Tamilce Meal — Şeyh Ömer Şerif b. Abdüsselâm (kısaltılmış sürüm) — Rum 30:1 – Sâd 38:88
Contents
- Rum 30:1
- Rum 30:2
- Rum 30:3
- Rum 30:4
- Rum 30:5
- Rum 30:6
- Rum 30:7
- Rum 30:8
- Rum 30:9
- Rum 30:10
- Rum 30:11
- Rum 30:12
- Rum 30:13
- Rum 30:14
- Rum 30:15
- Rum 30:16
- Rum 30:17
- Rum 30:18
- Rum 30:19
- Rum 30:20
- Rum 30:21
- Rum 30:22
- Rum 30:23
- Rum 30:24
- Rum 30:25
- Rum 30:26
- Rum 30:27
- Rum 30:28
- Rum 30:29
- Rum 30:30
- Rum 30:31
- Rum 30:32
- Rum 30:33
- Rum 30:34
- Rum 30:35
- Rum 30:36
- Rum 30:37
- Rum 30:38
- Rum 30:39
- Rum 30:40
- Rum 30:41
- Rum 30:42
- Rum 30:43
- Rum 30:44
- Rum 30:45
- Rum 30:46
- Rum 30:47
- Rum 30:48
- Rum 30:49
- Rum 30:50
- Rum 30:51
- Rum 30:52
- Rum 30:53
- Rum 30:54
- Rum 30:55
- Rum 30:56
- Rum 30:57
- Rum 30:58
- Rum 30:59
- Rum 30:60
- Lukman 31:1
- Lukman 31:2
- Lukman 31:3
- Lukman 31:4
- Lukman 31:5
- Lukman 31:6
- Lukman 31:7
- Lukman 31:8
- Lukman 31:9
- Lukman 31:10
- Lukman 31:11
- Lukman 31:12
- Lukman 31:13
- Lukman 31:14
- Lukman 31:15
- Lukman 31:16
- Lukman 31:17
- Lukman 31:18
- Lukman 31:19
- Lukman 31:20
- Lukman 31:21
- Lukman 31:22
- Lukman 31:23
- Lukman 31:24
- Lukman 31:25
- Lukman 31:26
- Lukman 31:27
- Lukman 31:28
- Lukman 31:29
- Lukman 31:30
- Lukman 31:31
- Lukman 31:32
- Lukman 31:33
- Lukman 31:34
- Secde 32:1
- Secde 32:2
- Secde 32:3
- Secde 32:4
- Secde 32:5
- Secde 32:6
- Secde 32:7
- Secde 32:8
- Secde 32:9
- Secde 32:10
- Secde 32:11
- Secde 32:12
- Secde 32:13
- Secde 32:14
- Secde 32:15
- Secde 32:16
- Secde 32:17
- Secde 32:18
- Secde 32:19
- Secde 32:20
- Secde 32:21
- Secde 32:22
- Secde 32:23
- Secde 32:24
- Secde 32:25
- Secde 32:26
- Secde 32:27
- Secde 32:28
- Secde 32:29
- Secde 32:30
- Ahzab 33:1
- Ahzab 33:2
- Ahzab 33:3
- Ahzab 33:4
- Ahzab 33:5
- Ahzab 33:6
- Ahzab 33:7
- Ahzab 33:8
- Ahzab 33:9
- Ahzab 33:10
- Ahzab 33:11
- Ahzab 33:12
- Ahzab 33:13
- Ahzab 33:14
- Ahzab 33:15
- Ahzab 33:16
- Ahzab 33:17
- Ahzab 33:18
- Ahzab 33:19
- Ahzab 33:20
- Ahzab 33:21
- Ahzab 33:22
- Ahzab 33:23
- Ahzab 33:24
- Ahzab 33:25
- Ahzab 33:26
- Ahzab 33:27
- Ahzab 33:28
- Ahzab 33:29
- Ahzab 33:30
- Ahzab 33:31
- Ahzab 33:32
- Ahzab 33:33
- Ahzab 33:34
- Ahzab 33:35
- Ahzab 33:36
- Ahzab 33:37
- Ahzab 33:38
- Ahzab 33:39
- Ahzab 33:40
- Ahzab 33:41
- Ahzab 33:42
- Ahzab 33:43
- Ahzab 33:44
- Ahzab 33:45
- Ahzab 33:46
- Ahzab 33:47
- Ahzab 33:48
- Ahzab 33:49
- Ahzab 33:50
- Ahzab 33:51
- Ahzab 33:52
- Ahzab 33:53
- Ahzab 33:54
- Ahzab 33:55
- Ahzab 33:56
- Ahzab 33:57
- Ahzab 33:58
- Ahzab 33:59
- Ahzab 33:60
- Ahzab 33:61
- Ahzab 33:62
- Ahzab 33:63
- Ahzab 33:64
- Ahzab 33:65
- Ahzab 33:66
- Ahzab 33:67
- Ahzab 33:68
- Ahzab 33:69
- Ahzab 33:70
- Ahzab 33:71
- Ahzab 33:72
- Ahzab 33:73
- Sebe' 34:1
- Sebe' 34:2
- Sebe' 34:3
- Sebe' 34:4
- Sebe' 34:5
- Sebe' 34:6
- Sebe' 34:7
- Sebe' 34:8
- Sebe' 34:9
- Sebe' 34:10
- Sebe' 34:11
- Sebe' 34:12
- Sebe' 34:13
- Sebe' 34:14
- Sebe' 34:15
- Sebe' 34:16
- Sebe' 34:17
- Sebe' 34:18
- Sebe' 34:19
- Sebe' 34:20
- Sebe' 34:21
- Sebe' 34:22
- Sebe' 34:23
- Sebe' 34:24
- Sebe' 34:25
- Sebe' 34:26
- Sebe' 34:27
- Sebe' 34:28
- Sebe' 34:29
- Sebe' 34:30
- Sebe' 34:31
- Sebe' 34:32
- Sebe' 34:33
- Sebe' 34:34
- Sebe' 34:35
- Sebe' 34:36
- Sebe' 34:37
- Sebe' 34:38
- Sebe' 34:39
- Sebe' 34:40
- Sebe' 34:41
- Sebe' 34:42
- Sebe' 34:43
- Sebe' 34:44
- Sebe' 34:45
- Sebe' 34:46
- Sebe' 34:47
- Sebe' 34:48
- Sebe' 34:49
- Sebe' 34:50
- Sebe' 34:51
- Sebe' 34:52
- Sebe' 34:53
- Sebe' 34:54
- Fatır 35:1
- Fatır 35:2
- Fatır 35:3
- Fatır 35:4
- Fatır 35:5
- Fatır 35:6
- Fatır 35:7
- Fatır 35:8
- Fatır 35:9
- Fatır 35:10
- Fatır 35:11
- Fatır 35:12
- Fatır 35:13
- Fatır 35:14
- Fatır 35:15
- Fatır 35:16
- Fatır 35:17
- Fatır 35:18
- Fatır 35:19
- Fatır 35:20
- Fatır 35:21
- Fatır 35:22
- Fatır 35:23
- Fatır 35:24
- Fatır 35:25
- Fatır 35:26
- Fatır 35:27
- Fatır 35:28
- Fatır 35:29
- Fatır 35:30
- Fatır 35:31
- Fatır 35:32
- Fatır 35:33
- Fatır 35:34
- Fatır 35:35
- Fatır 35:36
- Fatır 35:37
- Fatır 35:38
- Fatır 35:39
- Fatır 35:40
- Fatır 35:41
- Fatır 35:42
- Fatır 35:43
- Fatır 35:44
- Fatır 35:45
- Yâsin 36:1
- Yâsin 36:2
- Yâsin 36:3
- Yâsin 36:4
- Yâsin 36:5
- Yâsin 36:6
- Yâsin 36:7
- Yâsin 36:8
- Yâsin 36:9
- Yâsin 36:10
- Yâsin 36:11
- Yâsin 36:12
- Yâsin 36:13
- Yâsin 36:14
- Yâsin 36:15
- Yâsin 36:16
- Yâsin 36:17
- Yâsin 36:18
- Yâsin 36:19
- Yâsin 36:20
- Yâsin 36:21
- Yâsin 36:22
- Yâsin 36:23
- Yâsin 36:24
- Yâsin 36:25
- Yâsin 36:26
- Yâsin 36:27
- Yâsin 36:28
- Yâsin 36:29
- Yâsin 36:30
- Yâsin 36:31
- Yâsin 36:32
- Yâsin 36:33
- Yâsin 36:34
- Yâsin 36:35
- Yâsin 36:36
- Yâsin 36:37
- Yâsin 36:38
- Yâsin 36:39
- Yâsin 36:40
- Yâsin 36:41
- Yâsin 36:42
- Yâsin 36:43
- Yâsin 36:44
- Yâsin 36:45
- Yâsin 36:46
- Yâsin 36:47
- Yâsin 36:48
- Yâsin 36:49
- Yâsin 36:50
- Yâsin 36:51
- Yâsin 36:52
- Yâsin 36:53
- Yâsin 36:54
- Yâsin 36:55
- Yâsin 36:56
- Yâsin 36:57
- Yâsin 36:58
- Yâsin 36:59
- Yâsin 36:60
- Yâsin 36:61
- Yâsin 36:62
- Yâsin 36:63
- Yâsin 36:64
- Yâsin 36:65
- Yâsin 36:66
- Yâsin 36:67
- Yâsin 36:68
- Yâsin 36:69
- Yâsin 36:70
- Yâsin 36:71
- Yâsin 36:72
- Yâsin 36:73
- Yâsin 36:74
- Yâsin 36:75
- Yâsin 36:76
- Yâsin 36:77
- Yâsin 36:78
- Yâsin 36:79
- Yâsin 36:80
- Yâsin 36:81
- Yâsin 36:82
- Yâsin 36:83
- Saffat 37:1
- Saffat 37:2
- Saffat 37:3
- Saffat 37:4
- Saffat 37:5
- Saffat 37:6
- Saffat 37:7
- Saffat 37:8
- Saffat 37:9
- Saffat 37:10
- Saffat 37:11
- Saffat 37:12
- Saffat 37:13
- Saffat 37:14
- Saffat 37:15
- Saffat 37:16
- Saffat 37:17
- Saffat 37:18
- Saffat 37:19
- Saffat 37:20
- Saffat 37:21
- Saffat 37:22
- Saffat 37:23
- Saffat 37:24
- Saffat 37:25
- Saffat 37:26
- Saffat 37:27
- Saffat 37:28
- Saffat 37:29
- Saffat 37:30
- Saffat 37:31
- Saffat 37:32
- Saffat 37:33
- Saffat 37:34
- Saffat 37:35
- Saffat 37:36
- Saffat 37:37
- Saffat 37:38
- Saffat 37:39
- Saffat 37:40
- Saffat 37:41
- Saffat 37:42
- Saffat 37:43
- Saffat 37:44
- Saffat 37:45
- Saffat 37:46
- Saffat 37:47
- Saffat 37:48
- Saffat 37:49
- Saffat 37:50
- Saffat 37:51
- Saffat 37:52
- Saffat 37:53
- Saffat 37:54
- Saffat 37:55
- Saffat 37:56
- Saffat 37:57
- Saffat 37:58
- Saffat 37:59
- Saffat 37:60
- Saffat 37:61
- Saffat 37:62
- Saffat 37:63
- Saffat 37:64
- Saffat 37:65
- Saffat 37:66
- Saffat 37:67
- Saffat 37:68
- Saffat 37:69
- Saffat 37:70
- Saffat 37:71
- Saffat 37:72
- Saffat 37:73
- Saffat 37:74
- Saffat 37:75
- Saffat 37:76
- Saffat 37:77
- Saffat 37:78
- Saffat 37:79
- Saffat 37:80
- Saffat 37:81
- Saffat 37:82
- Saffat 37:83
- Saffat 37:84
- Saffat 37:85
- Saffat 37:86
- Saffat 37:87
- Saffat 37:88
- Saffat 37:89
- Saffat 37:90
- Saffat 37:91
- Saffat 37:92
- Saffat 37:93
- Saffat 37:94
- Saffat 37:95
- Saffat 37:96
- Saffat 37:97
- Saffat 37:98
- Saffat 37:99
- Saffat 37:100
- Saffat 37:101
- Saffat 37:102
- Saffat 37:103
- Saffat 37:104
- Saffat 37:105
- Saffat 37:106
- Saffat 37:107
- Saffat 37:108
- Saffat 37:109
- Saffat 37:110
- Saffat 37:111
- Saffat 37:112
- Saffat 37:113
- Saffat 37:114
- Saffat 37:115
- Saffat 37:116
- Saffat 37:117
- Saffat 37:118
- Saffat 37:119
- Saffat 37:120
- Saffat 37:121
- Saffat 37:122
- Saffat 37:123
- Saffat 37:124
- Saffat 37:125
- Saffat 37:126
- Saffat 37:127
- Saffat 37:128
- Saffat 37:129
- Saffat 37:130
- Saffat 37:131
- Saffat 37:132
- Saffat 37:133
- Saffat 37:134
- Saffat 37:135
- Saffat 37:136
- Saffat 37:137
- Saffat 37:138
- Saffat 37:139
- Saffat 37:140
- Saffat 37:141
- Saffat 37:142
- Saffat 37:143
- Saffat 37:144
- Saffat 37:145
- Saffat 37:146
- Saffat 37:147
- Saffat 37:148
- Saffat 37:149
- Saffat 37:150
- Saffat 37:151
- Saffat 37:152
- Saffat 37:153
- Saffat 37:154
- Saffat 37:155
- Saffat 37:156
- Saffat 37:157
- Saffat 37:158
- Saffat 37:159
- Saffat 37:160
- Saffat 37:161
- Saffat 37:162
- Saffat 37:163
- Saffat 37:164
- Saffat 37:165
- Saffat 37:166
- Saffat 37:167
- Saffat 37:168
- Saffat 37:169
- Saffat 37:170
- Saffat 37:171
- Saffat 37:172
- Saffat 37:173
- Saffat 37:174
- Saffat 37:175
- Saffat 37:176
- Saffat 37:177
- Saffat 37:178
- Saffat 37:179
- Saffat 37:180
- Saffat 37:181
- Saffat 37:182
- Sâd 38:1
- Sâd 38:2
- Sâd 38:3
- Sâd 38:4
- Sâd 38:5
- Sâd 38:6
- Sâd 38:7
- Sâd 38:8
- Sâd 38:9
- Sâd 38:10
- Sâd 38:11
- Sâd 38:12
- Sâd 38:13
- Sâd 38:14
- Sâd 38:15
- Sâd 38:16
- Sâd 38:17
- Sâd 38:18
- Sâd 38:19
- Sâd 38:20
- Sâd 38:21
- Sâd 38:22
- Sâd 38:23
- Sâd 38:24
- Sâd 38:25
- Sâd 38:26
- Sâd 38:27
- Sâd 38:28
- Sâd 38:29
- Sâd 38:30
- Sâd 38:31
- Sâd 38:32
- Sâd 38:33
- Sâd 38:34
- Sâd 38:35
- Sâd 38:36
- Sâd 38:37
- Sâd 38:38
- Sâd 38:39
- Sâd 38:40
- Sâd 38:41
- Sâd 38:42
- Sâd 38:43
- Sâd 38:44
- Sâd 38:45
- Sâd 38:46
- Sâd 38:47
- Sâd 38:48
- Sâd 38:49
- Sâd 38:50
- Sâd 38:51
- Sâd 38:52
- Sâd 38:53
- Sâd 38:54
- Sâd 38:55
- Sâd 38:56
- Sâd 38:57
- Sâd 38:58
- Sâd 38:59
- Sâd 38:60
- Sâd 38:61
- Sâd 38:62
- Sâd 38:63
- Sâd 38:64
- Sâd 38:65
- Sâd 38:66
- Sâd 38:67
- Sâd 38:68
- Sâd 38:69
- Sâd 38:70
- Sâd 38:71
- Sâd 38:72
- Sâd 38:73
- Sâd 38:74
- Sâd 38:75
- Sâd 38:76
- Sâd 38:77
- Sâd 38:78
- Sâd 38:79
- Sâd 38:80
- Sâd 38:81
- Sâd 38:82
- Sâd 38:83
- Sâd 38:84
- Sâd 38:85
- Sâd 38:86
- Sâd 38:87
- Sâd 38:88
Rum 30:1
அலிஃப், லாம், மீம்.[1]
———
[1] ஸூரா பகராவின் 1-ஆவது வசனத்தின் அடிக்குறிப்பைப் பாருங்கள்.
Rum 30:2
ரோமர்கள் தோற்கடிக்கப்பட்டனர்,
Rum 30:3
(அவர்கள் தோற்கடிக்கப்பட்டது ஷாம் தேசமாகிய) பூமியின் கீழ்ப்பகுதியில். அவர்கள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் (விரைவில் தங்கள் எதிரிகளை வெற்றிகொண்டு) தோற்கடிப்பார்கள்.
Rum 30:4
சில ஆண்டுகளில் இது நடைபெறும். (இதற்கு) முன்னரும் (இதற்கு) பின்னரும் அல்லாஹ்விற்கே அதிகாரம் உரியது. (ஆகவே, அவன் நாடியவர்களுக்கு வெற்றி அளிக்கிறான்.) இன்னும், அந்நாளில் நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
Rum 30:5
(அந்த மகிழ்ச்சி) அல்லாஹ்வின் உதவியினால் ஆகும். அவன், தான் நாடியவர்களுக்கு உதவுகிறான். அவன் மிகைத்தவன், பெரும் கருணையாளன்.
Rum 30:6
அல்லாஹ் (இதை) வாக்களிக்கின்றான். அல்லாஹ் தனது வாக்கை மாற்ற மாட்டான். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) அறியமாட்டார்கள்.
Rum 30:7
அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் வெளிரங்கத்தைத்தான் அறிவார்கள். அவர்கள்தான் மறுமையைப் பற்றி கவனமற்றவர்கள்.
Rum 30:8
அவர்கள் தங்களைத் தாமே சிந்தித்து பார்க்க மாட்டார்களா? அல்லாஹ் வானங்களையும் பூமியையும் அந்த இரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றையும் உண்மையான காரியத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட தவணைக்காகவும் தவிர படைக்கவில்லை. நிச்சயமாக மக்களில் அதிகமானவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நிராகரிப்பவர்கள்தான்.
Rum 30:9
இவர்கள் பூமியில் பயணிக்க வேண்டாமா? தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்ப்பார்களே. இவர்களை விட பலத்தால் அவர்கள் கடுமையானவர்களாக இருந்தார்கள். பூமியை உழுதார்கள். இன்னும், இவர்கள் அதை செழிப்பாக்கியதைவிட அதிகமாக அவர்கள் அதை செழிப்பாக்கினார்கள். இன்னும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களுடைய தூதர்கள் வந்தனர். அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக இல்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்பவர்களாக இருந்தனர்.
Rum 30:10
பிறகு, தீமை செய்தவர்களின் முடிவு மிக தீயதாகவே இருந்தது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை பொய்ப்பித்தனர். இன்னும், அவற்றை பரிகாசம் செய்பவர்களாக இருந்தனர்.
Rum 30:11
அல்லாஹ்தான் படைப்புகளை தொடக்கமாக படைக்கிறான். பிறகு, அவற்றை மீண்டும் உருவாக்குகின்றான். பிறகு, அவனிடமே, நீங்கள் மீண்டும் கொண்டுவரப்படுவீர்கள்.
Rum 30:12
இன்னும் மறுமை நிகழ்கின்ற நாளில் குற்றவாளிகள் பெரும் சிரமப்படுவார்கள்.
Rum 30:13
அவர்களுக்கு அவர்க(ளை வழிகெடுத்த அவர்க)ளுடைய நண்பர்களில் பரிந்துரையாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இன்னும், அவர்கள் (-வழிகெடுத்தவர்கள்) (தங்களால் வழிகெடுக்கப்பட்ட) தங்களது நண்பர்க(ள் தங்களுக்கு செய்த வழிபாடுக)ளை நிராகரிப்பவர்களாக ஆகிவிடுவார்கள்.
Rum 30:14
இன்னும், மறுமை நிகழும் நாளில் - அந்நாளில் அவர்கள் (ஒவ்வொருவரும் தத்தமது அமலுக்குரிய கூலியைப் பெறுவதற்கு) பிரிந்து விடுவார்கள்.
Rum 30:15
ஆக, எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ, அவர்கள் (சொர்க்கத்) தோட்டத்தில் மகிழ்விக்கப்படுவார்கள்.
Rum 30:16
ஆக, எவர்கள் நிராகரித்தார்களோ, நமது வசனங்களையும் மறுமையின் சந்திப்பையும் பொய்ப்பித்தார்களோ அவர்கள் (நரக) தண்டனைக்கு கொண்டு வரப்படுவார்கள்.
Rum 30:17
ஆகவே, நீங்கள் மாலைப் பொழுதை அடையும் போதும் (-சூரியன் மறைந்த பின்னரும்) காலைப்பொழுதை அடையும் போதும் (சூரியன் உதிக்கும் முன்னரும் -மஃரிபு மற்றும் ஃபஜ்ரு தொழுகையை நிறைவேற்றி) அல்லாஹ்வை துதியுங்கள்.
Rum 30:18
வானங்களிலும் பூமியிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியன. இன்னும், மாலையிலும் நீங்கள் மதியத்தை அடையும் நேரத்திலும் (அல்லாஹ்வை துதியுங்கள்).
Rum 30:19
அவன், இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளியாக்குகின்றான்; உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளியாக்குகின்றான். பூமியை -அது இறந்த பின்னர்- உயிர்ப்பிக்கின்றான். இவ்வாறே நீங்களும் (பூமியிலிருந்து உயிருடன்) வெளியேற்றப்படுவீர்கள்.
Rum 30:20
அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான் அவன் உங்களை (உங்கள் மூல பிதாவை) மண்ணிலிருந்து படைத்தது. பிறகு, (அவரின் சந்ததிகளாகிய) நீங்களோ மனிதர்களாக (பூமியில் உணவைத்தேடி பல இடங்களுக்கு) பிரிந்து செல்கிறீர்கள்.
Rum 30:21
அவன் உங்களுக்காக உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளைப் படைத்தது, அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். அவர்களிடம் நீங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காக (அவர்களைப் படைத்தான்). உங்களுக்கு மத்தியில் அன்பையும் கருணையையும் அவன் ஏற்படுத்தினான். நிச்சயமாக சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
Rum 30:22
(அவன்) வானங்களையும் பூமியையும் படைத்ததும் உங்கள் மொழிகளும் உங்கள் நிறங்களும் வேறுபட்டு இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். நிச்சயமாக இதில் கல்விமான்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.
Rum 30:23
அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான் நீங்கள் இரவிலும் பகலிலும் தூங்குவதும் அவனுடைய அருளிலிருந்து நீங்கள் தேடுவதும். நிச்சயமாக (உபதேசங்களை) செவியேற்கின்ற மக்களுக்கு இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
Rum 30:24
அவனுடைய அத்தாட்சிகளில் இருந்து, அவன் உங்களுக்கு மின்னலை பயமாகவும் ஆசையாகவும் காட்டுகின்றான். இன்னும், வானத்திலிருந்து மழையை இறக்குகின்றான். அதன் மூலம் பூமியை -அது மரணித்த பின்னர்- உயிர்ப்பிக்கின்றான். நிச்சயமாக இதில் சிந்தித்து புரிகின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.
Rum 30:25
அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான் வானமும் பூமியும் அவனுடைய கட்டளையின்படி (அவற்றுக்குரிய இடத்தில் நிலையாக) நிற்பது. பிறகு, அவன் உங்களை பூமியிலிருந்து ஒருமுறை அழைத்தால் அப்போது நீங்கள் (அதிலிருந்து) வெளியேறுவீர்கள்.
Rum 30:26
வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் அவனுக்கே உரியவர்கள். எல்லோரும் அவனுக்கே (வாழ்விலும் சாவிலும் உயிர்த்தெழுவதிலும்) பணிந்து நடக்கின்றனர். (அவனது விதியை அவர்கள் மீற முடியாது)
Rum 30:27
அவன்தான் படைப்புகளை ஆரம்பமாக படைக்கின்றான். பிறகு, (அவை அழிந்த பின்னர்) அவன் அவற்றை மீண்டும் படைக்கின்றான். அது அவனுக்கு மிக இலகுவானதே. வானங்களிலும் பூமியிலும் மிக உயர்ந்த தன்மைகள் அவனுக்கே உரியன. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.
Rum 30:28
அவன் உங்களுக்கு உங்களிலிருந்தே ஓர் உதாரணத்தை விவரிக்கின்றான். நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில் உங்களுக்கு உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களில் (-உங்கள் அடிமைகளில்) பங்காளிகள் யாரும் இருந்து, நீங்கள் (அனைவரும்) அதில் சமமானவர்களாக ஆகிவிட்டீர்களா? (அப்படி இல்லையே!) அவர்களை (-உங்களுக்கு நாம் கொடுத்த செல்வத்தில் உங்கள் அடிமைகளை உங்களுடன் சேர்த்துக் கொள்ள) நீங்கள் பயப்படுகிறீர்கள் -(அல்லவா?) நீங்கள் (-சுதந்திரமானவர்கள்) உங்களை -(உங்களில் ஒருவர் மற்றவர் தனது சொத்தில் பங்காளியாக ஆகுவதை) பயப்படுவது போன்று. (சுதந்திரமான பங்காளிகளை பயப்படுவது போல நீங்கள் உங்கள் அடிமைகளையும் பயப்படுகிறீர்கள், அவர்களை கூட்டாக்கிக் கொண்டால் சுதந்திரமாக செயல்பட முடியாதென்று. ஆகவே, அல்லாஹ் எப்படி தனது அடியார்களை தனக்கு சொந்தமானவற்றில் கூட்டாக்கிக் கொள்வான்? அவர்களுக்கு அவனுடன் கூட்டாக எத்தகுதியும் இல்லையே!) சிந்தித்துப் புரிகின்ற மக்களுக்கு (நம்) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.
Rum 30:29
மாறாக, அநியாயக்காரர்கள் கல்வி அறிவு இன்றி தங்கள் மன இச்சைகளை பின்பற்றுகின்றனர். அல்லாஹ் எவரை வழிக்கெடுத்தானோ அவரை யார் நேர்வழி செலுத்துவார்? அவர்களுக்கு உதவியாளர்களில் எவரும் இல்லை.
Rum 30:30
ஆகவே, (நபியே! நீர் இஸ்லாமிய கொள்கையில்) உறுதியுடையவராக உமது முகத்தை(யும் உமது உம்மத்தின் முகங்களையும் அந்த) மார்க்கத்தின் பக்கம் நிறுத்துவீராக! அல்லாஹ்வுடைய இயற்கை மார்க்கம் அது. அதன் மீது தான் அல்லாஹ் மக்களை இயற்கையாக அமைத்தான். அல்லாஹ்வின் படைப்பை (தீனை) மாற்றக்கூடாது. இதுதான் நிலையான (நீதமான, நேரான) மார்க்கம் ஆகும். என்றாலும் மக்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.
Rum 30:31
அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவர்களாக (இருங்கள்). இன்னும் அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். இன்னும், தொழுகையை நிறைவேற்றுங்கள். இணைவைப்பவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
Rum 30:32
தங்களது மார்க்கத்தை பிரித்து பல பிரிவுகளாக ஆகிவிட்டவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள். ஒவ்வொரு கட்சியும் தங்களிடம் உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றனர்.
Rum 30:33
மக்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்தால் தங்கள் இறைவனை -அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவர்களாக- அழைக்கின்றனர். பிறகு, அவன் தன் புறத்திலிருந்து அவர்களுக்கு (தனது) அருளை சுவைக்க வைத்தால் அப்போது அவர்களில் ஒரு சாரார் தங்கள் இறைவனுக்கு இணைவைக்கின்றனர்.
Rum 30:34
நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை (-நமது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல்) நிராகரிப்பதற்காக (இவ்வாறு இணைவைக்கின்றனர்). (இணைவைப்போரே! சிறிது காலம்) சுகம் அனுபவியுங்கள்! (விரைவில் உங்கள் இறைவனிடம் நீங்கள் வரும்போது உங்கள் முடிவை) நீங்கள் அறிவீர்கள்.
Rum 30:35
(அவர்களின் இணைவைப்புக்கு) அவர்கள் மீது நாம் ஓர் ஆதாரத்தை இறக்கினோமா? அவர்கள் எதை அவனுக்கு இணைவைப்பவர்களாக இருந்தார்களோ அதைப் பற்றி (அது சரி என்று) அது (-அந்த ஆதாரம்) பேசுகிறதா?
Rum 30:36
மக்களுக்கு நாம் (நமது) அருளை சுவைக்க வைத்தால் அவர்கள் அதனால் மகிழ்ச்சியடைகின்றனர். அவர்களின் கரங்கள் முற்படுத்தியவற்றினால் அவர்களை ஒரு தீமை அடைந்தால் அப்போது அவர்கள் நிராசையடைந்து விடுகின்றனர்.
Rum 30:37
இவர்கள் பார்க்க வேண்டாமா? நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவருக்கு உணவை விசாலமாக்குகின்றான். இன்னும், (தான் நாடியவருக்கு) சுருக்குகின்றான். நிச்சயமாக நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Rum 30:38
ஆகவே, உறவினருக்கு அவருடைய உரிமையையும் வறியவருக்கும் வழிப்போக்கருக்கும் (அவரவர்களுடைய உரிமைகளையும்) கொடுப்பீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுதான் சிறந்ததாகும். இவர்கள்தான் வெற்றியாளர்கள்.
Rum 30:39
மக்களின் செல்வங்களில் வளர்ச்சி காணுவதற்காக (பிரதிபலனை எதிர்பார்த்து) அன்பளிப்புகளிலிருந்து எதை நீங்கள் கொடுத்தீர்களோ அது அல்லாஹ்விடம் வளர்ச்சி காணாது. அல்லாஹ்வின் முகத்தை நீங்கள் நாடியவர்களாக தர்மங்களிலிருந்து எதை நீங்கள் கொடுத்தீர்களோ (அதுதான் வளர்ச்சி அடையும். அப்படி கொடுக்கின்ற) அவர்கள்தான் (தங்கள் செல்வங்களையும் நன்மைகளையும்) பன்மடங்காக்கிக் கொள்பவர்கள்.
Rum 30:40
அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான். பிறகு, அவன் உங்களுக்கு உணவளித்தான். பிறகு, அவன் உங்களை மரணிக்க வைப்பான். பிறகு, அவன் உங்களை உயிர்ப்பிப்பான். இவற்றில் (-இந்தக் காரியங்களில்) எதையும் செய்கின்றவர் உங்கள் தெய்வங்களில் இருக்கின்றாரா? அவன் (-அல்லாஹ்) மிக பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக உயர்ந்தவன்.
Rum 30:41
தரையிலும் கடலிலும் (நகரங்களிலும் கிராமங்களிலும்) பாவம் பெருகி விட்டது. மக்களின் கரங்கள் செய்தவற்றினால் (அநியாயங்கள் அதிகரித்து விட்டன). இறுதியாக, அவர்கள் செய்தவற்றின் (-அவர்களின் பாவங்களின்) சிலவற்றை (-அதற்குரிய தண்டனையை) அவர்களுக்கு சுவைக்க வைப்போம்- அவர்கள் (உண்மையின் பக்கம்) திரும்புவதற்காக.
Rum 30:42
(நபியே! இணை வைப்பவர்களை நோக்கி) கூறுவீராக! பூமியில் பயணியுங்கள். (உங்களுக்கு) முன்னிருந்தவர்களுடைய முடிவு எப்படி இருந்தது என்று பாருங்கள். அவர்களில் அதிகமானவர்கள் இணை வைப்பவர்களாக இருந்தனர்.
Rum 30:43
ஆக, (நபியே!) அதை தடுக்க முடியாத ஒரு நாள் அல்லாஹ்விடமிருந்து வருவதற்கு முன்னர் உமது முகத்தை நேரான மார்க்கத்தின் பக்கம் நிறுத்துவீராக! அந்நாளில் அவர்கள் (-மக்கள் இரண்டு பிரிவுகளாக) பிரிந்து விடுவார்கள்.
Rum 30:44
யார் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு அவர் மீதுதான் கேடாக முடியும். எவர்கள் நன்மை செய்வார்களோ அவர்கள் தங்களுக்குத்தான் (சொர்க்கத்தில் சொகுசான படுக்கைகளை) விரித்துக் கொள்கிறார்கள்.
Rum 30:45
இறுதியாக, நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களுக்கு அவன் தன் அருளிலிருந்து கூலி கொடுப்பான். (மேலும், பாவிகளுக்கு தண்டனை கொடுப்பான்). நிச்சயமாக அவன் நிராகரிப்பாளர்களை நேசிக்க மாட்டான்.
Rum 30:46
இன்னும், காற்றுகளை (-மழையை) நற்செய்தி தரக்கூடியவையாக அவன் அனுப்புவதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். இன்னும் தனது அருளை (-மழையை) உங்களுக்கு சுவைக்க வைப்பதற்கும் கப்பல்கள் அவனுடைய கட்டளையின்படி (கடலில்) செல்வதற்கும் அவனது அருளிலிருந்து நீங்கள் (-வாழ்வாதாரத்தை) தேடுவதற்கும் நீங்கள் நன்றி செலுத்துவதற்கும் (அவன் உங்களுக்கு காற்றுகளை அனுப்புகின்றான்).
Rum 30:47
திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்களை அவர்களுடைய மக்களுக்கு நாம் அனுப்பினோம். அவர்களிடம் அவர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தனர். ஆகவே, குற்றமிழைத்தவர்களிடம் நாம் பழிவாங்கினோம். (தூதர்களை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நாம் உதவினோம்.) நம்பிக்கை கொண்டவர்களுக்கு உதவுவது நம்மீது கடமையாக இருக்கிறது.
Rum 30:48
அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகின்றான். அவை மேகங்களை கிளப்புகின்றன. அவன் அவற்றை வானத்தில் தான் நாடியவாறு பரப்புகின்றான். இன்னும், அவற்றை பல துண்டுகளாக அவன் மாற்றுகின்றான். ஆகவே, மழையை -அது அவற்றுக்கு இடையிலிருந்து வெளியேறக்கூடியதாக- நீர் பார்க்கிறீர். அதை தனது அடியார்களில் தான் நாடியவர்களுக்கு அவன் அதை அடையச் செய்தால், அப்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
Rum 30:49
நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் அது (-மழை) அவர்கள் மீது இறக்கப்படுவதற்கு முன்னர் நிராசையடைந்தவர்களாக இருந்தனர்.
Rum 30:50
ஆக, அல்லாஹ்வுடைய அருளின் அடையாளங்களைப் பார்ப்பீராக! பூமியை அது மரணித்த பின்னர் அவன் எப்படி உயிர்ப்பிக்கின்றான் (என்பதை கவனியுங்கள்)! நிச்சயமாக அவன்தான் இறந்தவர்களையும் உயிர்ப்பிப்பவன் ஆவான். அவன் எல்லா பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Rum 30:51
நாம் ஒரு காற்றை அனுப்பி(னால், அது அவர்களது விளைச்சலை அழித்து விட்ட பின்னர்) அதை (-அந்த விளைச்சலை) அவர்கள் மஞ்சளாக பார்த்தால் அதற்குப் பின்னர் (-அழிந்த பின்னர்) அவர்கள் (அல்லாஹ்வை) நிராகரிக்கின்றவர்களாக ஆகிவிடுகின்றனர்.
Rum 30:52
ஆகவே, (நபியே!) நிச்சயமாக நீர் இறந்தவர்களுக்கு (உமது அழைப்பை) செவியுறச் செய்ய முடியாது. இன்னும் நீர் (உமது) அழைப்பை செவிடர்களுக்கும் செவியுறச் செய்ய முடியாது அவர்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்பினால்.
Rum 30:53
குருடர்களை அவர்களின் வழிகேட்டிலிருந்து (மீட்டெடுத்து அவர்களை) நீர் நேர்வழி செலுத்துபவர் அல்லர். நமது வசனங்களை நம்பிக்கை கொள்கின்றவர்களைத் தவிர மற்றவர்களை நீர் செவியுறச் செய்ய முடியாது. அவர்கள்தான் (-நம்பிக்கை கொள்பவர்கள்தான் நமது கட்டளைகளுக்கு) முற்றிலும் கீழ்ப்படிகிறவர்கள்.
Rum 30:54
அல்லாஹ்தான் உங்களை பலவீனமான ஒன்றிலிருந்து (-இந்திரியத்திலிருந்து) படைத்தான். பிறகு, பலவீனத்திற்கு பின்னர் பலத்தை ஏற்படுத்தினான். பிறகு, பலத்திற்கு பின்னர் பலவீனத்தையும் வயோதிகத்தையும் ஏற்படுத்தினான். அவன் தான் நாடுவதை படைக்கிறான். அவன்தான் மிக்க அறிந்தவன், பேராற்றலுடையவன் ஆவான்.
Rum 30:55
மறுமை நாள் நிகழ்கின்ற நாளில் குற்றவாளிகள், “தாங்கள் சில மணி நேரமே அன்றி (மண்ணறையில்) தங்கவில்லை” என்று சத்தியம் செய்வார்கள். இவ்வாறுதான் அவர்கள் (உலகத்தில் வாழும் போதும்) பொய் சொல்பவர்களாக இருந்தார்கள்.
Rum 30:56
கல்வியும் ஈமானும் கொடுக்கப்பட்டவர்கள் கூறுவார்கள்: அல்லாஹ்வின் விதிப்படி நீங்கள் எழுப்பப்படுகின்ற நாள் வரை திட்டவட்டமாக தங்கினீர்கள். இதோ எழுப்பப்படுகின்ற (அந்த) நாள் (வந்து விட்டது). என்றாலும் நீங்கள் அறியாதவர்களாக இருந்தீர்கள்.
Rum 30:57
அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்களின் மன்னிப்புக் கோருதல் பலனளிக்காது. இன்னும், (அல்லாஹ்வை) திருப்திபடுத்துகின்ற செயல்களை செய்யுங்கள் என்றும் அவர்களிடம் கூறப்படாது.
Rum 30:58
இந்த குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் நாம் திட்டவட்டமாக மக்களுக்கு விவரித்துள்ளோம். நீர் அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டுவந்தால் திட்டமாக நிராகரித்தவர்கள் கூறுவார்கள்: “(முஹம்மதை நம்பிக்கை கொண்டவர்களே!) நீங்கள் பொய்யர்களே தவிர வேறில்லை”.
Rum 30:59
இவ்வாறுதான், அறியாதவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்.
Rum 30:60
ஆகவே, பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையானதே! (இறையத்தாட்சியை) உறுதிகொள்ளாதவர்கள் உம்மை (-உமது பொறுமையை) இலேசாக கருதிவிட வேண்டாம். (பின்னர் உமது தீனிலிருந்து உம்மை திருப்பிவிட அவர்கள் முயற்சி செய்துவிடவேண்டாம். அது அவர்களால் முடியாது.)
Lukman 31:1
அலிஃப், லாம், மீம்.[1]
———
[1] ஸூரா பகராவின் 1-ஆவது வசனத்தின் அடிக்குறிப்பைப் பாருங்கள்.
Lukman 31:2
இவை ஞானமிக்க வேதத்தின் வசனங்களாகும்.
Lukman 31:3
(இவை) நேர்வழிகாட்டியும் நல்லறம் புரிவோருக்கு (அல்லாஹ்வின்) கருணையும் ஆகும்.
Lukman 31:4
அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; ஸகாத்தை கொடுப்பார்கள். இன்னும், அவர்கள்தான் மறுமையை உறுதியாக நம்புவார்கள்.
Lukman 31:5
அவர்கள் தங்கள் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியின் மீது இருக்கின்றனர். இன்னும், அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்.
Lukman 31:6
கல்வி இன்றி அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காகவும், அதை (-அல்லாஹ்வின் பாதையை) பரிகாசமாக எடுத்துக் கொள்வதற்காகவும் வீண் பேச்சை விலைக்கு வாங்குபவன் மக்களில் இருக்கின்றான். இத்தகையவர்களுக்கு (அவர்களை) இழிவுபடுத்தும் வேதனை உண்டு.
Lukman 31:7
அவனுக்கு முன் நமது வசனங்கள் ஓதப்பட்டால் பெருமையடித்தவனாக திரும்பி விடுகின்றான் -அவற்றை அவன் செவிமடுக்காததைப் போன்று, அவனுடைய இரண்டு காதுகளில் மந்தம் இருப்பதைப் போன்று. வலிமிகுந்த வேதனையைக் கொண்டு அவனுக்கு நற்செய்தி கூறுவீராக!
Lukman 31:8
நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்கள் - அவர்களுக்கு இன்பமிகுந்த சொர்க்கங்கள் உண்டு.
Lukman 31:9
அவற்றில் அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்காகும். அவன்தான் மிகைத்தவன்; மிகுந்த ஞானவான்.
Lukman 31:10
அவன் வானங்களை -அவற்றை நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி படைத்தான். இன்னும், பூமியில் உறுதியான மலைகளை ஏற்படுத்தினான் அது உங்களை சாய்த்துவிடாமல் இருப்பதற்காக. இன்னும், அதில் எல்லா உயிரினங்களையும் பரப்பினான். நாம் மேகத்திலிருந்து மழையை இறக்கினோம். (அதன் மூலம்) அதில் எல்லா வகையான அழகிய தாவரங்களை முளைக்க வைத்தோம்.
Lukman 31:11
இவை அல்லாஹ்வின் படைப்புகளாகும். ஆகவே, அவனை அன்றி உள்ளவர்கள் எதைப் படைத்தன என்று எனக்கு நீங்கள் காண்பியுங்கள்! மாறாக, அநியாயக்காரர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.
Lukman 31:12
திட்டவட்டமாக, லுக்மானுக்கு நாம் ஞானத்தை வழங்கினோம். அதாவது: நீர் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவீராக! யார் நன்றி செலுத்துவாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் தன் நன்மைக்காகத்தான். எவர் நிராகரிப்பாரோ (அவரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் நிறைவானவன், மிகுந்த புகழாளன்.
Lukman 31:13
லுக்மான் தனது மகனுக்கு -அவர் அவருக்கு உபதேசித்தவராக- கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! என் மகனே! அல்லாஹ்விற்கு இணை வைக்காதே! நிச்சயமாக இணைவைத்தல் மிகப் பெரிய அநியாயமாகும்.
Lukman 31:14
மனிதனுக்கு அவனது பெற்றோருடன் நல்லுறவு பேணும்படி நாம் உபதேசித்தோம். அவனது தாய் அவனை பலவீனத்துக்கு மேல் பலவீனத்துடன் (-கஷ்டத்திற்கு மேல் கஷ்டத்துடன்) சுமந்தாள். அவனுக்கு பால்குடி மறக்க வைப்பது இரண்டு ஆண்டுகளில் ஆகும். அதாவது நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து! என் பக்கம்தான் மீளுதல் இருக்கிறது.
Lukman 31:15
உனக்கு அறிவில்லாத ஒன்றை எனக்கு நீ இணையாக்குவதற்கு அவர்கள் உன்னை சிரமப்படுத்தினால், (-அதற்காக உன் மீது அவர்கள் முழு முயற்சி செய்தால்) அவ்விருவருக்கும் நீ கீழ்ப்படியாதே! (ஆனால்) உலக(விஷய)த்தில் அவ்விருவருடன் நல்லமுறையில் பழகுவாயாக! என் பக்கம் திரும்பியவர்களின் பாதையை நீ பின்பற்று! பிறகு, என் பக்கம்தான் உங்கள் (அனைவருடைய) மீளுமிடம் இருக்கின்றது. நீங்கள் செய்துகொண்டிருந்ததை நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
Lukman 31:16
என் மகனே! நிச்சயமாக அது (-நீ செய்கின்ற நன்மை அல்லது தீமை) எள்ளின் விதை அளவு இருந்தாலும், அது ஒரு பாறையில் இருந்தாலும் அல்லது வானங்களில் அல்லது பூமியில் இருந்தாலும், அல்லாஹ் அதைக் கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் மிக நுட்பமானவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Lukman 31:17
என் மகனே! தொழுகையை நிலைநிறுத்து! நன்மையை ஏவு! தீமையை விட்டும் (மக்களைத்) தடு! (சோதனைகளில்) உனக்கு ஏற்பட்டதன் மீது பொறுமையாக இரு! நிச்சயமாக இவைதான் உறுதிமிக்க காரியங்களில் உள்ளவை ஆகும்.
Lukman 31:18
மக்களை விட்டும் (நீ அவர்களிடம் பேசும்போது) உனது கன்னத்தை திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமை பிடித்தவனாக நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையவர்கள் தற்பெருமை பேசுபவர்(கள்) அனைவரையும் விரும்ப மாட்டான்.
Lukman 31:19
உனது நடையில் பணிவாக இரு! (நிதானமாக இரு!) உனது சப்தத்தை தாழ்த்திக்கொள்! நிச்சயமாக சப்தங்களில் மிக மிக அருவருப்பானது கழுதைகளின் சப்தமாகும்.
Lukman 31:20
நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் உங்களுக்கு வசப்படுத்தினான். உங்கள் மீது தனது அருட்கொடைகளை வெளிப்படையாகவும் மறைவாகவும் நிறைவாக்கினான். கல்வி இன்றியும் நேர்வழி இன்றியும் பிரகாசமான வேதமின்றியும் அல்லாஹ்வின் விஷயத்தில் தர்க்கம் செய்கின்றவரும் மக்களில் இருக்கின்றனர்.
Lukman 31:21
அல்லாஹ் இறக்கியதை பின்பற்றுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால், மாறாக, எங்கள் மூதாதைகளை நாங்கள் எதன் மீது கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். கொழுந்து விட்டெரியும் நரக வேதனையின் பக்கம் ஷைத்தான் அவர்களை அழைப்பவனாக இருந்தாலுமா?
Lukman 31:22
எவர் தனது முகத்தை அல்லாஹ்வின் பக்கம் -அவரோ நல்லறம் புரிகின்றவராக இருக்க- பணியவைப்பாரோ திட்டமாக அவர் மிக உறுதியான வளையத்தை பற்றிப்பிடித்தார். அல்லாஹ்வின் பக்கம்தான் எல்லா காரியங்களின் முடிவு இருக்கின்றது.
Lukman 31:23
எவர் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு உம்மை கவலைப்படுத்த வேண்டாம். நம் பக்கம்தான் அ(த்தகைய)வர்களின் மீளுமிடம் இருக்கின்றது. அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு நாம் அறிவிப்போம். நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.
Lukman 31:24
அவர்களுக்கு நாம் கொஞ்சம் சுகமளிப்போம். பிறகு, நாம் கடுமையான வேதனையின் பக்கம் அவர்களை நிர்ப்பந்தமாக கொண்டு வருவோம்.
Lukman 31:25
வானங்களையும் பூமியையும் எவன் படைத்தான் என்று அவர்களிடம் நீர் கேட்டால், அல்லாஹ்தான் (படைத்தான்) என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். “எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!” என்று கூறுவீராக! மாறாக, அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.
Lukman 31:26
வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்விற்கே சொந்தமானவை. நிச்சயமாக அல்லாஹ்தான் முற்றிலும் நிறைவானவன் (-தேவையற்றவன்), மிகுந்த புகழாளன்.
Lukman 31:27
நிச்சயமாக பூமியில் உள்ள மரங்கள் எல்லாம் எழுதுகோல்களாக இருந்து, இன்னும் கடல் -(மையாக மாறி) அதற்குப் பின்னர் ஏழு கடல்களும் அதற்கு மையாக மாறினால், (பின்னர் அல்லாஹ்வின் ஞானங்கள் எழுதப்பட்டால், எழுதுகோல்கள் தேய்ந்துவிடும், கடல்கள் எல்லாம் தீர்ந்துவிடும். ஆனால்,) அல்லாஹ்வின் ஞானங்கள் தீர்ந்துவிடாது. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான்.
Lukman 31:28
உங்களை (-உங்கள் அனைவரையும்) படைப்பதும் உங்களை (மரணிக்க வைத்து பின்னர் உயிர்கொடுத்து) எழுப்புவதும் ஒரே ஓர் ஆன்மாவைப் (படைப்பதைப்) போன்றே தவிர (வேறு ஒரு சிரமமான காரியம்) இல்லை. நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன்; உற்று நோக்குபவன் ஆவான்.
Lukman 31:29
நிச்சயமாக அல்லாஹ் பகலில் இரவை நுழைக்கின்றான்; இரவில் பகலை நுழைக்கின்றான்; சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான்; எல்லாம் ஒரு குறிப்பிட்ட தவணையின் பக்கம் ஓடுகின்றன என்பதையும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் (எல்லோரும்) செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் என்பதையும் நீர் கவனிக்கவில்லையா?
Lukman 31:30
அது, (மேற்கூறப்பட்ட (அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன், இன்னும் நிச்சயமாக அவனை அன்றி அவர்கள் அழைக்கின்றவை (-வணங்குகின்றவை) பொய்யானவை, இன்னும் நிச்சயமாக அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன், மிகப் பெரியவன் என்ற காரணத்தால் ஆகும்.
Lukman 31:31
நிச்சயமாக கடலில் கப்பல் அல்லாஹ்வின் அருளினால் ஓடுகின்றன - அவன் (-அல்லாஹ்) தனது (வல்லமையின்) அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிப்பதற்காக (இதை செய்தான்) என்பதை நீர் கவனிக்கவில்லையா? நிச்சயமாக இதில் பெரிய பொறுமையாளர், அதிகம் நன்றி செலுத்துபவர் எல்லோருக்கும் (இறை) அத்தாட்சிகள் உள்ளன.
Lukman 31:32
(பெரும்) நிழல்களைப் போன்ற ஓர் அலை அவர்களை சூழ்ந்துகொண்டால் அல்லாஹ்வை (மட்டும் உதவிக்கு) அழைக்கின்றனர் -மார்க்கத்தை (வழிபாடுகளை) அவனுக்கு மட்டும் தூய்மைப்படுத்தியவர்களாக. கரைக்கு அவர்களை அவன் காப்பாற்றியபோது அவர்களில் சிலர் (சொல்லால் மட்டும்) நல்லவர்களாக இருக்கின்றார்கள். (உள்ளத்தில் நிராகரிப்பை மறைத்துக் கொள்கின்றனர். மற்றும் அதிகமானவர்களோ வெளிப்படையாக நிராகரிப்புக்கே திரும்பி விடுகின்றனர்.) வாக்குறுதிகளை அதிகம் மீறக்கூடியவர்கள், நன்றி கெட்டவர்கள் ஆகிய எல்லோரையும் தவிர நமது அத்தாட்சிகளை (-வசனங்களை மற்றவர்கள்) மறுக்க மாட்டார்கள்.
Lukman 31:33
மக்களே! உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள்! இன்னும், ஒரு நாளை பயந்துகொள்ளுங்கள்! (அந்நாளில்) தந்தை தன் மகனை விட்டும் (வேதனையை) தடுக்கமாட்டார். பிள்ளையும் தனது தகப்பனை விட்டும் (வேதனையை) தடுக்கக் கூடியவராக இல்லை. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது. ஆகவே, உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட வேண்டாம். ஏமாற்றக்கூடியவன் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்.
Lukman 31:34
நிச்சயமாக அல்லாஹ்- அவனிடம்தான் மறுமை(யின்) அறிவு இருக்கின்றது. அவன்தான் மழையை இறக்குகின்றான். கர்ப்பப்பைகளில் உள்ளவற்றை அவன் அறிகின்றான். ஓர் ஆன்மா நாளை அது என்ன செய்யும் என்பதை அறியாது. ஓர் ஆன்மா அது எந்த பூமியில் மரணிக்கும் என்றும் அறியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Secde 32:1
அலிஃப், லாம், மீம்.[1]
———
[1] ஸூரா பகராவின் 1-ஆவது வசனத்தின் அடிக்குறிப்பைப் பாருங்கள்.
Secde 32:2
இது, (முஹம்மத் நபியின் மீது) அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும். இதில் அறவே சந்தேகம் இல்லை.
Secde 32:3
இதை அவர் (-முஹம்மது) இட்டுக் கட்டினார் என்று அவர்கள் கூறுகிறார்களா? மாறாக, இதுதான் உமது இறைவனிடமிருந்து வந்த உண்மையா(ன வேதமா)கும். இதற்கு முன்னர் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வராத ஒரு சமுதாயத்தை -அவர்கள் நேர்வழி பெறுவதற்காக- நீர் எச்சரிப்பதற்காக (உமக்கு இவ்வேதம் இறக்கப்பட்டது).
Secde 32:4
அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் அவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு, அர்ஷ் மீது உயர்ந்தான். அவனை அன்றி உங்களுக்கு பொறுப்பாளரோ பரிந்துரையாளரோ (எவரும்) இல்லை. நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?
Secde 32:5
வானத்திலிருந்து பூமி வரை உள்ள (ஒவ்வொரு) காரியத்தை(யும்) அவன் திட்டமிட்டு நிர்வகிக்கின்றான். (பிறகு, ஒரு நாளில் அது பூமியில் இறங்குகிறது.) பிறகு, (அதே) ஒரு நாளில் அது அவன் பக்கம் உயருகிறது. அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு நீங்கள் எண்ணுகின்றபடி ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது.
Secde 32:6
அவன்தான் (உங்கள் பார்வைகளுக்கு) மறைவானதையும் (உங்கள் பார்வைக்கு வெளியில்) தெரிவதையும் அறிந்தவன், மிகைத்தவன், மகா கருணையாளன் ஆவான்.
Secde 32:7
தான் படைத்த ஒவ்வொன்றையும் அவன் செம்மையா(க, சீராக, அழகாக உருவா)க்கினான். மனிதனை படைப்பதை களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான்.
Secde 32:8
பிறகு, அவனது சந்ததிகளை (ஆணிடமிருந்து) வெளியேறக்கூடிய நீரிலிருந்து, மென்மையான (இந்திரிய) நீரிலிருந்து உருவாக்கினான்.
Secde 32:9
பிறகு, அவனை சமமாக்கினான் (சீரான, நேர்த்தியான முறையில் உருவமைத்தான்). தனது (-தான் படைத்த) உயிரிலிருந்து அவனில் ஊதினான். உங்களுக்கு செவியையும் பார்வைகளையும் இதயங்களையும் அவன் அமைத்தான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
Secde 32:10
அவர்கள் கூறுகின்றனர்: “நாங்கள் (மரணித்த பின்னர் புதைக்கப்பட்டு) பூமியில் (மண்ணோடு மண்ணாக) மறைந்து விட்டால், (அதன் பிறகு) நிச்சயமாக நாங்கள் புதிய படைப்பில் (மீண்டும்) படைக்கப்படுவோமா?” மாறாக, அவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நிராகரிக்கின்றவர்கள் ஆவர்.
Secde 32:11
(நபியே) கூறுவீராக! உங்களுக்கு நியமிக்கப்பட்ட மலக்குல் மவுத் (-உயிர் வாங்கும் வானவர்) உங்களை உயிர் கைப்பற்றுவார். பிறகு, உங்கள் இறைவனிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Secde 32:12
குற்றவாளிகள் தங்கள் இறைவனிடம் தங்கள் தலைகளை தாழ்த்தியவர்களாக, எங்கள் இறைவா! நாங்கள் (உனது தண்டனையை கண்கூடாகப்) பார்த்தோம்; (உனது தூதர்களை நீ உண்மைப்படுத்தியதையும்) நாங்கள் செவிமடுத்தோம். ஆகவே, எங்களை (உலகிற்கு) திரும்ப அனுப்பு! நாங்கள் நற்செயல்களைச் செய்வோம். (நீதான் வணக்கத்திற்குரியவன்; நீ கூறிய மறுமை, சொர்க்கம், நரகம் எல்லாம் உண்மை என்று இப்போது) நிச்சயமாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று கூறுகின்ற சமயத்தை நீர் பார்த்தால் (அது திடுக்கம் மிகுந்த காட்சியாக இருக்கும்).
Secde 32:13
நாம் நாடியிருந்தால் எல்லா ஆன்மாவிற்கும் அதற்குரிய நேர்வழியை (அதற்கு வலுக்கட்டாயமாக) கொடுத்திருப்போம். எனினும், நிச்சயமாக ஜின்கள் இன்னும் மனிதர்கள் அனைவரிலிருந்தும் நரகத்தை நான் நிரப்புவேன் என்ற வாக்கு என்னிடமிருந்து உறுதியாகி விட்டது.
Secde 32:14
உங்கள் இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்த காரணத்தால் (நரக வேதனையை) சுவையுங்கள்! நிச்சயமாக நாம் உங்களை மறந்து விட்டோம். (உங்களது கோரிக்கைகளைப் புறக்கணிப்போம்). இன்னும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக நிரந்தரமான வேதனையை சுவையுங்கள்!
Secde 32:15
நமது வசனங்களை நம்பிக்கை கொள்பவர்கள் எல்லாம் எவர்கள் அவர்களுக்கு அவற்றின் மூலம் அறிவுரை கூறப்பட்டால் சிரம் பணிந்தவர்களாக (பூமியில்) வீழ்ந்து, தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிக்கின்றார்களோ அவர்கள்தான். அவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள்.
Secde 32:16
அவர்களின் விலாக்கள் படுக்கைகளை விட்டு தூரமாக இருக்கும். அவர்கள் தங்கள் இறைவனை பயத்துடனும் ஆசையுடனும் வணங்குவார்கள். நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள்.
Secde 32:17
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு கூலியாக அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்களுக்கு குளிர்ச்சியானதை (-இன்பங்களை) எந்த ஓர் ஆன்மாவும் அறியாது.
Secde 32:18
நம்பிக்கையாளராக இருக்கின்றவர் பாவியாக இருக்கின்றவரைப் போன்று ஆவாரா? அவர்கள் (இருவரும்) சமமாக மாட்டார்கள்.
Secde 32:19
ஆக, நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்கள் அவர்களுக்கு அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு விருந்துபசரணையாக “அல்மஃவா” எனும் சொர்க்கங்கள் உண்டு.
Secde 32:20
ஆக, பாவம் செய்தவர்கள் அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அதிலிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு நாடும் போதெல்லாம் அதில் அவர்கள் திரும்பக் கொண்டுவரப்படுவார்கள். இன்னும், நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்த நரக வேதனையை (இப்போது) சுவையுங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்படும்.
Secde 32:21
அவர்கள் (நேர்வழியின் பக்கம்) திரும்புவதற்காக மிகப் பெரிய வேதனைக்கு முன்னர் சிறிய வேதனையை அவர்களுக்கு நிச்சயமாக நாம் சுவைக்க வைப்போம்.
Secde 32:22
தனது இறைவனின் வசனங்களினால் அறிவுரை கூறப்பட்டு, பிறகு அவற்றை புறக்கணித்த ஒருவனை விட பெரிய அநியாயக்காரன் யார்? நிச்சயமாக நாம் குற்றவாளிகளிடம் பழிவாங்குவோம்.
Secde 32:23
திட்டவட்டமாக மூஸாவிற்கு நாம் வேதத்தை கொடுத்தோம். ஆகவே, அவரை சந்திப்பதில் நீர் சந்தேகத்தில் இருக்க வேண்டாம். அ(ந்த வேதத்)தை இஸ்ரவேலர்களுக்கு நேர்வழியாக நாம் ஆக்கினோம்.
Secde 32:24
அவர்கள் (நமது மார்க்கத்தில்) பொறுமையாக (-உறுதியாக) இருந்தபோது நமது கட்டளையின் படி நேர்வழி காட்டுகின்ற தலைவர்களை அவர்களில் நாம் உருவாக்கினோம். அ(ந்த தலை)வர்கள் நமது வசனங்களை உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தனர்.
Secde 32:25
நிச்சயமாக உமது இறைவன்தான் அவர்கள் (உலகில்) எதில் கருத்து வேறுபட்டவர்களாக இருந்தார்களோ அதில் அவர்களுக்கு மத்தியில் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான்.
Secde 32:26
இ(ந்த மக்காவில் வசிப்ப)வர்களுக்கு முன்னர் தங்கள் வசிப்பிடங்களில் சுற்றி திரிந்த எத்தனையோ பல தலை முறையினர்களை நாம் அழித்தது (பாவிகளின் விஷயத்தில் நாம் நடந்துகொள்ளும் விதத்தை) அவர்களுக்கு தெளிவுபடுத்தவில்லையா? நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. அவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?
Secde 32:27
நிச்சயமாக நாம் காய்ந்த பூமிக்கு மழை நீரை ஓட்டிவருகிறோம்; அதன் மூலம் அவர்களின் கால்நடைகளும் அவர்களும் சாப்பிடுகின்ற விளைச்சலை உற்பத்தி செய்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (இதை) அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?
Secde 32:28
அவர்கள் கூறுகின்றனர்: “(முஹம்மதின் தோழர்களே!) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (எங்களுக்கு தண்டனை உண்டு என்ற) இந்த தீர்ப்பு எப்போது (நிகழும்)?”
Secde 32:29
(நபியே!) கூறுவீராக! தீர்ப்பு (வருகின்ற) நாளில் நிராகரிப்பவர்களுக்கு அவர்களது ஈமான் (-நம்பிக்கை) பலனளிக்காது. இன்னும் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்.
Secde 32:30
ஆகவே! நீர் அவர்களைப் புறக்கணிப்பீராக! (அல்லாஹ்வின் தீர்ப்பை) எதிர்பார்த்திருப்பீராக! நிச்சயமாக அவர்கள் எதிர்பார்ப்பவர்கள்தான்.
Ahzab 33:1
நபியே! அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்! நிராகரிப்பவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக மகா ஞானவானாக இருக்கின்றான்.
Ahzab 33:2
உமது இறைவனிடமிருந்து உமக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதை பின்பற்றுவீராக! நிச்சயமாக நீங்கள் செய்வதை அல்லாஹ் ஆழ்ந்தறிந்தவனாக இருக்கின்றான்.
Ahzab 33:3
அல்லாஹ்வை சார்ந்திருப்பீராக! அல்லாஹ்வே பொறுப்பாளனாக இருக்க போதுமானவன்.
Ahzab 33:4
அல்லாஹ் ஒரு மனிதனுக்கு அவனது உடலில் இரு உள்ளங்களை அமைக்கவில்லை. நீங்கள் ளிஹார் செய்கின்ற உங்கள் மனைவிகளை உங்கள் தாய்மார்களாக அவன் ஆக்கவில்லை. உங்கள் வளர்ப்புப் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அவன் ஆக்கவில்லை. அது உங்கள் வாய்களால் நீங்கள் கூறுவதாகும். அல்லாஹ் உண்மையை கூறுகின்றான். அவன்தான் நல்ல பாதைக்கு வழிகாட்டுகின்றான்.
Ahzab 33:5
அவர்களை அவர்களது தந்தைகளுடன் (சேர்த்தே) அழையுங்கள்! அதுதான் அல்லாஹ்விடம் மிக நீதமானது. நீங்கள் அவர்களின் தந்தைகளை அறியவில்லை என்றால் மார்க்கத்தில் அவர்கள் உங்கள் சகோதரர்கள் (ஆவார்கள் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால். அப்படி இல்லை என்றால்) அவர்கள் உங்கள் உதவியாளர்கள் ஆவார்கள். நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ அதில் உங்கள் மீது குற்றம் இல்லை. என்றாலும், எதை உங்கள் உள்ளங்கள் வேண்டுமென்று செய்ததோ (அதுதான் குற்றம் ஆகும்). அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக மகா கருணையாளனாக இருக்கின்றான்.
Ahzab 33:6
நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் ஆன்மாக்களைவிட நபிதான் மிக உரிமையாளர் (மிக நெருக்கமானவர், மிக ஏற்றமானவர்) ஆவார். அவருடைய மனைவிமார்கள் அவர்களுக்கு தாய்மார்கள் ஆவார்கள். இரத்த பந்தங்கள் அல்லாஹ்வின் வேதத்தின் படி அவர்களில் சிலர் சிலருக்கு உரிமையுள்ளவர்கள் ஆவார்கள், (மற்ற) நம்பிக்கையாளர்களையும் முஹாஜிர்களையும் விட. எனினும், உங்கள் பொறுப்பாளர்களுக்கு நீங்கள் ஏதும் நன்மை செய்தால் தவிர. இது வேதத்தில் எழுதப்பட்டதாக இருக்கின்றது.
Ahzab 33:7
எல்லா நபிமார்களிடமும் உம்மிடமும் நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸாவிடமும் நாம் அவர்களின் ஒப்பந்தத்தை வாங்கிய சமயத்தை நினைவு கூர்வீராக. அவர்களிடம் உறுதியான ஒப்பந்தத்தை நாம் வாங்கினோம்.
Ahzab 33:8
உண்மையாளர்களை (-நபிமார்களை) அவர்களின் உண்மையைப் பற்றி (அவர்களின் சமுதாய மக்கள் அவர்களுக்கு என்ன பதில் கூறினர், ஏற்றார்களா, நிராகரித்தார்களா என்று) விசாரிப்பதற்காக (நபிமார்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம்). நிராகரிப்பாளர்களுக்கு வலிமிகுந்த தண்டனையை (அல்லாஹ்) ஏற்படுத்தி இருக்கிறான்.
Ahzab 33:9
நம்பிக்கையாளர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். பல ராணுவங்கள் (உங்களை தாக்குவதற்கு) உங்களிடம் வந்தபோது அவர்களுக்கு எதிராக காற்றையும் நீங்கள் பார்க்காத ராணுவங்களையும் நாம் அனுப்பினோம். அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.
Ahzab 33:10
உங்களுக்கு மேல் புறத்திலிருந்தும் உங்களுக்கு கீழ்ப்புறத்திலிருந்தும் உங்களிடம் அவர்கள் வந்த சமயத்தில், இன்னும் பார்வைகள் சொருகி, உள்ளங்கள் தொண்டைகளுக்கு எட்டிய சமயத்தில் (உங்கள் செயல்களை அல்லாஹ் நன்கு பார்த்துக் கொண்டிருந்தான்). நீங்கள் (-நயவஞ்சகர்கள்) அல்லாஹ்வின் மீது பல எண்ணங்களை எண்ணினீர்கள்.
Ahzab 33:11
அங்குதான் நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்பட்டார்கள். இன்னும் கடுமையாக அச்சுறுத்தப்பட்டார்கள்.
Ahzab 33:12
நயவஞ்சகர்களும் தங்கள் உள்ளங்களில் நோய் உள்ளவர்களும் அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு பொய்யை (ஏமாற்றம் தரக்கூடியதை)த் தவிர (வேறு எதையும்) வாக்களிக்கவில்லை என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்.
Ahzab 33:13
யஸ்ரிப் வாசிகளே! உங்களுக்கு (இந்த போர் மைதானத்தில்) தங்குவது அறவே முடியாது. ஆகவே, (உங்கள் இல்லங்களுக்கு) திரும்பி விடுங்கள் என்று அவர்களில் ஒரு சாரார் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். “நிச்சயமாக எங்கள் இல்லங்கள் (திறந்து) பாதுகாப்பு அற்றதாக” இருக்கின்றன என்று கூறியவர்களாக அவர்களில் ஒரு பிரிவினர் நபியிடம் அனுமதி கேட்கின்றனர். ஆனால், அவை பாதுகாப்பு அற்றதாக இல்லை. அவர்கள் (மைதானத்தை விட்டு) விரண்டோடுவதைத் தவிர (வேறு எதையும்) நாடவில்லை.
Ahzab 33:14
அவர்கள் (-அந்த முனாஃபிக்குகள்) மீது அதன் (-மதீனாவின்) சுற்றுப் புறங்களில் இருந்து (படைகள்) நுழைந்தால், பிறகு குழப்பத்தை (-இணைவைத்தலை செய்யும்படி) அவர்களிடம் கேட்கப்பட்டால் அவர்கள் அதை செய்திருப்பார்கள். அதற்கு (-நிராகரிப்பாளர்களின் கூற்றுக்கு பதில் தருவதற்கு) அவர்கள் கொஞ்ச (நேர)மே தவிர தாமதித்திருக்க மாட்டார்கள்.
Ahzab 33:15
திட்டவட்டமாக இதற்கு முன்னர் “தாங்கள் புறமுதுகிட்டு ஓடமாட்டார்கள்” என்று அவர்கள் அல்லாஹ்விடம் ஒப்பந்தம் செய்திருந்தனர். அல்லாஹ்வின் (பெயர்கூறி இவர்கள் செய்த) ஒப்பந்தம் விசாரிக்கப்படுவதாக இருக்கின்றது.
Ahzab 33:16
(நபியே!) கூறுவீராக! நீங்கள் மரணத்தைவிட்டு அல்லது கொல்லப்படுவதை விட்டு விரண்டோடினால் (நீங்கள்) விரண்டோடுவது உங்களுக்கு அறவே பலனளிக்காது. அப்போதும் (-அப்படி விரண்டோடினாலும்) கொஞ்ச (கால)மே தவிர (இவ்வுலகில்) சுகமளிக்கப்பட மாட்டீர்கள்.
Ahzab 33:17
(நபியே) கூறுவீராக! அல்லாஹ், உங்களுக்கு ஒரு தீங்கை நாடினால் அல்லாஹ்வை விட்டும் உங்களைப் பாதுகாக்கின்றவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு கருணை புரிய நாடினால் (அதையும் யாரால் நிறுத்த முடியும்?). அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு பொறுப்பாளரையோ உதவியாளரையோ அவர்கள் காணமாட்டார்கள்.
Ahzab 33:18
உங்களில் (நபியை விட்டு மக்களை) தடுப்பவர்களையும் தங்கள் சகோதரர்களுக்கு, எங்களிடம் வந்துவிடுங்கள் என்று சொல்பவர்களையும் அல்லாஹ் நன்கறிவான். அவர்கள் மிகக் குறைவாகவே தவிர (பெரும்பாலும்) போருக்கு வரமாட்டார்கள்.
Ahzab 33:19
அவர்கள் உங்கள் விஷயத்தில் (உங்களுக்கு உதவாமல்) மிகக் கருமிகளாக இருக்கின்றனர். (போர் பற்றிய) பயம் (அவர்களுக்கு) வந்தால், மரண (பய)த்தால் மயக்கம் அடைகின்றவனைப் போல் அவர்களது கண்கள் சுழலக்கூடிய நிலையில், உம் பக்கம் அவர்கள் பார்க்கக்கூடியவர்களாக இருக்கின்ற நிலையில் அவர்களை நீர் காண்பீர். (எதிரிகளைப் பற்றி) பயம் சென்றுவிட்டால் செல்வத்தின் மீது பேராசையுடையவர்களாக கூர்மையான நாவுகளினால் (அத்துமீறி) உங்களுக்கு தொந்தரவு தருகின்றனர் (உங்களை ஏசுகின்றனர்). அவர்கள் (உண்மையில்) நம்பிக்கை கொள்ளவில்லை. ஆகவே, அவர்களின் அமல்களை அல்லாஹ் பாழ்ப்படுத்திவிட்டான். இது அல்லாஹ்விற்கு மிக எளிதாக இருக்கின்றது.
Ahzab 33:20
அவர்கள் (-நயவஞ்சகர்கள்) இராணுவங்கள் (தங்கள் ஊர்களுக்கு திரும்ப) செல்லவில்லை என்று எண்ணுகின்றனர். அந்த இராணுவங்கள் (திரும்ப) வந்தால் நிச்சயமாக கிராமவாசிகளுடன் கிராமங்களில் அவர்கள் இருந்திருக்க வேண்டுமே என்று ஆசைப்படுகின்றனர். உங்கள் செய்திகளைப் பற்றி அவர்கள் விசாரிக்கின்றனர். அவர்கள் உங்களுடன் இருந்தாலும் அவர்கள் (எதிரிகளிடம்) மிகக் குறைவாகவே தவிர போர் புரிந்திருக்க மாட்டார்கள்.
Ahzab 33:21
அல்லாஹ்வின் தூதரில் உங்களுக்கு -அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைக்கின்றவராக இருப்பவருக்கு திட்டவட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது. இன்னும் அவர் அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்வார்.
Ahzab 33:22
நம்பிக்கையாளர்கள் இராணுவங்களைப் பார்த்தபோது, “அல்லாஹ்வும் அவனது தூதரும் எங்களுக்கு வாக்களித்ததாகும் இது. அல்லாஹ்வும் அவனது தூதரும் உண்மை கூறினார்கள்” என்று கூறினார்கள். அது (-இராணுவங்களின் வருகை) நம்பிக்கையையும் திருப்தி (-கட்டுப்படுதலையும் பொறுமை)யையும் தவிர (வேறெதையும்) அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை.
Ahzab 33:23
அல்லாஹ்விடம் எதன்மீது ஒப்பந்தம் செய்தார்களோ அதை உண்மைப்படுத்திய ஆண்களும் நம்பிக்கையாளர்களில் இருக்கின்றனர். தனது நேர்ச்சையை நிறைவேற்றியவரும் அவர்களில் உண்டு. (வீர மரணத்தை) எதிர்பார்ப்பவரும் அவர்களில் உண்டு. அவர்கள் (-அந்த நம்பிக்கையாளர்கள் தங்கள் ஒப்பந்தத்தை) மாற்றிவிடவில்லை.
Ahzab 33:24
இறுதியாக, அல்லாஹ் உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்கு நற்கூலி தருவான். நயவஞ்சகர்களை அவன் நாடினால் தண்டிப்பான். அல்லது அவர்களை பிழை பொறு(த்து ஈமானை ஏற்கவை)ப்பான். (ஆகவே, அவர்களின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்பட்டு மறுமையின் தண்டனையிலிருந்து பாதுகாப்பு பெறுவார்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, மகா கருணையாளனாக இருக்கின்றான்.
Ahzab 33:25
நிராகரிப்பாளர்களை அவர்களது கோபத்துடன் அல்லாஹ் திருப்பி விட்டான். அவர்கள் (இந்தப் போரினால்) எந்த நன்மையையும் அடைய வில்லை. நம்பிக்கையாளர்களை போரை விட்டும் அல்லாஹ் பாதுகாத்தான். அல்லாஹ் மகா வலிமை மிக்கவனாக, மிகைத்தவனாக இருக்கின்றான்.
Ahzab 33:26
வேதக்காரர்களில் இருந்து அவர்களுக்கு (-நிராகரிப்பாளர்களுக்கு) உதவியவர்களை அவர்களின் கோட்டைகளில் இருந்து அல்லாஹ் இறக்கினான். அவர்களின் உள்ளங்களில் திகிலை போட்டான். (அவர்களில்) ஒரு பிரிவினரை கொன்றீர்கள். ஒரு பிரிவினரை சிறைப் பிடித்தீர்கள்.
Ahzab 33:27
அவன் அவர்களின் பூமியையும் அவர்களின் இல்லங்களையும் அவர்களின் செல்வங்களையும் இன்னும் நீங்கள் (உங்கள் பாதங்களால்) மிதிக்காத ஒரு பூமியையும் உங்களுக்கு சொந்தமாக்கினான். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
Ahzab 33:28
நபியே! உமது மனைவிகளுக்கு சொல்வீராக! “உலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் நீங்கள் விரும்புகிறவர்களாக இருந்தால் வாருங்கள்! உங்களுக்கு செல்வம் தருகின்றேன்; அழகிய முறையில் உங்களை விட்டு விடுகின்றேன்.”
Ahzab 33:29
நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (சொர்க்கமாகிய) மறுமை வீட்டையும் விரும்பியவர்களாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்களில் நல்லவர்களுக்கு மகத்தான கூலியை தயார்படுத்தி வைத்துள்ளான்.
Ahzab 33:30
நபியின் மனைவிகளே! உங்களில் யார் தெளிவான மானக்கேடான செயலை செய்வாரோ அவருக்கு வேதனை இரு மடங்காக ஆக்கப்படும். அது அல்லாஹ்விற்கு இலகுவானதாக இருக்கின்றது.
Ahzab 33:31
(நபியின் மனைவிகளே!) உங்களில் யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் பணிந்து நடப்பாரோ, இன்னும் நன்மையை செய்வாரோ அவருக்கு அவரது கூலியை இருமுறை நாம் கொடுப்போம். இன்னும், அவருக்கு கண்ணியமான உணவை ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம்.
Ahzab 33:32
நபியின் மனைவிகளே! நீங்கள் (பொதுவான) பெண்களில் ஒருவரைப் போன்று இல்லை நீங்கள் அல்லாஹ்வை பயந்து நடந்தால். ஆகவே, மென்மையாகப் பேசாதீர்கள். தனது உள்ளத்தில் நோய் உள்ளவன் தப்பாசைப்படுவான். இன்னும் சரியான (முறையான) பேச்சை பேசுங்கள்.
Ahzab 33:33
உங்கள் இல்லங்களில் தங்கியிருங்கள். (கண்ணியத்துடன் இருங்கள்.) முந்திய அறியாமைக் காலத்தில் அலங்காரங்களை வெளிப்படுத்தியது போன்று நீங்கள் அலங்காரங்களை வெளிப்படுத்தாதீர்கள். (முகத்தை திறந்தவர்களாக வெளியே செல்லாதீர்கள்.) தொழுகையை நிலைநிறுத்துங்கள்! ஸகாத்தை கொடுங்கள்! அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்! (நபியின்) வீட்டார்களே! அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களை விட்டும் அசுத்தத்தை (பாவத்தை) போக்குவதற்கும் உங்களை முற்றிலும் சுத்தப்படுத்துவதற்கும்தான்.
Ahzab 33:34
(தொழுகையில்) ஓதப்படுகின்றவற்றை அதாவது அல்லாஹ்வின் வசனங்களை இன்னும் ஞானத்தை (-நபியின் பொன்மொழிகளை) உங்கள் இல்லங்களில் மனனம் செய்யுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மிக கருணையாளனாக ஆழ்ந்தறிபவனாக இருக்கின்றான்.
Ahzab 33:35
நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள், முஸ்லிமான பெண்கள், முஃமினான ஆண்கள், முஃமினான பெண்கள், பணிவான ஆண்கள், பணிவான பெண்கள், உண்மையான ஆண்கள், உண்மையான பெண்கள், பொறுமையான ஆண்கள், பொறுமையான பெண்கள், உள்ளச்சமுடைய ஆண்கள், உள்ளச்சமுடைய பெண்கள், தர்மம் செய்கின்ற ஆண்கள், தர்மம் செய்கின்ற பெண்கள், நோன்பாளியான ஆண்கள், நோன்பாளியான பெண்கள், தங்கள் மறைவிடங்களை பேணுகின்ற ஆண்கள், பேணுகின்ற பெண்கள், அல்லாஹ்வை அதிகம் நினைவு கூரக்கூடிய ஆண்கள், நினைவு கூரக்கூடிய பெண்கள் - இவர்களுக்கு மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கின்றான்.
Ahzab 33:36
நம்பிக்கையுடைய ஆணுக்கும் நம்பிக்கையுடைய பெண்ணுக்கும் தங்களது காரியத்தில் அவர்களுக்கு என்று ஒரு விருப்பம் இருப்பது ஆகுமானதல்ல அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால். யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்வாரோ அவர் திட்டமாக தெளிவாக வழிகெட்டுவிட்டார்.
Ahzab 33:37
எவர் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ இன்னும் நீர் அருள் புரிந்தீரோ அவருக்கு, “உன் மனைவியை உன்னுடன் வைத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!” என்று நீர் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! அல்லாஹ் வெளிப்படுத்தக்கூடியவனாக உள்ள ஒன்றை உமது உள்ளத்தில் நீர் மறைக்கிறீர். மக்களை பயப்படுகின்றீர். அல்லாஹ்தான், அவனை நீர் பயப்படுவதற்கு மிகத் தகுதியானவன். சைது அவளிடம் தேவையை முடித்துவிட்டபோது, -நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது வளர்ப்புப் பிள்ளைகளின் மனைவிகள் விஷயத்தில், அவர்களிடம் (-அந்த மனைவிகளிடம்) அவர்கள் (-அந்த வளர்ப்புப் பிள்ளைகள்) தேவையை முடித்துவிட்டபோது (அப்பெண்களை வளர்ப்புப் பிள்ளைகளின் தந்தைகள் திருமணம் முடித்துக் கொள்வதில்) சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக- அவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம். அல்லாஹ்வின் காரியம் (கண்டிப்பாக) நடக்கக்கூடியதாக இருக்கின்றது.
Ahzab 33:38
அல்லாஹ் தனக்கு கடமையாக்கியதை செய்வதில் நபியின் மீது அறவே குற்றமிருக்கவில்லை. இதற்கு முன்னர் சென்றவர்களில் அல்லாஹ்வின் வழிமுறையைத்தான் (நபியே! உமக்கும் வழிமுறையாக ஆக்கப்பட்டது). அல்லாஹ்வின் செயல் நிறைவேற்றப்படுகின்ற தீர்ப்பாக இருக்கின்றது.
Ahzab 33:39
அவர்கள் (-அந்த தூதர்கள்) அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை - சட்டங்களை எடுத்துச் சொல்வார்கள்; அவனை பயப்படுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர ஒருவரையும் பயப்படமாட்டார்கள். அல்லாஹ்வே போதுமான விசாரணையாளன் ஆவான்.
Ahzab 33:40
முஹம்மது உங்கள் ஆண்களில் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. என்றாலும், அவர் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் இறுதி முத்திரையாகவும் இருக்கின்றார். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Ahzab 33:41
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை மிக அதிகம் நினைவு கூருங்கள்!
Ahzab 33:42
இன்னும் அவனை காலையிலும் மாலையிலும் துதியுங்கள். (ஸுப்ஹு, இன்னும் அஸ்ரு தொழுகையை நிறைவேற்றுங்கள்.)
Ahzab 33:43
அவன்தான் உங்கள் மீது அருள் புரிவான், இருள்களில் இருந்து வெளிச்சத்தின் பக்கம் உங்களை அவன் வெளியேற்றுவதற்காக. இன்னும், அவனது வானவர்கள் (உங்களுக்காக அல்லாஹ்விடம்) பிரார்த்திப்பார்கள். அவன் நம்பிக்கையாளர்கள் மீது மகா கருணையுள்ளவனாக இருக்கிறான்.
Ahzab 33:44
அவனை அவர்கள் சந்திக்கின்ற நாளில் அவர்களது முகமன் ஸலாம் ஆகும். இன்னும் அவன் அவர்களுக்கு கண்ணியமான கூலியை ஏற்படுத்தி வைத்திருக்கின்றான்.
Ahzab 33:45
நபியே! நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளராகவும் நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பினோம்.
Ahzab 33:46
அல்லாஹ்வின் பக்கம் அவனது அனுமதிகொண்டு அழைப்பவராகவும் பிரகாசிக்கின்ற விளக்காகவும் (நாம் உம்மை அனுப்பினோம்).
Ahzab 33:47
நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! “நிச்சயமாக அவர்களுக்கு அல்லாஹ்விடம் மிகப் பெரிய அருள் இருக்கிறது” என்று.
Ahzab 33:48
நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர்! அவர்களின் தொந்தரவை (கண்டு கொள்ளாமல்) விட்டுவிடுவீராக! அல்லாஹ்வை சார்ந்து இருப்பீராக! அல்லாஹ்வே போதுமான பொறுப்பாளன் ஆவான்.
Ahzab 33:49
நம்பிக்கையாளர்களே! நம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் முடித்தால், பிறகு அவர்களுடன் நீங்கள் உறவு வைப்பதற்கு முன்னர் அவர்களை நீங்கள் விவாகரத்து செய்துவிட்டால் நீங்கள் கணக்கிட வேண்டிய எவ்வித இத்தாவும் உங்களுக்கு அவர்கள் மீது (கடமை) இல்லை. அவர்களுக்கு செல்வத்தை கொடுங்கள்! அழகிய முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.
Ahzab 33:50
நபியே! நீர் திருமணக் கொடைகளை (-மஹரை) கொடுத்(து மணமுடித்)த உமது மனைவிகளையும் அல்லாஹ் உமக்கு போரில் கொடுத்த அடிமைப் பெண்களில் உமது வலக்கரம் சொந்தமாகியவர்களையும் (-உமக்கு என்று வைத்துக்கொண்ட பெண்களையும்) உம்முடன் ஹிஜ்ரா செய்துவந்த உமது சாச்சாவின் மகள்களையும் உமது மாமியின் மகள்களையும் உமது தாய் மாமாவின் மகள்களையும் உமது காலா (சிறிய தாய், பெரிய தாய்) உடைய மகள்களையும் நிச்சயமாக நாம் உமக்கு (நீர் அவர்களை மணமுடிப்பதை) ஆகுமாக்கினோம். இன்னும், ஒரு முஃமினான பெண், தன்னை நபிக்கு அன்பளிப்பு செய்தால், நபியும் அவளை மணமுடிக்க நாடினால் அந்த பெண்ணையும் (உமக்கு ஆகுமாக்கினோம்). இது (மஹர் இன்றி மணமுடிப்பது பொதுவான) முஃமின்கள் அன்றி உமக்கு மட்டும் பிரத்தியோகமாகும். அவர்கள் மீது (-நம்பிக்கையாளர்கள் மீது) அவர்களின் மனைவிமார்கள் இன்னும் அவர்களது வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் (-அடிமைப் பெண்கள்) விஷயத்தில் நாம் கடமையாக்கியதை திட்டமாக நாம் அறிவோம். (நபியே!) உமக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக (நாம் மேற்கூறப்பட்ட பெண்களை மணமுடிப்பதையும் தன்னை அன்பளிப்புச் செய்யும் பெண்ணை மஹரின்றி மணமுடிப்பதையும் உமக்கு ஆகுமாக்கினோம்). அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கின்றான்.
Ahzab 33:51
(நபியே!) அவர்களில் (-உமது மனைவிகளில்) நீர் நாடுகின்றவரை தள்ளிவைப்பீராக! நீர் நாடுகின்றவரை உம் பக்கம் சேர்த்துக்கொள்வீராக! நீர் நீக்கிவிட்டவர்களில் யாரை நீர் சேர்க்க விரும்பினீரோ அது உம்மீது குற்றம் இல்லை. இது அவர்களின் கண்கள் குளிர்ச்சி அடைவதற்கும் அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்கும் நீர் அவர்களுக்கு கொடுத்ததைக்கொண்டு அவர்கள் எல்லோரும் திருப்தி அடைவதற்கும் சுலபமானதாகும். அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிவான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா சகிப்பாளனாக இருக்கின்றான்.
Ahzab 33:52
(ஐம்பதாவது வசனத்தில் கூறப்பட்ட பெண்களுக்கு) பின்னர் (வேறு) பெண்கள் உமக்கு ஆகுமாக மாட்டார்கள். இன்னும் இவர்களுக்கு பதிலாக (வேறு) பெண்களை நீர் மாற்றுவதும் (உமக்கு) ஆகுமானதல்ல, அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்தாலும் சரியே. உமது வலக்கரம் சொந்தமாக்கிய பெண்களைத் தவிர. (அடிமைப் பெண்கள் யாராக இருந்தாலும் உமக்கு ஆகுமானவர்களே.) அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
Ahzab 33:53
நம்பிக்கையாளர்களே! ஓர் உணவின் பக்கம் உங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டால் தவிர நபியின் வீடுகளுக்குள் நுழையாதீர்கள். (அப்படி அழைக்கப்பட்டாலும்) அது தயாராவதை எதிர்பார்க்காதவர்களாக இருக்க வேண்டும். என்றாலும், நீங்கள் (விருந்துக்கு) அழைக்கப்பட்டால் (வீட்டினுள்) நுழையுங்கள். நீங்கள் சாப்பிட்டுவிட்டால் (வீட்டிலிருந்து) பிரிந்து (சென்று)விடுங்கள். பேச்சை புதிதாக ஆரம்பிக்காதவர்களாக இருக்க வேண்டும். நிச்சயமாக இது நபிக்கு தொந்தரவு தரக்கூடியதாக இருக்கின்றது. அவர் உங்களிடம் (அதைக் கூற) வெட்கப்படுவார். அல்லாஹ் சத்தியத்திற்கு வெட்கப்படமாட்டான். நீங்கள் அவர்களிடம் (நபியின் மனைவிகளிடம்) (ஏதேனும்) ஒரு பொருளைக் கேட்டால் திரைக்குப் பின்னால் இருந்து அவர்களிடம் கேளுங்கள். அதுதான் உங்கள் உள்ளங்களுக்கும் அவர்களின் உள்ளங்களுக்கும் மிகத் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதருக்கு நீங்கள் தொந்தரவு தருவதும் அவருக்குப் பின்னர் அவருடைய மனைவிகளை நீங்கள் மணமுடிப்பதும் உங்களுக்கு எப்போதும் ஆகுமானதல்ல. நிச்சயமாக இவை அல்லாஹ்விடம் பெரிய பாவமாக இருக்கின்றது.
Ahzab 33:54
நீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினால் அல்லது அதை மறைத்தால் நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Ahzab 33:55
அவர்கள் மீது (நபியின் மனைவிகள் மீதும் முஃமினான பெண்கள் மீதும்) தங்கள் தந்தைமார்கள், தங்கள் ஆண் பிள்ளைகள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் ஆண் பிள்ளைகள், தங்கள் சகோதரிகளின் ஆண் பிள்ளைகள், தங்கள் (முஃமினான) பெண்கள், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் விஷயத்தில் (-அவர்கள் முன் பர்தா இன்றி இருப்பதில்) குற்றம் இல்லை. (பெண்களே!) அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு பார்த்தவனாக இருக்கின்றான்.
Ahzab 33:56
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் நபியை வாழ்த்துகின்றனர். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவரை வாழ்த்துங்கள்! அவருக்கு ஸலாம் முகமன் கூறுங்கள்!
Ahzab 33:57
நிச்சயமாக அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தொந்தரவு தருபவர்கள் அவர்களை இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் சபிக்கின்றான். இன்னும், அவர்களுக்கு இழிவுபடுத்துகின்ற வேதனையை ஏற்படுத்தியிருக்கின்றான்.
Ahzab 33:58
முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் அவர்கள் செய்யாத ஒன்றைக் கொண்டு தொந்தரவு தருபவர்கள் அபாண்டமான பழியையும் தெளிவான பாவத்தையும் திட்டமாக (தங்கள் மேல்) சுமந்து கொண்டார்கள்.
Ahzab 33:59
நபியே! உமது மனைவிமார்களுக்கும் உமது பெண் பிள்ளைகளுக்கும் முஃமின்களின் பெண்(பிள்ளை)களுக்கும், அவர்கள் தங்கள் பர்தாக்களை தங்கள் மீது போர்த்திக்கொள்ளும்படி கூறுங்கள்! இது அவர்கள் (கண்ணியமானவர்கள் என்று) அறியப்படுவதற்கு மிக சுலபமானதாகும். ஆகவே, அவர்கள் தொந்தரவுக்கு ஆளாக மாட்டார்கள். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கின்றான்.
Ahzab 33:60
நயவஞ்சகர்களும் தங்கள் உள்ளங்களில் நோய் (விபச்சார ஆசை) உள்ளவர்களும் மதீனாவில் கெட்ட விஷயங்களில் ஈடுபடுபவர்களும் (தங்கள் தீய செயல்களிலிருந்து) விலகவில்லை என்றால் உம்மை அவர்கள் மீது (அவர்களை தண்டிக்க) தூண்டிவிடுவோம். பிறகு, அவர்கள் அதில் உம்முடன் குறைவாகவே தவிர வசிக்க மாட்டார்கள்.
Ahzab 33:61
அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அவர்கள் எங்கு காணப்பட்டாலும் அவர்கள் சிறை பிடிக்கப்பட வேண்டும். இன்னும் முற்றிலும் கொல்லப்படவேண்டும்.
Ahzab 33:62
இதற்கு முன்னர் சென்றவர்களில் அல்லாஹ்வின் நடைமுறைதான் (இவர்கள் விஷயத்திலும் பின்பற்றப்படும்). அல்லாஹ்வின் நடைமுறையில் எவ்வித மாற்றத்தையும் அறவே நீர் காணமாட்டீர்.
Ahzab 33:63
மக்கள் உம்மிடம் மறுமையைப் பற்றி (அது எப்போது வரும் என்று) கேட்கின்றனர். (நபியே!) கூறுவீராக! அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடம் தான் இருக்கின்றது. மறுமை சமீபமாக இருக்கக்கூடும் என்பது உமக்குத் தெரியுமா?
Ahzab 33:64
நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை (இவ்வுலகில்) சபித்தான். அவர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நரகத்தை (மறுமையில்) ஏற்படுத்தினான்.
Ahzab 33:65
அவர்கள் அதில் எப்போதும் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். (தங்களுக்கு) பொறுப்பாளரையோ உதவியாளரையோ காணமாட்டார்கள்.
Ahzab 33:66
அவர்களது முகங்கள் நெருப்பில் புரட்டப்படுகின்ற நாளில் அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ்வுக்கு நாங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே! ரசூலுக்கும் நாங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே!”
Ahzab 33:67
அவர்கள் கூறுவார்கள்: எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியோருக்கும் கீழ்ப்படிந்தோம் அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டனர்.
Ahzab 33:68
எங்கள் இறைவா! இருமடங்கு வேதனையை அவர்களுக்கு கொடு! அவர்களை பெரிய சாபத்தால் சபிப்பாயாக!
Ahzab 33:69
நம்பிக்கையாளர்களே! மூஸாவிற்கு தொந்தரவு தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் கூறியதிலிருந்து (-அந்த குற்றச்சாட்டுகளில் இருந்து) அல்லாஹ் அவரை நிரபராதியாக்கினான். அவர் அல்லாஹ்விடம் மிக சிறப்பிற்குரியவராக இருந்தார்.
Ahzab 33:70
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் நேர்மையான பேச்சை பேசுங்கள்.
Ahzab 33:71
அவன் (-அல்லாஹ்) உங்கள் அமல்களை உங்களுக்கு சீர்படுத்துவான். உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் யார் கீழ்ப்படிகின்றாரோ திட்டமாக அவர் மகத்தான வெற்றி பெறுவார்.
Ahzab 33:72
நிச்சயமாக நாம் அமானிதத்தை (-மார்க்கக் கட்டளையை) வானங்கள், பூமி(கள்), இன்னும் மலைகள் மீது சமர்ப்பித்தோம். அவை அதை சுமப்பதற்கு மறுத்துவிட்டன. அதனால் அவை பயந்தன. ஆனால், மனிதன் அதை சுமந்து கொண்டான். நிச்சயமாக அவன் அநியாயக்காரனாக அறியாதவனாக இருக்கின்றான்.
Ahzab 33:73
நயவஞ்சகமுடைய ஆண்களையும், நயவஞ்சகமுடைய பெண்களையும், இணைவைக்கின்ற ஆண்களையும், இணைவைக்கின்ற பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வதற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் அல்லாஹ் மன்னிப்பதற்காகவும் (அல்லாஹ் அவனது கட்டளைகளை கொடுத்து சோதிக்கின்றான்). அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கின்றான்.
Sebe' 34:1
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. மறுமையிலும் அவனுக்கே எல்லாப் புகழும். அவன்தான் மகா ஞானமுடையவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Sebe' 34:2
பூமியில் நுழைவதையும் அதிலிருந்து வெளியேறுவதையும் வானத்திலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் நன்கறிவான். அவன்தான் மகா கருணையாளன், மகா மன்னிப்பாளன்.
Sebe' 34:3
“மறுமை எங்களிடம் வராது” என்று நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர். (நபியே!) கூறுவீராக! ஏன் (வராது), மறைவானவற்றை நன்கறிந்தவனாகிய என் இறைவன் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும். அவனை விட்டும் வானங்களிலும் பூமியிலும் அணு அளவு(ள்ள அற்பபொருள் எதுவு)ம் மறைந்துவிடாது. அதை விட சிறியதும் அதை விட பெரியதும் (அனைத்தும்) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர இல்லை.
Sebe' 34:4
நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களுக்கு அவன் கூலி கொடுப்பதற்காக (அந்த பதிவேட்டில் செயல்கள் பதியப்படுகின்றன). அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான வாழ்க்கையும் (சொர்க்கத்தில்) உண்டு.
Sebe' 34:5
நமது வசனங்களில் (அவற்றை) முறியடிப்பதற்காக முயற்சிப்பவர்கள் அவர்களுக்கு கெட்ட தண்டனையின் மிகவும் வலிமிக்க வேதனை உண்டு.
Sebe' 34:6
கல்வி கொடுக்கப்பட்டவர்கள் உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை அதுதான் சத்தியம் என்றும் மிகைத்தவன், மகா புகழுக்குரியவனின் பாதைக்கு நேர்வழி காட்டுகிறது என்றும் அறிவார்கள்.
Sebe' 34:7
நிராகரித்தவர்கள் கூறுகின்றனர்: “நீங்கள் சுக்கு நூறாக கிழிக்கப்பட்ட பின்னர் நிச்சயமாக நீங்கள் புதிய படைப்பாக உருவாக்கப்படுவீர்கள்” என்று உங்களுக்கு அறிவிக்கின்ற ஓர் ஆடவரை நாங்கள் உங்களுக்கு அறிவிக்கவா?
Sebe' 34:8
அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறாரா அல்லது அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா? (என்றும் கூறுகின்றனர்.) மாறாக, மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள் வேதனையிலும் தூரமான வழிகேட்டிலும் இருக்கின்றனர்.
Sebe' 34:9
அவர்கள் தங்களுக்கு முன்னுள்ள இன்னும் தங்களுக்கு பின்னுள்ள வானத்தையும் பூமியையும் பார்க்கவில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமியில் சொருகிவிடுவோம். அல்லது அவர்கள் மீது வானத்தின் துண்டுகளை விழவைப்போம். நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பக்கூடிய எல்லா அடியார்களுக்கும் ஓர் அத்தாட்சி இருக்கின்றது.
Sebe' 34:10
திட்டவட்டமாக தாவூதுக்கு நம் புறத்தில் இருந்து மேன்மையை(யும் பறவைகளையும்) வழங்கினோம். மலைகளே! பறவைகளே! அவருடன் சேர்ந்து நீங்களும் (அல்லாஹ்வை) துதியுங்கள். இன்னும் அவருக்கு இரும்பை மென்மையாக்கினோம்.
Sebe' 34:11
உருக்குச் சட்டைகள் செய்வீராக! (சட்டைகளில் உள்ள துவாரங்களுக்கு ஏற்ப) ஆணிகளை அளவாக செய்வீராக! (தாவூதே! தாவூதின் குடும்பத்தாரே!) நன்மையை செய்யுங்கள்! நிச்சயமாக நான் நீங்கள் செய்வதை உற்று நோக்குகின்றேன்.
Sebe' 34:12
ஸுலைமானுக்கு காற்றையும் (கட்டுப்படுத்தி தந்தோம்). அதன் காலைப் பொழுதும் ஒரு மாதமாகும். அதன் மாலைப்பொழுதும் ஒரு மாதமாகும். அவருக்கு நாம் செம்பினுடைய சுரங்கத்தை (தண்ணீராக) ஓட வைத்தோம். அவருக்கு முன்னால் அவரது இறைவனின் உத்தரவின்படி ஜின்களிலிருந்து வேலை செய்கின்றவர்களையும் (அவருக்கு நாம் கட்டுப்படுத்தி கொடுத்தோம்). அவர்களில் யார் நமது கட்டளையை விட்டு விலகுவாரோ அவருக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பின் தண்டனையை நாம் சுவைக்க வைப்போம்.
Sebe' 34:13
அவை (-அந்த ஷைத்தான்கள்) அவருக்கு அவர் நாடுகின்ற தொழுமிடங்களையும் சிலைகளையும் நீர் தொட்டிகளைப் போன்ற பாத்திரங்களையும் உறுதியான சட்டிகளையும் செய்கின்றன. தாவூதின் குடும்பத்தார்களே! (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்துவதற்காக (நன்மைகளை) செய்யுங்கள். என் அடியார்களில் நன்றி செலுத்துபவர்கள் குறைவானவர்களே.
Sebe' 34:14
அவருக்கு மரணத்தை நாம் முடிவு செய்தபோது அவர் மரணித்துவிட்டதை அவர்களுக்கு அவருடைய தடியை தின்ற கரையானைத் தவிர (வேறு ஏதும்) அறிவிக்கவில்லை. அவர் கீழே விழுந்தபோது, “தாங்கள் மறைவானவற்றை அறிந்துகொண்டிருந்தால் இழிவான வேதனையில் தங்கி இருந்திருக்க மாட்டார்கள்” என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிய வந்தது.
Sebe' 34:15
ஸபா நகர மக்களுக்கு அவர்களின் தங்குமிடத்தில் ஓர் அத்தாட்சி இருக்கின்றது. வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் என இரண்டு தோட்டங்கள் (அவர்களுக்கு) இருந்தன. (ஸபா வாசிகளே!) உங்கள் இறைவனின் உணவை உண்ணுங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! (உங்கள் ஊரும்) நல்ல ஊர். (உங்கள் இறைவனும்) மகா மன்னிப்பாளனாகிய இறைவன் ஆவான்.
Sebe' 34:16
ஆனால், அவர்கள் புறக்கணித்தனர். ஆகவே, அடியோடு அரித்து செல்கின்ற பெரும் வெள்ளத்தை அவர்கள் மீது அனுப்பினோம். அவர்களின் இரண்டு (நல்ல) தோட்டங்களுக்குப் பதிலாக (கசப்பான கெட்ட) துர்நாற்றமுள்ள பழங்களை உடைய, காய்க்காத மரங்களை உடைய, இன்னும் மிகக்குறைவான சில இலந்தை மரங்களை உடைய இரண்டு தோட்டங்களை மாற்றிவிட்டோம்.
Sebe' 34:17
இது அவர்கள் நிராகரித்ததற்காக அவர்களுக்கு நாம் கூலி கொடுத்தோம். நிராகரிப்பாளர்களைத் தவிர (மற்றவர்களை) நாம் தண்டிப்போமா?
Sebe' 34:18
அவர்களுக்கு இடையிலும் நாம் அருள்வளம் புரிந்த ஊர்களுக்கு இடையிலும் (ஒவ்வொரு ஊராருக்கும்) தெளிவாகத் தெரியும்படியான பல ஊர்களை நாம் ஏற்படுத்தினோம். அவற்றில் பயணத்தை நிர்ணயித்தோம் (ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு சிரமமின்றி பயணிப்பதை எளிதாக்கினோம்). அவற்றில் பல இரவுகளும் பல பகல்களும் பாதுகாப்பு பெற்றவர்களாக பயணியுங்கள்.
Sebe' 34:19
ஆனால், அவர்கள் எங்கள் இறைவா! எங்கள் பயணங்களுக்கு மத்தியில் தூரத்தை ஏற்படுத்து! என்று கூறினர். அவர்கள் தங்களுக்குத் தாமே அநீதி இழைத்தனர். அவர்களை சுக்கு நூறாக கிழித்துவிட்டோம். (முற்றிலுமாக பிரித்துவிட்டோம்.) அவர்களை பேசப்படக்கூடிய கதைகளாக்கி விட்டோம். நிச்சயமாக இதில் பெரும் பொறுமையாளர்கள், அதிகம் நன்றி செலுத்துகின்றவர்கள் எல்லோருக்கும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Sebe' 34:20
திட்டவட்டமாக இப்லீஸ் அவர்கள் மீது தன் எண்ணத்தை உண்மையாக்கினான். ஆகவே, அவர்கள் அவனை பின்பற்றினர் நம்பிக்கை கொண்ட பிரிவினரைத் தவிர. (அவர்கள் அவனது வழியில் செல்ல மாட்டார்கள்.)
Sebe' 34:21
அவனுக்கு அவர்கள் மீது அறவே அதிகாரம் இருக்கவில்லை. இருந்தாலும் மறுமையை நம்புகின்றவரை அதில் சந்தேகத்தில் இருப்பவர்களில் இருந்து (பிரித்து) நாம் அறிவதற்காக (இவ்வாறு சோதித்தோம்). உமது இறைவன் எல்லாவற்றையும் கண்காணிக்கின்றவன் ஆவான்.
Sebe' 34:22
(நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி நீங்கள் பிதற்றிக் கொண்டிருந்தவர்களை அழையுங்கள்! அவர்கள் வானங்களிலும் பூமியிலும் அணு அளவுக்கும் உரிமை பெறமாட்டார்கள். அவ்விரண்டிலும் அவர்களுக்கு எவ்வித பங்கும் இல்லை. அவர்களில் எவரும் அவனுக்கு உதவியாளர் இல்லை.
Sebe' 34:23
அவன் எவருக்கு அனுமதி அளித்தானோ அவருக்கே தவிர (பிறருக்கு) அவனிடம் (யாருடைய) சிபாரிசு(ம்) பலன்தராது. இறுதியாக, அவர்களது உள்ளங்களை விட்டு திடுக்கம் (பயம்) சென்றுவிட்டால் உங்கள் இறைவன் என்ன கூறினான் என்று கேட்பார்கள். உண்மையைத்தான் (கூறினான்) என்று (வானவர்கள்) கூறுவார்கள். அவன்தான் மிக உயர்ந்தவன், மகா பெரியவன்.
Sebe' 34:24
(நபியே!) கூறுவீராக! வானங்கள் இன்னும் பூமியில் இருந்து யார் உங்களுக்கு உணவளிப்பான்? (நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ்தான் (உணவளிக்கின்றான்). நிச்சயமாக நாங்கள் நேர்வழியில் அல்லது தெளிவான வழிகேட்டில் இருக்கின்றோமா அல்லது நீங்கள் (நேர்வழியில் அல்லது தெளிவான வழிகேட்டில்) இருக்கின்றீர்களா?
Sebe' 34:25
(நபியே!) கூறுவீராக! நாங்கள் செய்த குற்றத்தைப் பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் செய்கின்ற அமல்களைப் பற்றி நாங்கள் விசாரிக்கப்பட மாட்டோம்.
Sebe' 34:26
(நபியே!) கூறுவீராக! நமது இறைவன் நமக்கு மத்தியில் ஒன்று சேர்ப்பான். பிறகு, நமக்கு மத்தியில் உண்மையைக் கொண்டு அவன் தீர்ப்பளிப்பான். அவன்தான் உண்மையான தீர்ப்பளிப்பவன், நன்கறிந்தவன்.
Sebe' 34:27
(நபியே!) கூறுவீராக! அவனுடன் இணை(தெய்வங்)களாக நீங்கள் சேர்ப்பித்தவர்கள் பற்றி எனக்கு அறிவியுங்கள். ஒருக்காலும் (அவனுக்கு இணைகள் இருக்க) முடியாது. மாறாக, அவன்தான் அல்லாஹ் (வணங்கத்தகுதியான படைத்து பரிபாலிக்கின்ற இணையற்ற ஒரே ஓர் இறைவன்), மிகைத்தவன், மகா ஞானவான்.
Sebe' 34:28
(நபியே!) உம்மை மக்கள் அனைவருக்கும் நற்செய்தி சொல்பவராகவும் எச்சரிப்பவராகவும் தவிர நாம் அனுப்பவில்லை. என்றாலும் மக்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.
Sebe' 34:29
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த வாக்கு எப்போது (வரும்) என்று (அறிவியுங்கள் என) கூறுகின்றார்கள்.
Sebe' 34:30
(நபியே!) கூறுவீராக! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஒரு நாள் இருக்கிறது. அதை விட்டும் நீங்கள் சிறிது நேரம் பிந்தவும் மாட்டீர்கள்; முந்தவும் மாட்டீர்கள்.
Sebe' 34:31
நிராகரிப்பவர்கள் கூறினார்கள்: “இந்த குர்ஆனையும் இதற்கு முன்னுள்ளதையும் (-முந்திய வேதங்களையும்) நாங்கள் அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம்.” அநியாயக்காரர்கள் தங்கள் இறைவன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு அவர்களில் சிலர் சிலரிடம் எதிர்த்து (பதில்) பேசுகின்ற சமயத்தை நீர் பார்த்தால்... (அக்காட்சி மிக மோசமாக இருக்கும்). பெருமை அடித்தவர்களுக்கு பலவீனர்கள் கூறுவார்கள், “நீங்கள் இல்லை என்றால் நாங்கள் நம்பிக்கையாளர்களாக ஆகியிருப்போம்.”
Sebe' 34:32
பெருமை அடித்தவர்கள் (-தலைவர்கள்) பலவீனர்களுக்கு (-தங்களை பின்பற்றியவர்களுக்கு) கூறுவார்கள்: நேர்வழி உங்களிடம் வந்த பின்னர் (அந்த) நேர்வழியை விட்டும் நாங்களா உங்களை தடுத்தோம்? மாறாக, நீங்கள்தான் குற்றவாளிகளாக (பாவிகளாக) இருந்தீர்கள்.
Sebe' 34:33
பலவீனர்கள் பெருமை அடித்தவர்களுக்கு கூறுவார்கள்: மாறாக, (இது) இரவிலும் பகலிலும் (நீங்கள் எங்களுக்கு) செய்த சூழ்ச்சியாகும். நாங்கள் அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும் அவனுக்கு இணை (தெய்வங்)களை நாங்கள் ஏற்படுத்துவதற்கும் நீங்கள் எங்களை ஏவிய சமயத்தை நினைவு கூருங்கள். அவர்கள் (அனைவரும்) வேதனையை கண்ணால் காணும்போது துக்கத்தை வெளிப்படுத்துவார்கள். நிராகரித்தவர்களின் கழுத்துகளில் விலங்குகளை நாம் ஆக்குவோம். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கே தவிர (வேறு எதற்கும்) அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்களா?
Sebe' 34:34
ஓர் ஊரில் நாம் எச்சரிப்பாளரை அனுப்பவில்லை, அதன் சுகவாசிகள் நீங்கள் எதைக்கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம் என்று (அவர்களிடம்) கூறியே தவிர. (-பெரும்பாலான சுகவாசிகள் இறைத்தூதர்களின் மார்க்கத்தை நிராகரித்தே வந்திருக்கின்றனர்.)
Sebe' 34:35
அவர்கள் கூறினர்: நாங்கள் செல்வங்களாலும் பிள்ளைகளாலும் (உங்களை விட இவ்வுலகில்) அதிகமானவர்கள். (இது எங்கள் மீது இவ்வுலகில் இறைவன் செய்த அருள்.) ஆகவே, நாங்கள் மறுமையிலும் அறவே தண்டிக்கப்பட மாட்டோம்.
Sebe' 34:36
(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக என் இறைவன் அவன் நாடுகின்றவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக தருகின்றான். (நாடுகின்றவர்களுக்கு) சுருக்கி கொடுக்கின்றான். என்றாலும் மக்களில் அதிகமானவர்கள் (இதன் உண்மை தத்துவத்தை) அறியமாட்டார்கள்.
Sebe' 34:37
உங்கள் செல்வங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை எங்களிடம் நெருக்கமாக்கி வைக்கக்கூடியதாக இல்லை. எனினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மையை செய்வார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்ததற்கு பகரமாக இரு மடங்கு கூலி உண்டு. அவர்கள் (சொர்க்கத்தில் கோபுர) அறைகளில் நிம்மதியாக இருப்பார்கள்.
Sebe' 34:38
எவர்கள் நமது வசனங்களில் (அவற்றை பொய்ப்பித்து, நம்மை பலவீனப்படுத்த முயல்வார்களோ அவர்கள் (நரக) வேதனைக்கு கொண்டுவரப்படுவார்கள்.
Sebe' 34:39
(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக என் இறைவன் தனது அடியார்களில் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகின்றான். இன்னும் (தான் நாடியவருக்கு) சுருக்கி விடுகின்றான். நீங்கள் எதை தர்மம் செய்தாலும் அதற்கு அவன் (நல்ல) பகரத்தை ஏற்படுத்துவான். உணவளிப்பவர்களில் அவன் மிகச் சிறந்தவன்.
Sebe' 34:40
அவன் அவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டும் நாளில், பிறகு, அவன் வானவர்களுக்கு கூறுவான்: “இவர்கள் (இந்த இணைவைப்பாளர்கள்) உங்களை வணங்கிக் கொண்டிருந்தார்களா?”
Sebe' 34:41
அவர்கள் கூறுவார்கள்: நீ மகா தூயவன். அவர்கள் இன்றி நீதான் எங்கள் பாதுகாவலன். மாறாக, அவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் அதிகமானவர்கள் அவர்களைத்தான் (-அந்த ஜின்களைத்தான்) நம்பிக்கை கொண்டவர்கள்.
Sebe' 34:42
இன்றைய தினம் உங்களில் சிலர் சிலருக்கு நன்மை செய்வதற்கோ தீமை செய்வதற்கோ உரிமை பெறமாட்டார். அநியாயக்காரர்களுக்கு நாம் கூறுவோம்: நீங்கள் பொய்ப்பித்துக்கொண்டிருந்த நரக வேதனையை சுவையுங்கள்.
Sebe' 34:43
அவர்கள் முன் தெளிவான நமது வசனங்கள் ஓதப்பட்டால் உங்கள் மூதாதைகள் வணங்கிக்கொண்டிருந்தவற்றை விட்டும் இவர் உங்களைத் தடுக்க நாடுகின்ற ஓர் ஆடவரே தவிர (உண்மையான நபி) இல்லை. இன்னும் அவர்கள் கூறினர்: இது (-இந்த வேதம்) இட்டுக்கட்டப்பட்ட பொய்யைத் தவிர (உண்மையான இறைவேதம்) இல்லை. நிராகரித்தவர்கள் தங்களிடம் சத்தியம் வந்த போது (அதற்கு) கூறினர்: இது தெளிவான சூனியமே தவிர (வேறு ஓர் உண்மையான அத்தாட்சி) இல்லை.
Sebe' 34:44
அவர்கள் படிக்கின்ற வேதங்களை அவர்களுக்கு (இதற்கு முன்) நாம் கொடுத்ததில்லை. உமக்கு முன்னர் அவர்களிடம் எச்சரிப்பவர் எவரையும் நாம் அனுப்பியதில்லை.
Sebe' 34:45
இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் பொய்ப்பித்தனர். இவர்கள் (நிராகரிக்கின்ற மக்காவாசிகள்) அவர்களுக்கு (-முன் சென்ற சமுதாயத்திற்கு) நாம் கொடுத்ததில் பத்தில் ஒன்றைக் கூட அடையவில்லை. இருந்தும் அவர்கள் (முந்திய கால காஃபிர்கள்) எனது தூதர்களை பொய்ப்பித்தனர். எனது மாற்றம் (-நான் அவர்களுக்குச் செய்த அருளை எடுத்துவிட்டு அவர்களுக்குக் கொடுத்த தண்டனை) எப்படி இருந்தது (என்று பாருங்கள்)!
Sebe' 34:46
(நபியே!) கூறுவீராக! நான் உங்களுக்கு உபதேசிப்பதெல்லாம் ஒன்றே ஒன்றைத்தான். (அதாவது) நீங்கள் அல்லாஹ்விற்காக ஒருவர் ஒருவராக, இருவர் இருவராக நில்லுங்கள். (இந்த நபியைப் பற்றி இவர் உண்மையாளரா அல்லது உண்மையாளர் இல்லையா என்று விவாதம் செய்யுங்கள். பிறகு) ஒருவர் ஒருவராக (தனித்து விடுங்கள்). பிறகு, உங்கள் இந்த தோழருக்கு பைத்தியம் அறவே இல்லை என்பதை சிந்தியுங்கள். கடுமையான வேதனை (நிகழப் போவதற்)க்கு முன்னர் (அது பற்றி) எச்சரிப்பவரே தவிர அவர் (வேறு யாரும்) இல்லை (என்பதை திட்டமாக அறிந்து கொள்வீர்கள்).
Sebe' 34:47
(நபியே!) கூறுவீராக! நான் எதை கூலியாக உங்களிடம் கேட்டேனோ அது உங்களுக்கே. (நான் உங்களுக்கு எடுத்துரைத்த அனைத்தும் உங்கள் நன்மைக்காவே. நான் உங்களிடம் இதற்கு எதையும் கூலியாக கேட்கவில்லையே!) எனது கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (உங்கள் மீது) இல்லை. அவன்தான் அனைத்தின் மீதும் சாட்சியாளன் ஆவான்.
Sebe' 34:48
(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக என் இறைவன் உண்மையான செய்தியை இறக்குகின்றான். அவன் மறைவான விஷயங்கள் அனைத்தையும் மிக அறிந்தவன் ஆவான்.
Sebe' 34:49
(நபியே!) கூறுவீராக! உண்மை (இந்த குர்ஆன்) வந்துவிட்டது. பொய்யன் (இப்லீஸ்) புதிதாக படைக்கவும் மாட்டான். (இறந்ததை) மீண்டும் உயிர்ப்பிக்கவும் மாட்டான்.
Sebe' 34:50
(நபியே!) கூறுவீராக! நான் வழிகெட்டால் நான் வழிகெடுவதெல்லாம் எனக்குத்தான் தீங்காக அமையும். நான் நேர்வழி பெற்றால் (அது) என் இறைவன் எனக்கு வஹ்யி அறிவிக்கின்ற காரணத்தால் ஆகும். (என் இறைவன் எனக்கு அறிவிக்கும் வேதத்தினால் நான் நேர்வழி பெறுகிறேன்.) நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவன், மிக சமீபமானவன்.
Sebe' 34:51
(நபியே!) அவர்கள் திடுக்கிடும்போது நீர் பார்த்தால் (அவர்கள்) தப்பிக்கவே முடியாது. வெகு சமீபமான இடத்திலிருந்து அவர்கள் பிடிக்கப்படுவார்கள். (பின்னர் தண்டிக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள்.)
Sebe' 34:52
அவர்கள் (அல்லாஹ்வின் தண்டனையை பார்த்தபோது) அவனை (அல்லாஹ்வை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று கூறுவார்கள். தூரமான இடத்திலிருந்து (-மறுமைக்கு சென்றுவிட்ட அவர்கள் அங்கிருந்து கொண்டு தவ்பா - பாவமீட்சியையும் இறை நம்பிக்கையையும்) அடைவது எங்கே அவர்களுக்கு சாத்தியமாகும். (அதாவது உலகத்தில் செய்ய வேண்டியதை மறுமையில் செய்ய ஆசைப்படுகின்றனர். உலகில் செய்ய வேண்டியதை மறுமைக்கு வந்தவுடன் செய்ய ஆசைப்பட்டு என்ன ஆகப்போகிறது?!)
Sebe' 34:53
திட்டமாக (இதற்கு) முன்னர் அவர்கள் இதை (-இந்த வேதத்தை) மறுத்து விட்டனர். அவர்கள் (சத்தியத்தை விட்டு) வெகு தூரமான இடத்திலிருந்து இருந்துகொண்டு கற்பனையாக அதிகம் பேசுகின்றனர்.
Sebe' 34:54
இதற்கு முன்னர் அவர்களின் (முந்தைய) கூட்டங்களுக்கு செய்யப்பட்டதைப் போன்று அவர்களுக்கு இடையிலும் அவர்கள் விரும்புவதற்கு இடையிலும் தடுக்கப்பட்டுவிடும். நிச்சயமாக இவர்கள் (உலகில் வாழ்ந்தபோது மறுமையைப் பற்றி) பெரிய சந்தேகத்தில்தான் இருந்தனர்.
Fatır 35:1
அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். (அவன்) வானங்களையும் பூமியையும் படைத்தவன், வானவர்களை இரண்டு இரண்டு, மூன்று மூன்று, நான்கு நான்கு இறக்கைகளை உடையவர்களாகவும் (நபிமார்களிடம் அனுப்பப்படுகின்ற) தூதர்களாகவும் ஆக்கக்கூடியவன். படைப்புகளில் தான் நாடுவதை அதிகப்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உள்ளவன்.
Fatır 35:2
அல்லாஹ் மக்களுக்கு (தன்) அருள்களில் இருந்து எதையும் திறந்தால் அதை தடுப்பவர் எவரும் இல்லை. அவன் எதையும் தடுத்து நிறுத்திவிட்டால் அவனுக்குப் பின் அதை விடுபவர் எவரும் இல்லை. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.
Fatır 35:3
மக்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைவு கூருங்கள். வானங்களில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிக்கின்ற படைப்பாளன் (வேறு) யாரும் அல்லாஹ்வை அன்றி உண்டா? அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் அறவே இல்லை. ஆகவே, நீங்கள் எப்படி (அவனைவிட்டு) திருப்பப்படுகிறீர்கள்.
Fatır 35:4
(நபியே!) அவர்கள் உம்மை பொய்ப்பித்தால், (அது புதிதல்ல.) உமக்கு முன்னரும் பல தூதர்கள் (இவர்களுக்கு முன்னுள்ளவர்களால்) பொய்ப்பிக்கப் பட்டுள்ளனர். அல்லாஹ்வின் பக்கமே எல்லாக் காரியங்களும் திருப்பப்படும்.
Fatır 35:5
மக்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே! ஆகவே, உலக வாழ்க்கை உங்களை மயக்கிவிட வேண்டாம். ஏமாற்றக்கூடியவனும் (ஷைத்தானும்) அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை மயக்கிவிட வேண்டாம்.
Fatır 35:6
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரி ஆவான். ஆகவே, அவனை எதிரியாகவே எடுத்துக்கொள்ளுங்கள்! அவன் தனது கூட்டத்தார்களை (கட்சிக்காரர்களை) அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்துவிட்டெரியும் நரகவாசிகளாக ஆகுவதற்காகத்தான்.
Fatır 35:7
எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு. எவர்கள் நம்பிக்கைகொண்டு, நன்மைகளை செய்தார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.
Fatır 35:8
எவர் ஒருவர், அவருக்கு தனது கெட்ட செயல் அலங்கரிக்கப்பட்டு அவர் அதை அழகாக கருதினாரோ (அவர் மீது நீர் கவலைப்படாதீர்.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுகின்றவரை வழிகெடுக்கின்றான். தான் நாடுகின்றவரை நேர்வழிபடுத்துகின்றான். ஆகவே, அவர்கள் மீதுள்ள கவலைகளால் உமது உயிர் போய்விட (-அழிந்துவிட) வேண்டாம். (நீர் கவலைப்படாதீர்.) நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்.
Fatır 35:9
அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகின்றான். அவை மேகத்தை கிளப்புகின்றன. அ(ந்த மேகத்)தை வறண்டுபோன ஊருக்கு ஓட்டி வருகிறோம். அதன் மூலம் அந்த பூமியை அது வறண்டதற்கு பின்னர் நாம் உயிர்ப்பிக்கின்றோம். இப்படித்தான் (படைப்புகள் மறுமுறை) எழுப்பப்படுவதும் (நிகழும்).
Fatır 35:10
யார் கண்ணியத்தை நாடுகின்றவராக இருப்பாரோ (அவர் அல்லாஹ்வைக் கொண்டு கண்ணியத்தை அடையட்டும். ஏனெனில்,) அல்லாஹ்விற்குத்தான் கண்ணியம் அனைத்தும் சொந்தமானது. அவன் பக்கம்தான் நல்ல சொற்கள் உயர்கின்றன. நல்ல செயல் அதை (மேலும்) உயர்த்துகிறது. தீமைகளுக்கு சூழ்ச்சி செய்பவர்கள் - அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி - அது அழிந்து போய்விடும்.
Fatır 35:11
அல்லாஹ்தான் உங்களை மண்ணிலிருந்து, பிறகு, இந்திரியத்திலிருந்து படைத்தான். பிறகு, அவன் உங்களை ஜோடிகளாக ஆக்கினான். ஒரு பெண் கர்ப்பமாவதும் இல்லை, கர்ப்பம் தரிப்பதும் இல்லை அவன் அறிந்தே தவிர. நீண்ட வயது கொடுக்கப்பட்டவர் வயது கொடுக்கப்படுவதில்லை, இன்னும் அவருடைய வயதில் குறைக்கப்படுவதில்லை பதிவுப் புத்தகத்தில் இருந்தே தவிர. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதே.
Fatır 35:12
இரண்டு கடல்களும் சமமாகாது. இது (-இதன் பானம்) அதை குடிப்பதற்கு இலகுவான, மதுரமான, சுவையானதாகும். (மற்ற) இதுவோ மிகவும் கசப்பான உவர்ப்பானது. (இவை) எல்லாவற்றிலிருந்தும் நீங்கள் பசுமையான கறியை சாப்பிடுகிறீர்கள்; நீங்கள் அணிகின்ற ஆபரணங்களை (அவற்றிலிருந்து) உற்பத்தி செய்துகொள்கிறீர்கள். அவற்றில் (-அந்த கடல்களில்) கப்பல்களை (தண்ணீரை) கிழித்துச் செல்லக்கூடியதாக பார்க்கின்றீர், நீங்கள் அவனது அருள்களிலிருந்து (உங்களுக்கு விதிக்கப்பட்டதை) நீங்கள் தேடுவதற்காகவும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (அந்த கப்பல்களில் உங்களை பயணிக்க வைத்தான்).
Fatır 35:13
இரவை பகலில் நுழைக்கின்றான்; பகலை இரவில் நுழைக்கின்றான். சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான். எல்லாம் குறிப்பிட்ட தவணையை நோக்கி ஓடுகின்றன. அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ் ஆவான். அவனுக்கே ஆட்சி அனைத்தும் உரியது. அவனை அன்றி நீங்கள் அழைப்பவர்கள் (-நீங்கள் வணங்குகின்ற உங்கள் தெய்வங்கள்) ஒரு (கொட்டையின் மீதுள்ள) தொலிக்குக் கூட உரிமை பெற மாட்டார்கள்.
Fatır 35:14
நீங்கள் அவர்களை அழைத்தாலும் அவர்கள் உங்கள் அழைப்பை செவிமடுக்க மாட்டார்கள். அவர்கள் செவிமடுத்தாலும் உங்களுக்கு பதில் தர மாட்டார்கள். மறுமை நாளில் நீங்கள் இணைவைத்ததை மறுத்து விடுவார்கள். ஆழ்ந்தறிபவன் (-அல்லாஹ்வைப்) போன்று உமக்கு (வேறு யாரும் இந்த சிலைகளைப் பற்றி உண்மை செய்திகளை) அறிவிக்க முடியாது.
Fatır 35:15
மக்களே! நீங்கள்தான் அல்லாஹ்வின் பக்கம் தேவையுள்ளவர்கள். அல்லாஹ் - அவன்தான் முற்றிலும் நிறைவானவன், புகழுக்குரியவன் ஆவான்.
Fatır 35:16
அவன் நாடினால் உங்களை அழித்து விடுவான். (வேறு) ஒரு புதிய படைப்பை அவன் கொண்டு வருவான்.
Fatır 35:17
அது அல்லாஹ்விற்கு சிரமமானதாக இல்லை.
Fatır 35:18
பாவியான ஓர் ஆன்மா மற்றோர் (பாவியான) ஆன்மாவின் பாவத்தை சுமக்காது. பாவச்சுமையுடைய ஓர் ஆன்மா தனது சுமையின் பக்கம் (அதை சுமக்க வேறு ஓர் ஆன்மாவை) அழைத்தால், -அது (அழைக்கப்பட்ட ஆன்மா அதன்) உறவினராக இருந்தாலும் சரியே அதில் இருந்து (-அழைத்த அந்த ஆன்மாவின் பாவச்சுமையில் இருந்து) ஏதும் சுமக்கப்பட முடியாது. (நபியே!) நீர் எச்சரிப்பதெல்லாம் தங்கள் இறைவனை மறைவில் அஞ்சுகின்றவர்களைத் தான். அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள். யார் பரிசுத்தம் அடைகிறாரோ அவர் பரிசுத்தம் அடைவதெல்லாம் தனது நன்மைக்காகத்தான். இன்னும் அல்லாஹ்வின் பக்கம்தான் மீளுமிடம் இருக்கிறது.
Fatır 35:19
குருடரும் பார்வையுடையவரும் சமமாக மாட்டார்.
Fatır 35:20
இருள்களும் வெளிச்சமும் சமமாகாது.
Fatır 35:21
நிழலும் வெயிலும் சமமாகாது.
Fatır 35:22
உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுகின்றவரை செவியேற்க வைப்பான். மண்ணறையில் உள்ளவர்களை செவியேற்க வைப்பவராக நீர் இல்லை.
Fatır 35:23
நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே தவிர வேறு இல்லை.
Fatır 35:24
நிச்சயமாக நாம் உம்மை நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் சத்தியத்தைக் கொண்டு அனுப்பினோம். எந்த ஒரு சமுதாயமும் இல்லை அவர்களில் அச்சமூட்டி எச்சரிப்பவர் சென்றிருந்தே தவிர.
Fatır 35:25
இவர்கள் உம்மை பொய்ப்பித்தால், திட்டமாக இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் (தங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களை) பொய்ப்பித்துள்ளனர். அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் இன்னும் பிரகாசமான வேதங்களையும் அவர்கள் கொண்டு வந்தனர்.
Fatır 35:26
பிறகு, நிராகரித்தவர்களை நான் தண்டித்தேன். எனது மாற்றம் (எனது தண்டனை) எப்படி இருந்தது?
Fatır 35:27
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தில் இருந்து மழையை இறக்கினான். அதன் மூலம் பலதரப்பட்ட நிறங்களை உடைய கனிகளை நாம் உற்பத்தி செய்தோம். மலைகளில் வெண்மையான, சிவப்பான பாதைகள், (உடைய மலைகளும்) உள்ளன. அவற்றின் நிறங்கள் பலதரப்பட்டவையாக உள்ளன. இன்னும் கருப்பான மலைகளும் உள்ளன.
Fatır 35:28
மக்களிலும் (ஏனைய) கால்நடைகளிலும் ஆடு மாடு ஒட்டகங்களிலும் இவ்வாறே (அவற்றின்) நிறங்கள் மாறுபட்டவை உள்ளன. அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுவதெல்லாம் அறிஞர்கள்தான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் ஆவான்.
Fatır 35:29
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகின்றார்களோ, இன்னும் தொழுகையை நிலைநிறுத்தி, நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் செய்தார்களோ அவர்கள் அறவே அழிந்து போகாத வியாபாரத்தை ஆதரவு வைக்கின்றனர்.
Fatır 35:30
அவன் (-அல்லாஹ்) அவர்களுக்கு அவர்களின் கூலிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கும் தனது அருளில் இருந்து மேலும் அவன் அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்கும் (அவர்கள் அந்த நல்லமல்களைச் செய்தார்கள்). நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், நன்றியுடையவன் ஆவான்.
Fatır 35:31
எதை உமக்கு நாம் வஹ்யி அறிவித்தோமோ அதாவது இந்த வேதம் அதுதான் சத்தியமானது. அது தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்துகிறது. நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களை ஆழ்ந்தறிபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
Fatır 35:32
பிறகு இந்த வேதத்தை நமது அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு கொடுத்தோம். அவர்களில் தனக்குத் தானே தீமை செய்தவரும் இருக்கின்றார். அவர்களில் நடுநிலையானவரும் இருக்கின்றார். இன்னும் அவர்களில் அல்லாஹ்வின் அனுமதிப்படி நன்மைகளில் முந்துகின்றவரும் இருக்கின்றார். இதுதான் மாபெரும் சிறப்பாகும்.
Fatır 35:33
“அத்ன்” சொர்க்கங்கள் - அவர்கள் அவற்றில் நுழைவார்கள்; அவற்றில் தங்கத்தினாலான காப்புகளிலிருந்தும் (-வளையல்களிலிருந்தும்) முத்து (ஆபரணங்களு)ம் அவர்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அவர்களின் ஆடைகள் அவற்றில் பட்டுத் துணியாகும்.
Fatır 35:34
அவர்கள் கூறுவார்கள்: எங்களை விட்டு கவலையைப் போக்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். நிச்சயமாக எங்கள் இறைவன் மகா மன்னிப்பாளன், நன்றியுடையவன் ஆவான்.
Fatır 35:35
அவன் தனது அருளினால் எங்களை நிரந்தர இல்லத்தில் தங்க வைத்தான். அதில் எங்களுக்கு சோர்வும் ஏற்படாது. அதில் எங்களுக்கு களைப்பும் ஏற்படாது.
Fatır 35:36
நிராகரித்தவர்கள் அவர்களுக்கு நரக நெருப்புதான் உண்டு. அவர்களுக்கு (மரணம் நிகழும் என) தீர்ப்பளிக்கப்படாது. ஆகவே, அவர்கள் மரணிக்க மாட்டார்கள். அதன் தண்டனை அவர்களை விட்டும் இலேசாக்கப்படாது. இப்படித்தான் எல்லா நிராகரிப்பாளர்களுக்கும் நாம் கூலிகொடுப்போம்.
Fatır 35:37
அவர்கள் அதில் கதறுவார்கள்: “எங்கள் இறைவா எங்களை வெளியேற்று! நாங்கள் செய்து கொண்டிருந்தது அல்லாமல் வேறு நல்ல அமல்களை செய்வோம்.” அறிவுரை பெறுபவர் அறிவுரை பெறுகின்ற (காலம்)வரை நாம் உங்களுக்கு (உலகத்தில்) வாழ்க்கையளிக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்தார். ஆகவே, (இந்த வேதனையை) சுவையுங்கள்! அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவரும் இல்லை.
Fatır 35:38
நிச்சயமாக அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள மறைவானவற்றை நன்கறிந்தவன் ஆவான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
Fatır 35:39
அவன்தான் உங்களை பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கினான். எவர் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு அவருக்குத்தான் தீங்காகும். நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நிராகரிப்பு அவர்களின் இறைவனிடம் கோபத்தைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்தாது. நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நிராகரிப்பு நஷ்டத்தைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்தாது.
Fatır 35:40
(நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைக்கின்ற உங்கள் இணை தெய்வங்களைப் பற்றி அறிவியுங்கள்! பூமியில் அவை எதைப் படைத்தன என்று எனக்கு காண்பியுங்கள். அல்லது வானங்களில் அவர்களுக்கு ஏதும் பங்கு உண்டா? அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை கொடுத்து, அவர்கள் அது விஷயத்தில் தெளிவான சான்றின் மீது இருக்கின்றார்களா?! மாறாக, அநியாயக்காரர்கள் அவர்களில் சிலர் சிலருக்கு ஏமாற்றத்தைத் தவிர (உண்மையை) வாக்களிப்பதில்லை.
Fatır 35:41
நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும் பூமியையும் அவை இரண்டும் (அவற்றின் இடங்களை விட்டு) நீங்கிவிடாமல் தடுத்து வைத்திருக்கின்றான். அவை இரண்டும் நீங்கிவிட்டால் அவனுக்குப் பின்னர் எவர் ஒருவரும் அவ்விரண்டையும் தடுத்து வைக்க முடியாது. நிச்சயமாக அவன் மகா சகிப்பாளனாக மகா மன்னிப்பாளனாக இருக்கின்றான்.
Fatır 35:42
அவர்கள் மிக உறுதியாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தனர்: “அவர்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வந்தால், சமுதாயங்களில் (நேர்வழிபெற்ற) ஒரு சமுதாயத்தை விட மிக அதிகம் நேர்வழி பெற்றவர்களாக நிச்சயமாக அவர்கள் இருந்திருப்பார்கள்” என்று. அவர்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வந்த போது அது அவர்களுக்கு (சத்தியத்தை விட்டு) விலகிச் செல்வதைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை.
Fatır 35:43
பூமியில் பெருமையடிப்பதையும் தீய சூழ்ச்சி செய்வதையும் தவிர அதிகப்படுத்தவில்லை. தீய சூழ்ச்சி அதை செய்தவர்களைத் தவிர சூழ்ந்துகொள்ளாது. முன் சென்றோரின் வழிமுறையைத் தவிர (வேறு எதையும்) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? அல்லாஹ்வின் வழிமுறையில் அறவே மாற்றத்தை நீர் காணமாட்டீர். இன்னும் அல்லாஹ்வின் வழிமுறையில் நீர் எவ்வித திருப்பத்தையும் காணமாட்டீர்.
Fatır 35:44
அவர்கள் பூமியில் பயணித்து, அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று பார்க்கவில்லையா! அவர்கள் இவர்களை விட பலத்தால் கடுமையானவர்களாக இருந்தனர். அல்லாஹ் -வானங்களில், பூமியில் உள்ள எதுவும் அவனை பலவீனப்படுத்தக்கூடியதாக இருக்கவில்லை. நிச்சயமாக அவன் நன்கறிந்தவனாக, பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
Fatır 35:45
அல்லாஹ் மக்களை அவர்கள் செய்ததற்காக தண்டிப்பதாக இருந்தால் அதன் மேற்பரப்பில் (-பூமியின் மேல்) எந்த உயிரினத்தையும் அவன் விட்டிருக்க மாட்டான். எனினும் ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை அவன் பிற்படுத்தி வைக்கின்றான். அவர்களுடைய தவணை வந்துவிட்டால் (அவர்கள் அவனது தண்டனையை விட்டும் தப்பிக்க முடியாது. ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களை உற்றுநோக்கியவனாக இருக்கின்றான்.
Yâsin 36:1
யா, ஸீன்.[1]
———
[1] ஸூரா பகராவின் 1-ஆவது வசனத்தின் அடிக்குறிப்பைப் பாருங்கள்.
Yâsin 36:2
ஞானமிகுந்த குர்ஆன் மீது சத்தியமாக!
Yâsin 36:3
நிச்சயமாக நீர் இறைத்தூதர்களில் இருக்கிறீர்.
Yâsin 36:4
நேரான பாதையின் மீது இருக்கிறீர்.
Yâsin 36:5
மிகைத்தவன், மகா கருணையாளன் இறக்கிய வேதமாகும் இது.
Yâsin 36:6
ஒரு சமுதாயத்தை நீர் எச்சரிப்பதற்காக (உமக்கு இந்த வேதம் அருளப்பட்டது). அவர்களின் மூதாதைகள் (இதற்கு முன்னர் இறைத்தூதர்களால்) எச்சரிக்கப்படவில்லை. ஆகவே, அவர்கள் அலட்சியக்காரர்களாக இருக்கின்றனர்.
Yâsin 36:7
அவர்களில் அதிகமானவர்கள் மீது (அல்லாஹ்வின்) வாக்கு திட்டமாக உறுதியாகிவிட்டது. ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Yâsin 36:8
நிச்சயமாக நாம் அவர்களின் கழுத்துகள் மீது அரிகண்டங்களை ஏற்படுத்தி விட்டோம். அவை (அவர்களின்) தாடைகள் வரை இருக்கின்றன. ஆகவே, அவர்கள் (தங்கள் தலைகளை) உயர்த்தியவர்களாக இருக்கின்றனர்.
Yâsin 36:9
அவர்களுக்கு முன்னும் ஒரு தடுப்பையும் அவர்களுக்கு பின்னும் ஒரு தடுப்பையும் நாம் ஆக்கினோம். ஆகவே, நாம் அவர்களை குருடாக்கி விட்டோம். ஆகவே, அவர்கள் பார்க்கமாட்டார்கள்.
Yâsin 36:10
நீர் அவர்களை எச்சரித்தாலும் அல்லது அவர்களை நீர் எச்சரிக்கவில்லை என்றாலும் அவர்கள் மீது (இரண்டும்) சமம் தான். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Yâsin 36:11
நீர் எச்சரிப்பதெல்லாம் இந்த வேதத்தை பின்பற்றி மறைவில் ரஹ்மானை பயந்தவரைத்தான். ஆகவே, அவருக்கு மன்னிப்பைக் கொண்டும் கண்ணியமான கூலியைக் கொண்டும் நற்செய்தி கூறுவீராக!
Yâsin 36:12
நிச்சயமாக நாம்தான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கின்றோம். அவர்கள் முன்னர் செய்தவற்றையும் அவர்களின் காலடிச்சுவடுகளையும் நாம் பதிவு செய்வோம். எல்லாவற்றையும் நாம் தெளிவான பதிவேட்டில் பதிவு செய்துள்ளோம்.
Yâsin 36:13
அவர்களுக்கு அந்த ஊர் வாசிகளை உதாரணமாக எடுத்துச் சொல்வீராக! அவர்களிடம் தூதர்கள் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
Yâsin 36:14
அவர்களிடம் நாம் இருவரை அனுப்பியபோது அவர்கள் அவ்விருவரையும் பொய்ப்பித்தனர். நாம் மூன்றாவது ஒருவரைக்கொண்டு பலப்படுத்தினோம். அவர்கள் கூறினர்: நிச்சயமாக நாங்கள் உங்கள் பக்கம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்.
Yâsin 36:15
அவர்கள் கூறினர்: நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் அன்றி வேறு இல்லை. ரஹ்மான் எதையும் (உங்கள் மீது) இறக்கவில்லை. நீங்கள் பொய் சொல்கின்றவர்களாகவே தவிர இல்லை.
Yâsin 36:16
அவர்கள் கூறினர்: நிச்சயமாக நாங்கள் உங்கள் பக்கம் அனுப்பப்பட்ட தூதர்கள் என்று எங்கள் இறைவன் நன்கறிவான்.
Yâsin 36:17
தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர எங்கள் மீது (உங்களை நிர்ப்பந்திப்பது கடமை) இல்லை.
Yâsin 36:18
அவர்கள் கூறினர்: நாங்கள் உங்களை துர்ச்சகுனமாக கருதுகின்றோம். நீங்கள் விலகவில்லை என்றால் நிச்சயமாக நாங்கள் உங்களை கல்லால் எறிவோம். இன்னும் எங்களிடமிருந்து வலிமிகுந்த வேதனை நிச்சயமாக உங்களை வந்தடையும்.
Yâsin 36:19
அவர்கள் கூறினர்: உங்கள் துர்ச்சகுனம் உங்களுடன்தான். நீங்கள் அறிவுறுத்தப்பட்டாலுமா (இப்படி மூடர்களாக நடப்பீர்கள்)? மாறாக, நீங்கள் வரம்பு மீறுகின்ற மக்கள் ஆவீர்கள்.
Yâsin 36:20
பட்டணத்தின் கடைக்கோடியில் இருந்து ஓர் ஆடவர் விரைந்தவராக வந்தார். அவர் கூறினார்: என் மக்களே! தூதர்களை நீங்கள் பின்பற்றுங்கள்.
Yâsin 36:21
உங்களிடம் கூலியை கேட்காதவர்களை பின்பற்றுங்கள். அவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள்.
Yâsin 36:22
என்னைப் படைத்தவனை நான் வணங்காமல் இருப்பதற்கு எனக்கு என்ன நேர்ந்தது? அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Yâsin 36:23
அவனை அன்றி (வேறு) தெய்வங்களை நான் எடுத்துக் கொள்வேனா! (அந்த) ரஹ்மான் எனக்கு ஒரு தீங்கை நாடினால் அவற்றின் சிபாரிசு என்னை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து) எதையும் தடுக்காது. இன்னும், அவர்கள் என்னை காப்பாற்ற மாட்டார்கள்.
Yâsin 36:24
அப்போது (-அவற்றைக் கடவுளாக எடுத்துக் கொண்டால்) நிச்சயமாக நான் தெளிவான வழிகேட்டில்தான் சென்று விடுவேன்.
Yâsin 36:25
நிச்சயமாக நான் உங்கள் இறைவனை நம்பிக்கை கொண்டேன். ஆகவே, எனக்கு (நான் சொல்வதை) செவிசாயுங்கள்!
Yâsin 36:26
(அவருக்கு) கூறப்பட்டது: “நீர் சொர்க்கத்தில் நுழைவீராக!” என்று. அவர் கூறினார்: என் மக்கள் அறிய வேண்டுமே,
Yâsin 36:27
எனக்கு என் இறைவன் மன்னிப்பு வழங்கியதையும்; அவன் என்னை கண்ணியமானவர்களில் ஆக்கியதையும்!”
Yâsin 36:28
அவருக்குப் பின்னர் அவருடைய மக்கள் மீது வானத்தில் இருந்து ஒரு படையை நாம் இறக்கவில்லை. நாம் (அப்படி) இறக்குபவர்களாகவும் இல்லை.
Yâsin 36:29
அது (-அந்த வேதனை) ஒரே ஒரு சப்தமாகவே தவிர (வேறு ஒன்றாக) இருக்கவில்லை. ஆகவே, அப்போது அவர்கள் அழிந்து விட்டார்கள்.
Yâsin 36:30
அடியார்கள் மீது நிகழ்ந்த துக்கமே! அவர்களிடம் எந்த ஒரு தூதரும் வரவில்லை அவர்கள் அவரை பரிகாசம் செய்பவர்களாக இருந்தே தவிர.
Yâsin 36:31
அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம். நிச்சயமாக அவர்கள் தங்கள் பக்கம் திரும்பி வரமாட்டார்கள் என்பதை அவர்கள் கவனிக்க மாட்டார்களா?
Yâsin 36:32
(அவர்கள்) எல்லோரும் இல்லை, நம்மிடம் அவர்கள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டவர்களாகவே தவிர.
Yâsin 36:33
அவர்களுக்கு (நமது) அத்தாட்சி இறந்துபோன (-காய்ந்து போன) பூமியாகும். அதை நாம் உயிர்ப்பித்தோம். அதிலிருந்து நாம் வித்துக்களை வெளியாக்கினோம். அதில் இருந்துதான் அவர்கள் சாப்பிடுகின்றார்கள்.
Yâsin 36:34
பேரித்த மரங்கள் இன்னும் திராட்சைகளின் தோட்டங்களை அதில் நாம் ஏற்படுத்தினோம். ஊற்றுக் கண்களை அதில் உதித்தோடச் செய்தோம்.
Yâsin 36:35
அவனுடைய (-அவன் படைத்த) கனிகளில் இருந்து அவர்கள் புசிப்பதற்காக (அவன் அவர்களுக்கு அவற்றை உற்பத்தி செய்து கொடுத்தான்). இவற்றை அவர்களின் கரங்கள் செய்யவில்லை. (அல்லாஹ் இவற்றை கொடுத்ததற்காக அவனுக்கு) அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
Yâsin 36:36
பூமி முளைக்க வைக்கக்கூடியதிலும் (தாவரங்களிலும்) அவர்களிலும் அவர்கள் அறியாதவற்றிலும் பல வகைகளையெல்லாம் படைத்தவன் மிகப் பரிசுத்தமானவன்.
Yâsin 36:37
இன்னும் அவர்களுக்கு அத்தாட்சி இரவாகும். அதிலிருந்து பகலை நாம் உரித்தெடுக்கின்றோம் (-வெளிப்படுத்துகின்றோம்). அப்போது அவர்கள் இருளில் ஆகிவிடுகின்றனர்.
Yâsin 36:38
சூரியன் தனது இருப்பிடத்தை நோக்கி ஓடுகிறது. அது நன்கறிந்த மிகைத்தவனுடைய ஏற்பாடாகும். (-திட்டமிடுதலாகும்)
Yâsin 36:39
சந்திரனை - அதை பல தங்குமிடங்களில் நாம் திட்டமிட்டோம். இறுதியாக அது பழைய (காய்ந்த) பேரிச்சை குலையைப் போல் திரும்பிவிடுகின்றது.
Yâsin 36:40
சூரியன் - அது சந்திரனை அடைவது அதற்கு ஆகுமாகாது. இரவு பகலை முந்திவிடாது. ஒவ்வொன்றும் ஒரு கோளில் நீந்துகின்றன. (-சுற்றுகின்றன)
Yâsin 36:41
இன்னும் அவர்களுக்கு அத்தாட்சியாவது நிச்சயமாக நாம் (மக்களால்) நிரம்பிய கப்பலில் அவர்களின் சந்ததிகளை பயணிக்க வைத்தோம்.
Yâsin 36:42
இன்னும் அதைப் போன்று அவர்கள் வாகனிப்பதை (-பல வகையான வாகனங்களை) நாம் அவர்களுக்கு படைத்தோம்.
Yâsin 36:43
நாம் நாடினால் அவர்களை மூழ்கடிப்போம். அவர்களுக்கு உதவியாளர் அறவே இல்லை. இன்னும் அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்.
Yâsin 36:44
எனினும் நமது கருணையினாலும் சில காலம் வரை (அவர்கள்) சுகம் அனுபவிப்பதற்காகவும் (நாம் அவர்களை கடலில் மூழ்கடிப்பதில்லை).
Yâsin 36:45
உங்களுக்கு முன்னுள்ளதையும் (முந்திய சமுதாயத்திற்கு இறக்கப்பட்ட தண்டனையையும்) உங்களுக்கு பின்னுள்ளதையும் (மறுமையின் தண்டனையையும்) நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்! என்று அவர்களுக்கு கூறப்பட்டால்... (அவர்கள் புறக்கணித்து விலகிச் சென்று விடுகின்றனர்.)
Yâsin 36:46
அவர்களிடம் அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் இருந்து (ஏதும்) ஓர் அத்தாட்சி வருவதில்லை அதை புறக்கணித்தவர்களாக அவர்கள் இருந்தே தவிர.
Yâsin 36:47
அல்லாஹ் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து நீங்கள் தர்மம் செய்யுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால் நிராகரித்தவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி கூறுகின்றனர்: “அல்லாஹ் நாடினால் எவருக்கு உணவளித்து விடுவானோ அவருக்கு நாங்கள் உணவளிக்க வேண்டுமா? நீங்கள் வழிகேட்டிலேயே தவிர (நேர்வழியில்) இல்லை.” என்று (முஸ்லிம்களைப் பார்த்து கூறுகின்றனர்).
Yâsin 36:48
இன்னும், இந்த வாக்கு எப்போது நிகழும், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் என்று அவர்கள் கூறுகின்றனர்.
Yâsin 36:49
ஒரே ஒரு சப்தத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அது (ஒரு நாள்) அவர்களைப் பிடித்துக் கொள்ளும். (அப்போது) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பார்கள்.
Yâsin 36:50
அவர்கள் மரண சாசனம் கூறுவதற்கு சக்தி பெற மாட்டார்கள். இன்னும் தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பி வர மாட்டார்கள். (அதற்குள் மறுமை நிகழ்ந்துவிடும்).
Yâsin 36:51
சூரில் ஊதப்படும். அப்போது அவர்கள் கப்ருகளில் இருந்து தங்கள் இறைவன் பக்கம் விரைவாக வெளியேறி வருவார்கள்.
Yâsin 36:52
அவர்கள் (-இறை மறுப்பாளர்கள்) கூறுவார்கள்: “எங்கள் நாசமே! யார் எங்களை எங்கள் தூங்குமிடத்தில் இருந்து எழுப்பியது?” (அதற்குப் பதிலாக நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள்:) இது (-இந்த மறுமை நாள்) ரஹ்மான் வாக்களித்ததும் தூதர்கள் உண்மையாகக் கூறியதும் ஆகும்.
Yâsin 36:53
அது (-மறுமையில் நிகழும்) ஒரே ஒரு சப்தமே தவிர (வேறு ஒன்றாக) இருக்காது. அப்போது அவர்கள் அனைவரும் நம்மிடம் ஆஜராக்கப்படுவார்கள்.
Yâsin 36:54
இன்றைய தினம் எந்த ஓர் ஆன்மாவும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.
Yâsin 36:55
நிச்சயமாக சொர்க்கவாசிகள் இன்று (முக்கியமான) வேலையில் இன்பமனுபவிப்பார்கள்.
Yâsin 36:56
அவர்களும் அவர்களின் மனைவிகளும் நிழல்களில் (இளைப்பாரிக் கொண்டு) கட்டில்களின்மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
Yâsin 36:57
அவர்களுக்கு அதில் கனிகள் உண்டு. இன்னும் அவர்கள் ஆசைப்படுவதும் அவர்களுக்கு கிடைக்கும்.
Yâsin 36:58
(உங்கள் மீது) ஸலாம் உண்டாகட்டும். மகா கருணையாளனாகிய இறைவன் புறத்தில் இருந்து (ஸலாம்) கூறப்படும்.
Yâsin 36:59
குற்றவாளிகளே! இன்றைய தினம் (நல்லவர்களை விட்டும்) நீங்கள் பிரிந்து விடுங்கள்!
Yâsin 36:60
ஆதமின் மக்களே! ஷைத்தானை நீங்கள் வணங்காதீர்கள் என்று உங்களுக்கு நான் கட்டளையிடவில்லையா? நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரியாவான்.
Yâsin 36:61
இன்னும் என்னை வணங்குங்கள் (என்றும் உங்களுக்கு நான் கட்டளையிடவில்லையா?) இதுதான் நேரான பாதையாகும்.
Yâsin 36:62
அவன் உங்களில் அதிகமான படைப்புகளை (-மக்களை) திட்டவட்டமாக வழிகெடுத்துள்ளான். நீங்கள் சிந்தித்து புரிகின்றவர்களாக இருக்கவில்லையா?
Yâsin 36:63
நீங்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருந்த நரகம் இதுதான்.
Yâsin 36:64
இன்று அதில் நீங்கள் பொசுங்குங்கள் நீங்கள் நிராகரித்துக்கொண்டிருந்த காரணத்தால்.
Yâsin 36:65
இன்று நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிடுவோம். அவர்களின் கரங்கள் நம்மிடம் பேசும். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு அவர்களின் கால்கள் சாட்சி சொல்லும்.
Yâsin 36:66
நாம் நாடியிருந்தால் அவர்களின் கண்களை குருடாக்கி இருப்போம். அவர்கள் பாதை தவறி இருப்பார்கள். ஆக, அவர்கள் எப்படி பார்ப்பார்கள்! (அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக நாம் அவர்களை இவ்வுலகிலேயே தண்டிக்க நாடி இருந்தால் அவர்களின் கண்களை குருடாக்கி இருப்போம். அவர்கள் எதையும் பார்க்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்திருப்பார்கள்.)
Yâsin 36:67
நாம் நாடி இருந்தால் அவர்களை அவர்களின் இடத்திலேயே உட்கார வைத்திருப்போம். (அவர்களை உருமாற்றி (அழித்து) இருப்போம்) ஆக, அவர்கள் (முன்னால்) நடப்பதற்கும் ஆற்றல் பெறமாட்டார்கள். (வேதனை இறங்கும் போது அவர்கள் வெளியில் இருந்தால் தங்கள் இல்லங்களுக்கு) திரும்பி வரவும் மாட்டார்கள்.
Yâsin 36:68
நாம் எவருக்கு நீண்ட வயதை கொடுக்கின்றோமோ படைப்பில் (-உருவத்தில் பழைய நிலைக்கு) அவரை திருப்பி விடுவோம். (பலமுள்ளவராக இருந்தவரை பலவீனராக மாற்றிவிடுவோம். இதை) அவர்கள் சிந்தித்து புரிய வேண்டாமா? (இதை செய்பவன் படைப்புகளை அழித்து மீண்டும் படைக்க ஆற்றல் உள்ளவன்)
Yâsin 36:69
நாம் அவருக்கு கவிதைகளை கற்றுத்தரவில்லை. அது அவருக்கு தகுதியானதும் இல்லை. இது அறிவுரையும் தெளிவான குர்ஆனும் அன்றி வேறு எதுவும் இல்லை.
Yâsin 36:70
(உள்ளத்தால்) உயிருள்ளவராக இருக்கின்றவரை அது (-குர்ஆன்) எச்சரிப்பதற்காகவும் நிராகரிப்பாளர்கள் மீது (தண்டனையின்) வாக்கு உறுதியாகி விடுவதற்காகவும் (இந்த வேதத்தை நாம் அவருக்கு இறக்கினோம்).
Yâsin 36:71
நிச்சயமாக நாம் அவர்களுக்கு நமது கரங்கள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்ததை அவர்கள் (சிந்தித்து) பார்க்கவில்லையா? அவர்கள் அவற்றுக்கு உரிமையாளர்களாக இருக்கின்றார்கள்.
Yâsin 36:72
நாம் அவற்றை அவர்களுக்கு பணியவைத்தோம். அவற்றில் அவர்களின் வாகனங்களும் உண்டு. அவற்றில் இருந்து அவர்கள் புசிக்கவும் செய்கின்றார்கள்.
Yâsin 36:73
இன்னும் அவர்களுக்கு இவற்றில் (-கால்நடைகளில் அதிகமான) பலன்களும் குடிபானங்களும் உள்ளன. (இவற்றை வழங்கிய அல்லாஹ்விற்கு) அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
Yâsin 36:74
அல்லாஹ்வை அன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர் தாங்கள் உதவி செய்யப்படுவதற்காக.
Yâsin 36:75
அவர்கள் (-அந்த சிலைகள்) அவர்களுக்கு (-அவற்றை வணங்குகின்றவர்களுக்கு) உதவுவதற்கு சக்தி பெறமாட்டார்கள். அவர்கள் (சிலை வணங்கிகள்) அவர்கள் முன் (-சிலைகளுக்கு முன்) தயாராக இருக்கின்ற ராணுவமாக இருக்கின்றார்கள். (அந்த சிலைகளை பாதுகாக்கின்றனர்; அதற்கு யாரும் கெடுதி செய்தால் அதற்காக கொதித்து எழுகின்றனர்.)
Yâsin 36:76
ஆகவே, அவர்களின் பேச்சு உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக நாம் அவர்கள் மறைத்து பேசுவதையும் அவர்கள் வெளிப்படுத்தி பேசுவதையும் நன்கறிவோம்.
Yâsin 36:77
நிச்சயமாக நாம் அவனை (-மனிதனை) ஓர் இந்திரியத் துளியில் இருந்து படைத்துள்ளோம் என்பதை மனிதன் (சிந்தித்து) பார்க்கவில்லையா? ஆனால், அவனோ தெளிவாக தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான்.
Yâsin 36:78
அவன் நமக்கு ஓர் உதாரணத்தை விவரிக்கின்றான். தான் படைக்கப்பட்டதை அவன் மறந்துவிட்டான். அவன் கூறுகின்றான்: எலும்புகளை அவை மக்கிப்போன நிலையில் இருக்கின்ற போது யார் உயிர்ப்பிப்பான்?
Yâsin 36:79
(நபியே!) கூறுவீராக! அவற்றை முதல் முறை உருவாக்கியவன்தான் அவற்றை (மறுமுறையும்) உயிர்ப்பிப்பான். இன்னும் அவன் எல்லா படைப்புகளையும் நன்கறிந்தவன் ஆவான்.
Yâsin 36:80
அவன் பசுமையான பச்சை மரத்தில் இருந்து உங்களுக்கு நெருப்பை ஏற்படுத்துகின்றான். அப்போது நீங்கள் அதில் நெருப்பை மூட்டிக் கொள்கிறீர்கள்.
Yâsin 36:81
வானங்களையும் பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களை படைப்பதற்கு ஆற்றலுடையவனாக இல்லையா? ஏன் இல்லை! அவன்தான் மகா படைப்பாளன், நன்கறிந்தவன் ஆவான்.
Yâsin 36:82
அவன் எதையும் நாடினால் அவனது கட்டளை எல்லாம் அதற்கு ஆகு என்று அவன் கூறுவதுதான். அது ஆகிவிடும்.
Yâsin 36:83
எவனுடைய கரத்தில் எல்லாவற்றின் பேராட்சி இருக்கின்றதோ அவன் மகா பரிசுத்தமானவன். அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Saffat 37:1
அணி அணியாக அணிவகுப்பவர்கள் (-வானவர்கள்) மீது சத்தியமாக!
Saffat 37:2
கடுமையாக விரட்டுகின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக!
Saffat 37:3
வேதத்தை ஓதுபவர்கள் மீது சத்தியமாக!
Saffat 37:4
நிச்சயமாக உங்கள் கடவுள் ஒருவன்தான்.
Saffat 37:5
(அவன்தான்) வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் (-அதிபதி) ஆவான். இன்னும் (அவன்) சூரியன் உதிக்கும் இடங்களையும் (அது மறையும் இடங்களையும்) நிர்வகிப்பவன் ஆவான்.
Saffat 37:6
நிச்சயமாக நாம் கீழுள்ள வானத்தை நட்சத்திரங்களின் அலங்காரத்தால் அலங்கரித்துள்ளோம்.
Saffat 37:7
(இறைவனுக்கு) அடங்காத எல்லா ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவும் (நட்சத்திரங்களால் வானத்தை அலங்கரித்தோம்).
Saffat 37:8
மிக உயர்ந்த (வானவக்) கூட்டத்தினரின் பக்கம் (அவர்களின் பேச்சை) அவர்களால் செவியுற முடியாது. எல்லா பக்கங்களில் இருந்தும் (அந்த ஷைத்தான்கள் வால் நட்சத்திரங்களால்) எறியப்படுவார்கள்.
Saffat 37:9
(வானத்தை விட்டு) தடுக்கப்படுவதற்காக (அவர்கள் மீது நட்சத்திரங்கள் எறியப்படும்). இன்னும், அவர்களுக்கு (மறுமையில்) நிரந்தரமான தண்டனை உண்டு.
Saffat 37:10
எனினும், (வானவர்களின் பேச்சை) யார் திருட்டுத்தனமாக திருடுகின்றாரோ (கள்ளத்தனமாக ஒட்டுக்கேட்க முயற்சிக்கின்றாரோ) எரிக்கின்ற நெருப்புக் கங்கு அவரை பின்தொடரும்.
Saffat 37:11
அவர்கள் (-மறுமையை மறுப்பவர்கள்) படைப்பால் பலமிக்கவர்களா அல்லது எவர்களை நாம் படைத்தோமோ (அவர்கள் பலமிக்கவர்களா? அதாவது வானம், பூமி, மலைகள், வானவர்கள் போன்ற படைப்புகளா)? என்று அவர்களிடம் விளக்கம் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களை (-மனிதர்களை) பிசுபிசுப்பான (ஒட்டிக்கொள்கின்ற நல்ல) மண்ணிலிருந்து படைத்தோம்.
Saffat 37:12
அன்றி, (நபியே! இந்த குர்ஆன் உமக்கு கொடுக்கப்பட்டபோது) நீர் ஆச்சரியப்பட்டீர். இன்னும் அவர்கள் (உம்மையும் இந்த வேதத்தையும்) கேலி செய்தனர்.
Saffat 37:13
அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் அறிவுரை பெறமாட்டார்கள்.
Saffat 37:14
அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் (அதை) பரிகாசம் செய்கிறார்கள்.
Saffat 37:15
தெளிவான சூனியமே தவிர இது வேறில்லை என்று கூறுகின்றனர்.
Saffat 37:16
நாங்கள் இறந்து, எலும்புகளாகவும், (எங்கள் சதை) மண்ணாகவும் மாறிவிட்டால் நிச்சயமாக நாங்கள் (மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு) எழுப்பப்படுவோமா?
Saffat 37:17
“இன்னும், எங்கள் முந்திய முன்னோர்களுமா (எழுப்பப்படுவார்கள்)?” (என்று அவர்கள் கேட்கிறார்கள்.)
Saffat 37:18
“ஆம், (நீங்கள் அனைவரும் எழுப்பப்படுவீர்கள். அப்போது) நீங்கள் மிகவும் சிறுமைப்பட்டவர்களாக இருப்பீர்கள்” என்று கூறுவீராக!
Saffat 37:19
அதுவெல்லாம் (-மறுமை நிகழ்வதெல்லாம்) ஒரே ஒரு பலமான சப்தம்தான். அப்போது அவர்கள் (மறுமையின் காட்சிகளை கண்கூடாகப்) பார்ப்பார்கள்.
Saffat 37:20
எங்கள் நாசமே! என்று அவர்கள் கூறுவார்கள். (அப்போது அவர்களுக்குக் கூறப்படும் ஆம்!) இதுதான் கூலி கொடுக்கப்படும் நாள்.
Saffat 37:21
இதுதான் தீர்ப்பு நாள் ஆகும். இதை நீங்கள் பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்கள்.
Saffat 37:22
அநியாயம் செய்தவர்களையும் அவர்களின் இனத்தவர்களையும் (அவர்களைப் பின்பற்றியவர்களையும் அவர்களைப் போன்று நிராகரித்த மற்றவர்களையும்) இன்னும், அவர்கள் வணங்கி வந்தவர்களையும் ஒன்று திரட்டுங்கள்!
Saffat 37:23
அல்லாஹ்வை அன்றி (அவர்கள் வணங்கியவர்களை கொண்டுவாருங்கள்)! ஆக, அவர்களுக்கு நரகத்தின் பாதையின் பக்கம் வழிகாட்டுங்கள்.
Saffat 37:24
அவர்களை நிறுத்துங்கள்! நிச்சயமாக அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
Saffat 37:25
உங்களுக்கு என்ன நேர்ந்தது நீங்கள் உங்களுக்குள் உதவிக் கொள்ளவில்லை?
Saffat 37:26
மாறாக, அவர்கள் இன்று (அல்லாஹ்வின் கட்டளைக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து விடுவார்கள்.
Saffat 37:27
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி (தங்கள் இறுதி தங்குமிடத்தைப் பற்றி) விசாரித்துக் கொள்வார்கள்.
Saffat 37:28
அவர்கள் (-வழிகெட்டவர்கள் வழிகெடுத்தவர்களை நோக்கி) கூறுவார்கள்: நன்மையை விட்டுத் தடுக்க நீங்கள் எங்களிடம் வருபவர்களாக இருந்தீர்கள்.
Saffat 37:29
அவர்கள் (-வழிகெடுத்தவர்கள்) கூறுவார்கள்: மாறாக நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.
Saffat 37:30
(உங்களை வழிகெடுக்க) எங்களுக்கு உங்கள் மீது எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை. மாறாக, நீங்கள் எல்லை மீறுகின்ற மக்களாக இருந்தீர்கள்.
Saffat 37:31
ஆகவே, நம் மீது நமது இறைவனுடைய (தண்டனையின்) வாக்கு உறுதியாகி விட்டது. நிச்சயமாக நாம் (தண்டனையை) சுவைப்பவர்கள்தான்.
Saffat 37:32
ஆக, நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். நிச்சயமாக நாங்கள் வழி கெட்டவர்களாகவே இருந்தோம்.
Saffat 37:33
நிச்சயமாக அவர்கள் (வழிகெட்டவர்களும் வழிகெடுத்தவர்களும்) அந்நாளில் வேதனையில் (ஒன்றாக) கூட்டாகுவார்கள்.
Saffat 37:34
நிச்சயமாக நாம் இப்படித்தான் குற்றவாளிகளுடன் நடந்து கொள்வோம்.
Saffat 37:35
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை என்று அவர்களுக்கு கூறப்பட்டால் நிச்சயமாக அவர்கள் பெருமை அடி(த்து புறக்கணி)ப்பவர்களாக இருந்தனர்.
Saffat 37:36
பைத்தியக்காரரான ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை நிச்சயமாக நாங்கள் விட்டுவிடுவோமா? என்று அவர்கள் கூறுகின்றனர்.
Saffat 37:37
மாறாக, அவர் (-அந்தத் தூதர்) சத்தியத்தைக் கொண்டு வந்தார். இன்னும் தூதர்களை உண்மைப்படுத்தினார்.
Saffat 37:38
நிச்சயமாக நீங்கள் வலிதரும் வேதனையை சுவைப்பீர்கள்.
Saffat 37:39
நீங்கள் செய்து வந்ததற்கே அன்றி நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.
Saffat 37:40
அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்கள் தண்டனையை விட்டும் பாதுகாக்கப்படுவார்கள்.)
Saffat 37:41
அறியப்பட்ட உணவு அவர்களுக்கு உண்டு.
Saffat 37:42
(அதாவது) பழங்கள் (அவர்களுக்கு உண்டு). இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்.
Saffat 37:43
இன்பமிகு சொர்க்கங்களில் (இருப்பார்கள்).
Saffat 37:44
கட்டில்கள் மீது ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.
Saffat 37:45
மதுரமான தெளிவான நீரைப் போன்ற மதுவினால் நிரம்பிய கிண்ணங்களுடன் அவர்களை சுற்றிவரப்படும்.
Saffat 37:46
அந்த மது வெண்மையாக அருந்துபவர்களுக்கு மிக இன்பமானதாக இருக்கும்.
Saffat 37:47
அதில் (அறிவைப் போக்கக்கூடிய) போதையும் இருக்காது (தலைவலி, வயிற்று வலி இருக்காது.) அவர்கள் அதனால் மயக்கமுறவுமாட்டார்கள்.
Saffat 37:48
அவர்களிடம் பார்வைகளை தாழ்த்திய கண்ணழகிகள் இருப்பார்கள்.
Saffat 37:49
அவர்கள் பாதுகாக்கப்பட்ட (-மறைக்கப்பட்ட தீக்கோழியின்) முட்டையைப் போன்று (-அதன் நிறத்தில்) இருப்பார்கள்.
Saffat 37:50
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி (நரகவாசிகளைப் பற்றி) விசாரிப்பார்கள்.
Saffat 37:51
நிச்சயமாக எனக்கு ஒரு நண்பன் இருந்தான் என்று அவர்களில் கூறக்கூடிய ஒருவர் கூறுவார்.
Saffat 37:52
நிச்சயமாக நீ (தூதர்களை) உண்மைப்படுத்துபவர்களில் இருக்கின்றாயா என்று (உலகில் வாழும் போது என்னிடம்) கூறுவான்.
Saffat 37:53
“நாம் இறந்துவிட்டால் (பின்னர்) எலும்புகளாகவும் மண்ணாகவும் மாறி விட்டால், நிச்சயமாக நாம் (நமது செயல்களுக்கு) கூலி கொடுக்கப்படுவோமா?” (என்று அவன் கூறுவான்)
Saffat 37:54
அவர் (-அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: நீங்கள் (நரகத்தில் உள்ளவர்களை) எட்டிப்பார்ப்பீர்களா? (அது முடியுமா?) என்று கூறுவார்.
Saffat 37:55
அவர் (-அந்த நம்பிக்கையாளர் நரகத்தில்) எட்டிப்பார்ப்பார். அவர் அவனை நரகத்தின் நடுவில் பார்ப்பார்.
Saffat 37:56
அவர் (-அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக நீ என்னை நாசமாக்குவதற்கு நெருக்கமாக இருந்தாய்.
Saffat 37:57
என் இறைவனின் அருள் இல்லாதிருந்தால் நானும் (நரகத்தில் தண்டனைக்காக) ஆஜர்படுத்தப்படுபவர்களில் ஆகி இருப்பேன்.
Saffat 37:58
“ஆக, (இந்த சொர்க்க வாழ்க்கையில்) நாங்கள் மரணிப்பவர்களாக இல்லையே!”
Saffat 37:59
“எங்கள் முதல் மரணத்தைத் தவிர (வேறு மரணம் எங்களுக்கு இல்லை). இன்னும் நாங்கள் தண்டனை செய்யப்படுபவர்களாக இல்லை.”
Saffat 37:60
நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.
Saffat 37:61
அமல் செய்பவர்கள் இது போன்றதற்காக (-இதுபோன்ற நன்மைகளை பெறுவதற்காக) அமல் செய்யட்டும்.
Saffat 37:62
அது (-மேற்கூறப்பட்ட சொர்க்க இன்பங்கள் இறைவனின்) விருந்தோம்பலால் மிகச் சிறந்ததா அல்லது ஸக்கூம் என்ற கள்ளி மரமா?
Saffat 37:63
நிச்சயமாக நாம் இணைவைப்பவர்களுக்கு அதை ஒரு சோதனையாக (தண்டனையாக) ஆக்கினோம்.
Saffat 37:64
நிச்சயமாக அது நரகத்தின் அடியில் முளைக்கின்ற ஒரு மரமாகும்.
Saffat 37:65
அதன் கனிகள் ஷைத்தான்களின் (-பாம்புகளின்) தலைகளைப் போல் (மிக விகாரமாக) இருக்கும்.
Saffat 37:66
நிச்சயமாக அவர்கள் அதிலிருந்து சாப்பிடுவார்கள். இன்னும் அதிலிருந்து (தங்கள்) வயிறுகளை நிரப்புவார்கள்.
Saffat 37:67
பின்னர் நிச்சயமாக அவர்களுக்கு அதற்கு மேல் கொதி நீரில் இருந்து கலக்கப்படும். (அவர்கள் உண்ணுகின்ற கள்ளிமர பழத்துடன் கடுமையான உஷ்ணமுள்ள நீரும் கலந்து கொடுக்கப்படும்.)
Saffat 37:68
(கள்ளிப்பழத்தை உண்டு கொதி நீரைக் குடித்த) பிறகு நிச்சயமாக அவர்களின் மீளுமிடம் நரக நெருப்பின் பக்கம்தான் இருக்கும்.
Saffat 37:69
நிச்சயமாக அவர்கள் (-இந்த இணைவைப்பவர்கள்) தங்கள் மூதாதைகளை வழிகெட்டவர்களாக பெற்றார்கள்.
Saffat 37:70
அவர்களின் (-மூதாதைகளின்) அடிச்சுவடுகளில் (அவற்றை கண்மூடித்தனமாக பின்பற்றுவதற்கு) இவர்கள் விரைகின்றார்கள்.
Saffat 37:71
இவர்களுக்கு முன்னர் முன்னோரில் அதிகமானவர்கள் திட்டவட்டமாக வழிகெட்டுள்ளனர்.
Saffat 37:72
திட்டவட்டமாக அவர்களில் அச்சமூட்டி எச்சரிப்பவர்களை நாம் அனுப்பினோம்.
Saffat 37:73
ஆகவே, எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று (நபியே) நீர் பார்ப்பீராக!
Saffat 37:74
எனினும், அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்கள் (தண்டனையில் இருந்து) பாதுகாக்கப்படுவார்கள்.
Saffat 37:75
திட்டவட்டமாக நூஹ் நம்மை அழைத்தார். பதில் தருபவர்களில் நாம் மிகச் சிறந்தவர்கள்.
Saffat 37:76
மிகப் பெரிய துக்கத்தில் இருந்து அவரையும் அவரது குடும்பத்தாரையும் பாதுகாத்தோம்.
Saffat 37:77
இன்னும், அவரது சந்ததிகளைத்தான் (உலகில்) மீதமானவர்களாக நாம் ஆக்கினோம்.
Saffat 37:78
இன்னும், பிற்காலத்தில் வருபவர்களில் அவரைப் பற்றிய நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்.
Saffat 37:79
உலகத்தார்களில் (யாரும் அவரை பழித்துப் பேசாதவாறு) நூஹுக்கு ஸலாம் உண்டாகட்டும்.
Saffat 37:80
நிச்சயமாக நாம் இவ்வாறுதான் நல்லவர்களுக்கு கூலி கொடுப்போம்.
Saffat 37:81
நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர் ஆவார்.
Saffat 37:82
பிறகு, மற்றவர்களை நாம் மூழ்கடித்தோம்.
Saffat 37:83
நிச்சயமாக அவரது கொள்கையை சேர்ந்தவர்களில் உள்ளவர்தான் இப்ராஹீம்.
Saffat 37:84
அவர் தனது இறைவனிடம் ஈடேற்றம் பெற்ற உள்ளத்துடன் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
Saffat 37:85
தனது தந்தை இன்னும் தனது மக்களை நோக்கி, எதை நீங்கள் வணங்குகிறீர்கள் என்று அவர் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
Saffat 37:86
அல்லாஹ்வை அன்றி பொய்யாக பல தெய்வங்களையா (உங்கள் தேவைகளுக்கும் வழிபாடுகளுக்கும்) நீங்கள் நாடுகிறீர்கள்?
Saffat 37:87
ஆக, அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன? (அவன் ஒருவனை மட்டும் வணங்காமல் ஏன் கற்பனையாக பல தெய்வங்களை உருவாக்கினீர்கள்?)
Saffat 37:88
ஆக, அவர் நட்சத்திரங்களின் பக்கம் ஒரு பார்வை பார்த்தார்.
Saffat 37:89
தொடர்ந்து அவர் கூறினார், “நிச்சயமாக நான் ஒரு நோயாளி ஆவேன்”.
Saffat 37:90
ஆகவே, அவர்கள் முகம் திரும்பியவர்களாக அவரை விட்டு விலகிச் சென்றனர்.
Saffat 37:91
ஆக, அவர்களின் தெய்வங்கள் பக்கம் (இப்ராஹீம்) விரைந்தார். ஆக, அவர் (அந்த சிலைகளை நோக்கி) கூறினார்: “நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?”
Saffat 37:92
“உங்களுக்கு என்ன ஏற்பட்டது? நீங்கள் ஏன் பேசுவதில்லை?”
Saffat 37:93
ஆக, வலக்கரத்தால் அவற்றை அடி(த்து உடை)ப்பதற்காக அவற்றின் மீது பாய்ந்தார்.
Saffat 37:94
ஆக, அவர்கள் விரைந்தவர்களாக அவர் பக்கம் முன்னோக்கி வந்தனர்.
Saffat 37:95
அவர் கூறினார்: “நீங்கள் (கற்களிலும் கட்டைகளிலும்) எதை செதுக்கி உருவாக்குகிறீர்களோ அதை வணங்குகிறீர்களா?”
Saffat 37:96
“அல்லாஹ்தான் உங்களையும் உங்கள் செயல்களையும் படைக்கிறான்.”
Saffat 37:97
அவர்கள் கூறினார்கள்: “அவருக்கு ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள். (அதில் விறகுகளை போட்டு நெருப்பு எரியுங்கள்!) ஆக, அந்த எரியும் நெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்!”
Saffat 37:98
ஆக, அவர்கள் அவருக்கு ஒரு சூழ்ச்சியை நாடினர். ஆக, நாம் அவர்களைத்தான் மிகத் தாழ்ந்தவர்களாக ஆக்கினோம்.
Saffat 37:99
இன்னும், அவர் கூறினார்: “நிச்சயமாக நான் என் இறைவனின் பக்கம் செல்கிறேன். அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.”
Saffat 37:100
“என் இறைவா! எனக்கு நல்லவர்களில் ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையைத் தா!”
Saffat 37:101
ஆகவே, மிக சகிப்பாளரான ஒரு குழந்தையைக் கொண்டு நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்.
Saffat 37:102
ஆக, (அந்த குழந்தை) அவருடன் உழைக்கின்ற பருவத்தை அடைந்தபோது அவர் கூறினார்: “என் மகனே! நிச்சயமாக நான் உன்னை பலியிடுவதாக கனவில் பார்க்கிறேன். ஆகவே, நீ என்ன கருதுகிறாய் என்று நீ யோசி(த்து சொல்)!” (மகனார்) கூறினார்: “என் தந்தையே! உமக்கு எது ஏவப்படுகிறதோ அதை நீர் நிறைவேற்றுவீராக! இன் ஷா அல்லாஹ் (-அல்லாஹ் நாடினால் அல்லாஹ்வின் தீர்ப்பின் மீது) பொறுமையாக இருப்பவர்களில் ஒருவராக என்னை நீர் காண்பீர்.”
Saffat 37:103
ஆக, அப்போது அவர்கள் இருவரும் (இறைவனின் கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தனர். அவர் அவரை (அவருடைய) கன்னத்தின் மீது கீழே சாய்த்தார்.
Saffat 37:104
இன்னும், “இப்ராஹீமே!” என்று நாம் அவரை அழைத்தோம்.
Saffat 37:105
“திட்டமாக நீர் கனவை உண்மைப்படுத்தினீர். நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.”
Saffat 37:106
நிச்சயமாக இதுதான் தெளிவான சோதனையாகும்.
Saffat 37:107
இன்னும், மகத்தான ஒரு பலிப்பிராணியைக் கொண்டு அவரை விடுதலை செய்தோம்.
Saffat 37:108
இன்னும், பின்னோரில் அவரைப் பற்றி அழகிய பெயரை ஏற்படுத்தினோம்.
Saffat 37:109
இப்ராஹீமுக்கு ஸலாம் உண்டாகட்டும்.
Saffat 37:110
இப்படித்தான் நல்லவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
Saffat 37:111
நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்.
Saffat 37:112
இன்னும், நல்லவர்களில் ஒருவராகவும் நபியாகவும் இருக்கப்போகின்ற இஸ்ஹாக்கைக் கொண்டு நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்.
Saffat 37:113
அவருக்கும் இஸ்ஹாக்கிற்கும் அருள் வளம் புரிந்தோம். இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நல்லவரும் இருக்கிறார். தனக்கு தெளிவாக தீங்கிழைத்தவரும் இருக்கிறார்.
Saffat 37:114
திட்டவட்டமாக மூஸாவிற்கும் ஹாரூனுக்கும் அருள்புரிந்தோம்.
Saffat 37:115
அவ்விருவரையும் அவ்விருவரின் மக்களையும் பெரிய துக்கத்தில் இருந்து பாதுகாத்தோம்.
Saffat 37:116
இன்னும், அவர்களுக்கு உதவினோம். ஆகவே, அவர்கள்தான் வெற்றியாளர்களாக ஆகிவிட்டார்கள்.
Saffat 37:117
இன்னும், அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தை கொடுத்தோம்.
Saffat 37:118
இன்னும், அவ்விருவரையும் நேரான பாதையில் நேர்வழி நடத்தினோம்.
Saffat 37:119
இன்னும், பிற்காலத்தில் வருவோரில் அவ்விருவருக்கும் நற்பெயரை ஏற்படுத்தினோம்.
Saffat 37:120
மூஸாவிற்கும் ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாகட்டும்.
Saffat 37:121
நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.
Saffat 37:122
நிச்சயமாக அவ்விருவரும் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்கள்.
Saffat 37:123
நிச்சயமாக இல்யாஸ் (நமது) தூதர்களில் உள்ளவர்.
Saffat 37:124
அவர் தனது மக்களுக்கு, “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
Saffat 37:125
‘பஃல்’ சிலையை நீங்கள் வணங்குகிறீர்களா? மிக அழகிய படைப்பாளனை (வணங்குவதை) விட்டுவிடுகிறீர்களா?
Saffat 37:126
உங்கள் இறைவனான, இன்னும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவனுமான அல்லாஹ்வை (வணங்குவதை) விட்டுவிடுகிறீர்களா?
Saffat 37:127
ஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, நிச்சயமாக அவர்கள் (நரகத்தில் தண்டனை அனுபவிக்க) ஆஜர்படுத்தப்படுவார்கள்.
Saffat 37:128
(எனினும்,) அல்லாஹ்வின் பரிசுத்தமான (இணைவைக்காத) அடியார்களைத் தவிர. (அவர்கள் தண்டனையிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்).
Saffat 37:129
இன்னும், பிற்காலத்தில் வருவோரில் அவருக்கு நற்பெயரை ஏற்படுத்தினோம்.
Saffat 37:130
இல்யாஸுக்கு(ம் அவரது மக்களில் அவரை பின்பற்றியவர்களுக்கும்) ஸலாம் உண்டாகட்டும்.
Saffat 37:131
நிச்சயமாக நல்லவர்களுக்கு நாம் இப்படித்தான் கூலி கொடுப்போம்.
Saffat 37:132
நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்.
Saffat 37:133
நிச்சயமாக லூத், (நமது) தூதர்களில் ஒருவர்தான்.
Saffat 37:134
அவரையும் அவரது குடும்பத்தார் அனைவரையும் நாம் காப்பாற்றிய சமயத்தை நினைவு கூர்வீராக!
Saffat 37:135
(தண்டனையில்) தங்கி விடுபவர்களில் (ஒருவராக இருந்த அவரது குடும்பத்தைச் சேர்ந்த) ஒரு மூதாட்டியைத் தவிர.
Saffat 37:136
(அவரையும் முஃமின்களையும் பாதுகாத்த) பிறகு, மற்றவர்களை நாம் அழித்தோம்.
Saffat 37:137
இன்னும், நிச்சயமாக நீங்கள் காலையில் அவர்களை கடந்து செல்கிறீர்கள்.
Saffat 37:138
இரவிலும் (அவர்களை கடந்து செல்கிறீர்கள்). (நபியை நிராகரிப்பவர்களே!) நீங்கள் (இந்த வரலாறுகளை) சிந்தித்து புரியமாட்டீர்களா?
Saffat 37:139
நிச்சயமாக யூனுஸ், (நமது) தூதர்களில் உள்ளவர்தான்.
Saffat 37:140
(பொருள்களால்) நிரம்பிய கப்பலை நோக்கி அவர் ஓடிய சமயத்தை நினைவு கூர்வீராக!
Saffat 37:141
ஆக, (அவர் சென்ற கப்பல் நின்றுவிடவே) அவர் சீட்டு குலுக்கிப் போட்டார். ஆக, குலுக்கலில் பெயர் எடுக்கப்பட்டவர்களில் அவர் ஆகிவிட்டார். (அவரது பெயர் எழுதப்பட்ட சீட்டு வந்தது.)
Saffat 37:142
ஆக, (அவர் தன்னை கடலில் எறியவே) அவரை திமிங்கிலம் விழுங்கியது. அவர் (தனது இறைவனின் கட்டளை இன்றி கடலுக்கு சென்றதால்) பழிப்புக்குரிய செயலை செய்தவர் ஆவார்.
Saffat 37:143
ஆக, நிச்சயமாக அவர் அல்லாஹ்வை அதிகம் (தொழுது) துதிப்பவர்களில் இருந்திருக்கவில்லை என்றால்,
Saffat 37:144
அதனுடைய வயிற்றில் (மக்கள் மறுமையில்) எழுப்பப்படுகின்ற நாள் வரை தங்கி இருந்திருப்பார்.
Saffat 37:145
ஆக, (அருகிலிருந்த) பெருவெளியில் அவரை எறிந்தோம். அவர் நோயுற்றவராக இருந்தார்.
Saffat 37:146
இன்னும், அவருக்கு அருகில் ஒரு சுரைக்காய் செடியை முளைக்க வைத்தோம்.
Saffat 37:147
இன்னும், ஒரு இலட்சம் அல்லது அதை விட அதிகமானவர்களுக்கு (தூதராக) அவரை அனுப்பினோம்.
Saffat 37:148
ஆக, அவர்கள் நம்பிக்கை கொண்டனர். ஆகவே, நாம் அவர்களுக்கு ஒரு காலம் வரை சுகமளித்தோம்.
Saffat 37:149
ஆகவே, (நபியே! நீர்) அவர்களிடம் (-இந்த மக்காவாசிகளிடம்) விளக்கம் கேட்பீராக! உமது இறைவனுக்கு பெண் பிள்ளைகளும், அவர்களுக்கு ஆண் பிள்ளைகளுமா?
Saffat 37:150
வானவர்களை பெண்களாகவா நாம் படைத்தோம், அவர்கள் (அதை) பார்த்துக் கொண்டு (அங்கு ஆஜராகி) இருந்தார்களா?
Saffat 37:151
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தங்களது பெரும் பொய்யில் ஒன்றாக கூறுகிறார்கள்:
Saffat 37:152
“அல்லாஹ் குழந்தை பெற்றெடுத்தான்” என்று. நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் ஆவர்.
Saffat 37:153
ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளை அவன் (தனக்கு) தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
Saffat 37:154
உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இவ்வாறு) எப்படி தீர்ப்பளிக்கிறீர்கள்?
Saffat 37:155
ஆக, நீங்கள் நல்லுபதேசம் பெற மாட்டீர்களா?
Saffat 37:156
அல்லது, உங்களிடம் தெளிவான ஆதாரம் (ஏதும்) இருக்கிறதா?
Saffat 37:157
ஆக, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் (கூற்றுக்கு ஆதாரமாக இருக்கின்ற) வேதத்தைக் கொண்டு வாருங்கள்.
Saffat 37:158
அவனுக்கும் ஜின்களுக்கும் இடையில் ஓர் உறவை அவர்கள் ஏற்படுத்தினர். நிச்சயமாக அவர்கள் (நரகத்தில்) ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று திட்டவட்டமாக அந்த ஜின்கள் அறிந்து கொண்டனர்.
Saffat 37:159
அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.
Saffat 37:160
(எனினும்,) அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்கள் நரகத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.)
Saffat 37:161
ஆக, நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குகின்றவையும்,
Saffat 37:162
அதன் மூலம் (யாரையும்) நீங்கள் வழிகெடுப்பவர்களாக இல்லை,
Saffat 37:163
யார் நரகத்தில் எரிந்து பொசுங்குவாரோ அவரைத் தவிர. (நரகவாசிகள் என்று முடிவாகிவிட்டவர்களைத்தான் நீங்கள் வழிகெடுக்க முடியும்.)
Saffat 37:164
(வானவர்கள் கூறுவார்கள்:) “எங்களில் (யாரும்) இல்லை அவருக்கு ஒரு குறிப்பிட்ட தகுதி இருந்தே தவிர.”
Saffat 37:165
இன்னும், நிச்சயமாக நாங்கள்தான் (அல்லாஹ்வை வணங்குவதற்காக) அணிவகுத்து நிற்பவர்கள்.
Saffat 37:166
இன்னும், நிச்சயமாக நாங்கள்தான் (அல்லாஹ்வை) துதித்து தொழுபவர்கள்.
Saffat 37:167
நிச்சயமாக (இந்த மக்காவாசிகள்) கூறுபவர்களாக இருந்தனர்:
Saffat 37:168
“நிச்சயமாக முன்னோரிடம் இருந்த வேதம் எங்களிடம் இருந்திருந்தால்,
Saffat 37:169
நாங்களும் அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களாக ஆகியிருப்போம்.”
Saffat 37:170
ஆக (அது வந்த பின்னர் இப்போது) அவர்கள் அதை நிராகரித்து விட்டனர். (தங்கள் முடிவை) அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்.
Saffat 37:171
திட்டவட்டமாக நமது வாக்கு தூதர்களான நமது அடியார்களுக்கு முந்திவிட்டது.
Saffat 37:172
நிச்சயமாக அவர்கள்தான் உதவப்படுவார்கள்.
Saffat 37:173
நிச்சயமாக நமது இராணுவம்தான் வெற்றி பெறுவார்கள்.
Saffat 37:174
ஆகவே, (நபியே) அவர்களை விட்டு சிறிது காலம் வரை விலகி இருப்பீராக!
Saffat 37:175
இன்னும், (நபியே!) அவர்களைப் பார்ப்பீராக! (அவர்களுக்கு இறங்கப் போகும் தண்டனையை அவர்கள்) விரைவில் பார்ப்பார்கள்.
Saffat 37:176
ஆக, அவர்கள் நமது தண்டனையை அவசரமாக வேண்டுகின்றனரா?
Saffat 37:177
ஆக, அது அவர்களின் முற்றத்தில் (அதிகாலையில்) இறங்கிவிட்டால் எச்சரிக்கப்பட்டவர்களின் (அந்த) அதிகாலை மிக கெட்டதாக இருக்கும்.
Saffat 37:178
சிறிது காலம் வரை அவர்களை விட்டு விலகி இருப்பீராக!
Saffat 37:179
இன்னும், (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராக! ஆக, (அவர்களுக்கு இறங்கப் போகின்ற தண்டனையை) விரைவில் அவர்கள் பார்ப்பார்கள்.
Saffat 37:180
கண்ணியத்தின் அதிபதியான உமது இறைவன் அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மிக பரிசுத்தமானவன்.
Saffat 37:181
இறைத்தூதர்களுக்கு ஸலாம் உண்டாகுக!
Saffat 37:182
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கு எல்லாப் புகழும் உரித்தாகுக!
Sâd 38:1
ஸாத்![1] அறிவுரைகள் நிறைந்த அல்குர்ஆன் மீது சத்தியமாக!
———
[1] ஸூரா பகராவின் 1-ஆவது வசனத்தின் அடிக்குறிப்பைப் பாருங்கள்.
Sâd 38:2
மாறாக, நிராகரிப்பவர்கள் பிடிவாதத்திலும் முரண்பாட்டிலும் இருக்கிறார்கள்.
Sâd 38:3
இவர்களுக்கு முன்னர் எத்தனையோ பல தலைமுறை(மக்)களை நாம் அழித்தோம். (நம் வேதனை வந்தபோது அவர்கள் நம்மிடம் மன்றாடி பிரார்த்தித்து நம்மை) அழைத்தனர். (ஆனால், வேதனை வந்த) அந்த நேரம் தப்பித்து ஓடுவதற்குரிய நேரம் அல்ல.
Sâd 38:4
அவர்களில் இருந்தே ஓர் எச்சரிப்பாளர் அவர்களிடம் வந்ததால் அவர்கள் ஆச்சரியப்பட்டனர். நிராகரிப்பாளர்கள் (அவரைப் பற்றி) கூறினர்: “இவர் ஒரு சூனியக்காரர், ஒரு பெரும் பொய்யர்.”
Sâd 38:5
“இவர் தெய்வங்களை (எல்லாம்) ஒரே ஒரு தெய்வமாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஒரு ஆச்சரியமான விஷயம்தான்.”
Sâd 38:6
நீங்கள் சென்று, உங்கள் தெய்வங்கள் மீது உறுதியாக இருங்கள்! நிச்சயமாக (முஹம்மது கூறுகின்ற) இது (நமக்கு தீமையும் அவருக்கு தலைமைத்துவமும்) நாடப்பட்ட ஒரு விஷயம்தான் என்று கூறி அவர்களில் உள்ள தலைவர்கள் சென்றனர்.
Sâd 38:7
இதை வேறு மார்க்கத்தில் நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இது கற்பனையாக இட்டுக்கட்டப்பட்டதைத் தவிர வேறு இல்லை.
Sâd 38:8
நமக்கு மத்தியில் (-மனிதராக வாழ்கின்ற) அவர் மீது வேதம் இறக்கப்பட்டதா? (என்று கேலி செய்கின்றனர்.) மாறாக அவர்கள் எனது வேதத்தில் சந்தேகத்தில் இருக்கின்றனர். மாறாக, அவர்கள் (இதுவரை) எனது வேதனையை சுவைக்கவில்லை. (அப்படி சுவைத்திருந்தால் இந்த வேதத்தை உடனே நம்பியிருப்பார்கள்.)
Sâd 38:9
கண்ணியமிக்கவனான, மகா கொடை வள்ளலான உமது இறைவனின் அருளுடைய பொக்கிஷங்கள் அவர்களிடம் இருக்கின்றனவா?
Sâd 38:10
அவர்களுக்கு வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் ஆட்சி இருக்கின்றதா? அப்படி இருந்தால் அவர்கள் (வானங்களின்) வாசல்களில் ஏறட்டும்.
Sâd 38:11
(இவர்கள்) அந்த விஷயத்தில் (-உம்மை பொய்ப்பிக்கின்ற விஷயத்தில்) தோற்கடிக்கப்படுகின்ற (-கேவலமான) இராணுவம்தான். (இவர்கள் இப்லீஸின்) கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள்.
Sâd 38:12
இவர்களுக்கு முன்னர் நூஹ் உடைய மக்களும் ஆது (சமுதாயமு)ம் ஆணிகளை உடைய ஃபிர்அவ்னும் (நபிமார்களை) பொய்ப்பித்தனர்.
Sâd 38:13
ஸமூது சமுதாயமும் லூத்துடைய மக்களும் தோட்டமுடையவர்களும் பொய்ப்பித்தனர். அவர்கள்தான் (பாவத்திற்காக ஒன்றுகூடிய) குழுக்கள் ஆவார்கள்.
Sâd 38:14
இவர்கள் எல்லோரும் தூதர்களை பொய்ப்பித்தனர். ஆகவே, எனது தண்டனை (அவர்களுக்கு) உறுதியானது.
Sâd 38:15
இவர்கள் ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு (அந்த சப்தத்திற்கு) துண்டிப்பு, இடைவெளி இருக்காது. (அந்த வேதனை இடைவெளி இல்லாத ஒரே சப்தமாக இருக்கும்.)
Sâd 38:16
அவர்கள் கூறினர்: எங்கள் இறைவா! விசாரணை நாளுக்கு முன்பாக எங்களுக்கு எங்கள் பத்திரத்தை, ஆவணத்தை தீவிரப்படுத்து. (மறுமையில் எங்களுக்கு நீ என்ன கொடுக்கப்போகிறாயோ அது நல்லதாக இருந்தாலும் சரி, அல்லது கெட்டதாக இருந்தாலும் சரி அதை ஒரு பத்திரத்தில் எழுதி உலகத்திலேயே எங்களுக்கு கொடுத்துவிடு.)
Sâd 38:17
அவர்கள் கூறுவதை சகிப்பீராக! நமது அடியார் (அல்லாஹ்வின் விஷயத்தில், அல்லாஹ்வை வணங்குவதில்) மிக வலிமை, உறுதி உடைய தாவூதை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் (அல்லாஹ்வின் பக்கம்) முற்றிலும் திரும்பக்கூடியவர் ஆவார்.
Sâd 38:18
நிச்சயமாக நாம் (அவருக்கு) மலைகளை வசப்படுத்தினோம். அவை அவருடன் மாலையிலும் காலையிலும் (அல்லாஹ்வை) துதிக்கும்.
Sâd 38:19
இன்னும் (அவருக்கு முன்பாக) ஒன்று சேர்க்கப்பட்ட பறவைகளையும் (அவருக்கு நாம்) வசப்படுத்திக் கொடுத்தோம். அவை எல்லாம் அவருக்கு கீழ்ப்படிந்தவையாக இருந்தன. (எல்லாம் அவருடன் சேர்ந்து அல்லாஹ்வை துதிப்பவையாக இருந்தன.)
Sâd 38:20
இன்னும், அவருடைய ஆட்சியை பலப்படுத்தினோம். அவருக்கு ஞானத்தையும் (-நபித்துவத்தையும் சட்ட நுணுக்கத்தையும்) மிகத்தெளிவான, மிக உறுதியான பேச்சையும் கொடுத்தோம்.
Sâd 38:21
(நபியே) வழக்காளிகளுடைய செய்தி உம்மிடம் வந்ததா? (அவர் அல்லாஹ்வை வணங்கி வந்த) வீட்டின் முன்பக்கமாக அவர்கள் சுவர் ஏறி வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
Sâd 38:22
அவர்கள் தாவூத் (நபி) இடம் நுழைந்த போது அவர் அவர்களைப் பார்த்து திடுக்கிற்றார். அவர்கள் கூறினர்: பயப்படாதீர். நாங்கள் இரு வழக்காளிகள். எங்களில் ஒருவர் ஒருவர் மீது அநியாயம் செய்தார். ஆகவே! எங்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பீராக! அநீதி இழைத்து விடாதீர். நேரான பாதையின் பக்கம் எங்களுக்கு வழிகாட்டுவீராக!
Sâd 38:23
“நிச்சயமாக இவர் எனது சகோதரர். அவருக்கு தொண்ணூற்றி ஒன்பது ஆடுகள் உள்ளன. எனக்கு ஒரே ஓர் ஆடுதான் உள்ளது. ‘அதையும் எனக்கு தருவாயாக!’ என்று அவர் கூறுகிறார். அவர் வாதத்தில் என்னை மிகைத்துவிட்டார்.
Sâd 38:24
(தாவூத்) கூறினார்: உனது ஆட்டை தனது ஆடுகளுடன் சேர்க்க அவர் கேட்டதினால் அவர் உனக்கு அநீதி இழைத்துவிட்டார். நிச்சயமாக பங்காளிகளில் அதிகமானவர்கள் - அவர்களில் சிலர் சிலர் மீது அநீதி இழைக்கின்றனர். (ஆனால்,) நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்களைத் தவிர. அவர்கள் மிகக் குறைவானவர்களே! தாவூத், நாம் அவரை சோதித்தோம் என்பதை அறிந்தார். ஆகவே, அவர் தன் இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார். சிரம் பணிந்தவராக (பூமியில்) விழுந்தார். அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்.
Sâd 38:25
நாம் அவருக்கு அதை (அந்த தவறை) மன்னித்தருளினோம். நிச்சயமாக அவருக்கு நம்மிடம் மிக நெருக்கமும் அழகிய மீளுமிடமும் உண்டு.
Sâd 38:26
தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை இந்த பூமியில் அதிபராக ஆக்கினோம். ஆகவே, மக்களுக்கு மத்தியில் சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! மன ஆசையை பின்பற்றிவிடாதீர். அது உம்மை அல்லாஹ்வின் மார்க்கத்தில் இருந்து வழிகெடுத்துவிடும். நிச்சயமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் இருந்து வழிகெடுபவர்கள் - அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு, அவர்கள் விசாரணை நாளை மறந்ததால்.
Sâd 38:27
வானத்தையும் பூமியையும் அவ்விரண்டுக்கு மத்தியில் உள்ளவற்றையும் நாம் வீணாக படைக்கவில்லை. அது நிராகரிப்பவர்களின் எண்ணமாகும். நிராகரிப்பவர்களுக்கு நரகத்தில் நாசம் உண்டாகட்டும்.
Sâd 38:28
நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களை பூமியில் குழப்பம் செய்பவர்களைப் போன்று ஆக்குவோமா? இறையச்சம் உள்ளவர்களை பாவிகளைப் போன்று ஆக்குவோமா?
Sâd 38:29
இது அருள் நிறைந்த ஒரு வேதமாகும். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுள்ளவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் இதை நாம் உமக்கு இறக்கினோம்.
Sâd 38:30
தாவூதுக்கு நாம் ஸுலைமானை (பிள்ளையாக) வழங்கினோம். அவர் சிறந்த அடியார். நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் பக்கம் அதிகம் திரும்புகின்றவர் ஆவார். (அல்லாஹ்வை அதிகம் நினைப்பவராகவும் தொழுபவராகவும் அவனுக்கு அதிகம் கீழ்ப்படிபவராகவும் ஆவார்.)
Sâd 38:31
(ஓடும்போது) விரைந்து ஓடக்கூடிய, (நிற்கும்போது மூன்று கால்களின் மீது நின்று, ஒரு காலின் குழம்பை பூமியில் தொட்டு) அமைதியாக நிற்கக்கூடிய குதிரைகள் மாலை நேரத்தில் அவருக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டபோது,
Sâd 38:32
ஆக, அவர் கூறினார்: “என் இறைவனை தொழுவதை விட்டும் (மறக்கும் அளவுக்கு குதிரை) செல்வத்தின் ஆசையை நிச்சயமாக நான் ஆசை வைத்து விட்டேன்.” இறுதியாக, (சூரியன் அது மறையக்கூடிய) திரையில் மறைந்து (-பார்க்க முடியாமல் ஆகி) விட்டது.
Sâd 38:33
அவற்றை என்னிடம் திரும்பக் கொண்டு வாருங்கள். கெண்டை கால்களிலும் கழுத்துகளிலும் அவற்றை (அன்புடன்) தடவ ஆரம்பித்தார்.
Sâd 38:34
ஸுலைமானை நாம் திட்டவட்டமாக சோதித்தோம். அவருடை நாற்காலியில் ஓர் உடலை போட்டோம். பிறகு அவர் (நம் பக்கம்) திரும்பிவிட்டார்.
Sâd 38:35
அவர் கூறினார்: என் இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குப் பிறகு வேறு ஒருவருக்கும் தகுதியாகாத ஓர் ஆட்சியை நீ எனக்குத் தா! நிச்சயமாக நீதான் மகா பெரிய கொடைவள்ளல் ஆவாய்.
Sâd 38:36
ஆகவே, அவருக்கு நாம் காற்றை கட்டுப்படுத்திக் கொடுத்தோம். அவர் விரும்புகின்ற இடத்திற்கு அவருடைய கட்டளைக்கிணங்க அது மென்மையாக வீசும்.
Sâd 38:37
இன்னும், எல்லா ஷைத்தான்களையும் (அவருக்கு பணிய வைத்தோம்). அவர்களில் கட்டிட வல்லுனர்கள், முத்துக் குளிப்பவர்கள் இருந்தனர்.
Sâd 38:38
(இவர்கள் அனைவரையும்,) இன்னும், சங்கிலிகளில் பிணைக்கப்பட்ட மற்றவர்களையும் (நாம் அவருக்கு பணிய வைத்தோம்).
Sâd 38:39
இது நமது அருட்கொடையாகும். ஆகவே, (இந்த அருளை பிறருக்கு) நீர் கொடுப்பீராக! அல்லது, நீரே வைத்துக்கொள்வீராக! (அது விஷயமாக உம்மிடம்) விசாரணை இருக்காது.
Sâd 38:40
நிச்சயமாக அவருக்கு நம்மிடம் நெருக்கமும் அழகிய மீளுமிடமும் இருக்கிறது.
Sâd 38:41
நமது அடியார் அய்யூபை நினைவு கூர்வீராக! நிச்சயமாக எனக்கு களைப்பையும் இன்னும் வலியையும் ஷைத்தான் ஏற்படுத்தி விட்டான் என்று அவர் தன் இறைவனை அழைத்(து பிரார்த்தித்)த போது (நாம் கூறினோம்).
Sâd 38:42
உமது காலால் (பூமியை) அடிப்பீராக! இது குளிக்கின்ற இன்னும் குடிக்கின்ற குளிர்ந்த நீராகும்.
Sâd 38:43
நம் புறத்தில் இருந்து கருணையாகவும் அறிவுள்ளவர்களுக்கு ஓர் உபதேசமாக இருப்பதற்காகவும் அவருக்கு அவருடைய குடும்பத்தாரையும் அவர்களுடன் (குணத்திலும் அழகிலும்) அவர்கள் போன்றவர்களையும் நாம் (அதிகமாகக்) கொடுத்தோம்.
Sâd 38:44
உமது கரத்தால் ஒரு பிடி புல்லை எடுப்பீராக! அதன்மூலம் அடிப்பீராக! நீர் சத்தியத்தை முறிக்காதீர்! நிச்சயமாக நாம் அவரை பொறுமையாளராக கண்டோம். அவர் சிறந்த அடியார். நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் பக்கமே திரும்பியவர் ஆவார்.
Sâd 38:45
நமது அடியார்களான, பலமும் அகப்பார்வையும் உடையவர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோரை நினைவு கூர்வீராக!
Sâd 38:46
நிச்சயமாக நாம் “மறுமையை அதிகம் நினைத்தல் (அதற்காக அமல் செய்தல்)” என்ற சிறப்பைக் கொண்டு அவர்களை (விசேஷமாக) தேர்ந்தெடுத்தோம். (அவர்களும் அல்லாஹ்வை, மறுமையை நினைவு கூர்ந்தவர்களாக இருந்ததுடன் மக்களுக்கும் அதை நினைவூட்டுபவர்களாக இருந்தார்கள்.)
Sâd 38:47
இன்னும், நிச்சயமாக அவர்கள், நம்மிடம் மிகச் சிறந்தவர்களான தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருந்தார்கள்.
Sâd 38:48
இன்னும், இஸ்மாயீலையும் அல்யசவுவையும் துல்கிஃப்லையும் நினைவு கூர்வீராக! (இவர்கள்) எல்லோரும் மிகச் சிறந்தவர்களில் உள்ளவர்கள்.
Sâd 38:49
இது ஒரு நினைவூட்டல் (நல்லுபதேசம்) ஆகும். நிச்சயமாக அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு அழகிய மீளுமிடம் (தங்குமிடம்) இருக்கிறது.
Sâd 38:50
அத்ன் சொர்க்கங்கள் (அவர்களுக்கு) உண்டு. (அவற்றின்) வாசல்கள் அவர்களுக்காக திறக்கப்பட்டவையாக இருக்கும்.
Sâd 38:51
அவற்றில் அவர்கள் (-கட்டில்கள் மீது) சாய்ந்தவர்களாக இருப்பார்கள். அதிகமான பழங்களையும் பானங்களையும் கொண்டுவரும்படி (கூறி தங்கள் பணியாளர்களை) அழைப்பார்கள்.
Sâd 38:52
இன்னும், சம வயதுடைய, பார்வைகளை தாழ்த்திய பெண்கள் அவர்களிடம் இருப்பார்கள்.
Sâd 38:53
விசாரணை நாளில் (நீங்கள் பெறுவீர்கள் என்று) உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவை இவைதான்.
Sâd 38:54
நிச்சயமாக இவை (சொர்க்கவாசிகளுக்கு கொடுக்கப்பட்ட) நமது கொடையாகும். இவற்றுக்கு அழிவு, முடிவு அறவே இல்லை. (அல்லாஹ்வின் சொர்க்க அருள்கள் தீர்ந்து போகாதவை.)
Sâd 38:55
(மேற்கூறப்பட்ட) இவை (நல்லவர்களுக்கு உரியதாகும்). ஆனால், நிச்சயமாக எல்லை மீறியவர்களுக்கு (-பாவிகளுக்கு) மிகக் கெட்ட மீளுமிடம்தான் உண்டு.
Sâd 38:56
(அதுதான்) நரகம், அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள். (அங்கே அவர்களுக்கு விரிப்பு இருக்கும்.) அந்த விரிப்பு (நெருப்பினால் ஆன) மிகக் கெட்ட விரிப்பாகும்.
Sâd 38:57
இவை, கொதி நீர் மற்றும் சீழ் ஆகும். ஆக, இவற்றை அவர்கள் சுவைக்கட்டும்.
Sâd 38:58
இன்னும், அதனுடைய தோற்றத்தில் பல வகையான வேறு தண்டனைகளும் (அவர்களுக்கு) உண்டு.
Sâd 38:59
இது உங்களுடன் (நரகத்தில்) நுழையக்கூடிய (இன்னொரு) கூட்டமாகும் (என்று பாவிகளின் தலைவர்களுக்கு கூறப்படும். அப்போது அவர்கள் பதில் கூறுவார்கள்:) “அவர்களுக்கு (இங்கு) வசதி உண்டாகாமல் இருக்கட்டும். நிச்சயமாக அவர்கள் நரகத்தில் எரிந்து பொசுங்குவார்கள்.”
Sâd 38:60
(பாவிகள்) கூறுவார்கள்: மாறாக, நீங்கள்தான் (நாங்கள் இங்கு வருவதற்கு காரணமாக இருந்தீர்கள்). உங்களுக்கு இங்கு வசதி கிடைக்காமல் போகட்டும். நீங்கள்தான் இவற்றை எங்களுக்கு முற்படுத்தினீர்கள். (எங்கள் பாவங்களுக்கு நீங்கள்தான் காரணம்.) தங்குமிடங்களில் நரகம் மிகக் கெட்ட இடமாகும்.
Sâd 38:61
அவர்கள் (பாவிகள்) கூறுவார்கள்: எங்கள் இறைவா! யார் இவற்றை எங்களுக்கு முற்படுத்தினாரோ (-எங்களை யார் பாவத்தில் தள்ளினாரோ) அவருக்கு நரகத்தில் இரண்டு மடங்கு வேதனையை நீ அதிகப்படுத்து.
Sâd 38:62
இன்னும், அவர்கள் கூறுவார்கள்: “கெட்டவர்களில் உள்ளவர்கள் என்று நாங்கள் கருதி வந்த பல மனிதர்களை எங்களால் (இங்கு நரகத்தில்) பார்க்க முடிவதில்லையே!”
Sâd 38:63
(நரகத்தில் நுழையாத) அ(ந்த நல்ல)வர்களை நாங்கள் கேலியாக எடுத்துக் கொண்டோமா? அல்லது, (அவர்கள் இங்கு இருந்தும் அவர்களை நாங்கள் தேடியும் எங்கள்) பார்வைகள் அவர்களைப் பார்க்க முடியாமல் சோர்ந்து விட்டனவா?
Sâd 38:64
நரகவாசிகள் (இவ்வாறு) தங்களுக்குள் தர்க்கிப்பது - நிச்சயமாக இது உண்மையாகும்.
Sâd 38:65
(நபியே!) கூறுவீராக! “நிச்சயமாக நான் எல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். ஒரே ஒருவனுமாகிய (அனைவரையும்) அடக்கி ஆளுகிறவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் யாரும் இல்லை.”
Sâd 38:66
அவன் வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான், அவன் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன்.
Sâd 38:67
(நபியே!) கூறுவீராக! இ(ந்த வேதமான)து ஒரு மகத்தான செய்தியாகும்.
Sâd 38:68
நீங்கள் இதை புறக்கணிக்கிறீர்கள்.
Sâd 38:69
மிக உயர்ந்த வானவர்களைப் பற்றி, (ஆதமை அல்லாஹ் படைப்பதற்கு முன்னர் அவர் விஷயமாக) அவர்கள் தர்க்கித்த போது (என்ன கூறினார்கள் என்று) எனக்கு அறவே ஞானம் இல்லை. (அல்லாஹ் எனக்கு அதை கூறிய பின்னர்தான் நான் அதை அறிவேன். ஆகவே, இது தெளிவான ஓர் ஆதாரமாக இல்லையா?)
Sâd 38:70
“நிச்சயமாக நான் எல்லாம் தெளிவான ஓர் எச்சரிப்பாளர்தான்” என்றே தவிர எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதில்லை.
Sâd 38:71
(நபியே!) அந்த சமயத்தை நினைவு கூர்வீராக, உமது இறைவன் வானவர்களை நோக்கி கூறினான்: “நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து ஒரு மனிதரை படைக்கப்போகிறேன்”
Sâd 38:72
“ஆக, நான் அவரை செம்மைபடுத்தி, அவரில் நான் படைத்த உயிரை ஊதினால் (வானவர்களே!) நீங்கள் அவருக்கு முன் சிரம் பணிந்தவர்களாக விழுந்து விடுங்கள்!”
Sâd 38:73
ஆக, வானவர்கள், அவர்கள் ஒவ்வொருவரும், அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தனர்.
Sâd 38:74
இப்லீஸைத் தவிர. அவன் பெருமை அடித்தான். இன்னும், நிராகரிப்பவர்களில் ஆகிவிட்டான்.
Sâd 38:75
(அல்லாஹ்) கூறினான்: “இப்லீஸே! நான் எனது இரு கரத்தால் படைத்தவருக்கு நீ ஸஜ்தா செய்வதிலிருந்து உன்னை தடுத்தது எது? நீ பெருமையடிக்கிறாயா? (இதற்கு முன் நீ பெருமையடித்ததில்லையே!) அல்லது, (இதற்கு முன்னரும்) நீ பெருமையடிப்பவர்களில்தான் இருந்தாயா?”
Sâd 38:76
(ஷைத்தான்) கூறினான்: “நான் அவரை விட சிறந்தவன். நீ என்னை நெருப்பில் இருந்து படைத்தாய். இன்னும், அவரை களி மண்ணிலிருந்து படைத்தாய்.”
Sâd 38:77
(அல்லாஹ்) கூறினான்: “நீ இ(ந்த சொர்க்கத்)திலிருந்து வெளியேறி விடு! ஆக, நிச்சயமாக நீ சபிக்கப்பட்டவன் ஆவாய்.”
Sâd 38:78
“இன்னும், நிச்சயமாக கூலி (கொடுக்கப்படும் மறுமை) நாள் வரை உன் மீது என் சாபம் உண்டாகட்டும்.”
Sâd 38:79
(இப்லீஸ்) கூறினான்: “என் இறைவா! ஆக, அவர்கள் எழுப்பப்படுகின்ற நாள் வரை எனக்கு அவகாசம் அளி!”
Sâd 38:80
(அல்லாஹ்) கூறினான்: “நிச்சயமாக நீ, அவகாசமளிக்கப்பட்டவர்களில் இருப்பாய்.”
Sâd 38:81
“(மறுமைக்கான) அறியப்பட்ட நேரத்தின் நாள் வரும் வரை (உனக்கு அவகாசம் அளிக்கப்படும்).”
Sâd 38:82
(இப்லீஸ்) கூறினான்: “ஆக, உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக அவர்கள் அனைவரையும் நிச்சயமாக நான் வழிகெடுப்பேன்.”
Sâd 38:83
“அவர்களில் உனது பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்களை வழிகெடுக்க என்னால் முடியாது.)”
Sâd 38:84
(அல்லாஹ்) கூறினான்: “ஆக, (இதுதான் என்னிடமிருந்து வந்த) உண்மையாகும். நான் உண்மையைத்தான் கூறுவேன்.”
Sâd 38:85
“உன்னாலும் அவர்களில் உன்னை பின்பற்றியவர்களாலும் (உங்கள்) அனைவர்களாலும் நரகத்தை நிரப்புவேன்.”
Sâd 38:86
(நபியே!) கூறுவீராக! “இதற்காக நான் உங்களிடம் கூலி எதையும் கேட்கவில்லை. இன்னும், நான் (பொய்யாக) வரட்டு கௌரவம் தேடுபவர்களில் இல்லை.”
Sâd 38:87
(குர்ஆனாகிய) இது இல்லை, அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையாகவே தவிர.
Sâd 38:88
இதன் செய்தியை (அது உண்மையானது என்று வெளிப்படையாக) சில காலத்திற்குப் பின்னர் நிச்சயம் நீங்கள் அறிவீர்கள்.