Lafzullah

Tamil Mokhtasar — Rum 30:1 – Yâsin 36:83

Author / source: Tamil Mokhtasar

Contents
  1. Rum 30:1
  2. Rum 30:2
  3. Rum 30:3
  4. Rum 30:4
  5. Rum 30:5
  6. Rum 30:6
  7. Rum 30:7
  8. Rum 30:8
  9. Rum 30:9
  10. Rum 30:10
  11. Rum 30:11
  12. Rum 30:12
  13. Rum 30:13
  14. Rum 30:14
  15. Rum 30:15
  16. Rum 30:16
  17. Rum 30:17
  18. Rum 30:18
  19. Rum 30:19
  20. Rum 30:20
  21. Rum 30:21
  22. Rum 30:22
  23. Rum 30:23
  24. Rum 30:24
  25. Rum 30:25
  26. Rum 30:26
  27. Rum 30:27
  28. Rum 30:28
  29. Rum 30:29
  30. Rum 30:30
  31. Rum 30:31
  32. Rum 30:32
  33. Rum 30:33
  34. Rum 30:34
  35. Rum 30:35
  36. Rum 30:36
  37. Rum 30:37
  38. Rum 30:38
  39. Rum 30:39
  40. Rum 30:40
  41. Rum 30:41
  42. Rum 30:42
  43. Rum 30:43
  44. Rum 30:44
  45. Rum 30:45
  46. Rum 30:46
  47. Rum 30:47
  48. Rum 30:48
  49. Rum 30:49
  50. Rum 30:50
  51. Rum 30:51
  52. Rum 30:52
  53. Rum 30:53
  54. Rum 30:54
  55. Rum 30:55
  56. Rum 30:56
  57. Rum 30:57
  58. Rum 30:58
  59. Rum 30:59
  60. Rum 30:60
  61. Lukman 31:1
  62. Lukman 31:2
  63. Lukman 31:3
  64. Lukman 31:4
  65. Lukman 31:5
  66. Lukman 31:6
  67. Lukman 31:7
  68. Lukman 31:8
  69. Lukman 31:9
  70. Lukman 31:10
  71. Lukman 31:11
  72. Lukman 31:12
  73. Lukman 31:13
  74. Lukman 31:14
  75. Lukman 31:15
  76. Lukman 31:16
  77. Lukman 31:17
  78. Lukman 31:18
  79. Lukman 31:19
  80. Lukman 31:20
  81. Lukman 31:21
  82. Lukman 31:22
  83. Lukman 31:23
  84. Lukman 31:24
  85. Lukman 31:25
  86. Lukman 31:26
  87. Lukman 31:27
  88. Lukman 31:28
  89. Lukman 31:29
  90. Lukman 31:30
  91. Lukman 31:31
  92. Lukman 31:32
  93. Lukman 31:33
  94. Lukman 31:34
  95. Secde 32:1
  96. Secde 32:2
  97. Secde 32:3
  98. Secde 32:4
  99. Secde 32:5
  100. Secde 32:6
  101. Secde 32:7
  102. Secde 32:8
  103. Secde 32:9
  104. Secde 32:10
  105. Secde 32:11
  106. Secde 32:12
  107. Secde 32:13
  108. Secde 32:14
  109. Secde 32:15
  110. Secde 32:16
  111. Secde 32:17
  112. Secde 32:18
  113. Secde 32:19
  114. Secde 32:20
  115. Secde 32:21
  116. Secde 32:22
  117. Secde 32:23
  118. Secde 32:24
  119. Secde 32:25
  120. Secde 32:26
  121. Secde 32:27
  122. Secde 32:28
  123. Secde 32:29
  124. Secde 32:30
  125. Ahzab 33:1
  126. Ahzab 33:2
  127. Ahzab 33:3
  128. Ahzab 33:4
  129. Ahzab 33:5
  130. Ahzab 33:6
  131. Ahzab 33:7
  132. Ahzab 33:8
  133. Ahzab 33:9
  134. Ahzab 33:10
  135. Ahzab 33:11
  136. Ahzab 33:12
  137. Ahzab 33:13
  138. Ahzab 33:14
  139. Ahzab 33:15
  140. Ahzab 33:16
  141. Ahzab 33:17
  142. Ahzab 33:18
  143. Ahzab 33:19
  144. Ahzab 33:20
  145. Ahzab 33:21
  146. Ahzab 33:22
  147. Ahzab 33:23
  148. Ahzab 33:24
  149. Ahzab 33:25
  150. Ahzab 33:26
  151. Ahzab 33:27
  152. Ahzab 33:28
  153. Ahzab 33:29
  154. Ahzab 33:30
  155. Ahzab 33:31
  156. Ahzab 33:32
  157. Ahzab 33:33
  158. Ahzab 33:34
  159. Ahzab 33:35
  160. Ahzab 33:36
  161. Ahzab 33:37
  162. Ahzab 33:38
  163. Ahzab 33:39
  164. Ahzab 33:40
  165. Ahzab 33:41
  166. Ahzab 33:42
  167. Ahzab 33:43
  168. Ahzab 33:44
  169. Ahzab 33:45
  170. Ahzab 33:46
  171. Ahzab 33:47
  172. Ahzab 33:48
  173. Ahzab 33:49
  174. Ahzab 33:50
  175. Ahzab 33:51
  176. Ahzab 33:52
  177. Ahzab 33:53
  178. Ahzab 33:54
  179. Ahzab 33:55
  180. Ahzab 33:56
  181. Ahzab 33:57
  182. Ahzab 33:58
  183. Ahzab 33:59
  184. Ahzab 33:60
  185. Ahzab 33:61
  186. Ahzab 33:62
  187. Ahzab 33:63
  188. Ahzab 33:64
  189. Ahzab 33:65
  190. Ahzab 33:66
  191. Ahzab 33:67
  192. Ahzab 33:68
  193. Ahzab 33:69
  194. Ahzab 33:70
  195. Ahzab 33:71
  196. Ahzab 33:72
  197. Ahzab 33:73
  198. Sebe' 34:1
  199. Sebe' 34:2
  200. Sebe' 34:3
  201. Sebe' 34:4
  202. Sebe' 34:5
  203. Sebe' 34:6
  204. Sebe' 34:7
  205. Sebe' 34:8
  206. Sebe' 34:9
  207. Sebe' 34:10
  208. Sebe' 34:11
  209. Sebe' 34:12
  210. Sebe' 34:13
  211. Sebe' 34:14
  212. Sebe' 34:15
  213. Sebe' 34:16
  214. Sebe' 34:17
  215. Sebe' 34:18
  216. Sebe' 34:19
  217. Sebe' 34:20
  218. Sebe' 34:21
  219. Sebe' 34:22
  220. Sebe' 34:23
  221. Sebe' 34:24
  222. Sebe' 34:25
  223. Sebe' 34:26
  224. Sebe' 34:27
  225. Sebe' 34:28
  226. Sebe' 34:29
  227. Sebe' 34:30
  228. Sebe' 34:31
  229. Sebe' 34:32
  230. Sebe' 34:33
  231. Sebe' 34:34
  232. Sebe' 34:35
  233. Sebe' 34:36
  234. Sebe' 34:37
  235. Sebe' 34:38
  236. Sebe' 34:39
  237. Sebe' 34:40
  238. Sebe' 34:41
  239. Sebe' 34:42
  240. Sebe' 34:43
  241. Sebe' 34:44
  242. Sebe' 34:45
  243. Sebe' 34:46
  244. Sebe' 34:47
  245. Sebe' 34:48
  246. Sebe' 34:49
  247. Sebe' 34:50
  248. Sebe' 34:51
  249. Sebe' 34:52
  250. Sebe' 34:53
  251. Sebe' 34:54
  252. Fatır 35:1
  253. Fatır 35:2
  254. Fatır 35:3
  255. Fatır 35:4
  256. Fatır 35:5
  257. Fatır 35:6
  258. Fatır 35:7
  259. Fatır 35:8
  260. Fatır 35:9
  261. Fatır 35:10
  262. Fatır 35:11
  263. Fatır 35:12
  264. Fatır 35:13
  265. Fatır 35:14
  266. Fatır 35:15
  267. Fatır 35:16
  268. Fatır 35:17
  269. Fatır 35:18
  270. Fatır 35:19
  271. Fatır 35:20
  272. Fatır 35:21
  273. Fatır 35:22
  274. Fatır 35:23
  275. Fatır 35:24
  276. Fatır 35:25
  277. Fatır 35:26
  278. Fatır 35:27
  279. Fatır 35:28
  280. Fatır 35:29
  281. Fatır 35:30
  282. Fatır 35:31
  283. Fatır 35:32
  284. Fatır 35:33
  285. Fatır 35:34
  286. Fatır 35:35
  287. Fatır 35:36
  288. Fatır 35:37
  289. Fatır 35:38
  290. Fatır 35:39
  291. Fatır 35:40
  292. Fatır 35:41
  293. Fatır 35:42
  294. Fatır 35:43
  295. Fatır 35:44
  296. Fatır 35:45
  297. Yâsin 36:1
  298. Yâsin 36:2
  299. Yâsin 36:3
  300. Yâsin 36:4
  301. Yâsin 36:5
  302. Yâsin 36:6
  303. Yâsin 36:7
  304. Yâsin 36:8
  305. Yâsin 36:9
  306. Yâsin 36:10
  307. Yâsin 36:11
  308. Yâsin 36:12
  309. Yâsin 36:13
  310. Yâsin 36:14
  311. Yâsin 36:15
  312. Yâsin 36:16
  313. Yâsin 36:17
  314. Yâsin 36:18
  315. Yâsin 36:19
  316. Yâsin 36:20
  317. Yâsin 36:21
  318. Yâsin 36:22
  319. Yâsin 36:23
  320. Yâsin 36:24
  321. Yâsin 36:25
  322. Yâsin 36:26
  323. Yâsin 36:27
  324. Yâsin 36:28
  325. Yâsin 36:29
  326. Yâsin 36:30
  327. Yâsin 36:31
  328. Yâsin 36:32
  329. Yâsin 36:33
  330. Yâsin 36:34
  331. Yâsin 36:35
  332. Yâsin 36:36
  333. Yâsin 36:37
  334. Yâsin 36:38
  335. Yâsin 36:39
  336. Yâsin 36:40
  337. Yâsin 36:41
  338. Yâsin 36:42
  339. Yâsin 36:43
  340. Yâsin 36:44
  341. Yâsin 36:45
  342. Yâsin 36:46
  343. Yâsin 36:47
  344. Yâsin 36:48
  345. Yâsin 36:49
  346. Yâsin 36:50
  347. Yâsin 36:51
  348. Yâsin 36:52
  349. Yâsin 36:53
  350. Yâsin 36:54
  351. Yâsin 36:55
  352. Yâsin 36:56
  353. Yâsin 36:57
  354. Yâsin 36:58
  355. Yâsin 36:59
  356. Yâsin 36:60
  357. Yâsin 36:61
  358. Yâsin 36:62
  359. Yâsin 36:63
  360. Yâsin 36:64
  361. Yâsin 36:65
  362. Yâsin 36:66
  363. Yâsin 36:67
  364. Yâsin 36:68
  365. Yâsin 36:69
  366. Yâsin 36:70
  367. Yâsin 36:71
  368. Yâsin 36:72
  369. Yâsin 36:73
  370. Yâsin 36:74
  371. Yâsin 36:75
  372. Yâsin 36:76
  373. Yâsin 36:77
  374. Yâsin 36:78
  375. Yâsin 36:79
  376. Yâsin 36:80
  377. Yâsin 36:81
  378. Yâsin 36:82
  379. Yâsin 36:83

Rum 30:1

(الٓـمٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

Rum 30:2

பாரசீகர்கள் ரோமானியர்களை வென்றுவிட்டார்கள்,

Rum 30:3

ஷாம் தேசத்தின் பாரசீகத்திற்கு நெருக்கமான பிரதேசத்தில். ரோமானியர்கள் பாரசீகர்களால் தோற்கடிக்கப்பட்ட பிறகு விரைவில் வெற்றி பெறுவார்கள்.

Rum 30:4

அதன் காலம் மூன்று ஆண்டுகளை விட குறையவும் மாட்டாது, பத்து ஆண்டுகளை விட அதிகரிக்கவும் மாட்டாது. ரோமானியர்கள் வெற்றி பெறுவதற்கு முன்னரும் பின்னரும் அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. ரோமானியர்கள் பாரசீகர்களை வெல்லும் நாளில் நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

Rum 30:5

அல்லாஹ்வின் உதவி ரோமானியர்களுக்குக் கிடைப்பதால் நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஏனெனில் ரோமானியர்கள் வேதக்காரர்களாவர். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நாடியோருக்கெதிராக உதவுகிறான். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. நம்பிக்கைகொண்ட தன் அடியார்களோடு அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.

Rum 30:6

இந்த உதவி அல்லாஹ் அளித்த வாக்குறுதியாகும். தனது அந்த வாக்குறுதிக்கு அவன் மாறுசெய்யமாட்டான். இது நிறைவேறும் போது உதவுவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதியில் நம்பிக்கையாளர்கள் மென்மேலும் உறுதிகொள்கின்றனர். ஆயினும் மக்களில் பெரும்பாலானோர் தங்களின் நிராகரிப்பினால் இதனை அறிந்துகொள்ள மாட்டார்கள்.

Rum 30:7

அவர்கள் ஈமானையோ, மார்க்க சட்டங்களையோ அறிய மாட்டார்கள். அவர்கள் அறிந்ததெல்லாம் தங்களின் சம்பாத்தியத்தோடும் சடவாத நாகரீக முன்னேற்றத்துடன் தொடர்புடைய உலக வாழ்வின் வெளிப்படையான விஷயங்களைத்தான். அவர்கள் உண்மையான வாழ்க்கையின் இடமான மறுமையை பொருட்படுத்தாமல் புறக்கணிக்கிறார்கள்.

Rum 30:8

இந்த பொய்ப்பிக்கும் இணைவைப்பாளர்கள் தங்களை அல்லாஹ் எவ்வாறு படைத்து, செம்மைய்யாக்கியுள்ளான் என்பதைச் சிந்திக்க வேண்டாமா? வானங்களையும் பூமியையும் அவற்றுக்கு மத்தியிலுள்ளவற்றையும் அவன் உண்மையாகவே படைத்துள்ளான். அவற்றை வீணாகப் படைக்கவில்லை. அந்த இரண்டும் உலகில் நிலைத்திருப்பதற்கு அவன் குறிப்பிட்ட ஒரு தவணையை நிர்ணயித்துள்ளான். நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் மறுமை நாளில் தங்களின் இறைவனைச் சந்திப்பதை நிராகரிப்பவர்களாக இருக்கிறார்கள். எனவேதான் அவர்கள் மீண்டும் எழுப்பப்படுவதற்காக தங்கள் இறைவனிடம் விரும்பமான நற்செயல்களால் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதில்லை.

Rum 30:9

இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து தங்களுக்கு முன்னர் பொய்ப்பித்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இந்த சமூகங்கள் அவர்களைவிட பலம்பெற்றவையாக இருந்தனர். அவர்கள் விவசாயத்திற்காகவும் கட்டடம் கட்டுவதற்காகவும் பூமியைப் பண்படுத்தி அதனை இவர்களைவிட அதிகம் செழிப்பாக்கினார்கள். அவர்களின் தூதர்கள் அவர்களிடம் அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பதை அறிவிக்கும் தெளிவான சான்றுகளோடு வந்தார்கள். ஆயினும் அவர்கள் பொய்ப்பித்தார்கள். அல்லாஹ் அவர்களை அழித்த போது அவர்கள் மீது அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் நிராகரித்து அழிவிற்கான காரணிகளைத் தேடி தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.

Rum 30:10

பின்னர் அல்லாஹ்வுக்கு மற்றவர்களை இணையாக்கி தீய செயல்கள் புரிந்தவர்களின் முடிவு மிகவும் தீயதாகவே அமைந்தது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை பொய் எனக்கூறி அவற்றைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்கள்.

Rum 30:11

அல்லாஹ் படைப்பை முன்மாதிரியின்றி தொடங்குகிறான். பின்னர் அதனை மரணிக்கச் செய்கிறான். பின்னர் அதனை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புகிறான். பின்னர் மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலி பெறுவதற்காகவும் அவன் பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும்.

Rum 30:12

மறுமை நிகழும் நாளில் குற்றவாளிகள் அல்லாஹ்வை நிராகரித்ததற்கு அவர்கள் கூறும் ஆதாரங்கள் அறுபட்டுப்போவதால் அவனது அருளை விட்டும் நம்பிக்கையிழந்து விடுவார்கள். அதிலே அவர்களின் மேலெண்ணம் துண்டிக்கப்பட்டு விடும்.

Rum 30:13

அவர்கள் உலகில் வணங்கிக் கொண்டிருந்த- இணைதெய்வங்களில், வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கு பரிந்துரை செய்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களும் தங்களின் இணைதெய்வங்களை நிராகரித்துவிடுவார்கள். ஏனெனில் உதவி தேவைப்படும் சமயத்தில் அவை அவர்களைக் கைவிட்டுவிடும். ஏனெனில் அவர்கள் அனைவரும் அழிவில் சமமானவர்களாக இருப்பார்கள்.

Rum 30:14

மறுமை நிகழும் நாளில் மனிதர்கள் கூலி பெறுவதற்காக தாங்கள் உலகில் செய்த செயல்களுக்கேற்ப உயர்ந்தவர்களாகவும், தாழ்ந்தவர்களாகவும் பிரிந்துவிடுவார்கள்.

Rum 30:15

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டு அவனுக்கு விருப்பமான நற்செயல்கள் புரிந்தவர்கள், என்றும் முடிவடையாத நிலையான அருட்கொடைகளைப் பெறுவதன் மூலம் சுவனத்தில் சந்தோசமாக இருப்பார்கள்.

Rum 30:16

அல்லாஹ்வையும் நம் தூதர் மீது இறக்கிய நம் வசனங்களையும் மறுமை நாளில் எழுப்படுவதையும் விசாரணையையும் நிராகரித்தவர்கள் வேதனைக்காக கொண்டுவரப்படுவார்கள். அதனோடு அவர்கள் சேர்ந்திருப்பார்கள்.

Rum 30:17

மாலை நேரத்தை அடையும்போதும் மஃரிப் மற்றும் இஷா தொழுகை நேரங்கள், காலை நேரத்தை அடையும்போதும் ஃபஜ்ர் தொழுகை நேரம் ஆகியவற்றில் அல்லாஹ்வை துதிபாடுங்கள்.

Rum 30:18

புகழனைத்தும் அவனுக்கு மட்டுமே உரியது. வானங்களில் வானவர்களும் பூமியில் படைப்புகளும் அவனைப் புகழ்கிறார்கள். மாலை வேளை நுழையும்போதான அஸர் தொழுகையின் போதும் லுஹர் வேளை நுழையும் போதும் அவனை துதிபாடுங்கள்.

Rum 30:19

அவன் இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான்; உதாரணமாக, விந்திலிருந்து மனிதனை, முட்டையிலிருந்து குஞ்சை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளிப்படுத்துகிறான்; உதாரணமாக மனிதனிலிருந்து விந்தையும் கோழியிலிருந்து முட்டையையும் வெளிப்படுத்துகிறான். பூமி வறண்ட பின்னரும் அதில் மழை பொழிந்து விளையச் செய்து அதனை உயிர்ப்பிக்கிறான். பூமியை விளையச் செய்து உயிர்ப்பிக்கப்படுவதைப் போலவே நீங்கள் விசாரணைக்காகவும் கூலி கொடுக்கப்படுவதற்காகவும் உங்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்து வெளிப்படுத்தப்படுவீர்கள்.

Rum 30:20

அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் சில: -மனிதர்களே!- அவன் உங்களின் தந்தை ஆதமை மண்ணிலிருந்து படைத்ததன் மூலம் உங்களையும் அதிலிருந்தே உருவாக்கியமை. பின்னர் நீங்கள் இனப்பெருக்கத்தின் மூலம் பல மனிதர்களாகப் பெருகி விட்டீர்கள். பூமியின் கிழக்கு, மேற்கு என பல திசைகளிலும் பரவி விட்டீர்கள்.

Rum 30:21

அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் சில: -ஆண்களே!- அவன் உங்களுக்காக உங்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்காக அவர்களிடம் உங்களின் மனம் அமைதிபெற வேண்டி உங்கள் இனத்திலிருந்தே உங்களுக்குத் துணைகளை படைத்துள்ளான். உங்களுக்கிடையேயும் அவர்களிடையேயும் அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளான். நிச்சயமாக (மேலே) கூறப்பட்டவற்றில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு தெளிவான சான்றுகள், ஆதாரங்கள் இருக்கின்றன. ஏனெனில் திட்டமாக அவர்கள்தாம் தங்களின் சிந்தனையைச் செயற்படுத்துவதனால் பயனடைபவர்கள்.

Rum 30:22

அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் சில: வானங்களையும் பூமியையும் படைத்ததும், உங்களின் மொழி மற்றும் நிறங்களின் வேற்றுமைகளும். நிச்சயமாக (மேலே) கூறப்பட்டவற்றில் அறிவுடையோருக்கு சான்றுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன.

Rum 30:23

அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் சில: உங்களின் வேலையின் களைப்பைப் போக்குவதற்காக இரவிலும் பகலிலும் உங்களின் உறக்கம். நீங்கள் உங்கள் இறைவனின்பால் வாழ்வாதாரத்தை தேடிச் செல்வதற்காக பகலை ஏற்படுத்தியுள்ளமையும் அவனுடைய அத்தாட்சியே. நிச்சயமாக (மேலே) கூறப்பட்ட இதில் சிந்தித்து ஏற்றுக்கொள்ளும் நோக்கில் செவியேற்கும் மக்களுக்கு சான்றுகள், ஆதாரங்கள் இருக்கின்றன.

Rum 30:24

அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் சில: அவன் உங்களுக்கு வானத்தில் மின்னலை காண்பிக்கிறான், அதில் இடியின் அச்சத்தையும் மழையின் எதிர்பார்ப்பையும் இணைத்துவைத்துள்ளான். வானத்திலிருந்து மழையை இறக்கி வறண்ட பூமியை அதில் தாவரங்களை முளைக்கச் செய்து உயிர்ப்பிக்கிறான். நிச்சயமாக (மேலே) கூறப்பட்ட இதில் விளங்கிக் கொள்ளும் மக்களுக்கு தெளிவான சான்றுகள், ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றை அவர்கள் விசாரணைக்காகவும் கூலி பெறுவதற்காகவும் மரணித்ததன் பின் எழுப்பப்படுவதற்கான ஆதாரமாகக்கொள்வார்கள்.

Rum 30:25

அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய சான்றுகளில் சில: வானம் விழுந்து விடாமல் பூமி தகர்ந்து விடாமல் அவனுடைய கட்டளையால் நிலைத்து நிற்பது. பின்னர் வானவரை சூர் ஊதச் சொல்லி ஓர் அழைப்பைக்கொண்டு அவன் பூமியிலிருந்து உங்களை அழைத்தால் நீங்கள் விசாரணைக்கும் கூலி கொடுக்கப்படுவதற்கும் உங்கள் அடக்கஸ்த்தலங்களிலிருந்து வெளிப்படுத்தப்படுவீர்கள்.

Rum 30:26

வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் அனைத்தும் படைத்தல், நிர்ணயித்தல், ஆட்சி அதிகாரத்தால் அவனுக்கு மட்டுமே உரியவை. அவை இரண்டிலும் உள்ள அவனுடைய படைப்புகள் அனைத்தும் அவனுடைய கட்டளைக்கே அடிபணிகின்றன.

Rum 30:27

அவனே முன்மாதிரியின்றி படைப்பைத் தொடங்கினான். பின்னர் அது அழிந்த பிறகு அதனை மீண்டும் உருவாக்குவான். ஆரம்பமாகப் படைப்பதைவிட மீண்டும் படைப்பது இலகுவானது. இரண்டும் அவனுக்கு இலகுவானதுதான். ஏனெனில் அவன் ஏதேனும் ஒன்றை நாடினால் ‘ஆகு’ என்றுதான் கூறுகிறான். உடனே அது ஆகிவிடும். கண்ணியமான, பூரணத்துவமான பண்புகள் அனைத்திலும் மிக உயர்ந்த வர்ணணை அவனுக்கே உரியது. அவன் யாவற்றையும் மிகைத்தவன்; அவனை யாரும் மிகைக்க முடியாது. படைப்பிலும் திட்டமிடலிலும் ஞானம் மிக்கவன்.

Rum 30:28

இணைவைப்பாளர்களே!- அல்லாஹ் உங்களுக்கு உங்களிலிருந்தே ஒரு உதாரணம் கூறுகிறான், “சுதந்திரமான உங்கள் வியாபாரப் பங்காளி, சொத்தில் தனது பங்கைப் பிரித்தெடுப்பதை நீங்கள் அஞ்சுவது போன்று உங்கள் அடிமைகளில் யாராவது உங்களின் செல்வங்களில் உங்களுக்கு சம பங்காளிகளாக இருப்பார்களா? உங்கள் அடிமைகள் இவ்வாறு இருப்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? நிச்சயமாக நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். தன் படைப்புகளிலும் அடிமைகளிலும் யாரும் பங்காளியாகாமல் இருப்பதற்கு மிகத் தகுதியானவன் அல்லாஹ்வே. இவ்வாறு உதாரணங்கள் மூலமாகவும் இன்னபிற விஷயங்களின் மூலமாகவும் நாம் விளங்கிக்கொள்ளும் மக்களுக்கு ஆதாரங்களையும் சான்றுகளையும் பல்வேறு வகையில் தெளிவுபடுத்துகின்றோம். ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் அவற்றைக்கொண்டு பயனடைவார்கள்.

Rum 30:29

அவர்களின் வழிகேட்டிற்கான காரணம், ஆதாரங்களின் குறையோ, அதன் தெளிவற்ற தன்மையோ அல்ல. மாறாக தங்களின் மன இச்சையைப் பின்பற்றுவதும் முன்னோர்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதுமே நிச்சயமாக அவர்களின் வழிகேட்டிற்கான மூல காரணமாகும். அல்லாஹ்வுக்குத் தாம் செய்ய வேண்டிய கடமைகளை அவர்கள் அறியாமையினால் இவ்வாறு செய்கின்றனர். அல்லாஹ் யாரை வழிகெடுத்துவிடுவானோ அவருக்கு யார்தான் நேர்வழி காட்டுவார்? ஒருவராலும் நேர்வழிகாட்ட முடியாது. அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அவர்களைக் காக்கும் உதவியாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

Rum 30:30

தூதரே!- நீரும் உம்மைப் பின்பற்றியவர்களும் எல்லா மார்க்கங்களையும் விட்டுவிட்டு அல்லாஹ் உமக்கு வழிகாட்டிய மக்களின் இயல்பிலுள்ள மார்க்கமான இஸ்லாத்தின் பக்கம் திரும்பிவிடுங்கள். அல்லாஹ்வின் படைப்பில் எவ்வித மாற்றமுமில்லை. இதுதான் கோணலற்ற நேரான மார்க்கமாகும். ஆயினும் மக்களில் பெரும்பாலானோர் நிச்சயமாக இதுதான் சத்திய மார்க்கம் என்பதை அறிய மாட்டார்கள்.

Rum 30:31

உங்கள் பாவங்களிலிருந்து மீண்டு அல்லாஹ்விடம் திரும்பிவிடுங்கள். அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுங்கள். இயல்புக்கு முரண்படும் இணைவைப்பாளர்களாக மாறி தமது வணக்கத்தில் அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்கிவிடாதீர்கள்.

Rum 30:32

தங்களின் மார்க்கத்தை மாற்றி, அவற்றின் சிலவற்றின் மீது நம்பிக்கைகொண்டு சிலவற்றை நிராகரித்த இணைவைப்பாளர்களில் ஆகிவிடாதீர்கள். அவர்கள் பல பிரிவுகளாகி விட்டார்கள். ஒவ்வொரு பிரிவினரும் தங்களிடம் உள்ள அசத்தியத்தைக் கொண்டு மகிழ்ச்சியடைகிறார்கள். நிச்சயமாக அவர்கள் மாத்திரம்தான் சத்தியத்தில் இருக்கிறார்கள் மற்றவர்கள் அசத்தியத்தில் இருக்கிறார்கள் என்றும் எண்ணிக் கொள்கிறார்கள்.

Rum 30:33

நோயினாலோ, வறுமையினாலோ, வரட்சியினாலோ இணைவைப்பாளர்களை ஏதேனும் துன்பம் தாக்கிவிட்டால் தங்களின் துன்பத்தைப் போக்குமாறு தம் இறைவனிடம் மட்டுமே மன்றாடியவர்களாக பிரார்த்தனை செய்கிறார்கள். பின்பு அவர்களின் மீது அவன் கருணை காட்டி அவர்களின் துன்பத்தைப் போக்கிவிட்டால் அவர்களில் ஒரு பிரிவினர் பிரார்த்தனையில் அல்லாஹ்வுக்கு மீண்டும் இணைகளை ஏற்படுத்துவதில் மீண்டு விடுகிறார்கள்.

Rum 30:34

துன்பத்தை அகற்றுதல் உட்பட- அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் மறுத்து இவ்வுலகில் தங்களிடம் இருக்கின்றவற்றை அனுபவித்தால் நிச்சயமாக விரைவில் மறுமை நாளில் தாங்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தோம் என்பதை தங்களின் கண்களால் கண்டுகொள்வார்கள்.

Rum 30:35

அவர்களிடம் எந்த ஆதாரமும் இன்றி அல்லாஹ்வுக்கு இணைவைப்பதற்கு அவர்களைத் தூண்டியது என்ன? அவர்களது இணைவைப்புக்கு ஆதாரமாகக் கொள்ளும் எந்தவொரு வேதத்தையும் ஆதாரமாக நாம் இறக்கி வைக்கவில்லை. அவர்களின் இணைவைப்பைக் கூறும், அவர்களின் இருந்து கொண்டிருக்கும் நிராகரிப்பை சரியென்று ஏற்றுக்கொள்ளும் எந்த வேதமும் அவர்களிடம் இல்லை.

Rum 30:36

ஆரோக்கியம், வசதி போன்ற நமது அருட்கொடைகளில் நாம் ஏதேனும் அருட்கொடையை மனிதர்களுக்கு சுவைக்கச் செய்தால் அவர்கள் பூரிப்படைகிறார்கள்; அதனைக் கொண்டு பெருமையடிக்கிறார்கள். அவர்கள் செய்த பாவங்களின் காரணமாக நோய், வறுமை ஆகிய அவர்களைக் கவலையூட்டும் ஏதேனும் துன்பம் அவர்களை வந்தடைந்தால் அல்லாஹ்வின் அருளை விட்டும் விரக்தியடைந்து விடுகிறார்கள். அவர்களைத் தாக்கிய துன்பம் நீங்கிவிடாது என்று நம்பிக்கையிழந்துவிடுகிறார்கள்.

Rum 30:37

நிச்சயமாக அல்லாஹ் தன் அடியான் நன்றி செலுத்துகிறானா? நன்றி மறக்கிறானா? என்பதைச் சோதிக்கும் பொருட்டு தன் அடியார்களில் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாக வழங்குவதையும், அடியான் பொறுமையாக இருக்கிறானா? கோபப்படுகிறானா? என்பதைச் சோதிக்கும் பொருட்டு தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தில் நெருக்கடியை ஏற்படுத்துவதையும் அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக சிலருக்கு தாராளமாக வழங்கப்படுவதிலும் சிலருக்கு நெருக்கடி அளிக்கப்படுவதிலும் அல்லாஹ்வின் அன்பு , இரக்கம் மீது நம்பிக்கைகொள்ளும் மக்களுக்கு சான்றுகள் இருக்கின்றன.

Rum 30:38

முஸ்லிமே!- உறவினர்களுக்குரிய தகுதியான நல்லுபகாரம், சேர்ந்து நடத்தல் போன்ற உரிமைகளை அளித்துவிடு; தேவையுடையவர்களின் தேவையை நிறைவேற்றுமளவு வழங்கிவிடு; தனது ஊரை விட்டு பயணிக்கும் வழிப்போக்கருக்கும் வழங்கிவிடு. அல்லாஹ்வின் திருப்தியை நாடுபவர்களுக்கு அந்த நற்காரியங்களில் செலவளிப்பது சிறந்ததாகும். இந்த உதவியையும் உரிமைகளையும் வழங்குபவர்கள்தான் தாம் வேண்டும் சுவனத்தைப் பெற்று அவர்கள் அஞ்சும் வேதனையிலிருந்து விடுதலையடைந்து வெற்றி பெறக்கூடியவர்கள்.

Rum 30:39

மனிதர்களில் யாராவது ஒருவருக்கு நீங்கள் அளிக்கும் பணத்தை, அவர் மேலதிகமாகத் திருப்பித் தரவேண்டும் என்ற எண்ணத்தில் வழங்கினால் அதன் கூலி அல்லாஹ்விடத்தில் அதிகரிக்காது. மக்களிடம் கூலியையோ, அந்தஸ்த்தையோ விரும்பாமல் அல்லாஹ்வின் திருப்தியை நாடி தேவையுடையோருக்கு அவர்களின் தேவை நீங்க கொடுப்பவர்களின் செல்வங்களுக்கு அல்லாஹ்விடத்தில் கூலி பன்மடங்களாக அதிகரிக்கின்றன.

Rum 30:40

உங்களைப் படைத்தவனும் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பவனும் அல்லாஹ் ஒருவனே. பின்னர் உங்களை மரணிக்கச் செய்து மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புகிறான். அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கும் தெய்வங்கள் இவற்றில் எதையேனும் செய்கின்றனவா? இணைவைப்பாளர்கள் கூறுபவற்றை விட்டும், எண்ணுபவற்றை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.

Rum 30:41

மக்கள் செய்த பாவங்களின் காரணமாக நீரிலும் நிலத்திலும் வரட்சி, குறைவான மழை, பல வகையான நோய்கள், தொற்றுநோய்கள் போன்ற சீரழிவு தோன்றிவிட்டது. அவர்கள் திருந்தி அவனிடம் திரும்பும்பொருட்டு அவர்கள் உலக வாழ்வில் செய்த தீய செயல்களின் கூலியைச் சுவைப்பதற்காகவே இது ஏற்படுகிறது.

Rum 30:42

தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “பூமியில் சுற்றித் திரிந்து உங்களுக்கு முன்னர் பொய்ப்பித்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவர்களின் முடிவு மோசமானதாக இருந்தது. அவர்களில் பெரும்பாலானோர் அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்கி அவர்களை வணங்குபவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்வுக்கு இணைவைத்ததன் காரணமாக அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.

Rum 30:43

தூதரே!- மறுமை நாள் வருவதற்கு முன்னரே எவ்வித கோணலுமற்ற நேரான மார்க்கமான இஸ்லாத்தின்பால் உம்முகத்தை திருப்பிக் கொள்வீராக. அந்த நாள் வந்துவிட்டால் அதனைத் தடுக்கக்கூடியவர் யாருமில்லை. அந்த நாளில் மக்கள் பலவாறாகப் பிரிந்து விடுவார்கள். ஒரு பிரிவினர் சுவனத்தில் இன்பம் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். மற்றொரு பிரிவினர் நரகத்தில் வேதனைக்குள்ளாக்கப்படுவார்கள்.

Rum 30:44

யார் அல்லாஹ்வை நிராகரிப்பாரோ அதனால் கிடைப்பவை -நிரந்தர நரகம்- அவரையே சாரும். எவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவராக நற்செயல் புரிகிறார்களோ அவர்கள் தங்களுக்காக சுவனத்தில் நுழைவதையும் அதிலுள்ளவற்றை அனுபவிப்பதையும் தயார்படுத்திக் கொள்கிறார்கள். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

Rum 30:45

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவன் விரும்பும் நற்செயல்கள் புரிந்தவர்களுக்கு தன் அருள் மற்றும் உபகாரத்திலிருந்து கூலி வழங்குவதற்காக. அவன் தன்னையும் தன் தூதர்களையும் நிராகரிப்பவர்களை விரும்புவதில்லை. மாறாக அவர்களை மிகவும் வெறுக்கிறான். மறுமை நாளில் அவர்களை வேதனைக்குள்ளாக்குவான்.

Rum 30:46

அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் ஒன்று, அவன் காற்றை மழை வருவதற்கான நற்செய்தியாக அடியார்களுக்கு அனுப்புவதாகும். -மனிதர்களே!- இது மழையின் பின் ஏற்படும் செழிப்பு, சந்தோசம் என்பவற்றின் மூலம் அவனது அருளை நீங்கள் சுவைக்க வேண்டும் என்பதற்காகவும் கடலில் அவனுடைய நாட்டப்படி கப்பல்கள் செல்ல வேண்டும் என்பதற்காகவும் கடல் வியாபாரத்தின் மூலம் நீங்கள் அவனுடைய அருளை தேடிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான். அவன் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றிசெலுத்துவதன் மூலம் அதனை அவன் உங்களுக்கு அதிகரிக்கலாம்.

Rum 30:47

தூதரே!- உமக்கு முன்னால் பல தூதர்களை நாம் அவர்களின் சமூகங்களின்பால் அனுப்பியுள்ளோம். அவர்கள் தங்களின் நம்பகத்தன்மையை அறிவிக்கக்கூடிய சான்றுகளோடு அந்த மக்களிடம் வந்தார்கள். ஆயினும் அவர்கள் தூதர்கள் கொண்டுவந்ததை பொய்ப்பித்தார்கள். தீய செயல்கள் புரிந்தோரை நாம் தண்டித்தோம். நம் வேதனையால் அவர்களை அழித்துவிட்டோம். தூதர்களையும் அவர்கள் மீது நம்பிக்கைகொண்டவர்களையும் நாம் அழிவிலிருந்து காப்பாற்றினோம். நம்பிக்கையாளர்களைக் காப்பாற்றி உதவி செய்வது நாம் நம் மீது விதித்துக் கொண்ட கடமையாகும்.

Rum 30:48

அல்லாஹ்வே காற்றுகளை இழுத்துவந்து அனுப்புகிறான். அவை மேகங்களைத் தூண்டி நகர்த்தி விடுகின்றன. பின்னர் தான் நாடியவாறு குறைவாகவோ, அதிகமாகவோ வானத்தில் அவற்றைப் பரப்பி துண்டு துண்டாக்கி விடுகிறான். -பார்க்கக்கூடியவரே!- அந்த மேகத்துக்கு மத்தியிலிருந்து மழை பொழிவதை நீ காண்கின்றாய். அவன் தான் நாடிய அடியார்களின் மீது மழை பொழியச் செய்தால் அல்லாஹ்வின் அருளான மழையைக் கொண்டும் அதனைத் தொடர்ந்து தமக்கும் தமது கால்நடைகளுக்கும் தேவையானவற்றை பூமி விளையச் செய்வதைக் கொண்டும் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

Rum 30:49

அல்லாஹ் அவர்களின் மீது மழையை இறக்குவதற்கு முன்னர் அவர்கள் தம்மீது மழை பொழிவதை விட்டும் நிராசையடைந்திருந்தார்கள்.

Rum 30:50

தூதரே!- அல்லாஹ் தன் அடியார்களின் மீது அருள்புரியும் பொருட்டு பொழிவிக்கும் மழையின் தாக்கத்தினால் ஏற்படும் பயன்களையும் அதன் மூலம் எவ்வாறு அவன் வறண்ட பூமியை பல்வேறு தாவரங்களை முளைக்கச் செய்வதன் மூலம் உயிர்ப்பிக்கிறான் என்பதையும் பார்ப்பீராக. நிச்சயமாக வறண்ட இந்த பூமியை உயிர்ப்பித்தவனே இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிப்பவன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனுக்கு முடியாததல்ல.

Rum 30:51

அவர்களுடைய பயிர்களின் மீது நாம் நாசப்படுத்தக்கூடிய காற்றை அனுப்பி அதனால் பச்சைப் பசேலென இருந்த பயிர்கள் மஞ்சள் நிறமாகிப் போவதை அவர்கள் கண்டால் அதன் பிறகு அல்லாஹ்வின் முந்தைய பல அருட்கொடைகளையும் நிராகரித்துவிடுவார்கள்.

Rum 30:52

நிச்சயமாக உம்மால் இறந்தவர்களுக்கு உங்களால் செவியேற்கச் செய்ய முடியாதது போன்று செவிடர்களையும் செவியேற்கச் செய்ய முடியாது. செவிமடுக்காததை உறுதி செய்வதற்காக அவர்கள் உம்மைவிட்டும் தூரமாகிவிட்டார்கள். அதே போன்று புறக்கணிப்பிலும் பயனடையாமையிலும் இவர்களை ஒத்தவர்களுக்கு உம்மால் நேர்வழிகாட்ட முடியாது.

Rum 30:53

நேரான வழியை விட்டும் நெறிபிறழ்ந்துவிட்டவர்களுக்கு உம்மால் நேர்வழியில் செல்ல பாக்கியம் அளிக்க முடியாது. நம்முடைய வசனங்களின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமே உம்மால் பயனுள்ள வகையில் செவியேற்கச் செய்ய முடியும். ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் நீர் கூறுவதைக்கொண்டு பயனடைவார்கள். அவர்கள் நம்முடைய கட்டளைக்கு அடிபணிந்து அதற்குக் கட்டுப்பட்டவர்கள்.

Rum 30:54

மனிதர்களே!- அல்லாஹ்வே உங்களை அற்ப நீரிலிருந்து படைத்தான். பின்னர் பலவீனமான உங்களின் சிறுபராயத்தின் பின் ஆண்மைப் பலத்தை அளித்தான். ஆண்மைப் பலத்திற்குப் பிறகு முதுமையின் பலவீனத்தை ஏற்படுத்தினான். அல்லாஹ் தான் நாடிய பலத்தையும் பலவீனத்தையும் படைக்கிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் பேராற்றல் உடையவன். எதுவும் அவனுக்கு இயலாததல்ல.

Rum 30:55

மறுமை நாள் நிகழும்போது குற்றவாளிகள் சத்தியமிட்டுக் கூறுவார்கள், “நாங்கள் அடக்கஸ்த்தலங்களில் ஒரு மணிநேரம்தான் தங்கியிருந்தோம், என்று.” அவர்கள் அடக்கஸ்த்தலங்களில் தங்கியிருந்த காலத்தை அறிவதிலிருந்து திருப்பப்பட்டதைப்போன்றே உலகில் சத்தியத்தைவிட்டும் அவர்கள் திருப்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

Rum 30:56

ஞானம் வழங்கப்பட்ட தூதர்களும் வானவர்களும் கூறுவார்கள்: “அல்லாஹ் எழுதி வைத்த அவனுடைய முன்னைய அறிவின்படி அவன் உங்களைப் படைத்த நாளிலிருந்து நீங்கள் மறுத்துக் கொண்டிருந்த மறுமை நாள்வரை தங்கியிருந்தீர்கள். இதுதான் மக்கள் தம் அடக்கஸ்தலங்களிலிருந்து எழுந்துவரும் நாளாகும். ஆயினும் நீங்கள் மறுமை நாள் நிகழப் போகிறது என்பதை அறியாமல் இருந்தீர்கள். எனவேதான் அதனை நிராகரித்துக் கொண்டிருந்தீர்கள்.

Rum 30:57

விசாரணைக்காகவும் கூலி வழங்குவதற்காகவும் அவர்களை அல்லாஹ் எழுப்பும் நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்கள் இட்டுக்கட்டி வைத்திருக்கும் சாக்குப்போக்குகள் எந்தப் பயனையும் அளிக்காது. பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ் விரும்பியபடி மீளுமாறு அவர்கள் கோரப்படவும் மாட்டார்கள். ஏனெனில் அதற்குரிய நேரம் தவறிவிட்டது.

Rum 30:58

நாம் இந்த குர்ஆனில் மனிதர்களின் மீது -அக்கறை கொண்டு- அவர்களுக்கு அசத்தியத்திலிருந்து சத்தியம் தெளிவாவதற்காக எல்லா உதாரணங்களையும் கூறியுள்ளோம். -தூதரே!- நீர் உண்மையாளர் என்பதற்கு ஏதேனும் ஆதாரத்தை அவர்களிடம் கொண்டுவந்தால், “நீர் கொண்டு வந்ததில் நீங்கள் அசத்தியவாதிகளே” என்று அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் கூறுகிறார்கள்.

Rum 30:59

நீர் கொண்டுவந்த ஆதாரத்தை நம்பாத இவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டது போன்றே நிச்சயமாக நீர் கொண்டு வந்ததை சத்தியம் என்று அறியாதவர்களின் உள்ளங்களிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்.

Rum 30:60

தூதரே!- உம் சமூகம் உம்மை பொய்ப்பிப்பதை பொறுமையுடன் சகித்துக் கொள்வீராக. உதவி செய்வதாகவும் அதிகாரத்தை வழங்குவதாகவும் அல்லாஹ் உமக்கு அளித்த வாக்குறுதி சந்தேகம் இல்லாமல் நிச்சயமாக நிறைவேறியே தீரும். திட்டமாக தாங்கள் எழுப்பப்படுவோம் என்பதை உறுதியாக நம்பாதவர்கள் உம்மை அவசரப்பட்டு, பொறுமையைக் கைவிடுவதன்பால் தள்ளிவிட வேண்டாம்.

Lukman 31:1

(الٓـمٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

Lukman 31:2

தூதரே!- உம்மீது இறக்கப்பட்ட இந்த வசனங்கள் ஞானத்தை கூறக்கூடிய வேதத்தின் வசனங்களாகும்.

Lukman 31:3

அது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் சிறந்த முறையில் நிறைவேற்றக்கூடியவர்களுக்கு வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கின்றது.

Lukman 31:4

அவர்கள் தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுகிறார்கள். தங்கள் செல்வங்களிலிருந்து ஸகாத்தையும் வழங்குகிறார்கள். மறுமை நாளில் நடைபெறும் மீண்டும் எழுப்புதல், விசாரணை, நன்மை, தீமை என்பவற்றின் மீது உறுதியாக நம்பிக்கைகொள்கிறார்கள்.

Lukman 31:5

இந்த பண்புகளால் வர்ணிக்கப்பட்டவர்கள்தாம் தங்கள் இறைவனிடமிருந்து நேரான வழியைப் பெற்றவர்களாவர். இவர்கள்தாம்வேண்டுவதை பெற்று அஞ்சுவதை விட்டும் தூரமாகி வெற்றி பெறக்கூடியவர்கள்.

Lukman 31:6

நள்ர் இப்னு ஹாரிசைப் போன்ற- சில மனிதர்கள் வேடிக்கையான பேச்சுக்களை தேர்ந்தெடுக்கின்றார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு அதன் பக்கம் மக்களை அறிவில்லாமல் திருப்புவதற்காகவும் அவனுடைய வசனங்களை பரிகாசமாக எடுத்துக் கொள்வதற்காகவும் இவ்வாறு செய்கிறார்கள். இந்த பண்புகளால் வர்ணிக்கப்பட்டவர்களுக்கு மறுமையில் இழிவுமிக்க வேதனையுண்டு.

Lukman 31:7

நம்முடைய வசனங்கள் அவனிடம் எடுத்துரைக்கப்பட்டால் அதனை செவியேற்காமல் அவற்றை செவியேற்காதவனைப் போன்று, அவனுடைய செவிகளில் சத்தத்தை செவியேற்க முடியாமல் அடைப்பு உள்ளதைப் போன்று கர்வம் கொண்டவனாக புறக்கணித்து விடுகிறான். -தூதரே!- அவனுக்கு வேதனை மிக்க தண்டனை காத்திருக்கின்றது என்னும் நற்செய்தியைக் கூறிவிடுவீராக.

Lukman 31:8

நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்களுக்கு அருட்கொடைகள் நிறைந்த சுவனங்கள் உண்டு. அவற்றில் அல்லாஹ் அவர்களுக்குத் தயார்படுத்தியுள்ள இன்பங்களில் அவர்கள் திளைத்திருப்பார்கள்.

Lukman 31:9

அவற்றில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இது அல்லாஹ் அவர்களுக்கு அளித்த சந்தேகம் இல்லாத உறுதியான வாக்குறுதியாகும். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பிலும், நிர்ணயத்திலும், சட்டத்திலும் அவன் ஞானம் மிக்கவன்.

Lukman 31:10

அல்லாஹ் வானங்களை உயரமானவையாக, தூண்களின்றி படைத்துள்ளான். பூமி உங்களைக்கொண்டு ஆட்டம் கண்டுவிடாமல் இருக்க அதில் உறுதியான மலைகளை ஊன்றியுள்ளான். அதன் மேற்பரப்பில் பலவகையான உயிரினங்களை பரவச் செய்துள்ளான். நாம் வானத்திலிருந்து மழை நீரை இறக்கி, மனிதர்களும் உயிரனங்களும் பயன்பெறும் அனைத்து வகையான அழகிய தாவரங்களையும் பூமியில் முளைக்கச் செய்துள்ளோம்.

Lukman 31:11

இவ்வாறு கூறப்பட்டவை அல்லாஹ்வின் படைப்புகளாகும். -இணைவைப்பாளர்களே!- அவனைத் தவிர நீங்கள் வணங்கும் தெய்வங்கள் எதைப் படைத்தன? மாறாக தாமே படைக்கப்பட்ட நிலையில் எதையும் படைக்காதவற்றை அல்லாஹ்வுக்கு இணையாக்கும் அநியாயக்காரர்கள் சத்தியத்தைவிட்டும் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள்.

Lukman 31:12

நாம் லுக்மானுக்கு மார்க்கத்தில் புரிதலையும் விஷயங்களில் ஞானத்தையும் வழங்கினோம். நாம் அவரிடம் கூறினோம்: “லுக்மானே! தன்னை வழிபடுவதற்கு உமக்கு அருள்புரிந்த உம் இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக. நிச்சயமாக தம் இறைவனுக்கு நன்றி செலுத்துபவரின் நன்றியின் பயன் அவரையே சென்றடையும். ஏனெனில் அவருடைய நன்றியைவிட்டும் அல்லாஹ் தேவையற்றவன். யாரேனும் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றிகெட்டத்தனமாக நடந்து அவனை நிராகரித்தால் அவரது நிராகரிப்பின் தீங்கு அவரையே சென்றடையும். அதனால் அல்லாஹ்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஏனெனில் அவன் படைப்புகள் அனைத்தையும் விட்டும் தேவையற்றவன். எல்லா நிலைகளிலும் புகழுக்குரியவன்.

Lukman 31:13

தூதரே!- லுக்மான் தம் மகனிடம் அவரை நன்மையின்பால் ஆர்வமூட்டியவராக, தீமையிலிருந்து எச்சரித்தவராக கூறியதை நினைவுகூர்வீராக: “என் மகனே! அல்லாஹ்வுடன் வேறு கடவுளை வணங்கி விடாதே. நிச்சயமாக அவனுடன் வேறு கடவுளை வணங்குவது தனக்குச் செய்யும் மிகப் பெரும் அநியாயமாக இருக்கின்றது. ஏனெனில் அது நிரந்தர நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லும் பெரும் பாவத்தில் ஈடுபடுவதாகும்.

Lukman 31:14

அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்யாத விதத்தில் தாய், தந்தையருக்குக் கீழ்ப்படியுமாறும் உபகாரம் செய்யுமாறும் நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். அவனது தாய் சிரமத்துக்கு மேல் சிரமத்தை அனுபவித்து அவனை தன் வயிற்றில் சுமந்தாள். அவனை பால்குடி மறக்கச் செய்ய இரு ஆண்டுகள் ஆகின்றன. நாம் அவனிடம் கூறினோம்: “அல்லாஹ் உன்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்து. உன் தாய், தந்தையர் உன்னை வளர்த்துப் பராமரித்ததற்காக அவர்களுக்கும் நன்றிசெலுத்து. திரும்புவது என் பக்கம் மட்டுமே உள்ளது. அப்போது நான் ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை வழங்கிடுவேன்.

Lukman 31:15

உன் தாய், தந்தையர் உன்னை அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கும்படி கடும் பாடுபட்டு நிர்ப்பந்தம் செய்தால் நீ அவர்களுக்கு அந்த விஷயத்தில் கட்டுப்படாதே. ஏனெனில் நிச்சயமாக படைப்பாளனின் கட்டளைக்கு மாறாக படைப்புகளுக்கு கட்டுப்படக்கூடாது. உலகில் அவர்களுடன் நல்ல முறையில் உபகாரம் செய்து சேர்ந்து நடந்துகொள். ஏகத்துவம் வழிப்பாடு என்பவற்றின் மூலம் என் பக்கம் திரும்பியவர்களின் வழியைப் பின்பற்று. பின்னர் மறுமை நாளில் நீங்கள் அனைவரும் என் பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும். அப்போது நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்களைக்குறித்து நான் உங்களுக்கு அறிவிப்பேன். அவற்றிற்கேற்ப நான் உங்களுக்குக் கூலி வழங்குவேன்.

Lukman 31:16

என் மகனே! நிச்சயமாக நன்மையோ, தீமையோ அது கடுகளவு போன்று சிறியதாக இருந்து, அது யாரும் பார்க்க முடியாதவாறு பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களிலோ பூமியிலோ எந்த இடத்தில் இருந்தாலும் திட்டமாக மறுமை நாளில் அல்லாஹ் அதனைக் கொண்டுவருவான். அதற்கேற்ப அடியானுக்கு கூலி வழங்குவான். நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவாளனாக உள்ளான். எந்தவொரு நுணுக்கமானவையும் அவனை விட்டும் மறையமுடியாது. அவற்றின் யதார்த்தங்கள், இடங்கள் என்பவற்றை நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Lukman 31:17

என் மகனே! தொழுகையை பரிபூரணமாக நிறைவேற்றி அதனை நிலைநாட்டு!. நன்மையை ஏவி, தீமையைத் தடு. அதில் உனக்கு ஏற்படும் துன்பங்களில் பொறுமையாக இரு. நிச்சயமாக நான் உனக்குக் கட்டளையிடுபவை அனைத்தும் நீ செய்ய வேண்டுமென அல்லாஹ் உறுதிகொண்ட விஷயங்களாகும். இதில் உனக்கு எந்தத் தெரிவுக்கும் இடமில்லை.

Lukman 31:18

பெருமை கொண்டு மக்களைவிட்டும் உன் முகத்தை திருப்பிக்கொள்ளாதே. பூமியில் கர்வம் கொண்டு தற்பெருமையுடன் நடந்து திரியாதே. தன் நடையில் கர்வம் கொண்டு தனக்கு வழங்கப்பட்டுள்ள அருட்கொடைகளைக் கொண்டு மக்களிடம் பெருமையடித்து, அவற்றுக்கு நன்றி செலுத்தாத எவரையும் நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை.

Lukman 31:19

வேகமாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் உன் நடையில் சாதாரணமான கண்ணியம் வெளிப்படும் நடுநிலை நடையை கடைப்பிடி. உனது குரலை தாழ்த்திக் கொள். தொல்லை தரும் விதத்தில் அதனை உயர்த்தாதே. நிச்சயமாக குரல்களில் மோசமானது உயர்ந்த சப்தமுடைய கழுதையின் குரலேயாகும்.

Lukman 31:20

மனிதர்களே!- வானங்களிலுள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரம் ஆகியவற்றையும் பூமியிலுள்ள உயிரினங்கள், செடிகொடிகள், தாவரங்கள் ஆகியவற்றையும் அல்லாஹ் உங்களின் பயன்பாட்டிற்காக இலகுவாக்கித் தந்துள்ளான் என்பதையும் உங்களின் மீது கண்ணுக்கு தெரியும் வெளிப்படையான அழகிய தோற்றம் அமைப்பு போன்ற தன் அருட்கொடைகளையும் அந்தரங்கமான பகுத்தறிவு, கல்வி போன்ற தன் அருட்கொடைகளையும் முழுமைப்படுத்தியுள்ளான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? இந்த அருட்கொடைகளுக்குப் பின்னரும் மக்களில் அல்லாஹ்விடமிருந்து வஹி சார்ந்த அறிவோ, அல்லது சிறந்த புத்தியோ, அல்லது அவனிடமிருந்து இறங்கிய தெளிவான வேதமோ இன்றி அல்லாஹ்வின் ஏகத்துவத்தில் தர்க்கம் செய்கிறார்கள்.

Lukman 31:21

அல்லாஹ்வின் ஏகத்துவம் சம்பந்தமாக தர்க்கம் செய்யும் இவர்களிடம், “அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கியதைப் பின்பற்றுங்கள்” என்று கூறப்பட்டால், “நாங்கள் அதனைப் பின்பற்ற மாட்டோம். மாறாக எங்கள் முன்னோர்களிடம் நாங்கள் பெற்றுக்கொண்ட சிலை வணக்கத்தையே பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். -சிலை வணக்கத்தினால் அவர்களை வழிகெடுப்பதன் மூலம்- அவர்களை மறுமை நாளின் நரக வேதனையின் பால் ஷைத்தான் அழைத்தாலும் அவர்கள் தங்களின் முன்னோர்களைப் பின்பற்றுவார்களா?

Lukman 31:22

யார் அல்லாஹ்வுக்கு மட்டுமே வணக்க வழிபாட்டை உரித்தாக்கி அமல்களை நல்ல முறையில் செய்து அவன்பால் முன்னோக்கினாரோ அவர், தப்ப விரும்பும் ஒருவர் பற்றிப்பிடிக்கும் உறுதியான கயிற்றை பலமாகப் பற்றிக்கொண்டார். ஏனெனில் அது அறுபட்டு விடுமோ என அஞ்சவேண்டியதில்லை எனும் அளவுக்கு உறுதியானதாகும். விவகாரங்கள் அனைத்தின் முடிவும் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. எனவே அவன் ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை வழங்கிடுவான்.

Lukman 31:23

தூதரே!- அல்லாஹ்வை நிராகரிப்பவரின் நிராகரிப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்கள் அனைவரும் மறுமை நாளில் நம் பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும். அவர்கள் உலகில் செய்த தீய செயல்களைக்குறித்து நாம் அவர்களுக்கு அறிவிப்போம். அவற்றிற்கேற்ப அவர்களுக்குத் கூலி வழங்குவோம். நிச்சயமாக அல்லாஹ் உள்ளங்களில் உள்ளதை நன்கறியக்கூடியவன். அவற்றில் உள்ள எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

Lukman 31:24

நாம் அவர்களுக்கு இவ்வுலகில் அளிக்கும் இன்பங்களைக் கொண்டு சிறிதுகாலம் வரை அவர்களை அனுபவிக்கச் செய்வோம். பின்னர் கடுமையான வேதனையான நெருப்பு வேதனையில் அவர்களைத் தள்ளிவிடுவோம்.

Lukman 31:25

தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம், “வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால் “அல்லாஹ்தான்” என்று அவர்கள் கூறுவார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: “உங்களுக்கு எதிராக ஆதாரத்தை வெளிப்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவர்களில் பெரும்பாலானோர் அறியாமையினால் புகழுக்குரியவனை அறியாமல் இருக்கிறார்கள்.

Lukman 31:26

வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் படைத்து அதிகாரம் செலுத்தி திட்டமிடும் உரிமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியன. நிச்சயமாக அவன் தன் படைப்புகள் அனைத்தையும் விட்டுத் தேவையற்றவனாகவும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் புகழப்பட்டவனாகவும் இருக்கின்றான்.

Lukman 31:27

நிச்சயமாக பூமியிலுள்ள மரங்கள் வெட்டப்பட்டு எழுதுகோல்களாக ஆக்கப்பட்டு கடலும் அதனோடு இன்னும் ஏழு கடல்களும் மையாக மாறினாலும் கூட அல்லாஹ்வின் வார்த்தைகள் ஒருபோதும் முடிவடையாது. ஏனெனில் அவற்றுக்கு முடிவு இல்லை. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பில், தன் திட்மிடலில் அவன் ஞானம் மிக்கவன்.

Lukman 31:28

மனிதர்களே!- உங்களைப் படைப்பதும் மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலி வழங்குவதற்காகவும் மீண்டும் உங்களை உயிர்கொடுத்து எழுப்புவதும் ஒரு உயிரை படைப்பதும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவது போன்ற இலகுவானதுதான். நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கக்கூடியவன். ஒரு சப்தத்தை செவியுறுவதற்கு மற்றொரு சப்தம் அவனுக்கு இடையூறாக இருக்காது. அவன் பார்க்கக்கூடியவன். ஒன்றைப் பார்க்கும் போது மற்றொன்று அவனுக்கு இடையூறாக இருக்காது. இவ்வாறே ஒருவரைப் படைப்பதும் அவரை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதும் மற்றவரைப் படைப்பதற்கும் அவரை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கும் இடையூறாக அமையாது.

Lukman 31:29

நிச்சயமாக அல்லாஹ் பகலை அதிகரிப்பதற்காக இரவைக் குறைக்கின்றான் என்பதையும் இரவை நீட்டுவதற்காக பகலைக் குறைக்கின்றான் என்பதையும் நீர் பார்க்கவில்லையா? அவன் சூரியனுக்கும் சந்திரனுக்கும் செல்லும் பாதையை நிர்ணயித்துள்ளான். ஒவ்வொன்றும் தன் பாதையில் குறிப்பிட்ட தவணைவரை ஓடிக் கொண்டிருக்கும். நிச்சயமாக நீங்கள் செய்யக்கூடியதை அல்லாஹ் நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

Lukman 31:30

இந்த திட்டமும் விதியும் அல்லாஹ் ஒருவனே உண்மையானவன், தன் உள்ளமையிலும் பண்புகளிலும் செயல்களிலும் அவன் உண்மையானவன் என்பதற்கும் நிச்சயமாக இணைவைப்பாளர்கள் அவனை விடுத்து வணங்கும் தெய்வங்கள் அனைத்தும் அடிப்படையற்ற அசத்தியம் என்பதற்கும் சாட்சி கூறுகின்றன. நிச்சயமாக அல்லாஹ் தன் உள்ளமையிலும் அடக்கி ஆள்வதிலும் கண்ணியத்திலும் படைப்புகள் அனைத்தையும்விட மிக உயர்ந்தவன்; அவனை விட உயர்ந்தது எதுவும் கிடையாது, அனைத்தையும் விட மிகப் பெரியவன் அவனே. (என்று சாட்சி கூறுகின்றன)

Lukman 31:31

அவனது நுண்ணறிவினாலும் வசப்படுத்துதலாலும் கடலில் கப்பல்கள் செல்வதை நீர் பார்க்கவில்லையா? -மனிதர்களே!- இது அவன் தன் வல்லமையையும் நுண்ணறிவையும் அறிவிக்கும் சான்றுகளை உங்களுக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான். நிச்சயமாக இதில் துன்பங்களை பொறுமையாக சகித்துக் கொள்ளக்கூடிய, பெற்றுக்கொள்ளும் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக்கூடிய ஒவ்வொருவருக்கும் அவனுடைய வல்லமையை அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன.

Lukman 31:32

மலைகளைப் போன்ற, மேகங்களைப் போன்ற அலைகள் நாலா புறமும் அவர்களைச் சூழ்ந்துவிட்டால் அல்லாஹ்விடம் மட்டுமே மனத்தூய்மையோடு வணங்கி பிரார்த்திக்கிறார்கள். அவன் அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரித்து அவர்களைக் காப்பாற்றி மூழ்காமல் கரை சேர்த்துவிட்டால் அவர்களில் சிலர் தன் மீது கடமையான நன்றி செலுத்தலை பரிபூரணமாகச் செய்யாமல் ஓரளவுக்கு நடுநிலையாக நடந்துகொள்கிறார்கள்; சிலர் அவனுடைய அருட்கொடைகளை மறுத்து நடந்துகொள்கிறார்கள். - இவ்வாறு அல்லாஹ் தன்னைக் காப்பாற்றினால் அவனுக்கு நன்றியுடையவனாக இருப்பேன் என அல்லாஹ்விடம் வாக்குறுதி அளித்துவிட்டு பின்பு அதற்கு மாறு செய்பவரைப் போன்ற- துரோகிகளும், இறைவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி கெட்டதனமாக நடந்துகொள்ளக்கூடியவர்களுமே நம்முடைய சான்றுகளை மறுக்கிறார்கள்.

Lukman 31:33

மனிதர்களே! உங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். அந்த நாளின் வேதனையை அஞ்சிக் கொள்ளுங்கள். அந்த நாளில் தந்தை தன் மகனுக்கோ மகன் தன் தந்தைக்கோ எந்தப் பயனையும் அளிக்க முடியாது. மறுமை நாளில் கூலி அளிக்கப்படும் என்ற அவனுடைய வாக்குறுதி சந்தேகம் இல்லாமல் நிச்சயமாக நிறைவேறியே தீரும். உலக வாழ்வின் ஆசைகளும் வீண் விளையாட்டுகளும் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அல்லாஹ் உங்களுடன் பொறுமையாக நடந்துகொள்வதை வைத்தும் உங்களுக்கு வேதனையைத் தாமதப்படுத்துவதை வைத்தும் ஷைத்தான் உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்.

Lukman 31:34

நிச்சயமாக மறுமை பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அது எப்போது நிகழும் என்பதை அவனே அறிவான். விரும்பிய சமயத்தில் அவன் மழை பொழிவிக்கிறான். கருவறையில் உள்ளதை அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா, பாக்கியசாலியா, அல்லது துர்பாக்கிசாலியா என்பதை அவனே நன்கறிவான். ஒருவர் நாளை என்ன சம்பாதிப்பார், நன்மையையா? அல்லது தீமையையா? என்பதை அல்லாஹ்வே அறிவான். எந்த ஆன்மாவும் தான் எந்த இடத்தில் மரணிக்கும் என்பதை அறியாது. மாறாக இவையனைத்தையும் அல்லாஹ்வே நன்கறிவான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

Secde 32:1

(الٓـمٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

Secde 32:2

முஹம்மது கொண்டுவந்த இந்த குர்ஆன் படைப்புகள் அனைத்தையும் படைத்துப்பராமரிக்கும் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டதாகும். அதில் எத்தகைய சந்தேகமும் இல்லை.

Secde 32:3

நிச்சயமாக இந்த நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: “திட்டமாக முஹம்மது தம் இறைவனின் பெயரால் இதனைப் புனைந்துள்ளார், என்று.” அவர்கள் கூறுவது போலல்ல விடயம். மாறாக அது உம் இறைவனிடமிருந்து உம்மீது இறங்கிய சந்தேகமற்ற உண்மையாகும். -தூதரே!- உமக்கு முன்னால் அல்லாஹ்வின் வேதனையை எச்சரிக்கும் தூதர்கள் வராத சமூகத்திற்கு நீர் எச்சரிப்பதற்கே அது இறக்கப்பட்டுள்ளது. அவர்கள் சத்தியத்தின்பால் நேர்வழிபெற்று அதனைப் பின்பற்றி அதன் படி செயற்படலாம்.”

Secde 32:4

அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளதையும் ஆறு நாட்களில் படைத்தான். அவன் அவற்றைக் கண் சிமிட்டும் நேரத்தைவிட குறைவான நேரத்தில் படைப்பதற்கும் ஆற்றலுடையவன். பின்னர் தன் கண்ணியத்திற்கேற்ப அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான். -மனிதர்களே!- உங்களுக்கு அவனைத் தவிர உங்களின் காரியங்களை பொறுப்பெடுக்கும் பொறுப்பாளனோ, உங்களுக்கு உங்கள் இறைவனிடத்தில் பரிந்துரை செய்பவனோ யாரும் இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? உங்களைப் படைத்த அல்லாஹ்வுடன் எதனையும் இணையாக்காமல் அவனை மாத்திரம் வணங்க மாட்டீர்களா?

Secde 32:5

வானங்களிலும் பூமியிலும் படைப்பினங்கள் அனைத்தின் விவகாரங்களையும் அவனே நிர்வகிக்கிறான். பின்னர் அவை ஒரு நாள் அவனிடம் சென்றுவிடும். -மனிதர்களே!- அந்த நாளின் அளவு உலகில் நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்களாகும்.

Secde 32:6

இவற்றையெல்லாம் நிர்வகிப்பவனே மறைவான, வெளிப்படையான ஒவ்வொன்றையும் அறிந்தவன். அவை இரண்டிலும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. தன் எதிரிகளைத் தண்டிக்கும் அவன் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. நம்பிக்கைகொண்ட தன் அடியார்களோடு அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.

Secde 32:7

அவன் ஒவ்வொரு பொருளையும் சிறந்த முறையில் படைத்துள்ளான். ஆதமை முன்மாதிரியின்றி மண்ணிலிருந்து படைக்கத் தொடங்கினான்.

Secde 32:8

அதன் பின்னர் அவனுடைய சந்ததியினரை அவனிலிருந்து வெளியான விந்திலிருந்து படைத்தான்.

Secde 32:9

பின்னர் மனிதனை செம்மையாக்கி, முழுமைப்படுத்தி அவனுள் தன் ஆன்மாவை அதற்காக அவன் நிர்ணயித்த வானவரின்மூலம் ஊதினான். -மனிதர்களே!- நீங்கள் கேட்பதற்காக செவிகளையும் பார்ப்பதற்காக கண்களையும் புரிந்துகொள்வதற்காக உள்ளங்களையும் அவன் உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளான். ஆயினும் அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த இந்த அருட்கொடைகளுக்கு நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.

Secde 32:10

மறுமையை மறுக்கும் இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்: “நாம் மரணித்து பூமியில் மறைந்துவிட்டாலும், நம்முடைய உடல்கள் மண்ணோடு மண்ணாகிவிட்டாலும் நாம் மீண்டும் புதிதாக உயிர்கொடுத்து எழுப்பப்படுவோமா? இது புரிந்துகொள்ள முடியாததாக இருக்கின்றதே!” உண்மையான விடயம் யாதெனில் அவர்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நம்பாத நிராகரிப்பாளர்களாக இருக்கின்றார்கள்.

Secde 32:11

தூதரே!- மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: ”அல்லாஹ் உங்களின் உயிர்களை கைப்பற்றுவதற்காக நியமித்த மரணத்தின் வானவர் உங்களின் உயிர்களைக் கைப்பற்றுவார். பின்னர் மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் நீங்கள் நம் பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும்.

Secde 32:12

பின்பு மறுமை நாளில் குற்றவாளிகள் மறுமையை நிராகரித்ததனால் இழிவடைந்தவர்களாக தங்களின் தலைகளைத் தாழ்த்தியவர்களாக காணப்படுவார்கள். அவர்கள் தாங்கள் இழிவடைந்துவிட்டதாக உணந்து, கூறுவார்கள்: “நாங்கள் மறுத்துக் கொண்டிருந்த மறுமை நாளை கண்டு கொண்டோம். உன்னிடமிருந்து வந்த தூதர்கள் கூறியதன் உண்மையே என்பதையும் செவியேற்றோம். எனவே நாங்கள் உனக்கு விருப்பமான நற்செயல்கள் புரிவதற்கு மீண்டும் எங்களை உலக வாழ்க்கையின்பால் திருப்பி அனுப்புவாயாக. நிச்சயமாக தற்போது மறுமை நாளையும் தூதர்கள் கொண்டு வந்ததையும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” நீர் குற்றவாளிகளை இந்த நிலையில் கண்டால் மிகப் பெரும் விஷயத்தைக் கண்டவராவீர்.

Secde 32:13

நாம் ஒவ்வொருவருக்கும் நேர்வழியளிக்க நாடியிருந்தால் நேர்வழி அளித்திருப்போம். ஆயினும், “மறுமை நாளில் மனித, ஜின் இனத்தாரில் நிராகரித்தவர்களைக்கொண்டு நரகத்தை நிரப்புவேன்” என்ற நீதிமிக்க, மதிநுட்பம் நிறைந்த என் வாக்கு உறுதியாகிவிட்டது. ஏனெனில் அவர்கள் நம்பிக்கை, நேரான பாதையை விட்டும் நிராகரிப்பு, வழிகேட்டின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

Secde 32:14

அவர்களை கண்டிக்கும் விதமாக மறுமை நாளில் அவர்களிடம் கூறப்படும்: “மறுமை நாளில் விசாரணைக்காக அல்லாஹ்வை சந்திப்பதை மறந்து உலக வாழ்வில் அலட்சியமாக இருந்ததனால் வேதனையைச் சுவையுங்கள். வேதனையை நீங்கள் அனுபவிப்பதைப் பொருட்படுத்தாமல் அதில் நிச்சயமாக நாம் உங்களை விட்டுவிட்டோம். உலகில் நீங்கள் பாவங்கள் செய்துகொண்டிருந்ததன் காரணமாக என்றும் முடிவடையாத நிரந்தர நரக வேதனையை அனுபவியுங்கள்.”

Secde 32:15

நாம் நம் தூதர் மீது இறக்கிய வசனங்களை நம்பிக்கைகொள்பவர்கள் யாரெனில் அவற்றின் மூலம் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டால் அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாக தஸ்பீஹ் செய்து அவனுக்குச் சிரம்பணிபவர்களே. அவர்கள் அவனை வணங்குவதிலிருந்தோ, அவனுக்குச் சிரம்பணிவதிலிருந்தோ எந்நிலையிலும் கர்வம் கொள்வதில்லை.

Secde 32:16

அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் படுக்கையிலிருந்து அவர்களின் விலாப்புறங்கள் விலகிவிடும். அவற்றை விட்டுவிட்டு, அல்லாஹ்விடம் திரும்புவார்கள். அல்லாஹ்வின் வேதனைக்கு அஞ்சியவர்களாக அவனுடைய அருளில் ஆர்வம் கொண்டவர்களாக தமது தொழுகையிலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றார்கள். நாம் அவர்களுக்கு வழங்கிய செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்கிறார்கள்.

Secde 32:17

அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த நற்செயல்களுக்குக் கூலியாக அவர்களுக்காக அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ள கண்குளிர்ச்சி மிக்கவைகளை எவரும் அறிய மாட்டார்கள். அதன் மகத்துவத்தினால் அது அல்லாஹ் மட்டுமே அறிந்த கூலியாகும்.

Secde 32:18

யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகியிருக்கின்றாரோ அவர் அவனுக்குக் கட்டுப்படாதவரைப் போன்றவர் அல்ல. இரு பிரிவினரும் அல்லாஹ்விடம் கூலியில் சமமாக மாட்டார்கள்.

Secde 32:19

அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களுக்குத் தயார் செய்யப்பட்ட கூலி சுவனங்களாகும். அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த நற்செயல்களுக்குக் கூலியாக அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் சங்கையாக அவற்றில் அவர்கள் தங்கியிருப்பார்கள்.

Secde 32:20

அல்லாஹ்வை நிராகரித்து பாவங்கள் புரிந்து அவனுக்கு அடிபணியாதவர்கள் தங்குமிடம் நரகமாகும். அது மறுமை நாளில் அவர்களுக்காகவே தயார் செய்யப்பட்டதாகும். அங்கு அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். அவர்கள் அங்கிருந்து வெளியேற நாடும்போதெல்லாம் மீண்டும் அதன் பக்கமே திருப்பப்படுவார்கள். அவர்களிடம் கண்டிக்கும் விதத்தில் கூறப்படும்: “உலகில் தூதர்கள் வந்து உங்களை எச்சரித்த போது நீங்கள் பொய்பித்த நரக வேதனையை அனுபவியுங்கள்.”

Secde 32:21

தங்கள் இறைவனுக்குக் கட்டுப்படாமல் பொய்ப்பிப்பவர்கள் அல்லாஹ்வை வழிப்படுவதன் பக்கம் திரும்பிவிடும் பொருட்டு மறுமையில் அவர்களுக்காக தயார்செய்யப்பட்டுள்ள பெரும் வேதனைக்கு முன்னர் இவ்வுலகில் சோதனைகளையும் துன்பங்களையும் அவர்களுக்கு சுவைக்கச் செய்வோம்.

Secde 32:22

அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு அறிவுரை கூறப்பட்டும் அறிவுரை பெறாது, அவற்றைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்தவனைவிட பெரும் அநியாயக்காரன் வேறு யாருமில்லை. -நிராகரிப்பான செயல்கள் மற்றும் பாவங்கள் புரிந்து அல்லாஹ்வின் வசனங்களை புறக்கணிக்கும்- குற்றவாளிகளை நாம் சந்தேகம் இல்லாமல் நிச்சயமாக தண்டித்தே தீருவோம்.

Secde 32:23

நாம் திட்டமாக மூஸாவிற்கு தவ்ராத்தை வழங்கினோம். -தூதரே!- நீர் விண்ணுலகிற்குச் சென்ற இரவில் - மிஃராஜ் உடைய இரவில் மூஸாவை சந்தித்தது குறித்து சந்தேகம் கொள்ளாதீர். நாம் மூஸாவின் மீது இறக்கிய வேதத்தை இஸ்ராயீலின் மக்களுக்கு வழிகேட்டிலிருந்து நேர்வழிகாட்டடியாக ஆக்கினோம்.

Secde 32:24

நாம் இஸ்ரவேலர்களிலிருந்து மக்கள் பின்பற்றத்தக்க நமது அனுமதி மற்றும் நாம் வழங்கிய ஆற்றல்களைக்கொண்டு சத்தியத்துக்கு வழிகாட்டும் தலைவர்களை ஏற்படுத்தினோம். அல்லாஹ்வின் கட்டளைகளைப் பின்பற்றுதல், அவனது விலக்கல்களைத் தவிரந்துகொள்ளுதல், அழைப்புப் பணியில் ஏற்படும் நோவினை என்பவற்றில் அவர்கள் பொறுமையைக் கடைபிடித்த போது இது நிகழ்ந்தது. அவர்கள் தங்களின் தூதர் மீது இறக்கப்பட்ட அல்லாஹ்வின் வசனங்களை உறுதியாக நம்பக்கூடியவர்களாக இருந்தார்கள்.

Secde 32:25

தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் உலகில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவற்றில் மறுமை நாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான். சத்தியவாதிகளையும் அசத்தியவாதிகளையும் தெளிவுபடுத்துவான். ஒவ்வொருவருக்கும் தகுந்த கூலியை வழங்கிடுவான்.

Secde 32:26

நாம் இவர்களுக்கு முன்னால் எத்தனையோ சமூகங்களை அழித்துள்ளோம் என்பது இவர்களுக்குத் தெளிவாகவில்லையா? இவர்கள் குருடாகி விட்டார்களா என்ன? இவர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களின் வழியேதான் கடந்து செல்கிறார்கள். அவர்களது நிலமையைக்கொண்டு இவர்கள் படிப்பினை பெறவில்லையா? நிச்சயமாக அந்தச் சமூகங்களுக்கு அவர்களின் நிராகரிப்பினாலும் பாவங்களினாலும் நிகழ்ந்த அழிவில், அவர்களிடம் வந்த இறைத் தூதர்கள் உண்மையாளர்களே என்பதைத் தெரிவிக்கும் படிப்பினைகள் இருக்கின்றன. அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிக்கும் இவர்கள் ஏற்றுக்கொண்டு அறிவுரை பெறும் நோக்கில் செவியேற்கமாட்டார்களா என்ன?

Secde 32:27

நாம் மழை நீரை செடிகொடிகளற்ற வறண்ட பூமியை நோக்கி அனுப்பி அதன் மூலம் அவர்களும் அவர்களின் ஒட்டகம், மாடு, ஆடு என்பன உண்ணக்கூடிய பயிர்களை நாம் வெளிப்படுத்துகின்றோம் என்பதை மறுமையில் எழுப்பப்படுவதை பொய்ப்பிக்கும் இவர்கள் பார்க்க வேண்டாமா? அவர்கள் அதனைப் பார்த்து, வறண்ட பூமியில் செடிகொடிகளை முளைக்கச் செய்தவன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா?

Secde 32:28

வேதனையை அவசரமாக வேண்டி மறுமையில் மீண்டும் எழுப்பப்படுவதை பொய்ப்பிப்போர் கேட்கிறார்கள்: “நிச்சயமாக மறுமை நாளில் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே தீர்ப்பளிக்கப்பட்டு நாங்கள் நரகத்திற்கு செல்வோம் நீங்கள் சுவனத்திற்கு செல்வீர்கள் என்று நீங்கள் எண்ணும் அந்தத் தீர்ப்பு எப்போது நிகழும்?

Secde 32:29

தூதரே!- நீர் கூறுவீராக: “அது மறுமை நாளில் நிறைவேறக்கூடிய வாக்குறுதியாகும். நிச்சயமாக அது அடியார்களிடையே தீர்ப்பு வழங்கப்படும் நாளாகும். அச்சமயத்தில் உலகில் அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் மறுமை நாளை கண்டபிறகு நம்பிக்கைகொள்வதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. தங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவதற்கு அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படாது.

Secde 32:30

தூதரே!- தொடர்ந்தும் வழிகேட்டில் இருக்கும் இவர்களைப் புறக்கணித்து விடுவீராக. அவர்கள் மீது இறங்கப்போவதை எதிர்பார்ப்பீராக. நிச்சயமாக நீர் அவர்களுக்கு வாக்களித்த வேதனையை எதிர்பார்க்கிறார்கள்.

Ahzab 33:1

தூதரே! நீரும் உம்மைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுவதில் நிலைத்திருங்கள். அவனை மாத்திரமே அஞ்சுங்கள். நிராகரிப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்களின் மனம் விரும்புபவற்றுக்கு நீர் கட்டுப்படாதீர். நிச்சயமாக நிராகரிப்பாளர்களும் நயவஞ்சகர்களும் செய்யும் சூழ்ச்சிகளை அல்லாஹ் நன்கறிந்தவன். தன் படைப்பிலும், திட்டத்திலும் அவன் ஞானம் மிக்கவன்.

Ahzab 33:2

உம் இறைவன் உம்மீது இறக்கும் வஹியைப் பின்பற்றுவீராக. நிச்சயமாக நீங்கள் செய்யக்கூடியதை அல்லாஹ் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனிடமிருந்து தப்ப முடியாது. உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

Ahzab 33:3

உம்முடைய எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருப்பீராக. தன்னையே சார்ந்திருக்கும் தன்அடியார்களைப் பாதுகாப்பதற்கு அவன் போதுமானவன்.

Ahzab 33:4

அல்லாஹ் ஒரு மனிதனுக்கு இரு இதயங்களை ஏற்படுத்தாதைப் போல மனைவியரை (திருமணம் முடிக்க) தடைசெய்யப்பட்ட அன்னையரின் இடத்தில் ஆக்கவில்லை. அவ்வாறே உங்களின் வளர்ப்பு மகன்களையும் சொந்த மகன்களாக ஆக்கவில்லை. நிச்சயமாக ழிஹார் -எனப்படும் கணவன் தன் மனைவியை தாய் மற்றும் சகோதரி போன்று தனக்கு ஹராமாக்குதலும்-, வளர்ப்புப் பிள்ளைகளை சொந்தப் பிள்ளையாக்குவதும் இஸ்லாம் தடைசெய்த அறியாமைக் காலத்து வழக்கங்களாகும். அவை உங்கள் வாயினால் அடிக்கடி சொல்லப்படும் வெறும் வார்த்தைகளேயாகும். அவை ஒருபோதும் உண்மையாகிவிடாது. ஏனெனில் மனைவி தாயாகமாட்டாள். வளர்ப்பு மகன் சொந்த மகனாக ஆகமாட்டான். அல்லாஹ் உண்மையே கூறுகிறான், தன் அடியார்கள் அதன்படி செயல்பட வேண்டும் என்பதற்காக. மேலும் அவன் சத்திய பாதையின் பால் வழிகாட்டுகிறான்.

Ahzab 33:5

நிச்சயமாக உங்களின் மகன்களாக நீங்கள் எண்ணிக்கொண்டிருப்போரை அவர்களின் உண்மையான தந்தையரோடு இணைத்து அழையுங்கள். அவர்களுடன் இணைத்து அழைப்பதே அல்லாஹ்விடத்தில் நீதியானதாகும். நீங்கள் அவர்களின் தந்தையரை அறியவில்லையெனில் அவர்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையான உங்களின் மார்க்க சகோதரர்களாவர். அவர்களை “என் சகோதரரே! என் சிறிய தந்தையின் மகனே!” என்று அழையுங்கள். உங்களில் ஒருவர் தவறுதலாக வளர்ப்பு மகனை வளர்த்தவரின் மகன் என்று கூறுவது பாவமாகாது. ஆனால் நீங்கள் அறிந்துகொண்டே அவ்வாறு கூறினால் அது பாவமாகும். அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். எனவேதான் அவன் அவர்கள் தவறாகச் செய்யும் செயல்களுக்காக அவர்களைக் குற்றம் பிடிப்பதில்லை.

Ahzab 33:6

முஹம்மது நபி நம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்த அனைத்திலும் அவர்களின் உயிர்களை விடவும் மேலானவர். அவர்களது மனங்கள் மற்றவர்களின் பால் சாய்ந்த போதிலும் சரியே. அவருடைய மனைவியர் நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் அன்னையரைப் போன்றவர்களாவர். எனவே தூதர் இறந்தபிறகு எந்த நம்பிக்கையாளனுக்கும் அவர்களில் ஒருவரை மணமுடித்துக்கொள்வது அனுமதிக்கப்பட்டதல்ல. இறைவனின் கட்டளைப்படி இஸ்லாத்தின் ஆரம்ப கால கட்டத்தில் ஒருவருக்கொருவர் அனந்தரம் பெற்றுக்கொண்டிருந்த நம்பிக்கையாளர்கள் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்தவர்களை விட அனந்தரம் பெறவதற்கு மிகத் தகுதியானவர்கள் உறவினர்களே. பின்பு இஸ்லாத்தின் ஆரம்ப கால அனந்தரம் பெரும் முறை மாற்றப்பட்டது. நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களின் அனந்தரம் பெறாத தோழர்களுக்கு உயில் எழுதுதல், உபகாரம் செய்தல் என நன்மை செய்ய விரும்பினால் நீங்கள் செய்து கொள்ளலாம். இந்தக் கட்டளை லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டில் பதிவுசெய்யப்பட்டதாகும். இதன்படி செயல்படுவது கட்டாயமாகும்.

Ahzab 33:7

தூதரே!- நாம் தூதர்களிடம், அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்; அவனுக்கு யாரையும் இணையாக்கக்கூடாது; அவர்கள் மீது இறக்கப்பட்ட வஹியை எடுத்துரைத்துவிட வேண்டும் என்று நாம் உறுதியான வாக்குறுதி வாங்கியதை நினைவுகூர்வீராக. அவர்களிலும் குறிப்பாக உம்மிடமும் நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸா ஆகியோரிடமும் நாம் வாக்குறுதி வாங்கினோம். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதுப்பணியை முழுமையாக நிறைவேற்றும்படி நாம் அவர்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கினோம்.

Ahzab 33:8

அல்லாஹ் தூதர்களிடம் இவ்வாறு உறுதியான வாக்குறுதி வாங்கியதற்கான காரணம், நிராகரிப்பாளர்களை இழிவுபடுத்தும் விதமாக உண்மையான தூதர்களிடம் அவர்களின் உண்மையை விசாரிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அல்லாஹ் தன்னையும் தன் தூதர்களையும் நிராகரிப்பவர்களுக்கு மறுமை நாளில் நரக நெருப்பு என்னும் வேதனை மிக்க தண்டனையைத் தயார்படுத்தி வைத்துள்ளான்.

Ahzab 33:9

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்கள் மீது அல்லாஹ் பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். உங்களுடன் போரிடுவதற்காக நிராகரிப்பாளர்களின் படையினர் ஒன்று சேர்ந்து மதீனா வந்தபோது நயவஞ்சகர்களும் யூதர்களுக்கும் அவர்களுக்குத் துணைநின்றார்கள். நாம் அவர்களுக்கு எதிராக காற்றையும் நீங்கள் காணாத வானவர்கள் படையையும் அனுப்பிகோம். நிராகரிப்பாளர்கள் பின்வாங்கி ஓடினார்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நீங்கள் செய்யக்கூடியதை அல்லாஹ் பார்க்கக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

Ahzab 33:10

நிராகரிப்பாளர்கள் பள்ளத்தாக்கின் மேற்புறமிருந்தும் அதன் கீழ்ப்புறமிருந்து கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளின் வழியாகவும் உங்களிடம் வந்தபோது எல்லாவற்றையும் விட்டுவிட்டு எதிரிகளின் மீது பார்வை குவிந்து பயத்தினால் இதயங்கள் தொண்டைக்குழியை அடைந்துவிட்டன. நீங்கள் அல்லாஹ்வைக்குறித்து விதவிதமான எண்ணங்கள் கொண்டிருந்தீர்கள். சில சமயங்களில் அவன் உதவி புரிவான் என்று எண்ணினீர்கள். சில சமயங்களில் அவனிடமிருந்து நிராசையை எண்ணினீர்கள்.

Ahzab 33:11

அகழிப் போரின் இந்த சமயத்தில் நம்பிக்கையாளர்கள் அவர்கள் எதிர்கொண்ட எதிரிகளின் தாக்குதல்களால் சோதிக்கப்பட்டார்கள். கடும் பயத்தினால் கடுமையாக ஆட்டுவிக்கப்பட்டார்கள். இந்த சோதனையினால் நம்பிக்கையாளனும் நயவஞ்சகர்களும் தெளிவாகிவிட்டார்கள்.

Ahzab 33:12

அப்போது நயவஞ்சகர்களும் உள்ளங்களில் சந்தேகம் கொண்டிருந்த பலவீனமான நம்பிக்கையாளர்களும் கூறினார்கள்: “எதிரிகளுக்கு எதிராக உதவி செய்து பூமியில் அதிகாரம் அளிப்பேன்” என்று அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு அளித்த வாக்குறுதி அடிப்படையற்ற பொய்யேயாகும்.

Ahzab 33:13

தூதரே!- நயவஞ்சகர்களில் ஒருபிரிவினர் மதீனாவாசிகளிடம் பின்வருமாறு கூறியதை நினைவுகூர்வீராக: “யஸ்ரிப்வாசிகளே! (இஸ்லாத்திற்கு முன் மதீனாவின் பெயர்) அகழிக்கு அருகில் ஸல்உ என்ற மலையில் நீங்கள் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே உங்களின் இல்லங்களுக்கு திரும்பிச் செல்லுங்கள்.” அவர்களில் ஒரு பிரிவினர் தூதரிடம், தங்களின் வீடுகள் எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம் என்று கூறி தங்களின் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல அனுமதி கோரினார்கள். அவர்கள் கூறியவாறு அவர்களுடைய வீடுகள் எதிரிகளுக்காக திறந்திருக்கவில்லை. நிச்சயமாக இவ்வாறு பொய்யான சாக்குப்போக்குக் கூறி அவர்கள் எதிரிகளிடமிருந்து தப்பிச் செல்ல விரும்புகிறார்கள்.

Ahzab 33:14

எதிரிகள் அனைத்து திசைகளிலிருந்தும் மதீனாவில் நுழைந்து அல்லாஹ்வை நிராகரிப்பதன் பக்கமும் அவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குவதன் பக்கமும் திரும்பிவிடுமாறு அவர்களிடம் கூறினால் அதனைச் செய்துவிடுவார்கள். குறைவானவர்களைத் தவிர எவரும் மதம் மாறி நிராகரிப்பை நோக்கி மீண்டு செல்லாமல் இருக்கமாட்டார்கள்.

Ahzab 33:15

இந்த நயவஞ்சகர்கள் உஹதுப் போரில் பின்வாங்கி ஓடிய பிறகு, இனி நாங்கள் எதிரிகளுடன் போரிட்டால் உறுதியாக நின்று போர் புரிவோம். ஒருபோதும் பயந்து பின்வாங்கி ஓடிவிட மாட்டோம் என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி அளித்தார்கள். ஆயினும் அவர்கள் வாக்குறுதியை மீறினார்கள். அடியான் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதி குறித்து கேட்கப்படக்கூடியவனாக இருக்கின்றான். அது குறித்து அவன் விசாரணை செய்யப்படுவான்.

Ahzab 33:16

தூதரே!- நீர் இவர்களிடம் கூறுவீராக: “மரணத்திற்கு அஞ்சியோ, கொல்லப்படுவோம் என்றோ நீங்கள் போரிலிருந்து பின்வாங்கி ஓடுவது உங்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது. ஏனெனில் தவணைகள் முன்னரே நிர்ணயிக்கப்பட்டு விட்டன. உங்கள் நேரம் வராததனால் நீங்கள் பின்வாங்கி ஓடிவிட்டால் அதற்குப்பிறகு குறைவான காலமே அன்றி நிச்சயமாக உங்களால் வாழ்க்கையில் அனுபவிக்க முடியாது.”

Ahzab 33:17

தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் வெறுக்கும் மரணத்தை, கொலையை அல்லாஹ் அளிக்க நாடினால் யார்தான் அவனிடமிருந்து உங்களைக் காப்பாற்ற முடியும்? அல்லது நீங்கள் விரும்பும் பாதுகாப்பையும் நலனையும் அவன் உங்களுக்கு அளிக்க நாடினால் யாராலும் அதனை விட்டும் உங்களைத் தடுக்க முடியாது.” இந்த நயவஞ்சகர்களுக்கு அல்லாஹ்வைத் தவிர தங்களது விடயங்களை பொறுப்பெடுக்கும் பொறுப்பாளனையோ அவனுடைய வேதனையிலிருந்து காப்பாற்றும் உதவியாளனையோ பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.

Ahzab 33:18

அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து போர் புரிவதை விட்டும் மற்றவர்களைத் தடுப்பவர்களையும் தங்களின் சகோதரர்களிடம், “எங்களின்பால் வந்து விடுங்கள். அவருடன் சேர்ந்து போர்புரிந்து கொல்லப்பட்டு விடாதீர்கள். நீங்கள் கொல்லப்பட்டு விடுவீர்கள் என நாங்கள் அஞ்சுகிறோம்” என்று கூறுபவர்களையும் அல்லாஹ் அறிவான். பின்வாங்கச் செய்யும் இவர்கள் மிக அரிதாகவே போரில் பங்கு கொள்கிறார்கள். அதுவும் தங்களுக்கு ஏற்படும் இழிவை தடுப்பதற்காக. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்வதற்காக அல்ல.

Ahzab 33:19

நம்பிக்கையாளர்கள் கூட்டமே!- அவர்கள் உங்களின் விஷயத்தில் கஞ்சர்களாக இருக்கிறார்கள். தங்களின் செல்வங்களால் உங்களுக்கு உதவுவதில்லை. தமது உயிர்களில் ஆசை உள்ளவர்கள். எனவே உங்களுடன் சேர்ந்து போரிடுவதில்லை. நேசத்திலும் அவர்கள் கஞ்சர்கள். அதனால்தான் உங்களை அவர்கள் நேசிப்பதுமில்லை. -தூதரே!- எதிரிகளை சந்திக்கும் போது பயம் ஏற்பட்டால் மரண வேதனையில் சிக்குண்டு கிடப்பவன் பார்ப்பதைப்போல கோழைத்தனத்தினால் அவர்களின் விழிகள் பிதுங்குவதை நீர் காணலாம். அச்சம் நீங்கி அமைதி ஏற்பட்டுவிட்டால் போர்ச் செல்வங்களைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கூரான வார்த்தைகளை நாவினால் கூறி உங்களுக்குத் தொல்லை தருகிறார்கள். இந்த பண்புகளை உடையவர்கள் உண்மையில் நம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களின் கூலியை வீணாக்கிவிட்டான். இவ்வாறு வீணாக்குவது அல்லாஹ்வுக்கு மிக எளிதானது.

Ahzab 33:20

நபியவர்களுடனும் நம்பிக்கையாளர்களுடனும் போரிடத் திரண்டிருக்கும் படைகள் நிச்சயமாக நம்பிக்கையாளர்களை அடியோடு அழிக்காமல் ஒருபோதும் செல்ல மாட்டார்கள் என்று இந்தக் கோழைகள் எண்ணிக் கொண்டுள்ளனர். ஒருவேளை மீண்டும் படைகள் வந்துவிட்டால் மதீனாவில் இருந்து வெளியேறி நாட்டுப்புற அரபிகளுடன் சேர்ந்து உங்கள் எதிரிகள் உங்களுடன் போர்செய்த பின் என்ன நடந்தது என உங்கள் செய்திகளை அறிய விரும்புவார்கள். -நம்பிக்கையாளர்களே!- அவர்கள் உங்களுடன் இருந்தாலும் பெரிதாகப் போரிடப் போவதில்லை. எனவே அவர்களைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்களுக்காக வருத்தப்படாதீர்கள்.

Ahzab 33:21

அல்லாஹ்வின் தூதர் சொன்ன, செய்த அனைத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது. அவர் போரில் நேரிடையாக பங்கு பெற்றுள்ளார். அதன் பின்னரும் நீங்கள் அவரது உயிரைவிட உங்களின் உயிர்களை பெரிதாக எண்ணுகிறீர்களா? அல்லாஹ் வழங்கும் கூலியிலும் அவனது அருளிலும் மறுமையின் மீதும் ஆதரவு வைத்து அதற்காக செயல்பட்டு அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறக்கூடியவர்கள்தாம் அல்லாஹ்வின் தூதரை முன்மாதிரியாக ஏற்றுக் கொள்கிறார்கள். மறுமையை நம்பாமல், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூறாமல் இருப்பவர்கள் அல்லாஹ்வின் தூதரை முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

Ahzab 33:22

நம்பிக்கையாளர்கள் ஒன்றுதிரண்டு வந்த படைகளைக் கண்டபோது கூறினார்கள்: “இந்த சோதனைகளும் உதவியும்தான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தவை. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள். அதுவே நிகழ்ந்துள்ளது. படைகளைக் கண்ணால் கண்ட அவர்களின் அல்லாஹ் மீதான நம்பிக்கையும் கீழ்ப்படிதலும் இன்னும் அதிகமாகியது.

Ahzab 33:23

நம்பிக்கையாளர்களில், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதில் உறுதியாகவும் பொறுமையாகவும் இருப்பதாக தாம் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றியோரும் உண்டு. அவர்களில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் இறந்து விட்டார்கள் அல்லது கொல்லப்பட்டு விட்டார்கள். சிலர் அவனுடைய பாதையில் வீரமரணம் அடைவதற்காக காத்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கையாளர்கள் நயவஞ்சகர்கள் தங்களின் வாக்குறுதிகளில் செய்ததை போல அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிக்கு மாறுசெய்வதில்லை.

Ahzab 33:24

இது தாங்கள் அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றிய உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்கும் ஒப்பந்தங்களை நிறைவேற்றியமைக்கும் அல்லாஹ் கூலி வழங்க வேண்டும் என்பதற்காகவும் வாக்குறுதியை முறித்த நயவஞ்சகர்களுக்கு அவன் நாடினால் தவ்பா செய்ய முன் நிராகரிப்பிலே மரணிக்கச் செய்து தண்டனை வழங்க வேண்டும் அல்லது அவர்களுக்கு பாவமன்னிப்புக்கோரும் பாக்கியத்தை அளித்து அவர்களை மன்னித்துவிட வேண்டும் என்பதற்காகவும்தான். தன் பாவங்களிலிருந்து மன்னிப்புக் கோரக்கூடியவர்களை அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

Ahzab 33:25

குரைஷிகள், கத்பான், அவர்களுடனிருந்த ஏனையவர்களை துக்கத்துடனும் கவலையுடனும் அல்லாஹ் திருப்பி அனுப்பிவிட்டான். ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்தது அவர்களுக்குத் தவறிவிட்டது. நம்பிக்கையாளர்களை அடியோடு அழித்துவிட வேண்டும் என்ற தம் நோக்கத்தில் அவர்கள் வெற்றி பெறவில்லை. அல்லாஹ் அனுப்பிய காற்றின் மூலமும் இறக்கிய வானவர்கள் மூலமும் அவர்களுடன் நம்பிக்கையாளர்கள் போரிடுவதை அல்லாஹ் தேவையற்றதாக்கி அவனே அதற்குப் போதுமாகிவிட்டான். அவன் சக்திவாய்ந்தவனாகவும் அவனுடன் யார் மோதினாலும் அவனை மிகைப்பவனாகவும் இருக்கின்றான்.

Ahzab 33:26

எதிரிகளுக்கு உதவிசெய்த யூதர்களை, எதிரிகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொண்டிருந்த அவர்களின் கோட்டைகளிலிருந்து வெளியேறச் செய்தான். அவர்களின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்தினான். -நம்பிக்கையாளர்களே!- அவர்களில் ஒரு பிரிவினரை நீங்கள் கொலை செய்தீர்கள். ஒரு பிரிவினரைக் கைது செய்தீர்கள்.

Ahzab 33:27

அல்லாஹ் அவர்களை அழித்த பிறகு அவர்களின் பேரீச்சமரங்கள் பயிர்களுள்ள அவர்களின் நிலத்தையும், வீடுகளையும் இன்னபிற செல்வங்களையும் அவன் உங்களுக்குச் சொந்தமாக்கினான். நீங்கள் இதுவரை கால்வைக்காத கைபர் நிலத்தையும் அவன் உங்களுக்குச் சொந்தமாக்கினான். ஆயினும் நீங்கள் விரைவில் கால்வைப்பீர்கள். இது நம்பிக்கையாளர்களுக்கான வாக்குறுதியும் நற்செய்தியுமாகும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். எதுவும் அவனுக்கு இயலாதது அல்ல.

Ahzab 33:28

தூதரே! உமது மனைவிமாருக்கு தாராளமாகச் செலவளிப்பதற்கு உம்மிடம் வசதியில்லாத போது அதிகமாக செலவீனங்கள் வேண்டும் என அவர்கள் கேட்டால் நீர் கூறுவீராக: “நீங்கள் இவ்வுலகையும் அதன் அலங்காரத்தையும் விரும்பக்கூடியவர்களாக இருந்தால் என்னிடம் வாருங்கள், நான் விவகாரத்து அளிக்கப்பட்ட பெண்களுக்கு அளிக்க வேண்டியதை உங்களுக்கு அளித்து, பாதிப்பு, நோவினை அற்ற விதத்தில் உங்களுக்கு விவகாரத்து அளித்து விடுகிறேன்.

Ahzab 33:29

நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியையும் தூதரின் திருப்தியையும் மறுமையில் கிடைக்கக்கூடிய சுவனத்தையும் விரும்பக்கூடியவர்களாக இருந்தால் நீங்கள் இருக்கும் நிலையை சகித்துக் கொள்ளுங்கள். உங்களில் பொறுமையாக இருந்து நல்ல முறையில் வாழ்ந்து, சிறந்த முறையில் செயல்படுபவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் பெரும் கூலியை தயார்படுத்தி வைத்துள்ளான்.

Ahzab 33:30

தூதரின் மனைவியரே! உங்களில் யாரேனும் வெளிப்படையான பாவத்தைச் செய்தால் மறுமை நாளில் அவர்களுக்கு இருமடங்கு வேதனை உண்டு. இது அவர்களின் படித்தரம் மற்றும் தூதரின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் பொருட்டாகும். இவ்வாறு இரு மடங்கு வேதனை வழங்குவது அல்லாஹ்வுக்கு மிக எளிதானது.

Ahzab 33:31

உங்களில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தொடராக கட்டுப்பட்டு அவன் விரும்பக்கூடிய நற்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு நாம் மற்ற பெண்களுக்கு அளிப்பதைவிட இருமடங்கு கூலியை வழங்கிடுவோம். அவர்களுக்காக மறுமையில் சுவனம் என்னும் கண்ணியமான கூலியை நாம் தயார்படுத்தி வைத்துள்ளோம்.

Ahzab 33:32

தூதரின் மனைவியரே! நீங்கள் கண்ணியத்திலும் சிறப்பிலும் மற்ற பெண்களைப் போன்றவர்கள் அல்ல. நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சினால் மற்றவர்களால் அடைய முடியாத சிறப்பையும் அந்தஸ்தையும் அடைந்துகொள்வீர்கள். நீங்கள் அந்நிய ஆண்களுடன் உரையாடும்போது நளினமாக, குழைவாக உரையாடாதீர்கள். அதனால் உள்ளத்தில் நயவஞ்சக நோயும் தடுக்கப்பட்ட இச்சையும் உடையவன் ஆசை கொள்ளக்கூடும். தேவைக்கேற்ப சந்தேகத்தை உண்டுபண்ணாத பகடி அல்லாத தீர்க்கமான வார்த்தைகளைக் கூறுங்கள்.

Ahzab 33:33

உங்களின் வீடுகளில் தங்கியிருங்கள். தேவையின்றி வெளியில் செல்லாதீர்கள். இஸ்லாத்திய முந்தைய அறியாமைக்கால பெண்கள் ஆண்களைக் கவருவதற்காக தங்களின் அழகை வெளிப்படுத்தி செய்து கொண்டிருந்தது போன்று உங்களின் அழகை வெளிப்படுத்தாதீர்கள். தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுங்கள். உங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்கிவிடுங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். அல்லாஹ்வின் தூதரின் மனைவியரே! தூதரின் குடும்பத்தினரே! அல்லாஹ் உங்களைவிட்டும் தொல்லைகளையும் தீங்குகளையும் போக்க விரும்புகிறான். அவன் உங்களுக்கு நற்பண்புகளை அளித்து உங்களிடமிருந்து தீய பண்புகளைப் போக்கி உங்கள் உள்ளங்களை எந்த அழுக்கும் எஞ்சியிருக்காத வகையில் பூரணமாக தூய்மைப்படுத்த விரும்புகிறான்.

Ahzab 33:34

உங்களின் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும் தூதரின் பொன்மொழிகளையும் நினைவில் வையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுடன் மென்மையாளனாக இருக்கின்றான். எனவேதான் உங்கள் மீது அருள் புரிந்து உங்களைத் தூதரின் குடும்பத்தினராக ஆக்கியுள்ளான். உங்களைத் தூதருக்கு மனைவியராக, அவரது சமூகத்தின் அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் அன்னையராக தேர்ந்தெடுத்தபோது உங்களைக்குறித்து நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Ahzab 33:35

நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் ஆண்களும் பெண்களும், அவன் மீது நம்பிக்கைகொண்ட ஆண்களும் பெண்களும், அவனுக்குக் கட்டுப்படக்கூடிய ஆண்களும் பெண்களும், தங்களின் நம்பிக்கையிலும் சொல்லிலும் வாய்மையான ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதிலும் பாவங்களைவிட்டுத் தவிர்ந்திருப்பதிலும் சோதனையிலும் பொறுமையைக் கடைப்பிடித்த ஆண்களும் பெண்களும், தங்களின் செல்வங்களை கடமையாக்கப்பட்ட தர்மமாகவோ, உபரியான தர்மமாகவோ செலவுசெய்யும் ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், தங்களின் வெட்கஸ்த்தலங்களை பார்க்க முடியாதவர்களுக்கு முன்னால் வெளிப்படாமல் மறைத்து பாதுகாத்துக் கொள்ளும், மானக்கேடான விபச்சாரம், அதன் ஆரம்ப செயற்பாடுகளை விட்டும் தூரமாகும் ஆண்களும் பெண்களும், உள்ளத்தாலும் நாவாலும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூரும் ஆண்களும் பெண்களும், இவர்களுக்காக அல்லாஹ் பாவங்களிலிருந்து மன்னிப்பையும் மறுமை நாளில் சுவனம் என்னும் பெரும் கூலியையும் தயார்படுத்தி வைத்துள்ளான்.

Ahzab 33:36

அல்லாஹ்வும் தூதரும் அவர்களின் விஷயத்தில் ஒரு தீர்ப்பளித்துவிட்டால் நம்பிக்கைகொண்ட எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பதா, மறுப்பதா என சுயமுடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை. அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் மாறுசெய்பவர் நேரான வழியைவிட்டும் தெளிவான வழிகேட்டில் வீழ்ந்துவிட்டார்.

Ahzab 33:37

யாருக்கு அல்லாஹ் இஸ்லாம் என்னும் அருட்கொடையைக் கொண்டு அருள்புரிந்தானோ, யாரை நீர் விடுதலை செய்து அவருக்கு அருள்புரிந்தீர்களோ -அவர் ஸைத் இப்னு ஹாரிஸா தம் மனைவி ஸைனப் பின்த் ஜஹ்ஷை விவாகரத்து செய்வது குறித்து உம்மிடம் ஆலோசனை செய்தபோது- நீர் அவரிடம் கூறினீர்: “உனது மனைவியை விவாகரத்துச் செய்யாமல் வைத்துக்கொள், அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக்கொள்.” -தூதரே!- ஸைனபை மணந்துகொள்ளுமாறு அல்லாஹ் உமக்கு அறிவித்ததை நீர் மக்களுக்குப் பயந்து உம் மனதில் மறைத்துக்கொண்டீர். ஸைத்தின் விவாகரத்தையும் பின்பு அந்தப் பெண்ணை நீர் திருமணம் செய்வதையும் அல்லாஹ் வெளிப்படுத்துவான். இவ்விடயத்தில் அல்லாஹ்வே அஞ்சுவதற்குத் தகுதியானவன். ஸைத் மனமுவந்து அவளை விரும்பாமல் விவாகரத்து செய்த போது நாம் அவளை உமக்கு மணமுடித்துத் தந்தோம். இது ஏனெனில் நம்பிக்கையாளர்கள் தங்களின் வளர்ப்பு மகன்களின் மனைவியரை அவர்கள் விவாகரத்து செய்து அந்த மனைவியர் தங்களின் தவணையை (இத்தா) நிறைவுசெய்துவிட்டால் மணமுடித்துக்கொள்வதில் எவ்வித சங்கடமும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான். நிச்சயமாக அல்லாஹ்வின் கட்டளை நிறைவேறியே தீரும். அதற்கு எந்த தடையும் இல்லை.

Ahzab 33:38

அல்லாஹ் அனுமதித்த வளர்ப்புப் பிள்ளையின் மனைவியை திருமணம் செய்வதில் தூதர் மீது எந்தக் குற்றமும், மன நெருக்கடியும் இல்லை. அவர் இந்த விஷயத்தில் முந்தைய நபிமார்களின் வழிமுறையைத்தான் பின்பற்றுகிறார். அவர் அதில் தூதர்களில் புதுமையானவர் அல்ல. அல்லாஹ் விதித்தது - இந்த திருணமத்தை நடத்தி வைப்பது, வளர்ப்பு மகன்களை சொந்த மகன்களாக ஆக்குவதை தடைசெய்வது இவற்றில் நபிக்கு எந்தவித ஆலோசனைக்கும், தெரிவுக்கும் இடமில்லை- நிறைவேறியே தீரும். அதனை யாராலும் தடுக்க முடியாது.

Ahzab 33:39

அல்லாஹ் தங்களின் மீது இறக்கிய தூதுப் பணியை தங்களின் சமூகங்களுக்கு எடுத்துரைத்து, அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாத இந்தத் தூதர்கள் அல்லாஹ் அனுமதித்தவற்றைச் செய்யும்போது மற்றவர்கள் கூறுவதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. அடியார்களின் செயல்களைக் கண்காணித்து அவற்றிற்கேற்ப கூலி வழங்குவதற்கு அல்லாஹ்வே போதுமானவன். அவை நன்மையானதாக இருந்தால் நன்மையே கிடைக்கும். அது தீயவையாக இருந்தால் தீமையே கிடைக்கும்.

Ahzab 33:40

முஹம்மது உங்களுடைய ஆண்களில் யாருக்கும் தந்தை இல்லை. அவர் ஸைத்தால் விவகாரத்துசெய்யப்பட்ட பெண்ணை மணமுடித்துக் கொள்ளாமல் இருப்பதற்கு அவர் ஸைத்தின் தந்தை அல்ல. மாறாக அவர் மனிதர்களின்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராகவும் தூதர்களில் இறுதியானவராகவும் இருக்கின்றார். இனி அவருக்குப் பின் எந்த நபியும் வர மாட்டார்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். அடியார்களின் எந்த விஷயமும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

Ahzab 33:41

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்கள் உள்ளத்தாலும் நாவாலும் உடல் உறுப்புக்களினாலும் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூருங்கள்.

Ahzab 33:42

சிறந்த நேரமான காலையிலும் மாலையிலும் (சுபஹானல்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறுவதன் மூலம் அவனது தூய்மையைப் பறைசாற்றுங்கள்.

Ahzab 33:43

உங்களை நிராகரிப்பின் இருள்களிலிருந்து ஈமானுடைய ஒளியின்பால் கொண்டு வருவதற்காக அவன் உங்கள் மீது அன்பு காட்டுகிறான். உங்களைப் புகழ்ந்து பேசுகிறான். அவனுடைய வானவர்களும் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். அவன் நம்பிக்கையாளர்களுடன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். அவர்கள் அவனுக்கு வழிப்பட்டு அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகினால் அவன் அவர்களைத் தண்டிக்க மாட்டான்.

Ahzab 33:44

நம்பிக்கையாளர்கள் தங்கள் இறைவனை சந்திக்கும்போது “சாந்தி உண்டாகட்டும், எல்லா வகையான தீங்குகளிலிருந்தும் பாதுகாவல் கிடைக்கட்டும்” என்பதுதான் அவர்களின் முகமனாக இருக்கும். அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டதற்கும் பாவங்களிலிருந்து விலகியிருந்ததற்கும் கூலியாக அவன் அவர்களுக்கு -சுவனம் என்னும்- கண்ணியமான கூலியை தயார்படுத்தி வைத்துள்ளான்.

Ahzab 33:45

தூதரே! மனிதர்களை நோக்கி உம்மிடம் அனுப்பிவைக்கப்பட்ட தூதை நீர் எடுத்துரைத்தீர் என அவர்களின் மீது சாட்சி கூறுபவராகவும் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் சுவனத்தை தயார்படுத்தி வைத்துள்ளான் என்று நற்செய்தி கூறக்கூடியவராகவும் நிராகரிப்பாளர்களுக்கு அவன் வேதனையைத் தயார்படுத்தி வைத்துள்ளான் என்று எச்சரிக்கை செய்யக்கூடியவராகவும் நாம் உம்மை அனுப்பியுள்ளோம்.

Ahzab 33:46

அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியன். அவனுடைய கட்டளைக்கு அடிபணிய வேண்டும் என்பதன்பால் அழைக்கும் அழைப்பாளராகவும் நேர்வழி பெற விரும்புவோர் நேர்வழிபெறுவதற்காக ஒளிவீசும் விளக்காகவும் நாம் உம்மை அனுப்பியுள்ளோம்.

Ahzab 33:47

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்ட நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து இவ்வுலகில் உதவியையும் மறுமையில் வெற்றிபெற்று சுவனம் நுழைதல் என்பதை உள்ளடக்கிய பெரும் அருட்கொடை உண்டு என்னும் நற்செய்தியைக் கூறுவீராக.

Ahzab 33:48

நயவஞ்சகர்களும் நிராகரிப்பாளர்களும் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் தடுக்கும் அழைப்பில் அவர்களுக்குக் கட்டுப்படாதீர். அவர்களைப் புறக்கணித்துவிடுவீராக. நீர் கொண்டுவந்ததன் மீது அவர்கள் நம்பிக்கைகொள்வதற்கு இதுவே சிறந்த அழைப்பாக அமையலாம். உமது எதிரிகளுக்கெதிராக உதவுதல் உட்பட உம்முடைய எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக. இம்மையிலும், மறுமையிலும் அடியார்கள் தங்களின் எல்லா விவகாரங்களிலும் சார்ந்து இருக்கும் போது அவர்களை பொறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன்.

Ahzab 33:49

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! நீங்கள் நம்பிக்கைகொண்ட பெண்களுடன் திருமண ஒப்பந்தம் செய்து பின்னர் அவர்களுடன் உறவு கொள்ளாமலேயே அவர்களை விவாகரத்து செய்துவிட்டால் அவர்கள் மாதம் அல்லது மாதவிடாய் என இத்தா காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுடன் உறவு கொள்ளாததால் அவர்களின் கருவறையில் எதுவும் இல்லை என்பது தெளிவாகிவிட்டதால் அவ்வாறு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. விவாகரத்தால் காயம்பட்ட அவர்களின் உள்ளத்திற்கு ஆறுதலாக உங்களின் வசதிக்கேற்ப செல்வங்களை அளியுங்கள். அவர்களுக்குத் தொல்லையளிக்காமல் நல்லமுறையில் அவர்களது வழியில் செல்வதற்கு விட்டுவிடுங்கள்.

Ahzab 33:50

தூதரே! நீர் மணக்கொடை அளித்து மணமுடித்துக்கொண்ட உம் மனைவியரை உமக்கு ஆகுமாக்கியுள்ளோம். அல்லாஹ் உமக்கு போரில் அளித்து நீ சொந்தமாக்கிக் கொண்ட அடிமைப் பெண்களையும் உமக்கு அனுமதித்துள்ளோம். உம்முடன் மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த உம் தந்தையின் சகோதர சகோதரிகளின் மகள்கள், உம் தாயின் சகோதர சகோதரிகளின் மகள்கள் ஆகியோரையும் நாம் உமக்கு அனுமதித்துள்ளோம். தன்னைத் தூதருக்கு அன்பளிப்புச் செய்த நம்பிக்கைகொண்ட பெண்ணையும் தூதர் விரும்பினால் மணக்கொடையின்றி திருமணம் செய்துகொள்ளலாம். தன்னை அன்பளிப்புச் செய்த பெண்ணைத் திருமணம் செய்யும் இச்சலுகை உமக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இது அனுமதிக்கப்பட்டதல்ல. அவர்களுக்கு நான்கு மனைவியரை விட கூடுதலாக மணமுடித்துக்கொள்ளமுடியாது என நாம் அவர்களின் மனைவிமார் விஷயத்தில் அவர்கள் மீது கடமையாக்கியதையும் அடிமைப்பெண்களில் எண்ணிக்கையின்றி தாம் விரும்பியவர்களை அனுபவிக்கலாம் என அவர்களின் அடிமைப் பெண்கள் விஷயத்தில் கடமையாக்கியதையும் நாம் அறிவோம். நாம் மற்றவர்களுக்கு அனுமதியளிக்காததை உமக்கு அனுமதியளித்தது உமக்கு எந்த சங்கடமும், கஷ்டமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

Ahzab 33:51

தூதரே!- நீர் உம் மனைவியரில் யாருடன் இரவு தங்குவதை ஒத்திப் போட விரும்புகிறீரோ அவருடன் இரவு தங்குவதை ஒத்திப்போடுவீராக. அவர்களில் யாருடன் இரவு தங்க விரும்புகிறீரோ அவருடன் இரவு தங்குவீராக. நீர் விலக்கி வைக்க விரும்பியவரை சேர்த்துக்கொண்டு அவருடன் இரவு தங்கினாலும் உம்மீது எந்தக் குற்றமும் இல்லை. இவ்வாறு வழங்கப்பட்ட அனுமதி உம் மனைவியர் கண்குளிர்ச்சி அடைவதற்கும் நீர் அவர்கள் அனைவருக்கும் வழங்கியதைக் கொண்டு அவர்கள் திருப்தியடையவதற்கும் ஏற்றதாகும். ஏனெனில் நீர் எந்தவொரு கடமையையும் விடவோ உரிமையைத் தடுத்து கஞ்சத்தனம் செய்யவோ இல்லை என்பதை அவர்கள் அறிந்தே உள்ளனர். -ஆண்களே!- உங்களின் உள்ளங்களிலுள்ளதை மனைவியரில் சிலரைவிட சிலரை நீங்கள் அதிகம் நேசிக்கிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். தன் அடியார்களின் செயல்களை அல்லாஹ் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் சகிப்புத்தன்மை உடையவனாக இருக்கின்றான். எனவேதான் அவர்கள் அவனிடம் திரும்பலாம் என்பதனால் அவர்களை உடனுக்குடன் அவன் தண்டித்துவிடமாட்டான்.

Ahzab 33:52

தூதரே! இனி உமது பாதுகாப்பில் இருக்கும் உம் மனைவியரைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மணமுடித்துக் கொள்வது உமக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. அவர்களுக்குப் பதிலாக வேறு பெண்களை மணந்துகொள்வதற்காக அவர்கள் அனைவரையுமோ அல்லது சிலரையோ விவாகரத்து செய்ய உமக்கு அனுமதியில்லை. நீர் மணமுடிக்க விரும்பும் மற்ற பெண்களின் அழகு உம்மைக் கவர்ந்தாலும் சரியே. ஆயினும் நீர் அடிமைப் பெண்களை குறித்த எண்ணிக்கை வரையறுக்காமல் வைத்துக் கொள்ளலாம். அல்லாஹ் ஒவ்வொன்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். இந்தக் கட்டளை நம்பிக்கையாளர்களுடைய அன்னையரின் சிறப்பைக் காட்டுகிறது. அதனால்தான் அவர்களை விவகாரத்து செய்யவோ அவர்களுடன் வேறு பெண்களை மணமுடித்துக் கொள்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Ahzab 33:53

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! நீங்கள் நபியின் வீட்டில் விருந்துக்காக அழைக்கப்பட்டு உள்ளே நுழைவதற்கு அனுமதித்தாலே தவிர அதில் நுழையவேண்டாம். அங்கு உணவு தயாராவதை எதிர்பார்த்துக்கொண்டு நீண்ட நேரம் அமர்ந்திருக்காதீர்கள். நீங்கள் உண்பதற்கு உள்ளே அழைக்கப்பட்டால் செல்லுங்கள். உண்டு முடித்தவுடன் திரும்பி விடுங்கள். அதன்பிறகு அங்கு ஒருவருக்கொருவர் பேச்சில் ஈடுபட்டவாறு தங்கியிருக்காதீர்கள். நிச்சயமாக இவ்வாறு தங்கியிருப்பது தூதருக்குத் தொல்லை தருகிறது. அவர் உங்களிடம் எழுந்து செல்லுமாறு கூறுவதற்கு வெட்கப்படுகின்றார். உண்மையைக் கூறுவதற்கு அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். அதனால்தான் அவருக்குத் தொல்லையளிக்கக் கூடாது என்பதற்காக எழுந்து செல்லுமாறு அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். தூதரின் மனைவியரிடம் நீங்கள் பாத்திரம் போன்ற ஏதேனும் தேவையானவற்றை வேண்டினால் திரைமறைவிற்கு அப்பால் நின்று அதனை வேண்டுங்கள். தூதருக்குள்ள மதிப்பினால் அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு நீங்கள் அவர்களைக் கண்டுவிடாமலிருக்க நேருக்கு நேர் அவர்களிடம் அதனை வேண்டாதீர்கள். திரைமறைவிற்கு அப்பால் நின்று வேண்டுவதுதான் உங்கள் உள்ளங்களுக்கும் அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானதாகும். அதனால் ஷைத்தான் உங்களின் உள்ளங்களிலோ அவர்களின் உள்ளங்களிலோ தவறான ஊசலாட்டத்தை ஏற்படுத்த, பாவங்களை அழகாக்கிக்காட்ட முடியாது. -நம்பிக்கையாளர்களே!- கதைப்பதற்காக தாமதித்து அல்லாஹ்வின் தூதருக்குத் தொல்லையளிப்பதும் அவரின் மரணத்தின் பின் அவரது மனைவிமாரைத் திருமணம் செய்வதும் உங்களுக்குத் தகுந்ததல்ல. ஏனெனில் அவர்கள் நம்பிக்கையாளர்களின் அன்னையர்களாவர். எவருக்கும் தம் அன்னையை மணமுடித்துக் கொள்வது அனுமதிக்கப்பட்டதன்று. நிச்சயமாக -அவரது மரணத்திற்குப் பிறகு நீங்கள் அவர்களில் யாரையேனும் மணமுடிப்பது போன்ற ஏதேனும் ஓர் வடிவத்தில்- அவரை நோவினை செய்வது தடைசெய்யப்பட்டதாகவும் அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமாகவும் இருக்கின்றது.

Ahzab 33:54

நிச்சயமாக நீங்கள் உங்களின் செயல்களில் எதையேனும் வெளிப்படுத்தினால் அல்லது அதனை மறைத்தால் அது அல்லாஹ்வை விட்டும் மறைவாக இருக்காது. திட்டமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். உங்களின் செயல்களிலும் ஏனையவற்றிலும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான். நலவுக்கு நன்மையும் தீங்குக்கு தீமையும் உண்டு.

Ahzab 33:55

அவர்களின் தந்தையர், பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரர்களின் பிள்ளைகள், சொந்த மற்றும் பால்குடி சகோதரிகளின் பிள்ளைகள், நம்பிக்கைகொண்ட பெண்கள், அவர்களின் அடிமைகள் ஆகியோர் அவர்களைப் பார்ப்பதும் திரைமறைவின்றி பேசுவதும் அவர்கள் மீது குற்றமாகாது. -நம்பிக்கைகொண்ட பெண்களே!- அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தி அவன் தடுத்தள்ளவைகளை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் உங்களிடமிருந்து வெளிப்படும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

Ahzab 33:56

நிச்சயமாக அல்லாஹ் தன் வானவர்களிடத்தில் தூதர் முஹம்மதை புகழ்கின்றான். அவனுடைய வானவர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்ட அடியார்களே! தூதரின் மீது ஸலவாத்தும் சலாமும் கூறுங்கள்.

Ahzab 33:57

தூதரைக் கண்ணியப்படுத்தும்படியும் அவர் மீது ஸலவாத் கூறும்படியும் கட்டளையிட்ட இறைவன் அவருக்குத் தொல்லை தருவதை தடைசெய்கிறான். அவன் கூறுகிறான்: நிச்சயமாக சொல்லாலோ, செயலாலோ அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தொல்லையளிப்பவர்களை இவ்வுலகிலும் மறுவுலகிலும் அல்லாஹ் தன் விசாலமான அருளை விட்டும் தூரமாக்கி விட்டான். தனது தூதருக்கு அவர்கள் தொல்லையளித்ததற்குக் கூலியாக மறுமையில் அவர்களுக்காக இழிவுமிக்க வேதனையைத் தயார்படுத்தி வைத்துள்ளான்.

Ahzab 33:58

நம்பிக்கைகொண்ட ஆண்களையும் பெண்களையும் துன்புறுத்துவதற்கு தகுந்த குற்றத்தை அவர்கள் செய்யாத போதும் அதனை செய்ததாக கூறி அவர்களை சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்துபவர்கள் வெளிப்படையான பாவத்தையும் பொய்யையும் சுமந்து கொண்டார்கள்.

Ahzab 33:59

தூதரே! நீர் உம் மனைவியரிடமும் மகள்களிடமும் நம்பிக்கைகொண்ட பெண்களிடமும் கூறுவீராக: “அந்நிய ஆண்களுக்கு முன்னால் தங்களின் மறைவிடங்கள் வெளிப்படாதவாறு தனது மேலாடையிலிருந்து ஒரு பகுதியை தம்மீது தொங்க விட்டுக்கொள்ளட்டும். அவர்கள் சுதந்திரமான பெண்கள் என அறியப்பட்டு அடிமைப் பெண்கள் தொல்லைக்குள்ளாகுவது போன்று தொல்லைக்குட்படாமல் இருக்க இதுவே சிறந்த வழிமுறையாகும். அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

Ahzab 33:60

நயவஞ்சகர்கள் இஸ்லாத்தை வெளிப்படுத்தி நிராகரிப்பை மறைக்கும் தங்களின் நயவஞ்சகத்தை விட்டும் தவிர்ந்துகொள்ளவில்லையெனில், உள்ளங்களில் மனோஇச்சையினால் பாவங்கள் உள்ளவர்களும், நம்பிக்கையாளர்களிடையே பிரிவினை ஏற்படுத்துவதற்காக மதீனாவில் பொய்யான வதந்திகளைப் பரப்புபவர்களும் விலகிக்கொள்ளவில்லையெனில் -தூதரே!- அவர்களைத் தண்டிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டு, அவர்களின் மீது உம்மைச் சாட்டிவிடுவோம். பின்னர் அவர்கள் உம்முடன் மதீனாவில் சிறிது காலமே வாழ்வார்கள். ஏனெனில் அவர்கள் பூமியில் குழப்பத்தை உண்டாக்குவதால் அவர்கள் அழிக்கப்படுவார்கள். அல்லது அங்கிருந்து விரட்டப்படுவார்கள்.

Ahzab 33:61

அவர்கள் அல்லாஹ்வின் அருளைவிட்டும் தூரமாக்கப்படுவார்கள். பூமியில் குழப்பத்தை பரப்புவதினாலும் நயவஞ்சகத்தினாலும் அவர்கள் எங்கு வசித்தாலும் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்படுவார்கள்.

Ahzab 33:62

இதுதான் நயவஞ்சர்களின் விஷயத்தில் நயவஞ்சகத்தை அவர்கள் வெளிப்படுத்தும் போது நடைபெற்று வருகின்ற அல்லாஹ்வின் வழிமுறையாகும். அல்லாஹ்வின் வழிமுறை உறுதியானதாகும். அதில் ஒருபோதும் எந்த மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.

Ahzab 33:63

தூதரே!- இணைவைப்பாளர்களும் யூதர்களும் மறுமையைக் குறித்து, அது எப்போது நிகழும் என்பதைக் குறித்து உம்மிடம் மறுத்து பொய்ப்பிக்கும் விதமாக கேட்கிறார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: “மறுமையைக் குறித்த அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. என்னிடம் அதைப் பற்றிய எந்த அறிவும் இல்லை.” -தூதரே!- நிச்சயமாக மறுமை நெருக்கமாக இருக்கலாம் என்பதை எது உமக்கு உணர்த்தியது?

Ahzab 33:64

நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை தன் அருளைவிட்டும் தூரமாக்கிவிட்டான். மறுமை நாளில் அவர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பைத் தயார்படுத்தி வைத்துள்ளான். அது அவர்களை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது.

Ahzab 33:65

அவர்களுக்காக தயார்படுத்தப்பட்ட அந்த நெருப்பில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். தங்களுக்குப் பயனளிக்கக்கூடிய பொறுப்பாளனையோ, அவர்களை விட்டும் தண்டனையை அகற்றும் உதவியாளனையோ அங்கு அவர்கள் பெறமாட்டார்கள்.

Ahzab 33:66

நரக நெருப்பில் அவர்களின் முகங்கள் புரட்டி எடுக்கப்படும் அந்நாளில் கடும் கைசேதத்துடன் அவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட கேடே! எங்களுக்கு வழங்கப்பட்ட உலக வாழ்க்கையில் நாங்கள் அல்லாஹ்வை வழிப்பட்டு அவனது கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி, தூதருக்கு வழிப்பட்டு, தூதர் தன் இறைவனிடம் இருந்து கொண்டு வந்ததைப் பின்பற்றியிருக்க வேண்டுமே!”

Ahzab 33:67

இவர்கள் பொய்யான ஆதாரத்தோடு வந்து கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்களின் தலைவர்களுக்கும் எமது சமூகத்தின் பெரியவர்களுக்கும் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை நேரான வழியைவிட்டும் நெறிபிறழச் செய்துவிட்டார்கள்.

Ahzab 33:68

எங்கள் இறைவா! எங்களை நேரான வழியைவிட்டும் நெறிபிறழச் செய்த எங்களின் இந்த தலைவர்களுக்கும் பெரியவர்களுக்கும் நம்மை வழிகெடுத்ததற்காக எங்களுக்கு வழங்கிய வேதனையில் இருமடங்கு வேதனையை அளிப்பாயாக. உன் அருளை விட்டும் அவர்களை நன்கு தூரமாக்கி விடுவாயாக.

Ahzab 33:69

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களின் தூதரைத் துன்புறுத்தி மூஸாவைத் துன்புறுத்தியவர்களைப் போல் ஆகிவிடவேண்டாம். அவர்கள் அவரது உடம்பில் குறை கூறினார்கள். அவர்கள் கூறியதிலிருந்து அல்லாஹ் அவரைத் தூய்மையாக்கிவிட்டான். அவர்கள் கூறியவற்றில் அவர் குறையற்றவர் என்பது அவர்களுக்கும் தெளிவானது. அவர் அல்லாஹ்விடத்தில் வேண்டுதல் மறுக்கப்படாத, முயற்சி வீணாக்கப்படாத அந்தஸ்த்துடையவராவார்.

Ahzab 33:70

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். உண்மையான, சரியான வார்த்தையையே கூறுங்கள்.

Ahzab 33:71

நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி, சரியான வார்த்தையைக் கூறினால் அவன் உங்களின் செயல்களைச் சீராக்குவான்; உங்களிடமிருந்து அவற்றை ஏற்றுக்கொள்வான்; உங்கள் பாவங்களைப் போக்கி, அவற்றின் காரணமாக உங்களைக் குற்றம்பிடிக்க மாட்டான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுபவர் மிகப் பெரும் வெற்றி பெற்றுவிட்டார். அதற்கு இணையான வேறு வெற்றி இல்லை. அது அல்லாஹ்வின் திருப்தியையும் சுவனத்தில் நுழையும் வெற்றியாகும்.

Ahzab 33:72

நிச்சயமாக நாம் வானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு முன்னால் மார்க்க பொறுப்புகளையும் பாதுகாக்கப்பட வேண்டிய செல்வங்களையும் இரகசியங்களையும் வைத்தபோது அவை அவற்றை ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டன. அதன் பின்விளைவைக் குறித்து அஞ்சின. ஆனால் மனிதன் அவற்றை ஏற்றுக் கொண்டான். நிச்சயமாக அவன் தனக்குத்தானே அநீதி இழைப்பவனாகவும் அதனைப் பொறுப்பேற்பதன் பின்விளைவைக் குறித்து அறியாதவனாகவும் இருக்கின்றான்.

Ahzab 33:73

அல்லாஹ் ஏற்படுத்திய விதிப்படி மனிதன் அவற்றை ஏற்றுக்கொண்டான். இது நயவஞ்சம் கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்களின் நயவஞ்சகத்தின் காரணமாகவும் இணைவைக்கும் ஆண்களையும் பெண்களையும் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்ததன் காரணமாக அல்லாஹ் தண்டிக்க வேண்டும் என்பதற்காகவும் நம்பிக்கைகொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை சிறந்த முறையில் நிறைவேற்றியதனால் மன்னிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

Sebe' 34:1

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. படைத்தல், அதிகாரம், திட்டமிடல் ஆகியவற்றில் வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அவனுக்கே உரியன. மறுமையிலும் புகழனைத்தும் அவனுக்கே உரியன. தான் படைத்த படைப்புகளில், தன் திட்டங்களில் அவன் ஞானம் மிக்கவன். அடியார்களின் நிலைகளை நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.

Sebe' 34:2

பூமியில் உட்செல்லும் நீர், தாவரம் அதிலிருந்து வெளிப்படும் தாவரம், அது போன்றவற்றையும், வானத்திலிருந்து இறங்கும் மழை, வானவர்கள், வாழ்வாதாரம் போன்றவற்றையும் வானத்தின் நோக்கி ஏறுகின்ற வானவர்கள் அடியார்களின் செயல்கள், அவர்களின் ஆன்மாக்கள் போன்றவற்றையும் அல்லாஹ் அறிகிறான். அவன் நம்பிக்கைகொண்ட தன் அடியார்களோடு மிகுந்த கருணையாளனாகவும் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் இருக்கின்றான்.

Sebe' 34:3

“மறுமை நாள் ஒரு போதும் ஏற்படாது” என்று அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக, அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் பொய்யெனக் கூறும் மறுமை ஏற்பட்டே தீரும். ஆயினும் அது ஏற்படும் சமயத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். அவன் மறைவாக உள்ள மறுமையையும் இன்னபிறவற்றையும் அறியக்கூடியவன். வானங்களிலோ, பூமியிலோ சிறு எறும்பின் அளவோ அல்லது மேலே கூறியதைவிட சிறியதோ, பெரியதோ எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அனைத்தும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் தெளிவான பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மறுமை வரை நிகழும் அனைத்தும் அதில் பதியப்பட்டுள்ளது.

Sebe' 34:4

நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்களுக்குக் கூலி வழங்குவதற்காக அல்லாஹ் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டில் உள்ளவைகளைப் பதிந்து வைத்துள்ளான். இந்த பண்புகளை உடையவர்களின் பாவங்களுக்கு அல்லாஹ்விடம் இருந்து மன்னிப்பு உண்டு. அவற்றின் காரணமாக அவர்களைத் தண்டிக்க மாட்டான். மறுமை நாளில் சுவனம் என்னும் கண்ணியமான பரிசும் அவர்களுக்கு உண்டு.

Sebe' 34:5

நாம் இறக்கிய வசனங்களைக் குறித்து “அவை சூனியம்” என்று கூறி அவற்றை அசத்தியமாக்க முயற்சி செய்பவர்களுக்கும், நம் தூதரைக் குறித்து “ஜோதிடர், சூனியக்காரர், கவிஞர்” என்று கூறும் இந்த பண்புகள் உடையவர்களுக்கு மறுமை நாளில் கடுமையான வேதனை உண்டு.

Sebe' 34:6

நபித்தோழர்களைச் சார்ந்த அறிஞர்களும் வேதக்கார அறிஞர்களில் நம்பிக்கைகொண்டவர்களும் அல்லாஹ் உம்மீது இறக்கியது சந்தேகமற்ற சத்தியம் என்பதற்கும் அது யாவற்றையும் மிகைத்த, இவ்வுலகிலும் மறுவுலகிலும் புகழுக்குரியவனின் பாதைக்கு வழிகாட்டுகிறது என்பதற்கும் சாட்சி கூறுகிறார்கள்.

Sebe' 34:7

அல்லாஹ்வை நிராகரிப்பவர்களில் சிலர் தூதர் கொண்டு வந்ததைக் குறித்து பரிகாசமாக அவர்களில் சிலரிடம் கூறுகிறார்கள்: ”நிச்சயமாக நீங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவீர்கள் என்று கூறும் ஒரு மனிதரைக் குறித்து நாங்கள் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?”

Sebe' 34:8

அவர்கள் கூறினார்கள்: “இந்த மனிதர் அல்லாஹ்வின் மீது புனைந்து பொய் கூறி நாம் மரணித்த பிறகு மீண்டும் எழுப்பப்படுவோம் என்று எண்ணுகிறாரா? அல்லது அர்த்தமற்ற விஷயங்களை உளறும் பைத்தியக்காரரா?” அவர்கள் எண்ணுவது போலல்ல விடயம். உண்மையில் முடிவு யாதெனில் மறுமையை நம்பாதவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனையிலும் இவ்வுலகில் சத்தியத்தைவிட்டு தூரமான வழிகேட்டிலும் இருப்பார்கள்.

Sebe' 34:9

மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இவர்கள் தங்களுக்கு முன்னாலுள்ள பூமியையும் பின்னாலுள்ள வானத்தையும் பார்க்கவில்லையா? நாம் நாடினால் பூமியில் அவர்களுடைய கால்களுக்கு கீழால் அவர்களை புதையச் செய்திடுவோம். வானத்திலிருந்து ஒரு பகுதியை அவர்கள் மீது விழச் செய்ய நாடினால் அவ்வாறு விழச் செய்திடுவோம். நிச்சயமாக இதில் கடுமையாக தன் இறைவனின்பால் திரும்பக்கூடிய ஒவ்வொரு அடியானுக்கும் அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கக்கூடிய உறுதியான சான்று இருக்கின்றது. இதற்கு ஆற்றலுடையவன் நீங்கள் மரணித்தபிறகு, உங்கள் உடல்கள் மண்ணோடு மண்ணான பிறகு உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பவும் ஆற்றலுடையவன்.

Sebe' 34:10

நாம் தாவூதுக்கு தூதுத்துவத்தையும் அரசாட்சியையும் வழங்கினோம். நாம் மலைகளிடம் கூறினோம்: “மலைகளே! தாவூதுடன் சேர்ந்து அல்லாஹ்வை துதிபாடுங்கள்.” இவ்வாறே பறவைகளுக்கும் கூறினோம். அவர் இரும்பிலிருந்து தான் விரும்பும் கருவிகளைச் செய்வதற்காக நாம் அதனை அவருக்கு மிருதுவாக்கிக் கொடுத்தோம்.

Sebe' 34:11

தாவூதே! எதிரிகளிடமிருந்து உமது போராளிகளைக் காக்கும் விசாலமான போர்க்கவசங்களைச் செய்வீராக. அதன் ஆணிகளை வளையங்களுக்குப் பொருத்தமாகச் செய்வீராக. எவ்வாறெனில் நன்கு உறுதியாக இருக்க முடியாதவாறு மெல்லியதாகவும் இன்றி அது நுழைய முடியாதவாறு கனமானதாகவும் இன்றி செய்வீராக. நற்செயல் புரிவீராக. நிச்சயமாக நீங்கள் செய்யக்கூடியதை நான் பார்ப்பவனாக இருக்கின்றேன். உங்களின் செயல்களில் எதுவும் என்னைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப நான் உங்களுக்குக் கூலி வழங்குவேன்.

Sebe' 34:12

தாவூதின் மகன் சுலைமானுக்கு நாம் காற்றை வசப்படுத்தித் கொடுத்தோம். அதனுடைய காலைப் பயணம் ஒரு மாதமாகவும் மாலைப் பயணம் ஒருமாதமாகவும் இருந்தது. அவர் செம்பிலிருந்து தாம் விரும்பியவற்றை செய்துகொள்வதற்காக அவருக்காக செம்பை ஊற்று போல் உருகி ஓடச் செய்தோம். தன் இறைவனின் கட்டளைப்படி அவரிடத்தில் வேலை செய்யக்கூடிய ஜின்களை நாம் அவருக்கு வசப்படுத்தித் கொடுத்தோம். நம் கட்டளையை நிறைவேற்றாத ஜின்களை நாம் கொழுந்து விட்டெரியும் நெருப்பால் வேதனை செய்வோம்.

Sebe' 34:13

இந்த ஜின்கள் சுலைமானுக்காக வேலை செய்தன. அவர் விரும்பிய பள்ளிவாயில்கள், கோட்டைகள், சிற்பங்கள், பெரிய நீர்த் தடாகங்களைப் போன்ற பாத்திரங்கள், அசைக்க முடியாதளவு பெரும் சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றைச் அவை செய்தன. நாம் அவர்களிடம் கூறினோம்: “-தாவூதின் குடும்பமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு செயல்படுங்கள். என் அடியார்களில் குறைவானவர்களே நான் அளித்த அருட்கொடைகளுக்காக நன்றி செலுத்துபவர்களாக உள்ளனர்.

Sebe' 34:14

நாம் அவருக்கு மரணத்தை விதித்தபோது அவர் சாய்ந்திருந்த கைத்தடியை அரித்துக்கொண்டிருந்த கரையானே அவர் இறந்துவிட்டார் என்பதை ஜின்களுக்கு அறிவித்தன. அவர் கீழே விழுந்த போது தாங்கள் மறைவானவற்றை அறியக்கூடியவர்கள் அல்ல என்பது ஜின்களுக்குத் தெளிவானது. ஏனெனில் அவை மறைவானதை அறிந்திருந்தால் சிரமமான வேதனையில் நீடித்திருக்க மாட்டார்கள். சுலைமான் உயிரோடு கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தில் அவருக்காக அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடினமான பணிகளே அந்த வேதனையாகும்.

Sebe' 34:15

அல்லாஹ் தாவூதுக்கும் அவரது மகன் சுலைமானுக்கும் புரிந்த அருட்கொடைகளைக் குறிப்பிட்ட பிறகு ஸபாவாசிகள் மீது பொழிந்த அருட்கொடைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறான். தாவூதும் சுலைமானும் தங்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள். ஸபஃ வாசிகளோ நன்றிகெட்டத்தனமாக நடந்து கொண்டார்கள். அவன் கூறுகிறான்: ஸபஃ குலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் வாழ்ந்த வசிப்பிடங்களில் அல்லாஹ்வின் வல்லமை மற்றும் அவர்கள் மீது அவனது அருள் ஆகியவற்றுக்கான தெளிவான சான்று இருந்தது. அது வலது புறமும் இடது புறமும் அமைந்த இரு தோட்டங்களாகும். நாம் அவர்களிடம் கூறினோம்: “உங்கள் இறைவனின் உணவை உண்ணுங்கள். அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள். இது செழிப்பான ஊராகும். இந்த அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களின் பாவங்களை மன்னிப்பவன் ஆவான்.

Sebe' 34:16

அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாமல் அவனுடைய தூதர்களின் மீது நம்பிக்கைகொள்ளாமல் புறக்கணித்தார்கள். எனவே நாம் அருட்கொடைகளுக்குப் பகரமாக அவர்களுக்கு சோதனைகளைத் தண்டனையாக வழங்கினோம். அவர்கள் மீது அணையை உடைத்து வயல்களை மூழ்கடிக்கக்கூடிய பெருவெள்ளத்தை அனுப்பினோம். அவர்களின் இரு தோட்டங்களையும் கசப்பான பழங்களைத் தரக்கூடிய தோட்டங்களாக ஆக்கினோம். அவற்றில் பழம்தராத சவுக்கு மரங்களும் சிறிதளவு இலந்தை மரங்களும் இருந்தன.

Sebe' 34:17

அவர்கள் அனுபவித்துக்கொண்டிருந்த அருட்கொடைகளுக்கு நிகழ்ந்த இந்த மாற்றம் அவர்களின் நிராகரிப்பினாலும் நன்றி செலுத்தாமல் புறக்கணித்ததன் காரணத்தினாலும் ஏற்பட்ட விளைவாகும். நம் அருட்கொடைகளை மறுத்து அவனை நிராகரிப்போருக்கே இவ்வாறு கடுமையான வேதனைகளை வழங்குகின்றோம்.

Sebe' 34:18

யமனில் ஸபஃ வாசிகளுக்கும் நாம் அருள்செய்த ஷாம் தேசத்து ஊர்களுக்கும் மத்தியில் அருகருகே பல ஊர்களை ஏற்படுத்தினோம். அவர்கள் ஷாம் தேசத்தை அடையும் வரை ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு சிரமமின்றி செல்லும் வகையில் நாம் அவற்றுக்கிடையிலான பயண தூரத்தையும் நிர்ணயித்தோம். . நாம் அவர்களிடம் கூறினோம்: “நீங்கள் விரும்பியவாறு இரவிலோ அல்லது பகலிலோ எதிரிகளிடமிருந்தும் பசி மற்றும் தாகத்திலிருந்தும் அச்சமற்றவர்களாக செல்லுங்கள்.

Sebe' 34:19

தூரம் குறைக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்தாமல் கர்வம் கொண்டார்கள். அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவா! நாங்கள் பயணக் களைப்பை அனுபவிப்பதற்காக இந்த ஊர்களையெல்லாம் நீக்கி எங்கள் பயணங்களுக்கிடையே தூரத்தை ஏற்படுத்துவாயாக. (அதனால்) எங்களின் பயணக் கூட்டத்தின் சிறப்பும் வெளிப்படும். ” அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தாமல் கர்வம்கொண்டு, அவர்களிலுள்ள ஏழைகளின் மீது பொறாமைகொண்டு தங்களுக்குத் தாங்களே அவர்கள் அநீதி இழைத்துக் கொண்டார்கள். நாம் அவர்களை அவர்களுக்குப் பின்னால் வரக்கூடியவர்கள் பேசக்கூடிய படிப்பினைகளாக ஆக்கி விட்டோம். அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு அவர்களை பல ஊர்களாக பிரித்துவிட்டோம். நிச்சயமாக மேலேகூறப்பட்ட இந்த -ஸபஃவாசிகளுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளிலும் பின்பு அவர்களின் நிராகரிப்புக்கும் கர்வத்திற்கும் வழங்கப்பட்ட தண்டனையிலும்-, அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிதல், பாவத்தைத் தவிர்த்தல், சோதனை என்பவற்றில் பொறுமையைக் கடைப்பிடிக்கக்கூடிய, அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தக்கூடிய ஒவ்வொருவருக்கும் படிப்பினை இருக்கின்றது.

Sebe' 34:20

நிச்சயமாக அவர்களை சத்தியத்தை விட்டும் வழிகெடுக்கலாம் என இப்லீஸ் எண்ணியதை அவர்களில் நிரூபித்துக் காட்டினான். எனவே நம்பிக்கையாளர்களில் ஒரு பிரிவினரைத் தவிர மற்றவர்கள் நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் அவனைப் பின்பற்றினார்கள். திட்டமாக அவர்கள் அவனைப் பின்பற்றாது அவனது எதிர்பார்ப்பைக் குலைத்துவிட்டனர்.

Sebe' 34:21

அவர்களை வழிகேட்டில் நிர்ப்பந்திக்கும் அளவுக்கு இப்லீஸ் அவர்கள் மீது ஆதிக்கம் பெற்றிருக்கவில்லை. நிச்சயமாக அவனால் முடிந்ததெல்லாம் அலங்கரித்துக் காட்டுவதும் வழிகெடுப்பதும்தான். அவர்களை வழிகெடுக்க அவனுக்கு நாம் அனுமதியளித்தாலே தவிர. மறுமை மற்றும் அதில் கூலி வழங்கல் என்பவற்றை உண்மையாகவே நம்பிக்கைகொண்டவர்கள் யார்? அதில் சந்தேகிப்பவர்கள் யார்? என்ற விடயம் வெளிவருவதற்காக இவ்வாறு நாம் அனுமதிக்கின்றோம். -தூதரே!- உம் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். அவன் அடியார்களின் செயல்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவற்றிற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குகிறான்.

Sebe' 34:22

தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர நிச்சயமாக உங்களின் தெய்வங்களாக நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தவற்றை உங்களுக்கு பலன்களை கொண்டு வரவோ உங்களை விட்டும் தீங்கினை அகற்றவோ அழையுங்கள். அவை வானங்களிலும் பூமியிலும் கடுகளவுக்குக் கூட உரிமையாளர்களல்ல. அதில் அந்த தெய்வங்களுக்கு அல்லாஹ்வுடன் எந்தப் பங்கும் இல்லை. அல்லாஹ்வுக்கு உதவி செய்யும் எந்த உதவியாளரும் இல்லை. பங்காளிகள் மற்றும் உதவியாளர்களை விட்டும் அவன் தேவையற்றவன்.

Sebe' 34:23

அல்லாஹ் யாருக்கு அனுமதியளித்தானோ அவர்களைத் தவிர மற்றவர்களின் பரிந்துரைகள் அவனிடம் எந்தப் பயனையும் அளிக்காது. தனது மகத்துவத்தின் காரணமாக அவன் யாரைக் குறித்து திருப்தியடைந்தானோ அவருக்குத்தான் பரிந்துரை செய்ய அனுமதியளிப்பான். அவனது மகத்துவத்தின் காரணத்தினால் நிச்சயமாக அவன் வானத்தில் பேசினால் வானவர்கள் அவனுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டவர்களாக தங்கள் இறக்கைகளை அடித்துக் கொள்கிறார்கள். அவர்களின் உள்ளங்களிலிருந்து பதற்றம் நீங்கிய பிறகு “உங்களின் இறைவன் என்ன கூறினான்?” என்று வானவர்கள் ஜிப்ரீலிடம் கேட்கிறார்கள். அதற்கு ஜிப்ரீல் “அவன் உண்மையையே கூறினான். உள்ளமையிலும் அடக்கியாள்வதிலும் அவன் மிக உயர்ந்தவனாகவும் மிகப் பெரியவனாகவும் இருக்கின்றான். ஏனைய அனைத்தும் அவனை விடச் சிறியன. என்று கூறுவார்.

Sebe' 34:24

தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “வானத்திலிருந்து மழையை இறக்கியும் பூமியிலிருந்து தாவரங்களையும் பழங்களையும் விளையச் செய்தல் போன்ற இன்னோரன்னவற்றின் மூலம் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பவன் யார்?” நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே உங்களுக்கு அவற்றிலிருந்து வாழ்வாதாரம் அளிக்கிறான். -இணைவைப்பாளர்களே!- நீங்களோ, நாங்களோ சந்தேகம் இல்லாமல் நம்மில் ஒருவர்தான் நேர்வழியிலோ அல்லது (சத்திய) பாதையை விட்டும் தெளிவான வழிகேட்டிலோ இருக்கின்றோம். நிச்சயமாக நம்பிக்கையாளர்கள்தாம் நேரான வழியில் இருக்கின்றார்கள். இணைவைப்பாளர்கள்தாம் வழிகேட்டில் இருக்கின்றார்கள்.

Sebe' 34:25

தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “மறுமைநாளில் நாங்கள் செய்த பாவங்களைக் குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்த பாவங்களைக் குறித்து நாங்கள் விசாரிக்கப்படமாட்டோம்.”

Sebe' 34:26

நீர் அவர்களிடம் கூறுவீராக: “மறுமை நாளில் அல்லாஹ் உங்களையும் எங்களையும் ஒன்றுதிரட்டுவான். பின்னர் உங்களுக்கும் எங்களுக்குமிடையே நியாயமாகத் தீர்ப்பளிப்பான். அசத்தியவாதிகளில் யார் சத்தியவாதிகள்? என்பதை அவன் தெளிவுபடுத்துவான். அவன் நியாயமாகத் தீர்ப்பளிக்கக்கூடியவன்; தான் அளிக்கும் தீர்ப்பைக்குறித்து நன்கறிந்தவன்.”

Sebe' 34:27

தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிய இணைத்தெய்வங்களை எனக்குக் காட்டுங்கள். ஒருபோதும் இல்லை. நிச்சயமாக அவனுக்கு இணைகள் உண்டு என்று நீங்கள் எண்ணுவது போலல்ல விடயம். என்றாலும் அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பிலும், நிர்ணயத்திலும், திட்டமிடலிலும் அவன் ஞானம் மிக்கவன்.

Sebe' 34:28

தூதரே!- நாம் உம்மை மனிதர்கள் அனைவருக்கும் தூதராகவும் இறையச்சமுடையவர்களுக்கு சுவனம் உண்டு என்னும் நற்செய்தியைக் கூறக்கூடியவராகவும் நிராகரிப்பாளர்களையும் பாவிகளையும் நரகத்தைக் கொண்டு எச்சரிப்பவராகவும் அனுப்பியுள்ளோம். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர் இதனை அறிந்துகொள்வதில்லை. அவர்கள் அதனை அறிந்திருந்தால் உம்மை பொய்ப்பித்திருக்க மாட்டார்கள்.

Sebe' 34:29

எச்சரிக்கப்படும் வேதனையை விரைவாக வேண்டியவர்களாக இணைவைப்பாளர்கள் கேட்கிறார்கள்: “நிச்சயமாக நீர் உண்மையாக நிகழும் என அழைக்கும் விஷயத்தில் உண்மையாளராக இருந்தால் நீர் வாக்களித்த வேதனை எப்போது வரும்?”

Sebe' 34:30

தூதரே!- தண்டனையை விரைவாக வேண்டும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “உங்களுக்கு குறிப்பிட்ட நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த நாளை விட்டு நீங்கள் ஒரு கணப்பொழுதுகூட முந்தவோ, பிந்தவோ மாட்டீர்கள். அந்த நாள் மறுமை நாளாகும்.

Sebe' 34:31

அல்லாஹ்வை நிராகரித்தோர் கூறுவார்கள்: தன் மீது இறக்கப்பட்டதாக முஹம்மது எண்ணும் இந்த குர்ஆனின் மீதோ முந்தைய வான வேதங்களின் மீதோ நாங்கள் ஒருபோதும் நம்பிக்கைகொள்ள மாட்டோம்.” -தூதரே!- மறுமை நாளில் அநியாயக்காரர்கள் விசாரணைக்காக தங்கள் இறைவனிடம் தடுத்துவைக்கப்படுவதை நீர் பார்க்க வேண்டுமே! அப்போது பொறுப்பையும் பழியையும் அடுத்தவர்கள் மீது சுமத்தி தமக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் மறுப்பு வழங்கிக்கொள்வார்கள். தம்மை உலகில் பலவீனர்களாக்கிய தங்கள் தலைவர்களிடம் அவர்களைப் பின்பற்றிய பலவீனர்கள் கூறுவார்கள்: “நீங்கள் மட்டும் எங்களை வழிகெடுக்காமல் இருந்திருந்தால் நாங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்டிருப்போம்.”

Sebe' 34:32

சத்தியத்தை விட்டும் கர்வம்கொண்ட பின்பற்றப்பட்ட தலைவர்கள் தம்மைப் பின்பற்றிய பலவீனமான தொண்டர்களைப் பார்த்துக் கூறுவார்கள்: “முஹம்மது உங்களிடம் கொண்டுவந்த நேர்வழியைவிட்டும் நாங்களா உங்களைத் தடுத்தோம்? மாறாக நீங்கள் அநியாயக்காரர்களாகவும் குழப்பம் செய்தும், குழப்பவாதிகளாகவும் இருந்தீர்கள்.”

Sebe' 34:33

பலவீனமாகக் கருதப்பட்ட தொண்டர்கள் தாங்கள் பின்பற்றிய சத்தியத்தை விட்டும் கர்வம் கொண்ட தலைவர்களைப் பார்த்துக் கூறுவார்கள்: “மாறாக இரவும் பகலும் சூழ்ச்சி செய்து நீங்கள்தாம் நேர்வழியைவிட்டும் எங்களைத் தடுத்தீர்கள். அல்லாஹ்வை நிராகரிக்குமாறும் படைப்புகளை வணங்குமாறும் எங்களை ஏவிக் கொண்டிருந்தீர்கள். “உலகத்தில் அவர்கள் இருந்துகொண்டிருந்த நிராகரிப்பின் காரணமாக வேதனையைக் காணும்போது வருத்தத்தை மறைத்துக் கொள்வார்கள். நிச்சயமாக தாங்கள் வேதனைக்கு உள்ளாக்கப்படுவோம் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். நாம் நிராகரிப்பாளர்களின் கழுத்துகளில் விலங்குகளை மாட்டிவிடுவோம். அவர்கள் உலகில் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கி மற்றும் பாவங்கள் செய்துகொண்டிருந்ததனால் இவ்வாறு கூலி கொடுக்கப்படுகிறார்கள்.

Sebe' 34:34

முஹம்மது நபியை அவரது சமூகம் பொய்ப்பித்தபோது அல்லாஹ் அவருக்கு ஆறுதலாக, “பொய்ப்பிப்பது முன்னைய சமூகங்களின் வழக்கம்தான்” என்பதை நினைவூட்டுகிறான். அவன் கூறுகிறான்: நாம் தூதர்களை எந்த ஊருக்கு அல்லாஹ்வின் வேதனையை எச்சரிக்கை செய்யுமாறு அனுப்பினாலும் அங்கு அந்தஸ்த்து, அதிகாரம் ஆகியவற்றைப் பெற்று உல்லாசமாக வாழக்கூடியவர்கள், “தூதர்களே! நீங்கள் கொண்டுவந்த தூதுச் செய்தியை நாங்கள் நிராகரிக்கிறோம்” என்றுதான் கூறினார்கள்.

Sebe' 34:35

அந்தஸ்த்துடைய இவர்கள் கர்வத்துடனும் பெருமையுடனும் கூறினார்கள்: “நாங்கள் உங்களைவிட அதிக செல்வமும் பிள்ளைகளும் உடையவர்கள். நிச்சயமாக நாங்கள் வேதனைக்குள்ளாக்கப்படுவோம் என்று நீங்கள் எண்ணுவது பொய்யாகும். இவ்வுலகிலும் மறுவுலகிலும் நாங்கள் வேதனைக்குள்ளாக்கப்படமாட்டோம்.”

Sebe' 34:36

தூதரே!- தங்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளைக்கொண்டு ஏமாந்த இவர்களிடம் நீர் கூறுவீராக: “அடியார்கள் நன்றி செலுத்துகிறார்களா? அல்லது நன்றிகெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்களா? என்பதை சோதிக்கும்பொருட்டு என் இறைவன் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக வழங்குகிறான். அவர்கள் பொறுமையைக் கடைபிடிக்கிறார்களா? அல்லது கோபம் கொள்கிறார்களா? என்பதைச் சோதிக்கும் பொருட்டுதான் நாடியவர்களுக்கு அதில் நெருக்கடியை ஏற்படுத்துகிறான். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர், அல்லாஹ் ஞானம் மிக்கவன், அவன் உயர்ந்த ஒரு நோக்கம் இன்றி ஒரு விடயத்தை நிர்ணயிக்க மாட்டான் என்பதை அறியமாட்டார்கள். அந்நோக்கம் புரிபவர்களுக்குப் புரியும். புரியாதவர்களுக்குப் புரியாது.

Sebe' 34:37

நீங்கள் பெருமை பாராட்டுவதற்குக் காரணமான செல்வங்களோ, பிள்ளைகளோ உங்களுக்கு இறைவனின் திருப்தியைப் பெற்றுத்தராது. ஆயினும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்கள் பன்மடங்கு கூலியைப் பெறுவார்கள். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்யும் செல்வங்களும் அவர்களை அல்லாஹ்விடம் நெருக்கிவைக்கும். பிள்ளைகள் தமது பிரார்த்தனை மூலம் அவனுடைய நெருக்கத்தைப் பெற்றுத்தருவார்கள். நற்செயல்புரியும் இந்த நம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் செய்த நற்செயல்களுக்குப் பலமடங்கு கூலியைப் பெறுவார்கள். அவர்கள் சுவனத்தின் உயர்ந்த பதவிகளில் இருப்பார்கள். வேதனை, மரணம், இன்ப முடிவு ஆகிய எல்லா வகையான அச்சங்களிலிருந்தும் அமைதி பெற்றவர்களாக இருப்பார்கள்.

Sebe' 34:38

நம்முடைய வசனங்களைவிட்டும் மக்களைத் திருப்புவதற்காக கடும் முயற்சி மேற்கொள்ளும் நிராகரிப்பாளர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வேதனைக்குள்ளாக்கப்படுவார்கள்.

Sebe' 34:39

தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அதில் நெருக்கடியை ஏற்படுத்துகிறான். நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் எதைச் செலவு செய்தாலும் இவ்வுலகில் அதனை விடச் சிறந்ததையும் மறுமையில் நிறைவாக கூலியையும் அதற்குப் பகரமாக அல்லாஹ் வழங்குவான். அவன் வாழ்வாதாரம் அளிப்போரில் மிகச் சிறந்தவன். எனவே வாழ்வாதாரம் தேடுபவர் அவனிடமே செல்லட்டும்.

Sebe' 34:40

தூதரே!- அவர்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்றுதிரட்டும் நாளை நினைவுகூர்வீராக. பின்பு அந்நாளில் இணைவைப்பாளர்களைக் கண்டிக்கும் விதமாக வானவர்களிடம் கூறுவான்: “இவர்கள்தாம் உலக வாழ்வில் அல்லாஹ்வைவிடுத்து உங்களை வணங்கிக் கொண்டிருந்தார்களா?”

Sebe' 34:41

வானவர்கள் கூறுவார்கள்: “நீ பரிசுத்தமானவன். அவர்கள் அல்லாமல் நீயே எங்களின் பாதுகாவலன். எங்களுக்கும் அவர்களுக்குமிடையே எந்த உறவும் இல்லை. மாறாக இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை விடுத்து நிச்சயமாக வானவர்களாகத் தோற்றமெடுத்த ஷைத்தான்களையே வணங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஷைத்தான்களைத்தான் நம்பிக்கைகொண்டிருந்தார்கள்.

Sebe' 34:42

கேள்வி கேட்கப்படும், ஒன்றுதிரட்டப்படும் நாளில் வணங்கப்பட்ட தெய்வங்கள் உலகில் தங்களை வணங்கியவர்களுக்கு அல்லாஹ்வை விடுத்து பலனிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்திபெற மாட்டா. நிராகரித்து, பாவங்கள் புரிந்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்தவர்களிடம் நாம் கூறுவோம்: “நீங்கள் உலகில் பொய்ப்பித்துக் கொண்டிருந்த நரக வேதனையை அனுபவியுங்கள்.”

Sebe' 34:43

பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் நாம் தூதர் மீது இறக்கிய சந்தேகமற்ற தெளிவான வசனங்கள் எடுத்துரைக்கப்பட்டால், இதனைக் கொண்டுவந்த இந்த மனிதர் உங்களின் முன்னோர்கள் இருந்த கொள்கையை விட்டும் உங்களைத் திருப்ப நாடுகின்றார் என்றும் இது அல்லாஹ்வின் பெயரால் புனைந்து கூறப்பட்ட பொய்யான குர்ஆனாகும் என்றும் கூறுகிறார்கள். அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் அவனிடமிருந்து அவர்களிடம் வந்த குர்ஆனைக் குறித்து கூறினார்கள்: “இது கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியிலும் தந்தைக்கும் மகனுக்கும் மத்தியிலும் பிரிவினை ஏற்படுத்துவதனால் இது தெளிவான சூனியமாகும்.”

Sebe' 34:44

நாம் அவர்களுக்கு, நிச்சயமாக இந்த குர்ஆன் பொய்யானதாகும், இதனை முஹம்மது புனைந்துள்ளார் என்று கூறி அதன்பால் வழிகாட்டி படிக்கக்கூடிய எந்த வேதத்தையும் வழங்கவில்லை. -தூதரே!- உமக்கு முன்னால் அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து எச்சரிக்கும் எந்த தூதரையும் அவர்களிடம் அனுப்பவில்லை.

Sebe' 34:45

ஆத், ஸமூத், லூதுடைய சமூகம் போன்ற முந்தைய சமூகங்களும் பொய்ப்பித்தன. உம் சமூகத்திலுள்ள இணைவைப்பாளர்கள் முந்தைய சமூகங்கள் பெற்றிருந்த, செல்வம், அருட்கொடை, பலம், எண்ணிக்கை ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைக்கூட பெறவில்லை. அவர்களில் ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களின் தூதரை பொய்ப்பித்தார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட செல்வமோ, பலமோ, எண்ணிக்கையோ அவர்களுக்குப் பலனளிக்கவில்லை. என் வேதனை அவர்களைத் தாக்கியது. -தூதரே!- நான் அவர்களுக்கு அளித்த மறுப்பும் தண்டனையும் எவ்வாறு இருந்தது என்பதைப் பார்ப்பீராக.

Sebe' 34:46

தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை அறிவுறுத்துகிறேன். அது நீங்கள் மனஇச்சையை விட்டுவிட்டு இருவர் இருவராகவோ தனித்தனியாகவோ உங்கள் தோழரின் நடத்தையைக் குறித்து, அவரது அறிவு, வாய்மை, நம்பகத் தன்மை ஆகியவற்றைக்குறித்து சிந்தனை செய்யுங்கள். திட்டமாக அவர் பைத்தியக்காரர் அல்ல என்பது உங்களுக்குத் தெளிவாகிவிடும். நீங்கள் இணைவைப்பை விட்டும் திருந்தாவிட்டால் உங்களுக்கு முன்னால் இருக்கும் கடுமையான வேதனையைக் குறித்து உங்களை எச்சரிப்பவரே அவர்.

Sebe' 34:47

தூதரே!- உம்மைப் பொய்யர் எனக்கூறும் இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் உங்களிடம் கொண்டுவந்த நேர்வழிக்காக உங்களிடம் எந்த கூலியையும் கேட்கவில்லை. அது உங்களுக்குரியதே. எனது கூலி அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். நிச்சயமாக நான் உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன் என்பதற்கும் நீங்கள் செய்யும் செயல்களுக்கும் அவனே சாட்சியாக இருக்கின்றான். அவற்றிற்கான கூலியை அவன் உங்களுக்கு நிறைவாக வழங்கிடுவான்.

Sebe' 34:48

தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் சத்தியத்தை அசத்தியத்தின் மீது சாட்டுகிறான். அது அதனை அழித்துவிடுகிறது. அவன் மறைவானவற்றை நன்கறிந்தவன். வானங்களிலோ, பூமியிலோ எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அடியார்களின் செயற்பாடுகள் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

Sebe' 34:49

தூதரே! உம்மைப் பொய்யர் என்று கூறும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “இஸ்லாம் என்னும் சத்தியம் வந்துவிட்டது. அசத்தியம் அழிந்துவிட்டது. அதற்கு வெளியில் தெரியக்கூடிய எந்த பலமும் அடையாளமும் இல்லை. அது மீண்டும் அதிகாரத்திற்கு வராது.”

Sebe' 34:50

தூதரே!- உம்மைப் பொய்யர் என்று கூறும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் உங்களுக்கு எத்திவைப்பவற்றில் சத்தியத்தை விட்டு வழிதவறியிருந்தால் அதனால் எனக்கு ஏற்படும் தீங்கு என்னையே சாரும். அதனால் உங்களுக்கு ஒன்றும் நேரப்போவதில்லை. நான் நேர்வழி பெற்றிருந்தால் அது என் இறைவன் எனக்கு அறிவித்த வஹியினால் ஆகும். நிச்சயமாக அவன் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன்.நான் கூறுவதைக் கேற்பது அவனுக்கு சிரமமில்லாதளவுக்கு அவன் நெருக்கமானவன்.

Sebe' 34:51

இந்த நிராகரிப்பாளர்கள் மறுமை நாளில் வேதனையைக் காணும்போது பதற்றமடைவதை நீர் கண்டால் அவர்களால் எங்கும் வெருண்டோட முடியாது. யாரிடமும் அடைக்கலம் தேட முடியாது. நெருக்கமான இடங்களிலிருந்து முதன் முறையிலேயே அவர்கள் பிடிக்கப்பட்டு விடுவார்கள். அவர்கள் பிடிக்கப்படுவது மிகவும் இலகுவானதாக இருக்கும். அதனை நீர் பார்த்தால் ஆச்சரியமான விடயத்தை பார்த்தவராவீர்.

Sebe' 34:52

தங்களின் இருப்பிடத்தைக் கண்டவுடன் அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் மறுமை நாளின் மீது நம்பிக்கைகொண்டோம் என்று.” எவ்வாறு அவர்களால் நம்பிக்கைகொள்ள முடியும்? அவர்கள் செயல்படும் களமான உலகத்தைவிட்டும் வெளியேறி, தூரமாகி கூலி வழங்கப்படும் களமான மறுமையை அடைந்துவிட்டார்கள்!

Sebe' 34:53

அவர்களின் நம்பிக்கை எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும்? அவர்கள் அதனை உலக வாழ்க்கையில் நிராகரித்துவிட்டார்கள். தூதரைக் குறித்து “சூனியக்காரர், ஜோதிடர், கவிஞர்” என சத்தியத்தை விட்டும் மிகத் தூரமான ஊகங்களைக் கூறிக்கொண்டிருந்தனர்.

Sebe' 34:54

அவர்கள் விரும்பும் வாழ்வின் இன்பங்கள், நிராகரிப்பிலிருந்து மீளுதல், நரகிலிருந்து தப்பித்தல், மீண்டும் உலகத்தின்பால் திரும்புதல் ஆகியவற்றிலிருந்து இந்த பொய்யர்கள் தடுக்கப்படுவார்கள், இவர்களுக்கு முன்னர் பொய்ப்பித்த சமூகங்களுக்கும் இவ்வாறே நிகழ்ந்தது. நிச்சயமாக அவர்கள் தூதர்கள் கொண்டுவந்த ஓரிறைக் கொள்கை மற்றும் மறுமை நாளில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புதலின் மீது நம்பிக்கை கொள்தல் ஆகிய விஷயங்களில் நிராகரிப்பின்பால் இட்டுச் செல்லும் சந்தேகத்தில் வீழ்ந்துகிடந்தார்கள்.

Fatır 35:1

வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் தான் விதித்த கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக வானவர்களை தூதுவர்களாக ஆக்கியுள்ளான். அவர்களில் சிலர் நபிமார்களுக்கு வஹியை - இறைச்செய்தியை- கொண்டு சேர்க்கிறார்கள். தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ் அவர்களை ஆற்றல்மிக்கவர்களாக ஆக்கியுள்ளான். அவர்களில் சிலர் இரண்டு இறக்கைகள், மூன்று இறக்கைகள், நான்கு இறக்கைகள் உடையவர்களாக இருக்கின்றார்கள். அவன் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக அவர்கள் அவற்றினால் பறந்து செல்கின்றார்கள். அல்லாஹ் படைப்பில் தான் நாடிய உறுப்பை அல்லது அழகை அல்லது குரலை அதிகப்படுத்துகிறான். நிச்சயமாக அவன் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனுக்கு இயலாததல்ல.

Fatır 35:2

நிச்சயமாக ஒவ்வொரு பொருளின் திறவுகோலும் அல்லாஹ்வின் கைவசமே உள்ளது. அவன் மனிதர்களுக்கு அளிக்கும் வாழ்வாதாரம், வழிகாட்டுதல், நற்பாக்கியம், அவையல்லாத இன்னும் அருட்கொடைகளை யாராலும் தடுக்க முடியாது. அவன் தடுத்ததை அதற்குப்பிறகு யாராலும் கொண்டு வர முடியாது. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தான் படைத்த படைப்புகளில், அமைத்த விதிகளில், தன் நிர்வாகத்தில் அவன் ஞானம் மிக்கவன்.

Fatır 35:3

மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை உள்ளத்தாலும் நாவாலும் உறுப்புக்களின் செயல்களாலும் நினைவுகூருங்கள். மழையை இறக்குவதன் மூலம் வானிலிருந்தும், தாவரங்கள், பயிர்கள் இன்னும் பலவற்றை முளைக்கச் செய்வதன் மூலம் பூமியிலிருந்தும் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் படைப்பாளன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? அவனைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அந்த அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வாழ்வாதாரம் அளித்துக்கொண்டிருக்க, எவ்வாறு இந்த உண்மையை விட்டும் நீங்கள் திசைதிருப்பப்பட்டு, அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி நிச்சயமாக அவனுக்கு இணைகள் உண்டு என்று கூறுவீர்கள்?

Fatır 35:4

தூதரே!- உம் சமூகம் உம்மை பொய்ப்பித்தால் பொறுமையாக இருப்பீராக. ஏனெனில் நீர் தன் சமூகம் பொய்ப்பிக்கும் முதலாவது தூதரல்ல. உமக்கு முன்னிருந்த ஆத், ஸமூத், லூதின் சமூகம் போன்ற சமூகங்கள் தமது தூதர்களை பொய்ப்பித்தார்கள். விவகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் பக்கமே திரும்புகின்றன. அவன் பொய்ப்பிப்பவர்களை அழிக்கிறான். தன் தூதர்களுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உதவி புரிகிறான்.

Fatır 35:5

மனிதர்களே! -மறுமை நாளில் மீண்டும் எழுப்பப்பட்டு கூலி வழங்கப்படும் என்ற- அல்லாஹ்வின் வாக்குறுதி சந்தேகமற்ற உண்மையாகும். அந்த நாளுக்காக நற்செயல்களால் உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்வதிலிருந்து உலக இன்பங்களும் இச்சைகளும் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அசத்தியத்தை அலங்கரித்துக்காட்டி உலக வாழ்க்கையின்பால் மோகம்கொள்ள வைத்து ஷைத்தானும் உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்.

Fatır 35:6

மனிதர்களே!- நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு நிரந்தர எதிரியாவான். எனவே தொடர்ந்து அவனுடன் போரிட்டு அவனைப் பகைவனாக்கிக் கொள்ளுங்கள். தன்னைப் பின்பற்றக்கூடியவர்கள் மறுமை நாளில் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பில் நுழைவதற்காகவே அவன் அவர்களை அல்லாஹ்வை நிராகரிப்பதன் பக்கம் அழைக்கின்றான்.

Fatır 35:7

ஷைத்தானைப் பின்பற்றி அல்லாஹ்வை நிராகரித்தவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்களுக்கு அல்லாஹ்விடம் பாவங்களில் இருந்து மன்னிப்பும் சுவனம் என்னும் மகத்தான கூலியும் உண்டு.

Fatır 35:8

நிச்சயமாக ஷைத்தான் யாருடைய தீய செயலை அலங்கரித்துக் காட்டி அவர் அதனை நற்செயல் என்று எண்ணுகிறாரோ அவரும் யாருக்கு அல்லாஹ் சத்தியத்தை அலங்கரித்துக் காட்டி அவர் அதனை சத்தியம் என்று எண்ணுகிறாரோ அவரும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகெடுக்கிறான். தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான். யாரும் அவனை நிர்ப்பந்திக்க முடியாது. -தூதரே!- வழிகெட்டவர்களின் வழிகேடுகளுக்காக கவலைப்பட்டு உம்மை நீரே அழித்துக் கொள்ளாதீர். நிச்சயமாக அவர்கள் செய்யக்கூடியதை அல்லாஹ் நன்கறிந்தவன். அவர்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

Fatır 35:9

அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அவை மேகங்களை நகர்த்துகின்றன. நாம் அந்த மேகங்களை தாவரங்களற்ற வறண்ட பூமியை நோக்கி இழுத்துச் செல்கிறோம். அதன் நீர் மூலம் பூமி வறண்டதன் பின் அதில் நாம் முளைக்கச் செய்யும் தாவரங்களைக் கொண்டு மீண்டும் உயிர்ப்பிக்கிறோம். வறண்ட இந்த பூமியை தாவரங்களைக் கொண்டு உயிர்ப்பித்து மீட்டியது போன்றே மறுமை நாளில் இறந்தவர்கள் எழுப்பப்படுவார்கள்.

Fatır 35:10

இவ்வுலகிலோ அல்லது மறுவுலகிலோ கண்ணியத்தை நாடுபவர் அதனை அல்லாஹ்விடமே தேடட்டும். இவ்வுலகிலும் மறுவுலகிலும் கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனை நல்லமுறையில் நினைவுகூர்வது அவன் பக்கமே உயர்ந்து செல்கிறது. அடியார்களின் நற்செயல்கள் அவன் பக்கமே உயர்கின்றன. -தூதரைக் கொல்வதற்கான முயற்சி போன்ற- தீய திட்டங்கள் தீட்டுவோருக்கு கடுமையான தண்டனை காத்திருக்கின்றது. இந்த நிராகரிப்பாளர்களின் திட்டங்கள் அனைத்தும் அழிந்து விடும். அவர்களால் தங்களின் நோக்கத்தை நிறைவேற்ற முடியாது.

Fatır 35:11

அல்லாஹ்தான் உங்களின் தந்தை ஆதமை மண்ணிலிருந்து படைத்தான். பின்னர் உங்களை விந்திலிருந்து படைத்தான். பின்னர் உங்களை ஆண்களாவும் பெண்களாவும் ஆக்கி உங்களிடையே ஜோடிகளை ஏற்படுத்தினான். அவனுக்குத் தெரியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவனது படைப்பில் ஒருவரின் வயது அதிகரிக்கப்படுவதும் குறைக்கப்படுவதும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை. நிச்சயமாக மேற்கூறப்பட்ட, -உங்களை மண்ணிலிருந்து படைத்தல், பல நிலைகளாகப் படைத்தல், லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டில் உங்களின் வாழ்நாட்களைப் பதிவுசெய்தல் ஆகியன- அல்லாஹ்வுக்கு மிக எளிதானவையாகும்.

Fatır 35:12

இரு கடல்களும் சமமாகி விடாது. அவற்றில் ஒன்று நன்கு சுவையான நீரை உடையது. அதன் சுவையினால் அதனைக் குடிப்பது இலகுவானது. மற்றொன்று உப்பும் கசப்பும் உடையது. அதன் கடுமையான உவர்ப்பின் காரணமாக அதனைப் பருக முடியாது. மேற்கூறப்பட்ட இரு கடல்களிலிருந்தும் நீங்கள் புத்தம் புது (இறைச்சியான) மீனை உண்கிறீர்கள். அவற்றிலிருந்து முத்து, பவளம் போன்ற அலங்காரத்துக்காக அணியும் ஆபரணங்களை எடுக்கின்றீர்கள். -பார்க்கக்கூடியவனே!- வியாபாரத்தின் மூலம் நீங்கள் அல்லாஹ்வின் அருளைத் தேடுவதற்காக கடலில் கப்பல்கள் முன்னோக்கியவாறும் பின்னோக்கியவாறும் கடல்களை பிளந்தவாறு செல்வதை நீ பார்க்கின்றாய். அவன் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தலாம் என்பதற்காகத்தான்.

Fatır 35:13

அல்லாஹ் இரவை பகலில் பிரவேசிக்கச் செய்து அதனை நீளமாக்குகிறான். பகலை இரவில் பிரவேசிக்கச் செய்பிரவேசிக்கச் செய்து அதனை நீளமாக்குகிறான். சூரியனையும் சந்திரனையும் அவன் வசப்படுத்தித் தந்துள்ளான். அவற்றில் ஒவ்வொன்றும் அல்லாஹ் அறிந்த தவணையின்படி சென்று கொண்டிருக்கும். அந்த தவணை மறுமை நாளாகும். இவையனைத்தையும் நிர்ணயம் செய்து இயங்கச் செய்பவன்தான் உங்கள் இறைவனான அல்லாஹ். ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது. அவனை விடுத்து அவர்கள் வணங்கும் சிலைகள் பேரீச்சம் பழக்கொட்டையின் மேலுள்ள தோலளவுக்குக் கூட உரிமையுடையவைகளல்ல. எனவே என்னை விடுத்து அவற்றை எவ்வாறுதான் நீங்கள் வணங்குகிறீர்களோ?!

Fatır 35:14

நீங்கள் உங்களின் தெய்வங்களை அழைத்தால் அவை உங்களின் அழைப்புக்குச் செவியேற்க மாட்டா. ஏனெனில் அவை உயிரற்ற, கேட்கமுடியாத ஜடப்பொருள்கள். -ஒரு வேளை- அவை உங்களின் அழைப்பை செவியுற்றாலும் அவை உங்களுக்குப் பதிலளிக்க மாட்டாது. மறுமை நாளில் உங்களின் இணைவைப்பைவிட்டும், நீங்கள் அவற்றை வணங்கியதைவிட்டும் விலகிவிடும். -தூதரே!- அல்லாஹ்வைவிட உமக்கு உண்மையான செய்தியை அறிவிப்பவர் வேறு யாருமில்லை.

Fatır 35:15

மனிதர்களே!- உங்களின் எல்லா விவகாரங்களிலும் நிலைகளிலும் நீங்கள்தாம் அல்லாஹ்விடம் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். அவன் உங்களிடம் எந்த வகையிலும் தேவையற்றவனாகவும் தனது அடியார்களுக்கு நிர்ணயிப்பவற்றுக்காக இவ்வுலகிலும் மறுவுலகிலும் புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்.

Fatır 35:16

அவன் உங்களை அழிக்க நாடினால் உங்களை அழித்துவிட்டு உங்களுக்குப் பதிலாக அவனை மட்டுமே வணங்கக்கூடிய, அவனுக்கு யாரையும் இணையாக்காத புதிய படைப்பைக் கொண்டு வருவான்.

Fatır 35:17

உங்களை அழிப்பதும் உங்களுக்குப் பதிலாக புதிய படைப்பைக் கொண்டு வருவதும் அல்லாஹ்வுக்குக் இயலாத ஒன்றல்ல.

Fatır 35:18

பாவம் செய்த ஒருவர் பாவம் செய்த இன்னொருவரின் பாவச்சுமையை சுமக்க மாட்டார். மாறாக ஒவ்வொருவரும் தன் பாவத்தையே சுமப்பார்கள். கனமான பாவச் சுமையுடையவர் தன் பாவங்களில் எதையேனும் சுமந்து கொள்ளுமாறு மற்றவர்களை அழைத்தாலும் அவற்றில் எதையும் அவரால் சுமக்க முடியாது, அழைக்கப்பட்டவர் நெருங்கிய உறவினராக இருந்தாலும் சரியே. -தூதரே!- தங்கள் இறைவனைக் காணாமலேயே அவனை அஞ்சி, தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றக்கூடியவர்களுக்குத்தான் உம்மால் அவனுடைய வேதனையைக் குறித்து எச்சரிக்கை செய்ய முடியும். அவர்கள்தாம் உம்முடைய எச்சரிக்கையால் பயனடைவார்கள். யார் பாவங்களிலிருந்து -அதிலும் பெரியது இணைவைப்பிலிருந்து- தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டாரோ நிச்சயமாக அவர் தனக்காகவே தூய்மைப்படுத்திக் கொண்டார். திட்டமாக அதனால் ஏற்படும் பலன் அவரையே சாரும். அவரின் கீழ்ப்படிதலைவிட்டும் அல்லாஹ் தேவையற்றவன். மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலியைப் பெறவும் அவன் பக்கமே திரும்ப வேண்டும்.

Fatır 35:19

குருடனும் பார்வையுடையவனும் எவ்வாறு சமமாக மாட்டார்களோ அவ்வாறே நிராகரிப்பாளனும் நம்பிக்கையாளனும் பதவியில் சமமாக மாட்டார்கள்.

Fatır 35:20

இருள்களும் ஒளியும் எவ்வாறு சமமாகாதோ அவ்வாறே நிராகரிப்பும் ஈமானும் சமமாகாது.

Fatır 35:21

நிழலும் சூடான காற்றும் எவ்வாறு சமமாகாதோ அவ்வாறே சுவனமும் நரகமும் பாதிப்பில் சமமாகாது.

Fatır 35:22

இறந்தவர்களும் உயிருள்ளவர்களும் எவ்வாறு சமமாக மாட்டார்களோ அவ்வாறே நிராகரிப்பாளர்களும் நம்பிக்கையாளர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் யாருக்கு நேர்வழியளிக்க நாடுகிறானோ அவரை செவியேற்கச் செய்கிறான். -தூதரே!-அடக்கஸ்த்தலத்தில் உள்ள மரணித்தவர்களைப் போன்று காணப்படும் நிராகரிப்பாளர்களுக்கு உம்மால் செவியேற்கச் செய்ய முடியாது.

Fatır 35:23

நீர் அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து அவர்களை எச்சரிக்கை செய்பவர்தாம்.

Fatır 35:24

தூதரே!- நாம் உம்மை சந்தேகம் இல்லாத உறுதியான சத்தியத்தைக் கொண்டும், நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கண்ணியமான கூலியை தயார்படுத்தி வைத்துள்ளான் என்று நற்செய்தி கூறுபவராகவும் நிராகரிப்பாளர்களுக்கு அவன் வேதனை மிக்க தண்டனையைத் தயார்படுத்தி வைத்துள்ளான் என்று எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியுள்ளோம். அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து எச்சரிக்கை செய்யக்கூடிய ஒரு தூதர் அனுப்பப்படாத, கடந்துபோன எந்த சமூகமும் இல்லை.

Fatır 35:25

தூதரே! உம் சமூகம் உம்மை பொய்ப்பித்தால் பொறுமையாக இருப்பீராக. ஏனெனில் நீர் தன் சமூகம் பொய்ப்பிக்கும் முதலாவது தூதரல்ல. இவர்களுக்கு முன்னிருந்த ஆத், ஸமூத், லூதின் சமூகம் போன்ற சமூகங்களும் தமது தூதர்களை பொய்ப்பித்தார்கள். தூதர்கள் அவர்களிடம் தங்களின் நம்பகத்தன்மையை அறிவிக்கக்கூடிய தெளிவான ஆதாரங்களை அல்லாஹ்விடமிருந்து கொண்டுவந்தார்கள். அவர்கள் சிந்திக்கக்கூடியவர்களுக்காக ஆகமங்களையும் ஒளிவீசும் வேதங்களையும் அல்லாஹ்விடமிருந்து கொண்டுவந்தார்கள்.

Fatır 35:26

இருந்தும் அவர்கள் அல்லாஹ்வையும் அவனிடமிருந்து கொண்டுவந்ததையும் அவனுடைய தூதர்களையும் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தார்கள். நிராகரித்தவர்களை நான் அழித்துவிட்டேன். -தூதரே!- அவர்களை அழித்த எனது தண்டனை எவ்வாறு இருந்தது என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக.

Fatır 35:27

தூதரே!- நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழை நீரை இறக்கி அதன் மூலம் மரங்களுக்கு நீரூட்டி அதன் மூலம் சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஏனைய நிறங்களுடைய பழங்களை வெளிப்படுத்துகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மலைகளிலும் வெண்மை, சிவப்பு மற்றும் கடும் கருப்பு நிறமுடைய பாதைகள் காணப்படுகின்றன.

Fatır 35:28

மனிதர்கள், உயிரினங்கள், கால்நடைகள் (ஆடு, மாடு, ஒட்டகம்) ஆகியவற்றிலும் அவ்வாறு மேற்கூறப்பட்டது போன்று பல நிறங்கள் காணப்படுகின்றன. நிச்சயமாக அல்லாஹ்வைக் குறித்து அறிந்தவர்கள்தாம் அவனை கண்ணியப்படுத்துவார்கள், அஞ்சுவார்கள். ஏனெனில் அவர்கள்தாம் அவனுடைய பண்புகளையும் அவன் விதித்த சட்டங்களையும் அவனுடைய வல்லமையின் ஆதாரங்களையும் அறிந்தவர்கள். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களின் பாவங்களை அவன் மன்னிக்கக்கூடியவன்.

Fatır 35:29

நிச்சயமாக யாரெல்லாம் நாம் நம் தூதர் மீது இறக்கிய வேதத்தைப் படித்து அதனடிப்படையில் செயல்பட்டு, தொழுகையைப் பரிபூரணமான முறையில் நிறைவேற்றி, நாம் அவர்களுக்கு வழங்கிய செல்வங்களிலிருந்து ஸகாத்தை கொடுத்து அது அல்லாது வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செலவும் செய்கிறார்களோ அவர்கள்தாம் இந்த செயல்களின் மூலம் அல்லாஹ்விடம் என்றும் நஷ்டமடையாத வியாபாரத்தை எதிர்பார்க்கிறார்கள்.

Fatır 35:30

அல்லாஹ் அவர்களின் செயல்களுக்கான கூலியை முழுமையாக வழங்கிடுவான். அவர்களுக்கு தன் அருளிலிருந்து மேலதிகமாகவும் வழங்குவான். அவன் அதற்குத் தகுதியானவன். இந்த பண்புகளைப் பெற்றவர்களின் பாவங்களை அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் நற்செயல்களுக்கு நன்றி பாராட்டுபவனாகவும் இருக்கின்றான்.

Fatır 35:31

தூதரே!- நாம் உமக்கு வஹியாக அறிவித்த வேதம் சந்தேகமற்ற உண்மையாகும். முந்தைய வான வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாக அதனை அல்லாஹ் இறக்கியுள்ளான். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களைக் குறித்து நன்கறிந்தவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். ஒவ்வொரு சமூகத்தின் தூதருக்கும் அக்காலத்தில் அவர்களுக்குத் தேவையானவற்றை அவன் வஹியாக அறிவிக்கிறான்.

Fatır 35:32

பின்னர் எல்லா சமூகங்களைவிடவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகமான முஹம்மதின் சமூகத்திற்கு குர்ஆனை நாம் வழங்கினோம். அவர்களில் கடமையானவற்றை விட்டுவிட்டு தடுக்கப்பட்டவற்றில் ஈடுபட்டு தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் கடமையானவற்றைச் செய்து தடுக்கப்பட்டுள்ளவற்றை விட்டும் விலகி ஆனால் இறைவனுக்கு விருப்பமான சில காரியங்களைச் செய்யாமல் அவன் வெறுக்கும் சில காரியங்களில் ஈடுபட்ட நடுநிலையாளர்களும் இருக்கிறார்கள். அவர்களில் அல்லாஹ்வின் அனுமதிகொண்டு நன்மையின்பால் முந்தக்கூடியவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு கடமையான மற்றும் இறைவனுக்கு கடமையான, விருப்பமான செயல்களைச் செய்தார்கள். தடுக்கப்பட்ட மற்றும் இறைவன் வெறுக்கக்கூடிய செயல்களை விட்டும் தவிர்ந்திருந்தார்கள். மேற்கூறப்பட்ட -இச்சமுதாயத்தின் தேர்வு, அதற்குக் குர்ஆன் வழங்கப்பட்டமை ஆகிய- அனைத்தும் அல்லாஹ்வின் மாபெரும் பாக்கியமாகும். அதற்கு இணையான வேறு அருட்கொடை எதுவும் இல்லை.

Fatır 35:33

தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் நிலையான சுவனங்களில் பிரவேசிப்பார்கள். அங்கு அவர்களுக்கு தங்கக் காப்புகளும் முத்தும் அணிவிக்கப்படும். அவர்களின் ஆடை பட்டாக இருக்கும்.

Fatır 35:34

அவர்கள் சுவனத்தில் நுழைந்த பிறகு கூறுவார்கள்: “நரகத்தில் நுழைந்து விடுவோமோ என்று எங்களுக்கு ஏற்பட்ட பயத்தினால் உண்டான கவலையைப் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். நிச்சயமாக எங்களின் இறைவன் தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் கீழ்ப்படிதலுக்கு நன்றி பாராட்டுபவனாகவும் இருக்கின்றான்.

Fatır 35:35

அவனே தன் அருளால் எங்களின் எந்த சக்தி, ஆற்றலுமின்றி நிலையான வீட்டில் எங்களைத் தங்க வைத்தான். -இனி அங்கிருந்து எங்கும் செல்ல வேண்டியதில்லை-. அங்கு சிரமமோ, களைப்போ எங்களுக்கு ஏற்படாது.

Fatır 35:36

தேர்ந்தெடுக்கப்பட்ட தன் அடியார்களுக்கு வழங்கப்படும் வெகுமதியை குறிப்பிட்ட இறைவன் அவர்களில் இழிவடைந்தவர்களான நிராகரிப்பாளர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையைக் குறித்து கூறுகிறான்: அல்லாஹ்வை நிராகரித்தவர்களுக்கு நரக நெருப்புதான் உண்டு. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்கள் மரணித்து வேதனையிலிருந்து விடுதலை பெறக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு மரணம் ஏற்படாது. நரக வேதனையிலும் சிறிதளவும் அவர்களுக்குக் குறைக்கப்படாது. இவ்வாறு இறைவனின் அருட்கொடையை மறுக்கும் ஒவ்வொருவருக்கும் மறுமை நாளில் கூலி கொடுக்கிறோம்.

Fatır 35:37

அவர்கள் உயர்ந்த தொனியில் கத்துவார்கள், உதவி தேடுவார்கள். “எங்கள் இறைவா! நரகத்திலிருந்து எங்களை வெளியேற்றி விடு. நாங்கள் உலகில் செய்து கொண்டிருந்ததற்கு மாறாக உன் திருப்தியை பெற்று உனது தண்டனையிலிருந்து தப்பும் நோக்கில் நற்செயல்கள் செய்கின்றோம்” என்று அவர்கள் கூக்குரலிடுவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு விடையளிப்பான்: “படிப்பினை பெறக்கூடியவர்கள் படிப்பினை பெறும் அளவுக்கு, அல்லாஹ்வின் பக்கம் திரும்பி நற்செயல் புரியும் அளவுக்கு நாம் உங்களுக்கு வாழ்நாளை வழங்கவில்லையா? அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து எச்சரித்தவர்களாக தூதர்கள் உங்களிடம் வந்தனர்? இனி உங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இனி இதற்குப் பிறகு நீங்கள் எந்தச் சாக்குப்போக்கும் கூற முடியாது. நரக வேதனையை அனுபவியுங்கள். நிராகரித்து, பாவங்கள் புரிந்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு அல்லாஹ்வின் வேதனையை விட்டும் காப்பாற்றும் அல்லது அவர்களை விட்டும் அதனைக் குறைக்கும் உதவியாளர்கள் யாரும் இல்லை.

Fatır 35:38

நிச்சயமாக அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியிலுள்ள மறைவான விஷயங்களை நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டுத் தப்ப முடியாது. திட்டமாக அவன் தன் அடியார்கள் தன் உள்ளங்களில் மறைத்து வைத்திருக்கும் நன்மையையும் தீமையையும் நன்கறிந்தவன்.

Fatır 35:39

மனிதர்களே!- அவனே உலகில் உங்களில் சிலரை சிலரின் வழித்தோன்றல்களாக ஆக்கியுள்ளான், நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதைச் சோதிக்கும்பொருட்டு. யார் அல்லாஹ்வையும் தூதர்கள் கொண்டு வந்ததையும் நிராகரித்தார்களோ அதனால் ஏற்படும் பாவமும் தண்டனையும் அவரையே சாரும். நிராகரிப்பாளர்களின் நிராகரிப்பு அவர்களின் இறைவனிடத்தில் கடும் வெறுப்பையே அதிகப்படுத்துகிறது. அவர்களின் நிராகரிப்பு இழப்பையே அதிகப்படுத்துகிறது. ஏனெனில் அவர்கள் நம்பிக்கைகொண்டால் கிடைக்கும் அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ள சுவனத்தை அவர்கள் இழந்துவிடுகிறார்கள்.

Fatır 35:40

தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கும் உங்களின் இணைதெய்வங்களைக் குறித்து எனக்குக் கூறுங்கள். அவை பூமியில் எதைப் படைத்தன? அதன் மலைகளையோ, ஆறுகளையோ, உயிரினங்களையோ அவை படைத்தனவா? அல்லது வானங்களைப் படைத்ததில் அவற்றிற்கு பங்கு இருக்கின்றதா? அல்லது நாம் உங்களுக்கு ஒரு வேதம் வழங்கி அதில் உங்களின் இணைதெய்வங்களை வணங்குவதற்கு அதில் தகுந்த ஆதாரத்தை வழங்கியுள்ளோமா? முடிவாக இவற்றில் எதுவும் இல்லை. மாறாக இறைவனை நிராகரித்து, பாவங்கள் புரிந்து தமக்குத்தாமே அநீதி இழைத்துக்கொண்ட அநியாயக்காரர்கள் ஒருவருக்கொருவர் ஏமாற்றத்தையே வாக்குறுதிகளாக அளிக்கிறார்கள்.

Fatır 35:41

நிச்சயமாக அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் விலகிவிடாதவாறு தடுத்து வைத்திருக்கிறான். -ஒருவேளை- அவை விலகிவிட்டால் அல்லாஹ்வுக்குப் பின் யாராலும் அவை விலகிச் செல்லாமல் தடுக்க முடியாது. திட்டமாக அவன் சகிப்புத் தன்மை மிக்கவனாக இருக்கின்றான். அடியார்களை உடனுக்குடன் தண்டித்துவிட மாட்டான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான்.

Fatır 35:42

இந்த நிராகரித்து பொய்ப்பிப்பவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியமிட்டுக் கூறினார்கள்: “அல்லாஹ்விடமிருந்து அவனது வேதனையை எச்சரிக்கை செய்யக்கூடிய ஒரு தூதர் எங்களிடம் வந்தால் நாங்கள் யூதர்கள், கிருஸ்தவர்கள் மற்றும் மற்ற சமூகங்களைவிட சத்தியத்தை பின்பற்றக்கூடியவர்களாகவும் உறுதியானவர்களாகவும் இருப்போம்.” ஆனால் முஹம்மது இறைவனிடமிருந்து அவர்களிடம் அவனுடைய வேதனையைக் குறித்து எச்சரிக்கை செய்யக்கூடியவராக வந்தபோது அவர்கள் சத்தியத்தைவிட்டு தூரமாகி அசத்தியத்திற்கு இன்னும் நெருக்கமாகி விட்டார்கள். முன்புள்ள சமுதாயங்களை விட நேர்வழி பெற்றவர்களாக நாம் இருப்போம் என தாங்கள் உறுதியாக செய்த சத்தியத்தை அவர்கள் நிறைவேற்றவில்லை.

Fatır 35:43

அவர்கள் நல்லெண்ணத்தோடும் நல்ல நோக்கத்தோடும் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறவில்லை. மாறாக பூமியில் கர்வம்கொள்வதற்காகவும் மக்களை ஏமாற்றுவதற்காகவுமே அவ்வாறு செய்தார்கள். தீய சூழ்ச்சி அதில் ஈடுபட்டவர்களையே தாக்கும். கர்வம் கொண்ட, சூழ்ச்சி செய்யக்கூடிய இவர்கள் உறுதியான அல்லாஹ்வின் வழிமுறையைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அது முந்தைய சமூகங்கள் அழிக்கப்பட்டது போன்று அவர்களும் அழிக்கப்படுவார்கள் என்பதாகும். கர்வமுள்ளவர்களை அழிக்காமல் விடுதல், கர்வமற்றவர்களை அழித்தல் என அல்லாஹ்வின் வழிமுறையில் எவ்வித மாற்றத்தையும் நீர் காண மாட்டீர். ஏனெனில் அல்லாஹ்வின் வழிமுறை மாறாததாகும்.

Fatır 35:44

உம்மை மறுக்கும் இந்தக் குறைஷிப் பொய்யர்கள் பூமியில் பயணம் செய்து முன்னர் பொய்ப்பித்த சமூகங்களின் முடிவு என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் அவர்களை அழித்து அவர்களின் முடிவை தீயதாக ஆக்கவில்லையா? அவர்கள் குறைஷிகளை விட பலம் மிக்கவர்களாக இருக்கவில்லையா? வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்வை விட்டு எதுவும் தப்பிவிட முடியாது. நிச்சயமாக அவன் இந்த பொய்ப்பிப்பவர்களின் செயல்களைக் குறித்து நன்கறிந்தவன். இவர்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை, ஒன்றும் தப்பிவிடவும் முடியாது. தான் விரும்பிய சமயத்தில் அவர்களை அழிப்பதற்கு அவன் ஆற்றலுடையவன்.

Fatır 35:45

மனிதர்கள் செய்யும் பாவங்களுக்காக அவன் அவர்களை உடனுக்குடன் தண்டிப்பதாக இருந்தால் அந்நேரத்தில் பூமியிலுள்ள அனைவரையும் அவர்களுக்குச் சொந்தமான உயிரினங்களையும் சொத்துக்களையும் அழித்திருப்பான். ஆயினும் அவன் அறிந்த குறிப்பிட்ட தவணை வரை அவகாசம் அளிக்கிறான். அது மறுமை நாளாகும். அந்த நாள் வந்துவிட்டால், நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் செய்யும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான். நலவாக இருந்தால் நன்மையும் தீயதாக இருந்தால் தீமையும் கிடைக்கும்.

Yâsin 36:1

இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

Yâsin 36:2

அல்லாஹ் குர்ஆனைக்கொண்டு சத்தியமிட்டுக் கூறுகிறான். அந்த குர்ஆன் எப்படிப்பட்டதென்றால் அதன் வசனங்கள் நுணுக்கமானவை. அதன் முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் அசத்தியம் அதனை அடைய முடியாது.

Yâsin 36:3

தூதரே!- நிச்சயமாக நீர் அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதன்பால் மனிதர்களை அழைப்பதற்காக அனுப்பப்பட்ட தூதர்களில் உள்ளவராவீர்.

Yâsin 36:4

நீர் நேரான வழிமுறையில் இருக்கின்றீர். இந்த நேரான வழிமுறை யாவற்றையும் மிகைத்த, யாராலும் அவனை மிகைக்க முடியாத, நம்பிக்கையாளர்களான தன் அடியார்கள் மீது மிகுந்த கருணை காட்டுகின்ற உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்.

Yâsin 36:5

நீர் நேரான வழிமுறையில் இருக்கின்றீர். இந்த நேரான வழிமுறை யாவற்றையும் மிகைத்த, நம்பிக்கைகொண்ட தன் அடியார்கள்மீது மிகுந்த கருணை காட்டுகின்ற உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்.

Yâsin 36:6

நாம் உம்மீது அதனை இறக்கியது, இதற்கு முன்னர் எச்சரிக்கை செய்யக்கூடிய தூதர்கள் எவரும் வந்திராத ஒரு சமூகமான அரேபிகளுக்கு நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். அவர்கள் ஓரிறைக்கொள்கை மற்றும் ஈமானை விட்டும் அலட்சியமாக இருக்கிறார்கள். இவ்வாறே எச்சரிக்கை செய்யப்படாத ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களுக்கு அதனை நினைவுபடுத்த தேவையான தூதர்களை ஏற்படுத்துகின்றோம்.

Yâsin 36:7

அல்லாஹ்விடமிருந்து தூதரின் நாவினால் சத்தியம் அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் நம்பிக்கைகொள்ளாமல் நிராகரிப்பில் நிலைத்திருக்கும் இவர்களில் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகிவிட்டது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளவில்லை. அவர் கொண்டுவந்த சத்தியத்தின்படி செயல்படுவதுமில்லை.

Yâsin 36:8

இதில் அவர்களுக்கான உதாரணம், தங்களின் கழுத்துகளில் விலங்குகளை மாட்டிக் கொண்டவர்களைப் போலாவர். அவர்களின் கைகள் முகவாய்க்கட்டைகளுக்குக் கீழே கழுத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. அவர்கள் வானத்தின்பால் தங்களின் தலையை உயர்த்தி வைக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். அவர்களால் அதனைத் தாழ்த்த முடியாது. இவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளாதவாறு தடுக்கப்பட்டுள்ளார்கள். எனவே அவர்கள் அவனுக்கு அடிபணிய மாட்டார்கள். அவனுக்காக வேண்டி அவர்கள் தங்கள் தலைகளை தாழ்த்தவும் மாட்டார்கள்.

Yâsin 36:9

அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதவாறு அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும் பின்னால் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் சத்தியத்தை பார்க்க முடியாதவாறு அவர்களின் பார்வைகளை மூடியுள்ளோம். எனவே பயனடையும் விதத்தில் அவர்கள் பார்க்கமாட்டார்கள். நிராகரிப்பில் அவர்கள் பிடிவாதமாகவும் நிலையாகவும் இருப்பது நிரூபனமான பின்னால்தான் அது ஏற்பட்டது.

Yâsin 36:10

முஹம்மதே!- பிடிவாதம் கொண்ட இந்த நிராகரிப்பாளர்களுக்கு நீர் சத்தியத்தை கொண்டு எச்சரிக்கை செய்தாலும் அல்லது எச்சரிக்கை செய்யாவிட்டாலும் சரியே. அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நீர் கொண்டுவந்ததை நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.

Yâsin 36:11

நிச்சயமாக இந்த குர்ஆனை ஏற்றுக்கொண்டு, அதிலுள்ளதைப் பின்பற்றி யாரும் பார்க்காதவாறு தனிமையில் தன் இறைவனை அஞ்சியவர்தான் உம்முடைய எச்சரிக்கையின் மூலம் உண்மையாகப் பயனடைவார்கள். இந்த பண்புகளைப் பெற்றவர்களுக்கு, அல்லாஹ் அவர்களின் பாவங்களை அழித்து அவர்களை மன்னிப்பதோடு மறுமையில் சுவனத்தில் நுழைதல் என்னும் அவர்கள் எதிர்பார்க்கும் மகத்தான வெகுமதி கிடைக்கும் என்ற நற்செய்தியைக் கூறுவீராக.

Yâsin 36:12

நிச்சயமாக மறுமை நாளில் விசாரணை செய்வதற்காக அவர்களை எழுப்புவதன் மூலம் மரணித்தவர்களை நாம் உயிர்ப்பிப்போம். அவர்கள் இவ்வுலக வாழ்வில் செய்கின்ற நற்செயல்களையும் தீய செயல்களையும் நாம் பதிவு செய்கின்றோம். அவர்கள் இவ்வுலக வாழ்வில் விட்டுச்செல்கின்ற நிரந்தர தர்மம் போன்ற நிலையான நற்செயல்களையும் அல்லது நிராகரிப்புப் போன்ற நிலையான தீய செயல்களையும் நாம் பதிவு செய்கின்றோம். நாம் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் தெளிவான புத்தகத்திலே அனைத்தையும் கணக்கிட்டு வைத்துள்ளோம்.

Yâsin 36:13

தூதரே!- பிடிவாதம் கொண்ட இந்த பொய்ப்பிப்பவர்கள் படிப்பினை பெறும்பொருட்டு அவர்களுக்கு ஒரு உதாரணத்தை எடுத்துரைப்பீராக. அது தூதர்கள் வந்த ஒரு ஊர் மக்களைக் குறித்த சம்பவமாகும்.

Yâsin 36:14

நாம் அவர்களிடம் முதலில், அவர்களை அல்லாஹ்வை ஒருமைப்படுத்துமாறும் அவனை வணங்குமாறும் அழைக்கக்கூடிய இரு தூதர்களை அனுப்பியபோது அவர்கள் இருவரையும் அவர்கள் பொய்ப்பித்தார்கள். எனவே நாம் அவர்களுடன் மூன்றாவது ஒரு தூதரை அனுப்பி அவர்கள் இருவரையும் வலுப்படுத்தினோம். மூன்று தூதர்களும் அந்த ஊர் மக்களிடம் கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் -மூவரும்- அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன். அவனுடைய மார்க்கத்தையே பின்பற்ற வேண்டும் என்பதன் பக்கம் உங்களை அழைக்கக்கூடிய அல்லாஹ்வின் தூதர்களாவோம்.”

Yâsin 36:15

அந்த ஊர் மக்கள் தூதர்களிடம் கூறினார்கள்: “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள்தாம். எங்களைவிட உங்களுக்கு எந்தச் சிறப்பும் இல்லை. அளவில்லாக் கருணையாளன் உங்கள் மீது எதையும் இறக்கி வைக்கவில்லை. உங்களது இக்கூற்றில் நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுபவர்களே அன்றி வேறில்லை.”

Yâsin 36:16

ஊர் மக்களின் பொய்ப்பித்தலுக்கு பதிலாக மூன்று தூதர்களும் கூறினார்கள்: “-ஊர்மக்களே!- நிச்சயமாக நாங்கள் உங்களின்பால் அனுப்பப்பட்ட தூதர்கள்தாம் என்பதை எங்களின் இறைவன் நன்கறிவான். எங்களுக்கு ஆதாரமாக அமைவதற்கு அதுவே போதுமானது.

Yâsin 36:17

எங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை உங்களிடம் தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர எங்கள் மீது வேறு எந்த கடமையும் இல்லை. உங்களுக்கு நேர்வழியளிக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை.”

Yâsin 36:18

அந்த ஊர் மக்கள் தூதர்களிடம் கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்களை துர்ச்சகுனமாக கருதுகின்றோம். நீங்கள் ஓரிறைக் கொள்கையின்பால் எங்களை அழைப்பதை விட்டும் விலகிக் கொள்ளவில்லையெனில் கல்லால் அடித்து உங்களைக் கொன்று விடுவோம். திட்டமாக எங்களிடமிருந்து வேதனை மிக்க தண்டனையும் பெற்றுக்கொள்வீர்கள்.”

Yâsin 36:19

தூதர்கள் அவர்களுக்கு மறுப்பாகக் கூறினார்கள்: “உங்களின் துர்ச்சகுனம் அல்லாஹ்வை நிராகரித்ததனாலும் தூதர்களை பின்பற்றாமல் விட்ட காரணத்தினால் ஆகும். நாம் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுவதையா துர்ச்சகுனமாகக் கருதுகிறீர்கள்? மாறாக நீங்கள் நிராகரிப்பான செயல்கள் மற்றும் பாவங்களில் ஈடுபட்டு வரம்புமீறும் மக்களாக இருக்கின்றீர்கள்.”

Yâsin 36:20

தனது சமூகம் தூதர்களை பொய்ப்பித்து அவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் விபரீதத்தைப் பயந்ததனால் ஊரின் தூரமான இடத்திலிருந்து ஒருவர் விரைவாக வந்து கூறினார்: “என் சமூகத்தினரே! இத்தூதர்கள் கொண்டுவந்ததைப் பின்பற்றுங்கள்.

Yâsin 36:21

என் சமூகத்தினரே!- தாம் கொண்டுவந்ததை கூறுவதற்காக உங்களிடம் எந்த கூலியையும் எதிர்பார்க்காத இந்த தூதர்களைப் பின்பற்றுங்கள். அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹியின் மூலம் எடுத்துரைக்கும் விஷயங்களில் நேர்வழிபெற்றவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறு இருப்பவர்களே பின்பற்றத் தகுதியானவர்கள்.”

Yâsin 36:22

நலம் நாடிய அந்த மனிதர் தொடர்ந்து கூறினார்: “என்னைப் படைத்த அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் என்னைத் தடுப்பது எது? உங்களைப் படைத்த இறைவனை வணங்குவதை விட்டும் உங்களைத் தடுப்பது எது? கூலி கொடுக்கப்படுவதற்காக மறுமை நாளில் நீங்கள் அவன் பக்கமே திரும்ப வேண்டும்.

Yâsin 36:23

என்னைப் படைத்த அல்லாஹ்வை விடுத்து நான் அநியாயமாக மற்றவர்களை தெய்வங்களாக்கிக் கொள்வேனா? அளவிலாக் கருணையாளன் எனக்கு ஏதேனும் தீங்கிழைக்க நாடினால் இந்த தெய்வங்களின் பரிந்துரைகள் எனக்கு எந்தப் பயனையும் அளிக்காது. அவை எனக்கு பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தி பெறாது. நான் நிராகரித்த நிலையிலேயே இறந்தால் அல்லாஹ் எனக்கு நாடியிருக்கும் தீங்கிலிருந்து என்னைக் காப்பாற்ற அவை சக்தி பெறாது.

Yâsin 36:24

நிச்சயமாக நான் அவற்றை அல்லாஹ் அல்லாத தெய்வங்களைாக எடுத்துக்கொண்டால், வணக்கத்திற்குத் தகுதியானவனை வணங்குவதை விட்டுவிட்டு தகுதியற்றவர்களை வணங்கி தெளிவான வழிகேட்டில் வீழ்ந்து விடுவேன்.

Yâsin 36:25

என் சமூகமே!- நிச்சயமாக நான் என் இறைவனும் உங்கள் அனைவரின் இறைவனுமான அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டேன். எனவே நான் கூறுவதை காதுகொடுத்துக் கேளுங்கள். உங்களின் கொலை அச்சுறுத்தலை நான் பொருட்படுத்த மாட்டேன்.” அவர்கள் அந்த மனிதரைக் கொன்றுவிட்டார்கள். அல்லாஹ் அவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தான்.

Yâsin 36:26

அவரது வீரமரணத்தின் பின் அந்த மனிதரைக் கண்ணியப்படுத்தும்பொருட்டு அவரிடம், “சுவனத்தில் நுழைந்து விடுவீராக” என்று கூறப்பட்டது. அவர் சுவனத்தில் நுழைந்து அதிலுள்ள அருட்கொடைகளைக் கண்டவுடன் ஆசை கொண்டவராகக் கூறினார்: “என்னை பொய்ப்பித்து கொலை செய்த என் சமூகம் எனக்குக் கிடைத்த பாவமன்னிப்பையும் என் இறைவன் அளித்த கண்ணியத்தையும் அறிந்திருக்க வேண்டுமே! நான் நம்பிக்கைகொண்டது போல அவர்களும் நம்பிக்கைகொண்டிருப்பார்களே! நான் பெற்ற வெகுமதியை அவர்களும் பெற்றிருப்பார்களே!

Yâsin 36:27

தம் சமூகத்தினரால் கொல்லப்பட்ட அந்த மனிதரைக் கண்ணியப்படுத்தும்பொருட்டு அவரிடம், “சுவனத்தில் நுழைந்து விடுவீராக” என்று கூறப்பட்டது. அவர் சுவனத்தில் நுழைந்து அதிலுள்ள அருட்கொடைகளைக் கண்டவுடன் ஆசை கொண்டவராகக் கூறினார்: “என்னை நிராகரித்து கொலை செய்த என் சமூகம் எனக்குக் கிடைத்த பாவமன்னிப்பையும் என் இறைவன் அளித்த கண்ணியத்தையும் அறிந்திருக்க வேண்டுமே! நான் நம்பிக்கைகொண்டதுபோல அவர்களும் நம்பிக்கைகொண்டிருப்பார்களே! நான் பெற்ற வெகுமதியை அவர்களும் பெற்றிருப்பார்களே!

Yâsin 36:28

அவரை பொய்ப்பித்து கொலை செய்த அந்த சமூகத்தை அழிப்பதற்கு வானத்திலிருந்து வானவர்களின் ஒரு படையை இறக்கவில்லை. முன்சென்ற சமுதாயங்களை அழித்த போதும் வானவர்களை நாம் இறக்குவோராக இருக்கவில்லை. அவர்களின் விவகாரம் நம்மிடத்தில் அதைவிட எளிதானது. எனவே தண்டிக்கும் வானவர்களை இறக்காமல் வானத்திலிருந்து ஒரு பெரும் சப்தத்தை இறக்கி அவர்கள் அழியவேண்டுமென நாம் முடிவுசெய்திருந்தோம்.

Yâsin 36:29

அவரது சமுதாயத்தின் அழிவின் வரலாறு நாம் அவர்கள் மீது அனுப்பிய ஒரு சப்தம் மாத்திரமே. அதனால் அவர்கள் அனைவரும் செத்து மடிந்தார்கள். அவர்களில் யாரும் எஞ்சியிருக்கவில்லை. அவர்கள் எரிந்து பின்னர் அணைந்த நெருப்பைப் போன்று அடையாளமில்லாமல் ஆகிவிட்டார்கள்.

Yâsin 36:30

பொய்ப்பித்த அடியார்களின் மீது ஏற்பட்ட இழப்பே! மறுமை நாளில் அவர்கள் வேதனையைக் காணும்போதும் வருத்தப்படுவார்கள். இதற்கான காரணம், உலகில் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வரும் ஒவ்வொரு தூதரையும் அவர்கள் பரிகாசமும் கேலியும் செய்து கொண்டிருந்ததாகும். எனவேதான் அவர்கள் அல்லாஹ்வின் விடயத்தில் செய்த குறைகளுக்காக மறுமை நாளில் கைசேதப்படுவதே அவர்களது முடிவாகும்.

Yâsin 36:31

தூதர்களைப் பரிகாசம் செய்யும் இந்த பொய்ப்பிப்பவர்கள் தங்களுக்கு முந்தைய சமூகங்களைக் கொண்டு படிப்பினை பெறவில்லையா? அவர்கள் மரணித்துவிட்டார்கள். இனி மீண்டும் உலகத்தின் பக்கம் ஒருபோதும் திரும்ப மாட்டார்கள். மாறாக தாங்கள் செய்த செயல்களின் பக்கம் அவர்கள் சென்றுவிட்டார்கள். அவற்றிற்கேற்ப அல்லாஹ் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

Yâsin 36:32

மறுமை நாளில் அனைத்து சமூகங்களும் விதிவிலக்கின்றி மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்ட பிறகு அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்கப்படுவதற்காக நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்.

Yâsin 36:33

மறுமையில் மீண்டும் எழுப்பப்படுவதை பொய்ப்பிப்பவர்களுக்கு அது உண்மையே என்பதற்கான ஒரு சான்றுதான் இந்த வரண்ட பூமியாகும். அதன் மீது நாம் வானத்திலிருந்து மழை பொழியச் செய்து அதில் பலவகையான தாவரங்களையும் மனிதர்கள் உண்பதற்காக தானியங்களையும் விளையச் செய்கின்றோம். மழையை இறக்கி தாவரங்களை முளைக்கச் செய்வதன் மூலம் இந்த பூமியை உயிர்ப்பித்தவன் இறந்தவர்களை உயிர்ப்பித்து, எழுப்புவதற்கு ஆற்றலுடையவன்.

Yâsin 36:34

நாம் மழையை இறக்கிய இந்த பூமியில் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை உருவாக்கினோம். அவற்றில் அவற்றுக்கு நீர்பாய்ச்சும் நீருற்றுகளையும் பீறிட்டு ஓடச் செய்தோம்.

Yâsin 36:35

அந்த தோட்டங்களின் கனிகளிலிருந்து அல்லாஹ் அளித்த அருட்கொடையை மனிதர்கள் உண்பதற்காகத்தான். அதில் அவர்களின் எந்த முயற்சியும் இருக்கவில்லை. இவையனைத்தும் அவர்களுக்கு அருட்கொடையாக அளித்த அல்லாஹ்வுக்கு, அவனை மட்டுமே வணங்கி, அவனுடைய தூதர்கள் மீது நம்பிக்கைகொண்டு அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

Yâsin 36:36

பல வகையான தாவரங்களையும் மரங்களையும் மனிதர்களையும் நீரிலும் நிலத்திலும் மனிதர்கள் அறியாத வேறுபல படைப்பினங்களையும் ஆண், பெண் என இணைகளாகப் படைத்த இறைவன் பரிசுத்தமானவன்.

Yâsin 36:37

அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதற்கான சான்றுகளில் ஒன்று: “நிச்சயமாக நாம் இரவிலிருந்து பகலைக் கழற்றி இரவு சென்று பகல் வருவதன் மூலம் நாம் வெளிச்சத்தைப் போக்கி விடுகின்றோம். பகல் சென்ற பிறகு இருளைக் கொண்டுவந்து விடுகின்றோம். மனிதர்கள் இருளில் நுழைந்துவிடுகிறார்கள்.”

Yâsin 36:38

அவர்களுக்கு அல்லாஹ்வின் ஒருமைக்கான சான்றுகளில் ஒன்றுதான்: இந்தச் சூரியன். அது தனக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு நிர்ணயிக்கப்பட்டதை அல்லாஹ்வே அறிவான். அது அதனை மீறாது. இது யாவற்றையும் மிகைத்த, அவனை யாரும் மிகைக்க முடியாத அறிந்தவனான அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட விதியாகும். தனது படைப்பினங்களின் எந்த விடயமும் அவனுக்கு மறைவானதல்ல”

Yâsin 36:39

அவர்களுக்கு அல்லாஹ்வின் ஒருமைக்கான சான்றுகளில் ஒன்றுதான் இந்த சந்திரனாகும். நாம் அதற்கு ஒவ்வொரு இரவும் ஒரு நிலையை நிர்ணயித்துள்ளோம். அது சிறியதாகத் தொடங்கி பின்னர் பெரிதாகி பின்னர் காய்ந்து வளைந்து பழமையடைந்த மஞ்சள் நிற பேரீச்சங் குலைத் தண்டைப் போன்று சிறியதாகி விடுகிறது.

Yâsin 36:40

சூரியன், சந்திரன், இரவு, பகல் ஆகிய சான்றுகள் அல்லாஹ்வின் நிர்ணயத்தைக்கொண்டு முடிவுசெய்யப்பட்டதாகும். அவை தமக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறாது. சூரியன், சந்திரனின் பாதையை மாற்ற அல்லது அதன் ஒளியைப் போக்க சந்திரனைப் பிடிக்க முடியாது. இரவு பகலின் நேரம் முடிவடைவதற்கு முன்னரே அதில் நுழைந்து அதனை முந்த முடியாது. வசப்படுத்தப்பட்டுள்ள இந்த படைப்பினங்களுக்கும் ஏனைய கோள்களுக்கும் அல்லாஹ்வின் நிர்ணயத்தினாலும் பாதுகாப்பினாலும் ஏற்படுத்தப்பட்ட பிரத்யேகமான பாதைகள் உள்ளன.

Yâsin 36:41

அவர்களுக்கு அல்லாஹ் ஒருவனே என்பதற்கும் அடியார்களின் மீது பொழிந்த அருட்கொடைக்குமான சான்றுகளில் ஒன்று : நாம் ஆதமுடைய சந்ததியினரை நூஹின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்திலிருந்து அல்லாஹ்வின் படைப்பினங்களால் நிரம்பிய கப்பலில் ஏற்றி காப்பாற்றினோம். அல்லாஹ் ஒவ்வொரு உயிரினத்திலிருந்தும் ஒரு ஜோடியை அதில் ஏறச் செய்தான்.

Yâsin 36:42

அவர்களுக்கு அல்லாஹ் ஒருவனே என்பதற்கும் தன் அடியார்களின் மீது பொழிந்த அருட்கொடைக்குமான சான்றுகளில் ஒன்று: “நிச்சயமாக நாம் அவர்களுக்காக நூஹின் கப்பலைப் போன்று வாகனங்களையும் படைத்துள்ளோம்.”

Yâsin 36:43

நாம் அவர்களை மூழ்கடிக்க நாடியிருந்தால் மூழ்கடித்திருப்போம். நாம் மூழ்கடிக்க நாடினால் யாராலும் அவர்களுக்கு உதவ முடியாது. நமது கட்டளை மற்றும் விதிப்பிரகாரம் அவர்கள் மூழ்கினால் யாரும் அவர்களைக் காப்பாற்ற முடியாது.

Yâsin 36:44

ஆயினும் அவர்கள் படிப்பினை பெற்று நம்பிக்கைகொள்ளும் பொருட்டு அவர்கள் குறிப்பிட்ட தவணை வரை தாண்டாமல் அனுபவிப்பதற்காக நாம் அவர்களை மூழ்கடிக்காமல் காப்பாற்றி அவர்களை மீளச் செய்து கருணை காட்டினாலே அன்றி.

Yâsin 36:45

புறக்கணிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம், “அல்லாஹ் உங்களின் மீது கருணை காட்டும் பொருட்டு வரப்போகும் மறுமை விடயங்களையும் அதன் பயங்கரங்களையும் நீங்கள் விட்டுச்செல்லும் உலகத்தையும் அஞ்சிக்கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டால் அதன்படி செயல்படாமல் இருக்கிறார்கள். மாறாக அதனைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்து விடுகிறார்கள்.

Yâsin 36:46

பிடிவாதம் கொண்ட இந்த இணைவைப்பாளர்களிடம் அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை அறிவிக்கக்கூடிய சான்றுகள் வரும்போதெல்லாம் அவற்றைக்கொண்டு படிப்பினை பெறாமல் புறக்கணித்து விடுகிறார்கள்.

Yâsin 36:47

இந்த பிடிவாதக்காரர்களிடம், “அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய செல்வங்களிலிருந்து ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் உதவி செய்யுங்கள்” என்று கூறப்பட்டால் “நாங்கள் அவர்களுக்கு உணவளிப்பதா? அல்லாஹ் அவர்களுக்கு உணவளிக்க நாடியிருந்தால் உணவளித்திருக்க மாட்டானா? நாங்கள் அவனுடைய விருப்பத்திற்கு மாறாகச் செயல்பட மாட்டோம். -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் சத்தியத்தைவிட்டும் வெகுதூரமாகி தெளிவான தவறிலே இருக்கிறீர்கள்” என்று மறுத்துக் கூறுகிறார்கள்.

Yâsin 36:48

மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை சாத்தியமற்றதாகக் கருதி அதனை பொய்ப்பித்து அதனை மறுக்கும் நிராகரிப்பாளர்கள் கேட்கிறார்கள்: “-நம்பிக்கையாளர்களே!- நீங்கள் உங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் நிச்சயமாக அவ்வாறு எழுப்பப்படுவது எப்போது நிகழும்? என்று கூறுங்கள்.”

Yâsin 36:49

மீண்டும் எழுப்பப்படுவதை சாத்தியமற்றதாகக் கருதும் இந்த பொய்ப்பிப்பாளர்கள் சூர் ஊதப்படுவதில் முதலாவது முறையாக ஊதப்படுவதையே எதிர்பார்க்கிறார்கள். விற்றல், வாங்குதல் நீர்ப்பாய்ச்சுதல், மேய்த்தல் போன்ற தங்களின் உலக அலுவல்களில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே இந்தப் பேரொலி அவர்களைத் தாக்கிவிடும்.

Yâsin 36:50

இந்தப் பேரொலியை திடீரென எதிர்கொள்ளும் அவர்களால் ஒருவருக்கொருவர் வஸிய்யத் செய்து கொள்ளவோ, தங்களின் வீடுகளுக்கு, குடும்பத்தினரிடம் திரும்பிச் செல்ல முடியாது. மாறாக தங்களின் இந்த காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவர்கள் மரணித்துவிடுவார்கள்.

Yâsin 36:51

மீண்டும் எழுப்பப்படுவதற்காக இரண்டாவது முறை சூர் ஊதப்படும் போது அவர்கள் தங்களின் மண்ணறைகளிலிருந்து விசாரணைக்காகவும் கூலிபெறுவதற்காகவும் விரைவாக வெளிப்பட்டு வருவார்கள்.

Yâsin 36:52

மீணடும் எழுப்பப்படுவதை பொய்ப்பிக்கும் இந்த நிராகரிப்பாளர்கள் வருத்தப்பட்டுக் கூறுவார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட இழப்பே! எங்களின் மண்ணறைகளிலிருந்து எங்களை உயிர்பித்தவன் யார்?” அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கப்படும்: “இதுதான் அல்லாஹ் அளித்த வாக்குறுதியாகும். நிச்சயமாக அது நிகழ்ந்தே தீரும். அதைப்பற்றி தூதர்கள் எடுத்துரைத்ததில் அவர்கள் உண்மையே கூறினார்கள்.

Yâsin 36:53

மண்ணறைகளிலிருந்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவது இரண்டாவது முறையாக சூர் ஊதப்பட்டதன் அடையாளமாக நிகழும். அப்போது படைப்புகள் அனைத்தும் விசாரணைக்காக நம்மிடம் கொண்டு வரப்படுவார்கள்.

Yâsin 36:54

அந்த நாளில் நியாயமாக தீர்ப்பளிக்கப்படும். -அடியார்களே!- உங்களின் தீமைகள் அதிகரிக்கப்பட்டோ, நன்மைகள் குறைக்கப்பட்டோ நீங்கள் சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். நிச்சயமாக நீங்கள் உலகில் செய்து கொண்டிருந்த செயல்களுக்கு நிறைவாக கூலி வழங்கப்படுவீர்கள்.

Yâsin 36:55

நிச்சயமாக சுவனவாசிகள் அந்த நாளில் தாங்கள் காணும் நிலையான அருட்கொடை மற்றும் மகத்தான வெற்றியினால் மற்றவர்களைப் பற்றி சிந்திக்க நேரமற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் மகிழ்ச்சியடைந்தோராக அதில் திளைத்திருப்பார்கள்.

Yâsin 36:56

அவர்களும் அவர்களின் மனைவியரும் பசுமையான சுவனத்தின் நிழலில் கட்டிலின் மீது சாய்ந்திருப்பார்கள்.

Yâsin 36:57

அந்த சுவனத்தில் அவர்களுக்கு திராட்சை, அத்தி, மாதுளம் ஆகிய நல்ல பலவகையான பழங்களும் அவர்கள் விரும்பும் சுவையான அத்தனை இன்பங்களும் உண்டு. அவர்கள் வேண்டுவதெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும்.

Yâsin 36:58

அந்த அருட்கொடைகளுக்கு மேலாக கருணை மிகுந்த இறைவனிடமிருந்து அவர்களுக்கு சலாமும் கூறப்படும். அவன் அவர்களுக்கு சலாம் கூறிவிட்டால் அவர்கள் அமைதியின் அனைத்து வடிவங்களையும் பெற்றுவிடுவார்கள். அவர்கள் மிக உயர்ந்த முகமனைப் பெறுவார்கள். அதற்கு மேலாக எந்த முகமனும் இல்லை.

Yâsin 36:59

மறுமை நாளில் இணைவைப்பாளர்களிடம் கூறப்படும்: “நம்பிக்கையாளர்களை விட்டு தனித்து நில்லுங்கள். அவர்களின் பண்புகளும் உங்களின் பண்புகளும் அவர்கள் பெறும் கூலியும் நீங்கள் பெறும் கூலியும் வேறுவேறாக இருப்பதால் அவர்கள் உங்களுடன் நிற்பது தகுதியற்றதாகும்.

Yâsin 36:60

”ஆதமின் மக்களே! நீங்கள் நிராகரித்து பல வகையான பாவங்கள் புரிந்து ஷைத்தானுக்குக் கட்டுப்படாதீர்கள். நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகிரங்கமான பகைவனாவான்” என்று என் தூதர்களின் மூலம் ஏவி நான் உங்களுக்கு உறுதிமொழி வழங்கவில்லையா? தனது பகைமையைத் தெளிவாக வெளிப்படுத்தும் தனது எதிரிக்கு ஒரு அறிவாளி எவ்வாறு கட்டுப்படலாம்?!

Yâsin 36:61

ஆதமின் மக்களே!- நீங்கள் என்னை மட்டுமே வணங்குங்கள். எனக்கு யாரையும் இணையாக்காதீர்கள். என்று உங்களுக்கு நான் ஏவியிருந்தேன். ஏனெனில் என்னை மட்டுமே வணங்கி எனக்குக் கட்டுப்படுவதுதான் என் திருப்தியின் பக்கமும் , சுவனத்தின் பக்கமும் கொண்டு செல்லும் நேரான வழியாகும். ஆயினும் நான் ஏவியபடி, உங்களிடம் உறுதிமொழி எடுத்தபடி நீங்கள் செயல்படவில்லை.

Yâsin 36:62

ஷைத்தான் உங்களில் அதிகமானோரை வழிகெடுத்துவிட்டான். இறைவனை மட்டுமே வணங்குமாறும் அவனுக்கு மட்டுமே கட்டுப்படுமாறும் உங்களின் பகிரங்க எதிரியான ஷைத்தானுக்குக் கட்டுப்படாமல் எச்சரிக்கையாக இருக்குமாறும் உங்களுக்குக் கட்டளையிடும் அறிவு உங்களுக்கு இருக்கவில்லையா?

Yâsin 36:63

நிராகரிப்பின் காரணமாக உலகில் உங்களுக்கு எச்சரிக்கப்பட்ட நரகம் இதுதான். அது உங்களை விட்டும் மறைவாக இருந்தது. இன்றைய தினம் நீங்கள் அதனை நேரடியாகக் காண்கிறீர்கள்.

Yâsin 36:64

உங்களின் உலக வாழ்வில் அல்லாஹ்வை நிராகரித்ததனால் இன்றைய தினம் அதில் நுழைந்து அதன் வெப்பத்தை அனுபவியுங்கள்.

Yâsin 36:65

இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிட்டு விடுவோம். தங்களின் நிராகரிப்பான செயல்கள் மற்றும் அவர்கள் செய்த பாவங்களை மறுத்து பேச முடியாத ஊமைகளாகி விடுவார்கள். அவர்கள் உலகில் செய்து கொண்டிருந்தது குறித்து அவர்களின் கைகள் நம்மிடம் பேசும். அவர்கள் செய்து கொண்டிருந்த பாவங்கள், அதன்பால் நடந்து சென்றவைகள் குறித்து அவர்களின் கால்கள் நம்மிடம் சாட்சி கூறும்.

Yâsin 36:66

அவர்களின் பார்வையை நாம் போக்க நாடியிருந்தால் அதனைப் போக்கியிருப்போம். அவர்கள் பார்க்க முடியாமல் சென்றிருப்பார்கள். அவர்கள் சுவனத்தின்பால் செல்லும் பாதையைக் கடந்து செல்ல போட்டி போடுவார்கள் . அவர்களின் பார்வை பறிபோன நிலையில் அவர்களால் அதனை கடக்க முடியாது.

Yâsin 36:67

நாம் அவர்களின் தோற்றத்தை மாற்றி அவர்களை அவர்களின் இடத்திலேயே ஆக்க நாடியிருந்தால் அவர்களின் தோற்றத்தை மாற்றி அவர்களை அவர்களுடையே இடத்திலே ஆக்கியிருப்போம். அப்போது முன்னால் அல்லது பின்னால் செல்ல முடியாமல் அதே இடத்திலேயே இருந்துவிடுவார்கள்.

Yâsin 36:68

நாம் மனிதர்களில் யாருடைய வாழ்நாளை நீடிக்கிறோமோ அவர்களை பலவீனமான நிலைக்கு திரும்பச் செய்கின்றோம். அவர்கள் தமது சிந்தனைகளால் சிந்தித்து, நிச்சயமாக இந்த உலகம் நிரந்தரமானதல்ல. மறுமையின் வீடே நிரந்தரமான வீடு என்பதை உணர்ந்து கொள்ள மாட்டார்களா?

Yâsin 36:69

நாம் முஹம்மதுக்கு கவிதையை கற்றுக்கொடுக்கவில்லை. அது அவருக்குத் தகுமானதன்று. நிச்சயமாக அவர் கவிஞர் என நீங்கள் வாதிடுவது சரி என்பதற்கு கவிதை அவரது இயல்பு அல்ல. அவரது இயல்புக்கு அவசியமானதும் அல்ல. அவருக்கு நாம் கற்றுக்கொடுத்தது நினைவூட்டலும் சிந்திக்கக்கூடியவர்களுக்குத் தெளிவான குர்ஆனுமாகும்.

Yâsin 36:70

அது யாருடைய உள்ளம் அகவொளி பெற்று உயிருடன் உள்ளதோ அவருக்கு எச்சரிக்கை செய்வதற்காக. அவர் தான் அதனைக்கொண்டு பயனடைவார். (அது) நிராகரிப்பாளர்களின் மீது வேதனையை உறுதிப்படுத்துவதற்காகவும்தான். ஏனெனில், தூதர் அனுப்பப்பட்டு, அழைப்பு அவர்களை சென்றடைந்து அவர்களுக்கு எதிராக ஆதாரம் நிலைநாட்டப்பட்டுவிட்டது. சாட்டுப்போக்குக் கூறுவதற்கு எக்காரணமும் இல்லை.

Yâsin 36:71

நிச்சயமாக நாம் அவர்களுக்காக கால்நடைகளைப் படைத்துள்ளோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்கள் அந்த கால்நடைகளுக்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள். தங்களின் நலன்களுக்காக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

Yâsin 36:72

நாம் அவற்றை அவர்களுக்கு வசப்படுத்தி கட்டுப்பட்டவையாக ஆக்கியுள்ளோம். அவற்றில் சிலவற்றின் முதுகுகளில் அவர்கள் சவாரி செய்கிறார்கள். தங்களின் சுமைகளை ஏற்றிச்செல்கிறார்கள். சிலவற்றின் மாமிசத்தை உண்கிறார்கள்.

Yâsin 36:73

அவற்றின் முதுகுகளில் சவாரி செய்வது, அவற்றின் இறைச்சியை உண்பது என்பவற்றைத் தவிர அவர்களுக்கு அவற்றில் இன்னும் பல பயன்களும் இருக்கின்றன. உதாரணமாக அவற்றின் தோல்கள், உரோமங்கள், முடி, பெறுமதி. அதிலிருந்து அவர்கள் விரிப்புகளையும் ஆடைகளையும் செய்கிறார்கள். அதிலே அவர்களுக்கு குடிபானமும் இருக்கிறது. அவற்றின் பாலை அருந்தவும் செய்கிறார்கள். அல்லாஹ் அவர்கள் மீது பொழிந்த இந்த அருட்கொடைகளுக்கும் இது அல்லாத எனையவற்றுக்கும் அவர்கள் நன்றிசெலுத்த மாட்டார்களா?

Yâsin 36:74

இணைவைப்பாளர்கள் தங்களுக்கு உதவி செய்யும்பொருட்டு அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை தெய்வங்களாக ஆக்கிக் கொண்டார்கள். அவை அவர்களை அல்லாஹ்வின் வேதனையிலிருந்து பாதுகாத்து உதவும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் அவற்றை வணங்கி வழிபடுகின்றனர்.

Yâsin 36:75

அவர்கள் ஏற்படுத்திய அந்த தெய்வங்கள் தமக்குத் தாமே உதவிசெய்து கொள்ளவோ, தங்களை வணங்குபவர்களுக்கு உதவிசெய்யவோ சக்தி பெற மாட்டா. அவர்களும், அவர்கள் வணங்கிய சிலைகளும் வேதனையில் ஒன்றுசேர்க்கப்படுவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் மற்றவர்களை விட்டு விலகி விடுவார்கள்.

Yâsin 36:76

தூதரே!- “நிச்சயமாக நீர் தூதர் அல்ல, அல்லது நிச்சயமாக நீர் ஒரு கவிஞர்” என்று அவர்களின் கூறும் வார்த்தைகளும் எனைய அவதூறுகளும் உம்மைக் கவலையில் ஆழ்த்திவிட வேண்டாம். நிச்சயமாக அவர்கள் அவற்றில் மறைத்து வைத்திருப்பதையும் வெளிப்படுத்துவதையும் நாம் அறிவோம். அவற்றில் எதுவும் நம்மைவிட்டு மறைவாக இல்லை. அதற்கேற்ப நாம் அவர்களுக்குக் கூலி வழங்குவோம்.

Yâsin 36:77

மரணத்திற்குப் பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் மனிதன் நிச்சயமாக நாம் அவனை விந்திலிருந்து படைத்தோம் என்பதைக் கவனிக்கவில்லையா? பின்னர் அவன் பல நிலைகளைக் கடந்து குழந்தையாகி வளர்ச்சியடைகிறான். பின்னர் அவன் கடும் தர்க்கம் புரிபவனாகி விடுகிறான். இதனை அவன் மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவது சாத்தியம் என்பதற்கான ஆதாரமாகக் கருதவில்லையா?

Yâsin 36:78

உக்கிப்போன எலும்புகளை வைத்து, மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை சாத்தியமற்றதாகக் கருதும் இந்த நிராகரிப்பாளன் அறியாமையில் ஆழ்ந்துவிட்டான். ஒன்றுமில்லாத வெறுமையிலிருந்து படைக்கப்பட்டதை மறந்த நிலையில் அவன், ”இந்த எலும்புகளை மீண்டும் உயிர்ப்பிப்பவன் யார்?” என்று கேட்கிறான்.

Yâsin 36:79

தூதரே!- நீர் அவனிடம் பதில் கூறுவீராக: “அந்த உக்கிப்போன எலும்புகளை முதன் முறையாகப் படைத்தவனே அவற்றை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான். முதன் முறையாகப் படைத்தவனுக்கு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவது இயலாத ஒன்றல்ல. அவன் தன் ஒவ்வொரு படைப்பைக் குறித்தும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

Yâsin 36:80

மனிதர்களே!- அவனே உங்களுக்காக ஈரமான, பச்சை நிற மரத்திலிருந்து நெருப்பை உண்டாக்கினான். அதிலிருந்து நீங்கள் தீயை மூட்டுகிறீர்கள். -பச்சை மர நீரின் ஈரம் அதில் உள்ள எரியும் நெருப்பு- ஆகியவற்றுக்கிடையில் இந்த இரண்டு எதிரெதிர் விஷயங்களையும் ஒன்றிணைத்தவன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்.

Yâsin 36:81

பிரமாண்டமான வானங்களையும் பூமியையும் படைத்தவன் மரணிக்கச் செய்ததன் பின் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும் ஆற்றலுடையவன் இல்லையா? ஆம் நிச்சயமாக அவன் இதற்கு ஆற்றலுடையவன்தான். அவன்தான் படைப்புகள் அனைத்தையும் படைத்தவன். அவற்றைக் குறித்து நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

Yâsin 36:82

நிச்சயமாக அல்லாஹ் ஏதேனும் ஒன்றை உருவாக்க நாடினால் ஆகு என்றுதான் கூறுகிறான். அவன் நாடிய அந்த விடயம் ஆகிவிடுகிறது. இவ்வாறுதான் அவன் நாடியவர்களை உயிர்ப்பிக்கிறான், மரணிக்கச் செய்கிறான், மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புகிறான். இவை அல்லாதவற்றையும் செய்கிறான்.

Yâsin 36:83

அல்லாஹ் இயலாதவன் என இணைவைப்பாளர்கள் இணைத்து கூறுவதை விட்டும் அவன் பரிசுத்தமானவன். படைப்புகள் அனைத்தின் அதிகாரமும் அவன் கைவசமே உள்ளது. அவன் தான் நாடியவாறு அவற்றைச் செயல்படுத்துகிறான். ஒவ்வொரு பொருளின் திறவுகோலும் அவன் கைவசமே உள்ளது. மறுமை நாளில் நீங்கள் அவன் பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.