Lafzullah

Tamil Mokhtasar — Tûr 52:1 – Tahrim 66:12

Author / source: Tamil Mokhtasar

Contents
  1. Tûr 52:1
  2. Tûr 52:2
  3. Tûr 52:3
  4. Tûr 52:4
  5. Tûr 52:5
  6. Tûr 52:6
  7. Tûr 52:7
  8. Tûr 52:8
  9. Tûr 52:9
  10. Tûr 52:10
  11. Tûr 52:11
  12. Tûr 52:12
  13. Tûr 52:13
  14. Tûr 52:14
  15. Tûr 52:15
  16. Tûr 52:16
  17. Tûr 52:17
  18. Tûr 52:18
  19. Tûr 52:19
  20. Tûr 52:20
  21. Tûr 52:21
  22. Tûr 52:22
  23. Tûr 52:23
  24. Tûr 52:24
  25. Tûr 52:25
  26. Tûr 52:26
  27. Tûr 52:27
  28. Tûr 52:28
  29. Tûr 52:29
  30. Tûr 52:30
  31. Tûr 52:31
  32. Tûr 52:32
  33. Tûr 52:33
  34. Tûr 52:34
  35. Tûr 52:35
  36. Tûr 52:36
  37. Tûr 52:37
  38. Tûr 52:38
  39. Tûr 52:39
  40. Tûr 52:40
  41. Tûr 52:41
  42. Tûr 52:42
  43. Tûr 52:43
  44. Tûr 52:44
  45. Tûr 52:45
  46. Tûr 52:46
  47. Tûr 52:47
  48. Tûr 52:48
  49. Tûr 52:49
  50. Necm 53:1
  51. Necm 53:2
  52. Necm 53:3
  53. Necm 53:4
  54. Necm 53:5
  55. Necm 53:6
  56. Necm 53:7
  57. Necm 53:8
  58. Necm 53:9
  59. Necm 53:10
  60. Necm 53:11
  61. Necm 53:12
  62. Necm 53:13
  63. Necm 53:14
  64. Necm 53:15
  65. Necm 53:16
  66. Necm 53:17
  67. Necm 53:18
  68. Necm 53:19
  69. Necm 53:20
  70. Necm 53:21
  71. Necm 53:22
  72. Necm 53:23
  73. Necm 53:24
  74. Necm 53:25
  75. Necm 53:26
  76. Necm 53:27
  77. Necm 53:28
  78. Necm 53:29
  79. Necm 53:30
  80. Necm 53:31
  81. Necm 53:32
  82. Necm 53:33
  83. Necm 53:34
  84. Necm 53:35
  85. Necm 53:36
  86. Necm 53:37
  87. Necm 53:38
  88. Necm 53:39
  89. Necm 53:40
  90. Necm 53:41
  91. Necm 53:42
  92. Necm 53:43
  93. Necm 53:44
  94. Necm 53:45
  95. Necm 53:46
  96. Necm 53:47
  97. Necm 53:48
  98. Necm 53:49
  99. Necm 53:50
  100. Necm 53:51
  101. Necm 53:52
  102. Necm 53:53
  103. Necm 53:54
  104. Necm 53:55
  105. Necm 53:56
  106. Necm 53:57
  107. Necm 53:58
  108. Necm 53:59
  109. Necm 53:60
  110. Necm 53:61
  111. Necm 53:62
  112. Kamer 54:1
  113. Kamer 54:2
  114. Kamer 54:3
  115. Kamer 54:4
  116. Kamer 54:5
  117. Kamer 54:6
  118. Kamer 54:7
  119. Kamer 54:8
  120. Kamer 54:9
  121. Kamer 54:10
  122. Kamer 54:11
  123. Kamer 54:12
  124. Kamer 54:13
  125. Kamer 54:14
  126. Kamer 54:15
  127. Kamer 54:16
  128. Kamer 54:17
  129. Kamer 54:18
  130. Kamer 54:19
  131. Kamer 54:20
  132. Kamer 54:21
  133. Kamer 54:22
  134. Kamer 54:23
  135. Kamer 54:24
  136. Kamer 54:25
  137. Kamer 54:26
  138. Kamer 54:27
  139. Kamer 54:28
  140. Kamer 54:29
  141. Kamer 54:30
  142. Kamer 54:31
  143. Kamer 54:32
  144. Kamer 54:33
  145. Kamer 54:34
  146. Kamer 54:35
  147. Kamer 54:36
  148. Kamer 54:37
  149. Kamer 54:38
  150. Kamer 54:39
  151. Kamer 54:40
  152. Kamer 54:41
  153. Kamer 54:42
  154. Kamer 54:43
  155. Kamer 54:44
  156. Kamer 54:45
  157. Kamer 54:46
  158. Kamer 54:47
  159. Kamer 54:48
  160. Kamer 54:49
  161. Kamer 54:50
  162. Kamer 54:51
  163. Kamer 54:52
  164. Kamer 54:53
  165. Kamer 54:54
  166. Kamer 54:55
  167. Rahman 55:1
  168. Rahman 55:2
  169. Rahman 55:3
  170. Rahman 55:4
  171. Rahman 55:5
  172. Rahman 55:6
  173. Rahman 55:7
  174. Rahman 55:8
  175. Rahman 55:9
  176. Rahman 55:10
  177. Rahman 55:11
  178. Rahman 55:12
  179. Rahman 55:13
  180. Rahman 55:14
  181. Rahman 55:15
  182. Rahman 55:16
  183. Rahman 55:17
  184. Rahman 55:18
  185. Rahman 55:19
  186. Rahman 55:20
  187. Rahman 55:21
  188. Rahman 55:22
  189. Rahman 55:23
  190. Rahman 55:24
  191. Rahman 55:25
  192. Rahman 55:26
  193. Rahman 55:27
  194. Rahman 55:28
  195. Rahman 55:29
  196. Rahman 55:30
  197. Rahman 55:31
  198. Rahman 55:32
  199. Rahman 55:33
  200. Rahman 55:34
  201. Rahman 55:35
  202. Rahman 55:36
  203. Rahman 55:37
  204. Rahman 55:38
  205. Rahman 55:39
  206. Rahman 55:40
  207. Rahman 55:41
  208. Rahman 55:42
  209. Rahman 55:43
  210. Rahman 55:44
  211. Rahman 55:45
  212. Rahman 55:46
  213. Rahman 55:47
  214. Rahman 55:48
  215. Rahman 55:49
  216. Rahman 55:50
  217. Rahman 55:51
  218. Rahman 55:52
  219. Rahman 55:53
  220. Rahman 55:54
  221. Rahman 55:55
  222. Rahman 55:56
  223. Rahman 55:57
  224. Rahman 55:58
  225. Rahman 55:59
  226. Rahman 55:60
  227. Rahman 55:61
  228. Rahman 55:62
  229. Rahman 55:63
  230. Rahman 55:64
  231. Rahman 55:65
  232. Rahman 55:66
  233. Rahman 55:67
  234. Rahman 55:68
  235. Rahman 55:69
  236. Rahman 55:70
  237. Rahman 55:71
  238. Rahman 55:72
  239. Rahman 55:73
  240. Rahman 55:74
  241. Rahman 55:75
  242. Rahman 55:76
  243. Rahman 55:77
  244. Rahman 55:78
  245. Vakıa 56:1
  246. Vakıa 56:2
  247. Vakıa 56:3
  248. Vakıa 56:4
  249. Vakıa 56:5
  250. Vakıa 56:6
  251. Vakıa 56:7
  252. Vakıa 56:8
  253. Vakıa 56:9
  254. Vakıa 56:10
  255. Vakıa 56:11
  256. Vakıa 56:12
  257. Vakıa 56:13
  258. Vakıa 56:14
  259. Vakıa 56:15
  260. Vakıa 56:16
  261. Vakıa 56:17
  262. Vakıa 56:18
  263. Vakıa 56:19
  264. Vakıa 56:20
  265. Vakıa 56:21
  266. Vakıa 56:22
  267. Vakıa 56:23
  268. Vakıa 56:24
  269. Vakıa 56:25
  270. Vakıa 56:26
  271. Vakıa 56:27
  272. Vakıa 56:28
  273. Vakıa 56:29
  274. Vakıa 56:30
  275. Vakıa 56:31
  276. Vakıa 56:32
  277. Vakıa 56:33
  278. Vakıa 56:34
  279. Vakıa 56:35
  280. Vakıa 56:36
  281. Vakıa 56:37
  282. Vakıa 56:38
  283. Vakıa 56:39
  284. Vakıa 56:40
  285. Vakıa 56:41
  286. Vakıa 56:42
  287. Vakıa 56:43
  288. Vakıa 56:44
  289. Vakıa 56:45
  290. Vakıa 56:46
  291. Vakıa 56:47
  292. Vakıa 56:48
  293. Vakıa 56:49
  294. Vakıa 56:50
  295. Vakıa 56:51
  296. Vakıa 56:52
  297. Vakıa 56:53
  298. Vakıa 56:54
  299. Vakıa 56:55
  300. Vakıa 56:56
  301. Vakıa 56:57
  302. Vakıa 56:58
  303. Vakıa 56:59
  304. Vakıa 56:60
  305. Vakıa 56:61
  306. Vakıa 56:62
  307. Vakıa 56:63
  308. Vakıa 56:64
  309. Vakıa 56:65
  310. Vakıa 56:66
  311. Vakıa 56:67
  312. Vakıa 56:68
  313. Vakıa 56:69
  314. Vakıa 56:70
  315. Vakıa 56:71
  316. Vakıa 56:72
  317. Vakıa 56:73
  318. Vakıa 56:74
  319. Vakıa 56:75
  320. Vakıa 56:76
  321. Vakıa 56:77
  322. Vakıa 56:78
  323. Vakıa 56:79
  324. Vakıa 56:80
  325. Vakıa 56:81
  326. Vakıa 56:82
  327. Vakıa 56:83
  328. Vakıa 56:84
  329. Vakıa 56:85
  330. Vakıa 56:86
  331. Vakıa 56:87
  332. Vakıa 56:88
  333. Vakıa 56:89
  334. Vakıa 56:90
  335. Vakıa 56:91
  336. Vakıa 56:92
  337. Vakıa 56:93
  338. Vakıa 56:94
  339. Vakıa 56:95
  340. Vakıa 56:96
  341. Hadid 57:1
  342. Hadid 57:2
  343. Hadid 57:3
  344. Hadid 57:4
  345. Hadid 57:5
  346. Hadid 57:6
  347. Hadid 57:7
  348. Hadid 57:8
  349. Hadid 57:9
  350. Hadid 57:10
  351. Hadid 57:11
  352. Hadid 57:12
  353. Hadid 57:13
  354. Hadid 57:14
  355. Hadid 57:15
  356. Hadid 57:16
  357. Hadid 57:17
  358. Hadid 57:18
  359. Hadid 57:19
  360. Hadid 57:20
  361. Hadid 57:21
  362. Hadid 57:22
  363. Hadid 57:23
  364. Hadid 57:24
  365. Hadid 57:25
  366. Hadid 57:26
  367. Hadid 57:27
  368. Hadid 57:28
  369. Hadid 57:29
  370. Mücadele 58:1
  371. Mücadele 58:2
  372. Mücadele 58:3
  373. Mücadele 58:4
  374. Mücadele 58:5
  375. Mücadele 58:6
  376. Mücadele 58:7
  377. Mücadele 58:8
  378. Mücadele 58:9
  379. Mücadele 58:10
  380. Mücadele 58:11
  381. Mücadele 58:12
  382. Mücadele 58:13
  383. Mücadele 58:14
  384. Mücadele 58:15
  385. Mücadele 58:16
  386. Mücadele 58:17
  387. Mücadele 58:18
  388. Mücadele 58:19
  389. Mücadele 58:20
  390. Mücadele 58:21
  391. Mücadele 58:22
  392. Haşr 59:1
  393. Haşr 59:2
  394. Haşr 59:3
  395. Haşr 59:4
  396. Haşr 59:5
  397. Haşr 59:6
  398. Haşr 59:7
  399. Haşr 59:8
  400. Haşr 59:9
  401. Haşr 59:10
  402. Haşr 59:11
  403. Haşr 59:12
  404. Haşr 59:13
  405. Haşr 59:14
  406. Haşr 59:15
  407. Haşr 59:16
  408. Haşr 59:17
  409. Haşr 59:18
  410. Haşr 59:19
  411. Haşr 59:20
  412. Haşr 59:21
  413. Haşr 59:22
  414. Haşr 59:23
  415. Haşr 59:24
  416. Mümtehıne 60:1
  417. Mümtehıne 60:2
  418. Mümtehıne 60:3
  419. Mümtehıne 60:4
  420. Mümtehıne 60:5
  421. Mümtehıne 60:6
  422. Mümtehıne 60:7
  423. Mümtehıne 60:8
  424. Mümtehıne 60:9
  425. Mümtehıne 60:10
  426. Mümtehıne 60:11
  427. Mümtehıne 60:12
  428. Mümtehıne 60:13
  429. Sâff 61:1
  430. Sâff 61:2
  431. Sâff 61:3
  432. Sâff 61:4
  433. Sâff 61:5
  434. Sâff 61:6
  435. Sâff 61:7
  436. Sâff 61:8
  437. Sâff 61:9
  438. Sâff 61:10
  439. Sâff 61:11
  440. Sâff 61:12
  441. Sâff 61:13
  442. Sâff 61:14
  443. Cumua 62:1
  444. Cumua 62:2
  445. Cumua 62:3
  446. Cumua 62:4
  447. Cumua 62:5
  448. Cumua 62:6
  449. Cumua 62:7
  450. Cumua 62:8
  451. Cumua 62:9
  452. Cumua 62:10
  453. Cumua 62:11
  454. Münafikun 63:1
  455. Münafikun 63:2
  456. Münafikun 63:3
  457. Münafikun 63:4
  458. Münafikun 63:5
  459. Münafikun 63:6
  460. Münafikun 63:7
  461. Münafikun 63:8
  462. Münafikun 63:9
  463. Münafikun 63:10
  464. Münafikun 63:11
  465. Teğabün 64:1
  466. Teğabün 64:2
  467. Teğabün 64:3
  468. Teğabün 64:4
  469. Teğabün 64:5
  470. Teğabün 64:6
  471. Teğabün 64:7
  472. Teğabün 64:8
  473. Teğabün 64:9
  474. Teğabün 64:10
  475. Teğabün 64:11
  476. Teğabün 64:12
  477. Teğabün 64:13
  478. Teğabün 64:14
  479. Teğabün 64:15
  480. Teğabün 64:16
  481. Teğabün 64:17
  482. Teğabün 64:18
  483. Talak 65:1
  484. Talak 65:2
  485. Talak 65:3
  486. Talak 65:4
  487. Talak 65:5
  488. Talak 65:6
  489. Talak 65:7
  490. Talak 65:8
  491. Talak 65:9
  492. Talak 65:10
  493. Talak 65:11
  494. Talak 65:12
  495. Tahrim 66:1
  496. Tahrim 66:2
  497. Tahrim 66:3
  498. Tahrim 66:4
  499. Tahrim 66:5
  500. Tahrim 66:6
  501. Tahrim 66:7
  502. Tahrim 66:8
  503. Tahrim 66:9
  504. Tahrim 66:10
  505. Tahrim 66:11
  506. Tahrim 66:12

Tûr 52:1

அல்லாஹ் எந்த மலை மீதிருந்து மூஸாவுடன் பேசினானோ அந்த மலையைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்.

Tûr 52:2

எழுதப்பட்ட புத்தகமான குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.

Tûr 52:3

(முன்னர்) இறக்கப்பட்ட வேதங்களைப் போன்று விரிக்கப்பட்ட காகிதத்தில்

Tûr 52:4

வானத்தில் வானவர்கள் அல்லாஹ்வை வணங்குவதன்மூலம் செழிப்பாக்கும் ஆலயத்தைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.

Tûr 52:5

பூமிக்கு முகடாக இருக்கின்ற உயரமான வானத்தைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.

Tûr 52:6

நீரால் நிரம்பியுள்ள கடலைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.

Tûr 52:7

தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் அளிக்கும் வேதனை நிராகரிப்பாளர்களின்மீது சந்தேகம் இல்லாமல் நிகழ்ந்தே தீரும்.

Tûr 52:8

அதனை அவர்களை விட்டும் தடுக்கக்கூடியவரோ, அது அவர்கள் மீது இறங்காமல் தடுப்பவரோ யாரும் இல்லை.

Tûr 52:9

மறுமை நாளை அறிவிக்கும் விதமாக வானம் ஆட்டம் காணும் நாளில்

Tûr 52:10

மலைகள் அவற்றின் இடங்களிலிருந்து நகர்ந்து செல்லும்.

Tûr 52:11

அந்த நாளில் அல்லாஹ்பொய்ப்பிப்பாளர்களுக்கு வாக்களித்த வேதனையை மறுத்தவர்களுக்கு அழிவும் இழப்புமே உண்டாகும்.

Tûr 52:12

அவர்கள் வீணான விஷயங்களில் மூழ்கி விளையாடிக்கொண்டிருந்தார்கள். மறுமையைக் குறித்தோ மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதைக் குறித்தோ அவர்கள் பொருட்படுத்தவில்லை.

Tûr 52:13

அவர்கள் நரக நெருப்பில் பலமாகத் தள்ளப்படும் நாளில்

Tûr 52:14

அவர்களைப் பழிக்கும்விதமாக அவர்களிடம் கூறப்படும்: “இதுதான் உங்களின் தூதர்கள் உங்களுக்கு அச்சமூட்டிய நரகமாகும். இதைத்தான் நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்கள்.

Tûr 52:15

நீங்கள் காணும் இந்த வேதனையும் சூனியமா? அல்லது நீங்கள் அதனைப் பார்க்கவில்லையா?

Tûr 52:16

இந்த நெருப்பின் வெப்பத்தைச் சுவைத்து அனுபவியுங்கள். நீங்கள் அதன் வெப்பத்தை பொறுமையாக சகித்துக் கொள்ளுங்கள் அல்லது சகித்துக் கொள்ளாமலிருங்கள். பொறுமைகொள்வதும் பொறுமை கொள்ளாமல் இருப்பதும் இரண்டும் உங்களுக்கு ஒன்றுதான். இன்றைய தினம் நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த நிராகரிப்பு, பாவங்கள் ஆகியவற்றுக்குத்தான் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.

Tûr 52:17

நிச்சயமாக தங்கள் இறைவனின் -கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி- அவனை அஞ்சக்கூடியவர்கள் சுவனங்களிலும் என்றும் முடிவுறாத மகத்தான அருட்கொடையிலும் இருப்பார்கள்.

Tûr 52:18

அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய உணவுப் பொருள்கள், பானங்கள் மற்றும் மண உறவுகளின் இன்பங்களைக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களின் இறைவன் அவர்களை நரக வேதனையிலிருந்து பாதுகாப்பான். அவர்கள் தாங்கள் விரும்பிய இன்பங்களைப் பெற்று கலங்கம் ஏற்படுத்துபவற்றிலிருந்து பாதுகாவல் பெற்று வெற்றி பெறுவார்கள்.

Tûr 52:19

அவர்களிடம் கூறப்படும்: “உங்கள் மனம் விரும்புவதை மகிழ்ச்சியாக உண்ணுங்கள், பருகுங்கள், உண்ணுபவற்றினாலோ, பருகுபவற்றினாலோ தீங்கோ, பாதிப்போ ஏற்பட்டு விடும் என்று பயப்படாதீர்கள். இவைகள் நீங்கள் உலகில் செய்த நற்செயல்களுக்கான கூலியாகும்.

Tûr 52:20

அவர்கள் அலங்கரிக்கப்பட்ட, ஒன்றை ஒன்று முன்னோக்கியதாக இருக்கும் சாய்வு இருக்கைகளில் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். நாம் அவர்களை விசாலமான விழிகளையுடைய வெண்மையான பெண்களுக்கு மணமுடித்து வைப்போம்.

Tûr 52:21

நம்பிக்கையாளர்களையும் நம்பிக்கையில் அவர்களைப் பின்பற்றிய அவர்களின் சந்ததியினரையும் அவர்களின் சந்ததியினால் அவர்கள் கண்குளிர்ச்சியடையும் பொருட்டு நாம் ஒன்றுசேர்த்து வைப்போம். அந்த சந்ததியினர் தங்கள் செயல்களின் மூலம் முந்தையவர்களின் நிலையை அடையாவிட்டாலும் சரியே. நாம் அவர்களின் நற்செயல்களின் கூலியில் எதையும் குறைத்துவிட மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் செய்த தீய செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான். அவனைத்தவிர யாரும் அவனது செயல்களில் எந்த ஒன்றையும் சுமக்க முடியாது.

Tûr 52:22

இந்த சுவனவாசிகளுக்கு பல வகையான பழங்களையும் அவர்கள் விரும்பும் அனைத்துவிதமான மாமிசத்தையும் நாம் வழங்குவோம்.

Tûr 52:23

அங்கு அவர்களுக்கிடையே மதுக்கிண்ணங்கள் பரிமாறப்படும். அதனைக் குடிப்பதால் உலகில் ஏற்படுவதுபோன்று போதையின் காரணமாக வீணான பேச்சு, பாவமான காரியங்கள் எதுவும் நடைபெறாது.

Tûr 52:24

அவர்களுக்குப் பணிவிடைக்காக நியமிக்கப்பட்ட சிறுவர்கள் அவர்களைச் சுற்றி சுற்றி வருவார்கள். தோல் வெண்மையிலும் தெளிவிலும் அவர்கள் சிப்பியில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள முத்துகளைப் போன்றிருப்பார்கள்.

Tûr 52:25

சுவனவாசிகள் ஒருவரையொருவர் முன்னோக்குவார்கள். ஒருவர் மற்றவரிடம் உலகில் அவர்களின் நிலையைக் குறித்துக் கேட்பார்கள்.

Tûr 52:26

அவர்கள் பதிலளிப்பார்கள்: “நிச்சயமாக நாங்கள் உலகில் எங்கள் குடும்பத்தினரிடையே அல்லாஹ்வின் வேதனையை அஞ்சக்கூடியவர்களாக இருந்தோம்.

Tûr 52:27

அல்லாஹ் எங்கள்மீது அருள்புரிந்து எங்களுக்கு இஸ்லாம் என்னும் நேரான வழியைக் காட்டினான். வெப்பம் மிகுந்த வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றினான்.

Tûr 52:28

நிச்சயமாக நாங்கள் எங்களின் உலக வாழ்வில் அவனையே வணங்கிக் கொண்டிருந்தோம். நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றும்படி அவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம். நிச்சயமாக அவன் தன் அடியார்களுக்கு வழங்கிய வாக்குறுதியை சிறந்த முறையில் நிறைவேற்றுபவனாகவும் உண்மையாளனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். எம்மீது அவனது நலவு, கருணையினால்தான் அவன் எங்களுக்கு நம்பிக்கையின்பால் வழிகாட்டி எங்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தான். நரகத்தைவிட்டும் தூரமாக்கினான்.

Tûr 52:29

தூதரே!- குர்ஆனைக் கொண்டு நினைவூட்டுவீராக. அல்லாஹ் உம்மீது நம்பிக்கை மற்றும் அறிவு ஆகியவற்றை அருளியிருப்பதால் நீர் ஜின்னை வைத்து சோதிடம் பார்ப்பவராகவும் இல்லை. பைத்தியகாரராகவும் இல்லை.

Tûr 52:30

அல்லது இந்த பொய்ப்பிப்பாளர்கள் “நிச்சயமாக முஹம்மது தூதர் அல்ல. மாறாக அவர் ஒரு கவிஞர். மரணம் வந்து அவரை வாரிச் சென்றுவிடும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதனால் அவரிலிருந்து நாம் விடைபெற்றுவிடலாம்” என்று கூறுகிறார்களா?

Tûr 52:31

தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “என் மரணத்தை எதிர்பாருங்கள். என்னை நீங்கள் பொய்ப்பித்ததனால் நானும் உங்கள் மீது இறங்கப்போகும் வேதனையை எதிர்பார்க்கிறேன்.”

Tûr 52:32

மாறாக அவர்களின் அறிவு “நிச்சயமாக அவர் ஒரு ஜோதிடர், பைத்தியக்காரர் என்று கூறத் தூண்டுகிறதா?” அவர்கள் ஒரு மனிதனிடம் சேர்ந்து இருக்க முடியாத விஷயங்களை சேர்த்துக் கூறுகிறார்கள். மாறாக அவர்கள் வரம்புகளை மீறக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே மார்க்கத்தின் பக்கமோ, பகுத்தறிவின் பக்கமோ அவர்கள் திரும்ப மாட்டார்கள்.

Tûr 52:33

அல்லது நிச்சயமாக முஹம்மது இந்தக் குர்ஆனை சுயமாகப் புனைந்துள்ளார். அவருக்கு வஹி அறிவிக்கப்படவில்லை என்று கூறுகிறார்களா? அவர் அதனை சுயமாகப் புனைந்து கூறவில்லை. மாறாக அவர்கள் நம்பிக்கைகொள்ளாமல் கர்வம்கொள்ளும் மக்களாக இருக்கிறார்கள். அதனால் அவர் அதனை சுயமாகப் புனைந்துள்ளார் என்று கூறுகிறார்கள்.

Tûr 52:34

நிச்சயமாக அவர் அதனை சுயமாகப் புனைந்துள்ளார் என்ற கூற்றில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்கள் அதுபோன்ற செய்தியை புனைந்து கொண்டுவரட்டும்.

Tûr 52:35

அல்லது அவர்கள் அவர்களை படைக்கும் படைப்பாளனின்றி படைக்கப்பட்டார்களா? அல்லது தங்களைத் தாங்களே அவர்கள் படைத்துக் கொண்டார்களா? படைப்பாளனின்றி எந்தப் படைப்பும் உருவாகிவிட முடியாது. யாரும் தம்மை தாமாகப் படைத்துவிட முடியாது. பிறகு ஏன் அவர்கள் தங்களைப் படைத்தவனை வணங்குவதில்லை?

Tûr 52:36

அல்லது அவர்கள் வானங்களையும் பூமியையும் படைத்தார்களா? மாறாக அல்லாஹ்தான் அவர்களைப் படைத்தான் என்பதை அவர்கள் உறுதியாக நம்பாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அவனை உறுதியாக நம்பியிருந்தால் அவன் ஒருவனையே ஏற்றுக் கொண்டிருப்பார்கள். அவனுடைய தூதரின்மீது நம்பிக்கைகொண்டிருப்பார்கள்.

Tûr 52:37

அல்லது அவர்களிடத்தில் உம் இறைவனின் வாழ்வாதார அருட்களஞ்சியங்கள் இருக்கின்றனவா? அவற்றை அவர்கள் தாம் நாடியவர்களுக்கு வழங்குகிறார்களா? மேலும் நபித்துவத்தையும் தாம் நாடியவர்களுக்கு வழங்கி தாம் நாடியவர்களுக்குத் தடுப்பதற்கு அவர்களிடமா நாட்டம் உள்ளது? அல்லது அவர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப செயற்படும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்களா?

Tûr 52:38

அல்லது அவர்களிடத்தில் ஏணி இருந்து அதன்மூலம் அவர்கள் வானத்தில் ஏறி அல்லாஹ் அறிவிக்கும் வஹியைச் செவியுற்று நிச்சயமாக தாங்கள் சத்தியத்தில் இருக்கின்றோம் என்பதை அறிந்துகொண்டார்களா? அவர்களில் அவ்வாறு வஹியைச் செவியுற்றவர் நிச்சயமாக தாங்கள் சத்தியத்தில் இருப்பதாக வாதிடுவதற்குத் தெளிவான ஆதாரத்தைக் கொண்டுவரட்டும்.

Tûr 52:39

அல்லது அவனுக்கு நீங்கள் வெறுக்கும் பெண் பிள்ளைகளா? உங்களுக்கு நீங்கள் விரும்பும் ஆண் பிள்ளைகளா?

Tûr 52:40

தூதரே!- உம் இறைவனிடமிருந்து நீர் எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக அவர்களிடம் கூலி கேட்கின்றீரா? அதன் காரணமாக அவர்கள் சுமக்க முடியாத அளவுக்கு பொறுப்பு சாட்டப்பட்டு விட்டார்களா?

Tûr 52:41

அல்லது அவர்களிடத்தில் மறைவான ஞானம் இருந்து அவர்கள் அறியும் மறைவான விடயங்களை மக்களுக்காக எழுதிக் கொண்டிருக்கிறார்களா? அதிலிருந்து தாங்கள் நாடியதை அவர்களுக்கு அறிவிக்கிறார்களா?

Tûr 52:42

அல்லது இந்த பொய்ப்பிப்பாளர்கள் உமக்கு எதிராகவும் உம் மார்க்கத்திற்கு எதிராகவும் சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா? அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொள்வீராக. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்கள்தாம் சூழ்ச்சியால் பாதிக்கப்படுவார்கள். நீர் அல்ல.

Tûr 52:43

அல்லது அவர்களுக்கு அல்லாஹ்வைத்தவிர உண்மையான வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இருக்கின்றானா? அவர்கள் இணைத்துக்கூறும் இணைகளிலிருந்து அவன் தூய்மையானவன். மேற்குறிப்பிட்டவை அனைத்தும் நிகழவும் இல்லை. நிகழப்போவதும் சாத்தியமில்லை.

Tûr 52:44

அவர்கள் வானத்திலிருந்து ஒரு துண்டு கீழே விழுவதைப் பார்த்தாலும் அதைக்குறித்து “வழக்கத்தைப்போன்று ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த மேகங்கள்தான்” என்று கூறுவார்கள். அதனைக் கொண்டு படிப்பினை பெறுவதுமில்லை, நம்பிக்கைகொள்வதுமில்லை.

Tûr 52:45

தூதரே!- அவர்கள் வேதனை செய்யப்படும் நாளான மறுமையைச் சந்திக்கும்வரை அவர்களின் பிடிவாதத்திலும் நிராகரிப்பிலும் அவர்களை விட்டுவிடுவீராக.

Tûr 52:46

அந்நாளில் அவர்களின் சூழ்ச்சி சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ அவர்களுக்குப் பயனளிக்காது. அவர்கள் வேதனையிலிருந்து காப்பாற்றப்பட்டு உதவிசெய்யப்பட மாட்டார்கள்.

Tûr 52:47

நிச்சயமாக இணைவைத்தல் மற்றும் பாவங்கள் மூலம் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு மறுமையின் வேதனைக்கு முன்னால் இவ்வுலகில் கொலையும் கைதும் கப்ரில் மண்ணறை வேதனையும் உள்ளது. ஆனாலும் அவர்களில் பெரும்பாலானோர் இதனை அறிய மாட்டார்கள். அதனால்தான் தமது நிராகரிப்பில் நிலைத்திருக்கிறார்கள்.

Tûr 52:48

தூதரே!- உம் இறைவனின் தீர்ப்பிற்காக, அவனுடைய மார்க்க சட்டத்திற்காக பொறுமையாக இருப்பீராக. நிச்சயமாக நீர் நம்முடைய கண்காணிப்பிலும் பாதுகாப்பிலும் இருக்கின்றீர். தூக்கத்திலிருந்து எழும் போது உம் இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக.

Tûr 52:49

இரவிலும் உம் இறைவனைப் புகழ்வீராக. அவனுக்காகத் தொழுவீராக. பகலின் பிரகாசத்தால் நட்சத்திரங்கள் மறையும் சமயத்தில் அதிகாலைத் தொழுகையைத் தொழுவீராக.

Necm 53:1

உதிர்ந்து விழும் நட்சத்திரத்தைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.

Necm 53:2

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நேரான பாதையைவிட்டும் தவறவுமில்லை; அவர் வழிகெட்டவராகவும் இல்லை. ஆனால் அவர் நேர்வழி பெற்றவராக இருக்கின்றார்.

Necm 53:3

தம் மன இச்சைக்கேற்ப அவர் இந்தக் குர்ஆனைக் கூறுவதில்லை.

Necm 53:4

இந்தக் குர்ஆன் ஜிப்ரீல் மூலமாக அல்லாஹ் அறிவித்த வஹியேயாகும்.

Necm 53:5

கடும் வல்லமையுடைய வானவர் ஜிப்ரீல்தான் அவருக்கு இதனைக் கற்றுக் கொடுத்தார்.

Necm 53:6

ஜிப்ரீல் அழகிய தோற்றமுடையவர். அவர் தூதருக்கு முன்னால் அல்லாஹ் அவரைப் படைத்த இயல்பான தோற்றத்தில் தோன்றினார்.

Necm 53:7

ஜிப்ரீல் உயர்ந்த அடிவானத்தில் இருக்கும்போது

Necm 53:8

பின்னர் ஜிப்ரீல் நபியை நெருங்கினார். பின்னர் அவரிடம் மிகவும் அதிகமாக நெருங்கினார்.

Necm 53:9

அவரின் நெருக்கம் இரு வில்லுகள் அல்லது அதைவிடவும் நெருக்கமான அளவாக இருந்தது.

Necm 53:10

ஜிப்ரீல் அல்லாஹ்வின் அடியார் முஹம்மதுக்கு வஹியாக அறிவிக்க வேண்டியதை அறிவித்தார்.

Necm 53:11

முஹம்மதின் உள்ளம் தன் பார்வை கண்டதைக்குறித்து பொய்யுரைக்கவில்லை.

Necm 53:12

இணைவைப்பாளர்களே!- அல்லாஹ் இராப்பயணம் அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அவருக்குக் காட்டியதைக் குறித்து நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்களா?

Necm 53:13

முஹம்மது ஜிப்ரீலை இரவில் அழைத்துச் சென்றபோது மற்றொரு முறை அவரை அவரது தோற்றத்தில் கண்டார்,

Necm 53:14

இறுதி எல்லையிலுள்ள இலந்தை மரத்திற்கு அருகே. அது ஏழாவது வானத்தில் இருக்கின்ற மிகப் பெரும் ஒரு மரமாகும்.

Necm 53:15

அந்த மரத்திற்கு அருகில்தான் ஜன்னத்துல் மஃவா எனும் சுவனம் இருக்கின்றது.

Necm 53:16

அல்லாஹ்வின் கட்டளையின்படி அந்த இலந்தை மரத்தை மகத்தான பொருளொன்று மூடிய போது அதன் யதார்த்தத்தை அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் அறிய மாட்டார்.

Necm 53:17

அவரது பார்வை வலப்புறமோ, இடப்புறமோ சாயவில்லை. அதற்கு விதிக்கப்பட்டதை மீறவுமில்லை.

Necm 53:18

முஹம்மது விண்ணுலகிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் தன் இறைவனின் வல்லமையை அறிவிக்கக்கூடிய மாபெரும் சான்றுகளைக் கண்டார். அவர் சுவனத்தையும் நரகத்தையும் அவற்றைத் தவிர உள்ளவற்றையும் கண்டார்.

Necm 53:19

இணைவைப்பாளர்களே!- அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்குகின்ற சிலைகளான லாத், உஸ்ஸா

Necm 53:20

மூன்றாவது மனாத் ஆகியவற்றைக் குறித்து எனக்கு அறிவியுங்கள், அவை உங்களுக்குப் பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்தி பெறுகின்றனவா?

Necm 53:21

இணைவைப்பாளர்களே!- உங்களுக்கு நீங்கள் விரும்பும் ஆண் பிள்ளைகள், அவனுக்கு நீங்கள் வெறுக்கும் பெண் பிள்ளைகளா?

Necm 53:22

உங்களின் மன இச்சைக்கேற்ப நீங்கள் செய்த இந்த பங்கீடு அநீதியான பங்கீடாயிற்றே!

Necm 53:23

இந்த சிலைகள் அர்த்தமற்ற வெறும் பெயர்களே அன்றி வேறில்லை. அவற்றிற்கு வணக்கத்திற்குத் தகுதியான எந்தப் பண்பும் இல்லை. அவை நீங்களும் உங்கள் முன்னோர்களும் வைத்துக் கொண்ட பெயர்களேயாகும். அல்லாஹ் அதற்கு எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லை. இணைவைப்பாளர்கள் யூகங்களையும் ஷைத்தான் அவர்களுக்கு அலங்கரித்துக்காட்டிய அவர்களின் மன இச்சைகளையுமே பின்பற்றுகிறார்கள். தூதரின் மூலம் அவர்களின் இறைவனிடமிருந்து நேர்வழி வந்துவிட்டது. ஆயினும் அவர்கள் அதைக் கொண்டு நேர்வழியடையவில்லை.

Necm 53:24

அல்லது மனிதனுக்கு அல்லாஹ்விடத்தில் சிலைகளின் பரிந்துரை முதலான தான் விரும்பியதெல்லாம் கிடைத்துவிடுமா?

Necm 53:25

இல்லை, அவனுக்கு அவன் விரும்பியதெல்லாம் இல்லை. மறுமையும் இம்மையும் அல்லாஹ்வுக்கே உரியது. அவையிரண்டிலிருந்தும் அவன் தான் நாடியவர்களுக்கு வழங்குகிறான், தான் நாடியவர்களுக்கு தடுத்துக் கொள்கிறான்.

Necm 53:26

வானங்களிலுள்ள எத்தனையோ வானவர்களின் பரிந்துரை எந்தப் பயனையும் அளிக்காது. அவர்கள் யாருக்கேனும் பரிந்துரை செய்ய விரும்பினால் அல்லாஹ்வின் அனுமதிக்குப் பிறகே அதுவும் அவர்களில் அவன் நாடியவர்களுக்கே பரிந்துரை செய்ய முடியும். பரிந்துரை செய்பவரையும் பொருந்திக்கொள்ள வேண்டும். அல்லாஹ் தனக்கு இணைகளாக ஏற்படுத்தப்பட்டவர்களுக்கு பரிந்துரை செய்ய அனுமதிக்க மாட்டான். அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்ற பரிந்துரைசெய்யப்படும் எவரையும் பொருந்திக்கொள்ள மாட்டான்.

Necm 53:27

நிச்சயமாக மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நம்பாதவர்கள் வானவர்களை அல்லாஹ்வின் மகள்கள் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு பெண் பெயர் சூட்டுகிறார்கள். அவர்கள் கூறும் வார்த்தையைவிட்டும் அல்லாஹ் மிக உயர்ந்தவன்.

Necm 53:28

அவர்கள் இவ்வாறு வானவர்களுக்கு பெண் பெயர் சூட்டியதற்கு அவர்களிடம் ஆதாரமாக அமையத்தக்க எந்த அறிவும் இல்லை. அவர்கள் இந்த விஷயத்தில் யூகத்தையும் இட்டுக்கட்டுதலையும் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக யூகம் சத்தியத்தின் இடத்தை அடைவதற்கு முன்னால் எந்தப் பயனையும் அளிக்காது.

Necm 53:29

தூதரே!- அல்லாஹ்வை நினைவுகூராமலும் அதுகுறித்து அக்கறை கொள்ளாமலும் இருப்பவனைப் புறக்கணித்து விடுவீராக. அவன் உலக வாழ்க்கையைத் தவிர வேறு எதையும் விரும்புவதுமில்லை, மறுமைக்காகச் செயல்படுவதுமில்லை. ஏனெனில் நிச்சயமாக அவன் அதனை நம்பவில்லை.

Necm 53:30

இந்த இணைவைப்பாளர்கள் வானவர்களுக்குப் பெண் பெயர் கூறுவதுதான் அவர்களின் அறிவின் மட்டமாகும். ஏனெனில் அவர்கள் அறிவிலிகள். நம்பிக்கையில் உறுதியை அடையவில்லை. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் சத்தியப் பாதையைவிட்டும் தவறியவர்களையும் அவனுடைய பாதையில்பால் நேர்வழி பெறுபவர்களையும் நன்கறிவான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

Necm 53:31

வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் உரிமையால், படைப்பால், நிர்ணயத்தால் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. இது அவன் உலகில் தீய செயல்கள் புரிந்தவர்களுக்கு உரிய தண்டனையை அளிப்பதற்காவும் நற்செயல்கள் புரிந்த நம்பிக்கையாளர்களுக்கு சுவனத்தை கூலியாக அளிப்பதற்காகவும்தான்.

Necm 53:32

அவர்கள் சிறு பாவங்களைத்தவிர பெரும் பாவங்களைவிட்டும் மானக்கேடான பாவங்களைவிட்டும் விலகியிருக்கிறார்கள். பெரும் பாவங்களைவிட்டுத் தவிர்ந்து நற்செயல்களில் அதிகமாக ஈடுபட்டால் சிறு பாவங்கள் மன்னிக்கப்படும், -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன். அடியார்கள் பாவமன்னிப்புக் கோரும்போது அவர்களின் பாவங்களை மன்னிக்கிறான். அவன் உங்களின் தந்தை ஆதமை மண்ணிலிருந்து படைத்தபோதே, உங்கள் அன்னையரின் வயிற்றில் படிப்படியாக நீங்கள் படைக்கப்பட்டபோதே உங்களின் நிலைகளையும் விவகாரங்களையும் குறித்து நன்கறிவான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. எனவே உங்களை நீங்களே இறையச்சமுடையவர்கள் என்று புகழாதீர்கள். உங்களில் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களை அவன் நன்கறிந்தவன்.

Necm 53:33

இஸ்லாத்தின் அருகில் வந்த பின்னரும் அதனைப் புறக்கணித்தவனின் அவலட்சன நிலையை நீர் பார்த்தீரா?

Necm 53:34

அவன் குறைவாக அளித்து பின்னர் தடுத்துக் கொண்டான். ஏனெனில் நிச்சயமாக கஞ்சத்தனமே அவனது இயல்பாகும். இருந்தும் அவன் தன்னைத்தானே பரிசுத்தப்படுத்துகிறான்.

Necm 53:35

அவனிடம் மறைவான ஞானம் இருந்து அதை அவன் பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கின்றானா?

Necm 53:36

அல்லது அவன் அல்லாஹ்வின்மீது இட்டுக்கட்டுகிறானா? அல்லது அல்லாஹ்வின்மீது இவ்வாறு இட்டுக்கட்டும் இவனுக்கு அல்லாஹ் மூஸாவின்மீது இறக்கிய ஆரம்ப ஏடுகளில் அறிவிக்கப்படவில்லையா?

Necm 53:37

தம் இறைவன் தமக்கு இட்ட கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமின் வேதங்களிலும் (உள்ளவை அறிவிக்கப்படவில்லையா)?

Necm 53:38

நிச்சயமாக ஒரு மனிதன் மற்ற மனிதனின் பாவத்தை சுமக்க மாட்டான்.

Necm 53:39

மனிதனுக்கு அவன் செய்த செயல்களின் நன்மைகளே அன்றி வேறில்லை.

Necm 53:40

மறுமை நாளில் தான் செய்த செயல்களை வெளிப்படையாகக் காண்பான்.

Necm 53:41

பின்னர் அவனுடைய செயலுக்கேற்ப குறைவின்றி முழுமையாக கூலி வழங்கப்படுவான்.

Necm 53:42

தூதரே!- நிச்சயமாக அடியார்கள் மரணித்தபிறகு அவர்கள் உம் இறைவனின் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டும்.

Necm 53:43

நிச்சயமாக அவனே தான் நாடியவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான். அதனால் அவர்களை சிரிக்க வைக்கிறான். தான் நாடியவர்களை கவலையில் ஆழ்த்துகிறான். அதனால் அவர்களை அழ வைக்கிறான்.

Necm 53:44

நிச்சயமாக அவனே உலகில் உயிருள்ளவர்களை மரணிக்கச் செய்கிறான். மரணித்தவர்களை மறுமையில் மீண்டும் எழுப்பி உயிர்ப்பிக்கிறான்.

Necm 53:45

நிச்சயமாக அவன் ஆண், பெண் என்ற இரு இணைகளைப் படைத்துள்ளான்,

Necm 53:46

கர்ப்பப்பையில் செலுத்தப்படும் விந்துத் துளியிலிருந்து.

Necm 53:47

நிச்சயமாக அவனே அவர்கள் இறந்தபின்னர் அவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி மறுமுறை படைக்கிறான்.

Necm 53:48

அவனே தன் அடியார்களில் தான் நாடியவர்களை சொத்துக்களை வழங்கி செல்வந்தர்களாக்குகிறான். மக்கள் சேகரித்து சீமானாக ஆகின்ற அளவுக்கு சொத்தை வழங்குகிறான்.

Necm 53:49

அவன்தான் இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு வணங்கி வழிபட்டுக்கொண்டிருந்த (ஷிஃரா எனும்) நட்சத்திரத்தின் இறைவன்.

Necm 53:50

அவனே ஹுதின் சமூகத்தினரான ஆத் சமூகத்தை அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்தபோது அழித்தான்.

Necm 53:51

ஸாலிஹின் மக்களான ஸமூத் சமூகத்தை அழித்தான். அவர்களில் யாரையும் விட்டுவைக்கவில்லை.

Necm 53:52

ஆத், ஸமூத் ஆகியோருக்கு முன்னர் நூஹின் சமூகத்தை அழித்தான். நிச்சயமாக நூஹின் மக்கள் ஆத் மற்றும் ஸமூத் சமூகத்தைவிட கொடுங்கோலர்களாகவும் வரம்பு மீறக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். ஏனெனில் நூஹ் அவர்களிடையே இருந்து தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகளாக அவர்களை அல்லாஹ் ஒருவனின் பக்கம் அழைத்தார். ஆனால் அவர்கள் அவருக்குப் பதிலளிக்கவில்லை.

Necm 53:53

அவன் லூத்தின் சமூகத்தினர் வாழ்ந்த ஊர்களை வானத்தின்பால் உயர்த்திய பின்னர் அதனை கவிழ்த்து பின்னர் பூமியில் விழச் செய்தான்.

Necm 53:54

அவற்றை வானத்தில்பால் உயர்த்தி பூமியில் விழச் செய்தபிறகு அவற்றை மூட வேண்டிய கற்கள் மூடிக் கொண்டன.

Necm 53:55

மனிதனே! உன் இறைவனின் வல்லமையை அறிவிக்கக்கூடிய சான்றுகளில் எதனைக் கொண்டு படிப்பினை பெறாமல் தர்க்கம் செய்வாய்?

Necm 53:56

உங்களின்பால் அனுப்பப்பட்ட இந்த தூதர் முந்தைய தூதர்களின் இனத்திலுள்ளவர்தாம்.

Necm 53:57

நெருங்கி வரக்கூடிய மறுமை நாள் நெருங்கிவிட்டது.

Necm 53:58

அதனை தடுப்பவர் எவரும் இல்லை. அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அதனை அறிய முடியாது.

Necm 53:59

உங்களிடம் எடுத்துரைக்கப்படும் இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்று நீங்கள் ஆச்சரியமடைகின்றீர்களா?

Necm 53:60

அதன் அறிவுரைகளைக் கேட்கும் போது அழாமல் அதனைப் பரிகாசம் செய்தவாறு சிரிக்கிறீர்கள்.

Necm 53:61

நீங்கள் அதனைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருக்கின்றீர்கள்.

Necm 53:62

அல்லாஹ்வுக்கு மட்டும் நீங்கள் சிரம்பணியுங்கள். வணக்க வழிபாட்டை அவனுக்கு உரித்தாக்கிக் கொள்ளுங்கள்.

Kamer 54:1

மறுமையின் வருகை நெருங்கிவிட்டது. (நபியவர்களின் காலத்தில்) சந்திரன் பிளந்துவிட்டது. அது பிளக்கப்பட்டது நபியவர்களுக்கு வழங்கப்பட்ட பார்த்து உணரக்கூடிய அற்புதமாக இருந்தது.

Kamer 54:2

நபியவர்களின் வாய்மையை அறிவிக்கும் எந்த ஆதாரத்தை இணைவைப்பாளர்கள் கண்டாலும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கவே செய்கிறார்கள். நாங்கள் கண்ட ஆதாரங்களும் சான்றுகளும் பொய்யான சூனியமாகும் என்றும் கூறுகிறார்கள்.

Kamer 54:3

தங்களிடம் வந்துள்ள சத்தியத்தை அவர்கள் பொய்ப்பித்து விட்டார்கள். பொய்ப்பிப்பிலே தங்களின் மன இச்சைகளையே பின்பற்றினார்கள். அனைத்து விடயங்களும் அது நன்மையாக இருந்தாலும் அல்லது தீமையாக இருந்தாலும் மறுமை நாளில் அதற்கு உரியவர்களுக்கு கிடைத்தே தீரும்.

Kamer 54:4

நிராகரிப்பினாலும் அக்கிரமத்தினாலும் நாம் அழித்த சமூகங்களைக் குறித்த செய்திகள் அவர்களிடம் வந்தேயுள்ளன. அவர்களின் நிராகரிப்பு மற்றும் அநியாயம் ஆகியவற்றிலிருந்து அவர்களைத் தடுப்பதற்கு அவை போதுமானதாக இருந்தன.

Kamer 54:5

அவர்களுக்கு எதிரான ஆதாரம் நிலைபெற வேண்டுமென்பதற்காக பூரண ஞானம் நிறைந்தவைகளே அவர்களிடம் வந்தன. அதனால்தான் ஆயினும் அல்லாஹ்வின்மீதும் மறுமை நாளின்மீதும் நம்பிக்கைகொள்ளாத மக்களுக்கு எச்சரிக்கைகள் பயனளிக்கமாட்டாது.

Kamer 54:6

தூதரே!- அவர்கள் நேர்வழி பெறவில்லையென்றால் அவர்களை விட்டுவிடுவீராக. படைப்புகள் இதற்கு முன்னர் அறியாத கடுமையான விஷயத்தின்பால் சூர் ஊதுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள வானவர் அழைக்கும் நாளை எதிர்பார்த்தவாறு அவர்களைப் புறக்கணிப்பீராக.

Kamer 54:7

அப்போது அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். அவர்கள் அடக்கஸ்தலங்களிலிருந்து வெளிப்பட்டவர்களாக விசாரணை செய்யப்படும் இடத்தை நோக்கி பரவிக் கிடக்கும் வெட்டுக் கிளிகளைப்போன்று விரைந்து வருவார்கள்.

Kamer 54:8

அந்த இடத்தின்பால் அழைக்கும் அழைப்பாளரை நோக்கி விரைந்து வருவார்கள். அந்நாளில் உள்ள கடினம் மற்றும் பயங்கரங்களின் காரணமாக நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “இன்றைய நாள் கடினமான நாளாயிற்றே!”

Kamer 54:9

தூதரே!- உம் அழைப்பை பொய்ப்பிக்கும் இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினரும் பொய்ப்பித்தனர். நம்முடைய அடியார் நூஹை நாம் அவர்களிடம் அனுப்பியபோது அவர்கள் அவரை பொய்ப்பித்தார்கள். அவரைப் பைத்தியக்காரர் என்று கூறி பலவாறு ஏசி விரட்டி அவர்களுக்கு அழைப்புப் பிரச்சாரம் செய்வதை விட்டுவிடுமாறு அச்சுறுத்தலும் விடுத்தனர்.

Kamer 54:10

நூஹ் தம் இறைவனிடம் பின்வருமாறு கூறி பிரார்த்தித்தார்: ” நிச்சயமாக என் சமூகம் என்னை மிகைத்துவிட்டது. அவர்கள் என் அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை. எனவே அவர்கள்மீது தண்டனையை இறக்கி எனக்கு உதவி புரிவாயாக.

Kamer 54:11

நாம் இடைவிடாமல் கொட்டும் மழை நீரால் வானத்தின் கதவுகளைத் திறந்துவிட்டோம்.

Kamer 54:12

பூமியைப் பொங்கச் செய்தோம். அதிலிருந்து நீருற்றுகள் வெளிப்பட்டன. வானத்திலிருந்து பொழிந்த நீரும் பூமியிலிருந்து பொங்கிய நீரும் அல்லாஹ் முதலிலேயே விதித்த விஷயத்திற்காக ஒன்றுசேர்ந்து கொண்டது. அல்லாஹ் காப்பாற்றியவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மூழ்கடிக்கப்பட்டார்கள்.

Kamer 54:13

பலகைகளாலும் ஆணிகளாலும் செய்யப்பட்ட கப்பலில் நாம் நூஹை ஏற்றிச் சென்றோம். அவரையும் அவருடன் உள்ளவர்களையும் மூழ்காமல் காப்பாற்றினோம்.

Kamer 54:14

அந்தக் கப்பல் நம் கண்காணிப்பிலும் பாதுகாப்பிலும் அலைகள் மோதிக்கொள்ளக்கூடிய தண்ணீரில் சென்றது. நூஹை பொய்ப்பித்து அவர் அல்லாஹ்விடமிருந்து கொண்டுவந்ததை பொய்ப்பித்த மக்களைத் தண்டித்து நூஹுக்கு உதவி செய்தான்.

Kamer 54:15

நாம் அவர்களைத் தண்டித்த இந்த தண்டனையை படிப்பினைக்காகவும் அறிவுரை பெறும் பொருட்டும் விட்டு வைத்துள்ளோம். அதைக்கொண்டு படிப்பினை பெறக்கூடியவர் யாரேனும் இருக்கின்றாரா?

Kamer 54:16

பொய்ப்பிப்பாளர்களுக்கு நான் அளித்த தண்டனை எவ்வாறு இருந்தது? அவர்களை அழிப்பதற்கு நான் அளித்த எச்சரிக்கை எவ்வாறு இருந்தது?

Kamer 54:17

நாம் குர்ஆனை ஞாபகம் செய்வதற்கும் அறிவுரை பெறுவதற்கும் இலகுபடுத்தியுள்ளோம். அதிலுள்ள அறிவுரைகளையும் படிப்பினைகளையும் கொண்டு படிப்பினை பெறக்கூடியவர் யாரேனும் இருக்கின்றாரா?

Kamer 54:18

ஆத் சமூகத்தினர் தங்களின் நபி ஹூதை நிராகரித்தார்கள். -மக்காவாசிகளே!- நான் அவர்களுக்கு அளித்த தண்டனை எவ்வாறு இருந்தது? ஏனையவர்களை தண்டிப்பதற்கான எனது எச்சரிக்கை எவ்வாறு இருந்தது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

Kamer 54:19

நிச்சயமாக நாம் அவர்களின்மீது மோசமான அவர்கள் நரகில் நுழையும் வரைக்கும் அவர்களுடனிருக்கும் கெடுதி, துர்பாக்கியம் மிக்க நாளில் கடும் குளிர்காற்றை அனுப்பினோம்.

Kamer 54:20

அது வேரோடு பிடுங்கி எறியப்பட்ட பேரீச்ச மரங்களைப்போல மக்களை பூமியிலிருந்து தலைகுப்புற அடியோடு தூக்கி வீசியது.

Kamer 54:21

மக்காவாசிகளே!- நான் அவர்களுக்கு அளித்த தண்டனை எவ்வாறு இருந்தது? அவர்களைத் தண்டிப்பதன் மூலம் ஏனையோருக்கான எனது எச்சரிக்கை எவ்வாறு இருந்தது? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

Kamer 54:22

நாம் குர்ஆனை ஞாபகம் செய்வதற்கும் அறிவுரை பெறுவதற்கும் இலகுபடுத்தியுள்ளோம். அதிலுள்ள அறிவுரைகளையும் படிப்பினைகளையும் கொண்டு படிப்பினை பெறக்கூடியவர் யாரேனும் இருக்கின்றாரா?

Kamer 54:23

ஸமூத் சமூகத்தினர் தங்கள் தூதர் ஸாலிஹின் எச்சரிக்கையை பொய்ப்பித்தார்கள்.

Kamer 54:24

அவர்கள் மறுத்தவர்களாக கூறினார்கள்: “நம்மைப்போன்று ஒரு மனிதனை நாம் பின்பற்றுவதா? நாம் இந்த நிலையில் நிச்சயமாக அவரைப் பின்பற்றினால் சரியானதை விட்டும் தடம்புரண்டு தூரமாகவும் சிரமத்திலும் இருப்பவர்களாகி விடுவோம்

Kamer 54:25

நம் அல்லாத அனைவரையும் தவிர்த்து அவர்மீது மட்டும்தான் வஹி இறக்கப்படுகிறதா? இல்லை, மாறாக அவர் பொய்யராகவும் ஆணவம் கொண்டவராகவும் இருக்கின்றார்.

Kamer 54:26

மறுமை நாளில் யார் பொய்யர், ஆணவம் கொண்டவர் ஸாலிஹா அவர்களா? என்பதை அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.

Kamer 54:27

நிச்சயமாக நாம் அவர்களைச் சோதிக்கும்பொருட்டு பாறையிலிருந்து ஒரு பெண் ஒட்டகத்தை வெளிப்படுத்துவோம். -ஸாலிஹே!- அவர்கள் அதனுடன் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள்? அவர்களுக்கு என்ன நடக்கிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்பீராக. அவர்கள் அளிக்கும் தொல்லைகளை பொறுத்துக் கொள்வீராக.

Kamer 54:28

அவர்களுக்கு அறிவிப்பீராக, அவர்களின் கிணற்று நீர் அவர்களுக்கிடையிலும் அந்த பெண் ஒட்டகத்திற்கிடையிலும் பங்கிடப்பட்டுள்ளது. ஒரு நாள் அதற்கும் ஒரு நாள் அவர்களுக்கும் உரியது. ஒவ்வொருவரும் தங்களுக்குரிய நாளில் அவர் மாத்திரமே வரமுடியும்.

Kamer 54:29

தம்மில் ஒருவரை அந்த ஒட்டகத்தைக் கொலை செய்வதற்காக அழைத்தார்கள். அவனும் தன் சமூகத்தின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு வாளை எடுத்து அதனைக் கொன்றுவிட்டான்.

Kamer 54:30

மக்காவாசிகளே!- நான் அவர்களுக்கு அளித்த தண்டனை எவ்வாறு இருந்தது? அவர்களைத் தண்டிப்பதன் மூலம் ஏனையோருக்கான எனது எச்சரிக்கை எவ்வாறு இருந்தது? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

Kamer 54:31

நிச்சயமாக நாம் அவர்களின்மீது ஒரு பேரொலியை அனுப்பினோம். அது அவர்களை அழித்துவிட்டது. ஆட்டுமந்தைக்குத் தொழுவம் அமைப்பவர் பயன்படுத்தும் காய்ந்த மரக்குற்றிகளைப் போன்று ஆகிவிட்டனர்.

Kamer 54:32

நாம் குர்ஆனை ஞாபகம் செய்வதற்கும் அறிவுரை பெறுவதற்கும் இலகுபடுத்தியுள்ளோம். அதிலுள்ள அறிவுரைகளையும் படிப்பினைகளையும் கொண்டு படிப்பினை பெறக்கூடியவர் யாரேனும் இருக்கின்றாரா?

Kamer 54:33

லூத்தின் சமூகத்தினர் தங்களின் தூதர் எதைக் கொண்டு எச்சரிக்கை செய்தாரோ அதனை பொய்ப்பித்தனர்.

Kamer 54:34

நிச்சயமாக நாம் லூத்தின் குடும்பத்தாரை தவிர்ந்த ஏனையோரின் மீது கற்களை வீசும் காற்றை அனுப்பினோம். லூதின் குடும்பத்தை வேதனை பீடிக்கவில்லை. அதிலிருந்து நாம் அவர்களைக் காப்பாற்றினோம். அவர்கள் வேதனை இறங்குவதற்கு முன்னரே பின்னிரவில் வெளியேறி விட்டார்கள்.

Kamer 54:35

நாம் அவர்கள்மீது அருள்புரியும்பொருட்டு அவர்களை வேதனையிலிருந்து காப்பாற்றினோம். நாம் லூத்திற்கு அளித்த கூலியைப்போன்றே அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவர்களுக்கு கூலி அளிக்கின்றோம்.

Kamer 54:36

லூத் அவர்களை நம் வேதனையைக் கொண்டு எச்சரிக்கை செய்தார். அவர்கள் அவருடைய எச்சரிக்கையைக் குறித்து தர்க்கம் செய்து, அதனை பொய்ப்பித்தார்கள்.

Kamer 54:37

லூத்தின் சமூகத்தினர் வானவர்களான அவருடைய விருந்தாளிகளுடன் மானக்கேடான செயலில் ஈடுபடும் நோக்கில் அவர்களை விட்டும் தங்களைத் தடுக்கக்கூடாது என்று அவரை இணங்க வைக்க முயற்சித்தார்கள். நாம் அவர்கள் பார்க்க முடியாதவாறு அவர்களின் கண்களைக் குருடாக்கி விட்டோம். நாம் அவர்களிடம் கூறினோம்: “நான் உங்களுக்கு அளித்த எச்சரிக்கையின் விளைவாக என் வேதனையை அனுபவியுங்கள்.”

Kamer 54:38

மறுமை வந்து அதன் வேதனையை அவர்கள் அனுபவிக்கும் வரை அவர்களுடன் தொடர்ந்திருக்கும் வேதனை அதிகாலையில் அவர்களைத் தாக்கியது.

Kamer 54:39

அவர்களிடம் கூறப்பட்டது: “லூத் உங்களை எச்சரித்ததன் விளைவாக நான் உங்கள்மீது இறக்கிய என் வேதனையை அனுபவியுங்கள்.”

Kamer 54:40

நாம் குர்ஆனை ஞாபகம் செய்வதற்கும் அறிவுரை பெறுவதற்கும் இலகுபடுத்தியுள்ளோம். அதிலுள்ள அறிவுரைகளையும் படிப்பினைகளையும் கொண்டு படிப்பினை பெறக்கூடியவர் யாரேனும் இருக்கின்றாரா?

Kamer 54:41

ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்களிடத்தில் மூஸா மற்றும் ஹாரூனின் மூலம் நம் எச்சரிக்கை வந்தது.

Kamer 54:42

அவர்கள் நம்மிடமிருந்து வந்த ஆதாரங்களையும் சான்றுகளையும் பொய்ப்பித்தார்கள். அவர்கள் அவ்வாறு பொய்ப்பித்ததால் நாம் அவர்களை யாவற்றையும் மிகைத்த, வல்லமைமிக்கவனின் தண்டனையால் தண்டித்தோம். எதுவும் அவனுக்கு முடியாததல்ல.

Kamer 54:43

மக்காவாசிகளே!- உங்களிலுள்ள நிராகரிப்பாளர்கள் சிறந்தவர்களா? அல்லது நூஹின் சமூகம், ஆத், ஸமூத், லூதின் சமூகம் மற்றும் பிர்அவ்ன் அவனது சமூகம் ஆகிய மேற்கூறப்பட்ட சமூகங்களிலுள்ள நிராகரிப்பாளர்களா? அல்லது நீங்கள் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து பாதுகாப்புப் பெற்றவர்கள் என்று வானுலக வேதங்களில் உண்டா?

Kamer 54:44

அல்லது மக்காவாசிகளிலுள்ள இந்த நிராகரிப்பாளர்கள், “எங்களுக்குத் தீங்கழைக்க நாடுவோரையும் எங்களின் அணியில் பிளவு ஏற்படுத்த நாடுவோரையும் நாங்கள் வென்றே தீருவோம்” என்று கூறுகிறார்களா?

Kamer 54:45

இந்த நிராகரிப்பாளர்களின் கூட்டம் விரைவில் தோற்கடிக்கப்படும். அவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு முன்னால் புறங்காட்டி ஓடிவிடுவார்கள். இது பத்ருப்போர் அன்று நிகழ்ந்தது.

Kamer 54:46

மாறாக அவர்கள் பொய்ப்பிக்கும் மறுமை நாள் அவர்கள் வேதனை செய்யப்படும் என்று வாக்களிக்கப்பட்ட நாளாகும். மறுமை நாளின் வேதனை அவர்கள் உலகில் அனுபவித்த பத்ர் தின வேதனையைவிடக் கடுமையானதாகும்.

Kamer 54:47

நிச்சயமாக நிராகரித்தும் பாவங்கள் புரிந்தும் குற்றமிழைத்தவர்கள் சத்தியத்தை விட்டும் வழிகேட்டிலும் வேதனையிலும் சிரமத்திலுமே உள்ளனர்.

Kamer 54:48

அவர்கள் முகங்குப்புற நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படும் நாளில் அவர்களிடம் இழிவுபடுத்தும் விதமாக கூறப்படும்: “நீங்கள் நரக வேதனையை அனுபவியுங்கள்.”

Kamer 54:49

நிச்சயமாக நாம் உலகில் உள்ள அனைத்தையும் முன்னரே நாம் அமைத்த விதியின்படியும் நம் அறிவு மற்றும் நாட்டத்தின் படியும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் பதிவேட்டில் எழுதியுள்ளபடியும் படைத்துள்ளோம்.

Kamer 54:50

நாம் ஏதேனும் ஒன்றைப் படைக்க நாடினால் அதற்கு ‘ஆகு’ என்ற ஒரு வார்த்தையைத்தான் கூறுவோம். கண்சிமிட்டுவது போன்று விரைவாக நாம் விரும்பியது ஆகிவிடும்.

Kamer 54:51

நாம் உங்களைப்போன்று நிராகரித்த முந்தைய சமூகங்களை அழித்துள்ளோம். அதனைக் கொண்டு படிப்பினை பெற்று தனது நிராகரிப்பிலிருந்து தவிர்ந்துகொள்ளக்கூடியவர் யாரேனும் இருக்கின்றாரா?

Kamer 54:52

அடியார்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் கண்காணிக்கும் வானவர்களின் பதிவேடுகளில் பதிவு செய்யப்படாமல் இல்லை. அவர்களிடமிருந்து எதுவும் தப்ப முடியாது.

Kamer 54:53

சிறிய, பெரிய ஒவ்வொரு செயலும் வார்த்தையும் செயல்பதிவேடுகளிலும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டிலும் பதிவுசெய்யப்படுகிறது. அவற்றிற்கேற்ப அவர்களுக்கு கூலி வழங்கப்படும்.

Kamer 54:54

நிச்சயமாக தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் இன்பம் பெறக்கூடிய சுவனங்களிலும் ஓடக்கூடிய ஆறுகளிலும் இருப்பார்கள்.

Kamer 54:55

வீணான பேச்சோ, பாவமான காரியமோ அற்ற உண்மையான அவையில் வல்லமையுடைய அனைத்தையும் ஆளக்கூடிய அரசனுக்கு அருகில் இருப்பார்கள். அவனுக்கு எதுவும் முடியாததல்ல. அவர்கள் அங்கு பெறப்போகும் நிலையான அருட்கொடைகள் குறித்துக் கேட்காதீர்.

Rahman 55:1

விசாலமான அன்புடைய கருணையாளன்

Rahman 55:2

குர்ஆனை மனனம் செய்வதையும் அதன் கருத்துக்களைப் புரிவதையும் இலகுபடுத்தி அதனை அவன் மனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்தான்.

Rahman 55:3

மனிதனைச் செம்மையாகப் படைத்து அவனுடைய வடிவத்தை அழகாக்கினான்.

Rahman 55:4

தன் மனதிலுள்ளதை பேச்சிலும் எழுத்திலும் எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதையும் அவனுக்கு கற்பித்தான்.

Rahman 55:5

மனிதர்களுக்கு வருடங்களின் எண்ணிக்கையையும் கணக்கையும் அறிவிக்கும்பொருட்டு சூரியனையும் சந்திரனையும் நுணுக்கமான விதத்தில் இயங்குமாறு நிர்ணயித்துள்ளான்.

Rahman 55:6

செடிகொடிகளும் மரங்களும் அவனுக்குக் கட்டுப்பட்டு சிரம்பணிகின்றன.

Rahman 55:7

அவன் பூமிக்கு முகடாக அமையும்பொருட்டு வானத்தை உயர்த்தியுள்ளான். பூமியில் நீதியை நிலைநிறுத்தியுள்ளான். தன் அடியார்களுக்கு நீதியை நிலைநிறுத்துமாறு கட்டளையிட்டுள்ளான்.

Rahman 55:8

மக்களே!- நீங்கள் அநீதி இழைத்து, அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்யாமல் இருப்பதற்காகவே அவன் நீதியை நிலைநிறுத்தியுள்ளான்.

Rahman 55:9

உங்களிடையே நிறுக்கும்போது நியாயமாக அளங்கள். மற்றவர்களுக்காக அளக்கும்போதோ நிறுக்கும்போதோ அளவையை, நிறுவையை குறைத்துவிடாதீர்கள்.

Rahman 55:10

அவன் பூமியை படைப்புகள் உறுதியாக வசிப்பதற்கு ஏற்றதாக ஆக்கித் தந்துள்ளான்.

Rahman 55:11

அதில் கனி தரக்கூடிய மரங்களும் பேரீச்சம் பழங்களை தரக்கூடிய பாளைகளுடைய பேரீச்சை மரங்களும்

Rahman 55:12

அதில் கோதுமை பார்லி போன்ற தொலியுடைய தானியங்களும் மனம் வீசும் தாவரங்களும் இருக்கின்றன.

Rahman 55:13

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:14

சுடப்பட்ட மற்பாண்டத்தைப் போன்ற சப்தமுண்டாகும் காய்ந்த களி மண்ணிலிருந்து அவன் ஆதமைப் படைத்தான்.

Rahman 55:15

புகையற்ற தூய நெருப்பிலிருந்து ஜின்களின் தந்தையைப் படைத்தான்.

Rahman 55:16

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:17

அவன் கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் சூரியனின் இரு கிழக்குத் திசைகளுக்கும் மேற்குத் திசைகளுக்கும் இறைவனாவான்.

Rahman 55:18

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:19

அல்லாஹ் உப்பு நீருடைய மற்றும் சுவையான நீருடைய இரு கடல்களையும் உங்களுடைய பார்வையில் ஒன்றிணைத்துள்ளான்.

Rahman 55:20

அவையிரண்டிற்குமிடையே ஒரு திரை இருக்கின்றது. அது ஒன்று மற்றொன்றில் கலந்துவிடாமல் தடுக்கிறது. எனவேதான் சுவையானது சுவையானதாகவும் உவர்ப்பு உவர்ப்பாகவும் இருக்கிறது.

Rahman 55:21

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:22

அந்த இரு கடல்களிலிருந்து சிறிய, பெரிய முத்துகள் வெளிப்படுகிறது.

Rahman 55:23

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:24

கடல்களில் மலைகளைப்போன்று செல்லக்கூடிய கப்பல்களில் அவனே ஆதிக்கம் செலுத்துகிறான்.

Rahman 55:25

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:26

பூமியின் மீதுள்ள படைப்பினங்கள் அனைத்தும் சந்தேகம் இல்லாமல் அழியக்கூடியவையே.

Rahman 55:27

தூதரே!- கண்ணியமும் சிறப்பும்மிக்க தன் அடியார்களின் மீது அருள் புரிந்த உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். அது ஒருபோதும் அழியாது.

Rahman 55:28

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:29

வானங்களிலுள்ள வானவர்களும் பூமியிலுள்ள மனிதர்கள், ஜின்கள் அனைவரும் தங்களின் தேவைகளை அவனிடமே கேட்கிறார்கள். அவன் ஒவ்வொரு நாளும் தன் அடியார்களின் விவகாரங்களான உயிர்ப்பித்தல், மரணிக்கச்செய்தல், வாழ்வாதாரம் வழங்குதல், மற்றவிடயங்களில் இருக்கிறான்.

Rahman 55:30

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:31

மனிதர்கள் மற்றும் ஜின்களே!- நாம் உங்களை விசாரிப்பதற்காக தனித்திடுவோம். ஒவ்வொருவருக்கும் உரிய கூலியான வெகுமதி அல்லது தண்டனையை வழங்கிடுவோம்.

Rahman 55:32

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:33

அல்லாஹ் மறுமை நாளில் மனிதர்களையும் ஜின்களையும் ஒன்றுதிரட்டும்போது கூறுவான்: “மனித, ஜின் சமூகமே! வானங்கள் மற்றும் பூமியின் ஓரங்களிலிருந்து உங்களால் வெளியேற முடிந்தால் வெளியேருங்கள். ஆதாரமும் பலமும் இன்றி உங்களால் ஒருபோதும் வெளியேற முடியாது. நிச்சயமாக அது உங்களுக்கு எவ்வாறு முடியும்?

Rahman 55:34

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:35

மனித, ஜின் சமூகமே!- உங்கள்மீது புகையற்ற தீப்பிழம்புகளும் தீப்பிழம்புகளற்ற புகையும் அனுப்பப்படும். நீங்கள் அதிலிருந்து தப்ப முடியாது.

Rahman 55:36

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:37

வானவர்கள் இறங்குவதற்காக வானம் பிளந்துவிடும்போது அதனுடைய நிறத்தின் பிரகாசம் கொதிக்கவைக்கப்பட்ட எண்ணையை போன்று சிவப்பாகிவிடும்.

Rahman 55:38

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:39

அந்த மாபெரும் நாளில் மனிதர்களோ, ஜின்களோ அவர்களின் பாவங்கள் குறித்து விசாரிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் அவர்களின் செயல்களை அறிந்திருப்பான்.

Rahman 55:40

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:41

மறுமை நாளில் குற்றவாளிகள் அவர்களின் அடையாளங்களைக் கொண்டு அறியப்படுவார்கள். அவை கருமையான முகங்களும் நீலக்கண்களும் ஆகும். அவற்றின் நெற்றி முடிகள் பாதங்களோடு இணைக்கப்பட்டு அவர்கள் நரகத்தில் வீசி எறியப்படுவார்கள்.

Rahman 55:42

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:43

அவர்களிடம் கண்டிக்கும் விதத்தில் கூறப்படும்: இதோ குற்றவாளிகள் உலகில் பொய்ப்பித்துக் கொண்டிருந்த நரகம், அவர்களால் மறுக்க முடியாதளவு அவர்களின் கண் முன்னே உள்ளது.

Rahman 55:44

அந்த நரகத்திற்கும் கடுமையாக கொதிக்கும் நீருக்குமிடையே அவர்கள் தடுமாறித் திரிவார்கள்.

Rahman 55:45

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:46

மறுமையில் தம் இறைவனுக்கு முன்னால் நிற்பதை அஞ்சி நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவருக்கு இரு சுவனங்கள் இருக்கின்றன.

Rahman 55:47

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:48

அந்த இரு தோட்டங்களும் பசுமையான கனிதரக்கூடிய பெரும் கிளைகளைக் கொண்டவை.

Rahman 55:49

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:50

அந்த இரு தோட்டங்களிலும் ஓடக்கூடிய இரு நீருற்றுகள் இருக்கின்றன.

Rahman 55:51

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:52

அவையிரண்டிலும் ஒவ்வொரு கனிவர்க்கமும் இருவகையானவை.

Rahman 55:53

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:54

அவர்கள் கட்டில்களில் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். அவற்றின் உட்பாகங்கள் கடினமான பட்டிலானவையாக இருக்கும். அவ்விரு தோட்டங்களிலும் உள்ள பழங்கள் எழுந்திருப்பவர், அமர்ந்திருப்பவர், சாய்ந்திருப்பவர் ஆகிய அனைவரும் பறிப்பதற்கு ஏதுவாக அண்மையில் இருக்கும்.

Rahman 55:55

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:56

அவற்றில் தங்களுடைய கணவர்கள் மீது அடக்கமான பார்வைகளுடைய கன்னிப் பெண்கள் இருப்பார்கள். அவர்களை அவர்களின் கணவன்மார்களுக்கு முன்னர் எந்த மனிதனும் ஜின்னும் தீண்டியிருக்க மாட்டார்கள்.

Rahman 55:57

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:58

அவர்கள் அழகிலும் தூய்மையிலும் மாணிக்கத்தையும் பவளத்தையும் போன்றிருப்பார்கள்.

Rahman 55:59

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:60

தம் இறைவனுக்குக் கட்டுப்படுவதில் சிறந்து விளங்கியவருக்கு அல்லாஹ் சிறந்த கூலியை வழங்கிடுவான்.

Rahman 55:61

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:62

மேற்கூறப்பட்ட அந்த இரு தோட்டங்களைத்தவிர வேறு இரு தோட்டங்களும் உண்டு.

Rahman 55:63

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:64

திட்டமாக அவையிரண்டும் கரும்பச்சை நிறமாயிருக்கும்.

Rahman 55:65

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:66

இந்த இரு தோட்டங்களிலும் கடுமையாக பொங்கும் இரு நீருற்றுகள் இருக்கும். அவற்றிலிருந்து தண்ணீர் பொங்குவது என்றும் முடிவடையாது.

Rahman 55:67

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:68

அந்த இரு தோட்டங்களிலும் ஏராளமான பழங்களும் பெரும் பேரீச்சையும் மாதுளையும் இருக்கும்.

Rahman 55:69

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:70

இந்த தோட்டங்களில் நற்பண்புடைய முக அழகும் நிறைந்த பெண்கள் இருப்பார்கள்.

Rahman 55:71

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:72

பாதுகாப்புக்காக அவர்கள் கூடாரங்களில் மறைத்து வைக்கப்பட்ட கன்னியர்களாக இருப்பார்கள்.

Rahman 55:73

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:74

அந்தக் கன்னியர்களை அவர்களின் கணவன்மார்களுக்கு முன்னர் எந்த மனிதரும் ஜின்னும் நெருங்கியிருக்க மாட்டார்கள்.

Rahman 55:75

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:76

அவர்கள் பச்சைநிற உறையிடப்பட்ட தலையணைகளிலும் அழகிய விரிப்புகளிலும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

Rahman 55:77

மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?

Rahman 55:78

உம் இறைவனுடைய பெயரின் நன்மை அருள்வளம்மிக்கதாகிவிட்டது. அவன் கண்ணியமானவன், உபகாரம் புரிபவன், தனது அடியார்களின் மீது அருள் புரிபவன்.

Vakıa 56:1

மறுமை சந்தேகமின்றி நிகழ்ந்துவிடும்போது

Vakıa 56:2

உலகில் பொய்ப்பித்துக்கொண்டிருந்ததைப் போல எவரும் அதனை பொய்ப்பிப்தை காண முடியாது.

Vakıa 56:3

அது பாவம் செய்த நிராகரிப்பாளர்களை நரகத்தில் பிரவேசிக்கச் செய்து தாழ்த்தக்கூடியது, இறையச்சம்கொண்ட நம்பிக்கையாளர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து உயர்த்தக்கூடியது.

Vakıa 56:4

பூமி பலமாக அசைக்கப்படும்போது,

Vakıa 56:5

மலைகள் தூள்தூளாக்கப்படும்போது

Vakıa 56:6

தூளாக்கப்பட்டதனால் அது உறுதி இழந்து பறக்கும் புழுதியாகிவிடும்.

Vakıa 56:7

அந்த நாளில் நீங்கள் மூன்று பிரிவினராக ஆகிவிடுவீர்கள்.

Vakıa 56:8

தங்களின் பதிவேடுகளை வலக்கையால் வாங்கக்கூடிய வலப்புறத்தினர். அவர்களின் அந்தஸ்து எத்துணை உயர்ந்தது, கண்ணியமானது!

Vakıa 56:9

தங்களின் பதிவேடுகளை இடக்கையால் வாங்கக்கூடிய இடப்புறத்தினர். அவர்களின் நிலை எவ்வளவு மோசமானது!

Vakıa 56:10

உலகில் நன்மைகளைச் செய்து முந்தியவர்கள்தாம் மறுமையிலும் சுவனத்தில் நுழைவதில் முந்தியவர்களாக இருப்பார்கள்.

Vakıa 56:11

அவர்கள்தாம் அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தைப் பெற்றவர்கள்.

Vakıa 56:12

இன்பம் நிறைந்த சுவனங்களில் பலவகையான இன்பங்களை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்,

Vakıa 56:13

இந்த சமூகத்திலிருந்தும் இதற்கு முந்தைய சமூகங்களிலிருந்தும் ஒரு கூட்டத்தினர்.

Vakıa 56:14

இறுதிக் காலத்தில் குறைவான மக்களே முந்தியவர்களாகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்களாகவும் இருப்பார்கள்.

Vakıa 56:15

தங்க இழைகளால் நெய்யப்பட்ட கட்டில்களில்

Vakıa 56:16

சாய்ந்த வண்ணம் ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக அந்த கட்டில்களில் சாய்ந்திருப்பார்கள். அவர்களில் யாரும் மற்றவரின் பிடரியைப் பார்க்க மாட்டார்கள்.

Vakıa 56:17

அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்காக என்றும் நிலையான, இளமையாக இருக்கும் சிறுவர்கள் அவர்களைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

Vakıa 56:18

அவர்கள் கைப்பிடிகளற்ற கோப்பைகளையும் கைப்பிடியுள்ள குவளைகளையும் சுவனத்தில் நிலையாக ஓடக்கூடிய மதுவினால் நிரப்பப்பட்ட கிண்ணங்களையும் ஏந்தியவாறு சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

Vakıa 56:19

அது உலகில் காணப்படும் மதுவைப்போன்று இருக்காது. அதைக் குடிப்பவர் தலைவலிக்கோ, புத்தி பேதலிப்புக்கோ உள்ளாகமாட்டார்.

Vakıa 56:20

அந்தச் சிறுவர்கள் அவர்கள் விரும்பும் பழங்களையும் ஏந்திக் கொண்டு அவர்களிடம் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

Vakıa 56:21

அவர்கள் விரும்பும் பறவைகளின் இறைச்சியையும் ஏந்திக் கொண்டு அவர்களிடம் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

Vakıa 56:22

அவர்களுக்காக சுவனத்தில் அழகில் விரிந்த விழிகளையுடைய பெண்கள் இருப்பார்கள்.

Vakıa 56:23

அந்த பெண்கள் சிப்பிக்குள் வைக்கப்பட்டுள்ள முத்துகளைப்போன்று இருப்பார்கள்.

Vakıa 56:24

இது அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த நற்செயல்களுக்கான கூலியாகும்.

Vakıa 56:25

அவர்கள் சுவனத்தில் கெட்ட வார்த்தையையோ, பாவமானவற்றையோ செவியுறமாட்டார்கள்.

Vakıa 56:26

ஆயினும் வானவர்கள் அவர்களுக்கு சலாம் கூறுவதையும் அவர்கள் ஒருவருக்கொருவர் சலாம் கூறிக்கொள்வதையும் செவியுறுவார்கள்.

Vakıa 56:27

தமது வலது கையில் பட்டோலை வழங்கப்படும் வலப்புறத்தினர் அல்லாஹ்விடத்தில் எவ்வளவு பெரும் அந்தஸ்தும் மதிப்புமுடையவர்கள்

Vakıa 56:28

அவர்கள் முள்ளில்லாத தீங்கற்ற இலந்த மரங்களின் கீழும்,

Vakıa 56:29

ஒன்றோடொன்று இணைந்த அடர்த்தியான வாழை மரத்தின் கீழும்,

Vakıa 56:30

என்றும் முடிவடையாத தொடரான பரந்துவிரிந்த நிழலிலும்,

Vakıa 56:31

நிற்காமல் ஓடக்கூடிய நீரின் அருகிலும்,

Vakıa 56:32

மட்டிட முடியாத அளவு ஏராளமான பழங்கள் ஆகியவற்றில் இருப்பார்கள்.

Vakıa 56:33

அவை என்றும் அவர்களை விட்டும் முடிவடையாதவை. அவற்றுக்கு பருவம் என்று ஒன்று இல்லை. அவர்கள் அவற்றை விரும்பும் சமயத்தில் அவற்றுக்கு எத்தடையும் இருக்காது.

Vakıa 56:34

கட்டில்களில் விரிக்கப்பட்டுள்ள உயர்ந்த விரிப்புகள் ஆகியவற்றில் இருப்பார்கள்.

Vakıa 56:35

நிச்சயமாக நாம் மேற்குறிப்பிட்ட அழகிய பெண்களை புதிதாக படைத்துள்ளோம்.

Vakıa 56:36

நாம் அவர்களை கன்னிப் பெண்களாக ஆக்கியுள்ளோம். இதற்கு முன்னர் அவர்கள் எவராலும் தொடப்படாதவர்கள்.

Vakıa 56:37

அவர்கள் தங்களின் கணவர்களுக்குப் பிரியமானவர்களாக, சம வயதுடையவர்களாக இருப்பார்கள்.

Vakıa 56:38

நற்பாக்கியத்திற்கு அடையாளமாக வலப்பக்கம் கொண்டுசெல்லப்படும் வலப்புறத்தில் உள்ளவர்களுக்காக, நாம் அவர்களை படைத்துள்ளோம்.

Vakıa 56:39

அவர்கள் முந்தைய தூதர்களின் சமூகங்களிலுள்ள ஒரு பிரிவினராகவும் இருப்பார்கள்.

Vakıa 56:40

இறுதி சமூகமான முஹம்மதின் சமூகத்திலுள்ள ஒரு பிரிவினராகவும் இருப்பார்கள்.

Vakıa 56:41

தமது .இடது கையில் பட்டோலை வழங்கப்படும் இடப்புறத்தினர் எவ்வளவு மோசமான தீய நிலையையும் ஒதுங்குமிடத்தையும் உடையவர்கள்!

Vakıa 56:42

அவர்கள் கடும் சூடான காற்றிலும், நீரிலும்

Vakıa 56:43

கரும்புகையுடைய நிழலிலும் இருப்பார்கள்.

Vakıa 56:44

அது நல்ல காற்றும் அல்ல, நல்ல காட்சியும் அல்ல.

Vakıa 56:45

நிச்சயமாக அவர்கள் இவ்வாறு வேதனைக்குள்ளாவதற்கு முன்னர் உலகில் தமது மன இச்சைகளைத் தவிர வேறு எந்தக் கவலைகளுமின்றி இன்பம் அனுபவித்தவர்களாக இருந்தார்கள்.

Vakıa 56:46

அவர்கள் அல்லாஹ்வை நிராகரிப்பதில், அவனை விடுத்து சிலைகளை வணங்குவதில் பிடிவாதமாக நிலைத்திருந்தார்கள்.

Vakıa 56:47

அவர்கள் மீண்டும் எழுப்பப்படுவதை மறுத்து பரிகாசமாகவும் சாத்தியமற்றதாகக் கருதியும் பின்வருமாறு கூறிக் கொண்டிருந்தார்கள்: “நாங்கள் இறந்து மண்ணாகவும் உக்கிய எலும்புகளாகவும் ஆகிவிட்டாலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோமா?

Vakıa 56:48

எங்களுக்கு முன்னர் இறந்துவிட்ட எங்களின் முன்னோர்களுமா எழுப்பப்படுவார்கள்?”

Vakıa 56:49

தூதரே!- மீண்டும் எழுப்புவதை நிராகரிக்கும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “நிச்சயமாக மனிதர்களில் முந்தியவர்களும் பிந்தியவர்களும்

Vakıa 56:50

மறுமை நாளில் விசாரணை செய்யப்படுவதற்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் சந்தேகமின்றி ஒன்றுதிரட்டப்படுவார்கள்.”

Vakıa 56:51

மறுமையில் எழுப்புவதை மறுத்து நேரான பாதையை விட்டும் வழிதவறிய நீங்கள்தான் மறுமைநாளில் ஸக்கூம் என்ற மிகத் தீய மோசமான மரத்திலிருந்து உண்ணுவீர்கள்.

Vakıa 56:52

மறுமையில் எழுப்புவதை மறுத்து நேரான பாதையை விட்டும் வழிதவறிய நீங்கள்தான் மறுமைநாளில் ஸக்கூம் என்ற மிகத் தீய மோசமான மரத்திலிருந்து உண்ணுபவர்கள்.

Vakıa 56:53

அந்த கசப்பான மரத்திலிருந்தே உங்களின் வெற்று வயிறுகளை நிரப்பிக் கொள்வீர்கள்.

Vakıa 56:54

அதன்பின் கடும் சூடான நீரை அருந்துவீர்கள்.

Vakıa 56:55

தாகிக்கும் நோயின் காரணமாக அதிக நீரறுந்தும் ஒட்டகத்தைப் போன்று அதனை அதிகமாக அருந்துவீர்கள்.

Vakıa 56:56

மேற்கூறப்பட்ட இந்த கசப்பான உணவையும் சூடான நீரையும் கொண்டே அவர்கள் கூலி கொடுக்கப்படும் நாளில் வரவேற்கப்பட்டு விருந்தளிக்கப்படுவார்கள்.

Vakıa 56:57

பொய்ப்பிப்பாளர்களே!- ஒன்றும் இல்லாமல் இருந்த உங்களை நாமே படைத்தோம். நீங்கள் இறந்தபிறகு நிச்சயமாக நாம் உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவோம் என்பதை நீங்கள் உண்மைப்படுத்தியிருக்கவேண்டாமா?

Vakıa 56:58

மனிதர்களே!- நீங்கள் உங்கள் மனைவியரின் கர்ப்பப்பையில் செலுத்தும் விந்தைக் குறித்து சிந்தித்துப் பார்த்தீர்களா?

Vakıa 56:59

அந்த விந்தை நீங்கள் படைத்தீர்களா? அல்லது அதனை நாம் படைத்தோமா?

Vakıa 56:60

நாம் உங்களிடையே மரணத்தை விதித்துள்ளோம். உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு தவணை இருக்கின்றது. அது முந்தவோ, பிந்தவோ மாட்டாது. நாம் இயலாதவர்கள் அல்ல.

Vakıa 56:61

நீங்கள் அறிந்த உங்களின் படைப்பையும் வடிவத்தையும் மாற்றி நீங்கள் அறியாத படைப்பையும் வடிவத்தையும் உங்களுக்கு அளிப்பதற்கு (நாம் இயலாதவர்கள் அல்ல).

Vakıa 56:62

நாம் உங்களை முதன்முதலில் எவ்வாறு படைத்துள்ளோம் என்பதை நீங்கள் அறிந்தேயுள்ளீர்கள். எனவே நீங்கள் படிப்பினை பெற மாட்டீர்களா? உங்களை முதன்முதலில் படைத்ததற்கு ஆற்றலுடையவன் நீங்கள் மரணித்ததன் பின் மீண்டும் உங்களை உயிர்கொடுத்து எழுப்பவும் ஆற்றல் பெற்றவன் என்பதை அறிந்துகொள்ள மாட்டீர்களா?

Vakıa 56:63

நீங்கள் பூமியில் விதைக்கும் விதையைக் கவனித்தீர்களா?

Vakıa 56:64

அந்த விதையை நீங்கள் முளைக்க வைக்கிறீர்களா? அல்லது நாம் அதனை முளைக்க வைக்கிறோமா?

Vakıa 56:65

நாம் அந்த விதையை கூளமாக ஆக்க நாடியிருந்தால் அது முளையும் நிலையை அடைந்த பின்னர் கூளமாக ஆக்கியிருப்போம். பின்னர் அதற்கு ஏற்பட்டதைக்கண்டு நீங்கள் ஆச்சரியப்பட்டுக்கொண்டே இருப்பீர்கள்.

Vakıa 56:66

நீங்கள் கூறுவீர்கள்: “நிச்சயமாக நாம் செய்த செலவை இழந்து வேதனைக்குள்ளாகிவிட்டோம்.”

Vakıa 56:67

மாறாக நாம் வாழ்வாதாரத்தைவிட்டும் தடுக்கப்பட்டு விட்டோம்.”

Vakıa 56:68

உங்களுக்கு தாகம் வரும்போது நீங்கள் பருகும் நீரைக்குறித்து சிந்தித்துப் பார்த்தீர்களா?

Vakıa 56:69

வானத்திலிருக்கும் மேகத்திலிருந்து நீங்கள் அதனை இறக்கி வைக்கிறீர்களா? அல்லது நாம் அதனை இறக்கி வைக்கிறோமா?

Vakıa 56:70

நாம் நாடியிருந்தால் பருகவோ, நீர்ப்பாய்ச்சவோ நீங்கள் பயன்படுத்த முடியாதபடி அந்த நீரை கடும் உப்பு நீராக ஆக்க நாடியிருந்தால் அவாறு ஆக்கியிருப்போம். உங்கள்மீது கருணை காட்டும்பொருட்டு சுவையான நீரை இறக்கியதற்கு அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

Vakıa 56:71

நீங்கள் உங்களின் பயன்பாட்டிற்காக மூட்டும் நெருப்பைக் கவனித்துப் பார்த்தீர்களா?

Vakıa 56:72

எந்த மரத்திலிருந்து நெருப்பை நீங்கள் மூட்டுகிறீர்களோ அதனை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது உங்கள்மீது கருணை காட்டும்பொருட்டு நாம் அதனை உருவாக்கினோமா?

Vakıa 56:73

இந்த நெருப்பை நாம் உங்களுக்கு மறுமையின் நெருப்பை நினைவூட்டக்கூடியதாகவும் உங்களின் பயணிகளுக்குக் பயனளிக்கக்கூடியதாகவும் ஆக்கியுள்ளோம்.

Vakıa 56:74

தூதரே!- கண்ணியமிக்க உம் இறைவனுக்குப் பொருத்தமற்றவற்றிலிருந்து அவனைத் தூய்மைப்படுத்துவீராக.

Vakıa 56:75

நட்சத்திரங்கள் உதிக்குமிடங்களைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.

Vakıa 56:76

நிச்சயமாக இந்த இடங்களைக்கொண்டு செய்யப்படும் சத்தியம் -அவற்றின் கண்ணியத்தை அறிவார்களானால்- அவற்றில் காணப்படும் எண்ணற்ற சான்றுகள் மற்றும் படிப்பினைகளால் அது மகத்தானதாகும்.

Vakıa 56:77

மனிதர்களே!- நிச்சயமாக உங்களிடம் எடுத்துரைக்கப்படும் இந்தக் குர்ஆன் தன்னுள் உள்ளடக்கியுள்ள பெரும் நன்மைகளினால் கண்ணியமிக்க குர்ஆனாகும்.

Vakıa 56:78

அது மக்களின் பார்வையைவிட்டும் பாதுகாப்பட்ட லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டில் உள்ளது.

Vakıa 56:79

பாவங்கள் மற்றும் குறைகளைவிட்டும் தூய்மையான வானவர்கள்தாம் அதனைத் தொடுவார்கள்.

Vakıa 56:80

அது படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனிடமிருந்து அவனுடைய நபி முஹம்மதுமீது இறக்கப்பட்டதாகும்.

Vakıa 56:81

இணைவைப்பாளர்களே!- இந்த செய்தியையா நீங்கள் உண்மைப்படுத்தாமல் பொய்யெனக் கூறுகிறீர்கள்?

Vakıa 56:82

அல்லாஹ்வை பொய்ப்பிப்பதுதான் உங்களுக்கு அவன் வழங்கிய அருட்கொடைகளுக்காக நீங்கள் நன்றி செலுத்தும் முறையா? எனவேதான் “இன்னஇன்ன நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது” என்று மழையை நட்சத்திரங்களின்பால் இணைத்துக் கூறுகிறீர்களா?

Vakıa 56:83

உயிர் தொண்டைக்குழியை அடைந்துவிட்டால்

Vakıa 56:84

அப்போது நீங்கள் மரண மயக்கத்தில் கிடப்பவனை உங்களுக்கு முன்னால் காண்பீர்கள்.

Vakıa 56:85

நமது அறிவு, ஆற்றல், வானவர்கள் சகிதம் உங்களைவிட மரணிப்பவருக்கு அருகில் நாமிருப்போம். ஆயினும் உங்களால் இந்த வானவர்களைக் காண முடியாது.

Vakıa 56:86

நீங்கள் எண்ணுவதுபோல உங்களின் செயல்களுக்குக் கூலி வழங்கப்படுவதற்காக நீங்கள் மீண்டும் எழுப்பப்படாதவர்களாக- இருந்திருக்கலாமே!

Vakıa 56:87

அந்தக் கூற்றில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களில் இறப்பவரிடமிருந்து வெளிப்படும் இந்த ஆன்மாவை உங்களால் ஏன் திரும்பக் கொண்டுவர முடிவதில்லை? நீங்கள் ஒருபோதும் அதற்கு சக்திபெற மாட்டீர்கள்.

Vakıa 56:88

இறப்பவர் நன்மைகளின்பால் முந்திக் கொண்டு செயல்படக்கூடியவராக இருந்தால்.

Vakıa 56:89

அவருக்கு ஓய்வு கிடைக்கும். அதன் பின்னர் அவர் களைப்படைய மாட்டார். நல்ல வாழ்வாதாரமும் அருளும் மனம் விரும்பியதை அனுபவிக்கும் சுவனமும் அவருக்கு உண்டு.

Vakıa 56:90

இறப்பவர் வலப்புறத்தில் உள்ளவராக இருந்தால் அவர்களின் விடயங்களை குறித்து நீர் கவலைப்படாதீர். அவர்களுக்கு அமைதியும் பாதுகாப்பும் உண்டு.

Vakıa 56:91

இறப்பவர் வலப்புறத்தில் உள்ளவராக இருந்தால் அவர்களின் விடயங்களை குறித்து நீர் கவலைப்படாதீர். அவர்களுக்கு அமைதியும் பாதுகாப்பும் உண்டு.

Vakıa 56:92

இறப்பவர் தூதர் கொண்டுவந்ததை பொய்ப்பிப்பவர்களில், நேரான வழியைவிட்டும் தவறியவர்களில் உள்ளவராக இருந்தால்

Vakıa 56:93

அவரை வரவேற்கும் விருந்து கடும் சூடான கொதி நீராகும்.

Vakıa 56:94

அவரை நரக நெருப்பு எரிக்கும்.

Vakıa 56:95

தூதரே!- நாம் உமக்கு எடுத்துரைத்த இவைகளே சந்தேகமற்ற உறுதியான உண்மையாகும்.

Vakıa 56:96

மகத்தான உம் இறைவனின் பெயரைத் தூய்மைப்படுத்துவீராக. குறைகளைவிட்டும் அதனைத் தூய்மைப்படுத்துவீராக.

Hadid 57:1

வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் தூய்மையைப் பறைசாற்றுகின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தான் படைப்பிலும், நிர்ணயத்திலும் அவன் ஞானம் மிக்கவன்.

Hadid 57:2

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது. அவன் தான் உயிர்ப்பிக்க நாடியவர்களை உயிர்ப்பிக்கிறான், தான் மரணிக்கச் செய்ய நாடியவர்களை மரணிக்கச் செய்கிறான். அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது.

Hadid 57:3

அவன் முதலாமவன். அவனுக்கு முன்னால் எதுவும் இல்லை. அவன் இறுதியானவன். அவனுக்குப் பிறகு யாரும் இல்லை. அவன் வெளிப்படையானவன். அவனுக்கு மேல் எதுவும் இல்லை. அவன் மறைவானவன். அவனை விட நெருக்கமான எதுவும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனிடமிருந்து தப்பிவிட முடியாது.

Hadid 57:4

அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அது ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. அவன் கண்சிமிட்டும் நேரத்தை விட குறுகிய நேரத்தில் அவற்றைப் படைப்பதற்கு சக்தியுடையவன்தான். பின்னர் அவன் அர்ஷின்மீது தன் கண்ணியத்திற்கேற்ப உயர்ந்து விட்டான். பூமியில் நுழையக்கூடிய மழைநீர், விதை, ஏனையவை, அதிலிருந்து வெளிப்படக்கூடிய தாவரங்கள், கனிமங்கள், ஏனையவை, வானத்திலிருந்து இறங்கக்கூடிய மழை, வஹி, ஏனையவை, அதன்பால் ஏறக்கூடிய வானவர்கள், அடியார்களின் செயல்கள் மற்றும் ஆன்மாக்கள் ஆகிய அனைத்தையும் அவன் அறிகிறான். -மனிதர்களே!- நீங்கள் எங்கிருந்த போதிலும் தன் அறிவால் அவன் உங்களுடேனேயே இருக்கின்றான். உங்களின் எந்த விடயமும் அவனைவிட்டு மறைவாக இல்லை. நீங்கள் செய்பவற்றை அவன் பார்க்கக்கூடியவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

Hadid 57:5

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது. அவன் பக்கம் மட்டுமே விவகாரங்கள் திரும்புகின்றன. அவன் மறுமை நாளில் படைப்புகள் அனைவரையும் விசாரணை செய்வான். அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

Hadid 57:6

அவன் இரவை பகலில் பிரவேசிக்கச் செய்கிறான். அதனால் இருள் பரவி மக்கள் தூங்கி விடுகிறார்கள். பகலை இரவின்மீது பிரவேசிக்கச் செய்கிறான். அதனால் பிரகாசம் ஏற்பட்டு மக்கள் தங்களின் பணிகளுக்குச் செல்கிறார்கள். அவன் அடியார்களின் உள்ளங்களில் உள்ளவற்றையும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

Hadid 57:7

அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைப் பிரதிநிதிகளாக்கிய செல்வங்களை அவன் உங்களுக்கு அளித்த மார்க்கத்தின்படி அதனைக் கையாளுங்கள், செலவு செய்யுங்கள். உங்களில் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு தங்களின் செல்வங்களை அவனுடைய பாதையில் செலவு செய்தவர்களுக்கு அவனிடத்தில் சுவனம் என்னும் மகத்தான கூலி உண்டு.

Hadid 57:8

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொள்ள விடாமல் உங்களைத் தடுப்பது எது? நீங்கள் உங்கள் இறைவனின்மீது நம்பிக்கைகொள்ள வேண்டும் என்பதற்காக தூதர் அவன் பக்கம் உங்களை அழைக்கின்றார். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவன் உங்களை உங்களின் தந்தையரின் முதுகுகளிலிருந்து வெளிப்படுத்திய சமயத்தில் நீங்கள் அவன்மீது நம்பிக்கைகொள்ள வேண்டும் என்று அவன் உங்களிடம் வாக்குறுதியைப் பெற்றுள்ளான்.

Hadid 57:9

உங்களை நிராகரிப்பு, அறியாமை என்னும் இருள்களிலிருந்து வெளியேற்றி ஈமான், அறிவு என்னும் ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக அவனே தன் அடியார் முஹம்மதுமீது தெளிவான சான்றுகளை இறக்குகிறான். நிச்சயமாக அல்லாஹ் தன் தூதரை நேர்வழிகாட்டக்கூடியவராகவும் நற்செய்தி கூறக்கூடியவராகவும் உங்களின்பால் அனுப்பி உங்களோடு மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.

Hadid 57:10

அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்க விடாமல் உங்களைத் தடுப்பது எது? வானங்கள் மற்றும் பூமிக்கு அவனே சொந்தக்காரனாவான். -நம்பிக்கையாளர்களே!- உங்களில் மக்கா வெற்றிக்கு முன்னரே அல்லாஹ்வின் திருப்தியை நாடி தங்களின் செல்வங்களை செலவு செய்து இஸ்லாத்தின் வெற்றிக்காக நிராகரிப்பாளர்களுடன் போரிட்டவர்களும், மக்கா வெற்றிக்குப் பிறகு செலவு செய்தவர்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர்களும் சமமாகமாட்டார்கள். மக்கா வெற்றிக்கு முன்னர் அல்லாஹ்வின் பாதையில் தங்களின் செல்வங்களை செலவு செய்தவர்களும் போரிட்டவர்களும் அதற்குப் பின் செலவளித்து போரிட்டவர்களை விட அவனிடத்தில் உயர்ந்த படித்தரங்களைப் பெற்றவர்களாவர். அல்லாஹ் இரு பிரிவினருக்கும் சுவனத்தை வாக்களித்துள்ளான். அவன் நீங்கள் செய்யக்கூடியதை நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.

Hadid 57:11

யார் தம் செல்வங்களை அல்லாஹ்வின் திருப்தியை நாடி மனத்திருப்தியுடன் செலவு செய்வார்களோ அவர்களுக்கு அவன் அவர்கள் செலவழித்ததற்குப் பகரமாக பலமடங்கு கூலியை வழங்கிடுவான். அவர்களுக்கு மறுமை நாளில் சுவனம் என்னும் கண்ணியமான கூலியும் உண்டு.

Hadid 57:12

நம்பிக்கைகொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்களுக்கு முன்னாலும் வலப்புறமும் ஒளி வீசிக்கொண்டிருக்கும் நிலையில் நீர் காணும் நாளில் அவர்களிடம் கூறப்படும்: “இன்றைய தினம் உங்களுக்கு சுவனங்களைக் கொண்டு நற்செய்தி உண்டாகட்டும். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அந்தக் கூலியே ஈடிணையற்ற மகத்தான வெற்றியாகும்.

Hadid 57:13

நயவஞ்சகம் கொண்ட ஆண்களும் பெண்களும் நம்பிக்கையாளர்களைப் பார்த்து “நம்பிக்கையாளர்களே! உங்களின் ஒளியிலிருந்து பாலத்தைக் கடப்பதற்கு உதவி பெறும் பொருட்டு எங்களுக்காகக் காத்திருங்கள்” என்று கூறும் நாளில் அவர்களிடம் பரிகாசமாகக் கூறப்படும்: “உங்களுக்குப் பின்னால் திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் பிரகாசிக்கக்கூடிய ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்.” அவர்களிடையே ஒரு சுவர் எழுப்பப்படும். அதற்கு ஒரு கதவு இருக்கும். நம்பிக்கையாளர்களின் பக்கத்தில் இருக்கும் அதன் உட்புறத்தில் அருள் இருக்கும். நயவஞ்சகர்களின் பக்கத்தில் இருக்கும் அதன் வெளிப்புறத்தில் வேதனை இருக்கும்.

Hadid 57:14

நயவஞ்சகர்கள் நம்பிக்கையாளர்களை பின்வருமாறு கூறியவர்களாக அழைப்பார்கள்: “நாங்கள் இஸ்லாத்தை ஏற்று, வழிப்பட்டு உங்களுடன் இருக்கவில்லையா?” அதற்கு நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக. நீங்கள் எங்களுடன் இருந்தீர்கள். ஆயினும் நயவஞ்சகத்தால் உங்களுக்கு நீங்களே அழிவை ஏற்படுத்தி சோதனைக்குள்ளாகிவிட்டீர்கள். நம்பிக்கையாளர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு உங்களின் நிராகரிப்பை வெளிப்படுத்தலாம் என்று நீங்கள் காத்திருந்தீர்கள். அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வான் என்பதிலும் நீங்கள் மரணித்தபிறகு உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான் என்பதிலும் சந்தேகம் கொண்டீர்கள். பொய்யான உங்களின் எதிர்பார்ப்புகள் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டன. அந்த நிலையிலேயே நீங்கள் மரணித்தும் விட்டீர்கள். அல்லாஹ்வின் விஷயத்தில் ஷைத்தான் உங்களை ஏமாற்றி விட்டான்.”

Hadid 57:15

நயவஞ்சகர்களே!- இன்றைய தினம் உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து விடுவிப்பதற்கு உங்களிடம் எந்த ஈட்டுத் தொகையும் பெறப்படாது. அல்லாஹ்வை வெளிப்படையாக நிராகரித்தவர்களிடமும் எந்த ஈட்டுத் தொகையும் பெறப்படாது. உங்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் நரகமே சேருமிடமாகும். அது உங்களுக்குத் தகுதியானது. நீங்களும் அதற்குத் தகுதியானவர்கள். அது மிகவும் மோசமான சேருமிடமாகும்.

Hadid 57:16

அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்டவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவாலும் அவன் குர்ஆனில் இறக்கிய வாக்குறுதி மற்றும் எச்சரிக்கையினாலும் உருகுவதற்கும் நிம்மதியடைவதற்குமான நேரம் வரவில்லையா? தவ்ராத் வழங்கப்பட்ட யூதர்களைப்போன்றும் இன்ஜீல் வழங்கப்பட்ட கிறிஸ்தவர்களைப்போன்றும் அவர்கள் இறுகிய உள்ளங்களைப் பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கும் தூதர்கள் அனுப்பப்படுவதற்குமான இடைவெளி நீண்டுவிட்ட காரணத்தால் அவர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவர்களில் அதிகமானோர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாமல் பாவங்கள் புரிபவர்களாகவே இருக்கின்றார்கள்.

Hadid 57:17

அறிந்துகொள்ளுங்கள், நிச்சயாமாக அல்லாஹ்தான் வறண்ட பூமியை தாவரங்களால் உயிர்ப்பிக்கச் செய்கிறான். -மனிதர்களே!- நீங்கள் விளங்கிக்கொள்ளும்பொருட்டும் வறண்ட பூமியை உயிர்ப்பித்தவன் நீங்கள் மரணித்ததன் பின்பு மீண்டும் உங்களை உயிர்கொடுத்து எழுப்புவதற்கும் உள்ளம் கடினமானதன் பின்பு அதனை மென்மையாக்கவும் ஆற்றலுடையவன் என்பதை அறிந்துகொள்ளும் பொருட்டும் அல்லாஹ்வின் வல்லமையையும் அவன் ஒருவனே என்பதையும் அறிவிக்கக்கூடிய சான்றுகளையும் ஆதாரங்களையும் நாம் உங்களுக்குத் தெளிவுபடுத்தி விட்டோம்.

Hadid 57:18

நிச்சயமாக தங்களின் செல்வங்களில் சிலவற்றை சொல்லிக்காட்டாமலும் தொல்லையில்லாமலும் மனத்திருப்தியுடன் தர்மம் செய்யக்கூடிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களின் செயல்களுக்கு பல மடங்கு கூலி உண்டு. ஒரு நன்மைக்கு அதைப்போன்று பத்து முதல் எழுநூறு என்று பல மடங்குவரை நன்மை வழங்கப்படும். அத்துடன் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் சுவனம் என்னும் கண்ணியமான கூலியும் உண்டு.

Hadid 57:19

அல்லாஹ்வின்மீதும் தூதர்களின் மீதும் பாகுபாடின்றி நம்பிக்கைகொள்பவர்கள்தாம் அவனிடத்தில் உண்மையாளர்களும் தமது இறைவனிடத்தில் சாட்சியாளர்களுமாவர். அவர்களுக்கு தயார்செய்யப்பட்ட கண்ணியமான கூலியும் உண்டு. மறுமை நாளில் அவர்களுக்கு முன்னாலும் வலப்புறமும் அவர்களின் ஒளி இலங்கிக்கொண்டிருக்கும். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து தங்களின் தூதர்மீது இறக்கப்பட்ட வசனங்களை பொய்யெனக் கூறுபவர்கள்தாம் நரகவாசிகளாவர். அவர்கள் மறுமை நாளில் நரகத்தில் நிரந்தமாக வீழ்ந்து கிடப்பார்கள். அதிலிருந்து அவர்களால் வெளியேற முடியாது.

Hadid 57:20

அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை உடல்களுக்கான விளையாட்டும் உள்ளங்களுக்கான வேடிக்கையும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளும் அலங்காரமும் உங்களிடையே அதிகமான செல்வங்களை, குழந்தைகளை, இன்பம், ஆட்சியதிகாரத்தைக்கொண்டும் பெருமையடிப்பதுமாகும். அதற்கு உதாரணம் மழையைப் போன்றதாகும். அதனால் விளையும் பயிர்கள் விவசாயியை மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றன. பின்னர் அப்படியே இருக்காமல் இந்த பசுமையான பயிர்கள் காய்ந்துவிடுகின்றன. -பார்ப்பவனே!- பசுமையாக இருந்ததன் பின் மஞ்சள் நிறமாகி விடுவதை நீ காண்கின்றாய். பின்னர் அல்லாஹ் அவற்றை குப்பை கூளங்களாக்கி விடுகின்றான். மறுமையில் நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கடுமையான வேதனையும் நம்பிக்கைகொண்ட அல்லாஹ்வின் அடியார்களின் பாவங்களுக்கு மன்னிப்பும் அவனது திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்க்கை நிலையற்ற அழியக்கூடிய பொருளேயன்றி வேறில்லை. யார் மறுமையின் இன்பங்களைவிடுத்து அழியக்கூடிய இவ்வுலக வாழ்வை தேர்ந்தேடுத்துக் கொண்டாரோ அவர்தான் ஏமாற்றத்திற்கும் இழப்பிற்கும் உள்ளானவர் ஆவார்.

Hadid 57:21

மனிதர்களே!- நீங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தரும் பாவமன்னிப்புத் தேடுதல் மற்றும் ஏனைய வணக்கங்களான நற்செயல்களின்பால் விரையுங்கள். அதன் மூலம் நீங்கள் வானம் மற்றும் பூமியின் அளவு விசாலமான சுவனத்தைப் பெறலாம். தன்னையும் தனது தூதரையும் நம்பிக்கைகொள்பவர்களுக்காக இச்சுவனத்தை அல்லாஹ் தயார்படுத்தியுள்ளான். இந்தக் கூலி அல்லாஹ்வின் அருளாகும். அவன் தான் நாடியவர்களுக்கு அதனை வழங்குகிறான். அல்லாஹ் நம்பிக்கைகொண்ட தன் அடியார்களின் மீது மகத்தான அருளுடையவனாவான்.

Hadid 57:22

பூமியில் ஏற்படுகின்ற வரட்சியும் மற்றவைகளும் உங்களுக்கு ஏற்படுகின்ற துன்பம் ஒவ்வொன்றும், நாம் படைப்புகளை படைப்பதற்கு முன்னரே லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிச்சயமாக இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானது.

Hadid 57:23

மனிதர்களே!- இது நீங்கள் இழந்தவற்றை எண்ணி கவலை கொள்ளாமல் இருப்பதற்காகவும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அருட்கொடைகளைக் கொண்டு கர்வம் கொள்ளாமல் சந்தோசமாக இருப்பதற்காகவும்தான். நிச்சயமாக அல்லாஹ் தான் வழங்கியவற்றைக் கொண்டு மக்களிடம் கர்வம்கொள்ளக்கூடிய எவரையும் நேசிப்பதில்லை.

Hadid 57:24

கட்டாயமாக செலவழிக்க வேண்டியதை செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து மற்றவர்களையும் கஞ்சத்தனம் செய்யுமாறு ஏவுவபர்கள் நஷ்டமடைபவர்களாவர். யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாமல் புறக்கணிக்கிறாரோ அவர் அவனுக்கு எந்த தீங்கும் இழைத்துவிட முடியாது. நிச்சயமாக அவர் தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறார். நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனாவான். அவன் தன் அடியார்களின் அடிபணிதலின்பால் தேவையுடையவன் அல்ல. அவன் எல்லா நிலைகளிலும் புகழுக்குரியவனாவான்.

Hadid 57:25

நாம் தெளிவான ஆதாரங்கள், சான்றுகளைக்கொண்டு நம் தூதர்களை அனுப்பினோம். மனிதர்கள் நியாயமாக நடந்துகொள்ளும்பொருட்டு அவர்களுடன் வேதங்களையும், தராசையும் இறக்கினோம். நாம் இரும்பையும் இறக்கினோம். அதில் கடுமையான பலம் இருக்கின்றது. அதிலிருந்து ஆயுதங்கள் செய்யப்படுகின்றன. அதில் மக்களுக்கு அவர்களின் பணிகளிலும் தொழில்களிலும் பல பயன்களும் இருக்கின்றன. இது அல்லாஹ்வைக் காணாமல் யார் அவனுக்கு உதவி செய்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகத்தான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். எதுவும் அவனை மிகைத்துவிட முடியாது. எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது.

Hadid 57:26

நாம் நூஹையும் இப்ராஹீமையும் தூதர்களாக அனுப்பினோம். அவர்களின் சந்ததிகளில் நபித்துவத்தையும் ஏற்படுத்தினோம்.அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களையும் வழங்கினோம். அவர்கள் இருவரின் வழித்தோன்றல்களில் சிலர் நேர்வழியில் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாதவர்களாகவே இருக்கின்றார்கள்.

Hadid 57:27

பின்னர் நாம் தூதர்களை தொடர்ந்து அனுப்பினோம். அவர்களின் சமூகங்களின்பால் தொடர்ந்து தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். நாம் அவர்களுக்குப் பின் மர்யமின் மகன் ஈசாவை அனுப்பினோம். அவருக்கு இன்ஜீலை வழங்கினோம். அவர்மீது நம்பிக்கைகொண்டு அவரைப் பின்பற்றியவர்களின் உள்ளங்களில் நாம் இரக்கத்தையும் கருணையையும் ஏற்படுத்தினோம். அவர்கள் தங்களிடையே அன்பானவர்களாகவும் கருணையாளர்களாகவும் திகழ்ந்தார்கள். தங்களின் மார்க்கத்தில் வரம்பு மீறுவதை அவர்கள் புதிதாக ஏற்படுத்திக் கொண்டார்கள். அல்லாஹ் அனுமதித்த சிலவற்றை - மணமுடிப்பது, இன்பங்களை அனுபவிப்பது போன்றவை - விட்டுவிட்டார்கள். நாம் அவர்களிடம் இவ்வாறு செய்யும்படிக் கூறவில்லை. அவர்கள் மார்க்கத்தில் இல்லாதவற்றை உருவாக்கி தங்களுக்குத் தாங்களே கடமையாக்கிக் கொண்டார்கள். நாம் அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதையே அவர்களிடம் விரும்பினோம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அவர்களில் நம்பிக்கைகொண்டவர்களுக்கு நாம் அவர்களுக்கான கூலியை வழங்கினோம். அவர்களில் பெரும்பாலோர் முஹம்மது கொண்டுவந்ததை நிராகரித்து அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாதவர்களாகவே இருக்கின்றார்கள்.

Hadid 57:28

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். முஹம்மது மீது நம்பிக்கைகொண்டதற்காகவும் முந்தைய தூதர்களின்மீது நம்பிக்கைகொண்டதற்காவும் அவன் உங்களுக்கு இருமடங்கு நன்மையையும் கூலியையும் வழங்குவான். இவ்வுலக வாழ்வில் உங்களுக்கு ஒளியை ஏற்படுத்துவான். நீங்கள் அதனைக்கொண்டு நேர்வழி பெறுவீர்கள். அதன் மூலம் மறுமை நாளில் சிராத் என்னும் பாலத்தையும் கடப்பீர்கள். அவன் உங்களை பாவங்களை மன்னித்து மறைத்துவிடுவான். அவற்றிற்காக உங்களைக் குற்றம்பிடிக்க மாட்டான். அவன் தன் அடியார்களை மிகவும் மன்னிப்பவனும் அவர்கள் மீது அன்புகாட்டுபவனும் ஆவான்.

Hadid 57:29

நம்பிக்கையாளர்களே!- நாம் உங்களுக்காக தயார்படுத்தி வைத்துள்ள இரட்டிப்பான நன்மையின் மூலம் நமது மகத்தான அருளை நாம் உங்களுக்குத் தெளிவுபடுத்தி விட்டோம். இது வேதம் வழங்கப்பட்ட முன்சென்ற யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வின் அருளைத் தாம் நாடியவர்களுக்கு வழங்கி நாடியவர்களுக்குத் தடுப்பதற்கு தாங்கள் அல்லாஹ்வின் அருளிலிருந்து எதற்கும் சக்தி பெற்றவர்கள் அல்ல என்பதை அறிந்து, அல்லாஹ்விடமே அருள் உள்ளது, அதனை அவன் தான் நாடியவர்களுக்கு வழங்குகிறான், தான் நாடியவர்களுக்கு வழங்காமல் தடுத்துக் கொள்கிறான் என்பதை அறிந்துகொள்வதற்காகவும்தான். அவன் மாபெரும் அருளாளனாவான். தன் அடியார்களில் தான் நாடியோருக்கு அதனை வழங்குகிறான்.

Mücadele 58:1

தூதரே!- தன் கணவன் (அவ்ஸ் இப்னு அஸ்ஸாமித்) தன்னை அவரது தாயோடு ஒப்பிட்டுக் கூறியதால் அவரைக்குறித்து உம்மை நாடி வந்து தன் கணவர் அவளுடன் நடந்த விதத்தை அல்லாஹ்விடம் முறையிட்டுக் கொண்டிருந்த (கவ்லா பின்த் ஸஃலபா என்ற) அந்தப் பெண்ணின் பேச்சை அல்லாஹ் செவியேற்றுவிட்டான். உங்கள் இருவரின் உரையாடலையும் அல்லாஹ் செவியேற்கிறான். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவனாகவும் அவர்களின் செயல்களை பார்க்கக்கூடியவனாகவும் இருக்கின்றான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

Mücadele 58:2

நீ என்னிடத்தில் எனது தாயின் முதுகைப் போன்றவள் என தம் மனைவியரிடம் கூறி தமது மனைவிமாரிடமிருந்து விலகிக்கொள்வோர் தங்களின் இந்த கூற்றில் பொய்யுரைக்கிறார்கள். ஏனெனில் அவர்களின் மனைவியர் அவர்களின் தாய்மார்கள் அல்ல. அவர்களைப் பெற்றவர்களே அவர்களின் தாய்மார்களாவர். அதனைக் கூறும்போது நிச்சயமாக அவர்கள் மிகவும் இழிவான, பொய்யான வார்த்தையையே கூறுகிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொருப்பவன், மன்னிக்கக்கூடியவன். எனவேதான் அந்தப் பாவத்திலிருந்து அவர்களைத் தூய்மைப்படுத்துவதற்காக பரிகாரத்தை அவர்களுக்கு அவன் ஏற்படுத்தியுள்ளான்.

Mücadele 58:3

யாரெல்லாம் இந்த மோசமான வார்த்தையைக் கூறிவிட்டு பின்னர் அவ்வாறு தாய்மார்களாக ஒப்பிடப்பட்டவர்களோடு உறவுகொள்ள விரும்புகிறார்களோ அவர்கள் உறவு முன்னால் ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இந்த மேற்கூறப்பட்ட கட்டளை நீங்கள் உங்கள் மனைவியரை தாய்மார்களோடு ஒப்பிட்டுக் கூறக்கூடாது என்பதை ஏவுவதற்காகத்தான். அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

Mücadele 58:4

உங்களில் உரிமையிட அடிமையைப் பெறாதவர், தாய்மார்களாக ஒப்பிடப்பட்ட தம் மனைவியருடன் உடலுறவு கொள்வதற்கு முன்னால் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அவ்வாறு தொடராக இரு மாதங்கள் சக்தி பெறாதவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். நாம் இட்ட இந்த கட்டளை நீங்கள் அல்லாஹ்தான் கட்டளையிட்டான் என்பதை ஏற்றுக்கொண்டு அந்த ஏவலின்படி செயல்படவும் அவனது தூதரைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான். நாம் உங்களுக்கு விதித்த இந்த சட்டங்கள் தன் அடியார்களுக்கு ஏற்படுத்திய அல்லாஹ்வின் வரம்புகளாகும். எனவே அவற்றை மீறிவிடாதீர்கள். அல்லாஹ்வின் சட்டங்களையும், அவன் ஏற்படுத்திய வரம்புகளையும் நிராகரிப்பவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு.

Mücadele 58:5

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்ப்பவர்கள் இதற்கு முன்னர் எதிர்த்த முந்தைய சமூகங்களைப்போன்று இழிவுபடுத்தப்படுவார்கள். நாம் தெளிவான வசனங்களை இறக்கியுள்ளோம். அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் சான்றுகளையும் நிராகரிப்பவர்களுக்கு இழிவுமிக்க வேதனை உண்டு.

Mücadele 58:6

அல்லாஹ் அவர்கள் அனைவரையும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும் நாளில் அவர்களில் யாரையும் விட்டுவைக்க மாட்டான். அவர்கள் உலகில் செய்த மோசமான செயல்களை அவர்களுக்கு அறிவிப்பான். அவன் அவற்றை கணக்கிட்டு வைத்துள்ளான். அவர்களின் செயல்களில் எதுவும் அவனுக்குத் தவறாது. அவர்கள் மறந்த செயல்களையும் அவர்களின் பதிவேடுகளில் எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்பார்கள். அவை சிறியதோ, பெரியதோ எதையும் விட்டுவைக்காது. அனைத்தையும் கணக்கிட்டு விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். அவர்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

Mücadele 58:7

தூதரே!- நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அறிவான் என்பதையும் அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை என்பதையும் நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர் உரையாடினால் நான்காவதாக அவர்களுடன் தன் அறிவால் அல்லாஹ் இருக்கின்றான். ஐந்து பேர் உரையாடினால் ஆறாவதாக அவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான். அதனைவிட குறைவாக இருந்தாலும் அல்லது கூடுதலாக இருந்தாலும் அவர்கள் எங்கிருந்த போதிலும் அவர்களுடன் தன் அறிவால் அல்லாஹ் இருக்கின்றான். அவர்கள் பேசும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. பின்னர் மறுமை நாளில் அவர்கள் செய்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

Mücadele 58:8

தூதரே!- ஒரு நம்பிக்கையாளரைக் கண்டால் தங்களுக்குள் இரகசியமாக பேசிக் கொள்ளும் யூதர்களை நீர் பார்க்கவில்லையா? இரகசியம் பேசுவதை விட்டும் அல்லாஹ் அவர்களைத் தடுத்துள்ளான். பின்னரும் அல்லாஹ் தடுத்ததன் பக்கம் அவர்கள் திரும்புகிறார்கள். நம்பிக்கையாளர்களைக் குறித்து புறம் பேசுவது போன்ற பாவமானவற்றையும் அவர்களுக்கு எதிரானவற்றையும் தூதருக்கு மாற்றமானவற்றையும் தங்களிடையே இரகசியமாகப் பேசுகின்றனர். -தூதரே!- அவர்கள் உம்மிடம் வந்தால் அல்லாஹ் உமக்கு சலாம் முகமன் கூறாத முறைப்படி முகமன் கூறுகிறார்கள். அவர்கள் அஸ்ஸலாமு அலைக்க என்பதற்குப் பதிலாக அஸ்ஸாமு அலைக்க உமக்கு மரணம் உண்டாகட்டும் என்று கூறுகிறார்கள். தூதரை பொய்ப்பிக்கும் விதத்தில், நிச்சயமாக அவர் நபி, நாம் அவரிடம் இவ்வாறு கூறுவதன் மூலம் அல்லாஹ் எம்மை தண்டிப்பான் என்ற தனது வாதத்தில் அவர் உண்மையானவராக இருந்தால் நாம் கூறியதற்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்கமாட்டானா? எனக் கூறுகிறார்கள். அவர்கள் கூறியதற்குத் தண்டனையாக நரகமே அவர்களுக்குப் போதுமானதாகும். அதன் வெப்பத்தை அவர்கள் அனுபவிப்பார்கள். அவர்கள் சேருமிடம் மிகவும் மோசமானதாகும்.

Mücadele 58:9

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்களே! பாவம் புரிதல் அல்லது வரம்பு மீறுதல் அல்லது தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுதல் ஆகிய விஷயங்களில் உங்களிடையே இரகசியமாகப் பேசி யூதர்களைப்போன்று ஆகிவிடாதீர்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுதல், பாவமான காரியங்களைவிட்டும் விலகியிருத்தல் ஆகிய விஷயங்களில் இரகசியம் பேசுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். அவன் பக்கம் மட்டுமே மறுமை நாளில் விசாரணை செய்யப்படுவதற்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் நீங்கள் அனைவரும் ஒன்றுதிரட்டப்படுவீர்கள்.

Mücadele 58:10

நிச்சயமாக பாவமான காரியங்களை, வரம்பு மீறுதல், தூதருக்கு மாறுசெய்தல் போன்றவற்றை உள்ளடக்கி இரகசியம் பேசுவது ஷைத்தான் தன் தோழர்களுக்கு காட்டும் அலங்காரமும் அவன் ஏற்படுத்தும் ஊசலாட்டமுமாகும். இதன் மூலம் நம்பிக்கையாளர்கள் தமக்கு சூழ்ச்சி செய்யப்படுவதாக நினைத்து கவலையை நுழைவிக்க வேண்டுமென்பதையே ஷைத்தான் விரும்புகிறான். அல்லாஹ்வின் அனுமதியின்றி ஷைத்தானும் அவனது அலங்காரமும் நம்பிக்கையாளர்களுக்கு எந்த தீங்கும் இழைத்துவிட முடியாது. நம்பிக்கையாளர்கள் தங்களின் எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

Mücadele 58:11

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்களே! அவையில் நகர்ந்து இடம் கொடுங்கள் எனக் கூறப்பட்டால் அதில் விசாலமாகி இடம்கொடுங்கள். அல்லாஹ் உங்களின் இவ்வுலக வாழ்க்கையிலும் மறுவுலக வாழ்க்கையிலும் விசாலத்தை ஏற்படுத்துவான். சிறப்புடையவர்கள் அமர்வதற்காக சில சபைகளில் எழுந்து இடமளியுங்கள் என்று உங்களிடம் கூறப்பட்டால் எழுந்து இடமளியுங்கள். உங்களில் நம்பிக்கையாளர்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்துகளை வழங்குகிறான். அவன் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

Mücadele 58:12

நபித்தோழர்கள் நபியவர்களுடன் அதிகமாக இரகசியமாக உரையாடிய போது, அல்லாஹ் கூறினான்: அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் தூதருடன் இரகசியம் பேச விரும்பினால் அதற்கு முன்னால் தர்மம் அளித்துவிடுங்கள். அதில் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுதல் அடங்கியிருப்பதால் அவ்வாறு தர்மம் செய்வது சிறந்ததும் தூய்மையானதுமாகும். தர்மம் செய்ய நீங்கள் எதையும் பெறவில்லையெனில் தூதருடன் இரகசியம் பேசுவதில் எவ்விதக் குற்றமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். எனவேதான் அவர்களால் இயன்றதையே அவர்களுக்கு கடமையாக்குகிறான்.

Mücadele 58:13

தூதருடன் இரகசியம் பேசும்போது நீங்கள் வழங்கும் தர்மத்தினால் வறுமை ஏற்பட்டுவிடும் என்று அஞ்சுகிறீர்களா? அல்லாஹ் கட்டளையிட்டவாறு நீங்கள் செய்யாதபோது அதனை விட்டுவிடுவதற்கு அனுமதியளித்து அவன் உங்களை மன்னித்துவிட்டான். எனவே தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுங்கள். உங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்கிவிடுங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் செய்பவற்றை அவன் நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.

Mücadele 58:14

தூதரே!- தங்களின் நிராகரிப்பு , பாவங்களினால் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளான யூதர்களுடன் நட்புக் கொள்ளும் நயவஞ்சகர்களை நீர் பார்க்கவில்லையா? இந்த நயவஞ்சகர்கள் நம்பிக்கையாளர்களைச் சார்ந்தவர்களோ, யூதர்களைச் சார்ந்தவர்களோ அல்ல. மாறாக இங்குமங்கும் தடுமாறித் திரியக்கூடியவர்களாவர். இந்த நயவஞ்சகர்கள் தங்களை முஸ்லிம்கள் என்றும் முஸ்லிம்கள் குறித்த செய்திகளை யூதர்களிடம் எடுத்துரைக்கவில்லை என்றும் சத்தியம் செய்கின்றனர். அவர்கள் தங்களின் சத்தியத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.

Mücadele 58:15

அல்லாஹ் அவர்களுக்காக மறுமையில் கடும் வேதனையைத் தயார்படுத்தி வைத்துள்ளான். அவர்கள் நரகத்தின் அடித்தளத்தில் நுழைவார்கள். நிச்சயமாக அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த நிராகரிப்பான செயல்கள் மிகவும் மோசமானதாகும்.

Mücadele 58:16

அவர்கள் தங்களின் சத்தியங்களை நிராகரிப்பின் காரணமாக கொலை செய்யப்படுவதை விட்டும் தங்களைக் காத்துக் கொள்ளும் கேடயமாக ஆக்கிக் கொண்டார்கள். தங்களின் உயிர்களையும் செல்வங்களையும் பாதுகாப்பதற்காக அவர்கள் பொய்ச் சத்தியங்கள் மூலம் இஸ்லாத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் முஸ்லிம்களை பலவீனப்படுத்தி மக்களை சத்தியத்தைவிட்டும் திருப்பினார்கள். அவர்களுக்கு இழிவுமிக்க வேதனை உண்டு. அது அவர்களை இழிவுபடுத்திவிடும்.

Mücadele 58:17

அவர்களின் செல்வங்களோ, பிள்ளைகளோ அல்லாஹ்விடம் அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்காது. அவர்கள்தாம் நரகத்தில் நுழைந்து நிரந்தரமாக வீழ்ந்து கிடக்கும் நரகவாசிகளாவர். அதன் வேதனை அவர்களை விட்டும் என்றும் முடிவுறாதது.

Mücadele 58:18

அல்லாஹ் அவர்கள் அனைவரையும் எழுப்பும் நாளில் அவர்களில் யாரையும் கூலிகொடுப்பதற்காக எழுப்பாமல் விட்டுவைக்கமாட்டான். தாங்கள் நிராகரிப்பிலோ, நயவஞ்சகத்திலோ இருக்கவில்லை என்றும் அல்லாஹ்வை திருப்திபடுத்தும் செயல்களைச் செய்யும் நம்பிக்கையாளர்களாக இருந்தார்கள் என்றும் அவர்கள் சத்தியமிட்டுக் கூறுவார்கள். -நம்பிக்கையாளர்களே!- உலகில் நிச்சயமாக உங்களிடம் அவர்கள் நாங்கள் முஸ்லீம்கள் என்று சத்தியமிட்டுக் கொண்டிருந்ததைப் போலவே மறுமையிலும் அவர்கள் சத்தியமிடுவார்கள். அல்லாஹ்விடம் அவர்கள் செய்யும் இந்த சத்தியங்களின் மூலம் தங்களுக்கு நன்மையளிக்கவோ அல்லது தங்களைவிட்டும் தீங்கினை அகற்றவோ முடியும் என்று அவர்கள் எண்ணுவார்கள். அறிந்துகொள்ளுங்கள், அவர்கள்தாம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் தமது சத்தியங்களில் உண்மையான பொய்யர்களாவர்.

Mücadele 58:19

ஷைத்தான் அவர்களின்மீது ஆதிக்கம் செலுத்தி தன் ஊசலாட்டத்தின்மூலம் அல்லாஹ்வின் நினைவைவிட்டும் அவர்களை மறக்கடிக்கச் செய்துவிட்டான். அவர்கள் அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் செயல்களில் ஈடுபடவில்லை. மாறாக அவனைக் கோபத்திலாழ்த்தும் காரியங்களில் ஈடுபட்டார்கள். இந்த பண்புகளை உடையவர்கள்தாம் இப்லீஸின் படையினரும் அவனின் ஆதரவாளரும் ஆவார். நிச்சயமாக அவனது பட்டாளமும் ஆதவராளர்களுமே இவ்வுலகிலும் மறுவுலகிலும் நஷ்டமடைந்தவர்களாவர். அவர்கள் நேர்வழிக்குப் பகரமாக வழிகேட்டையும் சுவனத்திற்குப் பகரமாக நரகத்தையும் விலைக்கு வாங்கிக் கொண்டார்கள்.

Mücadele 58:20

நிச்சயமாக அல்லாஹ்வுடன் அவனுடைய தூதருடனும் பகைமை பாராட்டுபவர்கள் அவன் இவ்வுலகிலும் மறுவுலகிலும் இழிவுபடுத்திய நிராகரித்த மக்களுடன் இருப்பார்கள்.

Mücadele 58:21

“நானும் என் தூதர்களும் எங்களுடைய எதிரிகளுக்கு எதிராக ஆதாரத்தைக்கொண்டும் பலத்தைக் கொண்டும் வெற்றி பெற்றுவிடுவோம், என்று.” அல்லாஹ் முன்னரே தனது அறிவின் பிரகாரம் விதித்துவிட்டான். நிச்சயமாக தன் தூதர்களுக்கு உதவி செய்வதற்கு அல்லாஹ் ஆற்றலுடையவன். அவர்களின் எதிரிகளைத் தண்டிப்பதில் மிகைத்தவன்.

Mücadele 58:22

தூதரே!- அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கைகொண்ட மக்கள் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் பகைமை பாராட்டுபவர்களுடன் நட்பு கொள்வதை நீர் காணமாட்டீர். அல்லாஹ்வுடன், அவனது தூதருடன் பகைமை பாராட்டும் இவர்கள் அவர்களின் தந்தையராக அல்லது பிள்ளைகளாக அல்லது சகோதரர்களாக அல்லது அவர்களின்பால் இணையும் அவர்களின் குடும்பத்தினராக இருந்தாலும் சரியே. ஏனெனில் ஈமான் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் பகைமை பாராட்டுபவர்களுடன் நட்பு கொள்வதைத் தடுக்கிறது. நம்பிக்கையின் அடிப்படையில் அமையும் தொடர்பு அனைத்து வகையான தொடர்புகளையும் விட உயர்ந்தது. முரண்பாடு ஏற்படும் சமயங்களில் அதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் பகைமை பாராட்டுபவர்கள் -நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும்- அவர்களுடன் நட்பு கொள்ளாதவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையை நிலைக்கச்செய்துவிட்டான். எனவே அது மாற்றமடையாது. தனது ஆதாரம் மற்றும் பிரகாசத்தின் மூலம் அவன் அவர்களைப் பலப்படுத்தி விட்டான். மறுமை நாளில் அவர்களை சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அதன் இன்பம் அவர்களை விட்டும் என்றும் நீங்காது. அவர்களும் மரணிக்கமாட்டார்கள். அல்லாஹ் அவர்களின் விஷயத்தில் திருப்தியடைந்தான். இதன் பிறகு அவன் ஒருபோதும் கோபப்பட மாட்டான். அவனைப் பார்ப்பது உட்பட முடிவடையாத இன்பத்தை அவர்களுக்கு அவன் வழங்கியதால் அவர்களும் அவனைக்கொண்டு திருப்தியடைவார்கள். மேற்கூறப்பட்ட பண்புகளைப் பெற்றவர்கள்தாம் அல்லாஹ் இட்ட கட்டளையைச் செயல்படுத்தும், அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருக்கும் அவனுடைய அணியினர் ஆவர். அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் அணியினர்தாம் விரும்பியதைப் பெற்று அஞ்சும் விஷயத்திலிருந்து விடுதலையடைந்து இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றி பெறக்கூடியவர்கள்.

Haşr 59:1

வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குப் பொருத்தமற்றவற்றை விட்டும் அவனைத் தூய்மைப்படுத்துகின்றன, கண்ணியப்படுத்துகின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தான் படைத்த படைப்பில், சட்டமியற்றலில், நிர்ணயத்தில் அவன் ஞானம் மிக்கவன்.

Haşr 59:2

அவனே தன்னை நிராகரித்து தன் தூதரை பொய்ப்பித்த தவ்ராத் வேதத்தையுடைய யூதர்களான பனூ நளீர் குலத்தார் உடன்படிக்கையை முறித்து இணைவைப்பாளர்களுடன் ஒத்துழைத்தபோது அவர்களை மதீனாவிலுள்ள அவர்களின் வீடுகளிலிருந்து ஷாமுக்கு முதன் முதலாக வெளியேற்றினான். -நம்பிக்கையாளர்களே!- அவர்களிடம் காணப்படும் பலம் மற்றும் பாதுகாப்பினால் தங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைத்திருக்கவில்லை. தாங்கள் உறுதியாகக் கட்டிய கோட்டைகள் தங்களை அல்லாஹ்வின் தண்டனை, பிடியிலிருந்து பாதுகாக்கும் என்று அவர்களும் நினைத்தனர். தூதர் அவர்களுடன் போரிடும்படி, அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றும்படி கட்டளையிட்ட போது அவர்கள் நினைத்துப் பார்க்காத புறத்திலிருந்து அல்லாஹ்வின் தண்டனை அவர்களிடம் வந்தது. அவன் அவர்களின் உள்ளங்களில் கடும் பீதியை ஏற்படுத்திவிட்டான். தமது வீடுகள் முஸ்லிம்களுக்கு பயன்படக்கூடாது என்பதற்காக அவர்கள் உட்புறமிருந்து தங்களின் கைகளாலேயே அவற்றைத் தகர்த்தார்கள். வெளிப்புறமிருந்து முஸ்லிம்கள் அவற்றை அழித்தார்கள். அகப்பார்வையுடையோரே! அவர்களின் நிராகரிப்பினால் அவர்கள் மீது இறங்கிய வேதனையைக் கொண்டு படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள். அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவ்வாறு செய்தால் அவர்கள் மீது இறங்கிய அதே வேதனை, கூலி உங்கள் மீதும் இறங்கும்.

Haşr 59:3

அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றுவதை அல்லாஹ் அவர்கள்மீது விதித்திருக்காவிட்டால், இவ்வுலகில் கொலை மற்றும் கைதின் மூலம் அவர்களைத் தண்டித்திருப்பான். அவர்களுக்கு மறுமையில் நரக வேதனை காத்திருக்கின்றது. அதில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள்.

Haşr 59:4

அவர்களுக்கு இவ்வாறு நேர்ந்ததற்கான காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து ஒப்பந்தங்களை முறித்து அவர்களுடன் பகைமை பாராட்டியதே. யார் அல்லாஹ்வைப் பகைப்பாரோ அவர் அறிந்துகொள்ளட்டும், நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன். எனவே அவனது கடுமையான தண்டனை அவனுக்கு ஏற்படும்.

Haşr 59:5

நம்பிக்கையாளர்களே!- பனூ நளீர் குலத்தாருடன் போரிடும்போது அல்லாஹ்வின் எதிரிகளை கோபமூட்டுவதற்காக நீங்கள் வெட்டிய பேரீச்சை மரங்களும் அல்லது அதனைக்கொண்டு பயனடைவதற்காக அவற்றின் வேர்களில் நிற்கும்படி அவற்றை விட்டுவிட்டதும் அல்லாஹ்வின் கட்டளையினால்தான். அவர்கள் எண்ணுவது போல இது பூமியில் குழப்பம் விளைவித்தல் ஆகாது. இதன் மூலம் அல்லாஹ் தனக்குக் கட்டுப்படாமல் ஒப்பந்தங்களை முறித்து அதனை நிறைவேற்றும் வழிகளை விட்டுவிட்டு துரோகமிழைக்கும் வழியை தேர்ந்தெடுத்துக் கொண்ட யூதர்களை இழிவுபடுத்துகிறான்.

Haşr 59:6

பனூ நளீர் குலத்தாரின் செல்வங்களிலிருந்து அல்லாஹ் தன் தூதருக்கு திருப்பியளித்த செல்வங்களைத் தேடி நீங்கள் குதிரையிலோ, ஒட்டகத்திலோ பயணம் செய்யவில்லை. அதில் உங்களுக்கு எவ்விதச் சிரமமும் ஏற்படவில்லை. ஆயினும் அல்லாஹ் தன் தூதர்களை தான் நாடியோர்மீது ஆதிக்கம் கொள்ளச் செய்கிறான். அவன் தன் தூதரை பனூ நளீர் குலத்தாரின்மீது ஆதிக்கம் கொள்ளச் செய்தான். அவர் அவர்களின் நகரங்களை போரின்றி வெற்றி கொண்டார். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது.

Haşr 59:7

போர் புரியாமல் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்த ஊர்வாசிகளின் செல்வங்கள் யாவும் அல்லாஹ்வுக்காகும். அவன் அவற்றை தான் நாடியவாறு பங்கிடுவான். தூதருக்கும் அவருடைய குடும்பத்தாரான பனூ ஹாஷிம் மற்றும் பனூ முத்தலிப் குடும்பத்தாருக்கும் உரியவையாகும். ஏனெனில் இது அவர்களுக்கு தர்மம் பெறுவது தடைசெய்யப்பட்டதற்கான பகரமாகும். மேலும் அவை அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழித்துணை சாதனங்களை இழந்துவிட்ட வழிப்போக்கர்களுக்கும் உரியவை. இது ஏழைகள் அல்லாமல் செல்வந்தர்களிடையே செல்வம் சுற்றிக் கொண்டிருக்கக்கூடாது என்பதற்காகும். -நம்பிக்கையாளர்களே!- போரின்றி கைப்பற்றப்பட்ட செல்வங்களில் தூதர் உங்களுக்கு அளித்தவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் தடுத்துள்ளவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவன் தண்டிப்பதில் கடுமையானவன். ஆகவே அவனது தண்டனையைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

Haşr 59:8

இந்த செல்வங்களில் ஒரு பகுதி தங்களின் செல்வங்களையும் பிள்ளைகளையும் விட்டுவிட வற்புறுத்தப்பட்ட அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்த ஏழைகளுக்கும் வழங்கப்பட வேண்டும். அல்லாஹ் இவ்வுலகில் அவர்களுக்கு வாழ்வாதாரம் அளித்து சிறப்பிக்க வேண்டும் என்றும் மறுமையில் அவர்களின் விஷயத்தில் திருப்தியடைய வேண்டும் என்றும் அவர்கள் ஆதரவு வைக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்கிறார்கள். இந்தப் பண்புகளைப் பெற்றவர்கள்தாம் உண்மையில் நம்பிக்கையில் உறுதியானவர்களாவர்.

Haşr 59:9

முஹாஜிர்கள் - புலம்பெயர்ந்தவர்கள் வருவதற்கு முன்னரே மதீனாவில் வசித்த அன்சாரிகள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொள்வதை தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். மக்காவிலிருந்து தங்களின்பால் புலம்பெயர்ந்து வந்தவர்களை நேசிக்கிறார்கள். அவர்கள் போரின்றி கிடைத்த செல்வங்களிலிருந்து தங்களுக்கு வழங்கப்படாமல் அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டால் தங்களின் உள்ளங்களில் அவர்களைக் குறித்து குரோதமோ, பொறாமையோ கொள்வதில்லை. அவர்கள் உலக விஷயங்களில் தங்களைவிட புலம்பெயர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்குகிறார்கள். அவர்கள் ஏழைகளாக, தேவையுடையோராக இருந்தாலும் சரியே. யாருடைய உள்ளங்களையெல்லாம் அல்லாஹ் செல்வத்தின்மீதுள்ள மோகத்திலிருந்து பாதுகாத்து அவர்கள் அவனுடைய பாதையில் செலவு செய்கிறார்களோ அவர்கள்தாம் அஞ்சும் விஷயத்திலிருந்து விடுதலையடைந்து விரும்பியதைப் பெற்று வெற்றி பெறக்கூடியவர்களாவர்.

Haşr 59:10

அவர்களுக்குப் பின்வந்து அவர்களை மறுமை நாள்வரை மனத்தூய்மையுடன் பின்பற்றுபவர்கள் கூறுகிறார்கள்: “எங்கள் இறைவா! எங்களையும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைகொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்கள் இஸ்லாமிய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக. எங்களின் உள்ளங்களில் நம்பிக்கையாளர்களில் யாரைக் குறித்தும் குரோதத்தையோ, பொறாமையையோ ஏற்படுத்திவிடாதே. எங்கள் இறைவா! நிச்சயமாக நீ உன் அடியார்களோடு மிகுந்த பரிவுடையவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றாய்.”

Haşr 59:11

தூதரே! நிராகரிப்பை மறைத்து நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடியவர்களை நீர் பார்க்கவில்லையா? நிராகரிப்பில் தங்களின் சகோதரர்களான திரிக்கப்பட்ட தவ்ராத்தைப் பின்பற்றும் யூதர்களிடம் அவர்கள் கூறுகிறார்கள்: “உங்களின் வீடுகளில் உறுதியாக இருங்கள். நாங்கள் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டோம். முஸ்லிம்கள் உங்களை வெளியேற்றினால் உங்களுக்கு ஆதரவளிப்பதற்காக நாங்களும் வெளியேறுவோம். உங்களுடன் வெளியேறுவதை விட்டும் எங்களைத் தடுக்க நினைக்கும் யாருக்கும் நாங்கள் கீழ்ப்படிய மாட்டோம். அவர்கள் உங்களுடன் போரிட்டால் அவர்களுக்கு எதிராக நாங்கள் உங்களுக்கு உதவி புரிவோம்.” நிச்சயமாக இந்த நயவஞ்சகர்கள் யூதர்கள் வெளியேற்றப்பட்டால் நாமும் வெளியேறுவோம் அவர்கள் உங்களுடன் போரிட்டால் நாங்களும் அவர்களோடு போரிடுவோம் என்று தாங்கள் கூறும் விஷயத்தில் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.

Haşr 59:12

முஸ்லிம்கள் அவர்களை வெளியேற்றினால் இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள். முஸ்லிம்கள் அவர்களுடன் போரிட்டால் இவர்கள் அவர்களுக்கு உதவ மாட்டார்கள். இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்களைக் கண்டு வெருண்டோடி விடுவார்கள். அதன் பின்னர் நயவஞ்சகர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். மாறாக அல்லாஹ் அவர்களை இழிவுபடுத்தியே தீருவான்.

Haşr 59:13

நம்பிக்கையாளர்களே!- இந்த நயவஞ்சகர்கள் மற்றும் யூதர்களின் உள்ளங்களில் அல்லாஹ்வை விட உங்களைப் பற்றிய அச்சமே உள்ளது. அவர்கள் உங்களைக் கண்டு அஞ்சி அல்லாஹ்வை அஞ்சுவதில் பலஹீனர்களாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் புரியாத மக்களாக இருக்கிறார்கள் என்பதேயாகும். அவர்கள் புரிந்திருந்தால் அல்லாஹ்வே அஞ்சுவதற்குத் தகுதியானவன் என்பதை அறிந்திருப்பார்கள். ஏனெனில் அவனே அவர்கள் மீது உங்களை ஆதிக்கம் கொள்ளச் செய்தான்.

Haşr 59:14

நம்பிக்கையாளர்களே!- கோட்டைகளில் இருந்துகொண்டோ அல்லது சுவருக்குப் பின்னாலிருந்தோ தவிர யூதர்கள் ஒன்றுசேர்ந்து உங்களுடன் போரிட மாட்டார்கள். அவர்களின் கோழைத்தனத்தினால் அவர்களால் உங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாது. அவர்களிடையே காணப்படும் பகையோ மிகக் கடுமையானது. நிச்சயமாக அவர்கள் ஒரே கருத்தில் ஒரணியில் ஒற்றுமையாக இருப்பதுபோல் நீர் எண்ணுவீர். உண்மையில் அவர்களின் உள்ளங்களோ பிளவுபட்டுக் கிடக்கின்றன. அவர்களிடையே காணப்படும் இந்த பகைமைக்கான காரணம், அவர்கள் விளங்கிக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள் என்பதேயாகும். அவர்கள் விளங்கியிருந்தால் சத்தியத்தை அறிந்து அதனைப் பின்பற்றியிருப்பார்கள். அதிலே முரண்பட்டிருக்க மாட்டார்கள்.

Haşr 59:15

இந்த யூதர்கள் தங்களின் நிராகரிப்பிலும் அவர்கள் மீது இறங்கிய வேதனையிலும் அண்மையில் வாழ்ந்த மக்காவின் இணைவைப்பாளர்களைப் போன்றவர்களாவர். அவர்கள் நிராகரிப்பின் தீய விளைவை அனுபவித்தார்கள். பத்ருப்போரில் அவர்களில் சிலர் கொல்லப்பட்டார்கள், சிலர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு மறுமையில் வேதனைமிக்க தண்டனை உண்டு.

Haşr 59:16

அவர்கள் நயவஞ்சகர்களிடம் காதுகொடுத்துக் கேட்பதற்கு உதாரணம் ஷைத்தான் மனிதனுக்கு நிராகரிப்பதை அலங்கரித்துக் காட்டி நிராகரித்து விடு என்று கூறியதைப் போன்றதாகும். ஷைத்தானின் அலங்கரிப்பில் மயங்கி மனிதன் நிராகரித்தபோது ஷைத்தான் அவனிடம் கூறினான்: “நான் உன் நிராகரிப்பைவிட்டும் விலகிவிட்டேன். நான் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்.”

Haşr 59:17

ஷைத்தானினதும் அவனுக்குக் கட்டுப்பட்டவனினதும் முடிவு (பின்பற்றப்படக்கூடிய ஷைத்தானும் பின்பற்றிய மனிதனும்) மறுமை நாளில் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பதாகும். இந்தக் கூலிதான் அல்லாஹ்வின் வரம்புகளை மீறி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களுக்காக காத்திருக்கும் கூலியாகும்.

Haşr 59:18

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தாம் மறுமை நாளுக்காக சேர்த்து வைத்துள்ள நற்செயல்கள் குறித்து சிந்தித்துப் பார்க்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடியதை நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.

Haşr 59:19

அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தாமல் அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகியிருக்காமல் அவனை மறந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். இதனால் அல்லாஹ் அவர்கள் தங்களையே மறக்கும்படிச் செய்துவிட்டான். எனவே அவர்கள் அல்லாஹ்வின் கோபம் மற்றும் தண்டனையிலிருந்து பாதுகாக்கும் செயல்களில் ஈடுபடவில்லை. -அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தாமல் அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருக்காத- அவனை மறந்தவர்கள்தாம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாதவர்களாவர்.

Haşr 59:20

நரகவாசிகளும் சுவனவாசிகளும் சமமாக மாட்டார்கள். மாறாக அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்களுக்கேற்ப வெவ்வேறான கூலிகளைப் பெறுவார்கள். சுவனவாசிகள்தாம் தாங்கள் விரும்பியதைப் பெற்று வெறுக்கும் விஷயத்திலிருந்து விடுதலையடைந்து வெற்றி பெறக்கூடியவர்களாவர்.

Haşr 59:21

தூதரே!- நாம் இந்த குர்ஆனை ஒரு மலையின்மீது இறக்கினால் அதிலுள்ள எச்சரிக்கும் உபதேசங்கள், கடுமையான எச்சரிக்கைகள் ஆகியவற்றினால் அல்லாஹ்வின் மீது ஏற்படும் கடும் அச்சத்தினால் உறுதியான அந்த மலை கீழ்படிந்து பிளந்துவிடும். மக்கள் தமது பகுத்தறிவைப் பயன்படுத்தி அல்குர்ஆன் உள்ளடக்கியிருக்கும் உபதேசங்கள், படிப்பினைகள் என்பவற்றின் மூலம் அறிவுரை பெறும் பொருட்டு இந்த உதாரணங்களை நாம் அவர்களுக்கு எடுத்துரைக்கின்றோம்.

Haşr 59:22

அவனே அல்லாஹ். அவனைத்தவிர உண்மையான வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவன் மறைவானதையும் வெளிப்படையானதையும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. இவ்வுலகிலும் மறுவுலகிலும் அளவிலாக் கருணையாளன், இணையிலாக் கிருபையாளன். அவனது கருணை அகிலத்தார் அனைத்தையும் வியாபித்துள்ளது. அவன் பேரரசன்; அனைத்துக் குறைகளை விட்டும் தூய்மையானவன்; பிரகாசமான சான்றுகளைக் கொண்டு தூதர்களை உண்மைப்படுத்தக்கூடியவன்; தன் அடியார்களின் செயல்களை கண்காணிக்கக்கூடியவன்; யாவற்றையும் மிகைத்தவன்; யாராலும் அவனை மிகைக்க முடியாது. அனைவரையும் தனது ஆற்றலினால் அடக்கியாள்பவன்; பெருமைக்குரியவன்; இணைவைப்பாளர்கள் அவனுக்கு இணையாக்கும் சிலைகள் மற்றும் இன்னபிறவற்றைவிட்டும் அவன் தூய்மையானவன்.

Haşr 59:23

அவனே அல்லாஹ். அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவன் மறைவானதையும் வெளிப்படையானதையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. இவ்வுலகிலும் மறுவுலகிலும் அளவிலாக் கருணையாளன், இணையிலாக் கிருபையாளன். அவனது கருணை படைப்புகள் அனைத்தையும் வியாபித்துள்ளது. அவன் பேரரசன்; அனைத்துக் குறைகளை விட்டும் தூய்மையானவன்; பிரகாசமான சான்றுகளைக் கொண்டு தூதர்களை உண்மைப்படுத்தக்கூடியவன்; தன் அடியார்களின் செயல்களை கண்காணிக்கக்கூடியவன்; யாவற்றையும் மிகைத்தவன்; அனைவரையும் தனது ஆற்றலினால் அடக்கியாள்பவன்; பெருமைக்குரியவன்; இணைவைப்பாளர்கள் அவனுக்கு இணையாக்கும் சிலைகள் மற்றும் இன்னபிறவற்றைவிட்டும் அவன் தூய்மையானவன்.

Haşr 59:24

அல்லாஹ்வே எல்லா படைப்புகளையும் படைத்தவன்; அனைத்தையும் உருவாக்கியவன்; தன் படைப்புகளுக்கு தான் விரும்பிய வடிவம் அளிப்பவன்; உயர்ந்த பண்புகளை உள்ளடக்கிய அழகிய பெயர்கள் அவனுக்கே உரியன. வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் குறைகள் அனைத்தையும்விட்டு அவனைத் தூய்மைப்படுத்துகின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன்; யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பிலும் சட்டத்திலும் நிர்ணயத்திலும் ஞானம் மிக்கவன்.

Mümtehıne 60:1

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! என் எதிரிகளையும் உங்கள் எதிரிகளையும் நட்பைப் பரிமாறும் தோழர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களின் தூதர் உங்களிடம் கொண்டுவந்த மார்க்கத்தை நிராகரித்துவிட்டார்கள். தூதரை அவரது ஊரிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள். அவ்வாறே உங்களையும் மக்காவிலுள்ள உங்கள்இடங்களிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள். உங்களின் விஷயத்தில் உறவுமுறையை அவர்கள் பொருட்படுத்தவில்லை. நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டீர்கள் என்பதற்காகவே அவர்கள் இவ்வாறெல்லாம் செய்தார்கள். நீங்கள் என் பாதையில் ஜிஹாது செய்வதற்காக என் திருப்தியைத் தேடி புறப்பட்டவர்களாக இருந்தால் அவர்களிடம் அன்பு பாராட்டி முஸ்லிம்கள் குறித்த இரகசியங்களை அவர்களிடம் வெளிப்படுத்தி விடாதீர்கள். நீங்கள் அவற்றில் மறைவாகச் செய்வதையும் வெளிப்படையாகச் செய்வதையும் நான் அறிவேன். அவற்றில் எதுவும் என்னைவிட்டு மறைவாக இல்லை. யார் நிராகரிப்பாளர்களிடம் இவ்வாறு நட்பு கொள்வாரோ அவர் நடுநிலையான பாதையை விட்டும் விலகிவிட்டார். சத்தியத்தைத் தவறி சரியானதை விட்டும் விலகிக்கொண்டார்.

Mümtehıne 60:2

அவர்கள் உங்களைப் பிடித்தால் தங்கள் உள்ளங்களில் மறைத்து வைத்திருக்கும் பகைமையை வெளிப்படுத்துவார்கள். தங்களின் கைகளால் உங்களைத் நோவினைப்படுத்தி தாக்குவார்கள். நாவால் திட்டுவார்கள். நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து அவர்களைப்போன்று ஆகிவிட வேண்டும் என்று அவர்கள் ஆசை கொள்வார்கள்.

Mümtehıne 60:3

உங்களின் உறவினர்கள், பிள்ளைகள் ஆகியோருக்காக வேண்டி நிராகரிப்பாளர்களுடன் நட்பு கொண்டால் அவர்கள் உங்களுக்கு ஒருபோதும் பயனளிக்கப் போவதில்லை. மறுமை நாளில் அல்லாஹ் உங்களிடையே பிரிவை ஏற்படுத்தி விடுவான். உங்களில் சுவனவாசிகள் சுவனத்தில் நுழைவார்கள். நரகவாசிகள் நரகத்தில் நுழைவார்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்கு பலனளிக்க முடியாது. அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடியதை பார்க்கக்கூடியவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

Mümtehıne 60:4

நம்பிக்கையாளர்களே!- இப்ராஹீமிடமும் அவருடன் இருந்த நம்பிக்கையாளர்களிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது. அவர்கள் நிராகரிப்பாளர்களாக இருந்த தங்கள் சமூகத்தினரிடம் கூறினார்கள்: “உங்களைவிட்டும் அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கும் சிலைகளைவிட்டும் நாங்கள் நீங்கி விட்டோம். நீங்கள் இருந்துகொண்டிருக்கும் மார்க்கத்தை நாங்கள் நிராகரித்து விட்டோம். நீங்கள் அல்லாஹ்வுக்கு யாரையும் இணையாக்காமல் அவன் ஒருவன்மீது மட்டும் நம்பிக்கைகொள்ளும்வரை உங்களுக்கும் எங்களுக்குமிடையே உள்ள பகைமை, வெறுப்பு வெளிப்பட்டுவிட்டது.” அவர்களைப் போன்று, நிராகரிப்பாளர்களான உங்கள் சமுதாயத்தை விட்டும் நீங்கள் விலகியிருந்திருக்க வேண்டும். ஆயினும் “நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவேன்.” என இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. நீங்கள் அவரை இந்த விடயத்தில் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இது இப்ராஹீம் தம் தந்தையைக் குறித்து விரக்தியடைவதற்கு முன்னர் கூறிய வார்த்தையாகும். இணைவைப்பாளனுக்காக பாவமன்னிப்புக் கோருவது நம்பிக்கையாளனுக்கு உகந்ததல்ல. என்னால் உன்னை விட்டும் அல்லாஹ்வின் வேதனையில் இருந்து எந்தவொன்றையும் தடுக்க முடியாது. எங்கள் இறைவா! எங்களின் எல்லா விவகாரங்களிலும் நாங்கள் உன்னையே சார்ந்துள்ளோம். பாவமன்னிப்புக் கோரியவர்களாக உன் பக்கம் திரும்பி விட்டோம். மறுமை நாளில் உன் பக்கமே நாங்கள் திரும்ப வேண்டும்.

Mümtehıne 60:5

எங்கள் இறைவா! நிராகரிப்பாளர்களை எங்கள்மீது ஆதிக்கம் கொள்ளச் செய்து எங்களை அவர்களுக்குச் சோதனையாக ஆக்கிவிடாதே. “அவர்கள் சத்தியத்தில் இருந்தால் நாங்கள் அவர்கள்மீது ஆதிக்கம் கொண்டிருக்க மாட்டோம்” என்று அவர்கள் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக. நிச்சயமாக நீ யாராலும் மிகைக்க முடியாதவாறு யாவற்றையும் மிகைத்தவன். நீ படைப்பிலும், சட்டத்திலும், நிர்ணயத்திலும் ஞானம் மிக்கவன்.

Mümtehıne 60:6

இவ்வுலகிலும் மறுவுலகிலும் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்ப்பவரே இந்த அழகிய முன்மாதிரியைப் பின்பற்றுவார். யார் இந்த அழகிய முன்மாதிரியை புறக்கணிப்பாரோ அவர் அறிந்துகொள்ளட்டும் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களைவிட்டும் தேவையற்றவன்; அவர்களின் வழிப்படுதல் அவனுக்குத் தேவையில்லை. எல்லா நிலையிலும் அவனே புகழுக்குரியவன்.

Mümtehıne 60:7

நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ் உங்கள் நிராகரிப்பாளர்களான எதிரிகளுக்கு இஸ்லாத்தின் பக்கம் வழிகாட்டி உங்களுக்கும் அவர்களுக்குமிடையில் அன்பை ஏற்படுத்தலாம். அப்போது அவர்கள் உங்களின் மார்க்க சகோதரர்களாக ஆகிவிடுவார்கள். அவர்களின் உள்ளங்களை நம்பிக்கைகொள்ளும்படி திருப்பிவிடுவதற்கு அல்லாஹ் ஆற்றலுடையவன். அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

Mümtehıne 60:8

நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் உங்களுடன் போர்புரிந்து உங்களின் வீடுகளை விட்டு வெளியேற்றாதோருக்கு அவர்களுக்குரிய கடமைகளைச் செய்து உபகாரம் புரிவதையும் நீதமாக நடப்பதையும் அல்லாஹ் தடைசெய்யமாட்டான். தான், தனது குடும்பம், பொறுப்பில் உள்ளோர் ஆகியோரின் விடயத்தில் நீதியாக நடந்துகொள்வோரை அல்லாஹ் விரும்புகின்றான்.

Mümtehıne 60:9

நிச்சயமாக நீங்கள் நம்பிக்கை கொண்டதற்காக உங்களுடன் போரிட்டு உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றியோர், அதற்கு உதவியோர் ஆகியோருடன் நட்பு கொள்வதையே அவன் உங்களுக்குத் தடைசெய்கிறான். உங்களில் யாரெல்லாம் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்வார்களோ அவர்கள்தாம் அழிவிற்கான காரணங்களைத் தேடி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களாவர்.

Mümtehıne 60:10

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! நம்பிக்கைகொண்ட பெண்கள் நிராகரிப்பாளர்கள் வசிக்கும் ஊரிலிருந்து புலம்பெயர்ந்து உங்களிடம் வந்தால் அவர்கள் உண்மையாகவே நம்பிக்கைகொண்டுள்ளார்களா என்பதை சோதித்துப் பாருங்கள். அவர்களின் நம்பிக்கையை அல்லாஹ்வே நன்கறிந்தவன். அவர்களின் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவை எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. இவ்வாறு சோதித்ததற்குப் பிறகு அவர்கள் நம்பிக்கைகொண்ட பெண்கள்தாம் என்பதை நீங்கள் அறிந்துகொண்டால் அவர்களை நிராகரிப்பாளர்களாக இருக்கும் அவர்களின் கணவர்களிடம் திருப்பி அனுப்பிவிடாதீர்கள். நம்பிக்கைகொண்ட பெண்களுக்கு நிராகரிப்பாளர்களை மணமுடித்துக் கொள்வது அனுமதிக்கப்பட்டதல்ல. நிராகரிப்பாளர்கள் நம்பிக்கைகொண்ட பெண்களை மணமுடித்துக் கொள்ளக் கூடாது. அவர்களின் கணவர்கள் செலவழித்த மணக்கொடைகளை அந்தக் கணவர்களுக்கு அளித்துவிடுங்கள். -நம்பிக்கையாளர்களே!- அவர்களின் இத்தா காலஅளவு நிறைவடைந்த பிறகு மணக்கொடைகளை அளித்து அவர்களை நீங்கள் மணந்துகொள்வதில் எந்தக் குற்றமும் இல்லை. யாருடைய மனைவி நிராகரிப்பவளாக இருக்கிறாளோ அல்லது இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகிறாளோ அவளை மனைவியாக வைத்துக்கொள்ளவேண்டாம். ஏனெனில் அவள் நிராகரித்ததனால் இருவருடைய இருந்த திருமண உறவு முறிந்துவிட்டது. நிராகரிப்பாளர்களிடம் மதம்மாறிச் சென்ற உங்கள் மனைவிக்கு நீங்கள் வழங்கிய மணக்கொடைகளைக் கேளுங்கள். நிராகரிப்பாளர்களும் நம்பிக்கைகொண்ட பெண்களுக்கு அவர்கள் அளித்த மணக்கொடைகளைக் கேட்கட்டும். இவ்வாறு மேற்கூறப்பட்டவாறு இரு சாராரும் மணக்கொடைகளை திருப்பியளிப்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். அவன் உங்களிடையே தான் நாடியவாறு தீர்ப்பளிக்கிறான். அவன் தன் அடியார்களின் நிலைகளையும் செயல்களையும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. தன் அடியார்களுக்கு அவன் வழங்கிய சட்டங்களில் அவன் ஞானம் மிக்கவன்.

Mümtehıne 60:11

ஒரு வேளை உங்களின் பெண்கள் இஸ்லாத்தைவிட்டு வெளியேறி நிராகரிப்பாளர்களிடம் சென்றுவிட்டால், நீங்கள் அந்த நிராகரிப்பாளர்களிடம் அவர்களுக்கு செலவழித்த மணக்கொடைகளைக் கேட்டும் அவர்கள் உங்களுக்கு கொடுக்கவில்லையெனில் நீங்கள் நிராகரிப்பாளர்களிடமிருந்து போர்ச் செல்வங்களைக் கைப்பற்றினால் உங்களில் இஸ்லாத்தைவிட்டு வெளியேறிய பெண்களின் கணவர்களுக்கு அவர்கள் செலவழித்த மணக்கொடைகளை அளித்துவிடுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.

Mümtehıne 60:12

தூதரே! மக்கா வெற்றியின் போது இடம்பெற்றது போன்று, நம்பிக்கைகொண்ட பெண்கள் உம்மிடம் வந்து, “அல்லாஹ்வுக்கு யாரையும் இணையாக்க மாட்டோம். அவன் ஒருவனையே வணங்குவோம். திருட மாட்டோம், விபச்சாரம் புரிய மாட்டோம், அறியாமைக்கால வழக்கப்படி எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம், விபச்சாரத்தில் பிறந்த குழந்தைகளை தங்கள் கணவர்களுடன் இணைத்துக் கூற மாட்டோம், ஒப்பாரி வைத்தல், முடியை மழித்தல், சட்டைப்பைகளைக் கிழித்தல் ஆகிவற்றறுக்கான தடைகளைப் பேணுவது போன்ற நன்மையான விஷயங்களில் உமக்கு மாறுசெய்ய மாட்டோம்” என்று உம்மிடம் உறுதிமொழி அளித்தால் நீரும் அவர்களுக்கு உறுதிமொழி அளிப்பீராக. அவர்கள் உம்மிடம் செய்த உறுதிமொழிக்குப்பின் அவர்களின் பாவங்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

Mümtehıne 60:13

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனது மார்க்கத்தின்படி செயற்பட்டவர்களே! மறுமையின் மீது உறுதியாக நம்பிக்கைகொள்ளாமல் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளான மக்களுடன் நட்பு கொள்ளாதீர்கள். மாறாக அவர்கள் மீண்டும் எழுப்புவதை நிராகரித்ததனால், அவர்களில் மரணித்தவர்கள் தம்மிடம் திரும்ப வர மாட்டார்கள் என்று நிராசையடைந்தது போல மறுமை ஏற்படுவதை விட்டும் நிராசையடைந்துவிட்டார்கள்.

Sâff 61:1

வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் அல்லாஹ்வுக்குப் பொருத்தமற்றவற்றை விட்டும் அவனைத் தூய்மைப்படுத்துகின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பிலும், நிர்ணயத்திலும், சட்டத்திலும் அவன் ஞானம் மிக்கவன்.

Sâff 61:2

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டவர்களே! உங்களில் ஒருவர் வாளினால் போரிடாமல் தாக்காமல் நான் வாளினால் போரிட்டேன் தாக்கினேன் என, உண்மையிலேயே நீங்கள் செய்யாத ஒன்றை ஏன் செய்ததாகக் கூறுகிறீர்கள்?

Sâff 61:3

நீங்கள் செய்யாததை அவ்வாறு கூறுவது அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுப்பிற்குரிய ஒன்றாகும். தான் கூறுவதை தனது செயலில் நிரூபித்து அல்லாஹ்வுடன் உண்மையாக நடந்துகொள்வதே ஒரு முஃமினுக்கு தகுமானதாகும்.

Sâff 61:4

நிச்சயமாக அல்லாஹ் தன் திருப்தியை நாடி தன் பாதையில் உறுதியான கட்டடத்தைப் போன்று ஓரணியில் நின்று போரிடக்கூடிய நம்பிக்கையாளர்களை நேசிக்கிறான்.

Sâff 61:5

தூதரே! மூஸா தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவுகூர்வீராக. “என் சமூகமே! நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் என்பதை நீங்கள் அறிந்திருந்தும் ஏன் என் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு என்னைத் துன்புறுத்துகிறீர்கள்?” அவர்கள் அவர் கொண்டுவந்த சத்தியத்தைப் புறக்கணித்தபோது அல்லாஹ்வும் அவர்களின் உள்ளங்களை சத்தியம், உறுதித்தன்மையை விட்டும் திருப்பிவிட்டான். அல்லாஹ் தனக்குக் கட்டுப்படாத சமூகத்திற்கு அவன் சத்தியத்தின்பால் வழிகாட்டமாட்டான்.

Sâff 61:6

தூதரே!- மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவுகூர்வீராக. “இஸ்ராயீலின் மக்களே! நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன்; எனக்கு முன்னர் இறக்கப்பட்ட தவ்ராத்தை உண்மைப்படுத்துகிறேன். நான் தூதர்களில் புதுமையானவர் அல்ல. எனக்குப்பின் வரக்கூடிய அஹ்மது என்னும் பெயருடைய தூதரைக் குறித்து நற்செய்தி கூறுபவனாக இருக்கின்றேன். ஈஸா தாம் தூதர் என்பதை அறிவிக்கக்கூடிய அற்புதங்களைக் கொண்டுவந்தபோது அவர்கள் கூறினார்கள்: “இது தெளிவான சூனியமாகும். நாங்கள் இதனைப் பின்பற்றவே மாட்டோம்.”

Sâff 61:7

அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தும் தூய்மையான மார்க்கமான இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து அவனுக்கு இணைகள் உண்டு என்று கூறி அவன் அல்லாதவற்றை வணங்குபவனைவிட மிகப்பெரிய அநியாயக்காரன் வேறு யாரும் இல்லை. அவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியும் பாவங்கள் புரிந்தும் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட மாட்டான்.

Sâff 61:8

இந்த பொய்ப்பிப்பாளர்கள் அல்லாஹ்வின் ஒளியை தங்களின் பொய்யான கூற்றுக்கள் மற்றும் சத்தியத்தை தவறாக சித்தரித்தல் என்பவற்றால் அணைத்துவிட நாடுகிறார்கள். அல்லாஹ் பூமியின் கிழக்குகளிலும் மேற்குகளிலும் தனது மார்க்கத்தை பரவச் செய்வது, தனது வார்த்தையை உயரச் செய்வதன் மூலம் அவர்கள் வெறுத்தபோதிலும் தன் ஒளியை முழுமைப்படுத்தியே தீருவான்.

Sâff 61:9

அல்லாஹ்தான் ஏனைய மார்க்கங்களைவிட தன் மார்க்கத்தை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக தன் தூதர் முஹம்மதை இஸ்லாம் என்னும் மார்க்கத்தைக் கொண்டு அனுப்பினான். அது நன்மையின்பால் வழிகாட்டக்கூடிய, பயனுள்ள கல்வியையும் நற்செயலையும் அளிக்கக்கூடிய நேர்வழியான மார்க்கமாகும். அது பூமியில் மேலோங்குவது இணைவைப்பாளர்களுக்கு வெறுப்பாக இருந்தாலும் சரியே.

Sâff 61:10

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனது மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! நான் வேதனைமிக்க தண்டனையிலிருந்து உங்களைக் காப்பாற்றும் இலாபமிக்க ஒரு வியாபாரத்தை உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

Sâff 61:11

அந்த இலாபமான வியாபாரம், நீங்கள் அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்டு அவனுடைய பாதையில் அவனது திருப்தியை நாடி உங்களின் செல்வங்களாலும் உயிர்களாலும் போரிடுவதாகும். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் மேற்கூறப்பட்ட இந்த காரியங்களே உங்களுக்குச் சிறந்ததாகும். ஆகவே அதன்பால் விரையுங்கள்.

Sâff 61:12

உங்கள் பாவங்களை அல்லாஹ் மன்னித்து சுவனங்களிலும் இடமாற்றம் அற்ற நிலையான சுவனங்களான, தூய்மையான வசிப்பிடங்களில் உங்களைப் பிரவேசிக்கச் செய்வதே இவ்வியாபாரத்தின் இலாபமாகும். அந்த சுவனங்களின் மரங்களுக்கும் மாளிகைகளுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். மேற்கூறப்பட்ட இந்தக் கூலியே ஈடிணையற்ற மகத்தான வெற்றியாகும்.

Sâff 61:13

இந்த வியாபாரத்தின் மற்றுமொரு இலாபமான பண்புதான் நீங்கள் விரும்பும் மற்றொரு விடயமுமாகும். அது இவ்வுலகிலேயே கிடைத்துவிடக் கூடியதாகும். உங்களின் எதிரிகளுக்கு எதிராக உங்களுக்குக் கிடைக்கும் அல்லாஹ்வின் உதவியும் மக்கா வெற்றி மற்றும் அதுவல்லாத அவன் வழங்கும் அண்மையிலுள்ள வெற்றிகளுமே அவை. -தூதரே!- நம்பிக்கையாளர்களுக்கு இவ்வுலகில் வெற்றியையும் மறுவுலகில் சுவன வெற்றியையும் கொண்டு நற்செய்தி கூறுவீராக.

Sâff 61:14

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! ஹவாரியீன்கள் (ஈஸாவின் தோழர்கள்) உதவி செய்ததை போன்று உங்களின் தூதர் கொண்டுவந்த அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு உதவிசெய்து அவனுடைய உதவியாளர்களாக ஆகிவிடுங்கள். ஈஸா அவர்களிடம் கேட்டார்: “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” அவர்கள் விரைந்து பதிலளித்தார்கள்: “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம், என்று.” இஸ்ராயீலின் மக்களில் ஒரு பிரிவினர் ஈஸாவின்மீது நம்பிக்கைகொண்டார்கள். மற்றொரு பிரிவினர் நிராகரித்தார்கள். நாம் ஈஸாவின்மீது நம்பிக்கைகொண்டவர்களை அவரை நிராகரித்தோருக்கு எதிராக வலுப்படுத்தினோம். அவர்களே மேலோங்கியவர்களாக மாறினார்கள்.

Cumua 62:1

வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குப் பொருத்தமில்லாத குறைபாடுடைய அனைத்துப் பண்புகளைவிட்டும் அவனை தூய்மைப்படுத்துகின்றன. அவனே ஆட்சி அதிகாரத்தைக்கொண்ட தனித்த ஏக அரசன்; அனைத்துக் குறைபாடுகளை விட்டும் தூய்மையானவன்; யாவற்றையும் மிகைத்தவன்; யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பிலும், சட்டத்திலும், நிர்ணயத்திலும் ஞானம் மிக்கவன்.

Cumua 62:2

அவனே படிக்கவும் எழுதவும் தெரியாத அரபுக்களிடையே அவர்களின் இனத்திலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர் மீது அவன் இறக்கிய அவனுடைய வசனங்களை அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார்; அவர்களை நிராகரிப்பிலிருந்தும் தீய பண்புகளிலிருந்தும் தூய்மைப்படுத்துகின்றார்; அவர்களுக்கு குர்ஆனையும் சுன்னாவையும் கற்றுக் கொடுக்கின்றார். அவர் அவர்களின்பால் அனுப்பப்படுவதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் சிலைகளை வணங்கிக்கொண்டும் கொலை செய்துகொண்டும் உறவுகளை முறித்துக்கொண்டும் தெளிவான வழிகேட்டில் இருந்தார்கள்.

Cumua 62:3

மேலும் இது வரை வராத பின்னால் வர இருக்கும் மற்ற அரபுக்களுக்கும் ஏனையோருக்கும் இந்தத் தூதர் அனுப்பப்பட்டுள்ளார். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தான் படைப்பில், சட்டங்களில், நிர்ணயத்தில் அவன் ஞானம் மிக்கவன்.

Cumua 62:4

மேற்கூறப்பட்ட (அரபுக்களுக்கும் அவர்கள் அல்லாதவர்களுக்கும் தூதராக அனுப்பிய)து அல்லாஹ்வின் அருளாகும். அதனை அவன் தான் நாடியவர்களுக்கு வழங்குகிறான். அல்லாஹ் பெரும் உபகாரியாக இருக்கின்றான். இந்த சமூகத்தின் தூதரை மனிதர்கள் அனைவருக்கும் அவன் அனுப்பியதும் அவனது பெரும் உபகாரங்களில் உள்ளவையாகும்.

Cumua 62:5

தவ்ராத்தின்படி செயல்படுமாறு கட்டளையிடப்பட்டு அதன்படி செயல்படுவதை விட்டுவிட்ட யூதர்களுக்கு உதாரணம் பெரும் புத்தகங்களைச் சுமக்கும் கழுதையாகும். அது தான் சுமப்பது புத்தகங்கள்தானா? வேறேதுமா? என்பதைக்கூட அறியாது. அல்லாஹ்வின் சான்றுகளை பொய்ப்பிக்கும் மக்களுக்கு உதாரணம் மிகவும் மோசமானதாகும். அவன் அநியாயக்கார மக்களுக்கு சத்தியத்தை அடைய உதவமாட்டான்.

Cumua 62:6

தூதரே!- நீர் கூறுவீராக: “யூத மதம் திரிபுபடுத்தப்பட்ட பின்பும் அதில் நிலைத்திருப்பவர்களே! மற்ற மக்களை விடுத்து நீங்கள்தாம் அல்லாஹ்வின் நேசர்கள் என்று நீங்கள் என்னும் வாதத்தில் உண்மையாக இருந்தால், -நீங்கள் எண்ணுவது போல்- உங்களுக்குரிய பிரத்யேக மதிப்பை அவன் சீக்கிரம் வழங்குவதற்காக மரணத்தை விரும்புங்கள்.

Cumua 62:7

அவர்கள் மரணத்தை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். மாறாக அவர்களிடம் காணப்படும் நிராகரிப்பு, பாவங்கள், அநியாயம், மற்றும் தவ்ராத்தைத் திரிபுபடுத்தல், மாற்றுதல் ஆகியவற்றினால் உலகில் நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன். அவர்கள் செய்யும் செயல்கள் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

Cumua 62:8

தூதரே!- இந்த யூதர்களிடம் நீர் கூறுவீராக: “நிச்சயமாக நீங்கள் வெருண்டோடும் மரணம் விரைவாகவோ, தாமதமாகவோ சந்தேகம் இல்லாமல் நிச்சயமாக உங்களை வந்தடைந்தே தீரும். பின்னர் மறுமை நாளில் மறைவானதையும் வெளிப்படையானதையும் நன்கறிந்த அல்லாஹ்விடமே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அப்போது நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்களைக்குறித்து அவன் உங்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

Cumua 62:9

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! இமாம் மிம்பரில் ஏறிய பிறகு அதான் கூறுபவர் வெள்ளிக் கிழமை நாளில் (ஜுமுஆ) தொழுகைக்காக அழைத்தால் உரையிலும் தொழுகையிலும் கலந்துகொள்ள பள்ளியின்பால் விரையுங்கள். வழிபடுவதை விட்டும் உங்களை ஈடுபடுத்திவிடாமல் இருப்பதற்காக வியாபாரத்தை விட்டுவிடுங்கள். -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் இதனை அறிந்தவர்களாக இருந்தால் மேற்கூறப்பட்டவாறு ஜும்ஆ தொழுகைக்கு அதான் கூறப்பட்ட பிறகு வியாபாரத்தை விட்டுவிட்டு பள்ளிக்கு விரைவதே உங்களுக்குச் சிறந்ததாகும். எனவே அல்லாஹ் உங்களுக்கு இட்ட கட்டளையைச் செயல்படுத்துங்கள்.

Cumua 62:10

நீங்கள் ஜுமுஆ தொழுகையை நிறைவுசெய்துவிட்டால் ஹலாலாக சம்பாதிப்பை தேடி, உங்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக பூமியில் பரவிவிடுங்கள். அனுமதிக்கப்பட்ட சம்பாதிப்பு, இலாபத்தின் ஊடாக நீங்கள் அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள். நீங்கள் உங்களின் வாழ்வாரத் தேடலுக்கிடையிலும் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூருங்கள். உங்கள் வாழ்வாதார தேடல் அல்லாஹ்வை நினைவுபடுத்துவதை விட்டும் உங்களை மறக்கடிக்கச் செய்துவிடக்கூடாது. அதனால் நீங்கள் விரும்புவதைப் பெற்று அஞ்சும் விஷயத்திலிருந்து விடுதலையடைந்து வெற்றியடையலாம்.

Cumua 62:11

தூதரே!- சில முஸ்லிம்கள் வியாபாரத்தையோ, வேடிக்கையையோ கண்டால் உம்மை மிம்பரில் நின்ற நிலையில் விட்டுவிட்டு அதன்பால் வெளியேறிச்சென்றுவிடுகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “உங்களின் நற்செயலுக்காக அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் கூலி நீங்கள் தேடிச் சென்ற வியாபாரம் மற்றும் வேடிக்கையை விடச் சிறந்ததாகும். வாழ்வாதாரம் அளிப்பதில் அல்லாஹ்வே மிகச் சிறந்தவன்.

Münafikun 63:1

தூதரே!- உம்முடைய அவைக்கு நிராகரிப்பை மறைத்து இஸ்லாத்தை வெளிப்படுத்தும் நயவஞ்சகர்கள் வந்தால் “நிச்சயமாக நீர் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர்தாம் என்பதற்கு நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறுகிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் நீர் அவனின் தூதர்தான் என்பதை அறிவான். நிச்சயமாக இந்த நயவஞ்சர்கள் தமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நீர் அவனின் தூதர் என ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறும் வாதத்தில் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.

Münafikun 63:2

தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர்கள் வாதிட்டு செய்யும் சத்தியங்களை, கொலை மற்றும் கைதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் கேடயமாக ஆக்கிக் கொண்டார்கள். மக்களிடையே சந்தேகங்களையும் புரளிகளையும் பரப்பி அவர்களை நம்பிக்கைகொள்ளவிடாமல் தடுக்கிறார்கள். நிச்சயமாக அவர்களின் நயவஞ்சகத்தினால் செய்யும் செயல்கள் மற்றும் பொய்ச் சத்தியங்கள் தீயவையாகும்.

Münafikun 63:3

இதற்கான காரணம், அவர்களின் உள்ளங்களில் ஈமான் உட்புகாமல் நயவஞ்சமாக நம்பிக்கைகொண்டு பின்னர் இரகசியமாக அல்லாஹ்வை நிராகரித்துவிட்டார்கள் என்பதுதான். அவர்களின் நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களின் உள்ளங்களின்மீது முத்திரையிட்டுவிட்டான். எனவே அவற்றில் ஈமான் நுழையமாட்டாது. இந்த முத்திரையின் காரணமாக அவர்களால் தங்களுக்கு நன்மைதரக்கூடியவற்றைப் புரிந்துகொள்ள முடியாது.

Münafikun 63:4

நீர் அவர்களைப் பார்த்தால் அவர்களின் பிரகாசம் மற்றும் மென்மையின் காரணத்தினால் அவர்களின் தோற்றமும் அமைப்பும் உம்மைக் கவர்ந்துவிடும். அவர்களின் சொல்வன்மையினால் அவர்கள் பேசினால் அதனை நீர் செவியுறுவீர். -தூதரே!- அவர்கள் உமது அவையில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளைப் போன்றவர்களாவர். அவர்களால் எதையும் புரிந்துகொள்ள, உணர்ந்துகொள்ள முடியாது. அவர்களிடையே காணப்படும் கோழைத்தனத்தினால் ஒவ்வொரு சப்தத்தையும் தமக்கு எதிராக எண்ணுகிறார்கள். அவர்கள்தாம் உண்மையான எதிரிகளாவர். -தூதரே!- அவர்களோடு எச்சரிக்கையாக இருப்பீராக. அவர்கள் உம் இரகசியத்தை வெளிப்படுத்தி விடலாம் அல்லது உமக்கெதிராக சதித்திட்டம் தீட்டலாம். அல்லாஹ் அவர்களை சபித்துவிட்டான். தெளிவான ஆதாரங்களைப் பெற்றிருந்தும் எவ்வாறு அவர்கள் ஈமானைவிட்டும் திருப்பப்படுகிறார்கள்?!

Münafikun 63:5

இந்த நயவஞ்சகர்களிடம் “அல்லாஹ்வின் தூதரிடம் வந்து நீங்கள் செய்த செயல்களுக்கு வருத்தம் தெரிவியுங்கள், அவர் அல்லாஹ்விடம் உங்களின் பாவங்களுக்காக மன்னிப்புக் கோருவார்” என்று கூறப்பட்டால் பரிகாசமாக தங்களின் தலைகளைத் திருப்பிக் கொள்கிறார்கள். அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல், கட்டுப்படாமல் கர்வம் கொண்டவர்களாக தமக்கு இடப்பட்ட கட்டளையைப் புறக்கணிப்பதை நீர் காண்பீர்.

Münafikun 63:6

தூதரே!- நீர் அவர்களுக்காக மன்னிப்புக் கோருவதும் கோராமலிருப்பதும் ஒன்றுதான். அல்லாஹ் அவர்களின் பாவங்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டான். நிச்சயமாக அல்லாஹ் தனக்குக் கட்டுப்படாமல் பாவத்தில் நிலைத்திருப்பவர்களுக்கு நேர்வழிகாட்ட மாட்டான்.

Münafikun 63:7

அவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ்வின் தூதரிடம் இருக்கும் ஏழைகளும் மதீனாவைச் சுற்றியுள்ள நாட்டுப்புற அரபிகளும் நபியவர்களை விட்டும் பிரிந்து செல்லவேண்டுமென்றால் உங்களின் செல்வங்களை அவர்களுக்காக செலவு செய்யாதீர்கள்.” வானங்கள் மற்றும் பூமியின் பொக்கிஷங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியன. அவன் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு அவற்றை வழங்குகிறான். ஆனால் நயவஞ்சகர்கள் நிச்சயமாக வாழ்வாதாரத்தின் கருவூலம் அல்லாஹ்வின் கைவசமே உள்ளது என்பதை அறியமாட்டார்கள்.

Münafikun 63:8

அவர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை கூறுகிறான்: “நாங்கள் மதீனாவிற்கு திரும்பிச் சென்றால் கண்ணியமானவர்களாகிய -நானும் என் சமூகத்தினரும்- இழிவானவர்களான முஹம்மதையும் அவரது தோழர்களையும் வெளியேற்றிவிடுவோம்.” கண்ணியம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உரியது. அப்துல்லாஹ் இப்னு உபை, அவனது சகாக்களக்குரியதல்ல. ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உரியதே என்பதை நயவஞ்சகர்கள் அறியமாட்டார்கள்.

Münafikun 63:9

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களின் செல்வங்களோ, பிள்ளைகளோ தொழுகையை விட்டும் இன்னபிற இஸ்லாமியக் கடமைகளை விட்டும் உங்களைத் திருப்பிவிட வேண்டாம். யாருடைய செல்வங்களும் பிள்ளைகளும் அல்லாஹ் கடமையாக்கிய தொழுகை, இன்னபிறவற்றிலிருந்து அவரைத் திருப்பி விடுகிறதோ அவர்கள்தாம் மறுமை நாளில் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் இழந்து உண்மையில் நஷ்டமடைந்தவர்களாவர்.

Münafikun 63:10

உங்களில் ஒருவருக்கு மரணம் வந்து “என் இறைவன் எனக்கு இன்னும் சிறிதுகாலம் அவகாசம் அளிக்கக்கூடாதா? நான் அல்லாஹ்வின் பாதையில் என் செல்வங்களைச் செலவு செய்து நல்லமல்கள் சாலிஹான அவனுடைய நல்லடியார்களில் ஒருவனாக ஆகியிருப்பேனே!” எனக் கூறும் சமயம் வருமுன் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய செல்வங்களிலிருந்து செலவுசெய்துகொள்ளுங்கள்.

Münafikun 63:11

ஒருவரின் தவணை வந்து அவரது வாழ்நாள் நிறைவடைந்து விட்டால் அல்லாஹ் அவருக்கு ஒருபோதும் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்யக்கூடியதை அவன் நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். நன்மைக்கு நன்மையும் தீமைக்குத் தீமையும் கிடைக்கும்.

Teğabün 64:1

வானங்கள் மற்றும் பூமியில் உள்ள படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குப் பொருத்தமற்ற குறைபாடுடைய பண்புகளைவிட்டும் அவனைத் தூய்மைப்படுத்துகின்றன. ஆட்சியதிகாரமும் அவனுக்கு மட்டுமே உரியது. அவனைத்தவிர வேறு அரசன் இல்லை. அழகிய புகழும் அவனுக்கே உரியது. அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது.

Teğabün 64:2

மனிதர்களே!- அவனே உங்களைப் படைத்தான். உங்களில் அவனை நிராகரிப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவன்மீது நம்பிக்கைகொள்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் சேருமிடம் சுவனமாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பார்க்கக்கூடியவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.

Teğabün 64:3

அவன் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்துள்ளான். அவன் அவற்றை வீணாகப் படைக்கவில்லை. -மனிதர்களே!- அவன் உங்கள்மீது அருள்புரியும்பொருட்டு அழகிய வடிவில் உங்களைப் படைத்துள்ளான். அவன் நாடியிருந்தால் உங்களை அலங்கோலமாக ஆக்கியிருப்பான். மறுமை நாளில் நீங்கள் அவனிடம் மட்டுமே திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான். நலவுக்கு நன்மையும் தீமைக்குத் தீமையும் கிடைக்கும்.

Teğabün 64:4

அவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அறிவான். உங்களின் அந்தரங்கமான செயல்களையும் வெளிப்படையான செயல்களையும் அவன் அறிவான். அவன் உள்ளங்களில் உள்ள நல்லவைகளையும் தீயவைகளையும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

Teğabün 64:5

இணைவைப்பாளர்களே!- உங்களுக்கு முன்னர் பொய்ப்பித்த நூஹின் சமூகம், ஆதின் சமூகம், ஸமூதின் சமூகம் மற்றும் ஏனைவர்களைக் குறித்த செய்தி உங்களிடம் வரவில்லையா? அவர்கள் உலகில் நிராகரித்துக் கொண்டிருந்ததன் தண்டனையை அனுபவித்தார்கள். மறுமையில் அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை இருக்கின்றது. நிச்சயமாக அவர்களைக்குறித்த செய்தி உங்களிடம் வந்தே இருக்கின்றது. ஆகவே அவர்களுக்கு நேர்ந்த கதியைக் கண்டு படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள். அவர்கள்மீது இறங்கிய வேதனை உங்கள்மீது இறங்குவதற்கு முன்னால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரிக் கொள்ளுங்கள்.

Teğabün 64:6

அவர்களைத் தாக்கிய அந்த வேதனைக்கான காரணம், அல்லாஹ்வின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான ஆதாரங்களோடும் அற்புதங்களோடும் வந்தபோது தூதர் மனித இனத்தில் இருப்பதை வெறுத்தோராக “ஒரு மனிதன் எங்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டுவதா” என்று கூறினார்கள். அவர்கள் மீது நம்பிக்கைகொள்ளாமல் புறக்கணித்தார்கள். அதனால் அல்லாஹ்வுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. அவர்களின் நம்பிக்கை மற்றும் வழிபாட்டை விட்டும் அவன் தேவையற்றவன். ஏனெனில் நிச்சயமாக அவர்களின் வழிபாடு அவனுக்கு எதனையும் அதிகரிக்கப்போவதில்லை. அல்லாஹ் தனது அடியார்களின் பக்கம் தேவையற்றவனாவான். தன் சொல்லிலும் செயலிலும் அவன் புகழுக்குரியவனாக இருக்கின்றான்.

Teğabün 64:7

அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் அவன் இறந்தவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பமாட்டான் என்று எண்ணுகிறார்கள். -தூதரே!- மீண்டும் எழுப்புவதை நிராகரிக்கும் இவர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் உயிர்கொடுத்து எழுப்பப்படுவீர்கள். பின்னர் நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்கள் குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு எழுப்புவது அல்லாஹ்வுக்கு மிகவும் இலகுவானது. அவன் உங்களை முதன்முறையாகப் படைத்தான். எனவே நீங்கள் இறந்தபிறகு உங்களை விசாரணை செய்வதற்காகவும் கூலி கொடுப்பதற்காகவும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கு அவன் ஆற்றலுடையவனே.

Teğabün 64:8

மனிதர்களே!- அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் எம் தூதர் மீது நாம் இறக்கிய குர்ஆனின் மீதும் நம்பிக்கைகொள்ளுங்கள். அவன் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.

Teğabün 64:9

தூதரே!- அல்லாஹ் உங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவதற்காக உங்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டும் மறுமை நாளை நினைவுகூர்வீராக. அந்த நாளே நிராகரிப்பாளர்களின் நஷ்டமும் குறையும் வெளிப்படும் நாளாகும். நம்பிக்கையாளர்கள் சுவனத்தில் நரகவாசிகளுக்குரிய தங்குமிடங்களைப் பெறுவார்கள். நரகவாசிகள் நரகத்தில் சுவனவாசிகளின் தங்குமிடங்களைப் பெறுவார்கள். யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிவாரோ அல்லாஹ் அவரது பாவங்களைப் போக்கி சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அதில் இருந்து அவர்கள் வெளியேறமாட்டார்கள். அவற்றின் இன்பங்கள் என்றும் முடிவடையாததாகும். அவ்வாறு அவர்கள் பெறுவதே ஈடிணையற்ற மகத்தான வெற்றியாகும்.

Teğabün 64:10

அல்லாஹ்வை நிராகரித்து, எமது தூதர் மீது நாம் இறக்கிய எமது வசனங்களை நிராகரிப்பவர்கள்தாம் நிரந்தரமாக நரகத்தில் வீழ்ந்து கிடக்கும் நரகவாசிகளாவர். அது அவர்களின் மோசமான சேருமிடமாகும்.

Teğabün 64:11

ஒருவருக்கு ஏதேனும் துன்பம் அவரிலோ, அவரது சொத்திலோ, பிள்ளைகளிலோ ஏற்பட்டால் அது அல்லாஹ் ஏற்படுத்திய விதியினாலாகும். யார் அல்லாஹ்வின்மீதும் அவனுடைய விதியின்மீதும் நம்பிக்கைகொண்டாரோ அவருக்குத் துன்பம் ஏற்பட்டால் அவரது உள்ளம் அல்லாஹ்வின் ஏவலுக்குக் கட்டுப்படுவதற்கும் அவனது விதியை பொருந்திக் கொள்வதற்கும் அவருக்கு வழிகாட்டுவான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

Teğabün 64:12

அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படுங்கள். அவனது தூதர் கொண்டு வந்ததைப் புறக்கணித்துவிட்டால் அதனால் ஏற்படும் தீங்கு உங்களையே சாரும். நாம் எடுத்துரைக்குமாறு இட்ட கட்டளையை எடுத்துரைப்பதைத் தவிர நம் தூதர்மீது வேறு எந்தப் பொறுப்பும் இல்லை. எடுத்துரைக்குமாறு அவருக்கு இடப்பட்ட கட்டளைகளை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டார்.

Teğabün 64:13

அல்லாஹ்வே உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன். அவனைத்தவிர வேறு உண்மையான வணக்குத்திற்குரிய இறைவன் இல்லை. நம்பிக்கையாளர்கள் தங்களின் எல்லா விவகாரங்களிலும் அவனை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும்.

Teğabün 64:14

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! நிச்சயமாக உங்களின் மனைவியரிலும் குழந்தைகளிலும் உங்களுக்கான எதிரிகள் இருக்கிறார்கள். ஏனெனில் அல்லாஹ்வின் நினைவை விட்டும் அவன் பாதையில் ஜிஹாது செய்வதைவிட்டும் திருப்பக்கூடியவர்களாகவும் உங்களை சோர்வடையச்செய்பவர்களாகவும் உள்ளனர். எனவே அவர்கள் உங்களின் மீது தாக்கம் ஏற்படுத்திவிடாவண்ணம் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களின் தவறுகளை மன்னித்து, கண்டுகொள்ளாமல், மறைத்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னித்து உங்கள்மீது கருணை காட்டுவான். செயலுக்கேற்றவாறே கூலி வழங்கப்படும்.

Teğabün 64:15

நிச்சயமாக உங்களின் செல்வங்களும் பிள்ளைகளும் உங்களுக்குச் சோதனையே. தடுக்கப்பட்டவற்றைச் சம்பாதிப்பதற்கும் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்படாமல் இருப்பதற்கும் உங்களை சில வேளை தூண்டுவார்கள். பிள்ளைகளுக்கு வழிப்படுதல், செல்வங்களில் ஈடுபாடுகொள்ளல் என்பவற்றை விட அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதற்கு முன்னுரிமை கொடுப்பவர்களுக்கு அல்லாஹ்விடம் மகத்தான கூலி இருக்கின்றது. அந்த மகத்தான கூலி சுவனமாகும்.

Teğabün 64:16

அவனுடைய பாதையில் வழிப்பட உங்களால் இயன்ற அளவு அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். காதுகொடுத்துக் கேளுங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். அவன் உங்களுக்கு வழங்கிய செல்வங்களை நல்வழிகளில் செலவு செய்யுங்கள். யாரையெல்லாம் மனதின் பேராசையிலிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர்கள்தாம் வெறுக்கும் விடயத்தில் இருந்து விடுதலையடைந்து தான் வேண்டுவதை பெற்று வெற்றியடையக்கூடியவர்கள்.

Teğabün 64:17

நீங்கள் உங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்து அவனுக்கு அழகிய கடன் வழங்கினால் அவன் உங்களுக்கு பத்து முதல் எழுநூறு மடங்கு என பன்மடங்குவரை நன்மையளித்து உங்களுக்கு கூலியைப் பன்மடங்காக ஆக்கித் தருவான். உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் குறைவான செயலுக்கு அதிகமான கூலியளித்து நன்றி பாராட்டக்கூடியவனாகவும் உங்களை உடனுக்குடன் தண்டிக்காமல் சகித்துக் கொள்ளக்கூடியவனாகவும் இருக்கின்றான்.

Teğabün 64:18

அல்லாஹ் வெளிப்படையானவற்றையும் மறைவானவற்றையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும், யாராலும் தன்னை மிகைக்க முடியாதவனாகவும் தன் படைப்பில், சட்டங்களில், நிர்ணயத்தில் ஞானம் மிக்கவனாகவும் இருக்கின்றான்.

Talak 65:1

நபியே! நீரோ உம் சமூகத்தில் யாரேனுமோ தம் மனைவியரை விவாகரத்து செய்ய விரும்பினால் அந்த மனைவியர் உடலுறவு இடம்பெறாத தூய்மையாக இருக்கும் ஆரம்ப காலங்களில் விவாகரத்து செய்யுங்கள். நீங்கள் விரும்பினால் அவர்களை திரும்ப மனைவியாக மீட்டிக்கொள்ளும் பொருட்டு இத்தாவின் கால அளவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை அவர்கள் வசிக்கும் உங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றி விடாதீர்கள். அவர்களும் தங்களின் காலஅளவு முடியும் வரை வெளியேறக்கூடாது. ஆனால் அவர்கள் வெளிப்படையான பாவமான விபச்சாரம் போன்றவற்றில் ஈடுப்பட்டாலே தவிர. இந்த சட்டங்கள் அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஏற்படுத்திய வரம்புகளாகும். யார் அல்லாஹ்வின் சட்டங்களை மீறுகிறாரோ அவர் இறைவனுக்கு மாறுசெய்வதன் மூலம் அழிவிற்கான காரணங்களில் ஈடுபட்டு தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார். -விவாகரத்து செய்பவரே!-உமக்குத் தெரியாது, விவாகரத்தின் பின்னரும் அல்லாஹ் நீ எதிர்பார்க்காத ஒன்றை ஏற்படுத்தி நீ அவளை மீட்டிக்கொள்ளும் வாய்ப்புண்டு.

Talak 65:2

அவர்கள் தங்களின் கால அளவை நெருங்கிவிட்டால் அவர்களுடன் நல்லமுறையில் விரும்பி வாழ்க்கை நடத்துவதற்காக அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள் அல்லது தங்களின் கால அளவை நிறைவு செய்து தமது உரிமையை அவர்கள் பெறும் பொருட்டு அவர்களை மீட்டாமல் அவர்களுக்குரிய உரிமையைக் கொடுத்து விட்டுவிடுங்கள். நீங்கள் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளவோ அல்லது பிரிந்துவிடவோ நாடினால் சச்சரவைத் தீர்க்கும் பொருட்டு உங்களிலிருந்து இரு உறுதியான சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். -சாட்சியாளர்களே!- அல்லாஹ்வின் திருப்தியை நாடி சாட்சி கூறுங்கள். மேற்கூறப்பட்ட இந்த சட்டங்களின் மூலம் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொண்டவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் அறிவுரையைக் கொண்டு பயனடைவார்கள். யார் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுகிறாரோ அவருக்கு அல்லாஹ் நெருக்கடி மற்றும் சங்கடத்திலிருந்து வெளியேறக்கூடிய ஒரு வழியை ஏற்படுத்துவான்.

Talak 65:3

அவர் நினைத்துப் பார்க்காத புறத்திலிருந்து அவருக்கு கணக்கில்லாமல் அவன் வாழ்வாதாரம் வழங்குவான். யார் தன்னுடைய எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருக்கிறாரோ அவருக்கு அவனே போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தன் விஷயத்தை நிறைவேற்றியே தீருவான். எதுவும் அவனுக்கு இயலாதது அல்ல. எதுவும் அவனிடமிருந்து தப்பிவிட முடியாது. அவன் ஒவ்வொரு விஷயமும் முடிவதற்கான ஒரு அளவை நிர்ணயித்துள்ளான். இன்பத்திற்கும் துன்பத்திற்கும் ஓர் எல்லை உண்டு. இரண்டில் எதுவும் மனிதனுக்கு நிரந்தரமானது அல்ல.

Talak 65:4

வயது அதிகரிப்பின் காரணமாக மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்குரிய கால அளவில் உங்களுக்கு ஐயம் ஏற்பட்டால் அது மூன்று மாதங்களாகும். சிறுவயது காரணமாக மாதவிடாய் இன்னும் தொடங்காத பெண்களுக்குமான கால அளவும் மூன்று மாதங்களே. விவாகரத்து செய்யப்பட்ட அல்லது கணவன் இறந்துவிட்ட கர்ப்பமான பெண்களுக்கான கால அளவு குழந்தை பெறும் வரையிலாகும். யார் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுகிறாரோ அவரது எல்லா விவகாரங்களையும் கஷ்டங்களையும் அல்லாஹ் இலகுபடுத்தித் தருவான்.

Talak 65:5

நம்பிக்கையாளர்களே!- மேற்கூறப்பட்ட விவாகரத்து, திரும்ப அழைத்துக்கொள்ளுதல் மற்றும் கால அளவுக்கான சட்டங்கள் நீங்கள் அவற்றின்படி செயல்பட வேண்டும் என்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு அளித்த கட்டளைகளாகும். யாரெல்லாம் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுகிறாரோ அவர்கள் செய்த பாவங்களை அவன் போக்கி விடுவான். மறுமையில் அவர்களுக்குப் பெரும் கூலியை வழங்குவான். அது, அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வதும் என்றும் முடிவுறாத நிலையான அருட்கொடைகளை பெறுவதுமாகும்.

Talak 65:6

கணவர்களே!- நீங்கள் வசிக்கும் வீட்டிலேயே உங்களின் வசதிக்கேற்றவாறு அவர்களையும் வசிக்கச் செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு இதைத்தான் விதித்துள்ளான். அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக அவர்களுக்குச் செய்யும் செலவீனங்களிலோ, வசிப்பிடத்திலோ தீங்கிழைத்து விடாதீர்கள். விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் கர்ப்பமாக இருந்தால் குழந்தை பெற்றெடுக்கும்வரை அவர்களுக்கு செலவு செய்யுங்கள். அவர்கள் உங்களின் குழந்தைகளுக்குப் பாலூட்டினால் அதற்கான ஊதியத்தை வழங்கி விடுங்கள். ஊதியம் வழங்குவதில் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். மனைவி விரும்பும் ஊதியத்தை கணவன் வழங்காமல் கஞ்சத்தனம் செய்தால், தான் விரும்பும் ஊதியத்தைப் பெற்றாலன்றி பாலூட்ட முடியாது என மனைவி கஞ்சத்தனம் செய்தால் தந்தை தன் குழந்தைக்குப் பாலூட்டக்கூடிய வேறு ஒரு பெண்ணை நியமித்துக் கொள்ளலாம்.

Talak 65:7

வசதியுடையவர் தான் விவாகரத்துச் செய்த பெண்ணுக்கும், குழந்தைக்கும் தன் வசதிக்கேற்ப செலவு செய்யட்டும். யார் வசதிக்குறைவினால் நெருக்கடியை உணர்கிறாரோ அவர் அல்லாஹ் தமக்கு வழங்கியதிலிருந்து செலவு செய்யட்டும். அல்லாஹ் ஒருவருக்கு எந்த அளவு வழங்கியிருக்கின்றானோ அந்த அளவே அவர் மீது கடமையாக்குகிறான். அவரால் தாங்க முடியாததை அவர்மீது கடமையாக்கமாட்டான். அவரது நெருக்கடி மற்றும் துன்பத்துக்குப் பிறகு விரைவில் அல்லாஹ் அவருக்கு வசதியையும் செல்வத்தையும் வழங்கலாம்.

Talak 65:8

தம் இறைவன் மற்றும் அவனது தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்ட எத்தனையோ ஊர் மக்களை அவர்களின் தீய செயல்களுக்காக கடுமையான முறையில் கணக்கு வாங்கியுள்ளோம். இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவர்களை மோசமாக தண்டித்தோம்.

Talak 65:9

தங்கள் தீய செயல்களின் விளைவை அவர்கள் அனுபவித்தார்கள். இறுதியில் அவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் இழப்பையே பெற்றார்கள்.

Talak 65:10

அல்லாஹ் அவர்களுக்காக பலமான வேதனையை தயார்படுத்தி வைத்துள்ளான். - அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்ட அறிவாளிகளே!- அவர்கள்மீது இறங்கிய வேதனை உங்கள்மீது இறங்காதிருக்கும் பொருட்டு அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் பாவங்களின் தீய விளைவை, நீங்கள் செய்த நன்மைகளால் ஏற்படும் பலன்களை உங்களுக்கு நினைவூட்டக்கூடிய ஒரு நினைவூட்டலை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்.

Talak 65:11

இந்த நினைவூட்டல் அவனிடமிருந்து வந்துள்ள தூதராகும். அவர் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரை உண்மைப்படுத்தி நற்செயல்களில் ஈடுபட்டவர்களை வழிகேடு என்னும் இருள்களிலிருந்து வெளியேற்றி நேர்வழி என்னும் ஒளியின்பால் கொண்டுவருவதற்காக சந்தேகமற்ற அல்லாஹ்வின் தெளிவான வசனங்களை உங்களிடம் எடுத்துரைக்கின்றார். யார் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிகிறாரோ அல்லாஹ் அவரை சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அல்லாஹ் அவரை நிரந்தர இன்பத்தையடைய சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து அவருக்கு சிறந்த வாழ்வாதாரத்தையும் வழங்குவான்.

Talak 65:12

அல்லாஹ்வே ஏழு வானங்களையும் அவற்றைப்போன்று ஏழு பூமியையும் படைத்தான். அவற்றிற்கிடையே அல்லாஹ்வின் பிரபஞ்ச மற்றும் மார்க்கரீதியான கட்டளை இறங்கிக் கொண்டிருக்கிறது. அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன், அவனால் இயலாதது எதுவும் இல்லை என்பதையும் நிச்சயமாக அவன் அறிவால் எல்லாவற்றையும் சூழ்ந்துள்ளான், வானங்களிலோ, பூமியிலோ எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளும்பொருட்டே இவ்வாறு செய்துள்ளான்.

Tahrim 66:1

தூதரே! அல்லாஹ் உமக்கு அனுமதித்த அடிமைப் பெண் மாரியாவை அனுபவிப்பதை ஏன் தடைசெய்து கொள்கிறீர்? இதன்மூலம் ரோஷம் கொண்ட உம் மனைவியரைத் திருப்திப்படுத்த விரும்புகிறீரா? அல்லாஹ் உம்மை மன்னிக்கக்கூடியவனாகவும் உம்மீது மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

Tahrim 66:2

அல்லாஹ் உங்களுக்காக, நீங்கள் சத்தியத்தை முறித்துக்கொள்ள விரும்பினால் அதற்கான பரிகாரத்தை விதித்துள்ளான். அல்லாஹ்வே உங்களுக்கு உதவி செய்யக்கூடியவன். அவன் அடியார்களுக்கு நன்மைதரக்கூடியதை நன்கறிந்தவனாகவும் தான் அமைத்த சட்டங்களில், விதிகளில் ஞானம்மிக்கவனாகவும் இருக்கின்றான்.

Tahrim 66:3

அல்லாஹ்வின் தூதர் ஹப்ஸாவிடம் பிரத்தியேகமாக, நிச்சயமாக தன் அடிமைப் பெண் மாரியாவை இனி நெருங்கப்போவதில்லை என்று கூறியதை நினைவு கூர்வீராக! ஹப்ஸா அத்தகவலை ஆயிஷாவிடம் தெரிவித்தார். அல்லாஹ் தன் தூதருக்கு அவரது இரகசியம் பகிரங்கப்படுத்தப்பட்டுவிட்டது என்பதை அறிவித்த போது அவர் ஹப்ஸாவைக் கண்டித்து அவர் கூறியவற்றில் சிலதைக் கூறிக்காட்டினார். இன்னும் சிலதைக் கூறவில்லை. அதற்கு ஹப்ஸா அவரிடம், “உங்களுக்கு யார் இதனை அறிவித்தது” என்று கேட்டார். அதற்கு தூதர், “அனைத்தையும் நன்கறிந்தவனும் மறைவான அனைத்தையும் அறிந்தவனுமான அல்லாஹ்தான் அறிவித்தான்” என்று கூறினார்.

Tahrim 66:4

உங்கள் இருவர் மீதும் பாவமன்னிப்புக் கோருவது கடமையாகும். ஏனெனில், தன் அடிமைப் பெண்ணைப் பிரிந்து அவளை தன் மீது தடைசெய்துகொள்ளும் அல்லாஹ்வின் தூதர் வெறுக்கும் விடயத்தை உங்கள் இருவரின் உள்ளங்களும் விரும்பின. நீங்கள் இருவரும் மீண்டும் அவரைத் தூண்டிவிடுவதைத் தொடர்ந்தால் நிச்சயமாக அல்லாஹ் தன் தூதரின் நேசனும் உதவியாளனுமாவான். ஜிப்ரீலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பிக்கையாளர்களும் அவரின் உதவியாளர்களாகவும் நேசர்களாகவும் இருக்கின்றனர். அது மாத்திரமின்றி வானவர்களும் அவருக்கு உதவியாளர்களாகவும் அவரை நோவினை செய்வோருக்கெதிராக உதவுவோராகவும் உள்ளனர்.

Tahrim 66:5

அவரது இறைவன் தன் தூதர் உங்களை விவாகரத்து செய்துவிட்டால் உங்களை விட சிறந்த மனைவியரை தன் தூதருக்கு வழங்கலாம். அந்த மனைவியர் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டவர்களாகவும், அவனுக்கு வழிப்படுபவர்களாகவும் தம் பாவங்களிலிருந்து மன்னிப்புக்கோரக்கூடியவர்களாகவும், இறைவனை வணங்கக்கூடியவர்களாவும், நோன்பு நோற்கக்கூடியவர்களாவும், விதவைகளாகவும், யாருமே தீண்டாத கன்னியர்களாகவும் இருப்பார்கள். ஆயினும் தூதர் அவர்களை விவாகரத்து செய்யவில்லை.

Tahrim 66:6

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கடுமையான (நரக) நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளுங்கள். அது மனிதர்களாலும் கற்களாலும் எரிக்கப்படுகிறது. அந்த நெருப்பின் மீது கடுமையான வானவர்கள் இருக்கிறார்கள். அதில் நுழைபவர்களுடன் கடுமையாக இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதில்லை. எவ்வித தயக்கமுமின்றி தங்களுக்கு அவன் இடும் கட்டளைகளை அவர்கள் செயல்படுத்துகிறார்கள்.

Tahrim 66:7

மறுமை நாளில் நிராகரிப்பாளர்களிடம் கூறப்படும்: “அல்லாஹ்வை நிராகரித்தவர்களே! இன்றைய தினம் நீங்கள் செய்த நிராகரிப்பான செயல்கள் மற்றும் பாவங்களுக்காக சாக்குப்போக்குகள் கூறாதீர்கள். உங்களின் சாக்குப்போக்குகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது. நிச்சயமாக இன்றைய தினம், உலகில் நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்து அவனது தூதரையும் பொய்ப்பித்து செயற்பட்டதற்கே கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.

Tahrim 66:8

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்கள் பாவங்களிலிருந்து உண்மையாகவே அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். உங்கள் இறைவன் உங்கள் பாவங்களைப் போக்கி மறுமை நாளில் உங்களை சுவனங்களில் பிரவேசிக்கச் செய்திடலாம். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அந்நாளில் அல்லாஹ் தூதரையும் அவரோடு நம்பிக்கைகொண்டவர்களையும் நரகத்தில் பிரவேசிக்கச்செய்து இழிவுபடுத்தமாட்டான். பாலத்தில் அவர்களுக்கு முன்னாலும் வலது புறமும் அவர்களின் ஒளி இலங்கிக்கொண்டிருக்கும். அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நாங்கள் சுவனத்தில் நுழையும்பொருட்டு எங்களின் ஒளியை பரிபூரணப்படுத்துவாயாக. பாலத்தில் ஒளி அணைந்துவிட்ட நயவஞ்சகர்களைப்போன்று நாங்கள் ஆகிவிடக்கூடாது. எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக. நிச்சயமாக நீ எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றாய். எங்களின் ஒளியை பரிபூரணப்படுத்துவதும் எங்களின் பாவங்களை மன்னிப்பதும் உன்னால் இயலாதது அல்ல.

Tahrim 66:9

தூதரே! வாளைக் கொண்டு நிராகரிப்பாளர்களுடனும் நாவின் மூலமும் ஆதாரங்களை நிலைநாட்டுவதன் மூலமும் நயவஞ்சகர்களுடனும் ஜிஹாத் செய்வீராக. அவர்கள் உம்மை அஞ்சும்பொருட்டு அவர்களுடன் கடுமையாக நடந்துகொள்வீராக. மறுமை நாளில் அவர்களின் தங்குமிடம் நரகம்தான். அது அவர்கள் திரும்பக்கூடிய மோசமான இடமாகும்.

Tahrim 66:10

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்களுக்கு நிச்சயமாக முஃமின்களுடன் உள்ள தொடர்பின் எவ்விதப் பலனும் அளிக்காது என்பதற்கு அல்லாஹ்வின் இரு நபிமார்களான நூஹ் மற்றும் லூத் ஆகிய இருவரின் மனைவிமார்களை உதாரணம் கூறுகிறான். அவர்கள் இருவரும் நம்முடைய இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுத்தும் தங்களின் சமூகத்திலுள்ள நிராகரிப்பாளர்களுக்கு உதவிசெய்தும் தங்களின் கணவர்களுக்கு துரோகமிழைத்தார்கள். நம்முடைய நல்லடியார்களான இவ்விருவருக்கும் மனைவியராக இருந்தது அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. அவர்கள் இருவரிடமும் கூறப்பட்டது: “நரகத்தில் நுழையும் நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளுடன் சேர்ந்து நீங்களும் நுழையுங்கள்.”

Tahrim 66:11

அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டவர்கள் சத்தியத்தின் மீது உறுதியாக நிலைத்து நின்றால் நிராகரிப்பாளர்களுடனான உறவு அவர்களுக்கு எந்த தீங்கையும் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதற்கு பிர்அவ்னின் மனைவியின் நிலையை உதாரணமாகக் கூறுகிறான். அவள் கூறினாள்: “என் இறைவா! எனக்கு உன்னிடத்தில் சுவனத்தில் ஒரு வீட்டை கட்டுவாயாக. ஃபிர்அவ்னின் அடக்குமுறையிலிருந்தும் அதிகாரத்திலிருந்தும் அவனது தீய செயல்களிலிருந்தும் என்னைப் பாதுகாப்பாயாக. அவனுடைய வரம்புமீறல் மற்றும் அநியாயத்தில் அவனைப் பின்தொடர்ந்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொண்ட அநியாயக்கார மக்களிடமிருந்து என்னைப் பாதுகாப்பாயாக.”

Tahrim 66:12

அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்டவர்களுக்கு அவன் இம்ரானின் மகள் மர்யமின் நிலமையை உதாரணமாகக் கூறுகிறான். அவள் தம் கற்பை விபச்சாரத்திலிருந்து பேணிக்கொண்டாள். அல்லாஹ் ஜிப்ரீலை மர்யமுள் ஊதுமாறு கட்டளையிட்டான். எனவே அல்லாஹ்வின் வல்லமையால் மர்யம் ஈஸாவை தந்தையின்றி கருவுற்றாள். மர்யம் அல்லாஹ்வின் ஷரீஅத்துகளையும் அவன் தன் தூதர்கள்மீது இறக்கிய வேதங்களையும் உண்மைப்படுத்தினாள். அவர் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனுக்குக் கீழ்ப்படிபவர்களில் ஒருவராக இருந்தாள்.