப்பவில்லை.

Nisa' 4:81

(நபியே! “உமக்கு எங்கள்) கீழ்ப்படிதல்” எனக் கூறுகின்றனர். உம்மிடமிருந்து வெளியேறினால் அவர்களில் ஒரு கூட்டம் (நீர்) கூறுவதற்கு மாறாக இரவில் சதி செய்கின்றனர். அவர்கள் இரவில் சதிசெய்வதை அல்லாஹ் பதிவுசெய்கிறான். ஆகவே, (நீர்) அவர்களைப் புறக்கணிப்பீராக! அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பீராக. பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.

Nisa' 4:82

குர்ஆனை அவர்கள் ஆழ்ந்தாராய வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து (வந்ததாக) இருந்திருந்தால் இதில் பல முரண்பாட்டை அவர்கள் கண்டிருப்பார்கள்.

Nisa' 4:83

பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய ஒரு செய்தி அவர்களிடம் வந்தால் அதை பரப்புகின்றனர். அதை தூதரிடமும், அவர்களில் உள்ள அதிகாரிகளிடமும் அவர்கள் கொண்டு சென்றால் அதை யூகிக்கக்கூடியவர்கள் அதை நன்கறிந்து கொள்வார்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லையென்றால் (உங்களில்) சிலரைத் தவிர (நீங்கள் அனைவரும்) ஷைத்தானை பின்பற்றி இருப்பீர்கள்.

Nisa' 4:84

(நபியே!) அல்லாஹ்வின் பாதையில் போரிடுவீராக! உம்மைத் தவிர நீர் பணிக்கப்படமாட்டீர். (இறைகட்டளையை நீர் ஏற்று நடப்பீராக. பிறரை ஏற்று நடக்க வைப்பது உமது கடமையல்ல). நம்பிக்கையாளர்களை (போருக்கு) தூண்டுங்கள். நிராகரிப்பாளர்களின் ஆற்றலை அல்லாஹ் தடுக்கக்கூடும். அல்லாஹ் ஆற்றலால் மிகக் கடுமையானவன், தண்டிப்பதாலும் மிகக் கடுமையானவன்.

Nisa' 4:85

எவர் நல்ல சிபாரிசு செய்வாரோ அவருக்கு அதிலிருந்து ஒரு பங்கு இருக்கும். எவர் தீய சிபாரிசு செய்வாரோ அவருக்கு அதிலிருந்து ஒரு குற்றம் இருக்கும். அல்லாஹ் எல்லாவற்றின் மீது கண்காணிப்பவனாக இருக்கிறான்.

Nisa' 4:86

உங்களுக்கு (ஸலாம்) முகமன் கூறப்பட்டால் அதைவிட மிக அழகியதைக் கொண்டு முகமன் கூறுங்கள். அல்லது அதையே திரும்பக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பாதுகாவலனாக இருக்கிறான்.

Nisa' 4:87

அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. (அவன்) நிச்சயமாக உங்களை மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் அறவே சந்தேகம் இல்லை. பேச்சால் அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்?

Nisa' 4:88

(நம்பிக்கையாளர்களே!) நயவஞ்சகர்கள் விஷயத்தில் (நீங்கள் முரண்பட்ட) இரு பிரிவினராக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்ததின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தாழ்த்தினான். அல்லாஹ் வழிகெடுத்தவரை நீங்கள் நேர்வழிப்படுத்த நாடுகிறீர்களா? எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு ஒரு வழியையும் அறவே காணமாட்டீர்!

Nisa' 4:89

அவர்கள் நிராகரித்ததைப் போன்று நீங்களும் நிராகரித்து (அவர்களுக்கு) நீங்கள் சமமாக ஆகுவதை (அவர்கள்) விரும்புகிறார்கள். ஆகவே, அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் ஹிஜ்ரா செல்லும் வரை அவர்களில் (உங்களுக்கு) பொறுப்பாளர்களை எடுத்துக் கொள்ளாதீர்கள். (ஹிஜ்ரா செல்லாமல்) அவர்கள் விலகினால் அவர்களை (சிறைப்) பிடியுங்கள்! (அவர்கள் எதிர்த்தால்) அவர்களை நீங்கள் கண்ட இடமெல்லாம் அவர்களைக் கொல்லுங்கள்; (உங்களுக்கு) அவர்களிலிருந்து பொறுப்பாளரையும் உதவியாளரையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

Nisa' 4:90

உங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் (சமாதான) உடன்படிக்கை உள்ள சமுதாயத்திடம் சேர்ந்தவர்கள்; அல்லது உங்களிடம் போர்புரிய அல்லது தங்கள் சமுதாயத்திடம் போர்புரிய தங்கள் உள்ளங்கள் நெருக்கடிக்குள்ளான நிலையில் உங்களிடம் வந்தவர்களைத் தவிர. (அவர்களைக் கொல்லாதீர்கள்; சிறைப் பிடிக்காதீர்கள். ஏனென்றால்,) அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் மீது அவர்களைச் சாட்டியிருப்பான், உங்களிடம் அவர்கள் போரிட்டிருப்பார்கள். ஆகவே, (இவர்கள்) உங்களை விட்டு விலகி உங்களிடம் போரிடாமல் உங்கள் முன் சமாதானத்தை சமர்ப்பித்தால் (ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில்,) இவர்கள் மீது (போரிட) அல்லாஹ் உங்களுக்கு ஒரு வழியையும் (ஒரு காரணத்தையும்) ஆக்கவில்லை.

Nisa' 4:91

(இவர்களல்லாத) மற்றவர்களை (நீங்கள்) காண்பீர்கள். அவர்கள் உங்களிடம் பாதுகாப்புப் பெறவும் (உங்கள் எதிரிகளாகிய) தங்கள் சமுதாயத்திடம் பாதுகாப்புப் பெறவும் நாடுகிறார்கள். குழப்பம் விளைவிப்பதற்கு அவர்கள் திருப்பப்படும் போதெல்லாம் அதில் குப்புற விழுந்து விடுகிறார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகாமலும், உங்கள் முன் சமாதானத்தை சமர்ப்பிக்காமலும், தங்கள் கைகளை (தீங்கிலிருந்து) தடுக்காமலும் இருந்தால், அவர்களை (சிறைப்) பிடியுங்கள். (தப்பிச் செல்பவர்களை) நீங்கள் எங்கு அவர்களைப் பெற்றாலும் அவர்களைக் கொல்லுங்கள். அவர்களுக்கு எதிராக உங்களுக்குத் தெளிவான ஆதாரத்தை ஆக்கிவிட்டோம்.

Nisa' 4:92

தவறுதலாகவே தவிர, ஒரு நம்பிக்கையாளரை கொல்வது ஒரு நம்பிக்கையாளருக்கு ஆகுமானதல்ல. எவராவது ஒரு நம்பிக்கையாளரை தவறுதலாகக் கொன்றால் (அதற்குப் பரிகாரம்) நம்பிக்கையாளரான ஓர் அடிமையை உரிமையிடவேண்டும், (இறந்த) அவருடைய குடும்பத்தாரிடம் (அதற்குரிய) நஷ்ட ஈட்டை ஒப்படைக்க வேண்டும். (ஆனால், குடும்பத்தினர் நஷ்டஈட்டுத் தொகையை கொலையாளிக்கு) தானமாக்கினால் தவிர. (கொல்லப்பட்ட) அவன் உங்கள் எதிரி சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்து அவர் நம்பிக்கையாளராகவும் இருந்தால் நம்பிக்கையாளரான ஓர் அடிமையை (மட்டும்) உரிமையிடவேண்டும். (கொல்லப்பட்ட) அவர் உங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் உடன்படிக்கை உள்ள சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தால் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் நஷ்டஈடும் நம்பிக்கையாளரான ஓர் அடிமையை உரிமையிடவேண்டும். (நஷ்டஈடு வழங்க வசதியை) எவர் அடையவில்லையோ அவர் அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரி தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பிருத்தல் வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானவானாக இருக்கிறான்.

Nisa' 4:93

எவர் ஒரு நம்பிக்கையாளரை நாடியவராகவே (வேண்டுமென்றே) கொல்வாரோ அவருக்குரிய தண்டனை நரகம்தான். அதில் அவர் நிரந்தரமானவர். அவரை அல்லாஹ் கோபிப்பான், அவரைச் சபிப்பான். பெரிய வேதனையையும் அவருக்கு தயார்படுத்துவான்.

Nisa' 4:94

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் பயணித்தால் (எதிர்வருபவர்களைத்) தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு சலாம் கூறியவரை உலக வாழ்க்கையின் பொருளை நீங்கள் தேடியவர்களாக “நீ நம்பிக்கையாளர் இல்லை” என்று கூறாதீர்கள். அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. (இதற்கு) முன்னர் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்தான். ஆகவே (சந்திப்பவரை) தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.

Nisa' 4:95

நம்பிக்கையாளர்களில் குறையுடையோர் அல்லாத (போருக்குச் செல்லாமல் வீடுகளில்) தங்கியவர்களும், தங்கள் செல்வங்களைக் கொண்டும், தங்கள் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுபவர்களும் சமமாக மாட்டார்கள். தங்கள் செல்வங்களைக் கொண்டும் தங்கள் உயிர்களைக் கொண்டும் போரிடுபவர்களை (போருக்குச் செல்லாமல்) தங்கியவர்களை விட பதவியால் அல்லாஹ் மேன்மையாக்கினான். அனைவருக்கும் சொர்க்கத்தையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். போராளிகளை மகத்தான கூலியால் தங்கியவர்களைவிட அல்லாஹ் மேன்மையாக்கினான்.

Nisa' 4:96

(போரிடுபவர்களுக்கு) தன்னிடமிருந்து (பல) பதவிகளையும், மன்னிப்பையும், கருணையையும் (அருளுகிறான்). அல்லாஹ், மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.

Nisa' 4:97

நிச்சயமாக தங்களுக்குத் தாமே தீங்கிழைத்தவர்களாக எவர்களை வானவர்கள் உயிர்வாங்கினார்களோ, (அவர்களிடம் “மார்க்கக் கட்டளையை நிறைவேற்றாது) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?” என்று கூற, (அதற்கவர்கள்) “இந்த பூமியில் நாங்கள் பலவீனர்களாக இருந்தோம்” என்று (பதில்) கூறினார்கள். (அதற்கு வானவர்கள்) அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இருக்கவில்லையா? நீங்கள் (இருந்த இடத்தை விட்டு) அதில் ஹிஜ்ரா சென்றிருக்க வேண்டாமா?” என்று கூறினார்கள். இவர்களின் ஒதுங்குமிடம் நரகமாகும். அது மீளுமிடத்தால் (மிகக்) கெட்டுவிட்டது!

Nisa' 4:98

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரில் (ஹிஜ்ரத் செய்ய முடியாமல்) பலவீனர்களாக இருந்தவர்களைத் தவிர. (அவர்கள் மன்னிக்கப்பட்டவர்கள்.) இவர்கள் (ஹிஜ்ரத் செல்வதற்கு தேவையான) யுக்திகளை மேற்கொள்ள சக்தி பெறாமல் இருந்தார்கள். இன்னும், இவர்கள், (தப்பித்துச் செல்ல) ஒரு வழியையும் பெறாமல் இருந்தார்கள்.

Nisa' 4:99

அல்லாஹ் இத்தகையவர்களை மன்னிக்கக்கூடும். அல்லாஹ் முற்றிலும் பிழைபொறுப்பவனாக, அதிகம் மன்னிப்பவனாக இருக்கிறான்.

Nisa' 4:100

அல்லாஹ்வுடைய பாதையில் எவர் ஹிஜ்ரா செல்கிறாரோ, அவர் பூமியில் (வசதியான) பல புகலிடங்களையும், (பொருளாதார) வசதியையும் பெறுவார். எவர் தன் இல்லத்திலிருந்து அல்லாஹ் மற்றும் அவன் தூதரின் பக்கம் ஹிஜ்ரா செல்பவராக வெளியேறி, பிறகு அவரை மரணம் அடைந்தால் அவருடைய கூலி திட்டமாக அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகிறது. அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.

Nisa' 4:101

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பூமியில் பயணித்தால், நிராகரிப்பாளர்கள் உங்களைத் துன்புறுத்துவதை நீங்கள் பயந்தால், தொழுகையைச் சுருக்குவது உங்கள் மீது குற்றமில்லை. நிராகரிப்பாளர்கள் உங்களுக்கு பகிரங்கமான எதிரிகளாகவே இருக்கின்றனர்.

Nisa' 4:102

(நபியே! போரில்) நீர் அவர்களுடன் இருந்து, அவர்களுக்கு தொழுகையை நிலைநிறுத்தினால் அவர்களில் ஒரு பிரிவு உம்முடன் (தொழ) நிற்கவும். அவர்கள் தங்கள் ஆயுதங்களை (கைகளில்) எடுக்கவும். அவர்கள் (உம்முடன் தொழுது) சஜ்தா செய்துவிட்டால் (தொழுகையிலிருந்து விலகி) உங்களுக்குப் பின்னால் இருக்கவும். தொழாமலிருந்த மற்றொரு பிரிவு வரவும், உம்முடன் அவர்கள் தொழவும். அவர்களும் தங்கள் தற்காப்பையும், தங்கள் ஆயுதங்களையும் எடுக்கவும். நீங்கள் உங்கள் ஆயுதங்கள் மற்றும் உங்கள் பொருள்களிலிருந்து கவனமற்றுவிட வேண்டுமே! என்று நிராகரிப்பாளர்கள் விரும்பினர். (அப்படி கவனமற்றால்) உடனே உங்கள் மீது ஒரே பாய்ச்சலாக பாய்ந்து விடுவார்கள். மழையின் காரணமாக சிரமம் உங்களுக்கு இருந்தால் அல்லது நீங்கள் நோயாளிகளாக இருந்தால் உங்கள் ஆயுதங்களை (கீழே) வைப்பது உங்கள் மீது குற்றமில்லை. உங்கள் தற்காப்பை எடுங்கள் (உஷாராக இருங்கள்). நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு இழிவான வேதனையை ஏற்படுத்தினான்.

Nisa' 4:103

நீங்கள் தொழுகையை முடித்தால் நின்றவர்களாகவும், உட்கார்ந்தவர்களாகவும், உங்கள் விலாக்கள் மீது (படுத்தவர்களாகவு)ம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். (எதிரிகளின் தாக்குதலில் இருந்து) நீங்கள் நிம்மதி அடைந்தால் தொழுகையை (முறைப்படி) நிலைநிறுத்துங்கள். நிச்சயமாகத் தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.

Nisa' 4:104

(எதிரி) கூட்டத்தைத் தேடுவதில் (நீங்கள் சிறிதும்) சோர்வடையாதீர்கள். நீங்கள் (காயத்தினால்) வேதனைப்படுபவர்களாக இருந்தால் நீங்கள் வேதனைப்படுவது போன்று நிச்சயமாக அவர்களும் வேதனைப்படுகிறார்கள். அவர்கள் ஆதரவு வைக்காத (வெற்றி, நற்கூலி அனைத்)தை(யும்) அல்லாஹ்விடம் நீங்கள் ஆதரவு வைக்கிறீர்கள். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானவானாக இருக்கிறான்.

Nisa' 4:105

(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பளிப்பதற்காக உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நிச்சயமாக நாமே உம்மீது இறக்கினோம். நீர் மோசடிக்காரர்களுக்கு தர்க்கிப்பவராக ஆகிவிடாதீர்.

Nisa' 4:106

நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.

Nisa' 4:107

(மக்களுக்குத் தீங்கிழைத்து) தங்களுக்குத்தாமே மோசடி செய்பவர்கள் சார்பாக வாதிடாதீர். சதிகாரனாக, பாவியாக இருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

Nisa' 4:108

(இவர்கள் தம் குற்றத்தை) மக்களிடம் மறைக்கத் தேடுகிறார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் மறைக்கத்தேடுவதில்லை. பேச்சில் (அல்லாஹ்) விரும்பாததை இவர்கள் இரவில் சதித்திட்டம் செய்யும்போது அவன் அவர்களுடன் இருக்கிறான். அல்லாஹ் அவர்கள் செய்வதை சூழ்ந்(தறிந்)தவனாக இருக்கிறான்.

Nisa' 4:109

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இவர்கள் சார்பாக இவ்வுலக வாழ்க்கையில் வாதிடுகிறீர்களா? மறுமை நாளில் இவர்கள் சார்பாக அல்லாஹ்விடம் யார் வாதிடுவார்? அல்லது இவர்கள் மீது பொறுப்பாளராக யார் இருப்பார்?

Nisa' 4:110

எவர், ஒரு தீமையைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே அநீதி இழைத்து விட்டு, பிறகு (அதிலிருந்து விலகி, கைசேதப்பட்டு) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாகக் காண்பார்.

Nisa' 4:111

எவர் ஒரு பாவத்தைச் சம்பாதிக்கிறாரோ அவர் அதைச் சம்பாதிப்பதெல்லாம் தனக்கெதிராகத்தான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானவானாக இருக்கிறான்.

Nisa' 4:112

எவர், ஒரு குற்றத்தை அல்லது ஒரு பாவத்தை செய்து, அதை ஒரு நிரபராதி மீது எறிந்தால், திட்டமாக அவர் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் (தன்மீது) சுமந்து கொண்டார்.

Nisa' 4:113

(நபியே!) அல்லாஹ்வின் அருளும், அவனின் கருணையும் உம்மீது இல்லாதிருந்தால் உம்மை வழி கெடுத்துவிட அவர்களில் ஒரு பிரிவு திட்டமாக நாடியிருக்கும். அவர்கள் தங்களையே தவிர (உம்மை) வழி கெடுக்கமாட்டார்கள். அவர்கள் உமக்கு எதையும் தீங்கிழைக்க மாட்டார்கள். அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உம்மீது இறக்கினான். நீர் அறிந்திராதவற்றை உமக்குக் கற்பித்தான். உம்மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாகவே இருக்கிறது.

Nisa' 4:114

(நபியே!) அவர்களின் இரகசியங்களில் அதிகமானவற்றில் அறவே நன்மை இல்லை, தர்மத்தை அல்லது நன்மையை அல்லது மக்களுக்கிடையில் சமாதானத்தை ஏவியவரைத் தவிர. எவர் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி (மேற்கூறப்பட்ட) அதை செய்வாரோ நாம் அவருக்கு மகத்தான கூலியைத் தருவோம்.

Nisa' 4:115

எவர் தனக்கு நேரான வழி தெளிவானதன் பின்னர் இத்தூதருக்கு முரண்பட்டு நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததைப் பின்பற்றுவாரோ அவரை அவர் திரும்பியதிலேயே திருப்பிவிடுவோம். இன்னும் அவரை நரகத்தில் எரிப்போம். அது மீளுமிடத்தால் (மிகக்) கெட்டுவிட்டது.

Nisa' 4:116

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். அது அல்லாததை தான் நாடுபவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்வுக்கு இணைவைப்பாரோ திட்டமாக அவர் தூரமான வழிகேடாக வழிகெட்டுவிட்டார்.

Nisa' 4:117

அவர்கள் அவனையன்றி பெண் (சிலை)களிடமே தவிர பிரார்த்திப்பதில்லை. கீழ்ப்படியாத ஷைத்தானிடமே தவிர பிரார்த்திப்பதில்லை.

Nisa' 4:118

அல்லாஹ் அவனை சபித்தான். “உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நிச்சயமாக நான் எடுத்துக்கொள்வேன்” என்று (ஷைத்தான்) கூறினான்.

Nisa' 4:119

“நிச்சயம் அவர்களை வழி கெடுப்பேன். நிச்சயம் அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை ஊட்டுவேன்; நிச்சயம் அவர்களுக்கு (தீமையை) ஏவுவேன். ஆகவே, (சிலைகளுக்கு நேர்ச்சை செய்யப்பட்ட) கால்நடைகளின் காதுகளை நிச்சயம் அறுப்பார்கள். நிச்சயம் அவர்களுக்கு ஏவுவேன். ஆகவே, அல்லாஹ்வின் படைப்பு(களின் கோலங்)களை நிச்சயமாக மாற்றுவார்கள்” (என்று கூறினான்). எவன் அல்லாஹ்வையன்றி ஷைத்தானை நண்பனாக எடுத்துக் கொள்வானோ அவன் திட்டமாக பகிரங்கமான நஷ்டமடைந்தான்.

Nisa' 4:120

(ஷைத்தான்) அவர்களுக்கு வாக்களிக்கிறான். அவர்களுக்கு வீண் நம்பிக்கையூட்டுகிறான். (அவன்) அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தவிர (வேறு ஒன்றையும்) வாக்களிக்க மாட்டான்.

Nisa' 4:121

அவர்களுடைய ஒதுங்குமிடம் நரகம்தான். அவர்கள் அதிலிருந்து (தப்பிக்க) ஒரு மீளுமிடத்தையும் பெறமாட்டார்கள்.

Nisa' 4:122

(அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்கள், அவர்களை (மறுமையில்) சொர்க்கங்களில் நுழைப்போம். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (அவர்கள்) அதில் என்றென்றும் நிரந்தரமானவர்கள். அல்லாஹ் உண்மையான வாக்குறுதி அளிக்கிறான். சொல்லில் அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்?

Nisa' 4:123

(நம்பிக்கையாளர்களே! வெற்றி) உங்கள் விருப்பங்களைக் கொண்டும் இல்லை, வேதக்காரர்களின் விருப்பங்களைக் கொண்டுமில்லை. எவன் ஒரு தீமையைச் செய்வானோ அவன் அதற்கு கூலி கொடுக்கப்படுவான். அல்லாஹ்வையன்றி தனக்கு ஒரு பாதுகாவலரையோ ஓர் உதவியாளரையோ பெறமாட்டான்.

Nisa' 4:124

எவர் ஓர் ஆண் அல்லது ஒரு பெண் நம்பிக்கை கொண்டு நன்மைகளில் இருந்து (முடிந்தளவு) செய்வார்களோ, அவர்கள்தான் சொர்க்கத்தில் நுழைவார்கள். ஒரு (பேரீத்தக் கொட்டையின்) கீறல் அளவும் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.

Nisa' 4:125

அல்லாஹ்விற்கு தன் முகத்தை முற்றிலும் பணியவைத்து, அவர் நற்குணமுடையவராக இருக்க, இப்ராஹீமுடைய மார்க்கத்தை (அதில்) உறுதியுடையவராக பின்பற்றியவரைவிட மார்க்கத்தால் மிக அழகானவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை நண்பராக எடுத்துக் கொண்டான்.

Nisa' 4:126

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் எல்லாவற்றையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.

Nisa' 4:127

(நபியே!) உம்மிடம் பெண்களைப் பற்றிய மார்க்கத் தீர்ப்பு கோருகின்றனர். (நீர்) கூறுவீராக: அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பளிக்கிறான். இன்னும் வேதத்தில் உங்களுக்கு எது ஓதப்படுகிறதோ அதுவும் (தீர்ப்பளிக்கிறது). “அநாதைப் பெண்கள், அவர்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் கொடுக்காமல் அவர்களை மணமுடிக்க விரும்புகிறீர்கள், (இது தவறு என்றும்) பலவீனமான சிறுவர்களுக்கு (அவர்களின் உரிமைகளை கொடுக்க வேண்டுமென்றும்), அநாதைகளுக்கு (மஹர் இன்னும் சொத்தில்) நீதத்தை நீங்கள் நிலை நிறுத்துவதையும்” (அல்லாஹ் தீர்ப்பளிக்கிறான்). நீங்கள் நன்மையில் எதைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.

Nisa' 4:128

ஒரு பெண் தன் கணவனிடமிருந்து வெறுப்பை அல்லது புறக்கணிப்பை பயந்தால், அவ்விருவரு(ம் தங்களு)க்கு மத்தியில் ஒரு சமாதான ஒப்பந்தத்தை செய்வது அவ்விருவர் மீதும் குற்றமே இல்லை. சமாதான (ஒப்பந்த)ம் சிறந்ததாகும். ஆன்மாக்கள் கஞ்சத்தனத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் நன்மை செய்தால், அல்லாஹ்வை அஞ்சினால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.

Nisa' 4:129

நீங்கள் ஆசைப்பட்டாலும் மனைவிகளுக்கிடையில் நீதமாக நடப்பதற்கு அறவே இயலமாட்டீர்கள். (ஒருத்தியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து விடாதீர்கள் (சாய்ந்து விட்டால் மற்ற) அவளை தொங்கவிடப்பட்டவளைப் போன்று விட்டு விடுவீர்கள்! நீங்கள் சமாதானம் செய்து, அல்லாஹ்வை அஞ்சினால் நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.

Nisa' 4:130

அவ்விருவரும் பிரிந்து விட்டாலோ அல்லாஹ் தன் (அருட்)கொடையினால் ஒவ்வொருவரையும் நிறைவடையச் செய்வான். அல்லாஹ் விசாலமானவனாக, ஞானவானாக இருக்கிறான்.

Nisa' 4:131

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்குரியனவே! உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் “அல்லாஹ்வை அஞ்சுங்கள்” என்று திட்டவட்டமாக உபதேசித்தோம். நீங்கள் நிராகரித்தால் (அவனுக்கு நஷ்டமில்லை), வானங்களிலுள்ளவையும், பூமியில் உள்ளவையும் நிச்சயமாக அல்லாஹ்விற்கு உரியன. அல்லாஹ் முற்றிலும் நிறைவானவனாக, புகழுக்குரியவனாக இருக்கிறான்.

Nisa' 4:132

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன! பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.

Nisa' 4:133

மனிதர்களே! அவன் நாடினால் உங்களை போக்கிவிடுவான், மற்றவர்களைக் கொண்டுவருவான். அல்லாஹ் அதன் மீது பேராற்றலுடையவனாக இருக்கிறான்.

Nisa' 4:134

இவ்வுலகத்தின் பலனை மட்டும் எவர் நாடிக்கொண்டிருந்தாரோ (அவர் அறிந்து கொள்ளவும்), அல்லாஹ்விடம் இவ்வுலகம் இன்னும் மறுமையின் பலன் இருக்கிறது (எனவே இரண்டையும் நாடட்டும்). அல்லாஹ் நன்கு செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.

Nisa' 4:135

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதத்தை நிலைநிறுத்துபவர்களாக; அல்லாஹ்விற்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள், உங்களுக்கு அல்லது பெற்றோருக்கு அல்லது உறவினர்களுக்கு எதிராக இருந்தாலும் சரியே. (சாட்சி கூறப்படுகின்ற) அவர் செல்வந்தனாக அல்லது ஏழையாக இருந்தால் அல்லாஹ் அவ்விருவருக்கும் மிக ஏற்றமானவன். ஆகவே, நீங்கள் நீதி செலுத்துவதில் ஆசைகளை பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தை) மாற்றினால் அல்லது (சாட்சியத்தை) புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.

Nisa' 4:136

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும், அவனின் தூதரையும், அவன் தன் தூதர் மீது இறக்கிய வேதத்தையும், (இதற்கு) முன்னர் அவன் இறக்கிய வேதத்தையும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவர் அல்லாஹ்வையும், அவனின் வானவர்களையும், அவனின் வேதங்களையும், அவனின் தூதர்களையும், மறுமை நாளையும் நிராகரிப்பாரோ (அவர்), திட்டமாக தூரமான வழிகேடாக வழிகெட்டார்.

Nisa' 4:137

நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, பிறகு நிராகரித்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பிறகு நிராகரித்து பிறகு நிராகரிப்பை அதிகப்படுத்தினார்களோ (அவர்கள் மரணித்துவிட்டால்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பதற்கில்லை. (வேதனையிலிருந்து தப்பிக்க) அவர்களுக்கு ஒரு வழியையும் காட்டுவதற்கில்லை.

Nisa' 4:138

நயவஞ்சகர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! நிச்சயமாக அவர்களுக்கு துன்புறுத்துகின்ற வேதனை உண்டு என்று.

Nisa' 4:139

(இவர்கள்) நம்பிக்கையாளர்களை அன்றி நிராகரிப்பாளர்களை பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். இவர்கள் அவர்களிடம் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே.

Nisa' 4:140

அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும் பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் செவியுற்றால் (அவ்வாறு செய்யும்) அவர்கள் அது அல்லாத வேறு பேச்சில் ஈடுபடும்வரை அவர்களுடன் உட்காராதீர்கள். (அவ்வாறு உட்கார்ந்தால்) அப்போது நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்) என்று (அல்லாஹ்) உங்கள் மீது வேதத்தில் (சட்டத்தை) இறக்கி விட்டான். நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்கள், நிராகரிப்பவர்கள் அனைவரையும் நரகத்தில் ஒன்று சேர்ப்பான்.

Nisa' 4:141

இவர்கள் உங்களுக்கு (சோதனையை) எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு வெற்றி (கிடைத்து) இருந்தால், நாங்களும் உங்களுடன் இருக்கவில்லையா? என்று கூறுகின்றனர். நிராகரிப்பாளர்களுக்கு (வெற்றியில்) ஓர் அளவு (கிடைத்து) இருந்தால் “நாங்கள் உங்களை (வெல்ல ஆற்றல் பெற்றிருந்தும்) வெற்றி கொள்ளவில்லையே! உங்களை நம்பிக்கையாளர்களிடமிருந்து பாதுகாக்கவில்லையா?” என்று கூறுகின்றனர். உங்களுக்கிடையில் அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். நம்பிக்கையாளர்கள் மீது (வெற்றி கொள்ள) நிராகரிப்பாளர்களுக்கு ஒரு வழியையும் அல்லாஹ் அறவே ஆக்கமாட்டான்.

Nisa' 4:142

நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்கின்றனர். அவன் அவர்களை வஞ்சிப்பவன் ஆவான். அவர்கள் தொழுகைக்கு நின்றால் சோம்பேறிகளாக நிற்கின்றனர். மனிதர்களுக்குக் காண்பிக்கின்றனர். குறைவாகவே தவிர அல்லாஹ்வை நினைவு கூரமாட்டார்கள்.

Nisa' 4:143

அதற்கிடையில் தடுமாறியவர்களாக இருக்கின்றனர். (முஸ்லிம்களாகிய) இவர்களுடனும் இல்லை, (காஃபிர்களாகிய) இவர்களுடனுமில்லை. எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு ஒரு (நல்ல) வழியையும் (நீர்) அறவே பெறமாட்டீர்.

Nisa' 4:144

நம்பிக்கையாளர்களே! நம்பிக்கையாளர்கள் அன்றி நிராகரிப்பாளர்களை (உங்கள் காரியங்களுக்கு) பொறுப்பாளர்களாக ஆக்காதீர்கள். உங்களுக்கு எதிராக அல்லாஹ்விற்கு ஒரு தெளிவான சான்றை நீங்கள் ஆக்கிவிட நாடுகிறீர்களா?

Nisa' 4:145

நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகக் கீழ் அடுக்கில் இருப்பார்கள். அவர்களுக்கு ஓர் உதவியாளரை (நீர்) காணமாட்டீர்.

Nisa' 4:146

(தங்கள் நயவஞ்சகத்தை விட்டு) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம் திரும்பி) பாவமன்னிப்புக்கோரி, (தங்கள் செயல்களை) சீர்திருத்தி, அல்லாஹ்வை (உறுதியாகப்) பற்றிப்பிடித்து, தங்கள் வழிபாட்டை(யும் மார்க்கத்தையும்) அல்லாஹ்விற்கு தூய்மைப்படுத்தினார்களே அவர்களைத் தவிர. அவர்கள் நம்பிக்கையாளர்களுடன் இருப்பார்கள். நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியைக் கொடுப்பான்.

Nisa' 4:147

நீங்கள் நன்றி செலுத்தி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டால், உங்களை வேதனை செய்வது கொண்டு (அவன்) என்ன செய்வான்? அல்லாஹ் நன்றியாளனாக, நன்கறிந்தவனாக இருக்கிறான்.

Nisa' 4:148

அநீதியிழைக்கப்பட்டவரைத் தவிர (மற்றவர் எவரும் தனக்கு இழைக்கப்பட்ட) பேச்சில் தீமையைப் பகிரங்கப்படுத்தி பேசுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் நன்கு செவியுறுபவனாக, நன்கறிபவனாக இருக்கிறான்.

Nisa' 4:149

நன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அதை மறைத்தாலும் அல்லது ஒரு கெடுதியை நீங்கள் மன்னித்தாலும் (அது நன்றே). நிச்சயமாக அல்லாஹ் பெரிதும் பிழைபொறுப்பவனாக, பேராற்றலுடையவனாக இருக்கிறான்.

Nisa' 4:150

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்து, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்து, (தூதர்களில்) “சிலரை நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்" எனக் கூறி அதற்கு மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்த நாடுகிறார்களோ,

Nisa' 4:151

அவர்கள்தான் உண்மையில் நிராகரிப்பாளர்கள். நிராகரிப்பாளர்களுக்கு இழிவு தரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளோம்.

Nisa' 4:152

எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டு, அவர்களில் ஒருவருக்கிடையிலும் பிரிவினை செய்யவில்லையோ அவர்களுக்கு அவர்களுடைய கூலிகளை (அல்லாஹ்) கொடுப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.

Nisa' 4:153

(நபியே!) வேதக்காரர்கள் வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு வேதத்தை நீர் இறக்கும்படி உம்மிடம் கேட்கிறார்கள். திட்டமாக இதைவிட மிகப் பெரியதை மூஸாவிடம் (அவர்கள்) கேட்டனர். “அல்லாஹ்வை கண்கூடாக எங்களுக்குக் காண்பி” என்று கூறினர். ஆகவே, அவர்களின் அநியாயத்தினால் அவர்களை இடி முழக்கம் பிடித்தது. பிறகு, அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். அதை மன்னித்தோம். மூஸாவிற்கு தெளிவான சான்றையும் கொடுத்தோம்.

Nisa' 4:154

அவர்களுடைய வாக்குறுதியின் காரணமாக மலையை அவர்களுக்கு மேல் உயர்த்தினோம். “வாசலில் தலைகுனிந்தவர்களாக நுழையுங்கள்” என்று அவர்களுக்குக் கூறினோம். “சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்” என்றும் அவர்களுக்குக் கூறினோம். அவர்களிடம் உறுதியான வாக்குறுதியை எடுத்தோம்.

Nisa' 4:155

ஆகவே, அவர்கள் தங்கள் வாக்குறுதியை முறித்ததாலும், அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும் எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறியதாலும் (நாம் அவர்களைச் சபித்தோம்). மாறாக, அல்லாஹ் அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவற்றின் மீது முத்திரையிட்டான். ஆகவே, சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

Nisa' 4:156

அவர்களின் (இத்தகைய) நிராகரிப்பினாலும், மர்யமின் மீது அபாண்டமான அவதூறைக் கூறியதனாலும் (அவர்களை நாம் சபித்தோம்).

Nisa' 4:157

“அல்லாஹ்வின் தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் கொன்றோம்” என்று அவர்கள் கூறியதாலும் (அவர்களைச் சபித்தோம்). அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவில்லை. எனினும், அவர்களுக்கு (அவரைப் போன்று ஒருவன்) தோற்றமாக்கப்பட்டான். நிச்சயமாக அவர் விசயத்தில் (உண்மைக்கு) முரண்பட்டவர்கள் அதில் சந்தேகத்தில்தான் இருக்கின்றனர். சந்தேகத்தைப் பின்பற்றுவது தவிர அதில் அவர்களுக்கு வேறு ஓர் அறிவும் இல்லை. உறுதியாக அவர்கள் அவரைக் கொல்லவில்லை.

Nisa' 4:158

மாறாக, அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்தினான். அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.

Nisa' 4:159

அவர் இறப்பதற்கு முன்னர் நிச்சயமாக அவரை நம்பிக்கை கொண்டே தவிர வேதக்காரர்களில் எவரும் இல்லை (இருக்க மாட்டார்). மறுமை நாளில் இவர்களுக்கு எதிராக சாட்சி கூறுபவராக அவர் இருப்பார்.

Nisa' 4:160

ஆக, யூதர்களின் அநியாயத்தின் காரணமாகவும் அல்லாஹ்வின் பாதையை விட்டு அதிகமானவர்களை அவர்கள் தடுத்ததின் காரணமாகவும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட (சில) நல்லவற்றை அவர்களுக்கு தடுக்கப்பட்டதாக ஆக்கினோம்.

Nisa' 4:161

இன்னும், அவர்கள் வட்டி வாங்கியதன் காரணமாகவும்; - அவர்களோ அதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறார்கள். - இன்னும், மக்களின் செல்வங்களை அவர்கள் தப்பான வழியில் (தீர்ப்புக்கு லஞ்சம் வாங்கி) சாப்பிட்டதன் காரணமாகவும் (அவர்களை சபித்தோம்). இன்னும், நிராகரிக்கின்ற அவர்களுக்குத் துன்புறுத்தக்கூடிய தண்டனையை தயார் செய்து இருக்கிறோம்.

Nisa' 4:162

எனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் தேர்ச்சிபெற்றவர்கள் இன்னும் நம்பிக்கையாளர்கள் உமக்கு இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையை நிலைநிறுத்துபவர்கள்; ஸகாத்தைக் கொடுப்பவர்கள்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள், (ஆகிய) இவர்களுக்கு மகத்தான கூலியைக் கொடுப்போம்.

Nisa' 4:163

(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் (வந்த) நபிமார்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்தது போன்றே உமக்கும் நிச்சயமாக நாம் வஹ்யி அறிவித்தோம். இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப், (அவர்களுடைய) சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியவர்களுக்கும் வஹ்யி அறிவித்தோம். தாவூதுக்கு ‘ஸபூர்’ ஐ கொடுத்தோம்.

Nisa' 4:164

(பல) தூதர்களை (அனுப்பினோம்.) அவர்களை முன்னர் உமக்கு விவரித்தோம். இன்னும் பல தூதர்களை (அனுப்பினோம்.) அவர்களை உமக்கு விவரிக்கவில்லை. மூஸாவுடன் அல்லாஹ் பேசினான்.

Nisa' 4:165

தூதர்களுக்குப் பின்பு அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மக்களுக்கு ஓர் ஆதாரமும் இல்லாதிருக்க, நற்செய்தி கூறுபவர்களாக, (அச்சமூட்டி) எச்சரிப்பவர்களாக (பல) தூதர்களை (அனுப்பினோம்). அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.

Nisa' 4:166

(நபியே!) அல்லாஹ் சாட்சி கூறுகிறான் உம்மீது அவன் இறக்கியதற்கு, அதை அவனுடைய அறிவைக் கொண்டே இறக்கினான் என்று. (அவ்வாறே) வானவர்களும் சாட்சி கூறுகின்றனர். சாட்சியாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.

Nisa' 4:167

நிச்சயமாக, நிராகரித்து, அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தவர்கள் வெகுதூரமான வழிகேடாக வழிகெட்டு விட்டனர்.

Nisa' 4:168

நிச்சயமாக, எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும் அநியாயம் செய்தார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. இன்னும், (நரகத்தின் வழியைத் தவிர வேறு) வழியை அவர்களுக்கு வழி காட்டுபவனாக இல்லை. (அவர்கள் சொர்க்கப் பாதையில் செல்ல மாட்டார்கள். அவர்கள் மன முரண்டாக நிராகரித்த காரணத்தால் அல்லாஹ் அவர்களை கைவிட்டுவிட்டான்.)

Nisa' 4:169

நரகத்தின் வழியைத் தவிர (வேறு வழியை அவர்களுக்கு அல்லாஹ் காட்ட மாட்டான். அ(ந்த நரகத்)தில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். இது (-அவர்களை நரகத்தில் தள்ளுவது) அல்லாஹ்விற்கு இலகுவானதாக இருக்கிறது.

Nisa' 4:170

மக்களே! இத்தூதர் உங்களிடம் உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்தைக் கொண்டு வந்துவிட்டார். ஆகவே, நம்பிக்கை கொள்ளுங்கள். (அது) உங்களுக்கு மிக்க நன்று. நீங்கள் (அவரை) நிராகரித்தால், வானங்களிலும், பூமியிலுமுள்ளவை நிச்சயமாக அல்லாஹ்விற்குரியனவே! அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.

Nisa' 4:171

வேதக்காரர்களே! உங்கள் மார்க்கத்தில் அளவு கடக்காதீர்கள். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (எதையும்) கூறாதீர்கள். மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ் எல்லாம், அல்லாஹ்வுடைய தூதரும், அவனுடைய (‘குன்’ என்ற) வார்த்தையும், -அ(ந்த வார்த்)தை(யை) மர்யமுக்கு சேர்ப்பித்தான்- அவனிலிருந்து (படைக்கப்பட்ட) ஓர் உயிரும்தான் ஆவார். ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்) ‘மூவர்’ என்று கூறாதீர்கள். (இக்கூற்றை விட்டு) விலகுங்கள். (அது) உங்களுக்கு மிக நன்று. அல்லாஹ் எல்லாம் (வணக்கத்திற்குரிய) ஒரே ஒரு கடவுள்தான். அவனுக்கு குழந்தை இருப்பதை விட்டு அவன் மிகப் பரிசுத்தமானவன். அவனுக்கே வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் உரியன! பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.

Nisa' 4:172

ஈஸாவும், (அல்லாஹ்விற்கு) நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்விற்கு அடிமையாக இருப்பதை விட்டு அறவே திமிரு கொள்ளமாட்டார்கள். எவர்கள் அவனை வணங்குவதை விட்டு திமிரு கொள்வார்களோ இன்னும் பெருமை கொள்வார்களோ அவர்கள் அனைவரையும் (மறுமையில்) அவன் தன் பக்கம் ஒன்று திரட்டுவான்.

Nisa' 4:173

ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களுடைய கூலிகளை அவன் அவர்களுக்கு (முழுமையாக) நிறைவேற்றுவான், இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு அதிகப்படுத்துவான். எவர்கள் திமிருபிடித்து பெருமையடித்தார்களோ அவர்களைத் துன்புறுத்தும் வேதனையால் வேதனை செய்வான். அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு (வேறு) பாதுகாவலரையும் உதவியாளரையும் (அங்கு) காண மாட்டார்கள்.

Nisa' 4:174

மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி உங்களிடம் திட்டமாக வந்துள்ளது. தெளிவான ஓர் ஒளியை உங்களுக்கு இறக்கினோம்.

Nisa' 4:175

ஆகவே, எவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனைப் (பலமாகப்) பற்றிப் பிடித்தார்களோ அவர்களை தன் புறத்திலிருந்து கருணையிலும், அருளிலும் நுழைப்பான். இன்னும், தன் பக்கம் நேரான வழியையும் அவர்களுக்கு வழிகாட்டுவான்.

Nisa' 4:176

(நபியே!) ‘கலாலா’ (தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாதவர்) பற்றி உம்மிடம் தீர்ப்பு கேட்கிறார்கள். கூறுவீராக! “அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். சந்ததியில்லாத ஒரு மனிதன் இறந்து அவனுக்கு (ஒரே) ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச் சென்றதில் பாதி கிடைக்கும். (ஒரு பெண் இறந்து) அவளுக்கு சந்ததி இல்லையென்றால் (அவளுடைய சகோதரன்) அவளுக்கு (அனைத்து சொத்திற்கும்) வாரிசாக ஆவான். (உடன் பிறந்த சகோதரிகள்) இரு பெண்களாக இருந்தால், (இறந்தவர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவ்விருவருக்கும் உண்டு. (இறந்தவருக்கு) உடன் பிறந்தவர்கள் ஆண்களாகவும் பெண்களாகவும் இருந்தால், இரு பெண்களின் பங்கு ஓர் ஆணுக்கு உண்டு. நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு விவரிக்கிறான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.

Maide 5:1

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு ஓதிக்காட்டப்படுபவற்றைத் தவிர கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. நீங்கள் இஹ்ராமுடையவர்களாக இருக்கும் போது வேட்டையாடுவதை ஆகுமாக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதை சட்டமாக்குகிறான்.

Maide 5:2

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் அடையாளங்களையும் புனித மாதத்தையும், (மாலையிடப்படாத) குர்பானியையும், மாலையிடப்பட்ட குர்பானிகளையும், தங்கள் இறைவனிடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடியவர்களாக புனிதமான (கஅபா) ஆலயத்தை நாடுபவர்களையும் (அவமதிப்பதை) ஆகுமாக்காதீர்கள். நீங்கள் இஹ்ராமிலிருந்து நீங்கினால் வேட்டையாடிக் கொள்ளுங்கள். புனிதமான மஸ்ஜிதைவிட்டு அவர்கள் உங்களைத் தடுத்த காரணத்தால் (அந்த) சமுதாயத்தின் (மீது உங்களுக்கு ஏற்பட்ட) துவேஷம் நீங்கள் வரம்பு மீற உங்களைத் தூண்டவேண்டாம். நன்மைக்கும் இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவுங்கள். பாவத்திற்கும் அநியாயத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ், தண்டிப்பதில் கடுமையானவன்.

Maide 5:3

(தானாக) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றிற்காக பெயர் கூறப்பட்டவை, கழுத்து நெருக்கிச் செத்தது, அடிப்பட்டுச் செத்தது, விழுந்து செத்தது, கொம்பால் குத்தப்பட்டுச் செத்தது, மிருகங்கள் தின்றது உங்களுக்கு விலக்கப்பட்டன. (எனினும், மிருகங்கள் வேட்டையாடியதில் உயிரோடிருப்பவற்றில் பிஸ்மில்லாஹ் கூறி) நீங்கள் அறுத்தவற்றைத் தவிர. (பூஜை செய்வதற்காக) நடப்பட்ட (கொடி, ஜண்டா, சிலை போன்ற)வற்றுக்காக அறுக்கப்பட்டவை, அம்புகளைக் கொண்டு (குறி கேட்டுப்) பாகம் பிரித்துக் கொள்வது (ஆகிய அனைத்தும் உங்களுக்கு விலக்கப்பட்டன). இவை பாவங்களாகும். நிராகரிப்பவர்கள் உங்கள் மார்க்கத்தை விட்டு இன்று நம்பிக்கை இழந்தனர். ஆகவே, அவர்களைப் பயப்படாதீர்கள். என்னைப் பயப்படுங்கள். இன்று உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கினேன். என் அருளை உங்கள் மீது முழுமையாக்கினேன். உங்களுக்கு இஸ்லாமை மார்க்கமாக திருப்தியடைந்தேன். ஆக, எவர் பாவத்தின் பக்கம் சாயாதவராக, கடுமையான பசியில் நிர்ப்பந்திக்கப்பட்டால் (விலக்கப்பட்ட மாமிசத்தை புசிப்பது குற்றமாகாது), நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.

Maide 5:4

அவர்களுக்கு ஆகுமாக்கப்பட்டது எது என்று உம்மிடம் கேட்கின்றனர். கூறுவீராக: நல்லவை இன்னும் (வேட்டையாடுகின்ற) மிருகங்களில் நீங்கள் கற்றுக் கொடுத்தவை வேட்டையாடியதும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்தவற்றிலிருந்து அவற்றுக்கு நீங்கள் கற்றுக்கொடுங்கள், வேட்டையாட பயிற்சி அளியுங்கள். ஆக, அவை உங்களுக்காகத் தடுத்தவற்றிலிருந்து (அவை இறந்தாலும்) புசியுங்கள். (அவற்றை ஏவிவிடும் போது) அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கணக்கிடுவதில் தீவிரமானவன்.

Maide 5:5

இன்று, நல்லவை உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. வேதம் கொடுக்கப்பட்டவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதாகும்! உங்கள் உணவும் அவர்களுக்கு ஆகுமானதாகும்! ஈமான் கொண்ட பெண்களில் கற்புள்ள பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களில் கற்புள்ள பெண்களும் ஆகுமானவர்களாகும் அவர்களுடைய மணக்கொடைகளை நீங்கள் அவர்களுக்கு கொடுத்தால். (நீங்களும்) கற்புள்ளவர்களாக இருக்கவேண்டும், விபசாரர்களாக, இரகசிய தோழிகளை ஆக்காதவர்களாக இருக்கவேண்டும். எவர் (இந்த சட்டங்களை) நம்பிக்கைகொள்ள மறுக்கிறாரோ அவருடைய (நற்)செயல் திட்டமாக அழிந்துவிடும். அவர் மறுமையில் நஷ்டவாளிகளில் இருப்பார்.

Maide 5:6

நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்கு நின்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும் கழுவுங்கள், உங்கள் தலைகளில் (நனைந்த கைகளைக் கொண்டு) தடவுங்கள். இரு கணுக்கால்கள் வரை உங்கள் கால்களையும் (கழுவுங்கள்). நீங்கள் முழுக்காளிகளாக இருந்தால் (குளித்து) நன்கு சுத்தமாகுங்கள். நீங்கள் நோயாளிகளாக இருந்தால் அல்லது பயணத்தில் இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் மலஜல பாதையிலிருந்து வந்தால் அல்லது நீங்கள் பெண்களுடன் உறவுகொண்டால், தண்ணீரை நீங்கள் பெறவில்லையெனில் சுத்தமான மண்ணை நாடுங்கள். அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவுங்கள். உங்கள் மீது சிரமத்தை ஆக்குவதற்கு அல்லாஹ் நாடமாட்டான். எனினும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைப் பரிசுத்தமாக்கவும், தன் அருளை உங்கள் மீது முழுமையாக்கவும் நாடுகிறான்.

Maide 5:7

உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், "செவிமடுத்தோம், கீழ்ப்படிந்தோம்” என்று நீங்கள் கூறியபோது அவன் உங்களிடம் உறுதிமொழி வாங்கிய அவனுடைய உறுதிமொழியையும் நினைவுகூறுங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.

Maide 5:8

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நிலை நின்றவர்களாக, நீதிக்கு சாட்சி கூறுபவர்களாக இருங்கள். ஒரு சமுதாயத்தின் (மீதுள்ள) துவேஷம் நீங்கள் நீதமாக நடக்காதிருக்க உங்களைத் தூண்டவேண்டாம். நீதமாக இருங்கள். அது இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவன் ஆவான்.

Maide 5:9

நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்தான் "அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு” என்று.

Maide 5:10

நிராகரித்து நம் வசனங்களை பொய்ப்பித்தவர்கள்தான் நரகவாசிகள்.

Maide 5:11

நம்பிக்கையாளர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூருங்கள், ஒரு சமுதாயம் தங்கள் கரங்களை உங்கள் பக்கம் நீட்ட நாடியபோது, அல்லாஹ் அவர்களுடைய கரங்களை உங்களை விட்டுத் தடுத்தான். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே (தவக்குல்) நம்பிக்கை வைக்கவும்.

Maide 5:12

திட்டமாக அல்லாஹ் இஸ்ரவேலர்களின் உறுதிமொழியை வாங்கினான். அவர்களிலிருந்து பன்னிரெண்டு தலைவர்களை அனுப்பினோம். "நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தினால், ஸகாத்தை கொடுத்தால், என் தூதர்களை நம்பிக்கை கொண்டால், அவர்களுக்கு உதவிபுரிந்தால், அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுத்தால், நிச்சயமாக உங்கள் பாவங்களை உங்களை விட்டு அகற்றிடுவேன், நதிகள் ஓடும் சொர்க்கங்களில் நிச்சயமாக உங்களை நுழைப்பேன்” என்று அல்லாஹ் கூறினான். ஆகவே, உங்களில் எவர் இதற்குப் பின்னர், நிராகரிப்பாரோ திட்டமாக (அவர்) நேரான வழியில் இருந்து வழி தவறிவிட்டார்.

Maide 5:13

ஆகவே, அவர்கள் தங்கள் உறுதிமொழியை முறித்த காரணத்தால் அவர்களைச் சபித்தோம், அவர்களுடைய உள்ளங்களை இறுக்கமானதாக ஆக்கினோம். அவர்கள் (இறை) வசனங்களை அதன் (உண்மை) இடங்களிலிருந்து புரட்டுகிறார்கள். அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதில் ஒரு பாகத்தை மறந்தார்கள். அவர்களில் சிலரைத் தவிர அ(திகமான)வர்களிடமிருந்து மோசடியை (நீர்) கண்டுகொண்டே இருப்பீர். ஆகவே, அவர்களை மன்னிப்பீராக; புறக்கணிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நற்பண்பாளர்களை நேசிக்கிறான்.

Maide 5:14

"நிச்சயமாக நாங்கள் கிறிஸ்த்தவர்கள்” எனக் கூறியவர்களிடம் அவர்களுடைய உறுதிமொழியை வாங்கினோம். அவர்கள் உபதேசிக்கப்பட்டதிலிருந்து ஒரு பகுதியை மறந்தார்கள். ஆகவே, மறுமை நாள் வரை அவர்களுக்கு மத்தியில் பகைமையையும் வெறுப்பையும் மூட்டினோம். அவர்கள் செய்து கொண்டிருந்ததை அல்லாஹ் அவர்களுக்கு அறிவிப்பான்.

Maide 5:15

வேதக்காரர்களே! உங்களிடம் திட்டமாக நம் தூதர் வந்துவிட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்திருந்ததில் பலவற்றை (அவர்) உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். இன்னும் பலவற்றை விட்டுவிடுவார். இன்னும், அல்லாஹ்விடமிருந்து ஓர் ஒளி (அதாவது), தெளிவான ஒரு வேதம் உங்களிடம் வந்துவிட்டது.

Maide 5:16

அல்லாஹ், தன் பொருத்தத்தைப் பின்பற்றுகிறவர்களை அதன் மூலமாக ஈடேற்றத்தின் பாதைகளில் நேர்வழி செலுத்துகிறான். இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் தன் கட்டளைப்படி அவர்களை வெளியேற்றுகிறான். இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் நேர்வழிகாட்டுகிறான்.

Maide 5:17

அல்லாஹ் அவன் மர்யமுடைய மகன் மஸீஹ்தான் என்று கூறியவர்கள் திட்டவட்டமாக நிராகரித்தனர். (நபியே!) கூறுவீராக: மர்யமுடைய மகன் மஸீஹையும், அவருடைய தாயையும், பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் (அதை தடுக்க) யார் அல்லாஹ்விடம் ஒரு சிறிதும் சக்தி பெறுவான்? வானங்கள், பூமி இன்னும் அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் நாடியதை படைக்கிறான். அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன்.

Maide 5:18

யூதர்களும், கிறித்தவர்களும் "நாங்கள் அல்லாஹ்வுடைய பிள்ளைகள், அவனுடைய நேசர்கள்” என்று கூறினர். (நபியே!) கூறுவீராக: அவ்வாறாயின் உங்கள் குற்றங்களுக்காக அவன் உங்களை ஏன் வேதனை செய்கிறான்? மாறாக, நீங்கள் அவன் படைத்தவர்களில் உள்ள மனிதர்கள் ஆவீர். (அவனுடைய பிள்ளைகளல்ல.) அவன் நாடியவர்களை மன்னிக்கிறான்; அவன் நாடியவர்களை வேதனை செய்கிறான். வானங்கள், பூமி இன்னும், அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் ஆட்சி அல்லாஹ்விற்குரியதே! அவனளவில்தான் மீளுமிடம் இருக்கிறது.

Maide 5:19

வேதக்காரர்களே! "நற்செய்தி கூறுபவர், எச்சரிப்பவர் எவரும் எங்களுக்கு வரவில்லை” என்று நீங்கள் கூறாதிருக்க தூதர்களின் இடைவெளியில் நம் தூதர் உங்களிடம் வந்துவிட்டார். (அவர் இஸ்லாமை) உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறார். திட்டமாக உங்களிடம் நற்செய்தி கூருபவறும் எச்சரிப்பவரும் வந்துவிட்டார். அல்லாஹ், எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன்.

Maide 5:20

மூஸா தன் சமுதாயத்திற்கு கூறிய சமயத்தை நினைவு கூறுங்கள். "என் சமுதாயமே! அந்நேரத்தில் உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூறுங்கள். அவன் உங்களில் நபிமார்களை ஆக்கினான், உங்களை அரசர்களாக ஆக்கினான், உலகத்தாரில் ஒருவருக்கும் கொடுக்காதவற்றை உங்களுக்குக் கொடுத்தான்.”

Maide 5:21

என் சமுதாயமே! அல்லாஹ் உங்களுக்கு விதித்த பரிசுத்தமான பூமியில் நுழையுங்கள். நீங்கள் உங்கள் பின்புறங்களில் திரும்பிவிடாதீர்கள். (புறம் திரும்பினால்) நஷ்டவாளிகளாகத் திரும்புவீர்கள்.

Maide 5:22

(அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! நிச்சயமாக அதில் மிக பலசாலிகளான ஒரு சமுதாயம் இருக்கிறது. அவர்கள், அதிலிருந்து வெளியேறும் வரை நிச்சயமாக நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதிலிருந்து வெளியேறினால் நிச்சயமாக நாங்கள் (அதில்) நுழைவோம்” என்றனர்.

Maide 5:23

(அல்லாஹ்வை) பயப்படுபவர்களில் இருந்து அல்லாஹ் அருள்புரிந்த இருவர் (மற்றவர்களை நோக்கி), "நீங்கள் அவர்களை எதிர்த்து (அந்நகரத்தின்) வாசலில் நுழையுங்கள். அதில் நீங்கள் நுழைந்தால் நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை (தவக்குல்) வையுங்கள்” என்று கூறினர்.

Maide 5:24

"மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் காலமெல்லாம் நிச்சயமாக நாங்கள் அதில் அறவே நுழையவே மாட்டோம். ஆகவே, நீயும், உன் இறைவனும் சென்று போரிடுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேதான் உட்கார்ந்திருப்போம்” என்று கூறினர்.

Maide 5:25

"என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கும், என் சகோதரருக்கும் தவிர, (மற்றவர் விஷயத்தில்) அதிகாரம் பெறமாட்டேன். ஆகவே, பாவிகளான சமுதாயத்திற்கு மத்தியிலும் எங்களுக்கு மத்தியிலும் பிரித்திடு!” என்று (மூஸா) கூறினார்.

Maide 5:26

"நிச்சயமாக அது அவர்கள் மீது தடுக்கப்பட்டதாகும். நாற்பது ஆண்டுகள் (அவர்கள்) பூமியில் திக்கற்றலைவார்கள். ஆகவே, பாவிகளான சமுதாயத்தின் மீது கவலைப்படாதீர்!” என்று (மூஸாவுக்கு அல்லாஹ்) கூறினான்.

Maide 5:27

(நபியே!) ஆதமுடைய இரு மகன்களின் செய்தியை உண்மையில் அவர்கள் முன் ஓதுவீராக. இருவரும் ஒரு 'குர்பானி' (பலி)யைக் கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருவரிடமிருந்து (குர்பானி) ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து ஏற்கப்படவில்லை. (ஏற்கப்படாதவர்) "நிச்சயம் நான் உன்னைக் கொல்வேன்” என்றார். (ஏற்கப்பட்டவர்) "அல்லாஹ் ஏற்பதெல்லாம் அல்லாஹ்வை அஞ்சுபவர்களிடமிருந்துதான்” என்று கூறினார்.

Maide 5:28

நீ என்னைக் கொல்வதற்காக உன் கரத்தை என்னளவில் நீட்டினாலும் உன்னைக் கொல்வதற்காக என் கரத்தை உன்னளவில் நான் நீட்டுபவனாக இல்லை. நிச்சயமாக நான் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்.

Maide 5:29

"என் பாவத்துடனும், உன் பாவத்துடனும் (இறைவன் பக்கம்) நீ திரும்புவதை நிச்சயமாக நான் நாடுகிறேன். (அவ்வாறு வந்தால்) நீ நரகவாசிகளில் ஆகி விடுவாய்; இதுதான் அநியாயக்காரர்களின் கூலியாகும்” (என்றும் கூறினார்).

Maide 5:30

அவர் தன் சகோதரரை கொல்ல அவருடைய மனம் அவரைத் தூண்டியது. ஆகவே, அவரைக் கொன்றார். ஆகவே, நஷ்டவாளிகளில் (அவர்) ஆகினார்.

Maide 5:31

தன் சகோதரரின் சடலத்தை எவ்வாறு அவன் மறைப்பான் என்பதை அவனுக்கு அல்லாஹ் காட்டுவதற்காக பூமியில் தோண்டுகிற ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான். அவன் என் நாசமே! இந்தக் காகத்தைப் போன்று நான் ஆக இயலாமலாகிவிட்டேனா! அப்படி ஆகியிருந்தால் என் சகோதரனின் சடலத்தை மறைத்திருப்பேனே! என்று கூறி துக்கப்படுபவர்களில் ஆகிவிட்டான்.

Maide 5:32

அதன் காரணமாக "எவன் ஓர் உயிரைக் கொலை செய்வதற்கு அல்லாமல் அல்லது பூமியில் விஷமம் செய்ததற்கல்லாமல் (அநியாயமாக) ஓர் உயிரைக் கொன்றானோ அவன் மக்கள் அனைவரையுமே கொன்றவன் போலாவான். எவர் ஓர் உயிரை வாழவைத்தாரோ அவர் மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்” என்று இஸ்ரவேலர்கள் மீது விதித்தோம். திட்டமாக அவர்களிடம் நம் தூதர்கள் அத்தாட்சிகளுடன் வந்தார்கள். பிறகு, நிச்சயமாக அவர்களில் அதிகமானவர்கள் அதன் பின்னர் பூமியில் வரம்புமீறுகிறார்கள்.

Maide 5:33

அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுபவர்கள் இன்னும் பூமியில் குழப்பம் செய்ய முயல்பவர்களுடைய தண்டனையெல்லாம் அவர்கள் கொல்லப்படுவது அல்லது அவர்கள் சிலுவையில் அறையப்படுவது அல்லது அவர்கள் மாறு கை, மாறு கால் வெட்டப்படுவது அல்லது அந்த நாட்டில் இருந்து (வேறு நாட்டுக்கு) அவர்கள் கடத்தப்படுவதுதான். இது அவர்களுக்கு இவ்வுலகத்திலுள்ள இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் பெரிய வேதனை உண்டு.

Maide 5:34

நீங்கள் அவர்கள் மீது ஆற்றல் பெறுவதற்கு முன்னர் (மன்னிப்புக் கோரி) திருந்தி திரும்பியவர்களைத் தவிர. (அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்.) ஆக, நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Maide 5:35

நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனளவில் (சேர்ப்பிக்கின்ற) நன்மையைத் தேடுங்கள்! அவனுடைய பாதையில் போரிடுங்கள்!

Maide 5:36

நிச்சயமாக நிராகரித்தவர்கள் மறுமை நாளின் வேதனையிலிருந்து பிணைகொடுப்பதற்காக இப்பூமியிலுள்ள அனைத்தும், அத்துடன் அவை போன்றதும் அவர்களுக்கு இருந்(து அவற்றைக் கொடுத்)தாலும் அவர்களிடமிருந்து அவை) அங்கீகரிக்கப்படாது. இன்னும் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.

Maide 5:37

அவர்கள் நரகிலிருந்து வெளியேற நாடுவார்கள். அதிலிருந்து அவர்கள் வெளியேறுபவர்களாக இல்லை. அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு.

Maide 5:38

திருடன், திருடி அவர்கள் செய்ததற்கு கூலியாக, அல்லாஹ்விடமிருந்து தண்டனையாக அவ்விருவரின் கரங்களை வெட்டுங்கள். அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான்.

Maide 5:39

எவர் தன் தீமைக்குப் பின்னர் திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி (தன்னைத்) திருத்திக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர் மீது பிழை பொறுப்பான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.

Maide 5:40

நிச்சயமாக அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடியவரை வேதனை செய்வான். தான் நாடியவரை மன்னிப்பான். அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன்.

Maide 5:41

தூதரே! "நம்பிக்கை கொண்டோம்” என்று தங்கள் வாய்களால் கூறி, அவர்களுடைய உள்ளங்கள் நம்பிக்கை கொள்ளாதவர்களிலிருந்தும் யூதர்களிலிருந்தும் நிராகரிப்பில் தீவிரம் காட்டுபவர்கள் உமக்குக் கவலையூட்டவேண்டாம். (அவர்கள்) பொய்யை அதிகம் செவிமடுக்கிறார்கள். (இதுவரை) உம்மிடம் வராத மற்றொரு கூட்டத்திற்காகவும் அதிகம் செவிமடுக்கின்றனர். (இறை)வசனங்களை அவற்றின் இடங்களிலிருந்து மாற்றுகின்றனர். "நீங்கள் (இந்த நபியிடமிருந்து) இது கொடுக்கப்பட்டால் அதை எடுங்கள். நீங்கள் அதை கொடுக்கப்படவில்லையெனில் (விலகி) எச்சரிக்கையாக இருங்கள்” என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் எவரை சோதிக்க நாடினானோ அவருக்கு அல்லாஹ்விடம் எதையும் (செய்ய நீர்) உரிமை பெறமாட்டீர். அவர்களுடைய உள்ளங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் நாடவில்லை. அவர்களுக்கு, இம்மையில் இழிவுண்டு. இன்னும் மறுமையில் அவர்களுக்கு பெரிய வேதனையுண்டு.

Maide 5:42

(இவர்கள்) பொய்யை அதிகம் செவிமடுக்கிறார்கள், ஆகாத செல்வத்தை அதிகம் விழுங்குகிறார்கள். இவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பீராக அல்லது அவர்களைப் புறக்கணிப்பீராக. நீர் அவர்களைப் புறக்கணித்தால் அவர்கள் உமக்கு கொஞ்சமும் கெடுதி செய்யவே முடியாது. நீர் தீர்ப்பளித்தால், அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிக்கிறான்.

Maide 5:43

(நபியே! இவர்கள்) உம்மை எவ்வாறு தீர்ப்பாளராக ஆக்குகிறார்கள்? அவர்களிடம் தவ்றாத் இருக்கிறது. அதில் அல்லாஹ்வின் சட்டம் இருக்கிறது. பிறகு அதற்கு பின்னர் (புறக்கணித்து) திரும்புகின்றனர். இவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.

Maide 5:44

நிச்சயமாக நாம் 'தவ்றாத்'தை இறக்கினோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கிறது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் பணிந்த நபிமார்கள் அதைக் கொண்டே யூதர்களுக்கு தீர்ப்பளிப்பார்கள். குருமார்களும், பண்டிதர்களும் அல்லாஹ்வின் வேதத்தைக் காக்கும்படி கோரப்பட்டவர்களாகவும், அதன் மீது சாட்சியாளர்களாகவும் அவர்கள் இருந்த காரணத்தால் (அவர்களும் அதைக் கொண்டே தீர்ப்பளிப்பார்கள்). (பண்டிதர்களே!) மக்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கு அஞ்சுங்கள். என் வசனங்களுக்குப் பகரமாக சொற்ப கிரயத்தை வாங்காதீர்கள். எவர் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் நிராகரிப்பவர்கள்!

Maide 5:45

அவர்கள் மீது அதில் விதித்தோம்: "நிச்சயமாக உயிருக்குப் பதிலாக உயிர், கண்ணுக்குப் பதிலாக கண், மூக்குக்குப் பதிலாக மூக்கு, காதுக்குப் பதிலாக காது, பல்லுக்குப் பதிலாக பல், இன்னும் காயங்கள் (எல்லாம் இவ்வாறுதான்) பழிவாங்கப்படும்” எவர் அதை (பழிவாங்குவதை) மன்னிப்பாரோ அது அவருக்கு (பாவங்களின்) பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள்!

Maide 5:46

அவர்களுடைய அடிச்சுவடுகளில் தன் முன்னுள்ள தவ்றாத்தை உண்மைப்படுத்துபவராக மர்யமுடைய மகன் ஈஸாவையும் தொடரச்செய்தோம். அவருக்கு ‘இன்ஜீல்' ஐ கொடுத்தோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. (அதை) தனக்கு முன்னுள்ள தவ்றாத்தை உண்மைப்படுத்தக்கூடியதாக, நேர்வழியாக, அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு ஓர் உபதேசமாக (ஆக்கினோம்).

Maide 5:47

ஆகவே, இன்ஜீலுடையவர்கள் அதில் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவும். எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் பாவிகள்.

Maide 5:48

(நபியே!) தனக்கு முன்னுள்ள வேதத்தை உண்மைப்படுத்தக்கூடியதாக, அதைப் பாதுகாக்கக்கூடியதாக உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை உமக்கு இறக்கினோம். ஆகவே அல்லாஹ் (உமக்கு) இறக்கியதைக் கொண்டே அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பீராக. உமக்கு வந்த உண்மையை விட்டு அவர்களுடைய விருப்பங்களை பின்பற்றாதீர். உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு மார்க்கத்தையும், ஒரு வழியையும் ஏற்படுத்தினோம். அல்லாஹ் நாடி இருந்தால் உங்களை ஒரே ஒரு சமுதாயமாக ஆக்கியிருப்பான். எனினும், உங்களுக்கு அவன் கொடுத்தவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக (இவ்வாறு செய்திருக்கிறான்). ஆகவே, நன்மைகளில் முந்துங்கள். அல்லாஹ்வின் பக்கமே உங்கள் அனைவரின் மீளுமிடம் இருக்கிறது. நீங்கள் எதில் முரண்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அ(ந்த சத்தியத்)தை உங்களுக்கு அறிவிப்பான்.

Maide 5:49

(நபியே!) அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பீராக. அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர். உமக்கு அல்லாஹ் இறக்கியதில் சிலவற்றிலிருந்து உம்மை அவர்கள் திருப்பிவிடுவதை குறித்தும் அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பீராக. அவர்கள் (புறக்கணித்து) திரும்பினால் அறிந்து கொள்வீராக அல்லாஹ் நாடுவதெல்லாம் அவர்களை அவர்களுடைய பாவங்கள் சிலவற்றின் காரணமாக அவர்களை சோதிப்பதைத்தான். நிச்சயமாக, மனிதர்களில் அதிகமானோர் பாவிகள்தான்.

Maide 5:50

அறியாமைக் காலத்தின் சட்டத்தையா அவர்கள் தேடுகின்றனர்? உறுதி கொள்கின்ற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட சட்டத்தால் மிக அழகானவன் யார்?

Maide 5:51

நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறித்தவர்களையும் நண்பர்களாக ஆக்காதீர்கள். அவர்களில் சிலர் சிலரின் நண்பர்கள். உங்களில் எவர் அவர்களுடன் நட்பு கொள்வாரோ, நிச்சயமாக அவர் அவர்களைச் சார்ந்தவர். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.

Maide 5:52

(நபியே!) தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்கள் அவர்களில் (நட்புவைக்க) விரைபவர்களாகக் காண்பீர்! "ஆபத்து எங்களை அடைவதை பயப்படுகிறோம்” என்று கூறுகின்றனர். அல்லாஹ் தன்னிடமிருந்து வெற்றி அல்லது வேறு ஒரு காரியத்தைக் கொண்டு வரலாம். (அது சமயம் அவர்கள்) தங்கள் உள்ளங்களில் மறைத்ததின் மீது துக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள்.

Maide 5:53

நிச்சயமாக நாங்களும் உங்களுடன்தான் என்று அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தவர்கள் இவர்கள்தானா? என்று நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள். அவர்களுடைய (நல்ல) செயல்கள் அழிந்துவிட்டன. ஆகவே (இவர்கள்) நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்.

Maide 5:54

நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரும் தன் மார்க்கத்தை விட்டும் மாறினால் அல்லாஹ் ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள். (அவர்கள்) நம்பிக்கையாளர்களிடம் பணிவானவர்கள்; நிராகரிப்பாளர்களிடம் கண்டிப்பானவர்கள்; அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். பழிப்பவனின் பழிப்பை பயப்படமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன்.

Maide 5:55

உங்கள் நண்பர்களெல்லாம் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இன்னும் தொழுகையை நிலை நிறுத்துகின்ற, ஸகாத்தை கொடுக்கின்ற நம்பிக்கையாளர்கள்தான். இன்னும் அ(ந்த நம்பிக்கை கொண்ட)வர்கள் (அல்லாஹ்விற்குமுன்) தலைகுனிவார்கள்.

Maide 5:56

எவர் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கை கொண்டவர்களையும் நேசிக்கிறார்களோ (அவர்கள் அல்லாஹ்வின் படையினர்.) நிச்சயமாக அல்லாஹ்வின் படையினர்தான் வெற்றியாளர்கள்.

Maide 5:57

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களில், உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டவர்களையும், நிராகரிப்பவர்களையும் நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.

Maide 5:58

நீங்கள் தொழுகைக்கு அழைத்தால் அதை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கின்றனர். அது நிச்சயமாக அவர்கள் (சிந்தித்து) புரியாத மக்கள் என்ற காரணத்தினாலாகும்.

Maide 5:59

வேதக்காரர்களே! "அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்டதையும், (இதற்கு) முன்னர் இறக்கப்பட்டதையும் நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) எங்களை நீங்கள் வெறுக்கிறீர்களா? நிச்சயமாக உங்களில் அதிகமானவர்கள் பாவிகள்” என்று (நபியே!) கூறுவீராக.

Maide 5:60

"அல்லாஹ்விடம் தண்டனையால் இதைவிட மிகக் கெட்டவனை நான் உங்களுக்கு அறிவிக்கவா?” எவர்களை அல்லாஹ் சபித்தானோ, அவர்கள் மீது கோபித்தானோ, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ, இன்னும் ஷைத்தானை வணங்கினார்களோ அவர்கள்தான் தகுதியால் மிகக் கெட்டவர்கள். இன்னும், நேரான பாதையிலிருந்து மிகவும் வழிதவறியவர்கள்.’’

Maide 5:61

அவர்கள் உங்களிடம் வந்தால் "நம்பிக்கை கொண்டோம்” என்று கூறுகின்றனர். (எனினும் அவர்கள்) நிராகரிப்புடன்தான் (மனதில் வைத்து) திட்டமாக நுழைந்தார்கள். திட்டமாக அதனுடன்தான் வெளியேறினார்கள். அவர்கள் மறைத்துக் கொண்டிருப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்.

Maide 5:62

(நபியே!) அவர்களில் அதிகமானவர்களை பாவத்திலும், அநியாயத்திலும், ஆகாத செல்வத்தை விழுங்குவதிலும் விரைபவர்களாக (நீர்) காண்பீர்! அவர்கள் செய்துகொண்டிருந்தது கெட்டுவிட்டது!

Maide 5:63

அவர்களுடைய பாவமான பேச்சிலிருந்தும், விலக்கப்பட்டதை விழுங்குவதிலிருந்தும், குருமார்களும் பண்டிதர்களும் அவர்களை தடை செய்ய வேண்டாமா? அவர்கள் செய்துகொண்டிருந்தது கெட்டுவிட்டது.

Maide 5:64

"அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறினர். அவர்களுடைய கைகள் கட்டப்பட்டன. அவர்கள் கூறியதன் காரணமாக சபிக்கப்பட்டனர். மாறாக, அவனுடைய இரு கைகள் விரிக்கப்பட்டுள்ளன. அவன் நாடியவாறு தர்மம் புரிகிறான். உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது அவர்களில் அதிகமானோருக்கு வரம்பு மீறுவதையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்தும். (நாம்) அவர்களுக்கு மத்தியில் பகைமையையும், வெறுப்பையும் மறுமை நாள் வரை (நிலைத்திருக்கும்படி) ஏற்படுத்தினோம். அவர்கள் போருக்கு நெருப்பை மூட்டும்போதெல்லாம் அல்லாஹ் அதை அணைத்து விட்டான். அவர்கள் பூமியில் கலகம் செய்வதற்காக விரைகிறார்கள். அல்லாஹ், கலகம் செய்பவர்களை நேசிக்கமாட்டான்.

Maide 5:65

நிச்சயமாக, வேதக்காரர்கள் (இத்தூதரை) நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை அஞ்சி இருந்தால் அவர்களை விட்டும் அவர்களுடைய பாவங்களை நிச்சயமாக அகற்றிடுவோம். இன்பம் நிறைந்த சொர்க்கங்களில் அவர்களை நிச்சயமாக நுழைத்திடுவோம்.

Maide 5:66

தவ்றாத்தையும், இன்ஜீலையும், அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு இறக்கப்பட்ட (இந்த வேதத்)தையும் அவர்கள் நிலைநிறுத்தி இருந்தால் அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களுடைய கால்களுக்கு கீழிருந்தும் நிச்சயமாக புசித்திருப்பார்கள். அவர்களில் ஒரு நேர்மையான கூட்டம் இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் அவர்கள் செய்பவை கெட்டுவிட்டன.

Maide 5:67

தூதரே! உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை எடுத்துரைப்பீராக. நீர் (அவ்வாறு) செய்யவில்லையென்றால் அவனுடைய தூதை நீர் எடுத்துரைக்கவில்லை. மக்களிடமிருந்து, அல்லாஹ் உம்மைக் காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களான சமுதாயத்தை நேர்வழி செலுத்த மாட்டான்.

Maide 5:68

(நபியே!) கூறுவீராக, "வேதக்காரர்களே! தவ்றாத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும் நீங்கள் நிலைநிறுத்தும் வரை நீங்கள் ஒரு விஷயத்திலும் இல்லை.” உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது அவர்களில் அதிகமானவர்களுக்கு வரம்பு மீறுவதையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது. ஆகவே, நிராகரிப்பாளர்களான சமுதாயத்தைப் பற்றி (நீர்) கவலைப்படாதீர்.

Maide 5:69

நம்பிக்கையாளர்கள், யூதர்கள், சாபியீன்கள், கிறித்தவர்கள் (இவர்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு, நன்மை செய்தாரோ அவர்கள் மீது ஒரு பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

Maide 5:70

திட்டமாக இஸ்ரவேலர்களின் உறுதிமொழியை வாங்கினோம், அவர்களிடம் (பல) தூதர்களை அனுப்பினோம். அவர்களுடைய மனம் விரும்பாதவற்றை ஒரு தூதர் அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் (தூதர்களில்) ஒரு வகுப்பாரை பொய்ப்பித்தனர், ஒரு வகுப்பாரை கொல்கின்றனர்.

Maide 5:71

தண்டனை ஏற்படாது என்று அவர்கள் எண்ணினர். ஆகவே, குருடாகினர், செவிடாகினர். பிறகு, அல்லாஹ் அவர்கள் மீது பிழை பொறுத்தான். பிறகும், அவர்களில் அதிகமானோர் குருடாகினர், செவிடாகினர். அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.

Maide 5:72

"நிச்சயமாக அல்லாஹ், அவன் மர்யமுடைய மகன் மஸீஹ்தான்” என்று கூறியவர்கள் திட்டவட்டமாக நிராகரித்தனர். (ஆனால்) மஸீஹ் கூறினார்: இஸ்ரவேலர்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமான அல்லாஹ்வை வணங்குங்கள், நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறாரோ அவர் மீது திட்டமாக, அல்லாஹ் சொர்க்கத்தை தடுத்து விடுகிறான். அவருடைய தங்குமிடம் நரகம்தான். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்களில் எவரும் இல்லை.

Maide 5:73

"நிச்சயமாக அல்லாஹ் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய) மூவரில் ஒருவன்தான்” என்று கூறியவர்கள் திட்டவட்டமாக நிராகரித்தார்கள். ஒரே ஒரு வணக்கத்திற்குரியவனைத் தவிர வேறு வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. அவர்கள் கூறுவதிலிருந்து அவர்கள் விலகவில்லையெனில் துன்புறுத்தும் வேதனை அவர்களில் நிராகரித்தவர்களை நிச்சயமாக அடையும்.

Maide 5:74

(இவர்கள் இப்பாவத்திலிருந்து) திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்பமாட்டார்களா? அவனிடம் மன்னிப்புக் கோரமாட்டார்களா? அல்லாஹ், மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.

Maide 5:75

மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரே தவிர வேறில்லை. இவருக்கு முன்னர் தூதர்கள் சென்றுவிட்டனர். அவருடைய தாய் ஒரு மகா உண்மையாளர். இருவரும் உணவு சாப்பிட்டு வந்தனர். நாம் அத்தாட்சிகளை அவர்களுக்கு எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்று (நபியே!) கவனிப்பீராக. பிறகு, அவர்கள் எவ்வாறு (சத்தியத்தை விட்டு) திருப்பப்படுகின்றனர் என்று(ம்) கவனிப்பீராக.

Maide 5:76

"அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு தீங்களிப்பதற்கும் பலனளிப்பதற்கும் உரிமை பெறாதவற்றை வணங்குகிறீர்களா?” என்று (நபியே!) கூறுவீராக. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன்.

Maide 5:77

"வேதக்காரர்களே! உண்மைக்கு முரணாக, உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள். முன்பு வழிதவறிவிட்ட சமுதாயத்தின் விருப்பங்களை பின்பற்றாதீர்கள். அவர்கள் பலரை வழி கெடுத்தனர், நேரான பாதையிலிருந்து (தாங்களும்) வழி தவறினர்.” என்று (நபியே!) கூறுவீராக.

Maide 5:78

இஸ்ரவேலர்களில் நிராகரித்தவர்கள் தாவூத் இன்னும் மர்யமின் மகன் ஈஸாவின் நாவினால் சபிக்கப்பட்டனர். அது அவர்கள் மாறுசெய்ததாலும் (இறை சட்டங்களை) மீறுபவர்களாக இருந்ததாலுமாகும்.

Maide 5:79

அவர்கள் செய்த தீமையை விட்டு ஒருவர் மற்றவரை தடுக்காதவர்களாக இருந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தவை உறுதியாகக் கெட்டு விட்டது!

Maide 5:80

அவர்களில் அதிகமானோர் நிராகரிப்பவர்களிடம் நட்புவைப்பதை (நபியே!) காண்பீர்! அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும்படியாக அவர்களுக்கு அவர்களுடைய ஆன்மாக்கள் முற்படுத்தியன கெட்டு விட்டது. வேதனையில் அவர்கள் நிரந்தரமானவர்கள்.

Maide 5:81

அல்லாஹ்வையும், நபியையும் அவருக்கு இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்பவர்களாக அவர்கள் இருந்திருந்தால் அ(ந்நிராகரிப்ப)வர்களை நண்பர்களாக (பொறுப்பாளர்களாக) எடுத்திருக்கமாட்டார்கள். என்றாலும், அவர்களில் அதிகமானோர் பாவிகள் ஆவர்.

Maide 5:82

(நபியே!) மக்களில் யூதர்களையும், இணைவைப்பவர்களையும் நம்பிக்கையாளர்களுக்கு பகைமையில் கடுமையானவர்களாக காண்பீர்! நிச்சயமாக நீர் நாங்கள் கிறித்தவர்கள் என்று கூறுபவர்களை நேசத்தில் நம்பிக்கையாளர்களுக்கு அவர்களில் மிக நெருங்கியவர்களாகக் காண்பீர்! நிச்சயமாக அவர்களில் குருக்களும், துறவிகளுமாக இருப்பதும், நிச்சயமாக அவர்கள் பெருமை கொள்ள மாட்டார்கள் என்பதும்தான் அதற்குக் காரணம்.

Maide 5:83

தூதருக்கு இறக்கப்பட்டதை அவர்கள் செவியுற்றால், உண்மையை அவர்கள் அறிந்த காரணத்தினால் அவர்களின் கண்களை அவை கண்ணீரால் நிரம்பி வழியக்கூடியதாகக் காண்பீர். "எங்கள் இறைவா! (இத்தூதரையும் இவ்வேதத்தையும்) நம்பிக்கை கொண்டோம். ஆகவே, சாட்சியாளர்களுடன் எங்களை(யும்) பதிவு செய்!” என்று கூறுகின்றனர்.

Maide 5:84

"அல்லாஹ்வையும் (அவனிடமிருந்து) நமக்கு வந்த சத்தியத்தையும் நாங்கள் நம்பிக்கைகொள்ளாதிருக்கவும், எங்களையும் எங்கள் இறைவன் நல்ல மக்களுடன் சேர்ப்பதை நாங்கள் ஆசைப்படாமல் இருக்கவும் எங்களுக்கு என்ன நேர்ந்தது?” (என்று கூறுகின்றனர்).

Maide 5:85

ஆகவே, அவர்கள் கூறியதன் காரணமாக, அதன்கீழ் நதிகள் ஓடுகிற சொர்க்கங்களை அல்லாஹ் அவர்களுக்குப் பிரதிபலனாக அளித்தான். அதில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். இது நல்லறம்புரிபவர்களுடைய கூலியாகும்.

Maide 5:86

(நம் தூதரை) நிராகரித்து, நம் வசனங்களை பொய்ப்பித்தவர்கள் அவர்கள் நரகவாசிகள்தான்.

Maide 5:87

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கிய நல்லவற்றை ஆகாதவையாக (ஹராமாக) ஆக்காதீர்கள்; வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், வரம்புமீறிகளை நேசிக்கமாட்டான்.

Maide 5:88

அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றில் அனுமதிக்கப்பட்ட நல்லதை புசியுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்ட அல்லாஹ்வை அஞ்சுங்கள்.

Maide 5:89

உங்கள் சத்தியங்களில் வீணானதற்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். எனினும், நீங்கள் சத்தியங்களை உறுதிப்படுத்தி (பின்னர் அதை மீறி)யதற்காக உங்களைத் தண்டிப்பான். அதற்குப் பரிகாரமாவது: நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு உணவளிப்பதில் நடுத்தரமானதிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது; அல்லது அவர்களுக்கு ஆடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலையிடுவதாகும், (இவற்றில் எதையும் நிறைவேற்ற) அவர் வசதி பெறவில்லையெனில் மூன்று நாட்கள் நோன்பிருப்பது (அவசியம்). நீங்கள் சத்தியம் செய்(து அதை முறித்)தால் (முறிக்கப்பட்ட) உங்கள் சத்தியங்களுக்கு பரிகாரமாகும் இது. உங்கள் சத்தியங்களை காப்பாற்றுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை இவ்வாறு உங்களுக்கு விவரிக்கிறான்.

Maide 5:90

நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மது, சூது, சிலைகள், (ஜோசிய) அம்புகள் ஷைத்தானுடைய செயல்களில் உள்ள அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே, நீங்கள் வெற்றி பெறுவதற்காக இவற்றை விட்டு விலகுங்கள்.

Maide 5:91

நிச்சயமாக ஷைத்தான் நாடுவதெல்லாம் மதுவினாலும் சூதாட்டத்தினாலும் உங்களுக்கு மத்தியில் பகைமையையும் வெறுப்பையும் உண்டு பண்ணுவதையும், அல்லாஹ்வின் ஞாபகத் திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுப்பதையும்தான். ஆகவே, நீங்கள் (அவற்றிலிருந்து) விலகுபவர்களா?

Maide 5:92

அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள்; தூதருக்கு கீழ்ப்படியுங்கள்; (பாவங்களை விட்டு விலகி) எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் (அறிவுரையை புறக்கணித்து) திரும்பினால் (நம் கட்டளைகளை, உங்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பது தான் நம் தூதர் மீது கடமையாகும் என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள்.

Maide 5:93

நம்பிக்கை கொண்டு நன்மைகளைச் செய்தவர்கள் மீது குற்றமில்லை. (தடுக்கப்பட்ட உணவை தடை வருவதற்கு முன்பு) அவர்கள் புசித்ததில், (தடைக்குப் பின்பு அதிலிருந்து) அவர்கள் விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்து, பிறகு அல்லாஹ்வை அஞ்சி, நம்பிக்கை கொண்டு, பிறகு, அல்லாஹ்வை அஞ்சி, (பிறருக்கும்) நல்லறம் செய்தால், (தடுக்கப்பட்டவற்றை அவர்கள் முன்பு புசித்தது மன்னிக்கப்படும்). அல்லாஹ் நல்லறம் புரிவோரை நேசிக்கிறான்.

Maide 5:94

நம்பிக்கையாளர்களே! மறைவில் தன்னை பயப்படுபவரை அல்லாஹ் அறிவதற்காக (நீங்கள் இஹ்ராமில் இருக்கும் போது) வேட்டைகளில் உங்கள் கரங்களும், உங்கள் ஈட்டிகளும் அடைந்து விடுகின்ற சில வேட்டைகளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். இதற்குப் பின்பு எவர் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறினாரோ அவருக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு.

Maide 5:95

நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராமுடையவர்களாக இருக்கும் போது வேட்டை(ப் பிராணி)களைக் கொல்லாதீர்கள். உங்களில் எவர் அதை வேண்டுமென்றே கொன்றாரோ (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளில் தான் கொன்றதற்கு ஒப்பான(தை பரிகாரமாக கொடுப்பதுதான் அவர)து தண்டனையாகும். உங்களில் நேர்மையான இருவர் அதற்கு தீர்ப்பளிப்பர். கஅபாவை அடைகிற பலியாக (அது இருக்கவேண்டும்). அல்லது (அதன் மதிப்பின் அளவிற்கு) ஏழைகளுக்கு உணவளிப்பது பரிகாரமாகும். அல்லது (உணவளிக்க வசதியில்லாதவன்) நோன்பால் அதற்குச் சமமானது (நோற்க வேண்டும்). இது அவன் தன் செயலின் கெட்ட முடிவை அனுபவிப்பதற்காக ஆகும். முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். எவர் (குற்றத்தின் பக்கம்) மீண்டாரோ அல்லாஹ் அவரை தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன், தண்டிப்பவன் ஆவான்.

Maide 5:96

(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு பயனளிப்பதற்காக கடலில் வேட்டையாடுவதும், அதை புசிப்பதும் (இஹ்ராமிலுள்ள) உங்களுக்கும் (மற்ற) பயணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. (எனினும்,) நீங்கள் இஹ்ராமுடையவர்களாக இருக்கும் போதெல்லாம் தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள், அவன் பக்கமே நீங்கள் ஒன்றுதிரட்டப்படுவீர்கள்.

Maide 5:97

மக்களுக்கு புனித வீடாகிய கஅபாவையும் புனித மாதத்தையும், (மாலையிடப்படாத) பலிப் பிராணியையும், மாலையிடப்பட்ட பலிப் பிராணிகளையும் வாழ்வளிக்கக்கூடியதாக அல்லாஹ் ஆக்கினான். அது, வானங்களிலுள்ளதையும் பூமியிலுள்ளதையும் நிச்சயமாக அல்லாஹ் அறிகிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காக ஆகும்.

Maide 5:98

நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன், நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Maide 5:99

தூதர் மீது கடமையில்லை (தூதை) எடுத்துரைப்பது தவிர. நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.

Maide 5:100

(நபியே!) கூறுவீராக, "தீயது அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்தினாலும், தீயதும் நல்லதும் சமமாகாது. ஆகவே, அறிவாளிகளே! நீங்கள் வெற்றிபெறுவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்.”

Maide 5:101

நம்பிக்கையாளர்களே! (நபியிடம்) பல விஷயங்கள் பற்றி கேள்வி கேட்காதீர்கள். அவை உங்களுக்கு வெளியாக்கப்பட்டால் உங்களுக்கு வருத்தமளிக்கும். குர்ஆன் இறக்கப்படும் நேரத்தில் அவற்றைப் பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளியாக்கப்படும். அவற்றை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் சகிப்பாளன்.

Maide 5:102

உங்களுக்கு முன்பு சில மக்கள் திட்டமாக அவற்றைப் பற்றி (கேள்வி) கேட்டார்கள். (அவை விவரிக்கப்பட்ட) பிறகு அவர்கள் அவற்றை நிராகரிப்பவர்களாக மாறிவிட்டனர்.

Maide 5:103

பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் (சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட) இவற்றில் எதையும் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனினும், நிராகரிப்பவர்கள் அல்லாஹ் மீது பொய்யை கற்பனை செய்கின்றனர். அவர்களில் அதிகமானோர் (உண்மையை சிந்தித்து) புரியமாட்டார்கள்.

Maide 5:104

"அல்லாஹ் இறக்கியதின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் வாருங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், "எங்கள் மூதாதைகளை எதன் மீது கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்.” எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறியாமலும், நேர்வழிபெறாமலும் இருந்தாலுமா (அம்மூதாதைகளை இவர்கள் பின்பற்றுவார்கள்)?

Maide 5:105

நம்பிக்கையாளர்களே! உங்களை நீங்கள் காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேர்வழி சென்றால் வழிகெட்டவர் உங்களுக்கு தீங்கிழைக்கமாட்டார். உங்கள் அனைவருடைய மீளுமிடமும் அல்லாஹ்வின் பக்கமே இருக்கிறது. ஆகவே, (அவன்) நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்.

Maide 5:106

நம்பிக்கையாளர்களே! உங்களில் ஒருவருக்கு மரணம் சமீபித்தால் மரண சாசனம் கூறும் நேரத்தில் உங்களில் நீதமான இருவர் உங்கள் மத்தியில் சாட்சியாக இருக்க வேண்டும். அல்லது நீங்கள் பூமியில் பயணம் செய்து, (அப்பயணத்தில்)உங்களை மரணம் என்ற சோதனை வந்தடைந்தால் (சாட்சிக்காக முஸ்லிமான இருவர் கிடைக்காவிடில் முஸ்லிம்களாகிய) நீங்கள் அல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்க வேண்டும். (சாட்சிகளில், உங்களுக்கு சந்தேகமேற்பட்டால்) அவ்விருவரையும் (அஸர்) தொழுகைக்குப் பின்னர் தடுத்து வையுங்கள். அவ்விருவரும், "அ(ந்த சாட்சி கூறிய)தற்குப் பகரமாக ஓர் ஆதாயத்தையும் வாங்கமாட்டோம், அவர் (எங்கள்) உறவினராக இருந்தாலும் சரியே. நாங்கள் அல்லாஹ்விற்காக சாட்சி கூறியதில் எதையும் மறைக்க மாட்டோம். (அவ்வாறு செய்திருந்தால்) அப்போது நிச்சயமாக நாங்கள் பாவிகளில் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்வின் மீது (அவ்விருவரும்) சத்தியம் செய்ய வேண்டும்.

Maide 5:107

(இவ்வாறு அவர்கள் சத்தியம் செய்த பிறகு) நிச்சயமாக அவ்விருவரும் (பொய் கூறி) பாவத்திற்குரியவர்களாகி விட்டனர் என்று கண்டுபிடிக்கப்பட்டால் (இந்த பொய் சாட்சியால் எவருக்கு நஷ்டமேற்பட்டு, சத்தியம் செய்யும்) உரிமை ஏற்பட்டவர்களில் (இறந்தவருக்கு) நெருங்கிய வேறு இரு வாரிசுகள் (முன்பு சத்தியம் செய்த) அவ்விருவருடைய இடத்தில் நின்று கொண்டு "அவ்விருவரின் சாட்சியத்தைவிட நிச்சயமாக எங்கள் சாட்சியம்தான் மிக உண்மையானது. நாங்கள் வரம்பு மீறவில்லை. (அவ்வாறு மீறினால்) அப்போது நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களில்தான் ஆகிவிடுவோம்” என்று அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவேண்டும்.

Maide 5:108

அது, சாட்சியத்தை அதற்குரிய முறையில் கொண்டு (அவர்கள்) வருவதற்கும் அல்லது அவர்களுடைய சத்தியங்களுக்குப் பின்னர் சத்தியங்கள் மறுக்கப்படும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் மிக்க சுலபமானதாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள், செவிசாயுங்கள். பாவிகளான கூட்டத்தை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்.

Maide 5:109

அல்லாஹ் தூதர்களை ஒன்று சேர்க்கும் நாளில், “நீங்கள் என்ன பதில் கூறப்பட்டீர்கள்?” என்று (அவர்களிடம்) கூறுவான். எங்களுக்கு அறவே ஞானமில்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றை மிக மிக அறிந்தவன்” என்று (அவர்கள் பதில்) கூறுவார்கள்.

Maide 5:110

அல்லாஹ், “மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் மீதும், உம் தாய் மீதுமுள்ள என் அருளை நினைவு கூருவீராக! என்று கூறிய சமயத்தை, நினைவு கூருங்கள்! (ஈஸாவே!) பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு உம்மை நான் பலப்படுத்திய சமயத்தை நினைவு கூருவீராக! தொட்டிலி(ல் குழந்தையாக இருந்த சமயத்தி)லும் வாலிபத்திலும் நீர் பேசினீர், இன்னும் எழுதுவதையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் நான் உமக்குக் கற்பித்த சமயத்தை நினைவு கூருவீராக! நீர் என் அனுமதியினால் களிமண்ணில் பறவையின் உருவத்தைப் போல் படைத்து, அதில் நீர் ஊத, அது என் அனுமதியினால் பறவையாக ஆகும்; பிறவிக் குருடனையும், வெண்குஷ்டரையும் என் அனுமதியினால் நீர் சுகமாக்கிய சமயத்தை நினைவு கூருவீராக! என் அனுமதியினால் நீர் மரணித்தவர்களை வெளியாக்கிய சமயத்தை நினைவு கூருவீராக! இஸ்ரவேலர்களை உம்மை விட்டு நான் தடுத்த சமயத்தை நினைவு கூருவீராக. நீர் தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டு வர, அவர்களில் நிராகரித்தவர்கள் இது தெளிவான சூனியம் தவிர வேறல்ல என்று கூறிய சமயத்தை நினைவு கூருவீராக!

Maide 5:111

என்னையும், என் தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று (உமது) சிஷ்யர்களுக்கு நான் வஹ்யி அறிவித்த சமயத்தை நினைவு கூருவீராக! (அதற்கவர்கள்) நம்பிக்கை கொண்டோம்; நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு (நீர்) சாட்சி அளிப்பீராக! என்று (உம்மிடம்) கூறினார்கள்.

Maide 5:112

சிஷ்யர்கள் “மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் இறைவன், வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவுத் தட்டை இறக்குவதற்கு இயலுவானா?” என்று கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! (அதற்கு ஈஸா) “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்” என்று கூறினார்.

Maide 5:113

(அதற்கவர்கள்) அதிலிருந்து நாங்கள் புசிப்பதற்கு, எங்கள் உள்ளங்கள் திருப்தியடைவதற்கு, நீர் எங்களிடம் உண்மை கூறினீர் என்று நாங்கள் அறிவதற்கும், சாட்சியாளர்களில் நாங்கள் ஆகிவிடுவதற்கும் நாடுகிறோம் என்று கூறினர்.

Maide 5:114

மர்யமுடைய மகன் ஈஸா கூறினார்: “அல்லாஹ்வே, எங்கள் இறைவா! வானத்திலிருந்து ஓர் உணவுத் தட்டை எங்கள் மீது இறக்கு! எங்களுக்கும், எங்கள் முன் இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன்னிடமிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். எங்களுக்கு உணவளி! நீ உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன்.”

Maide 5:115

அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக நான் அதை உங்கள் மீது இறக்குவேன். ஆகவே, பின்னர் உங்களில் எவர் நிராகரிப்பாரோ, உலகத்தாரில் ஒருவருக்கும் கொடுக்காத வேதனையை நிச்சயம் நான் அவருக்கு கொடுப்பேன்.”

Maide 5:116

அல்லாஹ் கூறும் சமயத்தை நினைவு கூருங்கள்: “மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வை அன்றி என்னையும், என் தாயையும் வணங்கப்படும் (இரு) தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மக்களுக்கு நீர் கூறினீரா?” (அவர்) கூறுவார்: “நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகுதி இல்லாததை நான் கூறுவது எனக்கு ஆகாது. நான் அதை கூறியிருந்தால் திட்டமாக அதை நீ அறிந்திருப்பாய்! என் உள்ளத்திலுள்ளதை நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை அறிய மாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவற்றை மிக மிக அறிந்தவன்.

Maide 5:117

நீ எனக்கு ஏவிய, “என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்பதைத் தவிர (வேறு எதையும்) அவர்களுக்கு நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்தவரை அவர்கள் மீது சாட்சியாளனாக இருந்தேன். நீ என்னைக் கைப்பற்றியபோது நீதான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாவற்றின் மீதும் சாட்சியாளன்.

Maide 5:118

அவர்களை நீ வேதனை செய்தால் நிச்சயமாக அவர்கள் உன் அடியார்கள்! அவர்களை நீ மன்னித்தால்... நிச்சயமாக நீதான் மிகைத்தவன், ஞானவான்.

Maide 5:119

அல்லாஹ் கூறுவான்: உண்மையாளர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாள் இதுவாகும், அவற்றின் கீழ் நதிகள் ஓடுகிற சொர்க்கங்களும் அவர்களுக்கு உண்டு. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமானவர்கள், அவர்களைப் பற்றி அல்லாஹ் மகிழ்ச்சியடைவான், அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சி அடைவார்கள். இதுதான் மகத்தான வெற்றி.

Maide 5:120

வானங்கள், பூமி, இன்னும் அவற்றில் உள்ளவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.

Enam 6:1

புகழ் (எல்லாம்) வானங்களையும், பூமியையும் படைத்த, இருள்களையும், ஒளியையும் உண்டாக்கிய அல்லாஹ்வுக்குரியதே! (இதற்குப்) பிறகு(ம்), நிராகரிப்பவர்கள் தங்கள் இறைவனுக்கு (பொய் தெய்வங்களை) சமமாக்குகின்றனர்.

Enam 6:2

அவன் உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்தான். பிறகு, ஒரு தவணையை விதித்தான். அவனிடம் குறிப்பிட்ட (வேறு) ஒரு தவணையும் உண்டு. (இதற்குப்) பிறகு(ம்), நீங்கள் சந்தேகிக்கிறீர்கள்.

Enam 6:3

அவன்தான் வானங்களிலும், பூமியிலும் (வணங்கத் தகுதியான) அல்லாஹ் ஆவான். (அவன்) உங்கள் இரகசியத்தையும் உங்கள் பகிரங்கத்தையும் நன்கறிவான். இன்னும் நீங்கள் செய்வதையும் நன்கறிவான்.

Enam 6:4

அவர்களுக்கு தங்கள் இறைவனின் வசனங்களிலிருந்து ஒரு வசனமும் வருவதில்லை, அதை அவர்கள் புறக்கணிப்பவர்களாக இருந்தே தவிர.

Enam 6:5

ஆகவே, சத்தியத்தை -அது அவர்களிடம் வந்தபோது- பொய்ப்பித்தனர். அவர்கள் எதை பரிகசித்துக் கொண்டிருந்தார்களோ அதன் (உண்மை) செய்திகள் அவர்களிடம் வரும்.

Enam 6:6

அவர்களுக்கு முன்னர் எத்தனையோ சமுதாயத்தை அழித்தோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் உங்களுக்கு நாம் வசதியளிக்காத அளவு அவர்களுக்கு வசதி அளித்தோம்; அவர்கள் மீது தாரை தாரையாக மழையை அனுப்பினோம்; நதிகளை அவர்களுக்குக் கீழ் ஓடும்படி ஆக்கினோம். ஆகவே, அவர்களுடைய பாவங்களினால் அவர்களை அழித்தோம். அவர்களுக்குப் பின்னர் மற்ற சமுதாயத்தை ஏற்படுத்தினோம்.

Enam 6:7

ஓர் ஓளையில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம்மீது இறக்கி, அதை அவர்கள் தங்கள் கரங்களால் தொட்டுப் பார்த்தாலும், “இது தெளிவான சூனியமே தவிர (உண்மையான வேதம்) இல்லை” என்று நிராகரிப்பவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்.

Enam 6:8

அவர் மீது ஒரு வானவர் இறக்கப்பட வேண்டாமா? என்றும் கூறினர். நாம் ஒரு வானவரை இறக்கினால் (அவர்களது) காரியம் முடிக்கப்பட்டுவிடும். பிறகு, அவகாசம் அளிக்கப்படமாட்டார்கள்.

Enam 6:9

(தூதருக்கு துணையாக அனுப்பப்படும்) அவரை ஒரு வானவராக ஆக்கினாலும், அவரை(யும்) ஒரு ஆடவராகத்தான் ஆக்குவோம்; (ஏனெனில் வானவரை அவருடைய அசல் உருவத்தில் இவர்களால் பார்க்க முடியாது. அப்போது) அவர்கள் எதை (தங்கள் மீது) குழப்புகிறார்களோ அதையே அவர்கள் மீது (நாமும்) குழப்பிவிடுவோம். (மீண்டும் பழைய சந்தேகத்திற்கே அவர்கள் ஆளாகி விடுவர்.)

Enam 6:10

திட்டவட்டமாக உமக்கு முன்னர் (பல) தூதர்கள் பரிகசிக்கப்பட்டனர். அவர்களில் ஏளனம் செய்தவர்களை அவர்கள் பரிகசித்துக் கொண்டிருந்தது சூழ்ந்தது.

Enam 6:11

(நபியே!) கூறுவீராக: “நீங்கள் பூமியில் செல்லுங்கள். பிறகு, பொய்ப்பிப்பவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது? என்று பாருங்கள்”

Enam 6:12

“வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாருக்குரியன?” எனக் கூறுவீராக. (நபியே நீர்) கூறுவீராக: (அவை) “அல்லாஹ்வுக்குரியனவே!” கருணை புரிவதை (அவன்) தன் மீது கடமையாக்கினான். நிச்சயமாக உங்களை மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமேயில்லை. தங்களையே நஷ்டப்படுத்தியவர்கள், அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.

Enam 6:13

இரவிலும், பகலிலும் தங்கியவை அவனுக்குரியனவே! அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.

Enam 6:14

(நபியே!) கூறுவீராக: வானங்கள், பூமியின் படைப்பாளனாகிய அல்லாஹ் அல்லாதவரையா பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேன்? அவன்தான் உணவளிக்கிறான்; அவனுக்கு உணவளிக்கப்படுவதில்லை. (மேலும்) கூறுவீராக: (அல்லாஹ்வுக்கு முற்றிலும்) பணிந்தவர்களில் முதலாமவனாக நான் ஆகவேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளேன். (நபியே) இணைவைப்பவர்களில் நிச்சயம் நீர் ஆகிவிடாதீர்.

Enam 6:15

(நபியே!) கூறுவீராக: “என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான ஒரு நாளின் வேதனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.”

Enam 6:16

அந்நாளில் எவரை விட்டும் (வேதனை) தடுக்கப்படுகிறதோ அவருக்கு நிச்சயமாக (அல்லாஹ்) அருள்புரிந்து விட்டான். இதுதான் தெளிவான வெற்றியாகும்.

Enam 6:17

(நபியே!) அல்லாஹ் உம்மை ஒரு சிரமத்தைக் கொண்டு தொட்டால், அவனைத் தவிர அதை நீக்குபவர் அறவே இல்லை. உம்மை ஒரு நன்மையைக்கொண்டு தொட்டால் (அதைத் தடுப்பவருமில்லை), அவன் எல்லாவற்றின் மீது பேராற்றலுடையவன்.

Enam 6:18

அவன்தான், தன் அடியார்கள் மேல் ஆதிக்கமுடையவன். அவன்தான் ஞானவான், ஆழ்ந்தறிந்தவன்.

Enam 6:19

(நபியே!) கூறுவீராக: “எந்த ஒரு பொருள் சாட்சியால் மிகப் பெரியது?” (நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் (சாட்சியால் மிகப் பெரியவன்)! (அவன்) எனக்கும் உங்களுக்குமிடையில் சாட்சியாளன். இந்த குர்ஆன் எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது, இதன் மூலம் உங்களையும், அது சென்றடைந்தவரையும் நான் எச்சரிப்பதற்காக. நிச்சயமாக நீங்கள், அல்லாஹ்வுடன் வணங்கப்படும் வேறு கடவுள்கள் இருப்பதாக சாட்சி கூறுகிறீர்களா?” (நபியே!) கூறுவீராக: “(நான்) சாட்சி கூறமாட்டேன்!” (நபியே நீர்) கூறுவீராக: “அவனெல்லாம் வணங்கப்படும் ஒரே ஒரு கடவுள்தான். நீங்கள் இணைவைப்பவற்றிலிருந்து நிச்சயமாக நான் விலகியவன்.”

Enam 6:20

(முன்னர்) வேதத்தை நாம் எவர்களுக்கு கொடுத்தோமோ அவர்கள் தங்கள் குழந்தைகளை அறிவதைப் போல் அதை (-அல்லாஹ் ஒருவன்தான் இறைவன் என்பதையும் நபி உண்மையானவர் என்பதையும்) அறிவார்கள். தங்களுக்கு நஷ்டமிழைத்தவர்கள், அவர்கள் (அதை) நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.

Enam 6:21

அல்லாஹ்வின் மீது ஒரு பொய்யை இட்டுக்கட்டியவனை விட அல்லது அவனுடைய வசனங்களை பொய்ப்பித்தவனைவிட மகா அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.

Enam 6:22

நாம் அவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டும் நாளில். பிறகு, இணைவைத்தவர்களை நோக்கி, “(கடவுள்கள் என) நீங்கள் எண்ணிக்கொண்டிருந்த உங்கள் இணைகள் எங்கே?” என்று கூறுவோம்.

Enam 6:23

பிறகு, “எங்கள் இறைவா! அல்லாஹ் மீது சத்தியமாக நாங்கள் இணைவைப்பவர்களாக இருக்கவில்லை!” என்று அவர்கள் கூறுவதைத் தவிர அவர்களுடைய சோதனை(யில் பதில் வேறு) இருக்காது.

Enam 6:24

அவர்கள் தங்கள் மீதே எவ்வாறு பொய் கூறினர்; அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை அவர்களை விட்டு எவ்வாறு மறைந்துவிட்டன என்பதை (நபியே) கவனிப்பீராக!

Enam 6:25

(நபியே!) உம் பக்கம் செவிசாய்ப்பவரும் அவர்களில் உண்டு. அவர்களுடைய உள்ளங்களில் அதை புரிந்துகொள்வதற்கு (தடையாக) திரைகளையும், அவர்களுடைய காதுகளில் செவிட்டையும் ஆக்கினோம். எல்லா அத்தாட்சிகளையும் அவர்கள் பார்த்தாலும் அவற்றை (அவர்கள்) நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். (நபியே!) முடிவாக, அவர்கள் உம்மிடம் தர்க்கித்தவர்களாக வந்தால் நிராகரித்த (அ)வர்கள், “இவை முன்னோர்களின் கட்டுக்கதைகளைத் தவிர (வேறு) இல்லை” என்றே கூறுவார்கள்.

Enam 6:26

அவர்கள் இதிலிருந்து தடுக்கின்றனர்; இதைவிட்டு தூரமாகின்றனர். (அவர்கள்) தங்களையே தவிர (பிறரை) அழித்துக் கொள்வதில்லை. (அவர்கள் இதை) உணர மாட்டார்கள்.

Enam 6:27

நரகத்தின் முன் அவர்கள் நிறுத்தப்படும் போது, (நபியே! நீர் அவர்களைப்) பார்த்தால்... “நாங்கள் திருப்(பி அனுப்)பப்பட வேண்டுமே! எங்கள் இறைவனின் வசனங்களை பொய்ப்பிக்க மாட்டோமே; நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோமே” என்று (அவர்கள்) கூறுவார்கள்.

Enam 6:28

(நிலைமை அவர்கள் எண்ணியது போன்று) அல்ல! முன்னர் (அவர்கள்) மறைத்திருந்தவை அவர்களுக்கு வெளிப்படும். அவர்கள் (உலகிற்கு) திருப்பப்பட்டால், அவர்கள் எதைவிட்டு தடுக்கப்பட்டார்களோ அதற்கே மீளுவார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான்.

Enam 6:29

"இது நம் உலக வாழ்க்கையைத் தவிர வேறில்லை. நாம் (இறந்தபின்) எழுப்பப்படுபவர்களாகவும் இல்லை” என்று கூறினர்.

Enam 6:30

(அவர்கள்) தங்கள் இறைவனுக்கு முன் நிறுத்தப்படும்போது நீர் (அவர்களைப்)பார்த்தால்... (அப்போது இறைவன் "விசாரணை நாளாகிய) இது உண்மை இல்லையா?” என்று கூறுவான். அவர்கள், "எங்கள் இறைவன் சத்தியமாக! ஏனில்லை. (உண்மைதான்)” எனக் கூறுவர். "ஆகவே, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால் வேதனையை சுவையுங்கள்” என்று (இறைவன்) கூறுவான்.

Enam 6:31

அல்லாஹ்வின் சந்திப்பை பொய்ப்பித்தவர்கள் நஷ்டமடைந்து விட்டனர். முடிவில், திடீரென அவர்களுக்கு (விசாரணைக்) காலம் வந்தால், "நாங்கள் (நன்மைகளில்) எவற்றில் குறைசெய்தோமோ அதனால் நேர்ந்த எங்கள் துக்கமே!” என்று கூறுவர். அவர்களுமோ தங்கள் பாவங்களைத் தங்கள் முதுகுகள் மீது சுமப்பார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் சுமப்பது மிகக் கெட்டுவிட்டது.

Enam 6:32

உலக வாழ்வு விளையாட்டும் கேளிக்கையும் தவிர வேறில்லை! (அல்லாஹ்வை) அஞ்சுபவர்களுக்கு மறுமை வீடுதான் மிக மேலானது. நீங்கள் (சிந்தித்துப்) புரியவேண்டாமா?

Enam 6:33

(நபியே!) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உமக்கு கவலையளிக்கிறது என்பதை திட்டமாக அறிவோம். நிச்சயமாக அவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பதில்லை. எனினும், அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களை (பொய்ப்பித்து) மறுக்கின்றனர்.

Enam 6:34

திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்கள் பொய்ப்பிக்கப்பட்டனர். அவர்களுக்கு நம் உதவி வரும்வரை அவர்கள் பொய்ப்பிக்கப்பட்டதையும் துன்புறுத்தப்பட்டதையும் பொறுத்தனர். அல்லாஹ்வின் வாக்குகளை மாற்றுபவர் அறவே இல்லை. தூதர்களின் செய்தியில் சில உமக்கு திட்டமாக வந்துள்ளது.

Enam 6:35

(நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெரிதாக இருந்தால், நீ பூமியில் ஒரு சுரங்கத்தை அல்லது வானத்தில் ஓர் ஏணியைத் தேடி, (அதன் மூலம்) ஓர் அத்தாட்சியை அவர்களுக்குக் கொண்டு வருவதற்கு நீர் இயன்றால்... (கொண்டு வாரீர்.) அல்லாஹ் நாடினால், அவர்களை நேர்வழியில் ஒன்று சேர்த்திருப்பான். ஆகவே, அறியாதவர்களில் நிச்சயம் ஆகிவிடாதீர்.

Enam 6:36

(உண்மையை) ஏற்றுக் கொள்வதெல்லாம் செவிசாய்ப்பவர்கள்தான். இறந்தவர்களை அல்லாஹ் எழுப்புவான். பிறகு, அவனிடமே திருப்பப்படுவார்கள்.

Enam 6:37

"(நம் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறினர். (நபியே!) கூறுவீராக: ஓர் அத்தாட்சியை இறக்க நிச்சயமாக அல்லாஹ் ஆற்றலுடையவன். எனினும் அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.

Enam 6:38

பூமியில் ஊருவதும்; தன் இரு இறக்கைகளால் பறப்பதும் உங்களைப் போன்ற படைப்புகளே தவிர வேறில்லை. எதையும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் எனும்) புத்தகத்தில் நாம் (குறிப்பிடாமல்) விடவில்லை. பிறகு தங்கள் இறைவனிடம் (அவர்கள் அனைவரும்) ஒன்றுதிரட்டப்படுவார்கள்.

Enam 6:39

நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்கள் இருள்களில் (சிக்கிய) செவிடர்கள், ஊமையர்கள் (போல்) ஆவர். அல்லாஹ், தான் நாடியவரை வழிகெடுக்கிறான்; தான் நாடியவரை நேரான பாதையில் ஆக்குகிறான்.

Enam 6:40

(நபியே!) கூறுவீராக: உங்களுக்கு அல்லாஹ்வின் வேதனை வந்தால் அல்லது உங்களுக்கு (விசாரணைக்) காலம் வந்தால் அல்லாஹ் அல்லாதவர்களையா நீங்கள் அழைப்பீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இதன் பதிலை) அறிவியுங்கள்.

Enam 6:41

மாறாக! அவனையே அழைப்பீர்கள். அவன் நாடினால் நீங்கள் எதை நீக்குவதின் பக்கம் (அவனை) அழைக்கிறீர்களோ (உங்களை விட்டு) அதை அகற்றுவான். (அப்போது) நீங்கள் இணைவைப்பவற்றை மறந்து விடுவீர்கள்.

Enam 6:42

(நபியே!) உமக்கு முன்னர் பல சமுதாயங்களுக்கு (தூதர்களை) திட்டவட்டமாக அனுப்பினோம். (அவர்கள் நிராகரித்து விடவே) அவர்கள் பணிவதற்காக வறுமை இன்னும் நோயைக் கொண்டு அவர்களைப் பிடித்தோம்.

Enam 6:43

நம் வேதனை அவர்களுக்கு வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? எனினும் அவர்களுடைய உள்ளங்கள் இறுகின. அவர்கள் செய்து கொண்டிருந்ததை ஷைத்தான் அவர்களுக்கு அலங்கரித்தான்.

Enam 6:44

தாங்கள் உபதேசிக்கப்பட்டதை அவர்கள் மறந்தபோது (செல்வங்கள்) எல்லாவற்றின் வாசல்களை அவர்களுக்குத் திறந்தோம். முடிவாக, தாங்கள் கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தபோது அவர்களைத் திடீரென பிடித்தோம். அப்போது, அவர்கள் நம்பிக்கையிழந்து விடுகிறார்கள்.

Enam 6:45

ஆகவே, அநியாயமிழைத்த கூட்டத்தின் வேர் அறுக்கப்பட்டது. புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்வுக்கே!

Enam 6:46

"அல்லாஹ், உங்கள் கேள்விப்புலனையும் உங்கள் பார்வைகளையும் எடுத்தால்; உங்கள் உள்ளங்கள் மீது முத்திரையிட்டால், அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் கடவுள்(களில்) யார் அவற்றை உங்களுக்குக் கொண்டுவருவார் என்பதை அறிவியுங்கள்?” என்று (நபியே!) கூறுவீராக. அத்தாட்சிகளை எவ்வாறு விவரிக்கிறோம் என்பதை கவனிப்பீராக. பிறகும், அவர்கள் புறக்கணிக்கின்றனர்.

Enam 6:47

(நபியே!) கூறுவீராக: "திடீரென அல்லது வெளிப்படையாக அல்லாஹ்வின் வேதனை உங்களுக்கு வந்தால் அநியாயக்கார மக்களைத் தவிர (மற்றவர்கள்) அழிக்கப்படுவார்களா? என்று (எனக்கு) அறிவியுங்கள்!”

Enam 6:48

நற்செய்தியாளர்களாக, எச்சரிப்பவர்களாகவே தவிர தூதர்களை நாம் அனுப்புவதில்லை. ஆகவே, எவர்கள் (உண்மையாகவே) நம்பிக்கை கொண்டு (தங்களை) சீர்திருத்தினார்களோ அவர்கள் மீது பயமில்லை; அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.

Enam 6:49

நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தால் வேதனை பிடிக்கும்.

Enam 6:50

(நபியே!) கூறுவீராக: "அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளன என்று நான் உங்களுக்குக் கூறமாட்டேன். மறைவானவற்றை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நான் ஒரு வானவர் என்றும் உங்களுக்கு கூறமாட்டேன். எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றமாட்டேன்.” (நபியே!) கூறுவீராக: "குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?”

Enam 6:51

(நபியே!) “(மறுமையில்) தங்கள் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவோம், அங்கு தங்களுக்கு அவனைத் தவிர பாதுகாவலரும் இல்லை பரிந்துரைப்பவரும் இல்லை” என்று பயப்படுபவர்களை இதன் மூலம் எச்சரிப்பீராக! அவர்கள் (அதிகமதிகம்) அல்லாஹ்வை அஞ்சுவதற்காக(வும் பாவங்களை விட்டு விலகிக் கொள்வதற்காகவும்).

Enam 6:52

(நபியே!) தங்கள் இறைவனை அவனின் முகத்தை நாடியவர்களாக காலையிலும் மாலையிலும் பிரார்த்திப்பவர்களை விரட்டாதீர்! (அப்படி நீர் விரட்டினால்) அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்! நீர் அவர்களை விரட்டுவதற்கு அவர்களின் கணக்கிலிருந்து எதுவும் உம் மீதில்லையே. உம் கணக்கிலிருந்து எதுவும் அவர்கள் மீதில்லையே.

Enam 6:53

இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு சோதித்தோம், இறுதியில் "எங்களுக்கு மத்தியிலிருந்து இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்தான்?” என்று அவர்கள் கூறுவார்கள். நன்றியுள்ளவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா?

Enam 6:54

(நபியே!) நம் வசனங்களை நம்பிக்கை கொள்பவர்கள் உம்மிடம் வந்தால் (அவர்களுக்கு நீர்) கூறுவீராக: “உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக! உங்கள் இறைவன் கருணையை தன்மீது கடமையாக்கினான். நிச்சயமாக உங்களில் எவர் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து, பிறகு, அதன் பின்னர் (அதிலிருந்து திருந்தி அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி, (தன்னை) சீர்திருத்துவாரோ, (அவரை அல்லாஹ் மன்னிப்பான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.”

Enam 6:55

இவ்வாறுதான் (சத்தியம் தெளிவாகுவதற்காகவும்,) குற்றவாளிகளின் வழி தெளிவாகுவதற்காகவும் (நமது) வசனங்களை விவரிக்கிறோம்.

Enam 6:56

(நபியே!) கூறுவீராக: "அல்லாஹ்வைத் தவிர நீங்கள் பிரார்த்திப்பவற்றை நான் வணங்குவதற்கு நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன்.” (நபியே!) கூறுவீராக: “உங்கள் ஆசைகளை பின்பற்றமாட்டேன். அவ்வாறாயின், வழிதவறிவிடுவேன். இன்னும் நேர்வழி பெற்றவர்களில் நான் இருக்க மாட்டேன்.”

Enam 6:57

கூறுவீராக: "நிச்சயமாக நான் என் இறைவனின் (தெளிவான) ஓர் அத்தாட்சியின் மீதிருக்கிறேன். அவனை (நீங்கள்) பொய்ப்பித்தீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. (எவருக்கும்) அதிகாரம் இல்லை அல்லாஹ்வுக்கே தவிர. (அவன்) உண்மையை விவரிக்கிறான். தீர்ப்பாளர்களில் அவன் மிக மேலானவன்.”

Enam 6:58

கூறுவீராக: "நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால், எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் காரியம் முடிக்கப்பட்டிருக்கும். அல்லாஹ், அநியாயக்காரர்களை மிக அறிந்தவன்.”

Enam 6:59

மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்றை அவனைத் தவிர (யாரும்) அறியமாட்டார். நிலத்திலும், நீரிலும் உள்ளவற்றை (அவன்) நன்கறிவான். ஓர் இலையும் விழுவதில்லை அதை அவன் அறிந்தே தவிர. பூமியின் (ஆழ்) இருள்களில் உள்ள வித்து, பசுமையானது, உலர்ந்தது ஆகிய எதுவுமில்லை தெளிவான புத்தகத்தில் (குறிக்கப்பட்டு) இருந்தே தவிர.

Enam 6:60

இரவில் அவன்தான் உங்க(ள் உயிர்க)ளை கைப்பற்றுகிறான். நீங்கள் பகலில் செய்தவற்றை அறிகிறான். பிறகு, குறிப்பிட்ட தவணை (முழுமையாக) முடிக்கப்படுவதற்காக அதில் உங்களை எழுப்புகிறான். பிறகு, அவன் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. பிறகு, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை (அவன்) உங்களுக்கு அறிவிப்பான்.

Enam 6:61

அவன்தான் தன் அடியார்கள் மேல் ஆதிக்கமுள்ளவன். உங்கள் மீது (வானவ) காவலர்களையும் அனுப்புகிறான். இறுதியாக, உங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால், நம் (வானவத்) தூதர்கள் அவரை (அவருடைய உயிரை) கைப்பற்றுகின்றனர். அவர்கள் (தங்கள் பணியில்) குறைவு செய்யமாட்டார்கள்.

Enam 6:62

பிறகு, அவர்களின் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்விடம் திருப்பப்படுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்: “அவனுக்கே (ஆட்சியும்) அதிகார(மு)ம் உரியது. அவன் கணக்கிடுபவர்களில் மிகத் தீவிரமானவன்.”

Enam 6:63

"தரை இன்னும் கடலின் இருள்களில் உங்களைப் பாதுகாப்பவன் யார்? எங்களை இதிலிருந்து பாதுகாத்தால் நிச்சயமாக நாங்கள் நன்றியாளர்களில் ஆகிவிடுவோம்” என்று பணிவாகவும் மறைவாகவும் அவனிடமே பிரார்த்திக்கிறீர்கள்.

Enam 6:64

கூறுவீராக: "இதிலிருந்தும் இன்னும் எல்லா (இக்கட்டிலிருந்தும்) கஷ்டத்திலிருந்தும் அல்லாஹ்தான் உங்களை பாதுகாக்கிறான். பிறகு, நீங்கள் (அவனுக்கு) இணைவைக்கிறீர்கள்!”

Enam 6:65

(நபியே!) கூறுவீராக: "உங்களுக்கு மேலிருந்து அல்லது உங்கள் கால்களுக்குக் கீழிருந்து உங்கள் மீது வேதனையை அனுப்புவதற்கும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக கலந்து, உங்களில் சிலருக்கு சிலருடைய ஆற்றலை சுவைக்க வைப்பதற்கும் அவன்தான் சக்தியுள்ளவன்.” அவர்கள் விளங்குவதற்காக வசனங்களை எவ்வாறு விவரிக்கிறோம் என்று (நபியே!) கவனிப்பீராக.

Enam 6:66

இதுதான் உண்மையாக இருந்தும், உம் சமுதாயம் இதை பொய்ப்பித்தனர். கூறுவீராக: "உங்கள் மீது பொறுப்பாளனாக நானில்லை.”

Enam 6:67

ஒவ்வொரு செய்திக்கும் (அது) நிகழும் நேரமுண்டு. (நீங்கள் அதை) அறியத்தான் போகிறீர்கள்.

Enam 6:68

(நபியே!) நம் வசனங்களில் (அவற்றை பரிகசித்து) மூழ்குபவர்களைக்கண்டால், அவர்கள் அது அல்லாத (வேறு) பேச்சில் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக. ஷைத்தான் உம்மை மறக்கடித்தால், நினைவுக்குப் பின்னர் அநியாயக்கார கூட்டத்துடன் அமராதீர்.

Enam 6:69

(வீண் விவாதத்தில் மூழ்கும்) அவர்களுடைய (செயல்களின்) கணக்கிலிருந்து எதுவும் (அல்லாஹ்வை) அஞ்சுபவர்கள் மீதில்லை. எனினும், அ(வ்வாறு பரிகசிப்ப)வர்கள் தவிர்ந்து கொள்வதற்காக உபதேசித்தல் (கடமையாகும்).

Enam 6:70

(நபியே!) உலக வாழ்க்கை அவர்களை மயக்கி, தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் கேளிக்கையாகவும் எடுத்துக் கொண்டவர்களை (விட்டு) விடுவீராக. ஓர் ஆன்மா, தான் செய்ததன் காரணமாக (மறுமையில்) ஆபத்திற்குள்ளாகும் என்பதை இதன் மூலம் நினைவூட்டுவீராக. (அந்நாளில்) பாதுகாவலரோ பரிந்துரையாளரோ அல்லாஹ்வைத் தவிர அதற்கு இருக்கமாட்டார். அது எவ்வளவு ஈடு கொடுத்தாலும் அதனிடமிருந்து அது ஏற்கப்படாது. இவர்கள் தாங்கள் செய்ததன் காரணமாகவே ஆபத்திற்குள்ளானவர்கள். இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் கடுமையான கொதி நீரிலிருந்து குடிபானமும் துன்புறுத்தும் வேதனையும் இவர்களுக்கு உண்டு.

Enam 6:71

(நபியே!) கூறுவீராக: "அல்லாஹ்வைத் தவிர நமக்கு பலனளிக்காதவற்றையும் தீங்கிழைக்காதவற்றையும் அழைப்போமா? நேர்வழியின் பக்கம் எங்களிடம் வா என்று அவனை அழைக்கின்ற நண்பர்கள் அவனுக்கு இருக்க ஷைத்தான்கள் அவனை வழிதவறச் செய்து திகைத்தவனாக பூமியில் இருப்பவனைப் போல், அல்லாஹ் எங்களை நேர்வழிப்படுத்திய பின்னர் எங்கள் குதிங்கால்கள் மேல் (வழிகேட்டின் பக்கம்) திருப்பப்படுவோமா?” கூறுவீராக: "நிச்சயமாக அல்லாஹ்வின் நேர்வழி அதுதான் நேர்வழியாகும். அகிலத்தார்களின் இறைவனுக்கே நாங்கள் (முற்றிலும்) பணிந்துவிட கட்டளையிடப்பட்டோம்.”

Enam 6:72

"தொழுகையை நிலைநிறுத்துங்கள், அவனை அஞ்சுங்கள். அவன் பக்கம்தான் ஒன்றுதிரட்டப்படுவீர்கள்.”

Enam 6:73

அவன்தான் உண்மையில் வானங்களையும், பூமியையும் படைத்தான். ‘ஆகுக!’ என அவன் கூறும் நாளில் உடனே (அது) ஆகிவிடும். அவனுடைய சொல்தான் உண்மை. சூரில் ஊதப்படும் நாளில், அவனுக்கே ஆட்சி இருக்கும். மறைவானதையும், வெளிப்படையானதையும் அவன் அறிந்தவன். அவன்தான் ஞானவான், ஆழ்ந்தறிபவன்.

Enam 6:74

இப்ராஹீம் தன் தந்தை ஆஸருக்கு கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! "நீர் சிலைகளை வணங்கப்படும் தெய்வங்களாக எடுத்துக்கொள்கிறீரா?” "நிச்சயமாக நான் உம்மையும் உம் சமுதாயத்தையும் தெளிவான வழிகேட்டில் காண்கிறேன்.”

Enam 6:75

இவ்வாறுதான், அவர் (அறிந்துகொள்வதற்காகவும்) உறுதியான நம்பிக்கை உடையவர்களில் ஆவதற்காகவும் வானங்கள், மற்றும் பூமியின் பேராட்சியை இப்ராஹீமுக்கு காண்பித்தோம்.

Enam 6:76

இரவு சூழ்ந்தபோது அவர் ஒரு நட்சத்திரத்தைக் கண்டு "இது என் இறைவன்” எனக் கூறினார். அது மறைந்தபோது, "மறையக்கூடியவற்றை (இறைவனாக எடுத்துக்கொள்ள நான்) விரும்பமாட்டேன்” எனக் கூறினார்.

Enam 6:77

உதயமாகிய சந்திரனைக் கண்டபோது, "இது என் இறைவன்” எனக் கூறினார். அது மறைந்தபோது "என் இறைவன் என்னை நேர்வழிபடுத்தாவிட்டால் வழிகெட்ட சமுதாயத்தில் நிச்சயமாக நான் ஆகிவிடுவேன்” எனக் கூறினார்.

Enam 6:78

உதயமாகிய சூரியனைக் கண்டபோது, "இது என் இறைவன், இது மிகப் பெரியது” எனக் கூறினார். அது மறைந்தபோது, "என் சமுதாயமே! நீங்கள் (அல்லாஹ்விற்கு) இணைவைப்பவற்றிலிருந்து நிச்சயமாக நான் விலகியவன்” என்று கூறினார்.

Enam 6:79

"வானங்களையும் பூமியையும் படைத்தவனின் பக்கம் நிச்சயமாக நான் உறுதியுடையவனாக என் முகத்தை முன்னோக்க வைத்தேன். நான் இணைவைப்பவர்களில் இல்லை.” (என்று கூறினார்)

Enam 6:80

அவருடன் அவருடைய சமுதாயத்தினர் தர்க்கித்தனர். அவர் கூறினார்: "நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி என்னுடன் தர்க்கிக்கிறீர்களா? அவன் எனக்கு நேர்வழி காட்டிவிட்டான். அவனுக்கு நீங்கள் இணைவைப்பதை பயப்பட மாட்டேன் என் இறைவன் எதையும் நாடினால் தவிர. என் இறைவனின் அறிவு எல்லாவற்றையும் விட விசாலமானது. நீங்கள் நல்லுபதேசம் பெறவேண்டாமா?”

Enam 6:81

நீங்கள் இணைவைத்தவற்றை எவ்வாறு பயப்படுவேன். உங்கள் மீது அவன் எதற்கு ஆதாரத்தை இறக்கவில்லையோ அதை நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கியதை நீங்கள் பயப்படுவதில்லை. ஆகவே, இரு பிரிவினரில் பாதுகாப்புப்பெற மிகத் தகுதியுடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (பதில் கூறுங்கள்).

Enam 6:82

எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையில் (இணைவைத்தல் எனும்) அநியாயத்தை கலக்கவில்லையோ அவர்களுக்கே பாதுகாப்பு உண்டு. அவர்கள் நேர்வழி பெற்றவர்கள் ஆவர்.

Enam 6:83

இவை நம் சான்றாகும். அவற்றை அவருடைய சமுதாயத்திற்கு எதிராக இப்ராஹீமுக்கு கொடுத்தோம். நாம் நாடியவர்களை பதவிகளால் உயர்த்துகிறோம். (நபியே!) நிச்சயமாக உம் இறைவன் ஞானவான்,நன்கறிபவன்.

Enam 6:84

நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் வழங்கினோம். எல்லோரையும் நேர்வழி செலுத்தினோம். இதற்கு முன்னர் நூஹையும், அவருடைய சந்ததிகளில் தாவூதையும், ஸுலைமானையும், ஐயூபையும், யூஸுஃபையும், மூஸாவையும், ஹாரூனையும் நாம் நேர்வழி செலுத்தினோம். நல்லறம் புரிவோருக்கு இவ்வாறே (நற்)கூலி கொடுக்கிறோம்.

Enam 6:85

இன்னும் ஸகரிய்யாவையும், யஹ்யாவையும், ஈஸாவையும், இல்யாஸையும் (நேர்வழி செலுத்தினோம்). எல்லோரும் நல்லோரில் உள்ளவர்களே.

Enam 6:86

இன்னும், இஸ்மாயீலையும், அல்யஸஉவையும், யூனுஸையும், லூத்தையும் (நேர்வழி செலுத்தினோம்). (இவர்கள்) எல்லோரையும் அகிலத்தார்களை விட மேன்மைப்படுத்தினோம்.

Enam 6:87

இவர்களுடைய மூதாதைகளிலும், இவர்களுடைய சந்ததிகளிலும், இவர்களுடைய சகோதரர்களிலும் (பலரை மேன்மைப்படுத்தினோம்). இன்னும் அவர்களை தேர்ந்தெடுத்தோம், இன்னும் அவர்களுக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டினோம்.

Enam 6:88

இதுவே அல்லாஹ்வுடைய நேர்வழியாகும். தன் அடியார்களில் தான் நாடியவர்களை அதன் மூலம் நேர்வழி செலுத்துகிறான். அவர்கள் இணைவைத்தால் அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு அழிந்துவிடும்.

Enam 6:89

இவர்களுக்குத்தான் வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம். ஆகவே, அவற்றை (மக்காவாசிகளாகிய) இவர்கள் நிராகரித்தால் அவற்றை நிராகரிப்பவர்களாக இருக்காத ஒரு சமுதாயத்தை அவற்றுக்கு பொறுப்பாக்கி விடுவோம்.

Enam 6:90

(நபியே!) அவர்கள் அல்லாஹ் நேர்வழி செலுத்தியவர்கள். ஆகவே, அவர்களுடைய நேர்வழியையே, அதையே பின்பற்றுவீராக. "இதற்காக உங்களிடம் ஒரு கூலியையும் நான் கேட்க மாட்டேன். அகிலத்தார்களுக்கு ஒரு நல்லுபதேசமே தவிர இது வேறில்லை” என்று கூறுவீராக.

Enam 6:91

"மனிதர்கள் மீது (வேதத்தில்) எதையும் அல்லாஹ் இறக்கவில்லை” என்று அவர்கள் கூறியபோது அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கு தகுந்தாற்போல் அவர்கள் அறியவில்லை. (நபியே!) கூறுவீராக: மக்களுக்கு ஒளியாகவும் நேர்வழியாகவும் மூஸா கொண்டு வந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதை நீங்கள் பல ஏடுகளாக ஆக்கி அவற்(றில் சிலவற்)றை வெளிப்படுத்தி அதிகமானதை மறைத்தும் விடுகிறீர்கள். நீங்களும் உங்கள் மூதாதைகளும் அறியாதவற்றை (நீங்கள்) கற்ப்பிக்கப்பட்டீர்கள். (நபியே!) "அல்லாஹ் (அதை இறக்கினான்)” என்று கூறி, அவர்களை அவர்கள் மூழ்குவதிலேயே விளையாடியவர்களாக விடுவீராக.

Enam 6:92

(நபியே!) இது நாம் இறக்கிய, அருள் வளமிக்க, தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு வேதமாகும். நீர் (இதன் மூலம்) மக்காவையும் அதைச் சுற்றி உள்ளவர்களையும் எச்சரிப்பதற்காக (இறக்கினோம்). மறுமையை நம்பிக்கை கொள்பவர்கள் இதையும் நம்பிக்கை கொள்வார்கள். அவர்கள் தங்கள் தொழுகையைப் பேணுவார்கள்.

Enam 6:93

(நபியே!) அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவன்; அல்லது, அவனுக்கு எதுவும் வஹ்யி அறிவிக்கப்படாமலிருக்க "தனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது” என்று கூறுபவன்; அல்லது, "அல்லாஹ் இறக்கியதைப் போல் (நானும்) இறக்குவேன்” என்று கூறுபவன் ஆகிய (இ)வர்களை விட மிகப்பெரிய அநியாயக்காரன் யார்? (இந்த) அக்கிரமக்காரர்கள் மரண வேதனைகளில் இருக்கும் சமயத்தில் நீர் (அவர்களைப்) பார்த்தால், வானவர்கள் தங்கள் கைகளை நீட்டி, (அவர்களை நோக்கி) "உங்கள் உயிர்களை வெளியேற்றுங்கள்; நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக்கொண்டிருந்த காரணத்தாலும், நீங்கள் அவனுடைய வசனங்களை மறுத்து பெருமையடிப்பவர்களாக இருந்த காரணத்தாலும் இன்று இழிவான வேதனையை கூலி கொடுக்கப்படுவீர்கள்” (என்று கூறுவார்கள்).

Enam 6:94

"முதல் முறை நாம் உங்களைப் படைத்தது போல் தனி நபர்களாக நம்மிடம் வந்துவிட்டீர்கள். நாம் உங்களுக்குக் கொடுத்தவற்றையும் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டுவிட்டீர்கள். உங்களுடன் உங்கள் பரிந்துரையாளர்களை நாம் காணவில்லை. நிச்சயமாக, அவர்கள் உங்களுக்கு துணைகள் என (நீங்கள்) அவர்களை எண்ணினீர்கள். உங்களுக்கு மத்தியில் (இருந்த தொடர்புகள்) அறுந்து, (பரிந்துரையாளர்கள் என) நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தவை உங்களை விட்டும் தவறிவிட்டன.”

Enam 6:95

நிச்சயமாக அல்லாஹ் வித்துகளையும், கொட்டைகளையும் பிளப்பவன்; இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளியாக்குகிறான்; உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குகிறான்; அவன்தான் அல்லாஹ். ஆகவே, நீங்கள் (அவனை விட்டு) எங்கு திருப்பப்படுகிறீர்கள்?

Enam 6:96

(அவனே) ஒளியை பிளப்பவன்; இரவை அமைதி பெறுவதற்காகவும் சூரியனையும் சந்திரனையும் (நேரம் மற்றும் மாதத்தின்) கணக்கிற்காகவும் ஆக்கினான். இவை மிகைத்தவன், நன்கறிந்தவனின் ஏற்பாடாகும்.

Enam 6:97

நீங்கள் தரை இன்னும் கடலின் இருள்களில் அவற்றின் மூலம் நேர்வழி பெறுவதற்காக நட்சத்திரங்களை உங்களுக்கு அவன்தான் அமைத்தான். அறிகின்ற ஒரு சமுதாயத்திற்கு அத்தாட்சிகளை விவரித்து விட்டோம்.

Enam 6:98

அவன்தான் உங்களை ஒரே ஓர் ஆத்மாவில் இருந்து உருவாக்கினான். ஆகவே, ஒரு தங்குமிடமும் ஒரு ஒப்படைக்கப்படும் இடமும் உண்டு. விளங்கிக்கொள்கின்ற சமுதாயத்திற்கு அத்தாட்சிகளை விவரித்து விட்டோம்.

Enam 6:99

அவன்தான் மேகத்திலிருந்து மழையை இறக்குபவன். அதன் மூலம் எல்லா தாவரங்களையும் வெளியாக்கினோம். (அவ்வாறே) அதிலிருந்து பசுமையானதையும் வெளியாக்கினோம். அதிலிருந்து அடர்ந்த வித்துக்களை (உடைய கதிர்களை)யும் வெளியாக்குகிறோம். பேரீச்ச மரத்தில் அதன் பாளையிலிருந்து (பறிக்க) நெருக்கமான பழக்குலைகளும் இருக்கின்றன. திராட்சைகளின் தோட்டங்களையும், (ஒலிவம்) ஸய்த்தூனையும், (பார்வையில்) ஒப்பான, (ருசியில்) ஒப்பாகாத மாதுளையையும் (நாமே வெளியாக்குகிறோம்). அவை காய்க்கும்போது அதன் கனிகளையும் அவை பழமாகுவதையும் பாருங்கள். நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Enam 6:100

அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக ஆக்கினர், அவன் அவர்களைப் படைத்திருக்க. இன்னும் அறிவின்றி அவனுக்கு மகன்களையும், மகள்களையும் கற்பனை செய்தனர். அவன் மகா தூயவன். அவர்கள் (தகுதியின்றி) வர்ணிப்பதை விட்டு அவன் மிக உயர்ந்தவன்.

Enam 6:101

(அவன்) வானங்கள் இன்னும் பூமியின் நூதன படைப்பாளன். அவனுக்கு எவ்வாறு சந்ததி இருக்கும்? அவனுக்கு மனைவி இல்லையே! எல்லாவற்றையும் படைத்தான். அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.

Enam 6:102

அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. எனவே, அவனை வணங்குங்கள்; (அவன்) எல்லாவற்றின் படைப்பாளன்; அவன் எல்லாவற்றின் மீது கண்காணிப்பாளன் ஆவான்.

Enam 6:103

பார்வைகள் அவனை அடையாது. அவன்தான் பார்வைகளை அடைகிறான். அவன்தான் மிக நுட்பமானவன்; ஆழ்ந்தறிந்தவன்.

Enam 6:104

உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் உங்களுக்கு வந்துவிட்டன. எவர் (அவற்றைப்) பார்த்தாரோ அது அவருக்குத்தான் நன்மை. எவர் குருடாகி விட்டாரோ (அது) அவருக்குத்தான் கேடாகும். (நீர் அவர்களை நோக்கி) "நான் உங்கள் மீது (ஏற்படுத்தப்பட்ட) காவலனாக இல்லை” (என்று நபியே! கூறுவீராக).

Enam 6:105

(நேர்வழி நாடுவோர் நேர்வழி பெற) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம். இன்னும், நீர் படித்தீர் என்று அவர்கள் சொல்வதற்காகவும், அறிகின்ற மக்களுக்கு நாம் அதைத் தெளிவுபடுத்துவதற்காகவும் (நம் வசனங்களை விவரிக்கிறோம்).

Enam 6:106

(நபியே!) உம் இறைவனிடமிருந்து உமக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதை பின்பற்றுவீராக. அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் அறவே இல்லை. இணைவைப்பவர்களை புறக்கணிப்பீராக.

Enam 6:107

அல்லாஹ் நாடியிருந்தால் (அவர்கள்) இணைவைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மீது காவலராக நாம் உம்மை ஆக்கவில்லை. நீர் அவர்கள் மீது பொறுப்பாளராகவும் இல்லை.

Enam 6:108

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வை அன்றி எவர்களை அவர்கள் வணங்குகிறார்களோ அவர்களைத் திட்டாதீர்கள். அதனால் அவர்கள் அறிவின்றி வரம்பு மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவ்வாறே, ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயல்களை நாம் அலங்கரித்தோம். பிறகு, அவர்களுடைய இறைவனிடமே அவர்களுடைய மீட்சி இருக்கிறது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை (அவன்) அவர்களுக்கு அறிவிப்பான்.

Enam 6:109

(அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி அவர்களிடம் வந்தால், "நிச்சயமாக அதை நம்பிக்கை கொள்வோம்” என அவர்கள் அல்லாஹ்வைக் கொண்டு உறுதியாக சத்தியம் செய்தனர். (நபியே!) "அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றன.” என்று கூறுவீராக. (அவர்கள் விரும்பியவாறே) நிச்சயமாக அவை வந்தால், அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்பதை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அறிவீர்களா?

Enam 6:110

முதல் முறையாக அவர்கள் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளாதது போன்றே நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் புரட்டுகிறோம்; அவர்களுடைய அட்டூழியத்தில் (மேலும்) கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக அவர்களை (விட்டு) விடுகிறோம்.

Enam 6:111

(அவர்கள் கோரியபடி) நிச்சயமாக, நாம் அவர்களிடம் வானவர்களை இறக்கினாலும், இறந்தவர்கள் அவர்களிடம் பேசினாலும், எல்லாவற்றையும் அவர்களுக்கு முன்னால் கண்ணெதிரே ஒன்று திரட்டினாலும், (அவர்கள்) நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை அல்லாஹ் நாடினால் தவிர. எனினும் நிச்சயமாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

Enam 6:112

இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும் மனிதர்களிலும், ஜின்களிலுமுள்ள ஷைத்தான்களை நாம் எதிரிகளாக ஆக்கினோம். அவர்களில் சிலர் சிலருக்கு அலங்காரமான சொல்லை ஏமாற்றுவதற்காக அறிவிக்கின்றனர். உம் இறைவன் நாடியிருந்தால் அதை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) அவர்களையும் அவர்கள் இட்டுக்கட்டுவதையும் விட்டுவிடுவீராக.

Enam 6:113

மறுமையை நம்பாதவர்களுடைய உள்ளங்கள் அதன் பக்கம் செவிசாய்ப்பதற்காகவும், அதை அவர்கள் திருப்தி கொள்வதற்காகவும், அவர்கள் செய்(யும்) ப(ாவமான)வற்றை செய்வதற்காகவும் (ஷைத்தான்கள் அவர்களை ஏமாற்றினர்).

Enam 6:114

"தீர்ப்பாளனாக அல்லாஹ் அல்லாதவரையா (நான்) தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு வேதத்தை நன்கு விவரிக்கப்பட்டதாக இறக்கினான்.” (என்று நபியே! கூறுவீராக). (இதற்கு முன்னர்) நாம் வேதம் கொடுத்தவர்கள், நிச்சயமாக, இது உம் இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டே இறக்கப்பட்டது என்பதை அறிவார்கள். ஆகவே, சந்தேகிப்பவர்களில் நிச்சயம் ஆகிவிடாதீர்.

Enam 6:115

(நபியே!) உம் இறைவனின் வாக்கு உண்மையாலும் நீதத்தாலும் முழுமையாகியது. அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் அறவே இல்லை. அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.

Enam 6:116

இப்பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு நீர் கீழ்ப்படிந்தால் (அவர்கள்) உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுப்பார்கள். (அதிகமானோர்) யூகத்தைத் தவிர (உண்மையை) பின்பற்றமாட்டார்கள். கற்பனை செய்பவர்களாகவே தவிர (உண்மையை பின்பற்றுவோராக) அவர்கள் இல்லை.

Enam 6:117

(நபியே!) நிச்சயமாக உம் இறைவன்தான், அவனுடைய பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுபவரை மிக அறிந்தவன். அவன் நேர்வழி பெற்றவர்களையும் மிக அறிந்தவன்.

Enam 6:118

ஆகவே, நீங்கள் அவனு (அல்லாஹ்வு)டைய வசனங்களை நம்பிக்கை கொண்டவர்களாக நீங்கள் இருந்தால் (அறுக்கும் போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்டதிலிருந்து புசியுங்கள்.

Enam 6:119

(அறுக்கும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதிலிருந்து நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன ஏற்பட்டது? அவன் உங்களுக்கு தடுத்தவற்றை உங்களுக்கு விவரித்துவிட்டான் (ஆனால் தடுக்கப்பட்ட) அதன் பக்கம் நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டால் தவிர (அப்போது அது ஆகுமாகிவிடும்). நிச்சயமாக அதிகமானோர் கல்வியின்றி தங்கள் ஆசைகளைக் கொண்டு (மக்களை) வழி கெடுக்கின்றனர். (நபியே!) நிச்சயமாக உம் இறைவன் வரம்பு மீறிகளை மிக அறிபவன்.

Enam 6:120

(நம்பிக்கையாளர்களே!) பாவத்தில் வெளிப்படையானதையும் அதில் மறைவானதையும் (விட்டு)விடுங்கள். நிச்சயமாக பாவத்தை சம்பாதிப்பவர்கள் அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கு (தகுந்த) கூலி கொடுக்கப்படுவார்கள்.

Enam 6:121

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றிலிருந்து புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பாவம்தான். உங்களுடன் அவர்கள் தர்க்கிப்பதற்காக நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களுக்கு அறிவிக்கின்றனர். நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால் நிச்சயமாக நீங்கள் இணை வைப்பவர்கள்தான்!

Enam 6:122

எவர் மரணித்தவராக இருந்து, அவரை நாம் உயிர்ப்பித்து, மக்களுக்கு மத்தியில் அவர் நடமாடுவதற்கு அவருக்கு ஓர் ஒளியையும் நாம் ஏற்படுத்தினோமோ அவர் - எவர் இருள்களில் இருந்து கொண்டு, அவற்றிலிருந்து வெளியேறமுடியாதவராக இருக்கிறாரோ அவரைப் போல் ஆவாரா? இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவை அழகாக்கப்பட்டன.

Enam 6:123

இவ்வாறே எல்லா ஊர்களிலும் அதிலுள்ள பெரிய பாவிகளை அவற்றில் சதி செய்வதற்காக ஏற்படுத்தினோம். தங்களுக்கே தவிர (மற்றவர்களுக்கு) அவர்கள் சதி செய்யமாட்டார்கள். (இதை அவர்கள்) உணர மாட்டார்கள்.

Enam 6:124

அவர்களிடம் ஒரு வசனம் வந்தால் "அல்லாஹ்வுடைய தூதர்கள் கொடுக்கப்பட்டது போன்று நாங்களும் கொடுக்கப்படும் வரை (நாங்கள்) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று கூறுகின்றனர். தன் தூதுத்துவத்தை எங்கு ஏற்படுத்துவது என்பதை அல்லாஹ் மிகஅறிந்தவன். குற்றம் புரிந்தவர்களை அவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருந்த காரணத்தால் அல்லாஹ்விடம் இருந்து (அவர்களுக்கு கேவலமும்) சிறுமையும் கடுமையான வேதனையும் அடையும்.

Enam 6:125

அல்லாஹ் எவரை நேர்வழி செலுத்த நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாமிற்கு விரிவாக்குகிறான். எவரை, அவன் வழிகெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவனைப் போல் இறுக்கமானதாகவும் சிரமமானதாகவும் ஆக்குவான். இவ்வாறே, நம்பிக்கை கொள்ளாதவர்கள் மீது அல்லாஹ் தண்டனையை ஆக்குவான்.

Enam 6:126

(நபியே!) இது உம் இறைவனின் நேரான பாதையாகும். நல்லுபதேசம் பெறும் மக்களுக்கு (நமது) வசனங்களை விவரித்து விட்டோம்.

Enam 6:127

அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் ‘தாருஸ் ஸலாம்' (ஈடேற்றமுடைய இல்லம்) உண்டு. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக அவன் அவர்களுடைய நேசனும் ஆவான்.

Enam 6:128

அவன் அவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்க்கும் நாளில், (ஜின்களை நோக்கி) "ஜின்களின் கூட்டமே! நீங்கள் மனிதர்களில் (வழிகேடர்களை) அதிகப்படுத்தி விட்டீர்கள்” (என்று கூறுவான்). மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் "எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக்கொண்டு பயனடைந்தனர். எங்களுக்கு நீ தவணையளித்த தவணையை அடைந்தோம். (எங்களுக்கு தங்குமிடம் எது?)” என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன்) "நரகம்தான் உங்கள் தங்குமிடம். அதில் (நீங்கள்) நிரந்தரமானவர்கள், அல்லாஹ் நாடினால் தவிர.” என்று கூறுவான். (நபியே!) நிச்சயமாக உம் இறைவன், ஞானவான், நன்கறிந்தவன்.

Enam 6:129

இவ்வாறு, அக்கிரமக்காரர்களில் சிலரை சிலருக்கு நண்பர்களாக ஆக்குவோம், அவர்கள் செய்துகொண்டிருந்ததன் காரணமாக.

Enam 6:130

"ஜின்கள் மற்றும் மனிதர்களின் கூட்டமே! உங்களிலிருந்து தூதர்கள் என் வசனங்களை உங்களுக்கு விவரிப்பவர்களாக, உங்கள் இந்நாளை உங்களுக்கு எச்சரிப்பவர்களாக உங்களிடம் வரவில்லையா?” என்று கூறுவான். அதற்கவர்கள், "(எங்கள் இறைவனே!) எங்களுக்கு எதிராக சாட்சியளித்தோம்” என்று கூறுவார்கள். உலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது; நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பாளர்களாக இருந்தார்கள் என்று அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்.

Enam 6:131

அதற்குக் காரணம், நகரங்களை அங்கு வசிப்பவர்கள் கவனமற்றவர்களாக இருக்க (அவர்களுடைய ஷிர்க் எனும்) அநியாயத்தினால் அழிப்பவனாக உமது இறைவன் இல்லை என்பதாகும்.

Enam 6:132

எல்லோருக்கும் அவர்கள் செய்ததிலிருந்து பதவிகள் உண்டு. அவர்கள் செய்வதை உம் இறைவன் கவனிக்காதவனாக இல்லை.

Enam 6:133

(நபியே!) உம் இறைவன் நிறைவானவன், கருணையுடையவன் ஆவான். (மனிதர்களே!) அவன் நாடினால் உங்களைப் போக்கி, (சென்றுபோன) மற்ற சமுதாயத்தின் சந்ததியிலிருந்து உங்களை உருவாக்கியதைப் போன்று உங்களுக்குப் பின்னர் தான் நாடியவர்களை தோன்றச் செய்வான்.

Enam 6:134

நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப்படுவது வரக்கூடியதே. நீங்கள் (உங்கள் இறைவனைப்) பலவீனப்படுத்துபவர்களாக இல்லை.

Enam 6:135

(நபியே!) கூறுவீராக: "என் சமுதாயமே! உங்கள் போக்கில் (நீங்கள்) செய்யுங்கள். நிச்சயமாக நான் (என் இறைவனின் கட்டளைப்படி) செய்கிறேன். மறுமையின் (நல்ல) முடிவு எவருக்கு இருக்கும் என்பதை (நீங்கள் விரைவில்) அறிவீர்கள். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.”

Enam 6:136

அல்லாஹ்விற்கு அவன் படைத்த விவசாயம், கால்நடைகளிலிருந்து ஒரு பாகத்தை ஆக்கினார்கள். தங்கள் எண்ணப்படி "இது அல்லாஹ்விற்கு, இது எங்கள் தெய்வங்களுக்கு” என்றும் கூறினர். அவர்களுடைய தெய்வங்களுக்குரியது அல்லாஹ்வின் பக்கம் சேராது. அல்லாஹ்வுக்குரியது அவர்களுடைய தெய்வங்களின் பக்கம் சேரும்! அவர்கள் (இவ்வாறு) தீர்ப்புசெய்வது கெட்டு விட்டது.

Enam 6:137

இவ்வாறே, இணைவைப்பவர்களில் அதிகமானோருக்கு அவர்களை அழிப்பதற்காகவும் அவர்கள் மீது அவர்களுடைய வழிபாட்டை குழப்புவதற்காகவும் தங்கள் குழந்தைகளைக் கொல்வதை அவர்களுடைய ஷைத்தான்கள் அலங்கரித்தன. அல்லாஹ் நாடியிருந்தால் அதை செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) அவர்களை அவர்கள் இட்டுக்கட்டுவதுடன் (விட்டு) விடுங்கள்.

Enam 6:138

இவை தடுக்கப்பட்ட கால்நடைகளும் விவசாயமும் ஆகும். நாங்கள் நாடுபவரைத் தவிர (மற்றவர்) அவற்றைப் புசிக்கமாட்டார் என்று தங்கள் எண்ணப்படி அவர்கள் கூறினர். இன்னும், பல கால்நடைகள் அவற்றின் முதுகுகள் தடுக்கப்பட்டன. (அவற்றின் மீது பயணிப்பதும், சுமையேற்றுவதும் கூடாது.) இன்னும், (பல) கால்நடைகள் (அவற்றை அறுக்கும்போது) அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டார்கள் (இவ்வாறு அல்லாஹ் கூறினான் என்று) அவன் மீது இட்டுக் கட்டுகின்றனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு (தகுந்த) கூலி கொடுப்பான்.

Enam 6:139

"இந்த கால்நடைகளின் வயிறுகளில் இருப்பது எங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியது. (அதை அவர்கள் புசிக்கலாம். அது) எங்கள் பெண்களுக்கு தடுக்கப்பட்டது. அது செத்ததாக இருந்தால் அதில் அவர்களும் பங்காளிகள்” என்று கூறினர். அவர்களுடைய (இவ்)வர்ணிப்பிற்கு அவன் அவர்களுக்கு(த் தகுந்தக்)கூலி கொடுப்பான். நிச்சயமாக அவன் ஞானவான், நன்கறிந்தவன்.

Enam 6:140

அறிவின்றி மூடத்தனமாக தங்கள் பிள்ளைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ் (அனுமதி) கொடுத்த (நல்ல)வற்றை (தங்கள் மீது) தடுத்தவர்களும் நஷ்டமடைந்து விட்டனர். (இவ்வாறு) அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுகின்றனர். (அவர்கள்) வழிகெட்டு விட்டனர்; அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை.

Enam 6:141

கொடிகள் நிறைந்த தோட்டங்கள், கொடிகளற்ற தோட்டங்கள், பேரீத்த மரங்கள் இன்னும் அதன் கனிகள் மாறுபட்ட விளைச்சலையும், ஒலிவத்தையும், ஒன்றுக்கொன்று ஒப்பான இன்னும் ஒப்பாகாத மாதுளையையும் உற்பத்தி செய்தவன் அவன்தான். அவை காய்த்தால் அதன் கனிகளிலிருந்து புசியுங்கள். அவற்றின் அறுவடை நாளில் அதனுடைய கடமையை (ஸகாத்தை) கொடுங்கள். விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்பவர்களை நிச்சயமாக அவன் (அல்லாஹ்) நேசிக்க மாட்டான்.

Enam 6:142

இன்னும் கால்நடைகளில், சுமக்கத் தகுதியானதையும் சுமக்கத் தகுதியற்றதையும் (உற்பத்தி செய்தவன் அவன்தான்). அல்லாஹ் உங்களுக்கு உணவளித்தவற்றில் இருந்து புசியுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான எதிரியாவான்.

Enam 6:143

(நபியே! கால்நடைகளில்) எட்டு ஜோடிகளை (உற்பத்தி செய்தான்). (அவை:) செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரண்டை; வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரண்டை (படைத்தான்). இ(வ்வி)ரு (வகை) ஆண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களின் கர்ப்பங்கள் சுமந்தவற்றையா (அல்லாஹ்) தடை செய்தான்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் கல்வியுடன் (கூடிய ஆதாரத்தை) எனக்கு அறிவியுங்கள்.

Enam 6:144

ஒட்டகையிலும் (ஆண், பெண்) இரண்டை, மாட்டிலும் (ஆண், பெண்) இரண்டை(ப் படைத்தான்). இ(வ்வி)ரு (வகை) ஆண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களின் கர்ப்பங்கள் சுமந்தவற்றையா (அல்லாஹ்) தடை செய்தான்? இதை அல்லாஹ் உங்களுக்குக் (கட்டளையிட்டதாகக் கூறுகிறீர்களே, அவ்வாறு அவன்) கட்டளையிட்ட போது நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? (என்றும் நபியே! கேட்பீராக). கல்வி இன்றி மக்களை வழி கெடுப்பதற்காக பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுபவனை விட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.

Enam 6:145

(நபியே!) கூறுவீராக: புசிப்பவர் மீது அதைப் புசிக்க தடுக்கப்பட்டதாக எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதில் நான் (எதையும்) காணவில்லை. (ஆனால்) செத்ததாக அல்லது ஓடக்கூடிய இரத்தமாக, பன்றியின் மாமிசமாக -ஏனெனில் நிச்சயமாக அது அசுத்தமானதாகும்- அல்லது பாவமாக அல்லாஹ் அல்லாதவருக்குப் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதாக இருந்தால் தவிர (இவை தடுக்கப்பட்டவையாகும்). பாவத்தை நாடாதவராக, வரம்பு மீறாதவராக எவர் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டாரோ (அவர் குற்றவாளியல்ல.) நிச்சயமாக உம் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.

Enam 6:146

(நபியே!) நகமுடைய (பிராணிகள் ஒட்டகம், தீக்கோழி, வாத்து வகைகள்) எல்லாவற்றையும் யூதர்கள் மீது தடை செய்தோம். மாடு இன்னும் ஆட்டிலும் அந்த இரண்டின் கொழுப்புகளை அவர்கள் மீது தடை செய்தோம். அந்த இரண்டின் முதுகுகள் அல்லது சிறு குடல்கள் சுமந்துள்ள அல்லது எலும்புடன் கலந்துள்ளதைத் தவிர (அந்த கொழுப்புகளை அவர்கள் சாப்பிடலாம்). அ(தன் காரணமாவ)து அவர்களுடைய அழிச்சாட்டியத்தினால் அவர்களுக்கு நாம் (தகுந்த) கூலி கொடுத்தோம். நிச்சயமாக நாம் உண்மையாளர்களே.

Enam 6:147

(நபியே!) அவர்கள் உம்மைப் பொய்ப்பித்தால், (அவர்களை நோக்கி) "உங்கள் இறைவன் விசாலமான கருணையுடையவன்; இன்னும் அவனது தண்டனை, குற்றவாளிகளான மக்களை விட்டு திருப்பப்படாது” என்று கூறுவீராக.

Enam 6:148

"அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும், இணைவைத்திருக்க மாட்டோம்; (அனுமதிக்கப்பட்ட) எதையும் (கூடாது என) நாங்கள் தடை செய்திருக்க மாட்டோம்” என்று இணைவைப்பவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறே இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் பொய்ப்பித்தார்கள். இறுதியாக, நம் தண்டனையைச் சுவைத்தனர். (நீர் "இதற்கு) உங்களிடம் கல்வியில் ஏதும் உண்டா? (அப்படியிருந்தால்) அதை நமக்கு வெளிப்படுத்துங்கள். நீங்கள் சந்தேகத்தைத் தவிர (வேறு எதையும்) பின்பற்றுவதில்லை. நீங்கள் (பொய்யை) கற்பனை செய்கிறீர்களே தவிர வேறில்லை” என்று கூறுவீராக.

Enam 6:149

(நபியே!) கூறுவீராக: "(மறுக்க முடியாத) முழுமையான ஆதாரம் அல்லாஹ்விற்கே உரியது! அவன் (நிர்ப்பந்தித்து நேர்வழிபடுத்த) நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் நேர்வழிபடுத்தியிருப்பான்.”

Enam 6:150

"நிச்சயமாக அல்லாஹ் இதைத் தடை செய்தான் என்று சாட்சியளிக்கின்ற உங்கள் சாட்சிகளை அழைத்து வாருங்கள்” என்று கூறுவீராக. அவர்கள் (பொய்) சாட்சி அளித்தாலும் நீர் அவர்களுடன் சாட்சியளிக்காதீர். நம் வசனங்களை பொய்ப்பிப்பவர்கள் இன்னும் இறுதிநாளை நம்பிக்கை கொள்ளாமல், தங்கள் இறைவனுக்கு இணைவைப்பவர்களின் ஆசைகளை பின்பற்றாதீர்.

Enam 6:151

(நபியே!) கூறுவீராக: வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது தடை செய்தவற்றை(யும் ஏவியவற்றையும்) நான் (உங்களுக்கு) ஓதுகிறேன். (அவையாவன:) அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தையுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். வறுமையினால் உங்கள் பிள்ளைகளைக் கொல்லாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். மானக்கேடானவற்றை அவற்றில் வெளிப்படையானதையும் மறைவானதையும் (செய்ய) நெருங்காதீர்கள். அல்லாஹ் (கொலை செய்யக்கூடாது என்று) தடை செய்த உயிரை நியாயமின்றி கொல்லாதீர்கள். இவை, நீங்கள் சிந்தித்துப் புரிவதற்காக இவற்றைக் கெண்டு (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசிக்கிறான்.

Enam 6:152

அநாதையின் செல்வத்தை அவர் அவருடைய பருவத்தை அடையும் வரை மிக அழகிய வழியில் தவிர நெருங்காதீர்கள். அளவையையும் நிறுவையையும் நீதமாக முழுமைப்படுத்துங்கள். ஓர் ஆன்மாவிற்கு அதன் சக்திக்கு உட்பட்டே தவிர நாம் சிரமம் கொடுப்பதேயில்லை. நீங்கள் (தீர்ப்பு) கூறினால் (அதனால் பாதிக்கப்படுபவர்) உறவினராக இருந்தாலும் நீதமாக கூறுங்கள். அல்லாஹ்வின் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். இவை, நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவே இவற்றைக் கொண்டு (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசித்தான்.

Enam 6:153

"நிச்சயமாக இது என் நேரான பாதையாகும். அதைப் பின்பற்றுங்கள்; (மற்ற) வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக (அவன்) இவற்றைக் கொண்டு உங்களுக்கு உபதேசிக்கிறான்” (என்று கூறுவீராக).

Enam 6:154

பிறகு, நல்லறம் புரிந்தவர் மீது (அருள்) நிறைவாகுவதற்காகவும் எல்லாவற்றையும் விவரிப்பதற்காகவும் நேர்வழியாகவும், கருணையாகவும் மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்தோம் அவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நம்பிக்கை கொள்வதற்காக.

Enam 6:155

(மனிதர்களே!) இது அருள்வளமிக்க வேதமாகும். இதை நாமே இறக்கினோம். ஆகவே, நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக இதைப் பின்பற்றுங்கள்; (அல்லாஹ்வை) அஞ்சுங்கள்.

Enam 6:156

(இணைவைப்போரே!) வேதம் இறக்கப்பட்டதெல்லாம் நமக்கு முன்னர் (சென்ற யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய) இரு கூட்டங்கள் மீதுதான், நாங்கள் அவர்க(ள் படித்த வேதங்க)ளின் படிப்பை விட்டு கவனமற்றவர்களாகவே நிச்சயம் இருந்தோம் என்று நீங்கள் கூறாதிருப்பதற்காக (இந்த வேதத்தை உங்களுக்கு இறக்கினோம்).

Enam 6:157

அல்லது "நம்மீதும் ஒரு வேதம் இறக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக நாம் அவர்களைவிட அதிகம் நேர்வழி பெற்றவர்களாக இருந்திருப்போம்” என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும் (இந்த வேதத்தை அருளினோம்). ஆகவே, உங்கள் இறைவனிடமிருந்து, மிகத் தெளிவான சான்றும் நேர்வழியும் கருணையும் உங்களிடம் வந்துவிட்டது. ஆகவே, அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்து அவற்றை விட்டு விலகியவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்? நம் வசனங்களைவிட்டு (இவ்வாறு) விலகியவர்களுக்கு அவர்கள் விலகிக் கொண்டிருந்ததன் காரணமாக கெட்ட வேதனையை கூலி(யாகக்) கொடுப்போம்.

Enam 6:158

வானவர்கள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உம் இறைவன் வருவதையோ அல்லது உம் இறைவனின் அத்தாட்சிகளில் சிலது வருவதையோ தவிர (வேறெதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம் இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் நாளில் அதற்கு முன்னர் நம்பிக்கை கொண்டிருக்காத அல்லது தன் நம்பிக்கையில் ஒரு நன்மையையும் செய்திருக்காத ஓர் ஆன்மாவிற்கு அதன் நம்பிக்கை(யும் நன்மையும்) பலனளிக்காது. (நீங்கள் உங்கள் முடிவை) எதிர்பாருங்கள்; நிச்சயமாக நாங்களும் எதிர்பார்க்கிறோம் என்று (நபியே!) கூறுவீராக.

Enam 6:159

நிச்சயமாக, தங்கள் மார்க்கத்தை (பலவாறாக)ப் பிரித்து (அவர்களும்) பல பிரிவினர்களாக ஆகிவிட்டார்களே அவர்களுடன் நீர் ஒரு விஷயத்திலும் இல்லை. அவர்களுடைய காரியமெல்லாம் அல்லாஹ்வின் பக்கம்தான் இருக்கிறது. பிறகு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.

Enam 6:160

எவர் ஒரு நன்மையைச் செய்தாரோ அவருக்கு அது போன்ற பத்து நன்மைகள் உண்டு. எவர் ஒரு தீமையைச் செய்தாரோ அது போன்றே (அதன் அளவே) தவிர அவர் கூலி கொடுக்கப்படமாட்டார். (நன்மையைக் குறைத்தோ தீமையைக் கூட்டியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

Enam 6:161

“நிச்சயமாக என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டினான். அது நிலையான மார்க்கமாகும், இப்ராஹீம் உடைய கொள்கையாகும். (அவர் மார்க்கத்தில்) உறுதியுடையவர். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை” என்று (நபியே!) கூறுவீராக.

Enam 6:162

“நிச்சயமாக என் தொழுகையும், என் பலியும் (மற்ற வழிபாடுகளும்), என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியவை” என்று கூறுவீராக.

Enam 6:163

அவனுக்கு இணை அறவே இல்லை; இதைக் கொண்டே (நான்) ஏவப்பட்டுள்ளேன். அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களில் நான் முதலாமவன்.

Enam 6:164

அல்லாஹ் அல்லாதவனையா -அவன் எல்லாவற்றின் இறைவனாக இருக்க- நான் இறைவனாக (எனக்கு)த் தேடுவேன்? (பாவம் செய்கிற) ஒவ்வோர் ஆன்மா(வும்) தனக்கெதிராகவே தவிர (பாவம்) செய்வதில்லை. பாவம் செய்யக்கூடிய ஓர் ஆன்மா மற்றொன்றின் பாவத்தை சுமக்காது. (இறந்த) பிறகு, உங்கள் இறைவன் பக்கம்தான் உங்கள் மீட்சி இருக்கிறது. நீங்கள் முரண்பட்டு கொண்டிருந்தவற்றில் (எது தவறு, எது சரி என்று அவன்) உங்களுக்கு அறிவிப்பான்.

Enam 6:165

அவன்தான் உங்களை பூமியில் (முன் சென்றவர்களின்) வழித்தோன்றல்களாக (பிரதிநிதிகளாக) ஆக்கினான். உங்களுக்கு (அவன்) கொடுத்தவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக உங்களில் சிலரை சிலருக்கு மேல் பதவிகளில் உயர்த்தினான். நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் தீவிரமானவன். இன்னும் நிச்சயமாக அவன்தான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.