Tamilce Meal — Şeyh Ömer Şerif b. Abdüsselâm (kısaltılmış sürüm) — Nur 24:1 – Ankebut 29:69
Contents
- Nur 24:1
- Nur 24:2
- Nur 24:3
- Nur 24:4
- Nur 24:5
- Nur 24:6
- Nur 24:7
- Nur 24:8
- Nur 24:9
- Nur 24:10
- Nur 24:11
- Nur 24:12
- Nur 24:13
- Nur 24:14
- Nur 24:15
- Nur 24:16
- Nur 24:17
- Nur 24:18
- Nur 24:19
- Nur 24:20
- Nur 24:21
- Nur 24:22
- Nur 24:23
- Nur 24:24
- Nur 24:25
- Nur 24:26
- Nur 24:27
- Nur 24:28
- Nur 24:29
- Nur 24:30
- Nur 24:31
- Nur 24:32
- Nur 24:33
- Nur 24:34
- Nur 24:35
- Nur 24:36
- Nur 24:37
- Nur 24:38
- Nur 24:39
- Nur 24:40
- Nur 24:41
- Nur 24:42
- Nur 24:43
- Nur 24:44
- Nur 24:45
- Nur 24:46
- Nur 24:47
- Nur 24:48
- Nur 24:49
- Nur 24:50
- Nur 24:51
- Nur 24:52
- Nur 24:53
- Nur 24:54
- Nur 24:55
- Nur 24:56
- Nur 24:57
- Nur 24:58
- Nur 24:59
- Nur 24:60
- Nur 24:61
- Nur 24:62
- Nur 24:63
- Nur 24:64
- Furkan 25:1
- Furkan 25:2
- Furkan 25:3
- Furkan 25:4
- Furkan 25:5
- Furkan 25:6
- Furkan 25:7
- Furkan 25:8
- Furkan 25:9
- Furkan 25:10
- Furkan 25:11
- Furkan 25:12
- Furkan 25:13
- Furkan 25:14
- Furkan 25:15
- Furkan 25:16
- Furkan 25:17
- Furkan 25:18
- Furkan 25:19
- Furkan 25:20
- Furkan 25:21
- Furkan 25:22
- Furkan 25:23
- Furkan 25:24
- Furkan 25:25
- Furkan 25:26
- Furkan 25:27
- Furkan 25:28
- Furkan 25:29
- Furkan 25:30
- Furkan 25:31
- Furkan 25:32
- Furkan 25:33
- Furkan 25:34
- Furkan 25:35
- Furkan 25:36
- Furkan 25:37
- Furkan 25:38
- Furkan 25:39
- Furkan 25:40
- Furkan 25:41
- Furkan 25:42
- Furkan 25:43
- Furkan 25:44
- Furkan 25:45
- Furkan 25:46
- Furkan 25:47
- Furkan 25:48
- Furkan 25:49
- Furkan 25:50
- Furkan 25:51
- Furkan 25:52
- Furkan 25:53
- Furkan 25:54
- Furkan 25:55
- Furkan 25:56
- Furkan 25:57
- Furkan 25:58
- Furkan 25:59
- Furkan 25:60
- Furkan 25:61
- Furkan 25:62
- Furkan 25:63
- Furkan 25:64
- Furkan 25:65
- Furkan 25:66
- Furkan 25:67
- Furkan 25:68
- Furkan 25:69
- Furkan 25:70
- Furkan 25:71
- Furkan 25:72
- Furkan 25:73
- Furkan 25:74
- Furkan 25:75
- Furkan 25:76
- Furkan 25:77
- Şuara 26:1
- Şuara 26:2
- Şuara 26:3
- Şuara 26:4
- Şuara 26:5
- Şuara 26:6
- Şuara 26:7
- Şuara 26:8
- Şuara 26:9
- Şuara 26:10
- Şuara 26:11
- Şuara 26:12
- Şuara 26:13
- Şuara 26:14
- Şuara 26:15
- Şuara 26:16
- Şuara 26:17
- Şuara 26:18
- Şuara 26:19
- Şuara 26:20
- Şuara 26:21
- Şuara 26:22
- Şuara 26:23
- Şuara 26:24
- Şuara 26:25
- Şuara 26:26
- Şuara 26:27
- Şuara 26:28
- Şuara 26:29
- Şuara 26:30
- Şuara 26:31
- Şuara 26:32
- Şuara 26:33
- Şuara 26:34
- Şuara 26:35
- Şuara 26:36
- Şuara 26:37
- Şuara 26:38
- Şuara 26:39
- Şuara 26:40
- Şuara 26:41
- Şuara 26:42
- Şuara 26:43
- Şuara 26:44
- Şuara 26:45
- Şuara 26:46
- Şuara 26:47
- Şuara 26:48
- Şuara 26:49
- Şuara 26:50
- Şuara 26:51
- Şuara 26:52
- Şuara 26:53
- Şuara 26:54
- Şuara 26:55
- Şuara 26:56
- Şuara 26:57
- Şuara 26:58
- Şuara 26:59
- Şuara 26:60
- Şuara 26:61
- Şuara 26:62
- Şuara 26:63
- Şuara 26:64
- Şuara 26:65
- Şuara 26:66
- Şuara 26:67
- Şuara 26:68
- Şuara 26:69
- Şuara 26:70
- Şuara 26:71
- Şuara 26:72
- Şuara 26:73
- Şuara 26:74
- Şuara 26:75
- Şuara 26:76
- Şuara 26:77
- Şuara 26:78
- Şuara 26:79
- Şuara 26:80
- Şuara 26:81
- Şuara 26:82
- Şuara 26:83
- Şuara 26:84
- Şuara 26:85
- Şuara 26:86
- Şuara 26:87
- Şuara 26:88
- Şuara 26:89
- Şuara 26:90
- Şuara 26:91
- Şuara 26:92
- Şuara 26:93
- Şuara 26:94
- Şuara 26:95
- Şuara 26:96
- Şuara 26:97
- Şuara 26:98
- Şuara 26:99
- Şuara 26:100
- Şuara 26:101
- Şuara 26:102
- Şuara 26:103
- Şuara 26:104
- Şuara 26:105
- Şuara 26:106
- Şuara 26:107
- Şuara 26:108
- Şuara 26:109
- Şuara 26:110
- Şuara 26:111
- Şuara 26:112
- Şuara 26:113
- Şuara 26:114
- Şuara 26:115
- Şuara 26:116
- Şuara 26:117
- Şuara 26:118
- Şuara 26:119
- Şuara 26:120
- Şuara 26:121
- Şuara 26:122
- Şuara 26:123
- Şuara 26:124
- Şuara 26:125
- Şuara 26:126
- Şuara 26:127
- Şuara 26:128
- Şuara 26:129
- Şuara 26:130
- Şuara 26:131
- Şuara 26:132
- Şuara 26:133
- Şuara 26:134
- Şuara 26:135
- Şuara 26:136
- Şuara 26:137
- Şuara 26:138
- Şuara 26:139
- Şuara 26:140
- Şuara 26:141
- Şuara 26:142
- Şuara 26:143
- Şuara 26:144
- Şuara 26:145
- Şuara 26:146
- Şuara 26:147
- Şuara 26:148
- Şuara 26:149
- Şuara 26:150
- Şuara 26:151
- Şuara 26:152
- Şuara 26:153
- Şuara 26:154
- Şuara 26:155
- Şuara 26:156
- Şuara 26:157
- Şuara 26:158
- Şuara 26:159
- Şuara 26:160
- Şuara 26:161
- Şuara 26:162
- Şuara 26:163
- Şuara 26:164
- Şuara 26:165
- Şuara 26:166
- Şuara 26:167
- Şuara 26:168
- Şuara 26:169
- Şuara 26:170
- Şuara 26:171
- Şuara 26:172
- Şuara 26:173
- Şuara 26:174
- Şuara 26:175
- Şuara 26:176
- Şuara 26:177
- Şuara 26:178
- Şuara 26:179
- Şuara 26:180
- Şuara 26:181
- Şuara 26:182
- Şuara 26:183
- Şuara 26:184
- Şuara 26:185
- Şuara 26:186
- Şuara 26:187
- Şuara 26:188
- Şuara 26:189
- Şuara 26:190
- Şuara 26:191
- Şuara 26:192
- Şuara 26:193
- Şuara 26:194
- Şuara 26:195
- Şuara 26:196
- Şuara 26:197
- Şuara 26:198
- Şuara 26:199
- Şuara 26:200
- Şuara 26:201
- Şuara 26:202
- Şuara 26:203
- Şuara 26:204
- Şuara 26:205
- Şuara 26:206
- Şuara 26:207
- Şuara 26:208
- Şuara 26:209
- Şuara 26:210
- Şuara 26:211
- Şuara 26:212
- Şuara 26:213
- Şuara 26:214
- Şuara 26:215
- Şuara 26:216
- Şuara 26:217
- Şuara 26:218
- Şuara 26:219
- Şuara 26:220
- Şuara 26:221
- Şuara 26:222
- Şuara 26:223
- Şuara 26:224
- Şuara 26:225
- Şuara 26:226
- Şuara 26:227
- Neml 27:1
- Neml 27:2
- Neml 27:3
- Neml 27:4
- Neml 27:5
- Neml 27:6
- Neml 27:7
- Neml 27:8
- Neml 27:9
- Neml 27:10
- Neml 27:11
- Neml 27:12
- Neml 27:13
- Neml 27:14
- Neml 27:15
- Neml 27:16
- Neml 27:17
- Neml 27:18
- Neml 27:19
- Neml 27:20
- Neml 27:21
- Neml 27:22
- Neml 27:23
- Neml 27:24
- Neml 27:25
- Neml 27:26
- Neml 27:27
- Neml 27:28
- Neml 27:29
- Neml 27:30
- Neml 27:31
- Neml 27:32
- Neml 27:33
- Neml 27:34
- Neml 27:35
- Neml 27:36
- Neml 27:37
- Neml 27:38
- Neml 27:39
- Neml 27:40
- Neml 27:41
- Neml 27:42
- Neml 27:43
- Neml 27:44
- Neml 27:45
- Neml 27:46
- Neml 27:47
- Neml 27:48
- Neml 27:49
- Neml 27:50
- Neml 27:51
- Neml 27:52
- Neml 27:53
- Neml 27:54
- Neml 27:55
- Neml 27:56
- Neml 27:57
- Neml 27:58
- Neml 27:59
- Neml 27:60
- Neml 27:61
- Neml 27:62
- Neml 27:63
- Neml 27:64
- Neml 27:65
- Neml 27:66
- Neml 27:67
- Neml 27:68
- Neml 27:69
- Neml 27:70
- Neml 27:71
- Neml 27:72
- Neml 27:73
- Neml 27:74
- Neml 27:75
- Neml 27:76
- Neml 27:77
- Neml 27:78
- Neml 27:79
- Neml 27:80
- Neml 27:81
- Neml 27:82
- Neml 27:83
- Neml 27:84
- Neml 27:85
- Neml 27:86
- Neml 27:87
- Neml 27:88
- Neml 27:89
- Neml 27:90
- Neml 27:91
- Neml 27:92
- Neml 27:93
- Kasas 28:1
- Kasas 28:2
- Kasas 28:3
- Kasas 28:4
- Kasas 28:5
- Kasas 28:6
- Kasas 28:7
- Kasas 28:8
- Kasas 28:9
- Kasas 28:10
- Kasas 28:11
- Kasas 28:12
- Kasas 28:13
- Kasas 28:14
- Kasas 28:15
- Kasas 28:16
- Kasas 28:17
- Kasas 28:18
- Kasas 28:19
- Kasas 28:20
- Kasas 28:21
- Kasas 28:22
- Kasas 28:23
- Kasas 28:24
- Kasas 28:25
- Kasas 28:26
- Kasas 28:27
- Kasas 28:28
- Kasas 28:29
- Kasas 28:30
- Kasas 28:31
- Kasas 28:32
- Kasas 28:33
- Kasas 28:34
- Kasas 28:35
- Kasas 28:36
- Kasas 28:37
- Kasas 28:38
- Kasas 28:39
- Kasas 28:40
- Kasas 28:41
- Kasas 28:42
- Kasas 28:43
- Kasas 28:44
- Kasas 28:45
- Kasas 28:46
- Kasas 28:47
- Kasas 28:48
- Kasas 28:49
- Kasas 28:50
- Kasas 28:51
- Kasas 28:52
- Kasas 28:53
- Kasas 28:54
- Kasas 28:55
- Kasas 28:56
- Kasas 28:57
- Kasas 28:58
- Kasas 28:59
- Kasas 28:60
- Kasas 28:61
- Kasas 28:62
- Kasas 28:63
- Kasas 28:64
- Kasas 28:65
- Kasas 28:66
- Kasas 28:67
- Kasas 28:68
- Kasas 28:69
- Kasas 28:70
- Kasas 28:71
- Kasas 28:72
- Kasas 28:73
- Kasas 28:74
- Kasas 28:75
- Kasas 28:76
- Kasas 28:77
- Kasas 28:78
- Kasas 28:79
- Kasas 28:80
- Kasas 28:81
- Kasas 28:82
- Kasas 28:83
- Kasas 28:84
- Kasas 28:85
- Kasas 28:86
- Kasas 28:87
- Kasas 28:88
- Ankebut 29:1
- Ankebut 29:2
- Ankebut 29:3
- Ankebut 29:4
- Ankebut 29:5
- Ankebut 29:6
- Ankebut 29:7
- Ankebut 29:8
- Ankebut 29:9
- Ankebut 29:10
- Ankebut 29:11
- Ankebut 29:12
- Ankebut 29:13
- Ankebut 29:14
- Ankebut 29:15
- Ankebut 29:16
- Ankebut 29:17
- Ankebut 29:18
- Ankebut 29:19
- Ankebut 29:20
- Ankebut 29:21
- Ankebut 29:22
- Ankebut 29:23
- Ankebut 29:24
- Ankebut 29:25
- Ankebut 29:26
- Ankebut 29:27
- Ankebut 29:28
- Ankebut 29:29
- Ankebut 29:30
- Ankebut 29:31
- Ankebut 29:32
- Ankebut 29:33
- Ankebut 29:34
- Ankebut 29:35
- Ankebut 29:36
- Ankebut 29:37
- Ankebut 29:38
- Ankebut 29:39
- Ankebut 29:40
- Ankebut 29:41
- Ankebut 29:42
- Ankebut 29:43
- Ankebut 29:44
- Ankebut 29:45
- Ankebut 29:46
- Ankebut 29:47
- Ankebut 29:48
- Ankebut 29:49
- Ankebut 29:50
- Ankebut 29:51
- Ankebut 29:52
- Ankebut 29:53
- Ankebut 29:54
- Ankebut 29:55
- Ankebut 29:56
- Ankebut 29:57
- Ankebut 29:58
- Ankebut 29:59
- Ankebut 29:60
- Ankebut 29:61
- Ankebut 29:62
- Ankebut 29:63
- Ankebut 29:64
- Ankebut 29:65
- Ankebut 29:66
- Ankebut 29:67
- Ankebut 29:68
- Ankebut 29:69
Nur 24:1
இது ஒரு அத்தியாயமாகும். இதை நாம் இறக்கினோம். இதை (-இதில் உள்ள சட்டங்களை) நாம் கடமையாக்கினோம் (வகுத்தோம்). நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக இதில் தெளிவான அத்தாட்சிகளை நாம் இறக்கினோம்.
Nur 24:2
விபசாரி இன்னும் விபசாரன் அவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு அடி அடியுங்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தில் அந்த இருவர் மீது உங்களை இரக்கம் பிடித்துவிட வேண்டாம் நீங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால். நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டம் அவ்விருவரின் தண்டனைக்கு ஆஜராகட்டும்.
Nur 24:3
ஒரு விபசாரன் ஒரு விபசாரியுடன் அல்லது இணைவைப்பவள் ஒருத்தியுடன் தவிர (மற்றவளுடன்) உ(டலு)றவு வைக்க மாட்டான். விபசாரி - அவளுடன் ஒரு விபசாரன் அல்லது இணைவைப்பவன் ஒருவனைத் தவிர (மற்றவர்) உ(டலு)றவு வைக்கமாட்டான். இது (-விபசாரம் செய்வது) நம்பிக்கையாளர்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது.
Nur 24:4
எவர்கள் பத்தினிகளை (விபசாரிகள் என்று) ஏசுவார்களோ, பிறகு அவர்கள் (தாங்கள் கூறியதற்கு) நான்கு சாட்சிகளை கொண்டுவரவில்லை என்றால் அவர்களை எண்பது அடி அடியுங்கள். அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்காதீர்கள். அவர்கள்தான் பாவிகள் (பொய்யர்கள்).
Nur 24:5
அதற்குப் பின்னர் திருந்தி, (தங்களை) சீர்படுத்திக் கொண்டவர்களைத் தவிர. (அவர்கள் பாவிகள் அல்லர்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
Nur 24:6
எவர்கள் தங்களது மனைவிகளை (விபசாரிகள் என்று) ஏசுகிறார்களோ அவர்களிடம் அவர்களைத் தவிர சாட்சிகள் (வேறு) இல்லையோ, அவர்களில் ஒருவர், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக தான் உண்மை கூறுபவர்களில் (ஒருவன்)தான்” என்று நான்கு முறை சாட்சிகள் சொல்ல வேண்டும்.
Nur 24:7
ஐந்தாவது முறை, “நிச்சயமாக அல்லாஹ்வின் சாபம் தன் மீது உண்டாகட்டும், தான் பொய் கூறுபவர்களில் ஒருவனாக இருந்தால்” என்று கூறவேண்டும்.
Nur 24:8
அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர் (-கணவர்) பொய் கூறுபவர்களில் உள்ளவர் என்று நான்கு முறை அவள் சாட்சி சொல்வது அவளை விட்டும் தண்டனையை தடுக்கும்.
Nur 24:9
ஐந்தாவது முறை, “அவர் உண்மை கூறுபவர்களில் இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும்” (என்று அவள் சொல்லவேண்டும்).
Nur 24:10
அல்லாஹ்வின் அருளும் அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால், நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும் ஞானவானாகவும் இல்லாதிருந்தால்... (அவன் உங்களை உடனே தண்டித்திருப்பான்.)
Nur 24:11
நிச்சயமாக இட்டுக்கட்டியவர்கள் உங்களில் உள்ள ஒரு குழுவினர்தான். அதை (இட்டுக்கட்டிய செய்தியை) உங்களுக்கு தீமையாக கருதாதீர்கள். மாறாக, அது உங்களுக்கு நன்மைதான். அவர்களில் ஒவ்வொருவருக்கும் பாவத்தில் அவர் செய்தது (-அதன் தண்டனை) உண்டு. அவர்களில் அதில் பெரியதை செய்தவர் (-இட்டுக் கட்டுவதில் பெரும் பங்களிப்பு வகித்தவர்) அவருக்கு பெரும் தண்டனை உண்டு.
Nur 24:12
நீங்கள் அதைக் கேட்டபோது நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி (தங்களில் இட்டுக்கட்டப்பட்டவரைப் பற்றி) நல்லதை எண்ணியிருக்க வேண்டாமா! இன்னும் இது தெளிவான இட்டுக்கட்டாகும் (பொய்யாகும்) என்று சொல்லியிருக்க வேண்டாமா!
Nur 24:13
அவர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா! ஆகவே, அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வராததால் அவர்கள்தான் அல்லாஹ்விடம் பொய்யர்கள்.
Nur 24:14
உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் கருணையும் இம்மையிலும் மறுமையிலும் இல்லாதிருந்தால் நீங்கள் ஈடுபட்ட விஷயத்தில் உங்களுக்கு பெரிய தண்டனை கிடைத்திருக்கும்.
Nur 24:15
ஏனெனில், நீங்கள் உங்கள் நாவுகளால் அதை உங்களுக்குள் அறிவித்துக் கொண்டீர்கள். இன்னும் உங்கள் வாய்களால் உங்களுக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதை கூறுகிறீர்கள், அதை மிக இலகுவாக கருதுகிறீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் மிகப்பெரியதாக இருக்கிறது.
Nur 24:16
அதை நீங்கள் கேட்டபோது “இதை நாங்கள் பேசுவது எங்களுக்குத் தகாது, அல்லாஹ்வே! நீ மிகப் பரிசுத்தமானவன், இது பெரிய அபாண்டமான பேச்சு” என்று நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா!
Nur 24:17
இது போன்றதற்கு ஒரு போதும் நீங்கள் மீண்டும் வரக்கூடாது (இன்னொரு முறை இப்படிப்பட்ட காரியத்தை செய்யக்கூடாது). என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான் நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால்.
Nur 24:18
இன்னும் அல்லாஹ் உங்களுக்கு (தனது) வசனங்களை விவரிக்கிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகாஞானவான் ஆவான்.
Nur 24:19
நிச்சயமாக அசிங்கமான செயல் நம்பிக்கையாளர்களுக்கிடையில் பரவுவதை விரும்பக்கூடியவர்கள் -அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வலி தரக்கூடிய தண்டனை உண்டு. அல்லாஹ்தான் அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
Nur 24:20
அல்லாஹ் உடைய அருளும் அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக்க இரக்கமுள்ளவனாகவும் மகா கருணையுள்ளவனாகவும் இல்லாதிருந்தால் (நீங்கள் அழிந்து போயிருப்பீர்கள்.)
Nur 24:21
நம்பிக்கையாளர்களே ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள். யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறானோ நிச்சயமாக அவன் (-அந்த ஷைத்தான்) அசிங்கத்தையும் கெட்டதையும் (அவருக்கு) ஏவுகிறான். அல்லாஹ்வுடைய அருளும் அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால் உங்களில் எவரும் ஒரு போதும் தூய்மை அடைந்திருக்கமாட்டார் (-நேர்வழி பெற்றிருக்க மாட்டார்). எனினும், அல்லாஹ் தான் நாடியவரை பரிசுத்தப்படுத்துகிறான். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
Nur 24:22
உங்களில் செல்வமும் வசதியும் உடையவர்கள் தங்கள் உறவினர்களுக்கும் வறியவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரா சென்றவர்களுக்கும் தர்மம் கொடுக்க மாட்டோம் என சத்தியம் செய்ய வேண்டாம். அவர்கள் மன்னிக்கட்டும், பெருந்தன்மையுடன் விட்டு விடட்டும். அல்லாஹ் உங்களை மன்னிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையுடையவன்.
Nur 24:23
நிச்சயமாக (அசிங்கமான செயலை) அறியாதவர்களான நம்பிக்கை கொண்ட பத்தினி பெண்கள் மீது யார் குற்றம் சுமத்துகிறார்களோ அவர்கள் உலகத்திலும் மறுமையிலும் சபிக்கப்பட்டார்கள். இன்னும் அவர்களுக்கு பெரிய தண்டனை உண்டு.
Nur 24:24
அவர்களுக்கு எதிராக அவர்களது நாவுகளும் அவர்களது கரங்களும் அவர்களது கால்களும் அவர்கள் செய்து கொண்டு இருந்ததை சாட்சி பகரும் நாளில் (அந்த தண்டனை அவர்களுக்கு உண்டு).
Nur 24:25
அந்நாளில் அல்லாஹ் அவர்களுக்கு அவர்களுடைய உண்மையான கூலியை முழுமையாக தருவான். நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன், தெளிவானவன் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
Nur 24:26
கெட்ட சொற்கள் கெட்டவர்களுக்கு உரியன. கெட்டவர்கள் கெட்ட சொற்களுக்கு உரியவர்கள். நல்ல சொற்கள் நல்லவர்களுக்கு உரியன. நல்லவர்கள் நல்ல சொற்களுக்கு உரியவர்கள். அவர்கள் (-நல்லவர்கள்) இவர்கள் (-பாவிகள்) சொல்வதிலிருந்து நீக்கப்பட்டவர்கள். (பாவிகள் சுமத்தும் பழியிலிருந்து நல்லவர்கள் நீங்கியவர்கள் ஆவர்.) அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான அருட்கொடையும் (-சொர்க்கமும்) உண்டு.
Nur 24:27
நம்பிக்கையாளர்களே! உங்கள் வீடுகள் அல்லாத வீடுகளில் நீங்கள் நுழையாதீர்கள், நீங்கள் அவ்வீட்டார்களுக்கு ஸலாம் கூறி, பேசி அனுமதி பெறுகின்ற வரை. (இதன்மூலம்) நீங்கள் நல்லறிவு பெறவேண்டுமே! அதுதான் உங்களுக்கு சிறந்தது.
Nur 24:28
அவற்றில் நீங்கள் ஒருவரையும் காணவில்லையெனில், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகின்ற வரை அவற்றில் நீங்கள் நுழையாதீர்கள். “திரும்பி விடுங்கள்” என்று உங்களுக்கு சொல்லப்பட்டால் (வீட்டுக்குள் நுழையாமல்) திரும்பி விடுங்கள். அது உங்க(ள் ஆன்மாக்க)ளுக்கு மிக சுத்தமானது. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.
Nur 24:29
வசிக்கப்படாத வீடுகளில் -அவற்றில் உங்களுக்கு பொருள் இருந்து -நீங்கள் நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைப்பதையும் நன்கறிவான்.
Nur 24:30
(நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளை (அல்லாஹ் வெறுப்பதை பார்ப்பதிலிருந்து) தடுத்துக் கொள்ளட்டும், தங்கள் மறைவிடங்களை (பிறர் பார்வைகளிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளட்டும். அது அவர்களுக்கு மிக சுத்தமானது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை ஆழ்ந்தறிந்தவன் ஆவான்.
Nur 24:31
நபியே! நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளை தடுத்துக் கொள்ளட்டும், தங்கள் மறைவிடங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும். தங்கள் அலங்காரங்களை - அதிலிருந்து வெளியில் தெரிபவற்றைத் தவிர (மற்றதை) - வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் அவர்கள் தங்கள் முந்தானைகளை தங்கள் (சட்டைகளின்) நெஞ்சுப் பகுதிகள் மீது போர்த்திக் கொள்ளட்டும். தங்கள் அலங்காரங்களை வெளிப்படுத்த வேண்டாம், தங்கள் கணவர்களுக்கு அல்லது தங்கள் தந்தைகளுக்கு அல்லது தங்கள் கணவர்களின் தந்தைகளுக்கு அல்லது தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு அல்லது தங்கள் கணவர்களின் ஆண் பிள்ளைகளுக்கு அல்லது தங்கள் சகோதரர்களுக்கு அல்லது தங்கள் சகோதரர்களின் ஆண் பிள்ளைகளுக்கு அல்லது தங்கள் சகோதரிகளின் ஆண் பிள்ளைகளுக்கு அல்லது தங்கள் (இன முஸ்லிமான) பெண்களுக்கு அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களுக்கு அல்லது ஆண்களில் ஆசையில்லாத பணியாளர்களுக்கு அல்லது பெண்களின் மறைவிடங்களை அறியாத சிறுவர்களுக்கு (ஆகிய இவர்களுக்கே)த் தவிர. (கணவனுக்கு மனைவியிடம் எந்த மறைவும் இல்லை. மற்ற மேல் கூறப்பட்டவர்களுக்கு முன் ஒரு பெண் தனது முகம், குடங்கை, கழுத்துப் பகுதி, பாதம், காதுகள் தெரியும்படி இருந்தால் அவள் மீது குற்றமில்லை) தங்கள் அலங்காரங்களிலிருந்து அவர்கள் மறைக்கின்றவற்றை (மற்றவர்கள்) அறியப்படுவதற்காக அவர்கள் தங்கள் கால்களை பூமியில் தட்டி நடக்கவேண்டாம். இன்னும் நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள் அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்.
Nur 24:32
உங்களில் ஜோடி இல்லாதவர்களுக்கும் (-மனைவி இல்லாத ஆண்களுக்கும், கணவன் இல்லாத பெண்களுக்கும்) உங்கள் ஆண் அடிமைகளிலும் உங்கள் பெண் அடிமைகளிலும் உள்ள நல்லவர்களுக்கும் நீங்கள் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் அவர்களை தனது அருளால் நிறைவுறச் செய்வான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன்.
Nur 24:33
திருமணத்திற்கு வசதி பெறாதவர்கள் அல்லாஹ் அவர்களை தன் அருளால் நிறைவு செய்கிற வரை ஒழுக்கமாக இருக்கட்டும். உங்கள் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (உரிமைப்) பத்திரம் எழுதிட விரும்புபவர்கள் - அவர்களில் நீங்கள் நன்மையை (-நம்பிக்கையையும் நல்ல தன்மையையும்) அறிந்தால் அவர்களுக்கு (உரிமைப் பத்திரம்) எழுதிக் கொடுங்கள். உங்களுக்கு கொடுத்த அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து அவர்களுக்கு கொடுங்கள். நீங்கள் உலக வாழ்க்கையின் பொருளை விரும்பியதற்காக உங்கள் பெண் அடிமைகளை விபசாரத்தில் நிர்ப்பந்திக்காதீர்கள் -அவர்கள் பத்தினித்தனத்தை விரும்பினால். யார் அவர்களை நிர்ப்பந்திப்பாரோ நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர் (அவர்களை) மன்னிப்பவன், (அவர்கள் மீது) கருணை காட்டுபவன் ஆவான்.
Nur 24:34
திட்டவட்டமாக உங்களுக்கு தெளிவான வசனங்களையும் உங்களுக்கு முன்னர் சென்றவர்களின் உதாரணத்தையும் இறையச்சமுள்ளவர்களுக்கு உபதேசத்தையும் இறக்கியுள்ளோம்.
Nur 24:35
அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியி(ல் உள்ளவர்களி)ன் ஒளி (-நேர்வழி காட்டி) ஆவான். (முஃமினுடைய உள்ளத்தில் உள்ள அவனது நேர்வழி மற்றும் குர்ஆனுடைய) ஒளியின் தன்மையாவது ஒரு மாடத்தைப் போன்றாகும். அதில் ஒரு விளக்கு உள்ளது. அந்த விளக்கு கண்ணாடியில் உள்ளது. அந்தக் கண்ணாடி மின்னக்கூடிய ஒரு நட்சத்திரத்தைப் போல் உள்ளது. (அந்த விளக்கு,) கிழக்கிலும் அல்லாத மேற்கிலும் அல்லாத (-சூரியன் உதிக்கும் போதும் அது மறையும் போதும் அதன் வெயில் படாத அளவிற்கு இலைகள் அடர்த்தியான) ஆலிவ் என்னும் அருள் நிறைந்த மரத்தில் இருந்து (எடுக்கப்பட்ட எண்ணெயிலிருந்து) எரிக்கப்படுகிறது. அதன் எண்ணெய் ஒளிர ஆரம்பித்து விடுகிறது. அதன் மீது தீ படவில்லை (என்றாலும் சரியே). (தீ பட்டால் அது) ஒளிக்கு மேல் ஒளி ஆகும். அல்லாஹ் தன் ஒளிக்கு (இஸ்லாம் என்னும் நேர்வழிக்கு) தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான். மக்களுக்கு அல்லாஹ் உதாரணங்களை விவரிக்கிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.
Nur 24:36
(அந்த விளக்கு) இறை இல்லங்களில் (-மஸ்ஜிதுகளில் எரிக்கப்படுகிறது). அவை உயர்த்திக் கட்டப்படுவதற்கும் அவற்றில் அவனது திருப்பெயர் நினைவு கூரப்படுவதற்கும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (பல ஆண்கள்) அவனை துதிக்கின்றனர் (-தொழுகின்றனர்)
Nur 24:37
பல ஆண்கள் (அங்கு தொழுகின்றனர்.) வர்த்தகமோ விற்பனையோ அல்லாஹ்வின் நினைவை விட்டும் தொழுகையை நிலை நிறுத்துவதை விட்டும் (வழிபாட்டை) அல்லாஹ்விற்கு தூய்மையாக செய்வதை விட்டும் அவர்களை திசை திருப்பி விடாது. அவர்கள் ஒரு நாளை பயப்படுவார்கள். அதில் (-அந்நாளில்) உள்ளங்களும் பார்வைகளும் தடுமாறும்.
Nur 24:38
(அவர்கள் அதை செய்தது ஏனெனில்,) அவர்கள் செய்ததில் மிக அழகியவற்றுக்கு அல்லாஹ் கூலி வழங்குவதற்காகவும் தனது அருளிலிருந்து அவர்களுக்கு மேலும் அதிகப்படுத்துவதற்காகவும் ஆகும். அல்லாஹ் தான் நாடியவருக்கு கணக்கின்றி வழங்குகிறான்.
Nur 24:39
நிராகரிப்பாளர்கள் அவர்களுடைய செயல்கள் வெட்டவெளியில் இருக்கும் கானல் நீரைப் போலாகும். அதை தாகித்தவர் தண்ணீராக எண்ணுகிறார். இறுதியாக, அதனிடம் அவர் வந்தால் அதை ஏதும் காணமாட்டார். அல்லாஹ்வைத்தான் அதனிடம் காண்பார். அவன் அவருடைய கணக்கை அவருக்கு (முழுமையாக) நிறைவேற்றுவான். கேள்வி கணக்கு கேட்பதில் அல்லாஹ் மிகத் தீவிரமானவன்.
Nur 24:40
அல்லது ஆழமான கடலில் உள்ள இருள்களைப் போலாகும் (அவர்களது செயல்கள்). அதை (-அந்த கடலை) அலைக்கு மேல் அலை சூழ்ந்திருக்க, அதற்கு மேல் மேகம் சூழ்ந்திருக்கிறது. (இப்படி) இருள்கள் -அவற்றில் சில, சிலவற்றுக்கு- மேலாக (-கடுமையாக) இருக்கிறது. அவன் தனது கையை வெளியே நீட்டினால் அதை அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை (நேர்வழியை) ஏற்படுத்தவில்லையோ அவருக்கு எவ்வித ஒளியும் (-நேர்வழியும்) இல்லை.
Nur 24:41
(நபியே!) நீர் பார்க்கவில்லையா! நிச்சயமாக அல்லாஹ்வை வானத்தில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் வரிசையாக பறக்கின்ற பறவைகளும் அவனை துதிக்கின்றனர். ஒவ்வொருவரும் அவனைத் தொழுவதையும் அவனைத் துதிப்பதையும் திட்டமாக அறிந்துள்ளனர். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன்.
Nur 24:42
அல்லாஹ்விற்கே வானங்களின் பூமியின் ஆட்சி உரியது. அல்லாஹ்வின் பக்கமே மீளுமிடம் இருக்கிறது.
Nur 24:43
(நபியே!) நீர் பார்க்கவில்லையா!? நிச்சயமாக அல்லாஹ் மேகங்களை ஓட்டிவருகிறான். பிறகு அவற்றுக்கு இடையில் இணைக்கிறான், பிறகு அவற்றை ஒன்றிணைக்கப்பட்டதாக ஆக்குகிறான். ஆகவே, அவற்றுக்கு இடையில் இருந்து மழை வெளிவருவதை நீர் பார்க்கிறீர். வானத்திலிருந்து, அதில் உள்ள பனி மலைகளில் இருந்து அவன் (நீரை, ஆலங்கட்டிகளை) இறக்குகிறான். அதன் மூலம் தான் நாடியவரை அவன் தண்டிக்கிறான். தான் நாடியவரை விட்டும் அவன் அதை திருப்பிவிடுகிறான். அதன் மின்னலின் கடுமையான வெளிச்சம் பார்வைகளை பறித்துவிட ஆரம்பித்து விடுகிறது.
Nur 24:44
அல்லாஹ் இரவு பகலை மாற்றுகிறான். நிச்சயமாக இவற்றில் அறிவுடையவர்களுக்கு படிப்பினை இருக்கிறது.
Nur 24:45
அல்லாஹ் (இப்பூமியில் உள்ள) எல்லா உயிரினங்களையும் தண்ணீரிலிருந்து படைத்தான். அவர்களில் தனது வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு. அவர்களில் இரண்டு கால்கள் மீது நடப்பவையும் உண்டு. அவர்களில் நான்கு கால்கள் மீது நடப்பவையும் உண்டு. அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.
Nur 24:46
தெளிவான வசனங்களை திட்டவட்டமாக நாம் இறக்கியுள்ளோம். அல்லாஹ் தான் நாடியவருக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டுகிறான்.
Nur 24:47
அவர்கள் நாங்கள் அல்லாஹ்வையும் தூதரையும் நம்பிக்கை கொண்டோம், (அவர்களுக்கு) கீழ்ப்படிந்தோம் என்று கூறுகின்றனர். பிறகு, அவர்களில் ஒரு பிரிவினர் அதற்குப் பின்னர் திரும்பி விடுகின்றனர். அவர்கள் நம்பிக்கையாளர்கள் இல்லை.
Nur 24:48
அவர்கள் அல்லாஹ் இன்னும் அவனது தூதரின் பக்கம் அழைக்கப்பட்டால் -அவர்களுக்கிடையில் (அவனது தூதர்) தீர்ப்பளிப்பதற்காக - அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கின்றனர்.
Nur 24:49
அவர்களுக்கு சாதகமாக சத்தியம் இருந்தால் அவர் பக்கம் (-தூதரின் பக்கம்) கட்டுப்பட்டவர்களாக வருகின்றனர்.
Nur 24:50
அவர்களது உள்ளங்களில் நோய் இருக்கிறதா? அல்லது அவர்கள் சந்தேகிக்கின்றனரா? அல்லது அல்லாஹ்வும் அவனது தூதரும் அவர்கள் மீது அநீதியிழைத்து விடுவார்கள் என்று பயப்படுகின்றனரா? மாறாக, அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.
Nur 24:51
நம்பிக்கையாளர்களுடைய கூற்றாக இருப்பதெல்லாம், அவர்கள் அல்லாஹ் இன்னும் அவனது தூதர் பக்கம் அழைக்கப்பட்டால் - அவர் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பதற்காக - நாங்கள் செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம் என்று அவர்கள் கூறுவதுதான். அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவர்.
Nur 24:52
யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து, அல்லாஹ்வை பயந்து, அவனை அஞ்சிக் கொள்வார்களோ அவர்கள்தான் (சொர்க்கத்தின்) நற்பாக்கியம் பெற்றவர்கள்.
Nur 24:53
அல்லாஹ்வின் மீது கடுமையாக சத்தியம் செய்தனர்: “நீர் அவர்களுக்கு கட்டளையிட்டால் நிச்சயமாக அவர்கள் வெளியேறுவார்கள்” என்று. (நபியே) கூறுவீராக: “நீங்கள் சத்தியமிடாதீர்கள். (உங்கள் கீழ்ப்படிதல் பொய் என்று) அறியப்பட்ட கீழ்ப்படிதலே.” நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Nur 24:54
நபியே கூறுவீராக! அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள், தூதருக்கு கீழ்ப்படியுங்கள். நீங்கள் விலகிச் சென்றால் அவர் மீது கடமையெல்லாம் அவர் மீது சுமத்தப்பட்டதுதான் (-எடுத்துச் சொல்வதுதான்). உங்கள் மீது கடமையெல்லாம் உங்கள் மீது சுமத்தப்பட்டதுதான் (கீழ்ப்படிவதும் கட்டுப்படுவதும்தான்). நீங்கள் அவருக்கு கீழ்ப்படிந்தால் நீங்கள்தான் நேரான வழியைப் பெறுவீர்கள். தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர தூதர் மீது (வேறு எந்தக்) கடமையும் இல்லை.
Nur 24:55
உங்களில் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான்: இவர்களுக்கு முன்னுள்ளவர்களை (பூமியின்) பிரதிநிதிகளாக ஆக்கியது போன்று இப்பூமியில் இவர்களை பிரதிநிதிகளாக ஆக்குவான். இன்னும் இவர்களுக்காக அவன் திருப்தி கொண்ட இவர்களுடைய மார்க்கத்தை இவர்களுக்கு பலப்படுத்தித் தருவான். இவர்களது பயத்திற்கு பின்னர் நிம்மதியை இவர்களுக்கு மாற்றித்தருவான். இவர்கள் என்னை வணங்குவார்கள், எனக்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள். இதற்குப் பின்னர் யார் நிராகரிப்பார்களோ அவர்கள்தான் பாவிகள்.
Nur 24:56
இன்னும் தொழுகையை நிலை நிறுத்துங்கள். இன்னும் ஸகாத்தை கொடுங்கள். இன்னும் தூதருக்கு கீழ்ப்படியுங்கள் நீங்கள் வெற்றி பெறுவதற்காக.
Nur 24:57
(நபியே!) நிராகரிப்பாளர்களை இப்பூமியில் (அல்லாஹ்வை -அவன் அவர்களை அழிக்க நாடினால்-) பலவீனப்படுத்தி விடுபவர்களாக எண்ணி விடாதீர்கள். அவர்கள் தங்குமிடம் நரகம்தான். அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது.
Nur 24:58
உங்கள் வலக்கரங்கள் சொந்தமாகியவர்களும் உங்களில் பருவத்தை அடையாதவர்களும் காலை தொழுகைக்கு முன், மதியத்தில் (நீங்கள் ஓய்வு எடுப்பதற்காக) உங்கள் ஆடைகளை நீங்கள் களைந்துவிடும் நேரத்தில், இஷா தொழுகைக்கு பின் ஆகிய மூன்று நேரங்களில் (உங்கள் இல்லங்களுக்குள் நுழைய) உங்களிடம் அனுமதி கோரட்டும். இவை மூன்றும் உங்களுக்கு மறைவான நேரங்கள். இவற்றுக்குப் பின்னர் (மற்ற நேரங்களில் அனுமதியின்றி அவர்கள் நுழைவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை. அவர்கள் உங்களிடம் அதிகம் வந்துபோகக் கூடியவர்கள். உங்களில் சிலர் சிலரிடம் (வந்துபோகக் கூடியவர்கள்). இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு வசனங்களை தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான்.
Nur 24:59
உங்களின் குழந்தைகள் பருவத்தை அடைந்துவிட்டால் அவர்கள் (உங்கள் இல்லங்களில் நுழையும் போது அவர்கள்) அனுமதி கோரட்டும் அவர்களுக்கு முன்னுள்ள (வயது வந்த)வர்கள் அனுமதி கோரியது போன்று. இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு தனது வசனங்களை தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான்.
Nur 24:60
பெண்களில் திருமணத்தை ஆசைப்படாத வயது முதிர்ந்தவர்கள் அவர்கள் அலங்காரங்களுடன் வெளியே வராமல் (தங்களது பர்தாவின் மேல் உள்ள) அவர்களின் துப்பட்டாக்களை (அணியாமல்) கழட்டுவதில் அவர்கள் மீது குற்றமில்லை. அவர்கள் பேணுதலாக இருப்பது (-மேல் துப்பட்டாக்களை எல்லோர் முன்பும் அணிந்து இருப்பது) அவர்களுக்கு சிறந்தது. அல்லாஹ் நன்கு செவியேற்பவன், நன்கறிந்தவன்.
Nur 24:61
குருடர் மீது குற்றம் இல்லை, ஊனமுற்றவர் மீது குற்றம் இல்லை, நோயாளி மீது குற்றம் இல்லை, உங்கள் மீது குற்றம் இல்லை - நீங்கள் உங்கள் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் தந்தைகளின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் தாய்மார்களின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் சகோதரர்களின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் சகோதரிகளின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் தந்தையின் சகோதரர்களின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் மாமிகளின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் தாய்மாமன்களின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் தாயின் சகோதரிகளின் இல்லங்களிலிருந்து அல்லது எந்த இல்லத்தின் சாவிகளை நீங்கள் உங்கள் உரிமையில் வைத்திருக்கிறீர்களோ அதிலிருந்து அல்லது உங்கள் நண்பனின் இல்லங்களிலிருந்து நீங்கள் உண்பது (உங்கள் மீது குற்றமில்லை). நீங்கள் ஒன்றிணைந்தவர்களாக அல்லது பிரிந்தவர்களாக (தனித்தனியாக) உண்பது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் (உங்கள் அல்லது பிறருடைய) இல்லங்களில் நுழைந்தால் உங்களுக்கு (அங்குள்ள உங்கள் சகோதரர்களுக்கு) -அல்லாஹ்விடமிருந்து (கற்ப்பிக்கப்பட்ட) அருள்நிறைந்த நல்ல முகமனாகிய- ஸலாமை சொல்லுங்கள். நீங்கள் சிந்தித்து விளங்குவதற்காக அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு வசனங்களை தெளிவுபடுத்துகிறான்.
Nur 24:62
நம்பிக்கையாளர்கள் (முஃமின்கள்) எல்லாம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (அவர்கள் கூறிய எல்லா விஷயங்களிலும்) உண்மைப்படுத்தியவர்கள் தான். அவர்கள் அவருடன் (தூதருடன் போர், தொழுகை, ஆலோசனை போன்ற) ஒரு பொது காரியத்தில் இருந்தால் அவரிடம் அனுமதி கேட்காமல் (அங்கிருந்து) அவர்கள் செல்லமாட்டார்கள். நிச்சயமாக உங்களிடம் அனுமதி கேட்பவர்கள், அவர்கள்தான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் உண்மைப்படுத்தியவர்கள். ஆகவே, அவர்கள் உம்மிடம் தங்களின் சில காரியத்திற்கு அனுமதி கேட்டால் அவர்களில் நீர் நாடியவருக்கு அனுமதி அளிப்பீராக. அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
Nur 24:63
(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு மத்தியில் தூதரின் சாபத்தை உங்களில் சிலர் சிலரை சபிப்பது போன்று ஆக்கிவிடாதீர்கள். (அவருடைய சாபம் கண்டிப்பாக பலித்துவிடும்) உங்களில் மறைவாக நழுவிச் செல்பவர்களை அல்லாஹ் நன்கறிவான். அவருடைய கட்டளைக்கு மாறுசெய்பவர்கள் (-உள்ளங்கள் இறுகி நிராகரிப்பு என்னும்) குழப்பம் தங்களை அடைவதை அல்லது வலிதரும் (கடுமையான) தண்டனை தங்களை அடைவதைப் பற்றி உஷாராக (பயந்தவர்களாக) இருக்கட்டும்.
Nur 24:64
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்விற்கே சொந்தமானவை வானங்களிலும் பூமியிலும் உள்ளவை. திட்டமாக நீங்கள் இருக்கும் நிலையை அவன் நன்கறிந்தவன். (நபியின் கட்டளைக்கு மாறுசெய்பவர்கள்) அந்நாளில் அவனிடம் (அல்லாஹ்விடம்) அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படும்போது அவர்கள் செய்ததை அவன் அவர்களுக்கு அறிவிப்பான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.
Furkan 25:1
தனது அடியார் மீது -அவர் அகிலத்தார்களை எச்சரிப்பவராக இருப்பதற்காக - பகுத்தறிவிக்கும் வேதத்தை இறக்கியவன் மிக்க அருள் நிறைந்தவன்,
Furkan 25:2
அவனுக்கே வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி உரியது. அவன் (தனக்கு) குழந்தையை எடுத்துக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுக்கு இணை ஒருவரும் இல்லை. எல்லாவற்றையும் அவன் படைத்தான். அவற்றை சீராக நிர்ணயித்தான். (ஒவ்வொன்றுக்கும் தகுதியானதை ஏற்படுத்தினான்.)
Furkan 25:3
அவர்கள் அவனை அன்றி (பல) கடவுள்களை எடுத்துக் கொண்டனர். அவர்கள் (-அந்த கடவுள்கள்) எதையும் படைக்க மாட்டார்கள். அவர்கள் படைக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களுக்குத் தாமே தீமை செய்வதற்கும் நன்மை செய்வதற்கும் உரிமைபெற மாட்டார்கள். இன்னும் (பிறரின்) இறப்பிற்கும் வாழ்விற்கும் (அவரை) மீண்டும் உயிர்த்தெழச் செய்வதற்கும் அவர்கள் உரிமை பெற மாட்டார்கள்.
Furkan 25:4
நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர்: “இது (-இந்த குர்ஆன்) இட்டுக்கட்டப்பட்டதே தவிர வேறு இல்லை. இவர் (-இந்த தூதர்) இதை இட்டுக்கட்டினார். இவருக்கு மற்ற மக்கள் இதற்கு உதவினர்.” ஆகவே, திட்டமாக இவர்கள் பெரும் அநியாயத்திற்கும் பொய்யுக்கும் வந்தனர்.
Furkan 25:5
இன்னும் கூறினர்: (இந்த குர்ஆன்) முன்னோரின் கட்டுக் கதைகள். அவர் இவற்றை எழுதிக்கொண்டார். இவை அவர் மீது காலையிலும் மாலையிலும் எடுத்தியம்பப்படுகிறது.
Furkan 25:6
(நபியே!) கூறுவீராக! வானங்களிலும் பூமியிலும் ரகசியத்தை அறிபவன்தான் இதை இறக்கினான். நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
Furkan 25:7
அவர்கள் கூறுகின்றனர்: இந்த தூதருக்கு என்ன! இவர் உணவு சாப்பிடுகிறார், கடைத் தெருக்களில் நடக்கிறார். இவர் மீது ஒரு வானவர் இறக்கப்பட்டு அவர் இவருடன் (மக்களை) எச்சரிப்பவராக இருக்க வேண்டாமா?
Furkan 25:8
அல்லது இவருக்கு ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா! அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருக்க வேண்டாமா! இவர் அதிலிருந்து புசிப்பாரே! அநியாயக்காரர்கள் கூறுகின்றனர்: “நீங்கள் (உணவு சாப்பிடும்) குடல் உள்ள ஒரு (சாதாரண) மனிதரைத் தவிர (புனிதமான வானவர்களை) நீங்கள் பின்பற்றவில்லை.”
Furkan 25:9
(நபியே!) பார்ப்பீராக! அவர்கள் எப்படி உமக்கு தன்மைகளை விவரிக்கின்றனர். ஆகவே, அவர்கள் வழிகெட்டனர். (சத்தியத்தின் பக்கம் வர) ஒரு பாதைக்கும் அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்.
Furkan 25:10
அவன் (-அல்லாஹ்) அருள் நிறைந்தவன். அவன் நாடினால் உமக்கு இவற்றைவிட சிறந்ததை - அவற்றை சுற்றி நதிகள் ஓடும் சொர்க்கங்களை- ஏற்படுத்துவான். இன்னும் உமக்கு (அங்கு) மாளிகைகளை ஏற்படுத்துவான்.
Furkan 25:11
மாறாக, அவர்கள் உலக முடிவை பொய்ப்பித்தனர். உலக முடிவை பொய்ப்பிப்பவருக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார்படுத்தியுள்ளோம்.
Furkan 25:12
(அது) அவர்களை தூரமான இடத்திலிருந்து பார்த்தால் அதனுடைய (-நெருப்பு பற்றி எரியும் போது வெளிப்படும்) சப்தத்தையும் இரைச்சலையும் அவர்கள் செவிமடுப்பார்கள்.
Furkan 25:13
அவர்கள் அதில் நெருக்கமான இடத்தில் (சங்கிலிகளால் கைகள் கழுத்துகளுடன்) கட்டப்பட்டவர்களாக போடப்பட்டால் அங்கு (எங்கள்) கைசேதமே என்று (தங்களின் அழிவையும் நாசத்தையும்) அழைப்பார்கள். (உலகிற்கு திரும்ப செல்ல வேண்டுமே என்று கதறுவார்கள். தாங்கள் அழிந்து விடவேண்டுமே என்று சப்தமிடுவார்கள்.)
Furkan 25:14
இன்று கைசேதமே என ஒரு முறை அழைக்காதீர்கள். பல முறை கைசேதமே என்று அழையுங்கள்.
Furkan 25:15
(நபியே!) நீர் கேட்பீராக! அது (-நரகம்) சிறந்ததா? அல்லது இறை அச்சமுள்ளவர்கள் வாக்களிக்கப்பட்ட ஜன்னதுல் குல்து (நிரந்தர சொர்க்கம்) சிறந்ததா? அது அவர்களுக்கு கூலியாகவும் மீளுமிடமாகவும் இருக்கும்.
Furkan 25:16
அவர்களுக்கு அதில் அவர்கள் நாடுவதெல்லாம் உண்டு. நிரந்தரமாக இருப்பார்கள். இது உமது இறைவன் மீது (அவர்களால்) வேண்டப்பட்ட வாக்காக இருக்கிறது.
Furkan 25:17
அவன் அவர்களையும் அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கியவர்களையும் (வானவர்களையும் ஈஸாவையும் உஸைரையும்) எழுப்பும் நாளின் போது, நீங்கள்தான் எனது இந்த அடியார்களை வழிகெடுத்தீர்களா? அல்லது அவர்கள் (நேரான) பாதையை தாமாக தவறவிட்டனரா? என்று (இறைவன்) கேட்பான்.
Furkan 25:18
அவர்கள் கூறுவர்: நீ மிகப் பரிசுத்தமானவன். உன்னை அன்றி பாதுகாவலர்களை (தெய்வங்களை) எடுத்துக் கொள்வது எங்களுக்கு தகுதியானதாக (சரியானதாக) இல்லை. எனினும், நீ அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் (வாழ்க்கையில்) சுகமளித்தாய். இறுதியாக, அவர்கள் (உனது) அறிவுரையை மறந்தனர். இன்னும் அழிந்து போகும் மக்களாக ஆகிவிட்டனர்.
Furkan 25:19
ஆக, திட்டமாக இவர்கள் (-வானவர்கள், நபிமார்கள் மற்றும் நல்லவர்கள்) நீங்கள் கூறியதில் உங்களை பொய்ப்பித்து விட்டனர். ஆகவே, நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையை தங்களை விட்டு) திருப்பி விடுவதற்கோ (தங்களுக்கு) உதவுவதற்கோ சக்தி பெறமாட்டீர்கள். உங்களில் யார் (இணைவைத்து தனக்குத்தானே) அநீதி இழைத்துக் கொண்டாரோ அவருக்கு பெரிய தண்டனையை சுவைக்க வைப்போம்.
Furkan 25:20
உமக்கு முன்னர் தூதர்களில் எவரையும் நாம் அனுப்பவில்லை. நிச்சயமாக அவர்கள் உணவு உண்பவர்களாக, கடை வீதிகளில் நடந்து செல்பவர்களாக இருந்தே தவிர. உங்களில் சிலரை சிலருக்கு சோதனையாக ஆக்கினோம். நீங்கள் பொறு(மையாக இரு)ப்பீர்களா? உமது இறைவன் உற்று நோக்குபவனாக (அனைத்தையும் பார்ப்பவனாக) இருக்கிறான்.
Furkan 25:21
நமது சந்திப்பை ஆதரவு (நம்பிக்கை) வைக்காதவர்கள் கூறினர்: எங்கள் மீது வானவர்கள் இறக்கப்பட வேண்டாமா? அல்லது நாங்கள் எங்கள் இறைவனை பார்க்க வேண்டாமா? திட்டவட்டமாக அவர்கள் தங்களுக்குள் பெருமை அடித்தனர். இன்னும் மிகப் பெரிய அளவில் கடுமையாக அழிச்சாட்டியம் (சண்டித்தனம், மூர்க்கத்தனம்) செய்தனர்.
Furkan 25:22
அவர்கள் வானவர்களை பார்க்கும் நாளில் (அந்த வானவர்கள் கூறுவார்கள்:) இந்நாளில் குற்றவாளிகளுக்கு நற்செய்தி அறவே இல்லை. இன்னும் (வானவர்கள்) கூறுவார்கள்: நற்செய்தி உங்களுக்கு முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டது.
Furkan 25:23
செயல்களில் அவர்கள் செய்ததை நாம் (அதற்கு கூலி கொடுப்பதற்காக) நாடுவோம். பிறகு, அதை பரத்தப்பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.
Furkan 25:24
சொர்க்கவாசிகள் அந்நாளில் தங்குமிடத்தால் சிறந்தவர்கள், ஓய்வெடுக்கும் இடத்தால் மிக சிறப்பானவர்கள். (அவர்களுக்கு சிறந்த தங்குமிடம் சிறப்பான ஓய்விடம் உண்டு.)
Furkan 25:25
வானம் வெள்ளை மேகத்தைக் கொண்டு பிளந்துவிடும் நாளில் இன்னும் வானவர்கள் இறக்கப்படும் நாளில்,
Furkan 25:26
உண்மையான ஆட்சி அந்நாளில் ரஹ்மானி (அல்லாஹ்வி)ற்கே உரியது. அந்நாள் நிராகரிப்பாளர்களுக்கு மிக சிரமமான நாளாக இருக்கும்.
Furkan 25:27
அந்நாளில், அநியாயக்காரன் (-இணைவைத்தவன்) தனது இரு கரங்களையும் கடிப்பான், “நான் தூதருடன் ஒரு வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவான். (தூதரை பின்பற்றி இருக்க வேண்டுமே!)
Furkan 25:28
என் நாசமே! இன்னவனை நண்பனாக நான் எடுத்திருக்கக் கூடாதே!
Furkan 25:29
திட்டவட்டமாக அவன் என்னை அறிவுரையிலிருந்து (-குர்ஆனிலிருந்து) வழிகெடுத்து விட்டான் - அது என்னிடம் வந்த பின்னர். (மறுமையில்) ஷைத்தான் மனிதனை கைவிடுபவனாக இருக்கிறான்.
Furkan 25:30
தூதர் கூறுவார்: என் இறைவா! நிச்சயமாக எனது மக்கள் இந்த குர்ஆனை புறக்கணிக்கப்பட்டதாக (கவனிக்கப்படாததாக) எடுத்துக் கொண்டனர்.
Furkan 25:31
இவ்வாறுதான் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளில் இருந்து எதிரிகளை நாம் ஆக்கினோம். உமது இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டுபவனாக இன்னும் உதவுபவனாக போதுமானவன்.
Furkan 25:32
நிராகரிப்பாளர்கள் கூறினர்: இந்த குர்ஆன் இவர் (-இந்த தூதர்) மீது ஒரே தடவையில் ஒட்டு மொத்தமாக இறக்கப்பட வேண்டாமா! இவ்வாறுதான் (நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம்) ஏனெனில், அதன் மூலம் உமது உள்ளத்தை உறுதிப்படுத்துவதற்காக. இன்னும் இதை சிறிது சிறிதாக (உமக்கு ஓதி)கற்பித்(து விவரித்)தோம்.
Furkan 25:33
(நபியே!) அவர்கள் உமக்கு எந்த ஒரு தன்மையையும் கூறமாட்டார்கள் (அதை முறிப்பதற்கு) சத்தியத்தையும் மிக அழகான விளக்கத்தையும் உமக்கு நாம் கூறியே தவிர.
Furkan 25:34
எவர்கள் தங்கள் முகங்களின் மீது நரகத்தின் பக்கம் எழுப்பப்படுகிறார்களோ அவர்கள்தான் தங்குமிடத்தால் மிக கெட்டவர்கள், பாதையால் மிக வழிதவறியவர்கள்.
Furkan 25:35
திட்டவட்டமாக மூஸாவுக்கு வேதத்தை கொடுத்தோம். அவருடன் அவரது சகோதரர் ஹாரூனை உதவியாளராக ஆக்கினோம்.
Furkan 25:36
நாம் கூறினோம்: “நீங்கள் இருவரும் நமது அத்தாட்சிகளை பொய்ப்பித்த மக்களிடம் செல்லுங்கள்” (அம்மக்கள் அவ்விருவரையும் நிராகரித்துவிட்டனர்) ஆகவே, நாம் அவர்களை முற்றிலும் தரை மட்டமாக அழித்து விட்டோம்.
Furkan 25:37
இன்னும் நூஹ் உடைய மக்களையும் அவர்கள் தூதர்களை பொய்ப்பித்த போது அவர்களை மூழ்கடித்தோம். அவர்களை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம். இன்னும் அநியாயக்காரர்களுக்கு வலி தரும் தண்டனையை நாம் தயார்படுத்தியுள்ளோம்.
Furkan 25:38
ஆது, ஸமூது, கிணறு (அல்லது குழி) வாசிகள், இன்னும் இவர்களுக்கிடையில் பல தலைமுறையினரை (நாம் தரைமட்டமாக அழித்துள்ளோம்).
Furkan 25:39
எல்லோருக்கும் நாம் பல உதாரணங்களை விவரித்தோம். (அவர்கள் மறுக்கவே, மறுத்த) எல்லோரையும் நாம் அடியோடு அழித்துவிட்டோம்.
Furkan 25:40
திட்டவட்டமாக மிக மோசமான மழை பொழியப்பட்ட ஊரின் அருகில் அவர்கள் வந்திருக்கின்றனர். அதை (அந்த ஊரை) அவர்கள் பார்த்திருக்கவில்லையா? மாறாக, அவர்கள் (மறுமையில்) எழுப்பப்படுவதை ஆதரவு வைக்காதவர்களாக (-நம்பாதவர்களாக) இருந்தனர்.
Furkan 25:41
அவர்கள் உம்மைப் பார்த்தால் “இவரையா அல்லாஹ் தூதராக அனுப்பினான்?” என்று உம்மை கேலியாகவே தவிர எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
Furkan 25:42
இவர் நமது தெய்வங்களை விட்டு நம்மை நிச்சயமாக வழி கெடுத்திருப்பார், நாம் அவற்றின் மீது உறுதியாக இருந்திருக்கவில்லையென்றால். அவர்கள் தண்டனையை பார்க்கும் போது “யார் பாதையால் மிக வழிகெட்டவர்” (வழிகெட்ட பாதையில் சென்றவர்) என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
Furkan 25:43
தனது கடவுளாக தனது மனஇச்சையை எடுத்துக் கொண்டவனை நீர் பார்த்தீரா? அவனுக்கு நீர் பொறுப்பாளராக ஆகுவீரா?
Furkan 25:44
அவர்களில் அதிகமானவர்கள் செவிமடுப்பார்கள் அல்லது சிந்தித்துப் புரிவார்கள் என்று நீர் எண்ணுகிறீரா? அவர்கள் இல்லை கால்நடைகளைப் போன்றே தவிர. மாறாக, அவர்கள் (அவற்றைவிட) பாதையால் வழி கெட்டவர்கள்.
Furkan 25:45
(நபியே) நீர் பார்க்கவில்லையா? உமது இறைவன் எப்படி நிழலை (அதிகாலையிலிருந்து சூரியன் உதிக்கும் வரை) நீட்டுகிறான். அவன் நாடியிருந்தால் அதை (நிழலை) நிரந்தரமாக ஆக்கியிருப்பான். பிறகு அதன் மீது சூரியனை நாம் ஆதாரமாக ஆக்கினோம். (சூரியன் உதிக்கும் போது இரவின் அந்த நிழல் மறைந்து விடுகிறது. இதன் மூலம் நிழலும் அல்லாஹ்வின் ஒரு படைப்புதான் என்று அறியமுடிகிறது.)
Furkan 25:46
பிறகு, அதை (-ஆதாரமான அந்த சூரியனை) நம் பக்கம் மறைவாக (துல்லியமாக, நுட்பமாக இன்னும் விரைவாக) கைப்பற்றி விடுகிறோம்.
Furkan 25:47
அவன்தான் இரவை உங்களுக்கு ஓர் ஆடையாகவும் தூக்கத்தை ஓய்வாகவும் ஆக்கினான். இன்னும் பகலை விழிப்பதற்கும் (உழைத்து வாழ்வதற்கும்) ஆக்கினான்.
Furkan 25:48
அவன்தான் (பல திசைகளிலிருந்து வீசும்) காற்றுகளை (மழை எனும்) தன் அருளுக்கு முன்பாக (அதைக் கொண்டு) நற்செய்தி கூறக்கூடியதாக அனுப்புகிறான். வானத்திலிருந்து பரிசுத்தமான மழை நீரை நாம் இறக்குகிறோம்.
Furkan 25:49
அதன்மூலம் இறந்த பூமியை நாம் உயிர்ப்பிப்பதற்காகவும் நாம் படைத்தவற்றில் பல கால்நடைகளுக்கும் அதிகமான மனிதர்களுக்கும் நாம் அதை புகட்டுவதற்காகவும் (அந்த மழையை பொழிய வைக்கிறோம்).
Furkan 25:50
அதை (-அந்த மழையை) அவர்களுக்கு மத்தியில் நாம் பிரித்துக் கொடுத்தோம் (பரவலாக பல இடங்களில் பொழிய வைத்தோம்.) அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக ஆனால், மனிதர்களில் மிக அதிகமானவர்கள் நிராகரிப்பதைத் தவிர (நம்பிக்கை கொள்ள) மறுத்து விட்டனர்.
Furkan 25:51
நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஊரிலும் ஓர் எச்சரிப்பாளரை அனுப்பியிருப்போம். (அதன் மூலம் உமது சுமையை குறைத்து இருப்போம். ஆனால், உம்மையே எல்லா ஊரார்களையும் எச்சரிப்பவராக ஆக்கியிருக்கிறோம்.)
Furkan 25:52
ஆகவே, நிராகரிப்பாளர்களுக்கு கீழ்ப்படியாதீர். இதன்மூலம் (-இந்த குர்ஆன் மூலம்) அவர்களிடம் பெரும் போர் செய்வீராக!
Furkan 25:53
அவன்தான் இரு கடல்களை இணைத்தான். இது மிக்க மதுரமான இனிப்பு நீராகும். இதுவோ மிக்க உவர்ப்பான உப்பு நீராகும். அவ்விரண்டுக்கும் இடையில் ஒரு திரையையும் முற்றிலும் தடுக்கக்கூடிய தடுப்பையும் அவன் ஆக்கினான்.
Furkan 25:54
அவன்தான் (இந்திரியம் எனும்) நீரிலிருந்து மனிதனைப் படைத்தான். இன்னும் அவனை இரத்த பந்தமுடையவனாகவும் திருமண பந்தமுடையவனாகவும் ஆக்கினான். உமது இறைவன் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
Furkan 25:55
அவர்கள் அல்லாஹ்வை அன்றி அவர்களுக்கு நற்பலனளிக்காத இன்னும் அவர்களுக்கு தீங்கிழைக்காதவற்றை வணங்குகின்றனர். நிராகரிப்பாளன் தன் இறைவனுக்கு எதிராக (ஷைத்தானை) ஆதரிக்கக்கூடியவனாக இருக்கிறான்.
Furkan 25:56
நற்செய்தி கூறுபவராக இன்னும் எச்சரிப்பவராகவே தவிர (உம்மை கண்காணிப்பாளராக) நாம் அனுப்பவில்லை.
Furkan 25:57
(நபியே!) கூறுவீராக! நான் இதற்காக உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. எனினும் யார் தன் இறைவனிடம் தனக்கு ஒரு பாதையை எடுத்துக்கொள்ள நாடினானோ அவன் தன் இறைவனுடைய வழியில் (தன் செல்வத்தை செலவு செய்து இறைவனின் அருளை அடைந்து கொள்ளட்டும்).
Furkan 25:58
(நபியே!) மரணிக்காத என்றும் உயிருள்ளவன் மீது நம்பிக்கை வைப்பீராக! அவனைப் புகழ்ந்து துதிப்பீராக! தன் அடியார்களின் பாவங்களை ஆழ்ந்தறிபவனாக அவனே போதுமானவன்!
Furkan 25:59
அவன்தான் வானங்களையும் பூமியையும் அவற்றுக்கு இடையில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு, அர்ஷின் மீது உயர்ந்து விட்டான். அவன் பேரருளாளன். அவனை (-ரஹ்மானை) அறிந்தவனிடம் கேட்பீராக! (நான்தான் அறிந்தவன். நான் அவனை (-ரஹ்மானை)ப் பற்றி அறிவித்தால் அது நான் அறிவித்தது போன்றே.)
Furkan 25:60
ரஹ்மானுக்கு (அந்த பேரருளாளனுக்கு) சிரம் பணியுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால் அவர்கள் கூறுகின்றனர்: “ரஹ்மான் யார்? நீர் ஏவக்கூடியவனுக்கு நாங்கள் சிரம் பணிய வேண்டுமா?” அது (-ரஹ்மானாகிய அந்த உண்மை இறைவனுக்கு மட்டும் சிரம் பணியுங்கள் என்று சொல்வது) அவர்களுக்கு வெறுப்பை அதிகப்படுத்தியது.
Furkan 25:61
வானங்களில் பெரும் கோட்டைகளை அமைத்தவன் மிக்க அருள் நிறைந்தவன். அவன்தான் அதில் சூரியனையும் ஒளிரும் சந்திரனையும் அமைத்தான்.
Furkan 25:62
அவன்தான் இரவையும் பகலையும் (ஒன்றுக்கு ஒன்று) பகரமாக அமைத்தான், நல்லறிவு பெற நாடுபவருக்கு அல்லது நன்றி செய்ய நாடுபவருக்கு.
Furkan 25:63
ரஹ்மானுடைய அடியார்கள் பூமியில் மென்மையாக (அடக்கமாக, பணிவாக, பெருமையின்றி, அக்கிரமம் செய்யாமல்) நடப்பார்கள். அவர்களிடம் அறிவீனர்கள் பேசினால் ஸலாம் கூறி(விலகி)விடுவார்கள்.
Furkan 25:64
தங்கள் இறைவனுக்கு சிரம் பணிந்தவர்களாகவும் நின்றவர்களாகவும் இரவு கழிப்பார்கள்.
Furkan 25:65
அவர்கள் கூறுவார்கள்: எங்கள் இறைவா! எங்களை விட்டு ஜஹன்னமுடைய தண்டனையை திருப்பி விடு. நிச்சயமாக அதனுடைய தண்டனை நீங்காத ஒன்றாக இருக்கிறது.
Furkan 25:66
நிச்சயமாக அது நிரந்தரமான தங்குமிடத்தாலும் தற்காலிகமான தங்குமிடத்தாலும் மிக கெட்டது. (அதில் நிரந்தரமாகவும் தங்கமுடியாது. தற்காலிகமாகவும் தங்கமுடியாது, மிக கெட்ட இருப்பிடமாகும்).
Furkan 25:67
அவர்கள் செலவு செய்தால் வரம்பு மீறமாட்டார்கள், கருமித்தனமும் காட்ட மாட்டார்கள். அதற்கு மத்தியில் நடுநிலையாக இருக்கும் (அவர்கள் செலவழிப்பது).
Furkan 25:68
அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை அழைக்க மாட்டார்கள் (வணங்க மாட்டார்கள்), அல்லாஹ் (கொல்லக்கூடாது என்று) தடுத்த உயிரை கொல்ல மாட்டார்கள் (அதற்குரிய) உரிமையைக் கொண்டே தவிர. விபசாரம் செய்யமாட்டார்கள். யார் இவற்றை செய்வாரோ அவர் தண்டனையை சந்திப்பார்.
Furkan 25:69
அவருக்கு அந்த தண்டனை மறுமை நாளில் பன்மடங்காக ஆக்கப்படும். அவர் அதில் இழிவுபடுத்தப்பட்டவராக நிரந்தரமாக தங்கி விடுவார்.
Furkan 25:70
எனினும், யார் திருந்தி, நம்பிக்கை கொண்டு, நன்மையான செயலை செய்வார்களோ அவர்கள், அவர்களுடைய தீய செயல்களை நல்ல செயல்களாக அல்லாஹ் மாற்றி விடுவான். (இஸ்லாமில் நுழைவதற்கு முன்பு அவர்கள் செய்த தீமையான காரியங்களுக்குப் பதிலாக நன்மைகளை அவன் அவர்களுக்கு மாற்றி விடுகிறான். முன்னர் பாவத்தில் செலவு செய்தனர். இப்போது நன்மையில் செலவு செய்வார்கள். முன்பு இணைவைத்தனர். இப்போது ஏக இறைவனை மட்டும் வணங்குகின்றனர். முன்னர் இஸ்லாமிற்கு எதிராக சண்டை யிட்டனர். இப்போது இஸ்லாமிற்காக சண்டையிடுகின்றனர்.) அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
Furkan 25:71
யார் திருந்தி, நன்மை செய்வாரோ நிச்சயமாக அவர், அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பி விடுகிறார்.
Furkan 25:72
அவர்கள் பொய்யான செயலுக்கு (இணைவைத்தல், இசைக் கேட்டல், உண்மைக்கு மாற்றமாக நடத்தல், இப்படிப்பட்ட செயல்களுக்கு) ஆஜராக மாட்டார்கள். வீணான செயலுக்கு அருகில் இவர்கள் கடந்து சென்றால் கண்ணியவான்களாக கடந்து சென்று விடுவார்கள்.
Furkan 25:73
அவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களைக் கொண்டு அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாக, குருடர்களாக விழமாட்டார்கள். (அவற்றைக் கேட்டு உடனே பயன் பெறுவார்கள்.)
Furkan 25:74
அவர்கள் கூறுவார்கள்: எங்கள் இறைவா! எங்களுக்கு எங்கள் மனைவிகள் மூலமும், எங்கள் சந்ததிகள் மூலமும் (எங்கள்) கண்களுக்கு குளிர்ச்சியை தருவாயாக! எங்களை இறையச்சமுள்ளவர்களுக்கு இமாம்களாக ஆக்குவாயாக!
Furkan 25:75
இவர்கள் பொறுமையாக இருந்ததால் அறையை (சொர்க்கத்தின் உயர்ந்த தகுதியை) கூலியாக கொடுக்கப்படுவார்கள். இன்னும் அதில் அவர்கள் முகமனைக்கொண்டும் இன்னும் ஸலாமைக் கொண்டும் சந்திக்கப்படுவார்கள். (வானவர்கள் சொர்க்கவாசிகளை சந்திக்க வரும்போது ஸலாம் கூறி அல்லாஹ்வுடன் வாழ்த்துக்களை சொல்வார்கள்).
Furkan 25:76
அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். நிரந்தரமான தங்குமிடத்தாலும் தற்காலிகமான தங்குமிடத்தாலும் அது (-அந்த சொர்க்கம்) மிக அழகானது.
Furkan 25:77
(நபியே!) கூறுவீராக! உங்கள் (துன்பத்தில் அவனை மட்டும் அழைத்து உங்கள்) பிரார்த்தனை இல்லாதிருந்தால் என் இறைவன் உங்களை ஒரு பொருட்டாகவே கருதமாட்டான். திட்டமாக நீங்கள் (தூதரையும் வேதத்தையும்) பொய்ப்பித்தீர்கள். இது (-பொய்ப்பித்தல்) உங்களை கண்டிப்பாக தொடரக்கூடியதாக இருக்கும். (இதன் தண்டனையை இம்மையில் அல்லது மறுமையில் கண்டிப்பாக அனுபவிப்பீர்கள்.)
Şuara 26:1
தா, சீம், மீம்.[1]
———
[1] ஸூரா பகராவின் 1-ஆவது வசனத்தின் அடிக்குறிப்பைப் பாருங்கள்.
Şuara 26:2
இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
Şuara 26:3
அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக மாறாததால் உம்மையே நீர் அழித்துக் கொள்வீரோ!
Şuara 26:4
நாம் நாடினால் வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு அத்தாட்சியை இறக்குவோம். அவர்களது கழுத்துகள் அதற்கு பணிந்தவையாக ஆகிவிடும்.
Şuara 26:5
ரஹ்மானிடமிருந்து புதிதாக இறக்கப்பட்ட அறிவுரை எதுவும் அவர்களிடம் வருவதில்லை, அதை அவர்கள் புறக்கணிப்பவர்களாக இருந்தே தவிர.
Şuara 26:6
திட்டமாக இவர்கள் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் எதை பரிகாசம் செய்பவர்களாக இருந்தனரோ அதன் செய்திகள் அவர்களிடம் விரைவில் வரும்.
Şuara 26:7
பூமியை அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? “அதில் நாம் ஒவ்வொரு அழகிய தாவர ஜோடிகளிலிருந்து எத்தனை (வகைகளை) முளைக்க வைத்திருக்கிறோம்” என்று.
Şuara 26:8
நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
Şuara 26:9
நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன்.
Şuara 26:10
அந்த சமயத்தை நினைவு கூருங்கள்! உமது இறைவன் மூஸாவை அழைத்து, நீர் அநியாயக்கார மக்களிடம் வருவீராக! (என்று கூறினான்).
Şuara 26:11
ஃபிர்அவ்னின் மக்களிடம் (வருவீராக!). அவர்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்சிக் கொள்ள வேண்டாமா!
Şuara 26:12
அவர் (-மூஸா) கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் என்னை பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்.”
Şuara 26:13
“இன்னும் என் நெஞ்சம் நெருக்கடிக்குள்ளாகிவிடும், என் நாவு பேசாது. ஆகவே, நீ ஹாரூனுக்கு (அவர் எனக்கு உதவும்படி வஹ்யி) அனுப்பு.”
Şuara 26:14
இன்னும் அவர்களுக்கு என் மீது ஒரு குற்றம் இருக்கிறது. ஆகவே, அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன்.
Şuara 26:15
அவன் (-அல்லாஹ்) கூறினான்: அவ்வாறல்ல! நீங்கள் இருவரும் எனது அத்தாட்சிகளைக் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நாம் உங்களுடன் (அனைத்தையும்) செவியேற்பவர்களாக (இன்னும் பார்ப்பவர்களாக) இருக்கிறோம்.
Şuara 26:16
ஆகவே, நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் வாருங்கள்! (அவனிடம்) கூறுங்கள்! நிச்சயமாக நாங்கள் அகிலங்களின் இறைவனுடைய தூதராக இருக்கிறோம்.
Şuara 26:17
நிச்சயமாக, எங்களுடன் இஸ்ரவேலர்களை அனுப்பிவிடு என்று.
Şuara 26:18
அவன் (-ஃபிர்அவ்ன்) கூறினான்: “நாம் உம்மை எங்களில் குழந்தையாக வளர்க்கவில்லையா? எங்களுடன் உமது வாழ்க்கையில் (பல) ஆண்டுகள் தங்கியிருந்தாய் (அல்லவா!)
Şuara 26:19
நீ உனது செயலை செய்துவிட்டாய். நீயோ நன்றியறியாதவர்களில் இருக்கிறாய்.
Şuara 26:20
அவர் (-மூஸா) கூறினார்: அதை நான் செய்தேன், அப்போது, நானோ அறியாதவர்களில் இருந்தேன்.
Şuara 26:21
உங்களை நான் பயந்தபோது உங்களைவிட்டு ஓடிவிட்டேன். ஆகவே, அவன் எனக்கு தூதுவத்தை (நபித்துவத்தை) வழங்கினான். இன்னும், என்னை தூதர்களில் ஒருவராக ஆக்கினான்.
Şuara 26:22
அது (-என்னை நீ வளர்த்தது) நீ என் மீது சொல்லிக் காட்டுகின்ற ஓர் உபகாரம்தான். அதாவது, நீ இஸ்ரவேலர்களை அடிமையாக்கி வைத்திருக்கிறாய்.
Şuara 26:23
ஃபிர்அவ்ன் கூறினான்: “அகிலங்களின் இறைவன் யார்?”
Şuara 26:24
மூஸா கூறினார்: வானங்கள் இன்னும் பூமி இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன்தான் (அகிலங்களின் இறைவன்) நீங்கள் உறுதி கொள்பவர்களாக இருந்தால் (நீங்கள் பார்க்கும் அனைத்து படைப்புகளுக்கும் அவன்தான் இறைவன் என்பதையும் உறுதி கொள்ளுங்கள்).
Şuara 26:25
அவன் தன்னை சுற்றி உள்ளவர்களிடம் கூறினான்: நீங்கள் (இவர் கூறுவதை) செவிமடுக்கிறீர்களா?
Şuara 26:26
அவர் கூறினார்: (அவன்தான்) உங்கள் இறைவன், இன்னும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவன் ஆவான்.
Şuara 26:27
அவன் கூறினான்: “நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்ட உங்கள் தூதர் ஒரு பைத்தியக்காரர் ஆவார்.”
Şuara 26:28
அவர் கூறினார்: (நீங்கள் யாரை வணங்க வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேனோ அவன்தான் சூரியன் உதிக்கும்) கிழக்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளுக்கும்) இன்னும் (சூரியன் மறைகின்ற) மேற்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளுக்கும்) இன்னும் (நாடுகளில்) அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான். நீங்கள் சிந்தித்து புரிபவர்களாக இருந்தால் (இதை புரிவீர்கள். எனவே சிந்தியுங்கள்!)
Şuara 26:29
அவன் (மிரட்டிக்) கூறினான்: நீர் என்னை அன்றி வேறு ஒரு கடவுளை எடுத்துக் கொண்டால் சிறைப்படுத்தப்பட்டவர்களில் உம்மையும் ஆக்கி விடுவேன்.
Şuara 26:30
அவர் கூறினார்: நான் (அத்தாட்சிகளில்) தெளிவான ஒன்றை உம்மிடம் கொண்டு வந்தாலுமா? (என்னை நீ நம்ப மறுப்பாய்!)
Şuara 26:31
அவன் கூறினான்: நீர் உண்மையாளர்களில் ஒருவராக இருந்தால் அதைக் கொண்டு வாரீர்.
Şuara 26:32
ஆகவே, அவர் தனது கைத்தடியை எறிந்தார். உடனே அது தெளிவான (உண்மையான) மலைப் பாம்பாக ஆகிவிட்டது.
Şuara 26:33
அவர் தனது கையை (சட்டை பையிலிருந்து) வெளியே எடுக்க, அது உடனே பார்ப்பவர்களுக்கு (மின்னும்) வெண்மையாக ஆகிவிட்டது.
Şuara 26:34
அவன் தன்னை சுற்றியுள்ள பிரமுகர்களிடம் கூறினான்: நிச்சயமாக இவர் நன்கறிந்த (திறமையான) ஒரு சூனியக்காரர்தான்.
Şuara 26:35
அவர் உங்க(ள் அடிமைகளாகிய இஸ்ரவேலர்க)ளை தனது சூனியத்தால் உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற நாடுகிறார். ஆகவே, நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
Şuara 26:36
அவர்கள் கூறினர்: அவருக்கும் அவரது சகோதரருக்கும் அவகாசம் அளி! நகரங்களில் (சூனியக்காரர்களை) அழைத்து வருபவர்களை அனுப்பு!
Şuara 26:37
(சூனியத்தை) கற்றறிந்த பெரிய சூனியக்காரர்கள் எல்லோரையும் அவர்கள் உன்னிடம் கொண்டு வருவார்கள்.
Şuara 26:38
அறியப்பட்ட ஒரு நாளின் குறிப்பிட்ட தவணையில் சூனியக்காரர்கள் ஒன்று சேர்க்கப்பட்டனர்.
Şuara 26:39
மக்களுக்கு (அறிவிப்பு) கூறப்பட்டது: “நீங்கள் (இரு சாராரும் போட்டி போடும் போது யார் வெற்றியாளர் என்று பார்ப்பதற்கு) ஒன்று சேருவீர்களா?”
Şuara 26:40
“சூனியக்காரர்களை நாம் பின்பற்றலாம், அவர்கள் வெற்றியாளர்களாக ஆகிவிட்டால்.”
Şuara 26:41
சூனியக்காரர்கள் வந்தபோது ஃபிர்அவ்னிடம் கூறினர்: எங்களுக்கு திட்டமாக கூலி உண்டா நாங்கள் வெற்றியாளர்களாக ஆகிவிட்டால்.
Şuara 26:42
அவன் கூறினான்: ஆம். (கூலி திட்டமாக உண்டு.) இன்னும் நிச்சயமாக நீங்கள் அப்போது (எனக்கு) நெருக்கமானவர்களில் ஆகிவிடுவீர்கள்.
Şuara 26:43
அவர்களுக்கு (-சூனியக்காரர்களுக்கு) மூஸா கூறினார்: நீங்கள் எதை எறியப் போகிறீர்களோ அதை (நீங்கள் முதலில்) எறியுங்கள்.
Şuara 26:44
ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும் தங்கள் தடிகளையும் எறிந்தனர். இன்னும், ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியமாக! “நிச்சயமாக நாங்கள் தான் வெற்றியாளர்கள்”என்று அவர்கள் கூறினர்.
Şuara 26:45
ஆகவே, மூஸா தனது தடியை எறிந்தார். ஆகவே, அது உடனே அவர்கள் வித்தைகாட்டிய அனைத்தையும் விழுங்கியது.
Şuara 26:46
உடனே, சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக (பூமியில்) விழுந்தனர்.
Şuara 26:47
அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் அகிலங்களின் இறைவனை நம்பிக்கை கொண்டோம்.”
Şuara 26:48
“மூஸா இன்னும் ஹாரூனுடைய இறைவனை (நம்பிக்கை கொண்டோம்).”
Şuara 26:49
அவன் (-ஃபிர்அவ்ன்) கூறினான்: அவரை (அவர் கொண்டு வந்த மார்க்கம் உண்மை என்று) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்களா - நான் உங்களுக்கு (அது பற்றி) அனுமதி தருவதற்கு முன்? நிச்சயமாக அவர் (-மூஸா) உங்களுக்கு சூனியத்தை கற்பித்த உங்கள் மூத்தவர் ஆவார். ஆகவே, நீங்கள் (நான் உங்களை தண்டிக்கும் போது உங்கள் தவறை) விரைவில் அறிவீர்கள். திட்டமாக நான் உங்கள் கைகளை உங்கள் கால்களை மாறுகை மாறுகால் வெட்டுவேன். (பிறகு,) உங்கள் அனைவரையும் கழுவேற்றுவேன்.
Şuara 26:50
அவர்கள் கூறினர்: பிரச்சனை இல்லை. நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பக்கூடியவர்கள் ஆவோம்.
Şuara 26:51
நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொள்பவர்களில் முதலாமவர்களாக இருந்ததால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னிப்பதை நாங்கள் ஆசிக்கிறோம்.
Şuara 26:52
நாம் மூஸாவிற்கு வஹ்யி அறிவித்தோம்: எனது அடியார்களை இரவில் அழைத்துச் செல்லுங்கள். நிச்சயமாக நீங்கள் (உங்கள் எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள்.
Şuara 26:53
ஆகவே, ஃபிர்அவ்ன் நகரங்களில் (தன் படைகளையும் தன் மக்களையும்) ஒன்று திரட்டுபவர்களை அனுப்பினான்.
Şuara 26:54
“நிச்சயமாக இவர்கள் குறைவான கூட்டம்தான்.”
Şuara 26:55
“இன்னும், நிச்சயமாக இவர்கள் நமக்கு ஆத்திரமூட்டுகிறார்கள்.”
Şuara 26:56
“இன்னும், நிச்சயமாக நாம் அனைவரும் தயாரிப்புடன் உஷார் நிலையில் இருக்கிறோம்.” (இவ்வாறு, ஃபிர்அவ்ன் கூறி முடித்தான்.)
Şuara 26:57
ஆக, நாம் அவர்களை தோட்டங்கள் இன்னும் ஊற்றுகளில் இருந்து வெளியேற்றினோம்.
Şuara 26:58
இன்னும் பொக்கிஷங்களிலிருந்தும் கண்ணியமான இடத்திலிருந்தும் (வெளியேற்றினோம்).
Şuara 26:59
இப்படித்தான் (அவர்களை வெளியேற்றினோம்). இன்னும், அவற்றை இஸ்ரவேலர்களுக்கு சொந்தமாக்கினோம்.
Şuara 26:60
ஆக, (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) காலைப் பொழுதில் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
Şuara 26:61
இரண்டு படைகளும் ஒருவரை ஒருவர் பார்த்தபோது மூஸாவின் தோழர்கள் “நிச்சயமாக நாங்கள் பிடிக்கப்பட்டோம்” என்று கூறினர்.
Şuara 26:62
அவர் கூறினார்: அவ்வாறல்ல. நிச்சயமாக என்னுடன் என் இறைவன் இருக்கின்றான். அவன் எனக்கு விரைவில் வழிகாட்டுவான்.
Şuara 26:63
ஆகவே, “உமது தடியைக் கொண்டு கடலை அடிப்பீராக!” என்று மூஸாவிற்கு நாம் வஹ்யி அறிவித்தோம். ஆக, அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரிய மலைப் போன்று இருந்தது.
Şuara 26:64
அங்கு மற்றவர்களை (-ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கடலுக்கு) நாம் நெருக்கமாக்கினோம்.
Şuara 26:65
இன்னும், மூஸாவையும் அவருடன் இருந்தவர்கள் அனைவரையும் நாம் பாதுகாத்தோம்.
Şuara 26:66
பிறகு, மற்றவர்களை மூழ்கடித்தோம்.
Şuara 26:67
நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
Şuara 26:68
இன்னும், நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன் ஆவான்.
Şuara 26:69
அவர்களுக்கு இப்ராஹீமுடைய செய்தியை ஓதி காட்டுவீராக!
Şuara 26:70
அவர் தனது தந்தைக்கும் தனது மக்களுக்கும் நீங்கள் யாரை வணங்குகிறீர்கள்? என்று கூறிய சமயத்தை (நினைவு கூர்வீராக)!
Şuara 26:71
அவர்கள் கூறினர்: நாங்கள் சிலைகளை வணங்குகின்றோம். அதற்கு பூஜை (மற்றும் வழிபாடு) செய்பவர்களாகவே நாங்கள் இருப்போம்.
Şuara 26:72
அவர் கூறினார்: நீங்கள் (அவற்றை) அழைக்கும் போது அவை உங்களுக்கு செவிமடுக்கின்றனவா?
Şuara 26:73
அல்லது (நீங்கள் அவற்றை வணங்கினால் உங்களுக்கு) அவை நன்மை தருகின்றனவா? அல்லது (நீங்கள் அவற்றை வணங்கவில்லை என்றால் உங்களுக்கு) அவை தீங்கு தருமா?
Şuara 26:74
அவர்கள் கூறினர்: அவ்வாறல்ல, நாங்கள் எங்கள் மூதாதைகளை அப்படியே செய்பவர்களாக கண்டோம்.
Şuara 26:75
அவர் கூறினார்: நீங்கள் வணங்கிக் கொண்டு இருப்பவற்றை பற்றி (எனக்கு) சொல்லுங்கள்.
Şuara 26:76
நீங்களும் உங்கள் முந்திய மூதாதைகளும் (வணங்கிக் கொண்டு இருப்பவற்றை பற்றி எனக்கு சொல்லுங்கள்.)
Şuara 26:77
ஏனெனில், நிச்சயமாக இவை எனக்கு எதிரிகள். ஆனால் அகிலங்களின் இறைவனைத் தவிர. (அவன்தான் எனது நேசன், நான் வணங்கும் கடவுள்)
Şuara 26:78
அவன்தான் என்னைப் படைத்தான். ஆகவே, அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.
Şuara 26:79
அவன்தான் எனக்கு உணவளிக்கிறான். இன்னும், எனக்கு நீர்புகட்டுகிறான்.
Şuara 26:80
நான் நோயுற்றால் அவன்தான் எனக்கு சுகமளிக்கிறான்.
Şuara 26:81
அவன்தான் எனக்கு மரணத்தைத் தருவான். பிறகு, அவன் என்னை உயிர்ப்பிப்பான்.
Şuara 26:82
அவன் விசாரணை நாளில் என் பாவங்களை எனக்கு மன்னிக்க வேண்டும் என்று நான் ஆசிக்கிறேன்.
Şuara 26:83
என் இறைவா! எனக்கு தூதுத்துவத்தை வழங்குவாயாக! இன்னும், என்னை நல்லவர்களுடன் சேர்ப்பாயாக!
Şuara 26:84
பின்னோர்களில் எனக்கு நற்பெயரை(யும் சிறப்பையும்) ஏற்படுத்து!
Şuara 26:85
இன்னும், என்னை நயீம் சொர்க்கத்தின் வாரிசுகளில் (சொந்தக்காரர்களில்) ஆக்கிவிடு!
Şuara 26:86
இன்னும், என் தந்தைக்கு மன்னிப்பளி! நிச்சயமாக அவர் வழி தவறியவர்களில் இருக்கிறார்.
Şuara 26:87
அவர்கள் எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே!
Şuara 26:88
செல்வமும் ஆண் பிள்ளைகளும் பலனளிக்காத (அந்த மறுமை) நாளில்...
Şuara 26:89
எனினும், யார் சந்தேகப்படாத (உன்னை மட்டும் வணங்குவதிலும் மறுமையை நம்புவதிலும் ஐயமில்லாத, சுத்தமான) உள்ளத்தோடு அல்லாஹ்விடம் வந்தாரோ (அவருக்கு அவரது உள்ளம் பயன்தரும்).
Şuara 26:90
சொர்க்கம் இறையச்சம் உள்ளவர்களுக்கு சமீபமாக்கப்படும்.
Şuara 26:91
வழிகேடர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும்.
Şuara 26:92
இன்னும், அவர்களிடம் கேட்கப்படும்: “(அல்லாஹ்வை அன்றி) நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே?”
Şuara 26:93
அல்லாஹ்வை அன்றி, (நீங்கள் வணங்கிய) அவை உங்களுக்கு உதவுமா? அல்லது, தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளுமா?
Şuara 26:94
அதில் அவையும் (-சிலைகளும்) வழிகேடர்களும் ஒருவர் மேல் ஒருவர் தூக்கி எறியப்படுவர்.
Şuara 26:95
இன்னும், இப்லீஸின் ராணுவம் அனைவரும் (தூக்கி எறியப்படுவர்).
Şuara 26:96
அவர்கள் அதில் தர்க்கித்துக் கொண்டிருக்க அவர்கள் கூறுவார்கள்
Şuara 26:97
அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக நாம் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தோம்...
Şuara 26:98
உங்களை அகிலங்களின் இறைவனுக்கு சமமாக ஆக்கியபோது.
Şuara 26:99
எங்களை வழி கெடுக்கவில்லை குற்றவாளிகளைத் தவிர.
Şuara 26:100
ஆக, பரிந்துரைப்பவர்களில் யாரும் எங்களுக்கு இல்லை.
Şuara 26:101
இன்னும், உற்ற நண்பர்களில் யாரும் (எங்களுக்கு) இல்லை.
Şuara 26:102
ஆகவே, எங்களுக்கு (உலகத்திற்கு) ஒருமுறை திரும்பச்செல்வது முடியுமாயின் நாங்கள் நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோம்.”
Şuara 26:103
நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
Şuara 26:104
நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன்.
Şuara 26:105
நூஹுடைய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.
Şuara 26:106
அவர்களது சகோதரர் நூஹ் அவர்களுக்கு கூறியபோது, “நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்ச மாட்டீர்களா?
Şuara 26:107
நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு நம்பிக்கையான தூதர் ஆவேன்.
Şuara 26:108
ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Şuara 26:109
இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர (உலக மக்கள் மீது) என் கூலி இல்லை.
Şuara 26:110
ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Şuara 26:111
அவர்கள் கூறினர்: “உம்மை சாதாரணமானவர்கள் (மட்டும்) பின்பற்றி இருக்க நாம் உம்மை நம்பிக்கை கொள்வோமா?”
Şuara 26:112
அவர் கூறினார்: “அவர்கள் செய்துகொண்டு இருப்பதைப் பற்றி எனக்கு ஞானம் இல்லை.
Şuara 26:113
அவர்களது விசாரணை என் இறைவன் மீதே தவிர (என் மீதோ உங்கள் மீதோ இல்லை). நீங்கள் (இதை) உணரவேண்டுமே!
Şuara 26:114
நான் நம்பிக்கையாளர்களை விரட்டக்கூடியவன் இல்லை.
Şuara 26:115
நான் தெளிவான எச்சரிப்பாளராகவே தவிர இல்லை.
Şuara 26:116
அவர்கள் கூறினர்: “நூஹே! நீர் விலகவில்லை என்றால் நிச்சயமாக நீர் ஏசப்படுபவர்களில் (அல்லது கொல்லப்படுபவர்களில்) ஆகிவிடுவீர்.”
Şuara 26:117
அவர் கூறினார்: என் இறைவா! நிச்சயமாக என் மக்கள் என்னை பொய்ப்பித்து விட்டனர்.
Şuara 26:118
ஆகவே, எனக்கும் அவர்களுக்கும் இடையில் நீ தீர்ப்பளி! என்னையும் நம்பிக்கையாளர்களில் என்னுடன் உள்ளவர்களையும் பாதுகாத்துக்கொள்!
Şuara 26:119
ஆகவே, அவரையும் அவருடன் உள்ளவர்களையும் (ஜீவராசிகளால்) நிரம்பிய கப்பலில் பாதுகாத்தோம்.
Şuara 26:120
பிறகு, மீதம் இருந்தவர்களை பின்னர் நாம் அழித்தோம்.
Şuara 26:121
நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
Şuara 26:122
நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன்.
Şuara 26:123
ஆது சமுதாய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.
Şuara 26:124
அவர்களது சகோதரர் ஹூது அவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) பயந்துகொள்ள மாட்டீர்களா?
Şuara 26:125
நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு நம்பிக்கையான தூதர் ஆவேன்.
Şuara 26:126
ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Şuara 26:127
இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர (உலக மக்கள் மீது) என் கூலி இல்லை.
Şuara 26:128
ஒவ்வொரு உயர்ந்த இடத்திலும் (பாதையிலும், பள்ளத்தாக்கிலும் பிரமாண்டமான) ஒரு கட்டிடத்தைக் கட்டி, விளையாடுகிறீர்களா?
Şuara 26:129
இன்னும் பெரிய கோட்டைகளை (கோபுரங்களை, நீர் துறைகளை) நீங்கள் ஏற்படுத்துகிறீர்கள் நீங்கள் நிரந்தரமாக இருப்பதைப் போன்று.
Şuara 26:130
நீங்கள் யாரையும் தாக்கினால் அநியாயக்காரர்களாக தாக்குகிறீர்கள். (வாளாலும் சாட்டைகளாலும் அடிக்கிறீர்கள்)
Şuara 26:131
ஆக, அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Şuara 26:132
நீங்கள் அறிந்தவற்றைக் கொண்டு உங்களுக்கு உதவிய (உங்கள் இறை)வனை அஞ்சிக் கொள்ளுங்கள்! (அவன் செய்த உதவிகளை நீங்கள் அறிவீர்கள்.)
Şuara 26:133
கால்நடைகள்; இன்னும், ஆண் பிள்ளைகள் மூலம் உங்களுக்கு அவன் உதவினான்.
Şuara 26:134
இன்னும், தோட்டங்களைக் கொண்டும் ஊற்றுகளைக் கொண்டும் (உதவினான்).
Şuara 26:135
நிச்சயமாக நான் உங்கள் மீது பெரிய (மறுமை) நாளின் தண்டனையைப் பயப்படுகிறேன்.
Şuara 26:136
அவர்கள் கூறினர்: நீர் உபதேசிப்பதும் அல்லது உபதேசிப்பவர்களில் நீர் இல்லாததும் எங்களுக்கு சமம்தான்.
Şuara 26:137
(செயல்களில் நாங்கள் செய்கிற) இவை முன்னோரின் குணமாக (பழக்கமாக, வழிமுறையாக)வே தவிர இல்லை.
Şuara 26:138
இன்னும், நாங்கள் (இதற்காக) தண்டிக்கப்படுபவர்களாக இல்லை.
Şuara 26:139
ஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்களை நாம் அழித்தோம். நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
Şuara 26:140
நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன்.
Şuara 26:141
ஸமூது மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.
Şuara 26:142
அவர்களுக்கு அவர்களது சகோதரர் ஸாலிஹ், நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ள வேண்டாமா? என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்!
Şuara 26:143
நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்.
Şuara 26:144
ஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Şuara 26:145
இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர (உலக மக்கள் மீது) என் கூலி இல்லை.
Şuara 26:146
இங்கு (இந்த உலகத்தில்) இருப்பவற்றில் (சுகம் அனுபவித்து) நிம்மதியானவர்களாக இருக்கும்படி நீங்கள் விடப்படுவீர்களா?
Şuara 26:147
தோட்டங்களிலும் ஊற்றுகளிலும் (நீங்கள் நிரந்தரமாக தங்கிவிடுவீர்களா)?
Şuara 26:148
இன்னும் விவசாய விளைச்சல்களிலும் (பழுத்த பழங்களால்) குலைகள் மென்மையாக தொங்கும் பேரிச்ச மரங்களிலும் (விட்டுவிடப்படுவீர்களா)?
Şuara 26:149
நீங்கள் மலைகளில் வீடுகளை மதிநுட்ப மிக்கவர்களாக (நுணுக்கத்துடன் எங்கு எப்படி குடைய வேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ப) குடைந்து கொள்கிறீர்கள்.
Şuara 26:150
ஆக, அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Şuara 26:151
வரம்பு மீறிகளின் காரியத்திற்கு கீழ்ப்படியாதீர்கள்!
Şuara 26:152
அவர்கள் பூமியில் குழப்பம் (கலகம்) செய்கின்றனர். அவர்கள் சீர்திருத்துவதில்லை. (-சமாதானமாக நடந்து கொள்வதில்லை.)
Şuara 26:153
அவர்கள் கூறினார்கள்: (ஸாலிஹே!) நீர் எல்லாம் உண்பது, குடிப்பதால் நோயுறக்கூடிய மனிதர்களில் ஒருவர்தான்.
Şuara 26:154
(ஸாலிஹே!) நீர் எங்களைப் போன்ற மனிதராகவே தவிர இல்லை. ஆகவே, நீர் உண்மையாளர்களில் இருந்தால் (எங்களிடம்) ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரீர்.
Şuara 26:155
அவர் கூறினார்: “இது ஒரு பெண் ஒட்டகை. இதற்கு நீர் அருந்துவதற்குரிய ஒரு பங்கு (-அளவு) உள்ளது. இன்னும், குறிப்பிட்ட நாளில் உங்களுக்கும் நீர் அருந்துவதற்குரிய பங்கு உள்ளது.”
Şuara 26:156
“இன்னும், அதற்கு தீங்கு செய்து விடாதீர்கள்! உங்களை பெரிய (மறுமை) நாளின் தண்டனை பிடித்துக் கொள்ளும்.”
Şuara 26:157
ஆக, அவர்கள் அதை அறுத்து விட்டார்கள். ஆகவே, அவர்கள் கைசேதப்பட்டவர்களாக ஆகிவிட்டனர்.
Şuara 26:158
ஆக, அவர்களை தண்டனை பிடித்தது. நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
Şuara 26:159
நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன் ஆவான்.
Şuara 26:160
லூத்துடைய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.
Şuara 26:161
அவர்களது சகோதரர் லூத்து (பின் வருமாறு) அவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்ச வேண்டாமா?
Şuara 26:162
நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்.
Şuara 26:163
ஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Şuara 26:164
இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர என் கூலி (மக்களிடம்) இல்லை.
Şuara 26:165
படைப்பினங்களில் (பெண்களை விட்டுவிட்டு) ஆண்களிடம் நீங்கள் உறவு வைக்கிறீர்களா?
Şuara 26:166
இன்னும், உங்களுக்கு உங்கள் இறைவன் படைத்த உங்கள் மனைவிகளை விட்டுவிடுகிறீர்கள்! இது மட்டுமல்ல, நீங்கள் எல்லை மீறி பாவம் செய்கிற மக்கள் ஆவீர்கள்.”
Şuara 26:167
அவர்கள் கூறினார்கள்: “லூத்தே! நீர் (எங்களைக் கண்டிப்பதிலிருந்து) விலகவில்லை என்றால் நிச்சயமாக (எங்கள் ஊரிலிருந்து) வெளியேற்றப்பட்டவர்களில் நீர் ஆகிவிடுவீர்.”
Şuara 26:168
அவர் கூறினார்: நிச்சயமாக நான் உங்கள் (இத்தீய) செயலை வெறுப்பவர்களில் உள்ளவன் ஆவேன்.
Şuara 26:169
என் இறைவா! என்னையும் என் குடும்பத்தாரையும் அவர்கள் செய்(யும் பா)வ(த்)திலிருந்து(ம் அதன் தண்டனையிலிருந்தும்) பாதுகாத்துக்கொள்!”
Şuara 26:170
ஆக, அவரையும் அவருடைய குடும்பத்தார் அனைவரையும் நாம் பாதுகாத்தோம்.
Şuara 26:171
மிஞ்சியவர்களில் (அவரின் மனைவியான) ஒரு கிழவியைத் தவிர. (அவளும் பின்னர் அழிக்கப்பட்டாள்.)
Şuara 26:172
பிறகு, மற்றவர்களை நாம் (தரை மட்டமாக) அழித்தோம்.
Şuara 26:173
இன்னும், அவர்கள் மீது ஒரு மழையை பொழிவித்தோம். ஆக, எச்சரிக்கப் பட்டவர்களுடைய மழை மிக கெட்டதாகும்.
Şuara 26:174
நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
Şuara 26:175
நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன் ஆவான்.
Şuara 26:176
தோட்டக்காரர்கள் (என்று அறியப்பட்ட மத்யன் வாசிகள்) தூதர்களை பொய்ப்பித்தனர்.
Şuara 26:177
அவர்களது சகோதரர் ஷுஐபு (பின் வருமாறு) அவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்ச வேண்டாமா?
Şuara 26:178
நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்.
Şuara 26:179
ஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Şuara 26:180
இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர என் கூலி (மக்களிடம்) இல்லை.
Şuara 26:181
(நீங்கள் அளந்து கொடுக்கும்) அளவையை முழுமைப்படுத்துங்கள். இன்னும், (மக்களுக்கு) நஷ்டம் ஏற்படுத்துபவர்களில் ஆகிவிடாதீர்கள்.
Şuara 26:182
இன்னும், நேரான (சரியான, நீதமான) தராசினால் நிறுங்கள்!
Şuara 26:183
இன்னும், (அளந்து அல்லது நிறுத்துக் கொடுக்கும்போது) மக்களுக்கு அவர்களுடைய பொருள்களை குறைக்காதீர்கள்! இன்னும், பூமியில் கலகம் (பாவம்) செய்தவர்களாக கடும் குழப்பம் (தீமை) செய்யாதீர்கள்!
Şuara 26:184
இன்னும், உங்களையும் (உங்களுக்கு) முன்சென்ற சமுதாயத்தினரையும் படைத்தவனை அஞ்சுங்கள்!
Şuara 26:185
அவர்கள் கூறினார்கள்: நீரெல்லாம் (உண்பது, குடிப்பதால்) நோயுறக்கூடியமனிதர்களில் ஒருவர்தான்.
Şuara 26:186
இன்னும், எங்களைப் போன்ற மனிதராகவே தவிர நீர் இல்லை. நிச்சயமாக பொய்யர்களில் ஒருவராகவே நாங்கள் உம்மைக் கருதுகிறோம்.
Şuara 26:187
ஆகவே, நீர் உண்மையாளர்களில் இருந்தால் வானத்தில் இருந்து (துண்டிக்கப்பட்ட) சில துண்டுகளை எங்கள் மீது விழ வைப்பீராக!
Şuara 26:188
அவர் கூறினார்: “நீங்கள் (சொல்வதையும் செய்வதையும்) என் இறைவன் மிக அறிந்தவன்.”
Şuara 26:189
ஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, (அடர்த்தியான நிழலுடைய) மேக நாளின் தண்டனை அவர்களைப் பிடித்தது. நிச்சயமாக அது ஒரு பெரிய நாளின் தண்டனையாக இருந்தது.
Şuara 26:190
நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
Şuara 26:191
நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன் ஆவான்.
Şuara 26:192
இன்னும், நிச்சயமாக இது அகிலங்களின் இறைவனால் இறக்கப்பட்ட வேதமாகும்.
Şuara 26:193
நம்பிக்கைக்குரியவரான ரூஹ் (என்ற ஜிப்ரீல், அல்லாஹ்விடமிருந்து) இதை இறக்கினார்.
Şuara 26:194
உமது உள்ளத்தில் (இது இறக்கப்பட்டது), நீர் (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பவர்களில் ஆகவேண்டும் என்பதற்காக.
Şuara 26:195
தெளிவான அரபி மொழியில் (இது இறக்கப்பட்டது).
Şuara 26:196
இன்னும், நிச்சயமாக இ(ந்த வேதத்தைப் பற்றிய முன்னறிவிப்பான)து முன்னோர்களுடைய வேதங்களில் கூறப்பட்டுள்ளது.
Şuara 26:197
இஸ்ரவேலர்களின் அறிஞர்கள் இதை அறிவதே இவர்களுக்கு ஓர் (போதுமான) அத்தாட்சியாக இல்லையா?
Şuara 26:198
இ(ந்த வேதத்)தை வாயற்ற பிராணிகள் சிலவற்றின் மீது நாம் இறக்கி இருந்தால்,
Şuara 26:199
ஆக, அவை இவர்கள் மீது இதை ஓதி(க் காண்பித்து) இருந்தாலும் இவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக ஆகி இருக்க மாட்டார்கள்.
Şuara 26:200
இவ்வாறுதான் குற்றவாளிகளின் உள்ளங்களில் நாம் இ(ந்த வேதத்தை நிராகரிப்ப)தை நுழைத்து விட்டோம்.
Şuara 26:201
அவர்கள் இதை நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள், வலி தரும் தண்டனையை அவர்கள் பார்க்கின்ற வரை.
Şuara 26:202
ஆக, அது அவர்களிடம் திடீரென வரும், அவர்களோ (அதை) உணராதவர்களாக இருக்கும் நிலையில்.
Şuara 26:203
ஆக, அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் அவகாசம் அளிக்கப்படுவோமா?” (அப்படி அவகாசம் அளிக்கப்பட்டால் நாங்கள் திருந்தி விடுவோமே.)
Şuara 26:204
ஆக, அவர்கள் நமது தண்டனையை அவசரமாக கேட்கிறார்களா?
Şuara 26:205
ஆக, (நபியே!) அறிவிப்பீராக! நாம் அவர்களுக்கு (இன்னும்) பல ஆண்டுகள் (வாழ்வதற்கு) சுகமளித்தால்,
Şuara 26:206
பிறகு, அவர்கள் எதைப் பற்றி எச்சரிக்கப்பட்டார்களோ அ(ந்த தண்டனையான)து அவர்களிடம் வந்தால்,
Şuara 26:207
அவர்களுக்கு சுகமளிக்கப்பட்டுக் கொண்டிருந்த (வசதியான உலக வாழ்க்கையான)து அவர்களை விட்டும் (தண்டனையை) தடுக்காது.
Şuara 26:208
நாம் எந்த ஊரையும் அழித்ததில்லை, எச்சரிப்பாளர்கள் அதற்கு (அனுப்பப்பட்டு) இருந்தே தவிர.
Şuara 26:209
இது அறிவுரையாகும். நாம் அநியாயக்காரர்களாக இல்லை.
Şuara 26:210
இ(ந்த வேதத்)தை (நபியின் உள்ளத்தில்) ஷைத்தான்கள் இறக்கவில்லை.
Şuara 26:211
அது அவர்களுக்குத் தகுதியானதும் இல்லை. இன்னும், (அதற்கு) அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.
Şuara 26:212
நிச்சயமாக அவர்கள் (வானத்தில் குர்ஆன் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து அந்த குர்ஆன் ஓதி காட்டப்படும்போது அதை) செவியுறுவதிலிருந்து தூரமாக்கப்பட்டவர்கள். (ஆகவே, அதன் பக்கம் அவர்கள் நெருங்கவே முடியாது.)
Şuara 26:213
ஆக, அல்லாஹுடன் வேறு ஒரு கடவுளை அழைக்காதீர்! அப்படி அழைத்தால் தண்டிக்கப்படுபவர்களில் நீர் ஆகிவிடுவீர்.
Şuara 26:214
இன்னும், உமது நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!
Şuara 26:215
இன்னும், உம்மை பின்பற்றிய நம்பிக்கையாளர்களுக்கு உமது புஜத்தை தாழ்த்துவீராக! (அவர்களுடன் பணிவுடன் பழகுவீராக!)
Şuara 26:216
ஆக, (-உமது உறவினர்கள்) உமக்கு மாறு செய்தால், “நிச்சயமாக நான் நீங்கள் செய்வதிலிருந்து நீங்கியவன்” என்று கூறுவீராக!
Şuara 26:217
இன்னும் மிகைத்தவன், பெரும் கருணையாளன் மீது நம்பிக்கை வைப்பீராக!
Şuara 26:218
அவன்தான் (தொழுகைக்கு) நீர் நிற்கின்றபோது உம்மை பார்க்கிறான்.
Şuara 26:219
இன்னும், சிரம் பணி(ந்து தொழு)பவர்களுடன் (ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு) நீர் மாறுவதையும் (அவன் பார்க்கிறான்).
Şuara 26:220
நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கு அறிந்தவன் ஆவான். (ஆகவே, அழகிய முறையில் அதில் குர்ஆனை ஓதுவீராக! ஒவ்வொரு ருக்னுகளையும் முழுமையாக செய்வீராக! நாம் உம்மை பார்க்கிறோம் என்பதை நினைவில் வைப்பீராக!)
Şuara 26:221
(மக்களில்) யார் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்று உங்களுக்கு நான் அறிவிக்கவா?
Şuara 26:222
பெரும் பொய்யர்கள், பெரும் பாவிகள் எல்லோர் மீதும் (ஷைத்தான்கள்) இறங்குகிறார்கள்.
Şuara 26:223
(திருட்டுத்தனமாக) கேட்டதை (அந்த பாவிகளிடம் ஷைத்தான்கள்) கூறுகிறார்கள். இன்னும் (பாவிகளான) அவர்களில் அதிகமானவர்கள் பொய்யர்கள்.
Şuara 26:224
இன்னும் (இணைவைப்பவர்களான, பாவிகளான) கவிஞர்களை (மனிதர்கள் மற்றும் ஜின்களில் உள்ள) வழிகேடர்கள்தான் பின்பற்றுவார்கள்.
Şuara 26:225
நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (-வீண் பேச்சுகளிலும் பொய் கற்பனைகளிலும் திசையின்றி) அலைகிறார்கள்.
Şuara 26:226
இன்னும், நிச்சயமாக அவர்கள் தாங்கள் செய்யாததை (செய்ததாக) கூறுகிறார்கள்.
Şuara 26:227
(எனினும்,) எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்ந்து, தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர் (அல்லாஹ்வின் எதிரிகளிடம்) பழிவாங்கினார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் பழிப்புக்கு உரியவர்கள் அல்லர்.) (இணைவைத்து) அநியாயம் செய்தவர்கள் தாங்கள் எந்த திரும்பும் இடத்திற்கு திரும்புவார்கள் என்பதை விரைவில் அறிவார்கள்.
Neml 27:1
தா, சீன்.[1] இந்த குர்ஆனுடைய இன்னும் தெளிவான வேதத்தின் வசனங்கள் ஆகும் இவை.
———
[1] ஸூரா பகராவின் 1-ஆவது வசனத்தின் அடிக்குறிப்பைப் பாருங்கள்.
Neml 27:2
(இது) நேர்வழியாகவும், நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கிறது.
Neml 27:3
(அவர்கள்) தொழுகையை நிலை நிறுத்துவார்கள், ஸகாத்தை தருவார்கள். இன்னும், அவர்கள் மறுமையை உறுதியாக நம்பிக்கை கொள்வார்கள்.
Neml 27:4
நிச்சயமாக மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள் -அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அலங்கரித்து விட்டோம். ஆகவே, அவர்கள் (தங்கள் தீமைகளில்) தறிகெட்டு அலைகிறார்கள்.
Neml 27:5
அவர்கள்தான் - கெட்ட தண்டனை அவர்களுக்கு உண்டு. மறுமையில் அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
Neml 27:6
நிச்சயமாக நீர் இந்த குர்ஆனை நன்கறிந்த மகா ஞானவானிடமிருந்து மனனம் செய்விக்கப்படுகிறீர் (இன்னும் கற்பிக்கப்படுகிறீர்).
Neml 27:7
அந்த சமயத்தை நினைவு கூர்வீராக! மூஸா தன் குடும்பத்தினருக்கு கூறினார்: “நிச்சயமாக நான் நெருப்பைப் பார்த்தேன். அதிலிருந்து ஒரு செய்தியை அல்லது எடுக்கப்பட்ட (கொஞ்சம்) நெருப்பை நீங்கள் குளிர்காய்வதற்காக கொண்டு வருகிறேன்.
Neml 27:8
அவர் அதனிடம் வந்தபோது, நெருப்பில் (-ஒளியில்) இருப்பவன் பரிசுத்தமானவன். இன்னும் அதை சுற்றி உள்ளவர்களும் (பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்) என்று (நற்செய்தி கூறி) அழைக்கப்பட்டார். அகிலங்களின் இறைவன் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.
Neml 27:9
மூஸாவே! நிச்சயமாக நான்தான் மிகைத்தவனான மகா ஞானமுடையவனான அல்லாஹ் ஆவேன்.
Neml 27:10
உமது தடியைப் போடுவீராக! அவர் அதை -அது பாம்பைப் போன்று- நெளிவதாக பார்த்த போது புறமுதுகிட்டு திரும்பினார். அவர் திரும்பவே இல்லை. மூஸாவே, பயப்படாதீர்! நிச்சயமாக என்னிடம் -இறைத்தூதர்கள்- பயப்பட மாட்டார்கள்.
Neml 27:11
(எனினும்) தவறிழைத்தவரைத் தவிர. பிறகு, (தான் செய்த) தீமைக்கு பின்னர் அழகிய செயலை மாற்றி செய்தவரைத் தவிர. ஏனெனில், நிச்சயமாக நான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன். (அவரை நான் மன்னித்து விடுவேன்.)
Neml 27:12
உமது கரத்தை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்வித குறையுமின்றி மின்னும் வெண்மையாக - ஃபிர்அவ்னுக்கும் அவனது மக்களுக்கும் நீர் அனுப்பப்பட்ட ஒன்பது அத்தாட்சிகளில் ஒன்றாக - வெளிவரும். நிச்சயமாக அவர்கள் (இறைவனை நிராகரித்த) பாவிகளான மக்களாக இருக்கிறார்கள்.
Neml 27:13
ஆக, அது அவர்களிடம் (அவர்கள் மிகத்தெளிவாக) பார்க்கும்படியாக நம் அத்தாட்சிகள் வந்தபோது, இது தெளிவான சூனியம் என்று கூறினர்.
Neml 27:14
அவர்கள் அவற்றை (-ஒன்பது அத்தாட்சிகளை) மறுத்தனர், அநியாயமாக பெருமையாக. அவர்களுடைய ஆன்மாக்களோ அவற்றை உறுதியாக நம்பின. ஆகவே, (இந்த) விஷமிகளின் முடிவு எவ்வாறு ஆகிவிட்டது என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
Neml 27:15
திட்டவட்டமாக தாவூதுக்கும் ஸுலைமானுக்கும் (பறவைகளின் மொழி அறிவு மற்றும் பல துறைகளின் சிறப்பான) அறிவை நாம் தந்தோம். அவ்விருவரும் கூறினர்: “தனது நம்பிக்கையாளர்களான அடியார்களில் பலரைப் பார்க்கிலும் எங்களை மேன்மைப்படுத்திய அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.”
Neml 27:16
தாவூதுக்கு (அவரின் கல்விக்கும் ஆட்சிக்கும் மற்ற பிள்ளைகளைப் பார்க்கிலும்) ஸுலைமான் வாரிசாக ஆனார். இன்னும், அவர் கூறினார்: மக்களே! நாங்கள் பறவைகளின் பேச்சை (-மொழிகளை புரியும் கல்வியை) கற்பிக்கப்பட்டோம். (பல செல்வங்களிலிருந்து எங்களுக்கு தேவையான) எல்லாம் வழங்கப்பட்டோம். நிச்சயமாக இதுதான் தெளிவான மேன்மையாகும்.
Neml 27:17
ஸுலைமானுக்கு ஜின்கள், மனிதர்கள் இன்னும் பறவைகளில் இருந்து அவருடைய ராணுவங்கள் ஒன்று திரட்டப்பட்டன. ஆக, அவர்கள் (ஒன்றிணைந்து செல்வதற்காக இடையிடையே) நிறுத்தப்படுவார்கள்.
Neml 27:18
இறுதியாக, (ஒரு முறை) எறும்புகளின் ஒரு பள்ளத்தாக்கில் அவர்கள் வந்த போது ஓர் எறும்பு கூறியது: எறும்புகளே! உங்கள் பொந்துகளுக்குள் நுழைந்து விடுங்கள்! ஸுலைமானும் அவருடைய ராணுவங்களும் உங்களை மிதித்து அழித்து விடவேண்டாம். அவர்களோ (நீங்கள் இருப்பதையும் அவர்கள் உங்களை மிதிப்பதையும்) உணர மாட்டார்கள்.
Neml 27:19
ஆக, அதன் பேச்சினால் அவர் சிரித்தவராக புன்முறுவல் பூத்தார். இன்னும் கூறினார்: “என் இறைவா! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் அருள்புரிந்த உன் அருளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும் நீ மகிழ்ச்சியுறுகின்ற நல்லதை நான் செய்வதற்கும் எனக்கு நீ அகத்தூண்டுதலை (-உள்ளத்தில் உதிப்பை) ஏற்படுத்து! (மனதில் அதற்குண்டான ஆசையையும் உணர்வையும் ஏற்படுத்து.) உன் கருணையால் உன் நல்லடியார்களில் என்னை நுழைத்துவிடு!”
Neml 27:20
அவர் பறவைகளில் (ஹுத்ஹுத் பறவையைத்) தேடினார். (அது காணவில்லை.அப்போது) எனக்கென்ன, நான் ஹுத்ஹுதை (ஏன்) காண முடியவில்லை?! அல்லது அது (இங்கு) வராதவர்களில் இருக்கிறதா? என்று கூறினார்.
Neml 27:21
நிச்சயமாக நான் அதை கடுமையாக தண்டிப்பேன். அல்லது அதை நிச்சயமாக நான் அறுத்து விடுவேன். அல்லது அது கண்டிப்பாக என்னிடம் தெளிவான ஆதாரத்தை கொண்டுவர வேண்டும்.
Neml 27:22
அவர் (ஹுத்ஹுதைப் பற்றி விசாரித்து விட்டு) சிறிது நேரம்தான் தாமதித்தார். (ஹுத்ஹுத் அவர் முன் வந்துவிட்டது. பின்னர்) அது கூறியது: ஆக, நீர் அறியாததை நான் அறிந்துள்ளேன். உம்மிடம் ‘ஸபா’ இனத்தாரிடமிருந்து உறுதியான செய்தியைக் கொண்டு வந்துள்ளேன்.
Neml 27:23
நிச்சயமாக நான் (அங்கு) ஒரு பெண்ணை, அவள் அவர்களை (-அந்நாட்டு மக்களை) ஆட்சி செய்கின்றவளாகக் கண்டேன். (ஆட்சிக்கு தேவையான) எல்லாம் அவள் வழங்கப்பட்டு இருக்கிறாள். அவளுக்கு சொந்தமான ஒரு பெரிய (-விலை உயர்ந்த, மதிக்கத்தக்க) அரச கட்டிலும் உள்ளது.
Neml 27:24
அவளையும் அவளுடைய மக்களையும் அல்லாஹ்வை அன்றி சூரியனுக்கு சிரம் பணிந்து வணங்குகின்றவர்களாக கண்டேன். ஷைத்தான் அவர்களுக்கு அவர்களின் (இந்த இணைவைப்பு) செயல்களை அலங்கரித்து விட்டான். ஆகவே, அவர்களை (நேரான) பாதையிலிருந்து அவன் தடுத்து விட்டான். ஆகவே, அவர்கள் நேர்வழி பெறவில்லை.
Neml 27:25
வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை (-மழை மற்றும் தாவரங்களை) வெளிப்படுத்துகின்ற, இன்னும் நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அறிகின்ற அல்லாஹ்விற்கு அவர்கள் சிரம் பணியாமல் இருப்பதற்காக (அவன் அவர்களது ஷிர்க்கான செயல்களை அலங்கரித்துக் காட்டினான்).
Neml 27:26
அல்லாஹ் -அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை, மகத்தான அர்ஷுடைய அதிபதி (அவன்).
Neml 27:27
அவர் (ஸுலைமான்) கூறினார்: நீ உண்மை கூறினாயா? அல்லது பொய்யர்களில் ஆகிவிட்டாயா? என்று நாம் ஆராய்ந்து பார்ப்போம்.
Neml 27:28
எனது இந்தக் கடிதத்தை எடுத்துச் செல்! இதை அவர்கள் முன் நீ போடு! பிறகு, அவர்களை விட்டு விலகி இரு! அவர்கள் என்ன பதில் தருகிறார்கள் என்று நீ பார்!
Neml 27:29
அவள் (-அரசி) கூறினாள்: பிரமுகர்களே! நிச்சயமாக - ஒரு கண்ணியமான கடிதம் என்னிடம் அனுப்பப்பட்டுள்ளது.
Neml 27:30
நிச்சயமாக அது ஸுலைமானிடமிருந்து (அனுப்பப்பட்டுள்ளது). நிச்சயமாக (அதில் எழுதப்பட்ட) செய்தியாவது: பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...
Neml 27:31
என்னிடம் நீங்கள் பெருமை காட்டாதீர்கள்! (முரண்டு பிடித்து கர்வம் கொண்டு என் கட்டளையை மீறி விடாதீர்கள்!) என்னிடம் பணிந்தவர்களாக வந்து விடுங்கள்!
Neml 27:32
அவள் கூறினாள்: பிரமுகர்களே! எனது இந்த காரியத்தில் நீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள். நான் ஒரு காரியத்தை நீங்கள் என்னிடம் ஆஜராகி (கருத்து தெரிவிக்கி)ன்ற வரை முடிவு செய்பவளாக இல்லை.
Neml 27:33
அவர்கள் கூறினர்: நாங்கள் (உடல்) பலமுடையவர்கள், (எதிரிகளை தாக்க தேவையான) கடும் வலிமை உடையவர்கள். முடிவு உன்னிடம் இருக்கிறது. ஆகவே, நீ (கருதுவதை அல்லது) உத்தரவிடுவதை நன்கு நீ யோசித்துக்கொள்!
Neml 27:34
அவள் கூறினாள்: “நிச்சயமாக மன்னர்கள் ஓர் ஊருக்குள் நுழைந்து விட்டால் அதை சின்னா பின்னப்படுத்தி விடுவார்கள். அந்த ஊர் வாசிகளில் உள்ள கண்ணியவான்களை இழிவானவர்களாக ஆக்கிவிடுவார்கள்.” (ஆகவே, இவர்களும்) அப்படித்தான் செய்வார்கள்.
Neml 27:35
“நிச்சயமாக நான் அவர்களிடம் (என் அரசவை தூதர்களுடன்) ஓர் அன்பளிப்பை அனுப்புகிறேன். (நான் அனுப்பிய அந்த) தூதர்கள் என்ன பதில் திரும்பக் கொண்டு வருகிறார்கள் என்று பார்க்கிறேன்.” (அதன் பின்னர் முடிவு செய்கிறேன்.)
Neml 27:36
அவர் (-அவளின் தூதர்) ஸுலைமானிடம் வந்தபோது, அவர் (ஸுலைமான்) கூறினார்: செல்வத்தை எனக்கு நீங்கள் தருகிறீர்களா? அல்லாஹ் எனக்கு தந்திருப்பது அவன் உங்களுக்கு தந்திருப்பதை விட மிகச் சிறந்தது. மாறாக, நீங்கள் உங்கள் அன்பளிப்புகளைக் கொண்டு பெருமிதம் அடைவீர்கள். (நான் அடைய மாட்டேன்.)
Neml 27:37
நீ அவர்களிடம் திரும்பிப் போ! நாம் அவர்களிடம் (பல) இராணுவங்களைக் கொண்டு வருவோம். அவர்களை அவர்களுக்கு அறவே வலிமை இருக்காது. இன்னும் நிச்சயமாக அவர்களை அதிலிருந்து (அவர்களின் ஊரிலிருந்து) இழிவானவர்களாக நாம் வெளியேற்றுவோம். அவர்கள் (இஸ்லாமை ஏற்கவில்லை என்றால்) சிறுமைப்படுவார்கள்.
Neml 27:38
அவர் (தன் அவையோரிடம்) கூறினார்: “பிரமுகர்களே! உங்களில் யார் அவளுடைய அரச கட்டிலை -அவர்கள் என்னிடம் பணிந்தவர்களாக வருவதற்கு முன்னர் -கொண்டு வருவார்.”
Neml 27:39
ஜின்களில் சாதுர்யமான ஒன்று கூறியது: நீர் உமது (இந்த) இடத்திலிருந்து எழுவதற்கு முன்னர் நான் அதை உம்மிடம் கொண்டு வருவேன். நிச்சயமாக நான் அதற்கு ஆற்றல் உள்ளவன், (அதில் உள்ள பொருள்களுக்கு) நம்பிக்கைக்குரியவன்.
Neml 27:40
தன்னிடம் வேதத்தின் ஞானம் இருந்த ஒருவர் கூறினார்: “(நீர் தூரமாக ஒன்றை பார்த்த பின்னர், அந்த) உமது பார்வை உன் பக்கம் திரும்புவதற்கு முன்னர் நான் அதை உம்மிடம் கொண்டு வருவேன்.” அவர் (-ஸுலைமான்) அதை (-அந்த அரசகட்டிலை) தன்னிடம் (-தனக்கு முன்னால்) நிலையாகி விட்டதாக பார்த்த போது, இது (-இந்த ஆட்சி, அதிகாரம், படை பலம், அறிவு, எல்லாம்) என் இறைவனின் அருளாகும். நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி கெடுகிறேனா? என்று அவன் என்னை சோதிப்பதற்காக (தந்துள்ளான்). யார் நன்றி செலுத்துகிறாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் அவருக்குத்தான் நன்மையாகும். யார் நிராகரிப்பாரோ ஏனெனில், என் இறைவன் முற்றிலும் தேவை அற்றவன் (-தன்னில் நிறைவானவன், எல்லோருக்கும் வாரி கொடுக்கும்) பெரும் தயாளன்.
Neml 27:41
அவர் கூறினார்: நீங்கள் அவளுக்கு அவளுடைய அரச கட்டிலை மாற்றி விடுங்கள். நாம் பார்ப்போம், “அவள் அறிந்து கொள்கிறாளா? அல்லது அவள் அறியாதவர்களில் ஆகிவிடுகிறாளா?” என்று.
Neml 27:42
அவள் வந்தபோது, “இது போன்றா உனது அரச கட்டில்?” என்று கேட்கப்பட்டது. அவள் கூறினாள்: “இது அதைப் போன்றுதான்.” இவளுக்கு முன்னரே நாம் (அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய ஆற்றலைப் பற்றியும்) அறிவு கொடுக்கப்பட்டோம். இன்னும், முஸ்லிம்களாக இருக்கிறோம்.
Neml 27:43
அவள் அல்லாஹ்வை அன்றி (சூரியனை) வணங்கிக்கொண்டு இருந்தது (அவள் அல்லாஹ்வை வணங்குவதை விட்டும்) அவளைத் தடுத்து விட்டது. நிச்சயமாக, அவள் நிராகரிக்கின்ற மக்களில் இருந்தாள்.
Neml 27:44
அவளுக்கு கூறப்பட்டது: “நீ மாளிகையில் நுழை!” அவள் அதைப் பார்த்த போது அதை அலை அடிக்கும் நீராகக் கருதி, தன் இரு கெண்டைக் கால்களை விட்டும் (தன் ஆடையை) அகற்றினாள். (அப்போது ஸுலைமான்) கூறினார்: நிச்சயமாக இது கண்ணாடிகளால் சமப்படுத்தப்பட்ட மாளிகை(யின் தரை)யாகும்.அவள், கூறினாள்: என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கே அநீதி செய்து கொண்டேன். இன்னும், அகிலங்களின் இறைவனான அல்லாஹ்விற்கு ஸுலைமானுடன் நானும் முஸ்லிமாகி விட்டேன்.
Neml 27:45
திட்டவட்டமாக நாம் ஸமூது (மக்களு)க்கு அவருடைய சகோதரர் ஸாலிஹை (தூதராக) அனுப்பினோம், “நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்” (என்று கட்டளையி டுவதற்காக). ஆனால், அவர்கள் அப்போது தங்களுக்குள் தர்க்கித்துக் கொள்கின்ற இரண்டு பிரிவுகளாக ஆகிவிட்டனர்.
Neml 27:46
அவர் (ஸாலிஹ்) கூறினார்: என் மக்களே! நன்மைக்கு (இறைவனின் அருளுக்கு) முன்னதாக தீமையை (தண்டனையை) ஏன் அவசரப்படுகிறீர்கள்? அல்லாஹ்விடம் நீங்கள் (எல்லோரும்) பாவமன்னிப்புத் தேடமாட்டீர்களா? நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்.
Neml 27:47
அவர்கள் கூறினர்: “உம்மாலும் உம்முடன் உள்ளவர்களாலும் நாங்கள் துற்சகுணம் அடைந்தோம்.” அவர் கூறினார்: (மாறாக) உங்கள் துன்பத்தின் காரணம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. (உங்கள் செயலுக்கு ஏற்ப அவன் உங்களிடம் நடந்து கொள்கிறான்.) மாறாக, நீங்கள் சோதிக்கப்படுகின்ற மக்கள்.
Neml 27:48
அப்பட்டணத்தில் ஒன்பது பேர் இருந்தனர். அவர்கள் (அங்கு) பூமியில் குழப்பம் செய்தனர், சீர்திருத்தம் செய்யவில்லை. (நன்மை செய்யாமல் பாவம் செய்து வந்தனர்.)
Neml 27:49
அவர்கள் தங்களுக்குள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறினர்: “நிச்சயமாக நாங்கள் அவரையும் அவருடைய குடும்பத்தையும் கொன்று விடுவோம். பிறகு, அவருடைய பொறுப்பாளருக்கு, ‘அவ(ரும் அவ)ரது குடும்பம் கொல்லப்பட்ட இடத்திற்கு நாம் ஆஜராகவில்லை, நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்கள்’ என்று கூறுவோம்.”
Neml 27:50
அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர். நாம் ஒரு சூழ்ச்சி செய்தோம். அவர்கள் (நமது சூழ்ச்சியை) உணர மாட்டார்கள்.
Neml 27:51
அவர்களின் சூழ்ச்சியின் முடிவு எப்படி ஆகியது என்று (நபியே!) நீர் பார்ப்பீராக! (அதன் முடிவு:) நிச்சயமாக நாம் அவர்களையும் அவர்களின் மக்கள் அனைவரையும் (தரைமட்டமாக) அழித்து விட்டோம்.
Neml 27:52
இதோ அவர்கள் தீமை செய்ததால் அவர்க(ள் அழிக்கப்பட்ட பின்னர் அவர்க)ளது வீடுகள் வெறுமையாக இருக்கின்றன. அறிகின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
Neml 27:53
நம்பிக்கை கொண்டவர்களை நாம் பாதுகாத்தோம். அவர்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்சிக் கொண்டிருந்தனர்.
Neml 27:54
இன்னும் லூத்தையும் (நாம் அனுப்பினோம்). அவர் தம் மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! நீங்கள் மகா அசிங்கமான செயலை செய்கிறீர்கள். (இதன் அசிங்கத்தையும் கேவலத்தையும்) நீங்கள் அறியத்தான் செய்கிறீர்கள்.
Neml 27:55
பெண்கள் அன்றி ஆண்களிடமா நீங்கள் இச்சையை தீர்க்கிறீர்கள். மாறாக, நீங்கள் (அல்லாஹ்விற்கு செய்யவேண்டிய கடமையையும் அதை மீறுவதால் உங்களுக்கு நிகழப்போகும் தண்டனையையும்) அறியாத மக்கள் ஆவீர்கள். (என்று கூறினார்).
Neml 27:56
அவருடயை மக்களின் பதிலோ, “லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுங்கள். நிச்சயமாக அவர்கள் (இந்த செயலை செய்வதற்கு) அசூசைப்படுகிறார்கள்” என்பதாகவே தவிர (வேறு) இல்லை.
Neml 27:57
நாம் அவரையும் அவருடைய குடும்பத்தையும் -அவருடைய பிள்ளைகள், மனைவியைத் தவிர-பாதுகாத்தோம். அவளை நாம், (ஊரில்) மிஞ்சியவர்களில் (இருக்க வைத்து தண்டனையில் அழிக்கப்பட) முடிவு செய்தோம்.
Neml 27:58
அவர்கள் மீது (வேதனையின்) மழையை பொழிவித்தோம். எச்சரிக்கப்பட்டவர்களின் அந்த மழை (மழைகளிலே) மிகக் கெட்டதாகும்.
Neml 27:59
(நபியே!) கூறுவீராக: எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. அவன் தேர்ந்தெடுத்த அவனுடைய அடியார்களுக்கு (-உமது தோழர்களுக்கு) ஸலாம் - ஈடேற்றம்- உண்டாகுக! அல்லாஹ் சிறந்தவனா? அல்லது அவர்கள் இணைவைப்பவை (சிறந்தவை)யா? (அல்லாஹ்வை வணங்குவது சிறந்ததா? அல்லது சிலைகளையும் படைக்கப்பட்ட படைப்பினங்களையும் வணங்குவது சிறந்ததா?)
Neml 27:60
வானங்களையும் பூமியையும் படைத்தவன் (நாம் வணங்குவதற்கு அவன்) சிறந்தவனா? (அல்லது எதற்கும் ஆற்றல் இல்லாத சிலைகள் சிறந்தவையா?). அவன் உங்களுக்கு மேகத்திலிருந்து மழையை இறக்கினான். அதன்மூலம் நாம் அழகிய காட்சியுடைய தோட்டங்களை முளைக்க வைத்தோம். (அவன் மழை நீரை இறக்கவில்லை என்றால்) உங்களால் அதன் மரங்களை முளைக்க வைக்க முடியாது. அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! மாறாக, அவர்கள் இணைவைக்கின்ற மக்கள் ஆவர்.
Neml 27:61
எவன் பூமியை நிலையானதாக ஆக்கி, அதற்கிடையில் ஆறுகளை ஏற்படுத்தி, அதற்காக (-அது குலுங்காமல் இருப்பதற்காக) பெரும் மலைகளைப் படைத்து, இரு கடல்களுக்கு இடையில் தடுப்பை அமைத்தானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் மகத்துவத்தை) அறியமாட்டார்கள்.
Neml 27:62
அல்லது, எவன் சிரமத்தில் இருப்பவருக்கு -அவர் அவனை அழைக்கும் போது (அவருக்கு)- பதிலளித்து, மேலும், (அவருடைய) துன்பத்தை நீக்குகின்றானோ, இன்னும் உங்களை இப்பூமியின் பிரதிநிதிகளாக ஆக்குகின்றானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது அழைத்தாலும் கேட்காத, மனிதர்களுக்கு எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! (அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கொண்டு) நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.
Neml 27:63
(அல்லது) தரை மற்றும் கடலின் இருள்களில் உங்களுக்கு எவன் வழிகாட்டுகிறானோ, இன்னும் தனது அருளுக்கு முன்னர் காற்றுகளை சுபச்செய்தியாக எவன் அனுப்புகிறானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்.
Neml 27:64
(அல்லது) படைப்புகளை எவன் முதலில் உருவாக்கி, (பின்னர் அவை அழிந்த) பிறகு அவற்றை மீண்டும் உருவாக்குகின்றானோ, மேகத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு எவன் உணவளிக்கின்றானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! (நபியே!) கூறுவீராக: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்!
Neml 27:65
(நபியே!) கூறுவீராக: வானங்களிலும் பூமியிலும் மறைவானவற்றை அல்லாஹ்வைத் தவிர எவரும் அறியமாட்டார். (படைப்புகள்) தாங்கள் எப்போது எழுப்பப்படுவோம் என்பதை உணர மாட்டார்கள்.
Neml 27:66
அல்லது, அவர்களது அறிவு மறுமை விஷயத்தில் மறைந்து விட்டதா? (அவர்கள் தங்கள் அறிவால் மறுமையை புரிய முடியாமல் ஆகிவிட்டனரா?) மாறாக, அவர்கள் அதில் (-மறுமை விஷயத்தில்) சந்தேகத்தில் இருக்கின்றனர். மாறாக, அவர்கள் அதில் (-மறுமை விஷயத்தில்) குருடர்கள் ஆவர். (குருடனால் ஒரு பொருளை பார்க்க முடியாதது போல் அவர்களால் மறுமையை அறிந்துகொள்ள முடியாது.)
Neml 27:67
நிராகரித்தவர்கள் கூறினர்: நாங்களும் எங்கள் மூதாதைகளும் (இறந்த பின்னர் மண்ணோடு) மண்ணாக மாறிவிட்டாலும் நிச்சயமாக நாங்கள் (பூமியிலிருந்து) வெளியேற்றப்படுவோமா?
Neml 27:68
திட்டவட்டமாக நாங்களும் இதற்கு முன்னர் எங்கள் மூதாதைகளும் இதை வாக்களிக்கப்பட்டோம். (வாக்களிப்பவர்கள் இப்படி வாக்களித்து சென்றுள்ளனர். ஆனால் இதுவரை அப்படி நடக்கவில்லையே! ஆகவே,) இது முன்னோர்களின் கட்டுக் கதைகள் அன்றி வேறு இல்லை.
Neml 27:69
(நபியே!) கூறுவீராக! பூமியில் (அழிக்கப்பட்ட மக்களின் இல்லங்களுக்கு) செல்வீர்களாக! குற்றவாளிகளின் முடிவு எப்படி இருந்தது என்று (சிந்தித்துப்) பார்ப்பீர்களாக!
Neml 27:70
அவர்கள் மீது நீர் துக்கப்படாதீர்! அவர்கள் (உமக்கு) சூழ்ச்சி செய்கின்ற காரணத்தால் நீர் (மன) நெருக்கடியில் ஆகிவிடாதீர்!
Neml 27:71
அவர்கள் கூறுகின்றனர்: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த வாக்கு எப்போது (நிகழும் என்று கூறுங்கள்!)
Neml 27:72
(நபியே!) கூறுவீராக: “நீங்கள் அவசரப்படுபவற்றில் சில உங்களுக்கு சமீபமாக வரக்கூடும்.”
Neml 27:73
நிச்சயமாக உமது இறைவன் மக்கள் மீது அருளுடையவன். எனினும் அவர்களில் அதிகமானவர்கள் நன்றி அறியமாட்டார்கள்.
Neml 27:74
நிச்சயமாக உமது இறைவன் அவர்களது உள்ளங்கள் மறைப்பவற்றையும் அவர்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும் நன்கறிவான்.
Neml 27:75
வானத்திலும் பூமியிலும் (மக்களின் பார்வைகளுக்கும் செவிகளுக்கும்) மறைந்த எதுவும் இல்லை (அது) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர.
Neml 27:76
நிச்சயமாக இந்த குர்ஆன் இஸ்ரவேலர்கள் மீது அவர்கள் முரண்படுகின்றவற்றில் பல விஷயங்களை (அவற்றில் எது உண்மை என்று) விவரிக்கிறது.
Neml 27:77
நிச்சயமாக இது நேர்வழியும் நம்பிக்கையாளர்களுக்கு (இறைவனின்) கருணையும் ஆகும்.
Neml 27:78
நிச்சயமாக உமது இறைவன் தனது சட்டத்தின் படி (-தனது ஞானத்தின் படி) அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பான். அவன்தான் மிகைத்தவன், நன்கறிந்தவன்.
Neml 27:79
ஆகவே, (நபியே!) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை (தவக்குல்) வைப்பீராக! நிச்சயமாக நீர் தெளிவான சத்தியத்தின் மீது இருக்கின்றீர்.
Neml 27:80
நிச்சயமாக (உள்ளம்) மரணித்தவர்களை நீர் செவியுறச் செய்யமுடியாது. (செவியில் முத்திரை இடப்பட்ட) செவிடர்களுக்கும் -அவர்கள் புறமுதுகிட்டவர்களாக (-புறக்கணித்தவர்களாக) திரும்பினால்- அழைப்பை நீர் செவியுறச் செய்யமுடியாது.
Neml 27:81
(அல்லாஹ் எவர்களின் கண்களை சத்தியத்தை பார்ப்பதிலிருந்து குருடாக்கி விட்டானோ அந்த) குருடர்களை அவர்களின் வழிகேட்டிலிருந்து நீர் நேர்வழிபடுத்த முடியாது. நமது வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களைத் தவிர (பிறரை) நீர் செவியுறச் செய்யமுடியாது. அவர்கள்தான் (நமது கட்டளைகளுக்கு) முற்றிலும் பணிந்து நடப்பவர்கள்.
Neml 27:82
அவர்கள் மீது நமது வாக்கு (அவர்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்ற நமது வாக்கு உறுதியாக) நிகழ்ந்து விட்டால் பூமியிலிருந்து ஒரு மிருகத்தை நாம் அவர்களுக்கு வெளிப்படுத்துவோம். “நிச்சயமாக மக்கள் நமது அத்தாட்சிகளைக் கொண்டு உறுதி(யாக நம்பிக்கை) கொள்ளாதவர்களாக இருந்தனர்” என்று அவர்களிடம் அது பேசும்.
Neml 27:83
ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் நமது அத்தாட்சிகளை பொய்ப்பிக்கின்றவர்களின் கூட்டத்தை நாம் (மறுமையில்) எழுப்புகின்ற நாளில், ஆக, அவர்க(ளில் முன்னோரும் பின்னோரும் ஒன்று சேருவதற்காக அவர்க)ள் தடுத்து நிறுத்தப்படுவார்கள்.
Neml 27:84
இறுதியாக, அவர்கள் வந்து விடும்போது அவன் (-அல்லாஹ்) கூறுவான்: எனது அத்தாட்சிகளை நீங்கள் பொய்ப்பித்தீர்களா? அவற்றை நீங்கள் முழுமையாக அறியாமல் இருக்க! அல்லது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?
Neml 27:85
அவர்களின் (இம்மையில் செய்து கொண்டிருந்த) தீமைகளால் அவர்கள் மீது (அல்லாஹ்வின்) கூற்று (-கோபம் மறுமையில்) நிகழ்ந்து விட்டது. ஆகவே, அவர்கள் பேசமாட்டார்கள்.
Neml 27:86
அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக நாம் இரவை -அதில் அவர்கள் ஓய்வு பெறுவதற்காகவும், பகலை (அவர்கள் பொருள் சம்பாதிக்க வசதியாக) வெளிச்சமாகவும் நாம் அமைத்தோம். நிச்சயமாக இதில் நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.
Neml 27:87
‘சூர்’இல் ஊதப்படும் நாளில் வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் திடுக்கிடுவார்கள் (-பயத்தால் நடுங்குவார்கள்) அல்லாஹ் நாடியவர்களைத் தவிர (-மார்க்கப் போரில் கொல்லப்பட்டவர்களைத் தவிர அவர்களுக்கு திடுக்கம் இருக்காது). எல்லோரும் அவனிடம் பணிந்தவர்களாக வருவார்கள்.
Neml 27:88
(நபியே!) நீர் மலைகளைப் பார்த்து அவற்றை உறுதியாக நிற்பதாகக் கருதுவீர். அவையோ (அந்நாளில்) மேகங்கள் செல்வதைப் போன்று செல்கின்றன. (இது) எல்லாவற்றையும் செம்மையாகச் செய்த அல்லாஹ்வின் செயலாகும். நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன்.
Neml 27:89
யார் நன்மையை (லா இலாஹ இல்லல்லாஹ் வை)க் கொண்டு வருவாரோ அவருக்கு அதன் காரணமாக சிறந்தது (-சொர்க்கம் கூலியாக) உண்டு. அவர்கள் அந்நாளில் திடுக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவார்கள்.
Neml 27:90
யார் தீமையைக் கொண்டு வருவாரோ (-இணைவைத்தவராக வருவாரோ) அவர்களுடைய முகங்கள் நரகத்தில் தள்ளப்படும். “நீங்கள் செய்து கொண்டு இருந்ததற்கே தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப்படுவீர்களா?” (என்று கூறப்படும்.)
Neml 27:91
(நபியே கூறுவீராக!) நான் கட்டளை இடப்பட்டதெல்லாம் இந்த ஊரின் இறைவனை வணங்குவதற்குத்தான். அவன் அதை புனிதப்படுத்தியுள்ளான். அவனுக்குத்தான் எல்லாப் பொருள்களும் உரிமையானவை. இன்னும், முஸ்லிம்களில் (-அவனுக்கு முற்றிலும் பணிந்து, நபி இப்ராஹீமுடைய மார்க்கத்தை பின்பற்றியவர்களில்) நான் ஆகவேண்டும் என்று கட்டளை இடப்பட்டுள்ளேன்.
Neml 27:92
இன்னும், (இந்த) குர்ஆனை நான் ஓதுவதற்கும்(கட்டளை இடப்பட்டுள்ளேன்). ஆகவே, யார் நேர்வழி பெறுகிறாரோ அவர் நேர்வழி பெறுவதெல்லாம் அவரது நன்மைக்காகத்தான். யார் வழி கெடுகின்றானோ (அவனுக்கு நபியே நீர் உம்மைப் பற்றி) கூறுவீராக! “நான் எல்லாம் எச்சரிப்பவர்களில் உள்ளவன் தான். (நான் எச்சரித்து விட்டேன். நீங்கள் என்னை பின்பற்றினால் நீங்கள் அடையப்போகும் நன்மை உங்களுக்குத்தான். நீங்கள் என்னை நிராகரித்தால் அதனால் ஏற்படும் தீமை உங்களுக்குத்தான்.)”
Neml 27:93
(நபியே!) கூறுவீராக: எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. அவன் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிப்பான். அச்சமயம் அவற்றை நீங்கள் (உண்மையென) அறிந்து கொள்வீர்கள். (நபியே!) உமது இறைவன் நீங்கள் (-இணைவைப்பவர்கள்) செய்பவற்றை கவனிக்காதவனாக இல்லை. (அவர்கள் ஒரு தவணைக்காகவே விட்டு வைக்கப்படுகின்றனர். கண்டிப்பாக அவர்களுக்கு அழிவும், உமக்கு வெற்றியும் உண்டு.)
Kasas 28:1
தா, சீம், மீம்.[1]
———
[1] ஸூரா பகராவின் 1-ஆவது வசனத்தின் அடிக்குறிப்பைப் பாருங்கள்.
Kasas 28:2
(உமக்கு இறக்கப்படும் வசனங்களாகிய) இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
Kasas 28:3
மூஸா மற்றும் ஃபிர்அவ்னின் செய்தியை உண்மையாக உம்மீது நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்காக நாம் ஓதுகிறோம்.
Kasas 28:4
நிச்சயமாக ஃபிர்அவ்ன் (எகிப்து) பூமியில் (மக்களை) பலவந்தப்படுத்தினான். அங்குள்ளவர்களை பல பிரிவுகளாக ஆக்கினான். அவர்களில் ஒரு வகுப்பாரை பலவீனப்படுத்தி (அவர்களை துன்புறுத்தி)னான். அவர்களின் ஆண் பிள்ளைகளைக் கொன்றான். அவர்களின் பெண் (பிள்ளை)களை வாழவிட்டான். நிச்சயமாக அவன் கெட்டவர்களில் ஒருவனாக இருந்தான்.
Kasas 28:5
இன்னும் பூமியில் பலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீது நாம் அருள்புரிவதற்கும் அவர்களை அரசர்களாக நாம் ஆக்குவதற்கும் அவர்களை (ஃபிர்அவ்னின்) வாரிசுகளாக (-ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்டதன் பின்னர் அவனுடைய பூமிக்கும் சொத்துகளுக்கும் சொந்தக்காரர்களாக) நாம் ஆக்குவதற்கும் நாடினோம்.
Kasas 28:6
இன்னும் (அவனுடைய) பூமியில் அவர்களுக்கு நாம் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ஃபிர்அவ்ன், ஹாமான், இன்னும் அவ்விருவரின் இராணுவங்களுக்கு அவர்கள் மூலமாக (-இஸ்ரவேலர்கள் மூலமாக) அவர்கள் அச்சப்பட்டுக் கொண்டு இருந்ததை நாம் காண்பிப்பதற்கும் (நாடினோம்).
Kasas 28:7
மூஸாவின் தாயாருக்கு (மூஸாவை அவர் பெற்றெடுத்த பின்னர்) நாம் உள்ளத்தில் போட்டோம்: “நீ அவருக்கு (-குழந்தை மூஸாவிற்கு) பாலூட்டு! அவர் மீது (எதிரிகளின் பார்வை பட்டுவிடும் என்று) நீ பயந்தால் அவரை கடலில் எறிந்து விடு! பயப்படாதே! கவலைப்படாதே! நிச்சயமாக நாம் அவரை உம்மிடம் திரும்பக் கொண்டு வருவோம். இன்னும், அவரை தூதர்களில் (ஒருவராக) ஆக்குவோம்.
Kasas 28:8
ஃபிர்அவ்னின் குடும்பத்தினர் அவரைக் கண்டெடுத்தனர் முடிவில் அவர் அவர்களுக்கு எதிரியாகவும் கவலையாகவும் ஆகுவதற்காக. நிச்சயமாக ஃபிர்அவ்ன், ஹாமான், இன்னும் அவ்விருவரின் ராணுவங்கள் பாவிகளாகவே இருந்தனர். (ஆகவே, அவர் அவர்களுக்கு எதிரியாகவும் கவலையாகவும் மாறினார்.)
Kasas 28:9
ஃபிர்அவ்னின் மனைவி கூறினாள்: “(இந்தக் குழந்தை) எனக்கும் உனக்கும் கண்குளிர்ச்சியாகும். அதைக் கொல்லாதீர்கள்! அது நமக்கு நன்மை தரலாம். அல்லது அதை நாம் (நமக்கு) பிள்ளையாக வைத்துக் கொள்ளலாம்.” இன்னும் (இவரின் கரத்தினால்தான் தங்களுக்கு அழிவு ஏற்படும் என்பதை அப்போது) அவர்கள் உணரவில்லை.
Kasas 28:10
மூஸாவின் தாயாருடைய உள்ளம் (மூஸாவின் நினைவைத் தவிர மற்ற அனைத்திலிருந்தும்) வெறுமையாக ஆகிவிட்டது. அவள் நம்பிக்கையாளர்களில் ஆகவேண்டும் என்பதற்காக அவளுடைய உள்ளத்தை நாம் உறுதிப்படுத்தவில்லை யெனில் நிச்சயமாக அவள் அவரை (-மூஸாவை) வெளிப்படுத்தி இருக்கக்கூடும்.
Kasas 28:11
அவள் (-மூஸாவின் தாயார்) அவருடைய சகோதரிக்கு “நீ அவரைப் பின்தொடர்ந்து செல்” என்று கூறினாள். ஆக, அவள் அவரை தூரத்திலிருந்து பார்த்துவிட்டாள். எனினும், அவர்கள் (-ஃபிர்அவ்னின் குடும்பத்தார் இவள் அவருடைய சகோதரி என்பதை) உணரவில்லை.
Kasas 28:12
இன்னும் (அவருடைய தாயாருக்கு) முன்னர் பால் கொடுப்பவர்களை (அவர்களிடமிருந்து பால் அருந்துவதை) அவர் மீது நாம் தடுத்துவிட்டோம். (அவரது சகோதரி) கூறினாள்: ஒரு வீட்டாரை நான் உங்களுக்கு அறிவிக்கலாமா? அவர்கள் உங்களுக்காக அவரை பொறுப்பேற்பார்கள். அவர்கள் அவருக்கு (-மன்னருக்கு) நன்மையை நாடுபவர்கள் ஆவர்.
Kasas 28:13
அவரை அவருடைய தாயாரிடம் நாம் திரும்பக் கொண்டுவந்தோம் அவளது கண் குளிர்வதற்காகவும், அவள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மை என்பதை அவள் அறிவதற்காகவும். என்றாலும் அவர்களில் (-இணைவைப்பவர்களில்) அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் வாக்கு உண்மை என்பதை) அறியமாட்டார்கள்.
Kasas 28:14
அவர் தனது வலிமையை அடைந்து (பின்னர் நாற்பது வயதை அடைந்து) அவர் முழுமை பெற்றபோது அவருக்கு (முந்திய நபிமார்களின் மார்க்கத்தைப் பற்றிய) ஞானத்தையும் (விளக்கத்தையும் முந்திய வேதங்கள் பற்றிய) அறிவையும் நாம் தந்தோம். இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி தருகிறோம்.
Kasas 28:15
அவர் (மூஸா) நகரத்தில் -அதன் வாசிகள் கவனமற்று இருந்த நேரத்தில்- நுழைந்தார். அதில் இருவரைக் கண்டார். அவ்விருவரும் சண்டை செய்தனர். இவர் அவருடைய (-மூஸாவுடைய) பிரிவை சேர்ந்தவர். இன்னும் இவரோ அவருடைய (-மூஸாவுடைய) எதிரிகளில் உள்ளவர். இவருடைய பிரிவைச் சேர்ந்தவன் தனது எதிரிகளில் உள்ளவனுக்கு எதிராக அவரிடம் (மூஸாவிடம்) உதவி கேட்டான். மூஸா அவனை குத்து விட்டார். அவனுடைய கதையை முடித்து விட்டார். (தான் செய்த தவறை உணர்ந்த அவர்) கூறினார்: இது ஷைத்தானின் செயலில் உள்ளது. நிச்சயமாக அவன் தெளிவான வழி கெடுக்கின்ற எதிரி ஆவான்.
Kasas 28:16
(மேலும்) அவர் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கு அநீதி இழைத்தேன். ஆகவே, என்னை மன்னித்துவிடு.” ஆகவே, அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
Kasas 28:17
(மேலும்) அவர் கூறினார்: “என் இறைவா! நீ எனக்கு அருள்புரிந்ததின் மீது சத்தியமாக, ஆகவே, குற்றவாளிகளுக்கு உதவுபவனாக (இனி ஒருக்காலும்) நான் ஆகவே மாட்டேன்.”
Kasas 28:18
(அந்)நகரத்தில் பயந்தவராக (செய்திகளை) எதிர் பார்த்தவராக (மறுநாள்) காலையில் அவர் இருந்தார். அப்போது நேற்று அவரிடத்தில் உதவி தேடியவன் (இன்றும்) அவரை உதவிக்கு கத்தி அழைத்தான். அவனுக்கு மூஸா கூறினார்: “நிச்சயமாக நீ ஒரு தெளிவான மூடன் ஆவாய்.”
Kasas 28:19
ஆக, அவர் அவர்கள் இருவருக்கும் எதிரியாக உள்ளவனை தண்டிக்க நாடியபோது அவன் கூறினான்: “மூஸாவே! நீ என்னை கொல்ல நாடுகிறாயா? நேற்று ஓர் உயிரை நீ கொன்றது போன்று. நீ நாடவில்லை பூமியில் அநியாயக்காரனாக (அடக்குமுறையாளனாக, வன்முறையாளனாக) ஆகுவதைத் தவிர. சீர்திருத்தவாதிகளில் நீ ஆகுவதை நாடவில்லை.”
Kasas 28:20
நகரத்தின் இறுதியிலிருந்து ஓர் ஆடவர் விரைந்தவராக வந்து கூறினார்: “மூஸாவே! (ஃபிர்அவ்னின்) பிரமுகர்கள் உம்மைக் கொல்வதற்கு உமக்காக ஆலோசிக்கின்றனர். ஆகவே, நீர் வெளியேறிவிடும்! நிச்சயமாக நான் உமக்கு (ஆலோசனை கூறியதில்) நன்மையை நாடுபவர்களில் ஒருவன்.”
Kasas 28:21
ஆக, அவர் (தனது குற்றத்தை) பயந்தவராக (தன்னைத் துரத்தி பிடிக்க வருபவர்களை) எதிர்பார்த்தவராக அதிலிருந்து வெளியேறினார். அவர் கூறினார்: என் இறைவா! அநியாயக்கார மக்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்!
Kasas 28:22
மேலும், அவர் மத்யன் நகரத்தின் பக்கம் முன்னோக்கிச் சென்றபோது கூறினார்: “என் இறைவன் எனக்கு நேரான பாதையை வழிகாட்டுவான்.”
Kasas 28:23
அவர் மத்யனுடைய நீர்நிலைக்கு வந்தபோது அதனருகில் மக்களில் (தங்களது கால்நடைகளுக்கு) நீர் புகட்டுகின்ற ஒரு கூட்டத்தைக் கண்டார். அவர்கள் அன்றி (தங்கள் ஆடுகளை மக்களை விட்டும் அங்கும் இங்கும் ஓடுவதை விட்டும்) தடுத்துக் கொண்டிருந்த இரண்டு பெண்களையும் கண்டார். அவர் கேட்டார்: “உங்கள் இருவரின் பிரச்சனை என்ன?” அவ்விருவரும் கூறினர்: நாங்கள் (எங்கள் கால்நடைகளுக்கு) நீர் புகட்ட மாட்டோம். மேய்ப்பவர்கள் (தங்களது கால்நடைகளை இங்கிருந்து) வெளியேற்றாதவரை. எங்கள் தந்தையோ வயதான பெரியவர் ஆவார்.
Kasas 28:24
ஆகவே, அவர் அவ்விருவருக்காக (அவ்விருவரின் கால்நடைகளுக்கு) நீர் புகட்டினார். பிறகு, நிழலின் பக்கம் (அதில் அமர்ந்து இளைப்பாறுவதற்காக) திரும்பிச் சென்றார். அவர் கூறினார்: என் இறைவா! நீ எனக்கு இறக்கிய நன்மையின் பக்கம் (-நல்ல உணவின் பக்கம்) நிச்சயமாக நான் தேவை உள்ளவன். (ஆகவே, என் பசிக்கு உணவளிப்பாயாக!)
Kasas 28:25
அவ்விருவரில் ஒருத்தி (தன் முகத்தை மறைத்தவளாக) வெட்கத்துடன் நடந்தவளாக வந்து கூறினாள்: நிச்சயமாக என் தந்தை உம்மை அழைக்கிறார் நீ எங்களுக்காக நீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்கு தருவதற்காக. அவர் அவரிடம் வந்து, (தனது) வரலாற்றை விவரித்த போது அவர் (-அப்பெண்ணின் தந்தை) கூறினார்: பயப்படாதே! அநியாயக்கார மக்களிடமிருந்து நீ தப்பித்து விட்டாய்.
Kasas 28:26
அவ்விருவரில் ஒருத்தி கூறினாள்: என் தந்தையே! அவரை பணியில் அமர்த்துவீராக! நீர் பணியில் அமர்த்தியவர்களில் சிறந்தவர் (இந்த) நம்பிக்கையாளரான பலசாலி ஆவார்.
Kasas 28:27
அவர் கூறினார்: நான் எனது இந்த இரண்டு பெண்பிள்ளைகளில் ஒருத்தியை உனக்கு மணமுடித்துத்தர விரும்புகிறேன். நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் (என் கால்நடைகளை மேய்ப்பதை) எனக்கு கூலியாக (-மஹராக)த் தரவேண்டும் என்ற நிபந்தனையின் மீது. நீ (எட்டுக்குப் பதிலாக) பத்து ஆண்டுகளை பூர்த்திசெய்தால் அது உன் புறத்திலிருந்து (நீ செய்யும் உதவியாகும்). நான் உன்மீது சிரமம் ஏற்படுத்த விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லோரில் நீ காண்பாய்.
Kasas 28:28
அவர் (-மூஸா) கூறினார்: இது (நாம் செய்த இந்த ஒப்பந்தம்) எனக்கு மத்தியிலும் உமக்கு மத்தியிலும் உள்ளதாகும். (இருவரும் அதை சரியாக நிறைவேற்றுவது கடமையாகும்.) இரண்டு தவணையில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது வரம்பு மீறுதல் கூடாது. (அதைவிட அதிகம் என்னிடம் கேட்கக்கூடாது.) நாம் கூறுவதற்கு அல்லாஹ் பொறுப்பாளன் (சாட்சியாளன்) ஆவான்.
Kasas 28:29
மூஸா (அந்த) தவணையை முடித்து, தனது குடும்பத்தினரோடு (புறப்பட்டு) சென்றபோது மலையின் அருகில் நெருப்பைப் பார்த்தார். தனது குடும்பத்தினரிடம் கூறினார்: “நீங்கள் தாமதியுங்கள், நிச்சயமாக நான் ஒரு நெருப்பைப் பார்த்தேன். அதிலிருந்து ஒரு செய்தியை அல்லது நீங்கள் குளிர்காய்வதற்காக நெருப்பின் கங்கை (-கொள்ளிக் கட்டையை) நான் உங்களிடம் கொண்டு வருகிறேன்.”
Kasas 28:30
அவர் அதனிடம் (அந்த நெருப்புக்கு அருகில்) வந்தபோது பள்ளத்தாக்கின் வலது பக்கத்திலிருந்து அந்த மரத்தின் புனித இடத்தில் (இவ்வாறு) சப்தமிட்டு அழைக்கப்பட்டார்: அதாவது, “மூஸாவே! நிச்சயமாக நான்தான் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் ஆவேன்.”
Kasas 28:31
“இன்னும், உமது கைத்தடியை எறிவீராக!” ஆக, அவர் அது ஒரு பெரிய பாம்பைப்போன்று நெளிவதாக பார்த்தபோது புறமுதுகிட்டவராக திரும்பி ஓடினார். அவர் (பயத்தால் திரும்பி) பார்க்கவில்லை. “மூஸாவே! முன்னே வருவீராக! பயப்படாதீர்! நிச்சயமாக நீர் பாதுகாப்பு பெற்றவர்களில் உள்ளவர்.”
Kasas 28:32
“உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது குறை இன்றி (மின்னும்) வெண்மையாக வெளிவரும். (பாம்பைப் பார்த்து நீர்) பயந்து விட்டதால் உமது கையை உம்முடன் அணைப்பீராக! (அந்த பயம் போய்விடும்.) ஆக, இவை இரண்டும் உமது இறைவன் புறத்திலிருந்து ஃபிர்அவ்ன் இன்னும் அவனது பிரமுகர்கள் பக்கம் (நீர் நபியாக செல்வதற்குரிய) இரண்டு அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள் பாவிகளான மக்களாக இருக்கின்றனர்.” (இவ்வாறு அல்லாஹ் மூஸாவிடம் கூறினான்.)
Kasas 28:33
அவர் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக நான் அவர்களில் ஓர் உயிரைக் கொன்றுள்ளேன். ஆகவே, அவர்கள் என்னை (பழிக்குப்பழி) கொல்வதை நான் பயப்படுகிறேன்.”
Kasas 28:34
“எனது சகோதரர் ஹாரூன் அவர் என்னைவிட தெளிவான நாவன்மை உடையவர். ஆகவே, அவரை என்னுடன் உதவியாக அனுப்பு! அவர் என்னை உண்மைப்படுத்துவார். நிச்சயமாக நான் அவர்கள் என்னை பொய்ப்பிப்பதைப் பயப்படுகிறேன்.”
Kasas 28:35
அவன் (-அல்லாஹ்) கூறினான்: உமது புஜத்தை உமது சகோதரரைக் கொண்டு பலப்படுத்துவோம். உம் இருவருக்கும் ஓர் அத்தாட்சியை ஆக்குவோம். ஆகவே, அவர்கள் உங்கள் இருவர் பக்கம் (எந்த தீங்கையும் கொண்டு) வரமுடியாது. நீங்கள் இருவரும் உங்களை பின்பற்றியவர்களும் தான் நமது அத்தாட்சிகளைக் கொண்டு (ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தையும்) மிகைத்தவர்கள்.
Kasas 28:36
ஆகவே, நமது தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் மூஸா வந்தபோது அவர்கள் கூறினர்: “இது (நீர்) இட்டுக்கட்டப்பட்ட சூனியமே தவிர (வேறு) இல்லை. எங்கள் முந்திய மூதாதைகளில் இதைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதில்லை.
Kasas 28:37
மூஸா கூறினார்: “என் இறைவன் அவனிடமிருந்து நேர்வழியுடன் வந்தவரையும் மறுமையின் (நல்ல) முடிவு யாருக்கு இருக்குமோ அவரையும் நன்கறிந்தவன். நிச்சயமாக, அநியாயக்காரர்கள் (-நிராகரிப்பாளர்கள்) வெற்றிபெற மாட்டார்கள்.”
Kasas 28:38
ஃபிர்அவ்ன் கூறினான்: “பிரமுகர்களே! என்னை அன்றி (வேறு) ஒரு கடவுள் உங்களுக்கு இருப்பதை நான் அறியமாட்டேன். ஆகவே, ஹாமானே! குழைத்த களிமண்ணை நெருப்பூட்டி செங்கல்லாக செய். முகடுள்ள ஒரு உயரமான கோபுரத்தை எனக்காக உருவாக்கு. நான் மூஸாவின் கடவுளை (வானத்தில்) தேடிப்பார்க்க வேண்டும். இன்னும், நான் அவரை பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறேன்.” (அவ்வாறு ஒரு கட்டிடம் கட்டப்பட்டு, அதில் ஏறி, வானத்தை நோக்கி அவன் அம்பெறிய, அது இரத்தக் கரையுடன் திரும்பி வந்தவுடன், நான் மூஸாவின் இறைவனை கொன்றுவிட்டேன் என்றான்.)
Kasas 28:39
அவனும் அவனுடைய ராணுவங்களும் பூமியில் நியாயமின்றி (சத்தியத்தை ஏற்காமல்) பெருமையடித்தனர். நிச்சயமாக அவர்கள் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள் என்று நினைத்தனர்.
Kasas 28:40
ஆகவே, அவனையும் அவனுடைய ராணுவங்களையும் நாம் ஒன்றிணைத்து அவர்களை கடலில் எறிந்தோம். ஆக, (நபியே!) அநியாயக்காரர்களின் (நம்பிக்கையற்றவர்களின்) முடிவு எப்படி இருந்தது என்று பார்ப்பீராக.
Kasas 28:41
அவர்களை நரகத்தின் பக்கம் அழைக்கின்ற முன்னோடிகளாக ஆக்கினோம். மறுமை நாளில் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.
Kasas 28:42
இவ்வுலகத்திலும் மறுமையிலும் சாபத்தை அவர்களுக்குத் தொடர வைத்தோம் (சாபம் அவர்களை விட்டுப் பிரியாமல் சாபத்தை அவர்கள் மீது விதித்து விட்டோம். கடுமையான தண்டனையால்) அவர்கள் அசிங்கப்படுத்தப்பட்டவர்களில் உள்ளவர்கள்.
Kasas 28:43
முந்திய தலைமுறையினர்களை நாம் அழித்த பின்னர் மக்களுக்கு ஒளியாகவும் நேர்வழியாகவும் கருணையாகவும் மூஸாவிற்கு நாம் திட்ட வட்டமாக வேதத்தை தந்தோம். அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும்.
Kasas 28:44
மூஸாவிடம் நாம் (தூதுத்துவத்தையும் பல) சட்டங்களை(யும்) ஒப்படைத்த போது (மலையின்) மேற்கு பக்கத்தில் (நபியே!) நீர் இருக்கவில்லை. (இன்னும் அவருடன்) இருந்தவர்களில் நீர் இருக்கவில்லை. (அப்படி இருந்தும் மூஸாவைப் பற்றிய வரலாற்றை நீங்கள் உண்மையாகக் கூறுகிறீர்கள். ஆகவே, உமது தூதுத்துவத்தை இந்த மக்கள் எப்படி மறுக்கமுடியும்?)
Kasas 28:45
என்றாலும், பல தலைமுறையினரை (அவருக்குப் பின்) நாம் உருவாக்கினோம். அவர்களுக்கு காலம் நீண்டு சென்றது. (ஆகவே, அவர்கள் அல்லாஹ்விடம் கொடுத்த வாக்கை மறந்தனர்.) இன்னும் (நபியே!) நீர் மத்யன் வாசிகளுடன் தங்கி(யவராகவும்) அவர்கள் மீது நமது வசனங்களை நீர் ஓதியவராக(வும்) இல்லை. (இவற்றில் எந்த ஒரு சம்பவத்திலும் நீர் உடன் இருக்கவில்லை.) என்றாலும் (நாம்தான் அவற்றை எல்லாம் செய்தோம். இன்னும்) தூதர்களை அனுப்பக்கூடியவர்களாக நாம்தான் இருந்தோம்.
Kasas 28:46
(அந்த) மலைக்கு அருகில் நாம் (மூஸாவை) அழைத்த போது நீர் (அங்கு) இருக்கவில்லை. எனினும், (முந்திய நபிமார்களின் வரலாறுகளை உமக்கு நாம் எடுத்துக்கூறியதும் உம்மை இவர்களுக்கு தூதராக அனுப்பியதும்) உமது இறைவனின் அருளினால் ஆகும். ஏனெனில், நீர் ஒரு மக்களை -அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக- எச்சரிக்க வேண்டும். உமக்கு முன்னர் அவர்களிடம் எச்சரிப்பாளர் எவரும் வரவில்லை.
Kasas 28:47
அவர்களின் கரங்கள் முற்படுத்தியதால் அவர்களுக்கு ஒரு சோதனை (தண்டனை ஒன்று) ஏற்பட்டு, (பிறகு) எங்கள் இறைவா! நீ எங்களிடம் ஒரு தூதரை அனுப்பி இருக்கக்கூடாதா? நாங்கள் உனது வசனங்களை பின்பற்றி இருப்போமே! நம்பிக்கையாளர்களில் நாங்கள் ஆகியிருப்போமே! என்று அவர்கள் கூறாதிருப்பதற்காக (உம்மை அவர்களுக்கு தூதராக அனுப்பினோம். இல்லை என்றால் உம்மை தூதராக அனுப்புவதற்கு முன்னரே நாம் அவர்களை தண்டித்திருப்போம்.)
Kasas 28:48
நம்மிடமிருந்து சத்திய தூதர் அவர்களுக்கு வந்தபோது, அவர் (-அந்த தூதர்) மூஸாவிற்கு வழங்கப்பட்டதை (-மூஸாவின் வேதம்) போன்ற (வேதம் அவருக்கும்) வழங்கப்பட்டிருக்க வேண்டாமா! என்று கூறினர். இதற்கு முன்னர் மூஸாவிற்கு வழங்கப்பட்டதை இவர்கள் (-இந்த யூதர்கள்) மறுக்கவில்லையா? அவர்கள் (அந்த யூதர்கள்) கூறினர்: (மூஸாவின் வேதமும் ஈஸாவின் வேதமும் இவை இரண்டும்) தங்களுக்குள் உதவி செய்த இரண்டு சூனியங்களாகும். (உமக்கு வேதம் வழங்கப்பட்ட பின்னர்) அவர்கள் கூறினர்: நிச்சயமாக நாங்கள் (மூஸா, ஈஸா, முஹம்மது ஆகியோரின் வேதங்கள்) அனைத்தையும் மறுப்பவர்கள்தான்.
Kasas 28:49
(நபியே!) கூறுவீராக: “அவ்விரண்டை விட (தவ்ராத், இன்ஜீலை விட) மிக்க நேர்வழி காட்டக்கூடிய ஒரு வேதத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள், (தவ்ராத்தும் இன்ஜீலும் சூனியம் என்று நீங்கள் கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், நான் அதை பின்பற்றுகிறேன்.”
Kasas 28:50
அவர்கள் உமக்கு பதிலளிக்கவில்லை என்றால் நீர் அறிவீராக! “நிச்சயமாக அவர்கள் பின்பற்றுவதெல்லாம் தங்கள் மன இச்சைகளைத்தான்.” அல்லாஹ்வின் நேர்வழி அன்றி தனது மன இச்சையை பின்பற்றியவனை விட பெரும் வழிகேடன் யார்? நிச்சயமாக அல்லாஹ் (நிராகரிப்பில் வரம்பு மீறுகின்ற) அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
Kasas 28:51
திட்டவட்டமாக அவர்களுக்கு (-குறைஷிகளுக்கும் யூதர்களுக்கும் இவர்களுக்கு முன்னர் நிராகரித்தவர்களுக்கு இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றிய) செய்தியை நாம் சேர்ப்பித்தோம், அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக.
Kasas 28:52
இதற்கு முன்னர் (-இந்த குர்ஆனுக்கு முன்னர்) நாம் வேதத்தை கொடுத்தவர்கள் (-அவர்களில் உள்ள உண்மை விரும்பிகள்) இதையும் (இந்த குர்ஆனையும் அது கொடுக்கப்பட்ட தூதரையும்) நம்பிக்கை கொள்வார்கள்.
Kasas 28:53
அவர்கள் முன் (இந்த வேதம்) ஓதப்பட்டால் அவர்கள் கூறுவார்கள்: நாங்கள் இதை நம்பிக்கை கொண்டோம். நிச்சயமாக இது எங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மையான வேதம்தான். நிச்சயமாக நாங்கள் இதற்கு முன்னரும் (எங்கள் வேதத்தில் கூறப்பட்ட பிரகாரம் இறுதி நபியையும் இறுதி வேதத்தையும் நம்பிக்கை கொண்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்.
Kasas 28:54
அவர்கள் தங்கள் கூலியை இருமுறை வழங்கப்படுவார்கள் அவர்கள் (முந்திய வேதத்தை பின்பற்றி நடந்ததிலும் இந்தத் தூதரை பின்பற்றியதிலும்) பொறுமையாக (உறுதியாக) இருந்ததால். அவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள்.
Kasas 28:55
அவர்கள் வீணானவற்றை செவிமடுத்தால் அதை புறக்கணித்து விடுவார்கள். எங்களுக்கு எங்கள் செயல்கள் (உடைய கூலி கிடைக்கும்). உங்களுக்கு உங்கள் செயல்கள் (உடைய கூலி கிடைக்கும்). உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். (நாங்கள் உங்களுக்கு தொந்தரவு தரமாட்டோம்.) அறியாதவர்களிடம் (பேசுவதையும் தர்க்கிப்பதையும்) நாங்கள் விரும்ப மாட்டோம். (எனவே, உங்களோடு தர்க்கம் செய்யமாட்டோம்) என்று கூறுவார்கள்.
Kasas 28:56
நிச்சயமாக நீர் விரும்பியவரை நேர்வழி செலுத்த மாட்டீர். (அது உம்மால் முடியாது.) என்றாலும் அல்லாஹ் தான் நாடியவரை நேர்வழி செலுத்துகின்றான். அவன்தான் நேர்வழி செல்பவர்களை மிக அறிந்தவன்.
Kasas 28:57
அவர்கள் கூறினர்: “நாம் உம்முடன் நேர்வழியை பின்பற்றினால் நாங்கள் எங்கள் பூமியிலிருந்து (உடனே) வெளியேற்றப்பட்டிருப்போம்.” (அவர்கள் சொல்வது பொய்.) நாம் அவர்களுக்கு பாதுகாப்பான புனித தலத்தை ஸ்திரப்படுத்தித் தரவில்லையா? எல்லா வகையான கனிகளும் நம் புறத்திலிருந்து உணவாக அங்கு கொண்டு வரப்படுகின்றன. என்றாலும் அவர்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.
Kasas 28:58
எத்தனையோ ஊர்களை நாம் அழித்தோம். அவர்கள் தங்களது வாழ்க்கை வசதியால் வரம்பு மீறி நிராகரித்தனர். இதோ அவர்களது இல்லங்கள் அவர்களுக்கு பின்னர் குறைவாகவே தவிர (பிற மக்களால்) வசிக்கப்படவில்லை. நாமே (அனைத்திற்கும்) வாரிசுகளாக (சொந்தக்காரர்களாக) இருக்கின்றோம்.
Kasas 28:59
உமது இறைவன் (மக்காவை சுற்றி உள்ள) ஊர்களை அழிப்பவனாக இல்லை. அதனுடைய தலைநகரில் (மக்காவில்) ஒரு தூதரை (-உம்மை) அனுப்புகின்ற வரை. அவர் அவர்கள் முன் நமது வசனங்களை ஓதுவார். (எந்த) ஊர்களை(யும்) நாம் அழிப்பவர்களாக இல்லை அதன் வாசிகள் அநியாயக்காரர்களாக இருந்தே தவிர.
Kasas 28:60
நீங்கள் (உலக) பொருளில் எது கொடுக்கப்பட்டீர்களோ அது உலக வாழ்க்கையின் இன்பமும் அதன் அலங்காரமும் ஆகும். அல்லாஹ்விடம் உள்ளதுதான் சிறந்ததும் நிலையானதும் ஆகும். நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?
Kasas 28:61
எவருக்கு நாம் அழகிய வாக்கை வாக்களித்து அவர் அதை (மறுமையில்) சந்திப்பாரோ அவர் இவ்வுலக வாழ்க்கையின் இன்பத்தைக் கொண்டு நாம் இன்பமளித்தவர் போன்று ஆவாரா? பிறகு இவர் (-உலக இன்பம் பெற்ற நிராகரிப்பாளர்) மறுமை நாளில் (வேதனைக்கும் தண்டனைக்கும்) ஆஜர்படுத்தப்பட்டவர்களில் இருப்பார்.
Kasas 28:62
இன்னும் அவன் அவர்களை அழைக்கும் நாளில் நீங்கள் சொல்லிக் கொண்டிருந்த எனது இணைகள் எங்கே? என்று அவன் கேட்பான்.
Kasas 28:63
(அல்லாஹ்வின் சாபத்தின்) வாக்கு கடமையாகிவிட்டவர்கள் (ஷைத்தான்கள்) கூறுவார்கள்: எங்கள் இறைவா! நாங்கள் வழிகெடுத்தவர்கள் இவர்கள்தான். நாங்கள் வழிகெட்டது போன்றே அவர்களையும் நாங்கள் வழிகெடுத்தோம். (இப்போது அவர்களை விட்டும்) உன் பக்கம் நாங்கள் விலகி விட்டோம். அவர்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை.
Kasas 28:64
இன்னும் (அவர்களுக்கு) சொல்லப்படும்: (நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கிய) “உங்கள் தெய்வங்களை அழையுங்கள்” என்று. அவர்கள் அவற்றை அழைப்பார்கள். ஆனால், அவர்களுக்கு அவை பதில் தரமாட்டா. இன்னும், தண்டனையை (கண்கூடாக)க் காண்பார்கள். நிச்சயமாக தாங்கள் நேர்வழி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டுமே! (என்று ஆசைப்படுவார்கள்!)
Kasas 28:65
இன்னும், அவன் அவர்களை அழைக்கின்ற நாளில், “நீங்கள் தூதர்களுக்கு என்ன பதிலளித்தீர்கள்” என்று அவன் கேட்பான்.
Kasas 28:66
அந்நாளில் அவர்கள் மீது செய்திகள் மறைத்து விடும். ஆகவே, அவர்கள் (தங்களுக்குள் ஒருவர் மற்றவரிடம் எதையும்) கேட்டுக்கொள்ள மாட்டார்கள்.
Kasas 28:67
ஆக, யார் திருந்தி, நம்பிக்கைகொண்டு, நற்செயலை செய்வாரோ, அவர் வெற்றியாளர்களில் ஆகக்கூடும்.
Kasas 28:68
உமது இறைவன் தான் நாடுவதை படைக்கிறான். இன்னும் தேர்ந்தெடுக்கிறான். அவர்களுக்கு (இதில் எந்த) விருப்பமும் இல்லை. அல்லாஹ் மகா பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு மிக உயர்ந்தவன்.
Kasas 28:69
அவர்களது நெஞ்சங்கள் மறைக்கின்றவற்றையும் அவர்கள் பகிரங்கப்படுத்துபவற்றையும் உமது இறைவன் நன்கறிவான்.
Kasas 28:70
அவன்தான் அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. இவ்வுலகிலும் மறுமையிலும் அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. தீர்ப்பளிப்பது அவனுக்கே (உரிமையானது)! அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Kasas 28:71
(நபியே!) கூறுவீராக! உங்கள் மீது அல்லாஹ் இரவை மறுமை நாள் வரை நிரந்தரமானதாக ஆக்கிவிட்டால் அல்லாஹ்வை அன்றி வேறு எந்த கடவுள் உங்களுக்கு ஒளியை கொண்டு வருவார்? என்று நீங்கள் அறிவியுங்கள். (இறைவனின் வசனங்களை) செவிமடு(த்து சிந்தி)க்க மாட்டீர்களா?
Kasas 28:72
(நபியே!) கூறுவீராக! அல்லாஹ் உங்கள் மீது பகலை மறுமை நாள் வரை நிரந்தரமாக ஆக்கிவிட்டால் நீங்கள் ஓய்வு எடுக்கக்கூடிய இரவை உங்களுக்கு அல்லாஹ்வை அன்றி வேறு எந்த கடவுள் கொண்டு வருவார். என்பதை அறிவியுங்கள்! நீங்கள் (உங்கள் மீது இறை அருளாக இரவு, பகல் மாறி மாறி வருவதை) பார்(த்து அவற்றை செய்பவன்தான் வணங்கத் தகுதியானவன் என்பதை சிந்தி)க்க மாட்டீர்களா?
Kasas 28:73
அவன் தனது கருணையினால் உங்களுக்கு இரவை, -அதில் நீங்கள் ஓய்வு எடுப்பதற்காகவும்- பகலை, -(அதில்) அவனுடைய அருளை நீங்கள் தேடுவதற்காகவும் நீங்கள் (இந்த அருட்கொடைகளுக்காக அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவும்- ஆக்கினான்.
Kasas 28:74
அவன் அவர்களை அழைக்கின்ற நாளில் நீங்கள் சொல்லிக் கொண்டிருந்த எனது இணைகள் எங்கே? என்று அவன் கேட்பான்.
Kasas 28:75
ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியாளரை (-அதன் தூதரை) நாம் கொண்டு வருவோம். பிறகு, உங்கள் ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள் என்று கூறுவோம். அவர்கள், “நிச்சயமாக உண்மை(யான ஆதாரம்) அல்லாஹ்விற்கே உரியது” என்று அறிந்து கொள்வார்கள். அவர்கள் பொய்யாக கற்பனை செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு தவறிவிடும்.
Kasas 28:76
நிச்சயமாக காரூன் மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவன் அவர்கள் மீது அநியாயம் புரிந்தான். அவனுக்கு நாம் பொக்கிஷங்களிலிருந்து கொடுத்தோம். அவற்றின் சாவிகளை பலமுள்ள கூட்டம் சிரமத்தோடு சுமக்கும். அந்த சமயத்தை நினைவு கூருங்கள்: அவனுடைய மக்கள் அவனுக்கு கூறினர்: பெருமிதம் (மமதை) கொள்ளாதே! நிச்சயமாக அல்லாஹ் பெருமிதப்படுவோரை (மமதை கொள்வோரை) நேசிக்க மாட்டான்.
Kasas 28:77
அல்லாஹ் உமக்கு வழங்கியவற்றில் மறுமை வீட்டை தேடிக்கொள்! உலகத்திலிருந்து (மறுமைக்கு நீ எடுத்துச் செல்லவேண்டிய) உனது பங்கை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நன்மை செய்தது போன்று நீ (மக்களுக்கு) நன்மை செய்! பூமியில் குழப்பத்தை (கலகத்தை, தீமை செய்வதை, மக்களுக்கு அநீதி செய்வதை) விரும்பாதே! நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்வோரை நேசிக்க மாட்டான்.
Kasas 28:78
அவன் கூறினான்: “இதை நான் வழங்கப்பட்டதெல்லாம் என்னிடம் உள்ள அறிவினால்தான்.” இவனுக்கு முன்னர் பல தலைமுறையினர்களில் இவனைவிட பலத்தால் மிகக் கடினமான, (செல்வங்களை) சேகரிப்பதில் மிக அதிகமானவர்களை நிச்சயமாக அல்லாஹ் அழித்திருக்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? (மறுமை நாளில்) குற்றவாளிகள் தங்கள் குற்றங்களைப் பற்றி விசாரிக்கப்படமாட்டார்கள்.
Kasas 28:79
அவன் தனது அலங்காரத்தில் தனது மக்களுக்கு முன் வெளியில் வந்தான். உலக வாழ்க்கையை விரும்புகின்றவர்கள் (அவனைப் பார்த்து) கூறினார்கள்: காரூனுக்கு வழங்கப்பட்டது போன்று நமக்கும் (செல்வங்கள்) இருக்க வேண்டுமே! நிச்சயமாக அவன் பெரும் பேறுடையவன்.
Kasas 28:80
கல்வி வழங்கப்பட்டவர்கள் கூறினர்: உங்களுக்கு நாசம் உண்டாகட்டும்! நம்பிக்கை கொண்டு நன்மை செய்பவருக்கு அல்லாஹ்வின் நற்கூலி மிகச் சிறந்ததாகும். இதற்கு (-இந்த வார்த்தையை கூறுவதற்கு) பொறுமையாளர்களைத் தவிர (மற்றவர்கள்) வாய்ப்பளிக்கப்பட மாட்டார்கள்.
Kasas 28:81
ஆகவே, அவனையும் அவனுடைய இல்லத்தையும் பூமியில் சொருகி விட்டோம். ஆக, அல்லாஹ்வை அன்றி உதவுகின்ற கூட்டம் ஏதும் அவனுக்கு இல்லை. அவன் (தனக்குத்தானே) உதவி செய்துகொள்பவர்களிலும் இல்லை.
Kasas 28:82
நேற்று அவனுடைய இடத்தை (-தகுதியை) ஆசைப்பட்டவர்கள் காலையில் கூறினர்: பார்க்கவில்லையா! நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களில் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகின்றான். (தான் நாடியவர்களுக்கு) சுருக்கி விடுகிறான். அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்க வில்லையென்றால் அவன் நம்மையும் (பூமியில்) சொருகியிருப்பான். பார்க்க வில்லையா! நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.
Kasas 28:83
அந்த மறுமை இல்லமானது - பூமியில் அநியாயத்தையோ குழப்பத்தையோ விரும்பாதவர்களுக்கு அதை நாம் ஆக்குவோம். முடிவான நற்பாக்கியம் இறையச்சமுடையவர்களுக்குத்தான் உண்டு.
Kasas 28:84
எவர் நன்மையை (-லா இலாஹ இல்லல்லாஹ்வை)க் கொண்டு வருவாரோ அவருக்கு அதனால் நற்கூலி கிடைக்கும். எவர்கள் தீமையைக் கொண்டு வருவார்களோ, தீமைகளைச் செய்தவர்கள் அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டார்கள்.
Kasas 28:85
நிச்சயமாக உம்மீது குர்ஆனை இறக்கியவன் உம்மை (உமது) வழமைக்கு (இயல்பான மரணத்திற்கு அல்லது நீர் பிறந்து வளர்ந்த மக்காவிற்கு) திரும்பக் கொண்டு வருவான். (நபியே!) கூறுவீராக! “நேர்வழியைக் கொண்டு வந்தவரையும் தெளிவான வழிகேட்டில் இருப்பவரையும் என் இறைவன் மிக அறிந்தவன்.”
Kasas 28:86
(நபியே!) இந்த வேதம் உமக்கு இறக்கப்படுவதை நீர் எதிர்பார்த்திருக்கவில்லை, என்றாலும் உமது இறைவனின் கருணையினால் தான் (உமக்கு இது அருளப்பட்டது). ஆகவே, நிராகரிப்பாளர்களுக்கு உதவியாளராக அறவே நீர் ஆகிவிடாதீர்.
Kasas 28:87
அல்லாஹ்வின் வசனங்களை (பின்பற்றுவதையும் அவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்வதையும்) விட்டு -அவை உமக்கு இறக்கப்பட்டதன் பின்னர் உம்மை அவர்கள் (-அந்த நிராகரிப்பாளர்கள்) திருப்பி விடவேண்டாம். உமது இறைவன் பக்கம் (உலக மக்களை) அழைப்பீராக! இணைவைப்பவர்களில் நீர் ஒருபோதும் ஆகிவிடாதீர்.
Kasas 28:88
அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை அழைத்து விடாதீர்! (வணங்கி விடாதீர்!) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஒரு கடவுள் இல்லவே இல்லை. எல்லாப் பொருள்களும் அழியக்கூடியவையே அவனது முகத்தைத் தவிர (-அவனைத் தவிர). அதிகாரம் அவனுக்கே உரியது. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Ankebut 29:1
அலிஃப், லாம், மீம்.[1]
———
[1] ஸூரா பகராவின் 1-ஆவது வசனத்தின் அடிக்குறிப்பைப் பாருங்கள்.
Ankebut 29:2
“நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று அவர்கள் கூறுவதால் அவர்கள் சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள்?” என்று மக்கள் நினைத்துக் கொண்டனரா?
Ankebut 29:3
திட்டவட்டமாக நாம் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களை சோதித்தோம். ஆகவே, அல்லாஹ் நிச்சயமாக உண்மையாளர்களையும் அறிவான்; நிச்சயமாக பொய்யர்களையும் அறிவான்.
Ankebut 29:4
அல்லது தீமைகளை செய்பவர்கள் நம்மை முந்தி விடுவார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் தீர்ப்பளிப்பது மிகக் கெட்டது.
Ankebut 29:5
யார் அல்லாஹ்வின் சந்திப்பை ஆதரவு வைக்கின்றவராக இருப்பாரோ நிச்சயமாக, அல்லாஹ்வின் தவணை வரக்கூடியதுதான். அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
Ankebut 29:6
யார் (தனது எதிரியிடம்) போரிடுவாரோ அவர் போரிடுவதெல்லாம் தனக்காகத்தான். நிச்சயமாக, அல்லாஹ் அகிலத்தார்களை விட்டு முற்றிலும் தேவையற்றவன்.
Ankebut 29:7
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளைச் செய்தார்களோ - அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை நாம் நீக்கி விடுவோம்; அவர்கள் (இணைவைப்பின் போது) செய்து கொண்டிருந்ததை விட மிகச் சிறந்ததை நாம் அவர்களுக்கு கூலியாகத் தருவோம்.
Ankebut 29:8
மனிதனுக்கு அவன் தனது பெற்றோரிடம் அழகிய முறையில் நடக்க வேண்டும் என நாம் உபதேசித்தோம். உனக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதை எனக்கு இணை ஆக்கும்படி அவர்கள் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்கு நீ கீழ்ப்படியாதே! என் பக்கமே உங்கள் மீட்சி இருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நான் உங்களுக்குஅறிவிப்பேன்.
Ankebut 29:9
எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ - அவர்களை நாம் நிச்சயமாக நல்லோரில் (நல்லோர் நுழையுமிடத்தில்) நுழைவிப்போம்.
Ankebut 29:10
நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம் என்று கூறுகின்றவர் மக்களில் இருக்கின்றனர். அவர் அல்லாஹ்வின் விஷயத்தில் (-அவனை ஏற்றுக்கொண்டதற்காக) துன்புறுத்தப்பட்டால் மக்களுடைய சோதனையை அல்லாஹ்வின் தண்டனையைப் போன்று ஆக்கிவிடுகிறார். உமது இறைவனிடமிருந்து ஓர் உதவி வந்தால் நிச்சயமாக நாம் உங்களுடன் இருக்கின்றோம் என்று கூறுகின்றனர். அகிலத்தாரின் நெஞ்சங்களில் உள்ளவற்றை மிக அறிந்தவனாக அல்லாஹ் இல்லையா?
Ankebut 29:11
நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை நன்கறிவான். இன்னும் நிச்சயமாக நயவஞ்சகர்களை நன்கறிவான்.
Ankebut 29:12
நம்பிக்கையாளர்களை நோக்கி நிராகரித்தவர்கள் கூறினர்: “நீங்கள் எங்கள் பாதையை (மார்க்கத்தை) பின்பற்றுங்கள்! நாங்கள் உங்கள் தவறுகளை சுமந்து கொள்கிறோம்.” அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) அவர்களுடைய (நம்பிக்கையாளர்களுடைய) தவறுகளில் எதையும் சுமப்பவர்கள் அல்லர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான்.
Ankebut 29:13
அவர்கள் தங்கள் சுமைகளையும் இன்னும் தங்களது சுமைகளுடன் பல சுமைகளையும் நிச்சயம் சுமப்பார்கள். இன்னும் அவர்கள் பொய்யை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தது பற்றி மறுமை நாளில் நிச்சயம் விசாரிக்கப்படுவார்கள்.
Ankebut 29:14
திட்டவட்டமாக நாம் நூஹை அவரது மக்களிடம் அனுப்பினோம். அவர் அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகள் (அவற்றில்) ஐம்பது ஆண்டுகள் தவிர தங்கி இருந்தார். இறுதியில் அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்க அவர்களை வெள்ளப்பிரளயம் பிடித்தது.
Ankebut 29:15
அவரையும் கப்பலுடையவர்களையும் நாம் பாதுகாத்தோம். அதை அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம்.
Ankebut 29:16
இன்னும் இப்ராஹீம் அவர் தனது மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்: அல்லாஹ்வை வணங்குங்கள்; இன்னும் அவனை அஞ்சுங்கள். நீங்கள் அறிகின்றவர்களாக இருந்தால் இதுதான் உங்களுக்கு சிறந்ததாகும்.
Ankebut 29:17
அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குவதெல்லாம் சிலைகளைத்தான். இன்னும் பொய்யை இட்டுக்கட்டுகிறீர்கள். நிச்சயமாக அல்லாஹ்வை அன்றி நீங்கள் எவர்களை வணங்குகின்றீர்களோ அவர்கள் உங்களுக்கு உணவளிக்க உரிமை பெறமாட்டார்கள். ஆகவே, அல்லாஹ்விடம் உணவைத் தேடுங்கள். அவனை வணங்குங்கள்; அவனுக்கு நன்றி செலுத்துங்கள். அவன் பக்கமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Ankebut 29:18
நீங்கள் பொய்ப்பித்தால் உங்களுக்கு முன்னர் பல சமுதாயத்தினர் திட்டமாக பொய்ப்பித்துள்ளனர். தூதர்மீது தெளிவான எடுத்துரைத்தலே தவிர வேறில்லை.
Ankebut 29:19
அல்லாஹ் படைப்புகளை ஆரம்பமாக எப்படி படைத்தான், பிறகு அவற்றை அவன் (எவ்வாறு) மீண்டும் உருவாக்குகிறான் என்பதை அவர்கள் (சிந்தித்துப்) பார்க்கவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு இலகுவானதாகும்.
Ankebut 29:20
(நபியே!) கூறுவீராக! நீங்கள் பூமியில் சுற்றுங்கள்! அவன் (-அல்லாஹ்) படைப்புகளை எப்படி ஆரம்பித்தான் (ஆரம்பத்தில் எப்படி படைத்தான்) என்று பாருங்கள்! பிறகு, அல்லாஹ் மற்றொரு முறை (அவற்றை) உருவாக்குவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உள்ளவன்.
Ankebut 29:21
அவன் தான் நாடியவரை வேதனை செய்வான்; நாடியவருக்கு கருணை காட்டுவான். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Ankebut 29:22
நீங்கள் பூமியில் இன்னும் வானத்தில் (அல்லாஹ்வை) பலவீனப்படுத்தி விட முடியாது. (அவனை விட்டும் நீங்கள் தப்பித்துவிட முடியாது.) இன்னும் அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு ஒரு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை.
Ankebut 29:23
அல்லாஹ்வின் அத்தாட்சிகளையும் அவனது சந்திப்பையும் நிராகரிக்கின்றவர்கள் அவர்கள் எனது கருணையிலிருந்து நிராசை அடைந்து விட்டனர். அவர்கள் - வேதனை தரும் தண்டனை அவர்களுக்கு உண்டு.
Ankebut 29:24
அவருடைய மக்களின் பதில் இல்லை, அவரை கொல்லுங்கள் அல்லது அவரை எரித்து விடுங்கள் என்று கூறியே தவிர. ஆக, அல்லாஹ் அவரை நெருப்பிலிருந்து பாதுகாத்தான். நிச்சயமாக இதில் நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.
Ankebut 29:25
இன்னும் (இப்ராஹீம்) கூறினார்: அல்லாஹ்வை அன்றி நீங்கள் சிலைகளை (வணங்குவதற்காக) எடுத்துக் கொண்டதெல்லாம் இவ்வுலக வாழ்வில் உங்களுக்கு மத்தியில் (சிலைகள் மீது நீங்கள் வைத்துள்ள) அன்பினால்தான். பிறகு, மறுமை நாளில் உங்களில் சிலர் சிலரை மறுத்து விடுவார்கள். உங்களில் சிலர் சிலரை சபிப்பார்கள். உங்கள் (அனைவரின்) தங்குமிடம் நரகம்தான். உங்களுக்கு உதவியாளர்கள் யாரும் இல்லை.
Ankebut 29:26
ஆக, அவரை லூத் நம்பிக்கை கொண்டார். இன்னும் அவர் (-இப்ராஹீம்) கூறினார்: நிச்சயமாக நான் (என் ஊரை விட்டு) வெளியேறி என் இறைவனின் பக்கம் (ஷாம்) செல்கிறேன். நிச்சயமாக அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.
Ankebut 29:27
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் வழங்கினோம். இன்னும் அவரது சந்ததிகளில் நாம் நபித்துவத்தையும் வேதங்களையும் ஆக்கினோம். இன்னும் அவருக்கு அவருடைய கூலியை இம்மையில் நாம் கொடுத்தோம். நிச்சயமாக அவர் மறுமையில் நல்லவர்களில் இருப்பார். (அங்கும் அவருக்கு நிறைவான கூலி கிடைக்கும்.)
Ankebut 29:28
இன்னும் லூத்தை (தூதராக அனுப்பினோம்). அவர் தனது மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக! நிச்சயமாக நீங்கள் மானக்கேடான செயலை செய்கிறீர்கள். அகிலத்தாரில் ஒருவரும் இதை உங்களுக்கு முன் செய்ததில்லை.
Ankebut 29:29
நீங்கள் ஆண்களிடம் (உடல்) உறவு கொள்கிறீர்களா? பாதைகளை தடுக்கிறீர்கள்; உங்கள் சபைகளில் கெட்டசெயலை செய்கிறீர்கள். அவருடைய மக்களின் பதில் இருக்கவில்லை நீர் உண்மையாளர்களில் இருந்தால் அல்லாஹ்வின் தண்டனையை எங்களிடம் கொண்டு வருவீராக என்று கூறியதை தவிர (அவர்கள் வேறு பதில் சொல்லவில்லை).
Ankebut 29:30
அவர் கூறினார்: என் இறைவா! கெடுதி செய்கின்ற மக்களுக்கு எதிராக எனக்கு நீ உதவுவாயாக!
Ankebut 29:31
நமது (வானவத்) தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியுடன் வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் இந்த ஊரில் வசிப்பவர்களை அழிக்கப் போகிறோம். நிச்சயமாக இதில் வசிப்பவர்கள் தீயவர்களாக இருக்கின்றனர்.”
Ankebut 29:32
அவர் கூறினார்: “நிச்சயமாக அதில் (-அவ்வூரில் நபி) லூத் இருக்கிறார்.” அவர்கள் கூறினார்கள்: அதில் உள்ளவர்களை நாங்கள் நன்கறிந்தவர்கள். நிச்சயமாக அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் பாதுகாப்போம். அவருடைய மனைவியைத் தவிர. அவள் மீதம் இருப்பவர்களில் ஆகிவிடுவாள். (பின்னர் தண்டனையில் சிக்கி அழிந்து விடுவாள்.)
Ankebut 29:33
நமது (வானவத்) தூதர்கள் (நபி) லூத்திடம் வந்த போது அவர்களால் அவர் மனம் புண்பட்டார். இன்னும் அவர்களால் அவர் மன நெருக்கடிக்கு உள்ளானார். (சிரமத்திற்கு உள்ளானார்.) அவர்கள் (வானவர்கள்) கூறினார்கள்: பயப்படாதீர்! இன்னும் கவலைப்படாதீர்! நிச்சயமாக நாம் உம்மையும் உமது குடும்பத்தையும் பாதுகாப்போம் உமது மனைவியைத் தவிர. அவள் மீதம் இருப்பவர்களில் ஆகிவிடுவாள். (பின்னர் தண்டனையில் சிக்கி அழிந்து விடுவாள்.)
Ankebut 29:34
நிச்சயமாக நாம் இந்த ஊரில் வசிப்பவர் மீது வானத்திலிருந்து தண்டனையை இறக்குவோம் அவர்கள் பாவம் செய்துகொண்டு இருந்ததால்.
Ankebut 29:35
திட்டவட்டமாக, சிந்தித்து புரிகின்ற மக்களுக்கு அதில் தெளிவான அத்தாட்சியை நாம் விட்டுள்ளோம்.
Ankebut 29:36
இன்னும் ‘மத்யன்’ (ஊர் வாசிகளு)க்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நாம் அனுப்பினோம்). அவர் கூறினார்: என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள்! மறுமை நாளை ஆதரவு வையுங்கள்! பூமியில் தீயவர்களாக இருந்து வரம்பு மீறி அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்.
Ankebut 29:37
அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்களை நிலநடுக்கம் பிடித்தது. அவர்கள் காலையில் தங்கள் இல்லத்தில் இறந்தவர்களாக ஆகிவிட்டனர்.
Ankebut 29:38
இன்னும் ஆதை, ஸமூதை நினைவு கூருங்கள்! அவர்களின் தங்குமிடங்களில் இருந்து உங்களுக்கு (அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது) தெளிவாக இருக்கின்றது. ஷைத்தான் அவர்களுக்கு அவர்களின் செயல்களை அலங்கரித்தான். அவர்களை (நேரான) பாதையிலிருந்து தடுத்தான். அவர்கள் (தங்கள் வழிகேட்டில்) தெளிவானவர்களாக (-தற்பெருமையுடையவர்களாக) இருந்தனர்.
Ankebut 29:39
இன்னும் காரூனையும் ஃபிர்அவ்னையும் ஹாமானையும் நினைவு கூருங்கள்! திட்டவட்டமாக அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் மூஸா வந்தார். அவர்கள் பூமியில் பெருமையடித்தனர். அவர்கள் (நம்மிடமிருந்து) தப்பி விடுபவர்களாக இல்லை.
Ankebut 29:40
(இவர்களில்) ஒவ்வொருவரையும் அவர்களின் பாவத்தினால் நாம் தண்டித்தோம். இவர்களில் எவர்கள் மீது நாம் கல் மழையை அனுப்பினோமோ அவர்களும் உள்ளனர். இன்னும், இவர்களில் இடி முழக்கம் பிடித்தவர்களும் உள்ளனர். இன்னும், இவர்களில் நாம் பூமியில் சொருகியவர்களும் உள்ளனர். இன்னும், இவர்களில் நாம் மூழ்கடித்தவர்களும் உள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக இல்லை. எனினும், அவர்கள் தங்களுக்கே அநியாயம் செய்பவர்களாக இருந்தனர்.
Ankebut 29:41
அல்லாஹ்வை அன்றி (சிலைகளையும் இறந்தவர்களையும் தங்களுக்கு) பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டவர்களுக்கு உதாரணம் சிலந்தியின் உதாரணத்தைப் போல. அது (தனக்கு) ஒரு வீட்டை ஆக்கிக் கொண்டது. நிச்சயமாக வீடுகளில் மிக பலவீனமானது சிலந்தியின் வீடே. அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
Ankebut 29:42
நிச்சயமாக அல்லாஹ் அவனை அன்றி அவர்கள் அழைக்கின்றவற்றை (அது) எதுவாக இருந்தாலும் அறிகின்றான். அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.
Ankebut 29:43
இந்த உதாரணங்கள் -அவற்றை நாம் மக்களுக்கு விவரிக்கின்றோம். அறிஞர்களைத் தவிர (மற்றவர்கள்) இவற்றை சிந்தித்து புரியமாட்டார்கள்.
Ankebut 29:44
அல்லாஹ் வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்கே படைத்தான். நிச்சயமாக இதில் நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
Ankebut 29:45
வேதத்தில் உமக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதை ஓதுவீராக! இன்னும், தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றை விட்டும் தீயகாரியங்களை விட்டும் தடுக்கிறது. அல்லாஹ் (உங்களை) நினைவு கூர்வது (நீங்கள் அவனை நினைவு கூர்வதை விட) மிகப் பெரியது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகின்றான்.
Ankebut 29:46
வேதமுடையவர்களிடம் மிக அழகிய முறையில் அன்றி தர்க்கம் செய்யாதீர்கள். அவர்களில் இருக்கின்ற அநியாயக்காரர்களைத் தவிர. (அவர்கள் உங்களிடம் போர்தொடுத்தால் நீங்களும் அவர்களிடம் போரிடுங்கள்.) இன்னும், நீங்கள் கூறுங்கள்: எங்களுக்கு இறக்கப்பட்டதையும் உங்களுக்கு இறக்கப்பட்டதையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம், எங்கள் கடவுளும் உங்கள் கடவுளும் ஒருவன்தான். நாங்கள் அவனுக்குத்தான் கீழ்ப்பணிந்தவர்கள்.
Ankebut 29:47
(உமக்கு முன்னர் உள்ள நபிமார்களுக்கு வேதத்தை இறக்கிய) இவ்வாறுதான் உமக்கு(ம்) இவ்வேதத்தை நாம் இறக்கினோம். (இதற்கு முன்) வேதத்தை நாம் கொடுத்தவர்கள் (முந்திய இஸ்ரவேலர்களில் பலர்) இதை நம்பிக்கை கொள்வார்கள். இன்னும் இவர்களில் (-உம்முடன் இருக்கின்ற வேதக்காரர்களில்) இதை நம்பிக்கை கொள்கின்றவர்களும் இருக்கின்றனர். நிராகரிப்பாளர்களைத் தவிர (மற்றவர்கள்) நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.
Ankebut 29:48
இதற்கு முன் (வேறு) ஒரு வேதத்தை நீர் ஓதுபவராக இல்லை. உமது வலக்கரத்தால் அதை எழுதுபவராகவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் வீணர்கள் (இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது என்பதில்) நிச்சயமாக சந்தேகம் கொண்டிருப்பார்கள்.
Ankebut 29:49
மாறாக, இது கல்வி கொடுக்கப்பட்டவர்களின் நெஞ்சங்களில் தெளிவான அத்தாட்சிகளாகும். அநியாயக்காரர்களைத் தவிர (மற்றவர்கள்) நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.
Ankebut 29:50
அவர்கள் கூறினர்: “இவர் மீது அவரது இறைவனிடமிருந்து அத்தாட்சிகள் இறக்கப்பட வேண்டாமா!” (நபியே!) கூறுவீராக! அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடம் இருக்கின்றன. நானெல்லாம் தெளிவான எச்சரிப்பாளர்தான்.
Ankebut 29:51
அவர்கள் மீது ஓதப்படுகின்ற இந்த வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியது அவர்களுக்கு போதுமாகாதா? நிச்சயமாக நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு இதில் அருளும் அறிவுரையும் இருக்கின்றன.
Ankebut 29:52
(நபியே!) கூறுவீராக! எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வே சாட்சியால் போதுமானவன். வானங்கள் இன்னும் பூமியில் உள்ளவற்றை அவன் நன்கறிவான். பொய்யை நம்பிக்கை கொண்டவர்கள் இன்னும் அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
Ankebut 29:53
அவர்கள் உம்மிடம் தண்டனையை அவசரமாகக் கேட்கின்றனர். குறிப்பிடப்பட்ட ஒரு தவணை இல்லை என்றால் நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை வந்தே இருக்கும். இன்னும் அவர்கள் உணராதவர்களாக இருக்க, அவர்களிடம் (அது) திடீர் என வரும்.
Ankebut 29:54
அவர்கள் உம்மிடம் தண்டனையை அவசரமாகக் கேட்கின்றனர். நிச்சயமாக நரகம் நிராகரிப்பாளர்களை சூழ்ந்தே உள்ளது.
Ankebut 29:55
அவர்களுக்கு மேலிருந்தும் அவர்களின் கால்களுக்கு கீழே இருந்தும் தண்டனை அவர்களை மூடிக்கொள்கின்ற நாளில் (நரகம் அவர்களை சூழ்ந்து இருக்கும்). நீங்கள் செய்து கொண்டிருந்ததை நீங்கள் சுவையுங்கள் என்று (இறைவன்) கூறுவான்.
Ankebut 29:56
நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக எனது பூமி விசாலமானது. ஆகவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்!
Ankebut 29:57
எல்லா ஆன்மாவும் மரணத்தை சுவைக்கக் கூடியதே! பிறகு, நம்மிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Ankebut 29:58
நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்கள் -அவர்களுக்கு சொர்க்கத்தில் பல அறைகளை நாம் தயார்படுத்திக் கொடுப்போம். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள். அமல் செய்தவர்களின் கூலி மிகச் சிறப்பானதே!
Ankebut 29:59
அவர்கள் பொறுமையாக இருந்தனர். இன்னும், தங்கள் இறைவன் மீதே (நம்பிக்கை வைத்து அவனையே) சார்ந்து இருந்தனர்.
Ankebut 29:60
எத்தனையோ கால்நடைகள் தனது உணவை சுமப்பதில்லை. அல்லாஹ் தான் அவற்றுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
Ankebut 29:61
வானங்களையும் பூமியையும் யார் படைத்தான்? சூரியனையும் சந்திரனையும் (யார்) வசப்படுத்தினான் என்று அவர்களிடம் நீர் கேட்டால், நிச்சயமாக அவர்கள் “அல்லாஹ்தான்” என்று கூறுவார்கள். ஆக, அவர்கள் எப்படி (தெளிவான உண்மையிலிருந்து) திருப்பப்படுகிறார்கள்.
Ankebut 29:62
அல்லாஹ்தான் தனது அடியார்களில் தான் நாடியவருக்கு உணவை விசாலமாக்குகின்றான். இன்னும் (தான் நாடுகின்ற) அவருக்கு (அதை) சுருக்குகின்றான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.
Ankebut 29:63
வானத்திலிருந்து மழையை இறக்கி, அதன் மூலம் பூமியை அது இறந்து விட்ட பின்னர் உயிர்ப்பிப்பவன் யார் என்று நீர் அவர்களிடம் கேட்டால் நிச்சயமாக அவர்கள் “அல்லாஹ்” என்று கூறுவார்கள். (நபியே!) நீர் கூறுவீராக! “புகழ் எல்லாம் அல்லாஹ்விற்கே!” மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் சிந்தித்து புரியமாட்டார்கள்.
Ankebut 29:64
இவ்வுலக வாழ்க்கை வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் தவிர இல்லை. நிச்சயமாக மறுமை வீடு -அதுதான் நிரந்தரமான (வாழ்க்கை உடைய)து. அவர்கள் அறிந்து கொள்ளவேண்டுமே!
Ankebut 29:65
அவர்கள் கப்பலில் பயணித்தால் அல்லாஹ்வை அவனுக்கு மட்டும் வணக்க வழிபாட்டை தூய்மைப்படுத்தியவர்களாக அழைக்கின்றனர். அவன் அவர்களை கரைக்கு காப்பாற்றிக் கொண்டு வந்தால் அப்போது அவர்கள் (அவனுக்கு) இணைவைக்கின்றனர்.
Ankebut 29:66
இறுதியாக, நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை நிராகரிப்பதற்காகவும் (பாவமான காரியங்களைக் கொண்டு) அவர்கள் இன்புறுவதற்காகவும் (இணை கற்பிக்கின்றனர்). அவர்கள் (விரைவில் தங்கள் முடிவை) அறிவார்கள்.
Ankebut 29:67
அவர்கள் (-மக்காவை சேர்ந்த இணைவைப்பாளர்கள்) பார்க்கவில்லையா “நிச்சயமாக நாம் பாதுகாப்பு அளிக்கின்ற புனிதத்தலத்தை (அவர்களுக்கு) ஏற்படுத்தினோம். அவர்களைச் சுற்றி மக்கள் (கொலை கொள்ளைகளால்) சூறையாடப்படுகின்றனர்.” அவர்கள் பொய்யை நம்பிக்கை கொள்கின்றனரா? அல்லாஹ்வின் அருளை நிராகரிக்கின்றனரா?
Ankebut 29:68
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட அல்லது உண்மையை -அது தன்னிடம் வந்த போது- பொய்ப்பித்தவனை (விட) மகா அநியாயக்காரன் யார்? நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா?
Ankebut 29:69
நமக்காக (நமது தீன் உயர்வதற்காக இணைவைப்பாளர்களிடம்) போரிட்டவர்கள் - அவர்களுக்கு நாம் நிச்சயமாக நமது (நேரான) பாதைகளை வழிகாட்டுவோம். நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) நல்லோருடன் இருக்கின்றான்.