Tamilce Meal — Şeyh Ömer Şerif b. Abdüsselâm (kısaltılmış sürüm) — A'raf 7:1 – Yunus 10:109
Contents
- A'raf 7:1
- A'raf 7:2
- A'raf 7:3
- A'raf 7:4
- A'raf 7:5
- A'raf 7:6
- A'raf 7:7
- A'raf 7:8
- A'raf 7:9
- A'raf 7:10
- A'raf 7:11
- A'raf 7:12
- A'raf 7:13
- A'raf 7:14
- A'raf 7:15
- A'raf 7:16
- A'raf 7:17
- A'raf 7:18
- A'raf 7:19
- A'raf 7:20
- A'raf 7:21
- A'raf 7:22
- A'raf 7:23
- A'raf 7:24
- A'raf 7:25
- A'raf 7:26
- A'raf 7:27
- A'raf 7:28
- A'raf 7:29
- A'raf 7:30
- A'raf 7:31
- A'raf 7:32
- A'raf 7:33
- A'raf 7:34
- A'raf 7:35
- A'raf 7:36
- A'raf 7:37
- A'raf 7:38
- A'raf 7:39
- A'raf 7:40
- A'raf 7:41
- A'raf 7:42
- A'raf 7:43
- A'raf 7:44
- A'raf 7:45
- A'raf 7:46
- A'raf 7:47
- A'raf 7:48
- A'raf 7:49
- A'raf 7:50
- A'raf 7:51
- A'raf 7:52
- A'raf 7:53
- A'raf 7:54
- A'raf 7:55
- A'raf 7:56
- A'raf 7:57
- A'raf 7:58
- A'raf 7:59
- A'raf 7:60
- A'raf 7:61
- A'raf 7:62
- A'raf 7:63
- A'raf 7:64
- A'raf 7:65
- A'raf 7:66
- A'raf 7:67
- A'raf 7:68
- A'raf 7:69
- A'raf 7:70
- A'raf 7:71
- A'raf 7:72
- A'raf 7:73
- A'raf 7:74
- A'raf 7:75
- A'raf 7:76
- A'raf 7:77
- A'raf 7:78
- A'raf 7:79
- A'raf 7:80
- A'raf 7:81
- A'raf 7:82
- A'raf 7:83
- A'raf 7:84
- A'raf 7:85
- A'raf 7:86
- A'raf 7:87
- A'raf 7:88
- A'raf 7:89
- A'raf 7:90
- A'raf 7:91
- A'raf 7:92
- A'raf 7:93
- A'raf 7:94
- A'raf 7:95
- A'raf 7:96
- A'raf 7:97
- A'raf 7:98
- A'raf 7:99
- A'raf 7:100
- A'raf 7:101
- A'raf 7:102
- A'raf 7:103
- A'raf 7:104
- A'raf 7:105
- A'raf 7:106
- A'raf 7:107
- A'raf 7:108
- A'raf 7:109
- A'raf 7:110
- A'raf 7:111
- A'raf 7:112
- A'raf 7:113
- A'raf 7:114
- A'raf 7:115
- A'raf 7:116
- A'raf 7:117
- A'raf 7:118
- A'raf 7:119
- A'raf 7:120
- A'raf 7:121
- A'raf 7:122
- A'raf 7:123
- A'raf 7:124
- A'raf 7:125
- A'raf 7:126
- A'raf 7:127
- A'raf 7:128
- A'raf 7:129
- A'raf 7:130
- A'raf 7:131
- A'raf 7:132
- A'raf 7:133
- A'raf 7:134
- A'raf 7:135
- A'raf 7:136
- A'raf 7:137
- A'raf 7:138
- A'raf 7:139
- A'raf 7:140
- A'raf 7:141
- A'raf 7:142
- A'raf 7:143
- A'raf 7:144
- A'raf 7:145
- A'raf 7:146
- A'raf 7:147
- A'raf 7:148
- A'raf 7:149
- A'raf 7:150
- A'raf 7:151
- A'raf 7:152
- A'raf 7:153
- A'raf 7:154
- A'raf 7:155
- A'raf 7:156
- A'raf 7:157
- A'raf 7:158
- A'raf 7:159
- A'raf 7:160
- A'raf 7:161
- A'raf 7:162
- A'raf 7:163
- A'raf 7:164
- A'raf 7:165
- A'raf 7:166
- A'raf 7:167
- A'raf 7:168
- A'raf 7:169
- A'raf 7:170
- A'raf 7:171
- A'raf 7:172
- A'raf 7:173
- A'raf 7:174
- A'raf 7:175
- A'raf 7:176
- A'raf 7:177
- A'raf 7:178
- A'raf 7:179
- A'raf 7:180
- A'raf 7:181
- A'raf 7:182
- A'raf 7:183
- A'raf 7:184
- A'raf 7:185
- A'raf 7:186
- A'raf 7:187
- A'raf 7:188
- A'raf 7:189
- A'raf 7:190
- A'raf 7:191
- A'raf 7:192
- A'raf 7:193
- A'raf 7:194
- A'raf 7:195
- A'raf 7:196
- A'raf 7:197
- A'raf 7:198
- A'raf 7:199
- A'raf 7:200
- A'raf 7:201
- A'raf 7:202
- A'raf 7:203
- A'raf 7:204
- A'raf 7:205
- A'raf 7:206
- Enfal 8:1
- Enfal 8:2
- Enfal 8:3
- Enfal 8:4
- Enfal 8:5
- Enfal 8:6
- Enfal 8:7
- Enfal 8:8
- Enfal 8:9
- Enfal 8:10
- Enfal 8:11
- Enfal 8:12
- Enfal 8:13
- Enfal 8:14
- Enfal 8:15
- Enfal 8:16
- Enfal 8:17
- Enfal 8:18
- Enfal 8:19
- Enfal 8:20
- Enfal 8:21
- Enfal 8:22
- Enfal 8:23
- Enfal 8:24
- Enfal 8:25
- Enfal 8:26
- Enfal 8:27
- Enfal 8:28
- Enfal 8:29
- Enfal 8:30
- Enfal 8:31
- Enfal 8:32
- Enfal 8:33
- Enfal 8:34
- Enfal 8:35
- Enfal 8:36
- Enfal 8:37
- Enfal 8:38
- Enfal 8:39
- Enfal 8:40
- Enfal 8:41
- Enfal 8:42
- Enfal 8:43
- Enfal 8:44
- Enfal 8:45
- Enfal 8:46
- Enfal 8:47
- Enfal 8:48
- Enfal 8:49
- Enfal 8:50
- Enfal 8:51
- Enfal 8:52
- Enfal 8:53
- Enfal 8:54
- Enfal 8:55
- Enfal 8:56
- Enfal 8:57
- Enfal 8:58
- Enfal 8:59
- Enfal 8:60
- Enfal 8:61
- Enfal 8:62
- Enfal 8:63
- Enfal 8:64
- Enfal 8:65
- Enfal 8:66
- Enfal 8:67
- Enfal 8:68
- Enfal 8:69
- Enfal 8:70
- Enfal 8:71
- Enfal 8:72
- Enfal 8:73
- Enfal 8:74
- Enfal 8:75
- Tevbe 9:1
- Tevbe 9:2
- Tevbe 9:3
- Tevbe 9:4
- Tevbe 9:5
- Tevbe 9:6
- Tevbe 9:7
- Tevbe 9:8
- Tevbe 9:9
- Tevbe 9:10
- Tevbe 9:11
- Tevbe 9:12
- Tevbe 9:13
- Tevbe 9:14
- Tevbe 9:15
- Tevbe 9:16
- Tevbe 9:17
- Tevbe 9:18
- Tevbe 9:19
- Tevbe 9:20
- Tevbe 9:21
- Tevbe 9:22
- Tevbe 9:23
- Tevbe 9:24
- Tevbe 9:25
- Tevbe 9:26
- Tevbe 9:27
- Tevbe 9:28
- Tevbe 9:29
- Tevbe 9:30
- Tevbe 9:31
- Tevbe 9:32
- Tevbe 9:33
- Tevbe 9:34
- Tevbe 9:35
- Tevbe 9:36
- Tevbe 9:37
- Tevbe 9:38
- Tevbe 9:39
- Tevbe 9:40
- Tevbe 9:41
- Tevbe 9:42
- Tevbe 9:43
- Tevbe 9:44
- Tevbe 9:45
- Tevbe 9:46
- Tevbe 9:47
- Tevbe 9:48
- Tevbe 9:49
- Tevbe 9:50
- Tevbe 9:51
- Tevbe 9:52
- Tevbe 9:53
- Tevbe 9:54
- Tevbe 9:55
- Tevbe 9:56
- Tevbe 9:57
- Tevbe 9:58
- Tevbe 9:59
- Tevbe 9:60
- Tevbe 9:61
- Tevbe 9:62
- Tevbe 9:63
- Tevbe 9:64
- Tevbe 9:65
- Tevbe 9:66
- Tevbe 9:67
- Tevbe 9:68
- Tevbe 9:69
- Tevbe 9:70
- Tevbe 9:71
- Tevbe 9:72
- Tevbe 9:73
- Tevbe 9:74
- Tevbe 9:75
- Tevbe 9:76
- Tevbe 9:77
- Tevbe 9:78
- Tevbe 9:79
- Tevbe 9:80
- Tevbe 9:81
- Tevbe 9:82
- Tevbe 9:83
- Tevbe 9:84
- Tevbe 9:85
- Tevbe 9:86
- Tevbe 9:87
- Tevbe 9:88
- Tevbe 9:89
- Tevbe 9:90
- Tevbe 9:91
- Tevbe 9:92
- Tevbe 9:93
- Tevbe 9:94
- Tevbe 9:95
- Tevbe 9:96
- Tevbe 9:97
- Tevbe 9:98
- Tevbe 9:99
- Tevbe 9:100
- Tevbe 9:101
- Tevbe 9:102
- Tevbe 9:103
- Tevbe 9:104
- Tevbe 9:105
- Tevbe 9:106
- Tevbe 9:107
- Tevbe 9:108
- Tevbe 9:109
- Tevbe 9:110
- Tevbe 9:111
- Tevbe 9:112
- Tevbe 9:113
- Tevbe 9:114
- Tevbe 9:115
- Tevbe 9:116
- Tevbe 9:117
- Tevbe 9:118
- Tevbe 9:119
- Tevbe 9:120
- Tevbe 9:121
- Tevbe 9:122
- Tevbe 9:123
- Tevbe 9:124
- Tevbe 9:125
- Tevbe 9:126
- Tevbe 9:127
- Tevbe 9:128
- Tevbe 9:129
- Yunus 10:1
- Yunus 10:2
- Yunus 10:3
- Yunus 10:4
- Yunus 10:5
- Yunus 10:6
- Yunus 10:7
- Yunus 10:8
- Yunus 10:9
- Yunus 10:10
- Yunus 10:11
- Yunus 10:12
- Yunus 10:13
- Yunus 10:14
- Yunus 10:15
- Yunus 10:16
- Yunus 10:17
- Yunus 10:18
- Yunus 10:19
- Yunus 10:20
- Yunus 10:21
- Yunus 10:22
- Yunus 10:23
- Yunus 10:24
- Yunus 10:25
- Yunus 10:26
- Yunus 10:27
- Yunus 10:28
- Yunus 10:29
- Yunus 10:30
- Yunus 10:31
- Yunus 10:32
- Yunus 10:33
- Yunus 10:34
- Yunus 10:35
- Yunus 10:36
- Yunus 10:37
- Yunus 10:38
- Yunus 10:39
- Yunus 10:40
- Yunus 10:41
- Yunus 10:42
- Yunus 10:43
- Yunus 10:44
- Yunus 10:45
- Yunus 10:46
- Yunus 10:47
- Yunus 10:48
- Yunus 10:49
- Yunus 10:50
- Yunus 10:51
- Yunus 10:52
- Yunus 10:53
- Yunus 10:54
- Yunus 10:55
- Yunus 10:56
- Yunus 10:57
- Yunus 10:58
- Yunus 10:59
- Yunus 10:60
- Yunus 10:61
- Yunus 10:62
- Yunus 10:63
- Yunus 10:64
- Yunus 10:65
- Yunus 10:66
- Yunus 10:67
- Yunus 10:68
- Yunus 10:69
- Yunus 10:70
- Yunus 10:71
- Yunus 10:72
- Yunus 10:73
- Yunus 10:74
- Yunus 10:75
- Yunus 10:76
- Yunus 10:77
- Yunus 10:78
- Yunus 10:79
- Yunus 10:80
- Yunus 10:81
- Yunus 10:82
- Yunus 10:83
- Yunus 10:84
- Yunus 10:85
- Yunus 10:86
- Yunus 10:87
- Yunus 10:88
- Yunus 10:89
- Yunus 10:90
- Yunus 10:91
- Yunus 10:92
- Yunus 10:93
- Yunus 10:94
- Yunus 10:95
- Yunus 10:96
- Yunus 10:97
- Yunus 10:98
- Yunus 10:99
- Yunus 10:100
- Yunus 10:101
- Yunus 10:102
- Yunus 10:103
- Yunus 10:104
- Yunus 10:105
- Yunus 10:106
- Yunus 10:107
- Yunus 10:108
- Yunus 10:109
A'raf 7:1
அலிஃப், லாம், மீம், ஸாத்.[1]
———
[1] ஸூரா பகராவின் 1-ஆவது வசனத்தின் அடிக்குறிப்பைப் பாருங்கள்.
A'raf 7:2
(நபியே! இது) உம் மீது இறக்கப்பட்ட ஒரு வேதமாகும். ஆக, இதன் மூலம் (நீர் மக்களை) எச்சரிப்பதற்கு உம் இதயத்தில் இதில் நெருக்கடி இருக்க வேண்டாம். இன்னும், (இது) நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு நல்லுபதேசமாகும்.
A'raf 7:3
(உலக மக்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதை பின்பற்றுங்கள். அதைத் தவிர (மற்ற) பொறுப்பாளர்களை பின்பற்றாதீர்கள். மிகக் குறைவாகவே நீங்கள் நல்லுணர்வு (நல்லுபதேசம்) பெறுகிறீர்கள்.
A'raf 7:4
எத்தனையோ நகரங்கள், அவற்றை அழித்தோம். அவற்றுக்கு நம் வேதனை இரவில் அல்லது அவர்கள் பகலில் தூங்கிக் கொண்டிருந்தபோது வந்தது.
A'raf 7:5
அவர்களிடம் நம் வேதனை வந்தபோது, “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாக இருந்தோம்.” என்று கூறியதைத் தவிர அவர்களுடைய வாதம் (வேறு) இருக்கவில்லை.
A'raf 7:6
ஆகவே, எவர்களிடம் (தூதர்கள்) அனுப்பப்பட்டார்களோ அவர்களை(யும்) நிச்சயம் விசாரிப்போம். இன்னும் தூதர்களை(யும்) நிச்சயம் விசாரிப்போம்.
A'raf 7:7
நிச்சயமாக உறுதியான ஞானத்துடன் அவர்களுக்கு (அவர்கள் செய்ததை) விவரிப்போம். நாம் (அவர்களைவிட்டு) மறைந்தவர்களாக இருக்கவில்லை.
A'raf 7:8
அன்றைய தினம் (செயல்கள்) நிறுக்கப்படுதல் உண்மைதான். ஆகவே, எவருடைய நிறுவைகள் கனமானதோ அவர்கள்தான் வெற்றியாளர்கள்.
A'raf 7:9
எவருடைய (நன்மையின்) நிறுவைகள் இலேசானதோ அவர்கள் தங்களுக்கே நஷ்டமிழைத்தவர்கள் ஆவர். காரணம், அவர்கள் நம் வசனங்களுக்கு அநீதியிழைத்துக் கொண்டிருந்தனர்.
A'raf 7:10
திட்டவட்டமாக நாம் உங்களுக்குப் பூமியில் (வசிக்க) இடமளித்தோம். அதில் உங்களுக்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்தினோம். (இவ்வாறு இருந்தும்) மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
A'raf 7:11
திட்டவட்டமாக உங்களைப் படைத்தோம். பிறகு, உங்களை வடிவமைத்தோம். பிறகு, “ஆதமுக்கு சிரம் பணியுங்கள்” என வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத் தவிர (அனைவரும்) சிரம் பணிந்தனர். சிரம் பணிந்தவர்களில் அவன் ஆகவில்லை.
A'raf 7:12
“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ சிரம் பணியாதிருக்க உன்னைத் (தூண்டி, சிரம்பணிவதிலிருந்து) தடுத்தது எது?” என்று கூறினான் (இறைவன்). (அதற்கு இப்லீஸ்) “நான் அவரைவிட மேலானவன். நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று கூறினான்.
A'raf 7:13
ஆகவே, “இதிலிருந்து இறங்கிவிடு! இதில் நீ பெருமை கொள்வதற்கு உமக்கு அனுமதியில்லை. ஆகவே, வெளியேறிவிடு. நிச்சயமாக நீ இழிவானவர்களில் உள்ளவன்” என்று கூறினான் (இறைவன்).
A'raf 7:14
(அதற்கு இப்லீஸ்) “(இறந்தவர்கள்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசமளி” என்று கூறினான்.
A'raf 7:15
“நிச்சயமாக நீ அவகாச மளிக்கப்பட்டவர்களில் இருக்கிறாய்” என்று கூறினான் (இறைவன்).
A'raf 7:16
“நீ என்னை வழிகெடுத்ததின் காரணமாக அவர்களுக்காக உன் நேரான பாதையில் நிச்சயம் உட்காருவேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.
A'raf 7:17
“பிறகு, அவர்களுக்கு முன் புறத்திலிருந்தும், அவர்களுக்கு பின் புறத்திலிருந்தும் அவர்களின் வலது புறத்திலிருந்தும், அவர்களின் இடது புறத்திலிருந்தும் நிச்சயம் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானவர்களை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக நீ காணமாட்டாய்” (என்றும் கூறினான்).
A'raf 7:18
“நீ இகழப்பட்டவனாக, (கருணையி லிருந்து) விரட்டப்பட்டவனாக இதிலிருந்து வெளியேறு. அவர்களில் உன்னைப் பின்பற்றியவர் (மற்றும் நீ ஆக), உங்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நிச்சயம் நிரப்புவேன்” என்று கூறினான் (இறைவன்).
A'raf 7:19
“ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் வசித்திரு(ங்கள்). நீங்கள் இருவரும் நாடிய இடத்தில் புசியுங்கள். இந்த மரத்தை நெருங்காதீர்கள். (அதனால்) அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்” (என்றான் இறைவன்).
A'raf 7:20
அவ்விருவருக்கும் மறைக்கப்பட்ட அவ்விருவரின் வெட்கத்தலங்களை அவ்விருவருக்கும் வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் ஊசலாட்டத்தை உண்டாக்கினான். “நீங்கள் இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் அல்லது (சொர்க்கத்தில்) நிரந்தரமானவர்களில் ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவே தவிர (மற்ற எதற்காகவும்) உங்களிருவரையும் இம்மரத்தை விட்டு உங்களிருவரின் இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான்.
A'raf 7:21
“நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மை நாடுவோரில் (உள்ளவன்)தான்” என்று அவ்விருவரிடமும் சத்தியமிட்டான்.
A'raf 7:22
ஆக, ஏமாற்றி அவ்விருவரையும் தரம் தாழ்த்தினான் (ஷைத்தான்). (அந்த) இருவரும் (அம்)மரத்தைச் சுவைத்தபோது, அவ்விருவரின் வெட்கத்தலங்கள் அவ்விருவருக்கும் தெரிந்தன. சொர்க்கத்தின் இலைகளினால் தம் இருவர் மீதும் மூடிக்கொள்ள அவ்விருவரும் முயன்றனர். அவ்விருவரின் இறைவன் “அம்மரத்தை விட்டு நான் உங்களிருவரையும் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் வெளிப்படையான எதிரி என்று நான் உங்களிருவருக்கும் கூறவில்லையா?” என்று (கூறி) அவ்விருவரையும் அழைத்தான்.
A'raf 7:23
(அதற்கு) அவ்விருவரும் “எங்கள் இறைவா! எங்கள் ஆன்மாக்களுக்கு நாங்கள் தீங்கிழைத்தோம். நீ எங்களை மன்னிக்கவில்லையெனில்; நீ எங்களுக்கு கருணை புரியவில்லையெனில் நிச்சயமாக நஷ்டவாளிகளில் ஆகிவிடுவோம்” என்று கூறினர்.
A'raf 7:24
இறங்கிவிடுங்கள். உங்களில் சிலர் சிலருக்கு எதிரி. உங்களுக்கு பூமியில் தங்குமிடமும், ஒரு காலம் வரை சுகமும் உண்டு என்று கூறினான் (இறைவன்).
A'raf 7:25
“அதில்தான் (நீங்கள்) வாழ்வீர்கள்; அதில்தான் இறப்பீர்கள்; அதிலிருந்து தான் எழுப்பப்படுவீர்கள்” என்று (அல்லாஹ்) கூறினான்.
A'raf 7:26
ஆதமின் சந்ததிகளே! உங்கள் வெட்கத்தலங்களை மறைக்கின்ற ஆடையையும் அலங்காரத்தையும் திட்டமாக நாம் உங்களுக்கு படைத்தோம். இறைஅச்சத்தின் ஆடை, அதுதான் மிகச் சிறந்தது. இவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக! (இவற்றை நாம் அவர்களுக்கு விவரிக்கிறோம்).
A'raf 7:27
ஆதமின் சந்ததிகளே! ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை, அவ்விருவருடைய வெட்கத்தலங்களை அவ்விருவருக்கும் காண்பிப்பதற்காக அவன் அவ்விருவரை விட்டு அவ்விருவரின் ஆடையை கழட்டியவனாக சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி (ஏமாற்றி)யது போன்று உங்களை ஏமாற்றி விடவேண்டாம். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைப் பார்க்காதவாறு உங்களைப் பார்க்கிறான். நிச்சயமாக நாம் நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு ஷைத்தான்களை நண்பர்களாக ஆக்கினோம்.
A'raf 7:28
அவர்கள் ஒரு மானக்கேடானதைச் செய்தால், “எங்கள் மூதாதைகளை இதன் மீது (நாங்கள்) கண்டோம். இதை அல்லாஹ்வும் எங்களுக்கு ஏவினான்” என்று கூறுகின்றனர். “நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடானதை ஏவ மாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றை கூறுகிறீர்களா?” என்று (நபியே!) கூறுவீராக.
A'raf 7:29
(நபியே!) கூறுவீராக: "என் இறைவன் நீதத்தை ஏவினான். எல்லா மஸ்ஜிதிலும் (வழிபாட்டில் அல்லாஹ்வை நோக்கி) உங்கள் முகங்களை நிறுத்துங்கள். வழிபடுவதை அவனுக்கு தூய்மைப்படுத்தியவர்களாக அவனை அழையுங்கள். அவன் உங்களை ஆரம்பமாக படைத்தது போன்று (அவனிடமே) திரும்புவீர்கள்.”
A'raf 7:30
ஒரு பிரிவை அவன் நேர்வழிப்படுத்தினான். (வேறு) ஒரு பிரிவு, அதன் மீது வழிகேடு உறுதியாகிவிட்டது. (ஏனெனில்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களையே தோழர்களாக எடுத்துக் கொண்டு, நிச்சயமாக தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என எண்ணுகின்றனர்.
A'raf 7:31
ஆதமின் சந்ததிகளே! எல்லா மஸ்ஜிதிலும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (அனுமதிக்கப்பட்டதை) புசியுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்கள் (வரம்பு மீறாதீர்கள்). (ஏனென்றால்,) விரயம் செய்பவர்களை நிச்சயம் அவன் நேசிக்க மாட்டான்.
A'raf 7:32
(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்திய அலங்காரத்தையும், உணவில் நல்லவற்றையும் எவன் தடைசெய்தான்? என்று கூறுவீராக “அது இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு (ஆகுமானதே!) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டும்) பிரத்தியேகமாக இருக்கும்” என்று கூறுவீராக. அறிகின்ற மக்களுக்கு வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.
A'raf 7:33
(நபியே!) கூறுவீராக: நிச்சயமாக என் இறைவன் தடை செய்ததெல்லாம் வெளிப்படையான, மறைவான எல்லா மானக்கேடான காரியங்களையும், பாவத்தையும், நியாயமின்றி (மக்களை) கொடுமைப்படுத்துவதையும், (அல்லாஹ்) எதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு நீங்கள் இணையாக்குவதையும் மேலும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது கூறுவதையும்தான் (அல்லாஹ் தடைசெய்தான்).
A'raf 7:34
எல்லா இனத்தவருக்கும் (அவர்கள் வாழ்வதற்கும், அழிவதற்கும்) ஒரு தவணையுண்டு. அவர்களுடைய தவணை வந்தால் ஒரு வினாடி பிந்த மாட்டார்கள்; (ஒரு வினாடி) முந்த மாட்டார்கள்.
A'raf 7:35
ஆதமின் சந்ததிகளே! (என்) தூதர்கள் உங்களில் இருந்தே நிச்சயமாக உங்களிடம் என் வசனங்களை உங்களுக்கு விவரித்தவர்களாக வந்தால், எவர்கள் (அல்லாஹ்வை) அஞ்சி, (தங்களை) சீர்திருத்தினார்களோ அவர்கள் மீது பயமில்லை; அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
A'raf 7:36
நம் வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை விட்டு பெருமையடித்து புறக்கணித்தவர்கள் அவர்கள் நரகவாசிகள் ஆவர். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள்.
A'raf 7:37
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பித்தவனைவிட மிகப்பெரிய அநியாயக்காரன் யார்? விதியில் இவர்களுடைய பாகம் இவர்களை அடையும். இறுதியாக, இவர்களை உயிர் வாங்குபவர்களாக நம் (வானவத்) தூதர்கள் இவர்களிடம் வந்தால் அல்லாஹ்வை அன்றி நீங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்கள் எங்கே? என்று கூறுவார்கள். “அவர்கள் எங்களை விட்டு மறைந்தனர்” என்று கூறி, நிச்சயமாக தாங்கள் நிராகரிப்பவர்களாக(வே) இருந்தனர் என்று தங்களுக்கு எதிராக சாட்சியளிப்பார்கள்.
A'raf 7:38
ஜின்களிலும், மனிதர்களிலும் உங்களுக்கு முன்னர் சென்றுவிட்ட (பாவிகளான) கூட்டங்களில் (இணைந்து) நரகத்தில் நுழையுங்கள் என்று (அல்லாஹ்) கூறுவான். ஒரு கூட்டம் (நரகத்தில்) நுழையும்போதெல்லாம் அது தன் சக கூட்டத்தை சபிக்கும். இறுதியாக, அதில் அனைவரும் ஒன்று சேர்ந்தால் அவர்களில் பின் வந்த கூட்டம் தங்கள் முன்சென்ற கூட்டத்தை சுட்டிக் காண்பித்து “எங்கள் இறைவா! இவர்கள்தான் எங்களை வழி கெடுத்தனர். எனவே, அவர்களுக்கு நரகத்தில் இரு மடங்கு வேதனையைக் கொடு!” என்று கூறும். “(உங்களில்) எல்லோருக்குமே இருமடங்கு (வேதனை) உண்டு. எனினும் அறியமாட்டீர்கள்” என்று (அல்லாஹ்) கூறுவான்.
A'raf 7:39
அவர்களில் முன்சென்ற கூட்டம் அவர்களில் பின்வந்த கூட்டத்திற்கு கூறும்: “எங்களை விட உங்களுக்கு ஒரு மேன்மையும் இல்லை. ஆகவே, நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக வேதனையைச் சுவையுங்கள்”.
A'raf 7:40
நிச்சயமாக நம் வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை விட்டு பெருமையடித்து புறக்கணித்தவர்கள் அவர்களுக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்படாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரை சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். குற்றவாளிகளுக்கு இவ்வாறே கூலிகொடுப்போம்.
A'raf 7:41
நரகத்தில் அவர்களுக்கு (கீழே) ஒரு (நெருப்பு) விரிப்பும், அவர்களுக்கு மேல் (போர்த்த நெருப்புப்) போர்வைகளும் உண்டு. அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே கூலிகொடுப்போம்.
A'raf 7:42
ஓர் ஆன்மாவை (அதற்கு நாம் சட்டம் கொடுத்து) சிரமப்படுத்த மாட்டோம் அதன் சக்திக்குத் தக்கவாறே தவிர. நம்பிக்கை கொண்டு நன்மைகளைச் செய்தவர்கள்தான் சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள்.
A'raf 7:43
அவர்களுடைய நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நீக்கி விடுவோம். அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடும். இதை அடைவதற்கு எங்களை நேர்வழிபடுத்திய அல்லாஹ்வுக்கே புகழ் (அனைத்தும்) உரியது. அல்லாஹ் எங்களை நேர்வழி செலுத்தி இருக்கவில்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் திட்டவட்டமாக உண்மையை கொண்டு வந்தார்கள் என்று (அவர்கள்) கூறுவார்கள். “இந்த சொர்க்கம், நீங்கள் (நன்மைகள்) செய்து கொண்டிருந்ததனால் அதற்கு வாரிசாக்கப்பட்டீர்கள்” என்று கூறி அழைக்கப்படுவார்கள்.
A'raf 7:44
“எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை நாங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டோம்; உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையில் பெற்றீர்களா?” என்று (கூறி) சொர்க்கவாசிகள் நரகவாசிகளை அழைப்பார்கள். (அதற்கு நரகவாசிகள்) “ஆம்!” என்று கூறுவார்கள். ஆகவே, அவர்களுக்கு மத்தியில் ஓர் அறிவிப்பாளர், “நிச்சயமாக அல்லாஹ்வின் சாபம் அநியாயக்காரர்கள் மீது நிலவட்டும் என அறிவிப்பார்!”
A'raf 7:45
(அந்த அநியாயக்காரர்கள்) அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்து அதில் கோணலைத் தேடுகிறார்கள். அவர்கள் மறுமையை நிராகரிப்பவர்கள்.
A'raf 7:46
அவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். (சொர்க்கத்தின் உயர்ந்த சுவர்களாகிய) சிகரங்கள் மீது (சில) மனிதர்கள் இருப்பர். (சொர்க்க, நரகத்தில் உள்ள) ஒவ்வொருவரையும் அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு அறிவார்கள். இவர்கள், சொர்க்கவாசிகளை “ஈடேற்றம் உங்கள் மீது உண்டாகுக!” என்று (கூறி) அழைப்பார்கள்: (சிகரத்தில் இருக்கும்) அவர்கள் (இதுவரை) அ(ந்த சொர்க்கத்)தில் நுழையவில்லை. அவர்கள் (அதில் நுழைய) ஆசைப்படுவார்கள்.
A'raf 7:47
இவர்களின் பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால் “எங்கள் இறைவா! அநியாயக்கார மக்களுடன் எங்களை ஆக்கிவிடாதே!” என்று கூறுவார்கள்.
A'raf 7:48
சிகரவாசிகள் சில மனிதர்களை அழைப்பார்கள். (சிகரவாசிகள்) அவர்களை அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு அறிவார்கள். “உங்கள் சேமிப்பு(ம் உங்கள் கூட்டமு)ம், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும் உங்களுக்குப் பலனளிக்கவில்லை!” என்று கூறுவார்கள்.
A'raf 7:49
(சிகரவாசிகளை சுட்டிக் காண்பித்து) “அல்லாஹ் அவர்களை (தன்) கருணையைக் கொண்டு அடையமாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்தது இவர்கள்தானா?” (என்று பெருமையடித்து மறுத்தவர்களிடம் அல்லாஹ் கேட்பான். பிறகு,) “நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள். உங்கள் மீது பயமில்லை. நீங்கள் துக்கப்பட மாட்டீர்கள்” (என்று அல்லாஹ் சிகரவாசிகளுக்குக் கூறுவான்.)
A'raf 7:50
“எங்கள் மீது நீரிலிருந்து (கொஞ்சம்) ஊற்றுங்கள் அல்லது அல்லாஹ் உங்களுக்கு உணவளித்தவற்றிலிருந்து (கொஞ்சம் உணவளியுங்கள்).” என்று (கூறி) நரகவாசிகள் சொர்க்கவாசிகளை அழைப்பார்கள். “நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்கள் மீது அவ்விரண்டையும் தடைசெய்தான்” என்று (சொர்க்கவாசிகள்) கூறுவார்கள்.
A'raf 7:51
(நிராகரிப்பவர்கள்) தங்கள் மார்க்கத்தை கேளிக்கையாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். அவர்களை உலக வாழ்க்கை மயக்கியது. அவர்களுடைய இந்நாளின் சந்திப்பை அவர்கள் மறந்து, நம் வசனங்களை மறுத்துக் கொண்டிருந்த காரணத்தால் இன்று அவர்களை (நாமும்) மறப்போம் (நரகத்தில் அவர்களை விட்டுவிடுவோம்).
A'raf 7:52
நாம் அவர்களிடம் திட்டவட்டமாக ஒரு வேதத்தைக் கொண்டுவந்தோம். நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு நேர்வழியாகவும் கருணையாகவும் இருப்பதற்காக (தெளிவாக அதிலுள்ள உண்மையை நாம்) அறிந்து அதை விவரித்தோம்.
A'raf 7:53
(மக்காவாசிகள்) அதன் முடிவைத் தவிர (வேறு எதையாவது) எதிர்பார்க்கின்றனரா? அதன் முடிவு நாள் வரும் போது முன்னர் அதை மறந்(திருந்)தவர்கள் “எங்கள் இறைவனின் தூதர்கள் உண்மையைக் கொண்டு வந்தார்கள். ஆகவே சிபாரிசு செய்பவர்களில் எவரும் எங்களுக்கு உண்டா? அவர்கள் எங்களுக்கு சிபாரிசு செய்வார்களே. அல்லது நாங்கள் திருப்பி அனுப்பப்பட்டால் (முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்த (கெட்ட)வை அல்லாத (நல்ல காரியத்)தை செய்வோமே!” என்று கூறுவார்கள். (அவர்கள்) தங்களுக்கே நஷ்டமிழைத்துக் கொண்டனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்த (சிலைகள் போன்ற)வை அவர்களை விட்டு மறைந்துவிட்டன.
A'raf 7:54
நிச்சயமாக வானங்களையும், பூமியையும், சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையைக் கொண்டு வசப்படுத்தப்பட்டவையாக ஆறு நாட்களில் படைத்து, பிறகு அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்ட அல்லாஹ்தான் உங்கள் இறைவன். அவனே இரவால் பகலை மூடுகிறான். அது தீவிரமாக அதைத் தேடுகிறது. அறிந்து கொள்ளுங்கள் “படைத்தலும் அதிகாரமும்” அவனுக்கே உரியன. அகிலங்களின் இறைவனான அல்லாஹ் அருள்வளமிகுந்தவன்.
A'raf 7:55
தாழ்மையாகவும் மறைவாகவும் உங்கள் இறைவனை அழையுங்கள். நிச்சயமாக அவன் வரம்பு மீறுபவர்களை நேசிக்க மாட்டான்.
A'raf 7:56
பூமியில் அது சீர்திருத்தப்பட்(டு சமாதானம் ஏற்பட்)டப் பின்னர் கலகம் செய்யாதீர்கள். பயத்துடனும், ஆசையுடனும் அவனை அழையுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் கருணை நல்லறம் புரிவோருக்கு சமீபமானது.
A'raf 7:57
அவன்தான் தனது (மழை எனும்) கருணைக்கு முன்னர் நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்புகிறான். இறுதியாக, அது கனமேகத்தைச் சுமந்தால் அதை (வறண்டு) இறந்(து கிடந்)த பூமியின் பக்கம் ஓட்டுகிறோம். அதிலிருந்து மழையை இறக்குகிறோம். அதன் மூலம் எல்லா கனிகளிலிருந்தும் (குறிப்பிட்ட அளவை) வெளியாக்குகிறோம். இவ்வாறே, மரணித்தவர்களையும் வெளியாக்குவோம். நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக (உங்களுக்கு இவற்றை விவரிக்கிறோம்)!
A'raf 7:58
நல்ல பூமி அதன் தாவரம் தன் இறைவனின் அனுமதி கொண்டு (அதிகமாக) வெளியாகிறது. எது கெட்டுவிட்ட (பூமியாக உள்ள)தோ (அதிலிருந்து) வெகு சொற்பமாகவே தவிர (தாவரங்கள்) வெளியாகாது. நன்றி செலுத்துகிற மக்களுக்கு இவ்வாறு வசனங்களை விவரிக்கிறோம்.
A'raf 7:59
திட்டவட்டமாக நூஹை அவருடைய சமுதாயத்திற்கு அனுப்பினோம். (அவர்) “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவன் அன்றி வணங்கப்படும் எந்த ஒரு கடவுளும் உங்களுக்கில்லை. உங்கள் மீது மகத்தான நாளின் வேதனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
A'raf 7:60
அவருடைய சமுதாயத்திலிருந்து (முன்னிலை வகிக்கும்) தலைவர்கள் “உம்மை தெளிவான வழிகேட்டில் நிச்சயமாக நாம் காண்கிறோம்” என்று கூறினர்.
A'raf 7:61
“என் சமுதாயமே! என்னிடம் வழிகேடு இல்லை; எனினும் நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட) ஒரு தூதர்” என்று கூறினார்.
A'raf 7:62
என் இறைவனின் தூதுகளை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். இன்னும் உங்களுக்கு (நன்மையை நாடி) உபதேசிக்கிறேன். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடம் (நான்) அறிகிறேன்.
A'raf 7:63
உங்களிலுள்ள ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து அவர் உங்களை எச்சரிப்பதற்காகவும், நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காகவும், நீங்கள் கருணை காட்டப்படுவதற்காகவும் உங்களுக்கு நல்லுபதேசம் வந்ததைப் பற்றி வியக்கிறீர்களா?
A'raf 7:64
அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, அவரையும், அவருடன் கப்பலில் இருந்தோரையும் பாதுகாத்தோம், நம் வசனங்களை பொய்ப்பித்தவர்களை மூழ்கடித்தோம். நிச்சயமாக அவர்கள் குருடான சமுதாயமாக இருந்தனர்.
A'raf 7:65
‘ஆது’ (சமுதாய மக்களு)க்கு அவர்களுடைய சகோதரர் ஹூதை (தூதராக அனுப்பினோம்). அவர் “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவனையன்றி வணங்கப்படும் (எந்த) ஒரு கடவுளும் உங்களுக்கில்லை. ஆகவே நீங்கள் (அவனை) அஞ்ச வேண்டாமா?” என்று கூறினார்.
A'raf 7:66
அவருடைய சமுதாயத்தில் நிராகரித்த தலைவர்கள் “நிச்சயமாக நாம் உம்மை மடமையில் காண்கிறோம். நிச்சயமாக நாம் உம்மை பொய்யர்களில் (ஒருவராக) எண்ணுகிறோம்” என்று கூறினர்.
A'raf 7:67
“என் சமுதாயமே! மடமை என்னிடம் இல்லை. எனினும் நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட) ஒரு தூதர்” என்று கூறினார்.
A'raf 7:68
என் இறைவனின் தூதுகளை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய உபதேசி ஆவேன்.
A'raf 7:69
“உங்களை எச்சரிப்பதற்காக உங்களில் ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசம் வந்ததைப் பற்றி நீங்கள் வியக்கிறீர்களா? நூஹுடைய சமுதாயத்திற்கு பின்னர் அவன் உங்களை பிரதிநிதிகளாக்கி வைத்து, படைப்பில் உங்களுக்கு விரிவை (ஆற்றலை, வசதியை) அதிகப்படுத்திய சமயத்தை நினைவு கூருங்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவு கூருங்கள்”
A'raf 7:70
“எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை நாங்கள் விட்டு விட்டு அல்லாஹ்(வை) அவன் ஒருவனை மட்டும் நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காக நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளர்களில் இருந்தால் நீர் நமக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வருவீராக” என்று கூறினர்.
A'raf 7:71
“உங்கள் இறைவனிடமிருந்து வேதனையும் கோபமும் உங்கள் மீது நிகழ்ந்து விட்டது. நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்த (சிலைகளின்) பெயர்களில் என்னுடன் தர்க்கிக்கிறீர்களா? அதற்கு ஓர் ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கவில்லை(யே)! ஆகவே, எதிர்பாருங்கள்; நிச்சயமாக, நான் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் இருக்கிறேன்” என்று கூறினார்.
A'raf 7:72
ஆகவே, அவரையும் அவருடன் இருந்தவர்களையும் நமது கருணையினால் பாதுகாத்தோம். நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களின் வேரை அறுத்தோம். அவர்கள் நம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.
A'raf 7:73
‘ஸமூது’ (சமுதாயத்தினரு)க்கு அவர்களுடைய சகோதரர் ‘ஸாலிஹ்’ஐ (அனுப்பி வைத்தோம்). “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவன் அன்றி வணங்கப்படும் (எந்த) ஒரு கடவுளும் உங்களுக்கில்லை. உங்கள் இறைவனிடம் இருந்து ஓர் அத்தாட்சி உங்களிடம் வந்துவிட்டது. இது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக (வந்த) அல்லாஹ்வுடைய ஒட்டகமாகும். ஆகவே, அதை (தொந்தரவின்றி) விட்டு விடுங்கள், அல்லாஹ்வுடைய பூமியில் அது (சுற்றித்திரிந்து) மேயும். அதை தீமையைக் கொண்டு தொடாதீர்கள். (அவ்வாறு செய்தால்) துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடிக்கும்” என்று (அவர்) கூறினார்.
A'raf 7:74
‘ஆது’ க்குப் பின்னர் உங்களை பிரதிநிதிகளாக்கி, பூமியில் உங்களை தங்க வைத்த சமயத்தை நினைவு கூருங்கள். நீங்கள் அதன் சமவெளிகளில் மாளிகைகளை ஆக்கிக் கொள்கிறீர்கள், மலைகளில் வீடுகளை குடைந்து கொள்கிறீர்கள். ஆகவே, அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவு கூருங்கள்; விஷமிகளாக இருந்து பூமியில் அளவு கடந்து விஷமம் செய்யாதீர்கள் (என்றும் கூறினார்).
A'raf 7:75
அவருடைய சமுதாயத்தில் பெருமையடித்த தலைவர்கள், அவர்களில் பலவீனர்களாக கருதப்பட்ட நம்பிக்கை கொண்டவர்களுக்கு (அவர்களை நோக்கி) “நிச்சயமாக ஸாலிஹ் தன் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட (தூது)வர் என்று நீங்கள் அறிவீர்களா?” என்று கூறினார்கள். “நிச்சயமாக நாங்கள் அவர் அனுப்பப்பட்டதைக் கொண்டு நம்பிக்கை கொண்டவர்கள்” என்று (பின்பற்றியவர்கள்) கூறினார்கள்.
A'raf 7:76
பெருமையடித்தவர்கள் “நீங்கள் நம்பிக்கை கொண்டதை நிச்சயமாக நாங்கள் நிராகரிப்பவர்கள்” என்று கூறினார்கள்.
A'raf 7:77
ஆகவே, (அந்தப்) பெண் ஒட்டகத்தை அறுத்தனர். தங்கள் இறைவனின் கட்டளையை மீறினர். “ஸாலிஹே! நீர் தூதர்களில் (ஒருவராக) இருந்தால் நீர் எங்களை அச்சுறுத்துவதை எங்களிடம் கொண்டு வருவீராக!” என்று கூறினர்.
A'raf 7:78
ஆகவே பயங்கர சப்தம் அவர்களைப் பிடித்தது. அவர்கள் தங்கள் பூமியில் இறந்தவர்களாக காலையை அடைந்தனர்.
A'raf 7:79
(ஸாலிஹ் நபி) அவர்களை விட்டு திரும்பினார். “என் சமுதாயமே! நான் உங்களுக்கு என் இறைவனின் தூதை திட்டவட்டமாக எடுத்துரைத்தேன். உங்களுக்கு உபதேசித்தேன். எனினும் உபதேசிப்பவர்களை நீங்கள் நேசிப்பதில்லை” என்று கூறினார்.
A'raf 7:80
‘லூத்’ஐ (தூதராக அனுப்பினோம்). அவர் தம் சமுதாயத்திற்கு மானக்கேடானதிற்கு வருகிறீர்களா? உலகத்தாரில் ஒருவருமே இதற்கு உங்களை முந்தவில்லை. (உலகில் எவரும் செய்யாத மானக்கேடான செயலை செய்கிறீர்களா?) என்று கூறிய சமயத்தை நினைவு கூருவீராக.
A'raf 7:81
“நிச்சயமாக நீங்கள் பெண்கள் அன்றி ஆண்களிடம் காமத்திற்கு வருகிறீர்கள். மாறாக, நீங்கள் வரம்பு மீறிய மக்கள்” என்று கூறினார்.
A'raf 7:82
“இவர்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுங்கள். நிச்சயமாக இவர்கள் சுத்தமான மனிதர்கள்” என்று அவர்கள் கூறியது தவிர அவருடைய சமுதாயத்தினரின் பதில் (வேறு) இருக்கவில்லை.
A'raf 7:83
ஆகவே, அவரையும் அவருடைய மனைவியைத் தவிர அவருடைய குடும்பத்தையும் பாதுகாத்தோம். அவள் (வேதனையில்) தங்கியவர்களில் ஆகினாள்.
A'raf 7:84
அவர்கள் மீது (கல்) மழையை பொழிவித்தோம். ஆகவே, குற்றவாளிகளின் முடிவு எவ்வாறு ஆகிவிட்டது என்பதை (நபியே!) கவனிப்பீராக.
A'raf 7:85
‘மத்யன்’க்கு அவர்களுடைய சகோதரர் ‘ஷுஐப்’ஐ (தூதராக அனுப்பினோம்). அவர் “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவன் அன்றி வணங்கப்படும் (வேறு எந்த) ஒரு கடவுளும் உங்களுக்கு இல்லை. உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஓர் அத்தாட்சி வந்து விட்டது. ஆகவே, அளவையையும் நிறுவையையும் முழுமையாக்குங்கள். மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைக்காதீர்கள். பூமியில் அது சீர்திருத்தப்பட்(டு சமாதானம் ஏற்பட்)டப் பின்னர் கலகம் செய்யாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால் இவை உங்களுக்கு சிறந்ததாகும்” என்று கூறினார்.
A'raf 7:86
“நீங்கள் எல்லாப் பாதையிலும் அச்சுறுத்தியவர்களாகவும் அல்லாஹ்வின் பாதையை விட்டு அவனை நம்பிக்கை கொண்டவரை தடுப்பவர்களாகவும் இன்னும் அதில் கோணலைத் தேடியவர்களாகவும் அமராதீர்கள். நீங்கள் குறைவாக இருந்தபோது அவன் உங்க(ள் எண்ணிக்கைக)ளை அதிகமாக்கிய சமயத்தை நினைவு கூருங்கள். கலகம் செய்பவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்று கவனியுங்கள்!”
A'raf 7:87
உங்களில் ஒரு பிரிவினர் நான் அனுப்பப்பட்டதைக் கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து, (வேறு) ஒரு பிரிவினர் நம்பிக்கை கொள்ளாதவர்களாக இருந்தால் நமக்கு மத்தியில் அல்லாஹ் தீர்ப்பளிக்கின்ற வரை பொறுங்கள். தீர்ப்பளிப்பவர்களில் அவன் மிகச் சிறந்தவன். (என்று ஸாலிஹ் கூறினார்)
A'raf 7:88
அவருடைய சமுதாயத்தில் பெருமையடித்(து புறக்கணித்)த தலைவர்கள், “ஷுஐபே! உம்மையும் உம்முடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நிச்சயம் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது நீங்கள் (அனைவரும்) எங்கள் கொள்கைக்கு நிச்சயம் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினார்கள். “நாங்கள் வெறுப்பவர்களாக இருந்தாலுமா?” என்று (ஷுஐபு) கூறினார்.
A'raf 7:89
“உங்கள் கொள்கைக்கு நாங்கள் திரும்பினால் -அல்லாஹ் எங்களை அதிலிருந்து பாதுகாத்த பின்னர்- நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டி(யவர்களாகி) விடுவோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடியே தவிர நாங்கள் அதில் திரும்புவது எங்களுக்கு ஆகாது. எங்கள் இறைவன் ஞானத்தால் எல்லாவற்றையும்விட விசாலமானவன். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்தோம். எங்கள் இறைவா! எங்களுக்கிடையிலும் எங்கள் சமுதாயத்திற்கிடையிலும் நியாயமாக தீர்ப்பளி! நீ தீர்ப்பளிப்பவர்களில் மிகச் சிறந்தவன்” என்று கூறினார் (ஷுஐபு).
A'raf 7:90
அவருடைய சமுதாயத்தில் நிராகரித்த தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி) “நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக நீங்கள் அப்போது நஷ்டவாளிகள்தான்” என்று கூறினார்கள்.
A'raf 7:91
ஆகவே, அவர்களை (கடும்) நிலநடுக்கம் பிடித்தது. அவர்கள் தங்கள் பூமியில் இறந்தவர்களாக காலையை அடைந்தனர்.
A'raf 7:92
ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் அதில் வசிக்காதவர்கள்போல் ஆகி விட்டனர். ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் அவர்கள்தான் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டார்கள்.
A'raf 7:93
ஆக, (ஷுஐப்) அவர்களை விட்டு விலகினார். “என் சமுதாயமே! என் இறைவனின் தூது (செய்தி)களை திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துரைத்தேன். இன்னும், உங்களுக்கு உபதேசித்தேன். ஆகவே நிராகரிப்பாளர்களான சமுதாயத்தின் மீது எவ்வாறு துயர்கொள்வேன்” என்று (ஷுஐப்) கூறினார்.
A'raf 7:94
நாம் எந்த ஒரு நபியையும் ஓர் ஊரில் அனுப்பவில்லை அதில் வசிப்பவர்கள் பணி(ந்து நம்மிடம் வரு)வதற்காக வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும் அவர்களை நாம் பிடித்தே தவிர.
A'raf 7:95
பிறகு, துன்பத்தின் இடத்தில் இன்பத்தை மாற்றினோம். இறுதியாக அவர்கள் (எண்ணிக்கை) அதிகரிக்கவே “எங்கள் மூதாதைகளை(யும்) நோய், சுகம் (இப்படித்தான்) அடைந்திருக்கிறது” என்று கூறினர். ஆகவே, அவர்கள் உணராமல் இருக்கும் நிலையில் அவர்களைத் திடீரெனப் பிடித்தோம்.
A'raf 7:96
ஊர்வாசிகள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வை) அஞ்சி இருந்தால், அவர்கள் மீது வானம் இன்னும் பூமியிலிருந்து அருள்வளங்களை திறந்திருப்போம். எனினும், (அவர்களோ இறைத் தூதர்களைப்) பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்ததன் காரணமாக (வேதனையால்) அவர்களைப் பிடித்தோம்.
A'raf 7:97
ஊர்வாசிகள் அவர்கள் தூங்கியவர்களாக இருக்கும் போது நம் வேதனை அவர்களுக்கு இரவில் வருவதை அவர்கள் அச்சமற்றார்களா?
A'raf 7:98
அல்லது ஊர்வாசிகள் அவர்கள் விளையாடும் போது நம் வேதனை அவர்களுக்கு முற்பகலில் வருவதை அச்சமற்றார்களா?
A'raf 7:99
அல்லாஹ்வின் சூழ்ச்சியை (அவர்கள்) அச்சமற்றார்களா? நஷ்டவாளிகளான மக்களைத் தவிர (மற்றவர்கள்) அல்லாஹ்வின் சூழ்ச்சியை அச்சமற்றிருக்க மாட்டார்கள்.
A'raf 7:100
பூமிக்கு அதில் (முன்பு) வசித்தவர்களுக்கு பின்னர் வாரிசானவர்களுக்கு - நாம் நாடினால் அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை (தண்டனையைக் கொண்டு) சோதித்திருப்போம் - என்பது தெளிவாகவில்லையா? அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடுவோம். ஆகவே, (இவர்கள் நல்லுபதேசங்களை) செவியுற மாட்டார்கள்.
A'raf 7:101
(நபியே!) அந்த ஊர்கள் அவற்றின் செய்திகளிலிருந்து உமக்கு (ஓதி) விவரிக்கிறோம். அவர்களுடைய தூதர்கள் திட்டவட்டமாக அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களிடம் வந்தனர். எனினும், முன்னர் அவர்கள் பொய்ப்பித்து விட்டதை (இப்போது) அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை. இவ்வாறே, நிராகரிப்பாளர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
A'raf 7:102
அவர்களில் அதிகமானவர்களுக்கு எந்த வாக்குறுதியையும் (பேணும் தன்மை இருப்பதாக) நாம் காணவில்லை. நிச்சயமாக அவர்களில் அதிகமானவர்களை பாவிகளாகவே கண்டோம்.
A'raf 7:103
அவர்களுக்குப் பின்னர் மூஸாவை நம் அத்தாட்சிகளைக் கொண்டு ஃபிர்அவ்ன் இன்னும் அவனுடைய (அவைத்) தலைவர்களிடம் அனுப்பினோம். (அவர்கள்) அவற்றுக்கு அநீதியிழைத்(து பொய்ப்பித்)தனர். விஷமிகளின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக.
A'raf 7:104
“ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு தூதர் ஆவேன்” என்று மூஸா கூறினார்.
A'raf 7:105
“அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) நான் கூறாமலிருப்பதற்கு (நான்) பேராசை உள்ளவன். உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை திட்டமாக உங்களிடம் கொண்டு வந்துவிட்டேன். ஆகவே, இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை.” (என்றும் மூஸா கூறினார்.)
A'raf 7:106
“நீர் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருந்தால், நீர் உண்மையாளர்களில் இருந்தால் அதைக் கொண்டு வாரீர்” என்று கூறினான் (ஃபிர்அவ்ன்).
A'raf 7:107
ஆகவே (மூஸா) தன் தடியை எறிந்தார். அப்போது அது தெளிவான பெரிய பாம்பாக ஆகியது.
A'raf 7:108
இன்னும் அவர் தன் கையை (சட்டைப் பையிலிட்டு) வெளியில் எடுத்தார். அப்போது அது பார்ப்பவர்களுக்கு மிக வெண்மையானதாக ஆகியது.
A'raf 7:109
ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தின் தலைவர்கள் “நிச்சயமாக இவர் கற்றறிந்த சூனியக்காரர்” என்று கூறினார்கள்.
A'raf 7:110
“இவர் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற நாடுகிறார். ஆகவே, (எனக்கு) என்ன கட்டளையிடுகிறீர்கள்?” (என்று ஃபிர்அவ்ன் கேட்டான்).
A'raf 7:111
“அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் தவணை கொடு. நகரங்களில் (சூனியக்காரர்களை) ஒன்றுதிரட்டுபவர்(களான காவலாளி)களை அனுப்பு.
A'raf 7:112
அவர்கள் கற்றறிந்த சூனியக்காரர் எல்லோரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.
A'raf 7:113
சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்து, நாங்களே மிகைத்தவர்களாக ஆகிவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) திட்டமாக கூலி உண்டு (அல்லவா?) என்று கூறினர்.
A'raf 7:114
“ஆம்! (வெகுமதி உண்டு.) இன்னும் நிச்சயமாக நீங்கள் (என் அரசவையில் எனக்கு) நெருக்கமானவர்களில் இருப்பீர்கள்” என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.
A'raf 7:115
“மூஸாவே! (முதலில் தடியை) நீர் எறிகிறீரா? அல்லது நாங்களே (முதலில்) எறிபவர்களாக இருக்கவா?” என்று (சூனியக்காரர்கள்) கூறினார்கள்.
A'raf 7:116
“(நீங்கள்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். அவர்கள் எறிந்தபோது மக்களுடைய கண்களை மயக்கினார்கள். அவர்களை திடுக்கிடச் செய்தனர். ஒரு பெரிய சூனியத்தைக் கொண்டு வந்தனர்.
A'raf 7:117
மூஸாவிற்கு “நீர் உம் தடியை எறிவீராக” என்று வஹ்யி அறிவித்தோம். (அவர் எறியவே) அப்போது அது அவர்கள் போலியாக செய்தவற்றை விழுங்கி விட்டது.
A'raf 7:118
உண்மை (உறுதியாக) நிகழ்ந்தது. அவர்கள் செய்து கொண்டிருந்த (சூனியமான)து பொய்ப்பித்தது.
A'raf 7:119
ஆகவே அவர்கள் அங்கே தோற்கடிக்கப்பட்டனர். இழிவானவர்களாக திரும்பினர்.
A'raf 7:120
சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக தள்ளப்பட்டனர்.
A'raf 7:121
“அகிலத்தார்களின் இறைவனை (நாங்களும்) நம்பிக்கை கொண்டோம்” என்று கூறினார்கள்.
A'raf 7:122
"மூஸா இன்னும் ஹாரூனுடைய இறைவனை” (நம்பிக்கை கொண்டோம்).
A'raf 7:123
“உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னர் நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டீர்கள்(?). நிச்சயமாக நகரத்தில், அதிலிருந்து அதில் வசிப்போரை வெளியேற்றுவதற்காக நீங்கள் சூழ்ச்சிசெய்த சூழ்ச்சிதான் இது. (இதன் தண்டனையை) அறிவீர்கள்” என்று ஃபிர்அவ்ன் கூறினான்.
A'raf 7:124
“நிச்சயமாக நான் உங்களை மாறு கை மாறு கால் வெட்டுவேன். பிறகு, உங்கள் அனைவரையும் நிச்சயமாக கழுமரத்தில் அறைவேன்” (என்றும் ஃபிர்அவ்ன் கூறினான்.)
A'raf 7:125
“நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பக்கூடியவர்கள்” என்று கூறினர்.
A'raf 7:126
“எங்கள் இறைவனின் அத்தாட்சிகளை -அவை எங்களிடம் வந்தபோது- நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்பதற்காகவே தவிர (வேறு எதற்கும்) எங்களை நீ பழிக்கவில்லை” (என்று ஃபிர்அவ்னிடம் கூறினர். பிறகு) “எங்கள் இறைவா! எங்கள் மீது பொறுமையை இறக்கு! முஸ்லிம்களாக(உனக்கு முற்றிலும் பணிந்தவர்களாக) எங்க(ள் உயிர்க)ளை கைப்பற்று!” (என்று) கூறினர்.
A'raf 7:127
ஃபிர்அவ்னுடைய சமுதாயத்திலிருந்து தலைவர்கள் “மூஸாவையும் அவருடைய சமுதாயத்தையும் -அவர்கள் பூமியில் விஷமம் செய்வதற்கும் உன்னையும், உன் தெய்வங்களையும் அவர் (புறக்கணித்து) விட்டுவிடுவதற்கும்- நீ விட்டு விடப்போகிறாயா?” என்று கூறினார்கள். (அல்ல!) அவர்களுடைய ஆண் பிள்ளைகளைக் கொன்று குவிப்போம். அவர்களுடைய பெண் (பிள்ளை)களை வாழவிடுவோம். நிச்சயமாக நாம் அவர்களுக்கு மேல் (என்றும்) ஆதிக்கம் வகிப்பவர்கள்” என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.
A'raf 7:128
மூஸா தன் சமுதாயத்திற்கு “அல்லாஹ்விடம் உதவிதேடுங்கள், (உறுதியுடன்) பொறுத்திருங்கள். நிச்சயமாக பூமி அல்லாஹ்வுக்குரியதே! அவன் தன் அடியார்களில் தான் நாடியவர்களை அதற்கு வாரிசாக்குவான். (நல்ல) முடிவு அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கே” என்று கூறினார்.
A'raf 7:129
நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் துன்புறுத்தப்பட்டோம்; நீர் எங்களிடம் வந்த பின்னரும் (துன்புறுத்தப்படுகிறோம்) என்று (இஸ்ரவேலர்கள்) கூறினர். “உங்கள் இறைவன் உங்கள் எதிரிகளை அழித்து, (அவர்களின்) பூமியில் உங்களை அதிபதிகளாக்கக் கூடும். நீங்கள் எவ்வாறு (செயல்கள்) செய்கிறீர்கள் (நடந்து கொள்கிறீர்கள்) என அவன் கவனிப்பான்” என்று (மூஸா) கூறினார்.
A'raf 7:130
திட்டவட்டமாக ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரை அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக பஞ்சங்களாலும் கனிகளை (விளைச்சல்களை)க் குறைத்தும் பிடித்தோம்.
A'raf 7:131
அவர்களுக்கு இன்பம் வந்தால் இது எங்களுக்கு (வரவேண்டியதுதான்) என்று கூறுவார்கள். ஒரு துன்பம் அவர்களை அடைந்தால் “மூஸாவையும், அவருடன் உள்ளவர்களையும் துர்ச்சகுணமாக எண்ணுவார்கள்” அறிந்து கொள்ளுங்கள் அவர்களுடைய துர்ச்சகுணமெல்லாம் அல்லாஹ்விடம்தான் உள்ளது. (நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்விடமிருந்துதான்.) எனினும் அவர்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.
A'raf 7:132
(மூஸாவை நோக்கி) “நீர் அதன் மூலம் எங்களை ஏமாற்றுவதற்காக எவ்வளவோ அத்தாட்சியை எங்களிடம் நீர் கொண்டு வந்தாலும் நாங்கள் உம்மை நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை” என்று கூறினார்கள்.
A'raf 7:133
ஆகவே, அவர்கள் மீது புயல் காற்றை, வெட்டுக்கிளிகளை, பேன்களை, தவளைகளை, இரத்தத்தை தெளிவான அத்தாட்சிகளாக அனுப்பினோம். அவர்கள் பெருமையடித்(து புறக்கணித்)தனர். குற்றம் புரிகின்ற மக்களாக இருந்தனர்.
A'raf 7:134
அவர்கள் மீது வேதனை நிகழ்ந்தபோது, “மூஸாவே! உம் இறைவனிடம் -அவன் உம்மிடம் வாக்குறுதி கொடுத்ததைக் கொண்டு- எங்களுக்காகப் பிரார்த்திப்பீராக. எங்களை விட்டு வேதனையை நீர் நீக்கினால் நிச்சயம் உம்மை நம்பிக்கை கொள்வோம்; உம்முடன் இஸ்ரவேலர்களை நிச்சயம் அனுப்புவோம்” என்று கூறினர்.
A'raf 7:135
ஒரு தவணை(க்குப் பின் ஒரு தவணை) வரை நாம் அவர்களை விட்டு வேதனையை நீக்கி, அதை (அத்தவணையின் இறுதியை) அவர்கள் அடையும் போது அவர்கள் (வாக்குறுதியை) முறித்து விடுகின்றனர்.
A'raf 7:136
ஆகவே, நிச்சயமாக அவர்கள் நம் அத்தாட்சிகளை பொய்ப்பித்த காரணத்தாலும் அவற்றைவிட்டு கவனமற்றவர்களாக இருந்ததாலும் அவர்களிடம் பழி தீர்த்தோம்; ஆகவே அவர்களைக் கடலில் மூழ்கடித்தோம்.
A'raf 7:137
பலவீனமாகக் கருதப்பட்டுக் கொண்டிருந்த சமுதாயத்தை பூமியின் கிழக்குப் பகுதிகளுக்கும், நாம் அருள் வளம் புரிந்த மேற்குப் பகுதிகளுக்கும் வாரிசாக்கினோம். ஆகவே, இஸ்ரவேலர்கள் மீது அவர்கள் பொறுத்ததால் உம் இறைவனின் மிக அழகிய வாக்கு முழுமையடைந்தது. ஃபிர்அவ்னும் அவனுடைய சமுதாயமும் செய்து கொண்டிருந்ததையும் அவர்கள் உயர்த்திக் கட்டிக் கொண்டிருந்த (மாடமாளிகைகள் போன்ற)வற்றையும் நாசப்படுத்தினோம்.
A'raf 7:138
இஸ்ரவேலர்களை கடலைக் கடக்கவைத்தோம். தங்கள் சிலைகளுக்கருகில் (வழிபாட்டுக்காக) தங்கியிருந்த ஒரு சமுதாயத்தின் அருகில் (அவர்கள்) வந்தனர். “மூஸாவே! அவர்களுக்கு வணங்கப்படும் கடவுள்கள் (சிலைகள்) இருப்பது போல் எங்களுக்கும் வணங்கப்படும் ஒரு கடவுளை (சிலையை) ஏற்படுத்து” என்று கூறினர். “நிச்சயமாக நீங்கள் அறியாத சமுதாயம்” என்று மூஸா கூறினார்.
A'raf 7:139
“நிச்சயமாக இவர்கள் எதில் இருக்கிறார்களோ அது அழிக்கப்படக் கூடியது. அவர்கள் செய்து கொண்டிருப்பவை பொய்யாகும்” (என்றும் மூஸா கூறினார்).
A'raf 7:140
“அல்லாஹ் அல்லாததையா நான் உங்களுக்கு வணங்கப்படும் ஒரு கடவுளாகத் தேடுவேன்? அவனோ உலகத்தார்களைப் பார்க்கிலும் உங்களை மேன்மைப்படுத்தினான்” என்று (மூஸா) கூறினார்.
A'raf 7:141
உங்களை கொடிய வேதனையால் உங்களைத் துன்புறுத்திய ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரிடமிருந்து உங்களை காப்பாற்றிய சமயத்தை நினைவு கூருங்கள். அவர்கள் உங்கள் மகன்களைக் கொன்று குவிப்பார்கள். உங்கள் பெண்(பிள்ளை)களை வாழவிடுவார்கள். இதில் உங்கள் இறைவனிடமிருந்து பெரிய சோதனை உண்டு.
A'raf 7:142
மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம். இன்னும் அதை பத்து இரவுகளைக் கொண்டு முழுமைப்படுத்தினோம். ஆகவே, அவருடைய இறைவனின் குறிப்பிட்ட காலம் நாற்பது இரவுகளாக முழுமையடைந்தது. ஹாரூனாகிய தன் சகோதரருக்கு மூஸா கூறினார்: “நீர் என் சமுதாயத்தில் எனக்கு பிரதிநிதியாக இரு! சீர்திருத்து! விஷமிகளுடைய பாதையை பின்பற்றாதே!”
A'raf 7:143
நமது (குறித்த இடத்தில்) குறித்த நேரத்திற்கு மூஸா வந்து, அவருடைய இறைவன் அவருடன் பேசியபோது “என் இறைவா! நீ (உன்னை) எனக்கு காண்பி, உன்னை பார்ப்பேன்” என்று கூறினார். என்னை நீர் அறவே பார்க்கமாட்டீர். எனினும் மலையைப் பார்ப்பீராக. அது தன் இடத்தில் நிலைத்தால் நீர் என்னைப் பார்ப்பீர்” என்று கூறினான் (இறைவன்). அவருடைய இறைவன் அம்மலை மீது வெளிப்பட்டபோது அதை அவன் துகளாக்கினான். மூஸா மூர்ச்சையானவராக விழுந்தார். அவர் தெளிவு பெற்றபோது “நீ மிகப் பரிசுத்தமானவன். நான் (உன்னைப் பார்க்கக் கோரிய குற்றத்திலிருந்து விலகி, உன்னிடம் மன்னிப்புக் கோரி) உன் பக்கம் திருந்தி திரும்புகிறேன். உன்னை நம்பிக்கை கொள்பவர்களில் நான் முதலாமவன்” என்று கூறினார்.
A'raf 7:144
“மூஸாவே! என் தூதுகளுக்கும், என் பேச்சுக்கும் மக்களைவிட நிச்சயமாக நான் உம்மைத் தேர்ந்தெடுத்தேன். ஆகவே, நான் உமக்கு கொடுத்ததைப் பற்றிப்பிடிப்பீராக. நன்றி செலுத்துவோரில் ஆகிவிடுவீராக” என்று கூறினான் (இறைவன்).
A'raf 7:145
எல்லாவற்றின் அறிவுரையையும் எல்லாவற்றுக்குரிய விளக்கத்தையும் அவருக்கு பலகைகளில் எழுதினோம். ஆகவே, “நீங்கள் இவற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்து, உம் சமுதாயத்தை ஏவுவீராக. அவற்றில் மிக அழகியவற்றை அவர்கள் பற்றிப் பிடிக்கட்டும். பாவிகளின் இல்லத்தை உங்களுக்குக் காண்பிப்பேன்.”
A'raf 7:146
நியாயமின்றி பூமியில் பெருமையடிப்பவர்களை என் அத்தாட்சி(களை விட்டு, என் வசனங்)களை விட்டுத் திருப்புவேன். அவர்கள் எல்லா அத்தாட்சியை(யும்) பார்த்தாலும் அவற்றை நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். நேரிய பாதையை அவர்கள் பார்த்தால் அதை (தாங்கள் செல்லும்) பாதையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். வழிகேட்டின் பாதையை அவர்கள் பார்த்தால் அதை (தாங்கள் செல்லும்) பாதையாக எடுத்துக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்தனர்; அவற்றைவிட்டு கவனமற்றவர்களாக (அலட்சியம் செய்தவர்களாக) இருந்தார்கள் என்ற காரணத்தால் ஆகும் அது.
A'raf 7:147
நம் வசனங்களையும், மறுமையின் சந்திப்பையும் பொய்ப்பித்தவர்கள், அவர்களுடைய (நற்)செயல்கள் பாழாகின. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர (அவர்கள்) கூலி கொடுக்கப்படுவார்களா?
A'raf 7:148
மூஸாவுடைய சமுதாயம் அவருக்குப் பின்னர் தங்கள் நகையிலிருந்து ஒரு காளைக் கன்றை -அதற்கு மாட்டின் சப்தத்தை உடைய ஓர் உடலை - (தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். நிச்சயமாக அது அவர்களுடன் பேசுவதுமில்லை; அவர்களுக்கு (நேரான) பாதையை வழிகாட்டுவதுமில்லை என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்கள் அதை (வணங்கப்படும் தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள். இன்னும் அநியாயக்காரர்களாக ஆகிவிட்டனர்.
A'raf 7:149
அவர்கள் கைசேதப்பட்டு, வழிதவறிவிட்டனர் என்பதை அவர்கள் அறிந்தபோது “எங்கள் இறைவன் எங்களுக்கு கருணை புரியவில்லையென்றால், எங்களை மன்னிக்கவில்லையென்றால் நிச்சயம் நாங்கள் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவோம்” என்று கூறினார்கள்.
A'raf 7:150
மூஸா கோபித்தவராக, ஆவேசப்பட்டவராக (துக்கித்தவராக) தன் சமுதாயத்திடம் திரும்பியபோது “எனக்குப் பின்னர் (என் சமுதாயத்திலும் என் மார்க்கத்திலும்) நான் சென்றதற்குப் பிறகு நீங்கள் செய்தது மிகக் கெட்டதாகும். உங்கள் இறைவனின் கட்டளையை அவசரப்பட்டீர்களா?” என்று கூறி, பலகைகளை எறிந்து, தன் சகோதரரின் தலையைப் பிடித்து, அவரைத் தன் பக்கம் இழுத்தார். “என் தாயின் மகனே! நிச்சயமாக சமுதாயம் என்னை பலவீனப்படுத்தி என்னைக் கொன்றுவிடவும் முற்பட்டனர். ஆகவே, என்னைக் கொண்டு எதிரிகளை நகைக்கச் செய்யாதீர். அநியாயக்கார மக்களுடன் என்னை ஆக்கிவிடாதீர்” என்று (ஹாரூன்) கூறினார்.
A'raf 7:151
“என் இறைவா! எனக்கும் என் சகோதரருக்கும் மன்னிப்பு வழங்கு! உன் கருணையில் எங்களை சேர்த்துக்கொள்! நீ கருணையாளர்களில் மகா கருணையாளன்” என்று (மூஸா) கூறினார்.
A'raf 7:152
நிச்சயமாகக் காளைக் கன்றை (தெய்வமாக) எடுத்துக் கொண்டவர்கள் உலக வாழ்க்கையில் அவர்களின் இறைவனிடமிருந்து கோபமும் இழிவும் அவர்களை அடையும். இட்டுக்கட்டுபவர்களுக்கு இவ்வாறே கூலி கொடுப்போம்.
A'raf 7:153
தீமைகளை செய்து, பிறகு, அவற்றுக்குப் பின்னர் திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி, (பாவமன்னிப்புக் கோரி,) நம்பிக்கை கொண்டவர்கள் (நிச்சயம் மன்னிப்பு பெறுவார்கள். ஏனெனில்) நிச்சயமாக உம் இறைவன் அதற்குப் பின்னர் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
A'raf 7:154
மூஸாவிற்கு கோபம் தனிந்தபோது அவர் பலகைகளை (கையில்) எடுத்தார். அவற்றில் (பலகைகளில்) எழுதப்பட்டதில் “தங்கள் இறைவனை பயப்படுகிறவர்களுக்கு நேர்வழியும் கருணையும் உண்டு.”
A'raf 7:155
நம் குறிப்பிட்ட நேரத்திற்கு மூஸா தன் சமுதாயத்தில் எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை இடிமுழக்கம் பிடித்தபோது, “என் இறைவா! நீ நாடியிருந்தால் (இதற்கு) முன்னரே அவர்களையும் என்னையும் அழித்திருப்பாய். எங்களில் அறிவீனர்கள் செய்ததற்காக எங்களை அழிப்பாயா? உன் சோதனையே தவிர இது வேறில்லை. இதைக் கொண்டு நீ நாடியவர்களை வழி கெடுக்கிறாய்; நீ நாடியவர்களை நேர்வழி செலுத்துகிறாய். நீ எங்கள் பாதுகாவலன். ஆகவே, நீ எங்களுக்கு மன்னிப்பு வழங்கு! எங்களுக்கு கருணை புரி! மன்னிப்பவர்களில் நீ மிகச் சிறந்தவன்.”
A'raf 7:156
“இம்மையிலும் மறுமையிலும் எங்களுக்கு அழகியதை விதிப்பாயாக! நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே திரும்பினோம்” (என்றும் மூஸா கூறினார்). “என் வேதனை அதைக் கொண்டு நான் நாடியவர்களை அடைவேன். என் கருணை எல்லாவற்றையும் விசாலமாக்கி விட்டது. ஆகவே, அதை (என்னை) அஞ்சி, ஸகாத்தைக் கொடுப்பவர்களுக்கும், நம் வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களுக்கும் விதிப்பேன்” என்று (இறைவன்) கூறினான். (இம்மையில் ஹசனா என்பது நற்செயல்களையும் மறுமையில் ஹசனா என்பது இறைமன்னிப்பையும் குறிக்கும்)
A'raf 7:157
அவர்கள் தங்களிடமுள்ள தவ்றாத் இன்னும் இன்ஜீலில் குறிப்பிடப்பட்டவராக தாங்கள் காண்கின்ற எழுதப் படிக்கத் தெரியாதவராகிய, நபியான இத்தூதரை பின்பற்றுவார்கள். (இத்தூதர்) அவர்களுக்கு நன்மையை ஏவுவார், தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார். நல்லவற்றை அவர்களுக்கு ஆகுமாக்குவார். கெட்டவற்றை அவர்களுக்கு தடை செய்வார். அவர்களை விட்டும் அவர்கள் மீதிருந்த அவர்களுடைய (வழிபாட்டின்) கடின சுமையையும் (சிரமமான சட்ட) விலங்குகளையும் அகற்றுவார். ஆகவே, அவரை நம்பிக்கை கொண்டு, அவரைப் பாதுகாத்து, (பலப்படுத்தி,) அவருக்கு உதவி செய்து, அவருடன் இறக்கப்பட்ட ஒளியை (குர்ஆனை) பின்பற்றுகிறவர்கள் அவர்கள்தான் வெற்றியாளர்கள்.
A'raf 7:158
(நபியே!) கூறுவீராக: மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர் ஆவேன். வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அவனைத் தவிர வணங்கப்படும் இறைவன் (வேறு யாரும்) அறவே இல்லை. (அவன்தான்) உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான். ஆகவே, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ்வைக் கொண்டு நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ்வையும் இன்னும் அவனுடைய வாக்குகளையும் நம்பிக்கை கொள்கிற எழுதப் படிக்கத் தெரியாதவராகிய நபியான அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! அவரைப் பின்பற்றுங்கள்!
A'raf 7:159
மூஸாவுடைய சமுதாயத்தில் சத்தியத்தின்படி வழிகாட்டுகிற, அதைக் கொண்டு நீதியாக நடக்கின்ற ஒரு கூட்டமும் இருக்கிறது.
A'raf 7:160
அவர்களைப் பன்னிரெண்டு சந்ததிகளாக கூட்டங்களாகப் பிரித்தோம். மூஸாவிற்கு வஹ்யி அறிவித்தோம் - அவருடைய சமுதாயம் அவரிடம் தண்ணீர் கேட்டபோது - “உமது தடியால் கல்லை அடிப்பீராக! என்று.” அதிலிருந்து பன்னிரெண்டு ஊற்றுகள் பீறிட்டன. எல்லா மக்களும் தங்கள் அருந்துமிடத்தை அறிந்து கொண்டார்கள். அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். அவர்கள் மீது ‘மன்னு’ ‘ஸல்வா’வை இறக்கினோம். “உங்களுக்கு நாம் (உணவு) அளித்தவற்றில் நல்லவற்றை உண்ணுங்கள்.” அவர்கள் நமக்கு அநீதியிழைக்கவில்லை. எனினும், (அவர்கள்) தங்களுக்கே அநீதியிழைப்பவர்களாக இருந்தனர்.
A'raf 7:161
“நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள். நீங்கள் நாடிய இடத்தில் புசியுங்கள். ‘ஹித்ததுன்’ (பாவம் நீங்கட்டும்!) என்று கூறுங்கள். சிரம் தாழ்த்தியவர்களாக (ஊர்) வாசலில் நுழையுங்கள். நாம் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்போம். நல்லறம் புரிவோருக்கு (நற்கூலியை) அதிகப்படுத்துவோம்.”
A'raf 7:162
அவர்களில் அநீதியிழைத்தவர்கள் அவர்களுக்குக் கூறப்பட்டது அல்லாத ஒரு சொல்லாக மாற்றி(க் கூறி)னர். ஆகவே, அவர்கள் அநீதியிழைப்பவர்களாக இருந்ததால் அவர்கள் மீது வானத்திலிருந்து ஒரு வேதனையை இறக்கினோம்.
A'raf 7:163
(நபியே) கடலுக்கருகில் இருந்த ஊர் (மக்களைப்) பற்றி அவர்களிடம் விசாரிப்பீராக. சனி(க்கிழமை)யில் அவர்கள் வரம்பு மீறியபோது. அவர்களின் சனிக்கிழமையில் அவர்களுடைய மீன்கள் தலைகளை நீட்டியவையாக அவர்களிடம் வந்தபோது. அவர்கள் சனி(க் கிழமை)யில் இல்லாத (மற்ற) நாளில் அவர்களிடம் அவை வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தால் இவ்வாறு அவர்களை சோதித்தோம்.
A'raf 7:164
அவர்களில் ஒரு கூட்டம் “அல்லாஹ் அவர்களை அழிப்பவனாக அல்லது கடுமையான வேதனையால் அவர்களை வேதனை செய்பவனாக உள்ள மக்களுக்கு (நீங்கள்) ஏன் உபதேசிக்கிறீர்கள்?” என்று கூறியபோது, “உங்கள் இறைவனிடம் புகல் கூறுவதற்காகவும், அவர்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காகவும் (அதிலிருந்து விலகுவதற்காகவும் அவர்களுக்கு உபதேசிக்கிறோம்)” என்று கூறினார்கள்.
A'raf 7:165
அவர்கள் (தங்களுக்கு) நினைவூட்டப்பட்டதை மறந்தபோது தீமையை விட்டுத் தடுத்தவர்களைப் பாதுகாத்தோம். அநீதியிழைத்தவர்களை -அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தால்- கடுமையான வேதனையால் பிடித்தோம்.
A'raf 7:166
அவர்கள் (தாங்கள்) தடுக்கப்பட்டதை விட்டு மீறியபோது அவர்களைக் “குரங்குகளாக அபாக்கியவான்களாக ஆகிவிடுங்கள்” என்று அவர்களுக்குக் கூறினோம்.
A'raf 7:167
(நபியே!) கொடிய வேதனையால் அவர்களுக்கு சிரமம் தருபவர்களை அவர்கள் மீது மறுமை நாள் வரை நிச்சயமாக அவன் அனுப்புவான் என்று உம் இறைவன் அறிவித்த சமயத்தை நினைவு கூருங்கள். நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் தீவிரமானவன். இன்னும் நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனே, பெரும் கருணையாளனே.
A'raf 7:168
அவர்களை பூமியில் பல பிரிவுகளாகப் பிரித்தோம். அவர்களில் நல்லவர்கள் உண்டு; அவர்களில் மற்ற (பொல்லாத)வர்களும் உண்டு. அவர்கள் (சத்தியத்தின் பக்கம்) திரும்புவதற்காக இன்பங்கள் இன்னும் துன்பங்களைக் கொண்டு அவர்களைச் சோதித்(து வந்)தோம்.
A'raf 7:169
அவர்களுக்குப் பின்னர் சில பின்னோர் பின் தோன்றினார்கள். (அவர்கள்) வேதத்திற்கு வாரிசுகளாக ஆகினர். (வேத சட்டங்களை மாற்றி அதற்குப் பகரமாக) இந்த அற்பமான (உலகத்)தின் பொருளை வாங்குகிறார்கள். “எங்களுக்கு மன்னிக்கப்படும்” என்றும் கூறுகின்றனர். இதுபோன்ற (அற்ப) பொருள் அவர்களுக்கு இன்னும் வந்தால் அதையும் வாங்குவார்கள். அல்லாஹ் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் கூறக்கூடாது என்று அவர்கள் மீது வேதத்தின் உறுதிமொழி எடுக்கப்படவில்லையா? அதிலுள்ளதை (அவர்கள்) படித்து (அறிந்து)ள்ளனர். அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு மறுமை வீடு சிறந்தது. நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
A'raf 7:170
தொழுகையை நிலைநிறுத்தி, வேதத்தை (கற்றும் கற்பித்தும் செயல் படுத்தியும்) உறுதியாகப் பிடிப்பவர்கள் -(இத்தகைய) சீர்திருத்தவாதிகளின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்க மாட்டோம்.
A'raf 7:171
அவர்களுக்கு மேல் மலையை - அது நிழலிடும் மேகத்தைப் போன்று - பிடுங்கி (நிறுத்தி)ய சமயத்தை நினைவு கூருவீராக. நிச்சயமாக அது அவர்கள் மீது விழுந்துவிடும் என்று எண்ணினர். “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக நாம் உங்களுக்குக் கொடுத்ததைப் பலமாகப் பிடியுங்கள்; அதிலுள்ளவற்றை நினைவு கூருங்கள்” (என்று நாம் அவர்களிடம் வாக்குறுதி எடுத்தோம்).
A'raf 7:172
(நபியே!) உம் இறைவன் ஆதமின் சந்ததிகளில் அவர்களுடைய முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை எடுத்த சமயத்தை நினைவு கூருவீராக. “நான் உங்கள் இறைவனாக இல்லையா?” (என்று வினவி) அவர்களை அவர்கள் மீதே சாட்சியாக்கினான். “ஏன் இல்லை, (நீதான் எங்கள் இறைவன் என்று) நாங்கள் சாட்சி கூறினோம்” என்று (அவர்கள்) கூறினர். நிச்சயமாக நாங்கள் இ(ந்த சாட்சியத்)தை விட்டு கவனமற்றவர்களாக இருந்தோம் என்று மறுமை நாளில் நீங்கள் கூறாமல் இருப்பதற்காக (உங்களுக்கு இறைவன் இதை நினைவூட்டுகிறான்).
A'raf 7:173
அல்லது இணைவைத்ததெல்லாம் முன்னர் எங்கள் மூதாதைகள்தான். (நாங்கள்) அவர்களுக்குப் பின்னர் (தோன்றிய) சந்ததிகளாக இருக்கிறோம். (அந்த) பொய்யர்கள் செய்ததற்காக நீ எங்களை அழிப்பாயா? என்று கூறாதிருப்பதற்காக... (இதை இன்று நினைவூட்டுகிறோம்).
A'raf 7:174
இவ்வாறே (அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவும்) அவர்கள் (பாவங்களை விட்டு) திரும்புவதற்காகவும் (நம்) வசனங்களை விவரிக்கிறோம்.
A'raf 7:175
(நபியே!) நாம் நம் அத்தாட்சிகளை கொடுத்தவனுடைய செய்தியை அவர்கள் மீது ஓதிக் காட்டுவீராக. அவன் அதிலிருந்து கழண்டான். ஆகவே, ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்தான். அவன் வழிகெட்டவர்களில் ஆகிவிட்டான்.
A'raf 7:176
நாம் நாடியிருந்தால் அவற்றைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம். என்றாலும், நிச்சயமாக அவன் (இந்த) பூமியில் நிரந்தர (சுக)ம் தேடினான். அவன் தன் ஆசையைப் பின்பற்றினான். ஆகவே, அவனுடைய உதாரணம் நாயின் உதாரணத்தைப் போன்றது. நீர் அதைத் துரத்தினாலும் அது நாக்கைத் தொங்கவிடும். நீர் அதை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் அது நாக்கைத் தொங்கவிடும். இதுவே, நம் வசனங்களைப் பொய்ப்பித்த மக்களின் உதாரணமாகும். ஆகவே, அவர்கள் சிந்திப்பதற்காக சரித்திரத்தை விவரிப்பீராக.
A'raf 7:177
நம் வசனங்களைப் பொய்ப்பித்து, தங்களுக்கே அநீதியிழைத்துக் கொண்டிருந்த மக்கள் உதாரணத்தால் கெட்டுவிட்டனர்.
A'raf 7:178
எவரை அல்லாஹ் நேர்வழி செலுத்துகிறானோ அவர்தான் நேர்வழி பெற்றவர்; அவன் எவர்களை வழிகெடுக்கிறானோ அவர்கள்தான் நஷ்டவாளிகள்!
A'raf 7:179
மனிதர்களிலும், ஜின்களிலும் அதிகமானோரை நரகத்திற்காக படைத்து விட்டோம். அவர்களுக்கு உள்ளங்கள் உண்டு, அவற்றைக் கொண்டு சிந்தித்து விளங்க மாட்டார்கள். அவர்களுக்கு கண்கள் உண்டு, அவற்றைக்கொண்டு பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகள் உண்டு, அவற்றைக்கொண்டு செவிசாய்க்க மாட்டார்கள். அவர்கள் கால்நடைகளைப் போன்று. மாறாக அவர்கள் (அவற்றைவிட) அதிகம் வழிகெட்டவர்கள். அவர்கள்தான் கவனமற்றவர்கள் (அலட்சியக்காரர்கள்).
A'raf 7:180
அல்லாஹ்வுக்கே மிக அழகிய பெயர்கள் உண்டு. ஆகவே, அவற்றைக் கொண்டு அவனை அழையுங்கள். அவனுடைய பெயர்களில் தவறிழைப்பவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு (தகுந்த) கூலி கொடுக்கப்படுவார்கள்.
A'raf 7:181
நாம் படைத்தவர்களில் சத்தியத்தைக் கொண்டு நேர்வழிகாட்டுகின்ற, அதைக் கொண்டே நீதமாக நடக்கின்ற ஒரு கூட்டம் உண்டு.
A'raf 7:182
நம் வசனங்களை எவர்கள் பொய்ப்பித்தார்களோ அவர்களை அவர்கள் அறியாத விதத்தில் விட்டுவிட்டுப் பிடிப்போம்.
A'raf 7:183
அவர்களுக்கு அவகாசமளிப்பேன். நிச்சயமாக என் சூழ்ச்சி மிக உறுதியானது.
A'raf 7:184
அவர்கள் சிந்திக்கவில்லையா? அவர்களுடைய தோழருக்கு அறவே பைத்தியம் இல்லை. தெளிவான எச்சரிப்பவர் தவிர அவர் வேறில்லை.
A'raf 7:185
வானங்கள், பூமியின் பேராட்சியிலும் அல்லாஹ் படைத்த (ஏனைய சிறிய, பெரிய) பொருளிலும் அவர்களுடைய (மரண) தவணை நெருங்கி இருக்கக் கூடும் என்பதிலும் அவர்கள் கவனி(த்துப் பார்)க்கவில்லையா? இதற்குப் பின்னர் (எச்சரிக்கை நிறைந்த) எந்த செய்தியை அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்?
A'raf 7:186
எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவரை நேர்வழி செலுத்துபவர் அறவே இல்லை. அ(த்தகைய)வர்களை அவர்களுடைய அட்டூழியத்தில் கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக விட்டுவிடுகிறான்.
A'raf 7:187
(நபியே! இறுதி நாளின்) நேரத்தைப் பற்றி அது நிகழ்வது எப்போது? என உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: அதன் அறிவு எல்லாம் என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அதை அதன் நேரத்தில் அவனைத் தவிர (யாரும்) வெளிப்படுத்த மாட்டான். அது வானங்களிலும் பூமியிலும் கனத்து விட்டது. திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. நிச்சயமாக நீர் அதைப் பற்றி அறிந்தவர் போன்று உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். கூறுவீராக: “அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடம் இருக்கிறது. என்றாலும் மக்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்.”
A'raf 7:188
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எந்த ஒரு பலனையும் எந்த ஒரு கெடுதியையும் (செய்து கொள்ள) நான் உரிமை பெறமாட்டேன். நான் மறைவானவற்றை அறிபவனாக இருந்திருந்தால் நன்மையில் அதிகம் பெற்றிருப்பேன்; தீங்கும் என்னை தீண்டி இருக்காது. (பாவிகளை) எச்சரிப்பவராகவும் நம்பிக்கைகொள்கின்ற மக்களுக்கு நற்செய்தி கூறுபவராகவுமே தவிர நான் இல்லை.”
A'raf 7:189
அவன் ஒரே ஒரு மனிதரிலிருந்து உங்களைப் படைத்தான்; அவர் அவளுடன் வசிப்பதற்காக அவருடைய மனைவியை அவரி(ன் உடம்பி)லிருந்தே உருவாக்கினான். அவளை அவர் (தன் உடலால்) மூடிக் கொண்டபோது அவள் இலேசான கர்ப்பமாக கர்ப்பமானாள். அதை(ச் சுமந்து) கொண்டு நடந்தாள். அவள் (கர்ப்பம்) கனத்தபோது அவ்விருவரின் இறைவனான அல்லாஹ்விடம் அவ்விருவரும் பிரார்த்தித்தனர்: “நீ எங்களுக்கு நல்ல குழந்தையைக் கொடுத்தால் நிச்சயமாக நாங்கள் நன்றிசெலுத்துவோரில் ஆகிவிடுவோம்.”
A'raf 7:190
அவன் அவ்விருவருக்கும் நல்ல குழந்தையைக் கொடுத்தபோது அவ்விருவரும் அவன் கொடுத்தவற்றில் அவனுக்கு இணைகளை ஆக்கினர். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.
A'raf 7:191
எந்த ஒரு பொருளையும் படைக்காதவர்களை (அவனுக்கு) இணையாக்குகிறார்களா? (வணங்கப்படும்) அவர்களோ படைக்கப்படுகிறார்கள்.
A'raf 7:192
அவர்கள் இவர்களுக்கு உதவி செய்ய இயலமாட்டார்கள். இன்னும் தங்களுக்கும் (அவர்கள்) உதவிக் கொள்ள மாட்டார்கள்.
A'raf 7:193
நீங்கள் அவர்களை நேர்வழிக்கு அழைத்தால் அவர்கள் உங்களை பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைத்தாலும் அல்லது நீங்கள் வாய்மூடியவர்களாக இருந்தாலும் (அவ்விரண்டும்) உங்களுக்கு சமம்தான்.
A'raf 7:194
நிச்சயமாக அல்லாஹ்வை அன்றி நீங்கள் பிரார்த்திப்பவர்கள் உங்களைப் போன்ற அடிமைகள் ஆவர். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களிடம் பிரார்த்தியுங்கள்; அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும்!
A'raf 7:195
(சிலை வணங்கிகளே! நீங்கள் வணங்கும்) அவர்கள் நடப்பதற்கு அவர்களுக்கு கால்கள் உள்ளனவா?; அல்லது அவர்கள் பிடிப்பதற்கு அவர்களுக்கு கைகள் உள்ளனவா?; அவர்கள் பார்ப்பதற்கு அவர்களுக்குக் கண்கள் உள்ளனவா?; அவர்கள் கேட்பதற்கு அவர்களுக்கு காதுகள் உள்ளனவா?; (இவையெல்லாம் அவர்களுக்கு இருக்குமாயின் அந்த) “உங்கள் தெய்வங்களிடம் பிரார்த்தித்து பிறகு, எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்” என்று (நபியே!) கூறுவீராக.
A'raf 7:196
நிச்சயமாக என் பாதுகாவலன் வேதத்தை இறக்கிய அல்லாஹ்தான். அவன் நல்லவர்களுக்கு பொறுப்பேற்(றுக் கொள்)கிறான்.
A'raf 7:197
அவனையன்றி நீங்கள் எவர்களிடம் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கும் உதவி செய்ய இயலமாட்டார்கள்; இன்னும் தங்களுக்கும் உதவிக்கொள்ள மாட்டார்கள்.
A'raf 7:198
நீங்கள் அவர்களை நேர்வழிக்கு அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மைப் பார்ப்பவர்களாக நீர் அவர்களைக் காண்கிறீர். அவர்களோ (எதையும்) பார்க்க மாட்டார்கள்.
A'raf 7:199
(நபியே!) மன்னிப்பை பற்றிப் பிடிப்பீராக. நன்மையைக் கொண்டு ஏவுவீராக. அறியாதவர்களை புறக்கணிப்பீராக.
A'raf 7:200
ஷைத்தானிடமிருந்து ஒரு குழப்பம் (கோபம்) உம்மைக் குழப்பினால் (கோபமூட்டினால்) அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக. நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
A'raf 7:201
நிச்சயமாக (அல்லாஹ்வை) அஞ்சியவர்கள் ஷைத்தானிடமிருந்து ஓர் (தீய) எண்ணம் (கோபம்) அவர்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைவு கூருகிறார்கள்; அப்போது அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையைப்) பார்த்துக் கொள்கிறார்கள். (அத்தீய எண்ணத்தை விட்டுவிலகி இறைவழிபாட்டின் பக்கம் வந்து விடுகிறார்கள்.)
A'raf 7:202
அவர்களுடைய (மனித) சகோதரர்கள், அவர்களை (ஷைத்தான்கள்) வழிகேட்டில் அதிகப்படுத்துகிறார்கள். பிறகு அவர்கள் (மனிதர்கள்) வழிகேட்டில் குறைவு செய்வதில்லை.
A'raf 7:203
(அவர்கள் விரும்புகிற) ஒரு வசனத்தை நீர் அவர்களிடம் கொண்டு வரவில்லையென்றால் “அதை நீர் தேர்ந்தெடுத்திருக்க வேண்டாமா?” என்று கூறுகின்றனர். (நபியே!) கூறுவீராக: நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத்தான். இது உங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டுள்ள தெளிவான ஆதாரங்கள் ஆகும்; நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு இது நேர்வழியும், (அல்லாஹ்வின்) கருணையுமாகும்.
A'raf 7:204
குர்ஆன் ஓதப்பட்டால் நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக அதற்கு செவிதாழ்த்துங்கள்! வாய்மூடுங்கள்!
A'raf 7:205
(நபியே!) பணிந்தும், பயந்தும் சொல்லில் சப்தமின்றியும் காலையிலும் மாலையிலும் உம் இறைவனை உம் மனதில் நினைவு கூருவீராக! கவனமற்றவர்களில் ஆகிவிடாதீர்!
A'raf 7:206
நிச்சயமாக உம் இறைவனிடம் உள்ள வானவர்கள் அவனை வணங்குவதைவிட்டு பெருமையடிக்க மாட்டார்கள்; அவனை துதிப்பார்கள்; அவனுக்கே சிரம் பணிவார்கள்.
Enfal 8:1
(நபியே!) ‘அன்ஃபால்’ (போரில் கிடைத்த வெற்றிப் பொருள்களைப்) பற்றி உம்மிடம் கேட்கின்றனர். கூறுவீராக: ‘வெற்றிப் பொருள்கள்’ அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் சொந்தமானவை. ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்; உங்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்யுங்கள்; நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.
Enfal 8:2
நம்பிக்கையாளர்கள் எல்லாம், அல்லாஹ்வை நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் நடுங்கும்; அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவை அவர்களுக்கு இறை நம்பிக்கையை அதிகப்படுத்தும்; தங்கள் இறைவன் மீதே (பொறுப்பு சாட்டி) நம்பிக்கை வைப்பார்கள்; (அவனையே எல்லாக் காரியங்களிலும் சார்ந்து இருப்பார்கள்.)
Enfal 8:3
அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தர்மம் புரிவார்கள்.
Enfal 8:4
அவர்கள்தான் உண்மையில் நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் பல பதவிகளும் மன்னிப்பும் கண்ணியமான உணவும் உண்டு.
Enfal 8:5
(நபியே!) உம் இறைவன் உம் இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உம்மை வெளியேற்றிய (போ)து (தர்க்கித்தது) போன்றே (எதிரிகளைப் போரில் சந்திப்பதிலும் உம்மிடம் தர்க்கிப்பார்கள்). நம்பிக்கையாளர்களில் நிச்சயமாக ஒரு பிரிவினர் (உம்முடன் வர) வெறுப்பவர்களே.
Enfal 8:6
(போர் அவசியம் என) அவர்களுக்கு (உண்மை) தெளிவான பின்னர் அவர்கள் (மரணத்தை கண்கூடாக) பார்ப்பவர்களாக இருக்க (அந்த) மரணத்தின் பக்கம் தாங்கள் ஓட்டிச் செல்லப்படுவது போன்று (இந்த) உண்மையில் உம்முடன் தர்க்கிக்கின்றனர்.
Enfal 8:7
(எதிரிகளின்) இரு கூட்டங்களில் ஒன்றை, “நிச்சயமாக அது உங்களுக்கு என்று” அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்த சமயத்தை நினைவு கூருவீராக. (அவ்விரண்டில்) ஆயுதமுடையது அல்லாததை, “அது உங்களுக்கு ஆகவேண்டும்” என்று விரும்பினீர்கள். அல்லாஹ் தன் வாக்குகளைக் கொண்டு உண்மையை உண்மைப்படுத்தவும் (நிலைநாட்டவும்), நிராகரிப்பவர்களின் வேரை துண்டித்து விடவும் நாடுகிறான்.
Enfal 8:8
(சிலை வணங்கும்) பாவிகள் வெறுத்தாலும் அவன் உண்மையை உண்மைப்படுத்தவும் பொய்யை அழித்துவிடவும் (நாடுகிறான்).
Enfal 8:9
உங்கள் இறைவனிடம் நீங்கள் பாதுகாப்புத்தேடிய சமயத்தை நினைவு கூருங்கள். “தொடர்ந்து வரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவுவேன்” என்று (அல்லாஹ்) உங்களுக்குப் பதிலளித்தான்.
Enfal 8:10
ஒரு நற்செய்தியாகவும் உங்கள் உள்ளங்கள் அதன் மூலம் நிம்மதி பெறுவதற்காகவும் தவிர அதை அல்லாஹ் ஆக்கவில்லை. அல்லாஹ்விடம் இருந்தே தவிர (உங்களுக்கு) உதவி இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான்.
Enfal 8:11
(நம்பிக்கையாளர்களே! நீங்கள்) அச்சமற்றிருப்பதற்காக (அல்லாஹ்) தன் புறத்திலிருந்து சிறு தூக்கத்தை உங்கள் மீது சூழவைத்த சமயத்தை நினைவு கூருவீராக. உங்களை அதன் மூலம் (மழையின் மூலம்) அவன் சுத்தப்படுத்துவதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்குவதற்காகவும், உங்கள் உள்ளங்களை அவன் பலப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் (உங்கள்) பாதங்களை அவன் உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) உங்கள் மீது வானத்திலிருந்து மழையை பொழியச் செய்கிறான் (இறக்குகிறான்).
Enfal 8:12
“நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் திகிலைப் போடுவேன். ஆகவே, நீங்கள் அவர்களுடைய கழுத்துகளுக்கு மேல் வெட்டுங்கள்; அவர்களின் எல்லா கணுக்களையும் வெட்டுங்கள்” என்று (நபியே!) உம் இறைவன் வானவர்களுக்கு வஹ்யி அறிவித்த சமயத்தை நினைவு கூருவீராக.
Enfal 8:13
அதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் பிளவுபட்டனர் (முரண்பட்டனர்) என்பதாகும். எவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் பிளவுபடுவாரோ (அவரை அல்லாஹ் கடுமையாக தண்டிப்பான். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்.
Enfal 8:14
அது! அதை சுவையுங்கள். நிராகரிப்பவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனை உண்டு.
Enfal 8:15
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்பவர்களை பெரும் படையாக (போரில்) சந்தித்தால் அவர்களுக்கு பின்புறங்களை திருப்பாதீர்கள். (புறமுதுகு காட்டி ஓடாதீர்கள்)
Enfal 8:16
சண்டையிடுவதற்கு ஒதுங்கக்கூடியவராக, அல்லது (தனது) ஒரு கூட்டத்துடன் சேர்ந்து கொள்பவராக அல்லாமல் எவர் தன் பின்புறத்தை அவர்களுக்கு அந்நாளில் திருப்புவாரோ (புறமுதுகு காட்டி ஓடுவாரோ) அவர் அல்லாஹ்வின் கோபத்தில் சார்ந்துவிட்டார். அவருடைய தங்குமிடம் நரகம்; அது மீளுமிடத்தால் கெட்டு விட்டது.
Enfal 8:17
(நம்பிக்கையாளர்களே! போரில்) நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை; என்றாலும் அல்லாஹ்தான் அவர்களைக் கொன்றான். (நபியே! எதிரிகள் மீது நீர் மண்ணை) எறிந்தபோது நீர் எறியவில்லை; என்றாலும் நிச்சயமாக அல்லாஹ்தான் எறிந்தான். அதன் மூலம் நம்பிக்கையாளர்களை அழகிய சோதனையாக அவன் சோதிப்பதற்காக (இவ்வாறு செய்தான்). நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன் நன்றிந்தவன்.
Enfal 8:18
அவை (அனைத்தும் நாம் செய்தவை). நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களின் சூழ்ச்சியை பலவீனப்படுத்துபவன் ஆவான்.
Enfal 8:19
(காஃபிர்களே!) நீங்கள் தீர்ப்புத் தேடினால் உங்களுக்கு தீர்ப்பு வந்துவிட்டது. (ஆகவே, விஷமத்திலிருந்து) நீங்கள் விலகினால் அது உங்களுக்கு சிறந்தது. நீங்கள் (விஷமத்திற்கு) திரும்பினால் (நாமும் நம்பிக்கையாளர்களுக்கு உதவ) திரும்புவோம். உங்கள் கூட்டம் அது அதிகமாக இருந்தாலும் உங்களுக்கு எதையும் பலனளிக்காது. நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கிறான்.
Enfal 8:20
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (அவர் கூற்றை) செவிமடுப்பவர்களாக இருக்க, அவரை விட்டு விலகாதீர்கள்.
Enfal 8:21
அவர்கள் செவியேற்காதவர்களாக இருக்க “செவியுற்றோம்” என்று கூறியவர்களைப் போல் ஆகிவிடாதீர்கள்.
Enfal 8:22
நிச்சயமாக அல்லாஹ்விடம் ஊர்வனவற்றில் மிகக் கொடூரமானவர்கள் சிந்தித்துப் புரியாத ஊமைகளான செவிடர்கள்தான்.
Enfal 8:23
அவர்களிடம் ஒரு நன்மையை அல்லாஹ் அறிந்திருந்தால் அவர்களை செவியுறச் செய்திருப்பான். அவன் (அல்லாஹ்) அவர்களைச் செவியுறச் செய்தாலும் அவர்கள் புறக்கணிப்பவர்களாக இருக்க விலகி இருப்பார்கள்.
Enfal 8:24
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் - அவர் உங்களை வாழவைக்கும் ஒன்றுக்கு உங்களை அழைத்தால் - பதிலளியுங்கள். “நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய உள்ளத்திற்கும் நடுவில் தடையாகிறான். இன்னும் நிச்சயமாக நீங்கள் அவனிடமே ஒன்றுதிரட்டப்படுவீர்கள்” என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Enfal 8:25
நிச்சயமாக உங்களில் உள்ள அநியாயக்காரர்களை மட்டுமே அடையாத ஒரு வேதனையை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Enfal 8:26
நீங்கள் பூமியில் குறைவானவர்களாக, பலவீனர்களாக, உங்களை மக்கள் தாக்கி (சிதறடித்து) விடுவதை பயந்தவர்களாக இருந்த சமயத்தை நினைவு கூருங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவன் உங்களுக்கு இடமளித்தான். தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தினான். நல்ல உணவுகளில் இருந்து உங்களுக்கு உணவளித்தான்.
Enfal 8:27
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருக்க உங்கள் அமானிதங்களுக்கும் மோசம் செய்யாதீர்கள்.
Enfal 8:28
“உங்கள் செல்வங்கள், உங்கள் சந்ததிகள் எல்லாம் ஒரு சோதனையாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவனிடம்தான் மகத்தான கூலி உண்டு” என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Enfal 8:29
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால் அவன் உங்களுக்கு (எதிரிகளின் பொய்யையும் உங்களின் உண்மையை பிரித்தறிவிக்கும்) ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவான், உங்களை விட்டு உங்கள் பாவங்களை அகற்றி விடுவான், உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
Enfal 8:30
(நபியே!) உம்மைச் சிறைப்படுத்த அல்லது உம்மைக் கொல்ல அல்லது உம்மை வெளியேற்ற நிராகரிப்பவர்கள் உமக்கு சூழ்ச்சி செய்த சமயத்தை நினைவு கூருங்கள். (அவர்கள்) சூழ்ச்சி செய்கின்றனர்; அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்பவர்களில் அல்லாஹ் மிகச் சிறந்தவன்.
Enfal 8:31
நம் வசனங்கள் அவர்கள் மீது ஓதப்பட்டால் “(நாம் இதை முன்பே) செவியேற்று விட்டோம்; நாம் நாடியிருந்தால் இது போன்று கூறியிருப்போம். முன்னோரின் கட்டுக் கதைகளே தவிர இவை வேறு இல்லை” என்று கூறுகின்றனர்.
Enfal 8:32
(அந்நிராகரிப்பவர்கள்) “அல்லாஹ்வே! இதுதான் உன்னிடமிருந்து உண்மையாக இருக்குமேயானால் எங்கள் மீது வானத்திலிருந்து கல்லை (மழையாகப்) பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களிடம் கொண்டு வா!” என்று அவர்கள் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்.
Enfal 8:33
நீர் அவர்களுடன் இருக்க அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை. அவர்கள் மன்னிப்புத் தேடுபவர்களாக இருக்க அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.
Enfal 8:34
(இவ்விரு காரணங்கள் இல்லாதிருப்பின்) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருக்க அவர்களுக்கு என்ன காரணம் இருக்க முடியும்? அவர்களோ (மக்களை) புனிதமான மஸ்ஜிதை விட்டுத் தடுக்கின்றனர். அவர்கள் அதன் பொறுப்பாளர்களாக இல்லை. அதன் பொறுப்பாளர்கள் இறை அச்சமுள்ளவர்களே தவிர வேறு (எவரும்) இல்லை. எனினும், நிச்சயமாக அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்.
Enfal 8:35
இறை ஆலயம் (கஅபா) அருகில் அவர்களுடைய வழிபாடு சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர வேறு இருக்கவில்லை! (ஆகவே) “நீங்கள் நிராகரிப்பவர்களாக இருந்த காரணத்தால் (இன்று) வேதனையை சுவையுங்கள்” (என்று மறுமையில் கூறப்படும்).
Enfal 8:36
நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் தங்கள் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுப்பதற்கு செலவு செய்கின்றனர். அவர்கள் (மேலும் இவ்வாறே) அவற்றை செலவு செய்வார்கள். பிறகு அவை அவர்கள் மீது துக்க(த்திற்கு காரண)மாக ஆகும்! பிறகு (அவர்கள்) வெற்றி கொள்ளப்படுவார்கள். (இத்தகைய) நிராகரிப்பாளர்கள் நரகத்தின் பக்கமே ஒன்று திரட்டப்படுவார்கள்.
Enfal 8:37
அல்லாஹ் நல்லவர்களிலிருந்து கெட்டவர்களைப் பிரிப்பதற்காகவும்; கெட்டவர்களை -அவர்களில் சிலரை சிலர் மீது ஆக்கி- அவர்கள் அனைவரையும் அவன் ஒன்றிணைத்து, நரகத்தில் அவர்களை ஆக்குவதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்). இவர்கள்தான் நஷ்டவாளிகள்.
Enfal 8:38
நிராகரிப்பவர்களுக்கு கூறுவீராக: (இனியேனும் அவர்கள் விஷமத்திலிருந்து) விலகிக்கொண்டால் முன் சென்றவை அவர்களுக்கு மன்னிக்கப்படும். (விஷமத்திற்கே அவர்கள்) திரும்பினால் முன்னோரின் வழிமுறை சென்று விட்டது. (அவர்களுக்கு நிகழ்ந்ததுதான் இவர்களுக்கும் நிகழும்.)
Enfal 8:39
குழப்பம் (இணைவைத்தல்) இல்லாமல், வழிபாடு எல்லாம் அல்லாஹ்வுக்கு ஆகும் வரை இவர்களிடம் போரிடுங்கள். (விஷமத்திலிருந்து) அவர்கள் விலகிக்கொண்டால்... (அதற்கேற்ப அல்லாஹ் அவர்களுடன் நடந்து கொள்வான்.) நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.
Enfal 8:40
அவர்கள் (இஸ்லாமை ஏற்பதை விட்டு) விலகினால் (அவர்கள் உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட முடியாது. ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் உங்கள் எஜமானன் (பொறுப்பாளன், உதவியாளன்), என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவன் சிறந்த எஜமானன்; அவன் சிறந்த உதவியாளன்.
Enfal 8:41
அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையும் (உண்மை மற்றும் பொய்யிற்கும் நடுவில்) பிரித்தறிவித்த நாளில், இரு கூட்டமும் சந்தித்த நாளில் நம் அடியார் மீது நாம் இறக்கியதையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால்... நிச்சயமாக நீங்கள் வென்ற பொருள் எதுவாக இருந்தாலும் அதில் ஐந்தில் ஒன்று அல்லாஹ்வுக்கும், தூதருக்கும், (அவருடைய) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் உரியது. அல்லாஹ் எல்லாவற்றின் மீது பேராற்றலுடையவன்.
Enfal 8:42
நீங்கள் (‘பத்ரு’ போரில் மதீனாவுக்குச்) சமீபமான பள்ளத்தாக்கிலும், அவர்கள் தூரமான பள்ளத்தாக்கிலும் (வர்த்தகர்களாகிய) வாகனக்காரர்கள் உங்களுக்குக் கீழே இருந்த சமயத்தை நினைவு கூருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) வாக்குறுதி செய்து கொண்டிருந்தால் குறிப்பிட்ட நேரத்தில் (வந்து சேர முடியாமல்) நீங்கள் தவறிழைத்திருப்பீர்கள். எனினும், முடிவு செய்யப்பட்டதாக இருக்கின்ற ஒரு காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும் அழிபவன் ஆதாரத்துடன் அழிவதற்காகவும் (தப்பி உயிர்) வாழ்பவன் ஆதாரத்துடன் வாழ்வதற்காகவும் (இவ்வாறு உங்களை அல்லாஹ் சந்திக்க வைத்தான்). நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
Enfal 8:43
(நபியே!) உமது கனவில் அல்லாஹ், அவர்களை உமக்கு குறைவாக காண்பித்த சமயத்தை நினைவு கூருவீராக. உமக்கு அவர்களை அதிகமானவர்களாக காண்பித்திருந்தால் நீங்கள் துணிவிழந்திருப்பீர்கள், (போர் பற்றிய) காரியத்தில் தர்க்கித்திருப்பீர்கள். என்றாலும், நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) காப்பாற்றினான். நிச்சயமாக அவன், நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.
Enfal 8:44
முடிவு செய்யப்பட்டதாக இருக்கின்ற ஒரு காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காக நீங்கள் (அவர்களை) சந்தித்தபோது உங்கள் கண்களில் உங்களுக்கு அவர்களை குறைவாக காண்பித்து, உங்களை அவர்களுடைய கண்களில் குறைவாக காண்பித்தபோது (சத்தியம் வென்றது). அல்லாஹ்வின் பக்கமே காரியங்கள் திருப்பப்படும்.
Enfal 8:45
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (எதிரிகளின்) ஒரு கூட்டத்தை (போரில்) சந்தித்தால், நீங்கள் வெற்றிபெறுவதற்காக (போர்க்களத்தில்) உறுதியாக இருங்கள்; அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள்.
Enfal 8:46
அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; தர்க்கிக்காதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் துணிவிழப்பீர்கள்; உங்கள் ஆற்றல் சென்றுவிடும். பொறுத்திருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
Enfal 8:47
பெருமைக்காகவும் மக்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் இல்லங்களிலிருந்து புறப்பட்டு, அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுப்பவர்களைப் போன்று (நம்பிக்கையாளர்களே நீங்கள்) ஆகிவிடாதீர்கள். அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை சூழ்ந்திருப்பவன் ஆவான்.
Enfal 8:48
ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அலங்கரித்து, “மக்களில் இன்று உங்களை வெல்பவர் அறவே இல்லை; உங்களுக்கு நிச்சயமாக நானும் துணை ஆவேன்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். இரு கூட்டங்களும் ஒன்றுக்கொன்று பார்த்தபோது தன் இரு குதிங்கால்கள் மீது (ஷைத்தான்) திரும்பினான்; “நிச்சயமாக நான் உங்களை விட்டு விலகியவன். நீங்கள் பார்க்காததை நிச்சயமாக நான் பார்க்கிறேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்; அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்” என்று கூறினான்.
Enfal 8:49
நயவஞ்சகர்களும், தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்களும், (நம்பிக்கையாளர்களை நோக்கி) “இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கிவிட்டது” என்று கூறியபோது. எவர் அல்லாஹ் மீது நம்பிக்கை வைப்பாரோ (அவரே வெற்றியாளர்.) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான்.
Enfal 8:50
வானவர்கள் நிராகரித்தவர்களை -அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்தவர்களாக, “எரிக்கக்கூடிய (நரக) வேதனையை சுவையுங்கள்” (என்று கூறி)- உயிர் கைப்பற்றும் போது நீர் பார்த்தால்... (அது ஒரு பயங்கர காட்சியாக இருக்கும்.)
Enfal 8:51
அதற்குக் காரணம் “உங்கள் கரங்கள் முற்படுத்தியவையும் நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு அறவே அநீதியிழைப்பவன் இல்லை என்பதாகும்.”
Enfal 8:52
ஃபிர்அவ்னுடைய சமுதாயம் இன்னும் அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் நிலைமையைப் போன்று (இவர்களுடைய நிலைமை இருக்கிறது). அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தனர். ஆகவே, அவர்களுடைய பாவங்களினால் அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையானவன், தண்டிப்பதில் கடுமையானவன்.
Enfal 8:53
நிச்சயமாக அல்லாஹ் ஒரு சமுதாயத்தின் மீது தான் அருள்புரிந்த ஓர் அருட்கொடையை -அவர்கள் தங்களிடம் உள்ளதை மாற்றும் வரை- மாற்றுபவனாக இல்லை என்பதும் நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் என்பதும் அதற்குக் காரணமாகும்.
Enfal 8:54
ஃபிர்அவ்னுடைய சமுதாயம் இன்னும் அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் நிலைமையைப் போன்று (இவர்களின் நிலைமை இருக்கிறது). அவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்களுடைய பாவங்களினால் அவர்களை அழித்தோம். ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தை மூழ்கடித்தோம். (இவர்கள்) எல்லோரும் அநியாயக்காரர்களாக இருந்தனர்.
Enfal 8:55
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களில் (எல்லாம்) மிகக் கொடியவர்கள் நிராகரித்தவர்கள் ஆவர். ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
Enfal 8:56
(அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால்) நீர் ஒப்பந்தம் செய்தவர்கள் பிறகு தங்கள் ஒப்பந்தத்தை ஒவ்வொரு முறையிலும் முறிக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதில்லை.
Enfal 8:57
போரில் நீர் அவர்களைப் பெற்றுக் கொண்டால் அவர்களைக் கொண்டு அவர்களுக்குப் பின்னுள்ளவர்களை விரட்டியடிப்பீராக அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக.
Enfal 8:58
(ஒப்பந்தம் செய்த) ஒரு சமுதாயத்திடமிருந்து மோசடியை நீர் பயந்தால், (அதற்குச்) சமமாக (அந்த ஒப்பந்தத்தை) நீர் அவர்களிடம் எறிவீராக. நிச்சயமாக அல்லாஹ், மோசடிக்காரர்களை நேசிக்க மாட்டான்.
Enfal 8:59
நிராகரித்தவர்கள் முந்திவிட்டதாக (தப்பிவிட்டதாக) நிச்சயம் எண்ண வேண்டாம். நிச்சயமாக அவர்கள் (நம்மை) பலவீனப்படுத்த முடியாது.
Enfal 8:60
அவர்களுக்கு (எதிராக ஆயுத) பலத்திலிருந்தும், போர் குதிரைகளில் இருந்தும் உங்களுக்கு முடிந்ததை ஏற்பாடு செய்யுங்கள். அதன்மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்கள் எதிரிகளையும் அவர்கள் அன்றி மற்றவர்களையும் நீங்கள் அச்சுறுத்த வேண்டும். நீங்கள் அவர்களை அறிய மாட்டீர்கள், அல்லாஹ் அவர்களை அறிவான். அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் பொருள்களில் எதை தர்மம் செய்தாலும் அது உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும்; நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.
Enfal 8:61
அவர்கள் சமாதானத்திற்கு இணங்கினால், நீர் அதற்கு இணங்குவீராக! அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பீராக!; நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
Enfal 8:62
(நபியே!) அவர்கள் உம்மை வஞ்சிக்க நாடினால் நிச்சயமாக உமக்குப் போதுமானவன் அல்லாஹ்தான். அவன் உம்மை தன் உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.
Enfal 8:63
அவன் அவர்களுடைய உள்ளங்களுக்கிடையில் ஒன்றிணைத்தான். பூமியிலுள்ளவை அனைத்தையும் நீர் செலவு செய்தாலும் அவர்களுடைய உள்ளங்களுக்கு மத்தியில் ஒன்றிணைத்திருக்க மாட்டீர். என்றாலும், நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு மத்தியில் ஒன்றிணைத்தான். நிச்சயமாக அவன் மிகைத்தவன், ஞானவான்.
Enfal 8:64
நபியே! உமக்கும் உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களுக்கும் போதுமானவன் அல்லாஹ்தான்.
Enfal 8:65
நபியே! நம்பிக்கையாளர்களை போருக்குத் தூண்டுவீராக! உங்களில் இருபது பொறுமையாளர்கள் இருந்தால் இருநூறு நபர்களை வெல்வார்கள். உங்களில் (அத்தகைய) நூறு நபர்கள் இருந்தால் நிராகரித்தவர்களில் ஆயிரம் நபர்களை வெல்வார்கள். (அதற்குக்) காரணம், நிச்சயமாக அவர்கள் சிந்தித்து விளங்காத மக்கள் ஆகும்.
Enfal 8:66
இப்போது அல்லாஹ் உங்களுக்கு (சட்டத்தை) இலகுவாக்கினான். நிச்சயமாக உங்களில் பலவீனம் உள்ளது என்பதை அறிந்தான். உங்களில் நூறு பொறுமையாளர்கள் இருந்தால் (மற்ற) இருநூறு நபர்களை வெல்வார்கள். (இத்தகைய) ஆயிரம் நபர்கள் உங்களில் இருந்தால் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு (மற்ற) இரண்டாயிரம் நபர்களை வெல்வார்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
Enfal 8:67
(கலகம் செய்கின்ற எதிரிகளை) இப்பூமியில் கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதிகளாக்குவது ஒரு நபிக்கு ஆகுமானதல்ல. (நீங்கள்) உலகத்தின் பொருளை நாடுகிறீர்கள். அல்லாஹ் (உங்களுக்கு) மறுமையை நாடுகிறான். அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான்.
Enfal 8:68
அல்லாஹ்விடமிருந்து (உங்களுக்கு மன்னிப்பு எனும்) விதி முந்தியிருக்கவில்லையெனில் நீங்கள் (கைதிகளிடம் பிணைத் தொகை) வாங்கியதில் மகத்தான வேதனை உங்களைப் பிடித்தே இருக்கும்.
Enfal 8:69
ஆகவே, நீங்கள் வென்ற (செல்வத்)தில் நல்ல ஆகுமானதை புசியுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
Enfal 8:70
நபியே! கைதிகளில் உங்கள் கரங்களில் (உங்கள் கட்டுப்பாட்டில்) உள்ளவர்களுக்கு கூறுவீராக: “உங்கள் உள்ளங்களில் நல்ல (எண்ணத்)தை அல்லாஹ் அறிந்தால் உங்களிடமிருந்து எடுக்கப்பட்டதை விட சிறந்ததை உங்களுக்குக் கொடுப்பான்; உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.”
Enfal 8:71
(நபியே!) அவர்கள் உமக்கு மோசடி செய்ய நாடினால் (இதற்கு) முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கு(ம்) மோசடி செய்துள்ளனர். ஆகவே, அவர்கள் மீது (அல்லாஹ் உங்களுக்கு) ஆதிக்கமளித்தான். அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானவான்.
Enfal 8:72
நிச்சயமாக நம்பிக்கை கொண்டு (தங்கள் ஊரை விட்டு வெளியேறி) ஹிஜ்ரா சென்று, அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருள்களாலும் தங்கள் உயிர்களாலும் போர் புரிந்தவர்கள் இன்னும் (இவர்களை) அரவணைத்து, உதவியவர்கள் இவர்கள்: இவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்பாளர்கள் ஆவர். எவர்கள் நம்பிக்கை கொண்டு ஆனால் ஹிஜ்ரா செல்லவில்லையோ அவர்கள் ஹிஜ்ரா செல்லும் வரை எந்த ஒன்றுக்கும் அவர்களுக்கு பொறுப்பேற்பது உங்களுக்கு ஆகுமானதல்ல. மார்க்கத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுவது உங்கள் மீது கடமையாகும். (எனினும்,) உங்களுக்கும் அவர்களுக்கிடையில் உடன்படிக்கை உள்ள ஒரு சமுதாயத்திற்கு எதிராக தவிர. (உடன்படிக்கை செய்து கொண்டவர்களுக்கு எதிராக உதவுவது ஆகுமானதல்ல.) அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன்.
Enfal 8:73
நிராகரிப்பவர்கள் அவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்பாளர்கள். (இவ்வாறு) நீங்கள் அதை செய்யவில்லையென்றால் (நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவவில்லையென்றால்), பூமியில் குழப்பமும் பெரும் கலகமும் ஆகிவிடும்.
Enfal 8:74
நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரா சென்று, அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்தவர்கள் இன்னும் (அவர்களை) அரவணைத்து உதவியவர்கள் இவர்கள்தான் உண்மையில் நம்பிக்கையாளர்கள். இவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான உணவும் உண்டு.
Enfal 8:75
(இதற்கு) பின்னர் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரா சென்று, உங்களுடன் சேர்ந்து (உங்கள் எதிரிகளிடம்) போர் புரிந்தவர்கள் அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள்தான். அல்லாஹ்வின் வேதத்தில் இரத்த பந்தங்கள் அவர்களில் சிலர் சிலருக்கு நெருக்கமானவர் ஆவர். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.
Tevbe 9:1
‘பராஆ’ விலகுதல் (எனும் அறிவிப்பு) அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் அவனுடைய தூதர் புறத்திலிருந்தும் இணைவைப்பவர்களில் நீங்கள் உடன்படிக்கை செய்தவர்களுக்கு (அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அந்த இணைவைப்பவர்களிலிருந்து விலகிக்கொள்கின்றனர் என்று அறிவிக்கப்படுகிறது).
Tevbe 9:2
ஆகவே, (இணைவைப்பவர்களே) “நீங்கள் நான்கு மாதங்கள் பூமியில் (சுதந்திரமாக) சுற்றலாம். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை பலவீனப்படுத்துபவர்கள் அல்லர் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை இழிவுபடுத்துபவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.”
Tevbe 9:3
இணைவைப்பவர்களிலிருந்து நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகியவர்கள் என்று அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரிடமிருந்து மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் (அறிவிக்கப்படும்) அறிவிப்பாகும் (இது). ஆகவே, (இணைவைப்பதிலிருந்து) நீங்கள் திருந்தினால் அது உங்களுக்கு மிக்க நன்று. நீங்கள் விலகினால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை பலவீனப்படுத்துபவர்கள் அல்லர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரித்தவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக.
Tevbe 9:4
(எனினும்,) இணைவைப்பவர்களில் நீங்கள் உடன்படிக்கை செய்து பிறகு (அதில்) அவர்கள் உங்களுக்கு எதையும் குறைக்காமலும், உங்களுக்கு எதிராக ஒருவருக்கும் உதவாமலும் இருந்தவர்களைத் தவிர. அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களுடைய தவணை (முடியும்) வரை முழுமைப்படுத்துங்கள். நிச்சயமாக அல்லாஹ் (அவனை) அஞ்சுபவர்களை நேசிக்கிறான்.
Tevbe 9:5
புனித மாதங்கள் முடிந்துவிட்டால் இணைவைப்பவர்களை -நீங்கள் அவர்களை எங்கு கண்டாலும்- கொல்லுங்கள்; அவர்களை(ச்சிறைப்) பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்; ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் (அவர்களை எதிர்பார்த்து) அவர்களுக்காக அமருங்கள். அவர்கள் திருந்தி, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தைக் கொடுத்தால் அவர்களுடைய வழியை விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன் பெரும் கருணையாளன்.
Tevbe 9:6
(நபியே!) இணைவைப்பவர்களில் ஒருவர் உம்மிடம் பாதுகாப்புத் தேடினால், அல்லாஹ்வின் பேச்சை அவர் செவியுறும் வரை அவருக்கு பாதுகாப்பு அளிப்பீராக! பிறகு அவரை அவருடைய பாதுகாப்பான இடத்திற்குச் சேர்த்து விடுவீராக! அதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அறியாத சமுதாயம் ஆகும்.
Tevbe 9:7
அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் இணைவைப்பவர்களுக்கு எப்படி ஒப்பந்தம் இருக்கும்? (ஆயினும்) புனித மஸ்ஜிதிடத்தில் நீங்கள் ஒப்பந்தம் செய்தவர்களைத் தவிர. அவர்கள் உங்களுடன் ஒழுங்காக நடந்துகொள்ளும் வரை நீங்களும் அவர்களுடன் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (தன்னை) அஞ்சுபவர்களை நேசிப்பான்.
Tevbe 9:8
எவ்வாறு (அவர்களை நம்ப முடியும்)? அவர்கள் உங்களை வெற்றி கொண்டால் உங்களுடன் (தங்களுக்குள்ள) உறவையும் ஒப்பந்தத்தையும் பொருட்படுத்தமாட்டார்கள். தங்கள் வாய் (வார்த்தை)களால் உங்களைத் திருப்திபடுத்துகின்றனர்; அவர்களுடைய உள்ளங்கள் (உங்களை) மறுக்கின்றன (வெறுக்கின்றன). அவர்களில் அதிகமானோர் பாவிகள் ஆவர்.
Tevbe 9:9
அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களுக்குப் பகரமாக சொற்ப விலையை வாங்கினார்கள். (மக்களை) அவனுடைய பாதையை விட்டுத் தடுத்தனர். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்தது கெட்டுவிட்டது.
Tevbe 9:10
அவர்கள், நம்பிக்கையாளர்கள் விஷயத்தில் உறவையும் ஒப்பந்தத்தையும் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்கள்தான் வரம்பு மீறிகள்.
Tevbe 9:11
அவர்கள் திருந்தி (அல்லாஹ்வின் பக்கம் திரும்பி மன்னிப்புக் கோரி) தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தையும் கொடுத்தால் (அவர்கள்) மார்க்கத்தில் உங்கள் சகோதரர்கள் ஆவர். அறிகின்ற மக்களுக்கு (நம்) வசனங்களை விவரிக்கிறோம்.
Tevbe 9:12
அவர்கள் தங்கள் ஒப்பந்தத்திற்குப் பின்னர் தங்கள் சத்தியங்களை முறித்தால், உங்கள் மார்க்கத்தில் குறை கூறினால், அவர்கள் (இக்குற்றத்திலிருந்து) விலகிக் கொள்வதற்காக (இத்தகைய) நிராகரிப்புடைய தலைவர்களிடம் போரிடுங்கள். நிச்சயமாக அவர்களுக்கு சத்தியங்கள் அறவே இல்லை. (இவர்கள் தங்கள் சத்தியங்களின் படி நடந்து கொள்ள மாட்டார்கள்.)
Tevbe 9:13
தங்கள் சத்தியங்களை முறித்து தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றுவதற்கு உறுதியாக நாடிய மக்களிடம் நீங்கள் போர்புரிய மாட்டீர்களா? அவர்கள்தான் (விஷமத்தை) உங்களிடம் முதல் முறையாக ஆரம்பித்தனர். நீங்கள் அவர்களைப் பயப்படுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்தான் நீங்கள் பயப்படுவதற்கு மிகத் தகுதியானவன்.
Tevbe 9:14
அவர்களிடம் போரிடுங்கள். உங்கள் கரங்களால் அல்லாஹ் அவர்களை வேதனைசெய்வான், அவர்களை இழிவுபடுத்துவான், அவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவுவான், நம்பிக்கை கொண்ட மக்களின் நெஞ்சங்க(ளில் உள்ள காயங்க)ளை குணப்படுத்துவான்.
Tevbe 9:15
அவர்களுடைய உள்ளங்களின் கோபத்தை போக்குவான். அல்லாஹ் (அவர்களில்) தான் நாடியவர் மீது பிழை பொறுப்பான். அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானவான்.
Tevbe 9:16
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் (மனம் விரும்பி) போர்புரிந்து, அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களையும் அன்றி (மற்றவர்களை தங்கள்) அந்தரங்க நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதவர்களை அல்லாஹ் (வெளிப்படையாக) அறியாமல் இருக்க, நீங்கள் (இப்படியே) விட்டுவிடப்படுவீர்கள் என்று எண்ணினீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவன்.
Tevbe 9:17
தங்கள் மீது நிராகரிப்பிற்கு (தாங்களே) சாட்சி கூறியவர்களாக இருக்கும் நிலையில் இணைவைப்பவர்களுக்கு அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் பரிபாலிப்பதற்கு உரிமை இருக்கவில்லை. அவர்களுடைய (நற்)செயல்கள் அழிந்தன. நரகத்தில்தான் அவர்கள் நிரந்தரமானவர்கள்.
Tevbe 9:18
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளை பராமரிப்பதெல்லாம் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தைக் கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர (எவரையும்) பயப்படாதவர்(கள்)தான். இவர்கள்தான் நேர்வழி பெற்றவர்களில் இருக்கக்கூடும்.
Tevbe 9:19
ஹாஜிக்கு தண்ணீர் புகட்டுவதையும், புனித மஸ்ஜிதை பராமரிப்பதையும் அல்லாஹ் இன்னும் இறுதி நாளை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் போர்புரிந்தவர் (உடைய செயலைப்) போன்று நீங்கள் ஆக்கினீர்களா? அல்லாஹ்விடம் (இவர்கள்) சமமாக மாட்டார்கள். அல்லாஹ், அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
Tevbe 9:20
நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரா சென்று அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் போர் புரிந்தவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள். இவர்கள்தான் வெற்றியாளர்கள்.
Tevbe 9:21
அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னிடமிருந்து (தன்) கருணை, பொருத்தம் இன்னும் சொர்க்கங்களைக் கொண்டு நற்செய்தி கூறுகிறான். அவற்றில் அவர்களுக்கு நிலையான இன்பம் உண்டு.
Tevbe 9:22
அவற்றில் அவர்கள் எப்போதும் நிரந்தரமானவர்கள். நிச்சயமாக அல்லாஹ், அவனிடம் மகத்தான கூலியுண்டு.
Tevbe 9:23
நம்பிக்கையாளர்களே! உங்கள் தாய் தந்தைகளையும், உங்கள் சகோதரர்களையும் பொறுப்பாளர்களாக (பாதுகாவலர்களாக) எடுத்துக் கொள்ளாதீர்கள் அவர்கள் இறைநம்பிக்கையை விட நிராகரிப்பை விரும்பினால். உங்களில் எவர்கள் அவர்களை பொறுப்பாளர்களாக ஆக்கிக் கொள்வார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.
Tevbe 9:24
(நபியே!) கூறுவீராக: உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் மனைவிகளும், உங்கள் குடும்பமும், நீங்கள் சம்பாதித்த செல்வங்களும், அது மந்தமாகிவிடுவதை நீங்கள் பயப்படும் வர்த்தகமும், நீங்கள் விரும்பும் வீடுகளும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவனுடைய பாதையில் போரிடுவதையும்விட உங்களுக்கு மிக விருப்பமாக இருந்தால் அல்லாஹ் தன் (வேதனையின்) கட்டளையைக் கொண்டு வரும் வரை எதிர்பாருங்கள். அல்லாஹ் பாவிகளான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
Tevbe 9:25
திட்டவட்டமாக அதிகமான போர்க்களங்களிலும் ஹுனைன் (போர்) அன்றும் அல்லாஹ் உங்களுக்கு உதவினான். நீங்கள் (எண்ணிக்கையில்) அதிகமாக இருப்பது உங்களை பெருமைப்படுத்தியபோது (அந்த எண்ணிக்கை) உங்களுக்கு எதையும் பலன் தரவில்லை. பூமி அது விசாலமாக இருந்தும் உங்கள் மீது நெருக்கடியாகி விட்டது. பிறகு, நீங்கள் புறமுதுகு காட்டியவர்களாக திரும்பினீர்கள்.
Tevbe 9:26
பிறகு, அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டவர்கள் மீதும் தன் (புறத்திலிருந்து) அமைதியை இறக்கினான். இன்னும் சில படைகளை இறக்கினான். அவற்றை நீங்கள் பார்க்கவில்லை. நிராகரித்தவர்களை வேதனை செய்தான். இதுதான் நிராகரிப்பவர்களின் கூலியாகும்.
Tevbe 9:27
பிறகு, அதற்குப் பின்னர் அல்லாஹ் தான் நாடியவர்கள் மீது பிழை பொறுப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
Tevbe 9:28
நம்பிக்கையாளர்களே! இணைவைப்பவர்கள் எல்லாம் அசுத்தமானவர்கள். ஆகவே, அவர்கள் அவர்களுடைய இந்த ஆண்டிற்குப் பின்னர் புனித மஸ்ஜிதை நெருங்கக் கூடாது. வறுமையை நீங்கள் பயந்தால் அல்லாஹ் நாடினால், தனது அருளினால் உங்களை நிறைவாக்குவான் (தேவையான செல்வத்தை உங்களுக்கு வழங்குவான்). நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானவான்.
Tevbe 9:29
வேதம் கொடுக்கப்பட்டவர்களில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்தவற்றை தடை செய்யாமல், சத்திய மார்க்கத்தை மார்க்கமாக ஏற்காதவர்களிடம் -அவர்கள் (சிறுமையடைந்தவர்களாக) பணிந்தவர்களாக இருக்க, உடனே ‘ஜிஸ்யா’ (வரி) கொடுக்கும் வரை- அவர்களிடம் போர் புரியுங்கள்.
Tevbe 9:30
‘உஜைர்’ அல்லாஹ்வுடைய மகன் என்று யூதர்கள் கூறுகிறார்கள். ‘மஸீஹ்’ அல்லாஹ்வுடைய மகன் என்று கிறித்தவர்கள் கூறுகிறார்கள். இது அவர்களின் வாய்களில் இருந்து வரும் அவர்களின் (கற்பனைக்) கூற்றாகும் (தவிர, உண்மையில்லை). முன்னர் நிராகரித்தவர்களின் கூற்றுக்கு ஒப்பாகி(பேசுகி)ன்றனர். அல்லாஹ் அவர்களை அழிப்பான். அவர்கள் எப்படி (உண்மையை விட்டு) திருப்பப்படுகின்றனர்?
Tevbe 9:31
இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் அறிஞர்களையும் தங்கள் துறவிகளையும் மர்யமுடைய மகன் (ஈஸா) மஸீஹையும் கடவுள்களாக எடுத்துக் கொண்டனர். வணக்கத்திற்குரிய ஒரே ஒரு கடவுளை அவர்கள் வணங்குவதற்குத் தவிர (இணை வைப்பதற்கு) அவர்கள் ஏவப்படவில்லை. வணங்கப்படும் கடவுள் அவனைத் தவிர (வேறு எவனும்) அறவே இல்லை. அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அவன் மிகத் தூயவன்.
Tevbe 9:32
இவர்கள் தங்கள் வாய்களைக் கொண்டு (ஊதி) அல்லாஹ்வுடைய ஒளியை அணைப்பதற்கு நாடுகின்றனர். நிராகரிப்பவர்கள் வெறுத்தாலும் அல்லாஹ் தன் ஒளியை முழுமைப்படுத்துவதைத் தவிர (மற்றதை) மறுக்கிறான்.
Tevbe 9:33
அவன் தன் தூதரை நேர்வழியைக் கொண்டும் உண்மை மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பினான், -இணைவைப்பவர்கள் வெறுத்தாலும்- எல்லா மார்க்கங்களைப் பார்க்கிலும் அவன் அதை ஓங்க வைப்பதற்காக.
Tevbe 9:34
நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக யூத, கிறித்துவ அறிஞர்கள் இன்னும் துறவிகளில் இருந்து அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறாக அனுபவிக்கின்றனர். அல்லாஹ்வின் பாதையைவிட்டு தடுக்கின்றனர். எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து, அவற்றை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்ய மாட்டார்களோ, அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய வேதனையைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக.
Tevbe 9:35
அவற்றின் மீது நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்படும் நாளில், அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளும், அவர்களுடைய விலாக்களும், அவர்களுடைய முதுகுகளும் சூடிடப்படும். “உங்களுக்காக நீங்கள் சேமித்தவைதான் இவை. ஆகவே, நீங்கள் சேமித்துக் கொண்டிருந்தவற்றை (அவற்றுக்குரிய தண்டனையை இன்று) சுவையுங்கள்.”
Tevbe 9:36
நிச்சயமாக அல்லாஹ்விடம், வானங்களையும், பூமியையும் படைத்த நாளில் அல்லாஹ்வின் புத்தகத்தில் மாதங்களின் எண்ணிக்கை பனிரெண்டு மாதங்களாகும். அவற்றில் புனிதமான நான்கு (மாதங்கள்) உண்டு. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, அவற்றில் (அம்மாதங்களில் பாவம் செய்து) உங்களுக்கு அநீதி இழைக்காதீர்கள். நீங்கள் ஒன்றிணைந்து இணைவைப்பவர்களிடம் போர் புரியுங்கள் அவர்கள் ஒன்றிணைந்து உங்களிடம் போர் புரிவதுபோன்று. நிச்சயமாக, அல்லாஹ் (அவனை) அஞ்சுபவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Tevbe 9:37
(புனித மாதங்களை) பிற்படுத்துவதெல்லாம் நிராகரிப்பில் அதிகப்படுத்துவதாகும். அதன்மூலம் நிராகரிப்பவர்கள் வழி கெடுக்கப்படுகின்றனர். ஓர் ஆண்டில் (புனித மாதமாகிய) அதை ஆகுமாக்குகின்றனர். (வேறு) ஓர் ஆண்டில் அதை (புனிதம் என) தடை செய்கின்றனர். காரணம், அல்லாஹ் தடை செய்த (புனித மாதங்களின்) எண்ணிக்கைக்கு அவர்கள் ஒத்துவந்து, பிறகு, அல்லாஹ் தடை செய்ததை அவர்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகும். அவர்களுடைய தீயச் செயல்கள், அவர்களுக்கு அலங்கரிக்கப்பட்டன. அல்லாஹ் நிராகரிப்பவர்களான மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்.
Tevbe 9:38
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்கு) புறப்படுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால் உங்களுக்கு என்ன ஆனது உலகத்தின் பக்கம் சாய்ந்து விட்டீர்கள்? மறுமையைவிட உலக வாழ்க்கையைக் கொண்டு திருப்தியடைந்தீர்களா? உலக வாழ்க்கையின் இன்பம் மறுமையில் அற்பமானதே தவிர வேறில்லை!
Tevbe 9:39
(போருக்கு) நீங்கள் புறப்படாவிட்டால், துன்புறுத்தக்கூடிய வேதனையால் உங்களை வேதனை செய்வான்; உங்களை அன்றி (வேறு) ஒரு சமுதாயத்தை மாற்றி விடுவான். நீங்கள் அவனுக்கு எதையும் தீங்கிழைக்க முடியாது. அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.
Tevbe 9:40
நீங்கள் அவருக்கு உதவவில்லையெனில் (அவருக்கு நஷ்டம் இல்லை). இருவரில் ஒருவராக அவர் இருக்க நிராகரித்தவர்கள் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றியபோது, அவ்விருவரும் குகையில் இருந்தபோது, தன்தோழருக்கு “கவலைப்படாதே! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்”என்று கூறியபோது அல்லாஹ் அவருக்கு உதவி செய்துவிட்டான். அல்லாஹ் அவர் மீது தன் அமைதியை இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான். நிராகரித்தவர்களின் வார்த்தையை (-மார்க்கத்தை, ஆற்றலை) மிகத் தாழ்ந்ததாக ஆக்கினான். அல்லாஹ்வின் வார்த்தைதான் (அவனது மார்க்கம், வலிமை) மிக உயர்வானது. அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான்.
Tevbe 9:41
நீங்கள் இலகுவானவர்களாக[1] இன்னும் கனமானவர்களாக[2] இருக்க (போருக்கு) புறப்படுங்கள், அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களாலும் உங்கள் உயிர்களாலும் போரிடுங்கள். நீங்கள் அறிபவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகச் சிறந்தது.
———
[1] (இலகுவானவர்கள்: வாலிபர்கள், வாகனிப்பவர்கள், செல்வந்தர்கள். [2] கனமானவர்கள்: வயோதிகர்கள், கால்நடையாக செல்பவர்கள், ஏழைகள்.)
Tevbe 9:42
(நபியே!) அருகில் உள்ள பொருளாகவும் சமீபமான பயணமாகவும் இருந்திருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றி இருப்பார்கள். எனினும் அவர்கள் மீது (செல்லவேண்டிய) எல்லை தூரமாகி விட்டது. “நாங்கள் ஆற்றல் பெற்றிருந்தால் உங்களுடன் வெளியேறி இருப்போம்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள். (பொய் சத்தியத்தால் அவர்கள்) தங்களையே அழிக்கின்றனர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்பதை அல்லாஹ் அறிவான்.
Tevbe 9:43
அல்லாஹ் உம்மை மன்னிப்பான்! (அவர்களில்) உண்மை உரைத்தவர்கள் (எவர்கள் என்று) உமக்குத் தெளிவாகி, பொய்யர்களை(யும் அவர்கள் யாரென்று) நீர் அறிகின்ற வரை ஏன் அவர்களுக்கு அனுமதியளித்தீர்?
Tevbe 9:44
அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொள்பவர்கள் தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் போரிடுவதிலிருந்து (விலகியிருக்க) உம்மிடம் அனுமதி கோர மாட்டார்கள். அல்லாஹ் (அவனை) அஞ்சுபவர்களை நன்கறிந்தவன்.
Tevbe 9:45
உம்மிடம் அனுமதி கோருவதெல்லாம், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதவர்கள்தான். அவர்களுடைய உள்ளங்கள் சந்தேகித்தன. ஆகவே, அவர்கள் தங்கள் சந்தேகத்தில் தடுமாறுகின்றனர்.
Tevbe 9:46
அவர்கள் (போருக்கு) வெளியேறுவதை நாடியிருந்தால் அதற்கு ஒரு தயாரிப்பை ஏற்பாடு செய்திருப்பார்கள். எனினும் (உம்முடன்) அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்தான். ஆகவே, அவர்களைத் தடுத்து விட்டான். தங்குபவர்களுடன் தங்கிவிடுங்கள் என்றும் (அவர்களுக்கு) கூறப்பட்டது.
Tevbe 9:47
அவர்கள் உங்களுடன் வெளியேறி (வந்து) இருந்தால் தீமையைத் தவிர (வேறு எதையும்) உங்களுக்கு அதிகப்படுத்தி இருக்க மாட்டார்கள்; உங்களுக்கு குழப்பத்தைத் தேடி உங்களுக்கிடையில் விரைந்திருப்பார்கள். அவர்களுக்காக (உளவு பார்க்கும்) ஒற்றர்களும் உங்களுடன் இருக்கின்றனர். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
Tevbe 9:48
(அவர்கள் இதற்கு) முன்னர் குழப்பத்தைத் தேடியுள்ளனர். உமக்கு காரியங்களை (தலைகீழாய்)ப் புரட்டி(க் காண்பித்த)னர். இறுதியாக (வெற்றி எனும்) சத்தியம் வந்தது, அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தும் அல்லாஹ்வின் கட்டளை (மார்க்கம்) வென்றது.
Tevbe 9:49
(நபியே!) “எனக்கு அனுமதி தருவீராக, என்னைச் சோதிக்காதீர்” என்று கூறுபவரும் அவர்களில் உண்டு. அறிந்து கொள்ளுங்கள் அவர்கள் சோதனையில் விழுந்தனர். நிச்சயமாக நரகம் நிராகரிப்பவர்களை சூழ்ந்தே உள்ளது.
Tevbe 9:50
(நபியே!) உம்மை ஒரு நன்மை அடைந்தால் அது அவர்களைத் துக்கப்படுத்துகிறது. உம்மை ஒரு சோதனை அடைந்தால், “முன்னரே எங்கள் காரியத்தை (எச்சரிக்கையுடன்) நாங்கள் (முடிவு) எடுத்துக் கொண்(டு போருக்கு வராமல் தங்கி விட்)டோம்” என்று கூறி, அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாக (உம்மை விட்டு) திரும்புகின்றனர்.
Tevbe 9:51
(நபியே!) “அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர (வேறு எதுவும்) எங்களை அறவே அடையாது; அவன்தான் எங்கள் (எஜமானன்,) இறைவன்” என்று கூறுவீராக. நம்பிக்கையாளர்கள் அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கவும்.
Tevbe 9:52
கூறுவீராக: (வெற்றி அல்லது சொர்க்கம் இந்த) இரு சிறப்பானவற்றில் ஒன்றைத் தவிர (வேறு எதையும்) எங்களுக்கு எதிர்பார்க்கிறீர்களா? அல்லாஹ் தன்னிடமிருந்து அல்லது எங்கள் கரங்களால் ஒரு வேதனையைக் கொண்டு உங்களை சோதிப்பதை நாங்கள் உங்களுக்கு எதிர்பார்க்கிறோம். ஆகவே, எதிர்பாருங்கள்; நிச்சயமாக நாங்கள் உங்களுடன் எதிர்பார்ப்பவர்கள்.
Tevbe 9:53
“விருப்பமாக அல்லது வெறுப்பாக தர்மம் செய்யுங்கள். (எப்படி செய்தாலும் உங்கள் தர்மம்) உங்களிடமிருந்து அறவே அங்கீகரிக்கப்படாது. நிச்சயமாக நீங்கள் பாவிகளான மக்களாக ஆகிவிட்டீர்கள்” என்று கூறுவீராக!
Tevbe 9:54
நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தனர்; அவர்கள் சோம்பேறிகளாக இருந்தே தவிர தொழுகைக்கு வரமாட்டார்கள்; அவர்கள் வெறுத்தவர்களாக இருந்தே தவிர (அவர்கள்) தர்மம் புரிய மாட்டார்கள் ஆகிய இவற்றைத் தவிர அவர்களுடைய தர்மங்கள் அவர்களிடமிருந்து அங்கீகரிக்கப்படுவதற்கு (வேறு எதுவும்) அவர்களுக்குத் தடையாக இருக்கவில்லை.
Tevbe 9:55
(நபியே!) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அல்லாஹ் நாடுவதெல்லாம் அவற்றின் மூலம் அவர்களை உலக வாழ்க்கையில் வேதனை செய்வதையும், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்க அவர்களுடைய உயிர்கள் பிரிந்து சென்று விடுவதையும்தான்.
Tevbe 9:56
“நிச்சயமாக அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள்தான்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். (ஆனால்) அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை. என்றாலும் அவர்கள் பயப்படுகிற மக்கள் ஆவர்.
Tevbe 9:57
ஒரு ஒதுங்குமிடத்தை அல்லது (மலைக்) குகைகளை அல்லது ஒரு சுரங்கத்தை அவர்கள் கண்டால் அவர்களோ விரைந்தவர்களாக அதன் பக்கம் திரும்பியிருப்பார்கள்.
Tevbe 9:58
(நபியே!) தர்மங்களில் உம்மைக் குறை கூறுபவர்களும் அவர்களில் உண்டு. அவற்றிலிருந்து அவர்கள் கொடுக்கப்பட்டால் திருப்தியடைவார்கள். அவற்றிலிருந்து அவர்கள் கொடுக்கப்படவில்லையென்றால் அப்போது அவர்கள் ஆத்திரப்படுகின்றனர்.
Tevbe 9:59
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததை நிச்சயமாக அவர்கள் திருப்தியடைந்து, “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அல்லாஹ் தனது அருளிலிருந்து(ம்) இன்னும் அவனுடைய தூதர் (தன் தர்மத்திலிருந்தும்) எங்களுக்குக் கொடுப்பார்கள்; நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் பக்கம்தான் ஆசையுள்ளவர்கள்” என்றும் அவர்கள் கூற வேண்டுமே!
Tevbe 9:60
ஸகாத்துகள் அல்லாஹ்விடமிருந்து (விதிக்கப்பட்ட) கடமையாக வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அவற்றுக்கு ஊழியம் செய்பவர்களுக்கும், அவர்களின் உள்ளங்கள் (புதிதாக இஸ்லாமுடன்) இணைக்கப்பட்டவர்களுக்கும், அடிமைகளுக்கும், கடனாளிகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் இருப்பவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும். அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானவான்.
Tevbe 9:61
“அவர் (அனைத்தையும் செவியேற்கும்) ஒரு காது” என்று கூறி நபியை இகழ்பவர்களும் அவர்களில் உள்ளனர். (நபியே!) கூறுவீராக: “(அவர்) உங்களுக்கு நல்ல காது ஆவார். (அவர்) அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறார்; நம்பிக்கையாளர்களை ஏற்றுக் கொள்கிறார். உங்களில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு கருணையாவார்.” அல்லாஹ்வின் தூதரை இகழ்பவர்கள் அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய வேதனையுண்டு.
Tevbe 9:62
உங்களைத் திருப்திபடுத்துவதற்காக அவர்கள் உங்களுக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், அவர்கள் திருப்திபடுத்துவதற்கு அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான் மிகவும் தகுதியுடையவர்கள்.
Tevbe 9:63
நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முரண்படுவாரோ அவருக்கு நிச்சயமாக நரகத்தின் நெருப்புதான் உண்டு, அதில் (அவர்) நிரந்தரமானவர் என்பதை அவர்கள் அறியவில்லையா? இதுதான் பெரிய இழிவாகும்.
Tevbe 9:64
(நம்பிக்கை கொண்ட) அவர்கள் மீது ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு அது தங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை அவர்களுக்கு அறிவித்துவிடுவதை நயவஞ்சகர்கள் (போலியாக) பயப்படுகின்றனர். கூறுவீராக: “பரிகசித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பயப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் வெளியாக்குபவன் ஆவான்.”
Tevbe 9:65
(இதைப் பற்றி) நீர் அவர்களைக் கேட்டால் “நாங்கள் இருந்ததெல்லாம் (பேச்சில்) மூழ்குபவர்களாகவும் விளையாடுபவர்களாகவும்தான்” என்று நிச்சயம் கூறுவார்கள். (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும், அவனுடைய தூதரையுமா பரிகசித்துக் கொண்டிருந்தீர்கள்?”
Tevbe 9:66
நீங்கள் (செய்யும் விஷமத்தனத்திற்கு) புகல் கூறாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிராகரித்து விட்டீர்கள். உங்களில் ஒரு கூட்டத்தை நாம் மன்னித்தால் (மற்ற) ஒரு கூட்டத்தை நிச்சயமாக அவர்கள் குற்றவாளிகளாக இருந்த காரணத்தால், வேதனை செய்வோம்.
Tevbe 9:67
நயவஞ்சக ஆண்களும், நயவஞ்சக பெண்களும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்களே! அவர்கள் தீமையை ஏவுகின்றனர்; நன்மையை விட்டு தடுக்கின்றனர். தங்கள் கரங்களை மூடிக் கொள்கின்றனர் (கருமித்தனம் செய்கின்றனர்). அவர்கள் அல்லாஹ்வை மறந்தார்கள்; ஆகவே, (அல்லாஹ்வும்) அவர்களை மறந்தான். நிச்சயமாக நயவஞ்சகர்கள்தான் பாவிகள்.
Tevbe 9:68
நயவஞ்சக ஆண்களுக்கும் நயவஞ்சக பெண்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் நரகத்தின் நெருப்பை அல்லாஹ் வாக்களித்தான். அதில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். அதுவே அவர்களுக்குப் போது(மான கூலியாகு)ம். அல்லாஹ் அவர்களைச் சபித்தான். அவர்களுக்கு (அங்கு) நிலையான வேதனையுண்டு.
Tevbe 9:69
(நயவஞ்சகர்களே! நீங்கள்) உங்களுக்கு முன்னுள்ளவர்களைப் போன்றே. அவர்கள் உங்களைவிட பலத்தால் கடுமையானவர்களாக; செல்வங்களாலும் சந்ததிகளாலும் அதிகமானவர்களாக இருந்தனர். (அவர்கள் இவ்வுலகில்) தங்கள் பங்கைக் கொண்டு சுகமடைந்தார்கள். உங்களுக்கு முன்னுள்ளவர்கள் தங்கள் பங்கைக் கொண்டு (இவ்வுலகில்) சுகமடைந்தது போன்று, (நீங்களும்) உங்கள் பங்கைக் கொண்டு சுகமடைந்தீர்கள். அவர்கள் (பரிகசிப்பதில்) மூழ்கியது போன்றே (நீங்களும்) மூழ்கினீர்கள். அவர்கள், இம்மையிலும் மறுமையிலும் அவர்களுடைய (நற்)செயல்கள் அழிந்தன. அவர்கள்தான் நஷ்டவாளிகள். (அவ்வாறே நீங்களும் நஷ்டவாளிகள்.)
Tevbe 9:70
இவர்களுக்கு முன்னருள்ள நூஹ் (நபி) உடைய சமுதாயம், ஆது, ஸமூது, இப்ராஹீம் (நபி) உடைய சமுதாயம், மத்யன் வாசிகள், தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊர்கள் ஆகியோரின் சரித்திரம் அவர்களுக்கு வரவில்லையா? அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அநீதியிழைப்பவனாக இருக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்கே அநீதியிழைப்பவர்களாக இருந்தனர்.
Tevbe 9:71
நம்பிக்கை கொண்ட ஆண்கள், நம்பிக்கை கொண்ட பெண்கள் அவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்பாளர்கள். அவர்கள், நன்மையை ஏவுகின்றனர்; தீமையைவிட்டு தடுக்கின்றனர்; தொழுகையை நிலைநிறுத்துகின்றனர்; ஸகாத்தை கொடுக்கின்றனர்; அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகின்றனர். இவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான்.
Tevbe 9:72
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அவற்றின் கீழ் நதிகள் ஓடும் சொர்க்கங்களையும், (அத்ன் எனும்) நிலையான சொர்க்கங்களில் நல்ல தங்குமிடங்களையும் அல்லாஹ் வாக்களித்தான். (அவர்கள்) அவற்றில் நிரந்தரமானவர்கள். அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுதான் மகத்தான வெற்றியாகும்.
Tevbe 9:73
நபியே! நிராகரிப்பவர்களிடமும் நயவஞ்சகர்களிடமும் போரிடுவீராக. அவர்களைக் கண்டிப்பீராக. அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். மீளுமிடத்தால் அது கெட்டுவிட்டது.
Tevbe 9:74
(நயவஞ்சகர்கள்) தாங்கள் (தூதருக்கு எதிராக ஏதும்) கூறவில்லை என்று அல்லாஹ் மீது சத்தியமிடுன்றனர். நிராகரிப்பின் வார்த்தையை அவர்கள் கூறியிருக்கின்றனர். அவர்கள் முஸ்லிமானதற்குப் பின்னர் நிராகரித்தனர். அவர்கள் அடைய முடியாததை (செய்ய) திட்டமிட்டனர். (அதாவது தூதரை கொல்வதற்கு முயற்சித்தனர்.) அல்லாஹ் தன் அருளினால், இன்னும் அவனுடைய தூதர் (தனது தர்மத்தினால்) இவர்களுக்கு (செல்வத்தை வழங்கி) நிறைவாக்கினார்கள் என்பதற்கே தவிர (வேறு எதற்காகவும்) இவர்கள் (தூதரை) தண்டிக்க (நாட)வில்லை. (அதாவது அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரின் உபகாரத்திற்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதற்குப் பதிலாக நன்றிகெட்டதனமாக தூதரையே கொல்ல நாடினர் நயவஞ்சகர்கள்.) அவர்கள் திருந்தினால் அது அவர்களுக்கே சிறந்ததாக இருக்கும். அவர்கள் (திருந்தாமல்) விலகிச் சென்றால் இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவர்களை துன்புறுத்தக்கூடிய வேதனையால் வேதனை செய்வான். பூமியில் அவர்களுக்கு (எந்த) ஒரு பாதுகாவலரும் இல்லை, எந்த ஓர் உதவியாளரும் இல்லை.
Tevbe 9:75
“(அல்லாஹ்) தன் அருளிலிருந்து எங்களுக்குக் கொடுத்தால் நிச்சயமாக நாம் தர்மம் செய்வோம்; நிச்சயமாக நாம் நல்லவர்களில் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்விடம் ஒப்பந்தம் செய்தவர்களும் அவர்களில் உண்டு.
Tevbe 9:76
அவன் தன் அருளிலிருந்து அவர்களுக்கு கொடுத்தபோது, அதில் கஞ்சத்தனம் செய்தனர். அவர்கள் புறக்கணிப்பவர்களாகவே (தங்கள் ஒப்பந்தத்தை நிறைவேற்றாது) விலகிவிட்டனர்.
Tevbe 9:77
ஆகவே, அவர்கள் அல்லாஹ்விடம் தாங்கள் வாக்களித்ததற்கு மாறாக நடந்த காரணத்தினாலும் அவர்கள் பொய் சொல்பவர்களாக இருந்த காரணத்தாலும் அவர்கள் அவனை சந்திக்கும் நாள் வரை அவர்களுடைய உள்ளங்களில் அவர்களுக்கு நயவஞ்சகத்தை முடிவாக்கினான்.
Tevbe 9:78
நிச்சயமாக அவர்களின் ரகசியத்தையும் இன்னும் அவர்களின் பேச்சையும் அல்லாஹ் அறிவான் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் மறைவானவற்றை மிகமிக அறிந்தவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?
Tevbe 9:79
நம்பிக்கையாளர்களில் இருந்து தர்மங்களில் உபரியாக (தர்மம்) செய்பவர்களையும் (தர்மம் புரிய) தங்கள் உழைப்பைத் தவிர (செல்வம் எதையும்) பெறாதவர்களையும் இவர்கள் குறை கூறுகின்றனர் (குத்திப் பேசுகின்றனர்). இன்னும் அல்லாஹ் அவர்களை கேலிசெய்கிறான். துன்புறுத்தக்கூடிய வேதனையும் அவர்களுக்கு உண்டு.
Tevbe 9:80
(நபியே!) நீர் அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக! அல்லது அவர்களுக்காக மன்னிப்புத் தேடாதீர்! அவர்களுக்காக நீர் எழுபது முறை மன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். அதற்குக் காரணம் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நிராகரித்தனர்; அல்லாஹ், பாவிகளான மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்.
Tevbe 9:81
பின் தங்கியவர்கள், அல்லாஹ்வின் தூதருக்கு மாறாக(த் தங்கள் வீடுகளில்) தாங்கள் தங்கியதைப் பற்றி மகிழ்ச்சியடைந்தனர். அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களாலும், தங்கள் உயிர்களாலும் போரிடுவதை வெறுத்தனர். (மற்றவர்களுக்கு) “வெயிலில் (போருக்குப்) புறப்படாதீர்கள்” என்று கூறினர். (நபியே!) “நரகத்தின் நெருப்பு வெப்பத்தால் மிகக் கடுமையானது” என்று கூறுவீராக. (இதை) அவர்கள் சிந்தித்து விளங்குபவர்களாக இருக்க வேண்டுமே!
Tevbe 9:82
(இவ்வுலகில்) அவர்கள் குறைவாக சிரிக்கட்டும். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கு கூலியாக (மறுமையில்) அதிகமாக அழட்டும்!
Tevbe 9:83
(நபியே!) அல்லாஹ் உம்மை (வெற்றி பெற்றவராக) அவர்களில் ஒரு கூட்டத்திடம் திருப்பி, (அடுத்த போரில் உம்முடன்) அவர்கள் வெளியேறுவதற்கு உம்மிடம் அனுமதி கோரினால், (நீர்) கூறுவீராக: “ஒருபோதும் என்னுடன் அறவே புறப்படாதீர்கள். என்னுடன் சேர்ந்து (எந்த) ஒரு எதிரியிடமும் அறவே போரிடாதீர்கள். நிச்சயமாக நீங்கள் முதல் முறை (வீட்டில்) உட்கார்ந்து விடுவதை விரும்பினீர்கள். ஆகவே, (இப்போதும்) பின் தங்கிவிடுபவர்களுடன் உட்கார்ந்து விடுங்கள்.”
Tevbe 9:84
(நபியே!) அவர்களில் இறந்த ஒருவர் மீது ஒருபோதும் (ஜனாஸா தொழுகை) தொழாதீர். அவருடைய புதைகுழிக்கு அருகில் நிற்காதீர். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தனர். இன்னும் அவர்களோ பாவிகளாக இறந்தனர்.
Tevbe 9:85
அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அல்லாஹ் நாடுவதெல்லாம் அவற்றின் மூலம் உலகில் அவர்களை வேதனை செய்வதற்கும், அவர்கள் நிராகரித்தவர்களாக இருக்க அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும்தான்.
Tevbe 9:86
அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுங்கள்; அவனுடைய தூதருடன் சேர்ந்து போரிடுங்கள் என்று ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால் அவர்களிலுள்ள செல்வந்தர்கள் உம்மிடம் அனுமதிகோரி, “எங்களை விட்டுவிடுவீராக!; (போருக்கு வராமல் வீட்டில்) உட்கார்ந்தவர்களுடன் (நாங்களும்) இருக்கிறோம்” என்று கூறுகின்றனர்.
Tevbe 9:87
பின் தங்கிய பெண்களுடன் அவர்கள் ஆகிவிடுவதைக் கொண்டு திருப்தியடைந்தனர். அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடப்பட்டது. அவர்கள் சிந்தித்து விளங்க மாட்டார்கள்.
Tevbe 9:88
எனினும் தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் (அல்லாஹ்வின் பாதையில்) போரிட்டனர். அவர்களுக்குத்தான் நன்மைகள் உண்டு. அவர்கள்தான் வெற்றியாளர்கள்.
Tevbe 9:89
அல்லாஹ், அவர்களுக்காக சொர்க்கங்களை ஏற்படுத்தினான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். அதுதான் மகத்தான வெற்றி.
Tevbe 9:90
கிராமவாசிகளில் புகல் கூறுபவர்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதற்கு (புகல் கூறி) வந்தார்கள், அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் பொய்யுரைத்தவர்கள் (அனுமதி கோராமல்) உட்கார்ந்தார்கள். இவர்களில் நிராகரித்தவர்களை துன்புறுத்தும் வேதனை அடையும்.
Tevbe 9:91
பலவீனர்கள் மீதும், நோயாளிகள் மீதும், (போருக்கு) செலவழிப்பதை பெறாதவர்கள் மீதும் -அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நன்மையை நாடினால்- ஒரு குற்றமுமில்லை. நல்லறம் புரிவோர் மீது (குற்றம் கூற) வழி ஏதும் இல்லை. அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
Tevbe 9:92
நீர் அவர்களை (வாகனத்தில்) ஏற்றுவதற்காக உம்மிடம் அவர்கள் வந்தால் உங்களை ஏற்றுவதற்கு நான் எதையும் பெறவில்லையே என்று நீர் கூற, (போருக்கு) செலவு செய்வதை தாம் பெறாத கவலையினால் அவர்களுடைய கண்கள் கண்ணீரால் பொங்கி வழிய திரும்பியவர்கள் மீதும் (குற்றம்) இல்லை.
Tevbe 9:93
(குற்றம் சுமத்த) வழியெல்லாம் அவர்கள் செல்வந்தர்களாக இருக்க உம்மிடம் அனுமதி கோருபவர்கள் மீதுதான். அவர்கள் பின் தங்கிய பெண்களுடன் ஆகுவதைக் கொண்டு திருப்தியடைந்தனர். அவர்களுடைய உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டான். ஆகவே, அவர்கள் அறிய மாட்டார்கள்.
Tevbe 9:94
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அவர்களிடம் திரும்பினால் உங்களிடம் அவர்கள் புகல் கூறுவார்கள். (நபியே!) கூறுவீராக: “புகல் கூறாதீர்கள். நாங்கள் உங்க(ள் புகல்க)ளை நம்ப மாட்டோம். உங்கள் செய்திகளிலிருந்து (சிலவற்றை) அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான். அல்லாஹ் உங்கள் செயல்களைப் பார்ப்பான். இன்னும் அவனுடைய தூதரும் (உங்கள் செயலைப் பார்ப்பார்.) பிறகு மறைவையும் வெளிப்படையையும் அறிந்தவ(னாகிய அல்லாஹ்வி)னிடம் திருப்பப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை (அவன்) உங்களுக்கு அறிவிப்பான்.
Tevbe 9:95
அவர்களிடம் நீங்கள் திரும்பினால், நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுவதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியமி(ட்)டு (பொய் கூறு)வார்கள். ஆகவே, அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். நிச்சயமாக அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு கூலியாக அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான்.
Tevbe 9:96
அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடைவதற்காக உங்களிடம் சத்தியமிடுகின்றனர். அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடைந்தாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான (அம்)மக்களைப் பற்றி திருப்தியடையமாட்டான்.
Tevbe 9:97
நிராகரிப்பிலும் நயவஞ்சகத்திலும் கிராம அரபிகள் மிகக் கடுமையானவர்கள். இன்னும் அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கியவற்றின் சட்டங்களை அவர்கள் அறியாமல் இருக்க மிகத் தகுதியானவர்கள். அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானவான்.
Tevbe 9:98
தாங்கள் தர்மம் செய்வதை நஷ்டமாக எடுத்துக் கொள்பவர்களும் கிராம அரபிகளில் உண்டு. உங்களுக்கு (கெட்ட) சுழற்சிகளை எதிர்பார்க்கின்றனர். அவர்கள் மீதுதான் வேதனையின் சுழற்சி உள்ளது. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிபவன்.
Tevbe 9:99
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, தாங்கள் தர்மம் புரிவதை அல்லாஹ்விடம் வணக்கங்களாகவும், தூதரின் பிரார்த்தனைகளாகவும் எடுத்துக் கொள்பர்களும் கிராம அரபிகளில் (சிலர்) உண்டு. அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அது அவர்களுக்கு வணக்கமாகும். அல்லாஹ் அவர்களைத் தன் கருணையில் நுழைப்பான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
Tevbe 9:100
முஹாஜிர்களிலும் அன்ஸாரிகளிலும் முதலாமவர்களான முந்தியவர்கள், இன்னும் இவர்களை நல்லறத்தில் பின்பற்றிய(மற்ற)வர்கள் ஆகிய இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைந்தான். இவர்களும் அவனைப் பற்றி திருப்தியடைந்தனர். அவற்றின் கீழ் நதிகள் ஓடும் சொர்க்கங்களை இவர்களுக்கு (அவன்) ஏற்படுத்தினான். அவற்றில் எப்போதும் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.
Tevbe 9:101
உங்களைச் சூழவுள்ள கிராம அரபிகளிலும் இன்னும் மதீனாவாசிகளிலும் நயவஞ்சகர்கள் உள்ளனர். அவர்கள் நயவஞ்சகத்தின் மீது ஊறிவிட்டனர். (நபியே! நீர்) அவர்களை அறியமாட்டீர்; நாம் அவர்களை அறிவோம். அவர்களை இருமுறை வேதனை செய்வோம். பிறகு, பெரிய வேதனையின் பக்கம் (அவர்கள்) திருப்பப்படுவார்கள்.
Tevbe 9:102
மற்றவர்கள் சிலர் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர். நல்ல செயலையும் மற்ற கெட்டதையும் கலந்(து செய்)தனர். அல்லாஹ் அவர்களை மன்னிக்கக் கூடும். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன்,பெரும் கருணையாளன்.
Tevbe 9:103
(நபியே!) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை எடுப்பீராக. அதன் மூலம் அவர்களை நீர் சுத்தப்படுத்துவீர்; (உயர் பண்புகளுக்கு) அவர்களை உயர்த்துவீர். அவர்களுக்கு பிரார்த்திப்பீராக. நிச்சயமாக உம் பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதி தரக்கூடியதாகும். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
Tevbe 9:104
நிச்சயமாக, அல்லாஹ்தான் தன் அடியார்களிடமிருந்து (அவர்கள்) திருந்துவதை (பிழை பொறுப்பை) ஏற்கிறான்; தர்மங்களை எடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ்தான் (அடியார்களின் தவ்பாவை) மகா அங்கீகரிப்பவன், பெரும் கருணையாளன் என்பதை அவர்கள் அறியவில்லையா?
Tevbe 9:105
(நபியே!) கூறுவீராக: “(நீங்கள் செய்வதை) செய்யுங்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்பிக்கையாளர்களும் உங்கள் செயலைப் பார்க்கிறார்கள். மறைவையும், வெளிப்படையையும் அறிந்தவ(னாகிய அல்லாஹ்வி)ன் பக்கம் திருப்பப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததை (அவன்) உங்களுக்கு அறிவிப்பான்.”
Tevbe 9:106
இன்னும், அல்லாஹ்வின் உத்தரவிற்காக தள்ளிவைக்கப்பட்ட மற்றவர்கள் ஒன்று, அல்லாஹ் அவர்களை தண்டிப்பான். அல்லது அவர்களை மன்னிப்பான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான்.
Tevbe 9:107
கெடுதல் செய்வதற்காகவும் நிராகரிப்பிற்காகவும் நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் பிரிப்பதற்காகவும் முன்னர் அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரிடமும் போரிட்டவர்(கள் வந்து தங்குவதற்காக அவர்)களை எதிர்பார்த்தும் ஒரு மஸ்ஜிதை எடுத்துக்கொண்டவர்களும் (அவர்களில் உள்ளனர்). “நாங்கள் நன்மையைத் தவிர (வேறு எதையும்) நாடவில்லை” என்று நிச்சயமாக சத்தியம் செய்கின்றனர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
Tevbe 9:108
ஒருபோதும் அதில் நின்று வணங்காதீர். முதல் நாளிலிருந்தே இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட மஸ்ஜிதுதான் நீர் நின்று வணங்குவதற்கு மிகத் தகுதியானது. அதில், தாங்கள் அதிகம் பரிசுத்தமாகுவதை விரும்புகின்ற ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் மிக பரிசுத்தமானவர்களை நேசிக்கிறான்.
Tevbe 9:109
அல்லாஹ்வின் அச்சம் இன்னும் (அவனது) பொருத்தத்தின் மீது தான் கட்டுவதை அடித்தளமிட்டவர் சிறந்தவரா? அல்லது தான் கட்டுவதை சரிந்து விடக்கூடிய ஓடையின் ஓரத்தில் அடித்தளமிட்டு, அது அவனுடன் நரக நெருப்பில் சரிந்துவிட்டதே அவ(ர் சிறந்தவ)ரா?. அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்.
Tevbe 9:110
அவர்கள் கட்டிய கட்டடம் அவர்களுடைய உள்ளங்களில் சந்தேகமாகவே நீடித்திருக்கும், அவர்களுடைய உள்ளங்கள் துண்டு துண்டானால் தவிர (அது நீங்காது). அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான்.
Tevbe 9:111
நிச்சயமாக அல்லாஹ், நம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களுடைய உயிர்களையும் அவர்களுடைய செல்வங்களையும் நிச்சயம் அவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்பதற்கு பகரமாக விலைக்கு வாங்கினான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவார்கள்; (எதிரிகளை) கொல்வார்கள்; (அவர்களிலும் சிலர்) கொல்லப்படுவார்கள். தவ்றாத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் தன் மீது கடமையான வாக்குறுதியாக (அல்லாஹ் இதை வாக்களித்துள்ளான்). அல்லாஹ்வைவிட தன் வாக்கை அதிகம் நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, அதற்குப் பகரமாக நீங்கள் விற்றுக்கொண்ட விற்பனையைக் கொண்டு மகிழ்ச்சியுறுங்கள். இதுதான் மகத்தான வெற்றி!
Tevbe 9:112
(அவர்கள் பாவத்திலிருந்து) திருந்தியவர்கள்; வணக்கசாலிகள்; (அல்லாஹ்வை) புகழ்பவர்கள்; நோன்பு நோற்பவர்கள்; (தொழுகையில்) குனிபவர்கள், சிரம் பணிபவர்கள்; நன்மையை ஏவக் கூடியவர்கள்; பாவத்தை விட்டுத் தடுக்கக்கூடியவர்கள்; அல்லாஹ்வுடைய சட்டங்களைப் பாதுகாப்பவர்கள் ஆவர். (இத்தகைய) நம்பிக்கையாளர்களுக்கு (சொர்க்கத்தின்) நற்செய்தி கூறுவீராக!
Tevbe 9:113
நிச்சயமாக (இணைவைப்பவர்கள்) அவர்கள் நரகவாசிகள் என்று தங்களுக்குத் தெளிவாகிய பின்னர், அவர்கள் உறவினர்களாக இருந்தாலும் இணைவைப்பவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் தகுந்ததல்ல.
Tevbe 9:114
(நபி) இப்ராஹீம் தன் தந்தைக்கு மன்னிப்புக் கோரியது, அவர் அவருக்கு வாக்களித்த வாக்குறுதிக்காகவே தவிர (வேறு எதற்காகவும்) இருக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அவர் ஓர் எதிரி என அவருக்குத் தெளிவானபோது அவரிலிருந்து அவர் விலகிக்கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் அதிகம் பிரார்த்திப்பவர், பெரும் சகிப்பாளர்.
Tevbe 9:115
ஒரு கூட்டத்தை அவர்களை அல்லாஹ் நேர்வழிப்படுத்திய பின்னர் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவற்றை அவன் அவர்களுக்கு விவரிக்கும் வரை அவர்களை அவன் வழிகெடுப்பவனாக ஆகியிருக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.
Tevbe 9:116
நிச்சயமாக அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது! (அவனே) உயிர்ப்பிக்கிறான்; இன்னும் மரணிக்கச் செய்கிறான். அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு எந்த ஒரு பாதுகாவலரும் இல்லை; ஓர் உதவியாளரும் இல்லை.
Tevbe 9:117
நபி இன்னும் சிரம காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள், திட்டவட்டமாக அன்ஸாரிகள் மீது அல்லாஹ் மன்னித்தான் (தோழர்களாகிய) அவர்களில் ஒரு பிரிவினரின் உள்ளங்கள் வழிதவற நெருங்கிய பின்னர். பிறகு(ம்) அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அவன் அவர்கள் மீது இரக்கமுள்ளவன், பெரும் கருணையாளன் ஆவான்.
Tevbe 9:118
(மன்னிப்பு வழங்கப்படாமல்) பிற்படுத்தப்பட்ட மூவர் மீதும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்). பூமி விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு நெருக்கடியாகும் வரையும், அவர்கள் மீது அவர்களின் ஆன்மாக்களும் நெருக்கடியாகும் வரை (அவர்கள் பிற்படுத்தப்பட்டனர்). அல்லாஹ்விடமிருந்து (தப்பி) ஒதுங்குமிடம் அவனிடமே தவிர (வேறு எங்கும்) அறவே இல்லை என அவர்கள் உறுதி கொண்டனர். பிறகு, அவர்கள் திருந்துவதற்காக அவர்களை அவன் மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ், அவன்தான் (அடியார்களின் தவ்பாவை) மகா அங்கீகரிப்பவன், பெரும் கருணையாளன்.
Tevbe 9:119
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்; இன்னும் உண்மையாளர்களுடன் இருங்கள்.
Tevbe 9:120
மதீனாவாசிகள் இன்னும் அவர்களைச் சுற்றி உள்ள கிராம அரபிகளுக்கு -அவர்கள் அல்லாஹ்வின் தூதரை விட்டு பின் தங்குவதும்; அவருடைய உயிரைவிட தங்கள் உயிர்களை நேசிப்பதும்-தகுந்ததல்ல. அதற்குக் காரணம், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஒரு தாகமோ, ஒரு களைப்போ, ஒரு பசியோ அடையாது; இன்னும் நிராகரிப்பாளர்களைக் கோபமூட்டுகிற ஓர் இடத்தை இவர்கள் மிதிக்க மாட்டார்கள்; எதிரியிடமிருந்து ஒரு துன்பத்தை இவர்கள் அடையமாட்டார்கள் இவற்றிற்கு பதிலாக அவர்களுக்கு நன்மையான செயல்(கள்) எழுதப்பட்டே தவிர. நிச்சயமாக அல்லாஹ் நல்லறம்புரிவோரின் கூலியை வீணாக்க மாட்டான்.
Tevbe 9:121
(போரில்) ஒரு சிறிய, பெரிய தர்மத்தை அவர்கள் தர்மம் புரியமாட்டார்கள்; ஒரு பள்ளத்தாக்கை அவர்கள் கடக்க மாட்டார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக அழகியதை அல்லாஹ் அவர்களுக்குக் கூலி கொடுப்பதற்காக அவர்களுக்கு (நன்மையாக) அது பதியப்பட்டே தவிர.
Tevbe 9:122
நம்பிக்கையாளர்கள் அனைவருமே (நபியை தனியாக விட்டுவிட்டு ஊரிலிருந்து) புறப்படுவது சரியல்ல. மார்க்கத்தில் அவர்கள் ஞானம் பெறுவதற்காகவும் தங்கள் சமுதாயத்திடம் திரும்பும்போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் உங்களில் ஒவ்வொரு பிரிவினரிலிருந்தும் ஒரு கூட்டம் (மட்டும் போருக்கு) புறப்பட்டிருக்க வேண்டாமா? (ஊரில் தங்கிய) அவர்கள் (இதன் மூலம்) எச்சரிக்கையாக இருப்பார்கள்.
Tevbe 9:123
நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களில் உங்களை அடுத்திருக்கின்றவர்களிடம் போரிடுங்கள். அவர்கள் உங்களிடம் ஒரு கடுமையைக் காணட்டும். நிச்சயமாக அல்லாஹ் (தன்னை) அஞ்சுபவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Tevbe 9:124
ஓர் (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால் “உங்களில் எவருக்கு இது நம்பிக்கையை அதிகப்படுத்தியது?” என்று கேட்பவர் அவர்களில் இருக்கின்றனர். ஆகவே, நம்பிக்கை கொண்டவர்களோ, அவர்களுக்கு (இது) நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அவர்களோ மகிழ்ச்சியடைகின்றனர்.
Tevbe 9:125
ஆகவே, எவர்களுடைய உள்ளங்களில் ஒரு நோய் இருக்கிறதோ அவர்களுக்கு அவர்களுடைய அசுத்தத்துடன் ஒரு அசுத்தத்தையே (அது) அதிகப்படுத்தியது! அவர்களோ நிராகரிப்பாளர்களாகவே இறந்தனர்.
Tevbe 9:126
ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இரு முறைகளோ நிச்சயமாக அவர்கள் சோதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பிறகும் அவர்கள் திருந்தவில்லை; அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதில்லை.
Tevbe 9:127
ஓர் (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களில் சிலர் சிலரை (விரைக்கப்) பார்க்கிறார்களா? “உங்களை யாரும் பார்க்கின்றனரா?” என்று (கேட்டு விட்டு) பின்னர், (அங்கிருந்து) திரும்பி விடுகின்றனர். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தை) அறியாத மக்களாக இருக்கும் காரணத்தால், அல்லாஹ்(வும்) அவர்களுடைய உள்ளங்களை திருப்பிவிட்டான்.
Tevbe 9:128
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் சிரமப்படுவதை தன் மீது கடினமாக உணரக்கூடிய; உங்கள் மீது பேராசையுடைய; நம்பிக்கையாளர்கள் மீது பெரும் இரக்கமுள்ள; பெரும் கருணையுள்ள ஒரு தூதர் உங்களிலிருந்தே உங்களிடம் வந்துவிட்டார்.
Tevbe 9:129
(நபியே) கூறுவீராக! அவர்கள் (உம்மை விட்டு விலகி) திரும்பினால் “எனக்குப் போதுமானவன் அல்லாஹ்தான்; அவனைத் தவிர அறவே வணக்கத்திற்குரிய (வேறு இறை)வன் இல்லை; அவன் மீதே நான் நம்பிக்கை வைத்துவிட்டேன்; அவன் மகத்தான ‘அர்ஷின்’ அதிபதி.”
Yunus 10:1
அலிஃப், லாம், றா. இவை ஞானமிகுந்த வேதத்தின் வசனங்களாகும்.[1]
———
[1] ஸூரா பகராவின் 1-ஆவது வசனத்தின் அடிக்குறிப்பைப் பாருங்கள்.
Yunus 10:2
“(நிராகரிக்கின்ற) மனிதர்களை எச்சரிப்பீராக! இன்னும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு தங்கள் இறைவனிடத்தில் நற்கூலி அவர்களுக்கு உண்டு என நற்செய்தி கூறுவீராக!’’ என்று அவர்களில் உள்ள ஒரு மனிதருக்கு நாம் வஹ்யி அறிவித்தது மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? நிச்சயமாக இவர் தெளிவான சூனியக்காரர்தான் என்று (இந்)நிராகரிப்பாளர்கள் (அவரைப் பற்றி) கூறினார்கள்.
Yunus 10:3
(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் இறைவன் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தவனாகிய அல்லாஹ்தான். பிறகு (அவன்) ‘அர்ஷ்’ மீது (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்து விட்டான். காரியத்தை (அவனே) நிர்வகிக்கிறான். அவனுடைய அனுமதிக்கு பின்னரே தவிர பரிந்துரைப்பவர் அறவே (எவரும்) இல்லை. அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன் ஆவான். ஆகவே, அவனை வணங்குங்கள். நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
Yunus 10:4
அவனிடமே உங்கள் அனைவரின் மீளுமிடம் இருக்கிறது. அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையே! நிச்சயமாக அவன் படைப்பை ஆரம்பிக்கிறான். பிறகு அதை மீட்கிறான். (ஏனெனில்) நம்பிக்கைகொண்டு நற்செயல்களை செய்தவர்களுக்கு நீதமாக அவன் (நற்)கூலி கொடுப்பதற்காக. நிராகரித்தவர்களோ அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு முற்றிலும் கொதித்த (சீல் சலம் போன்ற)வற்றிலிருந்து குடிபானமும் மிகத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
Yunus 10:5
அவனே சூரியனை ஒளியாகவும், சந்திரனை வெளிச்சமாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிவதற்காக அதை (-சந்திரனை பல) தங்குமிடங்களில் நிர்ணயித்தான். உண்மையான (காரணத்)திற்கே தவிர இவற்றை அல்லாஹ் படைக்கவில்லை. அறி(ந்து கொள்)கின்ற சமுதாயத்திற்கு அத்தாட்சிகளை (இவ்வாறு) விவரிக்கின்றான்.
Yunus 10:6
நிச்சயமாக இரவு பகல் மாறுவதிலும், வானங்கள் இன்னும் பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் அல்லாஹ்வை அஞ்சுகின்ற மக்களுக்கு உறுதியாக (பல) அத்தாட்சிகள் உள்ளன.
Yunus 10:7
நிச்சயமாக எவர்கள் நம் சந்திப்பை ஆதரவு வைக்காமல், இவ்வுலக வாழ்க்கையை விரும்பி, அதைக் கொண்டு நிம்மதியடைந்தார்களோ, இன்னும் நம் வசனங்களை விட்டு எவர்கள் அலட்சியமானவர்களாக இருக்கிறார்களோ,
Yunus 10:8
அ(த்தகைய)வர்கள், அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வற்றின் காரணமாக அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான்.
Yunus 10:9
நிச்சயமாக நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தவர்கள், அவர்களை அவர்களுடைய இறைவன் அவர்களின் நம்பிக்கையின் காரணமாக நேர்வழி செலுத்துவான். இன்பமிகு சொர்க்கங்களில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடும்.
Yunus 10:10
அதில் அவர்களின் பிரார்த்தனை, “அல்லாஹ்வே! நீ மிகப் பரிசுத்தமானவன்” என்பதாகும். அதில் அவர்களின் முகமன் “ஸலாம்” ஆகும். அவர்களுடைய பிரார்த்தனையின் இறுதி “நிச்சயமாக புகழ் அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வுக்கே சொந்தமானது” என்று இருக்கும்.
Yunus 10:11
நன்மையை (கேட்டு) அவர்கள் அவசரப்படுவது போல் அல்லாஹ்வும் மனிதர்களுக்கு (அவர்களின் பாவத்திற்குரிய)த் தீங்கை (தண்டனையை) அவசரப்படுத்தினால் அவர்களுக்கு அவர்களுடைய தவணைக் காலம் (முன்பே) முடிக்கப்பட்டிருக்கும். ஆகவே, நம் சந்திப்பை ஆதரவு வைக்காதவர்களை அவர்களுடைய வழிகேட்டிலேயே கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக விட்டுவிடுகிறோம்.
Yunus 10:12
மனிதனை துன்பம் தீண்டினால் அவன் தன் விலாவின் மீது (சாய்ந்தவனாக), அல்லது உட்கார்ந்தவனாக, அல்லது நின்றவனாக நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனை விட்டு அவனுடைய துன்பத்தை நாம் நீக்கிவிட்டபோது அவன் தன்னை தீண்டிய துன்பத்திற்கு நம்மை அழைக்காதது போன்று செல்கிறான். வரம்புமீறிகளுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவை இவ்வாறு அலங்கரிக்கப்பட்டன.
Yunus 10:13
(மனிதர்களே!) உங்களுக்கு முன்னர் (வாழ்ந்த பல) தலைமுறைகளை அவர்கள் அநியாயம் செய்தபோது திட்டமாக நாம் அழித்துவிட்டோம். அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தனர். (எனினும், அவற்றை) அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை. குற்றம் புரிகின்ற மக்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.
Yunus 10:14
பிறகு நீங்கள் எப்படி(ப்பட்ட செயல்கள்) செய்கிறீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக அவர்களுக்குப் பின்னர் நாம் உங்களை பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கினோம்.
Yunus 10:15
இவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதப்பட்டால் நம் சந்திப்பை ஆதரவு வைக்காதவர்கள் “இது அல்லாத (வேறு) ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரீர்; அல்லது (எங்கள் இஷ்டப்படி) நீர் அதை மாற்றுவீராக” என்று கூறுகின்றனர். “என் புறத்திலிருந்து அதை நான் மாற்றுவது என்னால் முடியாது. எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறொன்றை) நான் பின்பற்ற மாட்டேன். என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளின் வேதனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று (நபியே!) கூறுவீராக.
Yunus 10:16
(மேலும்) கூறுவீராக! “அல்லாஹ் நாடியிருந்தால், நான் இதை உங்கள் மீது ஓதியிருக்கவும் மாட்டேன்; இன்னும் அவன் உங்களுக்கு இதை அறிவித்திருக்கவும் மாட்டான். இதற்கு முன்னர் ஒரு (நீண்ட) காலம் உங்களுடன் வசித்துள்ளேன். நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?”
Yunus 10:17
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனைவிட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பித்தவனைவிட பெரும் அநியாயக்காரன் யார்? நிச்சயமாக குற்றவாளிகள் வெற்றிபெற மாட்டார்கள்.
Yunus 10:18
அல்லாஹ்வை அன்றி அவர்களுக்கு தீங்கிழைக்காத, அவர்களுக்கு பலனளிக்காதவற்றை வணங்குகிறார்கள்; இன்னும் “இவை அல்லாஹ்விடம் எங்கள் சிபாரிசாளர்கள்” என்று கூறுகின்றனர். (ஆகவே, நபியே!) “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்கு அவன் அறியாதவற்றை நீங்கள் அறிவிக்கிறீர்களா? அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அவன் உயர்ந்துவிட்டான்” என்று கூறுவீராக.
Yunus 10:19
மனிதர்கள் (அனைவரும் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே ஒரு சமுதாயமாகவே தவிர இருக்கவில்லை. பிறகு (பொறாமையினால் தங்களுக்குள்) மாறுபட்டனர். (செயலுக்குரிய கூலி மறுமையில்தான் என்ற) உம் இறைவனின் சொல் முந்தியிருக்கவில்லையெனில், (அவர்கள்) மாறுபடுகின்றவற்றில் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்!
Yunus 10:20
“ஓர் அத்தாட்சி அவர் மீது அவருடைய இறைவனிடமிருந்து இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?” என்று அவர்கள் கூறுகின்றனர். (அதற்கு நபியே!) கூறுவீராக! “மறைவானவை எல்லாம் அல்லாஹ்வுக்குரியனவே. ஆகவே, நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் இருக்கிறேன்.”
Yunus 10:21
மனிதர்களுக்கு தங்களைத் தீண்டிய ஒரு துன்பத்திற்கு பின்னர் ஒரு கருணையை நாம் சுவைக்க வைத்தால், அப்போது அவர்களுக்கு நம் வசனங்களில் ஒரு சூழ்ச்சி (சிந்தனை தோன்றுகிறது). (நபியே!) அல்லாஹ் சூழ்ச்சி செய்வதில் மிகத் தீவிரமானவன் என்று கூறுவீராக! நிச்சயமாக நம் (வானவத்) தூதர்கள் நீங்கள் சூழ்ச்சி செய்வதைப் பதிவு செய்கிறார்கள்.
Yunus 10:22
நிலத்திலும் நீரிலும் உங்களை அவன்தான் பயணிக்க வைக்கிறான். இறுதியாக நீங்கள் கப்பல்களில் இருக்க, நல்ல காற்றால் (அவை) அவர்களை சுமந்து பயணித்தன, அதன்மூலம் அவர்கள் மகிழ்ந்தனர். (இந்நிலையில்) அவற்றுக்கு புயல் காற்று வந்தது. எல்லா இடத்திலிருந்தும் அவர்களுக்கு அலைகள் (சூழ்ந்து) வர, “நிச்சயமாக தாம் அழிக்கப்பட்டோம்” என்று அவர்கள் எண்ணியபோது, “(அல்லாஹ்வே!) இதிலிருந்து நீ எங்களைப் பாதுகாத்தால் நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துபவர்களில் இருப்போம்” என்று அவனுக்கு வழிபாட்டை தூய்மைப்படுத்தியவர்களாக அல்லாஹ்வை அவர்கள் அழைக்கின்றனர்.
Yunus 10:23
அவன் அவர்களை பாதுகாத்தபோது அவர்கள் பூமியில் அப்போதே நியாயமின்றி வரம்புமீறுகின்றனர். மனிதர்களே! உங்கள் வரம்புமீறுதல் எல்லாம் உங்களுக்கே (கேடானது). (இது) இவ்வுலக வாழ்க்கை சொற்ப இன்பமாகும். பிறகு நம் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நாம் உங்களுக்கு அறிவிப்போம்.
Yunus 10:24
உலக வாழ்க்கையின் உதாரணமெல்லாம் மேகத்திலிருந்து நாம் இறக்கிய நீரைப் போன்றுதான். மனிதர்களும் கால்நடைகளும் புசிப்பதிலிருந்து பூமியின் தாவரம் அ(ந்)த (மழையி)ன் மூலம் கலந்து (அடர்த்தியாக வளர்ந்து)விட்டது. இறுதியாக, பூமி தன் அலங்காரத்தை எடுத்து, அலங்காரமாகிவிட, அதன் உரிமையாளர்கள் (பயிர்களை அறுவடைசெய்ய வந்து,) நிச்சயமாக தாங்கள் அவற்றின்மேல் (அறுவடை செய்ய) ஆற்றல் பெற்றவர்கள் என்று எண்ணியபோது இரவில் அல்லது பகலில் நம் கட்டளை அவற்றுக்கு வந்தது. ஆகவே, அவற்றை அவை நேற்றைய தினம் இல்லாததைப் போன்று வேரறுக்கப்பட்டதாக ஆக்கினோம். சிந்திக்கின்ற மக்களுக்கு வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.
Yunus 10:25
ஈடேற்றத்தின் இல்லத்திற்கு அல்லாஹ் அழைக்கிறான். அவன் நாடுகிறவர்களை நேரான பாதைக்கு வழிகாட்டுகிறான்.
Yunus 10:26
நல்லறம் புரிந்தவர்களுக்கு மிக அழகிய கூலியும் (இறையருளில் இன்னும்) அதிகமும் உண்டு. அவர்களுடைய முகங்களை (எவ்வித) கவலையும் இழிவும் சூழாது. அவர்கள் சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள்.
Yunus 10:27
தீமைகளை செய்தவர்கள் தீமையின் கூலி(யாக) அது போன்ற(தீய)தைக் கொண்டுதான் (கொடுக்கப்படுவார்கள்)! அவர்களை இழிவு சூழும். அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பவர் ஒருவரும் அவர்களுக்கு இல்லை. இருண்ட இரவின் ஒரு பாகத்தால் அவர்களுடைய முகங்கள் சூழப்பட்டதைப் போன்று இருக்கும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமானவர்கள்.
Yunus 10:28
அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில்... பிறகு, இணை வைத்தவர்களை நோக்கி “நீங்களும் உங்கள் இணை(தெய்வங்)களும் உங்கள் இடத்திலேயே (தாமதியுங்கள்)” என்று கூறுவோம். அவர்களுக்கிடையில் (தொடர்பை) நீக்கி விடுவோம். “நீங்கள் எங்களை வணங்கி கொண்டிருக்கவில்லை” என்று அவர்களுடைய இணை(தெய்வங்)கள் கூறும்.
Yunus 10:29
“எங்களுக்கிடையிலும் உங்களுக்கிடையிலும் அல்லாஹ்வே சாட்சியால் போதுமானவன்; உங்கள் வழிபாட்டை விட்டும் நிச்சயம் நாங்கள் கவனமற்றவர்களாகவே இருந்தோம்” என்றும் (அந்த தெய்வங்கள் கூறும்)
Yunus 10:30
அங்கு ஒவ்வொரு ஆத்மாவும் தான் முன் செய்தவற்றைச் சோதிக்கும். அவர்கள் தங்கள் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கம் கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை அவர்களை விட்டு மறைந்துவிடும்.
Yunus 10:31
(நபியே!) “வானம், பூமியிலிருந்து உங்களுக்கு யார் உணவளிக்கிறார்? அல்லது (உங்கள்) செவிக்கும் பார்வைகளுக்கும் யார் உரிமை கொள்வார்? இறந்ததிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் யார் வெளிப்படுத்துவார்? யார் (எல்லா) காரியத்தை(யும்) நிர்வகிக்கிறான்?” என்று கூறுவீராக! அதற்கு, “அல்லாஹ்தான்” என்று கூறுவார்கள். (அவ்வாறாயின் அல்லாஹ்வை) நீங்கள் அஞ்சவேண்டாமா? என்று கூறுவீராக!
Yunus 10:32
“அந்த அல்லாஹ்தான் உங்கள் உண்மையான இறைவன். (இந்த) உண்மைக்குப் பின்னர் வழிகேட்டைத் தவிர (வேறு) என்ன இருக்கிறது? நீங்கள் (உண்மையிலிருந்து) எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்?” (என்றும் கூறுவீராக).
Yunus 10:33
மீறியவர்கள் மீது நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்ற உம் இறைவனின் சொல் அவ்வாறே உண்மையாகி விட்டது.
Yunus 10:34
“படைப்புகளை ஆரம்பித்து, (அவை இறந்த) பிறகு, அவற்றை மீட்பவன் உங்கள் இணை தெய்வங்களில் (யாரும்) உண்டா?” என்று (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்தான் படைப்புகளை ஆரம்பிக்கிறான். பிறகு அவற்றை (உயிர்க் கொடுத்து) மீட்கிறான்.” (நம்பிக்கை கொள்வதிலிருந்து) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்?” என்று (நபியே) கூறுவீராக!
Yunus 10:35
“சத்தியத்தின் பக்கம் நேர்வழி காட்டுபவர் உங்கள் இணை தெய்வங்களில் யாரும் உண்டா?” என்று கூறுவீராக! “அல்லாஹ்தான் சத்தியத்திற்கு நேர்வழி காட்டுகிறான். சத்தியத்தின் பக்கம் நேர்வழி காட்டுபவன் பின்பற்றப்படுவதற்கு மிகத் தகுதியானவனா? அல்லது, தான் நேர்வழி காட்டப்பட்டால் தவிர நேர்வழியடையாதவ(ன் பின்பற்றப்படுவதற்கு தகுதியானவ)னா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்” என்று (நபியே) கூறுவீராக!
Yunus 10:36
அவர்களில் பெரும்பாலானவர்கள் சந்தேகத்தையே தவிர (வேறு எதையும்) பின்பற்றவில்லை. நிச்சயமாக சந்தேகம் உண்மையை விட்டும் ஒரு சிறிதும் பலன்தராது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்.
Yunus 10:37
இந்தக் குர்ஆன் அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து இட்டுக்கட்டப்பட்டதாக இல்லை. எனினும், இது (வேதங்களில்) தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப்படுத்தி, (மார்க்க) சட்டங்களை விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது. இதில், (இது) அகிலங்களின் இறைவனிடமிருந்து வந்தது என்பதில் அறவே சந்தேகமில்லை.
Yunus 10:38
இதை (நம் தூதர்) “இட்டுக்கட்டினார்” என அவர்கள் கூறுகின்றனரா? (நபியே!) கூறுவீராக! “நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சாத்தியமானவர்களை அழையுங்கள், அது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்.”
Yunus 10:39
மாறாக, எதன் அறிவை அவர்கள் சூழ்ந்தறியவில்லையோ அதைப் பொய்ப்பித்தனர். அதன் விளக்கம் இன்னும் இவர்களுக்கு வரவில்லை. இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறியாததை) பொய்ப்பித்தனர். ஆகவே, அநியாயக்காரர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக!
Yunus 10:40
அதை நம்பிக்கை கொள்பவரும் அவர்களில் உண்டு; அதை நம்பிக்கை கொள்ளாதவரும் அவர்களில் உண்டு. விஷமிகளை உம் இறைவன் மிக அறிந்தவன்.
Yunus 10:41
(நபியே!) உம்மை அவர்கள் பொய்ப்பித்தால், “என் செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு; நான் செய்வதிலிருந்து நீங்கள் நீங்கியவர்கள்; நீங்கள் செய்வதிலிருந்து நான் நீங்கியவன்” என்று கூறுவீராக!
Yunus 10:42
அவர்களில் உம் பக்கம் செவிமடுப்பவர்களும் உண்டு. செவிடர்களை, அவர்கள் சிந்தித்து புரியாதவர்களாக இருந்தாலும் நீர் கேட்கவைப்பீரா?
Yunus 10:43
உம் பக்கம் பார்ப்பவரும் அவர்களில் உண்டு. குருடர்களை அவர்கள் பார்க்காதவர்களாக இருந்தாலும் நீர் நேர்வழி செலுத்துவீரா?
Yunus 10:44
நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு ஒரு சிறிதும் அநீதியிழைக்க மாட்டான். எனினும், மனிதர்கள் தங்களுக்கே அநீதீயிழைக்கின்றனர்.
Yunus 10:45
அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில் பகலில் ஒரு (சொற்ப) நேரத்தைத் தவிர (உலகில்) தாங்கள் தங்கவில்லை (என்று அவர்கள் எண்ணுவர்), தங்களுக்குள் (ஒருவரையொருவர்) அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்பித்தவர்கள் திட்டமாக நஷ்டமடைந்தார்கள். அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை.
Yunus 10:46
(நபியே!) நாம் அவர்களுக்கு வாக்களிக்கும் (வேதனைகளில்) சிலவற்றை (உம் வாழ்விலேயே) உமக்கு காண்பிப்போம்; அல்லது (அதற்கு முன்) உம்மை கைப்பற்றிக் கொள்வோம். (எவ்வாறாயினும்) அவர்களுடைய மீளுமிடம் நம் பக்கமே. பிறகு, அல்லாஹ் அவர்கள் செய்தவற்றிற்கு சாட்சியாக இருப்பான்.
Yunus 10:47
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதர் (அனுப்பப்பட்டார்). அவர்களுடைய தூதர் (மறுமையில்) வரும்போது அவர்களுக்கிடையில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
Yunus 10:48
“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (வேதனையின்) இந்த வாக்கு எப்போது (வரும்)?” என்று அவர்கள் கேட்கின்றனர்.
Yunus 10:49
(அதற்கு நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் நாடியதைத் தவிர (எவ்வித) தீமைக்கோ நன்மைக்கோ நான் எனக்கு உரிமை பெறமாட்டேன். ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு (குறிப்பிட்ட) தவணையுண்டு. அவர்களுடைய தவணை வந்தால் ஒரு சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.”
Yunus 10:50
(மேலும்) கூறுவீராக: “அவனுடைய வேதனை இரவில் அல்லது பகலில் உங்களுக்கு வந்தால்... (அதை நீங்கள் தடுத்துவிட முடியுமா?) (நபியே!) எதை (இக்)குற்றவாளிகள் அவசரமாகத் தேடுகின்றனர்? என்று கூறுவீராக”
Yunus 10:51
“அங்கே (அந்த வேதனை) நிகழ்ந்தால் அதைக் கொண்டு நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களா? இப்போதுதானா (உங்களுக்கு நம்பிக்கை வருகிறது)? அதையோ நீங்கள் திட்டமாக அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்கள்!”
Yunus 10:52
அநியாயம் செய்தவர்களை நோக்கி “நிலையான வேதனையை சுவையுங்கள். நீங்கள் செய்துகொண்டிருந்ததற்கே தவிர நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்களா?” என்றும் கூறப்படும்.
Yunus 10:53
(நபியே!) “அது உண்மைதானா?” என்று அவர்கள் உம்மிடம் செய்தி கேட்கின்றனர். கூறுவீராக! “ஆம். என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக அது உண்மைதான்! நீங்கள் பலவீனப்படுத்துபவர்கள் அல்லர்”
Yunus 10:54
அநியாயம் செய்த ஒவ்வோர் ஆன்மாவிற்கும் பூமியில் உள்ளவை (அனைத்தும் சொந்தமாக) இருந்தால் அவற்றை அது பரிகாரமாகக் கொடுத்துவிடும்! அவர்கள் வேதனையைக் காணும்போது துக்கத்தை மறைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும்; அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
Yunus 10:55
வானங்கள் இன்னும் பூமியில் உள்ளவை நிச்சயமாக அல்லாஹ்விற்குரியன என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்பதை(யும்) அறிந்து கொள்ளுங்கள்! எனினும் அவர்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.
Yunus 10:56
அவன்தான் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்; அவனிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.
Yunus 10:57
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசமும், நெஞ்சங்களிலுள்ளவற்றிற்கு (குணப்படுத்தும்) மருந்தும் நேர்வழியும், நம்பிக்கையாளர்களுக்கு அருளும் வந்துவிட்டன.
Yunus 10:58
“(இந்த குர்ஆன்) அல்லாஹ்வின் அருளைக் கொண்டும் அவனுடைய கருணையைக் கொண்டும் (இறக்கப்பட்டது). ஆகவே, இதைக் கொண்டே அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். இது அவர்கள் சேகரிப்பவற்றை விட மிக மேலானது” என்று (நபியே) கூறுவீராக!
Yunus 10:59
(நபியே!) கூறுவீராக! (மக்களே) அறிவிப்பீர்களாக! “உங்களுக்காக அல்லாஹ் இறக்கிவைத்த உணவில், அதில் சிலவற்றை ஆகாதவை என்றும், சிலவற்றை ஆகுமானவை என்றும் நீங்கள் ஆக்கிக்கொள்கிறீர்களா? அல்லாஹ் (இதற்கு) உங்களுக்கு அனுமதி அளித்தானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் (இவ்வாறு) இட்டுக் கட்டுகிறீர்களா?”
Yunus 10:60
அல்லாஹ் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்களுடைய எண்ணம் மறுமை நாளில் என்ன? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருளுடையவன். எனினும் அவர்களில் அதிகமானவர்கள் நன்றி செலுத்தமாட்டார்கள்.
Yunus 10:61
(நபியே) நீர் எந்த செயலில் இருந்தாலும், (அல்லாஹ்வின் வேதமாகிய) குர்ஆனிலிருந்து நீர் எதை ஓதினாலும், (மக்களே) நீங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் நீங்கள் அவற்றில் ஈடுபடும் போது உங்கள் மீது சாட்சிகளாக நாம் இருந்தே தவிர அவற்றை (நீங்கள் செய்யமாட்டீர்கள்). பூமியிலோ வானத்திலோ ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனை விட்டு மறையாது. இதைவிட சிறிதும் இல்லை பெரிதும் இல்லை (அவனுடைய) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர.
Yunus 10:62
அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் நண்பர்கள், அவர்கள் மீது ஒரு பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
Yunus 10:63
அவர்கள் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, (அவனை) அஞ்சுபவர்களாக இருந்தார்கள்.
Yunus 10:64
உலக வாழ்விலும், மறுமையிலும் அவர்களுக்கே நற்செய்தி உண்டு. அல்லாஹ்வுடைய வாக்குகளில் மாற்றம் அறவே இல்லை. இதுதான் மகத்தான வெற்றியாகும்.
Yunus 10:65
(நபியே!) அவர்களுடைய சொல் உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே! அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
Yunus 10:66
அறிந்து கொள்ளுங்கள்! வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியவர்களே. அல்லாஹ்வை அன்றி இணை (தெய்வங்)களை அழைப்பவர்கள் எதைப் பின்பற்றுகின்றனர்? சந்தேகத்தைத் தவிர அவர்கள் (வேறு எதையும்) பின்பற்றுவதில்லை; அவர்கள் கற்பனை செய்பவர்களாகவே தவிர (ஆதாரங்களை ஏற்பவர்களாக) இல்லை!
Yunus 10:67
அவன் உங்களுக்கு இரவை நீங்கள் அதில் சுகம் பெறுவதற்காகவும், பகலை (நீங்கள்) பார்க்கக்கூடியதாகவும் ஆக்கியவன். (அவனுடைய வசனங்களுக்கு) செவிசாய்க்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் உள்ளன.
Yunus 10:68
அல்லாஹ் சந்ததியை ஆக்கிக்கொண்டான் என்று (சிலர்) கூறுகின்றனர். அவனோ மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததியை விட்டு) தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. இ(வ்வாறு கூறுவ)தற்கு உங்களிடம் எந்த ஓர் ஆதாரமும் இல்லை. நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுகிறீர்களா?
Yunus 10:69
“அல்லாஹ் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றிபெற மாட்டார்கள்” என்று கூறுவீராக!
Yunus 10:70
இவ்வுலகில் (அவர்களுக்கு அற்ப) சுகம் (உண்டு). பிறகு, நம்மிடமே அவர்களுடைய மீளுமிடம் இருக்கிறது. பிறகு, அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக கடினமான வேதனையை அவர்களுக்கு சுவைக்க வைப்போம்.
Yunus 10:71
நூஹ் உடைய சரித்திரத்தை அவர்களுக்கு ஓதுவீராக! அவர் தன் சமுதாயத்தை நோக்கி, “என் சமுதாயமே! (உங்களுடன்) நான் தங்குவதும், அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு (உங்களுக்கு) நான் உபதேசிப்பதும் உங்கள் மீது பாரமாக இருந்தால், நான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். ஆகவே, உங்கள் காரியத்தை முடிவுசெய்யுங்கள்; உங்கள் இணைதெய்வங்களையும் (அழைத்துக் கொள்ளுங்கள்); பிறகு, உங்கள் காரியம் உங்கள் மீது குழப்பமானதாக ஆகிவிடவேண்டாம். பிறகு, என் பக்கம் (அம்முடிவை) நிறைவேற்றுங்கள். (இதில்) நீங்கள் எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்.
Yunus 10:72
நீங்கள் (புறக்கணித்து) திரும்பினால், (எனக்கு கவலையில்லை. ஏனெனில்,) நான் உங்களிடம் எந்த கூலியையும் கேட்கவில்லை; என் கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (மற்றவர் மீது) இல்லை. முஸ்லிம்களில் நான் ஆகவேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளேன் (என்று கூறினார்).
Yunus 10:73
(அம்மக்கள்) அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் பாதுகாத்தோம். அவர்களை பிரதிநிதிகளாக ஆக்கினோம். நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை மூழ்கடித்தோம். ஆகவே, எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு எவ்வாறு ஆகிவிட்டது என்று கவனிப்பீராக!
Yunus 10:74
அவருக்குப் பின்னர் (பல) தூதர்களை அவர்களுடைய சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்கள் அவர்களிடம் (பல) அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். முன்னர் அவர்கள் பொய்ப்பித்தவற்றை நம்பிக்கை கொள்பவர்களாக அவர்கள் இருக்கவில்லை. வரம்பு மீறிகளின் உள்ளங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிடுகிறோம்.
Yunus 10:75
பிறகு, இவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்ன் இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்களிடம் அனுப்பினோம். (எனினும்,) அவர்கள் கர்வம் கொண்டனர்; குற்றம் புரிகின்ற சமுதாயமாக இருந்தனர்.
Yunus 10:76
அவர்களுக்கு நம்மிடமிருந்து உண்மை வந்தபோது “நிச்சயமாக இது தெளிவான சூனியம்தான்” என்று கூறினார்கள்.
Yunus 10:77
“உண்மையை -அது உங்களிடம் வந்த போது. (-சூனியம் என்று அதை) கூறுகிறீர்களா? சூனியமா இது? சூனியக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.
Yunus 10:78
அதற்கவர்கள் “எங்கள் மூதாதையர்களை எதில் நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களை நீர் திருப்பி விடுவதற்கும், பூமியில் உங்கள் இருவருக்கும் மகத்துவ(மு)ம் (பெருமையும் ஆதிக்கமும்) ஆகிவிடுவதற்கு நீர் எங்களிடம் வந்தீரா? உங்கள் இருவரையும் நம்பிக்கை கொள்பவர்களாக நாங்கள் இல்லை.” என்று கூறினார்கள்.
Yunus 10:79
இன்னும் “(சூனியத்தை) நன்கறிந்த சூனியக்காரர் எல்லோரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று ஃபிர்அவ்ன் கூறினான்.
Yunus 10:80
சூனியக்காரர்கள் வந்தபோது, மூஸா அவர்களுக்கு “நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறியுங்கள்” என்று கூறினார்.
Yunus 10:81
ஆகவே, அவர்கள் எறிந்தபோது, (அவர்களை நோக்கி) “நீங்கள் செய்தவை (அனைத்தும் வெறும்) சூனியம்தான். நிச்சயமாக அல்லாஹ் அவற்றை அழிப்பான். நிச்சயமாக அல்லாஹ் விஷமிகளின் செயலை சீர்படுத்தமாட்டான்” என்று மூஸா கூறினார்.
Yunus 10:82
இன்னும் “அல்லாஹ் தன் கட்டளைகளைக் கொண்டு உண்மையை நிரூபிப்பான், குற்றவாளிகள் வெறுத்தாலும் சரியே.”
Yunus 10:83
தங்களை ஃபிர்அவ்னும், அவனுடைய முக்கிய பிரமுகர்களும் துன்புறுத்துவதை பயந்து மூஸாவை அவரின் சமுதாயத்தில் ஒரு (சில) சந்ததியினரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ளவில்லை. நிச்சயமாக ஃபிர்அவ்ன் பூமியில் ஒரு சர்வாதிகாரி (அடக்கி ஆளும் வம்பன்) ஆவான். இன்னும் நிச்சயமாக அவன் வரம்பு மீறக்கூடியவர்களில் இருந்தான்.
Yunus 10:84
“என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் முஸ்லிம்களாக இருந்தால், அவன் மீதே நம்பிக்கை வையுங்கள்” என்று மூஸா கூறினார்.
Yunus 10:85
“அல்லாஹ்வின் மீதே நாங்கள் நம்பிக்கை வைத்தோம். எங்கள் இறைவா! அநியாயம்புரிகின்ற சமுதாயத்திற்கு ஒரு சோதனையாக எங்களை ஆக்கி விடாதே!” என்று கூறினார்கள்.
Yunus 10:86
“நிராகரிக்கின்ற சமுதாயத்திடமிருந்து உன் அருளால் எங்களை பாதுகாத்துக்கொள்!” (என்று பிரார்த்தித்துக் கூறினார்கள்.)
Yunus 10:87
மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நாம் வஹ்யி அறிவித்தோம். “நீங்கள் இருவரும் உங்கள் சமுதாயத்திற்காக ‘மிஸ்ரில்’ (பல) வீடுகளை அமையுங்கள்; (அந்த) உங்கள் வீடுகளை தொழுமிடங்களாக ஆக்குங்கள்; தொழுகையை நிலை நிறுத்துங்கள். (மூஸாவே) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.”
Yunus 10:88
“எங்கள் இறைவா! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய முக்கிய பிரமுகர்களுக்கும் (ஆடம்பர) அலங்காரத்தையும் இவ்வுலக வாழ்க்கையில் செல்வங்களையும் கொடுத்தாய். எங்கள் இறைவா! அவர்கள் உன் பாதையில் இருந்து (மக்களை) வழிகெடுப்பதற்கு (அவற்றை பயன்படுத்துகின்றனர்). எங்கள் இறைவா! அவர்களின் பொருள்களை நாசமாக்கு! அவர்களுடைய உள்ளங்களை இறுக்கிவிடு! துன்புறுத்தக்கூடிய வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரை, நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.
Yunus 10:89
“(மூஸாவே! ஹாரூனே!) உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டு விட்டது. நீங்கள் இருவரும் உறுதியாக இருங்கள்; அறியாதவர்களின் பாதையை நீங்கள் இருவரும் பின்பற்றாதீர்கள்” என்று (அல்லாஹ்) கூறினான்.
Yunus 10:90
இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடக்க வைத்தோம். ஃபிர்அவ்னும் அவனுடைய ராணுவங்களும் அழிச்சாட்டியமாகவும் வரம்பு மீறியும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். இறுதியாக, மூழ்குதல் அவனை பிடித்தபோது, அவன் “நிச்சயமாக இஸ்ராயீலின் சந்ததிகள் நம்பிக்கை கொண்டவனைத் தவிர வேறு இறைவன் அறவே இல்லை என்று நம்பிக்கை கொண்டேன்; நான் முஸ்லிம்களில் உள்ளவன்” என்று கூறினான்.
Yunus 10:91
இப்போது தானா (நம்பிக்கை கொள்கிறாய்? இதற்கு) முன்னரோ மாறு செய்துவிட்டாய்; இன்னும் நீ விஷமிகளில் (ஒருவனாக) இருந்தாய்.
Yunus 10:92
உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு நீ ஓர் அத்தாட்சியாக ஆகுவதற்காக உன் உடலை நாம் உயர(மான இட)த்தில் வைப்போம். நிச்சயமாக மக்களில் அதிகமானவர் நம் அத்தாட்சிகளை அலட்சியம் செய்பவர்கள்தான்.
Yunus 10:93
திட்டவட்டமாக, இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு மிக நல்ல இடத்தை அமைத்தோம்; நல்லவற்றிலிருந்து அவர்களுக்கு வழங்கினோம். (வேதத்தின்) ஞானம் அவர்களிடம் வரும் வரை அவர்கள் மாறுபடவில்லை. எதில் அவர்கள் மாறுபடுகின்றனரோ அதில் அவர்களுக்கு மத்தியில் மறுமை நாளில் நிச்சயமாக உம் இறைவன் தீர்ப்பளிப்பான்.
Yunus 10:94
(நபியே!) நாம் உமக்கு இறக்கியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முன்னர் (கொடுக்கப்பட்ட) வேதத்தை படிக்கின்றவர்களிடம் கேட்பீராக! உம் இறைவனிடமிருந்து உண்மை உமக்கு வந்துவிட்டது. ஆகவே, சந்தேகப்படுபவர்களில் நீர் அறவே ஆகிவிடாதீர்!
Yunus 10:95
அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களில் அறவே நீர் ஆகிவிடாதீர்! நஷ்டவாளிகளில் ஆகிவிடுவீர்.
Yunus 10:96
நிச்சயமாக எவர்கள் மீது உம் இறைவனின் வாக்கு உறுதியாகிவிட்டதோ அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Yunus 10:97
துன்புறுத்தக்கூடிய வேதனையை அவர்கள் காணும் வரை, அத்தாட்சிகள் எல்லாம் அவர்களிடம் வந்தாலும் (நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்).
Yunus 10:98
நம்பிக்கை கொண்டு தங்கள் நம்பிக்கை தங்களுக்கு பலனளித்ததாக ஓர் ஊர் இருக்கக்கூடாதா! எனினும் ‘யூனுஸ்’ உடைய சமுதாயம், நம்பிக்கைகொண்ட போது உலக வாழ்வில் இழி(வான) வேதனையை அவர்களை விட்டு நீக்கினோம். இன்னும் ஒரு காலம் வரை அவர்களுக்கு சுகமான வாழ்வளித்தோம்.
Yunus 10:99
உம் இறைவன் நாடினால், பூமியிலுள்ளவர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நீர் மக்களை அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகிவிடுவதற்கு நிர்ப்பந்திப்பீரா?
Yunus 10:100
ஓர் ஆன்மாவிற்கு அது நம்பிக்கைகொள்வது அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர சாத்தியமாகாது. சிந்தித்து புரியாதவர்கள் மீது தண்டனையை (அல்லாஹ்) ஆக்குகிறான்.
Yunus 10:101
(நபியே!) கூறுவீராக! “வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை கவனியுங்கள். நம்பிக்கை கொள்ளாத சமுதாயத்திற்கு வசனங்களும், எச்சரிப்பவர்களும் பலனளிக்க மாட்டார்கள்.”
Yunus 10:102
தங்களுக்கு முன் சென்றவர்களின் நாள்களைப் போன்றதைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? நீங்கள் எதிர்பாருங்கள்; நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் உள்ளவன் என்று (நபியே) கூறுவீராக.
Yunus 10:103
பிறகு, நம் தூதர்களையும் நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாப்போம். இவ்வாறே, (உங்களையும்) நம்பிக்கை கொண்டவர்களை(யும்) நாம் பாதுகாப்பது நம்மீது கடமையாக உள்ளது.
Yunus 10:104
(நபியே!) கூறுவீராக! மக்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகத்தில் இருந்தால், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குபவர்களை நான் வணங்க மாட்டேன். எனினும், உங்கள் உயிரைக் கைப்பற்றுகிற அல்லாஹ்வைத்தான் வணங்குவேன். நம்பிக்கையாளர்களில் நான் ஆகவேண்டுமென்று கட்டளையிடப்பட்டேன்.
Yunus 10:105
இன்னும் (நபியே!) உறுதியானவராக மார்க்கத்தின் மீது உம் முகத்தை நிலை நிறுத்துவீராக! இணைவைப்பவர்களில் நிச்சயம் ஆகிவிடாதீர்!
Yunus 10:106
அல்லாஹ்வை அன்றி உமக்கு பலனளிக்காதவற்றையும் உமக்குத் தீங்களிக்காதவற்றையும் அழைக்காதீர்! நீ (அவ்வாறு) செய்தால் அப்போது நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்.
Yunus 10:107
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கைக் கொடுத்தால் அதை நீக்குபவர் அவனைத் தவிர அறவே (வேறுயாரும்) இல்லை. அவன் உமக்கு ஒரு நன்மையை நாடினால் அவனுடைய அருளைத் தடுப்பவர் அறவே (வேறுயாரும்) இல்லை. அவன் தன் அடியார்களில் தான் நாடுகின்றவர்களுக்கு அதை அடையச் செய்கிறான். அவன்தான் மகா மன்னிப்பாளன்; பெரும் கருணையாளன்.
Yunus 10:108
(நபியே!) கூறுவீராக! மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து உண்மை (வேதம்) உங்களுக்கு வந்துவிட்டது. எவர் (அதன் படி) நேர்வழி சென்றாரோ அவர் நேர்வழி செல்வதெல்லாம் தன் நன்மைக்காகவே. எவர் வழிகெட்டாரோ அவர் வழிகெடுவதெல்லாம் தனக்குக் கேடாகத்தான். நான் உங்கள் மீது பொறுப்பாளனாக இல்லை.
Yunus 10:109
உமக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதையே பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பளிக்கும்வரை பொறுப்பீராக! அவன் தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலானவன்.