Lafzullah

Tamil Mokhtasar — Saffat 37:1 – Fussılet 41:54

Author / source: Tamil Mokhtasar

Contents
  1. Saffat 37:1
  2. Saffat 37:2
  3. Saffat 37:3
  4. Saffat 37:4
  5. Saffat 37:5
  6. Saffat 37:6
  7. Saffat 37:7
  8. Saffat 37:8
  9. Saffat 37:9
  10. Saffat 37:10
  11. Saffat 37:11
  12. Saffat 37:12
  13. Saffat 37:13
  14. Saffat 37:14
  15. Saffat 37:15
  16. Saffat 37:16
  17. Saffat 37:17
  18. Saffat 37:18
  19. Saffat 37:19
  20. Saffat 37:20
  21. Saffat 37:21
  22. Saffat 37:22
  23. Saffat 37:23
  24. Saffat 37:24
  25. Saffat 37:25
  26. Saffat 37:26
  27. Saffat 37:27
  28. Saffat 37:28
  29. Saffat 37:29
  30. Saffat 37:30
  31. Saffat 37:31
  32. Saffat 37:32
  33. Saffat 37:33
  34. Saffat 37:34
  35. Saffat 37:35
  36. Saffat 37:36
  37. Saffat 37:37
  38. Saffat 37:38
  39. Saffat 37:39
  40. Saffat 37:40
  41. Saffat 37:41
  42. Saffat 37:42
  43. Saffat 37:43
  44. Saffat 37:44
  45. Saffat 37:45
  46. Saffat 37:46
  47. Saffat 37:47
  48. Saffat 37:48
  49. Saffat 37:49
  50. Saffat 37:50
  51. Saffat 37:51
  52. Saffat 37:52
  53. Saffat 37:53
  54. Saffat 37:54
  55. Saffat 37:55
  56. Saffat 37:56
  57. Saffat 37:57
  58. Saffat 37:58
  59. Saffat 37:59
  60. Saffat 37:60
  61. Saffat 37:61
  62. Saffat 37:62
  63. Saffat 37:63
  64. Saffat 37:64
  65. Saffat 37:65
  66. Saffat 37:66
  67. Saffat 37:67
  68. Saffat 37:68
  69. Saffat 37:69
  70. Saffat 37:70
  71. Saffat 37:71
  72. Saffat 37:72
  73. Saffat 37:73
  74. Saffat 37:74
  75. Saffat 37:75
  76. Saffat 37:76
  77. Saffat 37:77
  78. Saffat 37:78
  79. Saffat 37:79
  80. Saffat 37:80
  81. Saffat 37:81
  82. Saffat 37:82
  83. Saffat 37:83
  84. Saffat 37:84
  85. Saffat 37:85
  86. Saffat 37:86
  87. Saffat 37:87
  88. Saffat 37:88
  89. Saffat 37:89
  90. Saffat 37:90
  91. Saffat 37:91
  92. Saffat 37:92
  93. Saffat 37:93
  94. Saffat 37:94
  95. Saffat 37:95
  96. Saffat 37:96
  97. Saffat 37:97
  98. Saffat 37:98
  99. Saffat 37:99
  100. Saffat 37:100
  101. Saffat 37:101
  102. Saffat 37:102
  103. Saffat 37:103
  104. Saffat 37:104
  105. Saffat 37:105
  106. Saffat 37:106
  107. Saffat 37:107
  108. Saffat 37:108
  109. Saffat 37:109
  110. Saffat 37:110
  111. Saffat 37:111
  112. Saffat 37:112
  113. Saffat 37:113
  114. Saffat 37:114
  115. Saffat 37:115
  116. Saffat 37:116
  117. Saffat 37:117
  118. Saffat 37:118
  119. Saffat 37:119
  120. Saffat 37:120
  121. Saffat 37:121
  122. Saffat 37:122
  123. Saffat 37:123
  124. Saffat 37:124
  125. Saffat 37:125
  126. Saffat 37:126
  127. Saffat 37:127
  128. Saffat 37:128
  129. Saffat 37:129
  130. Saffat 37:130
  131. Saffat 37:131
  132. Saffat 37:132
  133. Saffat 37:133
  134. Saffat 37:134
  135. Saffat 37:135
  136. Saffat 37:136
  137. Saffat 37:137
  138. Saffat 37:138
  139. Saffat 37:139
  140. Saffat 37:140
  141. Saffat 37:141
  142. Saffat 37:142
  143. Saffat 37:143
  144. Saffat 37:144
  145. Saffat 37:145
  146. Saffat 37:146
  147. Saffat 37:147
  148. Saffat 37:148
  149. Saffat 37:149
  150. Saffat 37:150
  151. Saffat 37:151
  152. Saffat 37:152
  153. Saffat 37:153
  154. Saffat 37:154
  155. Saffat 37:155
  156. Saffat 37:156
  157. Saffat 37:157
  158. Saffat 37:158
  159. Saffat 37:159
  160. Saffat 37:160
  161. Saffat 37:161
  162. Saffat 37:162
  163. Saffat 37:163
  164. Saffat 37:164
  165. Saffat 37:165
  166. Saffat 37:166
  167. Saffat 37:167
  168. Saffat 37:168
  169. Saffat 37:169
  170. Saffat 37:170
  171. Saffat 37:171
  172. Saffat 37:172
  173. Saffat 37:173
  174. Saffat 37:174
  175. Saffat 37:175
  176. Saffat 37:176
  177. Saffat 37:177
  178. Saffat 37:178
  179. Saffat 37:179
  180. Saffat 37:180
  181. Saffat 37:181
  182. Saffat 37:182
  183. Sâd 38:1
  184. Sâd 38:2
  185. Sâd 38:3
  186. Sâd 38:4
  187. Sâd 38:5
  188. Sâd 38:6
  189. Sâd 38:7
  190. Sâd 38:8
  191. Sâd 38:9
  192. Sâd 38:10
  193. Sâd 38:11
  194. Sâd 38:12
  195. Sâd 38:13
  196. Sâd 38:14
  197. Sâd 38:15
  198. Sâd 38:16
  199. Sâd 38:17
  200. Sâd 38:18
  201. Sâd 38:19
  202. Sâd 38:20
  203. Sâd 38:21
  204. Sâd 38:22
  205. Sâd 38:23
  206. Sâd 38:24
  207. Sâd 38:25
  208. Sâd 38:26
  209. Sâd 38:27
  210. Sâd 38:28
  211. Sâd 38:29
  212. Sâd 38:30
  213. Sâd 38:31
  214. Sâd 38:32
  215. Sâd 38:33
  216. Sâd 38:34
  217. Sâd 38:35
  218. Sâd 38:36
  219. Sâd 38:37
  220. Sâd 38:38
  221. Sâd 38:39
  222. Sâd 38:40
  223. Sâd 38:41
  224. Sâd 38:42
  225. Sâd 38:43
  226. Sâd 38:44
  227. Sâd 38:45
  228. Sâd 38:46
  229. Sâd 38:47
  230. Sâd 38:48
  231. Sâd 38:49
  232. Sâd 38:50
  233. Sâd 38:51
  234. Sâd 38:52
  235. Sâd 38:53
  236. Sâd 38:54
  237. Sâd 38:55
  238. Sâd 38:56
  239. Sâd 38:57
  240. Sâd 38:58
  241. Sâd 38:59
  242. Sâd 38:60
  243. Sâd 38:61
  244. Sâd 38:62
  245. Sâd 38:63
  246. Sâd 38:64
  247. Sâd 38:65
  248. Sâd 38:66
  249. Sâd 38:67
  250. Sâd 38:68
  251. Sâd 38:69
  252. Sâd 38:70
  253. Sâd 38:71
  254. Sâd 38:72
  255. Sâd 38:73
  256. Sâd 38:74
  257. Sâd 38:75
  258. Sâd 38:76
  259. Sâd 38:77
  260. Sâd 38:78
  261. Sâd 38:79
  262. Sâd 38:80
  263. Sâd 38:81
  264. Sâd 38:82
  265. Sâd 38:83
  266. Sâd 38:84
  267. Sâd 38:85
  268. Sâd 38:86
  269. Sâd 38:87
  270. Sâd 38:88
  271. Zümer 39:1
  272. Zümer 39:2
  273. Zümer 39:3
  274. Zümer 39:4
  275. Zümer 39:5
  276. Zümer 39:6
  277. Zümer 39:7
  278. Zümer 39:8
  279. Zümer 39:9
  280. Zümer 39:10
  281. Zümer 39:11
  282. Zümer 39:12
  283. Zümer 39:13
  284. Zümer 39:14
  285. Zümer 39:15
  286. Zümer 39:16
  287. Zümer 39:17
  288. Zümer 39:18
  289. Zümer 39:19
  290. Zümer 39:20
  291. Zümer 39:21
  292. Zümer 39:22
  293. Zümer 39:23
  294. Zümer 39:24
  295. Zümer 39:25
  296. Zümer 39:26
  297. Zümer 39:27
  298. Zümer 39:28
  299. Zümer 39:29
  300. Zümer 39:30
  301. Zümer 39:31
  302. Zümer 39:32
  303. Zümer 39:33
  304. Zümer 39:34
  305. Zümer 39:35
  306. Zümer 39:36
  307. Zümer 39:37
  308. Zümer 39:38
  309. Zümer 39:39
  310. Zümer 39:40
  311. Zümer 39:41
  312. Zümer 39:42
  313. Zümer 39:43
  314. Zümer 39:44
  315. Zümer 39:45
  316. Zümer 39:46
  317. Zümer 39:47
  318. Zümer 39:48
  319. Zümer 39:49
  320. Zümer 39:50
  321. Zümer 39:51
  322. Zümer 39:52
  323. Zümer 39:53
  324. Zümer 39:54
  325. Zümer 39:55
  326. Zümer 39:56
  327. Zümer 39:57
  328. Zümer 39:58
  329. Zümer 39:59
  330. Zümer 39:60
  331. Zümer 39:61
  332. Zümer 39:62
  333. Zümer 39:63
  334. Zümer 39:64
  335. Zümer 39:65
  336. Zümer 39:66
  337. Zümer 39:67
  338. Zümer 39:68
  339. Zümer 39:69
  340. Zümer 39:70
  341. Zümer 39:71
  342. Zümer 39:72
  343. Zümer 39:73
  344. Zümer 39:74
  345. Zümer 39:75
  346. Mü'min 40:1
  347. Mü'min 40:2
  348. Mü'min 40:3
  349. Mü'min 40:4
  350. Mü'min 40:5
  351. Mü'min 40:6
  352. Mü'min 40:7
  353. Mü'min 40:8
  354. Mü'min 40:9
  355. Mü'min 40:10
  356. Mü'min 40:11
  357. Mü'min 40:12
  358. Mü'min 40:13
  359. Mü'min 40:14
  360. Mü'min 40:15
  361. Mü'min 40:16
  362. Mü'min 40:17
  363. Mü'min 40:18
  364. Mü'min 40:19
  365. Mü'min 40:20
  366. Mü'min 40:21
  367. Mü'min 40:22
  368. Mü'min 40:23
  369. Mü'min 40:24
  370. Mü'min 40:25
  371. Mü'min 40:26
  372. Mü'min 40:27
  373. Mü'min 40:28
  374. Mü'min 40:29
  375. Mü'min 40:30
  376. Mü'min 40:31
  377. Mü'min 40:32
  378. Mü'min 40:33
  379. Mü'min 40:34
  380. Mü'min 40:35
  381. Mü'min 40:36
  382. Mü'min 40:37
  383. Mü'min 40:38
  384. Mü'min 40:39
  385. Mü'min 40:40
  386. Mü'min 40:41
  387. Mü'min 40:42
  388. Mü'min 40:43
  389. Mü'min 40:44
  390. Mü'min 40:45
  391. Mü'min 40:46
  392. Mü'min 40:47
  393. Mü'min 40:48
  394. Mü'min 40:49
  395. Mü'min 40:50
  396. Mü'min 40:51
  397. Mü'min 40:52
  398. Mü'min 40:53
  399. Mü'min 40:54
  400. Mü'min 40:55
  401. Mü'min 40:56
  402. Mü'min 40:57
  403. Mü'min 40:58
  404. Mü'min 40:59
  405. Mü'min 40:60
  406. Mü'min 40:61
  407. Mü'min 40:62
  408. Mü'min 40:63
  409. Mü'min 40:64
  410. Mü'min 40:65
  411. Mü'min 40:66
  412. Mü'min 40:67
  413. Mü'min 40:68
  414. Mü'min 40:69
  415. Mü'min 40:70
  416. Mü'min 40:71
  417. Mü'min 40:72
  418. Mü'min 40:73
  419. Mü'min 40:74
  420. Mü'min 40:75
  421. Mü'min 40:76
  422. Mü'min 40:77
  423. Mü'min 40:78
  424. Mü'min 40:79
  425. Mü'min 40:80
  426. Mü'min 40:81
  427. Mü'min 40:82
  428. Mü'min 40:83
  429. Mü'min 40:84
  430. Mü'min 40:85
  431. Fussılet 41:1
  432. Fussılet 41:2
  433. Fussılet 41:3
  434. Fussılet 41:4
  435. Fussılet 41:5
  436. Fussılet 41:6
  437. Fussılet 41:7
  438. Fussılet 41:8
  439. Fussılet 41:9
  440. Fussılet 41:10
  441. Fussılet 41:11
  442. Fussılet 41:12
  443. Fussılet 41:13
  444. Fussılet 41:14
  445. Fussılet 41:15
  446. Fussılet 41:16
  447. Fussılet 41:17
  448. Fussılet 41:18
  449. Fussılet 41:19
  450. Fussılet 41:20
  451. Fussılet 41:21
  452. Fussılet 41:22
  453. Fussılet 41:23
  454. Fussılet 41:24
  455. Fussılet 41:25
  456. Fussılet 41:26
  457. Fussılet 41:27
  458. Fussılet 41:28
  459. Fussılet 41:29
  460. Fussılet 41:30
  461. Fussılet 41:31
  462. Fussılet 41:32
  463. Fussılet 41:33
  464. Fussılet 41:34
  465. Fussılet 41:35
  466. Fussılet 41:36
  467. Fussılet 41:37
  468. Fussılet 41:38
  469. Fussılet 41:39
  470. Fussılet 41:40
  471. Fussılet 41:41
  472. Fussılet 41:42
  473. Fussılet 41:43
  474. Fussılet 41:44
  475. Fussılet 41:45
  476. Fussılet 41:46
  477. Fussılet 41:47
  478. Fussılet 41:48
  479. Fussılet 41:49
  480. Fussılet 41:50
  481. Fussılet 41:51
  482. Fussılet 41:52
  483. Fussılet 41:53
  484. Fussılet 41:54

Saffat 37:1

வணக்க வழிபாட்டிற்காக வரிசையாக அணிவகுத்து நிற்கும் வானவர்கள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

Saffat 37:2

மேகங்களை அல்லாஹ் நாடிய இடத்தில் பொழிய வைப்பதற்காக ஓட்டிச் செல்லும் வானவர்கள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

Saffat 37:3

குர்ஆன் ஓதக்கூடிய வானவர்கள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

Saffat 37:4

மனிதர்களே!- நிச்சயமாக உங்களின் வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் ஒருவன்தான். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவனே அல்லாஹ்.

Saffat 37:5

அவன் வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கு இடைப்பட்டுள்ளவற்றின் இறைவன். வருடம் முழுவதும் சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் திசைகளின் இறைவன்.

Saffat 37:6

நிச்சயமாக நாம் பூமிக்கு அருகிலிருக்கும் வானத்தை பார்வைக்கு மின்னக்கூடிய முத்துக்களைப் போன்ற நட்சத்திரங்களைக் கொண்டு அலங்கரித்துள்ளோம்.

Saffat 37:7

நட்சத்திரங்களைக் கொண்டு அருகிலிருக்கும் உலக வானத்தை வழிப்படாமல் இருக்கும் மூர்க்கத்தனமான ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் பாதுகாத்துள்ளோம். அவற்றைக் கொண்டு அந்த ஷைத்தான்கள் எறியப்படுகிறார்கள்.

Saffat 37:8

வானத்தில் வானவர்கள் தங்கள் இறைவன் அவனுடைய சட்ட, ஏற்பாடு ரீதியாக வஹி அறிவித்த செய்திகளைக் குறித்து பேசிக் கொண்டிருப்பதை அந்த ஷைத்தான்கள் செவியேற்க முடியாது. அவர்கள் எல்லா புறத்திலிருந்தும் எரிகொள்ளிகளால் எரியப்படுவார்கள்.

Saffat 37:9

வானவர்களின் உரையாடலை செவியேற்பதை விட்டும் தூரமாக்கும் பொருட்டு அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மறுமையில் என்றும் முடிவடையாத நிலையான கடும் வேதனையுண்டு.

Saffat 37:10

ஆயினும் திருட்டுத்தனமாக எதையேனும் ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்டாலே தவிர. அது பூமியிலுள்ளவர்களுக்குத் தெரியாத வானவர்கள் தங்களுக்குள் உரையாடும் விஷயமாகும். அப்போது பிரகாசமான தீப்பந்தம் அவனைப் பின்தொடர்ந்து அவனை எரித்து விடுகிறது. சில சமயங்களில் அவன் எரிந்து சாவதற்கு முன்னரே தன் சகாக்களின் காதுகளில் போட்டுவிடுகிறான். ஜோதிடர்களுக்கு அச்செய்தி வந்தடைகிறது. அவர்கள் அதனோடு நூறு பொய்யை கலந்துவிடுகிறார்கள்.

Saffat 37:11

முஹம்மதே!- மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் நிராகரிப்பாளர்களிடம் கேட்பீராக: “நாம் படைத்த வானங்களையும் பூமியையும் வானவர்களையும் விட அவர்கள் படைப்பில் கடினமானவர்களாகவும் உடல் வலிமையுடைவர்களாகவும் பாரிய உடலுறுப்பு உள்ளவர்களாகவும் ஆகிவிட்டனரா?” நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து படைத்தோம். அவர்கள் பலவீனமான பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து படைக்கப்படவர்களாக உள்ள நிலமையில் எவ்வாறு அவர்கள் மீண்டும் எழுப்பப்படுவதை நிராகரிக்கிறார்கள்?!

Saffat 37:12

முஹம்மதே!- என்றாலும் அல்லாஹ்வின் வல்லமையைக் குறித்து, அவன் படைப்புகளின் விவகாரங்களை நிர்வகிப்பது குறித்து நீர் ஆச்சரியப்படுகின்றீர். மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை பொய்ப்பிக்கும் நிராகரிப்பாளர்களை எண்ணி ஆச்சரியப்படுகின்றீர். மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நம்பவேயில்லை என்பதால் அது குறித்து நீர் கூறுவதை அவர்கள் பரிகாசம் செய்கிறார்கள்.

Saffat 37:13

இந்த இணைவைப்பாளர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் அவர்களிடம் இருக்கும் இறுகிய உள்ளத்தின் காரணமாக அறிவுரை பெறுவதுமில்லை; அதைக் கொண்டு பயனடைவதுமில்லை.

Saffat 37:14

தூதரின் நம்பகத்தன்மையை அறிவிக்கும் சான்றுகளில் ஏதேனும் ஒன்றைக் கண்டால் அதைப் பரிகாசம் செய்வதிலும் ஆச்சரியத்தை வெளிப்படுத்துவதிலும் எல்லை மீறுகின்றனர்.

Saffat 37:15

அவர்கள் கூறுகிறார்கள்: “முஹம்மது கொண்டுவந்தது தெளிவான சூனியமேயாகும்”.

Saffat 37:16

நாங்கள் இறந்து மண்ணாகவும் உக்கிய எலும்புகளாவும் ஆகிவிட்டாலும் நிச்சயமாக மீண்டும் உயிரோடு எழுப்பப்படுவோமா? நிச்சயமாக இது சாத்தியமற்றது.

Saffat 37:17

நமக்கு முன்னால் இறந்துவிட்ட நம்முடைய முன்னோர்களும் எழுப்பப்படுவார்களா?”

Saffat 37:18

முஹம்மதே!- நீர் அவர்களிடம் பதில் கூறுவீராக: “ஆம். நீங்கள் மண்ணாகவும் உக்கிய எலும்புகளாகவும் ஆகிவிட்டாலும் எழுப்பப்படுவீர்கள். உங்களின் முன்னோர்களும் எழுப்பப்படுவார்கள். நீங்கள் அனைவரும் இழிவடைந்த நிலையில் எழுப்பப்படுவீர்கள்.

Saffat 37:19

நிச்சயமாக அது (இரண்டாவது முறை) ஊதப்படும் ஒரேயொரு ஊதல்தான். அப்போது அனைவரும் மறுமை நாளின் பயங்கரங்களை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ் தம்மை என்ன செய்வானோ என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

Saffat 37:20

மறுமை நாளை மறுத்த இணைவைப்பாளர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட அழிவே! இது அல்லாஹ் தன் அடியார்களுக்கு அவர்கள் உலக வாழ்வில் செய்த செயல்களுக்கேற்ப கூலி வழங்கும் நாளாயிற்றே!

Saffat 37:21

அவர்களிடம் கூறப்படும்: “இது அடியார்களுக்கிடையே தீர்ப்பு வழங்கப்படும் உலகில் நீங்கள் பொய்ப்பித்து, மறுத்துக் கொண்டிருந்த நாளாகும்.

Saffat 37:22

அந்த நாளில் வானவர்களிடம் கூறப்படும்: ”தங்களின் இணைவைப்பினால் அநியாயம் செய்த இணைவைப்பாளர்களையும் இணைவைப்பில் அவர்களைப் போன்றவர்களையும் பொய்ப்பித்தலில் அவர்களை பின்பற்றியவர்களையும் அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த சிலைகளையும் ஒன்றுதிரட்டுங்கள். அவர்களுக்கு நரகத்தின் பாதையைக் அறிமுகப்படுத்தி அதற்கு வழிகாட்டுங்கள். அதன்பால் அவர்களை இழுத்துச் செல்லுங்கள். நிச்சயமாக அதுதான் அவர்களின் இருப்பிடமாகும்.

Saffat 37:23

அந்த நாளில் வானவர்களிடம் கூறப்படும்: ”தங்களின் இணைவைப்பினால் அநியாயம் செய்த இணைவைப்பாளர்களையும் அவர்களைப் போன்றவர்களையும் அல்லாஹ்வைத்தவிர அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த சிலைகளையும் ஒன்றுதிரட்டுங்கள். அவர்களுக்கு நரகத்தின் பாதையைக் காட்டுங்கள். அதன்பால் அவர்களை இழுத்துச் செல்லுங்கள். அதுதான் அவர்களின் இருப்பிடமாகும்.

Saffat 37:24

நரகத்தில் நுழையச் செய்வதற்கு முன்னால் விசாரணைக்காக அவர்களை தடுத்து நிறுத்துங்கள். அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள். அதன்பிறகு அவர்களை நரகத்தின்பால் இழுத்துச் செல்லுங்கள்.

Saffat 37:25

அவர்களிடம் கண்டிக்கும் விதமாக கேட்கப்படும்: “உங்களுக்கு என்னவாயிற்று? நீங்கள் உலகில் உதவிக் கொண்டிருந்தவாறு ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதில்லையே! உங்களின் சிலைகள் உங்களுக்கு உதவி செய்யும் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களே!

Saffat 37:26

மாறாக அவர்கள் இன்று அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் இழிவானவர்களாகவும் இருக்கின்றார்கள். அவர்களின் இயலாமையினால் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளமாட்டார்கள்.

Saffat 37:27

பழித்துக்கொள்வதும், சண்டையிடுவதும் பயனளிக்காத சமயத்தில் அவர்கள் பழித்துக்கொண்டவர்களாகவும், சண்டைபிடித்தவர்களாகவும் அவர்களில் சிலர் சிலரை முன்னோக்குவார்கள்.

Saffat 37:28

பின்பற்றிய தொண்டர்கள் தலைவர்களிடம் கூறுவார்கள்: “-எங்களின் தலைவர்களே!- நிச்சயமாக நீங்கள் மார்க்கம் மற்றும் சத்தியத்தின் வழியால் எங்களிடம் வந்து அல்லாஹ்வை நிராகரிப்பதையும் அவனுக்கு இணைவைப்பதையும் பாவங்கள் புரிவதையும் எங்களுக்கு அலங்கரித்துக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்விடமிருந்து தூதர்கள் கொண்டுவந்த சத்தியத்தை விட்டும் எங்களை தூரமாக்கிக்கொண்டுமிருந்தீர்கள்.”

Saffat 37:29

பின்பற்றப்பட்ட தலைவர்கள் தொண்டர்களிடம் கூறுவார்கள்: -“நீங்கள் எண்ணுவது போலல்ல- விடயம். மாறாக நீங்கள் நம்பிக்கைகொள்ளாமல் நிராகரிப்பில் இருந்தீர்கள். அது மட்டுமின்றி நீங்கள் மறுப்போராகவும் இருந்தீர்கள்.

Saffat 37:30

பின்பற்றியவர்களே! நாங்கள் உங்களை நிராகரிப்பிலும் இணைவைப்பிலும் பாவங்கள் செய்வதிலும் தள்ளிவிடுவதற்கு உங்கள் மீது எந்த ஆதிக்கத்தையும் பெற்றிருக்கவில்லை. மாறாக நீங்கள் நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் வரம்புமீறும் கூட்டமாக இருந்தீர்கள்.

Saffat 37:31

எங்கள் மீதும் உங்கள் மீதும் அல்லாஹ்வின் எச்சரிக்கை உறுதியாகிவிட்டது. (நான் உன்னையும் அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன். பார்க்க, அத்தியாயம் ஸாத், 85வது வசனம்) நிச்சயமாக நம் இறைவன் எச்சரித்ததை -சந்தேகம் இல்லாமல்- நாம் அனுபவித்தே தீருவோம்.

Saffat 37:32

நாங்கள் உங்களை நிராகரிப்பு, வழிகேட்டின் பக்கம் அழைத்தோம். நிச்சயமாக நாம் நேர்வழியை விட்டும் வழிகெட்டவர்களாக இருந்தோம்.

Saffat 37:33

எனவே நிச்சயமாக மறுமை நாளில் பின்பற்றிய தொண்டர்களும் பின்பற்றப்பட்ட தலைவர்களும் வேதனையில் பங்காளிகளாக இருப்பார்கள்.

Saffat 37:34

நிச்சயமாக நாம் இவர்களுக்கு வேதனையைச் சுவைக்கச்செய்தது போன்றே ஏனைய குற்றவாளிகளையும் தண்டிக்கின்றோம்.

Saffat 37:35

உலகில் “வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதன்படி செயல்படுங்கள். அதற்கு முரணானவற்றை விட்டு விடுங்கள்” என்று கூறப்பட்ட போது இந்த இணைவைப்பாளர்கள் அதற்கு விடையளிக்காமல், சத்தியத்திற்கு அடிபணியாமல் கர்வம் கொண்டவர்களாகவே இருந்தார்கள்.

Saffat 37:36

அவர்கள் தமது நிராகரிப்புக்கு ஆதாரம் கூறும் விதமாக அல்லாஹ்வின் தூதரைப் பார்த்துக் கூறினார்கள்: “ஒரு பைத்தியக்கார கவிஞரின் சொல்கேட்டு எங்களின் கடவுள்களை வணங்குவதை நாங்கள் விட்டுவிட வேண்டுமா?”.

Saffat 37:37

அவர்கள் மிகப் பெரும் அவதூறைக் கூறிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் பைத்தியக்காரராகவோ, கவிஞராகவோ இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் ஓரிறைக்கொள்கையின் பக்கமும் அவனின் தூதரைப் பின்பற்றுமாறும் அழைக்கும் குர்ஆனைக் கொண்டு வந்துள்ளார். ஏகத்துவம், மறுமை உண்டு என அல்லாஹ்விடமிருந்து தூதர்கள் கொண்டு வந்தவற்றில் அவர்களை உண்மைப்படுத்துகின்றார். எந்தவொரு விஷயத்திலும்அவர்களுக்கு மாறுசெய்யவில்லை.

Saffat 37:38

இணைவைப்பாளர்களே!- நிச்சயமாக நீங்கள் உங்களின் நிராகரிப்பினாலும் தூதர்களை நீங்கள் பொய்ப்பித்ததனாலும் மறுமை நாளில் வேதனை மிக்க தண்டனையை அனுபவிப்பீர்கள்.

Saffat 37:39

இணைவைப்பாளர்களே!- நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த இறைநிராகரிப்பு மற்றும் பாவங்களில் ஈடுபடுதல் என்பவற்றின் காரணமாகத்தான் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.

Saffat 37:40

ஆனால் நம்பிக்கை கொண்ட அல்லாஹ்வின் அடியார்களை அல்லாஹ் தனது வணக்கத்துக்காக தூய்மையாக்கிவிட்டான். அவர்களும் அவனையே தூய்மையாக வணங்கினார்கள். அவர்கள் இந்த வேதனையிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.

Saffat 37:41

அவனை மட்டுமே வணங்கிய அந்த அடியார்களுக்கு தூய்மையிலும் அழகிலும் நிரந்தரத்திலும் அறியப்பட்ட உணவை அல்லாஹ் வழங்குவான்.

Saffat 37:42

அந்த பலவிதமான சிறந்த கனிகள்தான் அவர்கள் உண்ண விரும்பும் உணவாகும். அதற்கும் மேல் பதவிகள் உயர்த்தப்படுவதன் மூலமும் அல்லாஹ்வின் திருமுகத்தை காணுவதன் மூலமும் கண்ணியப்படுத்தப்படுவார்கள்.

Saffat 37:43

இவையனைத்தையும் அவர்கள் என்றும் முடிவடையாத, அழியாத நிலையான இன்பம் அளிக்கும் சுவனங்களில் பெறுவார்கள்.

Saffat 37:44

ஒருவரையொருவர் பார்த்து முன்னோக்கியவாறு அவர்கள் கட்டில்களில் சாய்ந்திருப்பார்கள்.

Saffat 37:45

மதுக்கிண்ணங்கள் அவர்களிடையே சுற்றிவருமாறு செய்யப்படும். அது தூய்மையில் ஓடக்கூடிய நீரைப் போன்று இருக்கும்.

Saffat 37:46

வெண்மையான நிறமுடையதாக இருக்கும். பருகுபவர்கள் அதன் முழுமையான சுவையை அனுபவிப்பார்கள்.

Saffat 37:47

அது உலகில் காணப்படும் மதுவைப் போன்று இருக்காது. போதையினால் அறிவை மழுங்கடிக்கச் செய்யும் எதுவும் அதில் இல்லை. அதை குடிப்பவருக்கு தலை வலியும் ஏற்படாது. பருகுபவரின் உடலும் அறிவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

Saffat 37:48

சுவனத்தில் அவர்களிடத்தில் பரிசுத்தமான பெண்கள் இருப்பார்கள். அவர்கள் தங்களின் கணவன்மார்களைத் தவிர மற்றவர்களை ஏறெடுத்தும் பார்க்காத கண்ணழகிகளாவர்.

Saffat 37:49

அவர்கள் மஞ்சள் கலந்த தமது வெண்மையில் கை படாமல் பாதுகாப்பாக மறைத்துவைக்கப்பட்ட பறவையின் முட்டையைப் போன்று இருப்பார்கள்.

Saffat 37:50

சுவனவாசிகள் ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு தமது இறந்த காலம், அவர்களுக்கு உலகில் நிகழ்ந்தவற்றைக் குறித்து பேசிக்கொண்டு இருப்பார்கள்.

Saffat 37:51

அந்த நம்பிக்கையாளர்களில் ஒருவர் கூறுவார்: “நிச்சயமாக மீண்டும் எழுப்பப்படுவதை மறுக்கும் ஒரு நண்பன் உலகில் எனக்கு இருந்தான்.”

Saffat 37:52

அவன் என்னிடம் மறுத்து, பரிகாசம் செய்தவனாகக் கேட்டான்: -“நண்பனே!- இறந்தவர்கள் மீண்டும் எழுப்பப்படுவார்கள் என்பதை நீ நம்புகிறாயா?

Saffat 37:53

நாம் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவும் மக்கிப்போன பின்னர் நாம் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பப்பட்டு, உலகில் செய்த செயல்களுக்குக் கூலி கொடுக்கப்படுவோமா என்ன?”

Saffat 37:54

நம்பிக்கைகொண்ட நண்பன் சுவனவாசிகளான தன் தோழர்களிடம் கேட்பான்: “மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுத்த அந்த நண்பனின் இருப்பிடத்தை நாம் காண்பதற்காக என்னுடன் எட்டிப்பாருங்கள்.”

Saffat 37:55

அவன் பார்த்ததும் தனது நண்பனை அவன் நரகத்தில் நடுவில் இருப்பதைக் காண்பான்.

Saffat 37:56

அந்த நம்பிக்கையாளன் கூறுவான்: “-நண்பனே!- அல்லாஹ்வின் மீது சத்தியமாக, மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பபடுவதை மறுத்து நிராகரிப்பின்பால் நீ என்னை அழைத்து நரகத்தில் நுழைத்து என்னை அழிக்கப்பார்த்தாய்.

Saffat 37:57

அல்லாஹ் என்மீது அருள்புரிந்து ஈமானின்பால் எனக்கு பாக்கியமளித்து நேர்வழிகாட்டவில்லை என்றால் உன்னைப்போல் வேதனை செய்ய கொண்டுவரப்பட்டவர்களில் நானும் ஒருவனாக இருந்திருப்பேன்.

Saffat 37:58

தனது நண்பனாக இருந்த நரகவாசியுடன் அந்த நம்பிக்கையாளன் உரையாடிய பிறகு சுவனவாசிகளான தன் தோழர்களை நோக்கிக் கூறுவான்: -சுவனவாதிகளான- நாம் இறந்துவிடக்கூடியவர்கள் அல்ல.

Saffat 37:59

உலக வாழ்வில் நமக்கு ஏற்பட்ட மரணத்தைத் தவிர. மாறாக நாம் சுவனத்தில் என்றென்றும் நிலைத்திருப்போம். நிராகரிப்பாளர்கள் வேதனை செய்யப்படுவது போன்று நாம் வேதனை செய்யப்பட மாட்டோம்.

Saffat 37:60

நிச்சயமாக எங்களின் இறைவன் எங்களுக்கு அளித்த நாம் நுழையும் இந்த சுவனம், அதில் நிரந்தரம், நரகிலிருந்து பாதுகாப்பு ஆகியவையே நிச்சயமாக ஈடிணையற்ற பெரும் வெற்றியாகும்.

Saffat 37:61

இந்த மகத்தான வெகுமதிக்காகவே செயல்படக்கூடியவர்கள் கட்டாயம் செயல்பட வேண்டும். ஏனெனில் நிச்சயமாக இதுதான் இலாபம் தரக்கூடிய வியாபாரமாகும்.

Saffat 37:62

அல்லாஹ் தன்னை மட்டுமே வழிப்படக்கூடியவர்களுக்காக தயார்படுத்தி வைத்துள்ள மேற்கூறப்பட்ட அருட்கொடைகள் இடத்தால், சங்கையால் சிறந்தவனவா? அல்லது நிராகரிப்பாளர்களின் உணவு என்று குர்ஆனில் கூறப்பட்ட சபிக்கப்பட்ட ஸக்கூம் மரமா? அது ஊட்டமும் தராது. பசியையும் போக்காது.

Saffat 37:63

நிச்சயமாக நாம் இந்த மரத்தை நிராகரிப்பாலும் பாவத்தினாலும் அநியாயமிழைத்தோருக்கு ஒரு சோதனையாக ஆக்கியுள்ளோம். அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நெருப்பு மரத்தைத் தின்று விடுமே! அதில் மரம் முளைப்பதற்கு வாய்ப்பே இல்லையே!”

Saffat 37:64

நிச்சயமாக ஸக்கூம் மரம் விளையும் இடம் மோசமானதாகும். ஏனெனில் அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படும் ஒரு மரமாகும்.

Saffat 37:65

அதிலிருந்து விளையும் பழம் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று பார்ப்பதற்கு அசிங்கமானதாகும். கோரமான காட்சி மோசமான உள்ளமைப்பிற்கு ஆதாரமாகும். அதன் பழங்கள் மோசமான சுவையுடையவை என்பதே இதன் பொருளாகும்.

Saffat 37:66

நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் அதன் கசப்பான அவலட்சனமான பழங்களையே உண்பார்கள். அவற்றைக்கொண்டு காலியான தங்களின் வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள்.

Saffat 37:67

பின்னர் நிச்சயமாக அவர்கள் அவற்றை உண்ட பிறகு மோசமான கொதிக்கும் கலப்பான பானம் அவர்களுக்கு உண்டு.

Saffat 37:68

பின்னர் நிச்சயமாக அவர்கள் நரக வேதனையின்பால் திரும்புவார்கள். அவர்கள் ஒரு வேதனையிலிருந்து மற்றொரு வேதனையின்பால் இடம்பெயர்ந்து கொண்டேயிருப்பார்கள்.

Saffat 37:69

நிச்சயமாக இந்த நிராகரிப்பாளர்கள் தங்களின் முன்னோர்களை நேரான பதையை விட்டும் வழிகெட்டவர்களாகக் கண்டார்கள். எனவே ஆதாரமின்றி அவர்களை குருட்டுத்தனமான முன்மாதிரியாக ஆக்கினார்கள்.

Saffat 37:70

அவர்கள் தங்களின் முன்னோர்களின் வழிகேட்டு அடிச்சுவடுகளை விரைந்து பின்பற்றினார்கள்.

Saffat 37:71

அவர்களுக்கு முன்னரும் முன்னோர்களில் பெரும்பாலானோர் வழிகெட்டிருந்தார்கள். எனவே, -தூதரே!- உம் சமூகத்தினர் முதலாவதாக வழிகெட்ட சமூகமல்ல.

Saffat 37:72

அந்த முந்தைய சமூகங்களிலும் நாம் நம் வேதனையைக் குறித்து எச்சரிக்கை செய்யக்கூடிய தூதர்களை அனுப்பினோம். ஆனால் அந்த மக்கள் நிராகரித்தார்கள்.

Saffat 37:73

தூதரே!- தூதர்களால் எச்சரிக்கப்பட்டும் அதற்கு விடையளிக்காத சமூகங்களின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. நிச்சயமாக அவர்கள் தங்களின் நிராகரிப்பினாலும் தூதர்களை பொய்ப்பித்ததினாலும் நரகத்தில் நிரந்தரமாக நுழைவதே அவர்களது முடிவாக இருந்தது.

Saffat 37:74

ஆயினும் தன்னை நம்பிக்கைகொள்வதற்கு அல்லாஹ் சுத்தியாக எடுத்தவர்களைத் தவிர. நிச்சயமாக அவர்கள் அந்த பொய்ப்பித்த நிராகரிப்பாளர்களின் இறுதி முடிவான வேதனையிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.

Saffat 37:75

நம்முடைய தூதர் நூஹை அவரது சமூகம் பொய்ப்பித்த போது அவர் நம்மை அழைத்தார். நாம் அவருக்கு மிகச் சிறந்த முறையில் பதிலளிப்போராக இருந்தோம். திட்டமாக அவர்களுக்கெதிரான அவரது பிரார்த்தனைக்கு விடையளிப்பதில் விரைந்தோம்.

Saffat 37:76

அவரையும் அவருடைய குடும்பத்தினரையும் அவருடன் இருந்த நம்பிக்கையாளர்களையும் அவரது சமூகத்தின் தொல்லையிலிருந்தும் அவரது சமூகத்தின் நிராகரிப்பாளர்களுக்கு எதிராக நாம் அனுப்பிய பாரிய வெள்ளப் பிரளயத்திலிருந்தும் பாதுகாத்தோம்.

Saffat 37:77

நம்பிக்கைகொண்ட அவரது குடும்பத்தினரையும் அவரைப் பின்பற்றியவர்களை மட்டும் நாம் காப்பாற்றினோம். அவரது சமூகத்தின் நராகரிப்பாளர்களான மற்றவர்களை நாம் மூழ்கடித்துவிட்டோம்.

Saffat 37:78

அடுத்துவந்த சமூகங்களில் அவருக்கு நற்பெயரை நிலைத்திருக்கச் செய்தோம். அவர்கள் அதன் மூலம் அவரைப் புகழ்கின்றனர்.

Saffat 37:79

பின்னால் வரும் சமூகங்களில் அவரைக் குறித்து எந்த தீங்கான விஷயமும் கூறப்படுவதை விட்டும் பாதுகாப்பு உண்டு. மாறாக புகழும் நற்பெயரும் நிலைத்து நிற்கும்.

Saffat 37:80

நிச்சயமாக நாம் நூஹிற்கு வழங்கிய இந்த கூலியைப் போன்றே தனக்கு வணக்கம் மற்றும் அவனுக்கு மாத்திரமே கட்டுப்படும் தன்மை மூலம் நற்செயல் புரிபவர்களுக்கும் நாம் கூலி வழங்குகின்றோம்.

Saffat 37:81

நிச்சயமாக நூஹ் நம்பிக்கைகொண்டு, அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு செயல்பட்ட நம்முடைய அடியார்களில் உள்ளவராவார்.

Saffat 37:82

பின்னர் மற்றவர்களை அவர்களுக்கு அனுப்பிய வெள்ளப் பிரளயத்தால் அழித்துவிட்டோம். அவர்களில் எவரும் எஞ்சியிருக்கவில்லை.

Saffat 37:83

நிச்சயமாக அல்லாஹ்வின் ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைப்பதில் அவருடன் உடன்பட்ட அவரது மார்க்கத்தைச் சார்ந்தவராக இப்ராஹீம் இருந்தார்.

Saffat 37:84

அவர் இணைவைப்பிலிருந்து நீங்கிய படைப்புகளின் விடயத்தில் அல்லாஹ்வுக்கு விசுவாசமான தூய உள்ளத்துடன் தனது இறைவனிடம் வந்ததை நினைவு கூர்வீராக.

Saffat 37:85

அவர் இணைவைக்கும் தம் தந்தையிடமும் சமூகத்திடமும் கண்டிக்கும் தோரணையில் கேட்டார்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்?”

Saffat 37:86

அல்லாஹ் அல்லாத போலியான தெய்வங்களை நீங்கள் வணங்குகிறீர்களா?

Saffat 37:87

என் சமூகமே!- அகிலத்தாரைப் படைத்துப் பராமரிக்கும் இறைவனல்லாதவர்களையும் வணங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் அவனைச் சந்திக்கும் போது, அவன் உங்களை என்ன செய்வான் என்பதாக நினைக்கிறீர்கள்?

Saffat 37:88

இப்ராஹீம் தம் சமூகத்தாருடன் வெளியேறுவதைத் தவிர்ப்பதற்கு திட்டம் தீட்டியவராக நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.

Saffat 37:89

அவர்களின் திருவிழாவிற்குச் செல்லாமல் இருக்கும் பொருட்டு “நிச்சயமாக நான் நோயாளி” என்று காரணம் கூறினார்.

Saffat 37:90

அவர்கள் அவரை விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.

Saffat 37:91

அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களின் பக்கம் வந்தார். அவற்றைப் பரிகாசம் செய்தவராகக் கேட்டார்: “இணைவைப்பாளர்கள் உங்களுக்காக செய்யும் உணவை நீங்கள் உண்பதில்லையா?

Saffat 37:92

உங்களுக்கு என்னவாயிற்று? ஏன் நீங்கள் பேசுவதில்லை? உங்களிடம் கேட்பவர்களுக்குப் பதிலளிப்பதில்லை? இது போன்றவையா அல்லாஹ்வை விடுத்து வணங்கப்படுகிறது!.

Saffat 37:93

அவற்றின்பால் சென்று அவற்றை உடைப்பதற்காக இப்ராஹீம் அவற்றை தம் வலது கையால் அடித்தார்.

Saffat 37:94

இந்த சிலைகளை வணங்குவோர் அவரை முன்னோக்கி விரைந்தோடி வந்தார்கள்.

Saffat 37:95

இப்ராஹீம் அவர்களை உறுதியோடு எதிர்கொண்டார். அவர்களைக் கண்டிக்கும் விதமாக அவர்களிடம் கேட்டார்: “உங்கள் கைகளால் நீங்கள் செதுக்கிக்கொண்ட அல்லாஹ் அல்லாத தெய்வங்களை வணங்குகிறீர்களா?”

Saffat 37:96

அல்லாஹ்தான் உங்களையும் உங்களின் செயல்களையும் படைத்தான். இந்த சிலைகளும் நீங்கள் செய்தவைகளே. எனவே அவன் ஒருவனே அவனோடு எந்த இணையும் கற்பிக்கப்படாமல் வணங்கப்படுவதற்குத் தகுதியானவன்.

Saffat 37:97

அவரை வாதத்தில் எதிர்கொள்ள முடியாத அவர்கள் அதிகாரத்தின் பக்கம் தஞ்சமடைந்தார்கள். இப்ராஹீமை என்ன செய்வது என்பது குறித்து தங்களுக்குள் ஆலோசித்தார்கள். கூறினார்கள்: “அவருக்காக ஒரு கட்டடம் கட்டி அதில் விறகுகளை நிரப்பி நெருப்பை மூட்டுங்கள். பின்னர் அதில் அவரை எறிந்து விடுங்கள்.

Saffat 37:98

அவருடைய சமூகம் அவரை அழித்து அவரிடமிருந்து விடுபடுவதற்கு ஏற்பாடு செய்து அவருக்க தீங்கு செய்ய நாடியது. ஆனால் நாம் அவருக்கு நெருப்பை குளிர்ச்சியானதாகவும் பாதுகாப்பானதாகவும் ஆக்கி அவர்களை நஷ்டமடைந்தவர்களாக்கி விட்டோம்.

Saffat 37:99

இப்ராஹீம் கூறினார்: “நிச்சயமாக நான் என் சமூகத்தின் ஊரை விட்டுவிட்டு என் இறைவனை வணங்குவதற்காக அவன்பால் புலம்பெயர்ந்து செல்கின்றேன். என் இறைவன் எனக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையானவற்றை அறிவித்துத் தருவான்.

Saffat 37:100

என் இறைவா! தனிமையில் எனக்கு உதவியாகவும் என் சமூகத்திற்கு மாற்றாகவும் இருக்கக்கூடிய நல்ல குழந்தையை வழங்குவாயாக.

Saffat 37:101

நாம் அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித்து ஒரு குழந்தையைக் கொண்டு நற்செய்தி கூறினோம். அக்குழந்தை வளர்ந்து பொறுமையாளனாக மாறும். அந்தக் குழந்தைதான் இஸ்மாயீல் ஆவார்.

Saffat 37:102

இஸ்மாயீல் வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்தபோது, தன் தந்தையுடன் சேர்ந்து நடந்து திரியும் வயதை அடைந்தபோது அவரது தந்தை இப்ராஹீம் ஒரு கனவு கண்டார். தூதர்களின் கனவு வஹியின் ஒரு பகுதியாகும். அவர் தம் மகனிடம் கனவு பற்றி கூறினார்: “என் மகனே! நிச்சயமாக நான் உன்னை அறுப்பதாகக் கனவில் கண்டேன். இது குறித்து உன் கருத்தைக் கூறு.” அதற்கு இஸ்மாயீல் விடையளித்தவராக கூறினார்: “தந்தையே! என்னை அறுக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டதைச் செயல்படுத்துங்கள். அல்லாஹ் நாடினால் என்னை அல்லாஹ்வின் தீர்ப்பைப் பொருந்திக்கொண்ட பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்.

Saffat 37:103

இருவரும் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து அறுக்குமாறு ஏவப்பட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்காக இப்ராஹீம் தம் மகனை முகங்குப்புற கிடத்தி வைத்த போது,

Saffat 37:104

அவர் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி இஸ்மாயீலை அறுக்க நெருங்கிய போது “இப்ராஹீமே” என்று நாம் அவரை அழைத்தோம்.

Saffat 37:105

உமது மகனை அறுக்க உறுதி பூண்டதன் மூலம் நீர் கண்ட கனவை உண்மைப்படுத்திக் காட்டினீர். -இந்த மாபெரும் சோதனையிலிருந்து நாம் உம்மை விடுவித்து கூலி வழங்கியது போன்றே- நிச்சயமாக நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குகின்றோம். சோதனைகளிலிருந்தும் கஷ்டங்களிலிருந்தும் அவர்களை விடுவிக்கின்றோம்.

Saffat 37:106

நிச்சயமாக இது தெளிவான சோதனையாகும். இப்ராஹீம் அதில் வெற்றி பெற்றுவிட்டார்.

Saffat 37:107

இஸ்மாயீலுக்குப் பகரமாக அறுக்கப்படுவதற்கு பரிகாரமாக ஒரு பெரும் செம்மறியாட்டை வழங்கினோம்.

Saffat 37:108

பின்னர் தோன்றிய தலைமுறைகளில் இப்ராஹீமிற்கு நற்பெயரை நிலைத்திருக்கச் செய்தோம்.

Saffat 37:109

அவருக்கு அல்லாஹ்வின் வாழ்த்தும் எல்லா வகையான தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் பிரார்த்தனையும் கிடைக்கட்டும்.

Saffat 37:110

நாம் இப்ராஹீமுக்குக் அவரது கட்டுப்பாட்டுக்குக் கூலி வழங்கியது போன்றே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குகின்றோம்.

Saffat 37:111

நிச்சயமாக இப்ராஹீம் அல்லாஹ்வின் அடிமைத்துவத்துக்கு அவசியமான விடயங்களை நிறைவேற்றும் நம்பிக்கைகொண்ட நம் அடியார்களில் உள்ளவராக இருந்தார்.

Saffat 37:112

அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு தம் ஒரே மகனான இஸ்மாயீலை அறுக்க துணிந்ததற்குக் கூலியாக நாம் அவருக்கு இன்னொரு குழந்தையைக் கொண்டு நற்செய்தி கூறினோம். அக்குழந்தை நபியாகவும் நல்லடியாராகவும் மாறும். அவர்தான் இஸ்ஹாக் ஆவார்.

Saffat 37:113

நாம் அவர் மீதும் அவருடைய மகன் இஸ்ஹாக் மீதும் அருள் வளங்களை இறக்கினோம். அவர்கள் இருவருக்கும் ஏராளமான அருட்கொடைகளை வழங்கினோம். அவற்றில் அவர்கள் இருவருக்கும் அதிகமான குழந்தைகள் வழங்கப்பட்டதும் அடங்கும். அவர்கள் இருவரின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நற்செயல் புரிபவர்களும் இருந்தார்கள். அவர்களில் நிராகரித்து பாவங்கள் புரிந்து தமக்குத் தாமே தெளிவாக அநீதி இழைப்பவர்களும் இருந்தார்கள்.

Saffat 37:114

நாம் மூஸாவுக்கும் அவருடைய சகோதரர் ஹாரூனுக்கும் நபித்துவத்தை வழங்கி அவர்கள் மீது அருள்புரிந்தோம்.

Saffat 37:115

அவர்கள் இருவரையும் அவர்களின் சமூகமான இஸ்ராயீலின் மக்களையும் ஃபிர்அவ்னின் அடிமைத்தனத்திலிருந்தும் மூழ்குவதிலிருந்தும் நாம் காப்பாற்றினோம்.

Saffat 37:116

ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய படையினருக்கும் எதிராக நாம் அவர்களுக்கு உதவிபுரிந்தோம். அவர்களே தமது எதிரிகளை விட மேலோங்கி நின்றார்கள்.

Saffat 37:117

நாம் மூஸாவுக்கும் அவரது சகோதரர் ஹாரூனுக்கும் தவ்ராத்தை அல்லாஹ்விடமிருந்து சந்தேகமற்ற தெளிவான வேதமாக வழங்கினோம்.

Saffat 37:118

அவர்களுக்கு கோணலற்ற நேரான வழியைக் காட்டினோம். அது படைத்தவனின் திருப்தியைப் பெற்றுத்தரும் இஸ்லாம் எனும் மார்க்கத்தின் வழியாகும்.

Saffat 37:119

பின்னால் வந்த தலைமுறைகளில் அவர்கள் இருவருக்கும் நற்பெயரையும் நற்புகழையும் நிலைத்திருக்கும்படிச் செய்தோம்.

Saffat 37:120

அவர்கள் இருவருக்கும் அல்லாஹ்வின் வாழ்த்தும் புகழும் தீங்கான எல்லா விஷயங்களை விட்டும் தப்புவதற்கான துஆவும் உண்டு.

Saffat 37:121

மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் நாம் இந்த அழகிய கூலியை வழங்கியது போன்றே தங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நற்செயல் புரிபவர்களுக்குக் நிச்சயமாக கூலி வழங்குகின்றோம்.

Saffat 37:122

நிச்சயமாக மூஸாவும் ஹாரூனும் தமது மார்க்கத்தின்படி செயல்பட்ட நம்பிக்கைகொண்ட நம் அடியார்களில் உள்ளவர்களாக இருந்தார்கள்.

Saffat 37:123

நிச்சயமாக இல்யாஸ் தம் இறைவனிடமிருந்து வந்த தூதர்களில் ஒருவராக இருந்தார். அல்லாஹ் அவருக்கு நபித்துவத்தை, தூதுத்துவத்தை அளித்து அருள்புரிந்தான்.

Saffat 37:124

அவர் தூதுராக அனுப்பப்பட்ட தம் சமூகமான இஸ்ராயீலின் மக்களிடம் கூறினார்: “என் சமூகமே! நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்ச மாட்டீர்களா?” ஏகத்துவம் அவனது கட்டளையில் உள்ளதாகும். இணைவைப்பு அவனால் தடைசெய்யப்பட்டவைகளில் உள்ளதாகும்.

Saffat 37:125

நீங்கள் மிகச் சிறந்த படைப்பாளனான அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு பஃல் என்னும் உங்களின் சிலையை வணங்குகிறீர்களா?

Saffat 37:126

அல்லாஹ்தான் உங்களையும் உங்கள் முன்னோர்களையும் படைத்த இறைவன். அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன். பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்தியற்ற சிலைகள் அல்ல.

Saffat 37:127

அவரது சமூகத்தினர் அவரை பொய்ப்பித்தார்கள். அதனால் அவர்கள் வேதனைக்கு கொண்டுவரப்படுவார்கள்.

Saffat 37:128

ஆயினும் அவரது சமூகத்தில் அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு அவனை மட்டுமே வணங்கியவர்களைத் தவிர. நிச்சயமாக அவர்கள் வேதனைக்கு கொண்டுவரப்படுவதில் இருந்து தப்பிவிடுவார்கள்.

Saffat 37:129

நாம் பின்னர் வந்த தலைமுறைகளில் அவருக்கு நற்பெயரையும் நற்புகழையும் நிலைத்திருக்கச் செய்தோம்.

Saffat 37:130

இல்யாஸின் மீது அல்லாஹ்வின் வாழ்த்தும் புகழும் உண்டாகட்டும்.

Saffat 37:131

நிச்சயமாக நாம் இல்யாஸிற்கு இந்த அழகிய நற்கூலியை வழங்கியது போன்றே நம்பிக்கைகொண்ட நம் அடியார்களில் நற்காரியமாற்றுவோருக்கும் கூலி வழங்குகின்றோம்.

Saffat 37:132

நிச்சயமாக இல்யாஸ் தங்கள் இறைவனின் மீதுள்ள நம்பிக்கையை உண்மைப்படுத்தி உண்மையாக நம்பிக்கை கொண்ட நம் அடியார்களில் உள்ளவராக இருந்தார்.

Saffat 37:133

நிச்சயமாக லூத்தும் தமது சமூகங்களின்பால் நன்மாராயம் கூறுவோராகவும் எச்சரிப்போராகவும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் இறைத் தூதர்களில் ஒருவராக இருந்தார்.

Saffat 37:134

நாம் அவரையும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் அவரது சமூகத்தின் மீது அனுப்பப்பட்ட வேதனையிலிருந்து காப்பாற்றியதையும் நினைவு கூறுவீராக.

Saffat 37:135

ஆனால் அவரது மனைவியைத் தவிர. அவளது சமூகத்தைப் போன்று அவளும் நிராகரிப்பவளாக இருந்தாள் அவளது சமூகத்தின் வேதனை அவளையும் சூழ்ந்துகொண்டது.

Saffat 37:136

பின்னர் அவருடைய சமூகத்தில் அவர் கொண்டுவந்ததை உண்மைப்படுத்தாமல் பொய்ப்பித்துக்கொண்டிருந்த மற்றவர்களையும் அழித்துவிட்டோம்.

Saffat 37:137

மக்காவாசிகளே!- நிச்சயமாக நீங்கள் ஷாம் தேசத்தை நோக்கி பயணம் மேற்கொள்ளும்போது அதிகாலையில் அவர்களின் வசிப்பிடங்களை கடந்துதான் செல்கிறீர்கள்.

Saffat 37:138

அவ்வாறு மாலையிலும் அவர்களின் வசிப்பிடங்களை கடந்துதான் செல்கிறீர்கள்.நீங்கள் விளங்கிக்கொள்ள மாட்டீர்களா? அவர்களின் நிராகரிப்பினாலும் பொய்ப்பித்ததனாலும் அவர்களுக்கு முன்னால் எவரும் செய்யாத மானக் கேடான காரியத்தில் ஈடுபட்டதன் பின்னர் அவர்களுக்கு நிகழ்ந்த கதியை எண்ணி படிப்பினை பெறமாட்டீர்களா?

Saffat 37:139

நிச்சயமாக எங்களின் அடியாரான யூனுஸும், தமது சமூகங்களின்பால் நன்மாராயம் கூறுவோராகவும் எச்சரிப்போராகவும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் இறைத் தூதர்களில் ஒருவராக இருந்தார்.

Saffat 37:140

அவர் தனது இறைவனின் அனுமதியின்றி தனது சமூகத்தை விட்டு ஓடி பயணிகளாலும் பொருட்களாலும் நிரப்பப்பட்ட கப்பலில் ஏறிக் கொண்ட போது.

Saffat 37:141

கப்பல் நிரம்பியதால் மூழ்கத் தொடங்கியது. அதிகமான பயணிகளால் கப்பல் மூழ்காமல் இருக்கும் பொருட்டு பயணிகளில் சிலரைக் குறைப்பதற்காக அவர்கள் சீட்டுக் குலுக்கிப்போட்டனர். அவ்வாறு சீட்டுக் குலுக்கிப் போட்டு தோல்வியடைந்தவர்களில் யூனுசும் ஒருவராக இருந்தார். அவர்கள் அவரைக் கடலில் தூக்கிப் போட்டனர்.

Saffat 37:142

அவர்கள் அவரைக் கடலில் தூக்கிப் போட்டபோது ஒரு பெரிய மீன் அவரை விழுங்கி விட்டது. தம் இறைவனின் அனுமதியின்றி கடலுக்குச் சென்றதனால் அவர் பழிப்பிற்குரிய செயலைச் செய்தவராக இருந்தார்.

Saffat 37:143

நிச்சயமாக யூனுஸ் தனக்கு நேர்ந்த அசம்பாவிதத்திற்கு முன்னால் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூறக்கூடியவராக இல்லாமல் இருந்திருந்தால், அந்த மீனின் வயிற்றில் இருந்துகொண்டு அல்லாஹ்வை துதிபாடாமல் இருந்திருந்தால்

Saffat 37:144

அந்த மீனின் வயிற்றிலேயே அவர் மறுமை நாள் வரை தங்கியிருப்பார்; அதுவே அவருக்கு அடக்கஸ்த்தலமாகியிருக்கும்.

Saffat 37:145

அந்த மீனின் வயிற்றிலிருந்து கட்டங்களோ, மரங்களோ அற்ற வெட்ட வெளியில் அவரை வீசினோம். சில காலம் மீனின் வயிற்றில் தங்கியிருந்ததால் அவர் பலவீனமானவராக இருந்தார்.

Saffat 37:146

அந்த வெட்ட வெளியில் அவர் நிழல்பெற்று அதிலிருந்து உண்ணும் வகையில் ஒரு சுரைச்செடியை முளைக்கச் செய்தோம்.

Saffat 37:147

அவரை அவரது சமூகத்தின்பால் தூதராக அனுப்பினோம். அவர்கள் ஒரு இலட்சம் பேர். இல்லை, அவர்கள் அதைவிட அதிகமாக இருப்பார்கள்.

Saffat 37:148

அவர்கள் நம்பிக்கைகொண்டு அவர் கொண்டு வந்ததை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தவணை முடியும் வரை அல்லாஹ் உலக வாழ்வில் அவர்களை வாழச்செய்தான்.

Saffat 37:149

முஹம்மதே!- நீர் இணைவைப்பாளர்களிடம் மறுக்கும் தொனியில் கேட்பீராக: “நீங்கள் வெறுக்கும் பெண் மக்களை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்தி நீங்கள் விரும்பக்கூடிய ஆண் மக்களை உங்களுக்கு ஏற்படுத்திக் கொள்கிறீர்களா? இது எந்த வகையான பங்கீடு?

Saffat 37:150

நிச்சயமாக வானவர்களை பெண்கள் என்று அவர்கள் எவ்வாறு எண்ணுகிறார்கள்? அவர்கள் படைக்கப்பட்ட போது அங்கிருக்கவுமில்லை, அதனை அவர்கள் பார்க்கவுமில்லையே!

Saffat 37:151

இணைவைப்பாளர்கள் அல்லாஹ் மீது கூறும் அவதூறுகளில் ஒன்றுதான் அவனுக்குப் பிள்ளை உண்டு எனக் கூறுவதாகும். நிச்சயமாக அவர்கள் தமது இந்த வாதத்தில் பொய்யர்களே.

Saffat 37:152

இணைவைப்பாளர்கள் அல்லாஹ் மீது கூறும் அவதூறுகளில் ஒன்றுதான் அவனுக்குப் பிள்ளை உண்டு எனக் கூறுவதாகும். நிச்சயமாக அவர்கள் தமது இந்த வாதத்தில் பொய்யர்களே.

Saffat 37:153

அல்லாஹ் நீங்கள் விரும்பக்கூடிய ஆண்மக்களை விட்டுவிட்டு நீங்கள் வெறுக்கக்கூடிய பெண்மக்களை தனக்கென தேர்ந்தெடுத்துக் கொண்டானா? ஒரு போதும் இல்லை.

Saffat 37:154

இணைவைப்பாளர்களே! உங்களுக்கு என்னவாயிற்று? அல்லாஹ்வுக்குப் பெண் பிள்ளைகளையும் உங்களுக்கு ஆண் பிள்ளைகளையும் எடுத்து, இவ்வாறு அநியாயமாக தீர்ப்பளிக்கின்றீர்களே?

Saffat 37:155

உங்களின் இந்த தீய கொள்கை தவறு என்பதை சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா? நிச்சயமாக நீங்கள் சிந்தித்திருந்தால் இக்கருத்தைக் கூறியிருக்க மாட்டீர்கள்.

Saffat 37:156

அல்லது உங்களிடம் இதற்கு வேதத்திலிருந்தோ தூதரிடமிருந்தோ தெளிவான ஆதாரம், சான்று இருக்கின்றதா?

Saffat 37:157

உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கான ஆதாரத்தைத் தாங்கியுள்ள வேதத்தைக் கொண்டு வாருங்கள்.

Saffat 37:158

வானவர்கள் அல்லாஹ்வின் மகள்கள் என்று எண்ணி இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வுக்கும் அவர்களை விட்டும் மறைவான வானவர்களுக்கும் இடையே உறவுமுறையை ஏற்படுத்திவிட்டார்கள். இணைவைப்பாளர்களை அல்லாஹ் விசாரணைக்காக கொண்டுவருவான் என்பதை வானவர்கள் அறிந்து வைத்துள்ளனர்.

Saffat 37:159

இணைவைப்பாளர்கள் வர்ணிக்கும் பிள்ளை, இணை, மற்றும் ஏனைய பொருத்தமற்ற பண்புகளை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.

Saffat 37:160

ஆனால் மனத்தூய்மையுள்ள அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர. நிச்சயமாக அவர்கள் அவனுக்கு தகுதியான மகத்துவமும் பூரணத்துவமும் மிக்க பண்புகளைத் தவிர வேறெதனைக் கொண்டும் அவனை வர்ணிக்க மாட்டார்கள்.

Saffat 37:161

இணைவைப்பாளர்களே!- நிச்சயமாக நீங்களும் அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கும் தெய்வங்களும்

Saffat 37:162

சத்திய மார்க்கத்தை விட்டு யாரையும் வழிகெடுக்க முடியாது.

Saffat 37:163

ஆயினும் யாரைக் குறித்து அவர் நரகவாசி என்று அல்லாஹ் முடிவு செய்துவிட்டானோ அவரைத் தவிர. எனவே நிச்சயமாக அவன் விடயத்தில் அல்லாஹ்வின் விதி செல்லுபடியாகி நிராகரித்து நரகம் செல்கிறான். உங்களுக்கும் உங்கள் தெய்வங்களுக்கும் அதனைச் செய்வதற்கு எந்த ஆற்றலும் இல்லை.

Saffat 37:164

வானவர்கள் தாங்கள் அல்லாஹ்விற்கு தம் அடிமைத்துவத்தைத் தெளிவுபடுத்தியவர்களாகவும், இணைவைப்பாளர்கள் எண்ணுவதை விட்டும் தம்மை விடுவித்தவர்களாகவும் கூறுவார்கள்: “எங்களிலுள்ள ஒவ்வொருவருக்கும் அல்லாஹ்வை வணங்குவதில், அவனுக்குக் கட்டுப்படுவதில் ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கின்றது.”

Saffat 37:165

நிச்சயமாக -நாங்கள் வானவர்கள்- அல்லாஹ்வை வணங்குவதற்காக, வழிப்படுவதற்காக வரிசையாக நிற்கக்கூடியவர்கள். திட்டமாக அவனுக்குப் பொருத்தமில்லாத பண்புகளை, வர்ணனைகளை விட்டும் அவனை தூய்மைப்படுத்துவார்கள்.

Saffat 37:166

நாங்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காக வரிசையாக நிற்கக்கூடியவர்கள். அவனுக்குப் பொருத்தமில்லாத பண்புகளைவிட்டும் அவனது தூய்மையைப் பறைசாற்றக்கூடியவர்கள்.

Saffat 37:167

நிச்சயமாக மக்காவைச் சேர்ந்த இணைவைப்பாளர்கள் முஹம்மது தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னர், “முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் போன்ற ஒரு வேதம் எங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தால் நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்கியிருப்போம்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் பொய்யர்களாவர். ஏனெனில் முஹம்மது அவர்களிடம் குர்ஆனைக் கொண்டு வந்துள்ளார். ஆனால் அவர்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள். மறுமை நாளில் தங்களுக்காக காத்திருக்கும் கடுமையான வேதனையை அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.

Saffat 37:168

மக்காவைச் சேர்ந்த இணைவைப்பாளர்கள் முஹம்மது தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னர், “முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் போன்ற ஒரு வேதம் எங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தால் நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வழங்கியிருப்போம்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் பொய்யர்களாவர். ஏனெனில் முஹம்மது அவர்களிடம் குர்ஆனைக் கொண்டு வந்துள்ளார். ஆனால் அவர்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள். மறுமைநாளில் தங்களுக்காக காத்திருக்கும் கடுமையான வேதனையை அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.

Saffat 37:169

மக்காவைச் சேர்ந்த இணைவைப்பாளர்கள் முஹம்மது தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னர், “முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் போன்ற ஒரு வேதம் எங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தால் நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வழங்கியிருப்போம்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் பொய்யர்களாவர். ஏனெனில் முஹம்மது அவர்களிடம் குர்ஆனைக் கொண்டு வந்துள்ளார். ஆனால் அவர்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள். மறுமைநாளில் தங்களுக்காக காத்திருக்கும் கடுமையான வேதனையை அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.

Saffat 37:170

மக்காவைச் சேர்ந்த இணைவைப்பாளர்கள் முஹம்மது தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னர், “முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் போன்ற ஒரு வேதம் எங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தால் நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வழங்கியிருப்போம்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் பொய்யர்களாவர். ஏனெனில் முஹம்மது அவர்களிடம் குர்ஆனைக் கொண்டு வந்துள்ளார். ஆனால் அவர்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள். மறுமைநாளில் தங்களுக்காக காத்திருக்கும் கடுமையான வேதனையை அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.

Saffat 37:171

நம் தூதர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள சான்றுகளாலும் பலத்தாலும் அவர்கள் தங்கள் எதிரிகளை வென்று விடுவார்கள், அல்லாஹ்வின் பாதையில் அவனுடைய வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக போரிடும் நம் படையினருக்கே வெற்றி என்ற நமது தூதர்களுக்கான நம்முடைய வார்த்தை முந்திவிட்டது.

Saffat 37:172

நம் தூதர்களுக்கு நாம் வழங்கியுள்ள சான்றுகளாலும் பலத்தாலும் அவர்கள் மேலோங்கி விடுவார்கள், அல்லாஹ்வின் பாதையில் அவனுடைய வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக போரிடும் நம் படையினருக்கே வெற்றி என்ற நமது தூதர்களுக்கான நம்முடைய வார்த்தை முந்திவிட்டது.

Saffat 37:173

நம் தூதர்களுக்கு நாம் வழங்கியுள்ள சான்றுகளாலும் பலத்தாலும் அவர்கள் மேலோங்கி விடுவார்கள், அல்லாஹ்வின் பாதையில் அவனுடைய வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக போரிடும் நம் படையினருக்கே வெற்றி என்ற நமது தூதர்களுக்கான நம்முடைய வார்த்தை முந்திவிட்டது.

Saffat 37:174

தூதரே!- பிடிவாதம் கொண்ட இந்த இணைவைப்பாளர்களை அல்லாஹ் அறிந்த தவணையில் வேதனை அவர்களை வந்தடையும் நேரம் வரை புறக்கணித்து விடுவீராக.

Saffat 37:175

வேதனை அவர்கள் மீது இறங்கும் போது அவர்களை நோக்குவீராக.கண்ணால் பார்ப்பது அவர்களுக்கு எந்தப் பயனும் அளிக்காத அச்சந்தர்ப்பத்தில் அவர்களும் பார்ப்பார்கள்.

Saffat 37:176

இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் வேதனையை விரைவாக வேண்டுகிறார்களா?

Saffat 37:177

அல்லாஹ்வின் வேதனை அவர்கள் மீது இறங்கி விட்டால் அந்த காலைப் பொழுது அவர்களுக்கு மிக மோசமான காலைப் பொழுதாக இருக்கும்.

Saffat 37:178

தூதரே!- அல்லாஹ் தண்டனையைக்கொண்டு தீர்ப்பளிக்கும் வரை அவர்களைப் புறக்கணித்துவிடுவீராக.

Saffat 37:179

நீர் பார்த்துக் கொள்ளும். அவர்களும் தங்கள் மீது இறங்கப்போகும் இறைவேதனையை, தண்டனையைக் காண்பார்கள்.

Saffat 37:180

முஹம்மதே!- பலத்தின் அதிபதியாகிய உம் இறைவன் இணைவைப்பாளர்கள் வர்ணிக்கும் குறைபாடான பண்புகளை விட்டும் தூய்மையானவன்.

Saffat 37:181

கண்ணியமிக்க அவனுடைய தூதர்கள் மீது அல்லாஹ்வின் வாழ்த்தும் புகழும் உண்டாகட்டும்.

Saffat 37:182

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே அதற்குத் தகுதியானவன். அவன் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவன். அவனைத்த விர அவர்களுக்கு வேறு இறைவன் இல்லை.

Sâd 38:1

இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு ஈருலகிலும் பயனளிக்கக்கூடிய அறிவுரையை உள்ளடக்கியுள்ள குர்ஆனின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். அல்லாஹ்வுக்கு இணைகள் இருக்கிறது என்று இணைவைப்பாளர்கள் எண்ணுவது போல் அல்ல விடயம்.

Sâd 38:2

என்றாலும் நிராகரிப்பாளர்கள் அல்லாஹ் ஒருவனே என்பதை ஏற்றுக்கொள்ளாமல் கர்வத்திலும் முஹம்மதோடு முரண்பாட்டிலும் பகைமையிலும் இருக்கிறார்கள்.

Sâd 38:3

நாம் இதற்கு முன்னர் தூதர்களை பொய்ப்பித்த எத்தனையோ தலைமுறைகளை அழித்துள்ளோம். வேதனை அவர்கள் மீது இறங்கிய போது அவர்கள் உதவி தேடியவர்களாக அழைத்தார்கள். உதவி தேடுவது அவர்களுக்குப் பயனளிப்பதற்கு, அது வேதனையிலிருந்து தப்பிப்பதற்கான நேரமாக இருக்கவில்லை.

Sâd 38:4

அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்தால் அல்லாஹ்வின் வேதனை ஏற்படும் என எச்சரிக்கக்கூடிய தூதர் அவர்களிடமிருந்தே வந்ததற்காக அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். முஹம்மது கொண்டுவந்தது உண்மையே என்பதற்கான ஆதாரங்களை அந்த நிராகரிப்பாளர்கள் கண்டபோது, “இந்த மனிதர் மக்களை சூனியத்திற்கு உள்ளாக்கும் ஒரு சூனியக்காரர், அல்லாஹ்விடமிருந்து வஹி வரும் இறைதூதர் என்ற அவரது வாதத்தில் பொய்யர்” என்று கூறினார்கள்.

Sâd 38:5

இந்த மனிதர் பல கடவுள்களை ஒரே கடவுளாக்கி விட்டாரா? நிச்சயமாக அவரது இச்செயல் மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும்.

Sâd 38:6

அவர்களின் தலைவர்கள் தங்களைப் பின்பற்றுவோரிடம் பின்வருமாறு கூறிக்கொண்டே சென்றார்கள்: “நீங்கள் இருக்கும் மார்க்கத்தில் உறுதியாக இருங்கள். முஹம்மதின் மார்க்கத்தில் நுழைந்துவிடாதீர்கள். உங்கள் தெய்வங்களை வணங்குவதில் நிலைத்திருங்கள். ஒரே இறைவனை வணங்குமாறு முஹம்மது உங்களை அழைப்பது திட்டமிடப்பட்ட ஒன்றாகும். அவர் நம்மீது ஆதிக்கம் செலுத்தி நாம் அவரைப் பின்பற்றுவோராக இருக்க வேண்டுமென்பதற்காக அதனை மேற்கொள்கிறார்.

Sâd 38:7

ஒரே இறைவனை வணங்குமாறு முஹம்மது கூறுவது போல நம்முடைய முன்னோர்களிடமோ ஈஸாவின் மார்க்கத்திலோ நாம் கேள்விப்பட்டதில்லை. நாம் அவரிடமிருந்து கேள்விப்படுவது பொய்யும் புனைதலுமாகும்.

Sâd 38:8

அல்குர்ஆன் தலைவர்களாகவும் கண்ணியவான்களாகவும் இருக்கும் நம்மீது இறக்கப்படாமல் நமக்கு மத்தியில் அவருக்கு மட்டும் குர்ஆன் இறங்குவது சரியா? ” மாறாக இந்த இணைவைப்பாளர்கள் உம்மீது இறக்கப்படும் வஹியில் சந்தேகம் கொண்டுள்ளார்கள். அவர்கள் இதுவரை அல்லாஹ்வின் வேதனையை அனுபவிக்கவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட அவகாசத்தைக் கொண்டு ஏமாற்றமடைந்து விட்டார்கள். அவர்கள் வேதனையை அனுபவித்திருந்தால் அல்லாஹ்வை நிராகரிக்கவும் அவனுக்கு மற்றவர்களை இணையாக்கவும் உமக்கு அறிவிக்கப்படும் இறைசெய்தியில் சந்தேகம் கொள்ளவும் துணிந்திருக்க மாட்டார்கள்.

Sâd 38:9

அல்லது யாவற்றையும் மிகைத்த யாராலும் மிகைக்க முடியாத உம் இறைவனின் அருட்களஞ்சியங்கள் இந்த இணைவைப்பாளர்களிடம் இருக்கின்றனவா? அவன் தான் நாடியவற்றை நாடியவர்களுக்கு அளிக்கின்றான். நபித்துவமும் அவனுடைய அருட்களஞ்சியங்களில் உள்ளவையாகும். தான் நாடியவர்களுக்கு அதனை அளிக்கின்றான். அவர்கள் தாம் நாடியவர்களுக்கு அதனை அளிக்கவும் தாம் நாடியவர்களுக்கு அதனை தடுக்கவும் அது அவர்களின் வசம் இல்லை.

Sâd 38:10

அல்லது அவர்கள் வழங்குவதற்கும் தடுப்பதற்கும் தகுதியாக, அவர்களிடம் வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் ஆட்சியதிகாரம் இருக்கின்றனவா? இது அவர்களின் எண்ணமாக இருந்தால் தாம் நாடியவாறு தடுக்கவும் கொடுக்கவும் அவர்கள் தீர்ப்பு சொல்வதை இலகுபடுத்துவதற்காக வானத்தின்பால் கொண்டுசேர்க்கும் காரணிகளை ஏற்படுத்திக் கொள்ளட்டும். அவர்களால் அது ஒருபோதும் முடியாது.

Sâd 38:11

முஹம்மதை பொய்ப்பிக்கும் இவர்கள் தமது தூதர்களை பொய்ப்பித்த முந்தைய கூட்டங்களைப் போல தோற்கடிக்கப்படும் கூட்டமாகும்.

Sâd 38:12

இந்த பொய்ப்பிப்பாளர்கள் முதல் பொய்ப்பிப்பாளர்கள் அல்ல. அவர்களுக்கு முன்னரும் நூஹின் சமூகம், ஆதின் சமூகம், மக்களை வேதனை செய்யப் பயன்படுத்தும் படைகளையுடைய ஃபிர்அவ்னின் சமூகம் ஆகியவைகள் பொய்ப்பித்துள்ளன.

Sâd 38:13

ஸமூதின் சமூகமும், லூத்தின் சமூகமும், ஷுஐபின் சமூகமும் பொய்ப்பித்துள்ளன. அந்தக் கூட்டங்களே தமது தூதர்களையும் அவர்கள் கொண்டுவந்ததை நிராகரித்து, பொய்ப்பிப்பதில் ஒன்றிணைந்தவர்கள்.

Sâd 38:14

இந்தக் கூட்டத்திலுள்ள ஒவ்வொருவரும் தூதர்களை பொய்ப்பித்தார்கள். எனவே அல்லாஹ்வின் வேதனை அவர்கள் மீது உறுதியானது. சில காலம் தாமதித்தாலும் அவனின் தண்டனை அவர்கள் மீது இறங்கியது.

Sâd 38:15

முஹம்மதை பொய்ப்பிக்கும் இவர்கள் மீள முடியாத இரண்டாவது முறை சூர் ஊதப்படுவதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் பொய்ப்பித்த நிலையிலேயே மரணித்துவிட்டால் அவர்களுக்கு வேதனை கிடைக்கும்.

Sâd 38:16

அவர்கள் பரிகாசமாகக் கூறினார்கள்: “எங்கள் இறைவா! மறுமை நாளுக்கு முன்னரே உலகில் எங்களுக்கு வழங்கப்படும் வேதனையில் எங்களுடைய பங்கை விரைவாகத் தந்துவிடு.”

Sâd 38:17

தூதரே!- நீர் விரும்பாதவற்றை இந்த பொய்ப்பிப்பாளர்கள் கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக. தனது எதிரிகளை எதிர்ப்பதற்கும் வழிபாட்டில் பொறுமை செய்வதற்கும் பலமுடையவரான நம் அடியார் தாவூதை நினைவு கூர்வீராக. நிச்சயமாக அவர் அதிகம் பாவமீட்சியைக்கொண்டு அல்லாஹ்வின்பால் மீளக்கூடியவராகவும் அவனுக்கு விருப்பமான செயல்களைச் செய்யக்கூடியவராகவும் இருந்தார்.

Sâd 38:18

நிச்சயமாக நாம் தாவூதுக்கு மலைகளை வசப்படுத்தித் கொடுத்தோம். அவை அவருடன் இணைந்து காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வுக்கு தஸ்பீஹு செய்தன.

Sâd 38:19

காற்றில் பறவைகளை ஒன்றுதிரட்டி வசப்படுத்தித் கொடுத்தோம். ஒவ்வொன்றும் அவருக்குக் கட்டுப்பட்டு அவரைத் தொடர்ந்து தஸ்பீஹு செய்தன.

Sâd 38:20

நாம் அவருக்கு வழங்கிய கண்ணியம், வலிமையால், எதிரிகளுக்கு எதிரான வெற்றியால் அவரது அரசாட்சியை பலப்படுத்தினோம். அவருக்கு நபித்துவத்தையும் விஷயங்களில் சரியான ஞானத்தையும் வழங்கினோம். ஒவ்வொரு விவகாரத்திலும் நாம் அவருக்கு தெளிவான விளக்கத்தையும் பேச்சு, தீர்ப்பளிப்பதில் தெளிவையும் வழங்கினோம்.

Sâd 38:21

தூதரே!- தாவூதின் வணங்குமிடத்தில் சுவர் ஏறி குதித்துவிட்ட இரு வழக்காளிகளின் செய்தி உம்மிடம் வந்ததா?

Sâd 38:22

அவர்கள் திடீரென தாவூதிடம் நுழைந்துவிட்டார்கள். அவரிடம் வழமையாக நுழைவதற்கான வழிமுறைக்கு மாற்றமாக திடீரென அவ்விருவரும் நுழைந்ததைக் கண்டு அவர் திடுக்கிட்டார். அவர் திடுக்கமடைவதைக் கண்ட அவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர். நாங்கள் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைத்த வழக்காளிகள். எனவே எங்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிப்பீராக. நீர் எங்கள் மத்தியில் தீர்ப்பளித்தால் அநீதி இழைத்துவிடாதீர். நேரான, சரியான பாதையின்பால் எங்களுக்கு வழிகாட்டுவீராக.”

Sâd 38:23

வழக்காளிகளில் ஒருவர் தாவூதிடம் கூறினார்: “நிச்சயமாக இந்த மனிதர் என் சகோதரர். இவரிடம் தொண்ணூற்று ஒன்பது ஆடுகள் இருக்கின்றன. என்னிடம் ஒரேயொரு ஆடுதான் இருக்கிறது. அதனையும் தனக்கு அளித்துவிடும்படி அவர் என்னிடம் வேண்டுகிறார். அவர் வாதத்தில் என்னை மிகைத்துவிட்டார்.”

Sâd 38:24

தாவூத் அவர்களிடையே தீர்ப்பளித்தார். அவர் வாதிட்டவரிடம் கூறினார்: “உம் ஆட்டினை தன் ஆடுகளோடு இணைக்கக் கோரி உம் சகோதரர் உம்மீது அநீதி இழைத்துவிட்டார். பங்காளிகளில் பெரும்பாலானோர் ஒருவர் மற்றவர் மீது நீதமில்லாமல் அடுத்தவருடைய சொத்தை எடுத்து வரம்பு மீறக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஆயினும் நற்செயல்கள் புரியும் நம்பிக்கையாளர்களைத் தவிர. நிச்சயமாக அவர்கள் தங்களின் பங்காளிகளுடன் நியாயமாக நடந்துகொள்கிறார்கள். அவர்களின் மீது அநீதி இழைப்பதில்லை. இந்தப் பண்புகளைப்பெற்றவர்கள் குறைவானவர்களே. இந்த வழக்கின் மூலம் தான் சோதனையில் வீழ்ந்துவிட்டோம் என்பதை தாவூத் உறுதியாக அறிந்துகொண்டார். தன் இறைவனிடம் மன்னிப்புக் கோரினார். அவன் நெருக்கத்தை பெறும்பொருட்டு சிரம்பணிந்து அவன் பக்கம் திரும்பினார்.

Sâd 38:25

நாம் அவரது பிரார்த்தனைக்கு விடையளித்து அவரை மன்னித்தோம். நிச்சயமாக அவர் நம்மிடம் நெருங்கியவராக இருந்தார். மறுமையில் அவருக்கு அழகிய திரும்புமிடமும் உண்டு.

Sâd 38:26

தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் மார்க்க மற்றும் உலக சட்டங்களை, தீர்ப்புகளை செயல்படுத்தும் பிரதிநிதியாக ஆக்கியுள்ளோம். எனவே மக்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிப்பீராக. நீர் அவர்களிடையே தீர்ப்பளிக்கும் போது மன இச்சையைப் பின்பற்றி உறவுக்காகவோ, நட்புக்காகவோ, பகைமைக்காகவோ வழக்காளிகளில் ஒருவரின் பக்கம் சாய்ந்து விடாதீர். மன இச்சை உம்மை அல்லாஹ்வின் நேரான வழியை விட்டும் நெறிபிறழச் செய்துவிடும். அல்லாஹ்வின் நேரான வழியைவிட்டும் நெறிபிறழ்ந்து விடுபவர்களுக்கு விசாரணை செய்யப்படும் நாளை அவர்கள் மறந்ததனால் கடுமையான வேதனை உண்டு. அவர்கள் விசாரணையை ஞாபகம் செய்து அதற்கு அஞ்சியிருந்தால் தங்களின் மன இச்சையின் பக்கம் சாய்ந்திருக்க மாட்டார்கள்.

Sâd 38:27

நாம் வானத்தையும் பூமியையும் வீணாகப் படைக்கவில்லை. அவையிரண்டும் வீணாகப் படைக்கப்பட்டுள்ளது என்று எண்ணுவது நிராகரிப்பாளர்களின் எண்ணமாகும். இந்த எண்ணத்தில் இருக்கக்கூடிய இந்த நிராகரிப்பாளர்கள் நிராகரித்த நிலையிலும் அல்லாஹ்வைப் பற்றிய தவறான எண்ணத்துடனும் மரணித்துவிட்டால் மறுமை நாளில் அவர்களுக்கு நரக வேதனையின் கேடுதான் உண்டு.

Sâd 38:28

அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றி நற்செயல்கள் புரியக்கூடியவர்களை, நிராகரித்து பாவங்கள் புரிந்து பூமியில் குழப்பம் விளைவிக்கும் குழப்பவாதிகளைப்போன்று நாம் ஆக்கிவிடவேமாட்டோம். தம் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களை பாவங்களில் மூழ்கிய நயவஞ்சகர்கள் மற்றும் நிராகரிப்பாளர்களைப் போன்று நாம் ஆக்கிவிட மாட்டோம். இந்த இரு பிரிவினரையும் ஒன்றாக்குவது அநீதியாகும். அது அல்லாஹ்வுக்கு தகுமானதன்று. மாறாக அல்லாஹ் நம்பிக்கைகொண்டு தன்னை அஞ்சியவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து கூலி வழங்குவான் . நிராகரிப்பாளர்களையும் துர்பாக்கியசாலிகளையும் நரகத்தில் பிரவேசிக்கச் செய்து தண்டிப்பான். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்விடத்தில் சமமானவர்கள் அல்ல. எனவே அவர்களிள் கூலியும் அவனிடத்தில் சமமானதல்ல.

Sâd 38:29

நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ள இந்தக் குர்ஆன் ஏராளமான நன்மைகளையும் பயன்களையும் உள்ளடக்கிய வேதமாகும். மக்கள் அதன் வசனங்களை சிந்தித்து, அதன் கருத்துக்களில் ஆய்வுசெய்து நன்கு அறிவுடையவர்கள் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காகவே (நாம் அதனை இறக்கியுள்ளோம்).

Sâd 38:30

தாவூதுக்கு நம்மிடமிருந்துள்ள அருளாகவும் கண்குளிர்ச்சியாகவும் அவரது மகன் சுலைமானை வழங்கினோம். சுலைமான மிகச் சிறந்த அடியாராக இருந்தார். நிச்சயமாக அவர் அதிகமாக அல்லாஹ்வின் பக்கம் திரும்பக்கூடியவராக இருந்தார்.

Sâd 38:31

வேகமாக ஓடக்கூடிய மூன்று கால்களில் நின்றுகொண்டு நான்காவது காலைத் தூக்கிவைத்துக்கொண்டிருக்கும் உயர்தரமான குதிரைகள் அஸர் பொழுதில் அவரிடம் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தை நினைவு கூர்வீராக. சூரியன் மறையும் வரை அந்த உயர்தரமான குதிரைகள் அவருக்குக் காட்டப்பட்டுக்கொண்டிருந்தது.

Sâd 38:32

சுலைமான் கூறினார்: “நான் என் இறைவனை நினைவு கூர்வதைவிட சூரியன் மறையும் வரை செல்வங்களை நேசிப்பதற்கு (அதில் உள்ளவைதான் இந்த குதிரைகள்) முன்னுரிமை அளித்துவிட்டேன். அஸ்ர் தொழுகையை விட்டும் தாமதித்துவிட்டேன்.

Sâd 38:33

அந்தக் குதிரைகளை என்னிடம் கொண்டுவாருங்கள். அவற்றை அவரிடம் கொண்டுவந்தனர். வாளால் அவற்றின் கழுத்துகளையும் கெண்டைக் கால்களையும் வெட்டலானார்.

Sâd 38:34

நாம் சுலைமானை சோதித்தோம். அவருடைய ஆட்சி அரியணையில், அவரது ஆட்சியில் சில காலம் அதிகாரம் செலுத்தும் மனித வடிவிலான ஒரு ஷைத்தானை போட்டுவிட்டோம். பின்னர் ஸுலைமானுக்கு அவரது ஆட்சியை அல்லாஹ் மீட்டிக்கொடுத்து ஷைத்தான்களின் மீது அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்தான்.

Sâd 38:35

சுலைமான் கூறினார்: “என் இறைவா! என் பாவங்களை மன்னித்து விடுவாயாக. எனக்குப் பிறகு யாருக்கும் அளிக்காத தனித்த ஆட்சியதிகாரத்தை எனக்கு வழங்குவாயாக. -என் இறைவா!- நிச்சயமாக நீ அதிகம் வழங்கக்கூடியவனாகவும் பெரும் கொடையாளியாகவும் இருக்கின்றாய்.”

Sâd 38:36

நாம் அவரது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டோம். அவருடைய கட்டளைக்கு மென்மையாக கீழ்ப்படியும் விதத்தில் காற்றை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது பலத்துடனும் வேகமாகவும் செல்லக்கூடியதாக இருந்த போதும் அதில் எந்த ஆட்டமும் இல்லை. அவர் விரும்பிய இடத்துக்கு அவரைச் சுமந்து சென்றது.

Sâd 38:37

அவருக்கு ஷைத்தான்களை வசப்படுத்தித் கொடுத்தோம். அவைகள் அவருடைய கட்டளையின்படி செயல்படுகின்றன. அவர்களில் கட்டடம் கட்டுவோர், கடலில் மூழ்கி முத்துக்குளிப்போர் இருந்தார்கள். அதிலிருந்து முத்தெடுக்கிறார்கள்.

Sâd 38:38

மூர்க்கமான ஷைத்தான்களையும் அவருக்கு வசப்படுத்தித் கொடுத்தோம். அவர்கள் அசைய முடியாதவாறு சங்கிலிகளால் விலங்கிடப்பட்டிருந்தார்கள்.

Sâd 38:39

சுலைமானே! இது உம் கோரிக்கைக்கு விடையளித்து நாம் உமக்கு வழங்கிய கொடையாகும். நீர் நாடுவோருக்கு கொடுப்பீராக; நாடுவோருக்கு அளிக்காமல் தடுத்துக்கொள்வீராக. அளிப்பதிலும் அளிக்காமல் இருப்பதிலும் நீர் எந்தவித கேள்வி கணக்கும் கேட்கப்படமாட்டீர்.

Sâd 38:40

நிச்சயமாக சுலைமான் நமக்கு நெருக்கமானவர்களில் ஒருவர். அவருக்கு சுவனம் என்னும் அழகிய திரும்புமிடம் உண்டு.

Sâd 38:41

தூதரே!- நம்முடைய அடியார் அய்யூபை நினைவு கூர்வீராக. அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்: “நிச்சயமாக ஷைத்தான் சிரமமும் வேதனையும் மிக்க ஒரு விஷயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டான்.”

Sâd 38:42

நாம் அவரிடம் கூறினோம்: “உம் காலால் தரையை அடிப்பீராக.” அவர் தம் காலால் தரையில் அடித்தார். அதிலிருந்து குளிப்பதற்கும் குடிப்பதற்கும் ஏற்ற ஒரு நீருற்று பொங்கியது. அது அவரது தீங்கையும் நோவினையையும் போக்கிவிட்டது.

Sâd 38:43

நாம் அவரது பிரார்த்தனைக்கு விடையளித்து அவருக்கு ஏற்பட்ட தீங்கினைப் போக்கினோம். அவருக்கு அவரது குடும்பத்தை மீண்டும் வழங்கினோம். அதுபோன்ற இன்னும் பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் வழங்கினோம். இது அவர் மீது நாம் கருணை புரிவதற்காகவும், அவரது பொறுமைக்குக் கூலியாகவும், பொறுமையின் முடிவில் விடிவும் கூலியும் உண்டு என்பதை நன்கு அறிவுடையோர் புரிந்துகொள்வதற்காகவுமே இவ்வாறு செய்தோம்.

Sâd 38:44

அய்யூப் தம் மனைவியின் மீது கோபம் கொண்டபோது அவளை நூறு கசையடி அடிப்பதாக சத்தியம் செய்தார். நாம் அவரிடம் கூறினோம்: -“அய்யூபே- நீர் உம் சத்தியத்தை நிறைவேற்றும் பொருட்டு ஒரு பிடி புல்லை எடுத்து அவளை அடிப்பீராக. நீர் செய்த சத்தியத்தை முறித்து விடாதீர். அவர் ஒரு பிடி புல்லை எடுத்து தம் மனைவியை அடித்தார். நிச்சயமாக நாம் அவருக்கு வழங்கிய சோதனையில் அவரைப் பொறுமையாளராகக் கண்டோம். அவர் மிகச் சிறந்த அடியாராகவும் திட்டமாக அல்லாஹ்வின்பால் அதிகமாக திரும்பக்கூடியவராகவும் இருந்தார்.

Sâd 38:45

தூதரே!- நாம் தேர்ந்தெடுத்துக்கொண்ட நம் அடியார்கள் மற்றும் நாம் அனுப்பிய தூதர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோரை நினைவு கூர்வீராக. அவர்கள் அல்லாஹ்வை வழிபடுவதில், அவனுடைய திருப்தியைத் தேடுவதில் பலம்மிக்கவர்களாகவும் சத்தியத்தில் உண்மையாகவும் அகப்பார்வை உடையவர்களாகவும் இருந்தார்கள்.

Sâd 38:46

நிச்சயமாக நாம் அவர்களுக்கு தனித்துவமான அருட்கொடைகளை வழங்கினோம். அதுதான் மறுமையின் நினைவூட்டலைக் கொண்டு அவர்களின் உள்ளங்களை வளப்படுத்துவதும், நற்செயல்களில் ஈடுபட்டு மறுமைக்காக தயாராவதும், அதற்காக நற்காரியங்களில் ஈடுபடுமாறு மக்களை அழைப்பதுமாகும்.

Sâd 38:47

நிச்சயமாக அவர்கள் நம்மிடத்தில், நம்மை வணங்கி வழிபடுவதற்கும், நம் தூதைச் சுமந்து, மக்களிடம் அதனை எடுத்துரைப்பதற்காக நாம் தேர்ந்தெடுத்த அடியார்களில் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.

Sâd 38:48

நபியே!- இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம், அல்யஸவு, துல்கிஃப்லு ஆகியோரையும் நினைவு கூர்வீராக. நல்ல முறையில் அவர்களைப் புகழ்வீராக. அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள். இவர்கள் அனைவரும் அல்லாஹ்விடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே.

Sâd 38:49

இது குர்ஆனில் இவர்களின் அழகிய புகழை குறிப்பிடுவதாகும். நிச்சயமாக அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு மறுமையில் அழகிய திரும்புமிடம் இருக்கின்றது.

Sâd 38:50

அழகிய இந்த திரும்புமிடம் அது நிலையான சுவனங்களாகும். அவற்றில் மறுமை நாளில் அவர்கள் நுழைவார்கள். அவர்களை வரவேற்கும் விதமாக அவற்றின் கதவுகள் அவர்களுக்காக திறக்கப்படும்.

Sâd 38:51

அவர்களுக்கென்று அலங்கரிக்கப்பட்ட கட்டில்களில் அவர்கள் சாய்ந்திருப்பார்கள். அங்குள்ள அவர்களின் பணியாளர்களிடம் அவர்களுக்கென்று தயார் செய்யப்பட அவர்கள் விரும்பும் பல வகையான பழங்களையும் மதுபானம் மற்றும் இன்னோரன்ன பானங்களையும் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

Sâd 38:52

அவர்களிடத்தில் தங்கள் கணவர்களை தவிர ஏனையவர்களை ஏறெடுத்துப் பார்க்காத சம வயதுடைய மங்கையர்கள் இருப்பார்கள்.

Sâd 38:53

இறையச்சமுடையவர்களே!- இதுதான் உலகில் நீங்கள் செய்துகொண்டிருந்த நற்செயல்களுக்கு மறுமை நாளில் வழங்கப்படுவதாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட அழகிய கூலியாகும்.

Sâd 38:54

நிச்சயமாக நாம் உங்களுக்குக் குறிப்பிட்ட இந்த கூலி மறுமை நாளில் இறையச்சமுடையோருக்கு வழங்கும் கொடையாகும். அது என்றும் துண்டிக்கப்படாத, முடிவடையாத நிரந்தரமான கொடையாகும்.

Sâd 38:55

நாம் குறிப்பிட்ட இதுதான் இறையச்சமுடையோருக்கான கூலியாகும். நிச்சயமாக நிராகரித்தும் பாவங்கள் புரிந்தும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறக்கூடியவர்களுக்கு இறையச்சமுடையோருக்கு கிடைக்கும் கூலியை விட மாற்றமான கூலி வழங்கப்படும். அவர்களுக்கு மறுமை நாளில் மோசமான திரும்புமிடம்தான் உண்டு.

Sâd 38:56

அந்தக் கூலி அவர்களைச் சூழ்ந்துகொள்ளும் நரகமாகும். அதன் வெப்பத்தை, தீச்சுவாலையை அவர்கள் அனுபவிப்பார்கள். அதிலிருந்தே அவர்களுக்கு படுக்கை விரிப்பு அளிக்கப்படும். அது அவர்களின் படுக்கை விரிப்புகளில் மிகவும் மோசமான படுக்கை விரிப்பாகும்.

Sâd 38:57

இந்த வேதனை நன்கு கொதித்த நீரும் அதில் வேதனைக்குள்ளாக்கப்படும் நரகவாசிகளின் உடல்களிலிருந்து வழியும் சீழுமாகும். அவர்கள் அதனை அருந்தட்டும். அது தாகம் தீர்க்காத அவர்களது பானமாகும்.

Sâd 38:58

அவர்களுக்கு இந்த வகையான இன்னுமொரு வேதனையும் உண்டு. அவர்களுக்கு இன்னும் பல வகையான வேதனைகளும் உண்டு. மறுமையில் அவற்றினால் அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள்.

Sâd 38:59

நரகவாசிகள் நரகில் நுழைந்தவுடன், சண்டையில் ஈடுபடுவோருக்கிடையே நிகழும் ஏச்சுப் பேச்சுக்கள் அவர்களிடையே நிகழும். அவர்களில் சிலர் சிலரை விட்டுவிட்டு நீங்கிவிடுவார்கள். அவர்களில் சிலர் கூறுவார்கள்: “இவர்கள் உங்களுடன் நரகத்தில் நுழையும் கூட்டத்தினராவர்.” அதற்கவர்கள் பதிலளிப்பார்கள்: “அவர்களுக்கு எந்த வரவேற்பும் இல்லை. நாம் அனுபவிக்கும் நரக வேதனையை அவர்களும் அனுபவிக்கப் போகிறார்கள்.”

Sâd 38:60

தலைவர்களைப் பின்பற்றிய ஒரு கூட்டத்தினர் பின்பற்றப்பட்ட அந்த தலைவர்களைப் பார்த்துக் கூறுவார்கள்: “- பின்பற்றப்பட்ட தலைவர்களே!- என்றாலும் உங்களுக்கு எந்த வரவேற்பும் இல்லை. நீங்கள் எம்மை ஏமாற்றி, வழிகெடுத்ததனால் நாங்கள் அனுபவிக்கும் இந்த நோவினையான வேதனைக்கு நீங்கள்தான் காரணம். இது தங்குமிடம் மோசமான தங்குமிடமாகும். நரக நெருப்பே அனைவருக்குமான தங்குமிடமாகும்.”

Sâd 38:61

பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நேர்வழி எங்களிடம் வந்த பின்னரும் அதனைவிட்டு எங்களைக் வழிகெடுத்தவர்களை நரகத்தில் வேதனையில் பலமடங்கு வேதனைக்கு உள்ளாக்குவாயாக.”

Sâd 38:62

அநியாயம் செய்து, கர்வம் கொண்டவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு என்னவாயிற்று! உலகில் நாங்கள் வேதனைக்குத் தகுதியான துர்பாக்கியசாலிகளாக எண்ணிக் கொண்டிருந்த ஆட்களை நரகில் எங்களுடன் காணவில்லையே!?

Sâd 38:63

அவர்கள் வேதனைக்குத் தகுதி பெறாமலிப்பதற்குக் காரணம், நாங்கள் அவர்களைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தது தவறு என்பதனாலா? அல்லது நாங்கள் அவர்களைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தது சரியானதாக இருந்து, அவர்கள் நரகத்தில் நுழைந்தும், எங்களின் பார்வைக்குத் தென்படவில்லையா?

Sâd 38:64

நிச்சயமாக நாம் உங்களுக்குக் குறிப்பிட்ட மறுமை நாளில் நிராகரிப்பாளர்களிடையே ஏற்படக்கூடிய தர்க்கங்கள் சந்தேகமற்ற உண்மையாகும்.

Sâd 38:65

முஹம்மதே! உம் சமூகத்தைச் சேர்ந்த நிராகரிப்பாளர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதர்களை பொய்ப்பித்தால், அவனுடைய வேதனை உங்களைத் தாக்கிவிடும் என்று நான் உங்களை எச்சரிப்பவன்தான். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் வேறுயாரும் இல்லை. அவன் தன் கண்ணியத்திலும் பண்புகளிலும் பெயர்களிலும் தனித்தவன். ஒவ்வொன்றையும் அடக்கியாள்பவன். ஒவ்வொன்றும் அவனுக்கே அடிபணிகின்றன.”

Sâd 38:66

வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளவற்றிற்கும் அவனே இறைவன். அவன் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை அவன் மன்னிக்கக்கூடியவன்.

Sâd 38:67

தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக குர்ஆன் மகத்தான செய்தியாகும்.”

Sâd 38:68

இந்த மகத்தான செய்தியை நீங்கள் அலட்சியமாகப் புறக்கணிக்கின்றீர்கள். அதன்பால் திரும்பியும் பார்ப்பதில்லை.

Sâd 38:69

நிச்சயமாக அல்லாஹ் எனக்கு வஹி அறிவிக்கவில்லை என்றால் ஆதமின் படைப்பைப் பற்றி வானவர்களிடையே நடந்த உரையாடலைக் குறித்து எனக்கு எதுவும் தெரிந்திருக்காது.

Sâd 38:70

நிச்சயமாக நான் உங்களை அவனுடைய வேதனையிலிருந்து தெளிவாக எச்சரிக்கை செய்பவனாக இருக்கின்றேன் என்பதனால்தான் அவன் எனக்கு வஹி அறிவிக்கின்றான்.

Sâd 38:71

உம் இறைவன் வானவர்களிடம் பின்வருமாறு கூறியதை நினைவுகூர்வீராக: “நிச்சயமாக நான் மண்ணிலிருந்து ஆதம் என்னும் மனிதனைப் படைக்கப் போகின்றேன்.

Sâd 38:72

நான் அவரது படைப்பை முழுமைப்படுத்தி அவரது வடிவத்தை செம்மையாக்கி அவருள் என் ஆன்மாவை ஊதினால் நீங்கள் அவருக்குச் சிரம்பணிய வேண்டும்.”

Sâd 38:73

வானவர்கள் அனைவரும் தங்கள் இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து அவரை, கண்ணியப்படுத்துவதற்காக அவருக்கு சிரம்பணிந்தார்கள். ஆதமுக்கு சிரம்பணியாமல் அவர்களில் யாரும் எஞ்சியிருக்கவில்லை.

Sâd 38:74

ஆனால் இப்லீஸ் சிரம்பணியாமல் கர்வம் கொண்டான். அவன் கர்வத்தினால் தன் இறைவனின் கட்டளையை நிராகரித்துவிட்டான்.

Sâd 38:75

அல்லாஹ் கேட்டான்: “இப்லீஸே! என் கையால் படைத்த ஆதமுக்கு சிரம்பணிவதைவிட்டும் உன்னைத் தடுத்தது எது? கர்வம் சிரம்பணியாமல் உன்னைத் தடுத்ததா? அல்லது ஏற்கனவே உன் இறைவனை விட நீ பெருமையுடையவனாகவும் உயர்ந்தவனாகவும் இருந்தாயா?”

Sâd 38:76

இப்லீஸ் கூறினான்: “நான் ஆதமைவிடச் சிறந்தவன். நீ என்னை நெருப்பால் படைத்துள்ளாய். அவரையோ மண்ணால்தான் படைத்துள்ளாய்.” நெருப்பு மண்ணை விட சிறந்த மூலக்கூறு என்பது அவனது எண்ணமாகும்.

Sâd 38:77

அல்லாஹ் இப்லீஸுக்கு கூறினான்: “நீ சுவனத்திலிருந்து வெளியேறு. நிச்சயமாக நீ ஏசப்பட்டு சபிக்கப்பட்டவன்,

Sâd 38:78

கூலி வழங்கப்படும் மறுமை நாள் வரை நிச்சயமாக நீர் சுவனத்திலிருந்து விரட்டப்பட்டுவிட்டாய்.

Sâd 38:79

இப்லீஸ் கேட்டான்: “எனக்கு அவகாசம் அளிப்பாயாக! நீ உன் அடியார்களை மீண்டும் எழுப்பும் நாள் வரை என்னை மரணிக்கச்செய்யாதே .”

Sâd 38:80

அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக நீ அவகாசம் சொடுக்கப்பட்டவர்களில் உள்ளவனே.

Sâd 38:81

உன்னை அழிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நேரம் குறிக்கப்பட நாள் வரை.”

Sâd 38:82

இப்லீஸ் கூறினான்: “உன் வல்லமை மற்றும் ஆதிக்கத்தின் மீது ஆணையாக, நான் ஆதமுடைய மக்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்.

Sâd 38:83

என்னுடைய வழிகேட்டிலிருந்து நீ யாரைப் பாதுகாத்தாயோ அவர்களையும் இன்னும் உன்னை மட்டும் வணங்குவதற்காக நீ தெரிவுசெய்தோரையும் தவிர.”

Sâd 38:84

அல்லாஹ் கூறினான்: “சத்தியம் என்னிடம் உள்ளது. சத்தியத்தையே நான் கூறுவேன். நான் அதைத்தவிர வேறேதுவும் கூற மாட்டேன்.

Sâd 38:85

இப்லீஸே! மறுமை நாளில் உன்னாலும் நிராகரிப்பில் உன்னைப் பின்பற்றிய ஆதமுடைய மக்கள் அனைவராலும் நான் நரகத்தை நிரப்புவேன்.”

Sâd 38:86

தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் உங்களிடம் எடுத்துரைக்கும் அறிவுரைக்காக எந்தக் கூலியையும் உங்களிடம் கேட்கவில்லை. எனக்கு எடுத்துரைக்குமாறு ஏவப்பட்டவற்றைத் தவிர வேறெதையும் கொண்டுவந்து நான் அதிகப்படுத்த சிரமம் எடுத்துக்கொண்டவனும் அல்ல.

Sâd 38:87

நிச்சயமாக குர்ஆன் மனிதர்கள் மற்றும் ஜின்களில் பகுத்தறிவுடையோருக்கான ஓர் அறிவுரையாகும்.

Sâd 38:88

சிறிது காலத்தின் பின் நீங்கள் மரணிக்கும் வேளையில் இந்த குர்ஆனின் செய்தி உண்மையானது என்பதை நீங்கள் நிச்சயம் அறிந்துகொள்வீர்கள்.

Zümer 39:1

இந்த குர்ஆன் யாவற்றையும் மிகைத்த யாராலும் மிகைக்க முடியாத, படைத்தல், திட்டமிடல், தனது மார்க்கம் ஆகியவற்றில் ஞானம் நிறைந்த அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதாகும். அது வேறொருவரிடமிருந்து இறக்கப்பட்டதல்ல.

Zümer 39:2

தூதரே!- நிச்சயமாக நாம் உம்மீது சத்தியத்தை உள்ளடக்கியுள்ள குர்ஆனை இறக்கியுள்ளோம். அதன் செய்திகள் முழுவதும் உண்மையானவை. அதன் சட்டங்கள் முழுவதும் நீதியானவை. இணைவைப்பிலிருந்து நீங்கியவராக அந்தரங்க சுத்தியோடு அல்லாஹ் ஒருவனையே வணங்குவீராக.

Zümer 39:3

இணைவைப்பை விட்டும் நீங்கிய தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வை விடுத்து சிலைகளையும் ஷைத்தான்களையும் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டு அவர்களை வணங்குவோர், தாம் அவர்களை வணங்குவதை நியாயப்படுத்த இவ்வாறு கூறுகிறார்கள்: “அந்தஸ்த்தால் எங்களை அல்லாஹ்விடம் நெருக்கிவைக்க வேண்டும், எங்களின் தேவைகளை அவனிடம் கொண்டுசெல்ல வேண்டும், அவனிடம் எங்களுக்காக பரிந்துபேச வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இவர்களை வணங்குகின்றோம்.” நிச்சயமாக அல்லாஹ் அவனை மட்டுமே வணங்கும் நம்பிக்கையாளர்களுக்கும் அவனை நிராகரிக்கும் இணைவைப்பாளர்களுக்குமிடையே அவர்கள் முரண்பட்டுள்ள ஏகத்துவத்தின் விடயத்தில் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். அல்லாஹ்வுக்கு இணையிருப்பதாக அவன் மீது பொய் கூறுவோருக்கும் அல்லாஹ் அவர்கள் மீது அருட்கொடைகளை மறுப்போருக்கும் அவன் சத்தியத்தின்பால் வழிகாட்ட அருள்புரிய மாட்டான்.

Zümer 39:4

அல்லாஹ் ஒரு மகனை ஏற்படுத்த நாடியிருந்தால் தன் படைப்புகளில் தான் நாடியோரைத் தேர்ந்தெடுத்து அவனைத் தனது பிள்ளையின் அந்தஸ்த்தில் வைத்திருப்பான். இணைவைப்பாளர்களின் கூறுவதைவிட்டும் அவன் தூய்மையானவன். தன் உள்ளமையிலும் பண்புகளிலும் செயல்களிலும் தனித்தவன். அவற்றில் அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவன் படைப்புகள் அனைத்தையும் அடக்கியாள்பவன்.

Zümer 39:5

அவன் வானங்களையும் பூமியையும் பாரிய நோக்கத்தோடு படைத்துள்ளான். அநியாயக்காரர்கள் கூறுவதுபோல அவன் வீணாகப் படைக்கவில்லை. அவன் இரவை பகலில் பிரவேசிக்கச் செய்கின்றான். பகலை இரவில் பிரவேசிக்கச் செய்கின்றான். ஒன்று வெளிப்பட்டால் மற்றொன்று மறைந்து விடுகிறது. அவன் சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தித் தந்துள்ளான். ஒவ்வொன்றும் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம்வரை இந்த வாழ்க்கை முடியும்வரை சென்று கொண்டிருக்கும். அவன்தான் தன் எதிரிகளைத் தண்டிக்கக்கூடிய அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை அவன் மன்னிக்கக்கூடியவன்.

Zümer 39:6

மனிதர்களே!- உங்கள் இறைவன் ஆதம் என்ற ஒரே ஆன்மாவிலிருந்து உங்களைப் படைத்துள்ளான். பின்னர் அவரிடமிருந்து அவரது மனைவி ஹவ்வாவைப் படைத்தான். ஒட்டகம், பசுமாடு, வெள்ளாடு, செம்மறியாடு ஆகியவற்றில் எட்டு வகைகளை உங்களுக்காகப் படைத்துள்ளான். ஒவ்வொரு வகையிலும் அவன் ஆண், பெண் இணைகளைப் படைத்துள்ளான். உங்கள் அன்னையரின் வயிற்றில் வயிறு, கருவறை, நஞ்சுக்கொடி ஆகிய மூன்று இருள்களினுள் உங்களைக் கட்டம் கட்டமாகப் படைத்தான். இவையனைத்தையும் படைப்பது உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான். ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது. அவனைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவனை வணங்காமல் அவர்களோ படைக்கப்பட்டு அவர்களால் எதையும் படைக்க முடியாதவர்களை வணங்கி எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.

Zümer 39:7

மனிதர்களே!- நீங்கள் உங்கள் இறைவனை நிராகரித்தால் நிச்சயமாக அவன் உங்களின் நம்பிக்கையைவிட்டும் நிச்சயமாக அவன் தேவையற்றவன். உங்களின் நிராகரிப்பால் அவனுக்கு எந்த தீங்கும் ஏற்பட்டு விடப்போவதில்லை. திட்டமாக உங்கள் நிராகரிப்பின் தீங்கு உங்களுக்கே கிடைக்கும். அல்லாஹ் தன் அடியார்கள் தன்னை நிராகரிப்பதை விரும்ப மாட்டான். நிராகரிக்கும்படி அவர்களை ஏவ மாட்டான். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான, தீய காரியங்களை செய்யும்படி கட்டளையிட மாட்டான். நீங்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி அவன் மீது நம்பிக்கைகொண்டால் அவன் உங்கள் நன்றியுணர்வை ஏற்றுக் கொள்வான். அதற்காக அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது. மாறாக ஒவ்வொருவரும் தான் சம்பாதித்தவற்றிற்குப் பிணையாக உள்ளார்கள். பின்னர் மறுமை நாளில் உங்கள் இறைவனிடம் மட்டுமே திரும்ப வேண்டும். அவன் நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்களைக்குறித்து உங்களுக்கு அறிவிப்பான். உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் உள்ளங்களில் உள்ளவற்றையும் நன்கறிந்தவன். அவற்றில் இருந்து எதுவும் அவனைவிட்டு மறைய முடியாது.

Zümer 39:8

நிராகரிப்பாளனை நோய், பண இழப்பு, மூழ்கிவிடுவோம் என்ற பயம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துன்பம் தீண்டிவிட்டால் தன் இறைவனின் பக்கம் மாத்திரம் திரும்பி, தன்னைப் பீடித்த துன்பத்தைப் போக்குமாறு மன்றாடுகிறான். பின்னர் அல்லாஹ் அவனை பீடித்த துன்பத்தைப் போக்கி அவனுக்கு அருட்கொடையை வழங்கினால் அவன் இதற்கு முன்னர் பிரார்த்தித்துக் கொண்டிருந்த அல்லாஹ்வை விட்டுவிட்டு அவனுக்கு அவனை விடுத்து வணங்கப்படக்கூடிய இணைகளை ஏற்படுத்துகிறான். அல்லாஹ்விடம் கொண்டு சேர்க்கும் வழியை விட்டும் மற்றவர்களைத் தடுக்கவே இவ்வாறு செய்கிறான். -தூதரே!- இந்நிலைமையில் உள்ளவனுக்கு நீர் கூறுவீராக: “உன் நிராகரிப்பினால் உனது எஞ்சிய வாழ்வை அனுபவித்துக் கொள். அது குறைவான காலம்தான். நிச்சயமாக மறுமை நாளில் நீ நரகவாசியாவாய். அதில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பாய்.

Zümer 39:9

அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு இரவு நேரங்களில் நின்றவாறும் சிரம்பணிந்தவாறும் அவனை வணங்கி மறுமையின் வேதனையை அஞ்சி அவனுடைய அருளை ஆதரவு வைப்பவர் சிறந்தவரா? அல்லது துன்பமான சமயங்களில் அல்லாஹ்வை வணங்கி மகிழ்ச்சியான சமயங்களில் அவனை நிராகரித்து அவனுக்கு இணைகளை ஏற்படுத்தும் நிராகரிப்பாளரா? -தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைப் பற்றி அறிந்ததனால் அவன் தங்கள் மீது கடமையாக்கியதை அறிந்தவர்களும் அவற்றில் எதையும் அறியாதவர்களும் சமமாவார்களா? திட்டமாக இந்த இரு பிரிவினருக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை நேரான அறிவுடையவர்கள்தாம் அறிந்து கொள்வார்கள்.

Zümer 39:10

தூதரே!- என் மீதும், என் தூதர்கள் மீதும் நம்பிக்கைகொண்ட என் அடியார்களிடம் கூறுவீராக: “உங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். உங்களில் இவ்வுலகில் நற்செயல் புரிந்தவர்களுக்கு அதில் வெற்றி, ஆரோக்கியம், செல்வம் போன்ற நன்மையும் மறுவுலகில் சுவனமும் உண்டு. அல்லாஹ்வின் பூமி விசாலமானது. எவ்வதத் தடையுமின்றி அவனை வணங்கும் இடத்தைப் பெறுவதற்காக புலம்பெயர்ந்து செல்லுங்கள். திட்டமாக மறுமை நாளில் பொறுமையாளர்கள் எண்ணிக்கை, அளவின்றி கூலி வழங்கப்படுவார்கள். ஏனெனில் அந்தளவுக்கு அது அதிகமான பலவகையானதாகும்.

Zümer 39:11

தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் அல்லாஹ்வை மட்டுமே வணக்கத்தில் கலப்பற்றதாக வணங்க வேண்டும் என்று அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்.

Zümer 39:12

இந்த சமூகத்தில் அவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களில் முதலாமவனாக இருக்க வேண்டும் என அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்.”

Zümer 39:13

தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியாமல் அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் மாபெரும் நாளான மறுமை நாளின் வேதனையை அஞ்சுகின்றேன்.”

Zümer 39:14

தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் அல்லாஹ்வை மட்டுமே வணக்கத்தில் கலப்பற்ற முறையில் வணங்குகின்றேன். அவனுடன் வேறுயாரையும் வணங்க மாட்டேன்.”

Zümer 39:15

இணைவைப்பாளர்களே!- அவனை விடுத்து நீங்கள் விரும்பக்கூடிய சிலைகளை வணங்கிக் கொள்ளுங்கள்.” (இந்தக் கட்டளை அச்சுறுத்துவதற்காகும்) -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக உண்மையில் நஷ்டமடைந்தவர்கள் யாரெனில் தங்களையும் தங்களின் குடும்பத்தினரையும் இழந்தவர்கள்தாம். அவர்கள் இவர்களைப் பிரிந்து தனியாக சுவனத்திற்குச் சென்றதனாலோ அல்லது இவர்களுடன் நரகத்தில் நுழைந்துவிட்டதனாலோ இவர்களைவிட்டும் பிரிந்துவிட்டதனால் அவர்கள் சந்திக்க முடியாது. ஒருபோதும் சந்தித்துக்கொள்ளமாட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள் இதுதான் உண்மையான, சந்தேகமற்ற தெளிவான இழப்பாகும்.

Zümer 39:16

அவர்களுக்கு மேலும் கீழும் புகையும் நெருப்பும் வெப்பமும் இருக்கும். மேல குறிப்பிடப்பட்ட இந்த வேதனைகளைக் கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை அச்சமூட்டுகிறான். என் அடியார்களே! என் கட்டளைகளைச் செயல்படுத்தி தடைகளை விட்டும் விலகி என்னை அஞ்சிக் கொள்ளுங்கள்.

Zümer 39:17

சிலை வணக்கத்தையும் அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் அத்தனையையும் விலகி பாவமன்னிப்புக் கோரி அவன்பால் மீண்டவர்களுக்கு மரணிக்கும் வேளையிலும் அடக்கஸ்த்தலத்திலும் மறுமை நாளிலும் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி உண்டு. -தூதரே!- என் அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக.

Zümer 39:18

அவர்கள் வார்த்தையை காதுகொடுத்துக் கேட்டு அவற்றில் சரியானதையும் தவறானதையும் பிரித்துப் பார்க்கிறார்கள். அதில் பயனுள்ள சிறந்த வார்த்தையைப் பின்பற்றுகிறார்கள். இந்தப் பண்புகளால் வர்ணிக்கப்பட்டவர்கள்தாம் அல்லாஹ்வால் நேர்வழிபெற பாக்கியம் பெற்றவர்கள். இவர்கள்தாம் நல்லறிவுடையவர்கள்.

Zümer 39:19

தூதரே!- யார் மீது அவர்கள் நிராகரிப்பில், வழிகேட்டில் நிலைத்திருந்ததனால் வேதனையின் வாக்கு உறுதியாகிவிட்டதோ அவர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லாமல் உம்மால் நேர்வழியளிக்க முடியாது. இந்த பண்புகளை உடையவர்களை உம்மால் நரகத்திலிருந்து விடுவிக்க முடியுமா என்ன?

Zümer 39:20

ஆனால் தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அடுக்கடுக்காகக் கட்டப்பட்ட உயர்ந்த மாளிகைகள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதனை அல்லாஹ் அவர்களுக்கு வாக்களித்துவிட்டான். அவன் தன் வாக்குறுதிக்கு மாறாகச் செயல்படுவதில்லை.

Zümer 39:21

நிச்சயமாக அல்லாஹ்தான் வானத்திலிருந்து மழையை இறக்கி அதனை பூமியில் ஊற்றுக்களில் ஓடச்செய்கிறான் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். பின்னர் அதனை ஊற்றுகளாகவும் ஆறுகளாகவும் ஓடச் செய்கிறான். பின்னர் அந்த நீரைக்கொண்டு பல்வேறு நிறமுடைய பயிர்களை வெளிப்படுத்துகின்றான். பின்னர் பயிர்கள் காய்ந்துவிடுகிறது. -பார்க்கக்கூடியவனே!- பசுமையாக இருந்த பின்னர் அது மஞ்சள் நிறமாகிவிடுவதை நீ காண்கின்றாய். பின்னர் அது காய்ந்த பிறகு சருகுகளாகி நொறுங்கி விடுகிறது. நிச்சயமாக மேலே கூறப்பட்டவைகளிலே உயிரோட்டமான உள்ளமுடையோருக்கு நினைவூட்டல் இருக்கின்றது.

Zümer 39:22

அல்லாஹ் யாருடைய உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவாக்கி அதன்பால் அவருக்கு வழிகாட்டியதனால் தம் இறைவனிடமிருந்து வந்துள்ள ஞானத்தின் மீது இருப்பவரும், அல்லாஹ்வின் நினைவை விட்டும் இறுகிய இதயத்தைப் பெற்றவரும் சமமாக மாட்டார்கள். வெற்றி நேர்வழி பெற்றவர்களுக்கே. இறை நினைவை விட்டும் இறுகிய இதயமுடையவர்கள் இழப்பையே பெறுவார்கள். அவர்கள் சத்தியத்தைவிட்டும் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றார்கள்.

Zümer 39:23

அல்லாஹ் தன் தூதர் முஹம்மது மீது மிகச்சிறந்த செய்தியான குர்ஆனை இறக்கியுள்ளான். அது உண்மையிலும் அழகிலும் ஒத்திசைவிலும் முரண்பாடின்மையிலும் ஒன்றையொன்று ஒத்திருக்கக்கூடியதாகும். சம்பவங்கள், சட்டங்கள், வாக்குறுதிகள், எச்சரிக்கைகள், சத்தியவாதிகளின் பண்புகள், அசத்தியவாதிகளின் பண்புகள் ஆகியவை அதில் திரும்பத்திரும்ப வந்துள்ளன. அதிலுள்ள எச்சரிக்கைகளைச் செவியுறும்போது தங்கள் இறைவனை அஞ்சக்கூடியவர்களின் தோல்கள் சிலிர்க்கின்றன. பின்னர் அதிலுள்ள சந்தோசங்கள், நற்செய்திகளை செவியுறும்போது அவர்களின் தோலும் உள்ளமும் இலகிவிடுகிறது. மேற்கூறப்பட்ட குர்ஆன் மற்றும் அதன் தாக்கம் என்பவை அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு வழி காட்டும் நேர்வழியாகும். அவன் யாரைக் கைவிட்டு, நேர்வழிபெற பாக்கியம் அளிக்கவில்லையோ அவருக்கு வேறு யாரும் வழிகாட்டுபவன் இருக்க முடியாது.

Zümer 39:24

யாருக்கு அல்லாஹ் உலகில் நேர்வழிகாட்டி பாக்கியம் அளித்து மறுமையில் அவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வானோ அவரும் யார் நிராகரித்த நிலையிலேயே மரணித்து அல்லாஹ் அவரை கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் நரகத்தில் பிரவேசிக்கச் செய்துவிடுவானோ அவரும் சமமாவார்களா என்ன? முகங்குப்புற வீழ்ந்து கிடக்கும் அவர் தன் முகத்தால்தான் நரக நெருப்பைத் தடுக்க வேண்டும். நிராகரித்து, பாவங்கள் புரிந்து தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களிடம் இழிவாக கூறப்படும்: “நிராகரித்து, பாவங்கள் புரிந்து நீங்கள் சம்பாதித்த வேதனையை அனுபவியுங்கள். இதுதான் உங்களுக்கான கூலியாகும்.

Zümer 39:25

இந்த இணைவைப்பாளர்களுக்கு முன்னர் வாழ்ந்த சமூகங்களும் பொய்ப்பித்தன. அவர்கள் வேதனையை உணர்ந்து பாவமன்னிப்புக்கு தயாராக முடியாதளவு திடீரென வேதனை அவர்களிடம் வந்தது.

Zümer 39:26

அல்லாஹ் அதன் மூலம் இவ்வுலக வாழ்வில் அவர்களை இழிவுமிக்க வேதனையை அனுபவிக்கச் செய்தான். நிச்சயமாக அவர்களுக்காக காத்திருக்கும் மறுமையின் வேதனையோ மிகக் கடுமையானது. அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!

Zümer 39:27

நாம் முஹம்மதின் மீது இறக்கிய இந்த குர்ஆனில் அவர்கள் படிப்பினை பெறும் பொருட்டும் சத்தியத்தின்படி செயல்பட்டு அசத்தியத்தை விட்டுவிட வேண்டும் என்பதற்காகவும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் நம்பிக்கை கொள்வதற்கும் நிராகரிப்பதற்கும் நன்மைக்கும் தீமைக்கும் ஏனையவற்றுக்கும் பலவகையான உதாரணங்களை எடுத்துக் கூறியுள்ளோம்.

Zümer 39:28

அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்ச வேண்டும் என்பதற்காக இந்த குர்ஆனை எவ்விதக் கோணலும் களங்கமும் நெறிபிறலுமற்ற அரபி மொழியில் அருளியுள்ளோம்.

Zümer 39:29

அல்லாஹ் இணைவைப்பாளனுக்கும் ஓரிறைக்கொள்கையைப் பின்பற்றுபவனுக்கும் ஒரு உதாரணம் கூறுகிறான். அடிமையான ஒரு மனிதனுக்கு பல பங்காளிகள் உரிமையாளர்களாக இருக்கின்றார்கள். அவன் அவர்களில் சிலரை திருப்திப்படுத்தினால் சிலர் கோபமடைகிறார்கள். எனவே அவன் தடுமாற்றத்திலும் குழப்பத்திலும் இருக்கின்றான். இன்னொரு மனிதனுக்கு ஒரேயொரு மனிதன் மட்டுமே உரிமையாளனாக இருக்கின்றான். அந்த மனிதன் தன் எஜமானனின் நோக்கத்தை அறிகிறான். எனவே அவன் நிம்மதியாகவும் மனஅமைதி பெற்ற நிலையிலும் இருக்கின்றான். இந்த இரு மனிதர்களும் சமமாக மாட்டார்கள். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. மாறாக அவர்களில் பெரும்பாலானோர் அறிந்துகொள்ளமாட்டார்கள். அதனால் அல்லாஹ்வோடு மற்றவர்களை இணையாக ஆக்குகிறார்கள்.

Zümer 39:30

தூதரே!- நிச்சயமாக நீர் மரணிக்கக்கூடியவர்தான். நிச்சயமாக அவர்களும் சந்தேகம் இல்லாமல் மரணிக்கக்கூடியவர்கள்தாம்.

Zümer 39:31

பின்னர் -மனிதர்களே!- நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் நீங்கள் கருத்துவேற்றுமை கொண்டவற்றில் உங்கள் இறைவனிடத்தில் தர்க்கம் செய்துகொண்டிருப்பீர்கள். அப்போது அசத்தியவாதிகளில் சத்தியவாதிகள் யார் என்பது தெளிவாகிவிடும்.

Zümer 39:32

அவனுக்கு இணை, துணை, பிள்ளை போன்ற அல்லாஹ்வுக்குப் பொருத்தமற்றவற்றை அவனுக்கு உண்டெனக் இணைத்துக் கூறுபவனை விட மிகப்பெரிய அநியாயக்காரன் வேறுயாருமில்லை. தூதர் வஹி மூலமாக கொண்டுவந்ததை பொய்ப்பிப்பவனை விட மிகப்பெரிய அநியாயக்காரன் வேறுயாருமில்லை. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதர் கொண்டுவந்ததை பொய்ப்பிப்பவர்களின் வசிப்பிடம் நரகத்தில் இல்லையா? ஆம், நிச்சயமாக அதில் அவர்களுக்கு வசிப்பிடங்கள் உள்ளன.

Zümer 39:33

தம் சொல்லிலும் செயலிலும் உண்மையைக் கடைபிடித்து, நம்பிய நிலையில் அதனை உண்மைப்படுத்தி, அதனடிப்படையில் செயல்பட்ட நபிமார்களும் ஏனையவர்களுமே உண்மையில் அல்லாஹ்வை அஞ்சியவர்களாவர். அவர்கள் தம் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருக்கிறார்கள்.

Zümer 39:34

அவர்களுக்கு தாங்கள் விரும்புகின்ற நிலையான இன்பங்கள் எல்லாம் அவர்களின் இறைவனிடத்தில் கிடைக்கும். இதுதான் தம்மைப் படைத்தவனுடனும் அவனது அடியார்களுடனும் நல்ல முறையில் செயல்படுவோருக்கு வழங்கப்படும் கூலியாகும்.

Zümer 39:35

இது, அவர்கள் தங்களின் இறைவன் பக்கம் திரும்பி அவனிடம் மன்னிப்புக் கோரியதினால் அவர்கள் உலகில் செய்த பாவங்களைப் போக்கி அவர்கள் செய்த நற்செயல்களுக்குக் நல்ல முறையில் கூலி வழங்க வேண்டும் என்பதற்காகத்தான்.

Zümer 39:36

அல்லாஹ் தன் அடியார் முஹம்மதுக்கு அவரின் உலக மற்றும் மறுமை விவகாரங்களிலும் போதுமானவனாகவும் எதிரிகளிடமிருந்து அவரைப் பாதுகாப்வனாகவும் இல்லையா? ஆம், நிச்சயமாக அவன் அவருக்குப் போதுமானவன். -தூதரே!- அவர்கள் அறியாமையினால் அல்லாஹ்வை விடுத்து தாங்கள் வணங்கும் சிலைகள் உமக்கு தீங்கிழைக்கும் என உம்மை அச்சுறுத்துகிறார்கள். அல்லாஹ் யாரைக் கைவிட்டு நேர்வழிபெறுவதற்கு உதவி புரியவில்லையோ அவருக்கு நேர்வழிகாட்டி உதவி புரியம் எவரும் இல்லை.

Zümer 39:37

அல்லாஹ் யாருக்கு நேர்வழிகாட்ட உதவி புரிகிறானோ அவரை யாராலும் வழிகெடுக்க முடியாது. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் யாராலும் மிகைக்க முடியாதவனாகவும் தன்னை நிராகரிப்பவன் மற்றும் தனக்கு மாறுசெய்பவன் ஆகியோரைத் தண்டிப்பவனாகவும் இல்லையா? ஆம், நிச்சயமாக அவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும் தண்டிக்கக்கூடியவனாகவும் இருக்கின்றான்.

Zümer 39:38

தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம், வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? என்று கேட்டால் “அவற்றை அல்லாஹ்தான் படைத்தான்” என்று நிச்சயம் கூறுவார்கள். அவர்கள் வணங்கும் தெய்வங்களின் இயலாமையை வெளிப்படுத்தும் விதத்தில் அவர்களிடம் கேட்பீராக: “அல்லாஹ்வைவிடுத்து நீங்கள் வணங்கும் இந்த தெய்வங்களைக்குறித்து எனக்கு கூறுங்கள். அல்லாஹ் எனக்கு தீங்கிழைக்க நாடினால் அவற்றால் என்னைவிட்டு அந்தத் தீங்கினை அகற்ற முடியுமா? அல்லது அவன் என்மீது அருள்புரிய நாடினால் அவற்றால் அவனது அருளை என்னைவிட்டும் தடுக்க முடியுமா?” நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். என்னுடைய எல்லா விவகாரங்களிலும் அவனையே நான் சார்ந்துள்ளேன். சார்ந்திருப்பவர்கள் அவனை மட்டுமே சார்ந்திருக்கின்றனர்.”

Zümer 39:39

தூதரே!- நீர் கூறுவீராக: “என் சமூகமே! நீங்கள் விரும்புகின்ற இணைவைத்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே செயல்பட்டுக்கொண்டிருங்கள். நிச்சயமாக என் இறைவன் எனக்குக் கட்டளையிட்டவாறு அவனை ஒருமைப்படுத்தி அழைத்து வணக்கத்தை அவனுக்கு மாத்திரம் செய்துகொண்டும் இருக்கிறேன். ஒவ்வொரு வழியின் விளைவையும் நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள்.”

Zümer 39:40

இவ்வுலகில் இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடையும், மறுமையில் என்றும் அழியாத, துண்டிக்கப்படாத நிலையான வேதனை யார் மீது இறங்கும்? என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

Zümer 39:41

தூதரே!- நாம் மனிதர்களை எச்சரிக்க வேண்டும் என்பதற்காக உம்மீது குர்ஆனை சத்தியத்துடன் இறக்கியுள்ளோம். யாரேனும் நேர்வழியைப் பின்பற்றினால் நேர்வழியின் பயன் அவருக்கே உரியது. அவரது நேர்வழியால் அல்லாஹ்வுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில் நிச்சயமாக அவன் அதனை விட்டும் தேவையற்றவன். யாரேனும் வழிகெட்டால் அந்த வழிகேட்டின் தீங்கு அவனுக்கே கிடைக்கும். அவனின் வழிகேட்டால் அல்லாஹ்வுக்கு எந்த இழப்பும் இல்லை. நீர் அவர்களை நேர்வழியில் நிர்ப்பந்திப்பதற்கு அவர்களின் பொறுப்பாளி அல்ல. எடுத்துரைக்குமாறு உமக்கு கட்டளையிடப்பட்டதை எடுத்துரைப்பதைத் தவிர உம்மீது எந்தப் பொறுப்பும் இல்லை.

Zümer 39:42

அல்லாஹ்வே உயிர்களை அவற்றின் தவணை நிறைவடையும்போது கைப்பற்றுகிறான். யாருடைய தவணை நிறைவடையவில்லையோ அவர்களின் உயிர்களை அவர்கள் தூங்கும்போது கைப்பற்றுகிறான். யார் மீது மரணம் விதிக்கப்பட்டு விட்டதோ அவருடைய உயிரை தடுத்து வைத்துக்கொள்கிறான். யார் மீது மரணம் விதிக்கப்படவில்லையோ அவர்களின் உயிர்களை தனது அறிவில் உள்ள குறிப்பிட்ட தவணை வரை திருப்பி அனுப்புகிறான். நிச்சயமாக இவ்வாறு உயிர்களைக் கைப்பற்றுதல், திருப்பி அனுப்புதல், மரணிக்கச்செய்தல், உயிர்கொடுத்தல் ஆகியவற்றில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு, இவற்றையெல்லாம் செய்யும் ஆற்றலுடையவன் மரணத்திற்குப் பின் விசாரணைக்காக, கூலி கொடுப்பதற்காக மனிதர்கள் அனைவரையும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும் ஆற்றலுடையவன் என்பதற்கான சான்றுகள் அடங்கியுள்ளன.

Zümer 39:43

அல்லாஹ்வை விடுத்து தங்களுக்குப் பயனளிக்கும் என்று இணைவைப்பாளர்கள் ஆதரவு வைக்கும் சிலைகளைப் பரிந்துரை செய்பவர்களாக எடுத்துக் கொண்டார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “உங்களுக்கோ, தமக்கோ எதையும் சொந்தமாக்க முடியாத, எதையும் விளங்கிக்கொள்ள முடியாதவற்றையும் கூட நீங்கள் பரிந்துரை செய்பவர்களாக ஆக்கிக் கொள்கிறீர்களா?. ஏனெனில் அவை பேசவோ, செவியேற்கவோ, பார்க்கவோ, பயனளிக்கவோ, தீங்கிழைக்கவோ இயலாத ஒன்றையும் கேட்காத சடப்பொருள்களாகும்.”

Zümer 39:44

தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “பரிந்துரை அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. அவனது அனுமதியின்றி யாரும் அவனிடம் பரிந்துரைசெய்ய முடியாது. அவன் யாரை விரும்புகிறானோ அவருக்குத்தான் பரிந்துரை செய்ய முடியும். வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது. பின்னர் மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலி பெறுவதற்காகவும் அவனிடமே திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.

Zümer 39:45

அல்லாஹ் மாத்திரம் நினைவுகூறப்பட்டால் மறுமை நாள் மற்றும் அதில் இடம்பெறும் உயிர்கொடுத்து எழுப்பப்படுதல், விசாரணை, கூலி வழங்கப்படல் ஆகிவற்றின் மீது நம்பிக்கைகொள்ளாத இணைவைப்பாளர்களின் உள்ளங்கள் வெறுப்படைகின்றன. அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்கக்கூடிய சிலைகள் நினைவுகூறப்பட்டால் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

Zümer 39:46

தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றி படைத்தவனே! மறைந்திருப்பதையும் வெளிப்படையானதையும் நன்கறிந்தவனே! அவற்றில் எதுவும் உன்னை விட்டும் மறையாது. நீயே மறுமை நாளில் அடியார்களிடையே அவர்கள் உலகில் முரண்பட்டுக்கொண்டிருந்த விஷயங்களில் தீர்ப்பளிக்கின்றாய். அப்போது சத்தியவாதிகளும் அசத்தியவாதிகளும் நற்பாக்கியசாலிகளும் துர்பாக்கியசாலிகளும் தெளிவாகிவிடுவார்கள்.

Zümer 39:47

நிச்சயமாக இணைவைத்தும் பாவங்கள் புரிந்தும் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு பூமியில் பெருமதியான செல்வங்கள் அனைத்தும் பலமடங்காக இருந்தாலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்ட பிறகு அவர்கள் காணும் கடுமையான வேதனைக்கு ஈடாக அவற்றைக் கொடுத்துவிட விரும்புவார்கள். ஆனால் அவர்களுக்கு அது முடியாத காரியமாகும். ஒருவேளை அவர்களுக்கு முடிந்தாலும் கூட, அது அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் எதிர்பார்த்து இருக்காத பலவகையான வேதனை அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு ஏற்படும்.

Zümer 39:48

அவர்கள் சம்பாதித்த இணைவைப்பு, பாவங்களின் தீயவிளைவுகள் அவர்களுக்கு முன்னால் வெளிப்பட்டுவிடும். எந்தத் தண்டனையைக்கொண்டு எச்சரிக்கப்படும் போது அவர்கள் உலகில் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அந்த வேதனை அவர்களைச் சூழ்ந்துவிடும்.

Zümer 39:49

நிராகரிக்கும் மனிதனுக்கு நோயோ, வறுமையோ, அது போன்றதோ, ஏற்பட்டுவிட்டால் நாம் அவனுக்கு ஏற்பட்ட அத்துன்பத்தைப் போக்குவதற்காக நம்மிடம் அவன் பிரார்த்தனை செய்கிறான். பின்னர் நாம் அவனுக்கு ஆரோக்கியம், செல்வம் போன்ற அருட்கொடையை வழங்கினால் “நிச்சயமாக நான் இதற்குத் தகுதியானவன் என்பதனால்தான் அல்லாஹ் எனக்கு இதனை அளித்துள்ளான்” என்று கூறுகிறான். உண்மையில் இது அவனுக்கு சோதனையாகவும் விட்டுப்பிடிப்பதாகவும் இருக்கின்றது. ஆயினும் நிராகரிப்பாளர்களில் பெரும்பாலானோர் இதனை அறிந்துகொள்வதில்லை. அல்லாஹ் தங்களுக்கு அருளியதைக்கொண்டு ஏமாந்து விடுகிறார்கள்.

Zümer 39:50

அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த நிராகரிப்பாளர்களும் இவ்வாறுதான் கூறினார்கள். அவர்கள் சம்பாதித்த செல்வங்களோ, பதவியோ அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை.

Zümer 39:51

அவர்கள் சம்பாதித்த இணைவைப்பு மற்றும் பாவங்களின் தீய விளைவுகள் அவர்களைப் பிடித்துக்கொண்டன. இணைவைத்தும், பாவங்கள் புரிந்தும் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்ட இவர்கள் முன்சென்றவர்களைப் போன்று தாங்கள் சம்பாதித்தவற்றின் தீயவிளைவுகளால் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் அல்லாஹ்விடமிருந்து தப்பிவிடவோ அவனை வெல்லவோ முடியாது.

Zümer 39:52

நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அவர்கள் நன்றி செலுத்துகிறார்களா அல்லது நன்றிகெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்களா? என்பதைச் சோதிக்கும்பொருட்டு தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகிறான் என்பதையும் தான் நாடியவர்களுக்கு அவர்கள் பொறுமையை மேற்கொள்கிறார்களா அல்லது இறைவிதிக்கு எதிராக கோபம் கொள்கிறார்களா என்பதைச் சோதிக்கும்பொருட்டு அதில் நெருக்கடியை ஏற்படுத்துகிறான் என்பதையும் இந்த இணைவைப்பாளர்கள் அறிந்துகொள்ளாமல்தான் தமது அக்கருத்தைக் கூறுகின்றனரா? நிச்சயமாக வாழ்வாதாரம் தாராளமாக வழங்கப்படுவதிலும் அதில் நெருக்கடி ஏற்படுத்தப்படுவதிலும் நம்பிக்கைகொள்ளும் மக்களுக்கு அல்லாஹ்வின் திட்டங்களை அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன. ஏனெனில் அவர்கள்தாம் சான்றுகளைக்கொண்டு பயனடைகிறார்கள். ஆனால் நிராகரிப்பாளர்கள் அவற்றைப் புறக்கணித்தவாறு அவற்றைக் கடந்து செல்கின்றார்கள்.

Zümer 39:53

தூதரே!- அல்லாஹ்வுக்கு இணைவைத்தும் பாவங்கள் புரிந்தும் தங்களின் மீதே வரம்பு மீறிய என் அடியார்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வின் அருளையும் தங்களின் பாவத்துக்கான மன்னிப்பு கிடைப்பதையும் விட்டு நிராசையடைந்து விடாதீர்கள். நிச்சயமாக அவன் தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுகிறான். நிச்சயமாக அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

Zümer 39:54

மறுமை நாளின் வேதனை உங்களை அடையும் முன்னரே பாவமன்னிப்பு மற்றும் நற்செயல்களின் மூலம் உங்கள் இறைவனின் பக்கம் திரும்புங்கள். அவனுக்கு அடிபணியுங்கள். தண்டனை இறங்கிய பின்னர், உங்களுக்கு உதவிசெய்து வேதனையிலிருந்து காப்பாற்றக்கூடிய உங்களின் சிலைகளையோ குடும்பத்தினரையோ நீங்கள் பெற்றுக்கொள்ளமாட்டீர்கள்.

Zümer 39:55

உங்கள் இறைவன் தன் தூதர் மீது இறக்கியதில் சிறந்ததான குர்ஆனைப் பின்பற்றுங்கள். நீங்கள் பாவமன்னிப்புக்குத் தயாராகுவதற்கு வாய்ப்பின்றி நீங்கள் உணராத விதத்தில் திடீரென வேதனை உங்களை வந்தடையும் முன்னரே அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருங்கள்.

Zümer 39:56

இவற்றை நீங்கள் செயல்படுத்துங்கள். மறுமை நாளில் எவரும் பின்வருமாறு கடுமையாக கைசேதப்பட்டு புலம்புவதைத் தவிர்ப்பதற்காக: “நிராகரித்து பாவங்கள் புரிந்து அல்லாஹ்வின் விஷயத்தில் குறைபாடு செய்து, விசுவாசம்கொண்டு வழிபடுபவர்களை பரிகாசம் செய்த ஆத்மாவின் கைசேதமே! நான் னே!”

Zümer 39:57

அல்லது விதியை ஆதாரம்காட்டி “ நிச்சயமாக அல்லாஹ் எனக்கு பாக்கியம் அளித்திருந்தால் நான் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களில் ஒருவனாக ஆகியிருப்பேன்” என்று கூறாமல் இருப்பதற்காகவும்.

Zümer 39:58

அல்லது வேதனையைக் காணும்போது “நிச்சயமாக மீண்டும் எனக்கு உலகத்திற்கு திரும்பிச் செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டால் அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரி நற்செயல் புரிபவர்களில் ஒருவராகி இருப்பேனே!” என்று ஆசைப்பட்டவனாக கூறாமல் இருப்பதற்காக.

Zümer 39:59

நீ எண்ணுவது போல் நேர்வழியை விரும்புவதல்ல விடயம். ஏனெனில் என் சான்றுகள் உன்னிடத்தில் வந்தன. நீ அவற்றை மறுத்து கர்வம் கொண்டாய். அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் சான்றுகளையும் நிராகரிக்கக்கூடியவர்களில் ஒருவனாக இருந்தாய்.

Zümer 39:60

இணையும் பிள்ளையும் அல்லாஹ்வுக்கு இருப்பதாக இணைத்துக்கூறி அவன் மீது பொய்யுரைத்தவர்களின் முகங்கள் மறுமை நாளில் துர்பாக்கியத்தின் அடையாளமாக கறுத்திருப்பதை நீர் காண்பீர். அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொள்ளாமல் கர்வம்கொள்பவர்களுக்கு நரகில் ஒரு தங்குமிடம் இல்லையா? ஆம், நிச்சயமாக அதில் அவர்களுக்கு ஒரு தங்குமிடம் இருந்தே தீரும்.

Zümer 39:61

அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களை அவன் வேதனையிலிருந்து காப்பாற்றி சுவனம் எனும் வெற்றியான இடத்தில் பிரவேசிக்கச் செய்வான். வேதனை அவர்களைத் தீண்டாது. அவர்களுக்குத் தவறிய உலகபாக்கியங்களுக்காக அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.

Zümer 39:62

அல்லாஹ்தான் எல்லாவற்றையும் படைத்தவன். அவனைத் தவிர வேறு படைப்பாளன் இல்லை. அவன் ஒவ்வொன்றையும் கண்காணிக்கிறான். அவற்றின் காரியங்களை நிர்வகித்து தான் நாடியவாறு செயல்படுத்துகிறான்.

Zümer 39:63

வானங்களிலும் பூமியிலும் நன்மைகளுடைய பொக்கிஷங்களின் திறவுகோல்கள்அவனிடமே உள்ளன. அவன் தான் நாடியவர்களுக்கு அவற்றை வழங்குகிறான். தான் நாடியவர்களுக்கு வழங்காமல் அவற்றைத் தடுத்துக் கொள்கிறான். அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். ஏனெனில் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் ஈமானைப் பெறாமல் மறுமையில் நிரந்தரமான நரகில் நுழைந்து விட்டார்கள்.

Zümer 39:64

தூதரே!- தங்களின் சிலைகளை வணங்குமாறு கூறி உம்மை வழிகெடுக்க முயலும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “-தமது இறைவனை அறியாதவர்களே!- அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டும் என என்னை ஏவுகிறீர்களா? அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. நான் அவனைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டேன்.”

Zümer 39:65

தூதரே!- அல்லாஹ் உமக்கும் உமக்கு முன்வந்த தூதர்களுக்கும் பின்வருமாறு வஹி அறிவித்தான்: “நீர் அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் வணங்கினால் உமது நற்செயல்களின் கூலிகள் வீணாகிவிடும். இவ்வுலகில் உமது மார்க்கத்தை இழந்தும், மறுவுலகில் தண்டனை பெற்றும் நஷ்டமடைந்தவர்களில் ஒருவராகி விடுவீர்.

Zümer 39:66

மாறாக அல்லாஹ்வை மட்டுமே வணங்குவீராக. அவனுக்கு யாரையும் இணையாக்காதீர். அல்லாஹ் உம்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துபவராகி விடுவீராக.”

Zümer 39:67

இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறைப்படி கண்ணியப்படுத்தவில்லை. அவன் அல்லாத பலவீனமான, எதுவும் செய்ய இயலாத படைப்புகளை அவனுக்கு இணையாக்கி விட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வல்லமையை உணராமல் அலட்சியமாக இருக்கின்றார்கள். அவனுடைய வல்லமையின் வெளிப்பாடுகளில் சிலவைதான்: பூமி அதனுடைய மரங்கள், மலைகள், ஆறுகள், கடல்கள். (அனைத்தும்) மறுமை நாளில் அவனுடைய கைப்பிடியில் இருக்கும். நிச்சயமாக ஏழு வானங்களும் அவனுடைய வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். இணைவைப்பாளர்கள் கூறுபவற்றை விட்டும் நம்புபவற்றை விட்டும் அவன் தூய்மையானவன்.

Zümer 39:68

சூர் ஊதுவதற்காக நியமிக்கப்பட்ட வானவர் சூர் ஊதும் நாளில், வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் அனைவரும் மரணித்துவிடுவார்கள். மரணிக்கமாட்டார்கள் என அல்லாஹ் நாடியவர்களைத்தவிர.) பின்னர் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்காக இரண்டாவது முறையாக வானவர் சூர் ஊதுவார். அப்போது உயிர்பெற்றவர்கள் அனைவரும் அல்லாஹ் தங்களை என்ன செய்யப் போகிறான் என்பதை எதிர்பார்த்து நின்றிருப்பார்கள்.

Zümer 39:69

அடியார்களிடையே தீர்ப்பளிக்க கண்ணியமிக்க இறைவன் தோன்றியதால் பூமி பிரகாசிக்கும். மக்களின் செயல் பதிவேடுகள் விரித்து வைக்கப்படும். தூதர்களும் அவர்களுக்காக அவர்களின் சமூகங்களுக்கு எதிராகச் சாட்சி கூறுவதற்கு முஹம்மதின் சமூகமும் கொண்டுவரப்படுவார்கள். அல்லாஹ் அவர்கள் அனைவரிடையே நியாயமாகத் தீர்ப்பளிப்பான். அந்நாளில் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது. மனிதனுக்கு தீமைகள் அதிகரிக்கப்படாது. நன்மைகளும் குறைவடையாது.

Zümer 39:70

அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் முழுமையாக கூலியை பூரணப்படுத்துவான். அவர் நற்செயல்களைச் செய்தாலும் அல்லது தீய செயல்களைச் செய்தாலும் சரியே. அவர்கள் செய்யக்கூடியவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். நன்மையோ, தீமையோ அவர்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. இன்றைய தினம் அவன் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி கொடுப்பான்.

Zümer 39:71

வானவர்கள் அல்லாஹ்வை நிராகரித்தவர்களை இழிவடைந்த நிலையில் கூட்டம் கூட்டமாக நரகத்தில் இழுத்து வருவார்கள். அவர்கள் நரகத்தின் அருகில் வந்தவுடன் அவர்களுக்காக நரகத்துக்கு பொறுப்பாக்கப்பட்ட வானவ காவலர்கள் அதன் வாயில்களைத் திறப்பார்கள். வானவர்கள் அவர்களிடம் கண்டிக்கும் தோரணையில் கேட்பார்கள்: “உங்கள் இனத்திலிருந்தே தமக்கு இறக்கப்பட்ட உங்கள் இறைவனின் வசனங்களை எடுத்துரைத்து, கடுமையான வேதனையுடைய மறுமையின் சந்திப்பைக் குறித்து உங்களுக்கு எச்சரிக்கும் தூதர்கள் உங்களிடம் வரவில்லையா?” நிராகரிப்பாளர்கள் தங்களுக்கு எதிராக ஒத்துக் கொண்டவர்களாக கூறுவார்கள்: “ஆம். அவை அனைத்தும் இடம்பெற்றன. ஆயினும் நிராகரிப்பாளர்களின் மீது வேதனையின் வாக்கு உறுதியாகிவிட்டது. நாங்கள் நிராகரிப்பாளர்களாக இருந்தோம்.

Zümer 39:72

அவர்களை இழிவுபடுத்தும் விதமாக, இறையருளை விட்டும், நரகிலிருந்து வெளியேறுவதை விட்டும் நிராசை ஏற்படுத்தும் விதமாக அவர்களிடம் கூறப்படும்: “நரகத்தின் வாயில்களில் என்றும் நிரந்தரமாக நுழைந்துவிடுங்கள். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் கர்வம் கொண்டவர்களின் தங்குமிடம் எத்துணை மோசமானது!”

Zümer 39:73

தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிய நம்பிக்கையாளர்களை கண்ணியப்படுத்தும் விதமாக வானவர்கள் சுவனத்தின்பால் கூட்டம் கூட்டமாக மிருதுவாக அழைத்துவருவார்கள். அவர்கள் அதன் அருகில் வந்தவுடன் அவர்களுக்காக அதன் கதவுகள் திறக்கப்படும். அதற்கு பொறுப்பாக்கப்பட்ட வானவர்கள் அவர்களிடம் கூறுவார்கள்: “எல்லா வகையான தீங்குகளிலிருந்தும் நீங்கள் வெறுக்கும் ஒவ்வொரு விஷயத்திலிருந்தும் உங்களுக்கு பாதுகாப்பு உண்டாகட்டும். உங்களின் உள்ளங்களும் செயல்களும் சிறந்ததாகி விட்டன. சுவனத்தில் என்றென்றும் நிரந்தரமாக தங்கிவிடுங்கள்.

Zümer 39:74

நம்பிக்கையாளர்கள் சுவனத்தில் நுழையும் போது கூறுவார்கள்: “தன் தூதர்களின் மூலம் எங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் எங்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான் என்று வாக்களித்தான். எங்களை சுவனத்தின் பூமியில் வாரிசுகளாக ஆக்கினான். இங்கு நாங்கள் விரும்பிய இடத்தில் தங்கிக்கொள்வோம். தங்கள் இறைவனின் திருப்தியை நாடி நற்செயல்களில் ஈடுபடுவோரின் கூலி எத்துணை சிறப்பானது!

Zümer 39:75

இந்நாளில் வானவர்கள் அர்ஷைச் சூழ்ந்திருப்பார்கள். நிராகரிப்பாளர்கள் கூறும் பொருத்தமற்ற பண்புகளை விட்டும் அல்லாஹ்வை அவர்கள் தூய்மைப்படுத்துவார்கள். அவன் படைப்புகள் அனைத்திற்குமிடையே நியாயமாகத் தீர்ப்பளிப்பான். கண்ணியத்திற்கு உரியவர்களை கண்ணியப்படுத்துவான். வேதனைக்குரியவர்களை வேதனைக்கு உள்ளாக்குவான். நம்பிக்கைகொண்ட தன் அடியார்களின் மீது அருள்புரிந்து, நிராகரித்த தன் அடியார்களைத் தண்டித்து வழங்கிய தீர்ப்புக்காக படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் எனக் கூறப்படும்.

Mü'min 40:1

இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

Mü'min 40:2

யாராலும் மிகைக்க முடியாத தனது அடியார்களின் நலவுகளை நன்கறிந்த அல்லாஹ்விடமிருந்து அல்குர்ஆன் அவனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கப்பட்டுள்ளது.

Mü'min 40:3

பாவம் புரிபவர்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன்; தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடியவன்; தனது பாவங்களை விட்டு மீளாதவர்களைக் கடுமையாக தண்டிக்கக்கூடியவன்; பெரும் நலன் புரியக்கூடியவனும் அருளாளனுமாவான். அவனைத் தவிர உண்மையாக வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. மறுமை நாளில் அடியார்கள் அவன் பக்கமே திரும்ப வேண்டும். அவன் அவர்களுக்குரிய கூலியை வழங்கிடுவான்.

Mü'min 40:4

அறிவு மழுங்கடிக்கப்பட்டதனால் அல்லாஹ்வை நிராகரித்தவர்கள்தாம் அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பதையும் அவனுடைய தூதர்களின் நம்பகத்தன்மையையும் அறிவிக்கும் அவனுடைய சான்றுகளில் தர்க்கம் புரிகிறார்கள். அவர்களுக்காக நீர் கவலைப்படாதீர். அவர்கள் அனுபவிக்கும் ஆடம்பர வாழ்வும் இன்பங்களும் உம்மை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அவர்களுக்கு அவகாசம் அளிப்பதெல்லாம் அவர்களை விட்டுப்பிடிப்பதும், அவர்களுக்கு செய்யப்படும் சூழ்ச்சியுமேயாகும்.

Mü'min 40:5

இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகமும் அவர்களுக்குப் பின் வந்த கூட்டத்தினரும் பொய்ப்பித்தார்கள். ஆத் சமூகம், ஸமூத் சமூகம், லூத்தின் சமூகம், மத்யன்வாசிகள், ஃபிர்அவ்னின் சமூகம் ஆகியோரும் பொய்ப்பித்தார்கள். அவர்களில் ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களிடம் வந்த தூதரைப் பிடித்து கொலைசெய்யவே நாடினார்கள். சத்தியத்தை அழிப்பதற்காக தங்களிடமுள்ள அசத்தியத்தைக் கொண்டு தர்க்கம் செய்தார்கள். நான் அந்த சமூகங்கள் அனைத்தையும் தண்டித்தேன். நான் அவர்களுக்கு அளித்த தண்டனை எவ்வாறு இருந்தது என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. அது கடுமையான தண்டனையாக இருந்தது.

Mü'min 40:6

தூதரே!- பொய்ப்பித்த அந்த சமூகங்களின் மீது அல்லாஹ் அழிவை விதித்தது போன்று நிராகரிப்பாளர்கள் நரகவாசிகளாவர் என்ற உம் இறைவனின் வாக்கும் அவர்கள் விடயத்தில் உறுதியாகி விட்டது.

Mü'min 40:7

தூதரே!- உம் இறைவனின் அர்ஷைச் சுமப்பவர்களும் அதனைச் சூழ உள்ளவர்களும் அவனுக்கு பொருத்தமில்லாதவற்றை விட்டுவிட்டு அவனுடைய தூய்மையைப் பறைசாற்றுகிறார்கள்; அவன்மீது நம்பிக்கைகொள்கிறார்கள். அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்களுக்காக அவனிடம் மன்னிப்புக் கோருகிறார்கள். “எங்கள் இறைவா! உன் ஞானமும் கருணையும் அனைத்தையும் வியாபித்துள்ளது. தங்களின் பாவங்களுக்காக மன்னிப்புக் கோரி உனது மார்க்கத்தைப் பின்பற்றுவோரை மன்னிப்பாயாக. நரக நெருப்பு அவர்களைத் தீண்டாமல் அவர்களைக் காத்தருள்வாயாக. என்று தங்களது பிரார்த்தனையில் கூறுகிறார்கள்.

Mü'min 40:8

வானவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நீ நம்பிக்கையாளர்களை நுழைவிப்பதாக வாக்களித்த நிலையான சுவனங்களில் அவர்களையும் அவர்களின் தந்தையர், மனைவியர், பிள்ளைகள் ஆகியோரில் நற்செயல் புரிந்தவர்களையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் உன்னை மிகைக்க முடியாது. நீ அமைத்த விதிகளில், திட்டங்களில் ஞானம் மிக்கவன்.

Mü'min 40:9

அவர்களின் தீய செயல்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பாயாக. அவற்றின் காரணமாக அவர்களைத் தண்டித்துவிடாதே. மறுமை நாளில் நீ யாரை அவரின் தவறுகளுக்கான தண்டனையை விட்டும் பாதுகாத்தாயோ அவர் மீது நீ கருணைபுரிந்து விட்டாய். அவ்வாறு தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டு சுவனத்தில் பிரவேசிப்பதே மகத்தான வெற்றியாகும். அதற்கு நிகரான வேறு வெற்றி இல்லை.

Mü'min 40:10

நிச்சயமாக அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்தவர்கள் நரகத்தில் நுழையும் போது அவர்கள் அழைக்கப்பட்டு தம்மைத் தாமே வெறுத்து சபித்துக்கொள்ளும் போது, “நீங்கள் உங்களை வெறுப்பதைவிட அல்லாஹ் உங்களைக் கடுமையாக வெறுக்கிறான். உலகில் அல்லாஹ்வை நம்பிக்கைகொள்ளுமாறு நீங்கள் அழைக்கப்பட்டபோது அவனை நிராகரித்துக்கொண்டிருந்தீர்கள். அவனுடன் வேறு தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தீர்கள்.

Mü'min 40:11

நிராகரிப்பாளர்கள் தங்களின் பாவங்களை ஒத்துக்கொண்டவர்களாக கூறுவார்கள்: அப்போது அவர்கள் ஒத்துக் கொள்வதும் திருந்துவதும் எந்தப் பயனும் இல்லை : “எங்கள் இறைவா! நீ எங்களை இருமுறை மரணிக்கச் செய்தாய். ஒன்றுமே இல்லாமல் இருந்த எங்களை உருவாக்கினாய். பின்னர் உருவாக்கிய பிறகு எங்களை மரணிக்கச் செய்தாய். ஒன்றுமே இல்லாமல் இருந்த எங்களை படைத்தும் மரணத்திற்குப் பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பியும் இருமுறை எங்களை உயிர்ப்பித்தாய். நாங்கள் செய்த பாவங்களை ஒத்துக் கொள்கிறோம். நரகத்திலிருந்து வெளியேறி மீண்டும் உலகிற்குச் சென்று உன்னை திருப்திப்படுத்தி எங்களின் காரியங்களை சீர்படுத்துவதற்கு ஏதேனும் வழி இருக்கின்றதா?

Mü'min 40:12

நீங்கள் அனுபவிக்கும் இந்த வேதனை, இணைகளை ஏற்படுத்தாமல் அல்லாஹ் ஒருவனின் பக்கம் நீங்கள் அழைக்கப்பட்டபோது அதனை நிராகரித்து அவனுக்கு இணைகளை ஏற்படுத்தினீர்கள், அவனுக்கு இணையாக மற்றவர்கள் வணங்கப்பட்டபோது அதனை நீங்கள் நம்பினீர்கள் என்பதனாலாகும். அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. உள்ளமையிலும் தகுதியிலும் ஆதிக்கத்திலும் அவன் மிக உயர்ந்தவன், மிகப் பெரியவன். அனைத்தும் அவனை விட சிறியவையே.

Mü'min 40:13

அல்லாஹ்வே உங்களுக்கு பிரபஞ்சத்திலும் உங்களிலும் தன் வல்லமையையும் தான் ஒருவனே என்பதையும் அறிவிக்கக்கூடிய தன் சான்றுகளைக் காட்டுகிறான். உங்களுக்கு வாழ்வாதாரமாக அமையும் தாவரங்கள், பயிர்கள் மற்றும் இன்னபிறவற்றுக்குக் காரணமான மழை நீரை அவனே வானத்திலிருந்து இறக்குகின்றான். அல்லாஹ்வின் சான்றுகளைக்கொண்டு தூய மனதுடன் அவன் பக்கம் திரும்புபவர்தான் அறிவுரை பெறுவார்.

Mü'min 40:14

நம்பிக்கையாளர்களே!- வழிப்படுதல், பிரார்த்தனை ஆகியவற்றை அவனுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனுக்கு யாரையும் இணையாக்காமல் அவனை அழையுங்கள். அதனை நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும், அவர்களை அது கோபப்படுத்தினாலும் சரியே.

Mü'min 40:15

கீழ்ப்படிதலும் பிரார்த்தனையும் உரித்தாக்கப்படுவதற்கு அவன் மட்டுமே தகுதியானவன். அவன் உயர்ந்த அந்தஸ்துகளை உடையவன்; தனது அனைத்துப் படைப்பினங்களை விட்டும் வேறுபட்டவன். மகத்தான அர்ஷின் அதிபதி. தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது வஹியை இறக்குகிறான். அது அவர்கள் தாமும் உயிர்பெற்று மற்றவர்களையும் உயிர்ப்பிக்க வேண்டும் என்பதற்காகவும் முன்னோர்களும் பின்னோர்களும் சந்திக்கும் மறுமை நாளைக் குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காகவும்தான்.

Mü'min 40:16

அவர்கள் வெளிப்படும் நாளில் ஓரணியாக ஒன்றுதிரட்டப்படுவார்கள். அவர்களின் உள்ளமைகள், செயல்கள், கூலிகள் ஆகியவற்றில் எந்த விஷயமும் அல்லாஹ்வை விட்டு மறைவாக இருக்காது. “இன்றைய தினம் ஆட்சியதிகாரம் யாருக்குரியது”? என்று கேட்பான். “அனைத்தையும் அடக்கியாள்பவனும் அனைத்தும் அவனுக்கே கீழ்படியக்கூடிய தனது உள்ளமையிலும் பண்புகளிலும் செயல்களிலும் ஏகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது” என்ற ஒரு பதிலைத்தவிர வேறு எந்த பதிலும் அந்நேரத்தில் கூறப்படாது.

Mü'min 40:17

இன்று ஒவ்வொருவரும் தான் செய்த செயல்களுக்குக் கூலி கொடுக்கப்படுவார்கள். நலவிற்கு நலவும் தீங்கிற்கு தீமையும் கிடைக்கும். இன்றைய நாளில் எந்த அநீதியும் இழைக்கப்படாது. ஏனெனில் நிச்சயமாக தீர்ப்பளிப்பவன் நீதிபதியாகிய நீதியாளனான அல்லாஹ் ஆவான். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களைக் குறித்து சூழ்ந்தறிந்துள்ளதால் அவர்களை விசாரணை செய்வதில் விரைவானவன்.

Mü'min 40:18

தூதரே!- மறுமை நாளைக் குறித்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக. அந்த மறுமை நாள் நெருங்கிவிட்டது. அது வந்தே தீரும். வர இருக்கும் அனைத்தும் அண்மையிலேதான் உள்ளன. அந்த நாளின் பயங்கரத்தால் இதயங்கள் அவர்களின் தொண்டைக்குழியை அடைந்துவிடுமளவுக்கு மேலெழும்பும். அளவிலாக் கருணையாளன் யாருக்கு அனுமதியளித்தானோ அவர்களைத் தவிர யாராலும் அந்நாளில் பேச முடியாது. இணைவைத்தும் பாவங்கள் புரிந்தும் தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொண்டவர்களுக்கு நண்பரோ, உறவினரோ, பரிந்துரையாளர் அவருக்காக பரிந்து பேச ஏற்படுத்தப்பட்டாலும் பரிந்துரை பேசக்கூடியவரோ இருக்க மாட்டார்.

Mü'min 40:19

அல்லாஹ், பார்ப்பவர்களின் கண்களை விட்டும் மறைவாகச் செய்யும் திருட்டுத்தனங்களையும் உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அறிகிறான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

Mü'min 40:20

அல்லாஹ் நியாயமாகத் தீர்ப்பளிப்பவன். நன்மைகளைக் குறைத்தோ, தீமைகளை அதிகரித்தோ எவர் மீதும் அவன் அநீதி இழைக்க மாட்டான். அல்லாஹ்வைவிடுத்து இணைவைப்பாளர்கள் வணங்கும் தெய்வங்கள் எந்த தீர்ப்பும் அளிக்காது. ஏனெனில் நிச்சயமாக அவை எதற்கும் உரிமையற்றவை. நிச்சயமாக அவன் தன் அடியார்களின் வார்த்தைகளை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் எண்ணங்களையும் செயல்களையும் பார்க்கக்கூடியவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

Mü'min 40:21

இந்த இணைவைப்பாளர்கள் பூமியில் பயணம் செய்து தங்களுக்கு முன்னர் நிராகரித்தவர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதை பார்க்க வேண்டாமா? அவர்களின் முடிவு மோசமானதாக இருந்தது. அந்த சமூகங்கள் இவர்களைவிட பலம்மிக்கவையாகவும் பூமியில் கட்டடங்களைக்கொண்டு அடையாளங்களை விட்டுச் சென்றவையாகவும் இருந்தன. இவர்களோ எந்த ஒன்றையும் விட்டுச் செல்லவில்லை. அவர்களின் பாவங்களினால் அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அவர்களை தடுக்கும் எவரும் இருக்கவில்லை.

Mü'min 40:22

அவர்களுக்கு ஏற்பட்ட அந்த தண்டனை, அல்லாஹ்விடமிருந்து தெளிவான ஆதாரங்களோடும் சான்றுகளோடும் தங்களிடம் தூதர்கள் வந்தபோது அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து அவனது தூதர்களை பொய்ப்பித்ததனாலாகும். அவர்கள் பலமானவர்களாக இருந்தபோதும் அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். நிச்சயமாக அவன் தன்னை நிராகரித்து தன் தூதர்களை பொய்ப்பிப்பவர்களைத் தண்டிப்பதில் கடுமையானவன், வலிமை மிக்கவன்.

Mü'min 40:23

தனது சமூகத்தின் பொய்ப்பிப்பை நபியவர்கள் சந்தித்த போது அவரது பணியின் முடிவு வெற்றியே என்ற நற்செய்தியை அளிக்கும் பொருட்டு ஃபிர்அவ்னுடன் மூஸாவுக்கு நிகழ்ந்த சம்பவத்தை குறிப்பிடுகிறான். அவன் கூறுகிறான்: நாம் மூஸாவை நம்முடைய தெளிவான சான்றுகளுடனும் உறுதியான ஆதாரத்துடனும் திட்டமாக நாம் அனுப்பினோம்.

Mü'min 40:24

ஃபிர்அவ்ன், அவனது அமைச்சர் ஹாமான் மற்றும் காரூனின் பக்கம் (அனுப்பினோம்). அவர்கள் கூறினார்கள்: “மூஸா ஒரு சூனியக்காரர், மேலும் தான் தூதர் என்ற வாதிடுவதில் பொய் கூறுபவர் .”

Mü'min 40:25

தாம் உண்மையாளர் என்று அறிவிக்கக்கூடிய ஆதாரத்தோடு மூஸா அவர்களிடம் வந்தபோது ஃபிர்அவ்ன் கூறினான்: “இவருடன் நம்பிக்கை கொண்டவர்களின் ஆண்மக்களை கொன்றுவிடுங்கள். அவர்களை இழிவுபடுத்தும்பொருட்டு அவர்களின் பெண்மக்களை உயிருடன் விட்டுவிடுங்கள். நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு ஏவி நிராகரிப்பாளர்கள் செய்யும் சூழ்ச்சி எவ்வித அடையாளமுமின்றி அழிந்துவிடும்.

Mü'min 40:26

ஃபிர்அவ்ன் கூறினான்: “என்னை விட்டுவிடுங்கள், நான் மூஸாவுக்குத் தண்டனையாக அவரைக் கொன்றுவிடுகிறேன். அவர் என்னைத் தடுப்பதற்காக தன் இறைவனை அழைக்கட்டும். தனது இறைவனை அவர் அழைப்பதை நான்பொருட்படுத்தமாட்டேன். நிச்சயமாக அவர் நீங்கள் இருந்துகொண்டிருக்கும் மார்க்கத்தை மாற்றிவிடுவார் அல்லது கொலை, அழித்தல் ஆகியவற்றால் பூமியில் குழப்பத்தை வெளிப்படுத்துவார் என்று நான் அஞ்சுகிறேன்.”

Mü'min 40:27

ஃபிர்அவ்னின் மிரட்டலை அறிந்த போது மூஸா அவரிடம் கூறினார்: “சத்தியத்தின் மீது நம்பிக்கைகொள்ளாமல், மறுமைநாளின் மீதும் அங்கு நடைபெறும் விசாரணை, தண்டனையின் மீதும் நம்பிக்கைகொள்ளாமல் கர்வம்கொள்ளும் ஒவ்வொருவனை விட்டும் என் இறைவனாகவும் உங்கள் இறைவனாகவும் இருப்பவனிடம் ஒதுங்கி அவனின்பால் நான் பாதுகாவல் தேடுகிறேன்.”

Mü'min 40:28

ஃபிர்அவ்னின் குடும்பத்தைச் சேர்ந்த தன் சமூகத்தை விட்டும் நம்பிக்கைகொண்டதை மறைத்து வைத்திருந்த நம்பிக்கையாளர் ஒருவர் தன் சமூகம் மூஸாவை கொலை செய்ய உறுதிபூண்டதை நிராகரித்து கூறினார்: “எந்தக் குற்றமும் செய்யாத இந்த மனிதரை “என் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறியதற்காக கொல்லப்போகிறீர்களா? நிச்சயமாக அவர், தான் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட உண்மையான தூதர் என்பதை அறிவிக்கக்கூடிய ஆதாரங்களையும் சான்றுகளையும் உங்களிடம் கொண்டுவந்தும் உள்ளார். ஒருவேளை அவர் பொய்யராக இருந்தால் அதனால் ஏற்படும் தீங்கு அவரையே சாரும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர் எச்சரித்த வேதனைகளில் சில விரைவாக உங்களை வந்தடையலாம். நிச்சயமாக அல்லாஹ், தான் விதித்த வரம்புகளை மீறக்கூடியவர்களுக்கும், அவன்மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் புனைந்துகூறுவோருக்கும் சத்தியத்தின்பால் பாக்கியமளிக்க மாட்டான்.

Mü'min 40:29

என் சமூகமே! இன்றைய தினம் எகிப்தில் நீங்கள் மேலோங்கியவர்களாக ஆட்சியுடன் இருக்கிறீர்கள். மூஸாவைக் கொலை செய்வதன் காரணமாக ஏற்படும் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எமக்கு யார் உதவ முடியும்?” ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் சொல்வதே சட்டம். எனது முடிவே முடிவு, குழப்பத்தையும் தீங்கையும் தடுக்கும் பொருட்டு மூஸாவைக் கொல்வதற்கு முடிவெடுத்துவிட்டேன். நான் உங்களுக்கு நேரான வழியைத்தான் காட்டுகிறேன்.”

Mü'min 40:30

அந்த நம்பிக்கையாளர் தம் சமூகத்தின் நலம் நாடியவராகக் கூறினார்: “நிச்சயமாக -நீங்கள் மூஸாவை அநியாயமாக, விரோதமாக கொன்றுவிட்டால்- முந்தைய தூதர்களுக்கு எதிராக அணிதிரண்ட அந்த மக்களுக்கு ஏற்பட்ட வேதனையைப் போன்று உங்களுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான்.

Mü'min 40:31

நூஹின் சமூகம், ஆத், ஸமூத் சமூகங்கள் மற்றும் அவர்களுக்குப் பின் வந்தவர்களில் நிராகரித்து தூதர்களை மறுத்து பொய்ப்பித்தவர்களுக்கு ஏற்பட்ட வழமையை போன்று. அவர்களுக்கு பின்வந்தவர்களிலும் நிராகரிப்பினாலும் தூதர்களை பொய்ப்பித்ததினாலும் அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். அவன் அடியார்களின் மீது அநீதி இழைக்க விரும்பமாட்டான். நிச்சயமாக உரிய கூலியை வழங்கும் விதமாக அவர்கள் செய்த பாவங்களின் காரணமாகத்தான் அவன் அவர்களைத் தண்டிக்கிறான்.

Mü'min 40:32

என் சமூகமே! நிச்சயமாக நான் உங்கள் மீது மறுமையை அஞ்சுகிறேன். அந்த நாளில் உறவின் அடிப்படையிலோ, பதவியின் அடிப்படையிலோ மக்கள் ஒருவரையொருவர் அழைப்பார்கள், அந்த பயங்கர நிலமையில் இந்த வழிமுறை அவர்களுக்குப் பயனளிக்கும் என்ற எண்ணத்தில்.

Mü'min 40:33

அந்த நாளில் நீங்கள் நரகத்தைவிட்டும் பயத்தால் விரண்டோடுவீர்கள். அப்போது அல்லாஹ்வின் வேதனையிலிருந்து உங்களைப் தடுக்கக்கூடியவர் யாரும் இருக்கமாட்டார். யாரை அல்லாஹ் கைவிட்டு நம்பிக்கை கொள்வதற்கு பாக்கியமளிக்கமாட்டானோ அவருக்கு நேர்வழிகாட்டுபவர் யாரும் இருக்கமாட்டார்கள். ஏனெனில் நேர்வழிக்கு பாக்கியமளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது.

Mü'min 40:34

மூஸாவுக்கு முன்னர் யூசுஃப் அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய தெளிவான சான்றுகளை உங்களிடம் கொண்டுவந்தார். அவர் கொண்டுவந்தவற்றைக்குறித்து நீங்கள் சந்தேகத்திலேயே, பொய்ப்பிப்பதிலேயே இருந்தீர்கள். அவர் மரணித்த பிறகு உங்களின் சந்தேகம் இன்னும் அதிகமாகிவிட்டது. “அல்லாஹ் அவருக்குப் பிறகு எந்தத் தூதரையும் அனுப்பமாட்டான்” என்று நீங்கள் கூறினீர்கள். சத்தியத்தை விட்டும் நீங்கள் வழிகெட்டது போன்றே அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறக்கூடிய, அவன் ஒருவனே என்பதில் சந்தேகம் கொள்ளக்கூடிய ஒவ்வொருவரையும் வழிகெடுக்கிறான்.

Mü'min 40:35

அவர்கள் தங்களிடம் எவ்வித ஆதாரமும் வராமலேயே அல்லாஹ்வின் சான்றுகளை பொய்யாக்குவதற்காக அவற்றில் வாதம் புரிகிறார்கள். அவர்களின் வாதம் அல்லாஹ்விடத்திலும் அவனையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கைகொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுப்பிற்குரியதாகும். நம் சான்றுகளைப் பொய்யாக்குவதற்காக வாதம் புரியும் இவர்களின் உள்ளங்களில் நாம் முத்திரையிட்டது போன்றே சத்தியத்தை விட்டு கர்வம், ஆணவம்கொள்ளும் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் முத்திரையிட்டு விடுகிறோம். எனவே அவர்களால் சரி, நன்மையின்பால் நேர்வழிபெற முடியாது.

Mü'min 40:36

ஃபிர்அவன் தன்னுடைய அமைச்சர் ஹாமானுக்குக் கூறினான்: “ஹாமானே! நான் வானங்களுக்கான பாதைகளை அடையும்பொருட்டு எனக்காக உயரமான ஒரு கட்டடத்தை எழுப்புவீராக,

Mü'min 40:37

அவனின்பால் சென்றடையக்கூடிய வானத்தின் வாயில்கள் மூலம் அவனை அடைந்து வணங்குவதற்குத் தகுதியான இறைவன் என்று மூஸா கருதும் அந்த இறைவனை நான் காண்பதற்காக. நிச்சயமாக நான் மூஸா வாதிடுவதில் அவர் பொய்யர் என்றே கருதுகிறேன்.” இவ்வாறு ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல் அலங்கரித்துக் காட்டப்பட்டது. எனவே தான் ஹாமானிடம் இவ்வாறு வேண்டிக்கொண்டான். அவன் சத்திய வழியை விட்டும் அசத்திய வழிகளின் பக்கம் திருப்பப்பட்டான். -தன்னிடம் உள்ள அசத்தியத்தை மேலோங்கச் செய்யவும் மூஸா கொண்டுவந்த சத்தியத்தை பொய் எனக் காட்டவும்- ஃபிர்அவ்ன் செய்த சூழ்ச்சி தோல்வியடையக் கூடியதே. ஏனெனில் நிச்சயமாக அதன் முடிவு ஏமாற்றமும் தோல்வி மிக்க முயற்சியும், முடிவடையாத துர்பாக்கியமுமே.

Mü'min 40:38

ஃபிர்அவ்னின் கூட்டத்தைச் சேர்ந்த நம்பிக்கைகொண்ட அந்த மனிதர் தன் சமூகத்திற்கு அறிவுரை வழங்கியவராக, அவர்களுக்கு சத்தியப்பாதையைக் காட்டியவராகக் கூறினார்: “என் சமூகமே! என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு சரியான, சத்தியத்தின்பால் கொண்டு செல்லும் நேரான வழியைக் காட்டுகிறேன்.

Mü'min 40:39

என் சமூகமே! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை அழியக்கூடிய அற்ப இன்பங்கள்தாம். அதிலுள்ள அழிந்து விடும் இன்பங்கள் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். திட்டமாக மறுமையின் வீடுதான் என்றும் முடிவடையாத நிலையான இன்பங்களை உள்ளடக்கியுள்ள நிலையான தங்குமிடமான வீடாகும். அதற்காக நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு செயல்படுங்கள். மறுமைக்காகச் செயற்படுவதை விட்டுவிட்டு உங்கள் உலக வாழ்கையில் மூழ்கிவிடுவதை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள்.

Mü'min 40:40

யார் ஒரு தீய செயல் செய்வாரோ அவர் அந்த செயலுக்கேற்பவே தண்டிக்கப்படுவார். அதற்கு அதிகமாக அவர் தண்டிக்கப்படமாட்டார். எவர் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவராக நற்செயல் புரிவாரோ அவர் ஆணாயினும் பெண்ணாயினும் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்டவர்களாக இருந்தால் அத்தகைய புகழுக்குரிய பண்புகளை உடையவர்கள்தாம் மறுமை நாளில் சுவனத்தில் நுழைவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு சுவனத்தில் வைத்திருக்கக்கூடிய என்றும் முடிவடையாத நிலையான அருட்கொடைகளை கணக்கின்றி வழங்கிடுவான்.

Mü'min 40:41

என் சமூகமே! எனக்கு என்னவாயிற்று? அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற்காரியம் செய்து உலக மற்றும் மறுமை வாழ்வின் இழப்பிலிருந்து காத்துக்கொள்ளுமாறு நான் உங்களை அழைக்கின்றேன். ஆனால் நீங்களோ அல்லாஹ்வை நிராகரித்து அவனுக்கு மாறுசெய்வதற்கு என்னை அழைப்பதன் மூலம் நரகில் நுழைவதற்கு என்னை அழைக்கின்றீர்கள்.

Mü'min 40:42

நான் அல்லாஹ்வை நிராகரித்து எனக்கு சரியான அறிவில்லாத ஒன்றை அவனுடன் இணைத்து வணங்குவதற்காக நீங்கள் உங்களின் அசத்தியத்தின் பக்கம் என்னை அழைக்கின்றீர்கள். யாவற்றையும் மிகைத்த, யாராலும் மிகைக்க முடியாத அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளுங்கள் என்று நான் உங்களை அழைக்கின்றேன். தன் அடியார்களை மிக அதிகமாக மன்னிப்பவன்.

Mü'min 40:43

நிச்சயமாக நீங்கள் எதன்மீது உண்மையாக நம்பிக்கைகொண்டு வழிப்பட வேண்டும் என்று எனக்கு அழைப்பு விடுக்கின்றீர்களோ அதற்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் உண்மையாக அழைக்கப்படுவதற்கான எந்தத் தகுதியும் இல்லை. தன்னை அழைப்பவர்களுக்கு அது பதிலளிக்காது. திட்டமாக நாம் அனைவரும் அல்லாஹ்வின் பக்கமே திரும்ப வேண்டும். நிச்சயமாக நிராகரிப்பதிலும் பாவங்கள் புரிவதிலும் வரம்பு மீறுபவர்கள்தாம் நரகவாசிகளாவர். மறுமை நாளில் அவர்கள் அதிலே நிரந்தரமாக நுழைவார்கள்.”

Mü'min 40:44

அவரது அறிவுரையை அவர்கள் நிராகரித்துவிட்டார்கள். அவர் கூறினார்: “நான் உங்களுக்கு வழங்கிய அறிவுரைகளை நீங்கள் விரைவில் நினைவு கூறுவீர்கள். அவற்றை ஏற்றுக் கொள்ளாததற்காக வருத்தப்படுவீர்கள். நான் எனது விவகாரங்கள் அனைத்தையும் அல்லாஹ்விடமே ஒப்படைக்கின்றேன். நிச்சயமாக அல்லாஹ்வுக்கு தனது அடியார்களின் செயல்களில் எதுவும் அவனுக்கு மறைவாக இல்லை.”

Mü'min 40:45

அவர்கள் அவரைக் கொல்ல நாடியபோது அவர்களின் தீய சூழ்ச்சிகளைவிட்டும் அல்லாஹ் அவரைப் பாதுகாத்தான். ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்களை மூழ்கடிக்கும் வேதனை சூழ்ந்துகொண்டது. அல்லாஹ் அவனையும் அவனது படையினர் அனைவரையும் இவ்வுலகிலேயே மூழ்கடித்தான்.

Mü'min 40:46

அவர்கள் மரணித்த பிறகு காலையிலும் மாலையிலும் அவர்களின் மண்ணறைகளில் நெருப்பில் முன்னிறுத்தப்படுவார்கள். மறுமை நாளில் அவர்களிடம் கூறப்படும்: “ஃபிர்அவ்னைப் பின்பற்றியவர்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனாலும் அல்லாஹ்வின் பாதையைவிட்டும் (மக்களைத்) தடுத்துக் கொண்டிருந்ததனாலும் கடுமையான வேதனையில் பிரவேசிக்கச் செய்யுங்கள்.”

Mü'min 40:47

தூதரே!- நரகவாசிகளில் பின்பற்றிய தொண்டர்களும் பின்பற்றப்பட்ட தலைவர்களும் ஒருவருக்கொருவர் தர்க்கித்துக் கொள்வதை நினைவுகூர்வீராக. பின்பற்றிய பலவீனமான தொண்டர்கள் பின்பற்றப்பட்ட கர்வம்கொண்ட தலைவர்களைப் பார்த்துக் கூறுவார்கள்: “நிச்சயமாக உலகில் நாங்கள் வழிகேட்டில் உங்களைத்தான் பின்பற்றிக் கொண்டிருந்தோம். அல்லாஹ்வின் வேதனையில் சிறிதளவையாவது எங்களுக்குப் பகரமாக நீங்கள் சுமந்து எங்களை விட்டும் விலக்கி வைப்பீர்களா?”

Mü'min 40:48

அதற்கு கர்வம் கொண்ட பின்பற்றப்பட்ட அந்த தலைவர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக நாம் -பின்பற்றிய, பின்பற்றப்பட்டு இருந்த அனைவரும்- நரகத்தில் ஒன்றுதான். ஒருவரும் மற்றவரின் மறுமையின் வேதனையிலிருந்து எதையும் சுமக்க மாட்டார். நிச்சயமாக அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்துவிட்டான். ஒவ்வொருவருக்கும் தக்க தண்டனையையே அளித்துள்ளான்.

Mü'min 40:49

வேதனைக்குள்ளாக்கப்படும் பின்பற்றிய, பின்பற்றப்பட்ட இரு சாராரும் நரகிலிருந்து வெளியேறி பாவமன்னிப்பு கோரி மீண்டும் உலகத்தின்பால் திரும்புவதில் நிராசையடைந்து நரகத்திற்கு பொறுப்பாக்கப்பட்ட காவலர்களைப் பார்த்துக் கூறுவார்கள்: “உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் நிலையான இந்த வேதனையை ஒருநாளாவது எங்களைவிட்டுக் குறைக்கட்டும்.”

Mü'min 40:50

நரகத்தின் பாதுகாவலர்கள் நிராகரிப்பாளர்களுக்கு மறுப்புக் கூறுவார்கள்: “உங்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளோடும் ஆதாரங்களோடும் உங்களிடம் வரவில்லையா?” நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “ஆம். அவர்கள் எங்களிடம் தெளிவான ஆதாரங்களோடும் சான்றுகளோடும் வந்து கொண்டிருந்தார்கள்.” அவர்களைக் கண்டிக்கும்விதமாக அந்தக் காவலர்கள் கூறுவார்கள்: “நீங்களே பிரார்த்தனை செய்யுங்கள். நாங்கள் நிராகரிப்பாளர்களுக்காக பரிந்துபேச மாட்டோம். நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனைகள் வீணானவையே. ஏனெனில் அவர்களது நிராகரிப்பின் காரணமாக அவர்களிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Mü'min 40:51

ஃபிர்அவ்னின் சம்பவத்தையும் அவனுக்கும் அவனைப் பின்பற்றியோருக்கும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நேர்ந்த கதியை அல்லாஹ் குறிப்பிட்ட பிறகு தூதர்கள் மற்றும் நம்பிக்கையாளர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் கிடைத்த வெற்றியைக் குறித்து குறிப்பிடுகிறான். அவன் கூறுகிறான்: நிச்சயமாக நாம் நம் தூதர்களுக்கும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைகொண்டவர்களுக்கு இவ்வுலகில் அவர்களின் ஆதாரங்களை மேலோங்கச் செய்தும் எதிரிகளுக்கு எதிராக அவர்களை வலுப்படுத்தியும் உதவி புரிகின்றோம். மறுமை நாளில் அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தும் உலகில் அவர்களை எதிர்த்தோரை நரகில் நுழைவித்தும் உதவிபுரிகின்றோம். இது சத்தியவாதிகள், நபிமார்கள் மற்றும் வானவர்கள் தாங்கள் எடுத்துரைத்து விட்டதற்கும் சமூகங்கள் அதனை பொய்ப்பித்ததற்கும் சாட்சி கூறியபிறகு நிகழக்கூடியதாகும்.

Mü'min 40:52

நிராகரித்தும் பாவங்கள் புரிந்தும் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களுக்கு அவர்கள் அநீதிக்கு கூறும் காரணங்கள் எந்தப் பயனையும் அளிக்காத நாளே அந்நாளாகும். அந்த நாளில் அவர்கள் அல்லாஹ்வின் அருளைவிட்டும் தூரமாக்கப்படுவார்கள். அவர்கள் மறுமையில் சந்திக்கும் வேதனைமிக்க தண்டனையால் தீய இருப்பிடத்தைப் பெறுவார்கள்.

Mü'min 40:53

நாம் மூஸாவுக்கு இஸ்ராயீலின் மக்கள் சத்தியத்தின்பால் நேர்வழி பெறும் ஞானத்தை வழங்கினோம். இஸ்ராயீலின் மக்கள் தலைமுறை தலைமுறையாக பெற்றுக்கொள்ளும் வேதமாக நாம் தவ்ராத்தை ஆக்கினோம்.

Mü'min 40:54

சத்தியத்தின்பால் வழிகாட்டியாகவும் நல்லறிவுடையோருக்கு நினைவூட்டலாகவும் வழங்கினோம்.

Mü'min 40:55

தூதரே!- உம் சமூகத்தினர் உம்மை பொய்ப்பிப்பதையும் அவர்களால் நீர் சந்திக்கும் துன்பங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வீராக. நிச்சயமாக உமக்கு உதவிசெய்வதாக, வலுப்படுத்துவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி சந்தேகமற்ற உண்மையாகும். உம்முடைய பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக. காலையிலும் மாலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக.

Mü'min 40:56

நிச்சயமாக அல்லாஹ்வின் சான்றுகளைப் பொய்யாக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ்விடமிருந்து வந்த, எந்த ஆதாரமுமின்றி அவற்றில் தர்க்கம் செய்பவர்களை அவ்வாறு செய்யத் தூண்டுவது அவர்களிடம் காணப்படும் சத்தியத்தின் மீது கொண்ட கர்வமும், மேலாதிக்க எண்ணமுமாகும். ஆனாலும் சத்தியத்தை மிகைக்க வேண்டுமென அவர்கள் நினைப்பதை அவர்களால் அடைய முடியாது. -தூதரே!- அல்லாஹ்வை உறுதியாக பற்றிக்கொள்வீராக. நிச்சயமாக அவன் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன், அவர்களின் செயல்களைப் பார்க்கக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

Mü'min 40:57

பிரமாண்டமான, விசாலமான வானங்களையும் பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதைவிட மிகப் பெரியதாகும். பிரமாண்டமான அவையிரண்டையும் படைத்தவன் இறந்தவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக, அவர்களை விசாரிப்பதற்காக அவர்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும் ஆற்றலுடையவன். ஆயினும் மக்களில் பெரும்பாலானோர் அறிய மாட்டார்கள். அதனைக்கொண்டு படிப்பினை பெற மாட்டார்கள். தெளிவாக இருந்தும் அதனை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்குரிய ஆதாரமாகக் கொள்ளமாட்டார்கள்.

Mü'min 40:58

பார்வையுடையோரும் பார்வையற்றோரும் சமமாக மாட்டார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதர்களை உண்மைப்படுத்தி நற்செயல்கள் புரிந்தவர்களும் தீயநம்பிக்கை மற்றும் பாவங்களினால் தீய செயல்புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள். நீங்கள் மிகக் குறைவாகவே அறிவுரை பெறுகிறீர்கள். நீங்கள் அறிவுரை பெற்றிருந்தால் இரு பிரிவினருக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அறிந்து அல்லாஹ்வின் திருப்தியை நாடி நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிய முயற்சி செய்பவர்களாக ஆகியிருப்பீர்கள்.

Mü'min 40:59

நிச்சயமாக மரணித்தவர்களுக்கு விசாரணைக்காக, கூலி கொடுப்பதற்காக மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாள் சந்தேகம் இல்லாமல் வந்தே தீரும். அதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. ஆயினும் மக்களில் பெரும்பாலோர் அதன் வருகையை நம்புவதில்லை. எனவேதான் அதற்காகத் தங்களை தயார்படுத்திக் கொள்வதில்லை.

Mü'min 40:60

மனிதர்களே!- உங்களின் இறைவன் கூறுகிறான்: “என்னிடம் மட்டுமே கேளுங்கள். என்னை மட்டுமே வணங்குங்கள். உங்களின் பிரார்த்தனைக்கு விடையளிக்கிறேன். உங்களை மன்னித்து உங்களுக்குக் கருணை காட்டுகிறேன். நிச்சயமாக என்னை மாத்திரம் வணங்காமல் கர்வம் கொள்பவர்கள் மறுமை நாளில் இழிவடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”

Mü'min 40:61

அல்லாஹ்வே நீங்கள் நிம்மதியடைந்து, ஓய்வெடுப்பதற்காக இரவை இருளாகவும் நீங்கள் வேலை செய்வதற்காக பகலை பிரகாசமானதாகவும் ஆக்கித்தந்துள்ளான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களின் மீது பேரருள் புரிபவன். அவன் அவர்களின்மீது வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தன் அருட்கொடைகளை முழுமைப்படுத்தியுள்ளான். ஆயினும் மக்களில் பெரும்பாலானோர் அவற்றிலிருந்து அவன் தங்களின் மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவதில்லை.

Mü'min 40:62

உங்களின் மீது அருட்கொடைகளைப் பொழிந்த அல்லாஹ்தான் எல்லாவற்றையும் படைத்தவன். அவனைத் தவிர வேறு படைப்பாளன் இல்லை. அவனைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரியவன் வேறுயாரும் இல்லை. அவனை வணங்குவதை விட்டும் பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற மற்றவர்களை வணங்குவதன் பக்கம் எவ்வாறு நீங்கள் செல்லலாம்?

Mü'min 40:63

இவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனை மாத்திரம் வணங்குவதை விட்டு திருப்பப்பட்டதைப் போன்றே ஒவ்வொரு காலகட்டத்திலும் இடத்திலும் அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கும் சான்றுகளை மறுக்கக்கூடியவர்களை சத்தியத்தின்பால் நேர்வழி பெறாமல் திருப்பி விடுகின்றோம். நேர்வழியின்பால் பாக்கியம் அளிக்கப்பட மாட்டார்கள்.

Mü'min 40:64

மனிதர்களே!- அல்லாஹ்தான் உங்களுக்காக பூமியை நீங்கள் வசிப்பதற்கேற்ற இடமாகவும் வானத்தை விழுந்துவிடாமல் இருக்கும் உறுதியான முகடாகவும் ஆக்கினான். அவனே உங்கள் அன்னையரின் வயிற்றில் உங்களை அழகிய முறையில் வடிவமைக்கிறான். தூய்மையான உணவிலிருந்து உங்களுக்கு உணவளிக்கிறான். இவ்வாறு உங்களின் மீது அருட்கொடைகளை பொழிந்தவன்தான் உங்கள் இறைவனான அல்லாஹ். படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவன் பாக்கியம்மிக்கவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.

Mü'min 40:65

அவன் மரணிக்காத நித்திய ஜீவன். அவனைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரியவன் வேறுயாரும் இல்லை. அவனுடைய திருப்தியை மட்டும் நாடியவர்களாக பிரார்த்தித்தவாறும் வணங்கியவாறும் அவனையே அழையுங்கள். அவனுடைய படைப்புகளில் அவனுக்கு இணையாக யாரையும் ஆக்கிவிடாதீர்கள். படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

Mü'min 40:66

தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கக்கூடிய பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற இந்த சிலைகளை நான் வணங்குவதைவிட்டும் அல்லாஹ் என்னைத் தடுத்துள்ளான். அவ்வாறு வணங்குவது தவறானது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் என்னிடம் வந்துள்ளன. நான் அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான். அவன் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.

Mü'min 40:67

அவன்தான் உங்களின் தந்தை ஆதமை மண்ணிலிருந்து படைத்தான். அவருக்குப் பிறகு உங்களை விந்திலிருந்தும் பின்னர் இரத்தக்கட்டியிலிருந்தும் படைத்தான். பின்னர் உங்கள் அன்னையரின் வயிற்றிலிருந்து உங்களை சிறிய குழந்தைகளாக வெளிப்படுத்துகிறான். பின்னர் நீங்கள் உங்களின் பரிபூரண பலத்தை அடைகிறீர்கள். பின்னர் நீங்கள் பெரியவர்களாகி வயது முதிர்ந்தவர்களாகி விடுகிறீர்கள். உங்களில் இக்கட்டங்களுக்கு முன்னரே மரணிப்போரும் இருக்கின்றனர். நீங்கள் அல்லாஹ்வின் அறிவிலுள்ள குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள். அதை விட்டும் நீங்கள் அதிகரிக்கப்படுவதுமில்லை, குறைக்கப்படுவதுமில்லை. நீங்கள் இந்த ஆதாரங்களைக்கொண்டு அவன் வல்லமையையும் அவனது ஏகத்துவத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக (அவன் இவற்றையெல்லாம் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்).

Mü'min 40:68

அவன் கைவசமே வாழ்வும் மரணமும் உள்ளது. அவன் ஏதேனும் ஒரு விஷயத்தை செய்ய தீர்மானித்துவிட்டால் அந்த விடயத்துக்கு ஆகு என்றுதான் கூறுகிறான். உடனே அது ஆகிவிடும்.

Mü'min 40:69

தூதரே!- அல்லாஹ்வின் சான்றுகள் தெளிவாக இருந்தும் பொய்ப்பித்தவர்களாக அவற்றில் தர்க்கம் புரிபவர்களை நீர் பார்க்கவில்லையா? தெளிவான சத்தியத்தை அவர்கள் புறக்கணிக்கும் நிலையைப் பார்த்து நீர் ஆச்சரியப்படுவீர்.

Mü'min 40:70

குர்ஆனையும் எமது தூதர்களுக்கு கொடுத்தனுப்பிய சத்தியத்தையும் பொய்ப்பிக்கும் இவர்கள் தங்களின் பொய்ப்பிப்பினால் ஏற்படும் விளைவை விரைவில் அறிந்துகொள்வார்கள். தீய முடிவையும் காண்பார்கள்.

Mü'min 40:71

அவர்களின் கழுத்துகளில் விலங்கிடப்பட்டு கால்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டு வேதனை செய்யக்கூடிய வானவர்கள் அவர்களை இழுத்துச் செல்லும்போது அவர்கள் அதன் விளைவை அறிந்துகொள்வார்கள்.

Mü'min 40:72

கடுமையாக கொதிக்கின்ற நீரில் அவர்களை இழுத்துவருவார்கள். பின்னர் நரகத்தில் எரிக்கப்படுவார்கள்.

Mü'min 40:73

பின்னர் அவர்களைப் பழிக்கும் விதமாக அவர்களிடம் கேட்கப்படும்: “நீங்கள் இறைவனாக நினைத்து வணங்கி இணைவைத்துக் கொண்டிருந்த கடவுள்கள் எங்கே?” என்று.

Mü'min 40:74

அல்லாஹ்வை விடுத்து பயனளிக்கவோ, தீங்கிளைக்கவோ முடியாத உங்களின் சிலைகள். நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “அவை எங்களை விட்டும் மறைந்துவிட்டன. நாங்கள் அவற்றைக் காணவில்லை. மாறாக நாங்கள் உலகில் வணக்கத்திற்குத் தகுதியான எதையும் வணங்கிக் கொண்டிருக்கவில்லை. இவர்களை வழிகெடுத்ததைப் போன்றே அல்லாஹ் ஒவ்வொரு காலகட்டத்திலும் இடத்திலும் நிராகரிப்பாளர்களை சத்தியத்தை விட்டும் வழிகெடுக்கிறான்.

Mü'min 40:75

அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் அனுபவிக்கும் இந்த வேதனை, அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியவர்களாக நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததனாலும் அந்தப் பெருமையில் வரம்பு மீறியதனாலாகும்.

Mü'min 40:76

நரகத்தின் வாயில்களில் நிரந்தரமாக நுழைந்துவிடுங்கள். சத்தியத்தை விட்டும் கர்வம் கொண்டோரின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்.

Mü'min 40:77

தூதரே!- உம் சமூகத்தினர் அளிக்கும் துன்பங்களையும் அவர்களின் பொய்ப்பிப்பையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வீராக. நிச்சயமாக உமக்கு உதவி செய்வதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி சந்தேகம் இல்லாத உண்மையானதாகும். நாம் அவர்களுக்கு எச்சரித்த வேதனைகளில் சிலவற்றை -பத்ர் போரில் நிகழ்ந்தது போன்று- உமக்குக் காட்டுவோம் அல்லது அதற்கு முன்னரே உம்மை மரணிக்கச் செய்துவிடுவோம். மறுமை நாளில் அவர்கள் நம் பக்கமே திரும்ப வேண்டும். நாம் அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்கிடுவோம். அவர்களை நரகத்தில் பிரவேசிக்கச் செய்திடுவோம். அவர்கள் நிரந்தரமாக அதில் வீழ்ந்துகிடப்பார்கள்.

Mü'min 40:78

தூதரே!- உமக்கு முன்னர் ஏராளமான தூதர்களை அவர்களின் சமூகங்களின்பால் நாம் அனுப்பியுள்ளோம். ஆயினும் அந்த மக்கள் தூதர்களை பொய்ப்பித்து அவர்களைத் துன்புறுத்தினார்கள். தூதர்கள் தாங்கள் பொய்ப்பிக்கப்பட்டதையும் துன்புறுத்தப்பட்டதையும் பொறுமையாக சகித்துக் கொண்டார்கள். அந்த தூதர்களில் சிலரின் செய்திகளை நாம் உமக்கு எடுத்துரைத்துள்ளோம்; சிலரின் செய்திகளை எடுத்துரைக்கவில்லை. எந்தவொரு தூதரும் தனது கூட்டத்திடம் தன் இறைவனின் நாட்டமின்றி எந்தவொரு சான்றையும் கொண்டுவர முடியாது. எனவே நிராகரிப்பாளர்கள் சான்றுகளைக் கொண்டுவருமாறு தமது தூதர்களிடம் வேண்டுகோள் விடுப்பது அநியாயமாகும். வெற்றியைக் கொண்டோ தூதர்களுக்கும் அந்த மக்களுக்கும் இடையே நியாயமான தீர்ப்பைக் கொண்டோ இறைவனின் கட்டளை வந்துவிட்டால் நிராகரிப்பாளர்கள் அழிக்கப்படுவார்கள், தூதர்கள் காப்பாற்றப்படுவார்கள். அப்போது அசத்தியவாதிகள் தமது நிராகரிப்பினால் தம்மை அழிவிற்கான காரணிகளில் இட்டுச்சென்று -அந்நிலைமையில் அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பளிக்கும் போது- நஷ்டமடைந்துவிடுவார்கள்.

Mü'min 40:79

அல்லாஹ்வே ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை உங்களுக்காகப் படைத்துள்ளான். அவற்றில் சிலவற்றில் நீங்கள் பயணம் செய்கிறீர்கள். சிலவற்றின் இறைச்சியை உண்கிறீர்கள்.

Mü'min 40:80

அந்த படைப்பினங்களில் உங்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகும் புதுப்புது பல பயன்களும் இருக்கின்றன. அவற்றின் மூலம் நீங்கள் விரும்பும் உங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறீர்கள். அவற்றில் பிரதானமானது தரைப் பயணமும் கடல் பயணமுமாகும்.

Mü'min 40:81

அவன் தான் ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பதையும் தன்னுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகளை உங்களுக்குக் காட்டுகிறான். அவனுடைய சான்றுகள் என்று உங்களிடம் உறுதியான பின்னர் எதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்?

Mü'min 40:82

இந்த நிராகரிப்பாளர்கள் பூமியில் பயணம் செய்து இதற்கு முன்னர் பொய்ப்பித்த சமூகங்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்த்து படிப்பினை பெற வேண்டாமா? அவர்கள் இவர்களை விட அதிக செல்வங்கள் பெற்றவர்களாவும் பலம்மிக்கவர்களாகவும் பூமியில் அதிக அடையாளங்களை விட்டுச்சென்றவர்களாகவும் இருந்தார்கள். அழிக்கக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வந்தபோது அவர்கள் சேர்த்து வைத்த எந்த பலமும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.

Mü'min 40:83

அவர்களது தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளையும் ஆதாரங்களையும் கொண்டு வந்தபோது அவற்றை அவர்கள் மறுத்தார்கள். தூதர்கள் கொண்டுவந்ததற்கு மாறாக தங்களிடமுள்ள அறிவைக் கொண்டு அவர்கள் திருப்தியடைந்தார்கள். அவர்கள் எந்த வேதனையைக் குறித்து பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களின் மீது இறங்கியது. அந்த வேதனையைக் குறித்துதான் தூதர்கள் அவர்களை எச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

Mü'min 40:84

நம்முடைய வேதனையை அவர்கள் காணும்போது, “நாங்கள் அல்லாஹ் ஒருவனின் மீது நம்பிக்கைகொண்டோம். அவனைத் தவிர நாங்கள் வணங்கிக்கொண்டிருந்த இணைகள், சிலைகளை நிராகரித்துவிட்டோம்” என்று ஒப்புக்கொண்டவர்களாக கூறுவார்கள். அப்போது அவர்கள் ஏற்றுக் கொள்வதால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

Mü'min 40:85

அவர்கள் மீது இறங்கும் நம்முடைய வேதனையை காணும் சமயத்தில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கையினால் அவர்களுக்கு எந்தப்பயனும் இல்லை. நிச்சயமாக வேதனையைக் காணும்போது அடியார்கள் கொள்ளும் நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்காது என்பதே அடியார்களின் விடயத்தில் அல்லாஹ்வின் வழிமுறையாகும். நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வை நிராகரித்ததன் காரணமாக, தண்டனையைக் காண முன் பாவமன்னிப்புக் கோராமல் இருந்ததன் மூலம் அழிவிற்கான காரணிகளைத் தேடி தண்டனை இறங்கும் போது நஷ்டமடைந்துவிட்டார்கள்.

Fussılet 41:1

இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

Fussılet 41:2

இந்த குர்ஆன் அளவிலாக் கருணையாளனும் இணையிலாக் கிருபையாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதாகும்.

Fussılet 41:3

இதன் வசனங்கள் முழுமையாக தெளிவுபடுத்தப்பட்டு அறிந்துகொள்ளும் மக்களுக்காக அரபி மொழியிலான குர்ஆனாக ஆக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவர்கள்தாம் அதன் கருத்துக்களைக் கொண்டும் அதிலுள்ள சத்தியத்துக்கான நேர்வழியைக் கொண்டும் பயனடைவார்கள்.

Fussılet 41:4

அது நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை தயார்படுத்திவைத்துள்ளான் என்று நற்செய்தி கூறுவதாகவும் நிராகரிப்பாளர்களுக்கு அவன் வேதனைமிக்க தண்டனையை தயார்படுத்தி வைத்துள்ளான் என்று எச்சரிக்கை செய்வதாகவும் உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் அதனைப் புறக்கணித்துவிட்டார்கள். அவர்கள் அதிலுள்ள வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும் நோக்கில் செவியேற்க மாட்டார்கள்.

Fussılet 41:5

அவர்கள் கூறினார்கள்: “எங்களின் உள்ளங்கள் உறையிடப்பட்டுள்ளன. நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கின்றீரோ அதனை அவற்றால் விளங்கிக் கொள்ள முடியாது. எங்களின் செவிகளில் அடைப்பு உள்ளது. எனவே அவற்றால் செவியேற்க முடியாது. எங்களுக்கும் உமக்கும் இடையே திரை உள்ளது. எனவே நீர் கூறும் எதுவும் எங்களை அடையாது. நீர் உம் வழியில் செயல்படும். நிச்சயமாக நாங்களும் எங்களின் வழியில் செயல்படுகின்றோம். நாங்கள் உம்மை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம்.”

Fussılet 41:6

தூதரே!- பிடிவாதம் கொண்ட இவர்களிடம் நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற மனிதன்தான். ஆயினும் ‘வணக்கத்திற்குரிய உண்மையான உங்களின் இறைவன் அல்லாஹ் ஒருவன்தான்’ என்று அல்லாஹ் எனக்கு வஹி அறிவிக்கிறான். எனவே அவனின்பால் செல்லும் வழிகளில் பயணியுங்கள். அவனிடமே பாவங்களுக்கு மன்னிப்புக் கோருங்கள். அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவோர் அல்லது யாரையாவது அவனுக்கு இணையாக்குவோருக்கு அழிவும் வேதனையும் உண்டு.”

Fussılet 41:7

அவர்கள் தங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்க மாட்டார்கள். அவர்கள் -மறுமையையும் அங்கு வழங்கப்படும் நிலையான அருட்கொடையையும் வேதனைமிக்க தண்டனையையும்- மறுக்கக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்.

Fussılet 41:8

நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்டு நற்செயல்புரிந்தவர்களுக்கு என்றும் முடிவடையாத நிரந்தரமான சுவனம் என்னும் கூலி இருக்கின்றது.

Fussılet 41:9

தூதரே!- இணைவைப்பாளர்களைக் கண்டிக்கும் விதமாக நீர் அவர்களிடம் கேட்பீராக: “பூமியை ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்களில் படைத்த அல்லாஹ்வை ஏன் நிராகரிக்கிறீர்கள்? அவனுக்கு இணைகளை ஏற்படுத்தி ஏன் அவனைத் தவிர மற்றவர்களை வணங்குகிறீர்கள்? அவன் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாவான்.

Fussılet 41:10

அது ஆட்டம் காணாமல் இருப்பதற்காக அதற்கு மேலே அதனை உறுதிப்படுத்தும் உறுதியான மலைகளையும் அமைத்துள்ளான். அதில் அபிவிருத்தி செய்து அதிலுள்ளவர்களுக்கு எப்போதும் நலவு வழங்குதாக ஆக்கியுள்ளான். முந்தைய இரண்டு நாட்களையும் முழுமைப்படுத்தும் செவ்வாய், புதன் ஆகிய நாட்களையும் சேர்த்து சரியாக நான்கு நாட்களில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்குத் தேவையான உணவுகளை சீராக அதில் நிர்ணயித்தான். இது குறித்து கேட்க நாடுபவர்களுக்கு (விடை இதுதான்).

Fussılet 41:11

பின்னர் அல்லாஹ் வானத்தை படைப்பதன்பால் கவனம் செலுத்தினான். அப்போது அது புகையாக இருந்தது. அவன் வானத்திடமும் பூமியிடமும் கூறினான்: “விரும்பியோ அல்லது நிர்பந்தமாகவோ என் கட்டளைக்குக் கட்டுப்படுங்கள். அதைத் தவிர வேறு வழி உங்களுக்கு இல்லை” அவை கூறின: “நாங்கள் விரும்பியே உனக்குக் கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உன் விருப்பத்திற்கு மாற்றாக எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை.”

Fussılet 41:12

வானங்களை இருநாட்களில் (வியாழன், வெள்ளி) படைத்தான். அத்தோடு வானங்களையும் பூமியையும் ஆறுநாட்களின் உருவாக்கம் நிறைவுபெற்றது. ஒவ்வொரு வானத்திற்கும் அதற்கு நிர்ணயிக்கப்பட்டதையும் அதற்கு வணக்கம், வழிப்படுதல் போன்ற கட்டளையையும் அவன் அறிவித்தான். கீழ் வானத்தை நாம் நட்சத்திரங்களால் அலங்கரித்துள்ளோம். அவற்றின் மூலம் திருட்டுத்தனமாக ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்பதைவிட்டும் அதனைப் பாதுகாத்துள்ளோம். மேற்கூறப்பட்ட இவையனைத்தும் யாவற்றையும் மிகைத்த, யாராலும் மிகைக்க முடியாத தன் படைப்புகளைக் குறித்து நன்கறிந்தவனின் நிர்ணயமாகும்.

Fussılet 41:13

தூதரே!- நீர் கொண்டுவந்ததை ஏற்றுக் கொள்ளாமல் அவர்கள் புறக்கணித்தால் அவர்களிடம் கூறுவீராக: “ஆத், ஹூதின் சமூகம் ஸ்மூத், ஸாலிஹின் சமூகம் அவ்விருவரையும் பொய்ப்பித்த போது அவர்களுக்கு ஏற்பட்ட வேதனையைப் போன்று உங்களுக்கும் வேதனை ஏற்பட்டுவிடும் என்று நான் உங்களை எச்சரிக்கிறேன்.”

Fussılet 41:14

ஒரே அழைப்போடு ஒருவர் பின் ஒருவராக தூதர்கள் அவர்களிடம் வந்து “அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்” என்று கட்டளையிட்டபோது நிராகரிப்பாளர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் எங்களுக்கு வானவர்களை தூதர்களாக இறக்க நாடியிருந்தால் அவ்வாறு இறக்கி இருப்பான். உங்களின் தூதுச் செய்தியை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம். ஏனெனில் திட்டமாக நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்கள்தாம்.”

Fussılet 41:15

ஹூதின் கூட்டமான ஆத் சமூகத்தினர் அல்லாஹ்வை நிராகரித்ததோடு பூமியில் அநியாயமாக ஆணவம் கொண்டார்கள். தங்களைச் சுற்றிள்ளவர்கள் மீது அநியாயம் செய்தார்கள். தங்களின் பலத்தால் மெய்மறதியில் ஆழ்த்தப்பட்ட அவர்கள் கூறினார்கள்: “எங்களைவிட பலமானவர் யார்?” அவர்களின் எண்ணப்படி அவர்களைவிட பலமானவர்கள் யாரும் இருக்கவில்லை. அல்லாஹ் அவர்களுக்குப் பதிலளித்தான்: “நிச்சயமாக அவர்களைப் படைத்து அவர்களைத் திமிரில் ஆழ்த்திய பலத்தை அவர்களுக்கு அளித்த அல்லாஹ் அவர்களை விட வல்லமை மிக்கவன் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளவில்லையா, பார்க்கவில்லையா? அவர்கள் ஹூத் கொண்டுவந்த அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்துக் கொண்டிருந்தார்கள்.

Fussılet 41:16

ஆகவே நாம் அவர்களை உலக வாழ்க்கையில் இழிவுமிக்க வேதனையை அனுபவிக்கச் செய்வதற்காக அவர்களின் மீது துர்பாக்கியமான நாட்களில் இன்னல்களுக்கு உள்ளாக்கக்கூடிய பயங்கரமான சப்தத்தை உள்ளடக்கிய காற்றை அனுப்பினோம். அவர்களுக்காக காத்திருக்கும் மறுமை வேதனையோ அதைவிட இழிவானது. வேதனையிலிருந்து தங்களைக் காப்பாற்றக்கூடிய உதவியாளர்களை அவர்கள் பெற மாட்டார்கள்.

Fussılet 41:17

ஸாலிஹின் கூட்டமான ஸமூத் சமூகத்திற்கு சத்தியப் பாதையை தெளிவுபடுத்தி நேர்வழி காட்டினோம். அவர்கள் சத்தியத்தின் நேர்வழியை விட்டுவிட்டு வழிகேட்டை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். எனவே அவர்கள் செய்துகொண்டிருந்த நிராகரிப்பான செயல்கள் மற்றும் பாவங்களினால் இழிவுமிக்க வேதனைமிக்க பேரிடி அவர்களைத் தாக்கியது.

Fussılet 41:18

அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதர்களின்மீதும் நம்பிக்கைகொண்டு அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். அவர்களின் சமூகத்தைத் தாக்கிய வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றினோம்.

Fussılet 41:19

அல்லாஹ் தன் எதிரிகளை நரகத்தின்பால் ஒன்றுதிரட்டும்போது அவர்களில் முந்தியவர்கள், பிந்தியவர்கள் அனைவரையும் நரகத்தின் காவலர்கள் நரகத்தில் தள்ளுவார்கள். அவர்கள் நரகிலிருந்து தப்பிச் செல்ல முடியாது.

Fussılet 41:20

அவர்கள் இழுத்துச் செல்லப்பட்ட நரகத்திற்கு வந்தவுடன் உலகில் தாங்கள் செய்துகொண்டிருந்த செயல்களை அவர்கள் மறுப்பார்கள். அவர்களின் செவிகளும் பார்வைகளும் தோல்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த நிராகரிப்பு, பாவங்களைக் குறித்து சாட்சி கூறும்.

Fussılet 41:21

நிராகரிப்பாளர்கள் தங்களின் தோல்களிடம் கேட்பார்கள்: “எங்களுக்கு எதிராக நாங்கள் செய்துகொண்டிருந்த செயல்களைக்குறித்து ஏன் சாட்சி கூறினீர்கள்?” தோல்கள் கூறும்: “எல்லா பொருள்களையும் பேச வைத்தவன்தான் எங்களையும் பேச வைத்தான். அவன்தான் முதன்முதலாக உங்களைப் படைத்தான். மறுமைநாளில் விசாரணைக்காகவும் கூலி பெறுவதற்காகவும் நீங்கள் அவன் பக்கமே திரும்ப வேண்டும்.

Fussılet 41:22

உங்களின் செவிகளும் பார்வைகளும் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சி கூறாமலிருப்பதற்கு நீங்கள் பாவங்கள் செய்துகொண்டிருந்தபோது அவைகளுக்குத் தெரியாமல் மறைந்து செய்யவில்லை. ஏனெனில் மரணத்திற்குப் பின் விசாரணை செய்யப்பட்டு கூலி வழங்கப்படுவதையோ தண்டனை வழங்கப்படுவதையோ நீங்கள் நம்பாமல் இருந்தீர்கள். மாறாக நீங்கள் செய்யக்கூடியவற்றில் பலதை அல்லாஹ் அறியமாட்டான், அது அவனை விட்டும் மறைந்துவிடும் என்று எண்ணினீர்கள். அதனால் ஏமாற்றமடைந்தீர்கள்.

Fussılet 41:23

உங்கள் இறைவனைக் குறித்து நீங்கள் கொண்ட அத்தீய எண்ணம்தான் உங்களை அழித்துவிட்டது. இதன் காரணமாக நீங்கள் இவ்வுலகையும் மறுவுலகையும் இழந்து நஷ்டமடைந்தவர்களாகிவிட்டீர்கள்.

Fussılet 41:24

யாருக்கு எதிராக அவர்களின் செவிகளும் பார்வைகளும் தோல்களும் சாட்சி கூறியதோ அவர்கள் பொறுமையாக இருந்தாலும் நரகமே அவர்களின் தங்குமிடமாகும், ஒதுங்குமிடமுமாகும். தண்டனையை அகற்றி அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ள வேண்டும் என நாடினாலும் அவனது திருப்தியை அவர்கள் பெறவோ சுவனத்தில் நுழையவோமாட்டார்கள்.

Fussılet 41:25

இந்த நிராகரிப்பாளர்களின் மீது எப்போதும் அவர்களுடனேயே இருக்க ஷைத்தானியத் தோழர்களை தயார்படுத்தியுள்ளோம். உலகில் அவர்களின் தீய செயல்களையும் அவர்களுக்குப் பின்னாலுள்ள மறுமையின் விடயத்தையும் இவர்களுக்கு அலங்கரித்துக் காட்டுகிறார்கள். மறுமை நாளை நினைவுபடுத்தாமலும் அதற்காக அமல்கள் செய்யாமலும் அவர்களை மறக்கடிக்கச் செய்வார்கள். முன்சென்ற மனித, ஜின்களின் மீது உறுதியான அதே வேதனை இவர்களின் மீதும் உறுதியாகிவிட்டது. நிச்சயமாக அவர்கள் நரகில் நுழைந்து மறுமை நாளில் தங்களையும் தங்களின் குடும்பத்தினரையும் இழந்து நஷ்டமடைந்தவர்களாகிவிடுவார்கள்.

Fussılet 41:26

ஆதாரத்தை ஆதாரத்தால் எதிர்கொள்ள முடியாமல் போனபோது நிராகரிப்பாளர்கள் தங்களிடையே உபதேசித்தவர்களாகக் கூறினார்கள்: “முஹம்மது உங்களுக்குப் படித்துக் காட்டும் இந்த குர்ஆனை செவியேற்காதீர்கள். அதிலுள்ளவற்றிற்குக் கட்டுப்படாதீர். நீங்கள் மிகைக்கும்பொருட்டு, அவர் அதனை ஓதும்போது கூச்சலிடுங்கள். அதனால் அதனை ஓதுவதையும் அதன் பக்கம் அழைப்பதையும் அவர் விட்டுவிடுவார். நாம் அவரிலிருந்து விடுதலை பெறலாம்.

Fussılet 41:27

அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதர்களை பொய்ப்பிப்பவர்களை நாம் மறுமை நாளில் கடுமையான வேதனையை அனுபவிக்கச் செய்வோம். அவர்கள் செய்துகொண்டிருந்த நிராகரிப்பான, பாவமான காரியங்களுக்குத் தண்டனையாக மிக மோசமாக கூலியை நிச்சயம் நாம் வழங்கிடுவோம்.

Fussılet 41:28

மேற்கூறப்பட்டதுதான் அல்லாஹ்வை நிராகரித்த, தூதர்களை பொய்ப்பித்த அவனுடைய எதிரிகளுக்கு வழங்கப்படும் கூலியாகும். அது நரகமாகும். அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்ததற்கும் தெளிவான பலமான அவனது அத்தாட்சிகளை நம்பிக்கைகொள்ளாததற்கும் கூலியாக அதில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள்.

Fussılet 41:29

அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதரை பொய்ப்பித்தவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! மனிதர்கள் மற்றும் ஜின்களில் எங்களை வழிகெடுத்தவர்களை எங்களுக்குக் காட்டுவாயாக. (இப்லீஸ்: இவன்தான் நிராகரிப்பை முதன்முதலில் தொடங்கி அதற்கு அழைப்பு விடுத்தவன். ஆதமின் மகன்: இவன்தான் கொலை செய்வதை முதலில் ஆரம்பித்தவன்) நரகவாசிகளில் கடும் வேதனையை அனுபவித்து தாழ்ந்தவர்களாகும் பொருட்டு அவர்கள் இருவரையும் எங்கள் பாதங்களுக்குக் கீழே வைத்து நசுக்கி விடுகின்றோம்.”

Fussılet 41:30

நிச்சயமாக எங்கள் இறைவன் அல்லாஹ்தான். அவனைத் தவிர எங்களுக்கு வேறு இறைவன் இல்லை என்று கூறி அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி உறுதியாக இருந்தவர்களின் மீது அவர்கள் மரணிக்கும்வேளையில் வானவர்கள் இறங்கி அவர்களிடம் கூறுகிறார்கள்: “மரணத்தைக் கண்டோ அதற்குப்பின் நிகழப்போவதை எண்ணியோ அஞ்சாதீர்கள். உலகில் நீங்கள் விட்டுவிட்டு வந்ததற்காக கவலைப்படாதீர்கள். அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்ததற்காக உலகில் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுக்கொண்டிருந்த சுவனத்தைக் கொண்டு நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள்.

Fussılet 41:31

நாங்கள் உலக வாழ்க்கையில் உங்களின் உதவியாளர்கள். உங்களுக்கு நேரான வழியைக் காட்டி உங்களைப் பாதுகாத்துக்கொண்டிருந்தோம். மறுமையிலும் நாங்களே உங்களின் உதவியாளர்கள். உங்களுக்கு எங்களின் உதவி தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும். சுவனத்தில் உங்களின் மனம் விரும்பும் இன்பங்கள் அனைத்தும் கிடைக்கும். அங்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் அத்தனையும் கிடைக்கும்.

Fussılet 41:32

அது தன் பக்கம் திரும்பக்கூடிய அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடிய, அவர்களோடு மிகுந்த கருணையுடைய இறைவனிடமிருந்து உங்களுக்காக தயார்படுத்தப்பட்ட விருந்தாகும்.

Fussılet 41:33

அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பதன் பக்கமும் அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படுவதன் பக்கமும் அழைத்து, அவன் விரும்பக்கூடிய நற்செயல்களில் ஈடுபட்டு “நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்களில் உள்ளவனாவேன்” என்று கூறுபவரைவிட அழகிய சொல் உடையவர் வேறுயாரும் இல்லை. அவை அனைத்தையும் செய்பவர்தான் மக்களில் சிறந்த வார்த்தையை பேசுபவர்.

Fussılet 41:34

அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் நன்மையான செயல்களும் அவனைக் கோபத்திற்குள்ளாக்கும் தீமையான செயல்களும் சமமாகாது. மக்களில் உமக்கு தீங்கிழைத்தவர்களை சிறந்த பண்பால் எதிர்கொள்வீராக. அப்போது முன்னர் உம்முடன் கடுமையான பகைமை கொண்டிருந்தவர்கூட -தீயதை நன்மையால் எதிர்கொள்ளும்- உம்முடைய இந்த செயலால் திட்டமாக நெருங்கிய நண்பரைப்போலாகி விடுவார்.

Fussılet 41:35

மக்களால் தாம் சந்திக்கும் துன்பங்களையும் தொல்லைகளையும் பொறுமையுடன் சகித்துக்கொள்பவர்கள்தாம் சிறப்பிற்குரிய இந்த பண்பினைப் பெற பாக்கியம் பெறுவார்கள். பெரும் பாக்கியம் வழங்கப்பட்டவர்கள்தாம் பெரும் நன்மைகளை, பூரணமான பயன்களை உள்ளடக்கியுள்ள இந்த பண்பினைப் பெற பாக்கியம் பெறுவார்கள்.

Fussılet 41:36

ஷைத்தான் உமக்கு தீங்கினைக்கொண்டு ஊசலாட்டத்தை எப்போது ஏற்படுத்தினாலும் அல்லாஹ்வைப் பற்றிக்கொள்வீராக, அவனிடம் தஞ்சமடைந்து விடுவீராக. நிச்சயமாக நீர் கூறுவதை அவன் செவியேற்கக்கூடியவன்; உமது நிலையைக் குறித்து நன்கறிந்தவன்.

Fussılet 41:37

இரவும் பகலும் அவை ஒன்றன்பின் ஒன்றாக வருவதும் சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் வல்லமையையும் அவன் ஒருவனே என்பதையும் அறிவிக்கும் சான்றுகளில் உள்ளவையாகும். -மனிதர்களே!- சூரியனுக்கோ, சந்திரனுக்கோ சிரம்பணியாதீர்கள். நீங்கள் உண்மையாகவே அவனை வணங்கக்கூடியவர்களாக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கு மட்டுமே சிரம்பணியுங்கள்.

Fussılet 41:38

அவர்கள் கர்வம் கொண்டு அவனை புறக்கணித்து படைப்பாளனான அல்லாஹ்வுக்கு சிரம்பணியவில்லையெனில் அல்லாஹ்விடம் இருக்கும் வானவர்கள் இரவிலும் பகலிலும் வணங்குவதை விட்டும் சோர்வடையாமல் அல்லாஹ்வைத் துதிசெய்துகொண்டும் புகழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.

Fussılet 41:39

அவனுடைய கண்ணியத்தையும் வல்லமையையும் அவன் ஒருவனே என்பதையும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதையும் அறிவிக்கும் சான்றுகளில் ஒன்று, தாவரங்களற்ற பூமியை நீர் காணுவதாகும். நாம் அதன்மீது மழை நீரை இறக்கியவுடன் மறைந்திருந்த விதைகள் வெளிப்பட்டு செழித்து உயர்ந்து வளர்கிறது. நிச்சயமாக இந்த இறந்த பூமியை தாவரங்களைக் கொண்டு உயிர்ப்பித்தவன் இறந்தவர்களை விசாரணைக்காகவும், கூலி வழங்கவும் உயிர்ப்பிக்கக்கூடியவன். நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன். வறண்ட பூமியை உயிர்பெறச் செய்வதும் அடக்கஸ்த்தளத்திலிருந்து இறந்தவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதும் அவனுக்கு இயலாத ஒன்றல்ல.

Fussılet 41:40

நிச்சயமாக அல்லாஹ்வின் வசனங்களில் தவறிழைப்பவர்கள் அவற்றை நிராகரிப்பவர்கள், பொய்ப்பிப்பவர்கள் அவற்றிற்கு தவறான பொருள் கற்பிக்கின்றவர்கள் நம்மைவிட்டும் மறைவாக இல்லை. நாம் அவர்களை நன்கறிவோம். நரகத்தில் வீசி எறியப்படுபவர் சிறந்தவரா? அல்லது வேதனையிலிருந்து பாதுகாவல் பெற்றவராக மறுமை நாளில் வருபவர் சிறந்தவரா? -மக்களே!- நீங்கள் விரும்பியபடி நன்மையையோ, தீமையையோ செய்யுங்கள். ஏனெனில் நாம் உங்களுக்கு நன்மையையும் தீமையையும் தெளிவுபடுத்தி விட்டோம். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் அவற்றில் எதனைச் செய்கிறீர்கள் என்பதைப் பார்க்கக்கூடியவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

Fussılet 41:41

நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து தங்களிடம் வந்த குர்ஆனை நிராகரிப்பவர்கள் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்கள்.

Fussılet 41:42

அதனை யாராலும் திரிக்கவோ மாற்றவோ முடியாது. கூட்டியோ குறைத்தோ திரித்தோ மாற்றியோ எவ்விதமான அசத்தியமும் அதன் முன்னாலிருந்தோ பின்னாலிருந்தோ வர முடியாது. அது படைப்பிலும் நிர்ணயத்திலும் சட்டமியற்றுவதிலும் ஞானம்மிக்க, எல்லா நிலைகளிலும் புகழுக்குரியவனிடமிருந்து இறக்கப்பட்டதாகும்.

Fussılet 41:43

வேதத்தை மறுப்பவர்களின் நிலையைக் குறிப்பிட்ட பிறகு, தனது தூதர் முஹம்மதுக்கு முன்னால் வந்துசென்ற அவரது சகோதரர்களான முந்தைய தூதர்கள் எதிர்கொண்ட நிராகரிப்பு, பரிகாசம், அவதூறு ஆகிவற்றை எடுத்துக்கூறி அவருக்கு ஆறுதல் அளிக்கிறான். அவன் கூறுகிறான்: -தூதரே!- உமக்கு முன்னர் தூதர்களுக்கு கூறப்பட்டது போன்ற நிராகரிப்பே உமக்கும் கூறப்படுகிறது. ஆகவே நீர் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக. நிச்சயமாக உம் இறைவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் பாவமன்னிப்புக் கோராமல் பாவங்களில் நிலைத்திருப்பவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை அளிப்பவனாகவும் இருக்கின்றான்.

Fussılet 41:44

நாம் இந்த குர்ஆனை அரபி அல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால் அவர்களில் நிராகரிப்பாளர்கள், “நாங்கள் புரிந்துகொள்வதற்காக இதன் வசனங்கள் தெளிவாக்கப்பட்டிருக்க வேண்டாமா? என்றும் கொண்டுவந்தவர் அரபியாக இருக்கும் நிலையில் வேதமோ வேறு மொழியில் இருக்கலாமா?! என்றும் கூறியிருப்பார்கள். -தூதரே!- இவர்களிடம் நீர் கூறுவீராக: “இந்த அல்குர்ஆன் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதர்களைப் உண்மைப்படுத்துவோருக்கு வழிகேட்டை விட்டும் நேர்வழிகாட்டக்கூடியதாகவும் உள்ளங்களிலுள்ள அறியாமை, அதனை தொடர்ந்து வரும் நோய்களுக்கு நிவாரணியாகவும் இருக்கின்றது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளாதவர்களின் செவிகளில் அடைப்பு உள்ளது. அவர்(கண்)களில் குருட்டுத்தனமும் உள்ளது. அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். இந்த பண்புகளால் வர்ணிக்கப்படுபவர்கள் தூரமான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்களைப் போன்றவர்கள். எனவே எவ்வாறு அவர்களால் அழைப்பவரின் சத்தத்தை செவியுற முடியும்?

Fussılet 41:45

நாம் மூஸாவிற்கு தவ்ராத்தை வழங்கினோம். அதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அவர்களில் சிலர் அதன்மீது நம்பிக்கைகொண்டார்கள். சிலர் அதனை நிராகரித்தார்கள். ‘மறுமை நாளில் அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டுள்ளவற்றில் அல்லாஹ் தீர்ப்பளிப்பான்’ என்ற வாக்குறுதி இருக்காவிட்டால் அவன் தவ்ராத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்களிடையே தீர்ப்பளித்திருப்பான். சத்திய வாதிகளையும் அசத்தியவாதிகளையும் தெளிவுபடுத்தி சத்தியவாதிகளைக் கண்ணியப்படுத்தி அசத்தியவாதிகளை இழிவுபடுத்தியிருப்பான். நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் குர்ஆனைக் குறித்து சந்தேகத்தில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்.

Fussılet 41:46

யார் நற்செயல் புரிவாரோ அதனால் ஏற்படும் நன்மை அவரையே சாரும். எவருடைய நற்செயலினாலும் அல்லாஹ்வுக்கு எந்தப் பயனும் இல்லை. யார் தீயசெயல் புரிவாரோ அதனால் ஏற்படும் தீங்கு அவரையே சாரும். அவனுடைய படைப்பினங்களில் எவருடைய தீயசெயலினாலும் அல்லாஹ்வுக்கு எந்த இழப்பும் ஏற்படப்போவதில்லை. அவன் ஒவ்வொருவருக்கும் தகுந்த கூலியை வழங்கிடுவான். -தூதரே!- உம் இறைவன் தன் அடியார்களின் மீது அநீதி இழைப்பவன் அல்ல. ஒரு போதும் அவர்களின் நன்மைகளை குறைத்துவிடவோ, தீமைகளை அதிகரித்துவிடவோ மாட்டான்.

Fussılet 41:47

மறுமை குறித்த அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது. அது எப்போது நிகழும் என்பதை அவன் மட்டுமே அறிவான். அவனைத் தவிர யாரும் அதனை அறியமாட்டார்கள். அவனுக்குத் தெரியாமல் எந்தக் கனியும் தன்னைப் பாதுகாக்கும் பாளையிலிருந்து வெளிப்படுவதுமில்லை; எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை. பிரசவிப்பதுமில்லை. இவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அல்லாஹ்வுடன் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த இணைவைப்பாளர்களை அவன் அழைக்கும் நாளில் அவர்கள் வணங்கியதன்பால் அவர்களைப் பழிக்கும் விதமாக அவர்களிடம், “எனக்கு இணையானவர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணினீர்களே அவர்கள் எங்கே?” என்று கேட்பான். அதற்கு இணைவைப்பாளர்கள் கூறுவார்கள்: “உனக்கு இணை உண்டு என்று சாட்சி கூறக்கூடியவர் இப்போது எங்களில் யாரும் இல்லை என உனக்கு முன்னால் நாங்கள் ஒத்துக் கொள்கிறோம்.”

Fussılet 41:48

அவர்கள் அழைத்துக்கொண்டிருந்த சிலைகள் அனைத்தும் அவர்களைவிட்டு மறைந்துவிடும். அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எங்கும் தப்பிச் செல்ல முடியாது என்பதை நிச்சயமாக அவர்கள் உறுதியாக அறிந்துகொள்வார்கள்.

Fussılet 41:49

மனிதன் ஆரோக்கியம், செல்வம், பிள்ளை போன்ற அருட்கொடைகளை வேண்டுவதில் சோர்வடைவதில்லை. ஆனால் வறுமை, நோய் போன்ற துன்பங்கள் அவனுக்கு ஏற்பட்டுவிட்டால் அவன் அல்லாஹ்வின் அருளை விட்டும் மிகவும் நிராசையடைபவனாக உள்ளான்.

Fussılet 41:50

அவனுக்கு ஏற்பட்ட துன்பம் மற்றும் நோயின் பின்னர் நாம் அவனுக்கு எமது புறத்திலிருந்து ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் சுவைக்கச் செய்தால், “இது எனக்குரியது. நிச்சயமாக நான் இதற்குத் தகுதியானவன்தான். மறுமை நாள் ஏற்படும் என்று நான் எண்ணவில்லை. ஒரு வேளை மறுமை ஏற்பட்டாலும் அல்லாஹ்விடம் எனக்கு செல்வம், சொத்து கிடைக்கும். நான் தகுதியானவன் என்பதால் அவன் எனக்கு உலகில் வழங்கியது போன்றே மறுமையிலும் அருட்கொடைகளை வழங்குவான்” என்று திட்டமாக கூறுகிறான். நிச்சயமாக நிராகரிப்பாளனுக்கு அவன் செய்த நிராகரிப்பான, பாவமான செயல்களைக்குறித்து அறிவித்திடுவோம். அவர்களைக் கடும் வேதனையை அனுபவிக்கச் செய்வோம்.

Fussılet 41:51

நாம் மனிதனுக்கு ஆரோக்கியம், செல்வம் போன்ற அருட்கொடைகளை வழங்கினால் அவன் அல்லாஹ்வை நினைவுகூராமல், அவனுக்குக் கட்டுப்படாமல் அலட்சியமாக இருக்கின்றான். கர்வத்தினால் புறக்கணித்து விலகிச் செல்கிறான். வறுமையோ, நோயோ வேறு ஏதேனும் துன்பமோ அவனைப் பீடித்துவிட்டால் அவன் அல்லாஹ்விடம் அதிகமாக பிரார்த்தனை செய்பவனாகி விடுகிறான். தன்னைப் பீடித்த துன்பத்தை போக்குமாறு அவனிடம் முறையிடுகிறான். அருட்கொடைகள் வழங்கும்போது அவன் தன் இறைவனுக்கு நன்றிசெலுத்துவதுமில்லை. அவனை சோதித்தால் அந்த சோதனையில் பொறுமையைக் கடைப்பிடிப்பதுமில்லை.

Fussılet 41:52

தூதரே!- பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கேட்பீராக: “இந்த குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்திருந்தும் நீங்கள் அதனை நிராகரித்து பொய்ப்பித்தீர்களானால் உங்களின் நிலைமை என்னவாகும் என்பதைக் குறித்து எனக்கு அறிவியுங்கள். சத்தியம் தெளிவாகவும் பலமான ஆதாரமிக்கதாகவும் உள்ள நிலையில் அதனை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதத்தில் இருப்பவனை விட வழிகேடன் யார் இருக்கிறான்?!

Fussılet 41:53

அவர்களுக்கு குர்ஆன்தான் சத்தியமானது என்பது சந்தேகமில்லாமல் தெளிவாகும்பொருட்டு முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வெற்றியை வழங்கும் பூமியின் பல்வேறு பகுதிகளிலும், மக்கா வெற்றியின் மூலம் அவர்களிலும் நம் சான்றுகளை குறைஷிக் காபிர்களுக்கு காட்டுவோம். நிச்சயமாக குர்ஆன் தன்னிடமிருந்து இறங்கியது என்று அல்லாஹ் கூறிய சாட்சி இந்த இணைவைப்பாளர்களுக்குப் போதுமானதில்லையா? அல்லாஹ்வின் சாட்சியத்தை விட யாருடைய சாட்சியம் பெரியது? அவர்கள் சத்தியத்தை விரும்பியிருந்தால் தங்கள் இறைவனின் சாட்சியை போதுமாக்கிக் கொண்டிருப்பார்கள்.

Fussılet 41:54

அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக இணைவைப்பாளர்கள் மீண்டும் எழுப்பப்படுவதை நிராகரிப்பதனால் மறுமையில் தம் இறைவனைச் சந்திப்பதில் சந்தேகத்திலே உள்ளனர். எனவே அவர்கள் மறுமையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதனால் நற்காரியம் செய்து அதற்காகத் தயாராகமாட்டார்கள். அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் அனைத்து விடயங்களையும் தன் அறிவாலும் ஆற்றலாலும் சூழ்ந்துள்ளான்.