Tamil Mokhtasar — Şûrâ 42:1 – Zariyat 51:60
Contents
- Şûrâ 42:1
- Şûrâ 42:2
- Şûrâ 42:3
- Şûrâ 42:4
- Şûrâ 42:5
- Şûrâ 42:6
- Şûrâ 42:7
- Şûrâ 42:8
- Şûrâ 42:9
- Şûrâ 42:10
- Şûrâ 42:11
- Şûrâ 42:12
- Şûrâ 42:13
- Şûrâ 42:14
- Şûrâ 42:15
- Şûrâ 42:16
- Şûrâ 42:17
- Şûrâ 42:18
- Şûrâ 42:19
- Şûrâ 42:20
- Şûrâ 42:21
- Şûrâ 42:22
- Şûrâ 42:23
- Şûrâ 42:24
- Şûrâ 42:25
- Şûrâ 42:26
- Şûrâ 42:27
- Şûrâ 42:28
- Şûrâ 42:29
- Şûrâ 42:30
- Şûrâ 42:31
- Şûrâ 42:32
- Şûrâ 42:33
- Şûrâ 42:34
- Şûrâ 42:35
- Şûrâ 42:36
- Şûrâ 42:37
- Şûrâ 42:38
- Şûrâ 42:39
- Şûrâ 42:40
- Şûrâ 42:41
- Şûrâ 42:42
- Şûrâ 42:43
- Şûrâ 42:44
- Şûrâ 42:45
- Şûrâ 42:46
- Şûrâ 42:47
- Şûrâ 42:48
- Şûrâ 42:49
- Şûrâ 42:50
- Şûrâ 42:51
- Şûrâ 42:52
- Şûrâ 42:53
- Zuhruf 43:1
- Zuhruf 43:2
- Zuhruf 43:3
- Zuhruf 43:4
- Zuhruf 43:5
- Zuhruf 43:6
- Zuhruf 43:7
- Zuhruf 43:8
- Zuhruf 43:9
- Zuhruf 43:10
- Zuhruf 43:11
- Zuhruf 43:12
- Zuhruf 43:13
- Zuhruf 43:14
- Zuhruf 43:15
- Zuhruf 43:16
- Zuhruf 43:17
- Zuhruf 43:18
- Zuhruf 43:19
- Zuhruf 43:20
- Zuhruf 43:21
- Zuhruf 43:22
- Zuhruf 43:23
- Zuhruf 43:24
- Zuhruf 43:25
- Zuhruf 43:26
- Zuhruf 43:27
- Zuhruf 43:28
- Zuhruf 43:29
- Zuhruf 43:30
- Zuhruf 43:31
- Zuhruf 43:32
- Zuhruf 43:33
- Zuhruf 43:34
- Zuhruf 43:35
- Zuhruf 43:36
- Zuhruf 43:37
- Zuhruf 43:38
- Zuhruf 43:39
- Zuhruf 43:40
- Zuhruf 43:41
- Zuhruf 43:42
- Zuhruf 43:43
- Zuhruf 43:44
- Zuhruf 43:45
- Zuhruf 43:46
- Zuhruf 43:47
- Zuhruf 43:48
- Zuhruf 43:49
- Zuhruf 43:50
- Zuhruf 43:51
- Zuhruf 43:52
- Zuhruf 43:53
- Zuhruf 43:54
- Zuhruf 43:55
- Zuhruf 43:56
- Zuhruf 43:57
- Zuhruf 43:58
- Zuhruf 43:59
- Zuhruf 43:60
- Zuhruf 43:61
- Zuhruf 43:62
- Zuhruf 43:63
- Zuhruf 43:64
- Zuhruf 43:65
- Zuhruf 43:66
- Zuhruf 43:67
- Zuhruf 43:68
- Zuhruf 43:69
- Zuhruf 43:70
- Zuhruf 43:71
- Zuhruf 43:72
- Zuhruf 43:73
- Zuhruf 43:74
- Zuhruf 43:75
- Zuhruf 43:76
- Zuhruf 43:77
- Zuhruf 43:78
- Zuhruf 43:79
- Zuhruf 43:80
- Zuhruf 43:81
- Zuhruf 43:82
- Zuhruf 43:83
- Zuhruf 43:84
- Zuhruf 43:85
- Zuhruf 43:86
- Zuhruf 43:87
- Zuhruf 43:88
- Zuhruf 43:89
- Duhan 44:1
- Duhan 44:2
- Duhan 44:3
- Duhan 44:4
- Duhan 44:5
- Duhan 44:6
- Duhan 44:7
- Duhan 44:8
- Duhan 44:9
- Duhan 44:10
- Duhan 44:11
- Duhan 44:12
- Duhan 44:13
- Duhan 44:14
- Duhan 44:15
- Duhan 44:16
- Duhan 44:17
- Duhan 44:18
- Duhan 44:19
- Duhan 44:20
- Duhan 44:21
- Duhan 44:22
- Duhan 44:23
- Duhan 44:24
- Duhan 44:25
- Duhan 44:26
- Duhan 44:27
- Duhan 44:28
- Duhan 44:29
- Duhan 44:30
- Duhan 44:31
- Duhan 44:32
- Duhan 44:33
- Duhan 44:34
- Duhan 44:35
- Duhan 44:36
- Duhan 44:37
- Duhan 44:38
- Duhan 44:39
- Duhan 44:40
- Duhan 44:41
- Duhan 44:42
- Duhan 44:43
- Duhan 44:44
- Duhan 44:45
- Duhan 44:46
- Duhan 44:47
- Duhan 44:48
- Duhan 44:49
- Duhan 44:50
- Duhan 44:51
- Duhan 44:52
- Duhan 44:53
- Duhan 44:54
- Duhan 44:55
- Duhan 44:56
- Duhan 44:57
- Duhan 44:58
- Duhan 44:59
- Câsiye 45:1
- Câsiye 45:2
- Câsiye 45:3
- Câsiye 45:4
- Câsiye 45:5
- Câsiye 45:6
- Câsiye 45:7
- Câsiye 45:8
- Câsiye 45:9
- Câsiye 45:10
- Câsiye 45:11
- Câsiye 45:12
- Câsiye 45:13
- Câsiye 45:14
- Câsiye 45:15
- Câsiye 45:16
- Câsiye 45:17
- Câsiye 45:18
- Câsiye 45:19
- Câsiye 45:20
- Câsiye 45:21
- Câsiye 45:22
- Câsiye 45:23
- Câsiye 45:24
- Câsiye 45:25
- Câsiye 45:26
- Câsiye 45:27
- Câsiye 45:28
- Câsiye 45:29
- Câsiye 45:30
- Câsiye 45:31
- Câsiye 45:32
- Câsiye 45:33
- Câsiye 45:34
- Câsiye 45:35
- Câsiye 45:36
- Câsiye 45:37
- Ahkaf 46:1
- Ahkaf 46:2
- Ahkaf 46:3
- Ahkaf 46:4
- Ahkaf 46:5
- Ahkaf 46:6
- Ahkaf 46:7
- Ahkaf 46:8
- Ahkaf 46:9
- Ahkaf 46:10
- Ahkaf 46:11
- Ahkaf 46:12
- Ahkaf 46:13
- Ahkaf 46:14
- Ahkaf 46:15
- Ahkaf 46:16
- Ahkaf 46:17
- Ahkaf 46:18
- Ahkaf 46:19
- Ahkaf 46:20
- Ahkaf 46:21
- Ahkaf 46:22
- Ahkaf 46:23
- Ahkaf 46:24
- Ahkaf 46:25
- Ahkaf 46:26
- Ahkaf 46:27
- Ahkaf 46:28
- Ahkaf 46:29
- Ahkaf 46:30
- Ahkaf 46:31
- Ahkaf 46:32
- Ahkaf 46:33
- Ahkaf 46:34
- Ahkaf 46:35
- Muhammed 47:1
- Muhammed 47:2
- Muhammed 47:3
- Muhammed 47:4
- Muhammed 47:5
- Muhammed 47:6
- Muhammed 47:7
- Muhammed 47:8
- Muhammed 47:9
- Muhammed 47:10
- Muhammed 47:11
- Muhammed 47:12
- Muhammed 47:13
- Muhammed 47:14
- Muhammed 47:15
- Muhammed 47:16
- Muhammed 47:17
- Muhammed 47:18
- Muhammed 47:19
- Muhammed 47:20
- Muhammed 47:21
- Muhammed 47:22
- Muhammed 47:23
- Muhammed 47:24
- Muhammed 47:25
- Muhammed 47:26
- Muhammed 47:27
- Muhammed 47:28
- Muhammed 47:29
- Muhammed 47:30
- Muhammed 47:31
- Muhammed 47:32
- Muhammed 47:33
- Muhammed 47:34
- Muhammed 47:35
- Muhammed 47:36
- Muhammed 47:37
- Muhammed 47:38
- Feth 48:1
- Feth 48:2
- Feth 48:3
- Feth 48:4
- Feth 48:5
- Feth 48:6
- Feth 48:7
- Feth 48:8
- Feth 48:9
- Feth 48:10
- Feth 48:11
- Feth 48:12
- Feth 48:13
- Feth 48:14
- Feth 48:15
- Feth 48:16
- Feth 48:17
- Feth 48:18
- Feth 48:19
- Feth 48:20
- Feth 48:21
- Feth 48:22
- Feth 48:23
- Feth 48:24
- Feth 48:25
- Feth 48:26
- Feth 48:27
- Feth 48:28
- Feth 48:29
- Hucurat 49:1
- Hucurat 49:2
- Hucurat 49:3
- Hucurat 49:4
- Hucurat 49:5
- Hucurat 49:6
- Hucurat 49:7
- Hucurat 49:8
- Hucurat 49:9
- Hucurat 49:10
- Hucurat 49:11
- Hucurat 49:12
- Hucurat 49:13
- Hucurat 49:14
- Hucurat 49:15
- Hucurat 49:16
- Hucurat 49:17
- Hucurat 49:18
- Kâf 50:1
- Kâf 50:2
- Kâf 50:3
- Kâf 50:4
- Kâf 50:5
- Kâf 50:6
- Kâf 50:7
- Kâf 50:8
- Kâf 50:9
- Kâf 50:10
- Kâf 50:11
- Kâf 50:12
- Kâf 50:13
- Kâf 50:14
- Kâf 50:15
- Kâf 50:16
- Kâf 50:17
- Kâf 50:18
- Kâf 50:19
- Kâf 50:20
- Kâf 50:21
- Kâf 50:22
- Kâf 50:23
- Kâf 50:24
- Kâf 50:25
- Kâf 50:26
- Kâf 50:27
- Kâf 50:28
- Kâf 50:29
- Kâf 50:30
- Kâf 50:31
- Kâf 50:32
- Kâf 50:33
- Kâf 50:34
- Kâf 50:35
- Kâf 50:36
- Kâf 50:37
- Kâf 50:38
- Kâf 50:39
- Kâf 50:40
- Kâf 50:41
- Kâf 50:42
- Kâf 50:43
- Kâf 50:44
- Kâf 50:45
- Zariyat 51:1
- Zariyat 51:2
- Zariyat 51:3
- Zariyat 51:4
- Zariyat 51:5
- Zariyat 51:6
- Zariyat 51:7
- Zariyat 51:8
- Zariyat 51:9
- Zariyat 51:10
- Zariyat 51:11
- Zariyat 51:12
- Zariyat 51:13
- Zariyat 51:14
- Zariyat 51:15
- Zariyat 51:16
- Zariyat 51:17
- Zariyat 51:18
- Zariyat 51:19
- Zariyat 51:20
- Zariyat 51:21
- Zariyat 51:22
- Zariyat 51:23
- Zariyat 51:24
- Zariyat 51:25
- Zariyat 51:26
- Zariyat 51:27
- Zariyat 51:28
- Zariyat 51:29
- Zariyat 51:30
- Zariyat 51:31
- Zariyat 51:32
- Zariyat 51:33
- Zariyat 51:34
- Zariyat 51:35
- Zariyat 51:36
- Zariyat 51:37
- Zariyat 51:38
- Zariyat 51:39
- Zariyat 51:40
- Zariyat 51:41
- Zariyat 51:42
- Zariyat 51:43
- Zariyat 51:44
- Zariyat 51:45
- Zariyat 51:46
- Zariyat 51:47
- Zariyat 51:48
- Zariyat 51:49
- Zariyat 51:50
- Zariyat 51:51
- Zariyat 51:52
- Zariyat 51:53
- Zariyat 51:54
- Zariyat 51:55
- Zariyat 51:56
- Zariyat 51:57
- Zariyat 51:58
- Zariyat 51:59
- Zariyat 51:60
Şûrâ 42:1
இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
Şûrâ 42:2
இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
Şûrâ 42:3
இந்த வஹியைப் போன்றதை முஹம்மதே உமக்கும் உமக்கு முன்னர் வந்த அல்லாஹ்வின் நபிமார்களுக்கும் அறிவித்தவன் அல்லாஹ்தான். அவன் தன் எதிரிகளைத் தண்டிப்பதில் மிகைத்தவன்; தனது திட்டமிடலிலும் படைப்பிலும் ஞானம் மிக்கவன்.
Şûrâ 42:4
வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றைப் படைத்தல், ஆட்சி செய்தல், திட்டமிடல் என்பன அல்லாஹ்வுக்கே உரியன. அவன் உள்ளமையிலும் அந்தஸ்திலும் ஆதிக்கத்திலும் மிக உயர்ந்தவன்; தனது உள்ளமையில் மகத்தானவன்.
Şûrâ 42:5
அவனுடைய வல்லமையில் வெளிப்பாடு: பிரமாண்டமான, உயரமான வானங்கள் பிளந்து பூமியின் மீது விழப் பார்க்கின்றன. வானவர்கள் தங்கள் இறைவனைக் கண்ணியப்படுத்தும்பொருட்டு, அவனுக்கு அடிபணியும் பொருட்டு அவனைப் போற்றிப் புகழ்கிறார்கள். பூமியில் உள்ளவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறார்கள். அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Şûrâ 42:6
அல்லாஹ்வைத் தவிர சிலைகளை பாதுகாவலர்களாகவும் வணங்கும் தெய்வங்களாகவும் ஆக்கிக் கொண்டவர்களை அவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவர்களின் செயல்களை பதிவு செய்கிறான். அவற்றிற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான். -தூதரே!- நீர் அவர்களின் செயல்களைப் பாதுகாக்கும் பொறுப்பாளர் அல்ல. அவர்களின் செயல்களைக் குறித்து நீர் ஒருபோதும் கேட்கப்படமாட்டீர். நிச்சயமாக நீர் எடுத்துரைப்பவர் மட்டுமே.
Şûrâ 42:7
தூதரே!- உமக்கு முன் வந்த நபிமார்களுக்கு நாம் வஹி அறிவித்தவாறே உமக்கும் அரபி மொழியில் அமைந்துள்ள இந்த குர்ஆனை வஹியாக அறிவித்துள்ளோம். அது மக்காவாசிகளையும் அதனைச் சுற்றி இருக்கின்ற அரபுக்களையும் பின்னர் மனிதர்கள் அனைவரையும் நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காகவும் முன்னோர்களும் பின்னோர்களும் விசாரணைக்காக ஒரே மைதானத்தில் ஒன்றுதிரட்டப்படும் மறுமை நாளைக் குறித்து நீர் மக்களுக்கு அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவும்தான். அந்த நாள் நிகழ்வதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. அந்நாளில் மனிதர்கள் இருபிரிவினராக பிரிந்துவிடுவார்கள். ஒரு பிரிவினர் சுவனத்தில் இருப்பார்கள். அவர்கள் நம்பிக்கையாளர்களாவர். மற்றொரு பிரிவினர் நரகத்தில் இருப்பார்கள் அவர்கள் நிராகரிப்பாளர்களாவர்.
Şûrâ 42:8
அல்லாஹ் அவர்களை இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட ஒரே சமூகமாக ஆக்க நாடியிருந்தால் அவ்வாறு செய்திருப்பான். அவர்கள் அனைவரையும் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்திருப்பான். ஆயினும் அவன் அறிந்த நோக்கத்தின்படி தான் நாடியவர்களை இஸ்லாத்தில் பிரவேசிக்கச் செய்து அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்கிறான். நிராகரித்து, பாவங்கள் புரிந்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களுக்கு அவர்களைப் பொறுப்பேற்கும் பொறுப்பாளர்களோஅல்லாஹ்வின் வேதனையிலிருந்து பாதுகாக்கக்கூடிய உதவியாளர்களோ யாரும் இல்லை.
Şûrâ 42:9
மாறாக இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வைவிடுத்து மற்றவர்களை தாம் நேசிக்கும் நேசர்களாக எடுத்துக்கொண்டார்கள். அல்லாஹ்வே உண்மையான நேசனாவான். அவனைத் தவிர மற்றவர்கள் பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ மாட்டார்கள். அவனே விசாரணை செய்வதற்காகவும் கூலி வழங்குவதற்காகவும் இறந்தவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புகிறான். அவனால் இயலாதது எதுவும் இல்லை.
Şûrâ 42:10
மனிதர்களே!- நீங்கள் கருத்துவேறுபாடு கொண்ட மார்க்கத்தின் அடிப்படையான விஷயங்களின் அல்லது கிளை விஷயங்களின் தீர்ப்பு அல்லாஹ்விடமே உள்ளது. எனவே அதனை அவனது வேதத்திலோ அல்லது அவனது தூதரின் வழிமுறையிலோ தேடவேண்டும். இந்த பண்புகளை உடையவன்தான் என் இறைவன். நான் என்னுடைய அனைத்து விவகாரங்களிலும் அவன்மீதே நம்பிக்கை வைத்தேன். பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே நான் திரும்புகின்றேன்.
Şûrâ 42:11
அல்லாஹ்வே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவன் உங்களிலிருந்து உங்களுக்கு துணைகளை ஏற்படுத்தியுள்ளான். உங்களுக்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் உங்களுக்காக அவை பெருகும்பொருட்டு இணைகளாகப் படைத்துள்ளான். உங்களை திருமணத்தின் மூலம் இணைகளாக்கி பெருகச் செய்கிறான். உங்களுக்காக ஏற்படுத்திய கால்நடைகளைக் கொண்டு அவற்றின் இறைச்சி, பால் ஆகியவற்றைக் கொண்டு உங்களை வாழச் செய்கிறான். அவனுடைய படைப்புகளில் எதுவும் அவனுக்கு நிகர் இல்லை. அவன் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் செயல்களைப் பார்க்கக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான். நிச்சயமாக நற்செயல்களுக்கு நன்மையும் தீய செயல்களுக்கு தீமையும் கிடைக்கும்.
Şûrâ 42:12
வானங்கள் மற்றும் பூமியினுடைய கருவூலங்களின் திறவுகோல்கள் அவனிடம் மட்டுமே உள்ளன. அவன் தன் அடியார்களில் தான் நாடியோரை - அவர்கள் நன்றி செலுத்துகிறார்களா? அல்லது நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்கிறார்களா என்பதைச் - சோதிக்கும் பொருட்டு அவர்களுக்கு தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகிறான். தான் நாடியோரை - அவர்கள் பொறுமையைக் கடைபிடிக்கிறார்களா? அல்லது அல்லாஹ்வின் விதியை நொந்துகொள்கிறார்களா என்பதைச் - சோதிக்கும்பொருட்டு அதில் அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறான். நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். அடியார்களுக்கு நன்மைதரும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Şûrâ 42:13
நாம் நூஹிற்கு எதை எடுத்துரைக்குமாறும் செயல்படுமாறும் கட்டளையிட்டோமோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக ஆக்கியுள்ளான். -தூதரே!- நாம் உமக்கு வஹியாக அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு எடுத்துரைக்குமாறும் செயல்படுமாறும் கட்டளையிட்டதும் இதுதான் அதன் சாராம்சம்: “நீங்கள் மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதில் பிரிந்துவிடாதீர்கள்.” நீர் இணைவைப்பாளர்களை அல்லாஹ்வை ஒருமைப்படுத்துமாறும் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவதை விட்டுவிடுமாறும் அழைப்பது அவர்களுக்குக் கடினமாக இருக்கின்றது. அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியோரைத் தேர்ந்தெடுத்து தன்னை வணங்குவதற்கும் கீழ்ப்படிவதற்கும் பாக்கியம் புரிகிறான். அவர்களில் தன் பாவங்களுக்கு மன்னிப்புக்கோரி அவன் பக்கம் திரும்புபவர்களுக்குத்தான் தன் பக்கம் நேர்வழிகாட்டுகிறான்.
Şûrâ 42:14
முஹம்மது தூதராக அனுப்பப்பட்டு ஆதாரம் நிலைநாட்டப்பட்ட பிறகே நிராகரிப்பாளர்களும் இணைவைப்பாளர்களும் பிளவுபட்டார்கள். அவர்கள் அநீதி இழைத்ததன் காரணமாகத்தான் பிளவுபட்டார்கள். அல்லாஹ் தனது அறிவில் முடிவு செய்துள்ள குறிப்பிட்ட தவணையான மறுமை வரை அவர்களை விட்டும் வேதனையைத் தாமதப்படுத்துவதாக முன்பே முடிவு செய்யப்பட்டிருக்காவிட்டால் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளித்து அவர்களின் நிராகரிப்பினாலும் அவனது தூதர்களை பொய்ப்பித்ததனாலும் தண்டனையைத் துரிதப்படுத்தியிருப்பான். நிச்சயமாக தங்களின் முன்னோர்களுக்கு பின் தோன்றிய தவ்ராத்தைப் பெற்ற யூதர்களும் இன்ஜீலைப் பெற்ற கிறிஸ்தவர்களும் முஹம்மது கொண்டுவந்துள்ள இந்த குர்ஆனைக்குறித்து சந்தேகத்தில் வீழ்ந்து கிடக்கின்றார்கள். அதனை மறுக்கின்றார்கள்.
Şûrâ 42:15
நேரான இந்த மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக. அல்லாஹ் உமக்குக் கட்டளையிட்டபடி அதில் உறுதியாக இருப்பீராக. அவர்களின் தீய மனஇச்சைகளைப் பின்பற்றாதீர். அவர்களுடன் விவாதம் புரியும் போது நீர் கூறுவீராக: “நான் அல்லாஹ்வின் மீதும் அவன் தன் தூதர்களின் மீது இறக்கிய வேதங்களின் மீதும் நம்பிக்கைகொண்டேன். அவன் உங்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டுள்ளான். நான் வணங்கும் அல்லாஹ்தான் எங்களின் இறைவனும் உங்கள் அனைவரின் இறைவனுமாவான். நன்மையோ, தீமையோ எங்களுக்கு எங்களின் செயல்கள். உங்களுக்கு உங்களின் செயல்கள். ஆதாரம் தெளிவான பின்னர் உங்களுக்கும் எங்களுக்குமிடையே எந்த விவாதமும் இல்லை. அல்லாஹ் நம் அனைவரையும் ஒன்றுதிரட்டுவான். மறுமை நாளில் அவன் பக்கமே திரும்ப வேண்டும். அவன் நம்மில் ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை வழங்கிடுவான். அப்போது பொய்யரும் உண்மையாளரும் அசத்தியவாதியும் சத்தியவாதியும் தெளிவாகிவிடும்.
Şûrâ 42:16
மக்கள் முஹம்மதின் அழைப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் அவர் மீது இறக்கப்பட்ட மார்க்கத்தில் தவறான ஆதாரங்களைக் கொண்டு தர்க்கம் புரிபவர்களின் தர்க்கம் இறைவனிடத்திலும் நம்பிக்கையாளர்களிடத்திலும் வீணானதேயாகும். அதற்கு எந்த பிரதிபலிப்பும் இல்லை. அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து சத்தியத்தை மறுத்ததனால் அவர்களின் மீது அவனது கோபம் உண்டாகும். மறுமை நாளில் அவர்களுக்குக் கடுமையான வேதனை காத்திருக்கின்றது.
Şûrâ 42:17
நிராகரிப்பாளர்களின் வாதங்கள் தவறானவை என்பதைத் தெளிவுபடுத்திய இறைவன் முஸ்லிம் ஆதாரமாகக்கொளளும் ஆதாரங்களின் அடிப்படையான அல்குர்ஆனைப் பற்றித் தெளிவுபடுத்துகிறான். அவன் கூறுகிறான்: அல்லாஹ்தான் சந்தேகமற்ற உண்மையைக் கொண்டு குர்ஆனை இறக்கியுள்ளான். மக்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக நீதியை இறக்கியுள்ளான். இந்த நிராகரிப்பாளர்கள் பொய் எனக் கூறும் மறுமை நாள் சமீபத்தில் நிகழ்ந்துவிடலாம். உண்மையில் வரக்கூடிய ஒவ்வொன்றும் நெருங்கிவிட்டவையே.
Şûrâ 42:18
அதன்மீது நம்பிக்கைகொள்ளாதவர்கள் அதனை விரைவாக வேண்டுகிறார்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கையோ, நற்கூலி தண்டனை வழங்கப்படுவதையோ நம்புவதில்லை. அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்கள் தங்களின் முடிவின் மீதுள்ள அச்சத்தினால் அதனைக்குறித்து அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். திட்டமாக அது சந்தேகமற்ற உண்மை என்பதை அவர்கள் உறுதியாக அறிவார்கள். அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக மறுமை நாளைக்குறித்து தர்க்கம் செய்பவர்கள், அது நிகழும் என்பதில் சந்தேகம் கொள்பவர்கள் சத்தியத்தைவிட்டும் தூரமான வழிகேட்டில் இருக்கின்றார்கள்.
Şûrâ 42:19
அல்லாஹ் தன் அடியார்களுடன் பெரும் கிருபையாளனாக இருக்கின்றான். அவன் தான் நாடியவர்களுக்கு தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகிறான். தான் நாடியவர்களுக்கு தனது ஞானம் மற்றும் நுணுக்கத்தின் பிரகாரம் நெருக்கடியை ஏற்படுத்துகிறான். அவனை யாராலும் மிகைக்க முடியாத பலமுள்ளவன். தன் எதிரிகளைத் தண்டிக்க வல்லமையுள்ளவன்.
Şûrâ 42:20
யார் மறுமைக்காகச் செயல்பட்டு அதன் நன்மையை விரும்புவாரோ நாம் அவருக்கு பலமடங்கு நன்மையை அளிப்போம். ஒரு நன்மை பத்திலிருந்து எழுநூறு நன்மைகளாக, பன்மடங்காகப் பெருகுகிறது. யார் உலகத்தை மட்டும் விரும்புவாரோ நாம் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட பங்கினை அளித்துவிடுவோம். மறுமையைவிட உலகைத் தேர்ந்தெடுத்ததனால் மறுமையில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை.
Şûrâ 42:21
அல்லது இந்த இணைவைப்பாளர்களுக்கு அல்லாஹ்வைத் தவிர இருக்கும் தெய்வங்கள் அவன் அனுமதியளிக்காத இணைவைப்பு, ஹலாலை ஹராமாக்கி, ஹராத்தை ஹலால் ஆக்கிவிட்டனவா? அல்லாஹ் முரண்பட்டவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்கு குறிப்பிட்ட தவணையை நிர்ணயித்து அதுவரைக்கும் அவர்களுக்கு அவகாசம் வழங்காவிட்டால் அவர்களிடையே தீர்ப்பு செய்திருப்பான். நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியும் பாவங்கள் புரிந்தும் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு மறுமை நாளில் வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது.
Şûrâ 42:22
தூதரே!- இணைவைத்தும் பாவங்கள் புரிந்தும் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்கள் தாங்கள் சம்பாதித்த பாவங்களினால் தங்களின் மீது வேதனை சந்தேகம் இல்லாமல் இறங்கிவிடுமோ என்று பயந்து கொண்டிருப்பார்கள். பாவமன்னிப்புக் கோராமல் வெறும் பயத்தினால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அதற்கு மாறாக அவர்களில் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்டவர்கள் சுவனப் பூங்காக்களில் இன்பம் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் இறைவனிடம் தாங்கள் விரும்புகின்ற என்றும் முடிவடையாத நிலையான இன்பங்களையெல்லாம் பெறுவார்கள். இது மாபெரும் அருளாகும். இதற்கு இணையான வேறு அருள் இல்லை.
Şûrâ 42:23
தன்மீதும் தன் தூதர் மீதும் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரியும் அடியார்களுக்கு தன் தூதரின் மூலமாக அல்லாஹ் மகத்தான இந்த நற்செய்தியை அளிக்கின்றான். -தூதரே!- நீர் கூறுவீராக: “நான் எடுத்துரைக்கும் இந்த சத்தியத்திற்கு உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. ஆனால் ஒரேயொரு நன்மையை எதிர்பார்க்கிறேன். அதனால் ஏற்படும் நன்மையும் உங்களையே சாரும். அது, நான் உங்களின் உறவினராக இருப்பதால் நீங்கள் என்னை நேசிக்க வேண்டும் என்பதே அதுவாகும். யார் ஒரு நன்மையைச் சம்பாதிப்பாரோ நாம் அவருக்கு அதனை பன்மடங்காக்கித் தருவோம். ஒரு நலவுக்கு அதைப்போன்ற பத்து மடங்கு நன்மையுண்டு. நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் தன் திருப்தியை நாடி அவர்கள் செய்யும் நற்செயல்களுக்கு நன்றி பாராட்டுபவனாகவும் இருக்கின்றான்.
Şûrâ 42:24
முஹம்மது இந்த குர்ஆனைப் புனைந்து விட்டு அதனைத் தனது இறைவன் கூறியதாகக் கூறுகின்றார் என்பது இணைவைப்பாளர்களின் எண்ணமாகும். அவர்களுக்கு மறுப்பாக அல்லாஹ் கூறுகிறான்: ஒரு பொய்யைப் புனைய உனது மனம் விரும்பினால் உமது உள்ளத்தின் மீது முத்திரையிட்டு புனையப்பட்ட அசத்தியத்தை அழித்துவிடுவேன். சத்தியத்தை நிலைநிறுத்துவேன். அவ்வாறு எந்த விடயமும் நடைபெறாமை அல்லாஹ்விடமிருந்து தனக்கு வஹி அறிவிக்கப்படுள்ளது என் நபியவர்களின் நம்பகத் தன்மைக்கான சான்றாகும். அவர் . நிச்சயமாக அவன் தன் அடியார்களின் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Şûrâ 42:25
அவனே தன் அடியார்கள் நிராகரிப்பு, பாவங்கள் ஆகியவற்றிலிருந்து பாவமன்னிப்புக் கோரினால் அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான். அவர்கள் செய்த பாவங்களை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறான். நீங்கள் செய்யும் அனைத்தையும் அவன் அறிகிறான். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Şûrâ 42:26
அவன் தன் மீதும் தன் தூதர்கள் மீதும் நம்பிக்கைகொண்டு நன்மைசெய்தோரின் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்கிறான். தன் அருளிலிருந்து அவர்கள் கேட்காதவற்றையும் இன்னும் அதிகமாக வழங்குகிறான். அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரிப்பவர்களுக்கு மறுமை நாளில் கடுமையான வேதனை காத்திருக்கின்றது.
Şûrâ 42:27
அல்லாஹ் தன் அடியார்கள் அனைவருக்கும் தாராளமாக வாழ்வாதாரம் வழங்கியிருந்தால் அவர்கள் பூமியில் அநியாயமாக வரம்புமீறியிருப்பார்கள். ஆயினும் அல்லாஹ் தான் நாடிய ஒரு அளவோடு விசாலமாகவும் நெருக்கடியாகவும் அதனை இறக்கிவைக்கிறான். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் நிலைகளை நன்கறிந்தவன். அவற்றைப் பார்க்கக்கூடியவன். அவன் வழங்குவதும் வழங்காமலிருப்பதும் ஒரு நோக்கத்திற்காகவேயாகும்.
Şûrâ 42:28
அவனே தன் அடியார்கள் மழை இறங்காது என்று நம்பிக்கையிழந்தபிறகு அவர்களின் மீது மழை பொழியச் செய்கிறான். இந்த மழையைப் பரவச் செய்கிறான். பூமியில் தாவரங்கள் முளைக்கின்றன. அவன் தன் அடியார்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்கக்கூடியவன். எல்லா நிலையிலும் புகழுக்குரியவன்.
Şûrâ 42:29
அவன் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகளில் உள்ளவைதான், வானங்கள் மற்றும் பூமியைப் படைத்து அவையிரண்டிலும் அவன் பரவச் செய்துள்ள வியப்பூட்டும் படைப்புகளாகும். அவன் தான் நாடிய சமயத்தில் அவர்களை ஒன்றுதிரட்டுவதற்கும் கூலி வழங்குவதற்கும் ஆற்றலுடையவன். அவர்களை முதல் தடவை படைப்பது எவ்வாறு அவனால் முடியுமோ அது போன்றே இதுவும் முடியாததல்ல.
Şûrâ 42:30
மனிதர்களே!- உங்கள் உயிர்களிலோ, செல்வங்களிலோ உங்களுக்கு ஏற்படும் எந்த துன்பமானாலும் அது நீங்கள் சம்பாதித்த பாவங்களின் விளைவேயாகும். அவன் உங்களின் அநேகமான பாவங்களை கண்டும்காணாமல் விட்டுவிடுகிறான். அவற்றிற்காக உங்களைத் தண்டிப்பதில்லை.
Şûrâ 42:31
உங்களின் இறைவன் உங்களைத் தண்டிக்க நாடினால் நீங்கள் அவனிடமிருந்து விரண்டோடி தப்பிச் செல்ல சக்திபெற முடியாது. உங்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்கும் பொறுப்பார்களோ அல்லாஹ் தண்டிக்க நாடினால் அதிலிருந்து உங்களைக் காப்பாற்றும் உதவியாளர்களோ அவனை விடுத்து யாரும் உங்களுக்கு இருக்க மாட்டார்கள்.
Şûrâ 42:32
அவன் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகளில் உள்ளவைதான், கடலில் செல்லும் மலைகளைப் போன்ற மலைகளைப் போன்ற உயர்ந்த கப்பல்களாகும்.
Şûrâ 42:33
அவன் அவற்றை இழுத்துச் செல்லும் காற்றை நிறுத்த நாடியிருந்தால் நிறுத்தியிருப்பான். அவை அசையாதவாறு கடலில் ஸ்தம்பித்துவிடும். நிச்சயமாக இவ்வாறு குறிப்பிடப்பட்ட கப்பல்களை படைத்திருப்பதிலும் காற்றுகளை வசப்படுத்தித் தந்திருப்பதிலும் துன்பங்களை பொறுமையாக எதிர்கொள்ளக்கூடிய, அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தக்கூடிய ஒவ்வொருவருக்கும் தெளிவான சான்றுகள் இருக்கின்றன.
Şûrâ 42:34
அல்லது புயல்காற்றை அனுப்பி இந்த கப்பல்களை அழிக்க நாடினால் மனிதர்கள் செய்த பாவங்களின் காரணமாக அவற்றை அழித்திருப்பான். அவன் தன் அடியார்களின் அதிகமான பாவங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடக்கூடியவன். எனவேதான் அவற்றுக்காக அவன் அவர்களைத் தண்டிப்பதில்லை.
Şûrâ 42:35
புயல்காற்றை அனுப்பி நாம் கப்பல்களை மூழ்கடிக்கும்போது அல்லாஹ்வின் வசனங்களில் அதை பொய்யாக்குவதற்காக தர்க்கம் புரிபவர்கள் அழிவிலிருந்து தாங்கள் எங்கும் தப்பிச் செல்ல முடியாது என்பதை அறிந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வையே அழைப்பார்கள். மற்றவர்களை விட்டுவிடுவார்கள்.
Şûrâ 42:36
மனிதர்களே!- உங்களுக்கு வழங்கப்பட்ட செல்வங்கள், குழந்தைகள், பதவிகள் இன்னபிற விஷயங்கள் அனைத்தும் உலக வாழ்வின் இன்பங்கள்தாம். அவை அழிபவையே, துண்டிக்கப்படுபவையே. தன்மீதும் தன் தூதர்களின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்காக அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ள சுவனத்தின் இன்பமே நிலையான இன்பமாகும். அவர்கள் தங்களின் எல்லா விவகாரங்களிலும் தங்கள் இறைவனை மட்டுமே சார்ந்திருப்பார்கள்.
Şûrâ 42:37
அவர்கள் பெரும் பாவங்கள் மற்றும் மானக்கேடானவற்றை விட்டும் தூரமாகியிருக்கிறார்கள். தங்களுக்கு சொல்லாலும் செயலாலும் தீங்கிழைத்தவர்கள் மீது கோபம் கொண்டால் அவர்களின் தவறுகளை மன்னித்துவிடுவார்கள். அதற்காக பழிவாங்கமாட்டார்கள். அவர்களை மன்னிப்பதில் நலவு, நன்மையிருப்பின் இவ்வாறு மன்னிப்பது அவர்கள் செய்யும் பேருபகாரமாகும்.
Şûrâ 42:38
அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனுக்குப் பதிலளிக்கிறார்கள். தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுகிறார்கள். முக்கியமான விஷயங்களில் தங்களிடையே ஆலோசனை செய்துகொள்வார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நம் திருப்தியை நாடி செலவும் செய்வார்கள்.
Şûrâ 42:39
தங்கள்மீது அநீதி இழைக்கப்பட்டால் அநியாயக்காரன் மன்னிப்பிற்குத் தகுதியானவன் இல்லையெனில் தங்களின் கண்ணியத்தைக் காக்கும்பொருட்டு பழிவாங்குவார்கள். இவ்வாறு பழிவாங்குவது அவர்களின் உரிமையாகும். குறிப்பாக மன்னிப்பதில் எந்த நலவும் இல்லையெனில்.
Şûrâ 42:40
தன் உரிமையைப் பெற விரும்புபவர் அதனை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் எவ்வித அதிகரிப்பு, வரம்புமீறலுமின்றி சரிக்கு சமமான அளவே அவர் பழிவாங்க வேண்டும். யார் தனக்குத் தீங்கிழைத்தவரைத் தண்டிக்காமல் மன்னித்துவிடுவாரோ, தனக்கும் தன் சகோதரனுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்திக் கொண்டாரோ அவருடைய கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அல்லாஹ் மக்களின் செல்வங்களிலோ, உயிர்களிலோ, மானத்திலோ அநியாயம் இழைக்கும் அநியாயக்காரர்களை விரும்புவதில்லை. மாறாக அவர்களை வெறுக்கிறான்.
Şûrâ 42:41
யார் தமக்காக பழிவாங்குகிறார்களோ அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. பழிவாங்குவதனால் அவர்கள் தங்களின் உரிமையைத்தான் பெறுகிறார்கள்.
Şûrâ 42:42
நிச்சயமாக மக்களின் மீது அநீதி இழைத்து பூமியில் பாவங்கள் புரிபவர்களுக்குத்தான் குற்றம் சுமத்த வழி இருக்கிறது. அவர்களுக்கு மறுமையில் வேதனைமிக்க தண்டனை இருக்கின்றது.
Şûrâ 42:43
யார் மற்றவர்கள் தமக்கு அளித்த தீங்குகளை பொறுமையாக சகித்து, கண்டுகொள்ளாமல் மன்னித்து விட்டுவிட்டாரோ அது அவருக்கும் சமூகத்திற்கும் நன்மைதரக்கூடியதாகும். இது புகழுக்குரிய விஷயமாகும். பெரும் பாக்கியம் பெற்றவர்களே இதற்கு வழிகாட்டப்படுவார்கள்.
Şûrâ 42:44
யாருக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டாமல் சத்தியத்தைவிட்டு அவரை வழிகெடுத்துவிடுவானோ அவனுக்கு அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுடைய காரியத்தை பொறுப்பெடுக்கும் எந்த பொறுப்பாளனும் இல்லை. நிராகரித்தும் பாவங்கள் புரிந்தும் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட அநியாயக்காரர்கள் வேதனையைக் காணும் போது “நாங்கள் உலகிற்கு திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவதற்கு ஏதேனும் வழி உண்டா?” என்று அவர்கள் ஆசைப்பட்டு கூறுவதை நீர் காண்பீர்.
Şûrâ 42:45
தூதரே!- இந்த அநியாயக்காரர்கள் இழிவுபடுத்தப்பட்டு நரகத்தின் முன் நிறுத்தப்படுவதை நீர் காண்பீர். அப்போது அவர்கள் அதன் கடுமையான பயத்தினால் கடைக்கண்ணால் மக்களைப் பார்ப்பார்கள். அப்போது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைகொண்டவர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக மறுமை நாளில் அல்லாஹ்வின் வேதனையை சந்தித்து தங்களையும் தங்களின் குடும்பத்தாரையும் இழந்தவர்கள்தாம் உண்மையில் நஷ்டமடைந்தவர்கள்.” அறிந்துகொள்ளுங்கள், திட்டமாக நிராகரித்து பாவங்கள் புரிந்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்கள் என்றும் முடிவடையாத நிரந்தர வேதனையில் வீழ்ந்து கிடப்பார்கள்.
Şûrâ 42:46
மறுமை நாளில் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றி உதவிசெய்யக்கூடிய யாரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள். அல்லாஹ் யாரைக் கைவிட்டு வழிகெடுத்து விடுவானோ அவருக்கு சத்தியத்தின்பால் நேர்வழி பெற அதன்பால் கொண்டுசெல்லும் எந்தவொரு வழியும் ஒருபோதும் இல்லை.
Şûrâ 42:47
மனிதர்களே!- வந்தால் தடுக்க முடியாத மறுமை நாள் வருவதற்கு முன்னர், உங்கள் இறைவனின் கட்டளைகளை செயல்படுத்தல், அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகியிருத்தல், காலம் தாழ்த்துவதை விட்டுவிடுதல் ஆகிவற்றின் பக்கம் விரைவதன் மூலம் அவனுக்குப் பதிலளியுங்கள். அந்நாளில் உங்களுக்கு நீங்கள் ஒதுங்கும் எந்தப் புகலிடமும் இருக்காது. உலகில் நீங்கள் செய்த பாவங்களையும் உங்களால் மறுக்க முடியாது.
Şûrâ 42:48
தூதரே!- நீர் ஏவும் விஷயங்களை அவர்கள் புறக்கணித்தால் அறிந்துகொள்ளும், அவர்களின் செயல்களைக் கண்காணிக்கும் கண்காணிப்பாளராக நாம் உம்மை அனுப்பவில்லை. நான் கட்டளையிட்டவற்றை எடுத்துரைப்பதைத் தவிர உம்மீது வேறு எந்த பொறுப்பும் இல்லை. அவர்களை விசாரணை செய்வது அல்லாஹ்வின் மீதுள்ள கடமையாகும். நாம் மனிதனுக்கு ஆரோக்கியம், செல்வம் போன்ற அருளை வழங்கி அவனை அனுபவிக்கச் செய்தால் அவன் மகிழ்ச்சியடைகிறான். அவர்களின் பாவங்களின் காரணமாக ஏதேனும் துன்பம், சோதனை மனிதர்களைத் தீண்டிவிட்டால், அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரிப்பதும், நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்வதும் அல்லாஹ் தனது நோக்கத்தின் அடிப்படையில் முடிவுசெய்தவற்றை வெறுப்பதுமே நிச்சயமாக அவர்களின் இயல்பாகும்.
Şûrâ 42:49
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் ஆண், பெண் மற்றும் அது அல்லாதவற்றில் தான் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியவர்களுக்குப் பெண் குழந்தைகளை வழங்கி ஆண் குழந்தைகளைத் தடுக்கிறான். தான் நாடியவர்களுக்கு ஆண் குழந்தைகளை வழங்கி பெண் குழந்தைகளைத் தடுக்கிறான். அல்லது தான் நாடியவர்களுக்கு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வழங்குகிறான். தான் நாடியவர்களை குழந்தைகளற்ற மலடுகளாக ஆக்குகிறான். நிகழ்வதையும் எதிர்காலத்தில் நிகழக்கூடியதையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன். இது அவனின் பரிபூரண அறிவு மற்றும் பூரண ஞானத்தில் உள்ளதாகும். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவனால் இயலாதது எதுவுமில்லை.
Şûrâ 42:50
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் ஆண், பெண் மற்றும் அது அல்லாதவற்றில் தான் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியவர்களுக்குப் பெண் குழந்தைகளை வழங்குகி பெண் குழந்தைகளைத் தடுக்கிறான். தான் நாடியவர்களுக்கு ஆண் குழந்தைகளை வழங்கி ஆண் குழந்தைகளைத் தடுக்கிறான். அல்லது தான் நாடியவர்களுக்கு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வழங்குகிறான். தான் நாடியவர்களை குழந்தைகளற்ற மலடுகளாக ஆக்குகிறான். நிகழ்வதையும் எதிர்காலத்தில் நிகழக்கூடியதையும் அவன் நன்கறிந்தவன். இது அவனின் பரிபூரண அறிவு மற்றும் ஞானத்தில் உள்ளதாகும். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவனால் இயலாதது எதுவுமில்லை.
Şûrâ 42:51
அல்லாஹ் எந்த மனிதனுடனும் நேரடியாக பேச மாட்டான். ஆயினும் உள்ளுணர்வுடனான வஹி அல்லது வேறு வழியில் மூலமோ அல்லது பார்க்காமல் அவனது பேச்சை செவியேற்பதன் மூலம் பேசுவதோ அல்லது ஜிப்ரீல் போன்ற ஒரு வானவரை அனுப்பியோ அன்றி. அந்த வானவர் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அவன் நாடியதை மனித இனத்தைச் சார்ந்த தூதருக்கு வஹியாக அறிவிக்கின்றார். நிச்சயமாக அவன் தன் உள்ளமையிலும் பண்புகளிலும் மிக உயர்ந்தவன். தன் படைப்பில், விதிகளில், சட்டங்களில் அவன் ஞானம் மிக்கவன்.
Şûrâ 42:52
தூதரே!- உமக்கு முன்னர் தூதர்களுக்கு வஹி அறிவித்தவாறே உமக்கும் குர்ஆனை நம்மிடமிருந்து வஹியாக அறிவித்துள்ளோம். தூதர்கள் மீது இறக்கப்பட்ட விண்ணுலக வேதங்கள் யாவை? ஈமான் என்றால் என்ன? என்பதை முன்னர் நீர் அறியாதவராக இருந்தீர். ஆயினும் நாம் குர்ஆனை ஒளியாக இறக்கியுள்ளோம். அதனைக் கொண்டு நம் அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர்வழிகாட்டுகின்றோம். நிச்சயமாக நீர் மக்களுக்கு இஸ்லாம் என்னும் நேரான பாதையின்பால் வழிகாட்டுகின்றீர்.
Şûrâ 42:53
அது அல்லாஹ்வின் பாதையாகும். வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் படைப்பிலும் அதிகாரத்திலும் திட்டமிடுவதிலும் அவனுக்கே உரியன. விவகாரங்கள் அனைத்தும் அவற்றின் நிர்ணயம், திட்டமிடல் ஆகியவற்றில் அல்லாஹ்வின் பக்கம் மட்டுமே உறுதியாக திரும்புகின்றன.
Zuhruf 43:1
இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
Zuhruf 43:2
சத்தியத்திற்கு நேர்வழிகாட்டும் பாதையைத் தெளிவுபடுத்தும் அல்குர்ஆனைக்கொண்டு அல்லாஹ் சத்தியமிடுகிறான்.
Zuhruf 43:3
குர்ஆன் தமது மொழியில் இறங்கிய சமுதாயமே!- அல்குர்ஆனின் கருத்துகளை நீங்கள் புரிந்துகொண்டு அதனை மற்ற சமூகங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக நிச்சயமாக நாம் அதனை அரபு மொழியில் ஆக்கியுள்ளோம்.
Zuhruf 43:4
லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டில் உள்ள இந்த குர்ஆன் நிச்சயமாக மிக உயர்வானதும் ஞானம் நிறைந்ததுமாகும். ஏவல்கள், விலக்கல்கள் சம்பந்தமான அதன் வசனங்கள் நுணுக்கமானவையாகும்.
Zuhruf 43:5
நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குவதிலும் பாவங்கள் புரிவதிலும் மூழ்கி புறக்கணித்திருப்பதன் காரணமாக உங்களுக்கு இக்குர்ஆனை இறக்காமல் விட்டுவிடுவோமா என்ன? நாம் அவ்வாறு செய்ய மாட்டோம். மாறாக உங்கள் மீதுள்ள கருணை இந்த குர்ஆனை உங்களுக்கு வழங்கவே விரும்புகிறது.
Zuhruf 43:6
நாம் முந்தைய சமூகங்களில் எத்தனையோ நபிமார்களை அனுப்பியுள்ளோம்.
Zuhruf 43:7
அந்த சமூகங்களிடம் அல்லாஹ்விடமிருந்து வந்த நபியை அவர்கள் பரிகாசம் செய்துகொண்டுதான் இருந்தார்கள்.
Zuhruf 43:8
அந்த சமூகங்களைவிட பலம்மிக்க எத்தனையோ சமூகங்களை நாம் அழித்துவிட்டோம். அவர்களைவிட பலவீனமானவர்களை அழிப்பது நம்மால் முடியாத காரியமல்ல. முந்தைய சமூகங்களான ஆத், ஸமூத், மத்யன் வாசிகள், லூத்தின் சமூகம் ஆகியோரை அழித்த விதங்கள் குர்ஆனில் இடம்பெற்றுள்ளது.
Zuhruf 43:9
தூதரே!- நீர் இந்த பொய்ப்பித்த இணைவைப்பாளர்களிடம் “வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்” என்று கேட்டால் “திட்டமாக யாவற்றையும் மிகைத்த, யாராலும் மிகைக்க முடியாத அனைத்தையும் அறிந்தவன்தான் அவற்றைப் படைத்தான்” என்று அவர்கள் உமது கேள்விக்கு பதிலாக கூறுவார்கள்.
Zuhruf 43:10
அல்லாஹ்தான் உங்களுக்காக பூமியைத் தயார்படுத்தியுள்ளான். உங்கள் பாதங்களால் மிதிக்கும் விரிப்பாக ஆக்கியுள்ளான். உங்கள் பயணத்தில் வழிகாட்டலைப் பெறுவதற்காக அதன் மலைகளிலும் கணவாய்களிலும் உங்களுக்காக பாதைகளை அமைத்துள்ளான்.
Zuhruf 43:11
அவன்தான் வானத்திலிருந்து உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பயிர்களுக்கும் போதுமான அளவு நீரை இறக்கினான். அதனைக்கொண்டு தாவரங்களற்ற வறண்ட பூமியை நாம் உயிர்ப்பித்தோம். வறண்ட அந்த பூமியை தாவரத்தின் மூலம் அல்லாஹ் உயிர்ப்பித்தது போன்றே மீண்டும் எழுப்புவதற்காக உங்களை உயிர்ப்பிப்பான்.
Zuhruf 43:12
அவன்தான் இரவு, பகல் ஆண், பெண் போன்ற அனைத்து விதமான சோடிகளையும் படைத்துள்ளான். நீங்கள் பயணம் செய்வதற்காக கப்பல்களையும் கால்நடைகளையும் அவன் உங்களுக்கு ஆக்கித் தந்துள்ளான். நீங்கள் கடலில் கப்பல்களிலும் நிலத்தில் கால்நடைகளிலும் பயணம் செய்கிறீர்கள்.
Zuhruf 43:13
இவையனைத்தையும் அவன் உங்களுக்காக ஏற்படுத்தித் தந்துள்ளான். அது நீங்கள் அவற்றின் மீது பயணம் செய்து அவற்றின் முதுகுகளின் மேல் நீங்கள் உறுதியாக இருந்ததும் அவற்றை வசப்படுத்தித் தந்த உங்கள் இறைவனை நினைவுகூர்ந்து நாவால் பின்வருமாறு கூறுவதற்காகத்தான்: “எங்களுக்கு இந்த வாகனத்தை வசப்படுத்தித் தந்தவன் மிகவும் தூய்மையானவன். அதனால்தான் அதனை நாம் கட்டுப்படுத்துகிறோம். அல்லாஹ் அதனை வசப்படுத்தித் தந்திராவிட்டால் நாங்கள் அதற்கு சக்திபெற்றவர்களல்ல.
Zuhruf 43:14
நிச்சயமாக நாங்கள் இறந்த பிறகு விசாரணைக்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் எங்கள் இறைவனின் பக்கம் மட்டுமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கின்றோம்.”
Zuhruf 43:15
“வானவர்கள் அல்லாஹ்வின் மகள்கள்” என்று எண்ணி இணைவைப்பாளர்கள் சில படைப்புகளை அவனுக்குப் பிறந்தவை எனக்கூறினர். நிச்சயமாக இவ்வாறான வார்த்தையை கூறும் மனிதன் தெளிவான நிராகரிப்பாளனாகவும் வழிகேடனாகவும் இருக்கின்றான்.
Zuhruf 43:16
இணைவைப்பாளர்களே!- அல்லாஹ் தான் படைத்தவற்றிலிருந்து பிள்ளைகளில் தனக்காக பெண் மக்களை ஆக்கிக் கொண்டு உங்களுக்காக ஆண் பிள்ளைகளை தேர்ந்தெடுத்துள்ளான் என்று கூறுகிறீர்களா? நீங்கள் எண்ணும் இந்தப் பங்கீடு எவ்வகையானதோ?
Zuhruf 43:17
தனது இறைவனுக்கு உண்டென்று இவர்கள் இணைத்துக் கூறும் பெண் குழந்தையைக் கொண்டு அவர்களில் யாருக்காவது நற்செய்தி கூறப்பட்டால் கடுமையான கவலையினாலும் துக்கத்தினாலும் அவனது முகம் கருத்துவிடுகிறது. அவனுக்கு கோபம் பொங்குகிறது. நன்மாராயம் கூறப்படும் போது தனக்குக் கவலையளிக்கும் ஒன்றை எவ்வாறு அவன் தன் இறைவனுடன் இணைத்துக் கூற முடியும்?
Zuhruf 43:18
அலங்காரத்தில் வளர்க்கப்பட்டு விவாதத்தில் பெண்மையின் காரணத்தால் வாதத்தில் தெளிவாக வாதாட முடியாதவர்களையா இவர்கள் தங்கள் இறைவனுடன் இணைத்துக் கூறுகிறார்கள்?
Zuhruf 43:19
அளவிலாக் கருணையாளனின் அடியார்களான வானவர்களை அவர்கள் பெண்களாக பெயர்சூட்டி விட்டார்கள். அல்லாஹ் அந்த வானவர்களைப் படைத்தபோது இவர்கள் அங்கு இருந்து, நிச்சயமாக அவர்கள் பெண்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார்களா? வானவர்கள் அவர்களின் இந்த சாட்சியத்தை பதிவுசெய்வார்கள். மறுமை நாளில் அதுகுறித்து அவர்கள் விசாரிக்கப்படுவார்கள். அவர்கள் பொய்யுரைத்ததனால் அதன் மூலம் அவர்கள் வேதனைக்குள்ளாக்கப்படுவார்கள்.
Zuhruf 43:20
அவர்கள் விதியை ஆதாரமாகக் காட்டி கூறுகிறார்கள்: “நாங்கள் வானவர்களை வணங்கக் கூடாது என்று அல்லாஹ் நாடியிருந்தால் நாங்கள் அவர்களை வணங்கியிருக்க மாட்டோம். நாம் அவ்வாறு செய்வதை அவன் நாடியிருப்பது அவனது விருப்பத்தின் அடையாளமாகும்.” இவ்வாறு கூறும் அவர்களிடம் எந்த அறிவும் இல்லை. அவர்கள் பொய்தான் கூறுகிறார்கள்.
Zuhruf 43:21
அல்லது நாம் இந்த இணைவைப்பாளர்களுக்கு குர்ஆனுக்கு முன்னர் ஒரு வேதம் வழங்கி அதில் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை வணங்குவதற்கு ஆகுமாக்கியுள்ளோமா? அந்த வேதத்தை அவர்கள் உறுதியாக பற்றிக் கொண்டு அதனை ஆதாரமாக முன்வைக்கின்றார்களா?
Zuhruf 43:22
இல்லை. அவ்வாறு நிகழவேயில்லை. மாறாக அவர்கள் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதை ஆதாரமாகக் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்கள் முன்னோர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம். அவர்கள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தார்கள். நிச்சயமாக நாங்களும் அவற்றை வணங்குவதில் அவர்களின் அடிச்சுவட்டையே பின்பற்றுகிறோம்.”
Zuhruf 43:23
தூதரே!- இவர்கள் பொய்ப்பித்து தங்கள் முன்னோர்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதை ஆதாரமாகக் கொண்டது போன்றே நாம் எந்த ஊருக்கும் அவர்களை அச்சமூட்டுவதற்காக அனுப்பிய தூதர்கள் தங்களின் சமூகங்களிடம் வந்தபோது அவர்களில் வசதிபடைத்தவர்களான அவர்களின் தலைவர்கள், பெரியவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்களின் முன்னோர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம். திட்டமாக அவர்களின் அடிச்சுவடுகளையே நாங்கள் பின்பற்றுகின்றோம்.” எனவே இவ்வாறு கூறுவதில் உம் சமூகத்தினர் முதலாமவர்கள் அல்ல.
Zuhruf 43:24
அவர்களின் தூதர் அவர்களிடம் கேட்டார்: “நான் நீங்கள் இருந்துகொண்டிருக்கும் உங்கள் முன்னோர்களின் மார்க்கத்தைவிட சிறந்த ஒன்றைக் கொண்டு வந்தாலும் நீங்கள் அவர்களைப் பின்பற்றுவீர்களா?” அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நீர் கொண்டுவந்துள்ள தூதையும் உமக்கு முன்னர் வந்த தூதர்கள் கொண்டுவந்ததையும் நாங்கள் நிராகரிப்பவர்களாகவே இருப்போம்.”
Zuhruf 43:25
எனவே உமக்கு முன்னர் தூதர்களை பொய்ப்பித்த அந்த சமூகங்களை நாம் தண்டித்து அவர்களை அழித்துவிட்டோம். தங்களின் தூதர்களை பொய்ப்பித்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. அவர்களின் முடிவு வேதனைமிக்கதாகவே இருந்தது.
Zuhruf 43:26
தூதரே!- இப்ராஹீம் தம் தந்தையிடமும் சமூகத்திடமும் கூறியதை நினைவு கூர்வீராக: “நிச்சயமாக நான் அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் சிலைகளைவிட்டு விலகிவிட்டேன்.”
Zuhruf 43:27
ஆனால் என்னைப் படைத்த அல்லாஹ்வைத் தவிர. நிச்சயமாக அவன் எனக்குப் பயனளிக்கக்கூடிய அவனது உறுதியான மார்க்கத்தின்பால் பின்பற்ற வழிகாட்டுவான்.”
Zuhruf 43:28
இப்ராஹீம் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற ஏகத்துவ வாரத்தையை தமக்குப் பிறகு நிலையாக ஆக்கி தம் சந்ததிகளிடம் விட்டுச் சென்றார். எனவே அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவகை்காது அவனை ஒருமைப்படுத்துவோர் அவர்களில் இருந்துகொண்டே இருப்பார்கள். அது, அவர்கள் இணைவைப்பு மற்றும் பாவங்களைவிட்டு அல்லாஹ்வின்பால் பாவமன்னிப்பின்பால் திரும்ப வேண்டும் என்பதன் பொருட்டாகும்.
Zuhruf 43:29
நான் இந்த பொய்ப்பிக்கும் இணைவைப்பாளர்களை உடனடியாக அழித்துவிடவில்லை. மாறாக குர்ஆனும் தெளிவுபடுத்தக்கூடிய தூதர் முஹம்மதும் அவர்களிடம் வரும்வரை உலகில் அவர்களையும் அதற்கு முன் அவர்களின் முன்னோர்களையும் வாழ விட்டேன்.
Zuhruf 43:30
சந்தேகமற்ற சத்தியமான இந்த குர்ஆன் அவர்களிடம் வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “இது சூனியமாகும். இதைக் கொண்டு முஹம்மது நம்மை சூனியத்திற்குள்ளாக்குகிறார். நிச்சயமாக நாங்கள் அதனை நிராகரிக்கின்றோம். அதன்மீது ஒருபோதும் நம்பிக்கைகொள்ளமாட்டோம்.”
Zuhruf 43:31
“இந்த குர்ஆன் அநாதையும் ஏழையுமாகிய முஹம்மது மீது இறக்கப்படுவதற்குப் பதிலாக மக்காவில் அல்லது தாயிஃபில் இருக்கின்ற இரு மகத்தான (மனிதர்களான வலீத் இப்னு உக்பா, உர்வா இப்னு மஸ்வூத் அத்தகபீ ஆகிய இருவரில்) ஒருவருக்கு இறக்கப்பட்டிருக்க வேண்டாமா” என்று பொய்ப்பிக்கும் இணைவைப்பாளர்கள் கேட்கிறார்கள்.
Zuhruf 43:32
தூதரே!- தாங்கள் விரும்பியவர்களுக்கு அளித்து விரும்பியவர்களுக்கு தடுத்துக் கொள்வதற்கு, உம் இறைவனின் அருளை அவர்களா பங்கீடு செய்கிறார்கள்? அல்லது அல்லாஹ்வா? உலகில் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை நாமே அவர்களிடையே பங்கிட்டுள்ளோம். அவர்களில் சிலர் சிலருக்கு ஊழியம் செய்வதற்காக அவர்களை செல்வந்தர்களாகவும் ஏழைகளாகவும் ஆக்கியுள்ளோம். உம் இறைவன் மறுமையில் தன் அடியார்களுக்கு வழங்கும் அருளானது அவர்கள் சேர்த்துவைக்கும் அழியக்கூடிய இவ்வுலகின் இன்பங்களைவிடச் சிறந்ததாகும்.
Zuhruf 43:33
மனிதர்கள் அனைவரும் நிராகரித்து ஒரு சமூகமாகி விடுவார்கள் என்று மட்டும் இல்லாதிருக்குமானால் நாம் அல்லாஹ்வை நிராகரிப்பவர்களின் வீட்டின் முகடுகளை வெள்ளியால் ஆக்கி அவர்களுக்காக அவற்றில் ஏறிச் செல்லும் படிகளையும் ஆக்கியிருப்போம்.
Zuhruf 43:34
அவர்களின் வீடுகளுக்கு வாயில்களையும் அவர்கள் சாய்ந்துகொள்ளக்கூடிய கட்டில்களையும் ஆக்கியிருப்போம். இது அவர்களை விட்டுப்பிடிப்பதற்கும் சோதனைக்குமாகும்.
Zuhruf 43:35
அவர்களுக்கு தங்கத்தையும் ஏற்படுத்தியிருப்போம். இவையனைத்தும் இவ்வுலக இன்பங்கள்தாம். அவை நிரந்தரமற்றவை என்பதனால் அதனால் ஏற்படும் பயன்களோ குறைவானவையே. -தூதரே!- அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் இன்பங்களே அல்லாஹ்விடத்தில் சிறந்ததாகும்.
Zuhruf 43:36
யார் இந்த குர்ஆனை உரிய முறையில் சிந்திக்காததனால் அதனைப் புறக்கணிப்பாரோ அவர் ஷைத்தானின் ஆதிக்கம் மூலம் தண்டிக்கப்படுவார். அவன் அவருடன் சேர்ந்திருந்து மென்மேலும் அவரை வழிகெடுப்பான்.
Zuhruf 43:37
குர்ஆனைப் புறக்கணிப்பவர்கள் மீது சாட்டப்பட்டுள்ள உடனிருக்கும் இந்த ஷைத்தான்கள் திட்டமாக அவர்களை அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் தடுக்கிறார்கள். அவர்கள் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்துவதில்லை. அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகியிருப்பதில்லை. இருந்தும் நிச்சயமாக தாங்கள் சத்தியத்தின்பால் நேர்வழிகாட்டப்படுவதாக அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் தங்களின் வழிகேட்டிலிருந்து பாவமன்னிப்புக் கோரி மீளுவதுமில்லை.
Zuhruf 43:38
நம்மை நினைவுகூராமல் புறக்கணித்தவன் மறுமை நாளில் நம்மிடம் வரும்போது ஆசைப்பட்டவனாக கூறுவான்: “-நண்பனே!- எனக்கும் உனக்குமிடையே கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையே தொலைவு இருப்பது போன்று இருந்திருக்கக்கூடாதா? நண்பர்களில் மிகவும் மோசமானவன் நீ.”
Zuhruf 43:39
அல்லாஹ் மறுமை நாளில் நிராகரிப்பாளர்களிடம் கூறுவான்: “நீங்கள் உலகில் -இணைவைத்து பாவங்கள் புரிந்து உங்களுக்கு நீங்களே அநியாயம் இழைத்துள்ள நிலையில்- இன்றைய தினம் வேதனையில் பங்காளிகளாக இருப்பதால் உங்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில் உங்கள் பங்காளிகள் உங்களின் வேதனையில் எதனையும் உங்களுக்காக சுமக்கமாட்டார்கள்.”
Zuhruf 43:40
நிச்சயமாக இவர்கள் சத்தியத்தை செவியேற்க முடியாத செவிடர்கள்; அதனைப் பார்க்க முடியாத குருடர்கள். -தூதரே!- செவிடனுக்குச் செவியேற்கச் செய்யவோ குருடனுக்கு நேர்வழிகாட்டவோ அல்லது நேரான வழியைவிட்டும் தெளிவான வழிகேட்டில் இருப்பவருக்கு நேர்வழிகாட்டவோ நீர் சக்திபெறுவீரா?.
Zuhruf 43:41
அவர்களை தண்டிப்பதற்கு முன்பே நாம் உம்மை மரணிக்கச் செய்து- உம்மை எடுத்துக்கொண்டாலும் கூட நிச்சயமாக நாம் அவர்களை இவ்வுலகிலும் மறுவுலகிலும் வேதனை செய்து தண்டித்தே தீருவோம்.
Zuhruf 43:42
அல்லது நாம் அவர்களுக்கு எச்சரித்த வேதனையின் சில பகுதிகளை உமக்குக் காட்டுவோம். நிச்சயமாக நாம் அதற்கு ஆற்றலுடையோர்தாம். அவர்கள் எந்த விஷயத்திலும் நம்மை மிகைத்துவிட முடியாது.
Zuhruf 43:43
தூதரே!- உம் இறைவன் உமக்கு வஹியாக அறிவிப்பதை பற்றிப்பிடித்துக் கொள்வீராக. அதன்படி செயல்படுவீராக. நிச்சயமாக நீர் குழப்பமற்ற சத்தியப் பாதையில் இருக்கின்றீர்.
Zuhruf 43:44
நிச்சயமாக இந்த குர்ஆன் உமக்கும் உம் சமூகத்தினருக்கும் கண்ணியமாகும். மறுமை நாளில் அதன்மீது நம்பிக்கைகொண்டு, அதன் வழிகாட்டுதலைப் பின்பற்றி, அதன் பக்கம் அழைப்பு விடுத்ததைக் குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
Zuhruf 43:45
தூதரே!- உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களிடம் கேட்பீராக: “நாம் அளவிலாக் கருணையாளனைத் தவிர வணங்கப்படும் வேறு தெய்வங்களை ஏற்படுத்தியிருந்தோமா என்பதை.”
Zuhruf 43:46
நாம் மூஸாவை நம் சான்றுகளுடன் ஃபிர்அவ்னின் பக்கமும் அவன் சமூகத்து தலைவர்களின் பக்கமும் அனுப்பினோம். நிச்சயமாக அவர் அவர்களிடம் கூறினார்: “நிச்சயமாக நான் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதராவேன்.”
Zuhruf 43:47
அவர் நம்முடைய சான்றுகளுடன் அவர்களிடம் வந்தபோது அவற்றைக் கண்டு பரிகாசமாக அவர்கள் சிரிக்கலானார்கள்.
Zuhruf 43:48
மூஸா கொண்டுவந்தது உண்மைதான் என்பதற்கு நாம் ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய கூட்டத்தின் பிரதானிகளுக்கும் காட்டிய ஒவ்வொரு சான்றும் முந்தைய சான்றினைவிட பெரியதாகவே இருந்தது. அவர்கள் இருந்துகொண்டிருந்த நிராகரிப்பிலிருந்து திரும்பிவிடும்பொருட்டு உலகில் அவர்களை வேதனையால் பிடித்தோம். ஆயினும் அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை.
Zuhruf 43:49
சில வேதனைகளை அவர்கள் அனுபவித்தபோது மூஸாவிடம் கூறினார்கள்: “சூனியக்காரரே! நாம் நம்பிக்கை கொண்டால் வேதனையை அகற்றுவேன் என்று உமக்குக் கூறப்படதற்கேற்ப எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும். அவன் எங்களை விட்டும் வேதனையை அகற்றினால் நிச்சயமாக நாங்கள் நேர்வழியடைவோம்.”
Zuhruf 43:50
நாம் அவர்களைவிட்டும் வேதனையை திருப்பிய போது அவர்கள் தங்களின் வாக்குறுதியை மீறினார்கள். அதனை அவர்கள் நிறைவேற்றவில்லை.
Zuhruf 43:51
தன் அரசாட்சியைக் கொண்டு கர்வம் கொண்டவனாக ஃபிர்அவ்ன் தன் சமூகத்தினரிடையே அறிவிப்புச் செய்தான்: “என் சமூகமே! எகிப்தின் ஆட்சியதிகாரம் எனக்குரியதில்லையா? இந்த நைல் நதியின் ஆறுகள் என் கோட்டைகளுக்குக் கீழேதானே ஓடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் என் ஆட்சியதிகாரத்தைப் பார்க்கவில்லையா? என் மகத்துவத்தை அறிந்துகொள்ளவில்லையா?
Zuhruf 43:52
பலவீனமான, விரட்டப்பட்ட, எதையும் தெளிவாக எடுத்துரைக்கத் தெரியாத மூசாவைவிட நான் சிறந்தவனில்லையா?
Zuhruf 43:53
நிச்சயமாக இவர் தூதர் என்பதை தெளிவுபடுத்தும்பொருட்டு அவரை அனுப்பிய அல்லாஹ் இவருக்கு ஒரு தங்கக் காப்பை அணிவித்திருக்க வேண்டாமா? அல்லது வானவர்கள் இவருடன் ஒருவருக்குப் பின் ஒருவராக வந்திருக்க வேண்டாமா?
Zuhruf 43:54
ஃபிர்அவ்ன் தன் சமூகத்தினரை ஏமாற்றினான். அவர்களும் அவனது வழிகேட்டில் அவனுக்குக் கட்டுப்பட்டார்கள். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாத மக்களாக இருந்தார்கள்.
Zuhruf 43:55
அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்து நம்மைக் கோபமூட்டியபோது நாம் அவர்களைத் தண்டித்தோம். அவர்கள் அனைவரையும் மூழ்கடித்துவிட்டோம்.
Zuhruf 43:56
நாம் ஃபிர்அவ்னையும் அவன் சமூகத்து தலைவர்களையும் மக்களுக்கு முன்னே செல்பவர்களாகவும் உமது சமூகத்தின் நிராகரிப்பாளர்களை அவர்களைத் தொடர்ந்து செல்பவர்களாகவும் ஆக்கினோம். அவர்களின் செயல்களைச் செய்து அவர்களுக்கு ஏற்பட்டது போன்று ஏற்படாமல் இருப்பதற்காக படிப்பினை பெற விரும்புவோருக்கு அவர்களைப் படிப்பினையாகவும் ஆக்கினோம்.
Zuhruf 43:57
சிலைகளை வணங்குவதை அல்லாஹ் தடைசெய்தது போன்றே நிச்சயமாக ஈஸா (அலை) அவர்களை வணங்குவதையும் அல்லாஹ் தடைசெய்துள்ளதனால், “(நீங்களும் அல்லாஹ்வைவிடுத்து நீங்கள் வணங்கும் தெய்வங்களும் நரகத்தின் எரிபொருள்களாவீர். அதில் நீங்கள் பிரவேசிப்பீர்கள்)” (அல்அன்பியா அத்தியாயம்) என்ற வசனத்தில் நிச்சயமாக கிருஸ்தவர்கள் வணங்கும் ஈஸாவும் பொதுவாக இதில் உள்ளடங்குவார் என்று எண்ணிக்கொண்ட இணைவைப்பாளர்கள் ஆரவாரித்து தர்க்கம் செய்தவர்களாகக் கூறினார்கள்: “எங்களின் தெய்வங்களும் ஈஸாவின் அந்தஸ்தைப்போல் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.” அல்லாஹ் அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாகப் பின்வரும் வசனத்தை இறக்கினான்: “(நிச்சயமாக நம்மிடமிருந்து யாருக்கெல்லாம் நன்மை உண்டு என்ற விஷயம் முந்திவிட்டதோ அவர்கள் அந்த நரகத்தைவிட்டும் தூரமாக்கப்படுவார்கள்).” (அல்அன்பியா அத்தியாயம்)
Zuhruf 43:58
அவர்கள் கூறினார்கள்: “எங்களின் தெய்வங்கள் சிறந்தவையா? அல்லது ஈஸாவா?” இப்னுஸ் ஸிபஃரா போன்றவர்கள் சத்தியத்தை அடையும் விருப்பத்துடன் இந்த உதாரணத்தை உம்மிடம் கூறவில்லை. மாறாக தர்க்கம் புரிவதை விரும்பும் நோக்கில்தான் அவர்கள் இவ்வாறு கூறினார்கள். அவர்கள் தர்க்கம் புரியும் இயல்புடையவர்களாக இருக்கின்றார்கள்.
Zuhruf 43:59
மர்யமின் மகன் ஈஸா அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவர்தான். நாம் அவருக்கு நபித்துவத்தையும் தூதுப் பணியையும் அளித்து அருள்புரிந்தோம். தாய், தந்தையின்றி படைக்கப்பட்ட ஆதமைப் போன்று தந்தையின்றி படைக்கப்பட்ட அவரை இஸ்ராயீலின் மக்களுக்கு அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கும் உதாரணமாகவும் ஆக்கினோம்.
Zuhruf 43:60
ஆதமின் மக்களே!- நாம் உங்களை அழிக்க நாடியிருந்தால் அழித்திருப்போம். உங்களுக்குப் பகரமாக பூமியில் வானவர்களை வழித்தோன்றல்களாக ஆக்கியிருப்போம். அவர்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவார்கள். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டார்கள்.
Zuhruf 43:61
உலக முடிவின் இறுதியில் ஈஸா இறங்கும் போது நிச்சயமாக அவர் மறுமையின் பெரிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கின்றார். நிச்சயமாக மறுமை நிகழும் என்பதில் சந்தேகம் கொள்ளாதீர்கள். அல்லாஹ்விடமிருந்து நான் கொண்டுவந்துள்ளவற்றில் என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களிடம் கொண்டுவந்துள்ளது எவ்வித கோணலுமற்ற நேரான வழியாகும்.
Zuhruf 43:62
ஷைத்தான் உங்களை வழிகெடுத்து, ஏமாற்றி நேரான வழியைவிட்டும் உங்களை திசைதிருப்பிவிட வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க விரோதியாவான்.
Zuhruf 43:63
ஈஸா தம் சமூகத்திடம் நிச்சயமாக தான் தூதர் என்பதற்கான தெளிவான ஆதாரங்களைக் கொண்டுவந்தபோது அவர்களிடம் கூறினார்: “நான் அல்லாஹ்விடமிருந்து உங்களிடம் ஞானத்தைக் கொண்டுவந்துள்ளேன். நீங்கள் கருத்துவேறுபாடு கொண்ட உங்களின் உலக விவகாரங்களில் சிலவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றேன். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிடும் மற்றும் உங்களைத் தடுக்கும் விஷயத்தில் எனக்குக் கட்டுப்படுங்கள்.
Zuhruf 43:64
நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். அவனைத் தவிர எங்களுக்கு வேறு இறைவன் இல்லை. எனவே வணக்க வழிபாட்டை அவனுக்கு மட்டுமே உரித்தாக்குங்கள். இந்த ஏகத்துவமே எவ்வித கோணலுமற்ற நேரான வழியாகும்.
Zuhruf 43:65
கிறிஸ்தவப் பிரிவினர் ஈஸாவின் விஷயத்தில் கருத்துவேறுபாடு கொண்டார்கள். அவர்களில் சிலர் “அவர்தான் இறைவன்” என்று கூறினார்கள். இன்னும் சிலர் ”இறைவனின் குமாரன்” என்றார்கள். இன்னும் சிலர் “அவரும் அவரது அன்னையும் இரு கடவுள்கள்” என்று கூறினார்கள். ஈஸாவை இறைவன் என்றோ இறைவனின் மகன் என்றோ மூவரில் மூன்றாமவர் என்றோ கூறி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு மறுமை நாளில் காத்திருக்கும் நோவினை தரும் வேதனையின் கேடு உண்டு.
Zuhruf 43:66
ஈஸாவின் விஷயத்தில் கருத்துவேறுபாடுகொண்ட இந்த கூட்டத்தினர்கள் தாங்களே உணராதவிதத்தில் திடீரென மறுமை நாள் தங்களிடம் வருவதைத்தான் எதிர்பார்க்கிறார்களா? அவர்கள் நிராகரித்த நிலையிலேயே அது அவர்களிடம் வந்துவிட்டால், வேதனைமிக்க தண்டனையே அவர்களின் இருப்பிடமாகும்.
Zuhruf 43:67
நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் மறுமைநாளில் ஒருவருக்கொருவர் எதிரிகளாகி விடுவார்கள். ஆயினும் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களைத்தவிர. அவர்களின் நட்பு என்றென்றும் துண்டிக்கப்படாமல் நிலைத்திருக்கக்கூடியது.
Zuhruf 43:68
அல்லாஹ் அவர்களிடம் கூறுவான்: “என் அடியார்களே! உங்களுக்கு எதிர்காலத்தில் நிகழக்கூடியதை எண்ணி இன்று எந்த அச்சமும் இல்லை. உங்களுக்குத் தவறிய உலக பாக்கியங்களுக்காக நீங்கள் கவலைப்படவும்மாட்டீர்கள்.”
Zuhruf 43:69
அவர்கள் தங்களின் தூதர் மீது இறக்கப்பட்ட குர்ஆனை ஈமான் கொண்டார்கள். குர்ஆனுக்குக் கட்டுப்பட்டு அதனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அது தடுத்துள்ளவைகளிலிருந்து விலகியிருப்பவர்களாக இருந்தார்கள்.
Zuhruf 43:70
நீங்களும் உங்களைப் போன்று நம்பிக்கை கொண்டவர்களும் உங்களுக்குக் கிடைக்கும், என்றும் முடிவடையாத நிலையான இன்பத்தினால் மகிழ்வுற்றவர்களாக சுவனத்தில் நுழைந்துவிடுங்கள்.
Zuhruf 43:71
அங்கு பணிவிடையாளர்கள் தங்கப் பாத்திரங்களையும், கிண்ணங்களையும் கொண்டு சுற்றிவருவார்கள். சுவனத்தில் உங்கள் மனம் விரும்பும், பார்ப்பதால் கண்களுக்குக் குளிர்ச்சி ஏற்படும் அனைத்தும் உண்டு. நீங்கள் அங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள். அங்கிருந்து ஒருபோதும் வெளியேறமாட்டீர்கள்.
Zuhruf 43:72
உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட அந்த சுவனத்தைத்தான் உங்களின் செயல்களுக்காக அல்லாஹ் உங்களுக்கு அவனது பேருபகாரத்தினால் சொந்தமாக்குவான்.
Zuhruf 43:73
அங்கு உங்களுக்கு என்றும் முடிவடையாத ஏராளமான பழங்கள் உண்டு. அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்.
Zuhruf 43:74
இறையச்சமுடையோருக்கு அளிக்கப்படும் கூலியைக் குறிப்பிட்ட பிறகு அல்லாஹ் அவர்களுக்கு நேரெதிரான குற்றவாளிகளின் கூலிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறான். அவன் கூறுகிறான்: நிச்சயமாக நிராகரித்து பாவங்கள் புரிந்த குற்றவாளிகள் மறுமை நாளில் நரக வேதனையில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள்.
Zuhruf 43:75
அவர்களைவிட்டும் வேதனை குறைக்கப்படாது. அவர்கள் அதில் அல்லாஹ்வின் அருளை விட்டும் நிராசையடைந்துவிடுவார்கள்.
Zuhruf 43:76
அவர்களை நரகத்தில் பிரவேசிக்கச் செய்து நாம் அவர்கள் மீது அநீதி இழைக்கவில்லை. ஆயினும் நிராகரிப்பின் மூலம் அவர்களே தமக்குத்தாமே அநீதி இழைத்துக்கொண்டார்கள்.
Zuhruf 43:77
அவர்கள் நரகத்தின் காவலர் மாலிக்கை அழைப்பார்கள்: மாலிக்கே! உம் இறைவன் எங்களை மரணிக்கச் செய்துவிடட்டும். நாங்கள் வேதனையிலிருந்து விடுதலையடைந்து விடுகிறோம். மாலிக் பின்வருமாறு கூறி விடையளிப்பார்: “நிச்சயமாக நீங்கள் வேதனையில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பவர்களே. மரணிக்கமாட்டீர்கள். உங்களைவிட்டும் வேதனை என்றும் முடிவடையாது.
Zuhruf 43:78
நாங்கள் உலகில் உங்களிடம் சந்தேகமற்ற சத்தியத்தைக் கொண்டு வந்தோம். ஆனால் உங்களில் பெரும்பாலானோர் சத்தியத்தை வெறுப்பவர்களாகவே இருந்தீர்கள்.”
Zuhruf 43:79
அவர்கள் நபிக்கு எதிராக சூழ்ச்சியை தயார்செய்தால் நாம் அவர்களின் சூழ்ச்சியை மிகைக்கும் நுணுக்கமான திட்டங்களைத் தீட்டுவோம்.
Zuhruf 43:80
தங்கள் உள்ளங்களில் மறைத்துவைத்திருக்கும் இரகசியங்களையும் தங்களிடையே இரகசியமாக பேசிக்கொள்வதையும் நிச்சயமாக நாம் செவியுறமாட்டோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? இல்லை, நிச்சயமாக நாம் அவை அனைத்தையும் செவியேற்கிறோம். அவர்களிடம் இருக்கின்ற வானவர்கள் அவர்கள் செய்யும் அனைத்தையும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
Zuhruf 43:81
அல்லாஹ்வுக்குப் பெண் பிள்ளைகள் உண்டு (அவர்களின் கூறுவதை விட்டும் அல்லாஹ் மிக உயர்வானவன்) எனக் கூறுவோரிடம் கூறுங்கள் அல்லாஹ்வுக்கு பிள்ளை எதுவும் இல்லை. அதனை விட்டும் அவன் தூய்மையானவனும் பரிசுத்தமானவனுமாவான். நான் அவனை வணங்கி பரிசுத்தப்படுத்துவோரில் முதலாமவனாவேன்.
Zuhruf 43:82
இணையாளன், மனைவி, பிள்ளை இருப்பதாக இந்த இணைவைப்பாளர்கள் அவனுக்கு இணைத்துக் கூறும் கூற்றுகளைவிட்டும் வானங்கள், பூமி மற்றும் அர்ஷின் இறைவன் மிகவும் தூய்மையானவன்.
Zuhruf 43:83
தூதரே!- அவர்களை விட்டுவிடும். அவர்கள் வாக்களிக்கப்பட்ட அந்த நாளான மறுமையைச் சந்திக்கும் வரை அவர்கள் இருந்துகொண்டிருக்கும் அசத்தியத்தில் மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கட்டும்.
Zuhruf 43:84
அவனே வானத்திலும் பூமியிலும் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன். தான் படைத்த படைப்புகளில், அமைத்த விதிகளில், திட்டங்களில் அவன் ஞானம் மிக்கவன். தன் அடியார்களின் நிலமைகள் குறித்து நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Zuhruf 43:85
அல்லாஹ்வின் அபிவிருத்தியும் நன்மையும் பெருகிவிட்டன. வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கும் இடைப்பட்டுள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. மறுமை எப்போது நிகழும் என்பது பற்றிய அறிவு அவனிடம் மட்டுமே உள்ளது. அவனைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலிபெறுவதற்காகவும் அவன் பக்கம் மட்டுமே நீங்கள் திரும்ப வேண்டும்.
Zuhruf 43:86
அல்லாஹ்வை விடுத்து இணைவைப்பாளர்கள் வணங்கும் தெய்வங்கள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வதற்கு சக்திபெற மாட்டா. ஆயினும் ஈஸா, உசைர், வானவர்கள் போன்ற ”அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன்” என்று அதனைப் புரிந்து சாட்சி கூறியோரைத் தவிர.
Zuhruf 43:87
நீர் அவர்களிடம் அவர்களைப் படைத்தவன் யார் என்று கேட்டால் “அல்லாஹ்தான் எங்களைப் படைத்தான்” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள். இவ்வாறு ஏற்றுக்கொண்ட பிறகு எவ்வாறுதான் அவர்கள் அவனை வணங்குவதைவிட்டும் திசைதிருப்பப்படுகிறார்களோ?!.
Zuhruf 43:88
அவனிடமே தம் சமூகம் பொய்ப்பித்தது பற்றிய தூதரின் முறையீடு குறித்த அறிவு உள்ளது. “என் இறைவா! நிச்சயமாக இந்த மக்கள் நீ எனக்கு எதனைக் கொடுத்து இவர்களின் பால் அனுப்பினாயோ அதனை நம்பிக்கைகொள்ளாத மக்களாக இருக்கின்றார்கள்” என்று அதிலே அவரின் வார்த்தை உள்ளது.
Zuhruf 43:89
அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. அவர்களின் தீங்கினைத் தடுக்கும் வார்த்தையைக் கூறுவீராக. -இது மக்காவில் கூறப்பட்டது- தாங்கள் அனுபவிக்கப்போகும் தண்டனையை அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
Duhan 44:1
இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
Duhan 44:2
சத்தியத்திற்கு நேர்வழிகாட்டும் பாதையைத் தெளிவுபடுத்தும் அல்குர்ஆனின் மீது அல்லாஹ் சத்தியம் செய்துள்ளான்.
Duhan 44:3
நிச்சயமாக நாம் கண்ணியமிக்க இரவிலே குர்ஆனை இறக்கியுள்ளோம். அது பெரும் நன்மைகளை உள்ளடக்கிய இரவாகும். திட்டமாக நாம் இந்த குர்ஆனைக் கொண்டு அச்சுறுத்துபவர்களாக இருக்கின்றோம்.
Duhan 44:4
அந்த இரவில்தான் அந்த வருடத்தில் அல்லாஹ் ஏற்படுத்தும் வாழ்வாதாரம், தவணைகள் மற்றும் இன்னபிறவற்றோடு தொடர்புடைய உறுதியான ஒவ்வொரு விடயமும் முடிவுசெய்யப்படுகின்றன.
Duhan 44:5
நம்மிடமிருந்து ஒவ்வொரு உறுதியான விஷயத்தையும் நாம் தீர்மானிக்கின்றோம். நிச்சயமாக நாம் தூதர்களை அனுப்புவோராக இருந்தோம்.
Duhan 44:6
தூதரே!- தூதர்கள் அனுப்பப்படுவோருடன் உம் இறைவன் கொண்ட கருணையினால்தான் நாம் தூதர்களை அனுப்புகின்றோம். நிச்சயமாக அவன் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் செயல்களையும் எண்ணங்களையும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Duhan 44:7
அவன் வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கும் இடைப்பட்டுள்ளவற்றின் இறைவன். நீங்கள் இதனை உறுதியாக நம்புபவர்களாக இருந்தால் என் தூதரின் மீது நம்பிக்கைகொள்ளுங்கள்.
Duhan 44:8
அவனைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவனே உயிர்ப்பிக்கிறான், மரணமடையச் செய்கிறான். அவனைத் தவிர வேறு யாராலும் உயிர்ப்பிக்கவோ, மரணமடையச் செய்யவோ முடியாது. அவன் உங்களின் இறைவன்; முன்சென்ற உங்கள் மூதாதையர்களின் இறைவன்.
Duhan 44:9
இந்த இணைவைப்பாளர்கள் இதனை உறுதியாக நம்ப மாட்டார்கள். மாறாக அவர்கள் அதில் சந்தேகம்கொண்டு தங்களிடமுள்ள அசத்தியத்தைக் கொண்டு அதனை விட்டும் அலட்சியமாக இருக்கின்றார்கள்.
Duhan 44:10
தூதரே!- வானம் தெளிவான புகையைக் கொண்டுவரும் அந்நாளில் உமது சமூகத்துக்கு அண்மையில் ஏற்படும் வேதனையை எதிர்பார்ப்பீராக. பசியின் கடுமை காரணமாக அதனைத் தமது கண்களால் அவர்கள் காண்பார்கள்.
Duhan 44:11
உமது சமூகம் அனைவரையும் அது சூழ்ந்துகொள்ளும். அவர்களிடம் கூறப்படும்: “உங்களைப் பீடித்த இந்த தண்டனை வேதனை மிக்க தண்டனையாகும்.”
Duhan 44:12
அவர்கள் தங்கள் இறைவனிடம் மன்றாடியவர்களாகப் பிரார்த்திப்பார்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மீது அனுப்பிய வேதனையை எங்களைவிட்டும் திருப்புவாயாக. நீ எங்களைவிட்டும் அதனை நீக்கினால் உன்மீதும் உன் தூதரின் மீதும் நிச்சயமாக நாங்கள் நம்பிக்கைகொள்வோம்.”
Duhan 44:13
தெளிவான தூதுடன் அவர்களது நம்பிக்கைக்குரிய, உண்மையான தூதர் அவர்களிடம் வந்தபோது ஏற்றுக்கொள்ளாமல் தற்போது இறைவனிடம் மன்றாடி நினைவு கூறுவது எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்?
Duhan 44:14
பின்பு அவர்கள் அவரை உண்மைப்படுத்தாமல் புறக்கணித்துவிட்டார்கள். அவரைக்குறித்து அவர்கள் கூறினார்கள்: “இவர் தூதரல்ல. மற்றவர்கள் கற்றுக் கொடுக்கும் மாணவர். இவர் ஒரு பைத்தியக்காரர் ஆவார்.”
Duhan 44:15
நிச்சயமாக நாம் உங்களைவிட்டும் வேதனையை சிறிதளவு நீக்கும் போது நிச்சயமாக நீங்கள் உங்களின் நிராகரிப்பு, பொய்ப்பிப்பின் பக்கம்தான் திரும்பக் கூடியவர்களாகவே உள்ளீர்கள்.
Duhan 44:16
தூதரே!- நாம் உமது சமூகத்தின் நிராகரிப்பாளர்களை பத்ருடைய தினத்தில் கடுமையாகப் பிடிக்கும் நாளை நீர் எதிர்பார்ப்பீராக. அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து அவனது தூதரை பொய்ப்பித்ததனால் நிச்சயமாக நாம் அவர்களை பலிதீர்த்தே தீருவோம்.
Duhan 44:17
நாம் அவர்களுக்கு முன்னர் ஃபிர்அவ்னின் சமூகத்தை சோதித்தோம். அல்லாஹ்விடமிருந்து சங்கையான ஒரு தூதர் அவர்களிடம் வந்து அவன் ஒருவனே வணக்கத்திற்குரியவன் அவனையே வணங்குமாறும் அவர்களை அழைத்தார். அவர்தான் மூஸா.
Duhan 44:18
மூஸா ஃபிர்அவ்னிடமும் அவனது சமூகத்திடமும் கூறினார்: “இஸ்ராயீலின் மக்களை என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர்கள் அல்லாஹ்வின் அடியார்களாவர். அவர்களை அடிமைப்படுத்தும் உரிமை உங்களுக்கு இல்லை. நிச்சயமாக நான் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள தூதராவேன். அவன் எனக்கு எடுத்துரைக்குமாறு கூறிய விஷயங்களில் நான் நம்பிக்கைக்குரியவனாவேன். அதில் எதையும் அதிகரித்துவிடவோ, குறைத்துவிடவோ மாட்டேன்.
Duhan 44:19
அல்லாஹ்வை வணங்காமலும், அவனுடைய அடியார்கள் மீது உங்களை உயர்த்திக்கொண்டும் அவனிடம் கர்வம் காட்டாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டுவந்துள்ளேன்.
Duhan 44:20
நீங்கள் என்னைக் கல்லெறிந்து கொல்வதை விட்டும் என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.
Duhan 44:21
நீங்கள் நான் கொண்டுவந்ததை உண்மைப்படுத்தவில்லையெனில் என்னைவிட்டு விலகிவிடுங்கள். தீங்கு செய்யும் நோக்குடன் என்னை நெருங்காதீர்கள்.
Duhan 44:22
மூஸா தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்: “இந்த மக்கள் -ஃபிர்அவ்னும் அவன் சமூகத்து தலைவர்களும்- குற்றம் செய்யும் மக்களாக, விரைவாகத் தண்டிக்கப்படத் தகுதியானவர்களாக இருக்கிறார்கள்.”
Duhan 44:23
அவரது சமூகத்தினரை இரவோடு இரவாக அழைத்துச் செல்லும்படி அல்லாஹ் மூஸாவுக்குக் கட்டளையிட்டான். ஃபிர்அவ்னும் அவனது சமூகத்தினரும் நிச்சயமாக அவர்களைப் பின்தொடர்வார்கள் என்பதையும் அவன் அறிவித்தான்.
Duhan 44:24
அவரும் இஸ்ராயீலின் மக்களும் கடலைக் கடக்கும்போது அது எவ்வாறு அசையாமல் இருந்ததோ அப்படியே விட்டுவிடுமாறும் அவன் கட்டளையிட்டான். நிச்சயமாக ஃபிர்அவ்னும் அவனுடைய படையினரும் கடலில் மூழ்கி அழிவோரே.
Duhan 44:25
ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தினரும் தங்களுக்குப் பின்னால் எத்தனையோ தோட்டங்களையும் ஓடக்கூடிய நீருற்றுகளையும் விட்டுச் சென்றார்கள்!
Duhan 44:26
எத்தனையோ வயல்களையும் அழகிய அவைகளையும் அவர்களுக்குப் பின்னால் விட்டுச் சென்றார்கள்!
Duhan 44:27
அவர்கள் அனுபவித்த எத்தனையோ சுக இன்பங்களையும் அவர்கள் தங்களுக்குப் பின்னால் விட்டுச் சென்றார்கள்.
Duhan 44:28
இவ்வாறு நாம் உங்களுக்கு வர்ணித்தவாறே அவர்களுக்கு நிகழ்ந்தது. அவர்களின் தோட்டங்களையும் நீருற்றுகளையும் வயல்களையும் இடங்களையும் வேறொரு சமூகத்தினரான இஸ்ராயீலின் மக்களுக்கு சொந்தமாக்கினோம்.
Duhan 44:29
பிர்அவ்னும் அவனது சமூகமும் மூழ்கியபோது அவர்களுக்காக வானமும் அழவில்லை; பூமியும் அழவில்லை. அவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்கு அவகாசமும் அளிக்கப்படவில்லை.
Duhan 44:30
நாம் இஸ்ராயீலின் மக்களை இழிவுமிக்க வேதனையிலிருந்து காப்பாற்றினோம். ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தினரும் அவர்களின் ஆண்மக்களை கொலைசெய்தும் பெண்மக்களை உயிருடன் விட்டுவைத்துக்கொண்டும் இருந்தார்கள்.
Duhan 44:31
ஃபிர்அவ்னின் வேதனையிலிருந்து நாம் அவர்களைக் காப்பாற்றினோம். நிச்சயமாக அவன் அல்லாஹ் மற்றும் அவனது மார்க்கத்தின் கட்டளையை மீறும் பெருமைபிடித்தவனாக இருந்தான்.
Duhan 44:32
நாம் இஸ்ராயீலின் மக்களை நம்மிடமிருந்துள்ள அறிவின் பிரகாரம் அவர்களின் காலத்தில் வாழ்ந்த அனைவரைவிடவும் தேர்ந்தெடுத்தோம். ஏனெனில் அதிகமான தூதர்கள் அவர்களில் இருந்தனர்.
Duhan 44:33
மூஸாவைப் பலப்படுத்திய அத்தாட்சிகளையும் சான்றுகளையும் அவர்களுக்கு நாம் வழங்கினோம். மன்னு, ஸல்வா போன்ற அவை அவர்களுக்கு வெளிரங்கமான அருள்களாக இருந்தன.
Duhan 44:34
நிச்சயமாக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுத்து பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்:
Duhan 44:35
“ஒரு முறை மாத்திரமே நாம் மரணிப்போம். அதற்குப் பிறகு எந்த வாழ்க்கையும் இல்லை. அந்த மரணத்திற்குப் பிறகு நாங்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட மாட்டோம்.
Duhan 44:36
முஹம்மதே!- நீரும் உம்மைப் பின்பற்றியவர்களும், ‘இறந்தவர்களை மீண்டும் விசாரணை, கூலி கொடுக்கப்படுவதற்காக அல்லாஹ் அவர்களை உயிரோடு எழுப்புவான்’ என்று கூறும் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் இறந்துவிட்ட எங்களின் முன்னோர்களை உயிருடன் கொண்டுவாருங்கள்.”
Duhan 44:37
தூதரே!- உம்மை பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்கள் பலத்தில் சிறந்தவர்களா? அல்லது துப்பவு சமூகமும் அவர்களுக்கு முன்வந்த ஆத் ஸமூத் போன்றவர்கள் சிறந்தவர்களா? நாம் அவர்கள் அனைவரையும் அழித்துவிட்டோம். நிச்சயமாக அவர்கள் குற்றம் புரியும் மக்களாக இருந்தார்கள்.
Duhan 44:38
நாம் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கு இடையிலுள்ளவற்றையும் விளையாட்டிற்காகப் படைக்கவில்லை.
Duhan 44:39
நாம் வானங்களையும் பூமியையும் ஒரு உயர்ந்த நோக்கத்திற்காகவே படைத்துள்ளோம். ஆயினும் இணைவைப்பாளர்களில் பெரும்பாலானோர் இதனை அறியமாட்டார்கள்.
Duhan 44:40
நிச்சயமாக அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளிக்கும் மறுமை நாள் படைப்புகள் அனைத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட நாளாகும். அந்நாளில் அவர்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்றுதிரட்டுவான்.
Duhan 44:41
அந்ந நாளில் எந்த உறவினரும் தன் உறவினருக்கோ எந்த நண்பரும் தன் நண்பருக்கோ பயனளிக்க முடியாது. அவர்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து யாரையும் காப்பாற்ற முடியாது. ஏனெனில் நிச்சயமாக அந்நாளில் ஆட்சியதிகாரம் அல்லாஹ்விடமே இருக்கும். அதனை வேறு எவரும் வாதிட சக்திபெறமாட்டார்கள்.
Duhan 44:42
ஆயினும் மக்களில் அல்லாஹ் யார் மீது கருணை காட்டினானோ அவர்களைத் தவிர. நிச்சயமாக அவர் தாம் செய்த நற்செயல்களைக் கொண்டு பயனடைவார். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தனது அடியார்களில் தவ்பா செய்பவர்களின் மீது கருணை காட்டுபவன்.
Duhan 44:43
அல்லாஹ் மறுமையைக் குறித்து குறிப்பிட்ட பிறகு மனிதர்கள் தங்களின் கூலிக்கேற்ப பல பிரிவினர்களாகப் பிரிந்துவிடுவார்கள் என்பதையும் குறிப்பிடுகிறான். அவன் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ் நரகத்தின் அடித்தளத்தில் முளைப்பித்த ஸக்கூம் மரமே (அது)
Duhan 44:44
நிராகரிப்பாளனான பெரும் பாவியின் உணவாகும். அதன் மோசமான கனிகளிலிருந்து அவன் உண்பான்.
Duhan 44:45
அது கருப்பு எண்ணெய்யைப் போலிருக்கும். அதன் கடுமையான சூட்டினால் அவர்களின் வயிறுகளில் அது கொதிக்கும்.
Duhan 44:46
அது கடும் சூடான நீர் கொதிப்பதைப் போன்றிருக்கும்.
Duhan 44:47
நரகத்தின் காவலர்களிடம் கூறப்படும்: “அவனைப் பிடித்து நரகத்தின் நடுப்பகுதிக்கு பலவந்தமாக இழுத்துச் செல்லுங்கள்.
Duhan 44:48
பின்னர் வேதனைக்குள்ளாகப்படும் அவன் தலை மீது கொதிக்கும் நீரைக் கொட்டுங்கள். வேதனையிலிருந்து அவன் விடுபட்டுவிடக்கூடாது.
Duhan 44:49
இழிவுபடுத்தும் விதமாக அவனிடம் கூறப்படும்: “வேதனைமிக்க இந்த தண்டனையை சுவைத்துப் பார். நிச்சயமாக நீ உன்பக்கம் நெருங்க முடியாத பலமானவனாகவும் உன் சமூகத்தில் சங்கையானவனாகவும் இருக்கின்றாய்.
Duhan 44:50
நிச்சயமாக இந்த வேதனையைத்தான் நீங்கள் மறுமையில் நிகழும் என்பதில் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்கள். அதனைக் காண்பதின் மூலம் இப்போது சந்தேகம் உங்களைவிட்டு முழுவதுமாக அகன்றுவிட்டது.
Duhan 44:51
நிச்சயமாக தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்கள் எல்லா வகையான தீங்குகளைவிட்டும் பாதுகாப்பான இடத்தில் இருப்பார்கள்.
Duhan 44:52
தோட்டங்களிலும் ஓடக்கூடிய நீருற்றுகளிலும் இருப்பார்கள்.
Duhan 44:53
சுவனத்தில் அவர்களுக்கு மெல்லிய மற்றும் கனமான பட்டாடைகள் அணிவிக்கப்படும். அவர்கள் ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாகவே இருப்பார்கள். ஒருவர் மற்றவரின் பிடரியைப் பார்க்க மாட்டார்கள்.
Duhan 44:54
நாம் அவர்களை மேற்கூறப்பட்வற்றைக் கொண்டு கண்ணியப்படுத்தியது போன்று சுவனத்தில் விசாலமான கண்களையுடைய அதனுடைய கருப்புப் பகுதி கடும் கருப்பாகவும் அதன் வெள்ளைப் பகுதி கடும் வெள்ளையாகவும் இருக்கக்கூடிய அழகிய பெண்களை அவர்களுக்கு மணமுடித்து வைப்போம்.
Duhan 44:55
தாங்கள் விரும்புகின்ற ஒவ்வொரு வகையான பழத்தையும் கொண்டுவருவதற்காக தங்களுக்குப் பணிவிடை செய்பவர்களை அழைத்துக் கொண்டிருப்பார்கள். அவை முடிந்துவிடும் அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சமற்றவர்களாக இருப்பார்கள்.
Duhan 44:56
அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். உலகில் ஏற்பட்ட முதல் மரணத்தைத் தவிர வேறு மரணத்தை அவர்கள் சுவைக்க மாட்டார்கள். அவர்களின் இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துவிட்டான்.
Duhan 44:57
இது உம் இறைவன் அவர்களின் மீது அருள்புரியும் பொருட்டாகும். அவ்வாறு மேற்கூறப்பட்ட -சுவனத்தில் நுழையச்செய்து நரகை விட்டும் பாதுகாப்பதே- மகத்தான வெற்றியாகும். இதற்கு இணையான வேறு வெற்றி இல்லை.
Duhan 44:58
தூதரே!- அவர்கள் அறிவுரை பெறும்பொருட்டு நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை உமது மொழியான அரபியில் இறக்கி இலகுபடுத்தியுள்ளோம்.
Duhan 44:59
உமக்கு வரக்கூடிய உதவியையும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய அழிவையும் எதிர்பார்ப்பீராக. நிச்சயமாக அவர்களும் உமக்கு அழிவு ஏற்படுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
Câsiye 45:1
இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
Câsiye 45:2
இது யாவற்றையும் மிகைத்த, யாராலும் மிகைக்க முடியாத அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்ட குர்ஆனாகும். அவன் தனது படைப்பிலும் விதியிலும் திட்டமிடலிலும் ஞானம் மிக்கவன்.
Câsiye 45:3
நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன. ஏனெனில் திட்டமாக அவர்கள்தாம் சான்றுகளைக் கொண்டு படிப்பினை பெறுவார்கள்.
Câsiye 45:4
மனிதர்களே!- விந்திலிருந்து பின்னர் மாமிசத்திலிருந்து பின்னர் இரத்தக்கட்டிலிருந்து உங்களைப் படைத்திருப்பதிலும் அல்லாஹ் பூமியின் மேற்பரப்பில் பரவச்செய்து நடந்து செல்லும் உயிரினமான படைப்புகளிலும் நிச்சயமாக அல்லாஹ்வே படைப்பாளன் என்பதை உறுதியாக நம்பும் மக்களுக்கு அவன் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய சான்றுகள் இருக்கின்றன.
Câsiye 45:5
இரவு, பகல் மாறிமாறி வருவதிலும் அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்கி அதன் மூலம் தாவரமற்ற வறண்ட பூமியை முளைக்கச் செய்து உயிர்ப்பிப்பதிலும் நீங்கள் பயனடைவதற்காக காற்றை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புறத்திலிருந்து கொண்டுவந்து மாறிமாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய மக்களுக்கு அல்லாஹ் ஒருவனே என்பதையும் மீண்டும் எழுப்புவதற்கான அவனுடைய வல்லமையையும் அனைத்துப் பொருட்களின் மீதான அவனுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன.
Câsiye 45:6
தூதரே!- இவை நாம் உமக்கு சத்தியத்துடன் எடுத்துரைக்கும் சான்றுகளாகும். தன் தூதரின் மீது இறக்கிய அல்லாஹ்வின் செய்தியின் மீதும் சான்றுகளின் மீதும் அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லையெனில் பிறகு வேறு எந்த செய்தியைத்தான் அவர்கள் நம்பிக்கைகொள்ளப்போகிறார்கள். எந்த சான்றுகளைத்தான் உண்மைப்படுத்தப்போகிறார்கள்?!
Câsiye 45:7
அதிகம் பாவம் செய்யக்கூடிய ஒவ்வொரு பொய்யனுக்கும் அல்லாஹ்விடமிருந்து அழிவும் வேதனையும்தான்.
Câsiye 45:8
இந்த நிராகரிப்பாளன் குர்ஆனிலிருந்து அவனிடம் எடுத்துரைக்கப்படும் அல்லாஹ்வின் வசனங்களை செவியுறுகிறான். பின்னர் அவனுக்கு ஓதிக்காட்டப்பட்ட அந்த வசனங்களை அவன் செவியேற்காதவனை போல சத்தியத்தைப் பின்பற்றாமல் தன் மீது கர்வம் கொண்டு தான் இருந்துகொண்டிருக்கும் நிராகரிப்பிலும் பாவங்களிலும் நிலைத்துவிடுகிறான். -தூதரே!- அவனுக்காக மறுமையில் வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது என்ற கவலையூட்டும் தகவலைக் கூறிவிடுவீராக.
Câsiye 45:9
குர்ஆனிலிருந்து ஏதேனும் ஒன்று அவனை அடைந்துவிட்டால் அதனை அவன் பரிகாசமாக எடுத்துக்கொண்டு பரிகாசம் செய்கிறான். இவ்வாறு குர்ஆனைப் பரிகாசம் செய்யும் பண்புகளைப் பெற்றவர்களுக்கு மறுமை நாளில் இழிவுமிக்க வேதனை உண்டு.
Câsiye 45:10
மறுமையில் அவர்களுக்கு முன்னால் நரக நெருப்பு காத்திருக்கின்றது. அவர்கள் சம்பாதித்த செல்வங்கள் அல்லாஹ்விடம் எதையும் அளிக்கப் போவதில்லை. அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்குவதற்காக ஏற்படுத்திக் கொண்ட சிலைகளும் அவர்களைவிட்டு எதையும் தடுத்துவிடாது. அவர்களுக்கு மறுமை நாளில் கடும் வேதனை உண்டு.
Câsiye 45:11
நாம் நம்முடைய தூதர் முஹம்மது மீது இறக்கிய இந்த வேதம் சத்தியப் பாதையின்பால் வழிகாட்டுகிறது. இறைவன் தன் தூதர் மீது இறக்கிய வசனங்களை நிராகரிப்பவர்களுக்கு வேதனை மிக்க மோசமான தண்டனை உண்டு.
Câsiye 45:12
மனிதர்களே!- அல்லாஹ் ஒருவனே உங்களுக்காக கடலை வசப்படுத்தித் தந்தான். அதில் கப்பல்கள் அவனுடைய கட்டளைப்படி செல்வதற்கும் அனுமதிக்கப்பட்ட சம்பாத்தியத்தின் வகைகள் மூலம் அவனுடைய அருளை நீங்கள் தேடுவதற்காகவும் அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதற்காகவுமே அவ்வாறு செய்தான்.
Câsiye 45:13
சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகிய வானங்களிலுள்ளவற்றையும் மலைகள், மரங்கள், ஆறுகள் போன்ற பூமியிலுள்ளவற்றையும் அவன் உங்களுக்காக வசப்படுத்தித் தந்துள்ளான். இவ்வனைத்து அருட்கொடைகளும் அவனது அருளும் உபகாரமுமாகும். நிச்சயமாக உங்களுக்காக இவ்வாறு வசப்படுத்தித் தந்துள்ளதில் அல்லாஹ்வின் சான்றுகளில் சிந்தனை செலுத்தி அவற்றைக் கொண்டு படிப்பினை பெறுவோருக்கு அவன் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன.
Câsiye 45:14
தூதரே!- அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரை உண்மைப்படுத்தியவர்களிடம் நீர் கூறுவீராக: “உங்களுக்குத் தீங்கிழைத்த நிராகரிப்பாளர்களை மன்னித்துவிடுங்கள். அவர்கள் அல்லாஹ்வின் அருளையோ, தண்டனையையோ பொருட்படுத்துவதில்லை. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையைக் கடைப்பிடித்த நம்பிக்கையாளர்கள், வரம்புமீறிய நிராகரிப்பாளர்கள் என ஒவ்வொருவருக்கும் அவர்கள் உலகில் சம்பாதித்த செயல்களுக்கான கூலியை வழங்கிடுவான்.
Câsiye 45:15
யார் நற்செயல் புரிவாரோ அந்த நற்செயலால் ஏற்படும் பலன் அவரையே சாரும். அவரது செயலைவிட்டும் அல்லாஹ் தேவையற்றவன். யார் தீய செயல் புரிகின்றாரோ அந்த தீய செயலினால் ஏற்படும் தீய விளைவான தண்டனை அவருக்கே ஏற்படும். அந்த செயலால் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் ஏற்படப் போவதில்லை. நாம் ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை வழங்கிடுவதற்காக பின்னர் நீங்கள் அனைவரும் மறுமையில் நம்மிடம் மட்டுமே திரும்ப வேண்டும்.
Câsiye 45:16
நாம் இஸ்ராயீலின் மக்களுக்கு தவ்ராத்தையும் அதன் சட்டங்களைக்கொண்டு மக்களிடையே தீர்ப்பளிப்பதையும் அளித்தோம். இப்ராஹீமின் சந்ததியைச் சார்ந்த அவர்களிலிருந்தே அதிகமான நபிமார்களை ஏற்படுத்தினோம். தூய்மையான பலவற்றிலிருந்து அவர்களுக்கு வாழ்வாதாரமும் அளித்தோம். அவர்கள் வாழ்ந்த காலத்தில் அனைவரைவிடவும் அவர்களை சிறப்பித்தோம்.
Câsiye 45:17
அசத்தியத்திலிருந்து சத்தியத்தைத் தெளிவுபடுத்தும் ஆதாரங்களையும் அவர்களுக்கு வழங்கினோம். முஹம்மது தூதராக அனுப்பப்பட்டு ஆதாரங்கள் அவர்களுக்கு எதிராக நிலைநாட்டப்பட்ட பிறகே அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டார்கள். பதவி மற்றும் தலைமைத்துவத்தின் மீதுள்ள மோகத்தினால் அவர்களில் சிலர் சிலருக்கு அநீதியிழைத்துக்கொண்டதே இந்த கருத்துவேறுபாட்டின் பக்கம் அவர்களை இட்டுச் சென்றது. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் உலகில் கருத்துவேறுபாடு கொண்டிருந்தவற்றில் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். அப்போது யார் சத்தியவாதிகள், யார் அசத்தியவாதிகள் என்பதைத் தெளிபடுத்துவான்.
Câsiye 45:18
பின்னர் தூதரே! உமக்கு முன்னர் நம்முடைய தூதர்களுக்கு நம்முடைய கட்டளைகளில் இருந்து நாம் ஏவிய ஈமானின் பக்கமும் நற்செயல்களின் பக்கமும் அழைப்பு விடுக்கும் இஸ்லாமிய ஷரீஅத்தில் உம்மை ஆக்கினோம். இந்த மார்க்கத்தைப் பின்பற்றுவீராக. சத்தியத்தை அறியாதவர்களின் மனஇச்சைகளைப் பின்பற்றாதீர். அவர்களின் மனவிருப்பங்கள் சத்தியத்தைவிட்டு வழிகெடுத்துவிடும்.
Câsiye 45:19
நிச்சயமாக சத்தியத்தை அறியாதவர்களின் மனஇச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எதனையும் உம்மைவிட்டும் அவர்களால் தடுக்க முடியாது. நிச்சயமாக அனைத்து மார்க்கங்களிலுமுள்ள அநியாயக்காரர்கள் நம்பிக்கையாளர்களுக்கு எதிராக ஒருவருக்கொருவர் உதவியாளர்களாக இருக்கின்றார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அவனே உதவியாளனாவான்.
Câsiye 45:20
நம் தூதர் மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆன் மக்களுக்கு அசத்தியத்திலிருந்து சத்தியத்தைத் தெளிவுபடுத்தும் அத்தாட்சியாகவும் சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடியதாகவும் உறுதியாக நம்பிக்கைகொள்ளும் மக்களுக்கு அருளாகவும் இருக்கின்றது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் தம் இறைவன் தம்மைப் பொருந்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதன் மூலம் நேரான வழியின்பால் வழிகாட்டப்படுகிறார்கள். அவன் அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து நரகத்தைவிட்டும் தூரமாக்குகிறான்.
Câsiye 45:21
தங்களின் உறுப்புகளால் நிராகரிப்பிலும் பாவங்களிலும் ஈடுபட்டவர்களை நாம் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிபவர்களைப்போன்று ஆக்கி உலகிலும் மறுமையிலும் அவர்கள் சமமாகிவிடுவார்கள் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவர்களின் இத்தீர்ப்பு மோசமானதாகும்.
Câsiye 45:22
அல்லாஹ் வானங்களையும் பூமியையும் ஓர் உயர்ந்த நோக்கத்திற்காகப் படைத்துள்ளான். அவன் அவற்றை வீணாகப் படைக்கவில்லை. அது ஒவ்வொருவருக்கும் அவர் சம்பாதித்ததற்கான கூலியை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான். நலவுக்கு நன்மையும் அல்லது தீங்கிற்கு தீமையும் உண்டு. அல்லாஹ் அவர்களின் நன்மைகளைக் குறைத்தோ தீமைகளை அதிகரித்தோ அவர்கள் மீது அநீதி இழைத்துவிட மாட்டான்.
Câsiye 45:23
தூதரே!- தன் மனஇச்சையைப் பின்பற்றி அதற்கு மாற்றமே செய்யாது வணங்கப்படும் இறைவனைப் போன்று ஆக்கிக் கொண்டவனை நீர் பார்ப்பீராக. அல்லாஹ் தன்னுடைய அறிவின் பிரகாரம் வழிகெடுத்துவிட்டான். ஏனெனில் அவன் வழிகெடுக்கப்படுவதற்குத் தகுதியானவன். அல்லாஹ் அவனுடைய உள்ளத்தில் முத்திரையிட்டுவிட்டான். எனவே அதனால் பயனடையும் வண்ணம் செவியேற்க முடியாது. அல்லாஹ் அவனுடைய பார்வையில் சத்தியத்தைப் பார்ப்பதை விட்டும் தடுக்கும் ஒரு திரையை ஏற்படுத்தியுள்ளான். அல்லாஹ் யாரை வழிகெடுத்துவிட்டானோ அவனை யார்தான் சத்தியத்தின்பால் நேர்வழிபெறச் செய்யமுடியும்? மன இச்சையைப் பின்பற்றுவதன் பாதிப்பையும், அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றுவதன் பயனையும் நீங்கள் நினைவுகூற மாட்டீர்களா?
Câsiye 45:24
மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: “நம்முடைய இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. அதற்குப் பிறகு எந்த வாழ்க்கையும் இல்லை. ஒரு தலைமுறை மனிதர்கள் மரணிக்கிறார்கள். அவர்கள் திரும்பி வருவதில்லை. இன்னும் சில தலைமுறைகள் வாழ்கிறார்கள். இரவு, பகல் மாறிமாறி வருவதே நம்மை மரணிக்கச் செய்கின்றது.” மீண்டும் எழுப்பப்படுவதை நிராகரிப்பதற்கு அவர்களிடம் எந்த அறிவும் இல்லை. அவர்கள் யூகம்தான் கொள்கிறார்கள். யூகம் எந்த உறுதியையும் அளிப்பதில்லை.
Câsiye 45:25
மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இணைவைப்பாளர்களிடம் நம்முடைய தெளிவான வசனங்கள் எடுத்துரைக்கப்பட்டால் தூதரிடமும் அவருடைய தோழர்களிடமும் “மரணித்ததன் பின்னால் மீண்டும் உயிகொடுத்து எழுப்பப்படுவோம்” என்ற உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இறந்துவிட்ட எங்களின் முன்னோர்களை உயிரோடு கொண்டுவாருங்கள்” என்று கூறுவதைத் தவிர அவர்களிடம் வேறு எந்த ஆதாரமும் இருப்பதில்லை.
Câsiye 45:26
தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ் உங்களைப் படைத்து உயிர்ப்பிக்கின்றான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்கின்றான். பின்னர் நீங்கள் மரணித்த பிறகு மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் உங்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டுவான். நிச்சயமாக அந்த நாள் வருவதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. ஆயினும் மக்களில் பெரும்பாலானோர் இதனை அறியமாட்டார்கள். எனவேதான் நற்செயல்களைக் கொண்டு அந்த நாளுக்காக தங்களை தயார்படுத்திக் கொள்வதில்லை.
Câsiye 45:27
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. அவையிரண்டிலும் அவனைத் தவிர வேறு எதுவும் வணங்கப்படுவதற்குத் தகுதியானவையல்ல. அல்லாஹ் மரணித்தவர்களை விசாரணைக்காகவும் கூலி வழங்குவதற்காகவும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும் மறுமை நாளில் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கிக்கொண்டிருந்த, சத்தியத்தை அசத்தியமாக்கவும் அசத்தியத்தை சத்தியமாக்கவும் முயற்சி செய்துகொண்டிருந்த அசத்தியவாதிகள் நஷ்டமடைந்து விடுவார்கள்.
Câsiye 45:28
தூதரே!- அந்த நாளில் ஒவ்வொரு சமூகமும் தமக்கு நிகழப்போவதை எதிர்பார்த்துக் கொண்டு முழந்தாளிட்டுக் கிடக்கும். ஒவ்வொரு சமூகமும் வானவர்கள் பதிவுசெய்து பாதுகாத்த செயல்பதிவேடுகளை நோக்கி அழைக்கப்படும். -மனிதர்களே!- இன்றைய தினம் நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த நன்மை மற்றும் தீமைகளுக்கு கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.
Câsiye 45:29
இது எமது வானவர்கள் உங்களின் செயல்களைப் பதிவுசெய்த ஏடாகும். உங்களுக்கு எதிராக உண்மையான சாட்சி கூறும். அவற்றை வாசியுங்கள். நிச்சயமாக நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்களை பதிவுசெய்யுமாறு நாம் கண்காணிக்கும் வானவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தோம்.
Câsiye 45:30
நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்களை அவர்களின் இறைவன் தன் அருளால் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான். அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய இந்த கூலியே தெளிவான வெற்றியாகும். அதற்கு இணையான வேறு வெற்றி இல்லை.
Câsiye 45:31
அல்லாஹ்வை நிராகரித்தவர்களிடம் அவர்களைப் கண்டிக்கும் விதமாகக் கூறப்படும்: “என் வசனங்கள் உங்களிடம் எடுத்துரைக்கப்பட்ட வேளை, அவற்றின் மீது கர்வம் கொண்டு, நீங்கள் நிராகரித்து பாவங்கள் புரியும் குற்மிழைக்கும் சமூகமாக இருந்தீர்களல்லவா?!”
Câsiye 45:32
“நிச்சயமாக அல்லாஹ் -தன் அடியார்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி அவர்களுக்குக் கூலி வழங்குவான் என்று- அவன் அளித்த வாக்குறுதி சந்தேகமற்ற உண்மையாகும். மறுமை நாள் உண்டு என்பது சந்தேகம் இல்லாத உண்மையாகும். எனவே அதற்காக செயல்படுங்கள்” என்று உங்களிடம் கூறப்பட்டால் “மறுமை நாள் என்னவென்பதை நாங்கள் அறிய மாட்டோம். அது ஒருவேளை நிகழலாம் என்ற பலவீனமான எண்ணத்தையே நாங்கள் கொண்டுள்ளோம். அது நிகழும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புவோராக இல்லை” என்று கூறுகிறீர்கள்.
Câsiye 45:33
அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த நிராகரிப்பு மற்றும் பாவங்களின் தீய விளைவுகள் அவர்களுக்கு முன்னால் வெளிப்பட்டு விடும். எச்சரிக்கப்படும் போது அவர்கள் பரிகாசம் செய்துகொண்டிருந்த வேதனை அவர்கள் மீது இறங்கிவிடும்.
Câsiye 45:34
அல்லாஹ் அவர்களிடம் கூறினான்: “நீங்கள் இந்த நாளின் சந்திப்பை மறந்து அதற்காக நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்து தயாராகாமல் இருந்ததைப் போன்றே இன்றைய தினம் நரகத்தில் உங்களை விட்டுவிடுவோம். நீங்கள் ஒதுங்கி தங்குகின்ற இடம் நரகமாகும். உங்களை அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தடுக்கும் உதவியாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
Câsiye 45:35
நீங்கள் அனுபவிக்கும் இந்த வேதனை அல்லாஹ்வின் வசனங்களை நிச்சயமாக நீங்கள் ஏளனமாக பரிகாசம் செய்துகொண்டிருந்ததனாலாகும். உலக இன்பங்களும் இச்சைகளும் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டன. இன்றைய தினம் அல்லாஹ்வின் வசனங்களைப் பரிகாசம் செய்த நிராகரிப்பாளர்கள் நரகத்திலிருந்து வெளியேற முடியாது. மாறாக அவர்கள் அதில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். நற்செயல் புரிவதற்காக அவர்கள் மீண்டும் உலகின்பால் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். அவர்களின் இறைவன் அவர்களைப் பொருந்திக்கொள்ளமாட்டான்.
Câsiye 45:36
வானங்கள், பூமி மற்றும் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மட்டுமே புகழனைத்தும்.
Câsiye 45:37
வானங்களிலும் பூமியிலும் கண்ணியம் அவனுக்கே உரியது. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தான் படைத்த படைப்புகளில், அமைத்த விதிகளில், திட்டங்களில், அவன் இயற்றியவைகளில் ஞானம் மிக்கவன்.
Ahkaf 46:1
இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
Ahkaf 46:2
இது யாவற்றையும் மிகைத்தவனும் படைப்பிலும் நிர்ணயித்திலும் சட்டதிட்டத்திலும் ஞானம்மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட குர்ஆனாகும்.
Ahkaf 46:3
வானங்களையும் பூமியையும் அவற்றிற்கு இடையிலுள்ளவற்றையும் நாம் வீணாகப் படைக்கவில்லை. மாறாக அவையனைத்தையும் நாம் ஓர் உயர்ந்த நோக்கத்துடன் உண்மையாகவே படைத்துள்ளோம். அவற்றுள் ஒன்று, அடியார்கள் அவற்றின் மூலம் அல்லாஹ்வை அறிந்து அவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது என்பதாகும். அல்லாஹ் மாத்திரமே அறிந்த குறிப்பிட்ட தவணை வரையும் பூமியில் தனது பிரதிநிதித்துவத்தின் கடமைகளை நிறைவேற்றவதுமாகும். அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் அவனுடைய வேதத்தில் தங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் புறக்கணிக்கிறார்கள்.
Ahkaf 46:4
தூதரே!- சத்தியத்தைப் புறக்கணிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் சிலைகளைக் குறித்து எனக்கு அறிவியுங்கள். அவை பூமியில் எந்தப் பகுதியைப் படைத்தன? அவை ஒரு மலையையாவது படைத்தனவா? ஒரு ஆறையாவது படைத்தனவா? அல்லது வானங்கள் மற்றும் பூமியைப் படைத்ததில் அல்லாஹ்வுடன் அவற்றிற்கும் பங்கு இருக்கின்றதா? நிச்சயமாக சிலைகள் வணக்கத்திற்குத் தகுதியானவை என்று நீங்கள் கூறும் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் குர்ஆனுக்கு முன்னால் அல்லாஹ்விடமிருந்து இறங்கிய ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள். அல்லது முன்னோர்கள் விட்டுச் சென்ற அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியை கொண்டுவாருங்கள்.
Ahkaf 46:5
அல்லாஹ் அல்லாத தன்னுடைய அழைப்புக்கு மறுமை நாள் வரை பதிலளிக்காத சிலைகளை வணங்குபவனை விட வழிகெட்டவன் வேறு யாரும் இல்லை. அல்லாஹ் அல்லாத அவர்கள் வணங்கும் சிலைகள் அவர்களுக்குப் பலனளிப்பதும் தீங்கிழைப்பதும் எப்படிப்போனாலும் தம்மை வணங்குபவர்களின் பிரார்த்தனையைக் கூட அறியாமல் இருக்கிறது.
Ahkaf 46:6
அவை உலகில் பலனளிக்காமல் இருப்பதோடு மறுமை நாளில் ஒன்றுதிரட்டப்படும்போது தம்மை வணங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை எதிரிகளாகிவிடும்; அவர்களை விட்டு அவை விலகிவிடும். அவர்கள் தங்களை வணங்கிக் கொண்டிருந்ததே தமக்குத் தெரியாது என மறுத்துவிடும்.
Ahkaf 46:7
நாம் நம் தூதர் மீது இறக்கிய வசனங்கள் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டால், நிராகரிப்பாளர்கள், தூதரின் மூலம் தங்களிடம் வந்த குர்ஆனைப் பார்த்துக் கூறுகிறார்கள்: “இது தெளிவான சூனியமாகும். இது அல்லாஹ்விடமிருந்து வந்த வஹி அல்ல.”
Ahkaf 46:8
இந்த இணைவைப்பாளர்கள், “நிச்சயமாக முஹம்மது குர்ஆனை சுயமாகப் புனைந்து அதனை அல்லாஹ்வின்பால் இணைத்துள்ளார்” என்று கூறுகிறார்களா? -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நான் அதனை சுயமாகப் புனைந்துகொண்டால் உங்களால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தந்திரம் செய்து என்னைச் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. எனவே எவ்வாறு நான் அவன் மீது இட்டுக்கட்டி என்னை நான் வேதனையில் ஆழ்த்திக் கொள்வேன்? அவனுடைய குர்ஆனில் நீங்கள் செய்யும் ஆட்சேபனைகளையும் என்னை வசைபாடுவதையும் அல்லாஹ் நன்கறிவான். எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சிகூற அல்லாஹ்வே போதுமானவன். அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.”
Ahkaf 46:9
தூதரே!- உமது நபித்துவத்தை பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “உங்களுக்கான எனது அழைப்பை நீங்கள் அபூர்வமாகக் கருதுவதற்கு, நான் அல்லாஹ் அனுப்பிய தூதர்களில் முதலாமவன் அல்ல. எனக்கு முன்னர் பல தூதர்கள் கடந்து சென்றுள்ளார்கள். உலகில் அல்லாஹ் என்னுடன் எவ்வாறு நடந்துகொள்வான் என்றோ உங்களுடன் எவ்வாறு நடந்துகொள்வான் என்றோ எனக்குத் தெரியாது. அவன் எனக்கு வஹியாக அறிவிப்பதையே நான் பின்பற்றுகிறேன். நான் கூறுவதும் செயல்படுவதும் அவன் எனக்கு வஹி அறிவிப்பதன் அடிப்படையில்தான். நான் உங்களை அல்லாஹ்வின் வேதனையை விட்டும் தெளிவாக எச்சரிப்பவனே.
Ahkaf 46:10
தூதரே!- பொய்ப்பிக்கும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “நீங்கள் எனக்குக் கூறுங்கள், இந்த குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து அதற்காக இஸ்ராயீலின் மக்களில் ஒருவர் அது சம்பந்தமாக தவ்ராத்தில் இடம்பெற்றதன் படி அது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என சாட்சி கூறி அதன்மீது நம்பிக்கைகொண்டிருந்தும் நீங்கள் நம்பிக்கைகொள்ளாமல் கர்வம்கொண்டு அதனை நிராகரித்தால் அப்போது நீங்கள் அநியாயக்காரர்கள் இல்லையா? நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்ட மாட்டான்.”
Ahkaf 46:11
குர்ஆனையும் தங்களின் தூதர் தங்களிடம் கொண்டுவந்தவற்றையும் நிராகரித்தவர்கள் நம்பிக்கைகொண்டவர்களைப் பார்த்துக் கூறினார்கள்: “முஹம்மது கொண்டுவந்துள்ளது நன்மையின்பால் வழிகாட்டும் சத்தியமாக இருந்திருந்தால் இந்த அடிமைகளும் ஏழைகளும் பலவீனர்களும் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள்.” நிச்சயமாக அவர்கள் தங்களின் தூதர் தம்மிடம் கொண்டுவந்ததன் மூலம் நேர்வழியடையவில்லை என்பதனால் அவர்கள் கூறுவார்கள்: “நம்மிடம் வந்துள்ளது பழமையான பொய்தான். நாங்கள் பொய்யைப் பின்பற்ற மாட்டோம்.”
Ahkaf 46:12
இந்த குர்ஆனுக்கு முன்னர் அல்லாஹ் மூஸாவின் மீது இறக்கிய வேதமான தவ்ராத் சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடியதாகவும் நம்பிக்கைகொண்டு இஸ்ராயீலின் மக்களில் அதனைப் பின்பற்றியவர்களுக்கு அருட்கொடையாகவும் இருந்தது. முஹம்மது மீது இறக்கப்பட்ட அரபி மொழியிலான இந்த குர்ஆன் முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாகவும் இணைவைத்தும் பாவங்கள் புரிந்தும் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களை எச்சரிக்கை செய்யக்கூடியதாகவும் படைப்பாளனுடனும் அவனுடைய படைப்புகளுடனும் நல்ல முறையில் தொடர்பு வைத்துக்கொண்டவர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கின்றது.
Ahkaf 46:13
நிச்சயமாக யார் அல்லாஹ்தான் எங்களின் இறைவன். அவனைத் தவிர எங்களுக்கு வேறு யாரும் இல்லை’ என்று கூறி பின்னர் நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்டு அதில் உறுதியாக இருக்கின்றார்களோ அவர்கள் மறுமையில் தாம் முன்னோக்கக்கூடியதை எண்ணி அச்சம்கொள்ள மாட்டார்கள். தமக்குத் தவறிய உலக பாக்கியங்களுக்காகவும் தமக்குப் பின் விட்டுச்செல்பவைக்காகவும் கவலைப்பட மாட்டார்கள்.
Ahkaf 46:14
இந்த பண்புகளை உடையவர்கள்தாம் சுவனவாசிகளாவர். உலகில் அவர்கள் முற்படுத்தி வைத்த நற்செயல்களுக்குக் கூலியாக அதில் என்றென்றும் அவர்கள் நிலைத்திருப்பார்கள்.
Ahkaf 46:15
தன் பெற்றோர் வாழும் போதும் மரணித்த பின்பும் மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து அவர்களுக்கு உபகாரம் செய்யுமாறு நாம் மனிதனுக்கு கடுமையான முறையில் ஏவினோம். குறிப்பாக அவனை சிரமத்துடன் சுமந்து பெற்றெடுத்த அவனது தாயுடன். அவள் அவனை சுமந்த காலமும் பால்குடி மறக்கடிக்கும் காலமும் முப்பது மாதங்களாகும். அவன் தன்னுடைய அறிவு மற்றும் உடல் ரீதியான முழுமையான பலத்தைப் பெற நாற்பது வருடங்கள் ஆகிறது. அவன் கூறுகிறான்: “என் இறைவா! நீ என்மீதும் என் தாய், தந்தையர் மீதும் பொழிந்த அருட்கொடைகளுக்கு நான் நன்றிசெலுத்துவதற்கும் நீ விரும்பும் நற்செயல்களைச் செய்வதற்கும் எனக்கு அருள்புரிவாயாக. என்னிடமிருந்து அதனை ஏற்றுக்கொள்வாயாக! என் பிள்ளைகளைச் சீர்படுத்துவாயாக. நிச்சயமாக நான் என் பாவங்களிலிருந்து உன் பக்கம் மீண்டு விட்டேன். உனக்கு வழிப்பட்டு உனது கட்டளைகளுக்கு அடிபணிந்தவர்களில் ஒருவனாகிவிட்டேன்.
Ahkaf 46:16
நாம் அவர்களிடமிருந்து அவர்களின் நற்செயல்களை ஏற்றுக் கொண்டு அவர்கள் செய்த தீய செயல்களை மன்னித்துவிடுகின்றோம். அவற்றிற்காக நாம் அவர்களைக் குற்றம் பிடிப்பதில்லை. அவர்கள்தாம் சுவனவாசிகளில் உள்ளவர்களாவர். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இந்த வாக்குறுதி உண்மையானதாகும். அது சந்தேகம் இல்லாமல் நிறைவேறியே தீரும்.
Ahkaf 46:17
அந்த மனிதன் தன் பெற்றோரிடம் கூறினான்: “உங்கள் இருவருக்கும் கேடுதான். நான் மரணித்தபிறகு என் சவக்குழியிலிருந்து மீண்டும் வெளிப்படுத்தப்படுவேன் என்று மிரட்டுகிறீர்களா? பல தலைமுறைகள் கடந்துவிட்டன. அவற்றில் ஏராளமான மனிதர்கள் இறந்தனர். ஆனால் அவர்களில் யாரும் மீண்டும் உயிருடன் எழுப்பப்படவில்லையே!” அவனுடைய தாய், தந்தையரோ தங்கள் மகனுக்கு நம்பிக்கைகொள்வதற்கு நேர்வழிகாட்டுமாறு அல்லாஹ்விடம் உதவிதேடுகிறார்கள். அவர்கள் இருவரும் தங்கள் மகனிடம் கூறினார்கள்: “நீ உயிர்கொடுத்து மீண்டும் எழுப்பப்படுவதன் மீது நம்பிக்கைகொள்ளவில்லையெனில் உனக்கு அழிவுதான் உண்டாகும். எனவே அதன் மீது நம்பிக்கைகொள். நிச்சயமாக மீண்டும் எழுப்பும் அல்லாஹ்வின் வாக்குறுதி எவ்வித சந்தேகமுமற்ற உண்மையாகும்.” அவன் மீண்டும் அதேபோன்று மறுத்தவனாகக் கூறினான்: “மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோம் என்று கூறப்படும் விஷயம் முன்னோர்களின் புத்தகங்களிலிருந்து எடுத்து, எழுதப்பட்டு கூறப்பட்டதாகும். அது அல்லாஹ்விடமிருந்து உறுதியாக்கப்பட்ட ஒன்றல்ல.
Ahkaf 46:18
இவர்களுக்கு முன்வாழ்ந்த மனித, ஜின் சமூகங்களோடு இவர்கள் மீதும் வேதனை உறுதியாகிவிட்டது. நிச்சயமாக நரகில் நுழைவதன் மூலம் அவர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் இழந்து நஷ்டமடைந்தவர்களாக இருந்தார்கள்.
Ahkaf 46:19
சுவனவாசிகள், நரகவாசிகள் என்ற- இருபிரிவினருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப படித்தரங்கள் உண்டு. சுவனவாசிகளின் படித்தரங்கள் உயர்ந்ததாக இருக்கும். நரகவாசிகளின் படித்தரங்கள் தாழ்ந்ததாக இருக்கும். அல்லாஹ் அவர்களின் செயல்களுக்கான கூலியை முழுமையாக வழங்கிடுவான். மறுமை நாளில் அவர்களின் நன்மைகள் குறைக்கப்பட்டோ, தீமைகள் அதிகரிக்கப்பட்டோ அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
Ahkaf 46:20
அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதர்களை பொய்ப்பித்தவர்கள் வேதனைக்குள்ளாக்கப்படுவதற்காக நரகத்தின் முன் நிறுத்தப்படும்போது அவர்களை இழிவுபடுத்தும்விதமாக அவர்களிடம் கூறப்படும்: “உலக வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்த தூய்மையானவற்றையெல்லாம் நீங்கள் வீணடித்து அதிலுள்ள இன்பங்களை அனுபவித்தீர்கள். இன்றைய தினம் அநியாயமாக நீங்கள் பூமியில் கர்வம் கொண்டதனாலும் நிராகரித்து, பாவங்கள் புரிந்து அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாததனாலும் உங்களை இழிவுபடுத்தும் வேதனையை உங்களுக்குக் கூலியாக வழங்கப்படும்.
Ahkaf 46:21
தூதரே!- ஆதின் வம்சாவளி சகோதரர் ஹூதை நினைவுகூர்வீராக. அவர் தம் சமூகத்தினரை அவர்களின் மீது அல்லாஹ்வின் வேதனை நிகழும் என எச்சரிக்கை செய்தார். அவர்கள் அரேபிய தீப கற்பத்தின் தெற்குப்பகுதியில் மணல்மேடுகளிலுள்ள அவர்களின் வசிப்பிடங்களில் இருந்தார்கள். ஹூதிற்கு முன்னரும் பின்னரும் தமது சமூகத்தை எச்சரிக்கை செய்யும் தூதர்கள் வந்துசென்றார்கள். அவர்கள் தங்கள் சமூக மக்களிடம் கூறினார்கள்: “அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அவனைத்தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள். என் சமூகமே! நிச்சயமாக உங்கள் மீது மாபெரும் நாளான மறுமை நாளின் வேதனையை அஞ்சுகிறேன்.”
Ahkaf 46:22
அவரது சமூகத்தார் கூறினார்கள்: “எங்கள் தெய்வங்களை வணங்குவதை விட்டும் எங்களைத் திசைதிருப்பிடவா நீர் எங்களிடம் வந்துள்ளீர்?! இது ஒருபோதும் நிகழாது. நீர் கூறுவதில் உண்மையாளராக இருந்தால் நீர் எச்சரிக்கும் வேதனையை எங்களிடம் கொண்டுவாரும்.
Ahkaf 46:23
அவர் கூறினார்: “வேதனைக்குரிய நேரம் என்பது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. எனக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது. நான் எந்த தூதுச் செய்தியைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டேனோ அதை உங்களுக்கு எடுத்துரைக்கும் தூதர்தான். ஆயினும் நான் உங்களை அறியாத மக்களாகவே காண்கிறேன். அதனால்தான் உங்களுக்குப் பலனளிக்கும் விஷயங்களை விட்டுவிட்டு தீங்கிழைக்கும் விஷயங்களைச் செய்கிறீர்கள்.”
Ahkaf 46:24
அவர்கள் அவசரப்பட்ட வேதனை அவர்களிடம் வந்ததும், வானில் ஒரு திசையில் தோன்றிய மேகம் தமது பள்ளத்தாக்குகளை நோக்கி வருவதைக் கண்டபோது அவர்கள் கூறினார்கள்: “இது எங்களுக்கு மழை தரும் மேகமாகும்.” ஹூத் அவர்களிடம் கூறினார்: “நீங்கள் எண்ணுவதுபோல் இது மழை மேகமல்ல. மாறாக இது நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்த வேதனையாகும். அது வேதனைமிக்க தண்டனையை உள்ளடக்கிய காற்றாகும்.
Ahkaf 46:25
அது அல்லாஹ் அழிக்குமாறு கட்டளையிட்ட தான் கடந்து செல்லும் ஒவ்வொன்றையும் அழித்துவிடக்கூடியது. அவர்கள் செத்து மடிந்தார்கள். அவர்கள் வசித்ததற்கு அடையாளமான அவர்களின் வசிப்பிடங்களைத் தவிர வேறு எதுவும் தென்படவில்லை. இவ்வாறான வேதனை மிக்க கூலியை நிராகரிப்பிலும் பாவங்களிலும் நிலைத்திருக்கும் குற்றவாளிகளுக்கு நாம் வழங்குகின்றோம்.
Ahkaf 46:26
நாம் உங்களுக்கு வழங்காத வசதிகளையெல்லாம் ஹூதின் சமூகத்திற்கு வழங்கியிருந்தோம். அவர்கள் செவியேற்பதற்கு செவிகளையும் பார்ப்பதற்கு கண்களையும் விளங்கிக்கொள்வதற்கு உள்ளங்களையும் நாம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தோம். அவர்களின் செவிகளோ, பார்வைகளோ, உள்ளங்களோ அவர்களுக்கு எப்பயனையும் அளிக்கவில்லை. அவர்களிடம் வந்த அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றவில்லை. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பரிகாசம் செய்துகொண்டிருந்த அவர்களின் நபியான ஹூத் எச்சரித்த வேதனையே அவர்களிடம் வந்தது.
Ahkaf 46:27
மக்காவாசிகளே!- உங்களைச் சுற்றியுள்ள ஊர்களையும் நாம் அழித்துள்ளோம். ஆத், ஸமூத், லூத்தின் சமூகம், மத்யன்வாசிகள் ஆகியோரை நாம் அழித்துள்ளோம். அவர்கள் நிராகரிப்பிலிருந்து திரும்பிவிடும்பொருட்டு பலவகையான ஆதாரங்களையும் சான்றுகளையும் நாம் அவர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம்.
Ahkaf 46:28
அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தெய்வங்களாக ஏற்படுத்திக்கொண்டு வணக்கம் மற்றும் பலியிடுதல் மூலம் அவற்றை நெருங்கிக்கொண்டிருந்த சிலைகள் அவர்களுக்கு உதவி புரிந்திருக்கக்கூடாதா? அவை அவர்களுக்கு நிச்சயமாக உதவிபுரியவில்லை. மாறாக அவர்கள் அவைகளின் பக்கம் மிகத் தேவையுடையோராக இருந்த சமயத்தில் அவர்களைவிட்டும் மறைந்துவிட்டன. சிலைகள் தங்களுக்குப் பயனளிக்கும், அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்று அவர்கள் மேலெண்ணம் கொண்டமை யாவும் பொய்யும் இட்டுக்கட்டுமாகும்.
Ahkaf 46:29
தூதரே!- உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனை செவிசாய்த்துக் கேட்கும் ஜின்களில் ஒரு பிரிவினரை நாம் உம் பக்கம் அனுப்பியதை நினைவு கூறுவீராக! அவர்கள் அதனைச் செவியேற்பதற்காக வந்தபோது அவர்களில் சிலர் சிலரிடம் கூறினார்கள்: “கவனமாக செவியேற்பதற்காக அமைதியாக இருங்கள்.” தூதர் ஓதிமுடித்த பிறகு அவர்கள் தங்களின் சமூகத்தவரிடம் இந்த குர்ஆனின்மீது நம்பிக்கைகொள்ளவில்லையெனில் ஏற்படப்போகும் அல்லாஹ்வின் வேதனையைக்குறித்து எச்சரித்தவர்களாகத் திரும்பினார்கள்.
Ahkaf 46:30
அவர்கள் தமது சமூகத்திடம் கூறினார்கள்: “எம் சமூகமே! நாங்கள் ஒரு வேதத்தை செவியுற்றோம். அது அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தக்கூடிய மூஸாவுக்கு பிறகு அல்லாஹ் இறக்கிய வேதமாகும். நாங்கள் செவியேற்ற இந்த வேதம் சத்தியத்தின்பால் வழிகாட்டுகிறது. இஸ்லாம் என்னும் நேரான பாதையின்பால் வழிகாட்டுகிறது.
Ahkaf 46:31
எம் சமூகமே! முஹம்மது உங்களை அழைக்கும் சத்தியத்திற்குப் பதிலளித்து அவர் இறைவனிடமிருந்து வந்துள்ள தூதர் என்பதை நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னிப்பான். மேலும் அவர் உங்களை அழைக்கும் சத்தியத்திற்குப் பதிலளிக்காமல் அவர் தனது இறைவனின் தூதர் என நீங்கள் நம்பிக்கைகொள்ளாத பட்சத்தில் உங்களுக்காக காத்திருக்கும் வேதனைமிக்க தண்டனையிலிருந்து அவன் உங்களைப் பாதுகாக்கிறான்.
Ahkaf 46:32
யார் முஹம்மத் அழைக்கும் சத்தியத்திற்குப் பதிலளிக்கவில்லையோ அவர் பூமியில் எங்கு விரண்டோடியும் அல்லாஹ்விடமிருந்து தப்பிவிட முடியாது. அல்லாஹ்வை விடுத்து அவரை வேதனையிலிருந்து காப்பாற்றும் உதவியாளர்கள் யாரும் அவருக்கு இருக்க மாட்டார்கள். அவர்கள் சத்தியத்தைவிட்டும் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள்.
Ahkaf 46:33
அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான். பிரமாண்டமானதாக, விசாலமானதாக அவற்றை படைப்பது அவனுக்கு இயலாததல்ல. இவ்வாறு ஆற்றலுடையவன் இறந்தவர்களை விசாரணை செய்வதற்காகவும் கூலி வழங்குவதற்காகவும் இறந்தவர்களை உயிர்ப்பிப்பதற்கு ஆற்றலுடையவன் என்பதை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்கள் அறியவில்லையா? ஆம், நிச்சயமாக அவன் அவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கு ஆற்றலுடையவன். அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். எனவே மரணித்தவர்களை உயிர்ப்பிப்பது அவனுக்கு இயலாததல்ல.
Ahkaf 46:34
அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் பொய்ப்பித்தவர்கள் வேதனைக்குள்ளாக்கப்படுவதற்காக நரகத்தின் முன் நிறுத்தப்படும் நாளில் இழிவுபடுத்தும் விதமாக அவர்களிடம் கேட்கப்படும்: “நீங்கள் காணும் இந்த வேதனை உண்மையானதில்லையா? அல்லது நீங்கள் உலகில் கூறிக்கொண்டிருந்தவாறு இதுவும் பொய்யா?” அவர்கள் கூறுவார்கள்: “ஆம், எங்கள் இறைவனின் மீது சத்தியமாக, நிச்சயமாக இது உண்மையாகும்.” அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனால் வேதனையை அனுபவியுங்கள்.”
Ahkaf 46:35
தூதரே!- மனவுறுதிமிக்க தூதர்களான நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகியோர் பொறுத்துக் கொண்டது போன்று உம் சமூகத்தினரின் மறுப்பைப் பொறுத்துக் கொள்வீராக. அவர்களிடம் வேதனை விரைவாக வந்துவிட வேண்டும் என்று அவசரப்படாதீர். உம் சமூகத்தின் மறுப்பாளர்கள் மறுமையில் தாங்கள் எச்சரிக்கப்பட்ட வேதனையைக் காணும் நாளில் அவர்கள் அனுபவிக்கும் நீண்ட வேதனையினால் உலகில் பகலின் சில மணித்துளிகளே தங்கியிருந்ததாக அவர்களுக்குத் தோன்றும். முஹம்மது மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆன் மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டதாகும். நிச்சயமாக நிராகரித்து, பாவங்கள் புரிந்து அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாத கூட்டத்தினர்கள்தாம் வேதனையால் அழிக்கப்படுவார்கள்.
Muhammed 47:1
அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய மார்க்கத்தைவிட்டும் மக்களைத் தடுத்தவர்களின் செயல்களை அல்லாஹ் வீணாக்கிவிட்டான்.
Muhammed 47:2
யாரெல்லாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு, நற்செயல்கள் புரிந்து, அவன் தன் தூதர் முஹம்மது மீது இறக்கிய -அவர்களின் இறைவனிடமிருந்து வந்த உண்மையான- அல்குர்ஆன் மீது நம்பிக்கைகொண்டார்களோ அல்லாஹ் அவர்களின் பாவங்களைப் போக்கிவிடுவான். அவற்றிற்காக அவர்களைத் தண்டிக்க மாட்டான். அவர்களின் உலக மற்றும் மறுமை தொடர்பான எல்லா விவகாரங்களையும் அவன் சீராக்கித் தந்திடுவான்.
Muhammed 47:3
இந்த இரு பிரிவினருக்குமான மேற்கூறப்பட்ட கூலிக்கான காரணம், அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் அசத்தியத்தைப் பின்பற்றினார்கள். அல்லாஹ்வின்மீதும் அவனது தூதரின்மீதும் நம்பிக்கைகொண்டவர்கள் தமது இறைவனிடமிருந்து வந்த சத்தியத்தைப் பின்பற்றினார்கள். இரு பிரிவினரின் செயல்களில் காணப்படும் வேறுபாட்டினால் கூலியும் வேறுபட்டுள்ளது. எனவே அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்கள், நிராகரித்தவர்கள் ஆகிய இரு அணிகளின் விடயத்திலும் அல்லாஹ் தீர்ப்புச்செய்து தெளிவாக்கியது போல் அல்லாஹ் மக்களுக்கு உதாரணங்களைக் கூறுகிறான். நிகரானதை நிகரானதுடன் சேர்த்துவிடுகிறான்.
Muhammed 47:4
நம்பிக்கையாளர்களே!- நிராகரிப்பாளர்களில் போர்புரிபவர்களை நீங்கள் போர்க்களத்தில் சந்தித்தால் உங்களின் வாள்களால் அவர்களின் கழுத்துகளை வெட்டுங்கள். அவர்களில் அதிகமானவர்களை கொன்று குவிக்கும்வரை போரிடுங்கள். அவர்களின் பலத்தை அடியோடு அழித்துவிடுங்கள். அவர்களில் அதிகமானவர்களை கொன்று குவித்த பின் கைதிகளின் விலங்குகளைக் கட்டுங்கள். அவர்களை சிறைபிடித்தால் அப்போது நலனுக்கேற்ப முடிவெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்கள்மீது கிருபை செய்து அவர்களிடம் எதுவும் பெறாமல் அவர்களை விடுவித்துவிடலாம் அல்லது ஈட்டுத்தொகை அல்லது வேறு எதனையோ பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிக்கலாம். நிராகரிப்பாளர்கள் இஸ்லாத்தை ஏற்றோ அல்லது நம்பிக்கையாளர்களுடன் ஒப்பந்தம் செய்தோ போர் முடிவடையும் வரை நீங்கள் போரையும் கைது செய்வதையும் தொடருங்கள். அல்லாஹ் நிராகரிப்பாளர்களைக் கொண்டு நம்பிக்கையாளர்களைச் சோதித்தல், நாட்கள் சுழன்று வருதல், சிலர் சிலரை வெற்றிகொள்தல் ஆகிய மேற்கூறப்பட்டவைகள் அல்லாஹ்வின் தீர்ப்பாகும். அவன் நாடினால் போர் புரியாமலேயே நிராகரிப்பாளர்களுக்கு எதிராக நம்பிக்கையாளர்களுக்கு வெற்றியளித்திருப்பான். ஆயினும் அவன் உங்களில் சிலரை சிலரைக்கொண்டு சோதிப்பதற்காகவே போரைக் கடமையாக்கியுள்ளான். நம்பிக்கையாளர்களில் போரிடுபவர்கள் யார்? போரிடாதவர்கள் யார்? என்பதைச் சோதிப்பதற்காக. நம்பிக்கையாளனைக்கொண்டு நிராகரிப்பாளனைச் சோதிப்பதற்காக. நம்பிக்கையாளன் கொல்லப்பட்டால் அவன் சுவனம் செல்வான். அவன் நிராகரிப்பாளனைக் கொன்றால் அந்த நிராகரிப்பாளன் நரகம் செல்வான். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் செயல்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கிவிடமாட்டான்.
Muhammed 47:5
உலக வாழ்வில் அவர்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டுவான். அவர்களின் விவகாரங்களைச் சீராக்குவான்.
Muhammed 47:6
மறுமையில் அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான். அதன் பண்புகளை அவர்களுக்கு அவன் தெளிவுபடுத்தியுள்ளான். எனவே அவர்கள் அதனை அறிந்துள்ளனர். அவன் அவர்களுக்கு மறுமையில் அவர்களின் வசிப்பிடங்களை அறிமுகப்படுத்திவைப்பான்.
Muhammed 47:7
அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதருக்கும் மார்க்கத்திற்கும் உதவுவதன் மூலமும் நிராகரிப்பாளர்களுடன் போரிடுவதன் மூலமும் அல்லாஹ்வுக்கு உதவிசெய்தால் அவர்களுக்கெதிராக உங்களுக்கு வெற்றியளித்து அவன் உங்களுக்கு உதவி புரிவான். போர்க்களத்தில் எதிரிகளைச் சந்திக்கும்போது உங்களின் பாதங்களை உறுதிப்படுத்துவான்.
Muhammed 47:8
அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்களுக்கு இழப்பும் அழிவும்தான் உண்டு. அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை வீணாக்கிவிடுவான்.
Muhammed 47:9
அவர்களுக்கு ஏற்படும் இந்த வேதனைக்கான காரணம், அவர்கள் அல்லாஹ் தன் தூதர்மீது இறக்கிய குர்ஆனை அதிலுள்ள ஏகத்துவத்தின் காரணமாக வெறுத்தார்கள் என்பதுதான். அவன் அவர்களின் செயல்கள் அனைத்தையும் வீணாக்கி விட்டான். அவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நஷ்டமடைந்துவிட்டார்கள்.
Muhammed 47:10
இந்த பொய்ப்பிப்பாளர்கள் பூமியில் பயணம் செய்து தங்களுக்கு முன்னர் பொய்ப்பித்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அவர்களின் முடிவு வேதனைமிக்கதாகவே இருந்தது. அல்லாஹ் அவர்களின் வசிப்பிடங்களை அழித்துவிட்டான். அவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் செல்வங்களையும் அழித்துவிட்டான். ஒவ்வொரு காலகட்டத்திலும் இடத்திலும் நிராகரிப்பாளர்களுக்கு இதுபோன்ற தண்டனைகள் உண்டு.
Muhammed 47:11
இரு பிரிவினருக்கும் வழங்கப்படும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அந்த கூலிக்கான காரணம், அல்லாஹ் தன்மீது நம்பிக்கைகொண்டவர்களுக்கு உதவிசெய்யக்கூடியவன். நிச்சயமாக நிராகரிப்பாளனுக்கு எந்த உதவியாளனும் இல்லை.
Muhammed 47:12
நிச்சயமாக அல்லாஹ் தன்மீதும் தன் தூதர்மீதும் நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்களை சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்கள் தங்களின் மனஇச்சையைப் பின்பற்றி உலகில் அனுபவிக்கிறார்கள். கால்நடைகள் உண்பதைப்போல உண்கிறார்கள். அவர்களின் வயிறுகளையும் மர்ம உறுப்புகளையும் தவிர அவர்களுக்கு வேறு கவலைகள் எதுவும் இல்லை. நரகமே மறுமை நாளில் அவர்களின் ஒதுங்குகின்ற தங்குமிடமாகும்.
Muhammed 47:13
தூதரே! உம்மை வெளியேற்றிய இந்த மக்காவாசிகளைவிட முன்னர் வாழ்ந்த எத்தனையோ ஊர்மக்கள் அதிக செல்வங்களையும் பிள்ளைகளையும் பெற்றவர்களாகவும் பலம்மிக்கவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் தங்களின் தூதர்களை பொய்ப்பித்தபோது அழித்துவிட்டோம். அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வந்தபோது அதிலிருந்து அவர்களை பாதுகாத்து அவர்களுக்கு உதவிசெய்யக்கூடிய உதவியாளர்கள் யாரும் இருக்கவில்லை. எனவே நாம் மக்காவாசிகளை அழிக்க நாடினால் அது நமக்கு இயலாததல்ல.
Muhammed 47:14
தம் இறைவனிடமிருந்து தெளிவான ஆதாரத்தைப் பெற்று அவனை தெளிவான அகப்பார்வையோடு வணங்கிக் கொண்டிருப்பவரும், ஷைத்தான் தீய செயலை அழகாக்கிக் காட்டி அதனால் சிலைவணக்கம் மற்றும் பாவங்களில் ஈடுபடல், தூதர்களை பொய்ப்பித்தல் ஆகிய தம் மன இச்சைகளின்பால் சாய்ந்து அதனை பின்பற்றி கொண்டிருப்பவரும் சமமாவார்களா என்ன?
Muhammed 47:15
தன் கட்டளைகளைச் செயல்படுத்தி, தான் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி- தன்னை அஞ்சக்கூடியவர்களை அல்லாஹ் நுழைவிப்பதாக வாக்களித்துள்ள சுவனத்தின் வர்ணனை இதுதான்: “நீண்ட நாட்கள் சென்றாலும் மாறாத மணமும் சுவையும் உடைய நீரினைக் கொண்ட ஆறுகள் இருக்கும். மாறாத சுவையுடைய பாலாறுகளும் அருந்துபவர்களுக்குச் சுவையான மது ஆறுகளும் கலப்படமற்ற தூய்மையான தேனாறுகளும் இருக்கும். அங்கு அவர்களுக்கு தாங்கள் விரும்பும் அனைத்துவகையான கனிகளும் கிடைக்கும். இத்தனைக்கும் மேல் அல்லாஹ் அவர்களின் பாவங்கள் அனைத்தையும் போக்கி விடுவான். அவற்றிற்காக அவன் அவர்களைக் குற்றம்பிடிக்க மாட்டான். இவ்வாறு கூலியைப் பெறுபவர், வெளியேற முடியாதபடி நிரந்தரமாக நரகத்தில் தங்கி, கடும் சூடான நீர் புகட்டப்பட்டு, அதன் கடுமையான சூட்டினால் வயிற்றிலுள்ள குடல்கள் துண்டுதுண்டாக்கப்படுபவருக்குச் சமமாவாரா?
Muhammed 47:16
தூதரே!- நயவஞ்சகர்களில் சிலர் ஏற்றுக்கொள்ளும் நோக்கில் அல்லாமல் புறக்கணிக்கும் எண்ணத்தில் நீர் கூறுவதைக் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். அவர்கள் உம்மிடமிருந்து வெளியேறிவிட்டால் அல்லாஹ் யாருக்கு ஞானத்தை வழங்கினானோ அவர்களிடம் எதுவும் அறியாததுபோல் புறக்கணித்தவர்களாக கேட்கிறார்கள், அவர் இப்போது என்ன கூறினார், என்று.” இவர்களின் உள்ளங்களில்தான் அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். எனவே நன்மையான எதுவும் இவர்களின் உள்ளங்களை அடையாது. அவர்கள் தங்களின் மன இச்சைகளைப் பின்பற்றினார்கள். எனவே அவை அவர்களை சத்தியத்தைவிட்டும் குருடாக்கிவிட்டது.
Muhammed 47:17
யாரெல்லாம் சத்தியப் பாதையை அடைந்து தூதர் கொண்டு வந்ததைப் பின்பற்றினார்களோ அவர்களின் இறைவன் அவர்களுக்கு நன்மையின்பால் வழிகாட்டலையும் பாக்கியத்தையும் அதிகப்படுத்துகிறான். நரகத்திலிருந்து காப்பாற்றும் செயல்களைச் செய்யும் உள்ளுதிப்பை ஏற்படுத்துகிறான்.
Muhammed 47:18
இந்த நிராகரிப்பாளர்கள் மறுமை நாள் தங்களிடம் திடீரென அதுபற்றிய எந்தவித முன்னறிவும் இல்லாமல் வருவதைத்தான் எதிர்பார்க்கிறார்களா? அதன் அடையாளங்கள் வெளிப்பட்டுவிட்டன. முஹம்மது தூதராக அனுப்பப்பட்டதும் சந்திரன் பிளக்கப்பட்டதும் அவற்றில் சிலவையே. மறுமை நாள் நிகழ்ந்துவிட்டால் அவர்களால் எவ்வாறு அறிவுரை பெற்றுக்கொள்ள முடியும்?
Muhammed 47:19
தூதரே!- நிச்சயமாக அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை என்பதை உறுதியாக அறிந்துகொள்வீராக. அல்லாஹ்விடம் உம் பாவங்களுக்காகவும் நம்பிக்கைகொண்ட ஆண்கள், பெண்கள் செய்த பாவங்களுக்காகவும் மன்னிப்புக் கோருவீராக. நீங்கள் பகலில் செயல்படுவதையும் இரவில் ஓய்வெடுப்பதையும் அல்லாஹ் அறிவான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Muhammed 47:20
அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டவர்கள் அவன் தன் தூதரின் மீது போர் புரிவதன் சட்டம் யாது என்பதை உள்ளடக்கிய ஏதேனும் அத்தியாயத்தை இறக்க வேண்டும் என்று ஆசை கொண்டவர்களாகக் கூறுகிறார்கள்: “அல்லாஹ் போர் புரிவது தொடர்பாக ஓர் அத்தியாயத்தை இறக்க வேண்டாமா?.” -தூதரே!- அவன் போர் புரிவது பற்றி அதன் தெளிவான சட்டங்களை உள்ளடக்கி ஏதேனும் உறுதியான அத்தியாயத்தை இறக்கிவிட்டால் யாருடைய உள்ளத்தில் சந்தேகம் இருக்கிறதோ அவர்கள் கடுமையான பயத்தினால் மயக்கமுற்றவன் பார்ப்பதைபோல உம்மைப் பார்க்கிறார்கள். எனவே, பயத்தினால் போரை விட்டுப் பின்தங்கியதால் அவர்களின் அழிவு நெருங்கிவிட்டதாக அவர்களை அல்லாஹ் எச்சரித்தான்.
Muhammed 47:21
அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நல்லவற்றைக் கூறுவதே அவர்களுக்கு நல்லது. போர் கடமையாக்கப்பட்டவுடன் அவர்கள் அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கையில் உண்மையாக இருந்து அவனுக்குக் கட்டுப்பட்டிருந்தால், நயவஞ்சகம் மற்றும் அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதை விடவும் அவர்களுக்குச் சிறந்ததாக அமைந்திருக்கும்.
Muhammed 47:22
நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுக்குக் கட்டுப்படாமல் புறக்கணித்தால் நீங்கள் அறியாமைக் காலத்தில் செய்துகொண்டிருந்தவாறு பெரும்பாலும் நிராகரித்தும் பாவங்கள் புரிந்தும் பூமியில் குழப்பம் விளைவிப்பீர்கள். குடும்ப உறவுகளை துண்டித்து விடுவீர்கள்.
Muhammed 47:23
பூமியில் குழப்பம் விளைவித்து, உறவுகளைத் துண்டிக்கும் அவர்களைத்தான் அல்லாஹ் தன் அருளிலிருந்து தூரமாக்கிவிட்டான். ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சத்தியத்தை செவியேற்காதவாறு அவர்களின் காதுகளைச் செவிடாக்கி படிப்பினை பெறும்பொருட்டு பார்க்க முடியாதவாறு பார்வைகளையும் குருடாக்கிவிட்டான்.
Muhammed 47:24
குர்ஆனைப் புறக்கணிக்கும் இவர்கள் அதிலுள்ளவற்றை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அவர்கள் அதை சிந்தித்துப் பார்த்திருந்தால் அது அவர்களுக்கு எல்லா நன்மைகளையும் அறிவித்திருக்கும். எல்லாத் தீமைகளைவிட்டும் தூரமாக்கியிருக்கும். அல்லது அவர்களின் உள்ளங்களில் உபதேசம் உட்செல்லவோ அறிவுரை பயனளிக்கவோ முடியாத அளவுக்கு உறுதியாக மூடி பூட்டுகள் போடப்பட்டுள்ளனவா?
Muhammed 47:25
நிச்சயமாக தூதர் உண்மையானவர் என்பதற்கான ஆதாரம் நிலைநாட்டப்பட்ட பின்னரும் தங்களின் நம்பிக்கையை விட்டுவிட்டு நிராகரிப்பின் பக்கமும் நயவஞ்சகத்தின் பக்கமும் சென்றவர்களுக்கு ஷைத்தான்தான் அவர்களின் நிராகரிப்பையும் நயவஞ்சகத்தையும் அலங்கரித்துக் காட்டினான். அதனை அவர்களுக்கு இலகுபடுத்தினான். நீண்ட ஆசைகளைக் காட்டி ஆர்வமூட்டினான்.
Muhammed 47:26
அவர்கள் இந்த வழிகேட்டைப் பெற்றதற்கான காரணம் தன் தூதருக்கு இறக்கப்பட்டதை வெறுக்கும் இணைவைப்பாளர்களிடம் இரகசியமாக “யுத்தத்திற்குத் தடையேற்படுத்தல் போன்ற சில விஷயங்களில் நாங்கள் உங்களுக்குக் கட்டுப்படுவோம்” என்று கூறியதுதான். அவர்கள் இரகசியமாகக் கூறுவதையும் வெளிப்படையாகக் கூறுவதையும் அல்லாஹ் அறிகிறான். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. எனவே அவற்றில் தான் நாடியதைத் தன் தூதருக்கு அவன் வெளிப்படுத்துகிறான்.
Muhammed 47:27
உயிர்களைக் கைப்பற்றுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள வானவர்கள் இரும்புச் சம்மட்டியால் அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்தவாறு அவர்களின் உயிர்களைக் கைப்பற்றும்போது அவர்கள் அனுபவிக்கும் வேதனையை, அவர்களின் மோசமான நிலைமையை நீர் காண வேண்டுமே!
Muhammed 47:28
அவர்கள் அனுபவிக்கும் இந்த கடுமையான வேதனைக்குக் காரணம், அவர்கள், நிராகரிப்பு, நயவஞ்சகம், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்த்தல் ஆகிய அல்லாஹ்வுக்குக் கோபமூட்டக்கூடிய ஒவ்வொன்றையும் பின்பற்றி, இறைவனின்பால் நெருக்கிவைக்கும், அவனது திருப்தியைப் பெற்றுத்தரும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளுதல், அவனுடைய தூதரைப் பின்பற்றுதல் ஆகியவற்றை வெறுத்தார்கள் என்பதுதான். ஆகவே அவன் அவர்களின் செயல்களை வீணாக்கிவிட்டான்.
Muhammed 47:29
உள்ளத்தில் சந்தேகம் கொண்ட நயவஞ்சகர்கள் அல்லாஹ் அவர்களின் உள்ளங்களிலுள்ள குரோதங்களை ஒருபோதும் வெளிப்படுத்தமாட்டான் என்று எண்ணிக் கொண்டார்களா? பொய்யர்களில் உண்மையான நம்பிக்கையாளர்கள் யார்? என்பதைப் பிரித்தறியவும் நயவஞ்சகர்கள் அவமானப்படவும் அவன் சோதனைகளினால் பரீட்சித்து நிச்சயம் அவற்றை வெளிப்படுத்துவான்.
Muhammed 47:30
தூதரே! நாம் உமக்கு நயவஞ்சகர்களை காட்ட நாடியிருந்தால் உமக்குக் காட்டியிருப்போம். நீர் அவர்களின் அடையாளங்களைக் கொண்டு அவர்களை அறிந்துகொள்வீர். விரைவில் அவர்கள் பேசும் முறையினைக் கொண்டும் அவர்களை அறிந்துகொள்வீர். அல்லாஹ் உங்களின் செயல்களை அறிவான். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Muhammed 47:31
நம்பிக்கையாளர்களே!- உங்களில் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து வீரமரணம் அடைபவர்களையும் அவனது எதிரிகளுடனான போராட்டத்தில் பொறுமையாக நிலைத்திருப்பவர்களையும் நாம் அறிந்துகொள்ளும்பொருட்டு நிச்சயம் உங்களை, ஜிஹாத், எதிரிகளுடனான போர் ஆகியவற்றின் மூலம் சோதித்தே தீருவோம். நாம் உங்களை சோதித்து உங்களில் உண்மையாளர்களையும் பொய்யர்களையும் அறிந்துகொள்வோம்.
Muhammed 47:32
நிச்சயமாக அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து, தங்களையும் மற்றவர்களையும் அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டுத் தடுத்து, அவனது தூதருக்கு -அவர் உண்மையான நபிதான் என்பது தெளிவானபிறகும்- மாறுசெய்து அவருடன் பகைமை பாராட்டுபவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் இழைத்துவிட முடியாது. அவர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக்கொள்கிறார்கள். அல்லாஹ் அவர்களின் செயல்களை வீணாக்கிவிடுவான்.
Muhammed 47:33
அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! அல்லாஹ்வுடையவும் தூதருடையவும் ஏவல்களை எடுத்து நடந்தும் அவர்களின் விலக்கலைத் தவிர்ந்தும் அவர்களுக்குக் கட்டுப்படுங்கள். உங்களின் செயல்களை நிராகரிப்பு, முகஸ்துதி போன்ற ஏனையவற்றால் வீணாக்கி விடாதீர்கள்.
Muhammed 47:34
நிச்சயமாக யாரெல்லாம் அல்லாஹ்வை நிராகரித்து தங்களையும் மற்றவர்களையும் அவனுடைய மார்க்கத்தைவிட்டுத் திருப்பி நிராகரித்த நிலையிலேயே பாவமன்னிப்புக் கோராமால் மரணித்தும் விடுகிறார்களோ அவர்களின் பாவங்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான். மாறாக அவற்றிற்காக அவன் அவர்களை குற்றம்பிடிப்பான். அவர்களை நிரந்தரமாக நரகத்தில் பிரவேசிக்கச் செய்வான்.
Muhammed 47:35
நம்பிக்கையாளர்களே!- நீங்கள் ஆதிக்கத்துடனும் வெற்றியுடனும் இருக்கும் நிலையில் உங்களின் எதிரிகளை எதிர்கொள்வதில் தளர்ந்து அவர்கள் உங்களை சமாதானத்திற்கு அழைக்கும் முன்னரே நீங்கள் அதன்பால் அழைப்பு விடுக்காதீர்கள். தன் உதவியின்மூலம் அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான். அவன் உங்கள் செயல்களுக்கான கூலியில் எதையும் குறைத்துவிட மாட்டான். மாறாக அவன் உங்களுக்கு தன்னிடமிருந்து மேலதிகமாக வழங்குவான்.
Muhammed 47:36
உலக வாழ்க்கை வீணும் விளையாட்டும்தான். எனவே எந்த அறிவாளியும் அதில் கவனம் செலுத்தி மறுமைக்காக செயல்படாமல் இருக்கமாட்டான். நீங்கள் அல்லாஹ்வின்மீதும் அவனது தூதரின்மீதும் நம்பிக்கைகொண்டு, அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சினால் அவன் உங்கள் செயல்களுக்கான கூலியை குறைவின்றி முழுமையாக வழங்கிவிடுவான். உங்கள் செல்வங்கள் அனைத்தையும் அவன் உங்களிடம் கோருவதில்லை. நிச்சயமாக கடமையான ஸகாத்தையே அளிக்கும்படி உங்களிடம் வேண்டுகிறான்.
Muhammed 47:37
அவன் உங்கள் செல்வங்கள் அனைத்தையும் தந்துவிடுமாறு வலியுறுத்திக் கேட்டால் நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள். அவன் உங்கள் உள்ளங்களிலிருக்கும் அல்லாஹ்வின் பாதையில் செலவளிப்பதிலுள்ள வெறுப்பை வெளிப்படுத்திவிடுவான். எனவேதான் உங்கள்மீது கருணைகாட்டும்பொருட்டு அவன் இவ்வாறு கேட்பதை விட்டுவிட்டான்.
Muhammed 47:38
இதோ நீங்கள் உங்கள் செல்வங்களிலிருந்து அல்லாஹ்வின் பாதையில் சிறிது பகுதியை செலவுசெய்யுமாறு வேண்டப்படுகிறீர்கள். உங்கள் செல்வங்கள் அனைத்தையும் செலவுசெய்யுமாறு அவன் உங்களிடம் வேண்டவில்லை. ஆனாலும் உங்களில் சிலர் கஞ்சத்தனத்தினால் வேண்டப்படும் தர்மத்தைத் தடுத்துக்கொள்கின்றார்கள். அல்லாஹ்வின் பாதையில் தனது செல்வத்தில் சிறிது பகுதியை செலவுசெய்யாமல் கஞ்சத்தனம் செய்பவர் உண்மையில் தனக்கு எதிராக செலவுசெய்ததன் நன்மைகளை இழப்பதன் மூலம் கஞ்சத்தனம் செய்கிறார். அல்லாஹ் தேவையற்றவன். உங்கள் தர்மத்தின்பால் அவனுக்கு தேவைகிடையாது. நீங்களே அவனிடம் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் இஸ்லாத்தை விட்டுவிட்டு நிராகரிப்பின்பால் திரும்பினால் அவன் உங்களை அழித்துவிட்டு வேறு ஒரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். பின்னர் அவர்கள் உங்களைப்போன்று இருக்கமாட்டார்கள். மாறாக அவர்கள் அவனுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள்.
Feth 48:1
தூதரே!- நிச்சயமாக நாம் உமக்கு ஹுதைபிய்யா உடன்படிக்கை மூலம் தெளிவான வெற்றியை அளித்தோம்.
Feth 48:2
இது, இந்த வெற்றிக்கு முன்னால் நீர் செய்த பாவங்களுக்காகவும் அதற்குப் பின் நீர் செய்த பாவங்களுக்காகவும் உம்மை மன்னிப்பதற்காகவும் உமது மார்க்கத்திற்கு உதவிசெய்து உம்மீது பொழிந்த அருட்கொடைகளை நிறைவு செய்வதற்காகவும் உமக்கு எவ்வித கோணலுமற்ற இஸ்லாம் என்னும் நேரான வழியைக் காட்டுவதற்காகவும்தான்.
Feth 48:3
உம் எதிரிகளுக்கு எதிராக அல்லாஹ் உமக்கு எவராலும் தடுக்க முடியாத பலமான உதவி செய்வதற்காகவும்தான்.
Feth 48:4
அல்லாஹ்வே நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்துவதற்காக அவர்களின் உள்ளங்களில் உறுதியையும் நிம்மதியையும் இறக்கினான். வானங்கள் மற்றும் பூமியிலுள்ள படைகள் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் அவற்றின் மூலம் தன் அடியார்களில் தான் நாடியோரை வலுப்படுத்துகிறான். அவன் தன் அடியார்களுக்கு நன்மை தரக்கூடியவற்றை நன்கறிந்தவன். அவன் நிகழ்த்தும் உதவியில் ஞானம் மிக்கவன்.
Feth 48:5
இது அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொண்ட ஆண்களையும் பெண்களையும் மரங்களுக்கும் மாளிகைகளுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வதற்காகவும் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவற்றிற்காக அவன் அவர்களைக் குற்றம்பிடிக்காமலிருப்பதற்காகவும்தான். மேற்கூறப்பட்ட இக்கூலி -சுவனம் என்னும் இலட்சியத்தை அடைந்து அஞ்சும் விடயமான பாவங்களினால் தண்டிக்கப்படுவதிலிருந்து பாதுகாத்தல்- அல்லாஹ்விடத்தில் ஈடிணையற்ற மகத்தான வெற்றியாகும்.
Feth 48:6
தன் மார்க்கத்திற்கு அல்லாஹ் உதவிசெய்து தனது வாக்கை மேலோங்கச்செய்யமாட்டான் என்று எண்ணும் நயவஞ்சக ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஆண்களையும் பெண்களையும் அவன் தண்டிப்பதற்காகவும்தான். அவர்கள்தாம் காலத்தின் தீய சுழற்சியில் சிக்குவார்கள். அவர்களின் நிராகரிப்பினாலும் தீய எண்ணங்களினாலும் அல்லாஹ் அவர்கள்மீது கோபம்கொண்டு தன் அருளிலிருந்து அவர்களை விரட்டிவிட்டான். மறுமையில் அவர்களுக்காக நரகத்தை தயார்படுத்தி வைத்துள்ளான். அதில் நுழைந்து அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். நரகம் அவர்களின் மோசமான சேருமிடமாகும். அதன்பால் அவர்கள் மீண்டு செல்வார்கள்.
Feth 48:7
வானங்கள் மற்றும் பூமியிலுள்ள படைகள் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் அவற்றின் மூலம் தன் அடியார்களில் தான் நாடியோரை வலுப்படுத்துகிறான். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பிலும், நிர்ணயத்திலும், திட்டமிடலிலும் அவன் ஞானம் மிக்கவன்.
Feth 48:8
தூதரே!- நிச்சயமாக நாம் உம்மை மறுமை நாளில் உம் சமூகத்திற்கு சாட்சி கூறக்கூடியவராகவும் நம்பிக்கையாளர்களுக்கு உலகில் வெற்றியும் உதவியும் மறுமையில் அருட்கொடைகளைக் கொண்டு நற்செய்தி கூறக்கூடியவராகவும் நிராகரிப்பாளர்கள் இவ்வுலகில் நம்பிக்கையாளர்களின் கைகளால் அவர்களுக்கு ஏற்படும் இழிவு மற்றும் தோல்வியைக் கொண்டும், மறுமையில் அவர்களுக்குக் காத்திருக்கும் வேதனைமிக்க தண்டனையைக் கொண்டும் எச்சரிக்கை செய்யகூடியவராகவும் அனுப்பியுள்ளோம்.
Feth 48:9
இது நீங்கள் அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்டு தூதரைக் கண்ணியப்படுத்தி காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வை துதிபாட வேண்டும் என்பதற்காகத்தான்.
Feth 48:10
தூதரே!- மக்காவின் இணைவைப்பாளர்களுடன் போரிடுவோம் என்று உம்மிடம் பைஅது ரிழ்வானில் உறுதிமொழி அளித்தவர்கள் அல்லாஹ்விடமே உறுதிமொழி அளித்தவர்களாவர். ஏனெனில் அவன்தான் இணைவைப்பாளர்களுடன் போரிடும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டான். அவனே அவர்களுக்குக் கூலியளிப்பான். உறுதிமொழியின்போது அவர்களின் கைகளுக்கு மேல் அல்லாஹ்வின் கை இருந்தது. அவன் அவர்களைக்குறித்து நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. யாரேனும் உறுதிமொழியை மீறி அவனது மார்க்கத்திற்கு உதவி செய்வதாக வழங்கிய வாக்குறுதியை, உடன்படிக்கையை முறித்து அதனை நிறைவேற்றவில்லையோ அவ்வாறு வாக்குறுதியை, உடன்படிக்கையை முறித்ததனால் ஏற்படும் தீங்கு அவரையே சாரும். அதனால் அல்லாஹ்வுக்கு எந்த தீங்கும் ஏற்படப்போவதில்லை. யாரெல்லாம் அவனது மார்க்கத்திற்கு உதவி செய்வதாக வழங்கிய உறுதிமொழியை முழுமையாக நிறைவேற்றினார்களோ அல்லாஹ் அவர்களுக்கு சுவனம் என்னும் மகத்தான கூலியை வழங்கிடுவான்.
Feth 48:11
தூதரே!- உம்முடன் மக்காவுக்கு போருக்குப் புறப்படாமல் அல்லாஹ் பின்தங்க வைத்த நாட்டுப்புற அரபிகளில் சிலரை நீர் கண்டித்தால் “எங்கள் செல்வங்களையும் பிள்ளைகளையும் பராமரிப்பது உம்முடன் புறப்படுவதைவிட்டும் எங்களைத் திருப்பிவிட்டன. எனவே எங்களின் பாவங்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக” என்று அவர்கள் உம்மிடம் கூறுவார்கள். அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாதவற்றை தூதரிடம் பாவமன்னிப்புக் கோருமாறு வேண்டி தம் நாவினால் கூறுகிறார்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புக் கோரவில்லை. நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ் உங்களுக்கு நன்மையளிக்க நாடினாலோ அல்லது தீங்கிழைக்க நாடினாலோ யாராலும் அதனைத் தடுக்க முடியாது. மாறாக நீங்கள் செய்பவற்றை அவன் நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் அவை எவ்வளவுதான் மறைத்தாலும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Feth 48:12
நீங்கள் கூறுவது போல் செல்வங்களையும் பிள்ளைகளையும் பராமரிப்பதில் ஈடுபட்டமை, அவருடன் நீங்கள் புறப்படாமல் பின்தங்குவதற்கான காரணமல்ல. மாறாக தூதரும் அவருடைய தோழர்கள் அனைவரும் அழிந்துவிடுவார்கள், மதீனாவில் தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிவர மாட்டார்கள் என்ற எண்ணமே அதற்குக் காரணமாகும். இவ்வாறு எண்ணுவதை ஷைத்தான் உங்களின் உள்ளங்களில் அலங்கரித்துக் காட்டி விட்டான். இறைவன் தன் தூதருக்கு உதவிசெய்ய மாட்டான் என்று அவனைக்குறித்து தீய எண்ணம் கொண்டீர்கள். அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் கொண்ட தீய எண்ணம் மற்றும் அவனுடைய தூதரைவிட்டும் பின்தங்கிய காரணத்தால் நீங்கள் அழியக்கூடிய மக்களாகி விட்டீர்கள்.
Feth 48:13
யார் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொள்ளவில்லையோ அவர் நிராகரிப்பாளராவார். நாம் மறுமை நாளில் நிராகரிப்பாளர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பை தயார்படுத்தி வைத்துள்ளோம். அதில் அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள்.
Feth 48:14
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் தான் நாடிய அடியார்களின் பாவங்களை மன்னிக்கிறான். அவர்களை தன் அருளால் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்கிறான். தான் நாடிய அடியார்களை தன் நீதியால் தண்டிக்கிறான். அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Feth 48:15
நம்பிக்கையாளர்களே!- ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பிறகு அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்த கைபரின் போர்ச் செல்வங்களை நீங்கள் பெறுவதற்காக புறப்பட்டால் அல்லாஹ் யாரை பின்தங்கச் செய்தானோ அவர்கள் கூறுவார்கள்: “நாங்களும் அதிலிருந்து பங்கைப் பெற உங்களுடன் புறப்படுவதற்கு எங்களுக்கு அனுமதியளியுங்கள்.” பின்தங்கிய இவர்கள் இவ்வாறு வேண்டுவதன் மூலம் நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே கைபரின் போர்ச்செல்வங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதியை மாற்ற விரும்புகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறும்: “இந்த போர்ச் செல்வங்களுக்காக நீங்கள் எங்களை ஒருபோதும் பின்தொடராதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் கைபரின் போர்ச் செல்வங்களை ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்துகொண்டவர்களுக்காக மட்டும் உரித்தாக்கி விட்டான். அவர்கள் கூறுவார்கள்: “கைபருக்கு உங்களைப் பின்தொடர வேண்டாம் என நீங்கள் எம்மைத் தடுப்பது அல்லாஹ்வின் கட்டளையினால் அல்ல. மாறாக எங்கள்மீதுள்ள பொறாமையே காரணமாகும்.” பின்தங்கிய இவர்கள் கூறுவது போலல்ல விடயம். மாறாக அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளையும் அவன் தடுத்துள்ளவற்றையும் குறைவாகவே புரிந்துகொள்பவர்களாக இருக்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் பாவத்தில் வீழ்ந்து விட்டார்கள்.
Feth 48:16
தூதரே!- உம்முடன் மக்காவிற்குப் புறப்பட்டு வராமல் பின்தங்கிய நாட்டுப்புற அரபிகளிடம் நீர் பரீட்சிக்கும் விதமாகக் கூறும்: “நீங்கள் பலமான சமூகத்தினருடன் போரிடுவதற்கு அழைக்கப்படுவீர்கள். நீங்கள் அவர்களுடன் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். அல்லது அவர்கள் போர் புரியாமல் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களுடன் போர் புரியுமாறு அல்லாஹ் உங்களை அழைக்கும்போது நீங்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் உங்களுக்கு சுவனம் என்னும் நற்கூலியை வழங்கிடுவான். -அவருடன் மக்காவுக்குப் புறப்படாமல் பின்தங்கி அதனைப் புறக்கணித்தது போன்று- அவனுக்குக் கட்டுப்படாமல் நீங்கள் புறக்கணித்தால் அவன் உங்களை வேதனைமிக்க தண்டனையால் தண்டிப்பான்.
Feth 48:17
பார்வையற்றவர், ஊனமுற்றவர், நோயாளி ஆகியோர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியாமல் பின்தங்குவதால் அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுவாரோ அல்லாஹ் அவரை சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். யார் அவர்கள் இருவருக்கும் கட்டுப்படாமல் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் அவரை வேதனைமிக்க தண்டனையால் தண்டிப்பான்.
Feth 48:18
ஹுதைபிய்யா உடன்படிகையின்போது மரத்திற்குக் கீழே உம்மிடம் உறுதிமொழி அளித்த நம்பிக்கையாளர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களில் நம்பிக்கையும் உளத்தூய்மையும் உண்மையும் உள்ளது என்பதை அவன் அறிந்துகொண்டான். எனவேதான் அவர்களின் உள்ளங்களில் அமைதியை இறக்கினான். மக்காவில் நுழைவது அவர்களுக்குத் தவறியதற்குப் பகரமாக அல்லாஹ் அவர்களுக்கு கைபர் வெற்றி என்னும் நெருக்கமான ஒரு வெற்றியைக் கூலியாக வழங்கினான்.
Feth 48:19
அவன் அவர்களுக்கு ஏராளனமான போர்ச் செல்வங்களை அளித்தான். அவர்கள் அவற்றை கைபர்வாசிகளிடமிருந்து கைப்பற்றினார்கள். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தன் படைப்பிலும், நிர்ணயத்திலும், திட்டமிடலிலும் அவன் ஞானம் மிக்கவன்.
Feth 48:20
நம்பிக்கையாளர்களே!- எதிர்காலத்தில் இஸ்லாமிய வெற்றிகளில் ஏராளமான போர்ச் செல்வங்களை நீங்கள் பெறுவீர்கள் என அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான். உங்களுக்கு கைபரின் போர்ச் செல்வங்களை விரைவாக வழங்கியுள்ளான். நீங்கள் இல்லாத சமயத்தில் உங்கள் குடும்பத்தாருக்கு தீங்கிழைக்க நாடிய யூதர்களை அவன் தடுத்தான். இது, அவசரமான இந்த போர்ச் செல்வங்கள் உங்களுக்கு இறை உதவியின் அடையாளமாக இருக்கும்பொருட்டும் உங்களுக்கு எவ்வித கோணலுமற்ற நேரான வழியைக் காட்ட வேண்டும் என்பதற்காகவும்தான்.
Feth 48:21
தற்சமயம் நீங்கள் அடைய முடியாத வேறுவகையான போர்ச் செல்வங்களையும் அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான். அல்லாஹ் மட்டுமே அதற்கு ஆற்றலுடையவன். அது அவனுடைய அறிவிலும் திட்டத்திலும் இருக்கின்றது. அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்தி விடாது.
Feth 48:22
நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரிப்பவர்கள் உங்களுடன் போரிட்டாலும் உங்களுக்கு முன்னால் நிற்க முடியாமல் புறங்காட்டி ஓடிவிடுவார்கள். பின்னர் அவர்கள் தங்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்கும் பொறுப்பாளனையோ உங்களுடன் போராடுவதற்கு தங்களுக்கு உதவி செய்யும் உதவியாளனையோ காண மாட்டார்கள்.
Feth 48:23
நம்பிக்கையாளர்கள் வெற்றி பெறுவதும் நிராகரிப்பாளர்கள் தோல்வியடைவதும் எல்லா காலகட்டத்திலும் இடங்களிலும் நிகழக்கூடிய உறுதியான ஒன்றாகும். இதுதான் இந்த பொய்ப்பிப்பாளர்களுக்கு முன்னர் கடந்துவிட்ட சமூகங்களில் அல்லாஹ்வின் நியதியாகும். -தூதரே!- அல்லாஹ்வின் நியதியில் எவ்வித மாற்றத்தையும் நீர் காண மாட்டீர்.
Feth 48:24
ஹுதைபிய்யாவில் இணைவைப்பாளர்களில் எண்பதுக்கு அதிகமானவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடியவர்களாக வந்த போது அல்லாஹ்வே அவர்களின் கரங்களை உங்களைவிட்டும் தடுத்தான். உங்களின் கரங்களை அவர்களைவிட்டும் தடுத்தான். நீங்கள் அவர்களுடன் போரிடவோ, நோவினையோ அளிக்கவில்லை. மாறாக நீங்கள் அவர்களைக் கைது செய்ய சக்தி பெற்றிருந்தும் அவர்களை விட்டுவிட்டீர்கள். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை பார்க்கக்கூடியவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Feth 48:25
அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தார்கள். மஸ்ஜிதுல் ஹராமைவிட்டும் விட்டும் உங்களைத் தடுத்து, பலிப்பிராணியை அதன் பலிபீடமான ஹரம் எல்லையை அடைய விடாமல் தடுத்தனர். உங்களுக்குத் தெரியாத அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்ட ஆண்களையும் பெண்களையும் நிராகரிப்பாளர்களுடன் சேர்த்து நீங்கள் கொன்று, உங்களை அறியாமலே உங்கள் மீது பாவமும் தண்டப்பணமும் விதியாகும் என்றில்லாவிட்டால், மக்காவை வெற்றி கொள்வதற்கு அவன் உங்களுக்கு அனுமதியளித்திருப்பான். இது மக்காவில் உள்ள நம்பிக்கையாளர்களைப் போன்ற அல்லாஹ் நாடியவர்களை தன் அருளில் பிரவேசிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். மக்காவில் நம்பிக்கையாளர்களைவிட்டும் நிராகரிப்பாளர்கள் தனித்திருந்தால் நாம் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நிராகரிப்பவர்களை வேதனைமிக்க தண்டனையால் தண்டித்திருப்போம்.
Feth 48:26
அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நிராகரித்தவர்கள் தமது உள்ளங்களில் அறியாமைக்கால வைராக்கியத்தை ஏற்படுத்திக்கொண்டனர். அது சத்தியத்திற்காக இயங்கக்கூடியது அல்ல. மன இச்சையின்படி இயங்கக்கூடியது. எனவேதான் தூதர் தங்களை மிகைத்துவிட்டார் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டியேற்படும் என்ற அச்சத்தில் ஹுதைபிய்யா உடன்படிக்கை நிகழ்ந்த வருடம் அல்லாஹ்வின் தூதரை மக்காவில் நுழைவதை வெறுத்தார்கள். அல்லாஹ் தன் தூதரின்மீதும் நம்பிக்கையாளர்களின்மீதும் நிம்மதியை இறக்கினான். கோபத்தினால் இணைவைப்பாளர்களை அவர்களின் செயலைப்போன்று எதிர்கொள்ள நம்பிக்கையாளர்கள் செல்லவில்லை. அல்லாஹ் நம்பிக்கையாளர்களை ”அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை” என்ற சத்திய வார்த்தையில் உறுதிப்படுத்தி அதற்குரிய கடமையை நிலைநாட்ட வைத்தான். அவர்கள் அதனை நிலைநாட்டினார்கள். மற்றவர்களைவிட இந்த வார்த்தைக்கு நம்பிக்கையாளர்களே அதிக உரிமையுடையவர்களாவர். அவர்களின் உள்ளங்களில் நன்மை இருக்கின்றது என்பதை அல்லாஹ் அறிந்துள்ளதனால் அவர்களே அதற்குத் தகுதியானவர்களாக இருக்கின்றார்கள். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Feth 48:27
அல்லாஹ் தன் தூதரின் உறக்கத்தில் கனவைக் காட்டி தனது தூதருக்கு அதில் உண்மையையே கூறினான். தூதரும் அதனைத் தன் தோழர்களுக்கு அறிவித்தார். நிச்சயமாக அவரும் அவருடைய தோழர்களும் அல்லாஹ்வின் புனித இல்லத்தில் எதிரிகளின் அச்சுறுத்தல் இல்லாமல் நுழைவார்கள். கிரிகைகளை பூர்த்திசெய்ததன் அடையாளமாக அவர்களில் சிலர் தலைமுடியை மழித்தவர்களாவும் சிலர் குறைத்தவர்களாகவும் இருப்பார்கள் என்பதே அக்கனவாகும். -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ் உங்களுக்குத் தெரியாத உங்கள் நலவுகளையும் அறிந்துவைத்துள்ளான். எனவேதான் அந்த வருடமே மக்காவில் நுழைந்து, கனவு நிறைவேறாமல் இருந்ததன் மூலம் அவசரமான ஒரு வெற்றியை அளித்தான். அதுதான் அல்லாஹ் நிகழவைத்த ஹுதைபிய்யா உடன்படிக்கையும், அதனைத் தொடர்ந்து ஹுதைபிய்யாவில் கலந்துகொண்ட நம்பிக்கையாளர்களுக்குக் கிடைத்த கைபர் வெற்றியுமாகும்.
Feth 48:28
அல்லாஹ்வே தன் தூதர் முஹம்மதை தெளிவான விளக்கத்துடனும் இஸ்லாம் என்னும் சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். அதற்கு முரணான அனைத்து மார்க்கங்களையும் விட அதனை மேலோங்கச் செய்வதற்காகத்தான் அல்லாஹ்வே இதற்கு சாட்சி கூறுகிறான். சாட்சியாளனாக இருப்பதற்கு அவனே போதுமானவனாவான்.
Feth 48:29
முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருக்கும் தோழர்கள் போரிடும் நிராகரிப்பாளர்களின்மீது கடுமையானவர்களாகவும் தங்களிடையே கருணையாளர்களாகவும் அன்பானவர்களாவும் இருப்பார்கள். -பார்க்கக்கூடியவனே!- நீ அவர்களை அல்லாஹ்வுக்காக ருகூஃ செய்தவர்களாக, சிரம்பணிந்தவர்களாக காண்பாய். அவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பையும் கண்ணியமான கூலியையும் அவர்களைக்குறித்து அவன் திருப்தியடைய வேண்டும் என்றும் வேண்டுகிறார்கள். அவர்களின் முகங்களில் அல்லாஹ்வுக்கு சிரம்பணிந்ததற்கான அடையாளங்களாக வெளிப்படும் நேர்வழி, அமைதி, அவர்களின் முகங்களில் தொழுகையின் பிரகாசம் என்பவற்றை நீ காண்பாய். அவ்வாறுதான் அவர்களை வர்ணித்து மூஸாவின்மீது இறக்கப்பட்ட தவ்ராத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஈஸாவின்மீது இறக்கப்பட்ட இன்ஜீலில் அவர்கள் குறித்து பின்வருமாறு உதாரணமாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வதிலே, பரிபூரணத்துவத்திலே ஒரு பயிரைப் போன்றதாகும். அது அதன் குருத்தை வெளிப்படுத்தி கடுமையாகி வலுவாகிறது. பிறகு தன் தண்டின்மீது நிற்கிறது. அதன் வலிமையும் பரிபூரணமும் பயிரிட்டவனைக் கவர்கிறது. நம்பிக்கையாளர்களிடையே காணப்படும் பலம், பரிபூரணத்துவம், ஒற்றுமை ஆகியவற்றைப் பார்க்கும் நிராகரிப்பாளர்களை அல்லாஹ் கோபம் கொள்ளச் செய்கிறான். அல்லாஹ் தன்மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்த தோழர்களுக்கு மன்னிப்பையும் சுவனம் என்னும் தன்னிமிடமுள்ள மகத்தான கூலியையும் வாக்களிக்கிறான். அவன் அவர்களின் பாவங்களுக்காக அவர்களைக் குற்றம்பிடிக்க மாட்டான்.
Hucurat 49:1
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவன் விதித்தவற்றைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முன்னால் சொல்லாலோ, செயலாலோ முந்தாதீர்கள். அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன். உங்களின் செயல்களை நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனை விட்டும் தவறாது. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Hucurat 49:2
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்களே! அவனுடைய தூதருடன் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். அவர் முன்னிலையில் நபியின் குரலைவிட உங்களின் குரலை உயர்த்தாதீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் அழைப்பது போன்று அவரை பெயர் கூறி அழைக்கவேண்டாம். மாறாக நபியே! தூதரே! என நளினமான முறையில் அவரை அழையுங்கள். இல்லாவிட்டால் உங்களுக்குத் தெரியாமலே உங்கள் செயல்களின் நன்மைகள் வீணாகிவிடும் என்பதை பயந்து கொள்ளுங்கள்.
Hucurat 49:3
நிச்சயமாக யாரெல்லாம் அல்லாஹ்வின் தூதரிடத்தில் தங்களின் குரல்களை தாழ்த்துகிறார்களோ அல்லாஹ் அவர்களை தன்னை அஞ்சுவதற்காக சோதித்து, அதற்காக அவர்களைத் தூய்மைப்படுத்தியுள்ளான். அவர்களின் பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு. அவற்றிற்காக அவர்களைக் குற்றம்பிடிக்க மாட்டான். அவர்களுக்கு மறுமை நாளில் மகத்தான கூலியும் உண்டு. அது அல்லாஹ் அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வதாகும்.
Hucurat 49:4
தூதரே!- நிச்சயமாக உம் மனைவியரின் அறைகளுக்குப் பின்னாலிருந்து உம்மை அழைக்கும் நாட்டுப்புற அரபிகளில் பெரும்பாலானோர் விளங்கிக் கொள்ளாதவர்களாகவே இருக்கின்றார்கள்.
Hucurat 49:5
தூதரே!- உம் மனைவியரின் அறைகளுக்குப் பின்னாலிருந்து உம்மை அழைக்கும் இவர்கள் நீர் வெளியேறும்வரை உம்மை அழைக்காமல் பொறுமையாக இருந்து நீர் வெளியேறி வந்தவுடன் தாழ்ந்த குரலில் உம்முடன் உரையாடியிருந்தால் அது அவர்களுக்கு அறைகளுக்கப் பின்னால் இருந்து உம்மை அழைப்பதை விட சிறந்ததாக அமைந்திருக்கும். ஏனனில் அதில்தான் கண்ணியம் இருக்கிறது. அவர்களிலும் ஏனையோரிலும் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களின் பாவங்களை அறியாமையினால் செய்ததனால் அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Hucurat 49:6
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படக்கூடியவர்களே! பாவி ஒருவன் ஒரு சமூகத்தைக் குறித்து ஏதேனும் செய்தியை உங்களிடம் கொண்டுவந்தால் அந்த செய்தியின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து கொள்ளுங்கள். நீங்கள் -அந்தச் செய்தியை ஆராயாமல் நம்பினால்- உண்மை நிலவரம் தெரியாமல் ஒரு சமூகத்தின்மீது தீங்கிழைத்து விடுவீர்கள் என்ற அச்சமுண்டு என்பதால் அவசரப்பட்டு அதனை உண்மைப்படுத்திவிடாதீர்கள். இல்லையெனில் பின்னர் அவனது செய்தி பொய் என்று தெளிவானவுடன் நீங்கள் செய்த செயலுக்காக வருத்தப்படக்கூடியவர்களாக ஆகிவிடுவீர்கள்.
Hucurat 49:7
நம்பிக்கையாளர்களே!- நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கின்றார். அவருக்கு வஹி இறங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். எனவே பொய் கூறுவதை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் நீங்கள் பொய் கூறுகிறீர்கள் என அவருக்கு வஹீ வந்துவிடும். அவர் உங்களுக்கு நன்மைதரக்கூடியவற்றை நன்கறிந்தவர். பெரும்பாலான உங்களின் கருத்துகளுக்கு அவர் கீழ்ப்படிந்தால் அவர் உங்களுக்கு விரும்பாத சிரமத்தில் நீங்கள் வீழ்ந்து விடுவீர்கள். ஆயினும் அல்லாஹ் தன் அருளால் உங்களுக்கு நம்பிக்கையை பிரியமாக்கி உங்கள் உள்ளங்களில் அதனை அழகாக்கியுள்ளான். அதனால் நீங்கள் நம்பிக்கைகொண்டுள்ளீர்கள். நிராகரிப்பையும் அவனுக்குக் கட்டுப்படாமல் இருப்பதையும் பாவங்கள் புரிவதையும் அவன் உங்களுக்கு வெறுப்பாக்கி வைத்துள்ளான். இந்தப் பண்புகளை உடையவர்கள்தாம் நேரான வழியில் செல்லக்கூடியவர்களாவர்.
Hucurat 49:8
உங்களின் உள்ளங்களில் நலவை அழகுபடுத்தி தீமையை வெறுப்பூட்டிய- இந்த ஏற்பாடு நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது சொரிந்த அருளேயாகும். தன் அடியார்களில் தனக்கு நன்றி செலுத்தக்கூடியவர்களை அவன் நன்கறிவான். ஆகவே அவர்களுக்குப் பாக்கியம் அளிக்கிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய பொருத்தமான இடத்தில் வைக்கும் ஞானமுடையவன்.
Hucurat 49:9
நம்பிக்கையாளர்களே!- நம்பிக்கையாளர்களில் இரு பிரிவினர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் அவர்கள் இரு பிரிவினரையும் தமது முரண்பாட்டில் அல்லாஹ்வுடைய மார்க்க தீர்ப்பின் பக்கம் வருமாறு அழைத்து அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள். அவர்களில் ஒரு பிரிவினர் சமாதானத்தை மறுத்து வரம்பு மீறினால் வரம்புமீறிய அந்த பிரிவினருடன் அவர்கள் அல்லாஹ்வுடைய தீர்ப்பின்பால் திரும்பும் வரை போரிடுங்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய தீர்ப்பின் பக்கம் திரும்பிவிட்டால் அவர்களிடையே நீதியோடும் நியாயத்தோடும் சமாதானம் செய்து வையுங்கள். அவர்களிடையே நீங்கள் அளிக்கும் தீர்ப்பில் நீதி செலுத்துங்கள். நிச்சயமாக அல்லாஹ் தங்களின் தீர்ப்பில் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்.
Hucurat 49:10
நிச்சயமாக நம்பிக்கையாளர்களே மார்க்க அடிப்படையில் சகோதரர்களாவர். -நம்பிக்கையாளர்களே!- இஸ்லாமிய சகோதரத்துவம் முரண்பட்டுக்கொள்ளும் இரு சகோதரர்களிடையே சமாதானம் செய்து வைப்பதை வேண்டுகிறது. உங்கள்மீது கருணை காட்டப்படும்பொருட்டு அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள்.
Hucurat 49:11
அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களில் ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை பரிகாசம் செய்ய வேண்டாம். பரிகாசம் செய்யப்பட்ட சமூகம் அல்லாஹ்விடத்தில் சிறந்த சமூகமாக இருக்கலாம். அல்லாஹ்விடத்தில் பெற்றுள்ள நிலையே கவனத்தில்கொள்ளப்படும். பெண்கள் மற்ற பெண்களை பரிகாசம் செய்ய வேண்டாம். பரிகாசம் செய்யப்பட்டவர்கள் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்களாக இருக்கலாம். உங்கள் சகோதரர்களைக் குறைகூறாதீர்கள். அவர்கள் உங்களைப் போன்றவர்களாவர். நபியவர்களின் வருகைக்கு முன் அன்சாரிகளில் சிலர் செய்துகொண்டிருந்தது போன்று நீங்கள் ஒருவருக்கொருவர் மற்றவர் வெறுக்கும் தீய பட்டப்பெயர் சூட்டி அழைக்க வேண்டாம். உங்களில் அவ்வாறு செய்பவர் பாவியாவார். நம்பிக்கைகொண்ட பிறகு பாவம் செய்வது மோசமான பண்பாகும். இந்த பாவங்களிலிருந்து பாவமன்னிப்புக் கோராதவர்கள்தாம் தாம் செய்த பாவங்களின் காரணமாக அழிவின் வழிகளில் தம்மை இட்டுச்சென்று தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களாவர்.
Hucurat 49:12
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! காரணம், ஆதாரமற்ற அதிகமான சந்தேகங்களிலிருந்தும் விலகியிருங்கள். சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றது. (உதாரணமாக வெளிரங்கத்தில் நன்நடத்தையுடையவரைப் பற்றி தவறாக எண்ணுதல்) நம்பிக்கையாளர்களின் குறைகளை அவர்களின் பின்னால் சென்று துருவித்துருவி ஆராயாதீர்கள். உங்களில் ஒருவர் தம் சகோதரனைக் குறித்து அவர் விரும்பாததை பேச வேண்டாம். அவர் வெறுப்பதைப் பேசுவதானது அவர் மரணித்த நிலையில் அவரது மாமிசத்தை உண்பதைப் போன்றதாகும். உங்களில் ஒருவர் இறந்த தம் சகோதரனின் மாமிசத்தை புசிக்க விரும்புவாரா? ஆகவே அதைப்போன்று புறம் பேசுவதை வெறுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Hucurat 49:13
மனிதர்களே!- நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்துள்ளோம். உங்களின் தந்தை ஆதம், தாய் ஹவ்வா ஆவார். எனவே உங்களின் பரம்பரை ஒன்றுதான். எனவே நீங்கள் பரம்பரையைக் கூறி ஒருவருக்கொருவர் பெருமையடிக்காதீர்கள். அதன் பின்னர் நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும்பொருட்டு உங்களைப் பரந்துபட்ட பல கோத்திரங்களாக, அதிகமாக மக்களாக ஆக்கியுள்ளோம். அது பெருமையடிப்பதற்காக அல்ல. ஏனெனில் இறையச்சத்தைக் கொண்டே தவிர வேறுபாடு கிடையாது. அதனால்தான் கூறுகிறான்: நிச்சயமாக உங்களில் அல்லாஹ்விடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர் அவனை அதிகம் அஞ்சக்கூடியவர்தான். நிச்சயமாக அல்லாஹ் உங்களின் நிலைகளை நன்கறிந்தவன். நீங்கள் இருந்துகொண்டிருக்கும் குறை, நிறை ஆகியவற்றைக் குறித்தும் அவன் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Hucurat 49:14
நாட்டுப்புற மக்களில் சிலர் தூதரிடம் வந்தபோது “நாங்கள் அல்லாஹ்வின்மீதும் அவன் தூதரின்மீதும் நம்பிக்கைகொண்டோம்” என்று கூறினார்கள். -தூதரே!- நீர் கூறுவீராக: “நீங்கள் நம்பிக்கைகொள்ளவில்லை. ஆயினும் நாங்கள் கட்டுப்பட்டோம் என்று கூறுங்கள். உங்களின் உள்ளங்களில் இதுவரை நம்பிக்கை நுழையவில்லை. அது நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. -நாட்டுப்புறத்தவர்களே!- நீங்கள் நம்பிக்கைகொள்வதிலும் நற்செயல்கள் புரிவதிலும் தடுக்கப்பட்டவற்றைவிட்டுத் தவிர்ந்திருப்பதிலும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டால் உங்களின் செயல்களுக்கான நன்மையில் அவன் எதையும் குறைத்துவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Hucurat 49:15
நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டு தங்களின் நம்பிக்கையில் சந்தேகத்தை கலக்காமல் தங்களின் செல்வங்களாலும் உயிர்களாலும் அவனுடைய பாதையில் ஜிஹாது செய்பவர்கள்தாம் உண்மையில் நம்பிக்கையாளர்களாவர். அவற்றில் அவர்கள் எதைக்கொண்டும் கஞ்சத்தனம் செய்யமாட்டார்கள். இந்தப் பண்புகளை உடையவர்கள்தாம் தங்களின் நம்பிக்கையில் உண்மையானவர்களாவர்.
Hucurat 49:16
தூதரே!- இந்த நாட்டுப்புற மக்களிடம் நீர் கூறுவீராக: “உங்களின் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுக்கின்றீர்களா? அல்லாஹ் வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அறிவான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. நீங்கள் உங்களின் மார்க்கத்தை அவனிடம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
Hucurat 49:17
தூதரே!- இந்த நாட்டுப்புற மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை உமக்குச் செய்த கிருபையாக சொல்லிக் காட்டுகிறார்கள். நீர் அவர்களிடம் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைந்ததனால் என்மீது கிருபை பாராட்டாதீர்கள். அதில் பயனிருந்தால் -அது நிகழ்ந்தால்- அது உங்களுக்கே. மாறாக நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம் என்ற உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவனை நம்பிக்கை கொள்வதற்கு உங்களுக்கு வாய்ப்பளித்ததன் மூலம் அல்லாஹ்வே உங்களுக்கு அருள்புரிந்துள்ளான்.
Hucurat 49:18
நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும் பூமியிலும் உள்ள மறைவான விஷயங்களை அறிவான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. நீங்கள் செய்பவற்றை அவன் பார்க்கக்கூடியவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அற்றில் நன்மையானவற்றுக்கும் தீமையானவற்றுக்கும் ஏற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Kâf 50:1
இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. திருக்குர்ஆனில் அடங்கியுள்ள ஏராளமான கருத்துக்கள், நன்மைகள் மற்றும் பரக்கத்துகளின் காரணத்தால் அல்லாஹ் அதனைக் கொண்டு சத்தியம் செய்துள்ளான். விசாரணைக்காகவும் கூலி பெறுவதற்காகவும் நீங்கள் மறுமை நாளில் எழுப்பப்பட்டே தீருவீர்கள் என்று.
Kâf 50:2
நீர் பொய் உரைக்கலாம் என்ற அவர்களின் எதிர்ப்பார்ப்பு அவர்களின் மறுப்புக்கான காரணமல்ல. அவர்கள் உம் வாய்மையைக் குறித்து அறிவார்கள். மாறாக வானவர்கள் இனத்திலிருந்து அல்லாமல் அவர்களின் இனத்திலிருந்தே எச்சரிக்கை செய்யக்கூடிய ஒரு தூதர் அவர்களிடம் வந்ததற்காக அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். ஆச்சரியத்தில் அவர்கள் கூறுகிறார்கள்: “ஒரு மனிதர் நமக்குத் தூதராக அனுப்பப்படுவது மிகவும் ஆச்சரியமான ஒன்றுதான்.”
Kâf 50:3
நாம் இறந்து மண்ணோடு மண்ணாகிவிட்டாலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோமா? உக்கிப் போன நம் உடல்களுக்கு மீண்டும் உயிர் திரும்பி மீண்டும் எழுப்பப்படுவது சாத்தியமற்ற ஒன்றாகும். அவ்வாறு நிகழ முடியாது.”
Kâf 50:4
அவர்கள் இறந்து அழிந்த பிறகு அவர்களின் உடல்களை பூமி எந்த அளவு தின்கிறது என்பதை நாம் அறிவோம். அவற்றில் எதுவும் நம்மைவிட்டு மறைவாக இல்லை. நம்மிடத்தில் ஒரு புத்தகம் இருக்கின்றது. அது அவர்களின் இவ்வுலக வாழ்க்கையிலும் மரணத்திற்குப் பின்னும் அல்லாஹ் அவர்களுக்கு விதித்ததைப் பாதுகாக்கிறது.
Kâf 50:5
மாறாக இந்த இணைவைப்பாளர்கள் தூதர் அவர்களிடம் கொண்டுவந்த குர்ஆனைப் பொய்யெனக் கூறினார்கள். அவர்கள் இது குறித்து தடுமாற்றத்தில் இருக்கிறார்கள். அதனைக்குறித்து எந்த நிலையான நிலைப்பாட்டிலும் அவர்கள் இல்லை.
Kâf 50:6
மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இணைவைப்பாளர்களின் மறுப்பைக் குறிப்பிட்ட பின், அது நிகழ்வதற்கான ஆதாரங்களை அவர்களுக்கு அவன் நினைவூட்டுகிறான். அவன் கூறுகிறான்: மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை பொய்ப்பிக்கும் இவர்கள் தங்களுக்கு மேலுள்ள வானத்தை நாம் எவ்வாறு படைத்து அதில் நட்சத்திரங்களை வைத்து அழகுபடுத்தியுள்ளோம் என்பதையும், அதில் குறை ஏற்படுத்தக்கூடிய எந்தப் பிளவும் இல்லை என்பதையும் அவர்கள் சிந்திக்கவில்லையா?! இந்த வானத்தைப் படைத்தவன் இறந்தவர்களை மீண்டும் உயிர்கொடுத்து உயிருள்ளவர்களாக எழுப்புவதற்கு இயலாதவனல்ல.
Kâf 50:7
நாம் பூமியை வசிப்பதற்கு ஏற்றவாறு விரித்துள்ளோம். அது ஆட்டம் காணாமல் இருக்கும்பொருட்டு அதில் உறுதியான மலைகளை ஏற்படுத்தினோம். அதில் அழகிய தோற்றமுடைய ஒவ்வொரு வகையான தாவரங்களையும் மரங்களையும் முளைக்கச் செய்தோம்.
Kâf 50:8
இவையனைத்தையும் நாம் படைத்தது கீழ்ப்படிவதன்மூலம் தன் இறைவனின் பக்கம் திரும்பக்கூடிய ஒவ்வொரு அடியானுக்கும் சான்றாகவும் நினைவூட்டலாகவும் இருக்கும்பொருட்டேயாகும்.
Kâf 50:9
நாம் வானத்திலிருந்து ஏராளமான பயன்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய நீரை இறக்குகின்றோம். அந்த நீரைக் கொண்டு தோட்டங்களையும் நீங்கள் அறுவடை செய்யும் கோதுமை தானியங்கள் மற்றும் ஏனையவற்றையும் முளைக்கச்செய்தோம்.
Kâf 50:10
அதன் மூலம் அடுக்கடுக்கான குலைகள் கொண்ட உயர்ந்த நீண்ட பேரீச்சை மரங்களையும் முளைக்கச் செய்தோம்.
Kâf 50:11
அவற்றை நாம் முளைக்கச் செய்து அடியார்கள் உண்பதற்கான வாழ்வாதாரமாக அவற்றை ஆக்கினோம். அந்த நீரைக் கொண்டு நாம் செடிகொடிகளற்ற வறண்ட பூமியை உயிர்த்தெழச் செய்கின்றோம். அந்த நீரைக் கொண்டு நாம் வறண்ட பூமியை உயிர்த்தெழச் செய்வதைப்போன்றே இறந்தவர்களை உயிர்ப்பிப்போம். எனவே அவர்கள் உயிர்பெற்று வெளிப்படுவார்கள்.
Kâf 50:12
தூதரே! உம்மை பொய்ப்பித்துக்கொண்டிருக்கும் இவர்களுக்கு முன்னரே எத்தனையோ சமூகங்கள் தங்களின் தூதர்களை பொய்ப்பித்துள்ளன. நூஹின் சமூகம், கிணறுவாசிகள், ஸமூதின் சமூகம் ஆகியன பொய்ப்பித்தன.
Kâf 50:13
ஆத், ஃபிர்அவ்ன் மற்றும் லூத்தின் சமூகம் பொய்ப்பித்துள்ளன.
Kâf 50:14
ஷுஐபின் கூட்டமும், யமன் மன்னன் துப்பஇன் கூட்டமும் நிராகரித்தனர். இந்தக் கூட்டங்கள் அனைத்தும் அவர்களிடம் அல்லாஹ் அனுப்பிய துதர்களை மறுத்தனர். அதனால் அவர்களுக்கு அல்லாஹ் வாக்குறுதியளித்த வேதனை ஏற்பட்டது.
Kâf 50:15
உங்களை முதன்முறையாகப் படைப்பதற்கு நாம் இயலாமல் இருந்தோமா மீண்டும் உங்களை உயிர்கொடுத்து எழுப்புவதற்கு இயலாமல் ஆவதற்கு? மாறாக அவர்கள் முதன்முறையாகப் படைக்கப்பட்ட பிறகு மீண்டும் புதிதாக படைக்கப்படுவது குறித்து சந்தேகத்தில் இருக்கின்றார்கள்.
Kâf 50:16
திட்டமாக நாம் மனிதனைப் படைத்துள்ளோம். அவன் மனதில் தோன்றும் எண்ணங்களையும் சிந்தனைகளையும் நாம் அறிவோம். நாம் அவனுக்கு பிடரி நரம்பைவிட நெருக்கமாக இருக்கின்றோம்.
Kâf 50:17
இரண்டு வானவர்கள் அவனுடைய செயல்களைப் பதிவு செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் வலப்பக்கம் அமர்ந்துள்ளார். மற்றொருவர் இடப்பக்கம் அமர்ந்துள்ளார்.
Kâf 50:18
அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையின் போதும் கண்காணிக்கக்கூடிய வானவர் அவனிடம் இருந்தே அல்லாமல் அவன் எதையும் கூறுவது இல்லை.
Kâf 50:19
மரண வேதனை உண்மையாகவே வந்தது. அதிலிருந்து தப்ப முடியாது. -அலட்சியமான மனிதனே!- இதைக்கண்டுதான் நீ பின்வாங்கி விரண்டோடிக்கொண்டிருந்தாய்.
Kâf 50:20
இரண்டாது முறை சூர் ஊதுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள வானவர் சூர் ஊதுவார். அது மறுமை நாளாகும். நிராகரிப்பாளர்களும் பாவிகளும் வேதனையைக் கொண்டு எச்சரிக்கப்பட்ட நாளாகும்.
Kâf 50:21
ஒவ்வொரு மனிதனுடனும் ஒரு வானவர் வருவார். அவர் அவனை இழுத்துக் கொண்டு வருவார். இன்னொரு வானவர் அவன் செய்த செயல்களுக்கு சாட்சி கூறக்கூடியவராக இருப்பார்.
Kâf 50:22
இழுக்கப்பட்டு வந்த அந்த மனிதனிடம் கூறப்படும்: “நீ உலகில் உன் இச்சைகள் மற்றும் இன்பங்களினால் மயங்கியதனால் இந்த நாளைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய். நீ கண்கூடாகக் காணும் வேதனையையும் துன்பத்தையும் கொண்டு உன் அலட்சியத்தை நாம் நீக்கிவிட்டோம். இன்று உன் பார்வை கூர்மையானதாக இருக்கும். அதனால் எது குறித்து அலட்சியமாக இருந்தாயோ அதனை நீ கண்டுகொள்வாய்.”
Kâf 50:23
அவனுடன் ஒட்டியிருப்பதற்கு நியமிக்கப்பட்ட வானவர் கூறுவார்: “இதுவே என்னிடமுள்ள கூடுதல், குறைவின்றி அவன் செய்த செயல்களாகும்.”
Kâf 50:24
இழுத்துவந்த மற்றும் சாட்சி கூறக்கூடிய அந்த இரு வானவர்களிடமும் அல்லாஹ் கூறுவான்: “சத்தியத்தை மறுத்த, அதில் பிடிவாதமாக நிலைத்திருந்த ஒவ்வொருவனையும் நரகத்தில் போடுங்கள்.”
Kâf 50:25
அவன் அல்லாஹ் கடமையாக்கியவற்றை அதிகம் தடுப்பவனாகவும் அவனுடைய வரம்புகளை மீறக்கூடியவனாகவும் அவனுக்கு அறிவிக்கப்பட்ட வாக்குறுதியிலும் எச்சரிக்கையிலும் சந்தேகம் கொள்பவனாக இருந்தான்.
Kâf 50:26
அவன் அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை ஏற்படுத்தி வணக்க வழிபாட்டில் அதனைக் கூட்டாக்கினான். ஆகவே அவனைக் கடுமையான வேதனையில் போடுங்கள்.
Kâf 50:27
அவனுடன் ஒட்டியிருந்த ஷைத்தான் அவனைவிட்டும் நீங்கியவனாகக் கூறுவான்: “எங்கள் இறைவா! நான் அவனை வழிகெடுக்கவில்லை. ஆனால் அவனே சத்தியத்தைவிட்டும் தூரமாக வழிகேட்டில்தான் இருந்தான்.”
Kâf 50:28
அல்லாஹ் கூறுவான்: “என்னிடத்தில் சண்டையிடாதீர்கள். அதனால் எந்தப் பயனும் இல்லை. உங்களுக்கு உலகில் என் தூதர்களை அனுப்பி என்னை நிராகரிப்பவர்களுக்கு, மாறுசெய்பவர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை முன்னரே விடுத்திருக்கிறேன்.”
Kâf 50:29
என்னிடத்தில் வார்த்தை மாற்றப்படாது. என் வாக்குறுதி மாறாது. நன்மைகளைக் குறைத்தோ, தீமைகளை அதிகரித்தோ நான் அடியார்களின்மீது அநீதி இழைக்கமாட்டேன். மாறாக அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவேன்.
Kâf 50:30
நாம் நரகத்திடம் “நான் உன்னில் போட்டுள்ள நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளைக் கொண்டு நீ நிறைந்துவிட்டாயா” என்று கேட்கும் நாளில் அது அதிகமாக வேண்டியவாறு, தன் இறைவனுக்காக கோபம் கொண்டவாறு “இன்னும் ஏதேனும் இருக்கின்றதா? என்று அது விடையளிக்கும்.
Kâf 50:31
அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்குக் கிடைக்கும் கடுமையான வேதனையைக் குறிப்பிட்ட பிறகு நம்பிக்கையாளர்களான அடியார்களுக்கு தயார்படுத்திவைத்துள்ளவற்றைக்குறித்து கூறுகிறான்: தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களுக்காக சுவனம் அருகில் கொண்டு வரப்படும். அவர்கள் அதிலுள்ள அருட்கொடைகளை நெருக்கமாகக் காண்பார்கள்.
Kâf 50:32
அவர்களிடம் கூறப்படும்: “இதுதான் அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்தது. பாவமன்னிப்புக் கோரி தம் இறைவனின் பக்கம் மீளக்கூடிய, அவன் கடமையாக்கியவற்றை பாதுகாக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் உரியது.”
Kâf 50:33
யார் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் காணாத இரகசியத்திலும் அவனை அஞ்சி, அவன் பக்கம் அதிகம் திரும்பக்கூடிய, அல்லாஹ்வின்பால் முன்னோக்கியவராக தூய உள்ளத்துடன் அவனை சந்தித்தாரோ
Kâf 50:34
அத்தகையவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் வெறுக்கும் விஷயத்திலிருந்து சாந்தி பெற்றவர்களாக சுவனத்தில் நுழையுங்கள். இதுதான் நிலையான நாளாகும். இதற்குப் பிறகு அழிவு இல்லை.
Kâf 50:35
அவர்கள் விரும்பக்கூடிய முடிவற்ற அருட்கொடைகள் அவர்களுக்குக் கிடைக்கும். நம்மிடத்தில் இன்னும் ஏராளமான அருட்கொடைகளும் உண்டு. அவை எந்தக் கண்ணும் பார்த்திராதவை, எந்தக் காதும் கேட்டிராதவை, எந்த மனித உள்ளமும் நினைத்திராதவை. அவற்றில் அல்லாஹ்வைப் பார்ப்பதும் அடங்கும்.
Kâf 50:36
மக்காவின் இந்த பொய்ப்பிக்கும் இணைவைப்பாளர்களுக்கு முன்னர் நாம் அவர்களை விட வலிமைமிக்க எத்தனையோ சமூகங்களை அழித்துள்ளோம். அவர்கள் வேதனையிலிருந்து தப்பிப்பதற்காக ஏதாவது வழியுள்ளதா என பல நாடுகளில் சுற்றித் திரிந்தார்கள். ஆயினும் அவர்களால் தப்பிப்பதற்கான இடத்தை பெற முடியவில்லை.
Kâf 50:37
நிச்சயமாக நாம் மேற்கூறிய முந்தைய சமூகங்களை அழித்ததிலே விளங்கிக் கொள்ளும் உள்ளத்திற்கு அல்லது கவனயீனமின்றி உளப்பூர்வமாக காதுதாழ்த்தி செவியேற்போருக்கு நினைவூட்டலும் அறிவுரையும் இருக்கின்றது.
Kâf 50:38
நாம் வானங்களையும் பூமியையும் அவையிரண்டிற்கு இடையில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம். நாம் அவற்றை ஒரு விநாடியில் படைப்பதற்கும் சக்தி பெற்றவர்களாவோம். யூதர்கள் கூறுவதுபோல நமக்கு அதனால் எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.
Kâf 50:39
தூதரே!- யூதர்களும் ஏனையோரும் கூறுவதை சகித்துக் கொள்வீராக. உம் இறைவனைப் புகழ்ந்தவாறு சூரியன் உதிப்பதற்கு முன்னர் அதிகாலைத் தொழுகையையும் அது மறைவதற்கு முன்னர்அஸர் தொழுகையையும் தொழுவீராக.
Kâf 50:40
இரவு நேரங்களிலும் அவனுக்காகத் தொழுவீராக. தொழுகைகளுக்குப்பிறகு அவனை துதி பாடுவீராக.
Kâf 50:41
தூதரே!- இரண்டாது முறை சூர் ஊதுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள வானவர் நெருங்கிய இடத்திலிருந்து அழைக்கும் நாளை காதுகொடுத்துக் கேட்பீராக.
Kâf 50:42
அந்த நாளில்தான் படைப்பினங்கள் மீண்டும் எழுப்புவதற்கான ஓசையை சந்தேகமின்றி உண்மையாகவே செவிமடுக்கும். அதனைச் செவியுறும் அந்த நாள்தான் விசாரணை செய்யப்படுவதற்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் இறந்தவர்கள் தங்களின் அடக்கஸ்தலங்களிலிருந்து வெளிப்படும் நாளாகும்.
Kâf 50:43
நிச்சயமாக நாமே உயிர்ப்பிக்கின்றோம், மரணமடையச் செய்கின்றோம். நம்மைத்தவிர வேறு யாரும் உயிர்ப்பிக்கச் செய்யவோ மரணமடையச் செய்யவோ முடியாது. மறுமை நாளில் விசாரணை செய்யப்படுவதற்காவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் அடியார்கள் நம் பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும்.
Kâf 50:44
பூமி பிளந்துவிடும் நாளில் அவர்கள் விரைவாக வெளிப்படுவார்கள். இவ்வாறு ஒன்றுதிரட்டுவது நமக்கு எளிதானது.
Kâf 50:45
இந்த பொய்ப்பிப்பாளர்கள் கூறுவதை நாம் அறிவோம். -தூதரே!- நம்பிக்கைகொள்ளும்படி நீர் அவர்களை நிர்ப்பந்திப்பவர் அல்ல. நீர் அல்லாஹ் உமக்கு இட்ட கட்டளைகளைகளை எடுத்துரைப்பவர் மட்டுமே. என் எச்சரிக்கையை அஞ்சக்கூடியவர்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் பாவிகளுக்கும் குர்ஆனைக் கொண்டு நினைவூட்டுவீராக. ஏனெனில் நிச்சயமாக அஞ்சக்கூடியவர்தாம் ஞாபகமூட்டப்பட்டால் அறிவுரை பெறுவார்.
Zariyat 51:1
புழுதியைக் கிளப்பக்கூடிய காற்றுகளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
Zariyat 51:2
ஏராளமான நீரை சுமந்து செல்லும் மேகங்களைக் கொண்டும்
Zariyat 51:3
கடலில் இலகுவாகச் செல்லும் கப்பல்களைக் கொண்டும்
Zariyat 51:4
அல்லாஹ் பங்கிடுமாறு ஏவிய அடியார்களின் விவகாரங்களைப் பங்கிடும் வானவர்களைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.
Zariyat 51:5
நிச்சயமாக உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்த விசாரணையும் கூலி வழங்கப்படுவதும் சந்தேகமற்ற உண்மையாகும்.
Zariyat 51:6
நிச்சயமாக அடியார்களை விசாரனை செய்வது சந்தேகம் இல்லாமல் மறுமை நாளில் நிகழ்ந்தே தீரும்.
Zariyat 51:7
வழிகளையுடைய அழகிய படைப்பான வானத்தைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
Zariyat 51:8
மக்காவாசிகளே!- நிச்சயமாக நீங்கள் முரண்பட்ட தடுமாற்றம்மிக்க வார்த்தைகளைக் கூறுகிறீர்கள். சில சமயங்களில் “குர்ஆன் ஒரு சூனியமாகும்” என்றும் சில சமயங்களில் “அது ஒரு கவிதை” என்றும் சில சமயங்களில் “முஹம்மது ஒரு சூனியக்காரர்” என்றும் சில சமயங்களில் “அவர் ஒரு கவிஞர்” என்றும் கூறுகிறீர்கள்.
Zariyat 51:9
குர்ஆனின்மீதும் தூதரின்மீதும் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள் என்று நிச்சயமாக அல்லாஹ் முன்னரே அறிந்தவர்கள்தான் நம்பிக்கைகொள்வதை விட்டும் திருப்பிவிடப்படுகிறான். எனவே அவன் நேர்வழிபெற வாய்ப்புக் கிடைக்காது.
Zariyat 51:10
குர்ஆனைக் குறித்தும் தங்களின் நபியைக் குறித்தும் இவ்வாறு கூறிய பொய்யர்கள் சபிக்கப்பட்டு விட்டார்கள்.
Zariyat 51:11
அவர்கள் அறியாமையில் மறுமையின் வீட்டை விட்டும் அலட்சியமாக இருக்கின்றார்கள். அதனைப் பொருட்படுத்துவதில்லை.
Zariyat 51:12
கூலி வழங்கப்படும் நாள் எப்போது? என்று அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் அதற்காக செயற்படுவதில்லை.
Zariyat 51:13
அல்லாஹ் அவர்களின் கேள்விக்குப் பதிலளிக்கிறான். அது அவர்கள் நரகத்தில் வேதனை செய்யப்படும் நாளாகும்.
Zariyat 51:14
அவர்களிடம் கூறப்படும்: “உங்களின் வேதனையைச் சுவையுங்கள். இதைக் குறித்துதான் எச்சரிக்கப்படும்போது பரிகாசம் செய்யும் விதத்தில் விரைவாகக் கொண்டுவரும்படி வேண்டிக்கொண்டிருந்தீர்கள்.”
Zariyat 51:15
நிச்சயமாக தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் மறுமை நாளில் தோட்டங்களிலும் ஓடக்கூடிய நீருற்றுகளிலும் இருப்பார்கள்.
Zariyat 51:16
அவர்கள் அங்கு தங்கள் இறைவன் வழங்கிய கண்ணியமான கூலியைப் பெற்றவர்களாக இருப்பார்கள். நிச்சயமாக அவர்கள் கண்ணியமான இந்த கூலி வழங்கப்படுவதற்கு முன்னர் உலகில் நன்மை செய்வோராக இருந்தார்கள்.
Zariyat 51:17
அவர்கள் இரவில் தொழக்கூடியவர்களாவும் குறைவான நேரமே தூங்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.
Zariyat 51:18
(ஸஹர்) பின்னிரவு நேரங்களில் தங்களின் பாவங்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரக்கூடியவர்களாக இருந்தார்கள்.
Zariyat 51:19
அவர்களின் செல்வங்களில் யாசிக்கக்கூடியவர்களுக்கும் ஏதேனும் ஒரு காரணத்தினால் வாழ்வாதாரமில்லாவிட்டாலும் வெட்கத்தின் காரணமாக யாசிக்காதவர்களுக்கும் உரிமை இருந்தது.
Zariyat 51:20
பூமியிலும் அல்லாஹ் அதில் ஏற்படுத்தியுள்ள மலைகள், கடல்கள், ஆறுகள், மரங்கள், செடிகொடிகள், விலங்குகள் ஆகிவற்றில் நிச்சயமாக அல்லாஹ்வே படைத்து வடிவம் கொடுப்பவன் என்பதை உறுதியாக நம்பக்கூடிய மக்களுக்கு அவனுடைய வல்லமையை அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன.
Zariyat 51:21
மனிதர்களே!- உங்களுக்குள்ளும் அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன. நீங்கள் படிப்பினை பெறும்பொருட்டு பார்க்கமாட்டீர்களா?
Zariyat 51:22
வானத்தில்தான் உங்களின் உலக, மத வாழ்வாதாரம் இருக்கின்றது. உங்களுக்கு வாக்களிக்கப்படும் நன்மையும் தீமையும் அங்குதான் இருக்கின்றன.
Zariyat 51:23
வானம் மற்றும் பூமியின் இறைவனின்மீது ஆணையாக, நிச்சயமாக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவது நிகழ்ந்தே தீரும். நீங்கள் பேசும் போது உங்கள் பேச்சில் எவ்வாறு சந்தேகம் இல்லையோ அது போன்றே அதிலும் எத்தகைய சந்தேகமும் இல்லை.
Zariyat 51:24
தூதரே!- இப்ராஹீம் கௌரவப்படுத்திய வானவர்களான அவரின் விருந்தாளிகளின் செய்தி உம்மிடம் வந்ததா?
Zariyat 51:25
அவர்கள் அவரிடம் வந்தபோது (சலாம்) சாந்தி உண்டாகட்டும் என்று கூறினார்கள். அதற்கு இப்ராஹீமும் “சாந்தி உண்டாகட்டும்” என்று பதில் கூறினார். “இவர்கள் நாம் அறியாத மக்களாக இருக்கிறார்களே” என்று அவர் தம் மனதிற்குள் கூறிக் கொண்டார்.
Zariyat 51:26
அவர் தம் குடும்பத்தாரிடம் இரகசியமாகச் சென்று வந்துள்ளவர்களை மனிதர்கள் என்று நினைத்து ஒரு கொழுத்த முழுமையான காளைக்கன்றைக் கொண்டு வந்தார்.
Zariyat 51:27
அதனை அவர்களுக்கு அருகில் வைத்து “உங்களுக்கு வழங்கப்பட்ட உணவை உண்ணமாட்டீர்களா” என்று மென்மையாக உரையாடினார்.
Zariyat 51:28
அவர்கள் உண்ணாததால் அவர் மனதில் அவர்களால் ஏற்பட்ட அச்சத்தை மறைத்துக்கொண்டார். அதனை உணர்ந்துகொண்ட அவர்கள் அவரை அமைதிப்படுத்தியவர்களாகக் கூறினார்கள்: “பயப்படாதீர். நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்ட தூதர்களாவோம்.” அவருக்கு அதிக கல்வியறிவு கொண்ட ஒரு மகன் பிறப்பான் என்று நற்செய்தி கூறினார்கள். இஸ்ஹாக் (அலை) அவர்களே அவ்வாறு நற்செய்தி கூறப்பட்டவர்.
Zariyat 51:29
அவருடைய மனைவி இந்த நற்செய்தியை செவியுற்றவுடன் மகிழ்ச்சியால் சப்தமிட்டாள். தம் முகத்தில் அடித்துக் கொண்டாள். வியப்புடன் கூறினாள்: “அடிப்படையில் மலடியான ஒரு கிழவி குழந்தை பெறுவாளா?!”
Zariyat 51:30
வானவர்கள் அவளிடம் கூறினார்கள்: “உம் இறைவன் கூறியதைத்தான் நாம் உமக்கு அறிவிக்கின்றோம். அவன் கூறியதை யாரும் மறுக்க முடியாது. நிச்சயமாக அவன் தன் படைப்பிலும், நிர்ணயத்திலும் ஞானம் மிக்கவன். தன் படைப்புகளைக் குறித்தும் அவர்களுக்கு அவசியமானது குறித்தும் நன்கறிந்தவன்.”
Zariyat 51:31
இப்ராஹீம் வானவர்களிடம் கேட்டார்: “உங்களின் விஷயம் என்ன? நீங்கள் என்ன நாடுகிறீர்கள்?”
Zariyat 51:32
வானவர்கள் அவரிடம் பதிலாக கூறினார்கள்: “மானக்கேடான பாவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அநியாயக்கார சமூகத்தின்பால் நிச்சயமாக அல்லாஹ் எங்களை அனுப்பியுள்ளான்,
Zariyat 51:33
சுடப்பட்ட களிமண் கற்களை அவர்கள் மீது பொழிவதற்காக.
Zariyat 51:34
இப்ராஹீமே!- அவை உம் இறைவனிடம் அடையாளமிடப்பட்டதாகும். நிராகரிப்பிலும் பாவங்கள் புரிவதிலும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறி செயல்படக்கூடியவர்களின் மீது அவை பொழியப்படும்.
Zariyat 51:35
குற்றவாளிகளுக்கு ஏற்படும் தண்டனை லூதின் சமூகத்தினர் வாழும் அந்த ஊரிலிருந்த நம்பிக்கையாளர்களை பாதிக்கக்கூடாது என்பதற்காக அவர்களை வெளியேற்றி விட்டோம்.
Zariyat 51:36
நாம் அவர்களின் இந்த ஊரிலே லூத்தின் குடும்பத்தினரைத் தவிர வேறு எந்தவொரு முஸ்லிம்களின் வீட்டையும் காணவில்லை.
Zariyat 51:37
லூத்தின் சமூகத்தினர் வாழ்ந்த அந்த ஊரில் அவர்களுக்கு வேதனை ஏற்பட்டதற்கான அடையாளங்களை விட்டுவைத்தோம். அவர்களுக்கு ஏற்பட்ட வேதனைமிக்க தண்டனையை அஞ்சுபவன் படிப்பினை பெற்று, அதிலிருந்து தப்புவதற்காக அவர்களின் செயலைப்போன்றதை அவன் செய்யக் கூடாது என்பதற்காக அவ்வாறு செய்தோம்.
Zariyat 51:38
நாம் ஃபிர்அவ்னை நோக்கி தெளிவான ஆதாரங்களோடும் அற்புதங்களோடும் அனுப்பிய மூஸாவிலும் வேதனைமிக்க தண்டனையை அஞ்சக்கூடியவர்களுக்குச் சான்று இருக்கின்றது, .
Zariyat 51:39
ஃபிர்அவ்ன் தனது பலத்தையும் படையையும் நம்பி சத்தியத்தைப் புறக்கணித்தான். மூஸாவைக்குறித்து அவன் கூறினான்: “அவர் மக்களுக்கு சூனியம் செய்யும் சூனியக்காரர் அல்லது புரியாத விஷயங்களைப் பேசும் பைத்தியக்காரர்.”
Zariyat 51:40
நாம் அவனையும் அவனது படையினர் அனைவரையும் பிடித்து கடலில் வீசியெறிந்து விட்டோம். அவர்கள் மூழ்கி அழிந்தார்கள். ஃபிர்அவ்ன் பொய்ப்பிப்பு, நிச்சயமாக தானே இறைவன் என்று வாதாடி பழிப்பிற்குரியவற்றை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டிருந்தான்.
Zariyat 51:41
ஹுத் உடைய சமூகமான ’ஆதி’டமும் வேதனைமிக்க தண்டனையை அஞ்சக்கூடியவர்களுக்கு சான்று இருக்கின்றது. நாம் அவர்களின்மீது மழையைச் சுமக்காத, மரங்களை சூல் கொள்ளச் செய்யாத, எவ்வித நன்மைகளுமற்ற காற்றை அனுப்பினோம்.
Zariyat 51:42
அது கடந்து சென்ற உயிர்கள், செல்வங்கள் மற்றும் இன்னபிற அனைத்தையும் அடியோடு அழித்தது. அனைத்தையும் தூள்தூளாக்கிவிட்டது.
Zariyat 51:43
ஸாலிஹின் சமூகமான ஸமூதிடமும் வேதனைமிக்க தண்டனையை அஞ்சக்கூடியவர்களுக்கு சான்று இருக்கின்றது. அவர்களிடம் கூறப்பட்டது: “உங்களுக்கான தவணை நிறைவடைவதற்கு முன்னரே உங்களின் வாழ்வை அனுபவித்துக் கொள்ளுங்கள்.”
Zariyat 51:44
அவர்கள் தம் இறைவனின் கட்டளையை விட்டும் பெருமைகொண்டு, நம்பிக்கைகொள்ளுதல், வழிப்படுதல் ஆகியவற்றுக்கெதிராக கர்வம் கொண்டார்கள். எனவே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போதே பேரிடி அவர்களைத் தாக்கியது. ஏனெனில் அவர்கள் வேதனை இறங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தார்கள்.
Zariyat 51:45
தங்கள் மீது இறங்கிய வேதனையை அவர்களால் தடுக்க முடியவில்லை. அவர்களிடம் அதனைத் தடுத்துக்கொள்வதற்கான எந்த பலமும் இல்லை.
Zariyat 51:46
நாம் மேற்கூறப்பட்டவர்களுக்கு முன்னால் நூஹின் சமூகத்தாரை மூழ்கடித்து அழித்துள்ளோம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாதவர்களாக இருந்தார்கள். எனவே அவனது தண்டனைக்கு உரியவர்களாகி விட்டார்கள்.
Zariyat 51:47
நாம் வானத்தை அமைத்துள்ளோம். அதன் அமைப்பை வல்லமையால் செம்மையாக்கினோம். நிச்சயமாக நாம் அதன் ஓரங்களை விசாலமாக்கிக் கொண்டே செல்கின்றோம்.
Zariyat 51:48
நாம் பூமியை வசிக்கக்கூடியவர்களுக்கு ஏற்றவாறு விரிப்பைப் போன்று அமைத்துள்ளோம். அவர்கள் வசிப்பதற்கு ஏற்றவாறு விரித்து அமைப்பதில் நாமே மிகச்சிறந்தவர்களாவோம்.
Zariyat 51:49
நீங்கள் ஒவ்வொன்றையும் இணைஇணையாக படைத்த அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் உணர்ந்துகொள்ளும்பொருட்டு ஒவ்வொன்றையும் நாம் இணைஇணையாகப் படைத்துள்ளோம். உதாரணமாக, ஆண்- பெண், வானம்- பூமி, நீர்- நிலம்.
Zariyat 51:50
அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு மாறுசெய்யாமல் இருப்பதன் மூலம் அவனின் தண்டனையிலிருந்து அவனுடைய நன்மையின் பக்கமும் விரையுங்கள். -மக்களே!- நிச்சயமாக நான் உங்களை அவனுடைய வேதனையைக் குறித்து தெளிவாக எச்சரிக்கை செய்யக்கூடியவன்தான்.
Zariyat 51:51
அல்லாஹ்வுடன் அவனை விடுத்து நீங்கள் வணங்கும் வேறு இறைவனை ஏற்படுத்தி விடாதீர்கள். நிச்சயமாக நான் உங்களை அதிலிருந்து தெளிவாக எச்சரிப்பவன்தான்.
Zariyat 51:52
இந்த மக்காவாசிகள் பொய்ப்பித்ததைப்போன்றே முந்தைய சமூக மக்களும் பொய்ப்பித்தார்கள். அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் தூதர்கள் வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “நீர் சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர், என்று.”
Zariyat 51:53
நிராகரிப்பாளர்களில் முந்தையவர்களும் பிந்தையவர்களும் தூதர்களை பொய்ப்பிக்க வேண்டும் என்று ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துள்ளார்களா என்ன? இல்லை. மாறாக அவர்களின் வரம்புமீறலே அவர்களை இதில் ஒன்றிணைத்தது.
Zariyat 51:54
தூதரே!- இந்த பொய்ப்பிப்பாளர்களை நீர் புறக்கணித்து விடுவீராக. நீர் பழிப்பிற்குரியவர் அல்ல. நீர் அவர்களின்பால் எதைக்கொண்டு அனுப்பப்பட்டீரோ அதனை எடுத்துரைத்துவிட்டீர்.
Zariyat 51:55
அவர்களை நீர் புறக்கணிப்பது, அவர்களுக்கு அறிவுரை கூறுவதிலிருந்தும் நினைவூட்டுவதிலிருந்தும் உம்மைத் தடுத்துவிட வேண்டாம். அவர்களுக்கு அறிவுரை கூறுவீராக, நினைவூட்டுவீராக. நிச்சயமாக நினைவூட்டல் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களுக்குப் பயனளிக்கும்.
Zariyat 51:56
நான் ஜின்களையும் மனிதர்களையும் என்னை மட்டுமே வணங்குவதற்காகவே படைத்துள்ளேன். எனக்கு இணைகளை ஏற்படுத்துவதற்காக நான் அவர்களைப் படைக்கவில்லை.
Zariyat 51:57
நான் அவர்களிடம் வாழ்வாதாரத்தையோ, அவர்கள் எனக்கு உணவளிக்க வேண்டும் என்றோ விரும்பவில்லை.
Zariyat 51:58
நிச்சயமாக அல்லாஹ்வே தன் அடியார்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கக்கூடியவன். அனைவரும் அவன் அளிக்கும் வாழ்வாதாரத்தின் பக்கம் தேவையுடையவர்களாவர். அவன் உறுதியான வல்லமை மிக்கவன். எதுவும் அவனை மிகைத்துவிட முடியாது. மனிதர்கள், ஜின்கள் அனைவரும் அவனுடைய வல்லமைக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.
Zariyat 51:59
தூதரே!- நிச்சயமாக உம்மை பொய்ப்பித்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்கள் அவர்களின் முந்தைய தோழர்களின் பங்கை போன்று வேதனையின் ஒரு பகுதியைப் பெறுவார்கள். அதற்கு குறிப்பிட்ட தவணை இருக்கின்றது. அது வருவதற்கு முன்னரே விரைவாக என்னிடம் அதனை அவர்கள் கோரவேண்டாம்.
Zariyat 51:60
அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதரை பொய்ப்பித்தவர்களுக்கு மறுமை நாளில் இழப்பும் அழிவுமே ஏற்படும். அதுதான் அவர்கள்மீது வேதனை இறக்கப்படுவதற்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும்.